38. ஸூரத்து ஸாத்
மக்கீ, வசனங்கள்: 88

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
38:1
38:1 صٓ‌ وَالْقُرْاٰنِ ذِى الذِّكْرِؕ‏
صٓ‌ ஸாத் وَالْقُرْاٰنِ குர்ஆன் மீது சத்தியமாக! ذِى الذِّكْرِؕ‏ அறிவுரைகள் நிறைந்த
38:1. ஸாத்; வல்-குர்ஆனி தித் திக்ர்
38:1. ஸாத். (நல்லுபதேசங்களின்) நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்ஆன் மீது சத்தியமாக.
38:2
38:2 بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ عِزَّةٍ وَّشِقَاقٍ‏
بَلِ மாறாக الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்கள் فِىْ عِزَّةٍ பிடிவாதத்திலும் وَّشِقَاقٍ‏ முரண்பாட்டிலும்
38:2. Bபலில் லதீன கFபரூ Fபீ 'இZஜ்Zஜதி(ன்)வ் வ ஷிகாக்
38:2. ஆனால், நிராகரிப்பவர்களோ பெருமையிலும், மாறுபாட்டிலும் (ஆழ்ந்து) கிடக்கின்றனர்.
38:3
38:3 كَمْ اَهْلَـكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنْ قَرْنٍ فَنَادَوْا وَّلَاتَ حِيْنَ مَنَاصٍ‏
كَمْ எத்தனையோ اَهْلَـكْنَا நாம் அழித்தோம் مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் مِّنْ قَرْنٍ பல தலைமுறை فَنَادَوْا அழைத்தனர் وَّلَاتَ அந்த நேரம் அல்ல حِيْنَ مَنَاصٍ‏ தப்பித்து ஓடுவதற்குரிய நேரம்
38:3. கம் அஹ்லக்னா மின் கBப்லிஹிம் மின் கர்னின் Fபனாதவ் வ லாத ஹீன மனாஸ்
38:3. இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; அப்போது, அவர்கள் தப்பி ஓட வழியில்லாத நிலையில் (உதவி தேடிக்) கூக்குரலிட்டனர்.
38:4
38:4 وَعَجِبُوْۤا اَنْ جَآءَهُمْ مُّنْذِرٌ مِّنْهُمْ‌ وَقَالَ الْكٰفِرُوْنَ هٰذَا سٰحِرٌ كَذَّابٌ‌ ۖ‌ۚ‏
وَعَجِبُوْۤا ஆச்சரியப்பட்டனர் اَنْ جَآءَ வந்ததால் هُمْ அவர்களிடம் مُّنْذِرٌ ஓர் எச்சரிப்பாளர் مِّنْهُمْ‌ அவர்களில் இருந்தே وَقَالَ கூறினர் الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் هٰذَا இவர் سٰحِرٌ ஒரு சூனியக்காரர் كَذَّابٌ‌ ۖ‌ۚ‏ ஒரு பெரும் பொய்யர்
38:4. வ 'அஜிBபூ அன் ஜா'அ ஹும் முன்திரும் மின்ஹும் வ காலல் காFபிரூன ஹாதா ஸாஹிருன் கத்தாBப்
38:4. அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்; “இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!” என்றும் காஃபிர்கள் கூறினர்.
38:5
38:5 اَجَعَلَ الْاٰلِهَةَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ اِنَّ هٰذَا لَشَىْءٌ عُجَابٌ‏
اَجَعَلَ இவர் ஆக்கிவிட்டாரா? الْاٰلِهَةَ தெய்வங்களை اِلٰهًا தெய்வமாக وَّاحِدًا ۖۚ ஒரே ஒரு اِنَّ நிச்சயமாக هٰذَا இது لَشَىْءٌ ஒரு விஷயம்தான் عُجَابٌ‏ ஆச்சரியமான
38:5. அஜ'அலல் ஆலிஹத இலாஹ(ன்)வ் வாஹிதன் இன்ன ஹாதா லஷய்'உன் 'உஜாBப்
38:5. “இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).
38:6
38:6 وَانْطَلَقَ الْمَلَاُ مِنْهُمْ اَنِ امْشُوْا وَاصْبِرُوْا عَلٰٓى اٰلِهَتِكُمْ‌ ‌ۖۚ‌ اِنَّ هٰذَا لَشَىْءٌ يُّرَادُ ۖ‌ۚ‏
وَانْطَلَقَ சென்றனர் الْمَلَاُ தலைவர்கள் مِنْهُمْ அவர்களில் உள்ள اَنِ امْشُوْا நீங்கள் சென்று விடுங்கள் وَاصْبِرُوْا உறுதியாக இருங்கள்! عَلٰٓى اٰلِهَتِكُمْ‌ ۖۚ‌ உங்கள் தெய்வங்கள் மீது اِنَّ நிச்சயமாக هٰذَا இது لَشَىْءٌ ஒரு விஷயம்தான் يُّرَادُ ۖ‌ۚ‏ நாடப்பட்ட
38:6. வன்தலகல் மல-உ மின்ஹும் அனிம் ஷூ வஸ்Bபிரூ 'அலா ஆலிஹதிகும் இன்ன்ன ஹாதா லஷய் 'உ(ன்)ய் யுராத்
38:6. “(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது” என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர்.
38:7
38:7 مَا سَمِعْنَا بِهٰذَا فِى الْمِلَّةِ الْاٰخِرَةِ ۖۚ اِنْ هٰذَاۤ اِلَّا اخْتِلَاقٌ ‌ ۖ‌ۚ‏
مَا سَمِعْنَا நாங்கள் கேள்விப்பட்டதில்லை بِهٰذَا இதை فِى الْمِلَّةِ மார்க்கத்தில் الْاٰخِرَةِ ۖۚ வேறு اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا اخْتِلَاقٌ ۖ‌ۚ‏ கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டதைத் தவிர
38:7. மா ஸமிஃனா Bபிஹாதா Fபில் மில்லதில் ஆகிரதி இன் ஹாதா இல்லக் திலாக்
38:7. “வேறு (எந்த) சமுதாயத்திலும் நாம் இது (போன்று) கேள்விப்பட்டதில்லை; இது (இவருடைய) கற்பனையேயன்றி வேறில்லை (என்றும்).
38:8
38:8 ءَاُنْزِلَ عَلَيْهِ الذِّكْرُ مِنْۢ بَيْنِنَا‌ؕ بَلْ هُمْ فِىْ شَكٍّ مِّنْ ذِكْرِىْ‌ۚ بَلْ لَّمَّا يَذُوْقُوْا عَذَابِؕ‏
ءَاُنْزِلَ இறக்கப்பட்டதா? عَلَيْهِ அவர் மீது الذِّكْرُ வேதம் مِنْۢ بَيْنِنَا‌ؕ நமக்கு மத்தியில் بَلْ மாறாக هُمْ அவர்கள் فِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّنْ ذِكْرِىْ‌ۚ எனது வேதத்தில் بَلْ மாறாக, لَّمَّا يَذُوْقُوْا அவர்கள் சுவைக்கவில்லை عَذَابِؕ‏ எனது வேதனையை
38:8. 'அ-உன்Zஜில 'அலய்ஹித் திக்ரு மின் Bபய்னினா; Bபல் ஹும் Fபீ ஷக்கின் மின் திக்ரீ Bபல் லம்மா யதூகூ 'அதாBப்
38:8. “நம்மில், இவர் பேரில்தான் நினைவுறுத்தும் நல்லுபதேசம் இறக்கப்பட்டு விட்டதோ?” (என்றும் கூறுகிறார்கள்.) அவ்வாறல்ல! அவர்கள் எனது போதனையில் சந்தேகத்தில் இருக்கின்றனர்; அவ்வாறல்ல! இன்னும் அவர்கள் என் வேதனையை அனுபவித்ததில்லை.
38:9
38:9 اَمْ عِنْدَهُمْ خَزَآٮِٕنُ رَحْمَةِ رَبِّكَ الْعَزِيْزِ الْوَهَّابِ‌ۚ‏
اَمْ ? عِنْدَهُمْ அவர்களிடம் خَزَآٮِٕنُ பொக்கிஷங்கள் رَحْمَةِ அருளுடைய رَبِّكَ உமது இறைவனின் الْعَزِيْزِ கண்ணியமிக்க(வன்) الْوَهَّابِ‌ۚ‏ மகா கொடை வள்ளல்
38:9. அம்'இன்தஹும் கZஜா 'இனு ரஹ்மதி ரBப்Bபிகல் 'அZஜீZஜில் வஹ்ஹாBப்
38:9. அல்லது, யாவரையும் மிகைத்தவனும் மிகப்பெருங் கொடையாளியுமாகிய உமது இறைவனின் கிருபைக் கருவூலங்கள் - அவர்களிடம் இருக்கின்றனவா,
38:10
38:10 اَمْ لَهُمْ مُّلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا‌فَلْيَرْتَقُوْا فِى الْاَسْبَابِ‏
اَمْ لَهُمْ அவர்களுக்கு இருக்கின்றதா? مُّلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا‌ இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் فَلْيَرْتَقُوْا அவர்கள் ஏறட்டும் فِى الْاَسْبَابِ‏ வாசல்களில்
38:10. அம் லஹும் முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா Fபல்யர்தகூ Fபில் அஸ்BபாBப்
38:10. அல்லது வானங்களுடையவும், பூமியினுடையவும் அவ்விரண்டிற்கும் இடையேயும் இருப்பவற்றின் மீதுள்ள ஆட்சி அவர்களிடம் இருக்கிறதா? அவ்வாறாயின் அவர்கள் (ஏணி போன்ற) சாதனங்களில் ஏறிச் செல்லட்டும்.
