60. ஸூரத்துல் மும்தஹினா (பரிசோதித்தல்)
மதனீ, வசனங்கள்: 13

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
60:1
60:1 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا عَدُوِّىْ وَعَدُوَّكُمْ اَوْلِيَآءَ تُلْقُوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَقَدْ كَفَرُوْا بِمَا جَآءَكُمْ مِّنَ الْحَـقِّ‌ ۚ يُخْرِجُوْنَ الرَّسُوْلَ وَاِيَّاكُمْ‌ اَنْ تُؤْمِنُوْا بِاللّٰهِ رَبِّكُمْ ؕ اِنْ كُنْـتُمْ خَرَجْتُمْ جِهَادًا فِىْ سَبِيْلِىْ وَ ابْتِغَآءَ مَرْضَاتِىْ ‌ۖ  تُسِرُّوْنَ اِلَيْهِمْ بِالْمَوَدَّةِ ‌ۖ  وَاَنَا اَعْلَمُ بِمَاۤ اَخْفَيْتُمْ وَمَاۤ اَعْلَنْتُمْ‌ؕ وَمَنْ يَّفْعَلْهُ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِيْلِ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا تَتَّخِذُوْا எடுத்துக் கொள்ளாதீர்கள் عَدُوِّىْ எனதுஎதிரிகளை(யும்) وَعَدُوَّكُمْ உங்கள் எதிரிகளையும் اَوْلِيَآءَ உற்ற நண்பர்களாக تُلْقُوْنَ வெளிப்படுத்துகின்ற اِلَيْهِمْ அவர்களிடம் بِالْمَوَدَّةِ அன்பை وَقَدْ திட்டமாக كَفَرُوْا நிராகரித்தனர் بِمَا جَآءَكُمْ உங்களிடம் வந்ததை مِّنَ الْحَـقِّ‌ ۚ சத்தியத்தை يُخْرِجُوْنَ வெளியேற்றுகின்றனர் الرَّسُوْلَ தூதரை(யும்) وَاِيَّاكُمْ‌ உங்களையும் اَنْ تُؤْمِنُوْا நீங்கள் நம்பிக்கை கொண்டதனால் بِاللّٰهِ அல்லாஹ்வை رَبِّكُمْ ؕ உங்கள் இறைவனாகிய اِنْ كُنْـتُمْ خَرَجْتُمْ நீங்கள் வெளியேறிஇருந்தால் جِهَادًا ஜிஹாது செய்வதற்காகவும் فِىْ سَبِيْلِىْ எனது பாதையில் وَ ابْتِغَآءَ தேடியும் مَرْضَاتِىْ என் பொருத்தத்தை ۖ  تُسِرُّوْنَ இரகசியமாக காட்டுகின்றீர்களா? اِلَيْهِمْ அவர்களிடம் بِالْمَوَدَّةِ அன்பை ۖ  وَاَنَا நான் اَعْلَمُ நன்கறிவேன் بِمَاۤ اَخْفَيْتُمْ நீங்கள் மறைப்பதையும் وَمَاۤ اَعْلَنْتُمْ‌ؕ நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் وَمَنْ யார் يَّفْعَلْهُ அதைச் செய்வாரோ مِنْكُمْ فَقَدْ உங்களில்/திட்டமாக ضَلَّ வழி கெட்டுவிட்டார் سَوَآءَ السَّبِيْلِ‏ நேரான பாதையை
60:1. ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும், உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக் காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; (ஏனெனில்) உங்களிடம் வந்துள்ள சத்திய (வேத)த்தை அவர்கள் நிராகரிக்கிறார்கள்; நீங்கள் உங்கள் இறைவனான அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டதற்காக, இத்தூதரையும், உங்களையும் வெளியேற்றுகிறார்கள்; என் பாதையில் போரிடுவதற்காகவும், என் பொருத்தத்தை நாடியும் நீங்கள் புறப்பட்டிருந்தால் (அவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்; அப்போது) நீங்கள் பிரியத்தால் அவர்களிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தி விடுகிறீர்கள்; ஆனால், நீங்கள் மறைத்துவைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிந்தவன். மேலும், உங்களிலிருந்தும் எவர் இதைச் செய்கிறாரோ அவர் நேர்வழியை திட்டமாக தவற விட்டுவிட்டார்.
