30. ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு)
மக்கீ, வசனங்கள்: 60

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
30:1
30:1 الٓمّٓ ۚ‏
الٓمّٓ ۚ‏ அலிஃப், லாம், மீம்
30:1. அலிஃப், லாம், மீம்.
30:2
30:2 غُلِبَتِ الرُّوْمُۙ‏
غُلِبَتِ தோற்கடிக்கப்பட்டனர் الرُّوْمُۙ‏ ரோமர்கள்
30:2. ரோம் தோல்வியடைந்து விட்டது.
30:3
30:3 فِىْۤ اَدْنَى الْاَرْضِ وَهُمْ مِّنْۢ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُوْنَۙ‏
فِىْۤ اَدْنَى கீழ்ப் பகுதியில் الْاَرْضِ பூமியின் وَهُمْ இன்னும் அவர்கள் مِّنْۢ بَعْدِ பின்னர் غَلَبِهِمْ அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன் سَيَغْلِبُوْنَۙ‏ அவர்கள் தோற்கடிப்பார்கள்
30:3. அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.
30:4
30:4 فِىْ بِضْعِ سِنِيْنَ ؕ لِلّٰهِ الْاَمْرُ مِنْ قَبْلُ وَمِنْۢ بَعْدُ ؕ وَيَوْمَٮِٕذٍ يَّفْرَحُ الْمُؤْمِنُوْنَ ۙ‏
فِىْ بِضْعِ سِنِيْنَ ؕ சில ஆண்டுகளில் لِلّٰهِ அல்லாஹ்விற்கே உரியது الْاَمْرُ அதிகாரம் مِنْ قَبْلُ முன்னரும் وَمِنْۢ بَعْدُ ؕ பின்னரும் وَيَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّفْرَحُ மகிழ்ச்சியடைவார்கள் الْمُؤْمِنُوْنَ ۙ‏ நம்பிக்கையாளர்கள்
30:4. சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
30:5
30:5 بِنَصْرِ اللّٰهِ‌ؕ يَنْصُرُ مَنْ يَّشَآءُ ؕ وَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُۙ‏
بِنَصْرِ உதவியால் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் يَنْصُرُ அவன் உதவுகின்றான் مَنْ يَّشَآءُ ؕ தான் நாடியவர்களுக்கு وَهُوَ அவன்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُۙ‏ பெரும் கருணையாளன்
30:5. அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
30:6
30:6 وَعْدَ اللّٰهِ‌ؕ لَا يُخْلِفُ اللّٰهُ وَعْدَهٗ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
وَعْدَ வாக்களிக்கின்றான் اللّٰهِ‌ؕ அல்லாஹ் لَا يُخْلِفُ மாற்ற மாட்டான் اللّٰهُ அல்லாஹ் وَعْدَهٗ தனது வாக்கை وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ النَّاسِ மக்களில் அதிகமானவர்கள் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
30:6. இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
30:7
30:7 يَعْلَمُوْنَ ظَاهِرًا مِّنَ الْحَيٰوةِ الدُّنْيَا ‌ۖۚ وَهُمْ عَنِ الْاٰخِرَةِ هُمْ غٰفِلُوْنَ‏
يَعْلَمُوْنَ அவர்கள் அறிவார்கள் ظَاهِرًا வெளிரங்கத்தை(த்தான்) مِّنَ الْحَيٰوةِ வாழ்க்கையின் الدُّنْيَا ‌ۖۚ இவ்வுலக وَهُمْ அவர்கள் عَنِ الْاٰخِرَةِ மறுமையைப் பற்றி هُمْ தான் غٰفِلُوْنَ‏ கவனமற்றவர்கள்
30:7. அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.
30:8
30:8 اَوَلَمْ يَتَفَكَّرُوْا فِىْۤ اَنْفُسِهِمْ مَا خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّى‌ؕ وَ اِنَّ كَثِيْرًا مِّنَ النَّاسِ بِلِقَآئِ رَبِّهِمْ لَـكٰفِرُوْنَ‏
اَوَلَمْ يَتَفَكَّرُوْا அவர்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்களா? فِىْۤ اَنْفُسِهِمْ தங்களைத் தாமே مَا خَلَقَ படைக்கவில்லை اللّٰهُ அல்லாஹ் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَاۤ அந்த இரண்டிற்கும் மத்தியில் உள்ளவற்றையும் اِلَّا بِالْحَقِّ தவிர/உண்மையான காரியத்திற்காக وَاَجَلٍ தவணைக்காக مُّسَمًّى‌ؕ ஒரு குறிப்பிட்ட وَ اِنَّ நிச்சயமாக كَثِيْرًا அதிகமானவர்கள் مِّنَ النَّاسِ மக்களில் بِلِقَآئِ சந்திப்பை رَبِّهِمْ தங்கள் இறைவனின் لَـكٰفِرُوْنَ‏ நிராகரிப்பவர்கள்தான்
30:8. அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை; எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.
30:9
30:9 اَوَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَانُوْۤا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاَثَارُوا الْاَرْضَ وَعَمَرُوْهَاۤ اَكْثَرَ مِمَّا عَمَرُوْهَا وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنٰتِ‌ ؕ فَمَا كَانَ اللّٰهُ لِيَظْلِمَهُمْ وَلٰـكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ ؕ‏
اَوَلَمْ يَسِيْرُوْا இவர்கள் பயணிக்க வேண்டாமா? فِى الْاَرْضِ பூமியில் فَيَنْظُرُوْا இவர்கள் பார்ப்பார்களே كَيْفَ எப்படி (என்று) كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ தங்களுக்கு முன்னுள்ளவர்களின் كَانُوْۤا அவர்கள் இருந்தார்கள் اَشَدَّ கடுமையானவர்களாக مِنْهُمْ இவர்களை விட قُوَّةً பலத்தால் وَّاَثَارُوا உழுதார்கள் الْاَرْضَ பூமியை وَعَمَرُوْهَاۤ இன்னும் அவர்கள் அதை செழிப்பாக்கினார்கள் اَكْثَرَ அதிகமாக مِمَّا عَمَرُوْهَا அதை இவர்கள் செழிப்பாக்கியதைவிட وَجَآءَتْهُمْ இன்னும் , அவர்களிடம் வந்தனர் رُسُلُهُمْ அவர்களுடைய தூதர்கள் بِالْبَيِّنٰتِ‌ ؕ தெளிவான அத்தாட்சிகளுடன் فَمَا كَانَ اللّٰهُ இல்லை/அல்லாஹ் لِيَظْلِمَهُمْ அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக وَلٰـكِنْ எனினும் كَانُوْۤا அவர்கள் இருந்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்குத்தாங்களே يَظْلِمُوْنَ ؕ‏ அநியாயம் செய்பவர்களாக
30:9. அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள்; அவர்களும் பூமியில் விவசாயம் செய்தார்கள். இன்னும் இவர்கள் அதை (உழுது) பண்படுத்தியதை விட அவர்கள் அதை அதிகமாகவே (உழுது) பண்படுத்தியிருந்தார்கள். அவர்களிடமும் அவர்களுக்கான (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள்.
