43. ஸூரத்துஜ் ஜுக்ருஃப் (பொன் அலங்காரம்)
மக்கீ, வசனங்கள்: 89

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
43:1
43:1 حٰمٓ ‌ ۛ‌ۚ‏
حٰمٓ  ۛ‌ۚ‏ ஹா மீம்
43:1. ஹா-மீம்
43:1. ஹா, மீம்.
43:2
43:2 وَالْكِتٰبِ الْمُبِيْنِ ‌ ۛ‌ۙ‏
وَالْكِتٰبِ வேதத்தின் மீது சத்தியமாக! الْمُبِيْنِ  ۛ‌ۙ‏ தெளிவான
43:2. வல் கிதாBபில் முBபீன்
43:2. விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.
43:3
43:3 اِنَّا جَعَلْنٰهُ قُرْءٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ‌ۚ‏
اِنَّا நிச்சயமாக நாம் جَعَلْنٰهُ இதை ஆக்கினோம் قُرْءٰنًا குர்ஆனாக عَرَبِيًّا அரபி மொழி لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ‌ۚ‏ நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக
43:3. இன்னா ஜ'அல்னாஹு குர்'ஆனன் 'அரBபிய்யல் ல'அல்லகும் தஃகிலூன்
43:3. நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்.
43:4
43:4 وَاِنَّهٗ فِىْۤ اُمِّ الْكِتٰبِ لَدَيْنَا لَعَلِىٌّ حَكِيْمٌؕ‏
وَاِنَّهٗ இன்னும் நிச்சயமாக இது فِىْۤ اُمِّ الْكِتٰبِ தாய் புத்தகத்தில் உள்ளதும் لَدَيْنَا நம்மிடம் உள்ள لَعَلِىٌّ மிக உயர்ந்ததும் حَكِيْمٌؕ‏ மகா ஞானமுடையதும்
43:4. வ இன்னஹூ Fபீ உம்மில் கிதாBபி லதய்னா ல'அலிய்யுன் ஹகீம்
43:4. இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக்கிறது. (இதுவே வேதங்களில்) மிக்க மேலானதும், ஞானம் மிக்கதுமாகும்.
43:5
43:5 اَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا اَنْ كُنْتُمْ قَوْمًا مُّسْرِفِيْنَ‏
اَفَنَضْرِبُ விட்டுவிடுவோமா عَنْكُمُ உங்களைப் பற்றி الذِّكْرَ கூறுவதை صَفْحًا மன்னித்து اَنْ كُنْتُمْ நீங்களோ இருக்க قَوْمًا மக்களாக مُّسْرِفِيْنَ‏ வரம்பு மீறுகின்ற(வர்கள்)
43:5. அFப னள்ரிBபு 'அன்குமுத் திக்ர ஸFப்ஹன் அன் குன்தும் கவ்மன் முஸ்ரிFபீன்
43:5. நீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகி விட்டீர்கள் என்பதற்காக, இந்த உபதேசத்தை உங்களைவிட்டு நாம் அகற்றி விடுவோமா?
43:6
43:6 وَكَمْ اَرْسَلْنَا مِنْ نَّبِىٍّ فِى الْاَوَّلِيْنَ‏
وَكَمْ எத்தனையோ اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் مِنْ نَّبِىٍّ நபிமார்களை فِى الْاَوَّلِيْنَ‏ முந்தியவர்களில்
43:6. வ கம் அர்ஸல்னா மின் னBபிய்யின் Fபில் அவ்வலீன்
43:6. அன்றியும், முன்னிருந்தோர்களிடமும் நாம் எத்தனையோ தூதர்களை அனுப்பியிருக்கிறோம்.
43:7
43:7 وَمَا يَاْتِيْهِمْ مِّنْ نَّبِىٍّ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
وَمَا يَاْتِيْهِمْ அவர்களிடம் வருவதில்லை مِّنْ نَّبِىٍّ எந்த ஒரு நபியும் اِلَّا தவிர كَانُوْا அவர்கள் இருந்தே بِهٖ அவரை يَسْتَهْزِءُوْنَ‏ அவர்கள் பரிகாசம் செய்கின்றவர்களாக
43:7. வமா யா'தீஹிம் மின் னBபிய்யின் இல்லா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
43:7. ஆனால் அவர்களிடம் வந்த நபி ஒவ்வொருவரையும் அவர்கள் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை.
43:8
43:8 فَاَهْلَـكْنَاۤ اَشَدَّ مِنْهُمْ بَطْشًا وَّمَضٰى مَثَلُ الْاَوَّلِيْنَ‏
فَاَهْلَـكْنَاۤ ஆகவேஅழித்தோம் اَشَدَّ மிக பலமானவர்களை مِنْهُمْ இவர்களைவிட بَطْشًا வலிமையால் وَّمَضٰى சென்றிருக்கிறது مَثَلُ உதாரணம் الْاَوَّلِيْنَ‏ முந்தியவர்களின்
43:8. Fப அஹ்லக்னா அஷத்த மின்ஹும் Bபத்ஷ(ன்)வ் வ மளா மதலுல் அவ்வலீன்
43:8. எனினும் இவர்களை விட மிக்க பலசாலிகளான அவர்களைப் பிடியாகப் பிடித்து நாம் அழித்து இருக்கிறோம்; (இவ்வாறாக உங்களுக்கு) முன்னிருந்தோரின் உதாரணம் நடந்தேறியிருக்கிறது.
43:9
43:9 وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ مَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ لَيَقُوْلُنَّ خَلَقَهُنَّ الْعَزِيْزُ الْعَلِيْمُۙ‏
وَلَٮِٕنْ سَاَلْتَهُمْ நீர் அவர்களிடம் கேட்டால் مَّنْ خَلَقَ யார் படைத்தான் السَّمٰوٰتِ வானங்களையும் وَالْاَرْضَ பூமியையும் لَيَقُوْلُنَّ நிச்சயமாக கூறுவார்கள் خَلَقَهُنَّ அவற்றைப் படைத்தான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْعَلِيْمُۙ‏ நன்கறிந்தவன்
43:9. வ ல'இன் ஸ அல்தஹும் மன் கலகஸ் ஸமாவாதி வல் அர்ள ல யகூலுன்ன கலக ஹுன்னல் 'அZஜீZஜுல் 'அலீம்
43:9. (நபியே!) நீர் அவர்களிடம்: “வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.
43:10
43:10 الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ مَهْدًا وَّ جَعَلَ لَكُمْ فِيْهَا سُبُلًا لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ‌ۚ‏
الَّذِىْ எப்படிப்பட்டவன் جَعَلَ அவன் ஆக்கினான் لَـكُمُ உங்களுக்கு الْاَرْضَ பூமியை مَهْدًا விரிப்பாக وَّ جَعَلَ இன்னும் ஏற்படுத்தினான் لَكُمْ உங்களுக்கு فِيْهَا அதில் سُبُلًا பாதைகளை لَّعَلَّكُمْ تَهْتَدُوْنَ‌ۚ‏ நீங்கள் சரியான பாதையில் செல்வதற்காக
43:10. அல்லதீ ஜ'அல லகுமுல் அர்ள மஹ்த(ன்)வ் வ ஜ'அல லகும் Fபீஹா ஸுBபுலன் ல'அல்லகும் தஹ்ததூன்
43:10. அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பிய இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.
43:11
43:11 وَالَّذِىْ نَزَّلَ مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ‌ۚ فَاَنْشَرْنَا بِهٖ بَلْدَةً مَّيْتًا‌ ۚ كَذٰلِكَ تُخْرَجُوْنَ‏
وَالَّذِىْ இன்னும் எப்படிப்பட்டவன் نَزَّلَ இறக்கினான் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءًۢ மழையை بِقَدَرٍ‌ۚ ஓர் அளவோடு فَاَنْشَرْنَا ஆக, நாம் உயிர்ப்பிக்கின்றோம் بِهٖ அதன் மூலம் بَلْدَةً பூமியை مَّيْتًا‌ ۚ இறந்து போன كَذٰلِكَ இவ்வாறுதான் تُخْرَجُوْنَ‏ நீங்கள் வெளியாக்கப்படுவீர்கள்
43:11. வல்லதீ னZஜ்Zஜல மினஸ் ஸமா'இ மா'அம் Bபிகதரின் Fப அன்ஷர்னா Bபிஹீ Bபல்ததம் மய்தா' கதாலிக துக்ரஜூன்
43:11. அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.
43:12
43:12 وَالَّذِىْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا وَجَعَلَ لَكُمْ مِّنَ الْفُلْكِ وَالْاَنْعَامِ مَا تَرْكَبُوْنَۙ‏
وَالَّذِىْ இன்னும் எப்படிப்பட்டவன் خَلَقَ அவன் படைத்தான் الْاَزْوَاجَ ஜோடிகள் كُلَّهَا எல்லாவற்றையும் وَجَعَلَ இன்னும் ஏற்படுத்தினான் لَكُمْ உங்களுக்கு مِّنَ الْفُلْكِ கப்பல்களிலும் وَالْاَنْعَامِ கால்நடைகளிலும் مَا تَرْكَبُوْنَۙ‏ நீங்கள் பயணம் செய்கின்றவற்றை
43:12. வல்லதீ கலகல் அZஜ்வாஜ குல்லஹா வ ஜ'அல லகும் மினல் Fபுல்கி வல்-அன்'ஆமி மா தர்கBபூன்
43:12. அவன் தான் ஜோடிகள் யாவையும் படைத்தான்; உங்களுக்காக, கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான் -
43:13
43:13 لِتَسْتَوٗا عَلٰى ظُهُوْرِهٖ ثُمَّ تَذْكُرُوْا نِعْمَةَ رَبِّكُمْ اِذَا اسْتَوَيْتُمْ عَلَيْهِ وَتَقُوْلُوْا سُبْحٰنَ الَّذِىْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَا كُنَّا لَهٗ مُقْرِنِيْنَۙ‏
لِتَسْتَوٗا நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும் عَلٰى ظُهُوْرِهٖ அவற்றின்முதுகுகளில் ثُمَّ பிறகு تَذْكُرُوْا நீங்கள் நினைவு கூர்வதற்காகவும் نِعْمَةَ அருட்கொடையை رَبِّكُمْ உங்கள் இறைவனின் اِذَا اسْتَوَيْتُمْ நீங்கள் ஸ்திரமாக அமரும்போது عَلَيْهِ அவற்றின் மீது وَتَقُوْلُوْا இன்னும் நீங்கள் கூறுவதற்காக سُبْحٰنَ மகா தூயவன் الَّذِىْ سَخَّرَ வசப்படுத்தி தந்தவன் لَنَا எங்களுக்கு هٰذَا இதை وَمَا كُنَّا நாங்கள் இருக்கவில்லை لَهٗ இதை مُقْرِنِيْنَۙ‏ கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக
43:13. லிதஸ்தவூ 'அலா ளுஹூரிஹீ தும்ம தத்குரூ னிஃமத ரBப்Bபிகும் இதஸ்தவய்தும் 'அலய்ஹி வ தகூலூ ஸுBப்ஹானல் லதீ ஸக்கர லன ஹாத வமா குன்னா லஹூ முக்ரினீன்
43:13. அவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக; அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து “இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்” என்று நீங்கள் கூறுவதற்காகவும்.