60:2
60:2 اِنْ يَّثْقَفُوْكُمْ يَكُوْنُوْا لَـكُمْ اَعْدَآءً وَّيَبْسُطُوْۤا اِلَيْكُمْ اَيْدِيَهُمْ وَاَلْسِنَتَهُمْ بِالسُّوْٓءِ وَوَدُّوْا لَوْ تَكْفُرُوْنَؕ‏
اِنْ يَّثْقَفُوْكُمْ அவர்கள் உங்களை வசமாகப் பெற்றுக் கொண்டால் يَكُوْنُوْا அவர்கள் ஆகிவிடுவார்கள் لَـكُمْ உங்களுக்கு اَعْدَآءً எதிரிகளாக وَّيَبْسُطُوْۤا இன்னும் நீட்டுவார்கள் اِلَيْكُمْ உங்கள் பக்கம் اَيْدِيَهُمْ தங்கள் கரங்களையும் وَاَلْسِنَتَهُمْ தங்கள் நாவுகளையும் بِالسُّوْٓءِ தீங்கிழைக்க وَوَدُّوْا இன்னும் விரும்புகிறார்கள் لَوْ تَكْفُرُوْنَؕ‏ நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை
60:2. அவர்களுக்கு உங்கள் மீது வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் உங்களுக்கு விரோதிகளாகித் தம் கைகளையும், தம் நாவுகளையும் உங்களுக்குத் தீங்கிழைப்பதற்காக உங்கள்பால் நீட்டுவார்கள்; தவிர, நீங்களும் காஃபிர்களாக வேண்டும் என்று பிரியப்படுவார்கள்.
60:3
60:3 لَنْ تَـنْفَعَكُمْ اَرْحَامُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ ۛۚ يَوْمَ الْقِيٰمَةِ ۛۚ يَفْصِلُ بَيْنَكُمْ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
لَنْ تَـنْفَعَكُمْ உங்களுக்கு பலன் தரமாட்டார்கள் اَرْحَامُكُمْ உங்கள் இரத்த உறவுகளும் وَلَاۤ اَوْلَادُكُمْ ۛۚ உங்கள் பிள்ளைகளும் يَوْمَ الْقِيٰمَةِ ۛۚ மறுமை நாளில் يَفْصِلُ பிரித்து விடுவான் بَيْنَكُمْ‌ؕ உங்களுக்கு மத்தியில் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
60:3. உங்கள் உறவினரும்; உங்கள் மக்களும் கியாம நாளில் உங்களுக்கு எப்பயனும் அளிக்க மாட்டார்கள்; (அந்நாளில் அல்லாஹ்) உங்களிடையே தீர்ப்பளிப்பான்; அன்றியும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
60:4
60:4 قَدْ كَانَتْ لَـكُمْ اُسْوَةٌ حَسَنَةٌ فِىْۤ اِبْرٰهِيْمَ وَالَّذِيْنَ مَعَهٗ‌ۚ اِذْ قَالُوْا لِقَوْمِهِمْ اِنَّا بُرَءٰٓؤُا مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَآءُ اَبَدًا حَتّٰى تُؤْمِنُوْا بِاللّٰهِ وَحْدَهٗۤ اِلَّا قَوْلَ اِبْرٰهِيْمَ لِاَبِيْهِ لَاَسْتَغْفِرَنَّ لَـكَ وَمَاۤ اَمْلِكُ لَـكَ مِنَ اللّٰهِ مِنْ شَىْءٍ ‌ؕ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَاِلَيْكَ اَنَـبْنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ‏
قَدْ திட்டமாக كَانَتْ இருக்கிறது لَـكُمْ உங்களுக்கு اُسْوَةٌ முன்மாதிரி حَسَنَةٌ அழகிய فِىْۤ اِبْرٰهِيْمَ இப்ராஹீமிடத்திலும் وَالَّذِيْنَ எவர்கள் مَعَهٗ‌ۚ அவர்களுடன் اِذْ قَالُوْا அவர்கள் கூறிய சமயத்தை لِقَوْمِهِمْ தங்கள் மக்களுக்கு اِنَّا நிச்சயமாக நாங்கள் بُرَءٰٓؤُا விலகியவர்கள் مِنْكُمْ உங்களை விட்டும் وَمِمَّا تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி كَفَرْنَا