12. ஸூரத்து யூஸுஃப்
மக்கீ, வசனங்கள்: 111

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
12:1
12:1 الٓرٰ‌ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْن‏
الٓرٰ‌ அலிஃப், லாம், றா تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் الْكِتٰبِ வேதம் الْمُبِيْن‏ தெளிவான(து)
12:1. அலிFப்-லாம்-ரா; தில்க ஆயாதுல் கிதாBபில் முBபீன்
12:1. அலிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.
12:2
12:2 اِنَّاۤ اَنْزَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَنْزَلْنٰهُ இதை இறக்கினோம் قُرْءٰنًا குர்ஆனாக عَرَبِيًّا அரபி لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
12:2. இன்னா அன்Zஜல்னாஹு குர்'ஆன 'அரBபிய்யல் ல 'அல்லகும் தஃகிலூன்
12:2. நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.
12:3
12:3 نَحْنُ نَقُصُّ عَلَيْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ هٰذَا الْقُرْاٰنَ ‌ۖ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِيْنَ‏
نَحْنُ நாம் نَقُصُّ விவரிக்கிறோம் عَلَيْكَ உமக்கு اَحْسَنَ மிக அழகானதை الْقَصَصِ சரித்திரங்களில் بِمَاۤ اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்ததன் மூலம் اِلَيْكَ உமக்கு هٰذَا الْقُرْاٰنَ இந்த குர்ஆனை ۖ وَاِنْ كُنْتَ நிச்சயமாக இருந்தீர் مِنْ قَبْلِهٖ இதற்கு முன்னர் لَمِنَ الْغٰفِلِيْنَ‏ அறியாதவர்களில்
12:3. னஹ்னு னகுஸ்ஸு 'அலய்க அஹ்ஸனல் கஸஸி Bபிமா அவ்ஹய்னா இலய்க ஹாதல் குர்'ஆன வ இன் குன்த மின் கBப்லிஹீ லமினல் காFபிலீன்
12:3. (நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் - இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்.
12:4
12:4 اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰۤاَبَتِ اِنِّىْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِىْ سٰجِدِيْنَ‏
اِذْ சமயம் قَالَ கூறினார் يُوْسُفُ யூஸுஃப் لِاَبِيْهِ தன் தந்தைக்கு يٰۤاَبَتِ என் தந்தையே اِنِّىْ நிச்சயமாக நான் رَاَيْتُ கனவில் கண்டேன் اَحَدَ عَشَرَ பதினொரு كَوْكَبًا நட்சத்திரத்தை وَّالشَّمْسَ இன்னும் சூரியன் وَالْقَمَرَ இன்னும் சந்திரன் رَاَيْتُهُمْ அவற்றை நான் கனவில் கண்டேன் لِىْ எனக்கு سٰجِدِيْنَ‏ சிரம் பணியக்கூடியவையாக
12:4. இத் கால யூஸுFபு லி அBபீஹி யா அBபதி இன்னீ ர அய்து அஹத 'அஷர கவ்கBப(ன்)வ் வஷ் ஷம்ஸ வல்கமர ர அய்துஹும் லீ ஸாஜிதீன்
12:4. யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது.
12:5
12:5 قَالَ يٰبُنَىَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَـكَ كَيْدًا ؕ اِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ‏
قَالَ கூறினார் يٰبُنَىَّ என்னருமை மகனே لَا تَقْصُصْ விவரிக்காதே رُءْيَاكَ உன் கனவை عَلٰٓى اِخْوَتِكَ உன் சகோதரர்களிடம் فَيَكِيْدُوْا சூழ்ச்சி செய்வார்கள் لَـكَ உனக்கு كَيْدًا ؕ ஒரு சூழ்ச்சியை اِنَّ الشَّيْطٰنَ நிச்சயமாக ஷைத்தான் لِلْاِنْسَانِ மனிதனுக்கு عَدُوٌّ எதிரி مُّبِيْنٌ‏ பகிரங்கமான(வன்)
12:5. கால யா Bபுனய்ய லா தக்ஸுஸ் ரு'யாக 'அலா இக்வதிக Fபயகீதூ லக கய்தா; இன்னஷ் ஷய்தான லில் இன்ஸானி 'அதுவ்வும் முBபீன்
12:5. “என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.
12:6
12:6 وَكَذٰلِكَ يَجْتَبِيْكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ وَيُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَعَلٰٓى اٰلِ يَعْقُوْبَ كَمَاۤ اَتَمَّهَا عَلٰٓى اَبَوَيْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ‌ ؕ اِنَّ رَبَّكَ عَلِيْمٌ حَكِيْمٌ
وَكَذٰلِكَ இவ்வாறே يَجْتَبِيْكَ தேர்ந்தெடுப்பான்/உன்னை رَبُّكَ உன் இறைவன் وَيُعَلِّمُكَ இன்னும் கற்பிப்பான்/ உனக்கு مِنْ تَاْوِيْلِ விளக்கத்திலிருந்து الْاَحَادِيْثِ பேச்சுகளின் وَيُتِمُّ இன்னும் முழுமையாக்குவான் نِعْمَتَهٗ அவன் தன் அருளை عَلَيْكَ உம்மீது وَعَلٰٓى இன்னும் மீது اٰلِ கிளையார் يَعْقُوْبَ யஃகூபின் كَمَاۤ போன்று اَتَمَّهَا عَلٰٓى முழுமைப்படுத்தினான்/அதை/மீது اَبَوَيْكَ உன்இருபாட்டன்கள் مِنْ قَبْلُ முன்னர் اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاِسْحٰقَ‌ ؕ இன்னும் இஸ்ஹாக் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உன் இறைவன் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ மகா ஞானவான்
12:6. வ கதாலிக யஜ்தBபீக ரBப்Bபுக வ யு'அல்லிமுக மின் த'வீலில் அஹாதீதி வ யுதிம்மு னிஃமதஹூ 'அலய்க வ 'அலா ஆலி யஃகூBப கமா அதம்மஹா 'அலா அBபவய்க மின் கBப்லு இBப்ராஹீம வ இஸ்ஹாக்; இன்ன ரBப்Bபக 'அலீமுன் ஹகீம்
12:6. இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன் மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.”
12:7
12:7 لَقَدْ كَانَ فِىْ يُوْسُفَ وَاِخْوَتِهٖۤ اٰيٰتٌ لِّـلسَّآٮِٕلِيْنَ‏
لَقَدْ திட்டவட்டமாக كَانَ இருக்கின்றன فِىْ يُوْسُفَ யூஸுஃபில் وَاِخْوَتِهٖۤ இன்னும் அவரது சகோதரர்கள் اٰيٰتٌ அத்தாட்சிகள் لِّـلسَّآٮِٕلِيْنَ‏ வினவுகின்றவர்களுக்கு
12:7. லகத் கான Fபீ யூஸுFப வ இக்வதிஹீ ஆயாதுல் லிஸ்ஸா'இலீன்
12:7. நிச்சயமாக யூஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.
12:8
12:8 اِذْ قَالُوْا لَيُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰٓى اَبِيْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ  ؕ اِنَّ اَبَانَا لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنِ ‌ۖ ‌ۚ‏
اِذْ சமயம் قَالُوْا கூறினர் لَيُوْسُفُ திட்டமாக யூஸுஃபு وَاَخُوْهُ இன்னும் அவருடையசகோதரர் اَحَبُّ அதிகப் பிரியமுள்ளவர்(கள்) اِلٰٓى اَبِيْنَا நம் தந்தைக்கு مِنَّا நம்மைவிட وَنَحْنُ நாம் عُصْبَةٌ  ؕ ஒரு கூட்டமாக اِنَّ நிச்சயமாக اَبَانَا நம் தந்தை لَفِىْ ضَلٰلٍ தவறில்தான் مُّبِيْنِ ۖ ۚ‏ பகிரங்கமானது
12:8. இத் காலூ ல யூஸுFபு வ அகூஹு அஹBப்Bபு இலா அBபீனா மின்னா வ னஹ்னு 'உஸ்Bபதுன்; இன்ன அBபானா லFபீ ளலாலிம் முBபீன்
12:8. (யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
12:9
12:9 اۨقْتُلُوْا يُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا يَّخْلُ لَـكُمْ وَجْهُ اَبِيْكُمْ وَ تَكُوْنُوْا مِنْۢ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِيْنَ‏
اۨقْتُلُوْا கொல்லுங்கள் يُوْسُفَ யூஸுஃபை اَوِ அல்லது اطْرَحُوْهُ எறியுங்கள்/அவரை اَرْضًا பூமியில் يَّخْلُ தனியாகிவிடும் لَـكُمْ உங்களுக்கு وَجْهُ முகம் اَبِيْكُمْ உங்கள் தந்தையின் وَ تَكُوْنُوْا இன்னும் மாறிவிடுவீர்கள் مِنْۢ بَعْدِهٖ இதன் பின்னர் قَوْمًا மக்களாக صٰلِحِيْنَ‏ நல்லவர்கள்
12:9. உக்துலூ யூஸுFப அவித்ர ஹூஹு அர்ள(ன்)ய் யக்லு லகும் வஜ்ஹு அBபீகும் வ தகூனூ மிம் Bபஃதிஹீ கவ்மன் ஸாலிஹீன்
12:9. “யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,
12:10
12:10 قَالَ قَآٮِٕلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا يُوْسُفَ وَاَلْقُوْهُ فِىْ غَيٰبَتِ الْجُـبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ‏
قَالَ கூறினார் قَآٮِٕلٌ கூறுபவர் مِّنْهُمْ அவர்களில் لَا تَقْتُلُوْا கொல்லாதீர்கள் يُوْسُفَ யூஸுஃபை وَاَلْقُوْ போடுங்கள் هُ அவரை فِىْ غَيٰبَتِ ஆழத்தில் الْجُـبِّ கிணற்றின் يَلْتَقِطْهُ எடுத்துக் கொள்வார்(கள்)/அவரை بَعْضُ சிலர் السَّيَّارَةِ வழிப்போக்கர்களில் اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ‏ நீங்கள் செய்பவர்களாக இருந்தால்
12:10. காலா கா'இலும் மின்ஹும் லா தக்துலூ யூஸுFப வ அல்கூஹு Fபீ கயாBபதில் ஜுBப்Bபி யல்தகித்ஹு Bபஃளுஸ் ஸய் யாரதி இன் குன்தும் Fபா 'இலீன்
12:10. அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.
12:11
12:11 قَالُوْا يٰۤاَبَانَا مَا لَـكَ لَا تَاْمَنَّا عَلٰى يُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنٰصِحُوْنَ‏
قَالُوْا கூறினர் يٰۤاَبَانَا எங்கள் தந்தையே مَا لَـكَ உனக்கென்ன நேர்ந்தது? لَا நீங்கள் நம்புவதில்லை تَاْمَنَّا எங்களை عَلٰى يُوْسُفَ யூஸுஃப் விஷயத்தில் وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَهٗ அவருக்கு لَنٰصِحُوْنَ‏ நன்மையை நாடுபவர்கள்தான்
12:11. காலூ யா அBபானா மா லக லா த'மன்னா 'அலா யூஸுFப வ இன்னா லஹூ லனா ஸிஹூன்
12:11. (பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.
12:12
12:12 اَرْسِلْهُ مَعَنَا غَدًا يَّرْتَعْ وَيَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏
اَرْسِلْهُ அவரைஅனுப்புவீராக مَعَنَا எங்களுடன் غَدًا நாளை يَّرْتَعْ மகிழ்ச்சியாகஇருப்பார் وَيَلْعَبْ இன்னும் விளையாடுவார் وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَهٗ அவரை لَحٰـفِظُوْنَ‏ பாதுகாப்பவர்கள்தான்
12:12. அர்ஸில்ல்ஹு ம'அனா கத(ன்)ய் யர்தஃ வ யல்'அBப் வ இன்னா லஹூ ல ஹாFபிளூன்
12:12. “நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்” என்று கூறினார்கள்.
12:13
12:13 قَالَ اِنِّىْ لَيَحْزُنُنِىْ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ يَّاْكُلَهُ الذِّئْبُ وَاَنْـتُمْ عَنْهُ غٰفِلُوْنَ‏
قَالَ கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் لَيَحْزُنُنِىْ கவலையளிக்கும்/ எனக்கு اَنْ تَذْهَبُوْا بِهٖ நீங்கள்அவரை அழைத்துச் செல்வது وَاَخَافُ இன்னும் பயப்படுகின்றேன் يَّاْكُلَهُ அவரை الذِّئْبُ ஓநாய் وَاَنْـتُمْ நீங்கள் عَنْهُ அவரை விட்டு غٰفِلُوْنَ‏ கவனமற்றவர்கள்
12:13. கால இன்னீ ல யஹ்Zஜுனுனீ அன் தத்ஹBபூ Bபிஹீ வ அகாFபு அ(ன்)ய் ய'குலஹுத் தி'Bபு வ அன்தும் 'அன்ஹு காFபிலூன்
12:13. (அதற்கு யஃகூப்,) “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது; மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.
12:14
12:14 قَالُوْا لَٮِٕنْ اَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ اِنَّاۤ اِذًا لَّخٰسِرُوْنَ‏
قَالُوْا கூறினர் اَكَلَهُ அவரை الذِّئْبُ ஓநாய் وَنَحْنُ நாங்கள் இருக்க عُصْبَةٌ ஒரு கூட்டமாக اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِذًا அப்போது لَّخٰسِرُوْنَ‏ நஷ்டவாளிகள்தான்
12:14. காலூ ல இன் அகலஹுத்தி'Bபு வ னஹ்னு 'உஸ்Bபதுன் இன்னா இதல் லகாஸிரூன்
12:14. (அதற்கு) அவர்கள் “நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்“ என்று கூறினார்கள்.
12:15
12:15 فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْۤا اَنْ يَّجْعَلُوْهُ فِىْ غَيٰبَتِ الْجُبِّ‌ۚ وَاَوْحَيْنَاۤ اِلَيْهِ لَـتُنَـبِّئَـنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا يَشْعُرُوْنَ‏
فَلَمَّا அவர்கள் சென்றனர் ذَهَبُوْا போது بِهٖ அவரைக் கொண்டு وَاَجْمَعُوْۤا ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர் يَّجْعَلُوْهُ அவரை فِىْ غَيٰبَتِ ஆழத்தில் الْجُبِّ‌ۚ கிணற்றின் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلَيْهِ அவருக்கு لَـتُنَـبِّئَـنَّهُمْ நிச்சயமாக அறிவிப்பீர்/அவர்களுக்கு بِاَمْرِ காரியத்தை هِمْ அவர்களுடைய هٰذَا இந்த وَهُمْ அவர்கள் لَا يَشْعُرُوْنَ‏ உணரமாட்டார்கள்
12:15. Fபலம்மா தஹBபூ Bபிஹீ வ அஜ்ம'ஊ அ(ன்)ய்யஜ்'அலூஹு Fபீ கயாBபதில் ஜுBப்Bப்; வ அவ்ஹய்னா இலய்ஹி லதுனBப்Bபி 'அன்னஹும் Bபி அம்ரிஹிம் ஹாத வ ஹும் லா யஷ்'உரூன்
12:15. (இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.
12:16
12:16 وَجَآءُوْۤ اَبَاهُمْ عِشَآءً يَّبْكُوْنَؕ‏
وَجَآءُوْۤ வந்தனர் اَبَاهُمْ தம் தந்தையிடம் عِشَآءً மாலை சாய்ந்த பின் يَّبْكُوْنَؕ‏ அழுதவர்களாக
12:16. வ ஜா'ஊ அBபாஹும் 'இஷா 'அ(ன்)ய் யBப்கூன்
12:16. இன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள்.
12:17
12:17 ‌قَالُوْا يٰۤاَبَانَاۤ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُ‌ۚ وَمَاۤ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِيْنَ‏
قَالُوْا கூறினர் يٰۤاَبَانَاۤ எங்கள் தந்தையே اِنَّا நிச்சயமாக நாங்கள் ذَهَبْنَا நாங்கள் சென்றோம் نَسْتَبِقُ அம்பெறிகிறோம் وَتَرَكْنَا இன்னும் விட்டுவிட்டோம் يُوْسُفَ யூஸுஃபை عِنْدَ مَتَاعِنَا எங்கள் பொருளிடம் فَاَكَلَهُ தின்றது/அவரை الذِّئْبُ‌ۚ ஓநாய் وَمَاۤ இல்லை اَنْتَ நீர் بِمُؤْمِنٍ நம்புபவராக لَّنَا எங்களை وَلَوْ كُنَّا நாங்கள் இருந்தாலும் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
12:17. காலூ யா அBபானா இன்னா தஹBப்னா னஸ்தBபிகு வ தரக்னா யூஸுFப 'இன்த மதா'இனா Fப அகலஹுத் தி'Bப், வ மா அன்த Bபிமு'மினில் லனா வ லவ் குன்னா ஸாதிகீன்
12:17. “எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது - ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!” என்று கூறினார்கள்.
12:18
12:18 وَجَآءُوْ عَلٰى قَمِيـْصِهٖ بِدَمٍ كَذِبٍ‌ؕ قَالَ بَلْ سَوَّلَتْ لَـكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا‌ؕ فَصَبْرٌ جَمِيْلٌ‌ؕ وَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ‏
وَجَآءُوْ இன்னும் வந்தனர் عَلٰى قَمِيـْصِهٖ அவருடைய சட்டையில் بِدَمٍ இரத்தத்தைக்கொண்டு كَذِبٍ‌ؕ பொய்யான(து) قَالَ கூறினார் بَلْ மாறாக سَوَّلَتْ அலங்கரித்தன لَـكُمْ உங்களுக்கு اَنْفُسُكُمْ உங்கள் மனங்கள் اَمْرًا‌ؕ ஒரு காரியத்தை فَصَبْرٌ ஆகவே பொறுமை جَمِيْلٌ‌ؕ அழகியது وَاللّٰهُ அல்லாஹ் الْمُسْتَعَانُ உதவி தேடப்படுபவன் عَلٰى மீது مَا எவை تَصِفُوْنَ‏ வருணிக்கிறீர்கள்
12:18. வ ஜா'ஊ 'அலா கமீஸி ஹீ Bபிதமின் கதிBப் கால Bபல் ஸவ்வலத் லகும் அன்Fபுஸுகும் அம்ரா; FபஸBப்ருன் ஜமீல்; வல்லாஹுல் முஸ்த'ஆனு 'அலா மாதஸிFபூன்
12:18. (மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.
12:19
12:19 وَجَآءَتْ سَيَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰى دَلْوَهٗ‌ ؕ قَالَ يٰبُشْرٰى هٰذَا غُلٰمٌ‌ ؕ وَاَسَرُّوْهُ بِضَاعَةً  ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَعْمَلُوْنَ‏
وَجَآءَتْ வந்தது سَيَّارَةٌ ஒரு பயணக் கூட்டம் فَاَرْسَلُوْا அனுப்பினார்கள் وَارِدَهُمْ தங்களில் நீர் கொண்டு வருபவரை فَاَدْلٰى இறக்கினார் دَلْوَهٗ‌ ؕ அவர் வாளியை قَالَ கூறினார் يٰبُشْرٰى ஆ... நற்செய்தி! هٰذَا இதோ غُلٰمٌ‌ ؕ ஒரு சிறுவர் وَاَسَرُّوْهُ மறைத்தார்கள்/அவரை بِضَاعَةً  ؕ வர்த்தகப் பொருளாக وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிபவன் بِمَا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்வதை
12:19. வ ஜா'அத் ஸய்யாரதுன் Fப-அர்ஸலூ வாரிதஹும் Fப அத்லா தல்வஹ்; கால யா Bபுஷ்ரா ஹாத குலாம்; வ அஸர்ரூஹு Bபி-ளா'அஹ்; வல்லாஹு 'அலீமுன் Bபிமா யஃமலூன்
12:19. பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் - (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
12:20
12:20 وَشَرَوْهُ بِثَمَنٍۢ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُوْدَةٍ‌ ۚ وَكَانُوْا فِيْهِ مِنَ الزّٰهِدِيْنَ
وَشَرَوْهُ விற்றார்கள்அவரை بِثَمَنٍۢ ஒரு தொகைக்குப்பகரமாக بَخْسٍ குறைவான(து) دَرَاهِمَ திர்ஹம்களுக்கு مَعْدُوْدَةٍ‌ ۚ எண்ணப்பட்ட وَكَانُوْا இன்னும் இருந்தனர் فِيْهِ அவர் விஷயத்தில் مِنَ الزّٰهِدِيْنَ‏ ஆசையற்றவர்களில்
12:20. வ ஷரவ்ஹு Bபிதமனிம் Bபக்ஸின் தராஹிம மஃதூ ததி(ன்)வ் வ கானூ Fபீஹி மினZஜ் Zஜாஹிதீன்
12:20. (இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.