43:14
43:14 وَاِنَّاۤ اِلٰى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ‏
وَاِنَّاۤ இன்னும் நிச்சயமாக நாங்கள் اِلٰى பக்கம் رَبِّنَا எங்கள் இறைவனின் لَمُنْقَلِبُوْنَ‏ திரும்புகின்றவர்கள்
43:14. வ இன்னா இலா ரBப்Bபினா லமுன்கலிBபூன்
43:14. “மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள் (என்று பிரார்த்தித்துக் கூறவும் அவ்வாறு செய்தான்).
43:15
43:15 وَجَعَلُوْا لَهٗ مِنْ عِبَادِهٖ جُزْءًا‌ ؕ اِنَّ الْاِنْسَانَ لَـكَفُوْرٌ مُّبِيْنٌ ؕ‏
وَجَعَلُوْا அவர்கள் ஆக்கிவிட்டனர் لَهٗ அவனுக்கு مِنْ عِبَادِهٖ அவனது அடியார்களில் جُزْءًا‌ ؕ சிலரை اِنَّ الْاِنْسَانَ நிச்சயமாக மனிதன் لَـكَفُوْرٌ மகா நன்றி கெட்டவன் مُّبِيْنٌ ؕ‏ மிகத் தெளிவான
43:15. வ ஜ'அலூ லஹூ மின் 'இBபாதிஹீ ஜுZஜ்'ஆ; இன்னல் இன்ஸான ல கFபூருன் முBபீன்
43:15. இன்னும், அவர்கள் அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை அவனுக்கு(ப் பெண் சந்ததியை) ஆக்குகிறார்கள்; நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்.  
43:16
43:16 اَمِ اتَّخَذَ مِمَّا يَخْلُقُ بَنٰتٍ وَّاَصْفٰٮكُمْ بِالْبَنِيْنَ‏
اَمِ اتَّخَذَ எடுத்துக்கொண்டானா مِمَّا يَخْلُقُ தான் படைத்தவற்றில் بَنٰتٍ பெண் பிள்ளைகளை وَّاَصْفٰٮكُمْ இன்னும் உங்களுக்கு தேர்தெடுத்(துக் கொடுத்)தானா? بِالْبَنِيْنَ‏ ஆண் பிள்ளைகளை
43:16. அமித் தகத மிம்மா யக்லுகு Bபனாதி(ன்)வ் வ அஸ்Fபாகும் Bபில்Bபனீன்
43:16. அல்லது, தான் படைத்ததிலிருந்து அவன் தனக்கென பெண்மக்களை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண் மக்களை தேர்ந்தெடுத்து விட்டானா?
43:17
43:17 وَاِذَا بُشِّرَ اَحَدُهُمْ بِمَا ضَرَبَ لِلرَّحْمٰنِ مَثَلًا ظَلَّ وَجْهُهٗ مُسْوَدًّا وَّهُوَ كَظِيْمٌ‏
وَاِذَا بُشِّرَ நற்செய்தி கூறப்பட்டால் اَحَدُ ஒருவருக்கு هُمْ அவர்களில் بِمَا எதை ضَرَبَ அவர் விவரித்தாரோ لِلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு مَثَلًا தன்மையாக ظَلَّ மாறிவிடுகிறது وَجْهُهٗ அவரது முகம் مُسْوَدًّا கருப்பாக وَّهُوَ அவர் كَظِيْمٌ‏ துக்கப்படுகிறார்
43:17. வ இதா Bபுஷ்ஷிர அஹதுஹும் Bபிமா ளரBப லிர் ரஹ்மானி மதலன் ளல்ல வஜ்ஹுஹூ முஸ்வத்த(ன்)வ் வ ஹுவ களீம்
43:17. அர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.
43:18
43:18 اَوَمَنْ يُّنَشَّؤُا فِى الْحِلْيَةِ وَهُوَ فِى الْخِصَامِ غَيْرُ مُبِيْنٍ‏
يُّنَشَّؤُا யார் வளர்க்கப்படுகிறாரோ فِى الْحِلْيَةِ ஆபரணங்களில் وَهُوَ இன்னும் அவர் فِى الْخِصَامِ வாதிப்பதில் غَيْرُ مُبِيْنٍ‏ தெளிவற்றவராக
43:18. அவ மய் யுனஷ்ஷ'உ Fபில் ஹில்யதி வ ஹுவ Fபில் கிஸாமி கய்ரு முBபீன்
43:18. ஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத ஒன்றினையா (இணையாக்குகின்றனர்).
43:19
43:19 وَجَعَلُوا الْمَلٰٓٮِٕكَةَ الَّذِيْنَ هُمْ عِبَادُ الرَّحْمٰنِ اِنَاثًا‌ ؕ اَشَهِدُوْا خَلْقَهُمْ‌ ؕ سَتُكْتَبُ شَهَادَتُهُمْ وَيُسْــٴَـــلُوْنَ‏
وَجَعَلُوا இவர்கள் ஆக்கிவிட்டனர் الْمَلٰٓٮِٕكَةَ வானவர்களை الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் عِبَادُ அடியார்களாகிய الرَّحْمٰنِ பேரருளாளனின் اِنَاثًا‌ ؕ பெண்களாக اَشَهِدُوْا பார்த்தார்களா? خَلْقَهُمْ‌ ؕ அவர்கள் படைக்கப்பட்டதை سَتُكْتَبُ பதியப்படும் شَهَادَتُهُمْ இவர்களின் சாட்சி وَيُسْــٴَـــلُوْنَ‏ இன்னும் இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்
43:19. வ ஜ'அலுல் மலா'இகதல் லதீன ஹும் 'இBபாதுர் ரஹ்மானி இனாதா; 'அ ஷஹிதூ கல்கஹும்; ஸதுக்தBபு ஷஹாததுஹும் வ யுஸ்'அலூன்
43:19. அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.
43:20
43:20 وَقَالُوْا لَوْ شَآءَ الرَّحْمٰنُ مَا عَبَدْنٰهُمْ‌ؕ مَا لَهُمْ بِذٰلِكَ مِنْ عِلْمٍ‌ اِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَؕ‏
وَقَالُوْا இன்னும் கூறுகின்றனர் لَوْ شَآءَ நாடியிருந்தால் الرَّحْمٰنُ பேரருளாளன் مَا عَبَدْنٰهُمْ‌ؕ நாம் அவர்களை வணங்கியிருக்க மாட்டோம். مَا لَهُمْ இவர்களுக்கு இல்லை بِذٰلِكَ இதைப் பற்றி مِنْ عِلْمٍ‌ எந்த அறிவும் اِنْ هُمْ இவர்கள் இல்லை اِلَّا தவிர يَخْرُصُوْنَؕ‏ கற்பனை செய்கின்றவர்களே
43:20. வ காலூ லவ் ஷா'அர் ரஹ்மானு மா 'அBபத்னாஹும்; மா லஹும் Bபிதாலிக மின் 'இல்மின் இன் ஹும் இல்லா யக்ருஸூன்
43:20. மேலும், “அர் ரஹ்மான் நாடியிருந்தால், அவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்; அவர்களுக்கு இதைப்பற்றி யாதோர் அறிவுமில்லை; அவர்கள் பொய்யே கூறுகிறார்கள்.
43:21
43:21 اَمْ اٰتَيْنٰهُمْ كِتٰبًا مِّنْ قَبْلِهٖ فَهُمْ بِهٖ مُسْتَمْسِكُوْنَ‏
اٰتَيْنٰهُمْ நாம் அவர்களுக்குக் கொடுத்தோம் كِتٰبًا ஒரு வேதத்தை مِّنْ قَبْلِهٖ இதற்கு முன்னர் فَهُمْ அவர்கள் بِهٖ அதை مُسْتَمْسِكُوْنَ‏ பற்றிப் பிடித்திருக்கின்றார்கள்
43:21. அம் ஆதய்னாஹும் கிதாBபன் மின் கBப்லிஹீ Fபஹும் Bபிஹீ முஸ்தம்ஸிகூன்
43:21. அல்லது, அவர்கள் ஆதாரமாகக் கொள்வதற்காக இதற்கு முன்னால் நாம் அவர்களுக்கு ஏதாவதொரு வேதத்தை கொடுத்திருக்கிறோமா?
43:22
43:22 بَلْ قَالُـوْۤا اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰٓى اُمَّةٍ وَّاِنَّا عَلٰٓى اٰثٰرِهِمْ مُّهْتَدُوْنَ‏
بَلْ மாறாக قَالُـوْۤا அவர்கள் கூறுகின்றனர் اِنَّا நிச்சயமாக நாம் وَجَدْنَاۤ கண்டோம் اٰبَآءَنَا எங்கள் மூதாதைகளை عَلٰٓى اُمَّةٍ ஒரு கொள்கையில் وَّاِنَّا நிச்சயமாக நாங்கள் عَلٰٓى اٰثٰرِهِمْ அவர்களின் அடிச்சுவடுகள் மீதே مُّهْتَدُوْنَ‏ நேர்வழி நடப்போம்
43:22. Bபல் காலூ இன்னா வஜத்னா ஆBபா'அனா 'அலா உம்மதி(ன்)வ் வ இன்னா 'அலா ஆதாரிஹிம் முஹ்ததூன்
43:22. அப்படியல்ல! அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சுவடுகளையே பின்பற்றுகிறோம்.”