நாங்கள் மறுத்துவிட்டோம் بِكُمْ உங்களை وَبَدَا வெளிப்பட்டுவிட்டன بَيْنَنَا எங்களுக்கு மத்தியிலும் وَبَيْنَكُمُ உங்களுக்கு மத்தியிலும் الْعَدَاوَةُ பகைமையும் وَالْبَغْضَآءُ குரோதமும் اَبَدًا எப்போதும் حَتّٰى تُؤْمِنُوْا நீங்கள் நம்பிக்கை கொள்கின்ற வரை بِاللّٰهِ அல்லாஹ் وَحْدَهٗۤ ஒருவனை மட்டும் اِلَّا எனினும் قَوْلَ கூறியதை اِبْرٰهِيْمَ இப்ராஹீம் لِاَبِيْهِ தனது தந்தைக்கு لَاَسْتَغْفِرَنَّ நிச்சயமாக நான் பாவமன்னிப்பு கேட்பேன் لَـكَ உமக்காக وَمَاۤ اَمْلِكُ நான் உரிமை பெறமாட்டேன் لَـكَ உமக்கு مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் مِنْ شَىْءٍ ؕ எதையும் رَبَّنَا எங்கள் இறைவா! عَلَيْكَ உம்மீது تَوَكَّلْنَا நாங்கள் நம்பிக்கை வைத்தோம் وَاِلَيْكَ உன் பக்கமே اَنَـبْنَا பணிவுடன் திரும்பிவிட்டோம் وَاِلَيْكَ الْمَصِيْرُ‏ உன் பக்கமே மீளுமிடம்
60:4. இப்ராஹீமிடமும், அவரோடு இருந்தவர்களிடமும், நிச்சயமாக உங்களுக்கு ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது; தம் சமூகத்தாரிடம் அவர்கள், “உங்களை விட்டும், இன்னும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகிறவற்றைவிட்டும், நாங்கள் நிச்சயமாக நீங்கிக் கொண்டோம்; உங்களையும் நாங்கள் நிராகரித்து விட்டோம்; அன்றியும் ஏகனான அல்லாஹ் ஒருவன் மீதே நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை, நமக்கும் உங்களுக்குமிடையில் பகைமையும், வெறுப்பும் நிரந்தரமாக ஏற்பட்டு விட்டன” என்றார்கள். ஆனால் இப்ராஹீம் தம் தந்தையை நோக்கி: “அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக (அவனுடைய வேதனையிலிருந்து) எதையும் தடுக்க எனக்குச் சக்தி கிடையாது; ஆயினும் உங்களுக்காக நான் அவனிடத்தில் நிச்சயமாக மன்னிப்புத் தேடுவேன்” எனக் கூறியதைத் தவிர (மற்ற எல்லாவற்றிலும் முன் மாதிரியிருக்கிறது, அன்றியும், அவர் கூறினார்): “எங்கள் இறைவா! உன்னையே முற்றிலும் சார்ந்திருக்கிறோம்; (எதற்கும்) நாங்கள் உன்னையே நோக்குகிறோம்; மேலும், உன்னிடமே எங்கள் மீளுதலும் இருக்கிறது,”
60:5
60:5 رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَـنَا رَبَّنَا‌ ۚ اِنَّكَ اَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
رَبَّنَا எங்கள் இறைவா لَا تَجْعَلْنَا எங்களை ஆக்கிவிடாதே فِتْنَةً ஒரு சோதனையாக لِّلَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களுக்கு وَاغْفِرْ மன்னிப்பாயாக! لَـنَا எங்களை رَبَّنَا‌ ۚ எங்கள் இறைவா اِنَّكَ اَنْتَ நிச்சயமாக நீதான் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
60:5. “எங்கள் இறைவா! காஃபிர்களுக்கு, எங்களைச் சோதனை(ப் பொருள்) ஆக ஆக்கிவிடாதே! எங்கள் இறைவா! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன் ஞானம் மிக்கவன்” (என்றும் வேண்டினார்).
