24. ஸூரத்துந் நூர் (பேரொளி)
மதனீ, வசனங்கள்: 64

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
24:1
24:1 سُوْرَةٌ اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِيْهَاۤ اٰيٰتٍۭ بَيِّنٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏
سُوْرَةٌ இது ஒரு அத்தியாயமாகும் اَنْزَلْنٰهَا இதை நாம் இறக்கினோம் وَفَرَضْنٰهَا இதை நாம் கடமையாக்கினோம் وَاَنْزَلْنَا இன்னும் நாம் இறக்கினோம் فِيْهَاۤ இதில் اٰيٰتٍۭ அத்தாட்சிகளை بَيِّنٰتٍ தெளிவான لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக
24:1. (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.
24:2
24:2 اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ‌وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ‏
اَلزَّانِيَةُ விபச்சாரி وَالزَّانِىْ இன்னும் விபசாரன் فَاجْلِدُوْا அடியுங்கள் كُلَّ وَاحِدٍ ஒவ்வொருவரையும் مِّنْهُمَا அவ்விருவரில் مِائَةَ நூறு جَلْدَةٍ அடி ‌وَّلَا تَاْخُذْ பிடித்துவிட வேண்டாம் كُمْ உங்களை بِهِمَا அந்த இருவர் மீது رَاْفَةٌ இரக்கம் فِىْ دِيْنِ மார்க்கத்தில் اللّٰهِ அல்லாஹ்வின் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تُؤْمِنُوْنَ நம்பிக்கை கொண்டவர்களாக بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَالْيَوْمِ الْاٰخِرِ‌ۚ மறுமை நாளையும் وَلْيَشْهَدْ ஆஜராகட்டும் عَذَابَهُمَا அவ்விருவரின் தண்டனைக்கு طَآٮِٕفَةٌ ஒரு கூட்டம் مِّنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களில்
24:2. விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
24:3
24:3 اَلزَّانِىْ لَا يَنْكِحُ اِلَّا زَانِيَةً اَوْ مُشْرِكَةً  وَّ الزَّانِيَةُ لَا يَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ‌ ۚ وَحُرِّمَ ذٰ لِكَ عَلَى الْمُؤْمِنِيْنَ‏
اَلزَّانِىْ ஒரு விபசாரன் لَا يَنْكِحُ உ(டலு)றவு வைக்க மாட்டான் اِلَّا زَانِيَةً தவிர/ஒரு விபசாரி اَوْ அல்லது مُشْرِكَةً  இணைவைப்பவள் وَّ الزَّانِيَةُ இன்னும் விபசாரி لَا يَنْكِحُهَاۤ அவளுடன் உ(டலு)றவு வைக்கமாட்டான் اِلَّا தவிர زَانٍ ஒரு விபசாரன் اَوْ அல்லது مُشْرِكٌ‌ ۚ இணைவைப்பவன் وَحُرِّمَ தடுக்கப்பட்டுள்ளது ذٰ لِكَ இது عَلَى الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
24:3. விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.
24:4
24:4 وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌ ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏
وَالَّذِيْنَ எவர்கள் يَرْمُوْنَ ஏசுவார்களோ الْمُحْصَنٰتِ பத்தினிகளை ثُمَّ பிறகு لَمْ يَاْتُوْا அவர்கள் கொண்டுவரவில்லை என்றால் بِاَرْبَعَةِ நான்கு شُهَدَآءَ சாட்சிகளை فَاجْلِدُوْ அடியுங்கள் هُمْ அவர்களை ثَمٰنِيْنَ எண்பது جَلْدَةً அடி وَّلَا تَقْبَلُوْا ஏற்காதீர்கள் لَهُمْ அவர்களின் شَهَادَةً சாட்சியத்தை اَبَدًا‌ ۚ ஒருபோதும் وَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْفٰسِقُوْنَ ۙ‏ பாவிகள்
24:4. எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
24:5
24:5 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا‌ۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
اِلَّا தவிர الَّذِيْنَ எவர்கள் تَابُوْا திருந்தினார்கள் مِنْۢ بَعْدِ பின்னர் ذٰلِكَ அதற்குப் وَاَصْلَحُوْا‌ۚ இன்னும் சீர்படுத்திக் கொண்டார்கள் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
24:5. எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
24:6
24:6 وَالَّذِيْنَ يَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ يَكُنْ لَّهُمْ شُهَدَآءُ اِلَّاۤ اَنْفُسُهُمْ فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهٰدٰتٍۭ بِاللّٰهِ‌ۙ اِنَّهٗ لَمِنَ الصّٰدِقِيْنَ‏
وَالَّذِيْنَ எவர்கள் يَرْمُوْنَ ஏசுகிறார்களோ اَزْوَاجَهُمْ தங்களது மனைவிகளை وَلَمْ يَكُنْ இல்லையோ لَّهُمْ அவர்களிடம் شُهَدَآءُ சாட்சிகள் اِلَّاۤ தவிர اَنْفُسُهُمْ அவர்களை فَشَهَادَةُ சாட்சிகள் சொல்ல வேண்டும் اَحَدِهِمْ அவர்களில் ஒருவர் اَرْبَعُ شَهٰدٰتٍۭ நான்கு முறை சாட்சி சொல்வது بِاللّٰهِ‌ۙ அல்லாஹ்வின் மீது சத்தியமாக اِنَّهٗ நிச்சயமாக தான் لَمِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மை கூறுபவர்களில்
24:6. எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:
24:7
24:7 وَالْخَـامِسَةُ اَنَّ لَـعْنَتَ اللّٰهِ عَلَيْهِ اِنْ كَانَ مِنَ الْكٰذِبِيْنَ‏
وَالْخَـامِسَةُ ஐந்தாவது முறை اَنَّ நிச்சயமாக لَـعْنَتَ சாபம் உண்டாகட்டும் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْهِ தன் மீது اِنْ كَانَ ஒருவனாக இருந்தால் مِنَ الْكٰذِبِيْنَ‏ பொய் கூறுபவர்களில்
24:7. ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).
24:8
24:8 وَيَدْرَؤُا عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ‌ۙ اِنَّهٗ لَمِنَ الْكٰذِبِيْنَۙ‏
وَيَدْرَؤُا தடுக்கும் عَنْهَا அவளை விட்டும் الْعَذَابَ தண்டனையை اَنْ تَشْهَدَ அவள் சாட்சி சொல்வது اَرْبَعَ شَهٰدٰتٍۢ நான்கு முறை சாட்சி சொல்வது بِاللّٰهِ‌ۙ அல்லாஹ்வின் மீது சத்தியமாக اِنَّهٗ நிச்சயமாக அவர் لَمِنَ الْكٰذِبِيْنَۙ‏ பொய் கூறுபவர்களில் உள்ளவர்
24:8. இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:
24:9
24:9 وَالْخَـامِسَةَ اَنَّ غَضَبَ اللّٰهِ عَلَيْهَاۤ اِنْ كَانَ مِنَ الصّٰدِقِيْنَ‏
وَالْخَـامِسَةَ ஐந்தாவது முறை اَنَّ நிச்சயமாக غَضَبَ சாபம் உண்டாகட்டும் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْهَاۤ தன் மீது اِنْ كَانَ அவர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ‏ உண்மை கூறுபவர்களில்
24:9. ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).
24:10
24:10 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِيْمٌ
وَلَوْلَا فَضْلُ அருளும் இல்லாதிருந்தால் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது وَرَحْمَتُهٗ இன்னும் அவனது கருணையும் وَاَنَّ இன்னும் நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் تَوَّابٌ பிழை பொறுப்பவனாகவும் حَكِيْمٌ‏ ஞானவானாகவும்
24:10. இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
24:11
24:11 اِنَّ الَّذِيْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ‌ ؕ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّـكُمْ‌ ؕ بَلْ هُوَ خَيْرٌ لَّـكُمْ‌ ؕ لِكُلِّ امْرِىٴٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ‌ ۚ وَالَّذِىْ تَوَلّٰى كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் جَآءُوْ بِالْاِفْكِ இட்டுக்கட்டியவர்கள் عُصْبَةٌ ஒரு குழுவினர்தான் مِّنْكُمْ‌ ؕ உங்களில் உள்ள لَا تَحْسَبُوْهُ அதை கருதாதீர்கள் شَرًّا தீமையாக لَّـكُمْ‌ ؕ உங்களுக்கு بَلْ மாறாக هُوَ அது خَيْرٌ நன்மைதான் لَّـكُمْ‌ ؕ உங்களுக்கு لِكُلِّ امْرِىٴٍ ஒவ்வொருவருக்கும் مِّنْهُمْ அவர்களில் مَّا اكْتَسَبَ அவர் செய்தது مِنَ الْاِثْمِ‌ ۚ பாவத்தில் وَالَّذِىْ تَوَلّٰى செய்தவர்கள் كِبْرَهٗ பெரியதை مِنْهُمْ அதில் لَهٗ அவருக்கு عَذَابٌ தண்டனை உண்டு عَظِيْمٌ‏ பெரும்
24:11. எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.