30:10
30:10 ثُمَّ كَانَ عَاقِبَةَ الَّذِيْنَ اَسَآءُوا السُّوْٓآٰى اَنْ كَذَّبُوْا بِاٰيٰتِ اللّٰهِ وَكَانُوْا بِهَا يَسْتَهْزِءُوْنَ
ثُمَّ பிறகு كَانَ இருந்தது عَاقِبَةَ முடிவு الَّذِيْنَ اَسَآءُوا தீமை செய்தவர்களின் السُّوْٓآٰى மிக தீயதாகவே اَنْ كَذَّبُوْا ஏனெனில் அவர்கள் பொய்ப்பித்தனர் بِاٰيٰتِ அத்தாட்சிகளை اللّٰهِ அல்லாஹ்வின் وَكَانُوْا இன்னும் , இருந்தனர் بِهَا அவற்றை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகாசம் செய்பவர்களாக
30:10. பிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று.  
30:11
30:11 اَللّٰهُ يَـبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏
اَللّٰهُ அல்லாஹ்தான் يَـبْدَؤُا தொடக்கமாக படைக்கிறான் الْخَلْقَ படைப்புகளை ثُمَّ பிறகு يُعِيْدُهٗ அவற்றை மீண்டும் உருவாக்குகின்றான் ثُمَّ பிறகு اِلَيْهِ அவனிடமே تُرْجَعُوْنَ‏ நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்
30:11. அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
30:12
30:12 وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يُبْلِسُ الْمُجْرِمُوْنَ‏
وَيَوْمَ இன்னும் நாளில் تَقُوْمُ நிகழ்கின்ற السَّاعَةُ மறுமை يُبْلِسُ பெரும் சிரமப்படுவார்கள் الْمُجْرِمُوْنَ‏ குற்றவாளிகள்
30:12. மேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள்.
30:13
30:13 وَلَمْ يَكُنْ لَّهُمْ مِّنْ شُرَكَآٮِٕهِمْ شُفَعٰٓؤُا وَكَانُوْا بِشُرَكَآٮِٕهِمْ كٰفِرِيْنَ‏
وَلَمْ يَكُنْ இருக்க மாட்டார்கள் لَّهُمْ அவர்களுக்கு مِّنْ شُرَكَآٮِٕهِمْ அவர்களுடைய நண்பர்களில் شُفَعٰٓؤُا பரிந்துரையாளர்கள் وَكَانُوْا அவர்கள் ஆகிவிடுவார்கள் بِشُرَكَآٮِٕهِمْ தங்கள் நண்பர்களை كٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களாக
30:13. அப்போது, அவர்கள் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசுவதாக இராது; (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள்.
30:14
30:14 وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يَوْمَٮِٕذٍ يَّتَفَرَّقُوْنَ‏
وَيَوْمَ நாளில் تَقُوْمُ நிகழ்கின்ற السَّاعَةُ மறுமை يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّتَفَرَّقُوْنَ‏ அவர்கள் பிரிந்து விடுவார்கள்
30:14. மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
30:15
30:15 فَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُمْ فِىْ رَوْضَةٍ يُّحْبَرُوْنَ‏
فَاَمَّا ஆக الَّذِيْنَ اٰمَنُوْا எவர்கள்/ நம்பிக்கைகொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தார்களோ الصّٰلِحٰتِ நன்மைகளை فَهُمْ அவர்கள் فِىْ رَوْضَةٍ தோட்டத்தில் يُّحْبَرُوْنَ‏ மகிழ்விக்கப்படுவார்கள்
30:15. ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.
30:16
30:16 وَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰيٰتِنَا وَلِقَآئِ الْاٰخِرَةِ فَاُولٰٓٮِٕكَ فِى الْعَذَابِ مُحْضَرُوْنَ‏
وَاَمَّا ஆக الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் وَكَذَّبُوْا இன்னும் பொய்ப்பித்தார்கள் بِاٰيٰتِنَا நமது வசனங்களை وَلِقَآئِ இன்னும் சந்திப்பை الْاٰخِرَةِ மறுமையின் فَاُولٰٓٮِٕكَ அவர்கள் فِى الْعَذَابِ தண்டனைக்கு مُحْضَرُوْنَ‏ கொண்டு வரப்படுவார்கள்
30:16. இன்னும், எவர்கள் காஃபிராகி, நம்முடைய வசனங்களை, மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ அ(த்தகைய)வர்கள், வேதனைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.
30:17
30:17 فَسُبْحٰنَ اللّٰهِ حِيْنَ تُمْسُوْنَ وَحِيْنَ تُصْبِحُوْنَ‏
فَسُبْحٰنَ ஆகவே, நீங்கள் துதியுங்கள் اللّٰهِ அல்லாஹ்வை حِيْنَ تُمْسُوْنَ நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போது(ம்) وَحِيْنَ تُصْبِحُوْنَ‏ நீங்கள் காலைப் பொழுதை அடையும்போதும்
30:17. ஆகவே, (முஃமின்களே!) நீங்கள் மாலையி(லாகும் பொழுதி)லும், நீங்கள் காலையி(லாகும் பொழுதி)லும் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருங்கள்.
30:18
30:18 وَلَـهُ الْحَمْدُ فِىْ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَعَشِيًّا وَّحِيْنَ تُظْهِرُوْنَ‏
وَلَـهُ அவனுக்கே உரியன الْحَمْدُ எல்லாப் புகழும் فِىْ السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِ பூமியிலும் وَعَشِيًّا மாலையிலும் وَّحِيْنَ تُظْهِرُوْنَ‏ நீங்கள் மதியத்தை அடையும் நேரத்திலும்
30:18. இன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்; இன்னும், இரவிலும் நீங்கள் ளுஹருடைய நேரத்திலாகும் பொழுதும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்).