60:6
60:6 لَقَدْ كَانَ لَـكُمْ فِيْهِمْ اُسْوَةٌ حَسَنَةٌ لِّمَنْ كَانَ يَرْجُوا اللّٰهَ وَالْيَوْمَ الْاٰخِرَ‌ ؕ وَمَنْ يَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِىُّ الْحَمِيْدُ
لَقَدْ திட்டவட்டமாக كَانَ இருக்கிறது لَـكُمْ உங்களுக்கு فِيْهِمْ அவர்களிடம் اُسْوَةٌ முன்மாதிரி حَسَنَةٌ அழகிய لِّمَنْ كَانَ இருப்பவருக்கு يَرْجُوا ஆதரவு வைப்பவராக اللّٰهَ அல்லாஹ்வையும் وَالْيَوْمَ الْاٰخِرَ‌ ؕ மறுமை நாளையும் وَمَنْ يَّتَوَلَّ யார்/விலகுவாரோ فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் هُوَ அவன் الْغَنِىُّ முற்றிலும் தேவையற்றவன் الْحَمِيْدُ‏ மகா புகழுக்குரியவன்
60:6. உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும், நம்புகிறார்களோ. அவர்களுக்கு திடமாக இவர்களில் ஓர் அழகிய முன்மாதிரியிருக்கிறது; ஆனால், எவர் (இந்நம்பிக்கையிலிருந்து) பின் வாங்குகிறாரோ: (அது அவருக்கு இழப்புதான்; ஏனெனில், எவரிடமிருந்தும்) அல்லாஹ் நிச்சயமாக எந்தத் தேவையுமில்லாதவன், புகழ் மிக்கவன்.  
60:7
60:7 عَسَى اللّٰهُ اَنْ يَّجْعَلَ بَيْنَكُمْ وَبَيْنَ الَّذِيْنَ عَادَيْتُمْ مِّنْهُمْ مَّوَدَّةً ؕ وَاللّٰهُ قَدِيْرٌ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
عَسَى اللّٰهُ اَنْ يَّجْعَلَ அல்லாஹ் ஏற்படுத்தலாம் بَيْنَكُمْ உங்களுக்கு மத்தியிலும் وَبَيْنَ மத்தியிலும் الَّذِيْنَ عَادَيْتُمْ நீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்கு مِّنْهُمْ அவர்களில் مَّوَدَّةً ؕ وَاللّٰهُ அன்பை/அல்லாஹ் قَدِيْرٌ‌ؕ பேராற்றலுடையவன் وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
60:7. உங்களுக்கும், அவர்களில் நின்றும் நீங்கள் விரோதித்திருக்கின்றீர்களே அவர்களுக்குமிடையே அல்லாஹ் பிரியத்தை உண்டாக்கி விடக்கூடும்; மேலும், அல்லாஹ் பேராற்றலுடையவன்; அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
60:8
60:8 لَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ وَلَمْ يُخْرِجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ اَنْ تَبَرُّوْهُمْ وَ تُقْسِطُوْۤا اِلَيْهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏
لَا يَنْهٰٮكُمُ உங்களை தடுக்க மாட்டான் اللّٰهُ அல்லாஹ் عَنِ الَّذِيْنَ எவர்களை விட்டும் لَمْ يُقَاتِلُوْكُمْ فِى الدِّيْنِ உங்களுடன் போர் செய்யவில்லையோ/மார்க்கத்தில் وَلَمْ يُخْرِجُوْكُمْ உங்களை வெளியேற்றவில்லையோ مِّنْ دِيَارِكُمْ உங்கள் இல்லங்களில் இருந்து اَنْ تَبَرُّوْهُمْ அவர்களுக்கு நீங்கள் நல்லது செய்வதை விட்டும் وَ تُقْسِطُوْۤا இன்னும் நீங்கள் நீதமாக நடப்பதை اِلَيْهِمْ‌ؕ அவர்களுடன் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يُحِبُّ நேசிக்கின்றான் الْمُقْسِطِيْنَ‏ நீதவான்களை
60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
60:9
60:9 اِنَّمَا يَنْهٰٮكُمُ اللّٰهُ عَنِ الَّذِيْنَ قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِ وَاَخْرَجُوْكُمْ مِّنْ دِيَارِكُمْ وَظَاهَرُوْا عَلٰٓى اِخْرَاجِكُمْ اَنْ تَوَلَّوْهُمْ‌ۚ وَمَنْ يَّتَوَلَّهُمْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
اِنَّمَا يَنْهٰٮكُمُ நிச்சயமாக உங்களை தடுப்பதெல்லாம் اللّٰهُ அல்லாஹ் عَنِ الَّذِيْنَ எவர்களை விட்டும் قَاتَلُوْكُمْ فِى الدِّيْنِ உங்களிடம் போர் செய்தார்களோ/ மார்க்கத்தில் وَاَخْرَجُوْكُمْ இன்னும் உங்களை வெளியேற்றினார்களோ مِّنْ دِيَارِكُمْ உங்கள் இல்லங்களில் இருந்து وَظَاهَرُوْا இன்னும் உதவினார்களோ عَلٰٓى اِخْرَاجِكُمْ உங்களை வெளியேற்றுவதற்கு اَنْ تَوَلَّوْهُمْ‌ۚ அவர்களை நீங்கள் நேசிப்பதை وَمَنْ யார் يَّتَوَلَّهُمْ அவர்களை நேசிக்கின்றார்களோ فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الظّٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்
60:9. நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.