24:12
24:12 لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏
لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ நீங்கள் அதைக் கேட்டபோது ظَنَّ எண்ணியிருக்க الْمُؤْمِنُوْنَ நம்பிக்கை கொண்ட ஆண்களும் وَالْمُؤْمِنٰتُ நம்பிக்கை கொண்ட பெண்களும் بِاَنْفُسِهِمْ தங்களைப் பற்றி خَيْرًاۙ நல்லதை وَّقَالُوْا இன்னும் அவர்கள் சொல்லியிருக்க வேண்டாமா هٰذَاۤ இது اِفْكٌ இட்டுக்கட்டு مُّبِيْنٌ‏ தெளிவான
24:12. முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?
24:13
24:13 لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌ ۚ فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْـكٰذِبُوْنَ‏
لَوْلَا جَآءُوْ கொண்டு வந்திருக்க வேண்டாமா! عَلَيْهِ அதற்கு بِاَرْبَعَةِ நான்கு شُهَدَآءَ‌ ۚ சாட்சிகளை فَاِذْ لَمْ يَاْتُوْا ஆகவே அவர்கள் வராததால் بِالشُّهَدَآءِ சாட்சிகளைக்கொண்டு فَاُولٰٓٮِٕكَ அவர்கள்தான் عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் هُمُ அவர்கள்தான் الْـكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்
24:13. அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.
24:14
24:14 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِىْ مَاۤ اَفَضْتُمْ فِيْهِ عَذَابٌ عَظِيْمٌ‌ ۖ‌ ۚ‏
وَلَوْلَا فَضْلُ அருளும் இல்லாதிருந்தால் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَيْكُمْ உங்கள் மீது وَرَحْمَتُهٗ கருணையும் فِى الدُّنْيَا இம்மையிலும் وَالْاٰخِرَةِ மறுமையிலும் لَمَسَّكُمْ உங்களுக்கு கிடைத்திருக்கும் فِىْ مَاۤ اَفَضْتُمْ فِيْهِ நீங்கள் ஈடுபட்ட விஷயத்தில் عَذَابٌ عَظِيْمٌ‌ ۖ‌ ۚ‏ பெரிய தண்டனை
24:14. இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
24:15
24:15 اِذْ تَلَـقَّوْنَهٗ بِاَ لْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَ فْوَاهِكُمْ مَّا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَيِّنًا ‌ ۖ  وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِيْمٌ‏
اِذْ ஏனெனில் تَلَـقَّوْنَهٗ அதை உங்களுக்குள் அறிவித்துக் கொண்டீர்கள் بِاَ لْسِنَتِكُمْ நீங்கள்உங்கள் நாவுகளால் وَتَقُوْلُوْنَ இன்னும் அதை கூறுகிறீர்கள் بِاَ فْوَاهِكُمْ உங்கள் வாய்களால் مَّا எதைப் பற்றி لَـيْسَ لَـكُمْ உங்களுக்கு இல்லையோ بِهٖ அதைக் கொண்டு عِلْمٌ அறிவு وَّتَحْسَبُوْنَهٗ அதை கருதுகிறீர்கள் هَيِّنًا ۖ மிக இலகுவாக  وَّهُوَ அதுவோ இருக்கிறது عِنْدَ اللّٰهِ அல்லாஹ்விடம் عَظِيْمٌ‏ மிகப்பெரியதாக
24:15. இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.
24:16
24:16 وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ‌ۖ  سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ‏
وَ لَوْلَاۤ வேண்டாமா اِذْ سَمِعْتُمُوْهُ அதை நீங்கள் கேட்டபோது قُلْتُمْ நீங்கள் சொல்லியிருக்க مَّا يَكُوْنُ தகாது لَـنَاۤ எங்களுக்கு اَنْ نَّـتَكَلَّمَ நாங்கள் பேசுவது بِهٰذَ ا இதை ۖ  سُبْحٰنَكَ هٰذَا அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன் / இது بُهْتَانٌ அபாண்டமான பேச்சு عَظِيْمٌ‏ பெரிய
24:16. இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?
24:17
24:17 يَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‌ۚ‏
يَعِظُكُمُ اللّٰهُ அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான் اَنْ تَعُوْدُوْا நீங்கள் மீண்டும் வரக்கூடாது என்று لِمِثْلِهٖۤ இது போன்றதற்கு اَبَدًا ஒரு போதும் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ‌ۚ‏ நம்பிக்கையாளர்களாக
24:17. நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.
24:18
24:18 وَيُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
وَيُبَيِّنُ இன்னும் விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمُ உங்களுக்கு الْاٰيٰتِ‌ؕ வசனங்களை وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ மகா ஞானவான்
24:18. இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.
24:19
24:19 اِنَّ الَّذِيْنَ يُحِبُّوْنَ اَنْ تَشِيْعَ الْفَاحِشَةُ فِى الَّذِيْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِيْمٌۙ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يُحِبُّوْنَ விரும்பக்கூடியவர்கள் اَنْ تَشِيْعَ பரவுவதை الْفَاحِشَةُ அசிங்கமான செயல் فِى الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களுக்கிடையில் لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ தண்டனை اَلِيْمٌۙ வலி தரக்கூடிய فِى الدُّنْيَا இம்மையிலும் وَالْاٰخِرَةِ‌ؕ மறுமையிலும் وَاللّٰهُ அல்லாஹ்தான் يَعْلَمُ அறிவான் وَاَنْـتُمْ நீங்கள் لَا تَعْلَمُوْنَ‏ அறியமாட்டீர்கள்
24:19. எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
24:20
24:20 وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِيْمٌ
وَلَوْلَا இல்லாதிருந்தால் فَضْلُ அருளும் اللّٰهِ அல்லாஹ்வுடைய عَلَيْكُمْ உங்கள் மீது وَرَحْمَتُهٗ அவனது கருணையும் وَاَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் رَءُوْفٌ மிக்க இரக்கமுள்ளவன் رَّحِيْمٌ‏ மகா கருணையுள்ளவன்
24:20. இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.  
24:21
24:21 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ ؕ وَمَنْ يَّتَّبِعْ خُطُوٰتِ الشَّيْطٰنِ فَاِنَّهٗ يَاْمُرُ بِالْـفَحْشَآءِ وَالْمُنْكَرِ‌ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَتَّبِعُوْا பின்பற்றாதீர்கள் خُطُوٰتِ அடிச்சுவடுகளை الشَّيْطٰنِ‌ ؕ ஷைத்தானின் وَمَنْ யார் يَّتَّبِعْ பின்பற்றுகிறானோ خُطُوٰتِ அடிச்சுவடுகளை الشَّيْطٰنِ ஷைத்தானின் فَاِنَّهٗ நிச்சயமாக அவன் يَاْمُرُ ஏவுகிறான் بِالْـفَحْشَآءِ அசிங்கத்தையும் وَالْمُنْكَرِ‌ ؕ கெட்டதையும் وَلَوْلَا இல்லாதிருந்தால் فَضْلُ அருளும் اللّٰهِ அல்லாஹ்வுடைய عَلَيْكُمْ உங்கள் மீது وَرَحْمَتُهٗ அவனது கருணையும் مَا زَكٰى தூய்மை அடைந்திருக்க மாட்டார் مِنْكُمْ உங்களில் مِّنْ اَحَدٍ எவரும் اَبَدًا ஒரு போதும் وَّلٰـكِنَّ اللّٰهَ எனினும் அல்லாஹ் يُزَكِّىْ பரிசுத்தப்படுத்துகிறான் مَنْ يَّشَآءُ‌ ؕ தான் நாடியவரை وَاللّٰهُ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
24:21. ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
24:22
24:22 وَلَا يَاْتَلِ اُولُوا الْـفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ يُّؤْتُوْۤا اُولِى الْقُرْبٰى وَالْمَسٰكِيْنَ وَالْمُهٰجِرِيْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ ‌‌ۖ  وَلْيَـعْفُوْا وَلْيَـصْفَحُوْا‌ ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ يَّغْفِرَ اللّٰهُ لَـكُمْ‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
وَلَا يَاْتَلِ சத்தியம் செய்ய வேண்டாம் اُولُوا الْـفَضْلِ செல்வம் உடையவர்கள் مِنْكُمْ உங்களில் وَالسَّعَةِ இன்னும் வசதி اَنْ يُّؤْتُوْۤا அவர்கள் கொடுக்க اُولِى الْقُرْبٰى உறவினர்களுக்கு وَالْمَسٰكِيْنَ இன்னும் வறியவர்களுக்கு وَالْمُهٰجِرِيْنَ இன்னும் ஹிஜ்ரா சென்றவர்களுக்கு فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் ۖ  وَلْيَـعْفُوْا அவர்கள் மன்னிக்கட்டும் وَلْيَـصْفَحُوْا‌ ؕ பெருந்தன்மையுடன் விட்டு விடட்டும் اَلَا تُحِبُّوْنَ விரும்ப மாட்டீர்களா? اَنْ يَّغْفِرَ மன்னிப்பதை اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ‌ ؕ உங்களை وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையுடையவன்
24:22. இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.