30:19
30:19 يُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ وَيُحْىِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ‌ؕ وَكَذٰلِكَ تُخْرَجُوْنَ
يُخْرِجُ வெளியாக்குகின்றான் الْحَـىَّ உயிருள்ளவற்றை مِنَ الْمَيِّتِ இறந்ததிலிருந்து وَيُخْرِجُ இன்னும் வெளியாக்குகின்றான் الْمَيِّتَ இறந்தவற்றை مِنَ الْحَـىِّ உயிருள்ளதிலிருந்து وَيُحْىِ இன்னும் உயிர்ப்பிக்கின்றான் الْاَرْضَ பூமியை بَعْدَ பின்னர் مَوْتِهَا ؕ அது இறந்த وَكَذٰلِكَ இன்னும் இவ்வாறே تُخْرَجُوْنَ‏ நீங்களும் வெளியேற்றப்படுவீர்கள்
30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.  
30:20
30:20 وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ اِذَاۤ اَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُوْنَ‏
وَمِنْ اٰيٰتِهٖۤ அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் اَنْ خَلَقَكُمْ அவன் உங்களை படைத்தது مِّنْ تُرَابٍ மண்ணிலிருந்து ثُمَّ பிறகு اِذَاۤ اَنْتُمْ நீங்களோ بَشَرٌ மனிதர்களாக تَنْتَشِرُوْنَ‏ பிரிந்து செல்கிறீர்கள்
30:20. மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
30:21
30:21 وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً  ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ‏
وَمِنْ اٰيٰتِهٖۤ இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் اَنْ خَلَقَ அவன் படைத்தது لَكُمْ உங்களுக்காக مِّنْ اَنْفُسِكُمْ உங்களிலிருந்தே اَزْوَاجًا மனைவிகளை لِّتَسْكُنُوْۤا நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக اِلَيْهَا அவர்களிடம் وَجَعَلَ இன்னும் அவன் ஏற்படுத்தினான் بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் مَّوَدَّةً அன்பையும் وَّرَحْمَةً  ؕ கருணையையும் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் உள்ளன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يَّتَفَكَّرُوْنَ‏ சிந்திக்கின்றார்கள்
30:21. இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
30:22
30:22 وَمِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَاَلْوَانِكُمْ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّلْعٰلِمِيْنَ‏
وَمِنْ اٰيٰتِهٖ இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் خَلْقُ படைத்ததும் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضِ பூமியையும் وَاخْتِلَافُ வேறுபட்டு இருப்பதும் اَلْسِنَتِكُمْ உங்கள் மொழிகளும் وَاَلْوَانِكُمْ‌ؕ உங்கள் நிறங்களும் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் உள்ளன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّلْعٰلِمِيْنَ‏ கல்விமான்களுக்கு
30:22. மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
30:23
30:23 وَمِنْ اٰيٰتِهٖ مَنَامُكُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَآؤُكُمْ مِّنْ فَضْلِهٖ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ‏
وَمِنْ اٰيٰتِهٖ இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் مَنَامُكُمْ நீங்கள் தூங்குவதும் بِالَّيْلِ இரவிலும் وَالنَّهَارِ பகலிலும் وَابْتِغَآؤُكُمْ நீங்கள் தேடுவதும் مِّنْ فَضْلِهٖ‌ؕ அவனுடைய அருளிலிருந்து اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் உள்ளன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يَّسْمَعُوْنَ‏ செவியேற்கின்றனர்
30:23. இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
30:24
30:24 وَمِنْ اٰيٰتِهٖ يُرِيْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّيُنَزِّلُ مِنَ السَّمَآءِ مَآءً فَيُحْىٖ بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
وَمِنْ اٰيٰتِهٖ அவனுடைய அத்தாட்சிகளில் இருந்து يُرِيْكُمُ அவன் உங்களுக்கு காட்டுகின்றான் الْبَرْقَ மின்னலை خَوْفًا பயமாகவும் وَّطَمَعًا ஆசையாகவும் وَّيُنَزِّلُ இன்னும் இறக்குகின்றான் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءً மழையை فَيُحْىٖ உயிர்ப்பிக்கின்றான் بِهِ அதன் மூலம் الْاَرْضَ பூமியை بَعْدَ பின்னர் مَوْتِهَا ؕ அது மரணித்த اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் உள்ளன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يَّعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிகின்றனர்
30:24. அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
30:25
30:25 وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ تَقُوْمَ السَّمَآءُ وَالْاَرْضُ بِاَمْرِهٖ‌ ؕ ثُمَّ اِذَا دَعَاكُمْ دَعْوَةً  ‌ۖ مِّنَ الْاَرْضِ ‌ۖ اِذَاۤ اَنْـتُمْ تَخْرُجُوْنَ‏
وَمِنْ اٰيٰتِهٖۤ அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் اَنْ تَقُوْمَ நிற்பது السَّمَآءُ வானமும் وَالْاَرْضُ பூமியும் بِاَمْرِهٖ‌ ؕ அவனுடைய கட்டளையின்படி ثُمَّ பிறகு اِذَا دَعَا அவன் அழைத்தால் كُمْ உங்களை دَعْوَةً  ۖ ஒரு முறை அழைத்தல் مِّنَ الْاَرْضِۖ  பூமியிலிருந்து اِذَاۤ اَنْـتُمْ அப்போது நீங்கள் تَخْرُجُوْنَ‏ வெளியேறுவீர்கள்
30:25. வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள்.
30:26
30:26 وَلَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ كُلٌّ لَّهٗ قٰنِتُوْنَ‏
وَلَهٗ அவனுக்கே உரியவர்கள் مَنْ எவர்கள் فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِ‌ؕ இன்னும் பூமியிலும் كُلٌّ எல்லோரும் لَّهٗ அவனுக்கே قٰنِتُوْنَ‏ பணிந்துநடக்கின்றனர்
30:26. வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன.
30:27
30:27 وَهُوَ الَّذِىْ يَـبْدَؤُا الْخَـلْقَ ثُمَّ يُعِيْدُهٗ وَهُوَ اَهْوَنُ عَلَيْهِ‌ؕ وَلَهُ الْمَثَلُ الْاَعْلٰى فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ وَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ
وَهُوَ الَّذِىْ அவன்தான் يَـبْدَؤُا ஆரம்பமாக படைக்கின்றான் الْخَـلْقَ படைப்புகளை ثُمَّ பிறகு يُعِيْدُهٗ அவன் அவற்றை மீண்டும் படைக்கின்றான் وَهُوَ அது اَهْوَنُ மிக இலகுவானதே عَلَيْهِ‌ؕ அவனுக்கு وَلَهُ அவனுக்கே உரியன الْمَثَلُ தன்மைகள் الْاَعْلٰى மிக உயர்ந்த فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِ‌ۚ பூமியிலும் وَهُوَ الْعَزِيْزُ அவன்தான் மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
30:27. அவனே படைப்பைத் துவங்குகின்றான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.  