60:10
60:10 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا جَآءَكُمُ الْمُؤْمِنٰتُ مُهٰجِرٰتٍ فَامْتَحِنُوْهُنَّ‌ ؕ اَللّٰهُ اَعْلَمُ بِاِيْمَانِهِنَّ‌ ۚ فَاِنْ عَلِمْتُمُوْهُنَّ مُؤْمِنٰتٍ فَلَا تَرْجِعُوْهُنَّ اِلَى الْكُفَّارِ‌ ؕ لَا هُنَّ حِلٌّ لَّهُمْ وَلَا هُمْ يَحِلُّوْنَ لَهُنَّ‌ ۚ وَاٰ تُوْهُمْ مَّاۤ اَنْفَقُوْا‌ ؕ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ اَنْ تَنْكِحُوْهُنَّ اِذَاۤ اٰ تَيْتُمُوْهُنَّ اُجُوْرَهُنَّ‌ ؕ وَلَا تُمْسِكُوْا بِعِصَمِ الْكَوَافِرِ وَسْـــٴَــلُوْا مَاۤ اَنْفَقْتُمْ وَ لْیَسْـَٔلُوْا مَاۤ اَنْفَقُوْا‌ ؕ ذٰ لِكُمْ حُكْمُ اللّٰهِ‌ ؕ يَحْكُمُ بَيْنَكُمْ‌ ؕ وَاللّٰهُ عَلِيْمٌ حَكِيْمٌ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا جَآءَكُمُ உங்களிடம் வந்தால் الْمُؤْمِنٰتُ முஃமினான பெண்கள் مُهٰجِرٰتٍ ஹிஜ்ரா செய்தவர்களாக فَامْتَحِنُوْ சோதியுங்கள்! هُنَّ‌ ؕ அவர்களை اَللّٰهُ அல்லாஹ் اَعْلَمُ மிக அறிந்தவன் بِاِيْمَانِهِنَّ‌ ۚ அவர்களின் ஈமானை فَاِنْ عَلِمْتُمُوْ நீங்கள் அறிந்தால் هُنَّ அவர்களை مُؤْمِنٰتٍ முஃமினான பெண்களாக فَلَا تَرْجِعُوْ திரும்ப அனுப்பாதீர்கள் هُنَّ அவர்களை اِلَى الْكُفَّارِ‌ ؕ நிராகரிப்பாளர்களிடம் لَا هُنَّ அல்ல/அவர்கள் حِلٌّ ஆகுமானவர்கள் لَّهُمْ அவர்களுக்கு وَلَا هُمْ يَحِلُّوْنَ அவர்கள் ஆகுமாக மாட்டார்கள் لَهُنَّ‌ ۚ அவர்களுக்கு وَاٰ تُوْ கொடுத்துவிடுங்கள்! هُمْ அவர்களுக்கு مَّاۤ اَنْفَقُوْا‌ ؕ அவர்கள் செலவு செய்ததை وَلَا جُنَاحَ அறவே குற்றமில்லை عَلَيْكُمْ உங்கள் மீது اَنْ تَنْكِحُوْ நீங்கள் மணமுடிப்பது هُنَّ அவர்களை اِذَاۤ اٰ تَيْتُمُوْ நீங்கள் கொடுத்தால் هُنَّ அவர்களுக்கு اُجُوْرَهُنَّ‌ ؕ அவர்களின் மஹ்ர்களை وَلَا تُمْسِكُوْا வைத்துக் கொள்ளாதீர்கள் بِعِصَمِ திருமண உறவை الْكَوَافِرِ நிராகரிக்கின்ற பெண்களின் وَسْـــٴَــلُوْا கேளுங்கள்! مَاۤ اَنْفَقْتُمْ நீங்கள் செலவு செய்ததை وَ لْیَسْـَٔلُوْا அவர்கள் கேட்கட்டும் مَاۤ اَنْفَقُوْا‌ ؕ அவர்கள் செலவு செய்ததை ذٰ لِكُمْ இது حُكْمُ சட்டமாகும் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் يَحْكُمُ தீர்ப்பளிக்கின்றான் بَيْنَكُمْ‌ ؕ உங்களுக்கு மத்தியில் وَاللّٰهُ அல்லாஹ் عَلِيْمٌ நன்கறிந்தவன் حَكِيْمٌ மகா ஞானவான்