43:23
43:23 وَكَذٰلِكَ مَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِىْ قَرْيَةٍ مِّنْ نَّذِيْرٍ اِلَّا قَالَ مُتْرَفُوْهَاۤ اِنَّا وَجَدْنَاۤ اٰبَآءَنَا عَلٰٓى اُمَّةٍ وَّاِنَّا عَلٰٓى اٰثٰرِهِمْ مُّقْتَدُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறு مَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பியதில்லை مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فِىْ قَرْيَةٍ ஓர் ஊரில் مِّنْ نَّذِيْرٍ எந்த ஓர் எச்சரிப்பாளரையும் اِلَّا قَالَ கூறியே தவிர مُتْرَفُوْهَاۤ அதன் செல்வந்தர்கள் اِنَّا وَجَدْنَاۤ நிச்சயமாக நாம் கண்டோம் اٰبَآءَنَا எங்கள் மூதாதைகளை عَلٰٓى اُمَّةٍ ஒரு கொள்கையில் وَّاِنَّا நிச்சயமாக நாங்கள் عَلٰٓى اٰثٰرِهِمْ அவர்களின் அடிச்சுவடுகளை مُّقْتَدُوْنَ‏ பின்பற்றி நடப்போம்
43:23. வ கதாலிக மா அர்ஸல்னா மின் கBப்லிக Fபீ கர்யதிம் மின் னதீரின் இல்லா கால முத்ரFபூஹா இன்னா வஜத்னா ஆBபா'அனா 'அலா உம்மதி(ன்)வ் வ இன்னா 'அலா ஆதாரிஹிம் முக்ததூன்
43:23. இவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்: “நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளையே பின்பற்றுகின்றோம்” என்று கூறாதிருக்கவில்லை.
43:24
43:24 قٰلَ اَوَلَوْ جِئْتُكُمْ بِاَهْدٰى مِمَّا وَجَدْتُّمْ عَلَيْهِ اٰبَآءَكُمْ‌ ؕ قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلْـتُمْ بِهٖ كٰفِرُوْنَ‏
قٰلَ கூறினார் اَوَلَوْ جِئْتُكُمْ நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா بِاَهْدٰى மிகச் சிறந்த நேர்வழியை مِمَّا எதைவிட وَجَدْتُّمْ கண்டீர்களோ عَلَيْهِ அதன் மீது اٰبَآءَكُمْ‌ ؕ உங்கள் மூதாதைகளை قَالُوْۤا அவர்கள் கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் بِمَاۤ اُرْسِلْـتُمْ நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ بِهٖ அதை كٰفِرُوْنَ‏ நிராகரிப்பவர்கள்
43:24. கால அவ லவ் ஜி'துகும் Bபி அஹ்தா மிம்மா வஜத்த்தும் 'அலய்ஹி ஆBபா'அகும் காலூ இன்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ காFபிரூன்
43:24. (அப்பொழுது அத்தூதர்,) “உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள்: “நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்” என்று சொல்கிறார்கள்.
43:25
43:25 فَانْتَقَمْنَا مِنْهُمْ‌ فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ
فَانْتَقَمْنَا ஆகவே, நாம் பழிவாங்கினோம் مِنْهُمْ‌ அவர்களிடம் فَانْظُرْ ஆக, நீர் கவனிப்பீராக! كَيْفَ எப்படி كَانَ இருந்தது عَاقِبَةُ முடிவு الْمُكَذِّبِيْنَ‏ பொய்ப்பித்தவர்களின்
43:25. Fபன்தகம்னா மின்ஹும் Fபன்ளுர் கய்Fப கான 'ஆகிBபதுல் முகத்திBபீன்
43:25. ஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக!
43:26
43:26 وَاِذْ قَالَ اِبْرٰهِيْمُ لِاَبِيْهِ وَقَوْمِهٖۤ اِنَّنِىْ بَرَآءٌ مِّمَّا تَعْبُدُوْنَۙ‏
وَاِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! اِبْرٰهِيْمُ இப்ராஹீம் لِاَبِيْهِ தனது தந்தைக்கு(ம்) وَقَوْمِهٖۤ தனது மக்களுக்கும் اِنَّنِىْ بَرَآءٌ நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன் مِّمَّا تَعْبُدُوْنَۙ‏ நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும்
43:26. வ இத் கால இBப்ராஹீமு லிஅBபீஹி வ கவ்மிஹீ இன்னனீ Bபரா'உம் மிம்மா தஃBபுதூன்
43:26. அன்றியும், இப்ராஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி: “நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்” என்று கூறியதையும்;
43:27
43:27 اِلَّا الَّذِىْ فَطَرَنِىْ فَاِنَّهٗ سَيَهْدِيْنِ‏
اِلَّا الَّذِىْ فَطَرَنِىْ என்னைப் படைத்தவனைத் தவிர فَاِنَّهٗ நிச்சயமாக அவன் سَيَهْدِيْنِ‏ எனக்கு நேர்வழி காட்டுவான்
43:27. இல்லல் லதீ Fபதரனீ Fப இன்னஹூ ஸ யஹ்தீன்
43:27. “என்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்). அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான்” (என்றும் கூறியதை நினைவு கூர்வீராக)!
43:28
43:28 وَ جَعَلَهَا كَلِمَةًۢ بَاقِيَةً فِىْ عَقِبِهٖ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏
وَ جَعَلَهَا இதை ஆக்கினார் كَلِمَةًۢ ஒரு வாக்கியமாக بَاقِيَةً நீடித்து இருக்கின்ற(து) فِىْ عَقِبِهٖ தனது சந்ததிகளில் لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ அவர்கள் திரும்ப வேண்டும் என்பதற்காக
43:28. வ ஜ'அலஹா கலிமதன் Bபாகியதன் Fபீ 'அகிBபிஹீ ல 'அல்லஹும் யர்ஜி'ஊன்
43:28. இன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்ராஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.
43:29
43:29 بَلْ مَتَّعْتُ هٰٓؤُلَاۤءِ وَاٰبَآءَهُمْ حَتّٰى جَآءَهُمُ الْحَقُّ وَرَسُوْلٌ مُّبِيْنٌ‏
بَلْ மாறாக مَتَّعْتُ நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம் هٰٓؤُلَاۤءِ இவர்களுக்கு(ம்) وَاٰبَآءَ மூதாதைகளுக்கும் هُمْ இவர்களின் حَتّٰى இறுதியாக جَآءَ வந்தது هُمُ அவர்களிடம் الْحَقُّ உண்மையான வேதம் وَرَسُوْلٌ தூதரும் مُّبِيْنٌ‏ தெளிவான
43:29. Bபல் மத்தஃது ஹா'உலா'இ வ ஆBபா'அஹும் ஹத்தா ஜா'அ ஹுமுல் ஹக்கு வ ரஸூலுன் முBபீன்
43:29. எனினும், இவர்களிடம் உண்மையும் தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.
43:30
43:30 وَلَمَّا جَآءَهُمُ الْحَقُّ قَالُوْا هٰذَا سِحْرٌ وَّاِنَّا بِهٖ كٰفِرُوْنَ‏
وَلَمَّا جَآءَ வந்த போது هُمُ அவர்களிடம் الْحَقُّ உண்மையான வேதம் قَالُوْا கூறினார்கள் هٰذَا سِحْرٌ இது சூனியம் وَّاِنَّا நிச்சயமாக நாங்கள் بِهٖ இதை كٰفِرُوْنَ‏ நிராகரிப்பவர்கள்
43:30. வ லம்மா ஜா'அஹுமுல் ஹக்கு காலூ ஹாதா ஸிஹ்ரு(ன்)வ் வ இன்னா Bபிஹீ காFபிரூன்
43:30. ஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம் வந்த போது “இது சூனியமே தான்; நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கின்றோம்” என்று அவர்கள் கூறினர்.
43:31
43:31 وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيْمٍ‏
وَقَالُوْا அவர்கள் கூறுகின்றனர் لَوْلَا نُزِّلَ இறக்கப்பட வேண்டாமா! هٰذَا الْقُرْاٰنُ இந்த குர்ஆன் عَلٰى رَجُلٍ மனிதர் மீது مِّنَ الْقَرْيَتَيْنِ இந்த இரண்டு ஊர்களில் உள்ள عَظِيْمٍ‏ ஒரு பெரிய(வர்)
43:31. வ காலூ லவ் லா னுZஜ்Zஜில ஹாதல் குர்'ஆனு 'அலா ரஜுலின் மினல் கர்யதய்னி 'அளீம்
43:31. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்: இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா?”
43:32
43:32 اَهُمْ يَقْسِمُوْنَ رَحْمَتَ رَبِّكَ‌ ؕ نَحْنُ قَسَمْنَا بَيْنَهُمْ مَّعِيْشَتَهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَـتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِيًّا‌ ؕ وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ‏
اَهُمْ يَقْسِمُوْنَ அவர்கள் பங்கு வைக்கின்றனரா? رَحْمَتَ அருளை رَبِّكَ‌ ؕ உமது இறைவனின் نَحْنُ நாம்தான் قَسَمْنَا பங்குவைத்தோம். بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் مَّعِيْشَتَهُمْ அவர்களது வாழ்க்கையை فِى الْحَيٰوةِ الدُّنْيَا இவ்வுலக வாழ்வில் وَرَفَعْنَا இன்னும் உயர்வாக்கினோம் بَعْضَهُمْ அவர்களில் சிலரை فَوْقَ மேலாக بَعْضٍ சிலருக்கு دَرَجٰتٍ தகுதிகளால் لِّيَـتَّخِذَ எடுத்துக் கொள்வதற்காக بَعْضُهُمْ அவர்களில் சிலர் بَعْضًا சிலரை سُخْرِيًّا‌ ؕ பணியாளராக وَرَحْمَتُ அருள்தான் رَبِّكَ உமது இறைவனின் خَيْرٌ மிகச் சிறந்ததாகும் مِّمَّا يَجْمَعُوْنَ‏ அவர்கள் சேகரிப்பதைவிட
43:32. 'அ ஹும் யக்ஸிமூன ரஹ்மத ரBப்Bபிக்; னஹ்னு கஸம்னா Bபய்னஹும் ம'ஈஷதஹும் Fபில் ஹயாதித் துன்யா வ ரFபஃனா Bபஃளஹும் Fபவ்க Bபஃளின் தரஜாதின் லி யத்தகித Bபஃளுஹும் Bபஃளன் ஸுக்ரிய்யா; வ ரஹ்மது ரBப்Bபிக கய்ருன் மிம்மா யஜ்ம'ஊன்
43:32. உமது இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்கள்? இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையே நாமே பங்கிட்டு இருக்கிறோம்.” இவர்களில் சிலர், சிலரை ஊழியத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.