38:11
38:11 جُنْدٌ مَّا هُنَالِكَ مَهْزُوْمٌ مِّنَ الْاَحْزَابِ‏
جُنْدٌ இராணுவம்தான் مَّا هُنَالِكَ அந்த விஷயத்தில் مَهْزُوْمٌ தோற்கடிக்கப்படுகின்ற(வர்) مِّنَ الْاَحْزَابِ‏ கோஷ்டிகளைச் சேர்ந்தவர்கள்
38:11. ஜுன்தும் மா ஹுனாலிக மஹ்Zஜூமும் மினல் அஹ்ZஜாBப்
38:11. ஆனால் இங்கிருக்கும் படையினரும் (முன் தலைமுறைகளில்) முறியடிக்கப்பட்ட ஏனைய கூட்டங்களைப் போலவே ஆவார்கள்.
38:12
38:12 كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّعَادٌ وَّفِرْعَوْنُ ذُو الْاَوْتَادِۙ‏
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمُ மக்களும் نُوْحٍ நூஹூடைய وَّعَادٌ ஆதும் وَّفِرْعَوْنُ ஃபிர்அவ்னும் ذُو الْاَوْتَادِۙ‏ ஆணிகளை உடைய
38:12. கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹி(ன்)வ் வ 'ஆது(ன்)வ் வ Fபிர்'அவ்னு துல் அவ்தாத்
38:12. (இவ்வாறு) இவர்களுக்கு முன் இருந்த நூஹுடைய சமூகத்தாரும், ஆது(சமூகத்தாரு)ம், முளைகளுடைய ஃபிர்அவ்னும் நம் தூதர்களைப் பொய்ப்பித்தனர்.
38:13
38:13 وَثَمُوْدُ وَقَوْمُ لُوْطٍ وَّاَصْحٰبُ لْئَیْكَةِ‌ ؕ اُولٰٓٮِٕكَ الْاَحْزَابُ‏
وَثَمُوْدُ ஸமூதும் وَقَوْمُ மக்களும் لُوْطٍ லூத்துடைய وَّاَصْحٰبُ لْئَیْكَةِ‌ ؕ தோட்டமுடையவர்களும் اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் الْاَحْزَابُ‏ கோஷ்டிகள்
38:13. வ தமூது வ கவ்மு லூதி(ன்)வ் வ அஸ்ஹாBபுல் 'அய்கஹ்; உலா'இகல் அஹ்ZஜாBப்
38:13. (இவ்வாறு) “ஸமூது”ம் லூத்துடைய சமூகத்தவரும், (மத்யன்) தோப்பு வாசிகளும் (பொய்யாக்கினார்கள்); இவர்கள் (எல்லோரும் முன் தலைமுறைகளில் முறியடிக்கப்பட்ட) கூட்டத்தினர் ஆவார்கள்.
38:14
38:14 اِنْ كُلٌّ اِلَّا كَذَّبَ الرُّسُلَ فَحَقَّ عِقَابِ
اِنْ இல்லை كُلٌّ எல்லோரும் اِلَّا தவிர كَذَّبَ பொய்ப்பித்தார்(கள்) الرُّسُلَ தூதர்களை فَحَقَّ ஆகவே, உறுதியானது عِقَابِ‏ எனது தண்டனை
38:14. இன் குல்லுன் இல்லா கத்தBபர் ருஸுல Fபஹக்க 'இகாBப்
38:14. இவர்கள் ஒவ்வொருவரும் (நம்) தூதர்களைப் பொய்ப்பிக்க முற்படாமல் இல்லை; எனவே என்னுடைய தண்டனை (அவர்கள் மீது) உறுதியாயிற்று.  
38:15
38:15 وَمَا يَنْظُرُ هٰٓؤُلَاۤءِ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً مَّا لَهَا مِنْ فَوَاقٍ‏
وَمَا يَنْظُرُ எதிர்பார்க்கவில்லை هٰٓؤُلَاۤءِ இவர்கள் اِلَّا தவிர صَيْحَةً சப்தத்தை وَّاحِدَةً ஒரே ஒரு مَّا لَهَا அதற்கு இருக்காது مِنْ فَوَاقٍ‏ துண்டிப்பு, இடைவெளி
38:15. வமா யன்ளுரு ஹா உலா'இ இல்லா ஸய்ஹத(ன்)வ் வாஹிததம் மா லஹா மின் Fபவாக்
38:15. இன்னும் இவர்களும் ஒரே ஒரு பேரொளியைத் தவிர (வேறெதனையும்) எதிர் பார்க்கவில்லை. அதில் தாமதமும் இராது.
38:16
38:16 وَقَالُوْا رَبَّنَا عَجِّلْ لَّنَا قِطَّنَا قَبْلَ يَوْمِ الْحِسَابِ‏
وَقَالُوْا அவர்கள் கூறினர் رَبَّنَا எங்கள் இறைவா! عَجِّلْ தீவிரப்படுத்து لَّنَا எங்களுக்கு قِطَّنَا எங்கள் பத்திரத்தை, ஆவணத்தை قَبْلَ முன்பாக يَوْمِ الْحِسَابِ‏ விசாரணை நாளுக்கு
38:16. வ காலூ ரBப்Bபனா 'அஜ்ஜில் லனா கித்தனா கBப்ல யவ்மில் ஹிஸாBப்
38:16. “எங்கள் இறைவா! கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளுக்கு முன்னரே, எங்கள் (வேதனையின்) பாகத்தை துரிதப்படுத்தி(க் கொடுத்து) விடுவாயாக” என்றும் (ஏளனமாகக்) கூறுகின்றனர்.
38:17
38:17 اِصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَاذْكُرْ عَبْدَنَا دَاوٗدَ ذَا الْاَيْدِ‌ۚ اِنَّـهٗۤ اَوَّابٌ‏
اِصْبِرْ சகிப்பீராக! عَلٰى مَا يَقُوْلُوْنَ அவர்கள் கூறுவதை وَاذْكُرْ இன்னும் நினைவு கூறுவீராக عَبْدَنَا நமது அடியார் دَاوٗدَ தாவூதை ذَا الْاَيْدِ‌ۚ மிக வலிமை, உறுதி உடைய اِنَّـهٗۤ நிச்சயமாக அவர் اَوَّابٌ‏ முற்றிலும் திரும்பக்கூடியவர்
38:17. இஸ்Bபிர் 'அலா மா யகூலூன வத்குர் 'அBப்தனா தாவூத தல் அய்தி இன்னஹூ அவ்வாBப்
38:17. இவர்கள் கூறுவதைப்பற்றிப் பொறுமையுடன் இருப்பீராக! இன்னும், வல்லமையுள்ள நம் அடியார் தாவூதையும் நினைவு கொள்வீராக! நிச்சயமாக அவர் (எந்நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்.
38:18
38:18 اِنَّا سَخَّرْنَا الْجِبَالَ مَعَهٗ يُسَبِّحْنَ بِالْعَشِىِّ وَالْاِشْرَاقِۙ‏
اِنَّا நிச்சயமாக நாம் سَخَّرْنَا வசப்படுத்தினோம் الْجِبَالَ மலைகளை مَعَهٗ அவருடன் يُسَبِّحْنَ (அவை) துதிக்கும் بِالْعَشِىِّ மாலையிலும் وَالْاِشْرَاقِۙ‏ காலையிலும்
38:18. இன்னா ஸக்கர்னல் ஜிBபால ம'அஹூ யுஸBப்Bபிஹ்ன Bபில்'அஷிய்யி வல் இஷ்ராக்
38:18. நிச்சயமாக நாம் மலைகளை அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்; மாலை வேளையிலும், காலை வேளையிலும் அவை அவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன.
38:19
38:19 وَالطَّيْرَ مَحْشُوْرَةً ؕ كُلٌّ لَّـهٗۤ اَوَّابٌ‏
وَالطَّيْرَ இன்னும் பறவைகளை مَحْشُوْرَةً ؕ ஒன்று சேர்க்கப்பட்ட كُلٌّ لَّـهٗۤ அவை எல்லாம் அவருக்கு اَوَّابٌ‏ கீழ்ப்படிபவையாக
38:19. வத்தய்ர மஹ்ஷூரஹ்; குல்லுல் லஹூ அவ்வாBப்
38:19. மேலும் பறவைகளை ஒன்று திரட்டி (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அனைத்தும் அவனையே நோக்குபவையாக இருந்தன.
38:20
38:20 وَشَدَدْنَا مُلْكَهٗ وَاٰتَيْنٰهُ الْحِكْمَةَ وَفَصْلَ الْخِطَابِ‏
وَشَدَدْنَا பலப்படுத்தினோம் مُلْكَهٗ அவருடைய ஆட்சியை وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்கு கொடுத்தோம் الْحِكْمَةَ ஞானத்தை وَفَصْلَ இன்னும் மிகத்தெளிவான, மிக உறுதியான الْخِطَابِ‏ பேச்சை(யும்)
38:20. வ ஷதத்னா முல்கஹூ வ ஆதய்னாஹுல் ஹிக்மத வ Fபஸ்லல் கிதாBப்
38:20. மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்; இன்னும் அவருக்கு ஞானத்தையும், தெளிவான சொல்லாற்றலையும் அளித்தோம்.