60:10. ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்கள் ஹிஜ்ரத் செய்து (நாடு துறந்தவர்களாக) உங்களிடம் வந்தால், அவர்களை நீங்கள் பரிசோதித்துக் கொள்ளுங்கள்; அல்லாஹ் அவர்கள் ஈமானை நன்கறிந்தவன்; எனவே அவர்கள் முஃமினான (பெண்கள்) என நீங்கள் அறிந்தால், காஃபிர்களிடம் அவர்களைத் திருப்பியனுப்பி விடாதீர்கள்; ஏனெனில், அந்த பெண்கள் அந்த ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. அந்த ஆண்கள் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில்லை. (ஆனால், இப் பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்; அன்றியும் நீங்கள் அப்பெண்களுக்குரிய மஹரை கொடுத்து அவர்களை விவாகம் செய்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை; மேலும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பெண்களின் விவாக பந்தத்தை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டாம்; அன்றியும், நீங்கள் செலவு செய்திருந்ததை (அவர்கள் போய்ச் சேருவோரிடம்) கேளுங்கள்; (அவ்வாறே ஈமான் கொண்டு உங்களிடம் வந்து விட்டோருக்காகத்) தாங்கள் செலவு செய்ததை அவர்கள் (உங்களிடம்) கேட்கலாம் - இதுவே அல்லாஹ்வுடைய கட்டளையாகும்; உங்களிடையே அவன் (இவ்வாறே) தீர்ப்பு வழங்குகிறான் - மேலும், அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
60:11
60:11 وَاِنْ فَاتَكُمْ شَىْءٌ مِّنْ اَزْوَاجِكُمْ اِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَاٰ تُوا الَّذِيْنَ ذَهَبَتْ اَزْوَاجُهُمْ مِّثْلَ مَاۤ اَنْفَقُوْا‌ ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اَنْـتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ‏
وَاِنْ فَاتَكُمْ தப்பிச் சென்று விட்டால் شَىْءٌ யாராவது مِّنْ اَزْوَاجِكُمْ உங்கள் மனைவிமார்களில் اِلَى الْكُفَّارِ நிராகரிப்பாளர்களிடம் فَعَاقَبْتُمْ நீங்கள் தண்டித்தால் فَاٰ تُوا கொடுத்து விடுங்கள் الَّذِيْنَ எவர்கள் ذَهَبَتْ சென்றுவிட்டார்களோ اَزْوَاجُهُمْ அவர்களுடைய மனைவிமார்கள் مِّثْلَ போன்று مَاۤ اَنْفَقُوْا‌ ؕ அவர்கள் செலவு செய்ததை وَاتَّقُوا அஞ்சிக் கொள்ளுங்கள்! اللّٰهَ அல்லாஹ்வை الَّذِىْۤ எவன் اَنْـتُمْ நீங்கள் بِهٖ அவனை مُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்கிறீர்கள்
60:11. மேலும் உங்கள் மனைவியரிலிருந்து எவரேனும் உங்களைவிட்டுத் தப்பி, காஃபிர்களிடம் சென்ற பின்னர், நீங்கள் போர்ப்பொருள்களை அடைந்தால், எவர்கள் மனைவியர் சென்று விட்டனரோ, அவர்களுக்கு அவர்கள் செலவு செய்தது போன்றதை நீங்கள் கொடுங்கள்; அன்றியும், நீங்கள் எவன் மீது நம்பிக்கை கொண்டு முஃமின்களாக இருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
60:12