43:33
43:33 وَلَوْلَاۤ اَنْ يَّكُوْنَ النَّاسُ اُمَّةً وَّاحِدَةً لَّجَـعَلْنَا لِمَنْ يَّكْفُرُ بِالرَّحْمٰنِ لِبُيُوْتِهِمْ سُقُفًا مِّنْ فِضَّةٍ وَّمَعَارِجَ عَلَيْهَا يَظْهَرُوْنَۙ‏
وَلَوْلَاۤ இல்லையெனில் اَنْ يَّكُوْنَ ஆகிவிடுவார்கள் என்று النَّاسُ மக்கள் اُمَّةً சமுதாயமாக وَّاحِدَةً ஒரே ஒரு لَّجَـعَلْنَا ஆக்கியிருப்போம் لِمَنْ يَّكْفُرُ நிராகரிப்பவர்களுக்கு بِالرَّحْمٰنِ ரஹ்மானை لِبُيُوْتِهِمْ அவர்களின் வீடுகளுக்கு سُقُفًا முகடுகளை(யும்) مِّنْ فِضَّةٍ வெள்ளியினால் ஆன وَّمَعَارِجَ ஏணிகளையும் عَلَيْهَا அவற்றின் மீது يَظْهَرُوْنَۙ‏ ஏறுவார்கள்
43:33. வ லவ் லா அ(ன்)ய் யகூனன் னாஸு உம்மத(ன்)வ் வாஹிததன் லஜ'அல்னா லிம(ன்)ய் யக்Fபுரு Bபிர் ரஹ்மானி லி Bபுயூதிஹிம் ஸுகுFபன் மின் Fபிள்ளதி(ன்)வ் வ ம'ஆரிஜ 'அலய்ஹா யள்ஹரூன்
43:33. நிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.
43:34
43:34 وَلِبُيُوْتِهِمْ اَبْوَابًا وَّسُرُرًا عَلَيْهَا يَتَّكِـــٴُـوْنَۙ‏
وَلِبُيُوْتِهِمْ இன்னும் அவர்களின் வீடுகளுக்கு اَبْوَابًا கதவுகளையும் وَّسُرُرًا கட்டில்களையும் عَلَيْهَا அவற்றின் மீது يَتَّكِـــٴُـوْنَۙ‏ அவர்கள் சாய்ந்து படுப்பார்கள்
43:34. வ லி Bபுயூதிஹிம் அBப்வாBப(ன்)வ் வ ஸுருரன் 'அலய்ஹா யத்தகி'ஊன்
43:34. அவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).
43:35
43:35 وَزُخْرُفًا‌ ؕ وَاِنْ كُلُّ ذٰ لِكَ لَمَّا مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ وَالْاٰخِرَةُ عِنْدَ رَبِّكَ لِلْمُتَّقِيْنَ
وَزُخْرُفًا‌ ؕ இன்னும் தங்கத்தையும் وَاِنْ كُلُّ எல்லாம் இல்லை ذٰ لِكَ இவை لَمَّا مَتَاعُ இன்பங்களே தவிர الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ உலக வாழ்க்கையின் وَالْاٰخِرَةُ மறுமை عِنْدَ رَبِّكَ உமது இறைவனிடம் لِلْمُتَّقِيْنَ‏ இறையச்சமுள்ளவர்களுக்கு
43:35. வ Zஜுக்ருFபா; வ இன் குல்லு தாலிக லம்மா மதா'உல் ஹயாதித் துன்யா; வல் ஆகிரது 'இன்த ரBப்Bபிக லில்முத்தகீன்
43:35. தங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வேறில்லை. ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம்.  
43:36
43:36 وَمَنْ يَّعْشُ عَنْ ذِكْرِ الرَّحْمٰنِ نُقَيِّضْ لَهٗ شَيْطٰنًا فَهُوَ لَهٗ قَرِيْنٌ‏
وَمَنْ يَّعْشُ யார் புறக்கணிப்பாரோ عَنْ ذِكْرِ நினைவு கூர்வதை الرَّحْمٰنِ பேரருளாளனை نُقَيِّضْ நாம் சாட்டிவிடுவோம் لَهٗ அவருக்கு شَيْطٰنًا ஒரு ஷைத்தானை فَهُوَ لَهٗ அவன் அவருக்கு قَرِيْنٌ‏ நண்பனாக
43:36. வ மய் யஃஷு 'அன் திக்ரிர் ரஹ்மானி னுகய்யிள் லஹூ ஷய்தானன் Fபஹுவ லஹூ கரீன்
43:36. எவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.
43:37
43:37 وَاِنَّهُمْ لَيَصُدُّوْنَهُمْ عَنِ السَّبِيْلِ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ مُّهْتَدُوْنَ‏
وَاِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் لَيَصُدُّوْنَهُمْ அவர்களை தடுக்கின்றனர் عَنِ السَّبِيْلِ பாதையிலிருந்து وَيَحْسَبُوْنَ இன்னும் எண்ணுகிறார்கள் اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் مُّهْتَدُوْنَ‏ நேர்வழி நடப்பவர்கள்தான்
43:37. வ இன்னஹும் ல யஸுத்தூ னஹும் 'அனிஸ் ஸBபீலி வ யஹ்ஸBபூன அன்னஹும் முஹ்ததூன்
43:37. இன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
43:38
43:38 حَتّٰٓى اِذَا جَآءَنَا قَالَ يٰلَيْتَ بَيْنِىْ وَبَيْنَكَ بُعْدَ الْمَشْرِقَيْنِ فَبِئْسَ الْقَرِيْنُ‏
حَتّٰٓى இறுதியாக اِذَا جَآءَ அவன் வரும் போது نَا நம்மிடம் قَالَ கூறுவான் يٰلَيْتَ இருக்க வேண்டுமே! بَيْنِىْ எனக்கு மத்தியிலும் وَبَيْنَكَ உனக்கு மத்தியிலும் بُعْدَ இடைப்பட்ட தூரம் الْمَشْرِقَيْنِ கிழக்கிற்கும் மேற்கிற்கும் فَبِئْسَ الْقَرِيْنُ‏ அவன் மிகக் கெட்ட நண்பன்
43:38. ஹத்தா இதா ஜா'அனா கால யா லய்த Bபய்னீ வ Bபய்னக Bபுஃதல் மஷ்ரிகய்னி FபBபி'ஸல் கரீன்
43:38. எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்):- “ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!” (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்” என்று கூறுவான்.
43:39
43:39 وَلَنْ يَّنْفَعَكُمُ الْيَوْمَ اِذْ ظَّلَمْتُمْ اَنَّكُمْ فِى الْعَذَابِ مُشْتَرِكُوْنَ‏
وَلَنْ يَّنْفَعَكُمُ உங்களுக்கு அறவே பலனளிக்காது الْيَوْمَ இன்றைய தினம் اِذْ ظَّلَمْتُمْ நீங்கள் அநியாயம் செய்த காரணத்தால் اَنَّكُمْ நிச்சயமாக நீங்கள் فِى الْعَذَابِ வேதனையில் مُشْتَرِكُوْنَ‏ இணைந்திருப்பது
43:39. வ லய் யன்Fப'அகுமுல் யவ்ம இத் ளலம்தும் அன்னகும் Fபில் 'அதாBபி முஷ்தரிகூன்
43:39. (அப்போது) “நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது; நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
43:40
43:40 اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ اَوْ تَهْدِى الْعُمْىَ وَمَنْ كَانَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
اَفَاَنْتَ تُسْمِعُ நீர் செவி ஏற்க வைக்க முடியுமா? الصُّمَّ அந்த செவிடர்களை اَوْ அல்லது تَهْدِى நீர் நேர்வழி நடத்திட முடியுமா? الْعُمْىَ அந்த குருடர்களை وَمَنْ كَانَ இன்னும் இருப்பவர்களை فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
43:40. அFப அன்த துஸ்மி'உஸ் ஸும்ம அவ் தஹ்தில் 'உம்ய வ மன் கான Fபீ ளலாலின் முBபீன்
43:40. ஆகவே (நபியே!) நீர் செவிடனை கேட்குமாறு செய்ய முடியுமா? அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா?
43:41
43:41 فَاِمَّا نَذْهَبَنَّ بِكَ فَاِنَّا مِنْهُمْ مُّنْتَقِمُوْنَۙ‏
فَاِمَّا ஆகவே, ஒன்று نَذْهَبَنَّ நிச்சயமாக நாம் மரணிக்கச் செய்வோம் بِكَ உம்மை فَاِنَّا நிச்சயமாக நாம் مِنْهُمْ அவர்களிடம் مُّنْتَقِمُوْنَۙ‏ பழிவாங்குவோம்
43:41. Fப இம்மா னத்ஹBபன்ன Bபிக Fப இன்னா மின்ஹும் முன்தகிமூன்
43:41. எனவே உம்மை நாம் (இவ்வுலகை விட்டும்) எடுத்துக் கொண்ட போதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி தீர்ப்போம்.
43:42
43:42 اَوْ نُرِيَنَّكَ الَّذِىْ وَعَدْنٰهُمْ فَاِنَّا عَلَيْهِمْ مُّقْتَدِرُوْنَ‏
اَوْ அல்லது نُرِيَنَّكَ நாம் உமக்கு காண்பிப்போம் الَّذِىْ وَعَدْنٰهُمْ அவர்களுக்கு நாம் வாக்களித்ததை فَاِنَّا நிச்சயமாக நாம் عَلَيْهِمْ அவர்கள் மீது مُّقْتَدِرُوْنَ‏ முழு ஆற்றல் உள்ளவர்கள்
43:42. அவ் னுரியன்னகல் லதீ வ'அத்னாஹும் Fப இன்னா 'அலய்ஹிம் முக்ததிரூன்
43:42. அல்லது நாம் அவர்களுக்கு (எச்சரித்து) வாக்களித்துள்ளதை (வேதனையை) நீர் காணும் படிச் செய்வோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றலுடையோராய் இருக்கின்றோம்.
43:43
43:43 فَاسْتَمْسِكْ بِالَّذِىْۤ اُوْحِىَ اِلَيْكَ‌ ۚ اِنَّكَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
فَاسْتَمْسِكْ ஆகவே, உறுதியாக பற்றிப்பிடிப்பீராக! بِالَّذِىْۤ اُوْحِىَ வஹீ அறிவிக்கப்பட்டதை اِلَيْكَ‌ ۚ உமக்கு اِنَّكَ நிச்சயமாக நீர் عَلٰى صِرَاطٍ பாதையில் مُّسْتَقِيْمٍ‏ நேரான(து)
43:43. Fபஸ்தம்ஸிக் Bபில்லதீ ஊஹிய இலய்க இன்னக 'அலா ஸிராதின் முஸ்தகீம்
43:43. (நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர்.