30:28
30:28 ضَرَبَ لَكُمْ مَّثَلًا مِّنْ اَنْفُسِكُمْ‌ؕ هَلْ لَّكُمْ مِّنْ مَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ مِّنْ شُرَكَآءَ فِىْ مَا رَزَقْنٰكُمْ فَاَنْتُمْ فِيْهِ سَوَآءٌ تَخَافُوْنَهُمْ كَخِيْفَتِكُمْ اَنْفُسَكُمْ‌ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰيٰتِ لِقَوْمٍ يَّعْقِلُوْنَ‏
ضَرَبَ அவன் விவரிக்கின்றான் لَكُمْ உங்களுக்கு مَّثَلًا ஓர் உதாரணத்தை مِّنْ اَنْفُسِكُمْ‌ؕ உங்களிலிருந்து هَلْ ? لَّكُمْ உங்களுக்கு مِّنْ مَّا مَلَـكَتْ சொந்தமாக்கியவர்களில் اَيْمَانُكُمْ உங்கள் வலக்கரங்கள் مِّنْ شُرَكَآءَ பங்காளிகள் யாரும் فِىْ مَا رَزَقْنٰكُمْ நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் فَاَنْتُمْ فِيْهِ நீங்கள்/அதில் سَوَآءٌ சமமானவர்களாக تَخَافُوْنَهُمْ அவர்களை நீங்கள் பயப்படுகிறீர்கள் كَخِيْفَتِكُمْ நீங்கள் பயப்படுவது போன்று اَنْفُسَكُمْ‌ؕ உங்களை كَذٰلِكَ இவ்வாறு نُفَصِّلُ விவரிக்கின்றோம் الْاٰيٰتِ வசனங்களை لِقَوْمٍ மக்களுக்கு يَّعْقِلُوْنَ‏ சிந்தித்து புரிகின்றனர்
30:28. உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கூறுகிறான்: உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் (அடிமைகளில்) எவரையும், நாம் உங்களுக்கு அளித்திருப்ப(தான சம்பத்)தில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா? உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப்போல் அவர்களை பயப்படுகிறீர்களா? இவ்வாறாகவே நாம் நம் அத்தாட்சிகளை சிந்தித்துணரும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்.
30:29
30:29 بَلِ اتَّبَعَ الَّذِيْنَ ظَلَمُوْۤا اَهْوَآءَهُمْ بِغَيْرِ عِلْمٍ‌ۚ فَمَنْ يَّهْدِىْ مَنْ اَضَلَّ اللّٰهُ ‌ؕ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏
بَلِ மாறாக اتَّبَعَ பின்பற்றுகின்றனர் الَّذِيْنَ ظَلَمُوْۤا அநியாயக்காரர்கள் اَهْوَآءَ மன இச்சைகளை هُمْ தங்கள் بِغَيْرِ இன்றி عِلْمٍ‌ۚ கல்வி அறிவு فَمَنْ யார் يَّهْدِىْ நேர்வழி செலுத்துவார் مَنْ எவரை اَضَلَّ வழிகெடுத்தான் اللّٰهُ ؕ அல்லாஹ் وَمَا لَهُمْ அவர்களுக்கு இல்லை مِّنْ نّٰصِرِيْنَ‏ உதவியாளர்களில் எவரும்
30:29. எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர்.
30:30
30:30 فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًا ‌ؕ فِطْرَتَ اللّٰهِ الَّتِىْ فَطَرَ النَّاسَ عَلَيْهَا ‌ؕ لَا تَبْدِيْلَ لِخَـلْقِ اللّٰهِ‌ ؕ ذٰ لِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۙ  وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ ۙ ‏
فَاَقِمْ ஆகவே நிறுத்துவீராக! وَجْهَكَ உம் முகத்தை لِلدِّيْنِ மார்க்கத்தின் பக்கம் حَنِيْفًا ؕ உறுதியுடையவராக فِطْرَتَ இயற்கை மார்க்கம் اللّٰهِ அல்லாஹ்வுடைய الَّتِىْ فَطَرَ எது/இயற்கையாக அமைத்தான் النَّاسَ மக்களை عَلَيْهَا ؕ அதன் மீதுதான் لَا تَبْدِيْلَ மாற்றக்கூடாது لِخَـلْقِ படைப்பை اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் ذٰ لِكَ இதுதான் الدِّيْنُ மார்க்கம் الْقَيِّمُ நிலையான ۙ  وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ ۙ ‏ அறியமாட்டார்கள்
30:30. ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
30:31
30:31 مُنِيْبِيْنَ اِلَيْهِ وَاتَّقُوْهُ وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُشْرِكِيْنَۙ‏
مُنِيْبِيْنَ முற்றிலும் திரும்பியவர்களாக اِلَيْهِ அவன் பக்கம் وَاتَّقُوْهُ இன்னும் அவனை அஞ்சிக் கொள்ளுங்கள் وَاَقِيْمُوا இன்னும் நிறைவேற்றுங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَلَا تَكُوْنُوْا நீங்கள் ஆகிவிடாதீர்கள் مِنَ الْمُشْرِكِيْنَۙ‏ இணைவைப்பவர்களில்
30:31. நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்.
30:32
30:32 مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ‌ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏
مِنَ الَّذِيْنَ எவர்களில் فَرَّقُوْا பிரித்தார்கள் دِيْنَهُمْ தங்களது மார்க்கத்தை وَكَانُوْا இன்னும் ஆகிவிட்டனர் شِيَعًا ؕ பல பிரிவுகளாக كُلُّ ஒவ்வொரு حِزْبٍۢ கட்சியும் بِمَا உள்ளதைக் கொண்டு لَدَيْهِمْ தங்களிடம் فَرِحُوْنَ‏ மகிழ்ச்சியடைகின்றனர்
30:32. எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
30:33
30:33 وَاِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُّنِيْبِيْنَ اِلَيْهِ ثُمَّ اِذَاۤ اَذَاقَهُمْ مِّنْهُ رَحْمَةً اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ يُشْرِكُوْنَۙ‏
وَاِذَا مَسَّ நேர்ந்தால் النَّاسَ மக்களுக்கு ضُرٌّ ஒரு தீங்கு دَعَوْا அழைக்கின்றனர் رَبَّهُمْ தங்கள் இறைவனை مُّنِيْبِيْنَ முற்றிலும் திரும்பியவர்களாக اِلَيْهِ அவன் பக்கம் ثُمَّ اِذَاۤ اَذَاقَهُمْ பிறகு/அவன் சுவைக்க வைத்தால்/அவர்களுக்கு مِّنْهُ தன்புறத்திலிருந்து رَحْمَةً அருளை اِذَا فَرِيْقٌ அப்போது ஒரு சாரார் مِّنْهُمْ அவர்களில் بِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு يُشْرِكُوْنَۙ‏ இணைவைக்கின்றனர்
30:33. மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
30:34
30:34 لِيَكْفُرُوْا بِمَاۤ اٰتَيْنٰهُمْ‌ؕ فَتَمَتَّعُوْا فَسَوْفَ تَعْلَمُوْنَ‏
لِيَكْفُرُوْا நிராகரிப்பதற்காக بِمَاۤ اٰتَيْنٰهُمْ‌ؕ நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை فَتَمَتَّعُوْا ஆகவே சுகமனுபவியுங்கள் فَسَوْفَ تَعْلَمُوْنَ‏ நீங்கள் அறிவீர்கள்
30:34. நாம் அவர்களுக்கு அருளியதற்காக (நன்றி செலுத்தாமல்) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கட்டும்; நீங்கள் சுகமனுபவித்துக் கொண்டிருங்கள்; விரைவில் (இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
30:35
30:35 اَمْ اَنْزَلْنَا عَلَيْهِمْ سُلْطٰنًا فَهُوَ يَتَكَلَّمُ بِمَا كَانُوْا بِهٖ يُشْرِكُوْنَ‏
اَمْ அல்லது اَنْزَلْنَا நாம் இறக்கினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது سُلْطٰنًا ஓர் ஆதாரத்தை فَهُوَ அது يَتَكَلَّمُ பேசுகிறதா بِمَا எதைப் பற்றி كَانُوْا இருந்தனர் بِهٖ அவனுக்கு يُشْرِكُوْنَ‏ இணை வைப்பவர்களாக
30:35. அல்லது, அவர்கள் இணைவைத்(து வணங்குவ)தற்கு ஆதாரமாக கூறக்கூடிய ஏதாவது ஓர் அத்தாட்சியை நாம் அவர்களுக்கு இறக்கி வைத்திருக்கிறோமா?
30:36
30:36 وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَاؕ‌ وَاِنْ تُصِبْهُمْ سَيِّئَةٌ ۢ بِمَا قَدَّمَتْ اَيْدِيْهِمْ اِذَا هُمْ يَقْنَطُوْنَ‏
وَاِذَاۤ اَذَقْنَا நாம் சுவைக்க வைத்தால் النَّاسَ மக்களுக்கு رَحْمَةً அருளை فَرِحُوْا மகிழ்ச்சியடைகின்றனர் بِهَاؕ‌ அதனால் وَاِنْ تُصِبْهُمْ அவர்களை அடைந்தால் سَيِّئَةٌ ۢ ஒரு தீமை بِمَا قَدَّمَتْ முற்படுத்தியவற்றினால் اَيْدِيْهِمْ அவர்களின் கரங்கள் اِذَا هُمْ அப்போது அவர்கள் يَقْنَطُوْنَ‏ நிராசையடைந்து விடுகின்றனர்
30:36. இன்னும் நாம் மனிதர்களை (நம்) ரஹ்மத்தை ருசிக்க (அனுபவிக்க)ச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள்.
30:37
30:37 اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ‏
اَوَلَمْ يَرَوْا இவர்கள் பார்க்க வேண்டாமா? اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يَبْسُطُ விசாலமாக்குகின்றான் الرِّزْقَ உணவை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு وَيَقْدِرُ‌ؕ இன்னும் சுருக்குகின்றான் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் இருக்கின்றன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لِّقَوْمٍ மக்களுக்கு يُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கின்றனர்
30:37. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை - ஆகார வசதிகளை - விசாலமாக்குகிறான்; (தான் நாடியோருக்குச்) சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
30:38
30:38 فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَ الْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ‌ؕ ذٰلِكَ خَيْرٌ لِّلَّذِيْنَ يُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
فَاٰتِ ஆகவே கொடுப்பீராக! ذَا الْقُرْبٰى உறவினருக்கு حَقَّهٗ அவருடைய உரிமையை وَ الْمِسْكِيْنَ இன்னும் வறியவருக்கு وَابْنَ السَّبِيْلِ‌ؕ இன்னும் வழிப்போக்கருக்கு ذٰلِكَ இதுதான் خَيْرٌ சிறந்ததாகும். لِّلَّذِيْنَ يُرِيْدُوْنَ நாடுவோருக்கு وَجْهَ முகத்தை اللّٰهِ‌ அல்லாஹ்வின் وَاُولٰٓٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْمُفْلِحُوْنَ‏ வெற்றியாளர்கள்
30:38. ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள்.
30:39
30:39 وَمَاۤ اٰتَيْتُمْ مِّنْ رِّبًا لِّيَرْبُوَا۟ فِىْۤ اَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُوْا عِنْدَ اللّٰهِ‌ۚ وَمَاۤ اٰتَيْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ‏
وَمَاۤ اٰتَيْتُمْ எதை/நீங்கள்கொடுத்தீர்கள் مِّنْ رِّبًا அன்பளிப்புகளிலிருந்து لِّيَرْبُوَا۟ வளர்ச்சி காணுவதற்காக فِىْۤ اَمْوَالِ செல்வங்களில் النَّاسِ மக்களின் فَلَا يَرْبُوْا அது வளர்ச்சி காணாது عِنْدَ اللّٰهِ‌ۚ அல்லாஹ்விடம் وَمَاۤ اٰتَيْتُمْ எதை/நீங்கள்கொடுத்தீர்கள் مِّنْ زَكٰوةٍ தர்மங்களிலிருந்து تُرِيْدُوْنَ நீங்கள் நாடியவர்களாக وَجْهَ முகத்தை اللّٰهِ அல்லாஹ்வின் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُضْعِفُوْنَ‏ பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்
30:39. (மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.
30:40
30:40 اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ‌ ؕ هَلْ مِنْ شُرَكَآٮِٕكُمْ مَّنْ يَّفْعَلُ مِنْ ذٰ لِكُمْ مِّنْ شَىْءٍ‌ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ
اَللّٰهُ الَّذِىْ அல்லாஹ்தான் خَلَقَكُمْ உங்களைப் படைத்தான் ثُمَّ رَزَقَكُمْ பிறகு/அவன் உங்களுக்கு உணவளித்தான் ثُمَّ يُمِيْتُكُمْ பிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களை ثُمَّ يُحْيِيْكُمْ‌ ؕ பிறகு/அவன் உங்களை உயிர்ப்பிப்பான் هَلْ ? مِنْ شُرَكَآٮِٕكُمْ உங்கள் தெய்வங்களில் (இருக்கின்றாரா) مَّنْ يَّفْعَلُ செய்கின்றவர் مِنْ ذٰ لِكُمْ இவற்றில் مِّنْ شَىْءٍ‌ؕ எதையும் سُبْحٰنَهٗ அவன் மிகப் பரிசுத்தமானவன் وَتَعٰلٰى இன்னும் அவன் மிக உயர்ந்தவன் عَمَّا يُشْرِكُوْنَ‏ அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
30:40. அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.  
30:41
30:41 ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏
ظَهَرَ பெருகி விட்டது الْفَسَادُ பாவம் فِى الْبَرِّ தரையில் وَالْبَحْرِ இன்னும் கடலில் بِمَا كَسَبَتْ செய்தவற்றினால் اَيْدِى கரங்கள் النَّاسِ மக்களின் لِيُذِيْقَهُمْ இறுதியாக, அவர்களுக்கு சுவைக்க வைப்போம் بَعْضَ சிலவற்றை الَّذِىْ எவை عَمِلُوْا அவர்கள் செய்தனர் لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ அவர்கள் திரும்புவதற்காக
30:41. மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.
30:42
30:42 قُلْ سِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلُ‌ؕ كَانَ اَكْثَرُهُمْ مُّشْرِكِيْنَ‏
قُلْ கூறுவீராக! سِيْرُوْا பயணியுங்கள் فِى الْاَرْضِ பூமியில் فَانْظُرُوْا பாருங்கள் كَيْفَ எப்படி كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الَّذِيْنَ எவர்கள் مِنْ قَبْلُ‌ؕ முன்னர் كَانَ இருந்தனர் اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் مُّشْرِكِيْنَ‏ இணை வைப்பவர்களாக
30:42. “பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்? அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்” என்று (நபியே!) நீர் கூறும்.
30:43
30:43 فَاَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ الْقَيِّمِ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ يَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ‌ يَوْمَٮِٕذٍ يَّصَّدَّعُوْنَ‏
فَاَقِمْ ஆகவே நிறுத்துவீராக! وَجْهَكَ உம் முகத்தை لِلدِّيْنِ மார்க்கத்தின் பக்கம் الْقَيِّمِ நேரான مِنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِىَ வருவதற்கு يَوْمٌ ஒரு நாள் لَّا مَرَدَّ தடுக்க முடியாத لَهٗ அதை مِنَ اللّٰهِ‌ அல்லாஹ்விடமிருந்து يَوْمَٮِٕذٍ அந்நாளில் يَّصَّدَّعُوْنَ‏ பிரிந்து விடுவார்கள்
30:43. ஆகவே, அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந்தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக; அந்நாளில் அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
30:44
30:44 مَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهٗ ‌ۚ وَمَنْ عَمِلَ صَالِحاً فَلِاَنْفُسِهِمْ يَمْهَدُوْنَۙ ‏
مَنْ யார் كَفَرَ நிராகரிப்பாரோ فَعَلَيْهِ அவர் மீதுதான் கேடாக முடியும் كُفْرُهٗ ۚ அவருடைய நிராகரிப்பு وَمَنْ எவர்கள் عَمِلَ செய்வார்களோ صَالِحاً நன்மை فَلِاَنْفُسِهِمْ தங்களுக்குத்தான் يَمْهَدُوْنَۙ ‏ விரித்துக் கொள்கிறார்கள்
30:44. எவன் நிராகரிக்கின்றானோ அவனுக்கே அவனது நிராகரிப்பு கேடாகும். எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.
30:45
30:45 لِيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوا وَعَمِلُوْا الصّٰلِحٰتِ مِنْ فَضْلِهٖ‌ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ‏
لِيَجْزِىَ இறுதியாக, கூலி கொடுப்பான் الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கைகொண்டனர் وَعَمِلُوْا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை مِنْ فَضْلِهٖ‌ؕ தன் அருளிலிருந்து اِنَّهٗ நிச்சயமாக அவன் لَا يُحِبُّ நேசிக்க மாட்டான் الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்களை
30:45. ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.
30:46
30:46 وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ يُّرْسِلَ الرِّيَاحَ مُبَشِّرٰتٍ وَّلِيُذِيْقَكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَلِتَجْرِىَ الْفُلْكُ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
وَمِنْ اٰيٰتِهٖۤ இன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான் اَنْ يُّرْسِلَ அவன் அனுப்புவது الرِّيَاحَ காற்றுகளை مُبَشِّرٰتٍ நற்செய்தி தரக்கூடியவையாக وَّلِيُذِيْقَكُمْ அவன் உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும் مِّنْ رَّحْمَتِهٖ தனது அருளை وَلِتَجْرِىَ செல்வதற்கும் الْفُلْكُ கப்பல்கள் بِاَمْرِهٖ அவனுடைய கட்டளையின் படி وَلِتَبْتَغُوْا நீங்கள் தேடுவதற்கும் مِنْ فَضْلِهٖ அவனது அருளிலிருந்து وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றி செலுத்துவதற்கும்
30:46. இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும்.
30:47
30:47 وَ لَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَيِّنٰتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِيْنَ اَجْرَمُوْا ‌ؕ وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِيْنَ‏
وَ لَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் رُسُلًا பல தூதர்களை اِلٰى قَوْمِهِمْ அவர்களுடைய மக்களுக்கு فَجَآءُوْ அவர்கள் வந்தனர் هُمْ அவர்களிடம் بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளுடன் فَانْتَقَمْنَا ஆகவே, நாம் பழிவாங்கினோம் مِنَ الَّذِيْنَ اَجْرَمُوْا ؕ குற்றமிழைத்தவர்களிடம் وَكَانَ இருக்கிறது حَقًّا கடமையாக عَلَيْنَا நம்மீது نَصْرُ உதவுவது الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொண்டவர்களுக்கு
30:47. மேலும், நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் தூதர்களை அவர்களுடைய சமூகத்தினரிடம் அனுப்பியிருக்கிறோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடத்தில் வந்தார்கள்; பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.
30:48
30:48 اَللّٰهُ الَّذِىْ يُرْسِلُ الرِّيٰحَ فَتُثِيْرُ سَحَابًا فَيَبْسُطُهٗ فِى السَّمَآءِ كَيْفَ يَشَآءُ وَيَجْعَلُهٗ كِسَفًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖ‌ۚ فَاِذَاۤ اَصَابَ بِهٖ مَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖۤ اِذَا هُمْ يَسْتَبْشِرُوْنَۚ‏
اَللّٰهُ الَّذِىْ அல்லாஹ்தான் يُرْسِلُ அனுப்புகின்றான். الرِّيٰحَ காற்றுகளை فَتُثِيْرُ அவை கிளப்புகின்றன سَحَابًا மேகங்களை فَيَبْسُطُهٗ அவன் அவற்றை பரப்புகின்றான் فِى السَّمَآءِ வானத்தில் كَيْفَ يَشَآءُ தான் நாடியவாறு وَيَجْعَلُهٗ அவற்றை அவன் மாற்றுகின்றான் كِسَفًا பல துண்டுகளாக فَتَرَى ஆகவே நீர் பார்க்கிறீர் الْوَدْقَ மழையை يَخْرُجُ அது வெளியேறக்கூடியதாக مِنْ خِلٰلِهٖ‌ۚ அவற்றுக்கு இடையிலிருந்து فَاِذَاۤ اَصَابَ அவன் அடையச் செய்தால் بِهٖ அதை مَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு مِنْ عِبَادِهٖۤ தனது அடியார்களில் اِذَا هُمْ அப்போது அவர்கள் يَسْتَبْشِرُوْنَۚ‏ மகிழ்ச்சியடைகிறார்கள்
30:48. அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்வடைகிறார்கள்.
30:49
30:49 وَاِنْ كَانُوْا مِنْ قَبْلِ اَنْ يُّنَزَّلَ عَلَيْهِمْ مِّنْ قَبْلِهٖ لَمُبْلِسِيْنَ‏
وَاِنْ كَانُوْا நிச்சயமாக அவர்கள் இருந்தனர் مِنْ قَبْلِ முன்னர் اَنْ يُّنَزَّلَ இறக்கப்படுவதற்கு عَلَيْهِمْ அவர்கள் மீது مِّنْ قَبْلِهٖ இதற்கு முன்னர் لَمُبْلِسِيْنَ‏ நிராசையடைந்தவர்களாக
30:49. எனினும், அவர்கள் மீது அ(ம் மழையான)து இறங்குவதற்கு முன்னரும் - அதற்கு முன்னரும் - (மழையின்மையால்) அவர்கள் முற்றிலும் நிராசைப்பட்டிருந்தனர்.
30:50
30:50 فَانْظُرْ اِلٰٓى اٰثٰرِ رَحْمَتِ اللّٰهِ كَيْفَ يُحْىِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ‌ؕ اِنَّ ذٰ لِكَ لَمُحْىِ الْمَوْتٰى ‌ۚ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
فَانْظُرْ ஆக, பார்ப்பீராக! اِلٰٓى اٰثٰرِ அடையாளங்களை رَحْمَتِ அருளின் اللّٰهِ அல்லாஹ்வுடைய كَيْفَ எப்படி يُحْىِ அவன் உயிர்ப்பிக்கின்றான் الْاَرْضَ பூமியை بَعْدَ பின்னர் مَوْتِهَا ؕ அது மரணித்த اِنَّ நிச்சயமாக ذٰ لِكَ அவன்தான் لَمُحْىِ உயிர்ப்பிப்பவன் الْمَوْتٰى ۚ இறந்தவர்களையும் وَهُوَ அவன் عَلٰى மீது(ம்) كُلِّ எல்லா شَىْءٍ பொருள்கள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
30:50. (நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
30:51
30:51 وَلَٮِٕنْ اَرْسَلْنَا رِيْحًا فَرَاَوْهُ مُصْفَرًّا لَّظَلُّوْا مِنْۢ بَعْدِهٖ يَكْفُرُوْنَ‏
وَلَٮِٕنْ اَرْسَلْنَا நாம் அனுப்பினால் رِيْحًا ஒரு காற்றை فَرَاَوْهُ அதை அவர்கள் பார்த்தால் مُصْفَرًّا மஞ்சளாக لَّظَلُّوْا ஆகிவிடுகின்றனர் مِنْۢ بَعْدِهٖ அதற்குப் பின்னர் يَكْفُرُوْنَ‏ நிராகரிக்கின்றவர்களாக
30:51. ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரணத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராகவே இருந்து விடுகின்றனர்.
30:52
30:52 فَاِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِيْنَ‏
فَاِنَّكَ ஆகவே நிச்சயமாக நீர் لَا تُسْمِعُ செவியுறச் செய்ய முடியாது الْمَوْتٰى இறந்தவர்களுக்கு وَلَا تُسْمِعُ இன்னும் நீர் செவியுறச் செய்ய முடியாது الصُّمَّ செவிடர்களுக்கு الدُّعَآءَ அழைப்பை اِذَا وَلَّوْا அவர்கள் திரும்பினால் مُدْبِرِيْنَ‏ புறமுதுகிட்டவர்களாக
30:52. ஆகவே, (நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது; (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது.
30:53
30:53 وَمَاۤ اَنْتَ بِهٰدِ الْعُمْىِ عَنْ ضَلٰلَتِهِمْ‌ؕ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ يُّؤْمِنُ بِاٰيٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ
وَمَاۤ اَنْتَ நீர் அல்லர் بِهٰدِ நேர்வழி செலுத்துபவர் الْعُمْىِ குருடர்களை عَنْ ضَلٰلَتِهِمْ‌ؕ அவர்களின் வழிகேட்டிலிருந்து اِنْ تُسْمِعُ நீர் செவியுறச் செய்ய முடியாது اِلَّا مَنْ يُّؤْمِنُ தவிர/நம்பிக்கை கொள்கின்றவர்கள் بِاٰيٰتِنَا நமது வசனங்களை فَهُمْ அவர்கள்தான் مُّسْلِمُوْنَ‏ முற்றிலும் கீழப்படிகிறவர்கள்
30:53. இன்னும், குருடர்களையும், அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புபவராகவும் நீர் இல்லை; முற்றிலும் வழிபட்டவர்களாக, நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்ய முடியாது.  
30:54
30:54 اَللّٰهُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْۢ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَيْبَةً  ‌ؕ يَخْلُقُ مَا يَشَآءُ ‌ۚ وَهُوَ الْعَلِيْمُ الْقَدِيْرُ‏
اَللّٰهُ الَّذِىْ அல்லாஹ்தான் خَلَقَكُمْ உங்களை படைத்தான் مِّنْ ضُؔعْفٍ பலவீனமான ஒன்றிலிருந்து ثُمَّ பிறகு جَعَلَ ஏற்படுத்தினான் مِنْۢ بَعْدِ பின்னர் ضُؔعْفٍ பலவீனத்திற்கு قُوَّةً பலத்தை ثُمَّ பிறகு جَعَلَ ஏற்படுத்தினான் مِنْۢ بَعْدِ பின்னர் قُوَّةٍ பலத்திற்கு ضُؔعْفًا பலவீனத்தையும் وَّشَيْبَةً  ؕ வயோதிகத்தையும் يَخْلُقُ அவன் படைக்கிறான் مَا يَشَآءُ ۚ தான் நாடுவதை وَهُوَ அவன்தான் الْعَلِيْمُ மிக்க அறிந்தவன் الْقَدِيْرُ‏ பேராற்றலுடையவன்
30:54. அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.
30:55
30:55 وَيَوْمَ تَقُوْمُ السَّاعَةُ يُقْسِمُ الْمُجْرِمُوْنَ ۙ مَا لَبِثُوْا غَيْرَ سَاعَةٍ ‌ؕ كَذٰلِكَ كَانُوْا يُؤْفَكُوْنَ‏
وَيَوْمَ நாளில் تَقُوْمُ நிகழ்கின்ற(து) السَّاعَةُ மறுமை நாள் يُقْسِمُ சத்தியம் செய்வார்கள் الْمُجْرِمُوْنَ ۙ குற்றவாளிகள் مَا لَبِثُوْا தாங்கள் தங்கவில்லை غَيْرَ سَاعَةٍ ؕ சில மணி நேரமே அன்றி كَذٰلِكَ இவ்வாறுதான் كَانُوْا இருந்தார்கள் يُؤْفَكُوْنَ‏ அவர்கள் பொய் சொல்பவர்களாக
30:55. அன்றியும், (நியாயத் தீர்ப்புக்குரிய) நாழிகை வரும் அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்க வில்லை என்று பிரமாணம் செய்வார்கள்; இவ்வாறு (இவ்வுலகிலும் உண்மையிலிருந்து) அவர்கள் திருப்பப்படுபவர்களாக இருந்தனர்.
30:56
30:56 وَقَالَ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ وَ الْاِيْمَانَ لَقَدْ لَبِثْـتُمْ فِىْ كِتٰبِ اللّٰهِ اِلٰى يَوْمِ الْبَـعْثِ فَهٰذَا يَوْمُ الْبَـعْثِ وَلٰـكِنَّكُمْ كُنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏
وَقَالَ கூறுவார்கள் الَّذِيْنَ اُوْتُوا கொடுக்கப்பட்டவர்கள் الْعِلْمَ கல்வி(யும்) وَ الْاِيْمَانَ ஈமானும் لَقَدْ திட்டவட்டமாக لَبِثْـتُمْ நீங்கள் தங்கினீர்கள் فِىْ كِتٰبِ விதிப்படி اللّٰهِ அல்லாஹ்வின் اِلٰى يَوْمِ நாள் வரை الْبَـعْثِ எழுப்பப்படுகின்ற فَهٰذَا இதோ يَوْمُ நாள் الْبَـعْثِ எழுப்பப்படுகின்ற وَلٰـكِنَّكُمْ என்றாலும் நீங்கள் كُنْـتُمْ இருந்தீர்கள் لَا تَعْلَمُوْنَ‏ அறியாதவர்களாக
30:56. ஆனால் எவர்களுக்கு இல்மும் (கல்வியும்) ஈமானும் (நம்பிக்கையும்) கொடுக்கப்பட்டதோ அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்வின் (குறிப்பு) ஏட்டில் உள்ளபடி நீங்கள் உயிர் பெற்றெழும் (இந்) நாள்வரையில் (பூமியில்) தங்கியிருந்தீர்கள்! (மரித்தோர்) உயிர் பெற்று எழும் நாள் இது; நீங்கள் நிச்சயமாக (இதனை) அறிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்.”
30:57
30:57 فَيَوْمَٮِٕذٍ لَّا يَنْفَعُ الَّذِيْنَ ظَلَمُوْا مَعْذِرَتُهُمْ وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ‏
فَيَوْمَٮِٕذٍ அந்நாளில் لَّا يَنْفَعُ பலனளிக்காது الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்களுக்கு مَعْذِرَتُهُمْ அவர்களின் மன்னிப்புக் கோருதல் وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ‏ திருப்திபடுத்துகின்ற செயல்களை செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கூறப்படாது
30:57. ஆகவே, அந்நாளில், அநியாயம் செய்தவர்களுக்கு, அவர்கள் (கூறும்) புகல்கள் ஒரு பயனும் தரா; அன்றி, அவர்கள் (அல்லாஹ்வைத்) திருப்தி செய்யவும் முடியாது.
30:58
30:58 وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِىْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ‌ؕ وَلَٮِٕنْ جِئْتَهُمْ بِاٰيَةٍ لَّيَقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا مُبْطِلُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக ضَرَبْنَا விவரித்துள்ளோம் لِلنَّاسِ மக்களுக்கு فِىْ هٰذَا இந்த الْقُرْاٰنِ குர்ஆனில் مِنْ كُلِّ எல்லா مَثَلٍ‌ؕ உதாரணங்களையும் وَلَٮِٕنْ جِئْتَهُمْ நீர் அவர்களிடம் வந்தால் بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியைக் கொண்டு لَّيَقُوْلَنَّ திட்டமாக கூறுவார்கள் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اِنْ اَنْتُمْ நீங்கள் இல்லை اِلَّا தவிர مُبْطِلُوْنَ‏ பொய்யர்களே
30:58. திடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம்; ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும்: “நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை” என்று நிராகரிப்போர் நிச்சயமாக கூறுவார்கள்.
30:59
30:59 كَذٰلِكَ يَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏
كَذٰلِكَ இவ்வாறுதான் يَطْبَعُ முத்திரையிட்டு விடுகின்றான் اللّٰهُ அல்லாஹ் عَلٰى قُلُوْبِ உள்ளங்களில் الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏ அறியாதவர்களின்
30:59. அவ்வாறே, இந்த அறிவில்லாதவர்களின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
30:60
30:60 فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ‌ وَّلَا يَسْتَخِفَّنَّكَ الَّذِيْنَ لَا يُوْقِنُوْنَ
فَاصْبِرْ ஆகவே, பொறுமையாக இருப்பீராக! اِنَّ நிச்சயமாக وَعْدَ வாக்கு اللّٰهِ அல்லாஹ்வுடைய حَقٌّ‌ உண்மையானதே! وَّلَا يَسْتَخِفَّنَّكَ உம்மை இலேசாக கருதிவிட வேண்டாம் الَّذِيْنَ لَا يُوْقِنُوْنَ‏ உறுதிகொள்ளாதவர்கள்
30:60. ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம்.