24:23
24:23 اِنَّ الَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ يَرْمُوْنَ குற்றம் சுமத்துகிறார்களோ الْمُحْصَنٰتِ பத்தினிகள் الْغٰفِلٰتِ அறியாத பெண்கள் الْمُؤْمِنٰتِ நம்பிக்கைகொண்ட பெண்கள் لُعِنُوْا சபிக்கப்பட்டார்கள் فِى الدُّنْيَا உலகத்திலும் وَالْاٰخِرَةِ மறுமையிலும் وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு உண்டு عَذَابٌ தண்டனை عَظِيْمٌۙ‏ பெரிய
24:23. எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
24:24
24:24 يَّوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ اَلْسِنَـتُهُمْ وَاَيْدِيْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
يَّوْمَ நாளில் تَشْهَدُ சாட்சி பகரும் عَلَيْهِمْ அவர்களுக்கு எதிராக اَلْسِنَـتُهُمْ அவர்களது நாவுகளும் وَاَيْدِيْهِمْ அவர்களதுகரங்களும் وَاَرْجُلُهُمْ அவர்களதுகால்களும் بِمَا كَانُوْا எதை/இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்கின்றார்கள்
24:24. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.
24:25
24:25 يَوْمَٮِٕذٍ يُّوَفِّيْهِمُ اللّٰهُ دِيْنَهُمُ الْحَـقَّ وَيَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَـقُّ الْمُبِيْنُ‏
يَوْمَٮِٕذٍ அந்நாளில் يُّوَفِّيْهِمُ அவர்களுக்கு முழுமையாக தருவான் اللّٰهُ அல்லாஹ் دِيْنَهُمُ அவர்களுடைய கூலியை الْحَـقَّ உண்மையான وَيَعْلَمُوْنَ இன்னும் அவர்கள் அறிந்து கொள்வார்கள் اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ்தான் هُوَ الْحَـقُّ உண்மையானவன் الْمُبِيْنُ‏ தெளிவானவன்
24:25. அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய நியாயமான கூலியை, அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான்; இன்னும் அல்லாஹ் தான் “பிரத்தியட்சமான உண்மை(யாளன்) என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
24:26
24:26 اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِ‌ۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ‌ۚ اُولٰٓٮِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَ‌ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ
اَلْخَبِيْثٰتُ கெட்ட சொற்கள் لِلْخَبِيْثِيْنَ கெட்டவர்களுக்கு உரியன وَالْخَبِيْثُوْنَ இன்னும் கெட்டவர்கள் لِلْخَبِيْثٰتِ‌ۚ கெட்ட சொற்களுக்கு உரியவர்கள் وَالطَّيِّبٰتُ இன்னும் நல்ல சொற்கள் لِلطَّيِّبِيْنَ நல்லவர்களுக்கு உரியன وَالطَّيِّبُوْنَ இன்னும் நல்லவர்கள் لِلطَّيِّبٰتِ‌ۚ நல்ல சொற்களுக்கு உரியவர்கள் اُولٰٓٮِٕكَ அவர்கள் مُبَرَّءُوْنَ நீக்கப்பட்டவர்கள் مِمَّا يَقُوْلُوْنَ‌ؕ இவர்கள் சொல்வதிலிருந்து لَهُمْ அவர்களுக்கு مَّغْفِرَةٌ மன்னிப்பும் وَّرِزْقٌ அருட்கொடையும் كَرِيْمٌ‏ கண்ணியமான
24:26. கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.  
24:27
24:27 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ بُيُوْتِكُمْ حَتّٰى تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰٓى اَهْلِهَا ‌ؕ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لَا تَدْخُلُوْا நீங்கள் நுழையாதீர்கள் بُيُوْتًا வீடுகளில் غَيْرَ بُيُوْتِكُمْ உங்கள் வீடுகள் அல்லாத حَتّٰى வரை تَسْتَاْنِسُوْا நீங்கள் அனுமதி பெறுகின்ற وَتُسَلِّمُوْا இன்னும் நீங்கள் ஸலாம் கூறி عَلٰٓى اَهْلِهَا ؕ அவ்வீட்டார்களுக்கு ذٰ لِكُمْ அதுதான் خَيْرٌ சிறந்தது لَّـكُمْ உங்களுக்கு لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக
24:27. ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
24:28
24:28 فَاِنْ لَّمْ تَجِدُوْا فِيْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰى يُؤْذَنَ لَـكُمْ‌ۚ وَاِنْ قِيْلَ لَـكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا‌ۚ هُوَ اَزْكٰى لَـكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ‏
فَاِنْ لَّمْ تَجِدُوْا நீங்கள் காணவில்லையெனில் فِيْهَاۤ அவற்றில் اَحَدًا ஒருவரையும் فَلَا تَدْخُلُوْهَا அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள் حَتّٰى يُؤْذَنَ அனுமதி கொடுக்கப்படுகின்ற வரை لَـكُمْ‌ۚ உங்களுக்கு وَاِنْ قِيْلَ சொல்லப்பட்டால் لَـكُمُ உங்களுக்கு ارْجِعُوْا திரும்பி விடுங்கள் فَارْجِعُوْا‌ۚ திரும்பி விடுங்கள் هُوَ அது اَزْكٰى மிக சுத்தமானது لَـكُمْ‌ؕ உங்களுக்கு وَاللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
24:28. அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
24:29
24:29 لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُيُوْتًا غَيْرَ مَسْكُوْنَةٍ فِيْهَا مَتَاعٌ لَّـكُمْ‌ ؕ وَاللّٰهُ يَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ‏
لَـيْسَ عَلَيْكُمْ உங்கள் மீது இல்லை جُنَاحٌ குற்றம் اَنْ تَدْخُلُوْا நீங்கள் நுழைவது بُيُوْتًا வீடுகளில் غَيْرَ مَسْكُوْنَةٍ வசிக்கப்படாத فِيْهَا அவற்றில் مَتَاعٌ பொருள் لَّـكُمْ‌ ؕ உங்களுக்கு وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் مَا تُبْدُوْنَ நீங்கள்வெளிப்படுத்துவதை وَمَا تَكْتُمُوْنَ‏ நீங்கள் மறைப்பதை
24:29. (எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; மேலும் அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.
24:30
24:30 قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏
قُلْ கூறுங்கள் لِّـلْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கு يَغُـضُّوْا அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும் مِنْ اَبْصَارِهِمْ தங்கள் பார்வைகளை وَيَحْفَظُوْا இன்னும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும் فُرُوْجَهُمْ‌ ؕ தங்கள் மறைவிடங்களை ذٰ لِكَ அது اَزْكٰى மிக சுத்தமானது لَهُمْ‌ ؕ அவர்களுக்கு اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிந்தவன் بِمَا يَصْنَـعُوْنَ‏ அவர்கள் செய்வதை
24:30. (நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
24:31
24:31 وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