43:44
43:44 وَاِنَّهٗ لَذِكْرٌ لَّكَ وَلِقَوْمِكَ‌ ۚ وَسَوْفَ تُسْأَلُوْنَ
وَاِنَّهٗ நிச்சயமாக இது لَذِكْرٌ ஒரு சிறப்பாகும் لَّكَ உமக்கு(ம்) وَلِقَوْمِكَ‌ ۚ உமது மக்களுக்கும் وَسَوْفَ تُسْأَلُوْنَ உங்களிடம் விரைவில் விசாரிக்கப்படும்
43:44. வ இன்னஹூ ல திக்ருன் லக வ லிகவ்மிக வ ஸவ்Fப துஸ்'அலூன்
43:44. நிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது; (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.
43:45
43:45 وَسْــٴَــلْ مَنْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رُّسُلِنَاۤ اَجَعَلْنَا مِنْ دُوْنِ الرَّحْمٰنِ اٰلِهَةً يُّعْبَدُوْنَ
وَسْــٴَــلْ இன்னும் நீர் விசாரிப்பீராக! مَنْ اَرْسَلْنَا நாம் அனுப்பியவர்களை مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் مِنْ رُّسُلِنَاۤ நமது தூதர்களில் اَجَعَلْنَا ஏற்படுத்தி இருக்கின்றோமா? مِنْ دُوْنِ الرَّحْمٰنِ ரஹ்மானை அன்றி اٰلِهَةً கடவுள்களை يُّعْبَدُوْنَ‏ வணங்கப்படுகின்ற(னர்)
43:45. வஸ்'அல் மன் அர்ஸல்னா மின் கBப்லிக மிர் ருஸுலினா 'அ ஜ'அல்னா மின் தூனிர் ரஹ்மானி ஆலிஹத(ன்)ய் யுஃBபதூன்
43:45. நம்முடைய தூதர்களில் உமக்கு முன்னே நாம் அனுப்பியவர்களை “அர் ரஹ்மானையன்றி வணங்கப்படுவதற்காக (வேறு) தெய்வங்களை நாம் ஏற்படுத்தினோமா?” என்று நீர் கேட்பீராக.  
43:46
43:46 وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَاۤ اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۫ٮِٕه  فَقَالَ اِنِّىْ رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் مُوْسٰى மூசாவை بِاٰيٰتِنَاۤ நமது அத்தாட்சிகளுடன் اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் وَمَلَا۫ٮِٕه இன்னும் அவனது பிரமுகர்களிடம்  فَقَالَ அவர் கூறினார் اِنِّىْ நிச்சயமாக நான் رَسُوْلُ தூதர் ஆவேன் رَبِّ இறைவனுடைய الْعٰلَمِيْنَ‏ அகிலங்களின்
43:46. வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா இலா Fபிர்'அவ்ன வ மல'இஹீ Fபகால இன்னீ ரஸூலு ரBப்Bபில் 'ஆலமீன்
43:46. மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமுதாய தலைவர்களிடமும் திட்டமாக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி:) “நிச்சயமாக நாம் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று கூறினார்.
43:47
43:47 فَلَمَّا جَآءَهُمْ بِاٰيٰتِنَاۤ اِذَا هُمْ مِّنْهَا يَضْحَكُوْنَ‏
فَلَمَّا جَآءَ அவர் வந்த போது هُمْ அவர்களிடம் بِاٰيٰتِنَاۤ நமது அத்தாட்சிகளுடன் اِذَا அப்போது هُمْ அவர்கள் مِّنْهَا அவற்றைப் பார்த்து يَضْحَكُوْنَ‏ சிரித்தார்கள்
43:47. Fபலம்ம ஜா'அஹும் Bபி ஆயாதினா இதா ஹும் மின்ஹா யள்ஹகூன்
43:47. ஆனால், அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்தபோது, அவர்கள் அவற்றைக் கொண்டு (பரிகசித்துச்) சிரித்தனர்.
43:48
43:48 وَمَا نُرِيْهِمْ مِّنْ اٰيَةٍ اِلَّا هِىَ اَكْبَرُ مِنْ اُخْتِهَا‌ وَ اَخَذْنٰهُمْ بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏
وَمَا نُرِيْهِمْ அவர்களுக்கு நாம் காண்பிக்க மாட்டோம் مِّنْ اٰيَةٍ ஓர் அத்தாட்சியை اِلَّا தவிர هِىَ அது اَكْبَرُ பெரியதாக இருந்தே مِنْ اُخْتِهَا‌ அதன் சகோதரியை விட وَ اَخَذْنٰهُمْ இன்னும் நாம் அவர்களைப் பிடித்தோம் بِالْعَذَابِ வேதனையால் لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ அல்லது திரும்புவதற்காக
43:48. வமா னுரீஹிம் மின் ஆயதின் இல்லா ஹிய அக்Bபரு மின் உக்திஹா வ அகத்னாஹும் Bபில்'அதாBபி ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
43:48. ஆனால் நாம் அவர்களுக்குக் காட்டிய ஒவ்வோர் அத்தாட்சியும், அடுத்ததை விட மிகவும் பெரிதாகவே இருந்தது; எனினும் அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக நாம் அவர்களை வேதனையைக் கொண்டே பிடித்தோம்.
43:49
43:49 وَقَالُوْا يٰۤاَيُّهَ السَّاحِرُ ادْعُ لَنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ‌ۚ اِنَّنَا لَمُهْتَدُوْنَ‏
وَقَالُوْا அவர்கள் கூறினர் يٰۤاَيُّهَ السَّاحِرُ ஓ சூனியக்காரரே! ادْعُ நீர் பிரார்த்திப்பீராக! لَنَا எங்களுக்காக رَبَّكَ உமது இறைவனிடம் بِمَا عَهِدَ அவன் வாக்களித்ததை عِنْدَكَ‌ۚ உம்மிடம் اِنَّنَا நிச்சயமாக நாங்கள் لَمُهْتَدُوْنَ‏ நேர்வழி பெறுவோம்
43:49. வ காலூ யா அய்யுஹஸ் ஸாஹிருத்'உ லனா ரBப்Bபக Bபிமா 'அஹித 'இன்தக இன்னனா லமுஹ்ததூன்
43:49. மேலும், அவர்கள்: “சூனியக்காரரே (உம் இறைவன்) உம்மிடம் அறுதிமானம் செய்திருப்பதால், நீர் எங்களுக்காக உம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தனை செய்)யும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை பெற்று விடுவோம்” என்று கூறினார்கள்.
43:50
43:50 فَلَمَّا كَشَفْنَا عَنْهُمُ الْعَذَابَ اِذَا هُمْ يَنْكُثُوْنَ‏
فَلَمَّا كَشَفْنَا நாம் அகற்றும்போது عَنْهُمُ அவர்களை விட்டும் الْعَذَابَ வேதனையை اِذَا هُمْ அப்போது அவர்கள் يَنْكُثُوْنَ‏ முறித்து விடுகின்றனர்
43:50. Fபலம்மா கஷFப்னா 'அன்ஹுமுல் 'அதாBப இதா ஹும் யன்குதூன்
43:50. எனினும், நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியதும், அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்து விட்டார்கள்.
43:51
43:51 وَنَادٰى فِرْعَوْنُ فِىْ قَوْمِهٖ قَالَ يٰقَوْمِ اَلَيْسَ لِىْ مُلْكُ مِصْرَ وَهٰذِهِ الْاَنْهٰرُ تَجْرِىْ مِنْ تَحْتِىْ‌ۚ اَفَلَا تُبْصِرُوْنَؕ‏
وَنَادٰى அழைத்தான் فِرْعَوْنُ ஃபிர்அவ்ன் فِىْ قَوْمِهٖ தனது மக்களை قَالَ கூறினான் يٰقَوْمِ என் மக்களே! اَلَيْسَ இல்லையா? لِىْ எனக்கு சொந்தமானது مُلْكُ ஆட்சி مِصْرَ எகிப்துடைய وَهٰذِهِ இந்த الْاَنْهٰرُ ஆறுகள் تَجْرِىْ ஓடுகின்றன مِنْ تَحْتِىْ‌ۚ எனக்கு முன்னால் اَفَلَا تُبْصِرُوْنَؕ‏ நீங்கள் உற்று நோக்கவில்லையா?
43:51. வ னாதா Fபிர்'அவ்னு Fபீ கவ்மிஹீ கால யா கவ்மி அலய்ஸ லீ முல்கு மிஸ்ர வ ஹாதிஹில் அன்ஹாரு தஜ்ரீ மின் தஹ்தீ அFபலா துBப்ஸிரூன்
43:51. மேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்: “என்னுடைய சமூகத்தாரே! இந்த மிஸ்ரு (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா? என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா?
43:52
43:52 اَمْ اَنَا خَيْرٌ مِّنْ هٰذَا الَّذِىْ هُوَ مَهِيْنٌ ۙ وَّلَا يَكَادُ يُبِيْنُ‏
اَمْ ? اَنَا நான் خَيْرٌ சிறந்தவன் مِّنْ هٰذَا இவரை விட الَّذِىْ எவர் هُوَ அவர் مَهِيْنٌ ۙ பலவீனமானவர் وَّلَا يَكَادُ يُبِيْنُ‏ இன்னும் தெளிவாகப் பேசமாட்டார்
43:52. அம் அன கய்ருன் மின் ஹாதல் லதீ ஹுவ மஹீனு(ன்)வ் வலா யகாது யுBபீன்
43:52. “அல்லது, இழிவானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா?
43:53
43:53 فَلَوْلَاۤ اُلْقِىَ عَلَيْهِ اَسْوِرَةٌ مِّنْ ذَهَبٍ اَوْ جَآءَ مَعَهُ الْمَلٰٓٮِٕكَةُ مُقْتَرِنِيْنَ‏
فَلَوْلَاۤ اُلْقِىَ போடப்பட வேண்டாமா? عَلَيْهِ அவர் மீது اَسْوِرَةٌ காப்புகள் مِّنْ ذَهَبٍ தங்கத்தின் اَوْ அல்லது جَآءَ வர வேண்டாமா! مَعَهُ அவருடன் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் مُقْتَرِنِيْنَ‏ சேர்ந்தவர்களாக
43:53. Fபலவ் லா உல்கிய 'அலய்ஹி அஸ்விரதுன் மின் தஹBபின் அவ் ஜா'அ ம'அஹுல் மலா'இகது முக்தரினீன்
43:53. “(என்னைவிட இவர் மேலாயிருப்பின்) ஏன் இவருக்கு பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது அவருடன் மலக்குகள் கூட்டமாக வர வேண்டாமா?”