12:21
12:21 وَقَالَ الَّذِى اشْتَرٰٮهُ مِنْ مِّصْرَ لِامْرَاَتِهٖۤ اَكْرِمِىْ مَثْوٰٮهُ عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ اَوْ نَـتَّخِذَهٗ وَلَدًا‌ ؕ وَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِوَلِنُعَلِّمَهٗ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ‌ؕ وَاللّٰهُ غَالِبٌ عَلٰٓى اَمْرِهٖ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
وَقَالَ கூறினார் الَّذِى எவர் اشْتَرٰٮهُ விலைக்கு வாங்கினார்/அவரை مِنْ مِّصْرَ எகிப்தில் لِامْرَاَتِهٖۤ தன் மனைவிக்கு اَكْرِمِىْ நீ கண்ணியப்படுத்து مَثْوٰٮهُ தங்குமிடத்தை/இவரின் عَسٰٓى اَنْ يَّـنْفَعَنَاۤ அவர் பலனளிக்கலாம்/நமக்கு اَوْ نَـتَّخِذَهٗ அல்லது/ஆக்கிக்கொள்ளலாம்/அவரை وَلَدًا‌ ؕ ஒரு பிள்ளையாக وَكَذٰلِكَ இவ்வாறுதான் مَكَّنَّا ஆதிக்கமளித்தோம் لِيُوْسُفَ யூஸுஃபுக்கு فِى الْاَرْضِ பூமியில் وَلِنُعَلِّمَهٗ இன்னும் கற்பிப்பதற்காக/அவருக்கு مِنْ تَاْوِيْلِ விளக்கத்திலிருந்து الْاَحَادِيْثِ‌ؕ செய்திகளின் وَاللّٰهُ அல்லாஹ் غَالِبٌ மிகைத்தவன் عَلٰٓى اَمْرِهٖ தன் காரியத்தில் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
12:21. வ காலல் லதிஷ் தராஹு மிம் மிஸ்ர லிம்ர அதிஹீ அக்ரிமீ மத்வாஹு 'அஸா அ(ன்)ய்-யன்Fப'அனா அவ் னத்தகிதஹூ வலதா; வ கதாலிக மக்-கன்னா லி-யூஸுFப Fபில் அர்ளி வ லினு'அல்லிமஹூ மின் த'வீலில் அஹாதீத்; வல்லாஹு காலிBபுன் 'அலா அம்ரிஹீ வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
12:21. (யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் - ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.
12:22
12:22 وَلَمَّا بَلَغَ اَشُدَّهٗۤ اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا‌ ؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَ‏
وَلَمَّا போது بَلَغَ அடைந்தார் اَشُدَّهٗۤ முழு ஆற்றல்களை/அவர் اٰتَيْنٰهُ அவருக்கு நாம் கொடுத்தோம் حُكْمًا ஞானத்தை وَّعِلْمًا‌ ؕ கல்வியை وَكَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி தருவோம் الْمُحْسِنِيْنَ‏ நல்லறம் புரிபவர்களுக்கு
12:22. வ லம்மா Bபலக அஷுத்தஹூ ஆதய்னாஹு ஹுக்ம(ன்)வ் வ 'இல்மா; வ கதா லிக னஜ்Zஜில் முஹ்ஸினீன்
12:22. அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்.
12:23
12:23 وَرَاوَدَتْهُ الَّتِىْ هُوَ فِىْ بَيْتِهَا عَنْ نَّـفْسِهٖ وَغَلَّقَتِ الْاَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَـكَ‌ؕ قَالَ مَعَاذَ اللّٰهِ‌ اِنَّهٗ رَبِّىْۤ اَحْسَنَ مَثْوَاىَ‌ؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الظّٰلِمُوْنَ‏
وَرَاوَدَتْهُ விருப்பத்திற்கு அழைத்தாள் / அவரை الَّتِىْ எவள் هُوَ அவர் بَيْتِهَا அவளுடைய عَنْ نَّـفْسِهٖ பலவந்தமாக وَغَلَّقَتِ இன்னும் மூடினாள் الْاَبْوَابَ கதவுகளை وَقَالَتْ இன்னும் கூறினாள் هَيْتَ لَـكَ‌ؕ வருவீராக قَالَ கூறினார் مَعَاذَ اللّٰهِ‌ அல்லாஹ்வின் பாதுகாப்பை اِنَّهٗ நிச்சயமாக அவர் رَبِّىْۤ என் எஜமானர் اَحْسَنَ அழகுபடுத்தினார் مَثْوَاىَ‌ؕ என் தங்குமிடத்தை اِنَّهٗ நிச்சயமாக செய்தி لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்(கள்) الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
12:23. வ ராவதத் ஹுல் லதீ ஹுவ Fபீ Bபய்திஹா 'அன் னFப்ஸிஹீ வ கல்லகதில் அBப்வாBப வ காலத் ஹய்த லக்; கால ம'ஆதல் லாஹி இன்னஹூ ரBப்Bபீ அஹ்ஸன மத்வாய்; இன்னஹூ லா யுFப்லிஹுள்-ளாலிமூன்
12:23. அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) “வாரும்” என்று அழைத்தாள் - (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் - அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று சொன்னார்.
12:24
12:24 وَلَـقَدْ هَمَّتْ بِهٖ‌ۚ وَهَمَّ بِهَا‌ لَوْلَاۤ اَنْ رَّاٰ بُرْهَانَ رَبِّهٖ‌ؕ كَذٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّۤوْءَ وَالْـفَحْشَآءَ‌ؕ اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِيْنَ‏
وَلَـقَدْ உறுதியாக هَمَّتْ நாடினாள் بِهٖ‌ۚ அவரை وَهَمَّ இன்னும் நாடினார் بِهَا‌ அவளை لَوْلَاۤ اَنْ رَّاٰ நிச்சயமாக அவர் பார்த்திருக்கவில்லையெனில் بُرْهَانَ ஆதாரத்தை رَبِّهٖ‌ؕ தன் இறைவனின் كَذٰلِكَ இவ்வாறுதான் لِنَصْرِفَ நாம் திருப்புவதற்காக عَنْهُ அவரை விட்டு السُّۤوْءَ கெட்டதை وَالْـفَحْشَآءَ மானக்கேடானதை اِنَّهٗ நிச்சயமாக அவர் مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் الْمُخْلَصِيْنَ‏ தூய்மையாக்கப் பட்டவர்கள்
12:24. வ லகத் ஹம்மத் Bபிஹீ வ ஹம்ம Bபிஹா லவ் லா அர் ரஆ Bபுர்ஹான ரBப்Bபிஹ்; கதாலிக லினஸ்ரிFப 'அன்ஹு ஸூ'அ வல்Fபஹ்ஷா'; இன்னஹூ மின் 'இBபாதி னல் முக்லஸீன்
12:24. ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.
12:25
12:25 وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيْصَهٗ مِنْ دُبُرٍ وَّاَلْفَيَا سَيِّدَهَا لَدَا الْبَابِ‌ؕ قَالَتْ مَا جَزَآءُ مَنْ اَرَادَ بِاَهْلِكَ سُوْۤءًا اِلَّاۤ اَنْ يُّسْجَنَ اَوْ عَذَابٌ اَلِيْمٌ‏
وَاسْتَبَقَا இருவரும் முந்தினர் الْبَابَ வாசலிற்கு وَقَدَّتْ அவள் கிழித்தால் قَمِيْصَهٗ அவருடைய சட்டையை مِنْ دُبُرٍ பின் புறத்திலிருந்து وَّاَلْفَيَا இருவரும் பெற்றனர் سَيِّدَ கணவரை هَا அவளுடைய لَدَا الْبَابِ‌ؕ வாசலில் قَالَتْ கூறினாள் مَا இல்லை جَزَآءُ தண்டனை مَنْ எவர் اَرَادَ நாடினார் بِاَهْلِكَ உம் மனைவிக்கு سُوْۤءًا ஒரு கெட்டதை اِلَّاۤ தவிர வேறில்லை اَنْ يُّسْجَنَ அவன் சிறையிடப்படுவது اَوْ அல்லது عَذَابٌ ஒரு வேதனை اَلِيْمٌ‏ துன்புறுத்தக் கூடியது
12:25. வஸ்தBபகல் BபாBப வ கத்தத் கமீஸஹூ மின் துBபுரி(ன்)வ் வ அல்Fபயா ஸய்யிதஹா லதல் BபாBப்; காலத் மா ஜZஜா'உ மன் அராத Bபி அஹ்லிக ஸூ'அன் இல்லா அ(ன்)ய்-யுஸ்ஜன அவ் அதாBபுன் 'அலீம்
12:25. (யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.
12:26
12:26 قَالَ هِىَ رَاوَدَتْنِىْ عَنْ نَّـفْسِىْ‌ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ اَهْلِهَا‌ۚ اِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكٰذِبِيْنَ‏
قَالَ கூறினார் هِىَ அவள்தான் رَاوَدَتْنِىْ தன் விருப்பத்திற்கு அழைத்தாள்/என்னை عَنْ نَّـفْسِىْ‌ என்னைபலவந்தமாக وَشَهِدَ இன்னும் சாட்சி கூறினார் شَاهِدٌ ஒரு சாட்சியாளர் مِّنْ இருந்து اَهْلِهَا‌ۚ அவளுடைய குடும்பம் اِنْ كَانَ இருந்தால் قَمِيْصُهٗ அவருடைய சட்டை قُدَّ கிழிக்கப்பட்டது مِنْ قُبُلٍ முன் புறத்திலிருந்து فَصَدَقَتْ உண்மை கூறினாள் وَهُوَ அவர் مِنَ الْكٰذِبِيْنَ‏ பொய்யர்களில்
12:26. கால ஹிய ராவதத்னீ 'அன் னFப்ஸீ வ ஷஹித ஷாஹிதும் மின் அஹ்லிஹா இன் கான கமீஸுஹூ குத்த மின் குBபுலின் Fபஸதகத் வ ஹுவ மினல் காதிBபீன்
12:26. (இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.
12:27
12:27 وَاِنْ كَانَ قَمِيْصُهٗ قُدَّ مِنْ دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصّٰدِقِيْنَ‏
وَاِنْ كَانَ இருந்தால் قَمِيْصُهٗ அவருடைய சட்டை قُدَّ கிழிக்கப்பட்டதாக مِنْ دُبُرٍ பின் புறத்திலிருந்து فَكَذَبَتْ அவள்பொய்கூறினாள் وَهُوَ அவர் مِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மையாளர்களில்
12:27. வ இன் கான கமீஸுஹூ குத்த மின் துBபுரின் FபகதBபத் வ ஹுவ மினஸ் ஸாதிகீன்
12:27. “ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.”
12:28
12:28 فَلَمَّا رَاٰ قَمِيْصَهٗ قُدَّ مِنْ دُبُرٍ قَالَ اِنَّهٗ مِنْ كَيْدِكُنَّ‌ؕ اِنَّ كَيْدَكُنَّ عَظِيْمٌ‏
فَلَمَّا رَاٰ அவர் பார்த்தபோது قَمِيْصَهٗ அவருடைய சட்டையை قُدَّ கிழிக்கப்பட்டதாக مِنْ دُبُرٍ பின் புறத்திலிருந்து قَالَ கூறினார் اِنَّهٗ நிச்சயமாக இது مِنْ كَيْدِ சதியிலிருந்து كُنَّ‌ؕ உங்கள் اِنَّ நிச்சயமாக كَيْدَكُنَّ உங்கள் சதி عَظِيْمٌ‏ மகத்தானது
12:28. Fபலம்மா ரஆ கமீ ஸஹூ குத்த மின் துBபுரின் கால இன்னஹூ மின் கய்திகுன்ன இன்ன கய்தகுன்ன 'அளீம்
12:28. (யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!
12:29
12:29 يُوْسُفُ اَعْرِضْ عَنْ هٰذَا ٚ وَاسْتَغْفِرِىْ لِذَنْۢبِكِ ۖ ‌ۚ اِنَّكِ كُنْتِ مِنَ الْخٰطِٮـِٕيْنَ
يُوْسُفُ யூஸுஃபே اَعْرِضْ புறக்கணிப்பீராக عَنْ هٰذَا ٚ இதை விட்டு وَاسْتَغْفِرِىْ இன்னும் மன்னிப்புத் தேடு لِذَنْۢبِكِ ۖ ۚ நீ உன் பாவத்திற்கு اِنَّكِ நிச்சயமாக நீ كُنْتِ இருக்கிறாய் مِنَ الْخٰطِٮـِٕيْنَ‏ தவறிழைத்தவர்களில்
12:29. யூஸுFபு அஃரிள் 'அன் ஹாத வஸ்தக்Fபிரீ லி தன்Bபிகி இன்னகி குன்தி மினல் காதி'ஈன்
12:29. (என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.  
12:30
12:30 وَقَالَ نِسْوَةٌ فِى الْمَدِيْنَةِ امْرَاَتُ الْعَزِيْزِ تُرَاوِدُ فَتٰٮهَا عَنْ نَّـفْسِهٖ‌ۚ قَدْ شَغَفَهَا حُبًّا‌ ؕ اِنَّا لَـنَرٰٮهَا فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
وَقَالَ கூறினர் نِسْوَةٌ பெண்கள் فِى الْمَدِيْنَةِ நகரத்தில் امْرَاَتُ மனைவி الْعَزِيْزِ அதிபரின் تُرَاوِدُ தன் விருப்பத்திற்கு அழைக்கிறாள் فَتٰٮهَا தன் வாலிபனை عَنْ نَّـفْسِهٖ‌ۚ பலவந்தமாக قَدْ திட்டமாக ஈர்த்து விட்டார் شَغَفَهَا அவளை حُبًّا‌ ؕ அன்பால் اِنَّا நிச்சயமாக நாம் لَـنَرٰٮهَا காண்கிறோம்/அவளை فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான(து)
12:30. வ கால னிஸ்வதுன் Fபில் மதீனதிம் ர அதுல்'அZஜீZஜி துராவிது Fபதாஹா 'அன் னFப்ஸிஹீ கத் ஷகFபஹா ஹுBப்Bபா; இன்னா லன ராஹா Fபீ ளலாலிம் முBபீன்
12:30. அப்பட்டிணத்தில் சில பெண்கள்; “அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்” என்று பேசிக் கொண்டார்கள்.
12:31
12:31 فَلَمَّا سَمِعَتْ بِمَكْرِهِنَّ اَرْسَلَتْ اِلَيْهِنَّ وَاَعْتَدَتْ لَهُنَّ مُتَّكَـاً وَّاٰتَتْ كُلَّ وَاحِدَةٍ مِّنْهُنَّ سِكِّيْنًا وَّقَالَتِ اخْرُجْ عَلَيْهِنَّ ‌ۚ فَلَمَّا رَاَيْنَهٗۤ اَكْبَرْنَهٗ وَقَطَّعْنَ اَيْدِيَهُنَّ وَقُلْنَ حَاشَ لِلّٰهِ مَا هٰذَا بَشَرًا ؕ اِنْ هٰذَاۤ اِلَّا مَلَكٌ كَرِيْمٌ‏
فَلَمَّا سَمِعَتْ அவள் செவியுற்றபோது بِمَكْرِهِنَّ அவர்களின் சூழ்ச்சியை اَرْسَلَتْ அனுப்பினாள் اِلَيْهِنَّ அவர்களிடம் وَاَعْتَدَتْ இன்னும் ஏற்பாடுசெய்தாள் لَهُنَّ அவர்களுக்கு مُتَّكَـاً ஒரு விருந்தை وَّاٰتَتْ இன்னும் கொடுத்தாள் كُلَّ وَاحِدَةٍ ஒவ்வொருவருக்கும் مِّنْهُنَّ அவர்களில் سِكِّيْنًا ஒரு கத்தியை وَّقَالَتِ இன்னும் கூறினாள் اخْرُجْ வெளியேறுவீராக عَلَيْهِنَّ ۚ அவர்கள் முன் فَلَمَّا போது رَاَيْنَهٗۤ பார்த்தனர்/அவரை اَكْبَرْنَهٗ மிக உயர்வாக எண்ணினர்/அவரை وَقَطَّعْنَ இன்னும் அறுத்தனர் اَيْدِيَهُنَّ தங்கள் கைகளை وَقُلْنَ இன்னும் கூறினர் حَاشَ பாதுகாப்பானாக لِلّٰهِ அல்லாஹ் مَا هٰذَا بَشَرًا ؕ இல்லை /இவர்/மனிதராக اِنْ இல்லை هٰذَاۤ இவர் اِلَّا தவிர مَلَكٌ ஒரு வானவரே كَرِيْمٌ‏ கண்ணியமான
12:31. Fபலம்மா ஸமி'அத் Bபிமக் ரிஹின்ன அர்ஸலத் இலய்ஹின்ன வ அஃததத் லஹுன்ன முத்தக அ(ன்)வ் வ ஆதத் குல்ல வாஹிததிம் மின் ஹுன்ன ஸிக்கீன(ன்)வ் வ கால திக் ருஜ் 'அலய்ஹின்ன Fபலம்மா ர அய்னஹூ அக்Bபர்னஹூ வ கத்தஃன அய்தியஹுன்ன வ குல்ன ஹாஷ லில்லாஹி மா ஹாத Bபஷரா; இன் ஹாதா இல்லா மலகுன் கரீம்
12:31. அப் பெண்களின் பேச்சுக்களை (அஜீஸின் மனைவி) கேட்டபோது (விருந்திற்காகச்) சாய்மானங்கள் சித்தம் செய்து அப் பெண்களுக்கு அழைப்பனுப்பினாள்; (விருந்திற்கு வந்த) அப் பெண்களில் ஒவ்வொருத்திக்கும் (பழங்களை நறுக்கித் தின்பதற்காக) ஒரு கத்தியும் கொடுத்தாள். “இப் பெண்கள் எதிரே செல்லும்” என்று (யூஸுஃபிடம்) கூறினாள்; அப் பெண்கள் அவரைப் பார்த்ததும் (அவரழகில் மயங்கி) அவரை மிக மேன்மையாகக் கண்டார்கள். (அவர் அழகில் மெய் மறந்து) தம் கைகளையும் வெட்டிக்கொண்டனர்: “அல்லாஹ்வே பெரியவன்; இவர் மனிதரே அல்லர்! இவர் மேன்மைக்குரிய ஒரு மலக்கேயன்றி வேறில்லை” என்று கூறினார்கள்.
12:32
12:32 قَالَتْ فَذٰلِكُنَّ الَّذِىْ لُمْتُنَّنِىْ فِيْهِ‌ؕ وَ لَـقَدْ رَاوَدْتُّهٗ عَنْ نَّـفْسِهٖ فَاسْتَعْصَمَ‌ؕ وَلَٮِٕنْ لَّمْ يَفْعَلْ مَاۤ اٰمُرُهٗ لَـيُسْجَنَنَّ وَلَيَكُوْنًا مِّنَ الصّٰغِرِيْنَ‏
قَالَتْ கூறினாள் فَذٰلِكُنَّ இவர்தான் الَّذِىْ எவர் لُمْتُنَّنِىْ பழித்தீர்கள்/என்னை فِيْهِ‌ؕ அவர் விஷயத்தில் وَ لَـقَدْ திட்டவட்டமாக رَاوَدْتُّهٗ என் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரை عَنْ نَّـفْسِهٖ பலவந்தமாக فَاسْتَعْصَمَ‌ؕ காத்துக்கொண்டார் وَلَٮِٕنْ لَّمْ يَفْعَلْ அவர் செய்யவில்லையெனில் مَاۤ اٰمُرُهٗ எதை/ஏவுகிறேன்/அவருக்கு لَـيُسْجَنَنَّ நிச்சயமாக சிறையிலிடப்படுவார் وَلَيَكُوْنًا இன்னும் நிச்சயமாக ஆகுவார் مِّنَ الصّٰغِرِيْنَ‏ இழிவானவர்களில்
12:32. காலத் Fபதாலிகுன்னல் லதீ லும்துன்னனீ Fபீஹ்; வ லகத் ராவத்துஹூ 'அன் னFப்ஸிஹீ Fபஸ்தஃஸம்; வ ல'இல் லம் யFப்'அல் மா ஆமுருஹூ ல யுஸ்ஜனன்ன வ ல யகூனன் மினஸ் ஸாகிரீன்
12:32. அதற்கவள் “நீங்கள் எவர் சம்பந்தமாக என்னை நிந்தித்தீர்களோ, அவர்தாம் இவர்; நிச்சயமாக நான் அவரை என் விருப்பத்திற்கு இணங்கும்படி வற்புறுத்தினேன் - ஆனால் அவர் (மன உறுதியுடன்) தம்மைக் காத்துக் கொண்டார். இனியும் அவர் நான் இடும் கட்டளைக்கிணங்கி நடந்து கொள்ளாவிட்டால் சிறையில் தள்ளப்படுவார்; மேலும் அவர் சிறுமை அடைந்தவர்களில் ஒருவராகவும் ஆகிவிடுவார்” என்று சொன்னாள்.
