32. ஸூரத்துஸ் ஸஜ்தா (சிரம் பணிதல்)
மக்கீ, வசனங்கள்: 30

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
32:1
32:1 الٓمّٓ‏
الٓمّٓ‏ அலிஃப், லாம், மீம்
32:1. அலிஃப், லாம், மீம்.
32:2
32:2 تَنْزِيْلُ الْكِتٰبِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِيْنَؕ
ۚ تَنْزِيْلُ இறக்கப்பட்ட الْكِتٰبِ வேதமாகும் لَا رَيْبَ அறவே சந்தேகம் இல்லை فِيْهِ இதில் مِنْ رَّبِّ இறைவனிடமிருந்து الْعٰلَمِيْنَؕ‏ அகிலங்களின்
32:2. அகிலங்களின் இறைவனிடம் இருந்து அருளப்பட்டுள்ளது - இவ்வேதம் என்பதில் சந்தேகமில்லை.
32:3
32:3 اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰٮهُ‌ۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰٮهُمْ مِّنْ نَّذِيْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏
اَمْ يَقُوْلُوْنَ அல்லது கூறுகிறார்களா? افْتَرٰٮهُ‌ۚ இதை அவர் இட்டுக் கட்டினார் என்று بَلْ மாறாக هُوَ இதுதான் الْحَقُّ உண்மையா(ன வேதமா)கும் مِنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து لِتُنْذِرَ நீர் எச்சரிப்பதற்காக قَوْمًا ஒரு சமுதாயத்தை مَّاۤ اَتٰٮهُمْ அவர்களிடம் வராத مِّنْ نَّذِيْرٍ எச்சரிப்பவர் எவரும் مِّنْ قَبْلِكَ இதற்கு முன்னர் لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏ அவர்கள் நேர்வழி பெறுவதற்காக
32:3. ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல! எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).
32:4
32:4 اَللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ‌ؕ مَا لَكُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِىٍّ وَّلَا شَفِيْعٍ‌ؕ اَفَلَا تَتَذَكَّرُوْنَ‏
اَللّٰهُ الَّذِىْ அல்லாஹ்தான் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَا அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் فِىْ سِتَّةِ اَيَّامٍ ஆறு நாட்களில் ثُمَّ பிறகு اسْتَوٰى உயர்ந்தான் عَلَى الْعَرْشِ‌ؕ அர்ஷின் மீது مَا لَكُمْ உங்களுக்கு இல்லை مِّنْ دُوْنِهٖ அவனையன்றி مِنْ وَّلِىٍّ பொருப்பாளரோ وَّلَا شَفِيْعٍ‌ؕ பரிந்துறையாளரோ اَفَلَا تَتَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா ?
32:4. அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?
32:5
32:5 يُدَبِّرُ الْاَمْرَ مِنَ السَّمَآءِ اِلَى الْاَرْضِ ثُمَّ يَعْرُجُ اِلَيْهِ فِىْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗۤ اَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ‏
يُدَبِّرُ அவன் திட்டமிட்டு நிர்வகிக்கின்றான் الْاَمْرَ காரியத்தை مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து اِلَى الْاَرْضِ பூமி வரை ثُمَّ பிறகு يَعْرُجُ அது உயருகிறது اِلَيْهِ அவன் பக்கம் فِىْ يَوْمٍ ஒரு நாளில் كَانَ இருக்கிறது مِقْدَارُهٗۤ அதன் அளவு اَلْفَ ஆயிரம் سَنَةٍ ஆண்டுகளாக مِّمَّا تَعُدُّوْنَ‏ நீங்கள் எண்ணுகின்றபடி
32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.
32:6
32:6 ذٰلِكَ عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيْزُ الرَّحِيْمُۙ‏
ذٰلِكَ அவன்தான் عٰلِمُ அறிந்தவன் الْغَيْبِ மறைவானதை(யும்) وَالشَّهَادَةِ தெரிவதையும் الْعَزِيْزُ மிகைத்தவன் الرَّحِيْمُۙ‏ மகா கருணையாளன்
32:6. அவனே மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன்; (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன்; அன்புடையோன்.