60:12 يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا جَآءَكَ الْمُؤْمِنٰتُ يُبَايِعْنَكَ عَلٰٓى اَنْ لَّا يُشْرِكْنَ بِاللّٰهِ شَيْــٴًــا وَّلَا يَسْرِقْنَ وَلَا يَزْنِيْنَ وَلَا يَقْتُلْنَ اَوْلَادَهُنَّ وَلَا يَاْتِيْنَ بِبُهْتَانٍ يَّفْتَرِيْنَهٗ بَيْنَ اَيْدِيْهِنَّ وَاَرْجُلِهِنَّ وَلَا يَعْصِيْنَكَ فِىْ مَعْرُوْفٍ‌ فَبَايِعْهُنَّ وَاسْتَغْفِرْ لَهُنَّ اللّٰهَ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
يٰۤاَيُّهَا النَّبِىُّ நபியே! اِذَا جَآءَكَ உம்மிடம் வந்தால் الْمُؤْمِنٰتُ முஃமினான பெண்கள் يُبَايِعْنَكَ உம்மிடம் அவர்கள் வாக்குறுதி கொடுப்பவர்களாக عَلٰٓى اَنْ لَّا يُشْرِكْنَ அவர்கள் இணைவைக்க மாட்டார்கள் بِاللّٰهِ அல்லாஹ்விற்கு شَيْــٴًــا எதையும் وَّلَا يَسْرِقْنَ இன்னும் திருட மாட்டார்கள் وَلَا يَزْنِيْنَ இன்னும் விபச்சாரம் செய்ய மாட்டார்கள் وَلَا يَقْتُلْنَ இன்னும் கொலை செய்ய மாட்டார்கள் اَوْلَادَهُنَّ தங்கள் குழந்தைகளை وَلَا يَاْتِيْنَ இன்னும் கொண்டுவர மாட்டார்கள் بِبُهْتَانٍ ஒரு பொய்யை يَّفْتَرِيْنَهٗ அதை தாங்கள் இட்டுக்கட்டுகின்றனர் بَيْنَ முன்னர் اَيْدِيْهِنَّ தங்கள் கைகள் وَاَرْجُلِهِنَّ இன்னும் தங்கள் கால்களுக்கு وَلَا يَعْصِيْنَكَ இன்னும் உமக்கு அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள் فِىْ مَعْرُوْفٍ‌ நல்ல காரியங்களில் فَبَايِعْهُنَّ அவர்களிடம் வாக்குறுதி வாங்குவீராக! وَاسْتَغْفِرْ பாவமன்னிப்புக் கோருவீராக! لَهُنَّ அவர்களுக்காக اللّٰهَ‌ؕ அல்லாஹ்விடம் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து; அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும், தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ, அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
60:13
60:13 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ قَدْ يَــٮِٕـسُوْا مِنَ الْاٰخِرَةِ كَمَا يَــٮِٕـسَ الْكُفَّارُ مِنْ اَصْحٰبِ الْقُبُوْرِ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا تَتَوَلَّوْا நீங்கள் நேசிக்காதீர்கள் قَوْمًا غَضِبَ மக்களை/கோபித்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ அவர்கள் மீது قَدْ يَــٮِٕـسُوْا திட்டமாக நம்பிக்கை இழந்தார்கள் مِنَ الْاٰخِرَةِ மறுமை விஷயத்தில் كَمَا يَــٮِٕـسَ நம்பிக்கை இழந்ததைப் போல் الْكُفَّارُ நிராகரிப்பாளர்கள் مِنْ اَصْحٰبِ الْقُبُوْرِ‏ புதைக்குழிகளில் சென்றவர்கள்
60:13. ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டிருக்கிறானோ, அந்தச் சமூகத்தாருடன் நேசம் கொள்ளாதீர்கள்; ஏனெனில் மண்ணறை வாசிகளைப் பற்றி (எழுப்பப்பட மாட்டார்கள் என்று) நிராகரிப்போர் நம்பிக்கை இழந்தது போல், மறுமையைப் பற்றி, நிச்சயமாக இவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.