43:54
43:54 فَاسْتَخَفَّ قَوْمَهٗ فَاَطَاعُوْهُ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ‏
فَاسْتَخَفَّ அற்பமாகக் கருதினான் قَوْمَهٗ தனது மக்களை فَاَطَاعُوْهُ‌ؕ ஆக, அவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்தனர் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் قَوْمًا மக்களாக فٰسِقِيْنَ‏ பாவிகளான
43:54. Fபஸ்தகFப்Fப கவ்மஹூ Fப அதா'ஊஹ்; இன்னஹும் கானூ கவ்மன் Fபாஸிகீன்
43:54. (இவ்வாறாக) அவன் தன் சமூகத்தாரை (அவர்களுடைய அறிவை) இலேசாக மதித்தான்; அவனுக்கு அவர்களும் கீழ்ப்படிந்து விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வரம்பை மீறிய சமூகத்தாராகவும் ஆகி விட்டார்கள்.
43:55
43:55 فَلَمَّاۤ اٰسَفُوْنَا انْتَقَمْنَا مِنْهُمْ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِيْنَۙ‏
فَلَمَّاۤ اٰسَفُوْنَا அவர்கள் நமக்கு கோபமூட்டவே انْتَقَمْنَا நாம் பழிவாங்கினோம் مِنْهُمْ அவர்களிடம் فَاَغْرَقْنٰهُمْ மூழ்கடித்தோம்/அவர்கள் اَجْمَعِيْنَۙ‏ அனைவரையும்
43:55. Fபலம்மா ஆஸFபூனன் தகம்னா மின்ஹும் Fப அக்ரக்னாஹும் அஜ்ம'ஈன்
43:55. பின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம்.
43:56
43:56 فَجَعَلْنٰهُمْ سَلَفًا وَّمَثَلًا لِّلْاٰخِرِيْنَ
فَجَعَلْنٰهُمْ நாம் ஆக்கினோம் سَلَفًا முன்னோடிகளாக(வும்) وَّمَثَلًا படிப்பினையாகவும் لِّلْاٰخِرِيْنَ‏ மற்றவர்களுக்கு
43:56. Fபஜ'அல்னாஹும் ஸலFப(ன்)வ் வ மதலன் லில் ஆகிரீன்
43:56. இன்னும், நாம், அவர்களை (அழிந்து போன) முந்தியவர்களாகவும், பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம்.  
43:57
43:57 وَلَمَّا ضُرِبَ ابْنُ مَرْيَمَ مَثَلًا اِذَا قَوْمُكَ مِنْهُ يَصِدُّوْنَ‏
وَلَمَّا ضُرِبَ விவரிக்கப்பட்டபோது ابْنُ மகன் مَرْيَمَ மர்யமின் مَثَلًا ஓர் உதாரணமாக اِذَا قَوْمُكَ அப்போது உமது மக்கள் مِنْهُ அதனால் يَصِدُّوْنَ‏ கூச்சல்போடுகின்றனர்
43:57. வ லம்மா ளுரிBபBப் னு மர்யம மதலன் இதா கவ்முக மின்ஹு யஸித்தூன்
43:57. இன்னும் மர்யமுடைய மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது, உம்முடைய சமூகத்தார் (பரிகசித்து) ஆர்ப்பரித்தார்கள்.
43:58
43:58 وَقَالُـوْٓا ءَاٰلِهَتُنَا خَيْرٌ اَمْ هُوَ‌ؕ مَا ضَرَبُوْهُ لَكَ اِلَّا جَدَلًا ؕ بَلْ هُمْ قَوْمٌ خَصِمُوْنَ‏
وَقَالُـوْٓا அவர்கள் கூறினார்கள் ءَاٰلِهَتُنَا ?/எங்கள் கடவுள்கள் خَيْرٌ சிறந்த(வர்களா) اَمْ அல்லது هُوَ‌ؕ அவர் مَا ضَرَبُوْهُ அவரை உதாரணமாக அவர்கள் பேசவில்லை لَكَ உமக்கு اِلَّا தவிர جَدَلًا ؕ தர்க்கம் செய்வதற்காகவே بَلْ மாறாக هُمْ அவர்கள் قَوْمٌ மக்கள் خَصِمُوْنَ‏ தர்க்கம் செய்கின்ற(வர்கள்)
43:58. வ காலூ 'அஆலிஹதுனா கய்ருன் அம் ஹூ; மா ளரBபூஹு லக இல்லா ஜதலா; Bபல்ஹும் கவ்முன் கஸிமூன்
43:58. மேலும்: “எங்கள் தெய்வங்கள் மேலா? அல்லது அவர் மேலா?” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.
43:59
43:59 اِنْ هُوَ اِلَّا عَبْدٌ اَنْعَمْنَا عَلَيْهِ وَجَعَلْنٰهُ مَثَلًا لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏
اِنْ هُوَ அவர் இல்லை اِلَّا தவிர عَبْدٌ ஓர் அடியாராகவே اَنْعَمْنَا அருள் புரிந்தோம் عَلَيْهِ அவர்மீது وَجَعَلْنٰهُ அவரை ஆக்கினோம் مَثَلًا ஓர் அத்தாட்சியாக لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏ இஸ்ரவேலர்களுக்கு
43:59. இன் ஹுவ இல்லா 'அBப்துன் அன்'அம்னா 'அலய்ஹி வ ஜ'அல்னாஹு மதலன் லி Bபனீ இஸ்ரா'ஈல்
43:59. அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை; அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
43:60
43:60 وَلَوْ نَشَآءُ لَجَـعَلْنَا مِنْكُمْ مَّلٰٓٮِٕكَةً فِى الْاَرْضِ يَخْلُفُوْنَ‏
وَلَوْ نَشَآءُ நாம் நாடினால் لَجَـعَلْنَا ஆக்கியிருப்போம் مِنْكُمْ உங்களுக்குப் பதிலாக مَّلٰٓٮِٕكَةً வானவர்களை فِى الْاَرْضِ இந்த பூமியில் يَخْلُفُوْنَ‏ வழித்தோன்றி வருவார்கள்
43:60. வ லவ் னஷா'உ லஜ'அல்னா மின்கும் மலா'இகதன் Fபில் அர்ளி யக்லுFபூன்
43:60. நாம் விரும்புவோமாயின் உங்களிடையே பூமியில் நாம் மலக்குகளை ஏற்படுத்தி, அவர்களை பின்தோன்றல்களாக்கி இருப்போம்.
43:61
43:61 وَاِنَّهٗ لَعِلْمٌ لِّلسَّاعَةِ فَلَا تَمْتَرُنَّ بِهَا وَاتَّبِعُوْنِ‌ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
وَاِنَّهٗ நிச்சயமாக அவர் لَعِلْمٌ அடையாளமாவார் لِّلسَّاعَةِ மறுமையின் فَلَا تَمْتَرُنَّ بِهَا ஆகவே அதில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள் وَاتَّبِعُوْنِ‌ؕ இன்னும் என்னை பின்பற்றுங்கள்! هٰذَا இதுதான் صِرَاطٌ நேரான(து) مُّسْتَقِيْمٌ‏ பாதையாகும்
43:61. வ இன்னஹூ ல 'இல்முன் லிஸ் ஸா'அதி Fப லா தம்தருன்ன Bபிஹா வத்தBபி'ஊன்; ஹாதா ஸிராதுன் முஸ்தகீம்
43:61. நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம்) நேரான வழி (என்று நபியே! நீர் கூறுவிராக!)
43:62
43:62 وَلَا يَصُدَّنَّكُمُ الشَّيْطٰنُ‌ ۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ‏
وَلَا يَصُدَّنَّكُمُ உங்களை தடுத்துவிட வேண்டாம் الشَّيْطٰنُ‌ ۚ ஷைத்தான் اِنَّهٗ நிச்சயமாக அவன் لَكُمْ உங்களுக்கு عَدُوٌّ எதிரி مُّبِيْنٌ‏ தெளிவான
43:62. வ லா யஸுத்தன் னகுமுஷ் ஷய்தானு இன்னஹூ லகும் 'அதுவ்வுன் முBபீன்
43:62. அன்றியும் ஷைத்தான் உங்களை (நேர்வழியை விட்டும்) தடுத்து விடாதிருக்கட்டும் - நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.
43:63
43:63 وَ لَمَّا جَآءَ عِيْسٰى بِالْبَيِّنٰتِ قَالَ قَدْ جِئْتُكُمْ بِالْحِكْمَةِ وَلِاُبَيِّنَ لَكُمْ بَعْضَ الَّذِىْ تَخْتَلِفُوْنَ فِيْهِ‌ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‏
وَ لَمَّا جَآءَ வந்த போது عِيْسٰى ஈஸா بِالْبَيِّنٰتِ தெளிவான அத்தாட்சிகளுடன் قَالَ அவர் கூறினார் قَدْ جِئْتُكُمْ திட்டமாக நான் உங்களிடம் வந்துள்ளேன் بِالْحِكْمَةِ ஞானத்துடன் وَلِاُبَيِّنَ விவரிப்பதற்காகவும் لَكُمْ உங்களுக்கு بَعْضَ சிலவற்றை الَّذِىْ எதில் تَخْتَلِفُوْنَ கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ فِيْهِ‌ ۚ அதில் فَاتَّقُوا اللّٰهَ ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! وَاَطِيْعُوْنِ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள்!
43:63. வ லம்மா ஜா'அ 'ஈஸா Bபில்Bபய்யினாதி கால கத் ஜி'துகும் Bபில் ஹிக்மதி வ லி-உBபய்யின லகும் Bபஃளல் லதீ தக்தலிFபூன Fபீஹி Fபத்தகுல் லாஹ வ அதீ'ஊன்
43:63. இன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது: “மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்” என்று கூறினார்.
43:64
43:64 اِنَّ اللّٰهَ هُوَ رَبِّىْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ‌ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
اِنَّ நிச்சயமாக اللّٰهَ هُوَ அல்லாஹ்தான் رَبِّىْ எனது இறைவனும் وَرَبُّكُمْ உங்கள் இறைவனும் فَاعْبُدُوْهُ‌ؕ ஆகவே, அவனையே வணங்குங்கள்! هٰذَا இதுதான் صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏ நேரான பாதையாகும்
43:64. இன்னல் லாஹ ஹுவ ரBப்Bபீ வ ரBப்Bபுகும் FபஃBபுதூஹ்; ஹாத ஸிராதும் முஸ்தகீம்
43:64. நிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).