38:21
38:21 وَهَلْ اَتٰٮكَ نَبَؤُا الْخَصْمِ‌ۘ اِذْ تَسَوَّرُوا الْمِحْرَابَۙ‏
وَهَلْ اَتٰٮكَ உம்மிடம் வந்ததா? نَبَؤُا செய்தி الْخَصْمِ‌ۘ வழக்காளிகளுடைய اِذْ تَسَوَّرُوا அவர்கள் சுவர் ஏறி வந்த சமயத்தை நினைவு கூர்வீராக! الْمِحْرَابَۙ‏ வீட்டின் முன்பக்கமாக
38:21. வ ஹல் அதாக னBப'உல் கஸ்ம்; இத் தஸவ்வருல் மிஹ்ராBப்
38:21. அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைந்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி -
38:22
38:22 اِذْ دَخَلُوْا عَلٰى دَاوٗدَ فَفَزِعَ مِنْهُمْ‌ قَالُوْا لَا تَخَفْ‌ۚ خَصْمٰنِ بَغٰى بَعْضُنَا عَلٰى بَعْضٍ فَاحْكُمْ بَيْنَنَا بِالْحَقِّ وَلَا تُشْطِطْ وَاهْدِنَاۤ اِلٰى سَوَآءِ الصِّرَاطِ‏
اِذْ دَخَلُوْا அவர்கள் நுழைந்த போது عَلٰى دَاوٗدَ தாவூத் (நபி) இடம் فَفَزِعَ அவர் திடுக்கிற்றார் مِنْهُمْ‌ அவர்களைப் பார்த்து قَالُوْا அவர்கள் கூறினர் لَا تَخَفْ‌ۚ பயப்படாதீர் خَصْمٰنِ நாங்கள் இரு வழக்காளிகள் بَغٰى அநியாயம் செய்தார் بَعْضُنَا எங்களில் ஒருவர் عَلٰى بَعْضٍ ஒருவர் மீது فَاحْكُمْ ஆகவே தீர்ப்பளிப்பீராக! بَيْنَنَا எங்களுக்கு மத்தியில் بِالْحَقِّ நீதமாக وَلَا تُشْطِطْ அநீதி இழைத்து விடாதீர் وَاهْدِنَاۤ எங்களுக்கு வழிகாட்டுவீராக! اِلٰى سَوَآءِ பாதையின் பக்கம் الصِّرَاطِ‏ நேரான
38:22. இத் தகலூ 'அலா தாவூத FபFபZஜி'அ மின்ஹும் காலூ லா தகFப் கஸ்மானி Bபகா Bபஃளுனா 'அலா Bபஃளின் Fபஹ்கும் Bபய்னனா Bபில்ஹக்கி வலா துஷ்தித் வஹ்தினா இலா ஸவா'இஸ் ஸிராத்
38:22. தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; “பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!”
38:23
38:23 اِنَّ هٰذَاۤ اَخِىْ لَهٗ تِسْعٌ وَّتِسْعُوْنَ نَعْجَةً وَّلِىَ نَعْجَةٌ وَّاحِدَةٌ فَقَالَ اَكْفِلْنِيْهَا وَعَزَّنِىْ فِى الْخِطَابِ‏
اِنَّ “நிச்சயமாக هٰذَاۤ இவர் اَخِىْ எனது சகோதரர் لَهٗ அவருக்கு تِسْعٌ وَّتِسْعُوْنَ தொண்ணூற்றி ஒன்பது نَعْجَةً ஆடு(கள்) وَّلِىَ எனக்கு உள்ளது نَعْجَةٌ ஆடுதான் وَّاحِدَةٌ ஒரே ஓர் فَقَالَ அவர் கூறுகிறார் اَكْفِلْنِيْهَا அதை(யும்) எனக்கு தருவாயாக! وَعَزَّنِىْ என்னை மிகைத்துவிட்டார் فِى الْخِطَابِ‏ வாதத்தில்
38:23. இன்ன ஹாதா அகீ லஹூ திஸ்'உ(ன்)வ் வ திஸ்'ஊன னஃஜத(ன்)வ் வ லிய னஃஜது(ன்)வ் வாஹிதஹ்; Fபகால அக்Fபில்னீஹ வ 'அZஜ்Zஜனீ Fபில்கிதாBப்
38:23. (அவர்களில் ஒருவர் கூறினார்:) “நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன; ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது; அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்.”
38:24
38:24 قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ اِلٰى نِعَاجِهٖ‌ ؕ وَاِنَّ كَثِيْرًا مِّنَ الْخُلَـطَآءِ لَيَبْغِىْ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَقَلِيْلٌ مَّا هُمْ‌ ؕ وَظَنَّ دَاوٗدُ اَنَّمَا فَتَنّٰهُ فَاسْتَغْفَرَ رَبَّهٗ وَخَرَّ رَاكِعًا وَّاَنَابَ ۩
قَالَ கூறினார் لَقَدْ ظَلَمَكَ அவர் உனக்கு அநீதி இழைத்துவிட்டார் بِسُؤَالِ (அவர்) கேட்டதினால் نَعْجَتِكَ உனது ஆட்டை اِلٰى نِعَاجِهٖ‌ ؕ தனது ஆடுகளுடன் சேர்க்க وَاِنَّ நிச்சயமாக كَثِيْرًا அதிகமானவர்கள் مِّنَ الْخُلَـطَآءِ பங்காளிகளில் لَيَبْغِىْ அநீதிஇழைக்கின்றனர் بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலர் மீது اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை وَقَلِيْلٌ مَّا மிகக் குறைவானவர்களே! هُمْ‌ ؕ அவர்கள் وَظَنَّ அறிந்தார் دَاوٗدُ தாவூத் اَنَّمَا فَتَنّٰهُ நாம் அவரை சோதித்தோம் என்பதை فَاسْتَغْفَرَ ஆகவே, அவர் மன்னிப்புக் கேட்டார் رَبَّهٗ தன் இறைவனிடம் وَخَرَّ இன்னும் விழுந்தார் رَاكِعًا சிரம் பணிந்தவராக وَّاَنَابَ ۩‏ இன்னும் அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்
38:24. கால லகத் ளலமக Bபிஸு 'ஆலி னஃஜதிக இலா னிஹாஜிஹ்; வ இன்ன கதீரன் மினல் குலதா'இ ல-யBப்கீ Bபஃளுஹும் 'அலா Bபஃளின் இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ கலீலுன் மா ஹும்; வ ளன்ன தாவூது அன்னமா Fபதன்னாஹு Fபஸ்தக்Fபர ரBப்Bபஹூ வ கர்ர ராகி'அ(ன்)வ் வ அனாBப்
38:24. (அதற்கு தாவூது:) “உம்முடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்சயமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர; இத்தகையவர் சிலரே” என்று கூறினார்; இதற்குள்: “நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்” என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக் குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார்.
38:25
38:25 فَغَفَرْنَا لَهٗ ذٰ لِكَ‌ ؕ وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ‏
فَغَفَرْنَا மன்னித்தருளினோம் لَهٗ அவருக்கு ذٰ لِكَ‌ ؕ அதை وَاِنَّ لَهٗ நிச்சயமாக அவருக்கு عِنْدَنَا நம்மிடம் لَزُلْفٰى மிக நெருக்கமும் وَحُسْنَ அழகிய مَاٰبٍ‏ மீளுமிடமும் உண்டு
38:25. FபகFபர்னா லஹூ தாலிக்; வ இன்ன லஹூ 'இன்தனா லZஜுல்Fபா வ ஹுஸ்ன ம ஆBப்
38:25. ஆகவே, நாம் அவருக்கு அ(க் குற்றத்)தை மன்னித்தோம்; அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.
38:26
38:26 يٰدَاوٗدُ اِنَّا جَعَلْنٰكَ خَلِيْفَةً فِى الْاَرْضِ فَاحْكُمْ بَيْنَ النَّاسِ بِالْحَقِّ وَلَا تَتَّبِعِ الْهَوٰى فَيُضِلَّكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ ؕ اِنَّ الَّذِيْنَ يَضِلُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌۢ بِمَا نَسُوْا يَوْمَ الْحِسَابِ
يٰدَاوٗدُ தாவூதே! اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنٰكَ உம்மை ஆக்கினோம் خَلِيْفَةً அதிபராக فِى الْاَرْضِ இந்த பூமியில் فَاحْكُمْ ஆகவே தீர்ப்பளிப்பீராக! بَيْنَ மத்தியில் النَّاسِ மக்களுக்கு بِالْحَقِّ சத்தியத்தைக் கொண்டு وَلَا تَتَّبِعِ பின்பற்றிவிடாதீர் الْهَوٰى ஆசையை فَيُضِلَّكَ அது உம்மை வழிகெடுத்து விடும் عَنْ سَبِيْلِ மார்க்கத்தில் இருந்து اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يَضِلُّوْنَ வழிகெடுபவர்கள் عَنْ سَبِيْلِ மார்க்கத்தில் இருந்து اللّٰهِ அல்லாஹ்வின் لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை شَدِيْدٌۢ கடுமையான(து) بِمَا نَسُوْا அவர்கள் மறந்ததால் يَوْمَ நாளை الْحِسَابِ‏ விசாரணை
38:26. யா தாவூது இன்னா ஜ'அல்னாக கலீFபதன் Fபில் அர்ளி Fபஹ்கும் Bபய்னன் னாஸி Bபில்ஹக்கி வலா தத்தBபி'இல் ஹவா Fபயுளில்லக 'அன் ஸBபீலில் லாஹ்; இன்னல் லதீன யளில்லூன 'அன் ஸBபீலில் லாஹ்; லஹும் 'அதாBபுன் ஷதீதும் Bபிமா னஸூ யவ்மல் ஹிஸாBப்
38:26. (நாம் அவரிடம் கூறினோம்:) “தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின்தோன்றலாக ஆக்கினோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டமைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு.  