12:33
12:33 قَالَ رَبِّ السِّجْنُ اَحَبُّ اِلَىَّ مِمَّا يَدْعُوْنَنِىْۤ اِلَيْهِ‌ۚ وَاِلَّا تَصْرِفْ عَنِّىْ كَيْدَهُنَّ اَصْبُ اِلَيْهِنَّ وَاَكُنْ مِّنَ الْجٰهِلِيْنَ‏
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா السِّجْنُ சிறை اَحَبُّ மிக விருப்பமானது اِلَىَّ எனக்கு مِمَّا எதை விட يَدْعُوْنَنِىْۤ அழைக்கிறார்கள்/என்னை اِلَيْهِ‌ۚ அதன் பக்கம் وَاِلَّا تَصْرِفْ நீ திருப்பவில்லையெனில் عَنِّىْ என்னை விட்டு كَيْدَهُنَّ சூழ்ச்சியை/ அவர்களின் اَصْبُ இச்சைகொள்வேன் اِلَيْهِنَّ அவர்கள் பக்கம் وَاَكُنْ இன்னும் ஆகிவிடுவேன் مِّنَ الْجٰهِلِيْنَ‏ அறிவீனர்களில்
12:33. கால ரBப்Bபிஸ் ஸிஜ்னு அஹBப்Bபு இலய்ய மிம்ம யத்'ஊ னனீ 'இலய்ஹி வ இல்லா தஸ்ரிFப் 'அன்னீ கய்தஹுன்ன அஸ்Bபு இலய்ஹின்ன வ அகும் மினல் ஜாஹிலீன்
12:33. (அதற்கு) அவர், “என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்” என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.
12:34
12:34 فَاسْتَجَابَ لَهٗ رَبُّهٗ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ‌ؕ اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
فَاسْتَجَابَ பதிலளித்தான் لَهٗ அவருக்கு رَبُّهٗ அவருடைய இறைவன் فَصَرَفَ ஆகவேதிருப்பினான் عَنْهُ அவரை விட்டு كَيْدَ சூழ்ச்சியை هُنَّ‌ؕ அவர்களின் اِنَّهٗ நிச்சயமாக அவன் هُوَ அவன் السَّمِيْعُ நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
12:34. Fபஸ்தஜாBப லஹூ ரBப்Bபுஹூ FபஸரFப 'அன்ஹு கய்தஹுன்ன்; இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
12:34. எனவே அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
12:35
12:35 ثُمَّ بَدَا لَهُمْ مِّنْۢ بَعْدِ مَا رَاَوُا الْاٰيٰتِ لَيَسْجُنُـنَّهٗ حَتّٰى حِيْنٍ
ثُمَّ பிறகு بَدَا தோன்றியது لَهُمْ அவர்களுக்கு مِّنْۢ بَعْدِ பின்னரும் مَا رَاَوُا அவர்கள் பார்த்த الْاٰيٰتِ அத்தாட்சிகளை لَيَسْجُنُـنَّهٗ நிச்சயமாக அவர்கள் சிறையில் அடைக்கவேண்டும்/ அவரை حَتّٰى வரை حِيْنٍ‏ ஒரு காலம்
12:35. தும்ம Bபதா லஹும் மின் Bபஃதி மா ர-அவுல் ஆயாதி லயஸ்ஜுனுன்னஹூ ஹத்தா ஹீன்
12:35. (யூஸுஃப் குற்றமற்றவர் என்பதற்குப் பல) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும், ஒரு காலம் வரை அவர் சிறையிலிடப்பட வேண்டும் என்றே அவர்களுக்குத் தோன்றியது.
12:36
12:36 وَدَخَلَ مَعَهُ السِّجْنَ فَتَيٰنِ‌ؕ قَالَ اَحَدُهُمَاۤ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَعْصِرُ خَمْرًا‌ ۚ وَقَالَ الْاٰخَرُ اِنِّىْۤ اَرٰٮنِىْۤ اَحْمِلُ فَوْقَ رَاْسِىْ خُبْزًا تَاْكُلُ الطَّيْرُ مِنْهُ‌ ؕ نَبِّئْنَا بِتَاْوِيْلِهٖ ۚ اِنَّا نَرٰٮكَ مِنَ الْمُحْسِنِيْنَ‏
وَدَخَلَ நுழைந்தார்(கள்) مَعَهُ அவருடன் السِّجْنَ சிறையில் فَتَيٰنِ‌ؕ இரு வாலிபர்கள் قَالَ கூறினான் اَحَدُهُمَاۤ அவ்விருவரில் ஒருவன் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮنِىْۤ கனவு கண்டேன்/என்னை اَعْصِرُ خَمْرًا‌ ۚ பிழிகிறேன்/மதுவை وَقَالَ இன்னும் கூறினான் الْاٰخَرُ மற்றவன் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮنِىْۤ கனவு கண்டேன்/என்னை اَحْمِلُ சுமக்கிறேன் فَوْقَ மேல் رَاْسِىْ என் தலை خُبْزًا ரொட்டியை تَاْكُلُ புசிப்பதாக الطَّيْرُ பறவைகள் مِنْهُ‌ ؕ அதிலிருந்து نَبِّئْنَا அறிவிப்பீராக/எங்களுக்கு بِتَاْوِيْلِهٖ ۚ இதன் விளக்கத்தை اِنَّا நிச்சயமாக நாங்கள் نَرٰٮكَ காண்கிறோம்/உம்மை مِنَ الْمُحْسِنِيْنَ‏ நல்லறம்புரிபவர்களில்
12:36. வ தகல ம'அ ஹுஸ்ஸிஜ்ன Fபத-யான்; கால அஹதுஹுமா இன்னீ அரானீ அஃஸிரு கம்ர(ன்)வ் வ காலல் ஆகரு இன்னீ அரானீ அஹ்மிலு Fபவ்க ர'ஸீ குBப்Zஜன் த'குலுத் தய்ரு மின்ஹு; னBப்Bபி'னா Bபி த'வீலிஹ்; இன்னா னராக மினல் முஹ்ஸினீன்
12:36. அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், “நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்” என்று கூறினான். மற்றவன், “நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்” என்று கூறினான். (பின் இருவரும் “யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீராக; மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோம்” (என்று கூறினார்கள்).
12:37
12:37 قَالَ لَا يَاْتِيْكُمَا طَعَامٌ تُرْزَقٰنِهٖۤ اِلَّا نَـبَّاْتُكُمَا بِتَاْوِيْلِهٖ قَبْلَ اَنْ يَّاْتِيَكُمَا‌ ؕ ذٰ لِكُمَا مِمَّا عَلَّمَنِىْ رَبِّىْ ؕ اِنِّىْ تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ‏
قَالَ கூறினார் يَاْتِيْكُمَا உங்களிடம் طَعَامٌ ஓர் உணவு تُرْزَقٰنِهٖۤ உணவளிக் கப்படுகிறீர்கள்/அதை اِلَّا نَـبَّاْتُكُمَا தவிர/அறிவித்தேன்/உங்கள் இருவருக்கும் بِتَاْوِيْلِهٖ அதன் விளக்கத்தை قَبْلَ முன்னர் اَنْ يَّاْتِيَكُمَا‌ ؕ அது வருவதற்கு/உங்கள் இருவருக்கும் ذٰ لِكُمَا இது مِمَّا இருந்து/எவை عَلَّمَنِىْ கற்பித்தான்/எனக்கு رَبِّىْ ؕ என் இறைவன் اِنِّىْ நிச்சயமாக நான் تَرَكْتُ விட்டுவிட்டேன் مِلَّةَ மார்க்கத்தை قَوْمٍ மக்களுடைய لَّا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَهُمْ இன்னும் அவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை هُمْ كٰفِرُوْنَ‏ அவர்கள் நிராகரிக்கின்றார்கள்
12:37. கால லா ய'தீகுமா த'ஆமுன் துர்Zஜகானிஹீ இல்லா னBப்Bப'துகுமா Bபி த'வீலிஹீ; கBப்ல அ(ன்)ய் ய'தி யகுமா; தாலிகுமா மிம்மா 'அல்லமனீ ரBப்Bபீ; இன்னீ தரக்து மில்லத கவ்மில் லா யு'மினூன Bபில்லாஹி வஹும் Bபில் ஆகிரதி ஹும் காFபிரூன்
12:37. அதற்கு அவர் கூறினார்: “உங்களிருவருக்கும் அளிக்கக்கூடிய உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்னரும் - (இக்கனவுகளின்) பலனை நீங்களிருவரும் அடைவதற்கு முன்னரும் - இவற்றின் விளக்கத்தை உங்களிலிருவருக்கும் கூறிவிடுகிறேன். இது என் இறைவன் எனக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்தும் உள்ளவை; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டு விட்டேன்.
12:38
12:38 وَاتَّبَعْتُ مِلَّةَ اٰبَآءِىْۤ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ‌ؕ مَا كَانَ لَنَاۤ اَنْ نُّشْرِكَ بِاللّٰهِ مِنْ شَىْءٍ‌ؕ ذٰلِكَ مِنْ فَضْلِ اللّٰهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَشْكُرُوْنَ‏
وَاتَّبَعْتُ இன்னும் பின்பற்றினேன் مِلَّةَ மார்க்கத்தை اٰبَآءِىْۤ என் மூதாதைகளாகிய اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ‌ؕ யஃகூப் مَا كَانَ தகுமானதல்ல لَنَاۤ எங்களுக்கு اَنْ نُّشْرِكَ நாங்கள் இணைவைப்பது بِاللّٰهِ அல்லாஹ்வின் مِنْ شَىْءٍ‌ؕ எதையும் ذٰلِكَ இது مِنْ இருந்து فَضْلِ அருள் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْنَا எங்கள் மீது وَعَلَى இன்னும் மீது النَّاسِ மக்கள் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يَشْكُرُوْنَ‏ நன்றி செலுத்த மாட்டார்கள்
12:38. வத்தBபஃது மில்லத ஆBபா'ஈ இBப்ராஹீம வ இஷ்ஹாக வ யஃகூBப்; மா கான லனா அன் னுஷ்ரிக Bபில்லாஹி மின் ஷய்'; தாலிகமின் Fபள்லில் லாஹி 'அலய்னா வ 'அலன் னாஸி வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஷ்குரூன்
12:38. “நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை.
12:39
12:39 يٰصَاحِبَىِ السِّجْنِ ءَاَرْبَابٌ مُّتَفَرِّقُوْنَ خَيْرٌ اَمِ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُؕ‏
يٰصَاحِبَىِ என் (இரு) தோழர்களே السِّجْنِ சிறை ءَاَرْبَابٌ ?/தெய்வங்கள் مُّتَفَرِّقُوْنَ பிரிந்துள்ளவர்கள் خَيْرٌ மேலானவர்(கள்) اَمِ அல்லது اللّٰهُ அல்லாஹ் الْوَاحِدُ ஒருவன் الْقَهَّارُؕ‏ அடக்கி ஆளுபவன்
12:39. யா ஸாஹிBபயிஸ் ஸிஜ்னி 'அ-அர்BபாBபும் முதFபர்ரிகூன கய்ருன் அமில் லாஹுல் வாஹிதுல் கஹ்ஹார்
12:39. “சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆள்கின்ற ஒருவனான அல்லாஹ்வா?
12:40
12:40 مَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اَسْمَآءً سَمَّيْتُمُوْهَاۤ اَنْـتُمْ وَ اٰبَآؤُكُمْ مَّاۤ اَنْزَلَ اللّٰهُ بِهَا مِنْ سُلْطٰنٍ‌ؕ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ‌ؕ اَمَرَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ‌ؕ ذٰلِكَ الدِّيْنُ الْقَيِّمُ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
مَا تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குவதில்லை مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اِلَّاۤ தவிர اَسْمَآءً பெயர்களை سَمَّيْتُمُوْهَاۤ சூட்டினீர்கள்/ அவற்றை اَنْـتُمْ நீங்களும் وَ اٰبَآؤُ இன்னும் மூதாதைகளும் كُمْ உங்கள் مَّاۤ اَنْزَلَ இறக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் بِهَا இவற்றுக்கு مِنْ எவ்வித سُلْطٰنٍ‌ؕ ஆதாரத்தை اِنِ இல்லை الْحُكْمُ அதிகாரம் اِلَّا தவிர لِلّٰهِ‌ؕ அல்லாஹ்விற்கே اَمَرَ கட்டளையிட்டான் اَلَّا تَعْبُدُوْۤا நிச்சயமாக வணங்காதீர்கள் اِلَّاۤ தவிர اِيَّاهُ‌ؕ அவனை ذٰلِكَ இது الدِّيْنُ மார்க்கம் الْقَيِّمُ நேரானது وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
12:40. மா தஃBபுதூன மின் தூனிஹீ இல்லா அஸ்மா'அன் ஸம் மய்துமூஹா அன்தும் வ ஆBபா'உகும் மா அன்Zஜலல் லாஹு Bபிஹா மின் ஸுல்தான்; இனில்ஹுக்மு இல்லா லில்லாஹ்; அமர அல்லா தஃBபுதூ இல்லா இய்யாஹ்; தாலிகத் தீனுல் கய்யிமு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
12:40. “அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
12:41
12:41 يٰصَاحِبَىِ السِّجْنِ اَمَّاۤ اَحَدُكُمَا فَيَسْقِىْ رَبَّهٗ خَمْرًا‌ۚ وَاَمَّا الْاٰخَرُ فَيُصْلَبُ فَتَاْكُلُ الطَّيْرُ مِنْ رَّاْسِهٖ‌ؕ قُضِىَ الْاَمْرُ الَّذِىْ فِيْهِ تَسْتَفْتِيٰنِؕ‏
يٰصَاحِبَىِ என் இரு தோழர்களே السِّجْنِ சிறை اَمَّاۤ ஆக اَحَدُكُمَا உங்களிருவரில் ஒருவன் فَيَسْقِىْ புகட்டுவான் رَبَّهٗ தன் எஜமானனுக்கு خَمْرًا‌ۚ மது وَاَمَّا ஆக الْاٰخَرُ மற்றவன் فَيُصْلَبُ கழுமரத்தில் அறையப்படுவான் فَتَاْكُلُ தின்னும் الطَّيْرُ பறவைகள் مِنْ رَّاْسِهٖ‌ؕ அவனுடையதலையில் قُضِىَ விதிக்கப்பட்டது الْاَمْرُ காரியம் الَّذِىْ எது فِيْهِ அதில் تَسْتَفْتِيٰنِؕ‏ விளக்கம் கேட்கிறீர்கள்
12:41. யா ஸாஹிBபயிஸ் ஸிஜ்னி அம்மா அஹதுகுமா Fப யஸ்கீ ரBப்Bபஹூ கம்ர(ன்)வ் வ அம்மல் ஆகரு Fப யுஸ்லBபு Fபத'குலுத் தய்ரு மிர் ர'ஸிஹ்; குளியல் அம்ருல் லதீ Fபீஹி தஸ்தFப்தியான்
12:41. “சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! (உங்கள் கனவுகளின் பலன்களாவன:) உங்களிருவரில் ஒருவர் தம் எஜமானனுக்கு திராட்சை மதுவைப் புகட்டிக் கொண்டிருப்பார்; மற்றவரோ சிலுவையில் அறையப்பட்டு, அவர் தலையிலிருந்து பறவைகள் கொத்தித் தின்னும்; நீங்களிருவரும் விளக்கம் கோரிய காரியம் (கனவின் பலன்) விதிக்கப்பட்டுவிட்டது” (என்று யூஸுஃப் கூறினார்).
12:42
12:42 وَقَالَ لِلَّذِىْ ظَنَّ اَنَّهٗ نَاجٍ مِّنْهُمَا اذْكُرْنِىْ عِنْدَ رَبِّكَ فَاَنْسٰٮهُ الشَّيْطٰنُ ذِكْرَ رَبِّهٖ فَلَبِثَ فِى السِّجْنِ بِضْعَ سِنِيْنَ
وَقَالَ இன்னும் கூறினார் لِلَّذِىْ எவருக்கு ظَنَّ எண்ணினார் اَنَّهٗ நிச்சயமாக எவர் نَاجٍ தப்பிப்பவர் مِّنْهُمَا அவ்விருவரில் اذْكُرْنِىْ நினைவுகூரு/என்னை عِنْدَ இடம் رَبِّكَ உன் எஜமான் فَاَنْسٰٮهُ அவருக்கு மறக்கடித்தான் الشَّيْطٰنُ ஷைத்தான் ذِكْرَ நினைவு கூருவதை رَبِّهٖ தன் இறைவனை فَلَبِثَ ஆகவே தங்கினார் فِى السِّجْنِ சிறையில் بِضْعَ سِنِيْنَ‏ சில ஆண்டுகள்
12:42. வ கால லில்லதீ ளன்ன அன்னஹூ னஜிம் மின்ஹுமத் குர்னீ 'இன்த ரBப்Bபிக Fப-அன்ஸாஹுஷ் ஷய்தானு திக்ர ரBப்Bபிஹீ FபலBபித Fபிஸ் ஸிஜ்னி Bபிள்'அ ஸினீன்
12:42. அவ்விருவரில் யார் விடுதலை அடைவார் என்று எண்ணினாரோ அவரிடம், “என்னைப் பற்றி உம் எஜமானனிடம் கூறுவீராக!” என்றும் சொன்னார்; ஆனால் (சிறையிலிருந்து விடுதலையாகிய) அவர் தம் எஜமானனிடம் (இதைப் பற்றிக்) கூறுவதிலிருந்து ஷைத்தான் அவரை மறக்கடித்து விட்டான்; ஆகவே அவர் சிறைக்கூடத்தில் (பின்னும்) சில ஆண்டுகள் இருக்க வேண்டியவரானார்.
12:43
12:43 وَقَالَ الْمَلِكُ اِنِّىْۤ اَرٰى سَبْعَ بَقَرٰتٍ سِمَانٍ يَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعَ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍ‌ؕ يٰۤاَيُّهَا الْمَلَاُ اَفْتُوْنِىْ فِىْ رُءْيَاىَ اِنْ كُنْتُمْ لِلرُّءْيَا تَعْبُرُوْنَ‏
وَقَالَ கூறினார் الْمَلِكُ அரசர் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰى கனவில் கண்டேன் سَبْعَ ஏழு بَقَرٰتٍ பசுக்கள் سِمَانٍ கொழுத்தவை يَّاْكُلُهُنَّ புசிக்கின்றன/அவற்றை سَبْعٌ ஏழு عِجَافٌ இளைத்தவை وَّسَبْعَ இன்னும் ஏழு سُنْۢبُلٰتٍ கதிர்களை خُضْرٍ பசுமையானவை وَّاُخَرَ இன்னும் வேறு يٰبِسٰتٍ‌ؕ காய்ந்தவை يٰۤاَيُّهَا الْمَلَاُ பிரமுகர்களே اَفْتُوْنِىْ விளக்கம் தாருங்கள்/எனக்கு فِىْ رُءْيَاىَ என் கனவில் اِنْ كُنْتُمْ இருந்தீர்களானால் لِلرُّءْيَا கனவிற்கு تَعْبُرُوْنَ‏ வியாக்கியானம் கூறுகிறீர்கள்
12:43. வ காலல் மலிகு இன்னீ அரா ஸBப்'அ Bபகராதின் ஸிமானி(ன்)ய் ய'குலுஹுன்ன ஸBப்'உன் 'இஜாFபு(ன்)வ் வ ஸBப்'அ ஸும்Bபுலாதின் குள்ரி(ன்)வ் வ உகர யாBபிஸாத்; யா அய்யுஹல் மல-உ அFப்தூனீ Fபீ ரு'யாய இன் குன்தும் லிர்ரு'யா தஃBபுரூன்
12:43. நான் ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; ஏழு பசுமையான கதிர்களையும், வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகி விட்ட) கதிர்களையும் திடமாக நான் கனவில் கண்டேன்; பிரதானிகளே! நீங்கள் கனவு விளக்கம் கூறக் கூடியவர்களாக இருந்தால், என்னுடைய (இக்)கனவின் பலனை எனக்கு அறிவியுங்கள்” என்று (தம் பிரதானிகளையழைத்து எகிப்து நாட்டு) அரசர் கூறினார்.  