32:7
32:7 الَّذِىْۤ اَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهٗ‌ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِيْنٍ‌ۚ‏
الَّذِىْۤ اَحْسَنَ அவன் செம்மையாக்கினான் كُلَّ شَىْءٍ ஒவ்வொன்றையும் خَلَقَهٗ‌ அதைப் படைத்தான் وَبَدَاَ இன்னும் ஆரம்பித்தான் خَلْقَ படைப்பதை الْاِنْسَانِ மனிதனை مِنْ طِيْنٍ‌ۚ‏ களிமண்ணிலிருந்து
32:7. அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
32:8
32:8 ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّآءٍ مَّهِيْنٍ‌ۚ‏
ثُمَّ பிறகு جَعَلَ உருவாக்கினான் نَسْلَهٗ அவனது சந்ததிகளை مِنْ سُلٰلَةٍ வெளியேறக்கூடிய நீரிலிருந்து مِّنْ مَّآءٍ நீரிலிருந்து مَّهِيْنٍ‌ۚ‏ மென்மையான
32:8. பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.
32:9
32:9 ثُمَّ سَوّٰٮهُ وَنَفَخَ فِيْهِ مِنْ رُّوْحِهٖ‌ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـــِٕدَةَ ‌ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏
ثُمَّ பிறகு سَوّٰٮهُ அவனை சமமாக்கினான் وَنَفَخَ இன்னும் ஊதினான் فِيْهِ அவனில் مِنْ رُّوْحِهٖ‌ தனது உயிரிலிருந்து وَجَعَلَ இன்னும் அவன் அமைத்தான் لَكُمُ உங்களுக்கு السَّمْعَ செவியை(யும்) وَالْاَبْصَارَ பார்வைகளையும் وَالْاَفْـــِٕدَةَ ؕ இதயங்களையும் قَلِيْلًا குறைவாகவே مَّا تَشْكُرُوْنَ‏ நன்றி செலுத்துகின்றீர்கள்
32:9. பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.
32:10
32:10 وَقَالُوْٓا ءَاِذَا ضَلَلْنَا فِى الْاَرْضِ ءَاِنَّا لَفِىْ خَلْقٍ جَدِيْدٍ ؕ ‌بَلْ هُمْ بِلِقَآءِ رَبِّهِمْ كٰفِرُوْنَ‏
وَقَالُوْٓا அவர்கள் கூறுகின்றனர் ءَاِذَا ضَلَلْنَا நாங்கள் மறைந்து விட்டால் فِى الْاَرْضِ பூமியில் ءَاِنَّا ?/நிச்சயமாக நாங்கள் لَفِىْ خَلْقٍ படைப்பில் (படைக்கப்படுவோமா) جَدِيْدٍ ؕ புதிய بَلْ هُمْ மாறாக/அவர்கள் بِلِقَآءِ சந்திப்பை رَبِّهِمْ தங்கள் இறைவனின் كٰفِرُوْنَ‏ நிராகரிக்கின்றவர்கள்
32:10. “நாம் பூமியில் அழிந்து போய் விடுவோமாயின் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாவோமா?” எனவும் அவர்கள் கூறுகின்றனர்; ஏனெனில் அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையே நிராகரிப்போராய் இருக்கிறார்கள்.
32:11
32:11 قُلْ يَتَوَفّٰٮكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِىْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ
قُلْ கூறுவீராக! يَتَوَفّٰٮكُمْ உங்களை உயிர் கைப்பற்றுவார் مَّلَكُ الْمَوْتِ மலக்குல் மவுத் الَّذِىْ எவர் وُكِّلَ நியமிக்கப்பட்டார் بِكُمْ உங்களுக்கு ثُمَّ பிறகு اِلٰى رَبِّكُمْ உங்கள் இறைவனிடம் تُرْجَعُوْنَ‏ திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
32:11. “உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  
32:12
32:12 وَلَوْ تَرٰٓى اِذِ الْمُجْرِمُوْنَ نَاكِسُوْا رُءُوْسِهِمْ عِنْدَ رَبِّهِمْ رَبَّنَاۤ اَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًـا اِنَّا مُوْقِنُوْنَ‏
وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذِ சமயத்தை الْمُجْرِمُوْنَ குற்றவாளிகள் نَاكِسُوْا தாழ்த்தியவர்களாக رُءُوْسِهِمْ தங்கள் தலைகளை عِنْدَ رَبِّهِمْ தங்கள் இறைவனிடம் رَبَّنَاۤ எங்கள் இறைவா! اَبْصَرْنَا நாங்கள் பார்த்தோம் وَسَمِعْنَا இன்னும் நாங்கள் செவிமடுத்தோம் فَارْجِعْنَا ஆகவே, எங்களை திரும்ப அனுப்பு! نَعْمَلْ நாங்கள் செய்வோம் صَالِحًـا நற்செயல்களை اِنَّا مُوْقِنُوْنَ‏ நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம்
32:12. மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், “எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை; நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்” என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).
32:13
32:13 وَ لَوْ شِئْنَا لَاٰتَيْنَا كُلَّ نَفْسٍ هُدٰٮهَا وَلٰـكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّىْ لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ‏
وَ لَوْ شِئْنَا நாம் நாடியிருந்தால் لَاٰتَيْنَا கொடுத்திருப்போம் كُلَّ எல்லா نَفْسٍ ஆன்மாவிற்கும் هُدٰٮهَا அதற்குரிய நேர்வழியை وَلٰـكِنْ எனினும் حَقَّ உறுதியாகி விட்டது الْقَوْلُ வாக்கு مِنِّىْ என்னிடமிருந்து لَاَمْلَئَنَّ நிச்சயமாக நான் நிரப்புவேன் جَهَنَّمَ நரகத்தை مِنَ الْجِنَّةِ ஜின்களில் இருந்து(ம்) وَالنَّاسِ இன்னும் மனிதர்கள் اَجْمَعِيْنَ‏ அனைவரிலிருந்தும்
32:13. மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.
32:14
32:14 فَذُوْقُوْا بِمَا نَسِيْتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا‌ ۚ اِنَّا نَسِيْنٰكُمْ‌ وَذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
فَذُوْقُوْا சுவையுங்கள்! بِمَا نَسِيْتُمْ நீங்கள் மறந்த காரணத்தால் لِقَآءَ சந்திப்பை يَوْمِكُمْ உங்கள் நாளின் هٰذَا‌ ۚ இந்த اِنَّا நிச்சயமாக நாம் نَسِيْنٰكُمْ‌ உங்களை மறந்து விட்டோம் وَذُوْقُوْا இன்னும் சுவையுங்கள்! عَذَابَ வேதனையை الْخُلْدِ நிரந்தரமான بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றின் காரணமாக
32:14. ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததின் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் உங்களை மறந்து விட்டோம்; மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
32:15
32:15 اِنَّمَا يُؤْمِنُ بِاٰيٰتِنَا الَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِهَا خَرُّوْا سُجَّدًا وَّسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ۩
اِنَّمَا يُؤْمِنُ நம்பிக்கை கொள்பவர்கள் எல்லாம் بِاٰيٰتِنَا நமது வசனங்களை الَّذِيْنَ எவர்கள் اِذَا ذُكِّرُوْا அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் بِهَا அவற்றின் மூலம் خَرُّوْا வீழ்ந்து விடுவார்கள் سُجَّدًا சிரம் பணிந்தவர்களாக وَّسَبَّحُوْا இன்னும் துதிப்பார்கள் بِحَمْدِ புகழ்ந்து رَبِّهِمْ தங்கள் இறைவனை وَهُمْ இன்னும் அவர்கள் لَا يَسْتَكْبِرُوْنَ۩‏ பெருமையடிக்க மாட்டார்கள்
32:15. நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.
32:16
32:16 تَتَجَافٰى جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًا وَّمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ‏
تَتَجَافٰى தூரமாக இருக்கும் جُنُوْبُهُمْ அவர்களின் விலாக்கள் عَنِ الْمَضَاجِعِ படுக்கைகளை விட்டு يَدْعُوْنَ வணங்குவார்கள் رَبَّهُمْ தங்கள் இறைவனை خَوْفًا பய(த்துடனு)ம் وَّطَمَعًا ஆசையுடனும் وَّمِمَّا رَزَقْنٰهُمْ இன்னும் நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து يُنْفِقُوْنَ‏ தர்மம் செய்வார்கள்
32:16. அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.
32:17
32:17 فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِىَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْيُنٍ‌ۚ جَزَآءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
فَلَا تَعْلَمُ அறியாது نَفْسٌ எந்த ஓர் ஆன்மாவும் مَّاۤ اُخْفِىَ மறைத்து வைக்கப்பட்டுள்ளதை لَهُمْ அவர்களுக்காக مِّنْ قُرَّةِ குளிர்ச்சியான اَعْيُنٍ‌ۚ கண்களுக்கு جَزَآءًۢ கூலியாக بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
32:17. அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.
32:18
32:18 اَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا‌ ؕ لَا يَسْتَوٗنَؔ‏
اَفَمَنْ كَانَ ?/இருக்கின்றவர் مُؤْمِنًا நம்பிக்கையாளராக كَمَنْ كَانَ இருக்கின்றவரைப் போன்று فَاسِقًا‌ ؕ பாவியாக لَا يَسْتَوٗنَؔ‏ அவர்கள் சமமாக மாட்டார்கள்
32:18. எனவே, (அத்தகைய) முஃமினானவர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாக மாட்டார்கள்.
32:19
32:19 اَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ جَنّٰتُ الْمَاْوٰى نُزُلًاۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
اَمَّا ஆக, الَّذِيْنَ اٰمَنُوْا எவர்கள்/நம்பிக்கை கொண்டார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நன்மைகளை فَلَهُمْ அவர்களுக்கு جَنّٰتُ சொர்க்கங்கள் الْمَاْوٰى தங்குமிடம் نُزُلًاۢ விருந்தோம்பலாக بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு
32:19. எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)கருமங்களின் காரணமாக சுவனபதிகள் தங்குமிடங்களாகி (அங்கு அவர்கள்) விருந்தினராய் (உபசரிக்கப்படுவார்கள்).
32:20
32:20 وَاَمَّا الَّذِيْنَ فَسَقُوْا فَمَاْوٰٮهُمُ النَّارُ‌ؕ كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ يَّخْرُجُوْا مِنْهَاۤ اُعِيْدُوْا فِيْهَا وَ قِيْلَ لَهُمْ ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ‏
وَاَمَّا ஆக الَّذِيْنَ فَسَقُوْا பாவம் செய்தவர்கள் فَمَاْوٰٮهُمُ அவர்களின் தங்குமிடம் النَّارُ‌ؕ நரகமாகும் كُلَّمَاۤ اَرَادُوْۤا அவர்கள் நாடும்போதெல்லாம் اَنْ يَّخْرُجُوْا அவர்கள் வெளியேறுவதற்கு مِنْهَاۤ அதிலிருந்து اُعِيْدُوْا அவர்கள் திரும்பக் கொண்டுவரப்படுவார்கள் فِيْهَا அதில் وَ قِيْلَ இன்னும் சொல்லப்படும் لَهُمْ அவர்களுக்கு ذُوْقُوْا சுவையுங்கள் عَذَابَ வேதனையை النَّارِ நரக الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ‏ நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த
32:20. ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
32:21
32:21 وَلَنُذِیْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰى دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏
وَلَنُذِیْقَنَّهُمْ அவர்களுக்கு நிச்சயமாக நாம் சுவைக்க வைப்போம். مِّنَ الْعَذَابِ வேதனையை الْاَدْنٰى சிறிய دُوْنَ الْعَذَابِ வேதனைக்கு முன்னர் الْاَكْبَرِ மிகப் பெரிய لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ அவர்கள் திரும்புவதற்காக
32:21. மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்.
32:22
32:22 وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰيٰتِ رَبِّهٖ ثُمَّ اَعْرَضَ عَنْهَا ‌ؕ اِنَّا مِنَ الْمُجْرِمِيْنَ مُنْتَقِمُوْنَ
وَمَنْ யார்? اَظْلَمُ பெரியஅநியாயக்காரன் مِمَّنْ ஒருவனைவிட ذُكِّرَ அறிவுரை கூறப்பட்டான் بِاٰيٰتِ வசனங்களினால் رَبِّهٖ தனது இறைவனின் ثُمَّ பிறகு اَعْرَضَ புறக்கணித்தான் عَنْهَا ؕ அவற்றை اِنَّا நிச்சயமாக நாம் مِنَ الْمُجْرِمِيْنَ குற்றவாளிகளிடம் مُنْتَقِمُوْنَ‏ பழிவாங்குவோம்
32:22. எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.
32:23
32:23 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَلَا تَكُنْ فِىْ مِرْيَةٍ مِّنْ لِّقَآٮِٕهٖ‌ وَجَعَلْنٰهُ هُدًى لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَۚ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْكِتٰبَ வேதத்தை فَلَا تَكُنْ ஆகவே, நீர் இருக்க வேண்டாம் فِىْ مِرْيَةٍ சந்தேகத்தில் مِّنْ لِّقَآٮِٕهٖ‌ அவரை சந்திப்பதில் وَجَعَلْنٰهُ இன்னும் அதை ஆக்கினோம் هُدًى நேர்வழியாக لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَۚ‏ இஸ்ரவேலர்களுக்கு
32:23. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (அவ்) வேதத்தைக் கொடுத்தோம். எனவே, அவர் அதைப் பெற்றதைப்பற்றி சந்தேகப்படாதீர்; நாம் இதனை இஸ்ராயீலின் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.
32:24
32:24 وَ جَعَلْنَا مِنْهُمْ اَٮِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا لَمَّا صَبَرُوْا‌ ؕ وَ كَانُوْا بِاٰيٰتِنَا يُوْقِنُوْنَ‏
وَ جَعَلْنَا இன்னும் உருவாக்கினோம் مِنْهُمْ அவர்களில் اَٮِٕمَّةً தலைவர்களை يَّهْدُوْنَ நேர்வழி காட்டுகின்றனர் بِاَمْرِنَا நமது கட்டளையின்படி لَمَّا صَبَرُوْا‌ ؕ அவர்கள் பொறுமையாக இருந்தபோது وَ كَانُوْا இன்னும் அவர்கள் இருந்தனர் بِاٰيٰتِنَا நமது வசனங்களை يُوْقِنُوْنَ‏ உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக
32:24. இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை - இமாம்களை - அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.
32:25
32:25 اِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏
اِنَّ நிச்சயமாக رَبَّكَ هُوَ உமது இறைவன்தான் يَفْصِلُ தீர்ப்பளிப்பான் بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் فِيْمَا எதில் كَانُوْا இருந்தார்களோ فِيْهِ அதில் يَخْتَلِفُوْنَ‏ அவர்கள் கருத்து வேறுபட்டவர்களாக
32:25. அவர்கள் எ(வ்விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டார்களோ, (அதுபற்றி) கியாம நாளில் உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வான்.
32:26
32:26 اَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنَ الْقُرُوْنِ يَمْشُوْنَ فِىْ مَسٰكِنِهِمْ‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ ؕ اَفَلَا يَسْمَعُوْنَ‏
اَوَلَمْ يَهْدِ தெளிவுபடுத்தவில்லையா? لَهُمْ அவர்களுக்கு كَمْ எத்தனையோ اَهْلَكْنَا நாம் அழித்தது مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னர் مِّنَ الْقُرُوْنِ பல தலை முறையினர்களை يَمْشُوْنَ சுற்றித் திரிந்தனர் فِىْ مَسٰكِنِهِمْ‌ ؕ தங்கள் வசிப்பிடங்களில் اِنَّ فِىْ ذٰ لِكَ நிச்சயமாக இதில் உள்ளன لَاٰيٰتٍ ؕ பல அத்தாட்சிகள் اَفَلَا يَسْمَعُوْنَ‏ அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?
32:26. இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும், அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும், இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா? நிச்சயமாக இதில் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கு) இவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?
32:27
32:27 اَوَلَمْ يَرَوْا اَنَّا نَسُوْقُ الْمَآءَ اِلَى الْاَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهٖ زَرْعًا تَاْكُلُ مِنْهُ اَنْعَامُهُمْ وَاَنْفُسُهُمْ‌ؕ اَفَلَا يُبْصِرُوْنَ‏
اَوَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اَنَّا நிச்சயமாக நாம் نَسُوْقُ ஓட்டிவருகிறோம் الْمَآءَ மழை நீரை اِلَى الْاَرْضِ பூமிக்கு الْجُرُزِ காய்ந்த(து) فَنُخْرِجُ உற்பத்தி செய்கிறோம் بِهٖ அதன் மூலம் زَرْعًا விளைச்சலை تَاْكُلُ مِنْهُ சாப்பிடுகின்றன/அதில் اَنْعَامُهُمْ அவர்களின் கால்நடைகளும் وَاَنْفُسُهُمْ‌ؕ அவர்களும் اَفَلَا يُبْصِرُوْنَ‏ அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?
32:27. அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?
32:28
32:28 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْفَتْحُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ அவர்கள் கூறுகின்றனர் مَتٰى எப்போது هٰذَا இந்த الْفَتْحُ தீர்ப்பு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
32:28. “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வாக்களிக்கப்பட்ட) அந்த வெற்றித் (தீர்ப்பு நாள்) எப்பொழுது (வரும்)?” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
32:29
32:29 قُلْ يَوْمَ الْفَتْحِ لَا يَنْفَعُ الَّذِيْنَ كَفَرُوْۤا اِيْمَانُهُمْ وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏
قُلْ கூறுவீராக! يَوْمَ நாளில் الْفَتْحِ தீர்ப்பு لَا يَنْفَعُ பலனளிக்காது الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பவர்களுக்கு اِيْمَانُهُمْ அவர்களது ஈமான் وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏ இன்னும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்
32:29. “அந்த வெற்றி(த் தீர்ப்பு) நாளின் போது நிராகரிப்போர், நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு பயன் அளிக்காது - அவர்களுக்குத் தவணையும் கொடுக்கப்பட மாட்டாது.
32:30
32:30 فَاَعْرِضْ عَنْهُمْ وَانْتَظِرْ اِنَّهُمْ مُّنْتَظِرُوْنَ
فَاَعْرِضْ ஆகவே, நீர் புறக்கணிப்பீராக! عَنْهُمْ அவர்களை وَانْتَظِرْ இன்னும் எதிர்பார்த்திருப்பீராக! اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مُّنْتَظِرُوْنَ‏ எதிர்பார்ப்பவர்கள்தான்
32:30. ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்ப்பீராக! நிச்சயமாக அவர்களும் அதை எதிர்பார்ப்பவர்கள் தாம்.