وَقُلْ கூறுங்கள் لِّـلْمُؤْمِنٰتِ நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு يَغْضُضْنَ அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும் مِنْ اَبْصَارِ பார்வைகளை هِنَّ தங்கள் وَيَحْفَظْنَ இன்னும் அவர்கள் பாதுகாத்துக் கொள்ளட்டும் فُرُوْجَهُنَّ தங்கள் மறைவிடங்களை وَلَا يُبْدِيْنَ இன்னும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம் زِيْنَتَهُنَّ தங்கள் அலங்காரங்களை اِلَّا مَا ظَهَرَ வெளியில் தெரிபவற்றை தவிர مِنْهَا‌ அதிலிருந்து وَلْيَـضْرِبْنَ இன்னும் அவர்கள் போர்த்திக் கொள்ளட்டும் بِخُمُرِهِنَّ தங்கள் முந்தானைகளை عَلٰى جُيُوْبِهِنَّ‌ தங்கள் நெஞ்சுப் பகுதிகள் மீது وَلَا يُبْدِيْنَ இன்னும் அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம் زِيْنَتَهُنَّ தங்கள் அலங்காரங்களை اِلَّا لِبُعُوْلَتِهِنَّ தங்கள் கணவர்களுக்கு தவிர اَوْ அல்லது اٰبَآٮِٕهِنَّ தங்கள்தந்தைகளுக்கு اَوْ அல்லது اٰبَآءِ தந்தைகளுக்கு بُعُوْلَتِهِنَّ தங்கள் கணவர்களின் اَوْ அல்லது اَبْنَآٮِٕهِنَّ தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு اَوْ அல்லது اَبْنَآءِ ஆண் பிள்ளைகளுக்கு بُعُوْلَتِهِنَّ தங்கள் கணவர்களின் اَوْ அல்லது اِخْوَانِهِنَّ தங்கள் சகோதரர்களுக்கு اَوْ அல்லது بَنِىْۤ ஆண் பிள்ளைகளுக்கு اِخْوَانِهِنَّ தங்கள் சகோதரர்களின் اَوْ அல்லது بَنِىْۤ ஆண் பிள்ளைகளுக்கு اَخَوٰتِهِنَّ தங்கள் சகோதரிகளின் اَوْ அல்லது نِسَآٮِٕهِنَّ தங்கள் பெண்களுக்கு اَوْ مَا مَلَـكَتْ அல்லது/சொந்தமாக்கியவர்களுக்கு اَيْمَانُهُنَّ தங்கள் வலக்கரங்கள் اَوِ அல்லது التّٰبِعِيْنَ பணியாளர்களுக்கு غَيْرِ اُولِى الْاِرْبَةِ ஆசையில்லாத مِنَ الرِّجَالِ ஆண்களில் اَوِ அல்லது الطِّفْلِ சிறுவர்களுக்கு الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا எவர்கள்/அறிவில்லை عَلٰى عَوْرٰتِ மறைவிடங்களை النِّسَآءِ‌ பெண்களின் وَلَا يَضْرِبْنَ இன்னும் அவர்கள் தட்டி நடக்க வேண்டாம் بِاَرْجُلِهِنَّ தங்கள் கால்களை لِيُـعْلَمَ அறியப்படுவதற்காக مَا يُخْفِيْنَ எதை/மறைக்கின்றனர் مِنْ زِيْنَتِهِنَّ‌ ؕ தங்கள் அலங்காரங்களை وَتُوْبُوْۤا இன்னும் பாவமன்னிப்பு கோருங்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் جَمِيْعًا அனைத்திற்கும் اَيُّهَ الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்களே لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
24:31. இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
24:32
24:32 وَاَنْكِحُوا الْاَيَامٰى مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآٮِٕكُمْ‌ ؕ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ‏
وَاَنْكِحُوا நீங்கள் திருமணம் செய்து வையுங்கள் الْاَيَامٰى ஜோடி இல்லாதவர்களுக்கு مِنْكُمْ உங்களில் وَالصّٰلِحِيْنَ நல்லவர்களுக்கு مِنْ عِبَادِ ஆண் அடிமைகளிலும் كُمْ உங்கள் وَاِمَآٮِٕكُمْ‌ ؕ உங்கள் பெண் அடிமைகளிலும் اِنْ يَّكُوْنُوْا அவர்கள் இருந்தால் فُقَرَآءَ ஏழைகளாக يُغْنِهِمُ அவர்களை நிறைவுறச் செய்வான் اللّٰهُ அல்லாஹ் مِنْ فَضْلِهٖ‌ ؕ தனது அருளால் وَاللّٰهُ அல்லாஹ் وَاسِعٌ விசாலமானவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
24:32. இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
24:33
24:33 وَلْيَسْتَعْفِفِ الَّذِيْنَ لَا يَجِدُوْنَ نِكَاحًا حَتّٰى يُغْنِيَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ‌ؕ وَالَّذِيْنَ يَبْتَغُوْنَ الْـكِتٰبَ مِمَّا مَلَـكَتْ اَيْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِيْهِمْ خَيْرًا ‌‌ۖ  وَّاٰ تُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِىْۤ اٰتٰٮكُمْ ‌ؕ وَلَا تُكْرِهُوْا فَتَيٰتِكُمْ عَلَى الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّـتَبْتَغُوْا عَرَضَ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ وَمَنْ يُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْۢ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
وَلْيَسْتَعْفِفِ ஒழுக்கமாக இருக்கட்டும் الَّذِيْنَ لَا يَجِدُوْنَ வசதி பெறாதவர்கள் نِكَاحًا திருமணத்திற்கு حَتّٰى வரை يُغْنِيَهُمُ அவர்களை நிறைவு செய்கிற اللّٰهُ அல்லாஹ் مِنْ فَضْلِهٖ‌ؕ தன் அருளால் وَالَّذِيْنَ يَبْتَغُوْنَ இன்னும் விரும்புபவர்கள் الْـكِتٰبَ பத்திரம் எழுதிட مِمَّا مَلَـكَتْ சொந்தமாக்கிக் கொண்டவர்களில் اَيْمَانُكُمْ உங்கள் வலக்கரங்கள் فَكَاتِبُوْ எழுதிக் கொடுங்கள் هُمْ அவர்களுக்கு اِنْ عَلِمْتُمْ நீங்கள் அறிந்தால் فِيْهِمْ அவர்களில் خَيْرًا நன்மையை ۖ  وَّاٰ تُوْ இன்னும் கொடுங்கள் هُمْ அவர்களுக்கு مِّنْ مَّالِ செல்வத்திலிருந்து اللّٰهِ அல்லாஹ்வின் الَّذِىْۤ اٰتٰٮكُمْ ؕ எது/கொடுத்தான்/உங்களுக்கு وَلَا تُكْرِهُوْا நிர்ப்பந்திக்காதீர்கள் فَتَيٰتِكُمْ உங்கள் பெண் அடிமைகளை عَلَى الْبِغَآءِ விபச்சாரத்தில் اِنْ اَرَدْنَ விரும்பினால் تَحَصُّنًا பத்தினித்தனத்தை لِّـتَبْتَغُوْا நீ விரும்பியதற்காக عَرَضَ பொருளை الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ உலக வாழ்க்கையின் وَمَنْ யார் يُّكْرِهْهُّنَّ அவர்களை நிர்ப்பந்திப்பாரோ فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் مِنْۢ بَعْدِ பின்னர் اِكْرَاهِهِنَّ அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ கருணை காட்டுபவன்
24:33. விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
24:34
24:34 وَلَقَدْ اَنْزَلْنَاۤ اِلَيْكُمْ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّـلْمُتَّقِيْنَ
وَلَقَدْ திட்டவட்டமாக اَنْزَلْنَاۤ இறக்கியுள்ளோம் اِلَيْكُمْ உங்களுக்கு اٰيٰتٍ வசனங்களை مُّبَيِّنٰتٍ தெளிவான وَّمَثَلًا உதாரணத்தையும் مِّنَ الَّذِيْنَ خَلَوْا சென்றவர்களின் مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் وَمَوْعِظَةً உபதேசத்தையும் لِّـلْمُتَّقِيْنَ‏ இறையச்சமுள்ளவர்களுக்கு
24:34. இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.
24:35
24:35 اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِيْهَا مِصْبَاحٌ‌ ؕ الْمِصْبَاحُ فِىْ زُجَاجَةٍ‌ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّىٌّ يُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰـرَكَةٍ زَيْتُوْنَةٍ لَّا شَرْقِيَّةٍ وَّلَا غَرْبِيَّةٍ ۙ يَّـكَادُ زَيْتُهَا يُضِىْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ‌ ؕ نُوْرٌ عَلٰى نُوْرٍ‌ ؕ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ‌ ؕ وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ‏
اَللّٰهُ அல்லாஹ் نُوْرُ ஒளி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ ؕ மற்றும் பூமி مَثَلُ தன்மையாவது نُوْرِهٖ ஒளியின் كَمِشْكٰوةٍ ஒரு மாடத்தைப் போன்றாகும் فِيْهَا அதில் مِصْبَاحٌ‌ ؕ ஒரு விளக்கு உள்ளது الْمِصْبَاحُ அந்த விளக்கு فِىْ زُجَاجَةٍ‌ ؕ கண்ணாடியில் உள்ளது اَلزُّجَاجَةُ அந்த கண்ணாடி كَاَنَّهَا அதைப் போல் உள்ளது كَوْكَبٌ ஒரு நட்சத்திரம் دُرِّىٌّ மின்னக்கூடிய يُّوْقَدُ எரிக்கப்படுகிறது مِنْ இருந்து شَجَرَةٍ மரத்தில் مُّبٰـرَكَةٍ அருள் நிறைந்த زَيْتُوْنَةٍ ஆலிவ் என்னும் لَّا شَرْقِيَّةٍ கிழக்கிலும் அல்லாத وَّلَا غَرْبِيَّةٍ ۙ மேற்கிலும் அல்லாத يَّـكَادُ ஆரம்பித்து விடுகிறது زَيْتُهَا அதன் எண்ணெய் يُضِىْٓءُ ஒளிர்கிறது وَلَوْ لَمْ تَمْسَسْهُ அதன் மீது படவில்லை نَارٌ‌ ؕ தீ نُوْرٌ ஒளி عَلٰى மேல் نُوْرٍ‌ ؕ ஒளிக்கு يَهْدِى நேர்வழி காட்டுகிறான் اللّٰهُ அல்லாஹ் لِنُوْرِهٖ தன் ஒளிக்கு مَنْ தான் يَّشَآءُ‌ ؕ நாடியவர்களுக்கு وَ يَضْرِبُ இன்னும் விவரிக்கிறான் اللّٰهُ அல்லாஹ் الْاَمْثَالَ உதாரணங்களை لِلنَّاسِ‌ؕ மக்களுக்கு وَاللّٰهُ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ அனைத்தையும் عَلِيْمٌ ۙ‏ நன்கறிந்தவன்
24:35. அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
24:36