12:44
12:44 قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍۚ وَمَا نَحْنُ بِتَاْوِيْلِ الْاَحْلَامِ بِعٰلِمِيْنَ‏
قَالُوْۤا கூறினார்கள் اَضْغَاثُ பொய்யானவை اَحْلَامٍۚ கனவுகள் وَمَا இல்லை نَحْنُ நாங்கள் بِتَاْوِيْلِ விளக்கத்தை الْاَحْلَامِ கனவுகளுக்குரிய بِعٰلِمِيْنَ‏ அறிந்தவர்களாக
12:44. காலூ அள்காது அஹ்லா மி(ன்)வ் வமா னஹ்னு Bபி த'வீலில் அஹ்லாமி Bபி'ஆலிமீன்
12:44. “(இவை) குழப்பமான கனவுகளேயாகும், எனவே நாங்கள் (இக்) கனவுகளுக்கு விளக்கங் கூற அறிந்தவர்கள் அல்லர்” என்று கூறினார்கள்.
12:45
12:45 وَقَالَ الَّذِىْ نَجَا مِنْهُمَا وَادَّكَرَ بَعْدَ اُمَّةٍ اَنَا اُنَـبِّئُكُمْ بِتَاْوِيْلِهٖ فَاَرْسِلُوْنِ‏
وَقَالَ கூறினான் الَّذِىْ எவன் نَجَا தப்பித்தான் مِنْهُمَا அவ்விருவரில் وَادَّكَرَ இன்னும் நினைவு கூர்ந்தான் بَعْدَ பின்னர் اُمَّةٍ சில ஆண்டு اَنَا நான் اُنَـبِّئُكُمْ அறிவிப்பேன்/ உங்களுக்கு بِتَاْوِيْلِهٖ அவருடைய விளக்கத்தை فَاَرْسِلُوْنِ‏ ஆகவே அனுப்புங்கள்/என்னை
12:45. வ காலல் லதீ னஜா மின்ஹுமா வத்தகர Bபஃத உம்மதின் அன உனBப்Bபி'உகும் Bபி த'வீலிஹீ Fப-அர்ஸிலூன்
12:45. அவ்விருவரில் (சிறையிலிருந்து) விடுதலையடைந்திருந்தவர், நீண்ட காலத்திற்குப் பின்னர், (யூஸுஃபை) நினைவு கூர்ந்து “இக்கனவின் விளக்கத்தை நான் உங்களுக்கு அறிவிப்பேன், என்னை (யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார்.
12:46
12:46 يُوْسُفُ اَيُّهَا الصِّدِّيْقُ اَ فْتِنَا فِىْ سَبْعِ بَقَرٰتٍ سِمَانٍ يَّاْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَّسَبْعِ سُنْۢبُلٰتٍ خُضْرٍ وَّاُخَرَ يٰبِسٰتٍ ۙ لَّعَلِّىْۤ اَرْجِعُ اِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ‏
يُوْسُفُ யூஸுஃபே! اَيُّهَا الصِّدِّيْقُ உண்மையாளரே! فْتِنَا எங்களுக்கு فِىْ سَبْعِ بَقَرٰتٍ ஏழுபசுக்கள்பற்றியும் سِمَانٍ கொழுத்தவை يَّاْكُلُهُنَّ புசிக்கின்றன/அவற்றை سَبْعٌ ஏழு عِجَافٌ இளைத்தவை وَّسَبْعِ இன்னும் ஏழு سُنْۢبُلٰتٍ கதிர்கள் خُضْرٍ பசுமையானவை وَّاُخَرَ இன்னும் மற்றவை يٰبِسٰتٍ ۙ காய்ந்தவை لَّعَلِّىْۤ اَرْجِعُ நான் திரும்பி செல்லவேண்டும் اِلَى النَّاسِ மக்களிடம் لَعَلَّهُمْ يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறியவேண்டும்
12:46. யூஸுFபு அய்யுஹஸ் ஸித்தீகு அFப்தினா Fபீ ஸBப்'இ Bபகராதின் ஸிமானி(ன்)ய் ய'குலுஹுன்ன ஸBப்'உன் 'இஜாFபு(ன்)வ் வ ஸBபி'இ ஸும்Bபுலாதின் குள்ரி(ன்)வ் வ உகர யாBபிஸாதில் ல'அல்லீ அர்ஜி'உ இலன் னாஸி ல'அல்லஹும் யஃலமூன்
12:46. (சிறையில் யூஸுஃபை கண்ட) அவர், “யூஸுஃபே! உண்மையாளரே! ஏழு கொழுத்த பசுக்களை, ஏழு மெலிந்த பசுக்கள் தின்பதையும்; பசுமையான ஏழு கதிர்களையும் வேறு (ஏழு) காய்ந்து (சாவியாகிவிட்ட) கதிர்களையும் (கனவில் கண்டால் அக்கனவுக்குப் பலன் என்ன என்பதை) எனக்கு அறிவிப்பீராக; மக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களிடம் திரும்பிப் போய்(ச் சொல்ல) வேண்டியிருக்கிறது” (என்று கூறினார்).
12:47
12:47 قَالَ تَزْرَعُوْنَ سَبْعَ سِنِيْنَ دَاَبًا‌ۚ فَمَا حَصَدْتُّمْ فَذَرُوْهُ فِىْ سُنْۢبُلِهٖۤ اِلَّا قَلِيْلًا مِّمَّا تَاْكُلُوْنَ‏
قَالَ கூறினார் تَزْرَعُوْنَ விவசாயம்செய்வீர்கள் سَبْعَ سِنِيْنَ ஏழு ஆண்டுகள் دَاَبًا‌ۚ வழக்கமாக فَمَا எதை حَصَدْتُّمْ அறுவடை செய்தீர் فَذَرُوْهُ விட்டு விடுங்கள்/அதை فِىْ سُنْۢبُلِهٖۤ அதன் கதிரிலேயே اِلَّا قَلِيْلًا கொஞ்சத்தை தவிர مِّمَّا تَاْكُلُوْنَ‏ நீங்கள் புசிப்பதற்குத் தேவையான
12:47. கால தZஜ்ர'ஊன ஸBப்'அ ஸினீன த அBபன் Fபமா ஹஸத்தும் Fபதரூஹு Fபீ ஸும்Bபு லிஹீ இல்லா கலீலம் மிம்மா த'குலூன்
12:47. “நீங்கள் தொடர்ந்து ஏழு ஆண்டுகளுக்கு (நல்லபடியாக) விவசாயம் செய்வீர்கள்; பிறகு நீங்கள் அறுவடை செய்த - (விளைச்ச)லில், நீங்கள் உண்பதற்கு வேண்டிய ஒரு சிறிய அளவைத்தவிர, அதனை அதற்குரிய கதிர்களிலேயே விட்டு வையுங்கள்.
12:48
12:48 ثُمَّ يَاْتِىْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ سَبْعٌ شِدَادٌ يَّاْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ اِلَّا قَلِيْلًا مِّمَّا تُحْصِنُوْنَ‏
ثُمَّ பிறகு يَاْتِىْ வரும் مِنْۢ بَعْدِ பின்னர் ذٰلِكَ அதற்கு سَبْعٌ ஏழு شِدَادٌ கடினமானவை يَّاْكُلْنَ அவை தின்னும் مَا எவற்றை قَدَّمْتُمْ முற்படுத்தினீர்கள் لَهُنَّ அவற்றுக்காக اِلَّا قَلِيْلًا கொஞ்சத்தை தவிர مِّمَّا تُحْصِنُوْنَ‏ நீங்கள் பத்திரப்படுத்தியதிலிருந்து
12:48. தும்ம ய'தீ மிம் Bபஃதி தாலிக ஸBப்'உன் ஷிதாது(ன்)ய் ய'குல்ன மா கத்தம்தும் லஹுன்ன இல்லா கலீலம் மிம்ம துஹ்ஸினூன்
12:48. “பின்னும், அதற்கப்பால் கடினமான (பஞ்சத்தையுடை வருடங்கள்) ஏழு வரும்; நீங்கள் பஞ்சமான ஆண்டுகளுக்காக பத்திரப்படுத்தி முன்னமேயே வைத்திருப்பதில் சொற்ப (அளவை)த் தவிர மற்றதை அவை (அந்த பஞ்ச ஆண்டுகள்) தின்றுவிடும்.
12:49
12:49 ثُمَّ يَاْتِىْ مِنْۢ بَعْدِ ذٰلِكَ عَامٌ فِيْهِ يُغَاثُ النَّاسُ وَفِيْهِ يَعْصِرُوْنَ
ثُمَّ பிறகு يَاْتِىْ வரும் مِنْۢ بَعْدِ பின்னர் ذٰلِكَ அதற்கு عَامٌ ஓர் ஆண்டு فِيْهِ அதில் يُغَاثُ மழை பொழியப்படுவார்(கள்) النَّاسُ மக்கள் وَفِيْهِ இன்னும் அதில் يَعْصِرُوْنَ‏ பிழிவார்கள்
12:49. தும்ம ய'தீ மிம் Bபஃதி தலிக 'ஆமுன் Fபீஹி யுகா துன் னாஸு வ Fபீஹி யஃஸிரூன்
12:49. பின்னும், அதற்கப்பால் ஓராண்டு வரும், அதில் மக்களுக்கு நல்ல மழை பெய்யும்; அதில் (விளையும் கனிகளிலிருந்து) அவர்கள் பழரசங்கள் பிழிந்து (சுகமாக) இருப்பார்கள்” என்று கூறினார்.
12:50
12:50 وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِىْ بِهٖ‌ۚ فَلَمَّا جَآءَهُ الرَّسُوْلُ قَالَ ارْجِعْ اِلٰى رَبِّكَ فَسْـٴَــلْهُ مَا بَالُ النِّسْوَةِ الّٰتِىْ قَطَّعْنَ اَيْدِيَهُنَّ‌ؕ اِنَّ رَبِّىْ بِكَيْدِهِنَّ عَلِيْمٌ‏
وَقَالَ கூறினார் الْمَلِكُ அரசர் ائْتُوْنِىْ வாருங்கள்/என்னிடம் بِهٖ‌ۚ அவரைக் கொண்டு فَلَمَّا جَآءَ வந்த போது هُ அவரிடம் الرَّسُوْلُ தூதர் قَالَ கூறினார் ارْجِعْ நீ திரும்பிச் செல் اِلٰى رَبِّكَ உன் எஜமானனிடம் فَسْـٴَــلْهُ கேள்/அவரை مَا بَالُ விஷயமென்ன? النِّسْوَةِ பெண்களின் الّٰتِىْ எவர்கள் قَطَّعْنَ வெட்டினர் اَيْدِيَهُنَّ‌ؕ தங்கள் கைகளை اِنَّ رَبِّىْ நிச்சயமாக என் இறைவன் بِكَيْدِ சூழ்ச்சியை هِنَّ அவர்களின் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
12:50. வ காலல் மலிகு'தூனீ Bபிஹீ Fபலம்மா ஜா'அஹுர் ரஸூலு காலர்-ஜி இலா ரBப்Bபிக Fபஸ்'அல்ஹு மா Bபாலுன் னிஸ்வதில் லாதீ கத்தஃன அய்தியஹுன்ன்; இன்ன ரBப்Bபீ Bபிகய்திஹின்ன 'அலீம்
12:50. (“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
12:51
12:51 قَالَ مَا خَطْبُكُنَّ اِذْ رَاوَدْتُّنَّ يُوْسُفَ عَنْ نَّـفْسِهٖ‌ؕ قُلْنَ حَاشَ لِلّٰهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِنْ سُوْۤءٍ‌ ؕ قَالَتِ امْرَاَتُ الْعَزِيْزِ الْــٰٔنَ حَصْحَصَ الْحَقُّ اَنَا رَاوَدْتُّهٗ عَنْ نَّـفْسِهٖ وَاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِيْنَ‏
قَالَ கேட்டார் مَا خَطْبُكُنَّ உங்கள்நிலைஎன்ன? اِذْ போது رَاوَدْتُّنَّ ஆசைக்கு அழைத்தீர்கள் يُوْسُفَ யூஸுஃபை عَنْ نَّـفْسِهٖ‌ؕ பலவந்தமாக قُلْنَ கூறினர் حَاشَ பாதுகாப்பானாக لِلّٰهِ அல்லாஹ் مَا عَلِمْنَا நாங்கள் அறியவில்லை عَلَيْهِ அவரிடத்தில் مِنْ سُوْۤءٍ‌ ؕ ஒரு தீங்கை قَالَتِ கூறினாள் امْرَاَتُ மனைவி الْعَزِيْزِ அதிபரின் الْــٰٔنَ இப்போது حَصْحَصَ வெளிப்பட்டு விட்டது الْحَقُّ உண்மை اَنَا நான்தான் رَاوَدْتُّهٗ என் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரை عَنْ نَّـفْسِهٖ நிர்பந்தமாக وَاِنَّهٗ நிச்சயமாக அவர் لَمِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மையாளர்களில்
12:51. கால மா கத்Bபுகுன்ன இத் ராவத்துன்ன யூஸுFப 'அன்னFப்ஸிஹ்; குல்ன ஹாஷ லில்லாஹி மா 'அலிம்னா 'அலய்ஹி மின் ஸூ'; காலதிம் ர அதுல் 'அZஜீZஜில் 'ஆன ஹஷஸல் ஹக்க், அன ராவத் துஹூ 'அன் னFப்ஸிஹீ வ இன்னஹூ லமினஸ் ஸாதிகீன்
12:51. (இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.
12:52
12:52 ذٰ لِكَ لِيَـعْلَمَ اَنِّىْ لَمْ اَخُنْهُ بِالْغَيْبِ وَاَنَّ اللّٰهَ لَا يَهْدِىْ كَيْدَ الْخَـآٮِٕنِيْنَ‏
ذٰ لِكَ அது لِيَـعْلَمَ அவர் அறிவதற்காக اَنِّىْ لَمْ اَخُنْهُ நிச்சயமாகநான்/அவருக்கு துரோகம் செய்யவில்லை بِالْغَيْبِ மறைவில் وَ இன்னும் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَهْدِىْ நல்வழி படுத்த மாட்டான் كَيْدَ சூழ்ச்சியை الْخَـآٮِٕنِيْنَ‏ துரோகிகளின்
12:52. தாலிக லியஃலம அன்னீ லம் அகுன்ஹு Bபில்கய்Bபி வ அன்னல் லாஹ லா யஹ்தீ கய்தல் கா'இனீன்
12:52. இ(வ் விசாரணையை நான் விரும்பிய)தன் காரணம்; “நிச்சயமாக அவர் (என் எஜமானர்) இல்லாத போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சதியை நடைபெற விடுவதில்லை என்பதை அறிவிப்பதற்காகவுமேயாகும்.
12:53
12:53 وَمَاۤ اُبَرِّئُ نَفْسِىْ‌ۚ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌۢ بِالسُّوْٓءِ اِلَّا مَا رَحِمَ رَبِّىْ ؕاِنَّ رَبِّىْ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
وَمَاۤ اُبَرِّئُ நான் தூய்மைப்படுத்த மாட்டேன் نَفْسِىْ‌ۚ என் ஆன்மாவை اِنَّ النَّفْسَ நிச்சயமாக ஆன்மா لَاَمَّارَةٌۢ அதிகம் தூண்டக்கூடியதே بِالسُّوْٓءِ பாவத்திற்கு اِلَّا தவிர مَا எது رَحِمَ அருள்புரிந்தான் رَبِّىْ என் இறைவன் ؕاِنَّ رَبِّىْ நிச்சயமாக என் இறைவன் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
12:53. வமா உBபர்ரி'உ னFப்ஸீ; இன்னன் னFப்ஸ ல அம்மாரதும் Bபிஸ்ஸூ'இ இல்லா மா ரஹிம ரBப்Bபீ; இன்ன ரBப்Bபீ கFபூருர் ரஹீம்
12:53. “அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்” (என்றுங் கூறினார்).
12:54
12:54 وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِىْ بِهٖۤ اَسْتَخْلِصْهُ لِنَفْسِىْ‌ۚ‌ فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِيْنٌ اَمِيْنٌ‏
وَقَالَ கூறினார் الْمَلِكُ அரசர் ائْتُوْنِىْ வாருங்கள்/என்னிடம் بِهٖۤ அவரைக் கொண்டு اَسْتَخْلِصْهُ பிரத்தியேகமாக நான் ஆக்கிக்கொள்வேன்/அவரை لِنَفْسِىْ‌ۚ‌ எனக்கென மட்டும் فَلَمَّا போது كَلَّمَهٗ பேசினார்/அவருடன் قَالَ கூறினார் اِنَّكَ நிச்சயமாக நீர் الْيَوْمَ இன்று لَدَيْنَا நம்மிடம் مَكِيْنٌ தகுதியுடையவர் اَمِيْنٌ‏ நம்பிக்கையாளர்
12:54. வ காலல் மலிகு' தூனீ Bபிஹீ அஸ்தக்லிஸ்ஹு லினFப்ஸீ Fபலம்மா கல்லமஹூ கால இன்னகல் யவ்ம லதய்னா மகீனுன் அமீன்
12:54. இன்னும், அரசர் கூறினார்: “அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலோசக)ராக அமர்த்திக் கொள்வேன்” (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் பேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) “நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்” என்று கூறினார்.
12:55
12:55 قَالَ اجْعَلْنِىْ عَلٰى خَزَآٮِٕنِ الْاَرْضِ‌ۚ اِنِّىْ حَفِيْظٌ عَلِيْمٌ‏
قَالَ கூறினார் اجْعَلْنِىْ ஆக்குவீராக/என்னை عَلٰى மீது خَزَآٮِٕنِ கஜானாக்கள் الْاَرْضِ‌ۚ நாட்டின் اِنِّىْ நிச்சயமாக நான் حَفِيْظٌ பாதுகாப்பவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
12:55. காலஜ் 'அல்னீ 'அலா கZஜா'இனில் அர்ளி இன்னீ ஹFபீளுன் 'அலீம்
12:55. (யூஸுஃப்) கூறினார்: “(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக; நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்.”
12:56
12:56 وَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِ‌ۚ يَتَبَوَّاُ مِنْهَا حَيْثُ يَشَآءُ‌ ؕ نُصِيْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَآءُ‌ۚ وَلَا نُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே مَكَّنَّا வசதியளித்தோம் لِيُوْسُفَ யூஸுஃபுக்கு فِى الْاَرْضِ‌ۚ அந்நாட்டில் يَتَبَوَّاُ தங்கிக்கொள்வார் مِنْهَا அதில் حَيْثُ இடம் يَشَآءُ‌ ؕ நாடுகின்றார் نُصِيْبُ நாம் தருகிறோம் بِرَحْمَتِنَا நம் அருளை مَنْ எவர் نَّشَآءُ‌ۚ நாடுகின்றோம் وَلَا نُضِيْعُ வீணாக்க மாட்டோம் اَجْرَ கூலியை الْمُحْسِنِيْنَ‏ நல்லறம் புரிபவர்களின்
12:56. வ கதாலிக மக்கன்னா லி யூஸுFப Fபில் அர்ளி யதBபவ்வ'உ மின்ஹா ஹய்து யஷா'; னுஸீBபு Bபிரஹ்மதினா மன் னஷா'உ வலா னுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
12:56. யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில் காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.
12:57
12:57 وَلَاَجْرُ الْاٰخِرَةِ خَيْرٌ لِّـلَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ
وَلَاَجْرُ திட்டமாக கூலி الْاٰخِرَةِ மறுமையின் خَيْرٌ மேலானது لِّـلَّذِيْنَ எவர்களுக்கு اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَكَانُوْا இன்னும் இருந்தனர் يَتَّقُوْنَ‏ அஞ்சுகின்றவர்களாக
12:57. வ ல அஜ்ருல் ஆகிரதி கய்ருல் லில்லதீன ஆமனூ வ கானூ யத்தகூன்
12:57. மேலும், பயபக்தியுடையவர்களான முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்.