38:27
38:27 وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا بَاطِلًا ‌ؕ ذٰ لِكَ ظَنُّ الَّذِيْنَ كَفَرُوْا‌ۚ فَوَيْلٌ لِّلَّذِيْنَ كَفَرُوْا مِنَ النَّارِؕ‏
وَمَا خَلَقْنَا நாம் படைக்கவில்லை السَّمَآءَ வானத்தையும் وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَا அவ்விரண்டுக்கு மத்தியில் உள்ளவற்றையும் بَاطِلًا ؕ ذٰ لِكَ அது/வீணாக ظَنُّ எண்ணமாகும் الَّذِيْنَ كَفَرُوْا‌ۚ நிராகரிப்பவர்களின் فَوَيْلٌ நாசம் لِّلَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்களுக்கு مِنَ النَّارِؕ‏ நரகத்தில்
38:27. வமா கலக்னஸ் ஸமா'அ வல் அர்ள வமா Bபய்னஹுமா Bபாதிலா; தாலிக ளன்னுல் லதீன கFபரூ; Fப வய்லுல் லில் லதீன கFபரூ மினன் னார்
38:27. மேலும், வானத்தையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் வீணுக்காக நாம் படைக்கவில்லை. இது (வீணென்பது) காஃபிர்களின் எண்ணமாகும்; காஃபிர்களுக்கு (நரக) நெருப்பின் கேடுதான் உண்டு.
38:28
38:28 اَمْ نَجْعَلُ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ كَالْمُفْسِدِيْنَ فِى الْاَرْضِ اَمْ نَجْعَلُ الْمُتَّقِيْنَ كَالْفُجَّارِ‏
اَمْ نَجْعَلُ ஆக்குவோமா? الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை كَالْمُفْسِدِيْنَ குழப்பம் செய்பவர்களைப் போன்று فِى الْاَرْضِ பூமியில் اَمْ نَجْعَلُ ஆக்குவோமா? الْمُتَّقِيْنَ இறையச்சமுடையவர்கள் كَالْفُجَّارِ‏ பாவிகளைப் போன்று
38:28. அம் னஜ்'அலுல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி கல்முFபிஸ்தீன Fபில் அர்ளி அம் னஜ்'அலுல் முத்தகீன கல்Fபுஜ்ஜார்
38:28. அல்லது ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்வோரை பூமியில் குழப்பம் செய்வோரைப்போல் நாம் ஆக்கிவிடுவோமா? அல்லது, பயபக்தியுடையோரைப் பாவிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?
38:29
38:29 كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ‏
كِتٰبٌ ஒரு வேதமாகும் اَنْزَلْنٰهُ இதை நாம் இறக்கினோம் اِلَيْكَ உமக்கு مُبٰرَكٌ அருள் நிறைந்த(து) لِّيَدَّبَّرُوْۤا அவர்கள் சிந்திப்பதற்காக(வும்) اٰيٰتِهٖ இதன் வசனங்களை وَلِيَتَذَكَّرَ அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக اُولُوا الْاَلْبَابِ‏ அறிவுள்ளவர்கள்
38:29. கிதாBபுன் அன்Zஜல்னாஹு இலய்க முBபாரகுல் லியத்தBப்Bபரூ ஆயாதிஹீ வ லியததக்கர உலுல் அல்BபாBப்
38:29. (நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்.
38:30
38:30 وَوَهَبْنَا لِدَاوٗدَ سُلَيْمٰنَ‌ ؕ نِعْمَ الْعَبْدُ‌ ؕ اِنَّـهٗۤ اَوَّابٌ ؕ ‏
وَوَهَبْنَا நாம் வழங்கினோம் لِدَاوٗدَ தாவூதுக்கு سُلَيْمٰنَ‌ ؕ சுலைமானை نِعْمَ الْعَبْدُ‌ ؕ அவர் சிறந்த அடியார் اِنَّـهٗۤ நிச்சயமாக அவர் اَوَّابٌ ؕ அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்புகின்றவர்
38:30. வ வஹBப்னா லி தாவூத ஸுலய்மான்; னிஃமல் 'அBப்த்; இன்னஹூ அவ்வாBப்
38:30. இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர்.
38:31
38:31 اِذْ عُرِضَ عَلَيْهِ بِالْعَشِىِّ الصّٰفِنٰتُ الْجِيَادُ ۙ‏
اِذْ عُرِضَ சமர்ப்பிக்கப்பட்ட போது عَلَيْهِ அவருக்கு முன் بِالْعَشِىِّ மாலை நேரத்தில் الصّٰفِنٰتُ குதிரைகள் الْجِيَادُ ۙ‏ விரைந்து ஓடக்கூடிய, அமைதியாக நிற்கக்கூடிய
38:31. இத் 'உரிள 'அலய்ஹி Bபில்'அஷிய் யிஸ் ஸாFபினாதுல் ஜியாத்
38:31. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட உயர்ந்த குதிரைகள் (ஒரு) மாலை நேரத்தில் அவர் முன் கொண்டுவரப்பட்ட பொழுது:
38:32
38:32 فَقَالَ اِنِّىْۤ اَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّىْ‌ۚ حَتّٰى تَوَارَتْ بِالْحِجَابِ‏
فَقَالَ அவர் கூறினார் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَحْبَبْتُ பிரியம் வைத்து விட்டேன் حُبَّ பிரியத்தை الْخَيْرِ செல்வத்தின் عَنْ ذِكْرِ தொழுவதை விட்டு رَبِّىْ‌ۚ என் இறைவனை حَتّٰى இறுதியாக تَوَارَتْ மறைந்து விட்டது بِالْحِجَابِ‏ திரையில்
38:32. Fபகால இன்னீ அஹ்BபBப்து ஹுBப்Bபல் கய்ரி 'அன் திக்ரி ரBப்Bபீ ஹத்தா தவாரத் Bபில்ஹிஜாBப்
38:32. “நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன்” என அவர் கூறினார்.
38:33
38:33 رُدُّوْهَا عَلَىَّ ؕ فَطَفِقَ مَسْحًۢا بِالسُّوْقِ وَ الْاَعْنَاقِ‏
رُدُّوْهَا அவற்றை திரும்பக் கொண்டு வாருங்கள் عَلَىَّ ؕ என்னிடம் فَطَفِقَ ஆரம்பித்தார் مَسْحًۢا அவற்றைத் தடவ بِالسُّوْقِ கெண்டை கால்களிலும் وَ الْاَعْنَاقِ‏ கழுத்துகளிலும்
38:33. ருத்தூஹா 'அலய்ய Fப தFபிக மஸ்-ஹம் Bபிஸ்ஸூகி வல் அஃனாக்
38:33. “என்னிடம் அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள் (என்று கூறினார்; அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்) அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுத்தார்.”
38:34
38:34 وَلَقَدْ فَتَنَّا سُلَيْمٰنَ وَاَلْقَيْنَا عَلٰى كُرْسِيِّهٖ جَسَدًا ثُمَّ اَنَابَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக فَتَنَّا நாம் சோதித்தோம் سُلَيْمٰنَ சுலைமானை وَاَلْقَيْنَا போட்டோம் عَلٰى كُرْسِيِّهٖ அவருடை நாற்காலியில் جَسَدًا ஓர் உடலை ثُمَّ பிறகு اَنَابَ‏ அவர் திரும்பிவிட்டார்
38:34. வ லகத் Fபதன்னா ஸுலய்மான வ அல்கய்னா 'அலா குர்ஸிய்யிஹீ ஜஸதன் தும்ம அனாBப்
38:34. இன்னும் நாம் ஸுலைமானைத் திட்டமாகச் சோதித்தோம்; அவருடைய அரியணையில் ஒரு முண்டத்தை எறிந்தோம் - ஆகவே அவர் (நம்மளவில்) திரும்பினார்.
38:35
38:35 قَالَ رَبِّ اغْفِرْ لِىْ وَهَبْ لِىْ مُلْكًا لَّا يَنْۢبَغِىْ لِاَحَدٍ مِّنْۢ بَعْدِىْ‌ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اغْفِرْ لِىْ என்னை மன்னிப்பாயாக! وَهَبْ لِىْ இன்னும் எனக்குத் தா مُلْكًا ஓர் ஆட்சியை لَّا يَنْۢبَغِىْ தகுதியாகாத لِاَحَدٍ வேறு ஒருவருக்கும் مِّنْۢ بَعْدِىْ‌ۚ எனக்குப் பிறகு اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْوَهَّابُ‏ மகா பெரிய கொடைவள்ளல்
38:35. கால ரBப்Bபிக் Fபிர் லீ வ ஹBப் லீ முல்கல் லா யம்Bபகீ லி அஹதின் மின் Bபஃதீ இன்னக அன்தல் வஹ்ஹாBப்
38:35. “என் இறைவனே! என்னை மன்னித்தருள்வாயாக! அன்றியும், பின்னர் எவருமே அடைய முடியாத ஓர் அரசாங்கத்தை எனக்கு நீ நன்கொடையளிப்பாயாக! நிச்சயமாக நீயே மிகப்பெருங் கொடையாளியாவாய்” எனக் கூறினார்.
38:36
38:36 فَسَخَّرْنَا لَهُ الرِّيْحَ تَجْرِىْ بِاَمْرِهٖ رُخَآءً حَيْثُ اَصَابَۙ‏
فَسَخَّرْنَا ஆகவே, நாம் கட்டுப்படுத்திக் கொடுத்தோம் لَهُ அவருக்கு الرِّيْحَ காற்றை تَجْرِىْ அது வீசும் بِاَمْرِهٖ அவருடைய கட்டளைக்கிணங்க رُخَآءً மென்மையாக حَيْثُ اَصَابَۙ‏ அவர் விரும்புகின்ற இடத்திற்கு
38:36. Fப ஸகர்னா லஹுர் ரீஹ தஜ்ரீ Bபி அம்ரிஹீ ருகா'அன் ஹய்து அஸாBப்
38:36. ஆகவே, நாம் அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம்; அது அவருடைய கட்டளைப்படி அவர் நாடிய இடங்களுக்கெல்லாம் இலகுவாக (அவரைச் சுமந்து) சென்று கொண்டிருந்தது.