43:65
43:65 فَاخْتَلَفَ الْاَحْزَابُ مِنْۢ بَيْنِهِمْ‌ۚ فَوَيْلٌ لِّلَّذِيْنَ ظَلَمُوْا مِنْ عَذَابِ يَوْمٍ اَلِيْمٍ‏
فَاخْتَلَفَ தர்க்கித்தனர் الْاَحْزَابُ கூட்டங்கள் مِنْۢ بَيْنِهِمْ‌ۚ தங்களுக்கு மத்தியில் فَوَيْلٌ நாசம் உண்டாகட்டும் لِّلَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்களுக்கு مِنْ عَذَابِ வேதனையின் يَوْمٍ நாளில் اَلِيْمٍ‏ வலி தரக்கூடியது
43:65. Fபக்தலFபல் அஹ்ZஜாBபு மின் Bபய்னிஹிம் Fப வய்லுன் லில் லதீன ளலமூ மின் 'அதாBபி யவ்மின் அலீம்
43:65. ஆனால், அவர்களிடையே (ஏற்பட்ட பல) பிரிவினர் தமக்குள் மாறுபட்டனர்; ஆதலின், அநியாயம் செய்தார்களே அவர்களுக்கு நோவினை தரும் நாளுடைய வேதனையின் கேடுதான் உண்டாகும்.
43:66
43:66 هَلْ يَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِيَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏
هَلْ يَنْظُرُوْنَ அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? اِلَّا தவிர السَّاعَةَ மறுமை اَنْ تَاْتِيَهُمْ அவர்களிடம் வருவதை بَغْتَةً திடீரென்று وَّهُمْ لَا يَشْعُرُوْنَ‏ அவர்கள் உணராமல் இருக்கின்ற நிலையில்
43:66. ஹல் யன்ளுரூன இல்லஸ் ஸா'அத அன் த'தியஹும் Bபக்தத(ன்)வ் வ ஹும் லா யஷ்'உரூன்
43:66. தங்களுக்கே தெரியாத விதத்தில் திடுகூறாக இவர்களுக்கு (இறுதி நாளின்) வேளை வருவதைத் தவிர, (வேறெதையும்) இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா?
43:67
43:67 اَلْاَخِلَّاۤءُ يَوْمَٮِٕذٍۢ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ اِلَّا الْمُتَّقِيْنَ ؕ
اَلْاَخِلَّاۤءُ நண்பர்கள் எல்லாம் يَوْمَٮِٕذٍۢ அந்நாளில் بَعْضُهُمْ அவர்களில் சிலர் لِبَعْضٍ சிலருக்கு عَدُوٌّ எதிரிகள் اِلَّا தவிர الْمُتَّقِيْنَ ؕ ‏ இறையச்சமுள்ளவர்களை
43:67. அல் அகில்லா'உ யவ்ம'இதின் Bபஃளுஹும் லிBபஃளின் 'அதுவ்வுன் இல்லல் முத்தகீன்
43:67. பயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள்.  
43:68
43:68 يٰعِبَادِ لَا خَوْفٌ عَلَيْكُمُ الْيَوْمَ وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ‌ۚ‏
يٰعِبَادِ என் அடியார்களே! لَا خَوْفٌ பயமில்லை عَلَيْكُمُ உங்களுக்கு الْيَوْمَ இன்று وَلَاۤ اَنْتُمْ تَحْزَنُوْنَ‌ۚ‏ இன்னும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்
43:68. யா 'இBபாதி லா கவ்Fபுன் 'அலய்குமுல் யவ்ம வ லா அன்தும் தஹ்Zஜனூன்
43:68. “என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை; நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்” (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்).
43:69
43:69 اَلَّذِيْنَ اٰمَنُوْا بِاٰيٰتِنَا وَكَانُوْا مُسْلِمِيْنَ‌ۚ‏
اَلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் بِاٰيٰتِنَا நமது வசனங்களை وَكَانُوْا இன்னும் இருந்தார்கள் مُسْلِمِيْنَ‌ۚ‏ முஸ்லிம்களாக
43:69. அல்லதீன ஆமனூ Bபி ஆயாதினா வ கானூ முஸ்லிமீன்
43:69. இவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர்.
43:70
43:70 اُدْخُلُوا الْجَنَّةَ اَنْتُمْ وَاَزْوَاجُكُمْ تُحْبَرُوْنَ‌‏
اُدْخُلُوا நுழையுங்கள் الْجَنَّةَ சொர்க்கத்தில் اَنْتُمْ நீங்களும் وَاَزْوَاجُكُمْ உங்கள் மனைவிகளும் تُحْبَرُوْنَ ‌‏ நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!
43:70. உத்குலுல் ஜன்னத அன்தும் வ அZஜ்வாஜுகும் துஹ்Bபரூன்
43:70. நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
43:71
43:71 يُطَافُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَّاَكْوَابٍ‌ۚ وَفِيْهَا مَا تَشْتَهِيْهِ الْاَنْفُسُ وَتَلَذُّ الْاَعْيُنُ‌ۚ وَاَنْتُمْ فِيْهَا خٰلِدُوْنَ‌ۚ‏
يُطَافُ சுற்றி வரப்படும் عَلَيْهِمْ அவர்களை بِصِحَافٍ தட்டுகளுடனும் مِّنْ ذَهَبٍ தங்கத்தினாலான وَّاَكْوَابٍ‌ۚ குவளைகளுடனும் وَفِيْهَا இன்னும் அதில் مَا تَشْتَهِيْهِ விரும்புகின்றவையும் الْاَنْفُسُ மனங்கள் وَتَلَذُّ الْاَعْيُنُ‌ۚ இன்னும் கண்கள் இன்புறுகின்றவையும் وَاَنْتُمْ فِيْهَا நீங்கள் அதில் خٰلِدُوْنَ‌ۚ‏ நிரந்தரமாக இருப்பீர்கள்
43:71. யுதாFபு 'அலய்ஹிம் Bபிஸிஹா Fபிம் மின் தஹBபி(ன்)வ் வ அக்வாBப், வ Fபீஹா மாதஷ்தஹீஹில் அன்Fபுஸு வ தலத்துல் அஃயுனு வ அன்தும் Fபீஹா காலிதூன்
43:71. பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன; இன்னும், “நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!” (என அவர்களிடம் சொல்லப்படும்.)
43:72
43:72 وَتِلْكَ الْجَنَّةُ الَّتِىْۤ اُوْرِثْتُمُوْهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
وَتِلْكَ இதுதான் الْجَنَّةُ அந்த சொர்க்கம் الَّتِىْۤ எது اُوْرِثْتُمُوْ நீங்கள் சொந்தமாக்கி வைக்கப்பட்டீர்கள் هَا அதை بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்த நன்மைகளினால்
43:72. வ தில்கல் ஜன்னதுல் லதீ ஊரித்துமூஹா Bபிமா குன்தும் தஃமலூன்
43:72. “நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள்.
43:73
43:73 لَكُمْ فِيْهَا فَاكِهَةٌ كَثِيْرَةٌ مِّنْهَا تَاْكُلُوْنَ‏
لَكُمْ உங்களுக்கு فِيْهَا அதில் فَاكِهَةٌ பழங்கள் كَثِيْرَةٌ அதிகமான مِّنْهَا அவற்றில் இருந்து تَاْكُلُوْنَ‏ நீங்கள் உண்பீர்கள்
43:73. லகும் Fபீஹா Fபாகிஹதுன் கதீரதுன் மின்ஹா த'குலூன்
43:73. “உங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்” (எனக் கூறப்படும்).
43:74
43:74 اِنَّ الْمُجْرِمِيْنَ فِىْ عَذَابِ جَهَنَّمَ خٰلِدُوْنَ ۚ ۖ‏
اِنَّ நிச்சயமாக الْمُجْرِمِيْنَ குற்றவாளிகள் فِىْ عَذَابِ வேதனையில் جَهَنَّمَ நரகத்தின் خٰلِدُوْنَ ۚ ۖ‏ நிரந்தரமாக இருப்பார்கள்
43:74. இன்னல் முஜ்ரிமீன Fபீ 'அதாBபி ஜஹன்னம காலிதூன்
43:74. நிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
43:75
43:75 لَا يُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيْهِ مُبْلِسُوْنَ‌ۚ‏
لَا يُفَتَّرُ (வேதனை) இலேசாக்கப்படாது عَنْهُمْ அவர்களை விட்டும் وَهُمْ அவர்கள் فِيْهِ அதில் مُبْلِسُوْنَ‌ۚ‏ நம்பிக்கை இழந்திருப்பார்கள்
43:75. லா யுFபத்தரு 'அன்ஹும் வ ஹும் Fபீஹி முBப்லிஸூன்
43:75. அவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது; அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள்.
43:76
43:76 وَمَا ظَلَمْنٰهُمْ وَ لٰـكِنْ كَانُوْا هُمُ الظّٰلِمِيْنَ‏
وَمَا ظَلَمْنٰهُمْ நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை وَ لٰـكِنْ எனினும் كَانُوْا இருந்தார்கள் هُمُ அவர்கள்தான் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
43:76. வமா ளலம்னாஹும் வ லாகின் கானூ ஹுமுள் ளாலிமீன்
43:76. எனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை; ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே.
43:77
43:77 وَنَادَوْا يٰمٰلِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ‌ؕ قَالَ اِنَّكُمْ مّٰكِثُوْنَ‏
وَنَادَوْا அவர்கள் அழைப்பார்கள் يٰمٰلِكُ மாலிக்கே! لِيَقْضِ அழித்துவிடட்டும்! عَلَيْنَا எங்களை رَبُّكَ‌ؕ உமது இறைவன் قَالَ அவர் கூறுவார் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مّٰكِثُوْنَ‏ தங்குவீர்கள்
43:77. வ னாதவ் யா மாலிகு லியக்ளி 'அலய்னா ரBப்Bபுக கால இன்னகும் மாகிதூன்
43:77. மேலும், அவர்கள் (நரகத்தில்) “யா மாலிக்” உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே!” என்று சப்தமிடுவார்கள்; அதற்கு அவர் “நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே” என்று கூறுவார்.
43:78
43:78 لَقَدْ جِئْنٰكُمْ بِالْحَـقِّ وَلٰـكِنَّ اَكْثَرَكُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ‏
لَقَدْ திட்டவட்டமாக جِئْنٰكُمْ உங்களிடம் வந்தோம் بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் كُمْ உங்களில் لِلْحَقِّ அந்த சத்தியத்தை كٰرِهُوْنَ‏ வெறுக்கின்றீர்கள்
43:78. லகத் ஜி'னாகும் Bபில்ஹக்கி வ லாகின்ன அக்தரகும் லில் ஹக்கி காரிஹூன்
43:78. நிச்சயமாக, நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம்; ஆனால் உங்களில் பெரும்பாலோர் சத்தியத்தை வெறுக்கிறவர்களாக இருந்தார்கள் (என்றும் கூறப்படும்).