12:58
12:58 وَجَآءَ اِخْوَةُ يُوْسُفَ فَدَخَلُوْا عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ‏
وَجَآءَ வந்தார்(கள்) اِخْوَةُ சகோதரர்கள் يُوْسُفَ யூஸுஃபுடைய فَدَخَلُوْا இன்னும் நுழைந்தார்கள் عَلَيْهِ அவரிடம் فَعَرَفَهُمْ அறிந்தார்/அவர்களை وَهُمْ அவர்கள் لَهٗ அவரை مُنْكِرُوْنَ‏ அறியாதவர்களாக
12:58. வ ஜா'அ இக்வது யூஸுFப Fபதகலூ 'அலய்ஹி Fப'அரFபஹும் வ ஹும் லஹூ முன்கிரூன்
12:58. (பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,
12:59
12:59 وَ لَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِىْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِيْكُمْ‌ۚ اَلَا تَرَوْنَ اَنِّىْۤ اُوْفِی الْكَيْلَ وَاَنَا خَيْرُ الْمُنْزِلِيْنَ‏
وَ لَمَّا போது جَهَّزَ தயார்படுத்தினார் هُمْ அவர்களுக்கு بِجَهَازِ சாமான்களை هِمْ அவர்களுடைய قَالَ கூறினார் ائْتُوْ வாருங்கள் نِىْ என்னிடம் بِاَخٍ ஒரு சகோதரனைக் கொண்டு لَّكُمْ உங்களுக்குள்ள مِّنْ மூலமாக اَبِيْكُمْ‌ۚ உங்கள் தந்தை اَلَا تَرَوْنَ நீங்கள் கவனிக்கவில்லையா? اَنِّىْۤ நிச்சயமாக நான் اُوْفِی முழுமையாக்குவேன் الْكَيْلَ அளவையை وَاَنَا خَيْرُ நான் சிறந்தவன் الْمُنْزِلِيْنَ‏ விருந்தளிப்பவர்களில்
12:59. வ லம்மா ஜஹ்ஹZஜஹும் BபிஜஹாZஜிஹிம் கால' தூனீ Bபி அகில் லகும் மின் அBபீகும்; அலா தரவ்ன அன்னீ ஊFபில் கய்ல வ அன கய்ருல் முன்Zஜிலீன்
12:59. (யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) “உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் “சிறந்தவன்” என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
12:60
12:60 فَاِنْ لَّمْ تَاْتُوْنِىْ بِهٖ فَلَا كَيْلَ لَـكُمْ عِنْدِىْ وَلَا تَقْرَبُوْنِ‏
فَاِنْ لَّمْ تَاْتُوْنِىْ நீங்கள் வரவில்லையெனில்/என்னிடம் بِهٖ அவரைக் கொண்டு فَلَا அறவேஇல்லை كَيْلَ அளவை لَـكُمْ உங்களுக்கு عِنْدِىْ என்னிடம் تَقْرَبُوْنِ‏ என்னை
12:60. Fப இல் லம் தாதூனீ Bபிஹீ Fபலா கய்ல லகும் 'இன்தீ வலா தக்ரBபூன்
12:60. “ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து உங்களுக்கு (தானிய) அளவையும் (இனி) இல்லை; நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது” என்று கூறினார்.
12:61
12:61 قَالُوْا سَنُرَاوِدُ عَنْهُ اَبَاهُ وَاِنَّا لَفَاعِلُوْنَ‏
قَالُوْا கூறினார்கள் سَنُرَاوِدُ தொடர்ந்து கேட்போம் عَنْهُ அவரை اَبَاهُ அவருடைய தந்தையிடம் وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَفَاعِلُوْنَ‏ செய்பவர்கள்தான்
12:61. காலூ ஸனுராவிது 'அன்ஹு அBபாஹு வ இன்னா லFபா'இலூன்
12:61. “அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம். மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான்” என்று கூறினார்கள்.
12:62
12:62 وَقَالَ لِفِتْيٰنِهِ اجْعَلُوْا بِضَاعَتَهُمْ فِىْ رِحَالِهِمْ لَعَلَّهُمْ يَعْرِفُوْنَهَاۤ اِذَا انْقَلَبُوْۤا اِلٰٓى اَهْلِهِمْ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏
وَقَالَ கூறினார் لِفِتْيٰنِهِ தன் வாலிபர்களிடம் اجْعَلُوْا வையுங்கள் بِضَاعَتَهُمْ அவர்களுடைய கிரயத்தை فِىْ رِحَالِهِمْ அவர்களுடைய மூட்டைகளில் لَعَلَّهُمْ அவர்கள் அறியவேண்டும் يَعْرِفُوْنَهَاۤ அதை اِذَا انْقَلَبُوْۤا அவர்கள் திரும்பினால் اِلٰٓى اَهْلِهِمْ தங்கள் குடும்பத்திடம் لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ அவர்கள் திரும்பி வரவேண்டும்
12:62. வ கால லிFபித்யானிஹிஜ் 'அலூ Bபிளா'அதஹும் Fபீ ரிஹாலிஹிம் ல'அல்லஹும் யஃரிFபூனஹா இதன் கலBபூ இலா அஹ்லிஹிம் ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
12:62. (பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, “அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடும்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்” என்று கூறினார்.
12:63
12:63 فَلَمَّا رَجَعُوْۤا اِلٰٓى اَبِيْهِمْ قَالُوْا يٰۤاَبَانَا مُنِعَ مِنَّا الْكَيْلُ فَاَرْسِلْ مَعَنَاۤ اَخَانَا نَكْتَلْ وَاِنَّا لَهٗ لَحٰـفِظُوْنَ‏
فَلَمَّا போது رَجَعُوْۤا அவர்கள் திரும்பினர் اِلٰٓى தந்தையிடம் اَبِيْهِمْ தம் قَالُوْا கூறினர் يٰۤاَبَانَا எங்கள் தந்தையே مُنِعَ தடுக்கப்பட்டது مِنَّا எங்களுக்கு الْكَيْلُ அளவை فَاَرْسِلْ ஆகவே அனுப்புவீராக مَعَنَاۤ எங்களுடன் اَخَانَا சகோதரனை/எங்கள் نَكْتَلْ அளந்து (வாங்கி) வருவோம் وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَهٗ அவரை لَحٰـفِظُوْنَ‏ பாதுகாப்பவர்கள்தான்
12:63. Fபலம்மா ரஜ'ஊ இலா அBபீஹிம் காலூ யா அBபானா முனி'அ மின்னல் கய்லு Fப அர்ஸில் ம'அனா அகானா னக்தல் வ இன்னா லஹூ லஹாFபிளூன்
12:63. அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி: “எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்” என்று சொன்னார்கள்.
12:64
12:64 قَالَ هَلْ اٰمَنُكُمْ عَلَيْهِ اِلَّا كَمَاۤ اَمِنْتُكُمْ عَلٰٓى اَخِيْهِ مِنْ قَبْلُ‌ؕ فَاللّٰهُ خَيْرٌ حٰفِظًا‌ وَّهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‏
قَالَ கூறினார் اٰمَنُكُمْ உங்களை عَلَيْهِ இவர் விசயத்தில் اِلَّا தவிர كَمَاۤ போல் اَمِنْتُكُمْ நம்பினேன்/உங்களை عَلٰٓى اَخِيْهِ இவருடைய சகோதரர் விஷயத்தில் مِنْ قَبْلُ‌ؕ முன்னர் فَاللّٰهُ அல்லாஹ் خَيْرٌ மிக மேலானவன் حٰفِظًا‌ பாதுகாவலன் وَّهُوَ அவன் اَرْحَمُ மகா கருணையாளன் الرّٰحِمِيْنَ‏ அருள் புரிபவர்களில்
12:64. கால ஹல் ஆமனுகும் 'அலய்ஹி இல்லா கமா அமின்துகும் 'அலா அகீஹி மின் கBப்ல்; Fபல் லாஹு கய்ருன் ஹாFபிள(ன்)வ் வ ஹுவ அர்ஹமுர் ராஹிமீன்
12:64. அதற்கு (யஃகூப்; “இதற்கு) முன்னர் இவருடைய சகோதரர் விஷயத்தில் உங்களை நம்பியது போன்று, இவர் விஷயத்திலும் நான் உங்களை நம்புவதா? (அது முடியாது.) பாதுகாப்பவர்களில் அல்லாஹ்வே மிகவும் மேலானவன்; கிருபையாளர்களில் அவனே எல்லோரையும்விட மிக்க கிருபையாளனாவான்” என்று கூறிவிட்டார்.
12:65
12:65 وَلَمَّا فَتَحُوْا مَتَاعَهُمْ وَجَدُوْا بِضَاعَتَهُمْ رُدَّتْ اِلَيْهِمْؕ قَالُوْا يٰۤاَبَانَا مَا نَـبْغِىْؕ هٰذِهٖ بِضَاعَتُنَا رُدَّتْ اِلَيْنَا‌ ۚ وَنَمِيْرُ اَهْلَنَا وَنَحْفَظُ اَخَانَا وَنَزْدَادُ كَيْلَ بَعِيْرٍ‌ؕ ذٰ لِكَ كَيْلٌ يَّسِيْرٌ‏
وَلَمَّا போது فَتَحُوْا அவர்கள் திறந்தனர் مَتَاعَهُمْ தங்கள் பொருளை وَجَدُوْا கண்டனர் بِضَاعَتَهُمْ தங்கள் கிரயம் رُدَّتْ திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது اِلَيْهِمْؕ தங்களிடம் قَالُوْا கூறினர் يٰۤاَبَانَا எங்கள் தந்தையே مَا نَـبْغِىْؕ என்ன தேடுகிறோம்? هٰذِهٖ இதோ بِضَاعَتُنَا நம் கிரயம் رُدَّتْ திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது اِلَيْنَا‌ ۚ நம்மிடமே وَنَمِيْرُ தானியங்களைக் கொண்டு வருவோம் اَهْلَنَا நம் குடும்பத்திற்கு وَنَحْفَظُ இன்னும் காப்பாற்றுவோம் اَخَانَا சகோதரனை/எங்கள் وَنَزْدَادُ இன்னும் அதிகமாக்குவோம் كَيْلَ அளவையை بَعِيْرٍ‌ؕ ஓர் ஒட்டகத்தின் ذٰ لِكَ كَيْلٌ இது/ஓர் அளவை يَّسِيْرٌ‏ இலகுவானது
12:65. வ லம்மா Fபதஹூ மதா 'அஹும் வஜதூ Bபிளா'அதஹும் ருத்தத் இலய்ஹிம் காலூ யா அBபானா மா னBப்கீ; ஹாதிஹீ Bபிள 'அதுனா ருத்தத் இலய்னா வ னமீரு அஹ்லனா வ னஹ்Fபளு அகானா வ னZஜ்தாது கய்ல Bப'ஈர்; தாலிக கய்லு(ன்)ய் யஸீர்
12:65. அவர்கள் தங்கள் (சாமான்) மூட்டைகளை அவிழ்த்தபோது, அவர்களுடைய கிரயப்பொருள் (யாவும்) அவர்களிடம் திருப்பப் பட்டிருப்பதைக் கண்டார்கள்; அவர்கள், “எங்கள் தந்தையே! (இதற்கு மேல்) நாம் எதைத் தேடுவோம்? இதோ, நம்முடைய (கிரயப்) பொருள்கள் நம்மிடமே திருப்பப்பட்டுவிட்டன; ஆகவே நம் குடும்பத்திற்கு (வேண்டிய) தானியங்களை நாங்கள் வாங்கி வருவோம்; எங்கள் சகோதரரையும் நாங்கள் பாதுகாத்துக்கொள்வோம்; மேலும், (அவருக்காக) ஓர் ஒட்டகை(ச் சுமை) தானியத்தை அதிகமாகக் கொண்டு வருவோம்; இது (அந்த மன்னரைப் பொறுத்த வரை) சாதாரணமான அளவுதான்” என்று கூறினார்கள்.
12:66
12:66 قَالَ لَنْ اُرْسِلَهٗ مَعَكُمْ حَتّٰى تُؤْتُوْنِ مَوْثِقًا مِّنَ اللّٰهِ لَــتَاْتُنَّنِىْ بِهٖۤ اِلَّاۤ اَنْ يُّحَاطَ بِكُمْ‌ۚ فَلَمَّاۤ اٰتَوْهُ مَوْثِقَهُمْ قَالَ اللّٰهُ عَلٰى مَا نَقُوْلُ وَكِيْلٌ‏
قَالَ கூறினார் لَنْ அனுப்பவே மாட்டேன் اُرْسِلَهٗ அவரை مَعَكُمْ உங்களுடன் حَتّٰى வரை تُؤْتُوْنِ கொடுப்பீர்கள்/எனக்கு مَوْثِقًا ஓர் உறுதிமானத்தை مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் لَــتَاْتُنَّنِىْ நிச்சயமாக வருவீர்கள்/என்னிடம் بِهٖۤ அவரைக் கொண்டு اِلَّاۤ தவிர اَنْ يُّحَاطَ அழிவு ஏற்பட்டால் بِكُمْ‌ۚ உங்களுக்கு فَلَمَّاۤ போது اٰتَوْ அவர்கள்கொடுத்தனர் هُ அவருக்கு مَوْثِقَهُمْ தங்கள் உறுதிமானத்தை قَالَ கூறினார் اللّٰهُ அல்லாஹ்வே عَلٰى مَا نَقُوْلُ நாம் கூறுவதற்கு وَكِيْلٌ‏ பொறுப்பாளன்/சாட்சியாளன்
12:66. கால லன் உர்ஸிலஹூ ம'அகும் ஹத்தா து'தூனி மவ்திகம் மினல் லாஹீ லதா துன்னனீ Bபிஹீ இல்லா அய் யுஹாத Bபிகும் Fபலம்மா ஆதவ்ஹு மவ்திகஹும் காலல் லாஹு 'அலா மா னகூலு வகீல்
12:66. அதற்கு யஃகூப் “உங்கள் யாவரையுமே (ஏதாவதோர் ஆபத்து) சூழ்ந்து (உங்களைச் சக்தியற்றவர்களாக ஆக்கிக்) கொண்டாலன்றி, நிச்சயமாக நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வருவீர்களென்று அல்லாஹ்வின் மீது நீங்கள் எனக்குச் சத்தியம்செய்து (வாக்குறுதி) கொடுத்தாலன்றி, நான் அவரை உங்களுடன் அனுப்பவே மாட்டேன்” என்று கூறினார்; அவர்கள் (அவ்வாறு) அவருக்குச் சத்தியம் செய்து (வாக்குறுதி) கொடுத்ததும் அவர் “நாம் பேசிக்கொண்டதற்கு அல்லாஹ்வே காவலனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
12:67
12:67 وَقَالَ يٰبَنِىَّ لَا تَدْخُلُوْا مِنْۢ بَابٍ وَّاحِدٍ وَّادْخُلُوْا مِنْ اَبْوَابٍ مُّتَفَرِّقَةٍ‌ؕ وَمَاۤ اُغْنِىْ عَنْكُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَىْءٍؕ‌ اِنِ الْحُكْمُ اِلَّا لِلّٰهِ‌ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ‌ۚ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ‏
وَقَالَ இன்னும் கூறினார் يٰبَنِىَّ என் பிள்ளைகளே لَا تَدْخُلُوْا நுழையாதீர்கள் مِنْۢ بَابٍ ஒரு வாசல் வழியாக وَّاحِدٍ ஒரே وَّادْخُلُوْا இன்னும் நுழையுங்கள் مِنْ اَبْوَابٍ வாசல்கள் வழியாக مُّتَفَرِّقَةٍ‌ؕ பல்வேறு وَمَاۤ اُغْنِىْ நான் தடுக்க முடியாது عَنْكُمْ உங்களை விட்டும் مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مِنْ شَىْءٍؕ‌ எதையும் اِنِ இல்லை الْحُكْمُ அதிகாரம் اِلَّا தவிர لِلّٰهِ‌ؕ அல்லாஹ்வுக்கே عَلَيْهِ அவன் மீதே تَوَكَّلْتُ‌ۚ நான் நம்பிக்கை வைத்து விட்டேன் وَعَلَيْهِ அவன் மீதே فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைக்கவும் الْمُتَوَكِّلُوْنَ‏ நம்பிக்கை வைப்பவர்கள்
12:67. வ கால யா Bபனிய்ய லா தத்குலூ மிம் BபாBபி(ன்)வ் வா ஹிதி(ன்)வ் வத்குலூ மின் அBப்வாBபிம் முதFபர்ரிகஹ்; வ மா உக்னீ 'அன்கும் மினல் லாஹி மின் ஷய்'இன்; இனில் ஹுக்மு இல்லா லில்லாஹி 'அலய்ஹி தவக்கல்து வ 'அலய்ஹி Fபல் யதவக்கலில் முதவக்கிலூன்
12:67. (பின்னும்) அவர், “என் (அருமை) மக்களே! நீங்கள் (மிஸ்ருக்குள்) ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள்; வெவ்வேறு வாசல்களின் வழியாக நுழையுங்கள்; அல்லாஹ்வின் விதிகளில் யாதொன்றையும் நான் உங்களை விட்டுத்தடுத்து விட முடியாது; (ஏனென்றால்) அதிகாரமெல்லாம் அல்லாஹ்வுக்கேயன்றி (வேறு எவருக்கும்) இல்லை; அவன் மீதே நான் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே, முழுமையாக நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே முழு நம்பிக்கைவைப்பார்களாக!” என்று கூறினார்.
12:68
12:68 وَلَمَّا دَخَلُوْا مِنْ حَيْثُ اَمَرَهُمْ اَبُوْهُمْ ؕمَا كَانَ يُغْنِىْ عَنْهُمْ مِّنَ اللّٰهِ مِنْ شَىْءٍ اِلَّا حَاجَةً فِىْ نَفْسِ يَعْقُوْبَ قَضٰٮهَا‌ؕ وَاِنَّهٗ لَذُوْ عِلْمٍ لِّمَا عَلَّمْنٰهُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ
وَلَمَّا போது دَخَلُوْا நுழைந்தனர் مِنْ حَيْثُ முறையில் اَمَرَ கட்டளையிட்டார் هُمْ அவர்களுக்கு اَبُوْهُمْ தந்தை/தங்கள் ؕمَا كَانَ يُغْنِىْ தடுப்பதாக இல்லை عَنْهُمْ அவர்களைவிட்டு مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مِنْ شَىْءٍ எதையும் اِلَّا ஒரு தேவை حَاجَةً தவிர فِىْ نَفْسِ மனதில் يَعْقُوْبَ யஃகூபுடைய قَضٰٮهَا‌ؕ நிறைவேற்றினார்/அதை وَاِنَّهٗ நிச்சயமாக அவர் لَذُوْ عِلْمٍ அறிவுடையவர் لِّمَا நாம் கற்பித்த காரணத்தால் عَلَّمْنٰهُ அவருக்கு وَلٰكِنَّ எனினும் اَكْثَرَ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
12:68. வ லம்மா தகலூ மின் ஹய்து அமரஹும் அBபூஹும் மா கான யுக்னீ 'அன்ஹும் மினல் லாஹி மின் ஷய்'இன் இல்லா ஹாஜதன் Fபீ னFப்ஸி யஃகூBப களாஹா; வ இன்னஹூ லதூ 'இல்மில் லிமா 'அல்லம்னாஹு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
12:68. (மிஸ்ரு சென்ற) அவர்கள் தம் தந்தை தங்களுக்குக் கட்டளையிட்ட படி நுழைந்ததனால் யஃகூபுடைய மனதிலிருந்து ஒரு நாட்டத்தை அவர்கள் நிறைவேற்றி வைத்தார்களே தவிர, அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதனையும் அது அவர்களை விட்டும் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை; நாம்அவருக்கு அறிவித்துக் கொடுத்தவற்றில் நிச்சயமாக அவர் அறிவு(த் தேர்ச்சி) பெற்றவராக இருக்கின்றார்; எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் இதை அறியமாட்டார்கள்.
12:69
12:69 وَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَخَاهُ‌ قَالَ اِنِّىْۤ اَنَا اَخُوْكَ فَلَا تَبْتَٮِٕسْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
وَلَمَّا போது دَخَلُوْا நுழைந்தனர் عَلٰى يُوْسُفَ யூஸுஃபிடம் اٰوٰٓى ஒதுக்கிக் கொண்டார் اِلَيْهِ தன் பக்கம் اَخَاهُ‌ தன் சகோதரனை قَالَ கூறினார் اِنِّىْۤ اَنَا நிச்சயமாக நான்தான் اَخُوْكَ உம் சகோதரன் فَلَا تَبْتَٮِٕسْ ஆகவே வேதனைப்படாதே بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ‏ அவர்கள்செய்வார்கள்
12:69. வ லம்மா தகலூ 'அலா யூஸுFப ஆவா இலய்ஹி அகாஹு கால இன்னீ அன அகூக Fபலா தBப்த'இஸ் Bபிமா கானூ யஃமலூன்
12:69. (பின்னர்) அவர்கள் யாவரும் யூஸுஃபின் பால் பிரவேசித்த போது அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னைத் தம்முடன் அமரச் செய்து “நிச்சயமாக நாம் உம்முடைய சகோதரன் (யுஸுஃப்); அவர்கள் (நமக்குச்) செய்தவை பற்றி(யெல்லாம்) விசாரப்படாதீர்” என்று (இரகசியமாகக்) கூறினார்.