38:37
38:37 وَالشَّيٰطِيْنَ كُلَّ بَنَّآءٍ وَّغَوَّاصٍۙ‏
وَالشَّيٰطِيْنَ இன்னும் ஷைத்தான்களை كُلَّ அனைவரையும் بَنَّآءٍ கட்டிட சிற்பிகள் وَّغَوَّاصٍۙ‏ இன்னும் முத்துக்குளிப்பவர்கள்
38:37. வஷ் ஷயாதீன குல்ல Bபன்னா'இ(ன்)வ் வ கவ்வாஸ்
38:37. மேலும், ஷைத்தான்களிலுள்ள கட்டடங்கட்டுவோர், முத்துக்குளிப்போர் ஆகிய யாவரையும்;
38:38
38:38 وَّاٰخَرِيْنَ مُقَرَّنِيْنَ فِىْ الْاَصْفَادِ‏
وَّاٰخَرِيْنَ இன்னும் மற்றவர்களை مُقَرَّنِيْنَ பிணைக்கப்பட்ட(வர்கள்) فِىْ الْاَصْفَادِ‏ சங்கிலிகளில்
38:38. வ ஆகரீன முகர்ரனீன Fபில் அஸ்Fபாத்
38:38. சங்கிலியால் விலங்கிடப்பட்டிருந்த வேறு பலரையும் (நாம் அவருக்குக் வசப்படுத்திக் கொடுத்தோம்).
38:39
38:39 هٰذَا عَطَآؤُنَا فَامْنُنْ اَوْ اَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ‏
هٰذَا இது عَطَآؤُنَا நமது அருட்கொடையாகும் فَامْنُنْ ஆகவே நீர் கொடுப்பீராக! اَوْ அல்லது اَمْسِكْ நீரே வைத்துக்கொள்வீராக! بِغَيْرِ حِسَابٍ‏ விசாரணை இருக்காது
38:39. ஹாதா 'அதா'உனா Fபம்னுன் அவ் அம்ஸிக் Bபிகய்ரி ஹிஸாBப்
38:39. “இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக்) கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் - கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்).
38:40
38:40 وَاِنَّ لَهٗ عِنْدَنَا لَزُلْفٰى وَحُسْنَ مَاٰبٍ
وَاِنَّ நிச்சயமாக لَهٗ அவருக்கு عِنْدَنَا நம்மிடம் இருக்கிறது لَزُلْفٰى நெருக்கமும் وَحُسْنَ அழகிய مَاٰبٍ‏ மீளுமிடமும்
38:40. வ இன்ன லஹூ 'இன்தனா லZஜுல்Fபா வ ஹுஸ்ன மஆBப்
38:40. மேலும், நிச்சயமாக அவருக்கு, நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு.  
38:41
38:41 وَاذْكُرْ عَبْدَنَاۤ اَيُّوْبَۘ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الشَّيْطٰنُ بِنُصْبٍ وَّعَذَابٍؕ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக عَبْدَنَاۤ நமது அடியார் اَيُّوْبَۘ அய்யூபை اِذْ نَادٰى அவர் அழைத்தபோது رَبَّهٗۤ தன் இறைவனை اَنِّىْ நிச்சயமாக நான் مَسَّنِىَ எனக்கு ஏற்படுத்தி விட்டான் الشَّيْطٰنُ ஷைத்தான் بِنُصْبٍ களைப்பையும் وَّعَذَابٍؕ‏ வலியையும்
38:41. வத்குர் 'அBப்தனா அய்யூBப்; இத் னாத ரBப்Bபஹூ அன்னீ மஸ்ஸனியஷ் ஷய்தானு Bபி னுஸ்Bபி(ன்)வ் வ 'அதாBப்
38:41. மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூர்க! அவர் தம் இறைவனிடம், “நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்” (என்று கூறிய போது);
38:42
38:42 اُرْكُضْ بِرِجْلِكَ‌ ۚ هٰذَا مُغْتَسَلٌ ۢ بَارِدٌ وَّشَرَابٌ‏
اُرْكُضْ அடிப்பீராக! بِرِجْلِكَ‌ ۚ உமது காலால் هٰذَا இது مُغْتَسَلٌ ۢ குளிக்கின்ற நீராகும் بَارِدٌ குளிர்ந்த(து) وَّشَرَابٌ‏ இன்னும் குடிக்கின்ற நீராகும்
38:42. உர்குள் Bபி ரிஜ்லிக ஹாத முக்தஸலுன் Bபாரிது(ன்)வ் வ ஷராBப்
38:42. “உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும்” (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்) “இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன” (என்று சொன்னோம்).
38:43
38:43 وَوَهَبْنَا لَهٗۤ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنَّا وَذِكْرٰى لِاُولِى الْاَلْبَابِ‏
وَوَهَبْنَا நாம் கொடுத்தோம் لَهٗۤ அவருக்கு اَهْلَهٗ அவருடைய குடும்பத்தாரை(யும்) وَمِثْلَهُمْ அவர்கள் போன்றவர்களையும் مَّعَهُمْ அவர்களுடன் رَحْمَةً கருணையாகவும் مِّنَّا நம் புறத்தில் இருந்து وَذِكْرٰى இன்னும் ஓர் உபதேசமாக لِاُولِى الْاَلْبَابِ‏ அறிவுள்ளவர்களுக்கு
38:43. வவஹBப்னா லஹூ அஹ்லஹூ வ மித்லஹும் ம'அஹும் ரஹ்மதன் மின்னா வ திக்ரா லி உலில் அல்BபாBப்
38:43. பின்னர் நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் அறிவுடையயோருக்கு நினைவூட்டுதலாகவும் அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம்.
38:44
38:44 وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِبْ بِّهٖ وَلَا تَحْنَثْ‌ؕ اِنَّا وَجَدْنٰهُ صَابِرًا‌ ؕ نِعْمَ الْعَبْدُ‌ ؕ اِنَّـهٗۤ اَوَّابٌ‏
وَخُذْ இன்னும் எடுப்பீராக بِيَدِكَ உமது கரத்தால் ضِغْثًا ஒரு பிடி புல்லை فَاضْرِبْ அடிப்பீராக! بِّهٖ அதன்மூலம் وَلَا تَحْنَثْ‌ؕ நீர் சத்தியத்தை முறிக்காதீர்! اِنَّا நிச்சயமாக நாம் وَجَدْنٰهُ அவரைக் கண்டோம் صَابِرًا‌ ؕ பொறுமையாளராக نِعْمَ الْعَبْدُ‌ ؕ அவர் சிறந்த அடியார் اِنَّـهٗۤ நிச்சயமாக அவர் اَوَّابٌ‏ அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர்
38:44. வ குத் Bபியதிக ளிக்தன் Fபள்ரிBப் Bபிஹீ வலா தஹ்னத், இன்னா வஜத்னாஹு ஸாBபிரா; னிஃமல் 'அBப்த்; இன்னஹூ அவ்வாBப்
38:44. “ஒரு பிடி புல் (கற்றையை) உம்கையில் எடுத்து, அதைக் கொண்டு (உம் மனைவியை) அடிப்பீராக; நீர் (உம்) சத்தியத்தை முறிக்கவும் வேண்டாம்” (என்று கூறினோம்). நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம்; அவர் சிறந்த நல்லடியார் - நிச்சயமாக அவர் (எதிலும் நம்மை) நோக்கியவராகவே இருந்தார்.
38:45
38:45 وَاذْكُرْ عِبٰدَنَاۤ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ اُولِى الْاَيْدِىْ وَالْاَبْصَارِ‏
وَاذْكُرْ நினைவு கூர்வீராக عِبٰدَنَاۤ நமது அடியார்களான اِبْرٰهِيْمَ இப்ராஹீம் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ யஃகூப் اُولِى الْاَيْدِىْ பலமும் உடையவர்களான وَالْاَبْصَارِ‏ அகப்பார்வையும்
38:45. வத்குர் 'இBபாதனா இBப்ராஹீம வ இஸ்-ஹாக வ யஃகூBப உலில்-அய்தீ வலBப்ஸார்
38:45. (நபியே! ஆத்மீக) ஆற்றலும், அகப்பார்வையும் உடையவர்களாயிருந்த நம் அடியார்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரையும் நினைவு கூர்வீராக!
38:46
38:46 اِنَّاۤ اَخْلَصْنٰهُمْ بِخَالِصَةٍ ذِكْرَى الدَّارِ‌ۚ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَخْلَصْنٰهُمْ அவர்களை மிகத் தூய்மையாக தேர்ந்தெடுத்தோம் بِخَالِصَةٍ சிறப்பைக் கொண்டு ذِكْرَى உபதேசம் எனும் الدَّارِ‌ۚ‏ மறுமையின்
38:46. இன்னா அக்லஸ்னாஹும் Bபி காலிஸதின் திக்ரத் தார்
38:46. நிச்சயமாக, நாம் இவர்களை (மறுமை) வீட்டை நினைவூட்டுவதற்காகவே பூரண பரிசுத்தமானவர்களாக(த் தேர்ந்தெடுத்தோம்).
38:47
38:47 وَاِنَّهُمْ عِنْدَنَا لَمِنَ الْمُصْطَفَيْنَ الْاَخْيَارِؕ‏
وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் عِنْدَنَا நம்மிடம் لَمِنَ الْمُصْطَفَيْنَ தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் الْاَخْيَارِؕ‏ மிகச்சிறந்தவர்களாகிய
38:47. வ இன்னஹும் 'இன்தனா லமினல் முஸ்தFபய்னல் அக்யார்
38:47. நிச்சயமாக இவர்கள் நம்மிடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லோர்களில் நின்றுமுள்ளவர்கள்.
38:48
38:48 وَاذْكُرْ اِسْمٰعِيْلَ وَ الْيَسَعَ وَذَا الْكِفْلِ‌ؕ وَكُلٌّ مِّنَ الْاَخْيَارِؕ‏
وَاذْكُرْ இன்னும் நினைவு கூறுவீராக اِسْمٰعِيْلَ இஸ்மாயீலையும் وَ الْيَسَعَ அல்யசஉவையும் وَذَا الْكِفْلِ‌ؕ துல்கிஃப்லையும் وَكُلٌّ எல்லோரும் مِّنَ الْاَخْيَارِؕ‏ மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்
38:48. வத்குர் இஸ்மா'ஈல வல் யஸ'அ வ தல்-கிFப்லி வ குல்லுன் மினல் அக்யார்
38:48. இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக; இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.