24:36 فِىْ بُيُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيْهَا اسْمُهٗۙ يُسَبِّحُ لَهٗ فِيْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِۙ‏
فِىْ بُيُوْتٍ இறை இல்லங்களில் اَذِنَ அனுமதித்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் اَنْ تُرْفَعَ அவை உயர்த்திக் கட்டப்படுவதற்கு وَيُذْكَرَ இன்னும் நினைவு கூறப்படுவதற்கும் فِيْهَا அவற்றில் اسْمُهٗۙ அவனது திருப்பெயர் يُسَبِّحُ துதிக்கின்றனர் لَهٗ அவனை فِيْهَا அவற்றில் بِالْغُدُوِّ காலையிலும் وَالْاٰصَالِۙ‏ மாலையிலும்
24:36. இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
24:37
24:37 رِجَالٌ ۙ لَّا تُلْهِيْهِمْ تِجَارَةٌ وَّلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌ ۙ يَخَافُوْنَ يَوْمًا تَتَقَلَّبُ فِيْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۙ‏
رِجَالٌ ۙ பல ஆண்கள் لَّا تُلْهِيْهِمْ அவர்களை திசை திருப்பி விடாது تِجَارَةٌ வர்த்தகமோ وَّلَا بَيْعٌ விற்பனையோ عَنْ ذِكْرِ நினைவை விட்டும் اللّٰهِ அல்லாஹ்வின் وَاِقَامِ இன்னும் நிலைநிறுத்துவதை الصَّلٰوةِ தொழுகையை وَ اِيْتَآءِ الزَّكٰوةِ‌ ۙ இன்னும் அல்லாஹ்விற்கு தூய்மையாக செய்வதை يَخَافُوْنَ அவர்கள் பயப்படுவார்கள் يَوْمًا ஒரு நாளை تَتَقَلَّبُ فِيْهِ தடுமாறும்/அதில் الْقُلُوْبُ உள்ளங்களும் وَالْاَبْصَارُ ۙ‏ பார்வைகளும்
24:37. (அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
24:38
24:38 لِيَجْزِيَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا عَمِلُوْا وَيَزِيْدَهُمْ مِّنْ فَضْلِهٖ‌ؕ وَاللّٰهُ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏
لِيَجْزِيَهُمُ கூலி வழங்குவதற்காக اللّٰهُ அல்லாஹ் اَحْسَنَ மிக அழகியவற்றுக்கு مَا عَمِلُوْا அவர்கள் செய்ததில் وَيَزِيْدَ மேலும் அதிகப்படுத்துவதற்காக هُمْ அவர்களுக்கு مِّنْ فَضْلِهٖ‌ؕ தனது அருளிலிருந்து وَاللّٰهُ அல்லாஹ் يَرْزُقُ வழங்குகிறான் مَنْ يَّشَآءُ தான் நாடியவருக்கு بِغَيْرِ حِسَابٍ‏ கணக்கின்றி
24:38. அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
24:39
24:39 وَالَّذِيْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۢ بِقِيْعَةٍ يَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤى اِذَا جَآءَهٗ لَمْ يَجِدْهُ شَيْــٴًـــا وَّ وَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰٮهُ حِسَابَهٗ‌ ؕ وَاللّٰهُ سَرِيْعُ الْحِسَابِ ۙ‏
وَالَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பாளர்கள் اَعْمَالُهُمْ அவர்களுடைய செயல்கள் كَسَرَابٍۢ கானல்நீர் போலாகும் بِقِيْعَةٍ வெட்ட வெளியில் يَّحْسَبُهُ அதை எண்ணுகிறார் الظَّمْاٰنُ தாகித்தவன் مَآءً ؕ தண்ணீராக حَتّٰۤى இறுதியாக اِذَا جَآءَهٗ அதனிடம் அவர் வந்தால் لَمْ يَجِدْهُ அதை காணமாட்டார் شَيْــٴًـــا ஏதும் وَّ وَجَدَ காண்பார் اللّٰهَ அல்லாஹ்வை عِنْدَهٗ அதனிடம் فَوَفّٰٮهُ அவன் அவருக்கு நிறைவேற்றுவான் حِسَابَهٗ‌ ؕ அவருடைய கணக்கை وَاللّٰهُ அல்லாஹ் سَرِيْعُ மிகத் தீவிரமானவன் الْحِسَابِ ۙ‏ கேள்வி கணக்கு கேட்பதில்
24:39. அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.
24:40
24:40 اَوْ كَظُلُمٰتٍ فِىْ بَحْرٍ لُّـجّـِىٍّ يَّغْشٰٮهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌ‌ؕ ظُلُمٰتٌۢ بَعْضُهَا فَوْقَ بَعْضٍؕ اِذَاۤ اَخْرَجَ يَدَهٗ لَمْ يَكَدْ يَرٰٮهَا‌ؕ وَمَنْ لَّمْ يَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ
اَوْ அல்லது كَظُلُمٰتٍ இருள்களைப் போலாகும் فِىْ بَحْرٍ கடலில் உள்ள لُّـجّـِىٍّ ஆழமான يَّغْشٰٮهُ அதை சூழ்ந்திருக்க مَوْجٌ مِّنْ فَوْقِهٖ அலை / மேல் مَوْجٌ அதன் அலை مِّنْ فَوْقِهٖ அதற்கு மேல் سَحَابٌ‌ؕ மேகம் ظُلُمٰتٌۢ இருள்கள் بَعْضُهَا அவற்றில் சில فَوْقَ மேலாக بَعْضٍؕ சிலவற்றுக்கு اِذَاۤ اَخْرَجَ அவன் வெளியே நீட்டினால் يَدَهٗ தனது கையை لَمْ يَكَدْ يَرٰٮهَا‌ؕ அதை அவனால் பார்க்க முடியாது وَمَنْ யாருக்கு لَّمْ يَجْعَلِ ஏற்படுத்தவில்லையோ اللّٰهُ அல்லாஹ் لَهٗ அவருக்கு نُوْرًا ஒளியை فَمَا இல்லை لَهٗ அவருக்கு مِنْ نُّوْرٍ‏ ஒளியும்
24:40. அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.
24:41
24:41 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُسَبِّحُ لَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّيْرُ صٰٓفّٰتٍ‌ؕ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِيْحَهٗ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِمَا يَفْعَلُوْنَ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ்வை يُسَبِّحُ துதிக்கின்றனர் لَهٗ அவனை مَنْ فِى السَّمٰوٰتِ வானத்தில் உள்ளவர்களும் وَالْاَرْضِ இன்னும் பூமியில் وَالطَّيْرُ பறவைகளும் صٰٓفّٰتٍ‌ؕ வரிசையாக பறக்கின்ற كُلٌّ ஒவ்வொருவரும் قَدْ திட்டமாக عَلِمَ அறிந்துள்ளனர் صَلَاتَهٗ அவனை தொழுவதையும் وَتَسْبِيْحَهٗ‌ؕ அவனை துதிப்பதையும் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌۢ நன்கறிந்தவன் بِمَا يَفْعَلُوْنَ‏ அவர்கள் செய்வதை
24:41. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.
24:42
24:42 وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏
وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே مُلْكُ ஆட்சி உரியது السَّمٰوٰتِ வானங்களின் وَالْاَرْضِ‌ۚ இன்னும் பூமியின் وَاِلَى பக்கமே اللّٰهِ அல்லாஹ்வின் الْمَصِيْرُ‏ மீளுமிடம்
24:42. இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது; அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது.
24:43
24:43 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يُزْجِىْ سَحَابًا ثُمَّ يُؤَلِّفُ بَيْنَهٗ ثُمَّ يَجْعَلُهٗ رُكَامًا فَتَرَى الْوَدْقَ يَخْرُجُ مِنْ خِلٰلِهٖ‌ۚ وَيُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِيْهَا مِنْۢ بَرَدٍ فَيُـصِيْبُ بِهٖ مَنْ يَّشَآءُ وَ يَصْرِفُهٗ عَنْ مَّنْ يَّشَآءُ‌ ؕ يَكَادُ سَنَا بَرْقِهٖ يَذْهَبُ بِالْاَبْصَارِؕ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُزْجِىْ ஓட்டிவருகிறான் سَحَابًا மேகங்களை ثُمَّ பிறகு يُؤَلِّفُ இணைக்கிறான் بَيْنَهٗ அவற்றுக்கு இடையில் ثُمَّ பிறகு يَجْعَلُهٗ அவற்றை ஆக்குகிறான் رُكَامًا ஒன்றிணைக்கப்பட்டதாக فَتَرَى ஆகவே பார்க்கிறீர் الْوَدْقَ மழை يَخْرُجُ வெளிவருவதை مِنْ خِلٰلِهٖ‌ۚ அவற்றுக்கு இடையிலிருந்து وَيُنَزِّلُ அவன் இறக்குகிறான் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مِنْ جِبَالٍ மலைகளில் فِيْهَا அதில் உள்ள مِنْۢ بَرَدٍ பனியிலிருந்து فَيُـصِيْبُ அவன் தண்டிக்கிறான் بِهٖ அதன் மூலம் مَنْ يَّشَآءُ தான் நாடியவரை وَ يَصْرِفُهٗ இன்னும் அதை திருப்பிவிடுகிறான் عَنْ விட்டும் مَّنْ يَّشَآءُ‌ ؕ தான் நாடியவரை يَكَادُ سَنَا கடுமையான வெளிச்சம் ஆரம்பித்து விடுகிறது بَرْقِهٖ அதன் மின்னலின் يَذْهَبُ பறித்துவிடும் بِالْاَبْصَارِؕ‏ பார்வைகளை
24:43. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.
24:44
24:44 يُقَلِّبُ اللّٰهُ الَّيْلَ وَالنَّهَارَ‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ‏
يُقَلِّبُ மாற்றுகிறான் اللّٰهُ அல்லாஹ் الَّيْلَ وَالنَّهَارَ‌ ؕ இரவு இன்னும் பகலை اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இவற்றில் لَعِبْرَةً படிப்பினை இருக்கிறது لِّاُولِى الْاَبْصَارِ‏ அறிவுடையவர்களுக்கு
24:44. இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.
24:45
24:45 وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ ‌ۚفَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى بَطْنِهٖ‌ۚ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَّنْ يَّمْشِىْ عَلٰٓى اَرْبَعٍ‌ؕ يَخْلُقُ اللّٰهُ مَا يَشَآءُ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
وَاللّٰهُ அல்லாஹ் خَلَقَ படைத்தான் كُلَّ எல்லா دَآبَّةٍ உயிரினங்களையும் مِّنْ مَّآءٍ தண்ணீரிலிருந்து ۚفَمِنْهُمْ அவர்களில் உண்டு مَّنْ يَّمْشِىْ நடப்பவையும் عَلٰى بَطْنِهٖ‌ۚ தனது வயிற்றின் மீது وَمِنْهُمْ அவர்களில் உண்டு مَّنْ يَّمْشِىْ நடப்பவையும் عَلٰى رِجْلَيْنِ இரண்டு கால்கள் மீது وَمِنْهُمْ அவர்களில் உண்டு مَّنْ يَّمْشِىْ நடப்பவையும் عَلٰٓى اَرْبَعٍ‌ؕ நான்கு கால்கள் மீது يَخْلُقُ படைக்கிறான் اللّٰهُ அல்லாஹ் مَا يَشَآءُ‌ؕ தான் நாடியதை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீதும் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
24:45. மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
24:46
24:46 لَـقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍ مُّبَيِّنٰتٍ‌ؕ وَ اللّٰهُ يَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
لَـقَدْ திட்டவட்டமாக اَنْزَلْنَاۤ நாம் இறக்கியுள்ளோம் اٰيٰتٍ வசனங்களை مُّبَيِّنٰتٍ‌ؕ தெளிவான وَ اللّٰهُ அல்லாஹ் يَهْدِىْ நேர்வழி காட்டுகிறான் مَنْ يَّشَآءُ தான் நாடியவருக்கு اِلٰى பக்கம் صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ நேரான பாதையின்
24:46. நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
24:47
24:47 وَيَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ مِّنْۢ بَعْدِ ذٰلِكَ‌ؕ وَمَاۤ اُولٰٓٮِٕكَ بِالْمُؤْمِنِيْنَ‏
وَيَقُوْلُوْنَ கூறுகின்றனர் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَبِالرَّسُوْلِ தூதரையும் وَاَطَعْنَا கீழ்ப்படிந்தோம் ثُمَّ பிறகு يَتَوَلّٰى திரும்பி விடுகின்றனர் فَرِيْقٌ ஒரு பிரிவினர் مِّنْهُمْ அவர்களில் مِّنْۢ بَعْدِ பின்னர் ذٰلِكَ‌ؕ அதற்குப் وَمَاۤ இல்லை اُولٰٓٮِٕكَ அவர்கள் بِالْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்கள்
24:47. “அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்” என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் - எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர்.
24:48
24:48 وَاِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اِذَا فَرِيْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ‏
وَاِذَا دُعُوْۤا அவர்கள் அழைக்கப்பட்டால் اِلَى பக்கம் اللّٰهِ அல்லாஹ் وَرَسُوْلِهٖ இன்னும் அவனது தூதரின் لِيَحْكُمَ தீர்ப்பளிப்பதற்காக بَيْنَهُمْ அவர்களுக்கிடையில் اِذَا فَرِيْقٌ அப்போது ஒரு பிரிவினர் مِّنْهُمْ அவர்களில் مُّعْرِضُوْنَ‏ புறக்கணிக்கின்றனர்
24:48. மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அதுபற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்களில் ஒரு பிரிவார் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள்.
24:49
24:49 وَاِنْ يَّكُنْ لَّهُمُ الْحَـقُّ يَاْتُوْۤا اِلَيْهِ مُذْعِنِيْنَؕ‏
وَاِنْ يَّكُنْ இருந்தால் لَّهُمُ அவர்களுக்கு சாதகமாக الْحَـقُّ சத்தியம் يَاْتُوْۤا வருகின்றனர் اِلَيْهِ அவர் பக்கம் مُذْعِنِيْنَؕ‏ கட்டுப்பட்டவர்களாக
24:49. ஆனால், அவர்களின் பக்கம் - உண்மை (நியாயம்) இருக்குமானால், வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள்.
24:50
24:50 اَفِىْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ يَخَافُوْنَ اَنْ يَّحِيْفَ اللّٰهُ عَلَيْهِمْ وَرَسُوْلُهٗ‌ؕ بَلْ اُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ
اَفِىْ قُلُوْبِهِمْ அவர்களது உள்ளங்களில் இருக்கிறதா? مَّرَضٌ நோய் اَمِ அல்லது ارْتَابُوْۤا அவர்கள் சந்தேகிக்கின்றனரா? اَمْ அல்லது يَخَافُوْنَ பயப்படுகின்றனரா? اَنْ يَّحِيْفَ அநீதியிழைத்து விடுவார்கள் என்று اللّٰهُ அல்லாஹ்வும் عَلَيْهِمْ அவர்கள் மீது وَرَسُوْلُهٗ‌ؕ இன்னும் அவனது தூதரும் بَلْ மாறாக اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
24:50. அவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள்.
24:51
24:51 اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِيْنَ اِذَا دُعُوْۤا اِلَى اللّٰهِ وَرَسُوْلِهٖ لِيَحْكُمَ بَيْنَهُمْ اَنْ يَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
اِنَّمَا كَانَ قَوْلَ கூற்றாக இருப்பதெல்லாம் الْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுடைய اِذَا دُعُوْۤا அழைக்கப்பட்டால் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் وَرَسُوْلِهٖ இன்னும் அவனது தூதர் لِيَحْكُمَ அவர் தீர்ப்பளிப்பதற்காக بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் اَنْ يَّقُوْلُوْا அவர்கள் கூறுவதுதான் سَمِعْنَا நாங்கள் செவியுற்றோம் وَاَطَعْنَا‌ؕ இன்னும் கீழ்ப்படிந்தோம் وَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ‏ வெற்றியாளர்கள்
24:51. முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
24:52
24:52 وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَيَخْشَ اللّٰهَ وَيَتَّقْهِ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏
وَمَنْ யார் يُّطِعِ கீழ்ப்படிகின்றார் اللّٰهَ அல்லாஹ்வுக்கும் وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் وَيَخْشَ இன்னும் பயப்படுகிறார் اللّٰهَ அல்லாஹ்வை وَيَتَّقْهِ இன்னும் அவனை அஞ்சிக் கொள்கிறார் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْفَآٮِٕزُوْنَ‏ நற்பாக்கியம் பெற்றவர்கள்
24:52. இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
24:53
24:53 وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَيْمَانِهِمْ لَٮِٕنْ اَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ‌ ۚ قُلْ لَّا تُقْسِمُوْا‌ ۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ‌  ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏
وَاَقْسَمُوْا சத்தியம் செய்தனர் بِاللّٰهِ அல்லாஹ்வின் மீது جَهْدَ கடுமையாக اَيْمَانِهِمْ அவர்களது சத்தியங்கள் لَٮِٕنْ اَمَرْتَهُمْ நீங்கள் அவர்களுக்கு கட்டளையிட்டால் لَيَخْرُجُنَّ‌ ۚ நிச்சயமாக அவர்கள் வெளியேறுவார்கள் قُلْ கூறுவீராக لَّا تُقْسِمُوْا‌ ۚ நீங்கள் சத்தியமிடாதீர்கள் طَاعَةٌ கீழ்ப்படிதலே مَّعْرُوْفَةٌ‌  ؕ அறியப்பட்ட اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிபவன் بِمَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்வதை
24:53. இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி:) “நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்தது தான்- நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்” என்று கூறுவீராக.
24:54
24:54 قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ‌ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَّا حُمِّلْتُمْ‌ؕ وَاِنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا‌ؕ وَمَا عَلَى الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ‏
قُلْ கூறுவீராக اَطِيْعُوا கீழ்ப்படியுங்கள் اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் الرَّسُوْلَ‌ۚ தூதருக்கு فَاِنْ تَوَلَّوْا நீங்கள் விலகிச் சென்றால் فَاِنَّمَا எல்லாம் عَلَيْهِ அவர் மீது مَا حُمِّلَ எது/சுமத்தப்பட்டது وَعَلَيْكُمْ இன்னும் உங்கள் மீது مَّا எது حُمِّلْتُمْ‌ؕ சுமத்தப்பட்டீர்கள் وَاِنْ تُطِيْعُوْهُ நீங்கள் கீழ்ப்படிந்தால்/அவருக்கு تَهْتَدُوْا‌ؕ நேர்வழி பெறுவீர்கள் وَمَا கடமை இல்லை عَلَى الرَّسُوْلِ தூதர் மீது اِلَّا தவிர الْبَلٰغُ எடுத்துரைப்பதை الْمُبِيْنُ‏ தெளிவாக
24:54. “அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.
24:55
24:55 وَعَدَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَ عَمِلُوا الصّٰلِحٰتِ لَـيَسْتَخْلِفَـنَّهُمْ فِى الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِيْنَهُمُ الَّذِى ارْتَضٰى لَهُمْ وَلَـيُبَدِّلَــنَّهُمْ مِّنْۢ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا‌ ؕ يَعْبُدُوْنَنِىْ لَا يُشْرِكُوْنَ بِىْ شَيْــٴًــــا‌ ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏
وَعَدَ வாக்களித்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் مِنْكُمْ உங்களில் وَ عَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்களை لَـيَسْتَخْلِفَـنَّهُمْ இவர்களை பிரதிநிதிகளாக ஆக்குவான் فِى الْاَرْضِ இப்பூமியில் كَمَا போன்று اسْتَخْلَفَ பிரதிநிதிகளாக ஆக்கியது الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ இவர்களுக்கு முன்னுள்ளவர்களை وَلَيُمَكِّنَنَّ இன்னும் பலப்படுத்தித்தருவான் لَهُمْ இவர்களுக்கு دِيْنَهُمُ இவர்களுடைய மார்க்கத்தை الَّذِى ارْتَضٰى எது/அவன் திருப்தி கொண்டான் لَهُمْ இவர்களுக்காக وَلَـيُبَدِّلَــنَّهُمْ இன்னும் இவர்களுக்கு மாற்றித்தருவான் مِّنْۢ بَعْدِ பின்னர் خَوْفِهِمْ இவர்களது பயத்திற்கு اَمْنًا‌ ؕ நிம்மதியை يَعْبُدُوْنَنِىْ இவர்கள் என்னை வணங்குவார்கள் لَا يُشْرِكُوْنَ இணைவைக்க மாட்டார்கள் بِىْ எனக்கு شَيْــٴًــــا‌ ؕ எதையும் وَمَنْ யார் كَفَرَ நிராகரிப்பார்களோ بَعْدَ பின்னர் ذٰ لِكَ இதற்கு فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْفٰسِقُوْنَ‏ பாவிகள்
24:55. உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
24:56
24:56 وَاَقِيْمُوا الصَّلٰوةَ وَ اٰ تُوا الزَّكٰوةَ وَاَطِيْـعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏
وَاَقِيْمُوا இன்னும் நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَ اٰ تُوا இன்னும் கொடுங்கள் الزَّكٰوةَ ஸகாத்தை وَاَطِيْـعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள் الرَّسُوْلَ தூதருக்கு لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‏ நீங்கள் வெற்றி பெறுவதற்காக
24:56. (முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.
24:57
24:57 لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ‌ۚ وَمَاْوٰٮهُمُ النَّارُ‌ؕ وَلَبِئْسَ الْمَصِيْرُ
لَا تَحْسَبَنَّ எண்ணிவிடாதீர்கள் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்களை مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ‌ۚ பலவீனப்படுத்தி விடுபவர்களாக/இப்பூமியில் وَمَاْوٰٮهُمُ இன்னும் அவர்கள் தங்குமிடம் النَّارُ‌ؕ நரகம்தான் وَلَبِئْسَ الْمَصِيْرُ‏ அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது
24:57. நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.  
24:58
24:58 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لِيَسْتَـاْذِنْكُمُ الَّذِيْنَ مَلَكَتْ اَيْمَانُكُمْ وَالَّذِيْنَ لَمْ يَـبْلُغُوا الْحُـلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍ‌ؕ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِيْنَ تَضَعُوْنَ ثِيَابَكُمْ مِّنَ الظَّهِيْرَةِ وَمِنْۢ بَعْدِ صَلٰوةِ الْعِشَآءِ ‌ؕ  ثَلٰثُ عَوْرٰتٍ لَّـكُمْ‌ ؕ لَـيْسَ عَلَيْكُمْ وَ لَا عَلَيْهِمْ جُنَاحٌۢ بَعْدَهُنَّ‌ ؕ طَوّٰفُوْنَ عَلَيْكُمْ بَعْضُكُمْ عَلٰى بَعْضٍ‌ ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே لِيَسْتَـاْذِنْكُمُ உங்களிடம் அனுமதி கோரட்டும் الَّذِيْنَ எவர்கள் مَلَكَتْ சொந்தமாகியவர்களும் اَيْمَانُكُمْ உங்கள் வலக்கரங்கள் وَالَّذِيْنَ لَمْ يَـبْلُغُوا அடையாதவர்களும் الْحُـلُمَ பருவத்தை مِنْكُمْ உங்களில் ثَلٰثَ மூன்று مَرّٰتٍ‌ؕ நேரங்களில் مِنْ قَبْلِ முன் صَلٰوةِ தொழுகைக்கு الْفَجْرِ காலை وَحِيْنَ تَضَعُوْنَ மதியத்தில் ثِيَابَكُمْ உங்கள் ஆடைகளை مِّنَ الظَّهِيْرَةِ நீங்கள் களைந்துவிடும் நேரத்தில் وَمِنْۢ بَعْدِ பின் صَلٰوةِ தொழுகைக்கு الْعِشَآءِ ؕ இஷா  ثَلٰثُ மூன்றும் عَوْرٰتٍ மறைவான நேரங்கள் لَّـكُمْ‌ ؕ உங்களுக்கு لَـيْسَ இல்லை عَلَيْكُمْ உங்கள் மீதும் وَ لَا عَلَيْهِمْ அவர்கள் மீதும் جُنَاحٌۢ குற்றம் بَعْدَهُنَّ‌ ؕ அவர்கள் பின்பு طَوّٰفُوْنَ அதிகம் வந்துபோகக் கூடியவர்கள் عَلَيْكُمْ உங்களிடம் بَعْضُكُمْ உங்களில் சிலர் عَلٰى மீது بَعْضٍ‌ ؕ சிலரின் كَذٰلِكَ இவ்வாறு يُبَيِّنُ தெளிவுபடுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمُ உங்களுக்கு الْاٰيٰتِ‌ ؕ வசனங்களை وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ மகா ஞானவான்
24:58. ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் “லுஹர்” நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
24:59
24:59 وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُـلُمَ فَلْيَسْتَـاْذِنُوْا كَمَا اسْتَـاْذَنَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ‏
وَاِذَا بَلَغَ அடைந்துவிட்டால் الْاَطْفَالُ குழந்தைகள் مِنْكُمُ உங்களின் الْحُـلُمَ பருவத்தை فَلْيَسْتَـاْذِنُوْا அவர்கள் அனுமதி கோரட்டும் كَمَا اسْتَـاْذَنَ அனுமதி கோரியது போன்று الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ அவர்களுக்கு முன்னுள்ளவர்கள் كَذٰلِكَ இவ்வாறு يُبَيِّنُ தெளிவுபடுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு اٰيٰتِهٖ‌ؕ தனது வசனங்களை وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ‏ மகா ஞானவான்
24:59. இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
24:60
24:60 وَالْـقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِىْ لَا يَرْجُوْنَ نِكَاحًا فَلَيْسَ عَلَيْهِنَّ جُنَاحٌ اَنْ يَّضَعْنَ ثِيَابَهُنَّ غَيْرَ مُتَبَـرِّجٰتٍ ۭ بِزِيْنَةٍ‌ ؕ وَاَنْ يَّسْتَعْفِفْنَ خَيْرٌ لَّهُنَّ‌ ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‏
وَالْـقَوَاعِدُ வயது முதிர்ந்தவர்கள் مِنَ النِّسَآءِ பெண்களில் الّٰتِىْ لَا يَرْجُوْنَ ஆசைப்படாதவர்கள் نِكَاحًا திருமணத்தை فَلَيْسَ இல்லை عَلَيْهِنَّ அவர்கள் மீது جُنَاحٌ குற்றம் اَنْ يَّضَعْنَ அவர்கள் கழட்டுவதில் ثِيَابَهُنَّ அவர்களின் துப்பட்டாக்களை غَيْرَ مُتَبَـرِّجٰتٍ ۭ வெளியே வராமல் بِزِيْنَةٍ‌ ؕ அலங்காரங்களுடன் وَاَنْ يَّسْتَعْفِفْنَ அவர்கள் பேணுதலாக இருப்பது خَيْرٌ சிறந்தது لَّهُنَّ‌ ؕ அவர்களுக்கு وَاللّٰهُ அல்லாஹ் سَمِيْعٌ நன்கு செவியேற்பவன் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
24:60. மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
24:61
24:61 لَـيْسَ عَلَى الْاَعْمٰى حَرَجٌ وَّلَا عَلَى الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَى الْمَرِيْضِ حَرَجٌ وَّلَا عَلٰٓى اَنْفُسِكُمْ اَنْ تَاْكُلُوْا مِنْۢ بُيُوْتِكُمْ اَوْ بُيُوْتِ اٰبَآٮِٕكُمْ اَوْ بُيُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُيُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُيُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُيُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُيُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُيُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ اَوْ صَدِيْقِكُمْ‌ؕ لَـيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَنْ تَاْكُلُوْا جَمِيْعًا اَوْ اَشْتَاتًا‌ ؕ فَاِذَا دَخَلْتُمْ بُيُوْتًا فَسَلِّمُوْا عَلٰٓى اَنْفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَيِّبَةً‌  ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ
لَـيْسَ இல்லை عَلَى மீது الْاَعْمٰى குருடர் حَرَجٌ குற்றம் وَّلَا இன்னும் இல்லை عَلَى மீது الْاَعْرَجِ ஊனமுற்றவர் حَرَجٌ குற்றம் وَّلَا இன்னும் இல்லை عَلَى மீது الْمَرِيْضِ நோயாளி حَرَجٌ குற்றம் وَّلَا இன்னும் இல்லை عَلٰٓى மீது اَنْفُسِكُمْ உங்கள் اَنْ تَاْكُلُوْا நீங்கள் உண்பது مِنْۢ بُيُوْتِكُمْ உங்கள் இல்லங்களிலிருந்து اَوْ அல்லது بُيُوْتِ இல்லங்களிலிருந்து اٰبَآٮِٕكُمْ உங்கள் தந்தைகளின் اَوْ அல்லது بُيُوْتِ இல்லங்களிலிருந்து اُمَّهٰتِكُمْ உங்கள் தாய்மார்களின் اَوْ அல்லது بُيُوْتِ இல்லங்களிலிருந்து اِخْوَانِكُمْ உங்கள் சகோதரர்களின் اَوْ அல்லது بُيُوْتِ இல்லங்களிலிருந்து اَخَوٰتِكُمْ உங்கள் சகோதரிகளின் اَوْ அல்லது بُيُوْتِ இல்லங்களிலிருந்து اَعْمَامِكُمْ உங்கள் தந்தையின் சகோதரர்களின் اَوْ அல்லது بُيُوْتِ இல்லங்களிலிருந்து عَمّٰتِكُمْ உங்கள் மாமிகளின் اَوْ அல்லது بُيُوْتِ இல்லங்களிலிருந்து اَخْوَالِكُمْ உங்கள் தாய்மாமன்களின் اَوْ அல்லது بُيُوْتِ இல்லங்களிலிருந்து خٰلٰتِكُمْ உங்கள் தாயின் சகோதரிகளின் اَوْ அல்லது مَا எந்த مَلَكْتُمْ நீங்கள் உங்கள் உரிமையில் வைத்திருக்கிறீர்களோ مَّفَاتِحَهٗۤ அதன் சாவிகளை اَوْ அல்லது صَدِيْقِكُمْ‌ؕ உங்கள் நண்பனின் لَـيْسَ இல்லை عَلَيْكُمْ உங்கள் மீது جُنَاحٌ குற்றம் اَنْ تَاْكُلُوْا நீங்கள் உண்பது جَمِيْعًا நீங்கள் ஒன்றினைந்தவர்களாக اَوْ அல்லது اَشْتَاتًا‌ ؕ பிரிந்தவர்களாக فَاِذَا دَخَلْتُمْ நீங்கள் நுழைந்தால் بُيُوْتًا இல்லங்களில் فَسَلِّمُوْا சலாமை சொல்லுங்கள் عَلٰٓى மீது اَنْفُسِكُمْ உங்கள் تَحِيَّةً முகமனாகிய مِّنْ عِنْدِ اللّٰهِ அல்லாஹ்விடமிருந்து مُبٰرَكَةً அருள்நிறைந்த طَيِّبَةً‌  ؕ நல்ல كَذٰلِكَ இவ்வாறு يُبَيِّنُ தெளிவுபடுத்துகிறான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمُ உங்களுக்கு الْاٰيٰتِ வசனங்களை لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து விளங்குவதற்காக
24:61. (முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; உங்கள் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான - பாக்கியம் மிக்க - பரிசுத்தமான (“அஸ்ஸலாமு அலைக்கும்” என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள் - நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.  
24:62
24:62 اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰٓى اَمْرٍ جَامِعٍ لَّمْ يَذْهَبُوْا حَتّٰى يَسْتَاْذِنُوْهُ‌ ؕ اِنَّ الَّذِيْنَ يَسْتَـاْذِنُوْنَكَ اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ ۚ فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ நம்பிக்கையாளர்கள் எல்லாம் الَّذِيْنَ اٰمَنُوْا உண்மைப்படுத்தியவர்கள்தான் بِاللّٰهِ இன்னும் அல்லாஹ்வையும் وَرَسُوْلِهٖ இன்னும் அவனது தூதரையும் وَاِذَا كَانُوْا அவர்கள் இருந்தால் مَعَهٗ அவருடன் عَلٰٓى اَمْرٍ ஒரு காரியத்தில் جَامِعٍ பொது لَّمْ يَذْهَبُوْا செல்ல மாட்டார்கள் حَتّٰى يَسْتَاْذِنُوْهُ‌ ؕ அவரிடம் அவர்கள் அனுமதி கேட்காமல் اِنَّ الَّذِيْنَ يَسْتَـاْذِنُوْنَكَ நிச்சயமாக உங்களிடம் அனுமதி கேட்பவர்கள் اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் الَّذِيْنَ يُؤْمِنُوْنَ உண்மைப்படுத்தியவர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَرَسُوْلِهٖ‌ ۚ இன்னும் அவனது தூதரையும் فَاِذَا اسْتَاْذَنُوْكَ ஆகவே, அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால் لِبَعْضِ சில شَاْنِهِمْ தங்களின் காரியத்திற்கு فَاْذَنْ அனுமதி அளிப்பீராக لِّمَنْ شِئْتَ நீர் நாடியவருக்கு مِنْهُمْ அவர்களில் وَاسْتَغْفِرْ இன்னும் பாவமன்னிப்புக் கோருவீராக لَهُمُ அவர்களுக்காக اللّٰهَ‌ؕ அல்லாஹ்விடம் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
24:62. அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக; இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.
24:63
24:63 لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَيْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا‌ ؕ قَدْ يَعْلَمُ اللّٰهُ الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا‌ ۚ فَلْيَحْذَرِ الَّذِيْنَ يُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِيْبَهُمْ فِتْنَةٌ اَوْ يُصِيْبَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
لَا تَجْعَلُوْا ஆக்கிவிடாதீர்கள் دُعَآءَ சாபத்தை الرَّسُوْلِ தூதரின் بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியில் كَدُعَآءِ சபிப்பது போன்று بَعْضِكُمْ உங்களில் சிலர் بَعْضًا‌ ؕ சிலரை قَدْ திட்டமாக يَعْلَمُ நன்கறிவான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ يَتَسَلَّلُوْنَ எவர்கள்/நழுவிச் செல்கிறார்கள் مِنْكُمْ உங்களில் لِوَاذًا‌ ۚ மறைவாக فَلْيَحْذَرِ (அவர்கள்) உஷாராக இருக்கட்டும் الَّذِيْنَ يُخَالِفُوْنَ மாறுசெய்பவர்கள் عَنْ اَمْرِهٖۤ அவருடைய கட்டளைக்கு اَنْ تُصِيْبَهُمْ தங்களைஅடைவதை فِتْنَةٌ குழப்பம் اَوْ அல்லது يُصِيْبَهُمْ தங்களை அடைவதை عَذَابٌ தண்டனை اَ لِيْمٌ‏ வலிதரும்
24:63. (முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.
24:64
24:64 اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ‌ؕ قَدْ يَعْلَمُ مَاۤ اَنْـتُمْ عَلَيْهِؕ وَيَوْمَ يُرْجَعُوْنَ اِلَيْهِ فَيُنَـبِّـئُـهُمْ بِمَا عَمِلُوْا ‌ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ
اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக لِلّٰهِ அல்லாஹ்விற்கே சொந்தமானவை مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை وَالْاَرْضِ ؕ இன்னும் பூமியிலும் قَدْ திட்டமாக يَعْلَمُ அவன் நன்கறிந்தவன் مَاۤ اَنْـتُمْ நீங்கள் இருக்கும் عَلَيْهِؕ அதன் மீது وَيَوْمَ நாளில் يُرْجَعُوْنَ அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படும் اِلَيْهِ அவனிடம் فَيُنَـبِّـئُـهُمْ அவன் அவர்களுக்கு அறிவிப்பான் بِمَا عَمِلُوْا ؕ அவர்கள் செய்ததை وَاللّٰهُ அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
24:64. வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.