12:70
12:70 فَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ جَعَلَ السِّقَايَةَ فِىْ رَحْلِ اَخِيْهِ ثُمَّ اَذَّنَ مُؤَذِّنٌ اَ يَّـتُهَا الْعِيْرُ اِنَّكُمْ لَسَارِقُوْنَ‏
فَلَمَّا அவர் தயார்படுத்தியபோது جَهَّزَهُمْ அவர்களுக்கு بِجَهَازِهِمْ பொருள்களை/அவர்களுடைய جَعَلَ வைத்தார் السِّقَايَةَ குவளையை فِىْ رَحْلِ சுமையில் اَخِيْهِ தன் சகோதரனின் ثُمَّ பிறகு اَذَّنَ அறிவித்தார் مُؤَذِّنٌ ஓர் அறிவிப்பாளர் اَ يَّـتُهَا الْعِيْرُ ஓ! பயணக் கூட்டத்தார்களே! اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَسَارِقُوْنَ‏ திருடர்கள்தான்
12:70. Fபலம்மா ஜஹ்ஹZஜஹும் BபிஜஹாZஜிஹிம் ஜ'அலஸ் ஸிகாயத Fபீ ரஹ்லி அகீஹி தும்ம அத்தன மு'அத்தினுன் அய்யதுஹல்'ஈரு இன்னகும் லஸாரிகூன்
12:70. பின்னர், அவர்களுடைய பொருள்களைச் சித்தம் செய்து கொடுத்த போது, தம் சகோதரர் (புன்யாமீன்) உடைய சுமையில் (பானங்கள் பருகுவதற்கான ஒரு பொற்)குவளையை (எவரும் அறியாது) வைத்து விட்டார்; (அவர்கள் புறப்பட்டுச் செல்லலானதும் அரசாங்க) அறிவிப்பாளர் ஒருவர், “ஓ! ஒட்டகக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்களே!” என்று கூறினார்.
12:71
12:71 قَالُوْا وَاَقْبَلُوْا عَلَيْهِمْ مَّاذَا تَفْقِدُوْنَ‏
قَالُوْا கூறினர் وَاَقْبَلُوْا இன்னும் முன்னோக்கி வந்தனர் عَلَيْهِمْ அவர்கள் பக்கம் مَّاذَا எதை? تَفْقِدُوْنَ‏ இழக்கிறீர்கள்
12:71. காலூ வ அக்Bபலூ 'அலய்ஹிம் மாதா தFப்கிதூன்
12:71. (அதற்கு) அவர்கள் இவர்களை முன்னோக்கி வந்து, “நீங்கள் எதனை இழந்து விட்டீர்கள்” எனக் கேட்டார்கள்.
12:72
12:72 قَالُوْا نَفْقِدُ صُوَاعَ الْمَلِكِ وَلِمَنْ جَآءَ بِهٖ حِمْلُ بَعِيْرٍ وَّاَنَا بِهٖ زَعِيْمٌ‏
قَالُوْا கூறினர் نَفْقِدُ இழக்கிறோம் صُوَاعَ குவளையை الْمَلِكِ அரசருடைய وَلِمَنْ எவருக்கு? جَآءَ வந்தார் بِهٖ அதைக் கொண்டு حِمْلُ சுமை بَعِيْرٍ ஓர் ஒட்டகை وَّاَنَا நான் بِهٖ அதற்கு زَعِيْمٌ‏ பொறுப்பாளன்
12:72. காலூ னFப்கிது ஸுவா'அல் மலிகி வ லிமன் ஜா'அ Bபிஹீ ஹிம்லு Bப'ஈரி(ன்)வ் வ அன Bபிஹீ Zஜ'ஈம்
12:72. “நாங்கள் அரசருடைய (அளவு) மரக்காலை இழந்து விட்டோம்; அதனை எவர்கொண்டு வந்தாலும், அவருக்கு ஓர் ஒட்டகச் சுமை (தானியம் சன்மானமாக) உண்டு; இதற்கு நானே பொறுப்பாளி” என்று கூறினார்கள்.
12:73
12:73 قَالُوْا تَاللّٰهِ لَـقَدْ عَلِمْتُمْ مَّا جِئْنَا لِـنُفْسِدَ فِى الْاَرْضِ وَمَا كُنَّا سَارِقِيْنَ‏
قَالُوْا கூறினர் تَاللّٰهِ அல்லாஹ் மீது சத்தியமாக لَـقَدْ عَلِمْتُمْ நீங்கள்அறிந்திருக்கிறீர்கள் مَّا جِئْنَا நாங்கள் வரவில்லை لِـنُفْسِدَ நாங்கள் விஷமம் செய்வதற்கு فِى الْاَرْضِ இவ்வூரில் وَمَا كُنَّا இன்னும் நாங்கள் இருக்கவில்லை سَارِقِيْنَ‏ திருடர்களாக
12:73. காலூ தல்லாஹி லகத் 'அலிம்தும் மா ஜி'ன லினுFப்ஸித Fபில் அர்ளி வமா குன்னா ஸாரிகீன்
12:73. (அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, நாங்கள் நாட்டிலே குழப்பம் உண்டாக்க வரவில்லை என்பதை நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்; நாங்கள் திருடர்களுமல்லர்” என்றார்கள்.
12:74
12:74 قَالُوْا فَمَا جَزَاۤؤُهٗۤ اِنْ كُنْتُمْ كٰذِبِيْنَ‏
قَالُوْا فَمَا جَزَاۤؤُهٗۤ கூறினர்/என்ன?/தண்டனை/அதன் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் كٰذِبِيْنَ‏ பொய்யர்களாக
12:74. காலூ Fபமா ஜZஜா'உ ஹூ இன் குன்தும் காதிBபீன்
12:74. (அதற்கு) அவர்கள், “நீங்கள் பொய்யர்களாக இருந்தால், அதற்குரிய தண்டனை என்ன?” என்று கேட்டார்கள்.
12:75
12:75 قَالُوْا جَزَاۤؤُهٗ مَنْ وُّجِدَ فِىْ رَحْلِهٖ فَهُوَ جَزَاۤؤُهٗ‌ؕ كَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ‏
قَالُوْا கூறினர் جَزَاۤؤُهٗ அதன் தண்டனை مَنْ எவர் وُّجِدَ காணப்பட்டது فِىْ சுமையில் رَحْلِهٖ அவருடைய فَهُوَ அவரே جَزَاۤؤُهٗ‌ؕ அதற்குரிய தண்டனையாவார் كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى நாம் தண்டிப்போம் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களை
12:75. காலூ ஜZஜா'உஹூ ம(ன்)வ் வுஜித Fபீ ரஹ்லிஹீ Fபஹுவ ஜZஜா'உஹ்; கதாலிக னஜ்Zஜிள் ளாலிமீன்
12:75. அதற்குரிய தண்டனையாவது, “எவருடைய சுமையில் அது காணப்படுகிறதோ (அவரை பிடித்து வைத்துக் கொள்வதே) அதற்குத் தண்டனை; அநியாயம் செய்வோரை இவ்வாறே நாங்கள் தண்டிக்கிறோம்” என்று (அந்த சகோதரர்கள்) கூறினார்கள்.
12:76
12:76 فَبَدَاَ بِاَوْعِيَتِهِمْ قَبْلَ وِعَآءِ اَخِيْهِ ثُمَّ اسْتَخْرَجَهَا مِنْ وِّعَآءِ اَخِيْهِ‌ؕ كَذٰلِكَ كِدْنَا لِيُوْسُفَ‌ؕ مَا كَانَ لِيَاْخُذَ اَخَاهُ فِىْ دِيْنِ الْمَلِكِ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ‌ؕ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ‌ؕ وَفَوْقَ كُلِّ ذِىْ عِلْمٍ عَلِيْمٌ‏
فَبَدَاَ ஆரம்பித்தார் بِاَوْعِيَتِهِمْ மூட்டைகளில்/அவர்களின் قَبْلَ முன்பாக وِعَآءِ மூட்டைக்கு اَخِيْهِ தன் சகோதரனின் ثُمَّ اسْتَخْرَجَهَا பிறகு/வெளிப்படுத்தினார்/அதை مِنْ وِّعَآءِ மூட்டையிலிருந்து اَخِيْهِ‌ؕ தன் சகோதரனின் كَذٰلِكَ இப்படித்தான் كِدْنَا காரணம் செய்தோம் لِيُوْسُفَ‌ؕ யூஸுஃபுக்கு مَا كَانَ அவர் இல்லை لِيَاْخُذَ எடுப்பவராக اَخَاهُ தன் சகோதரனை فِىْ دِيْنِ சட்டப்படி الْمَلِكِ அரசரின் اِلَّاۤ اَنْ يَّشَآءَ தவிர/நாடினால் اللّٰهُ‌ؕ அல்லாஹ் نَرْفَعُ உயர்த்துகின்றோம் دَرَجٰتٍ பதவிகளால் مَّنْ எவரை نَّشَآءُ‌ؕ விரும்புகின்றோம் وَفَوْقَ இன்னும் மேல் كُلِّ ஒவ்வொரு ذِىْ عِلْمٍ கல்வியுடையவர் عَلِيْمٌ‏ ஒரு கல்விமான்
12:76. FபBபத-அ Bபி-அவ்'இயதிஹிம் கBப்ல வி'ஆ'இ அகீஹி தும்மஸ் தக்ரஜஹா மி(ன்)வ் வி 'ஆ'இ அகீஹ்; கதாலிக கித்னா லி யூஸுFப்; மா கான லியாகுத அகாஹு Fபீ தீனில் மலிகி இல்லா அ(ன்)ய் யஷா'அல் லாஹ்; னர்Fப'உ தரஜாதிம் மன் னஷா'; வ Fபவ்க குல்லி தீ 'இல்மின் 'அலீம்
12:76. ஆகவே அவர் தம் சகோதர(ன் புன்யாமீ)னின் பொதி(யைச் சோதி)க்கு முன்னே, அவர்களுடைய பொதிகளை (சோதிக்க) ஆரம்பித்தார்; பின்பு அதனை தம் (சொந்த) சகோதரனின் பொதியிலிருந்து வெளிப்படுத்தினார்; இவ்வாறாக யூஸுஃபுக்காக நாம் ஓர் உபாயம் செய்து கொடுத்தோம்; அல்லாஹ் நாடினாலன்றி, அவர் தம் சகோதரனை எடுத்துக் கொள்ள அரசரின் சட்டப்படி இயலாதிருந்தார் - நாம் நாடியவர்களின் பதவிகளை நாம் உயர்த்துகின்றோம்; கல்வி அறிவுடைய ஒவ்வொருவருக்கும் மேலான அறிந்த ஒருவன் இருக்கவே செய்கிறான்!
12:77
12:77 قَالُوْۤا اِنْ يَّسْرِقْ فَقَدْ سَرَقَ اَخٌ لَّهٗ مِنْ قَبْلُ‌ ۚ فَاَسَرَّهَا يُوْسُفُ فِىْ نَفْسِهٖ وَلَمْ يُبْدِهَا لَهُمْ‌ ۚ قَالَ اَنْـتُمْ شَرٌّ مَّكَانًا ‌ۚ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا تَصِفُوْنَ‏
قَالُوْۤا கூறினர் اِنْ يَّسْرِقْ அவர் திருடினால் فَقَدْ سَرَقَ திருடி விட்டான் اَخٌ ஒரு சகோதரன் لَّهٗ அவருடைய مِنْ قَبْلُ‌ ۚ முன்னர் فَاَسَرَّهَا மறைத்தார்/அதை يُوْسُفُ யூஸுஃப் فِىْ نَفْسِهٖ தன் உள்ளத்தில் وَلَمْ வெளியாக்கவில்லை يُبْدِهَا அதை لَهُمْ‌ ۚ அவர்களுக்கு قَالَ கூறினார் اَنْـتُمْ நீங்கள் شَرٌّ மிகவும் கெட்டவர்கள் مَّكَانًا ۚ தரம் وَاللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِمَا تَصِفُوْنَ‏ நீங்கள் வருணிப்பதை
12:77. காலூ இ(ன்)ய் யஸ்ரிக் Fபகத் ஸரக அகுல் லஹூ மின் கBப்ல்; Fப அஸர்ரஹா யூஸுFபு Fபீ னFப்ஸிஹீ வ லம் யுBப்திஹா லஹும்; கால அன்தும் ஷர்ரும் மகான(ன்)வ் வல்லாஹு அஃலமு Bபிமா தஸிFபூன்
12:77. (அப்போது) அவர்கள், “இவன் (அதைத்) திருடியிருந்தால் இவனுடைய சகோதரன் (யூஸுஃபும்) முன்னால் நிச்சயமாக திருடியிருக்கிறான்” என்று (தங்களுக்குள்) கூறிக்கொண்டார்கள்; (இச்செய்திகளைச் செவியேற்றும்) அவர்களிடம் வெளியிடாது யூஸுஃப் தம் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொண்டார்; அவர் “நீங்கள் தரத்தில் இன்னும் தீயவர்கள்; (இவர் சகோதரரும் திருடியிருப்பார் என்று) நீங்கள் வர்ணிக்கிறீர்களே அதை அல்லாஹ் நன்றாக அறிவான்” என்று (தமக்குள்ளே) சொல்லிக் கொண்டார்.  
12:78
12:78 قَالُوْا يٰۤاَيُّهَا الْعَزِيْزُ اِنَّ لَهٗۤ اَبًا شَيْخًا كَبِيْرًا فَخُذْ اَحَدَنَا مَكَانَهٗۚ اِنَّا نَرٰٮكَ مِنَ الْمُحْسِنِيْنَ‏
قَالُوْا கூறினர் يٰۤاَيُّهَا الْعَزِيْزُ ஓ அதிபரே! اِنَّ நிச்சயமாக لَهٗۤ அவருக்கு اَبًا ஒரு தந்தை شَيْخًا முதியவர் كَبِيْرًا பெரியவர் فَخُذْ எடுப்பீராக اَحَدَنَا எங்களில் ஒருவரை مَكَانَهٗۚ இவருடைய இடத்தில் اِنَّا நிச்சயமாக நாம் نَرٰٮكَ காண்கிறோம்/உம்மை مِنَ الْمُحْسِنِيْنَ‏ நல்லறம்புரிபவர்களில்
12:78. காலூ யா அய்யுஹல் 'அZஜீZஜு இன்ன லஹூ அBபன் ஷய்கன் கBபீரன் Fபகுத் அஹதனா மகானஹூ இன்னா னராக மினல் முஹ்ஸினீன்
12:78. அவர்கள் (யூஸுஃபை நோக்கி), (இந்நாட்டின் அதிபதி) அஜீஸே! நிச்சயமாக இவருக்கு முதிர்ச்சியடைந்துள்ள வயோதிகத் தந்தை இருக்கிறார். எனவே அவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை நீர் எடுத்துக் கொள்ளும்; நிச்சயமாக நாங்கள் உம்மைப் பரோபகாரம் செய்வேரில் ஒருவராகவே காண்கிறோம்” என்று கூறினார்கள்.
12:79
12:79 قَالَ مَعَاذَ اللّٰهِ اَنْ نَّاْخُذَ اِلَّا مَنْ وَّجَدْنَا مَتَاعَنَا عِنْدَهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّظٰلِمُوْنَ
قَالَ கூறினார் مَعَاذَ பாதுகாப்பானாக اللّٰهِ அல்லாஹ் اَنْ نَّاْخُذَ நாம் பிடிப்பதை اِلَّا தவிர مَنْ எவரை وَّجَدْنَا கண்டோம் مَتَاعَنَا நம் பொருளை عِنْدَهٗۤ ۙ அவரிடம் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِذًا அப்படி செய்தால் لَّظٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்தான்
12:79. கால ம'ஆதல் லாஹி அன் னாகுத இல்லா ம(ன்)வ் வஜத்னா மதா'அனா 'இன்தஹூ இன்னா இதல் லளாலிமூன்
12:79. அதற்கவர், “எங்கள் பொருளை எவரிடம் நாங்கள் கண்டோமோ, அவரையன்றி (வேறு ஒருவரை) நாம் எடுத்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக! (அப்படிச் செய்தால்) நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.
12:80
12:80 فَلَمَّا اسْتَايْــٴَــسُوْا مِنْهُ خَلَصُوْا نَجِيًّا‌ ؕ قَالَ كَبِيْرُهُمْ اَلَمْ تَعْلَمُوْۤا اَنَّ اَبَاكُمْ قَدْ اَخَذَ عَلَيْكُمْ مَّوْثِقًا مِّنَ اللّٰهِ وَمِنْ قَبْلُ مَا فَرَّطْتُّمْ فِىْ يُوْسُفَ‌ ۚ فَلَنْ اَبْرَحَ الْاَرْضَ حَتّٰى يَاْذَنَ لِىْۤ اَبِىْۤ اَوْ يَحْكُمَ اللّٰهُ لِىْ‌ ۚ وَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ‏
فَلَمَّا போது اسْتَايْــٴَــسُوْا அவர்கள் நம்பிக்கையிழந்தனர் مِنْهُ அவரிடம் خَلَصُوْا அவர்கள் விலகினர் نَجِيًّا‌ ؕ ஆலோசித்தவர்களாக قَالَ கூறினார் كَبِيْرُ பெரியவர் هُمْ அவர்களில் اَلَمْ تَعْلَمُوْۤا நீங்கள் அறியவில்லையா? اَنَّ நிச்சயமாக اَبَاكُمْ தந்தை/உங்கள் قَدْ திட்டமாக اَخَذَ வாங்கினார் عَلَيْكُمْ உங்களிடம் مَّوْثِقًا ஓர் உறுதிமானத்தை مِّنَ اللّٰهِ அல்லாஹ்வின் وَمِنْ قَبْلُ இன்னும் முன்னர் مَا فَرَّطْتُّمْ நீங்கள் தவறிழைத்ததை فِىْ يُوْسُفَ‌ ۚ யூஸுஃப் விஷயத்தில் فَلَنْ اَبْرَحَ ஆகவே நகர மாட்டேன் الْاَرْضَ பூமியைவிட்டு حَتّٰى வரை يَاْذَنَ அனுமதியளிக்கின்றார் لِىْۤ எனக்கு اَبِىْۤ என் தந்தை اَوْ அல்லது يَحْكُمَ தீர்ப்பளிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் لِىْ‌ ۚ எனக்கு وَهُوَ அவன் خَيْرُ மிக மேலானவன் الْحٰكِمِيْنَ‏ தீர்ப்பளிப்பவர்களில்
12:80. Fபலம்மஸ் தய்'அஸூ மின்ஹு கலஸூ னஜிய்யன் கால கBபீருஹும் அலம் தஃலமூன் அன்ன அBபாகும் கத் அகத 'அலய்கும் மவ்திகம் மினல் லாஹி வ மின் கBப்லு மா Fபர்ரத்தும் Fபீ யூஸுFப Fபலன் அBப்ரஹல் அர்ள ஹத்தா யாதன லீ அBபீ அவ் யஹ்குமல் லாஹு லீ வ ஹுவ கய்ருல் ஹாகிமீன்
12:80. எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலோசனை செய்தார்கள். அவர்களுக்குள் பெரியவர் சொன்னார்: நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.