38:49
38:49 هٰذَا ذِكْرٌ‌ؕ وَاِنَّ لِلْمُتَّقِيْنَ لَحُسْنَ مَاٰبٍۙ‏
هٰذَا இது ذِكْرٌ‌ؕ ஒரு நினைவூட்டலாகும் وَاِنَّ நிச்சயமாக لِلْمُتَّقِيْنَ அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு لَحُسْنَ அழகிய مَاٰبٍۙ‏ மீளுமிடம்
38:49. ஹாதா திக்ருன் வ இன்ன லில் முத்தகீன ல ஹுஸ்ன ம ஆBப்
38:49. இது நல்லுபதேசமாக இருக்கும்; நிச்சயமாக பயபக்தியுடையவர்களுக்கு அழகிய இருப்பிடமுண்டு.
38:50
38:50 جَنّٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ الْاَبْوَابُ‌ۚ‏
جَنّٰتِ عَدْنٍ அத்ன் சொர்க்கங்கள் مُّفَتَّحَةً திறக்கப்பட்டிருக்கும் لَّهُمُ அவர்களுக்காக الْاَبْوَابُ‌ۚ‏ வாசல்கள்
38:50. ஜன்னாதி 'அத்னின் முFபத்தஹதன் லஹுமுல் அBப்வாBப்
38:50. “அத்னு” என்னும் சுவனபதிகளின் வாயில்கள் அவர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டவையாக இருக்கும்.
38:51
38:51 مُتَّكِـــِٕيْنَ فِيْهَا يَدْعُوْنَ فِيْهَا بِفَاكِهَةٍ كَثِيْرَةٍ وَّشَرَابٍ‏
مُتَّكِـــِٕيْنَ அவர்கள் சாய்ந்தவர்களாக இருப்பார்கள் فِيْهَا அவற்றில் يَدْعُوْنَ அழைப்பார்கள் فِيْهَا அவற்றில் بِفَاكِهَةٍ பழங்களை(யும்) كَثِيْرَةٍ அதிகமான وَّشَرَابٍ‏ பானங்களையும்
38:51. முத்தகி'ஈன Fபீஹா யத்'ஊன Fபீஹா BபிFபாகிஹதின் கதீரதி(ன்)வ் வ ஷராBப்
38:51. அதில் அவர்கள் (பஞ்சணைகள் மீது) சாய்ந்தவர்களாக, அங்கே ஏராளமான கனிவகைகளையும், பானங்களையும் கேட்(டு அருந்திக் கொண்டிருப்)பார்கள்.
38:52
38:52 وَعِنْدَهُمْ قٰصِرٰتُ الطَّرْفِ اَتْرَابٌ‏
وَعِنْدَهُمْ அவர்களிடம் இருப்பார்கள் قٰصِرٰتُ الطَّرْفِ பார்வைகளை தாழ்த்திய பெண்கள் اَتْرَابٌ‏ சமவயதுடைய(வர்கள்)
38:52. வ 'இன்தஹும் காஸிராதுத் தர்Fபி அத்ராBப்
38:52. அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையும், ஒரே வயதுமுடைய அமர கன்னிகைகளும் இருப்பார்கள்.
38:53
38:53 هٰذَا مَا تُوْعَدُوْنَ لِيَوْمِ الْحِسَابِ‏
هٰذَا இவை مَا تُوْعَدُوْنَ உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவைதான் لِيَوْمِ الْحِسَابِ‏ விசாரணை நாளில்
38:53. ஹாதா மா தூ'அதூன லி யவ்மில் ஹிஸாBப்
38:53. “கேள்வி கணக்குக்குரிய நாளுக்கென உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது இதுதான்.
38:54
38:54 اِنَّ هٰذَا لَرِزْقُنَا مَا لَهٗ مِنْ نَّـفَادٍ ‌ۖ ‌ۚ‏
اِنَّ هٰذَا நிச்சயமாக இவை لَرِزْقُنَا நமது கொடையாகும் مَا لَهٗ இவற்றுக்கு அறவே இல்லை مِنْ نَّـفَادٍ ۖ ۚ‏ அழிவு, முடிவு
38:54. இன்ன ஹாதா லரிZஜ்குனா மா லஹூ மின் னFபாத்
38:54. “நிச்சயமாக இவை நம்முடைய கொடையாகும்; இதற்கு (என்றும்) முடிவே இராது” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
38:55
38:55 هٰذَا‌ ؕ وَاِنَّ لِلطّٰغِيْنَ لَشَرَّ مَاٰبٍ ۙ‏
هٰذَا‌ ؕ وَاِنَّ இவை/நிச்சயமாக لِلطّٰغِيْنَ வரம்பு மீறிகளுக்கு لَشَرَّ مَاٰبٍ ۙ‏ மிகக் கெட்டமீளுமிடம்தான்
38:55. ஹாதா; வ இன்ன லித்தாகீன லஷர்ர மஆBப்
38:55. இது (நல்லோருக்காக); ஆனால் நிச்சயமாகத் தீயவர்களுக்கு மிகக் கெட்ட தங்குமிடம் இருக்கிறது.
38:56
38:56 جَهَـنَّمَ‌ ۚ يَصْلَوْنَهَا‌ ۚ فَبِئْسَ الْمِهَادُ‏
جَهَـنَّمَ‌ ۚ (அதுதான்) நரகம் يَصْلَوْنَهَا‌ ۚ அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள் فَبِئْسَ الْمِهَادُ‏ விரிப்புகளில் மிகக் கெட்ட விரிப்பாகும்
38:56. ஜஹன்னம யஸ்லவ்னஹா Fப Bபி'ஸல் மிஹாத்
38:56. (அதுவே நரகம்) ஜஹன்னம் -அதில் அவர்கள் நுழைவார்கள்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டது.
38:57
38:57 هٰذَا ۙ فَلْيَذُوْقُوْهُ حَمِيْمٌ وَّغَسَّاقٌ ۙ‏
هٰذَا ۙ فَلْيَذُوْقُوْهُ இவை, இவற்றை அவர்கள் சுவைக்கட்டும் حَمِيْمٌ கொதி நீரும் وَّغَسَّاقٌ ۙ‏ சீல் சலமும்
38:57. ஹாதா Fபல்யதூகூஹு ஹமீமு(ன்)வ் வ கஸ்ஸாக்
38:57. இது (தீயோர்களுக்காக); ஆகவே அவர்கள் அதனைச் சுவைத்துப் பார்க்கட்டும் - கொதிக்கும் நீரும்; சீழும் ஆகும்.
38:58
38:58 وَّاٰخَرُ مِنْ شَكْلِهٖۤ اَزْوَاجٌ ؕ‏
وَّاٰخَرُ மற்ற مِنْ شَكْلِهٖۤ இன்னும் தோற்றத்தில் பல வகையான اَزْوَاجٌ ؕ‏ வேதனைகளும்
38:58. வ ஆகரு மின் ஷக்லிஹீ அZஜ்வாஜ்
38:58. இன்னும் (இதைத்தவிர) இது போன்ற பல (வேதனைகளும்) உண்டு.
38:59
38:59 هٰذَا فَوْجٌ مُّقْتَحِمٌ مَّعَكُمْ‌ۚ لَا مَرْحَبًۢـا بِهِمْ‌ؕ اِنَّهُمْ صَالُوا النَّارِ‏
هٰذَا இது فَوْجٌ கூட்டமாகும் مُّقْتَحِمٌ நுழையக்கூடிய مَّعَكُمْ‌ۚ உங்களுடன் لَا مَرْحَبًۢـا (இங்கு) வசதி உண்டாகாமல் இருக்கட்டும் بِهِمْ‌ؕ அவர்களுக்கு اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் صَالُوا எரிந்து பொசுங்குவார்கள் النَّارِ‏ நரகத்தில்
38:59. ஹாதா Fபவ்ஜுன் முக்தஹிமுன் ம'அகும் லா மர்ஹBபன் Bபிஹிம்; இன்னஹும் ஸாலுன் னார்
38:59. (நரகவாதிகளின் தலைவர்களிடம்:) “இது உங்களுடன் நெருங்கிக் கொண்டு (நரகம்) புகும் சேனையாகும்; இவர்களுக்கு அங்கு சங்கை இருக்காது; நிச்சயமாக இவர்கள் நரகில் சேர்பவர்கள்” (என்று கூறப்படும்).
38:60
38:60 قَالُوْا بَلْ اَنْتُمْ لَا مَرْحَبًۢـا بِكُمْ‌ؕ اَنْتُمْ قَدَّمْتُمُوْهُ لَنَا‌ۚ فَبِئْسَ الْقَرَارُ‏
قَالُوْا கூறுவார்கள் بَلْ மாறாக اَنْتُمْ நீங்கள்தான் لَا مَرْحَبًۢـا (இங்கு) வசதி கிடைக்காமல் போகட்டும் بِكُمْ‌ؕ உங்களுக்கு اَنْتُمْ நீங்கள்தான் قَدَّمْتُمُوْهُ இவற்றை முற்படுத்தினீர்கள் لَنَا‌ۚ எங்களுக்கு فَبِئْسَ الْقَرَارُ‏ தங்குமிடங்களில் நரகம் மிகக் கெட்ட இடமாகும்
38:60. காலூ Bபல் அன்தும் லா மர்ஹBபன் Bபிகும்; அன்தும் கத்தம்துமூஹு லனா FபBபி'ஸல் கரார்
38:60. அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, நீங்களும் தான்! உங்களுக்கும் சங்கை கிடையாது! நீங்கள் தாம் எங்களுக்கு இதை (இந் நிலையை) முற்படுத்தி வைத்தீர்கள்; (ஆதலால் நம் இரு கூட்டத்தாருக்கும்) தங்குமிடம் மிகவும் கெட்டது!” என்று கூறுவர்.
38:61
38:61 قَالُوْا رَبَّنَا مَنْ قَدَّمَ لَنَا هٰذَا فَزِدْهُ عَذَابًا ضِعْفًا فِى النَّارِ‏
قَالُوْا கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா! مَنْ யார் قَدَّمَ முற்படுத்தினாரோ لَنَا எங்களுக்கு هٰذَا இவற்றை فَزِدْهُ நீ அதிகப்படுத்து/அவருக்கு عَذَابًا வேதனையை ضِعْفًا இரு மடங்கு فِى النَّارِ‏ நரகத்தில்
38:61. காலூ ரBப்Bபனா மன் கத்தம லனா ஹாதா Fப Zஜித்ஹு 'அதாBபன் ளிஃFபன் Fபின் னார்
38:61. “எங்கள் இறைவா! எவர் எங்களுக்கு இதை (இந்நிலையை) முற்படுத்தி வைத்தாரோ அவருக்கு நரகத்தின் வேதனையை இரு மடங்காக அதிகப்படுத்துவாயாக!” என்று அவர்கள் கூறுவர்.
38:62
38:62 وَقَالُوْا مَا لَنَا لَا نَرٰى رِجَالًا كُنَّا نَـعُدُّهُمْ مِّنَ الْاَشْرَارِؕ‏
وَقَالُوْا அவர்கள் கூறுவார்கள் مَا لَنَا لَا نَرٰى எங்களால் பார்க்க முடிவதில்லையே! رِجَالًا பல மனிதர்களை كُنَّا نَـعُدُّ நாங்கள் கருதி வந்தோம் هُمْ அவர்களை مِّنَ الْاَشْرَارِؕ‏ கெட்டவர்களில்
38:62. வ காலூ மா லனா லா னரா ரிஜாலன் குன்னா ன'உத்துஹும் மினல் அஷ்ரார்
38:62. இன்னும், அவர்கள்: “நமக்கு என்ன நேர்ந்தது? மிகக் கெட்ட மனிதர்களிலுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை (நரகத்தில்) ஏன் காணவில்லை?
38:63
38:63 اَ تَّخَذْنٰهُمْ سِخْرِيًّا اَمْ زَاغَتْ عَنْهُمُ الْاَبْصَارُ‏
اَ تَّخَذْنٰهُمْ அவர்களை நாங்கள் எடுத்துக் கொண்டோமா? سِخْرِيًّا பரிகாசமாக اَمْ அல்லது زَاغَتْ சோர்ந்துவிட்டனவா? عَنْهُمُ அவர்களை பார்க்க முடியாமல் الْاَبْصَارُ‏ பார்வைகள்
38:63. அத்தகத்னாஹும் ஸிக் ரிய்யன் அம் Zஜாகத் 'அன்ஹுமுல் அBப்ஸார்
38:63. “நாம் அவர்களைப் பரிகாசம் செய்து கொண்டிருந்தோமா? அல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சருகி விட்டனவா?” என்று கூறுவர்.
38:64
38:64 اِنَّ ذٰ لِكَ لَحَقٌّ تَخَاصُمُ اَهْلِ النَّارِ
اِنَّ ذٰ لِكَ நிச்சயமாக இது لَحَقٌّ உண்மைதான் تَخَاصُمُ தங்களுக்குள் தர்க்கிப்பது اَهْلِ النَّارِ‏ நரகவாசிகள்
38:64. இன்ன தாலிக லஹக்குன் தகாஸுமு அஹ்லின் னார்
38:64. நிச்சயமாக இது தான் உண்மை. நரகவாசிகள் (இவ்வாறு தான்) ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள்.  
38:65
38:65 قُلْ اِنَّمَاۤ اَنَا مُنْذِرٌ ‌‌ۖ  وَّمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُ‌ ۚ‏
قُلْ கூறுவீராக! اِنَّمَاۤ اَنَا நான் எல்லாம் مُنْذِرٌ ஓர் எச்சரிப்பாளர்தான் ۖ  وَّمَا இல்லை مِنْ اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் யாரும் اِلَّا اللّٰهُ அல்லாஹ்வைத் தவிர الْوَاحِدُ ஒருவன் الْقَهَّارُ ۚ‏ அடக்கி ஆளுபவன்
38:65. குல் இன்னமா அன முன்திரு(ன்)வ் வமா மின் லாஹின் இல்லல் லாஹுல் வாஹிதுல் கஹ்ஹார்
38:65. (நபியே!) நீர் கூறுவீராக: “நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே, அன்றியும் ஏகனும், (யாவரையும்) அடக்கியாள்பவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர நாயன் இல்லை.
38:66
38:66 رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الْعَزِيْزُ الْغَفَّارُ‏
رَبُّ இறைவன் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் الْعَزِيْزُ மிகைத்தவன் الْغَفَّارُ‏ மகா மன்னிப்பாளன்
38:66. ரBப்Bபுஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமல் 'அZஜீZஜுல் கFப்Fபார்
38:66. “(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், இவ்விரண்டிற்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனாக இருக்கின்றான்; அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிகவும் மன்னிப்பவன்.”
38:67
38:67 قُلْ هُوَ نَبَؤٌا عَظِيْمٌۙ‏
قُلْ கூறுவீராக! هُوَ இது نَبَؤٌا ஒரு செய்தியாகும் عَظِيْمٌۙ‏ மகத்தான
38:67. குல் ஹுவ னBப'உன் 'அளீம்
38:67. (நபியே?) கூறுவீராக: “(நான் உங்களுக்கு எடுத்துரைக்கும்) இது மகத்தான செய்தியாகும்.
38:68
38:68 اَنْتُمْ عَنْهُ مُعْرِضُوْنَ‏
اَنْتُمْ நீங்கள் عَنْهُ இதை مُعْرِضُوْنَ‏ புறக்கணிக்கின்றீர்கள்
38:68. அன்தும் 'அன்ஹு முஃரிளூன்
38:68. “நீங்களோ அதைப் புறக்கணித்தவர்களாக இருக்கிறீர்கள்.
38:69
38:69 مَا كَانَ لِىَ مِنْ عِلْمٍۢ بِالْمَلَاِ الْاَعْلٰٓى اِذْ يَخْتَصِمُوْنَ‏
مَا كَانَ இல்லை لِىَ எனக்கு مِنْ عِلْمٍۢ அறவே ஞானம் بِالْمَلَاِ வானவர்களைப் பற்றி الْاَعْلٰٓى மிக உயர்ந்த اِذْ يَخْتَصِمُوْنَ‏ அவர்கள் தர்க்கித்த போது
38:69. மா கான லிய மின் 'இல்மின் Bபில் மல'இல் அஃலா இத் யக்தஸிமூன்
38:69. “மேலான கூட்டத்தார் தர்க்கித்துக் கொண்டது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.
38:70
38:70 اِنْ يُّوْحٰۤى اِلَىَّ اِلَّاۤ اَنَّمَاۤ اَنَا۟ نَذِيْرٌ مُّبِيْنٌ‏
اِنْ يُّوْحٰۤى வஹீ அறிவிக்கப்படுவதில்லை اِلَىَّ எனக்கு اِلَّاۤ தவிர اَنَّمَاۤ اَنَا۟ நிச்சயமாக நான் எல்லாம் نَذِيْرٌ ஓர் எச்சரிப்பாளர்தான் مُّبِيْنٌ‏ தெளிவான
38:70. இ(ன்)ய்-யூஹா இலய்ய இல்லா அன்ன மா அன னதீருன் முBபீன்
38:70. “நிச்சயமாக நான் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்பதற்காக அல்லாமல் எனக்கு வஹீ அறிவிக்கப்படவில்லை.
38:71
38:71 اِذْ قَالَ رَبُّكَ لِلْمَلٰٓٮِٕكَةِ اِنِّىْ خَالِـقٌ ۢ بَشَرًا مِّنْ طِيْنٍ‏
اِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! رَبُّكَ உமது இறைவன் لِلْمَلٰٓٮِٕكَةِ வானவர்களை நோக்கி اِنِّىْ நிச்சயமாக நான் خَالِـقٌ ۢ படைக்கப்போகிறேன் بَشَرًا ஒரு மனிதரை مِّنْ طِيْنٍ‏ களிமண்ணிலிருந்து
38:71. இத் கால ரBப்Bபுக லில்மலா'இகதி இன்னீ காலிகுன் Bபஷரன் மின் தீன்
38:71. (நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்:
38:72
38:72 فَاِذَا سَوَّيْتُهٗ وَنَفَخْتُ فِيْهِ مِنْ رُّوْحِىْ فَقَعُوْا لَهٗ سٰجِدِيْنَ‏
فَاِذَا سَوَّيْتُهٗ ஆக, நான் அவரை சிறப்பாக படைத்து(விட்டால்) وَنَفَخْتُ இன்னும் ஊதினால் فِيْهِ அவரில் مِنْ رُّوْحِىْ என் உயிர்களிலிருந்து فَقَعُوْا விழுந்து விடுங்கள்! لَهٗ அவருக்கு முன் سٰجِدِيْنَ‏ சிரம் பணிந்தவர்களாக
38:72. Fப-இத ஸவ்வய்துஹூ வ னFபக்து Fபீஹி மிர் ரூஹீ Fபக'ஊ லஹூ ஸாஜிதீன்
38:72. “நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது: அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்);
38:73
38:73 فَسَجَدَ الْمَلٰٓٮِٕكَةُ كُلُّهُمْ اَجْمَعُوْنَۙ‏
فَسَجَدَ சிரம் பணிந்தனர் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் كُلُّهُمْ அவர்கள் எல்லோரும் اَجْمَعُوْنَۙ‏ அனைவரும்
38:73. Fபஸஜதல் மலா'இகது குல்லுஹும் அஜ்ம'ஊன்
38:73. அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.
38:74
38:74 اِلَّاۤ اِبْلِيْسَؕ اِسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكٰفِرِيْنَ‏
اِلَّاۤ اِبْلِيْسَؕ இப்லீஸைத் தவிர اِسْتَكْبَرَ அவன் பெருமை அடித்தான் وَكَانَ இன்னும் ஆகிவிட்டான் مِنَ الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களில்
38:74. இல்லா இBப்லீஸ்; ஸ்தக்Bபர வ கான மினல் காFபிரீன்
38:74. இப்லீஸைத் தவிர; அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான்.
38:75
38:75 قَالَ يٰۤـاِبْلِيْسُ مَا مَنَعَكَ اَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَىَّ‌ ؕ اَسْتَكْبَرْتَ اَمْ كُنْتَ مِنَ الْعَالِيْنَ‏
قَالَ அவன் கூறினான் يٰۤـاِبْلِيْسُ இப்லீஸே! مَا مَنَعَكَ உன்னை தடுத்தது எது? اَنْ تَسْجُدَ நீ ஸஜ்தா செய்வதிலிருந்து لِمَا خَلَقْتُ நான் படைத்தவருக்கு بِيَدَىَّ‌ ؕ எனது இரு கரத்தால் اَسْتَكْبَرْتَ நீ பெருமையடிக்கிறாயா? اَمْ كُنْتَ நீ இருந்தாயா? مِنَ الْعَالِيْنَ‏ பெருமையடிப்பவர்களில்தான்
38:75. கால யா இBப்லீஸு மா மன'அக அன் தஸ்ஜுத லிமா கலக்து Bபி யதய்ய 'அ ஸ்தக்Bபர்த அம் குன்த மின் அல் 'ஆலீன்
38:75. “இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.
38:76
38:76 قَالَ اَنَا خَيْرٌ مِّنْهُ‌ ؕ خَلَقْتَنِىْ مِنْ نَّارٍ وَّخَلَقْتَهٗ مِنْ طِيْنٍ‏
قَالَ அவன் கூறினான் اَنَا நான் خَيْرٌ சிறந்தவன் مِّنْهُ‌ ؕ அவரை விட خَلَقْتَنِىْ என்னை படைத்தாய் مِنْ نَّارٍ நெருப்பில் இருந்து وَّخَلَقْتَهٗ அவரை படைத்தாய் مِنْ طِيْنٍ‏ களிமண்ணிலிருந்து
38:76. கால அன கய்ரும் மின்ஹு; கலக்தனீ மின் னாரி(ன்)வ் வ கலக்தஹூ மின் தீன்
38:76. “நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான்.
38:77
38:77 قَالَ فَاخْرُجْ مِنْهَا فَاِنَّكَ رَجِيْمٌ  ۖ‌ ۚ‏
قَالَ அவன் கூறினான் فَاخْرُجْ வெளியேறி விடு! مِنْهَا அதில் இருந்து فَاِنَّكَ رَجِيْمٌ  ۖ‌ ۚ‏ நிச்சயமாக நீசபிக்கப்பட்டவன்
38:77. கால Fபக்ருஜ் மின்ஹா Fப இன்னக ரஜீம்
38:77. (அப்போது இறைவன்) “இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்” எனக் கூறினான்.
38:78
38:78 وَّاِنَّ عَلَيْكَ لَعْنَتِىْۤ اِلٰى يَوْمِ الدِّيْنِ‏
وَّاِنَّ நிச்சயமாக عَلَيْكَ உம்மீது لَعْنَتِىْۤ என் சாபம் اِلٰى يَوْمِ الدِّيْنِ‏ கூலி நாள் வரை
38:78. வ இன்ன 'அலய்க லஃனதீ இலா யவ்மித் தீன்
38:78. “இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்” (எனவும் இறைவன் கூறினான்).
38:79
38:79 قَالَ رَبِّ فَاَنْظِرْنِىْۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏
قَالَ அவன் கூறினான் رَبِّ என் இறைவா! فَاَنْظِرْنِىْۤ எனக்கு அவகாசம் அளி! اِلٰى يَوْمِ நாள் வரை يُبْعَثُوْنَ‏ அவர்கள் எழுப்பப்படுகின்றார்கள்
38:79. கால ரBப்Bபி Fப அன்ளிர்னீ இலா யவ்மி யுBப்'அதூன்
38:79. “இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான்.
38:80
38:80 قَالَ فَاِنَّكَ مِنَ الْمُنْظَرِيْنَۙ‏
قَالَ கூறினான் فَاِنَّكَ நிச்சயமாக நீ مِنَ الْمُنْظَرِيْنَۙ‏ அவகாசமளிக்கப்பட்டவர்களில்
38:80. கால Fப இன்னக மினல் முன்ளரீன்
38:80. “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே” என (அல்லாஹ்) கூறினான்.
38:81
38:81 اِلٰى يَوْمِ الْوَقْتِ الْمَعْلُوْمِ‏
اِلٰى يَوْمِ நாள் வரை الْوَقْتِ நேரம் الْمَعْلُوْمِ‏ அறியப்பட்ட
38:81. இலா யவ்மில் வக்தில் மஃலூம்
38:81. “குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்” (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான்).
38:82
38:82 قَالَ فَبِعِزَّتِكَ لَاُغْوِيَنَّهُمْ اَجْمَعِيْنَۙ‏
قَالَ அவன் கூறினான் فَبِعِزَّتِكَ உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக لَاُغْوِيَنَّهُمْ அவர்களை நிச்சயமாக நான் வழிகெடுப்பேன் اَجْمَعِيْنَۙ‏ அனைவரையும்
38:82. கால Fப Bபி 'இZஜ்Zஜதிக ல உக்வியன்னஹும் அஜ்ம'ஈன்
38:82. அப்பொழுது: “உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்” என்று (இப்லீஸ்) கூறினான்.
38:83
38:83 اِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِيْنَ‏
اِلَّا عِبَادَكَ உனது அடியார்களை தவிர مِنْهُمُ அவர்களில் الْمُخْلَصِيْنَ‏ பரிசுத்தமான(வர்கள்)
38:83. இல்லா 'இBபாதக மின்ஹுமுல் முக்லஸீன்
38:83. “(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).
38:84
38:84 قَالَ فَالْحَقُّ  وَالْحَقَّ اَ قُوْلُ‌ ۚ‏
قَالَ அவன் கூறினான் فَالْحَقُّ  உண்மை وَالْحَقَّ உண்மையைத்தான் اَ قُوْلُ‌ ۚ‏ நான் கூறுவேன்
38:84. கால Fபல்ஹக்க், வல்ஹக்க அகூல்
38:84. (அதற்கு இறைவன்:) “அது உண்மை; உண்மையையே நான் கூறுகிறேன் என்று இறைவன் கூறினான்.
38:85
38:85 لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنْكَ وَمِمَّنْ تَبِعَكَ مِنْهُمْ اَجْمَعِيْنَ‏
لَاَمْلَئَنَّ நிச்சயமாக நிரப்புவேன் جَهَنَّمَ நரகத்தை مِنْكَ உன்னைக்கொண்டும் وَمِمَّنْ تَبِعَكَ உன்னை பின்பற்றியவர்களைக் கொண்டும் مِنْهُمْ அவர்களில் اَجْمَعِيْنَ‏ அனைவர்களையும்
38:85. ல அம்ல'அன்ன ஜஹன்னம மின்க வ மிம்மன் தBபி'அக மின்ஹும் அஜ்ம'ஈன்
38:85. “நிச்சயமாக, உன்னைக் கொண்டும், அவர்களில் உன்னைப் பின்பற்றியவர்கள் அனைவரைக் கொண்டும் நரகத்தை நான் நிரப்புவேன்” (என்றான்)
38:86
38:86 قُلْ مَاۤ اَسْــٴَـــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ وَّمَاۤ اَنَا مِنَ الْمُتَكَلِّفِيْنَ‏
قُلْ கூறுவீராக! مَاۤ اَسْــٴَـــلُكُمْ நான் உங்களிடம் கேட்கவில்லை عَلَيْهِ இதற்காக مِنْ اَجْرٍ கூலி எதையும் وَّمَاۤ اَنَا இன்னும் நான் இல்லை مِنَ الْمُتَكَلِّفِيْنَ‏ வரட்டு கௌரவம் தேடுபவர்களில்
38:86. குல் மா அஸ்'அலுகும் 'அலய்ஹி மின் அஜ்ரி(ன்)வ் வ மா அன மினல் முதகல்லிFபீன்
38:86. (நபியே!) நீர் கூறும்: (“இக் குர்ஆனுக்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; அன்றியும், (இதை இட்டுக் கட்டி) சிரமம் எடுத்துக் கொண்டவனும் அல்லன்.
38:87
38:87 اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ‏
اِنْ هُوَ இது இல்லை اِلَّا அன்றி ذِكْرٌ ஓர் அறிவுரையே لِّلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
38:87. இன் ஹுவ இல்லா திக்ருல் லில்'ஆலமீன்
38:87. “இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.”
38:88
38:88 وَلَتَعْلَمُنَّ نَبَاَهٗ بَعْدَ حِيْنِ
وَلَتَعْلَمُنَّ நிச்சயமாகநீங்கள்அறிவீர்கள் نَبَاَهٗ இதன் செய்தியை بَعْدَ பின்னர் حِيْنِ‏ சில காலத்திற்கு
38:88. வ லதஃலமுன்ன னBப அஹூ Bபஃத ஹீன்
38:88. “நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.”