43:79
43:79 اَمْ اَبْرَمُوْۤا اَمْرًا فَاِنَّا مُبْرِمُوْنَ‌ۚ‏
اَمْ اَبْرَمُوْۤا அவர்கள் முடிவு செய்து விட்டார்களா? اَمْرًا ஒரு காரியத்தை فَاِنَّا مُبْرِمُوْنَ‌ۚ‏ நிச்சயமாக நாங்கள்தான் முடிவு செய்வோம்
43:79. அம் அBப்ரமூ அம்ரன் Fபய்ன்னா முBப்ரிமூன்
43:79. அல்லது அவர்கள் (மக்கத்து காஃபிர்கள்) ஏதாவது முடிவு கட்டியிருக்கிறார்களா? ஆனால் (அனைத்துக் காரியங்களுக்கும்) முடிவு கட்டுகிறது நாம் தான்.
43:80
43:80 اَمْ يَحْسَبُوْنَ اَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوٰٮهُمْ‌ؕ بَلٰى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُوْنَ‏
اَمْ يَحْسَبُوْنَ அவர்கள் எண்ணுகின்றனரா? اَنَّا لَا نَسْمَعُ நாம் செவியுற மாட்டோம் سِرَّ இரகசிய பேச்சை(யும்) هُمْ அவர்களின் وَنَجْوٰٮهُمْ‌ؕ அவர்கள் கூடிப் பேசுவதையும் بَلٰى மாறாக وَرُسُلُنَا நமது தூதர்கள் لَدَيْهِمْ அவர்களிடம் இருந்து يَكْتُبُوْنَ‏ பதிவு செய்கின்றனர்
43:80. அம் யஹ்ஸBபூன அன்னா லா னஸ்ம'உ ஸிர்ரஹும் வ னஜ்வாஹும்; Bபலா வ ருஸுலுனா லதய்ஹிம் யக்துBபூன்
43:80. அல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்து கூடிப் பேசுவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா? அல்ல: மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்கள் (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.
43:81
43:81 قُلْ اِنْ كَانَ لِلرَّحْمٰنِ وَلَدٌ ۖ فَاَنَا اَوَّلُ الْعٰبِدِيْنَ‏
قُلْ கூறுவீராக! اِنْ كَانَ இருந்தால் لِلرَّحْمٰنِ ரஹ்மானுக்கு وَلَدٌ ۖ குழந்தை فَاَنَا நான்தான் اَوَّلُ முதலாமவன் الْعٰبِدِيْنَ‏ வணங்குபவர்களில்
43:81. குல் இன் கான லிர் ரஹ்மானி வலத்; Fப-அன அவ்வலுல் 'ஆBபிதீன்
43:81. (நபியே!) நீர் கூறும்: “அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!”
43:82
43:82 سُبْحٰنَ رَبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُوْنَ‏
سُبْحٰنَ மிகப் பரிசுத்தமானவன் رَبِّ அதிபதி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமியின் رَبِّ அதிபதி الْعَرْشِ அர்ஷுடைய عَمَّا يَصِفُوْنَ‏ அவர்கள் வர்ணிக்கின்ற வர்ணிப்புகளை விட்டும்
43:82. ஸுBப்ஹான ரBப்Bபிஸ் ஸமாவாதி வல் அர்ளி ரBப்Bபில் அர்ஷி 'அம்மா யஸிFபூன்
43:82. வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும் இறைவன். (அத்தகைய இறைவன் அவனுக்கு சந்ததி உண்டென்று) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மகா பரிசுத்தமானவன்.
43:83
43:83 فَذَرْهُمْ يَخُوْضُوْا وَيَلْعَبُوْا حَتّٰى يُلٰقُوْا يَوْمَهُمُ الَّذِىْ يُوْعَدُوْنَ‏
فَذَرْهُمْ ஆகவே அவர்களை விடுங்கள்! يَخُوْضُوْا அவர்கள் மூழ்கட்டும் وَيَلْعَبُوْا இன்னும் விளையாடட்டும்! حَتّٰى இறுதியாக يُلٰقُوْا அவர்கள் சந்திப்பார்கள் يَوْمَهُمُ அவர்களது நாளை الَّذِىْ எது يُوْعَدُوْنَ‏ அவர்கள் எச்சரிக்கப்படுகின்றார்கள்
43:83. Fபதர்ஹும் யகூளூ வ யல்'அBபூ ஹத்தா யுலாகூ யவ்மஹுமுல் லதீ யூ'அதூன்
43:83. ஆகையால், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய (வேதனையின்) நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்களை (வீண் விவாதத்தில்) மூழ்கியிருக்கவும், விளையாட்டில் கழிக்கவும் (நபியே!) நீர் விட்டு விடும்.
43:84
43:84 وَهُوَ الَّذِىْ فِى السَّمَآءِ اِلٰـهٌ وَّفِى الْاَرْضِ اِلٰـهٌ‌ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ‏
وَهُوَ الَّذِىْ அவன்தான் فِى السَّمَآءِ வானத்திலும் اِلٰـهٌ வணங்கப்படுபவன் وَّفِى الْاَرْضِ பூமியிலும் اِلٰـهٌ‌ ؕ வணங்கப்படுபவன் وَهُوَ அவன்தான் الْحَكِيْمُ மகா ஞானவான் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
43:84. வ ஹுவல் லதீ Fபிஸ்ஸமா'இ இலாஹு(ன்)வ் வ Fபில் அர்ளி இலாஹ்; வ ஹுவல் ஹகீமுல் 'அலீம்
43:84. அன்றியும், அவனே வானத்தின் நாயனும் பூமியின் நாயனும் ஆவான்; மேலும், அவனே ஞானம் மிக்கோன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
43:85
43:85 وَتَبٰـرَكَ الَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا‌ ۚ وَعِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌ ۚ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ‏
وَتَبٰـرَكَ மிக்க பாக்கியமுடையவன் الَّذِىْ எவன் لَهٗ அவனுக்கு உரியதோ مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا‌ ۚ இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் وَعِنْدَهٗ அவனிடமே عِلْمُ அறிவு இருக்கிறது السَّاعَةِ‌ ۚ மறுமையின் وَاِلَيْهِ அவன் பக்கமே تُرْجَعُوْنَ‏ நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
43:85. வ தBபாரகல் லதீ லஹூ முல்குஸ் ஸமாவாதி வல் அர்ளி வமா Bபய்னஹுமா வ 'இன்தஹூ 'இல்முஸ் ஸா'அதி வ இலய்ஹி துர்ஜ'ஊன்
43:85. அவன் பெரும் பாக்கியம் உடையவன்; வானங்கள், பூமி, இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆட்சி அவனுக்குடையதே, அவனிடம் தான் (இறுதி) வேளைக்குரிய ஞானமும் இருக்கிறது; மேலும், அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
43:86
43:86 وَلَا يَمْلِكُ الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِهِ الشَّفَاعَةَ اِلَّا مَنْ شَهِدَ بِالْحَـقِّ وَهُمْ يَعْلَمُوْنَ‏
وَلَا يَمْلِكُ உரிமை பெற மாட்டார்(கள்) الَّذِيْنَ எவர்களை يَدْعُوْنَ அவர்கள் அழைக்கின்றார்கள் مِنْ دُوْنِهِ அவனையன்றி الشَّفَاعَةَ சிபாரிசு செய்வதற்கு اِلَّا ஆனால் مَنْ எவர்கள் شَهِدَ சாட்சிகூறினார்(களோ) بِالْحَـقِّ உண்மைக்கு وَهُمْ அவர்கள் يَعْلَمُوْنَ‏ நன்கு அறிந்தவர்களாக
43:86. வ லா யம்லிகுல் லதீன யத்'ஊன மின் தூனிஹிஷ் ஷFபா'அத இல்லா மன் ஷஹித Bபில்ஹக்கி வ ஹும் யஃலமூன்
43:86. அன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். ஆனால் எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்காளாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதி கொண்டு பரிந்து பேசுவர்).
43:87
43:87 وَلَٮِٕنْ سَاَلْـتَهُمْ مَّنْ خَلَقَهُمْ لَيَقُوْلُنَّ اللّٰهُ‌ فَاَنّٰى يُؤْفَكُوْنَۙ‏
وَلَٮِٕنْ سَاَلْـتَهُمْ நீர் அவர்களிடம் கேட்டால் مَّنْ யார் خَلَقَهُمْ அவர்களைப் படைத்தான் لَيَقُوْلُنَّ நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள் اللّٰهُ‌ அல்லாஹ் فَاَنّٰى எப்படி يُؤْفَكُوْنَۙ‏ திருப்பப்படுகின்றார்கள்
43:87. வ ல'இன் ஸ அல்தஹும் மன் கலகஹும் ல யகூலுன் னல்லாஹு Fப அன்னா யு'Fபகூன்
43:87. மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?
43:88
43:88 وَقِيْلِهٖ يٰرَبِّ اِنَّ هٰٓؤُلَاۤءِ قَوْمٌ لَّا يُؤْمِنُوْنَ‌ۘ‏
وَقِيْلِهٖ இன்னும் அவருடைய கூற்றின் يٰرَبِّ என் இறைவா! اِنَّ நிச்சயமாக هٰٓؤُلَاۤءِ இவர்கள் قَوْمٌ மக்கள் لَّا يُؤْمِنُوْنَ‌ۘ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
43:88. வ கீலிஹீ யா ரBப்Bபி இன்ன ஹா'உலா'இ கவ்முல் லா யு'மினூன்
43:88. “என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள்” என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்).
43:89
43:89 فَاصْفَحْ عَنْهُمْ وَقُلْ سَلٰمٌ‌ؕ فَسَوْفَ يَعْلَمُوْنَ
فَاصْفَحْ ஆகவே, புறக்கணிப்பீராக! عَنْهُمْ அவர்களை وَقُلْ இன்னும் கூறிவிடுவீராக! سَلٰمٌ‌ؕ ஸலாம் فَسَوْفَ يَعْلَمُوْنَ‏ அவர்கள் விரைவில் அறிவார்கள்
43:89. Fபஸ்Fபஹ் 'அன்ஹும் வ குல் ஸலாம்; Fபஸவ்Fப யஃலமூன்
43:89. ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (உங்களுக்கு) 'சாந்தி' என்று கூறிவிடும். பின்னர் அவர்கள் (இதன் உண்மையை) அறிந்து கொள்வார்கள்.