12:81
12:81 اِرْجِعُوْۤا اِلٰٓى اَبِيْكُمْ فَقُوْلُوْا يٰۤاَبَانَاۤ اِنَّ ابْنَكَ سَرَقَ‌ۚ وَمَا شَهِدْنَاۤ اِلَّا بِمَا عَلِمْنَا وَمَا كُنَّا لِلْغَيْبِ حٰفِظِيْنَ‏
اِرْجِعُوْۤا திரும்பிச்செல்லுங்கள் اِلٰٓى اَبِيْكُمْ உங்கள் தந்தையிடம் فَقُوْلُوْا இன்னும் கூறுங்கள் يٰۤاَبَانَاۤ எங்கள் தந்தையே اِنَّ நிச்சயமாக ابْنَكَ உம் மகன் سَرَقَ‌ۚ திருடினான் وَمَا شَهِدْ சாட்சி பகரவில்லை نَاۤ நாங்கள் اِلَّا தவிர بِمَا عَلِمْنَا நாங்கள் அறிந்ததைக் கொண்டு وَمَا كُنَّا நாங்கள் இருக்கவில்லை لِلْغَيْبِ மறைவானவற்றை حٰفِظِيْنَ‏ பாதுகாப்பவர்களாக
12:81. இர்ஜி'ஊ இலா அBபீகும் Fபகூலூ யா அBபானா இன்னBப் னக ஸரக்; வமா ஷஹித்னா இல்லா Bபிமா 'அலிம்னா வமா குன்னா லில்கய்Bபி ஹாFபிளீன்
12:81. ஆகவே, “நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று, “எங்களுடைய தந்தையே! உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை; மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்;
12:82
12:82 وَسْــٴَــلِ الْقَرْيَةَ الَّتِىْ كُنَّا فِيْهَا وَالْعِيْرَ الَّتِىْ اَقْبَلْنَا فِيْهَا‌ؕ وَاِنَّا لَصٰدِقُوْنَ‏
وَسْــٴَــلِ நீர் கேட்பீராக الْقَرْيَةَ ஊரை الَّتِىْ எது كُنَّا நாங்கள் இருந்தோம் فِيْهَا அதில் وَالْعِيْرَ இன்னும் பயணக் கூட்டம் الَّتِىْ எது اَقْبَلْنَا வந்தோம் فِيْهَا‌ؕ அதில் وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَصٰدِقُوْنَ‏ உண்மையாளர்கள்தான்
12:82. வஸ்'அலில் கர்யதல் லதீ குன்னா Fபீஹா வல்'ஈரல் லதீ அக்Bபல்னா Fபீஹா வ இன்னா லஸாதிகூன்
12:82. “நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்“ (என்றும் சொல்லுங்கள்” என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).
12:83
12:83 قَالَ بَلْ سَوَّلَتْ لَـكُمْ اَنْفُسُكُمْ اَمْرًا‌ؕ فَصَبْرٌ جَمِيْلٌ‌ؕ عَسَى اللّٰهُ اَنْ يَّاْتِيَنِىْ بِهِمْ جَمِيْعًا‌ؕ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏
قَالَ கூறினார் بَلْ மாறாக سَوَّلَتْ அலங்கரித்தன لَـكُمْ உங்களுக்கு اَنْفُسُكُمْ உங்கள் ஆன்மாக்கள் اَمْرًا‌ؕ ஒரு காரியத்தை فَصَبْرٌ ஆகவே பொறுமை جَمِيْلٌ‌ؕ அழகியது, நல்லது عَسَى கூடும் اللّٰهُ அல்லாஹ் يَّاْتِيَنِىْ என்னிடம் بِهِمْ அவர்களைக்கொண்டு جَمِيْعًا‌ؕ அனைவரையும் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْعَلِيْمُ நன்கறிந்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
12:83. கால Bபல் ஸவ்வலத் லகும் அன்Fபுஸுகும் அம்ரன் FபஸBப்ருன் ஜமீலுன் 'அஸல் லாஹு அ(ன்)ய் யா தியனீ Bபிஹிம் ஜமீ'ஆ; இன்னஹூ ஹுவல் 'அலீமுல் ஹகீம்
12:83. (ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) “இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன; ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டுவந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்” என்று கூறினார்.
12:84
12:84 وَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰۤاَسَفٰى عَلٰى يُوْسُفَ وَابْيَـضَّتْ عَيْنٰهُ مِنَ الْحُـزْنِ فَهُوَ كَظِيْمٌ‏
وَتَوَلّٰى இன்னும் விலகினார் عَنْهُمْ அவர்களை விட்டு وَقَالَ இன்னும் கூறினார் يٰۤاَسَفٰى என் துயரமே عَلٰى மீது يُوْسُفَ யூஸுஃப் وَابْيَـضَّتْ வெளுத்தன عَيْنٰهُ அவரது இரு கண்கள் مِنَ الْحُـزْنِ கவலையால் فَهُوَ அவர் كَظِيْمٌ‏ அடக்கிக் கொள்பவர்
12:84. வ தவல்லா 'அன்ஹும் வ கால யா அஸFபா 'அலா யூஸுFப வBப்யள்ளத் 'அய்னாஹு மினல் ஹுZஜ்னி Fபஹுவ களீம்
12:84. பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
12:85
12:85 قَالُوْا تَاللّٰهِ تَفْتَؤُا تَذْكُرُ يُوْسُفَ حَتّٰى تَكُوْنَ حَرَضًا اَوْ تَكُوْنَ مِنَ الْهَالِكِيْنَ‏
قَالُوْا கூறினர் تَاللّٰهِ அல்லாஹ் மீது சத்தியமாக تَفْتَؤُا تَذْكُرُ நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர் يُوْسُفَ யூஸுஃபை حَتّٰى வரை تَكُوْنَ ஆகுவீர் حَرَضًا அழிவை நெருங்கியவராக اَوْ அல்லது تَكُوْنَ ஆகுவீர் مِنَ الْهَالِكِيْنَ‏ இறந்தவர்களில்
12:85. காலூ தல்லாஹி தFப்த'உ தத்குரு யூஸுFப ஹத்தா தகூன ஹரளன் அவ் தகூன மினல் ஹாலிகீன்
12:85. (இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.
12:86
12:86 قَالَ اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّـىْ وَحُزْنِىْۤ اِلَى اللّٰهِ وَاَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
قَالَ கூறினார் اِنَّمَاۤ اَشْكُوْا நான் முறையிடுவதெல்லாம் بَثِّـىْ என் துக்கத்தை وَحُزْنِىْۤ இன்னும் என் கவலையை اِلَى اللّٰهِ அல்லாஹ்விடம்தான் وَاَعْلَمُ இன்னும் அறிவேன் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَا لَا تَعْلَمُوْنَ‏ நீங்கள் அறியாதவற்றை
12:86. கால இன்னமா அஷ்கூ Bபத்தீ வ ஹுZஜ்னீ இலல் லாஹி வ அஃலமு மினல் லாஹி மா லா தஃலமூன்
12:86. அதற்கவர், “என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்; அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (என்றும்);
12:87
12:87 يٰبَنِىَّ اذْهَبُوْا فَتَحَسَّسُوْا مِنْ يُّوْسُفَ وَاَخِيْهِ وَلَا تَايْــٴَــسُوْا مِنْ رَّوْحِ اللّٰهِ‌ؕ اِنَّهٗ لَا يَايْــٴَــسُ مِنْ رَّوْحِ اللّٰهِ اِلَّا الْقَوْمُ الْكٰفِرُوْنَ‏
يٰبَنِىَّ என் பிள்ளைகளே اذْهَبُوْا செல்லுங்கள் فَتَحَسَّسُوْا இன்னும் தேடுங்கள் مِنْ يُّوْسُفَ யூஸுஃபை وَاَخِيْهِ இன்னும் அவரது சகோதரரை وَلَا تَايْــٴَــسُوْا நம்பிக்கை இழக்காதீர்கள் مِنْ رَّوْحِ அருளில் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّهٗ நிச்சயமாக செய்தி لَا يَايْــٴَــسُ நம்பிக்கை இழக்க மாட்டார்(கள்) مِنْ رَّوْحِ அருளில் اللّٰهِ அல்லாஹ்வின் اِلَّا தவிர الْقَوْمُ மக்கள் الْكٰفِرُوْنَ‏ நிராகரிக்கின்றவர்கள்
12:87. யா Bபனிய்யத் ஹBபூ Fபதஹஸ்ஸஸூ மி(ன்)ய் யூஸுFப வ அகீஹி வலா தய்'அஸூ மிர் ரவ்ஹில் லாஹி இன்னஹூ லா யய்'அஸு மிர் ரவ்ஹில் லாஹி இல்லல் கவ்முல் காFபிரூன்
12:87. “என் மக்களே! (மீண்டும் மிஸ்ருக்கு) நீங்கள் செல்லுங்கள்! யூஸுஃபையும் அவருடைய சகோதரரையும் தேடி விசாரியுங்கள்; (நம்மைத் தேற்றும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள்” என்றும் கூறினார்.
12:88
12:88 فَلَمَّا دَخَلُوْا عَلَيْهِ قَالُوْا يٰۤاَيُّهَا الْعَزِيْزُ مَسَّنَا وَاَهْلَنَا الضُّرُّ وَجِئْنَا بِبِضَاعَةٍ مُّزْجٰٮةٍ فَاَوْفِ لَنَا الْكَيْلَ وَتَصَدَّقْ عَلَيْنَاؕ اِنَّ اللّٰهَ يَجْزِى الْمُتَصَدِّقِيْنَ‏
فَلَمَّا போது دَخَلُوْا அவர்கள் நுழைந்தனர் عَلَيْهِ அவரிடம் قَالُوْا கூறினர் يٰۤاَيُّهَا الْعَزِيْزُ ஓ அதிபரே! مَسَّنَا ஏற்பட்டது/எங்களுக்கு وَاَهْلَنَا இன்னும் குடும்பத்திற்கும்/ எங்கள் الضُّرُّ வறுமை, கொடுமை وَجِئْنَا நாங்கள் வந்தோம் بِبِضَاعَةٍ ஒரு பொருளைக் கொண்டு مُّزْجٰٮةٍ அற்பமானது فَاَوْفِ ஆகவே முழு மைப்படுத்துவீராக لَنَا எங்களுக்கு الْكَيْلَ அளவையை وَتَصَدَّقْ இன்னும் தானம் புரிவீராக عَلَيْنَاؕ எங்கள் மீது اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَجْزِى கூலியளிப்பான் الْمُتَصَدِّقِيْنَ‏ தர்மசாலிகளுக்கு
12:88. Fபலம்மா தகலூ 'அலய்ஹி காலூ யா அய்யுஹல் 'அZஜீZஜு மஸ்ஸனா வ அஹ்லனள் ளுர்ரு வ ஜி'னா BபிBபிளா 'திம்முZஜ்ஜாதின் Fப அவ்Fபி லனல் கய்ல வ தஸத்தக் 'அலய்னா இன்னல் லாஹ யஜ்Zஜில் முதஸத்திகீன்
12:88. அவ்வாறே அவர்கள் (மிஸ்ரையடைந்து) யூஸுஃப் முன்னிலையில் வந்து அவரிடம்; “அஜீஸே! எங்களையும் எங்கள் குடும்பத்திலுள்ளவர்களையும் பெருந்துயர் பற்றிக்கொண்டது; நாங்கள் சொற்பமான பொருளையே கொண்டுவந்திருக்கின்றோம்; எங்களுக்கு நிரப்பமாகத் (தானியம்) அளந்து கொடுங்கள்; எங்களுக்கு (மேற்கொண்டு) தானமாகவும் கொடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தானம் செய்பவர்களுக்கு நற்கூலி வழங்குகிறான்” என்று கூறினார்கள்.
12:89
12:89 قَالَ هَلْ عَلِمْتُمْ مَّا فَعَلْتُمْ بِيُوْسُفَ وَاَخِيْهِ اِذْ اَنْتُمْ جٰهِلُوْنَ‏
قَالَ கூறினார் هَلْ عَلِمْتُمْ நீங்கள்அறிந்தீர்களா? مَّا فَعَلْتُمْ என்ன செய்தீர்கள்? بِيُوْسُفَ யூஸுஃபுக்கு وَاَخِيْهِ இன்னும் அவருடைய சகோதரருக்கு اِذْ இருந்தபோது اَنْتُمْ நீங்கள் جٰهِلُوْنَ‏ அறியாதவர்கள்
12:89. கால ஹல் 'அலிம்தும் மா Fப'அல்தும் Bபி யூஸுFப வ அகீஹி இத் அன்தும் ஜாஹிலூன்
12:89. (அதற்கு அவர்?) “நீங்கள் அறிவீனர்களாக இருந்த போது, யூஸுஃபுக்கும் அவர் சகோதரருக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?” என்று வினவினார்.
12:90
12:90 قَالُوْۤا ءَاِنَّكَ لَاَنْتَ يُوْسُفُ‌ؕ قَالَ اَنَا يُوْسُفُ وَهٰذَاۤ اَخِىْ‌ قَدْ مَنَّ اللّٰهُ عَلَيْنَاؕ اِنَّهٗ مَنْ يَّتَّقِ وَيَصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ‏
قَالُوْۤا கூறினர் ءَاِنَّكَ ?/நிச்சயமாக நீர் لَاَنْتَ நீர்தான் يُوْسُفُ‌ؕ யூஸுஃப் قَالَ கூறினார் اَنَا நான் يُوْسُفُ யூஸுஃப் وَهٰذَاۤ இன்னும் இவர் اَخِىْ‌ என் சகோதரர் قَدْ திட்டமாக مَنَّ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْنَاؕ எங்கள் மீது اِنَّهٗ நிச்சயமாக செய்தி مَنْ يَّتَّقِ எவர் அஞ்சுவார் وَيَصْبِرْ இன்னும் பொறுப்பார் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يُضِيْعُ வீணாக்க மாட்டான் اَجْرَ கூலியை الْمُحْسِنِيْنَ‏ நல்லறம் புரிபவர்கள்
12:90. காலூ 'அ இன்னக ல அன்த யூஸுFபு கால அன யூஸுFபு வ ஹாதா அகீ கத் மன்னல் லாஹு 'அலய்னா இன்னஹூ மய் யத்தகி வ யஸ்Bபிர் Fப இன்னல் லாஹ லா யுளீ'உ அஜ்ரல் முஹ்ஸினீன்
12:90. (அப்போது அவர்கள்) “நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள்; (ஆம்!) நான் தாம் யூஸுஃபு (இதோ!) இவர் என்னுடைய சகோதரராவர்; நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கின்றான்; எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” என்று கூறினார்.
12:91
12:91 قَالُوْا تَاللّٰهِ لَقَدْ اٰثَرَكَ اللّٰهُ عَلَيْنَا وَاِنْ كُنَّا لَخٰـطِــِٕيْنَ‏
قَالُوْا கூறினர் تَاللّٰهِ அல்லாஹ்வின் மீது சத்தியமாக لَقَدْ மேன்மைப் படுத்திவிட்டான் اٰثَرَكَ உம்மை اللّٰهُ அல்லாஹ் عَلَيْنَا எங்களை விட وَاِنْ كُنَّا நிச்சயமாகஇருந்தோம் لَخٰـطِــِٕيْنَ‏ தவறிழைப்பவர் களாகத்தான்
12:91. காலூ தல்லாஹி லகத் ஆதரகல் லாஹு 'அலய்னா வ இன் குன்னா லகாதி'ஈன்
12:91. அதற்கவர்கள் “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நாங்கள் உமக்குத் தவறு இழைத்தவர்களாக இருந்தும், நிச்சயமாக அல்லாஹ் எங்களை விட உம்மை மேன்மையுடையவராகத் தெரிவு செய்திருக்கின்றான்” என்று கூறினார்கள்.
12:92
12:92 قَالَ لَا تَثْرِيْبَ عَلَيْكُمُ الْيَوْمَ‌ؕ يَغْفِرُ اللّٰهُ لَـكُمْ‌ وَهُوَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‏
قَالَ கூறினார் لَا அறவே இல்லை تَثْرِيْبَ பழிப்பு عَلَيْكُمُ உங்கள் மீது الْيَوْمَ‌ؕ இன்றைய தினம் يَغْفِرُ மன்னிப்பான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ‌ உங்களை وَهُوَ அவன் اَرْحَمُ மகா கருணையாளன் الرّٰحِمِيْنَ‏ கருணையாளர்களில்
12:92. கால லா தத்ரீBப 'அலய்குமுல் யவ்ம யக்Fபிருல் லாஹு லகும் வ ஹுவ அர்ஹமுர் ராஹிமீன்
12:92. அதற்கவர், “இன்று உங்கள் மீது எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லை; அல்லாஹ் உங்களை மன்னித்தருள்வானாக! அவனே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளனாக இருக்கின்றான்” என்று கூறினார்.
12:93
12:93 اِذْهَبُوْا بِقَمِيْصِىْ هٰذَا فَاَلْقُوْهُ عَلٰى وَجْهِ اَبِىْ يَاْتِ بَصِيْرًا‌ۚ وَاْتُوْنِىْ بِاَهْلِكُمْ اَجْمَعِيْنَ
اِذْهَبُوْا செல்லுங்கள் بِقَمِيْصِىْ எனது சட்டையைக் கொண்டு هٰذَا இந்த فَاَلْقُوْهُ போடுங்கள்/அதை عَلٰى وَجْهِ முகத்தில் اَبِىْ என் தந்தையின் يَاْتِ அவர் வருவார் بَصِيْرًا‌ۚ பார்வையுடையவராக وَاْتُوْنِىْ வாருங்கள்/என்னிடம் بِاَهْلِكُمْ உங்கள் குடும்பத்தினரைக் கொண்டு اَجْمَعِيْنَ‏ அனைவரையும்
12:93. இத்ஹBபூ Bபிகமீஸீ ஹாதா Fப அல்கூஹு 'அலா வஜ்ஹி அBபீ யாதி Bபஸீர(ன்)வ் வாதூனீ Bபி அஹ்லிகும் அஜ்ம'ஈன்
12:93. “என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).  
12:94
12:94 وَلَمَّا فَصَلَتِ الْعِيْرُ قَالَ اَبُوْهُمْ اِنِّىْ لَاَجِدُ رِيْحَ يُوْسُفَ‌ لَوْلَاۤ اَنْ تُفَـنِّدُوْنِ‏
وَلَمَّا فَصَلَتِ பிரிந்த போது الْعِيْرُ பயணக் கூட்டம் قَالَ கூறினார் اَبُوْهُمْ அவர்களின் தந்தை اِنِّىْ நிச்சயமாக நான் لَاَجِدُ உறுதியாக பெறுகிறேன் رِيْحَ வாடையை يُوْسُفَ‌ யூஸுஃபுடைய لَوْلَاۤ اَنْ تُفَـنِّدُوْنِ‏ நீங்கள் அறிவீனனாக்காமல் இருக்கவேண்டுமே/என்னை
12:94. வ லம்மா Fபஸலதில் 'ஈரு கால அBபூஹும் இன்னீ ல அஜிது ரீஹ யூஸுFப லவ் லா அன் துFபன்னிதூன்
12:94. (அவர்களுடைய) ஒட்டக வாகனங்கள் (மிஸ்ரை விட்டுப்) பிரிந்த நேரத்தில், அவர்களுடைய தந்தை, “நிச்சயமாக நான் யூஸுஃபின் வாடையை நுகர்கிறேன்; (இதன் காரணமாக) என்னை நீங்கள் பைத்தியக்காரன் என்று எண்ணாமல் இருக்க வேண்டுமே!” என்றார்.
12:95
12:95 قَالُوْا تَاللّٰهِ اِنَّكَ لَفِىْ ضَلٰلِكَ الْقَدِيْمِ‏
قَالُوْا கூறினர் تَاللّٰهِ அல்லாஹ்வின் மீது சத்தியமாக اِنَّكَ நிச்சயமாக நீர் لَفِىْ ضَلٰلِكَ உம் தவறில்தான் الْقَدِيْمِ‏ பழையது
12:95. காலூ தல்லாஹி இன்னக லFபீ ளலாலிகல் கதீம்
12:95. (அதற்கவர்கள்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் உங்களுடைய பழைய தவறிலேயே இருக்கின்றீர்கள்” என்று சொன்னார்கள்.
12:96
12:96 فَلَمَّاۤ اَنْ جَآءَ الْبَشِيْرُ اَلْقٰٮهُ عَلٰى وَجْهِهٖ فَارْتَدَّ بَصِيْرًا ؕۚ قَالَ اَلَمْ اَقُلْ لَّـكُمْ‌ ۚ‌ ۙ اِنِّىْۤ اَعْلَمُ مِنَ اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ‏
فَلَمَّاۤ போது اَنْ جَآءَ வந்தார் الْبَشِيْرُ நற்செய்தியாளர் اَلْقٰٮهُ போட்டார்/அதை عَلٰى وَجْهِهٖ அவருடைய முகத்தில் فَارْتَدَّ அவர் திரும்பினார் بَصِيْرًا ؕۚ பார்வையுடையவராக قَالَ கூறினார் اَلَمْ اَقُلْ நான் கூறவில்லையா? لَّـكُمْ‌ ۚ ۙ உங்களுக்கு اِنِّىْۤ நிச்சயமாக நான் اَعْلَمُ அறிவேன் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் مَا لَا تَعْلَمُوْنَ‏ நீங்கள் அறியாதவற்றை
12:96. Fபலம்மா அன் ஜா'அல்Bபஷீரு அல்காஹு 'அலா வஜ்ஹிஹீ Fபர்தத்த Bபஸீரன் கால அலம் அகுல் லகும் இன்னீ அஃலமு மினல் லாஹி மா லா தஃலமூன்
12:96. பிறகு, நன்மாராயங் கூறுபவர் வந்து, (சட்டையை) அவர் முகத்தில் போட்டபோது அவர் மீண்டும் பார்வையுடையோரானார்; “நீங்கள் அறியாததையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து நிச்சயமாக நான் அறிவேன் என்று உங்களிடம் கூறவில்லையா?” என்று (அவர்களை நோக்கிக்) கூறினார்,
12:97
12:97 قَالُوْا يٰۤاَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوْبَنَاۤ اِنَّا كُنَّا خٰـطِــِٕيْنَ‏
قَالُوْا கூறினர் يٰۤاَبَانَا எங்கள் தந்தையே اسْتَغْفِرْ மன்னிக்க கோருவீராக لَنَا எங்களுக்கு ذُنُوْبَنَاۤ எங்கள் பாவங்களை اِنَّا நிச்சயமாக நாங்கள் كُنَّا இருந்தோம் خٰـطِــِٕيْنَ‏ தவறிழைப்பவர்களாக
12:97. காலூ யா அBபானஸ் தக்Fபிர் லனா துனூBபனா இன்னா குன்னா காதி'ஈன்
12:97. (அதற்கு அவர்கள்) “எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.
12:98
12:98 قَالَ سَوْفَ اَسْتَغْفِرُ لَـكُمْ رَبِّىْؕ اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏
قَالَ கூறினார் سَوْفَ اَسْتَغْفِرُ மன்னிப்புக் கோருவேன் لَـكُمْ உங்களுக்காக رَبِّىْؕ என் இறைவனிடம் اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْغَفُوْرُ மகா மன்னிப்பாளன் الرَّحِيْمُ‏ பெரும் கருணையாளன்
12:98. கால ஸவ்Fப அஸ்தக்Fபிரு லகும் ரBப்Bபீ இன்னஹூ ஹுவல் கFபூருர் ரஹீம்
12:98. நான் உங்களுக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுவேன். நிச்சயமாக அவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான் என்று கூறினார்.
12:99
12:99 فَلَمَّا دَخَلُوْا عَلٰى يُوْسُفَ اٰوٰٓى اِلَيْهِ اَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوْا مِصْرَ اِنْ شَآءَ اللّٰهُ اٰمِنِيْنَؕ‏
فَلَمَّا போது دَخَلُوْا நுழைந்தனர் عَلٰى يُوْسُفَ யூஸுஃபிடம் اٰوٰٓى அரவணைத்தார் اِلَيْهِ தன் பக்கம் اَبَوَيْهِ தன் பெற்றோரை وَقَالَ இன்னும் கூறினார் ادْخُلُوْا நுழையுங்கள் مِصْرَ எகிப்தில் اِنْ شَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் اٰمِنِيْنَؕ‏ அச்சமற்றவர்களாக
12:99. Fபலம்மா தகலூ 'அலா யூஸுFப ஆவா இலய்ஹி அBபவய்ய்ஹி வ காலத் குலூ மிஸ்ர இன்ஷா'அல் லாஹு ஆமினீன்
12:99. (பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார்.
12:100
12:100 وَرَفَعَ اَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوْا لَهٗ سُجَّدًا‌ۚ وَقَالَ يٰۤاَبَتِ هٰذَا تَاْوِيْلُ رُءْيَاىَ مِنْ قَبْلُقَدْ جَعَلَهَا رَبِّىْ حَقًّا‌ؕ وَقَدْ اَحْسَنَ بِىْۤ اِذْ اَخْرَجَنِىْ مِنَ السِّجْنِ وَجَآءَ بِكُمْ مِّنَ الْبَدْوِ مِنْۢ بَعْدِ اَنْ نَّزَغَ الشَّيْطٰنُ بَيْنِىْ وَبَيْنَ اِخْوَتِىْ‌ؕ اِنَّ رَبِّىْ لَطِيْفٌ لِّمَا يَشَآءُ‌ؕ اِنَّهٗ هُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏
وَرَفَعَ இன்னும் உயர்த்தினார் اَبَوَيْهِ தன் பெற்றோரை عَلَى மேல் الْعَرْشِ (அரச) கட்டில் وَخَرُّوْا இன்னும் விழுந்தனர் لَهٗ அவருக்கு سُجَّدًا‌ۚ சிரம் பணிந்தவர்களாக وَقَالَ இன்னும் கூறினார் يٰۤاَبَتِ என் தந்தையே هٰذَا இது تَاْوِيْلُ விளக்கம் رُءْيَاىَ என் கனவின் مِنْ قَبْلُ முன்னர் قَدْ ஆக்கி விட்டான் جَعَلَهَا அதை رَبِّىْ என் இறைவன் حَقًّا‌ؕ உண்மையாக وَقَدْ اَحْسَنَ நன்மை புரிந்திருக்கிறான் بِىْۤ எனக்கு اِذْ போது اَخْرَجَنِىْ அவன் வெளியேற்றினான்/என்னை مِنَ இருந்து السِّجْنِ சிறை وَجَآءَ இன்னும் வந்தான் بِكُمْ உங்களைக் கொண்டு مِّنَ இருந்து الْبَدْوِ கிராமம் مِنْۢ بَعْدِ பின்னர் اَنْ نَّزَغَ பிரிவினையை உண்டு பண்ணினான் الشَّيْطٰنُ ஷைத்தான் بَيْنِىْ எனக்கிடையில் وَبَيْنَ இன்னும் இடையில் اِخْوَتِىْ‌ؕ என் சகோதரர்கள் اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் لَطِيْفٌ மகா நுட்பமானவன் لِّمَا يَشَآءُ‌ؕ தான் நாடியதற்கு اِنَّهٗ هُوَ நிச்சயமாக அவன்தான் الْعَلِيْمُ நன்கறிந்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
12:100. வ ரFப்'அ அBபவய்ஹி 'அலல் 'அர்ஷி வ கர்ரூ லஹூ ஸுஜ்ஜதா; வ கால யா அBபதி ஹாத தாவீலு ரு'யாய மின் கBப்லு கத் ஜ'அலஹா ரBப்Bபீ ஹக்கா; வ கத் அஹ்ஸன Bபீ இத் அக்ரஜனீ மினஸ் ஸிஜ்னி வ ஜா'அ Bபிகும் மினல் Bபத்வி மிம் Bபஃதி அன் னZஜகஷ் ஷய்தானு Bபய்னீ வ Bபய்ன இக்வதீ; இன்ன ரBப்Bபீ லதீFபுல் லிமா யஷா'; இன்னஹூ ஹுவல் 'அலீமுல் ஹகீம்
12:100. இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்” என்று கூறினார்.
12:101
12:101 رَبِّ قَدْ اٰتَيْتَنِىْ مِنَ الْمُلْكِ وَ عَلَّمْتَنِىْ مِنْ تَاْوِيْلِ الْاَحَادِيْثِ‌ ۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ اَنْتَ وَلِىّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ ۚ تَوَفَّنِىْ مُسْلِمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَ‏
رَبِّ என் இறைவா قَدْ திட்டமாக اٰتَيْتَنِىْ எனக்கு தந்தாய் مِنَ الْمُلْكِ ஆட்சியை عَلَّمْتَنِىْ எனக்கு مِنْ تَاْوِيْلِ விளக்கத்தை الْاَحَادِيْثِ‌ ۚ பேச்சுகளின் فَاطِرَ படைத்தவனே السَّمٰوٰتِ வானங்களை(யும்) وَالْاَرْضِ இன்னும் பூமியை(யும்) اَنْتَ وَلِىّٖ நீ என் பாதுகாவலன் فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ‌ ۚ இன்னும் மறுமை تَوَفَّنِىْ உயிர் கைப்பற்றிக் கொள்/என்னை مُسْلِمًا முஸ்லிமாக وَّاَلْحِقْنِىْ இன்னும் சேர்த்து விடு/என்னை بِالصّٰلِحِيْنَ‏ நல்லவர்களுடன்
12:101. ரBப்Bபி கத் ஆதய்தனீ மினல் முல்கி வ 'அல்லம்தனீ மின் தாவீலில் அஹாதீத்; Fபாதி ரஸ் ஸமாவாதி வல் அர்ளி அன்த வலிய்யீ Fபித் துன்யா வல் ஆகிரதி தவFப்Fபனீ முஸ்லிம(ன்)வ் வ அல்ஹிக்னீ Bபிஸ்ஸாலிஹீன்
12:101. “என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத்தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லிமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!” (என்று அவர் பிரார்த்தித்தார்.)
12:102
12:102 ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَ‌ۚ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ اَجْمَعُوْۤا اَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُوْنَ‏
ذٰلِكَ مِنْ اَنْۢبَآءِ இவை/விஷயங்களில் الْغَيْبِ மறைவான نُوْحِيْهِ வஹீ அறிவிக்கிறோம்/இவற்றை اِلَيْكَ‌ۚ உமக்கு وَمَا كُنْتَ நீர் இருக்கவில்லை لَدَيْهِمْ அவர்களிடம் اِذْ போது اَجْمَعُوْۤا ஒருமித்து முடிவெடுத்தனர் اَمْرَهُمْ தங்கள்காரியத்தில் وَهُمْ அவர்கள் يَمْكُرُوْنَ‏ சூழ்ச்சி செய்கின்றனர்
12:102. தாலிக மின் அம்Bபா'இல் கய்Bபி னூஹீஹி இலய்க வமா குன்த லதய்ஹிம் இத் அஜ்ம'ஊ அம்ரஹும் வ ஹும் யம்குரூன்
12:102. (நபியே!) இது (நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளதாகும்; இதனை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோம்; அவர்கள் (கூடிச்) சதி செய்து நம் திட்டத்தில் அவர்கள் ஒன்று சேர்ந்த பொழுது நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
12:103
12:103 وَمَاۤ اَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِيْنَ‏
وَمَاۤ இல்லை اَكْثَرُ அதிகமானவர்(கள்) النَّاسِ மக்களில் وَلَوْ حَرَصْتَ நீர் பேராசைப்பட்டாலும் بِمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
12:103. வமா அக்தருன் னாஸி வ லவ் ஹரஸ்த Bபிமு'மினீன்
12:103. ஆனால் நீர் எவ்வளவு அதிகமாக விரும்பினாலும் (அம்) மனிதர்களில் பெரும் பாலோர் (உம்மை நபி என) நம்பமாட்டார்கள்.
12:104
12:104 وَمَا تَسْـٴَــلُهُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ؕ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّـلْعٰلَمِيْنَ
وَمَا நீர் கேட்பதில்லை تَسْـٴَــلُهُمْ அவர்களிடம் عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ‌ؕ ஒரு கூலியையும் اِنْ இல்லை هُوَ இது اِلَّا தவிர ذِكْرٌ அறிவுரை لِّـلْعٰلَمِيْنَ‏ அகிலகத்தார்களுக்கு
12:104. வமா தஸ்'அலுஹும் 'அலய்ஹி மின் அஜ்ர்; இன் ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
12:104. இதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்பதில்லை. இது அகிலத்தார் அனைவருக்கும் நினைவூட்டும் நல்லுபதேசமே அன்றி வேறில்லை.
12:105
12:105 وَكَاَيِّنْ مِّنْ اٰيَةٍ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ يَمُرُّوْنَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُوْنَ‏
وَكَاَيِّنْ எத்தனையோ مِّنْ اٰيَةٍ அத்தாட்சிகள் فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ வானங்களில்/இன்னும் பூமி يَمُرُّوْنَ செல்கின்றனர் عَلَيْهَا அவற்றின் அருகே وَهُمْ அவர்களோ عَنْهَا அவற்றை مُعْرِضُوْنَ‏ புறக்கணிப்பவர்களாக
12:105. வ க அய்யிம் மின் ஆயதின் Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி யமுர்ரூன 'அலய்ஹா வ ஹும் 'அன்ஹா முஃரிளூன்
12:105. இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்.
12:106
12:106 وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ‏
وَمَا يُؤْمِنُ நம்பிக்கை கொள்ள மாட்டார்(கள்) اَكْثَرُ அதிகமானவர்(கள்) هُمْ அவர்களில் بِاللّٰهِ அல்லாஹ்வை اِلَّا தவிர وَهُمْ அவர்கள் مُّشْرِكُوْنَ‏ இணைவைப்பவர்கள்
12:106. வமா யு'மினு அக்தரு ஹும் Bபில்லாஹி இல்லா வ ஹும் முஷ்ரிகூன்
12:106. மேலும் அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலில்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை.
12:107
12:107 اَفَاَمِنُوْۤا اَنْ تَاْتِيَهُمْ غَاشِيَةٌ مِّنْ عَذَابِ اللّٰهِ اَوْ تَاْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَّ هُمْ لَا يَشْعُرُوْنَ‏
اَفَاَمِنُوْۤا அச்சமற்றுவிட்டனரா? تَاْتِيَهُمْ அவர்களுக்கு غَاشِيَةٌ சூழக்கூடியது مِّنْ عَذَابِ வேதனையிலிருந்து اللّٰهِ அல்லாஹ்வின் اَوْ تَاْتِيَهُمُ அவர்கள்/வருவதை/அவர்களுக்கு السَّاعَةُ (முடிவு) காலம் بَغْتَةً திடீரென وَّ هُمْ அவர்கள் لَا يَشْعُرُوْنَ‏ அறியமாட்டார்கள்
12:107. அFப அமினூ அன் தாதிய ஹும் காஷியதும் மின் 'அதாBபில் லாஹி அவ் தாதியஹுமுஸ் ஸா'அது Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
12:107. (அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களுக்கு வந்துவிடுவதைப் பற்றியும் அல்லது அவர்கள் அறியாதிருக்கும் போது திடீரென முடிவு காலம் வந்து விடுவதைப்பற்றியும் அவர்கள் அச்சமற்று இருக்கின்றார்களா?
12:108
12:108 قُلْ هٰذِهٖ سَبِيْلِىْۤ اَدْعُوْۤا اِلَى اللّٰهِ ‌ؔعَلٰى بَصِيْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِىْ‌ؕ وَسُبْحٰنَ اللّٰهِ وَمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ‏
قُلْ கூறுவீராக هٰذِهٖ இது سَبِيْلِىْۤ என் வழி اَدْعُوْۤا அழைக்கின்றேன் (அழைக்கின்றோம்) اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் ؔعَلٰى மீது بَصِيْرَةٍ தெளிவான அறிவு اَنَا நான் وَمَنِ இன்னும் எவர் اتَّبَعَنِىْ‌ؕ பின்பற்றினார்/என்னை وَسُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் وَمَاۤ இல்லை اَنَا நான் مِنَ الْمُشْرِكِيْنَ‏ இணைவைப்பவர்களில்
12:108. குல் ஹாதிஹீ ஸBபீலீ அத்'ஊ இலல் லாஹ்; 'அலா Bபஸீர தின் அன வ மனித் தBப'அனீ வ ஸுBப்ஹானல் லாஹி வ மா அன மினல் முஷ்ரிகீன்
12:108. (நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.”
12:109
12:109 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ مِّنْ اَهْلِ الْقُرٰى‌ؕ اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْؕ وَلَدَارُ الْاٰخِرَةِ خَيْرٌ لِّـلَّذِيْنَ اتَّقَوْا ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் اِلَّا தவிர رِجَالًا ஆண்களை نُّوْحِىْۤ வஹீ அறிவிப்போம் اِلَيْهِمْ அவர்களுக்கு مِّنْ اَهْلِ الْقُرٰى‌ؕ ஊர்வாசிகளில் اَفَلَمْ يَسِيْرُوْا அவர்கள் செல்லவில்லையா? فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرُوْا பார்ப்பார்கள் كَيْفَ எப்படி? كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلِهِمْؕ இவர்களுக்கு முன்னர் وَلَدَارُ வீடுதான் الْاٰخِرَةِ மறுமையின் خَيْرٌ மிக மேலானது لِّـلَّذِيْنَ எவர்களுக்கு اتَّقَوْا ؕ அஞ்சினார்கள் اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
12:109. வ மா அர்ஸல்னா மின் கBப்லிக இல்லா ரிஜாலன் னூஹீ இலய்ஹிம் மின் அஹ்லில் குரா; அFபலம் யஸீரூ Fபில் அர்ளி Fப யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம்; வ ல தாருல் ஆகிரதி கய்ருல் லில்லதீனத் தகவ்; அFபலா தஃகிலூன்
12:109. (நபியே!) உமக்கு முன்னர் (பற்பல சமூகங்களுக்கும் ) நாம் அனுப்பிய தூதர்கள் (அந்தந்த சமூகங்களின்) ஊர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை; அவர்களுக்கு நாம் வஹீ மூலம் (நம் கட்டளைகளை) அறிவித்தோம் - இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து இவர்களுக்கு முன் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? மறுமை வீடுதான் பயபக்தியுடையவர்களுக்கு மிகவும் மேலானதாகும்; (இதனை) நீங்கள் (சிந்தித்து) விளங்கிக்கொள்ள வேண்டாமா?
12:110
12:110 حَتّٰۤى اِذَا اسْتَيْــٴَــسَ الرُّسُلُ وَظَنُّوْۤا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَآءَهُمْ نَصْرُنَا ۙ فَـنُجِّىَ مَنْ نَّشَآءُ ‌ؕ وَلَا يُرَدُّ بَاْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ‏
حَتّٰۤى இறுதியாக اِذَا போது اسْتَيْــٴَــسَ நிராசையடைந்தார்(கள்) الرُّسُلُ தூதர்கள் وَظَنُّوْۤا இன்னும் எண்ணினர் اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் قَدْ كُذِبُوْا பொய்ப்பிக்கப்பட்டனர் جَآءَ வந்தது هُمْ அவர்களை نَصْرُنَا ۙ நம் உதவி فَـنُجِّىَ பாதுகாக்கப்பட்டனர் مَنْ نَّشَآءُ ؕ எவர்/நாடுகின்றோம் وَلَا يُرَدُّ இன்னும் திருப்பப்படாது بَاْسُنَا நம் தண்டனை عَنِ الْقَوْمِ சமுதாயத்தை விட்டு الْمُجْرِمِيْنَ‏ குற்றவாளிகள்,பாவிகள்
12:110. ஹத்தா இதஸ் தய்'அஸர் ருஸுலு வ ளன்னூ அன்னஹும் கத் குதிBபூ ஜா'அஹும் னஸ் ருனா Fபனுஜ்ஜிய மன் னஷா'உ வலா யுரத்து Bபா'ஸுன்ன 'அனில் கவ்மில் முஜ்ரிமீன்
12:110. (நம்) தூதர்கள் நிச்சயமாக பொய்ப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று எண்ணி நம்பிக்கை இழந்து விடும் பொழுது நமது உதவி அவர்களுக்கு வந்தது; நாம் நாடியவர்கள் காப்பாற்றப்பட்டனர். நமது தண்டனை குற்றம் புரிந்த கூட்டத்தாரைவிட்டும் நீக்கப்படாது.
12:111
12:111 لَـقَدْ كَانَ فِىْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِى الْاَلْبَابِ‌ؕ مَا كَانَ حَدِيْثًا يُّفْتَـرٰى وَلٰـكِنْ تَصْدِيْقَ الَّذِىْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ كُلِّ شَىْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لِّـقَوْمٍ يُّؤْمِنُوْنَ
لَـقَدْ திட்டவட்டமாக كَانَ இருக்கிறது فِىْ قَصَصِهِمْ இவர்களுடைய சரித்திரங்களில் عِبْرَةٌ ஒரு படிப்பினை لِّاُولِى الْاَلْبَابِ‌ؕ அறிவுடையவர்களுக்கு مَا كَانَ இருக்கவில்லை حَدِيْثًا ஒரு செய்தியாக يُّفْتَـرٰى புனையப்படுகின்ற وَلٰـكِنْ எனினும் تَصْدِيْقَ உண்மைப்படுத்துவது الَّذِىْ எது بَيْنَ يَدَيْهِ தனக்கு முன் وَتَفْصِيْلَ இன்னும் விவரிப்பது كُلِّ شَىْءٍ எல்லாவற்றை وَّهُدًى இன்னும் நேர்வழி وَّرَحْمَةً இன்னும் ஓர் அருள் لِّـقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கிறார்கள்
12:111. லகத் கான Fபீ கஸஸிஹிம் 'இBப்ரதுல் லி உலில் அல்BபாBப்; மா கான ஹதீத(ன்)ய் யுFப்தரா வ லாகின் தஸ்தீகல் லதீ Bபய்ன யதிஹி வ தFப்ஸீல குல்லி ஷய்'இ(ன்)வ் வ ஹுத(ன்)வ் வ ரஹ்மதல் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
12:111. (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை, மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது.