11. ஸூரத்து ஹூது
மக்கீ, வசனங்கள்: 123

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
11:1
11:1 الٓرٰ‌ كِتٰبٌ اُحْكِمَتْ اٰيٰـتُهٗ ثُمَّ فُصِّلَتْ مِنْ لَّدُنْ حَكِيْمٍ خَبِيْرٍۙ‏
الٓرٰ‌ அலிஃப்; லாம்; றா. كِتٰبٌ ஒரு வேத நூல் اُحْكِمَتْ உறுதியாக்கப்பட்டன اٰيٰـتُهٗ இதன் வசனங்கள் ثُمَّ பிறகு فُصِّلَتْ தெளிவாக்கப்பட்டன مِنْ இருந்து لَّدُنْ இடம், புறம் حَكِيْمٍ மகா ஞானவான் خَبِيْرٍۙ‏ ஆழ்ந்தறிபவன்
11:1. அலிஃப், லாம், றா. (இது) வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு பின்னர் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன- மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவனும், ஞானம் மிக்கோனுமாகிய(இறை)வனிடம் இருந்து(வந்து)ள்ளன.
11:2
11:2 اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ ؕ اِنَّنِىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ وَّبَشِيْرٌ ۙ‏
اَلَّا تَعْبُدُوْۤا என்று/வணங்காதீர்கள் اِلَّا اللّٰهَ‌ ؕ அல்லாஹ்வைத் தவிர اِنَّنِىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு مِّنْهُ அவனிடமிருந்து نَذِيْرٌ எச்சரிப்பாளன் وَّبَشِيْرٌ ۙ‏ இன்னும் நற்செய்தியாளன்
11:2. நீங்கள் அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) வணங்காதீர்கள். “நிச்சயமாக நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பவனாகவும், நன்மாராயம் கூறுபவனாகவும், நான் அவனிடமிருந்து (அனுப்பப்பட்டு) இருக்கிறேன்” (என்றும்).
11:3
11:3 وَّاَنِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ يُمَتِّعْكُمْ مَّتَاعًا حَسَنًا اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى وَ يُؤْتِ كُلَّ ذِىْ فَضْلٍ فَضْلَهٗ ‌ؕ وَاِنْ تَوَلَّوْا فَاِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ كَبِيْرٍ‏
وَّاَنِ اسْتَغْفِرُوْا இன்னும் பாவமன்னிப்புக் கோருங்கள் என்று رَبَّكُمْ உங்கள்இறைவனிடம் ثُمَّ تُوْبُوْۤا பிறகு/திரும்புங்கள் اِلَيْهِ அவன் பக்கம் يُمَتِّعْكُمْ சுகமளிப்பான்/உங்களை مَّتَاعًا மிறூ Ñலினீ حَسَنًا @ஞீன்க்ஷிÕ اِلٰٓى اَجَلٍ வரை/ஒரு காலம் مُّسَمًّى குறிப்பிடப்பட்டது وَ يُؤْتِ இன்னும் கொடுப்பான் كُلَّ ஒவ்வொரு ذِىْ فَضْلٍ அதிகமுடையவருக்கு فَضْلَهٗ ؕ அதிகத்தை/அவருடைய وَاِنْ تَوَلَّوْا நீங்கள் புறக்கணித்தால் فَاِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ வேதனையை يَوْمٍ ஒரு நாளின் كَبِيْرٍ‏ மாபெரும்
11:3. “நீங்கள் உங்கள் இறைவனிடம் மன்னிப்பைத் தேடி (பாவங்களை விட்டு) அவனிடம் திரும்புங்கள்; (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் ஒரு குறித்த தவணைவரை உங்களுக்கு வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்துவான்; இன்னும், அருளுடைய ஒவ்வொருவருக்கும் (மறுமையில்) தன் அருளை (அதிகமாகவே) கொடுப்பான்; ஆனால் நீங்கள் (ஈமான் கொள்வதைப்) புறக்கணித்தால், மாபெரும் நாளின் வேதனை குறித்து நிச்சயமாக உங்களுக்காக நான் பயப்படுகிறேன்” (என்றும்).
11:4
11:4 اِلَى اللّٰهِ مَرْجِعُكُمْ‌ۚ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
اِلَى பக்கமே اللّٰهِ அல்லாஹ்வின் مَرْجِعُكُمْ‌ۚ உங்கள் மீளுமிடம் وَهُوَ அவன் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
11:4. “அல்லாஹ்விடமே நீங்கள் மீண்டு வர வேண்டியுள்ளது; அவன் எல்லாப்பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்” (என்றும் நபியே! நீர் கூறுவீராக).
11:5
11:5 اَلَاۤ اِنَّهُمْ يَثْنُوْنَ صُدُوْرَهُمْ لِيَسْتَخْفُوْا مِنْهُ‌ؕ اَلَا حِيْنَ يَسْتَغْشُوْنَ ثِيَابَهُمْۙ يَعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ‌ۚ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
اَلَاۤ அறிவீராக اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் يَثْنُوْنَ திருப்புகின்றனர் صُدُوْرَهُمْ நெஞ்சங்களை/தங்கள் لِيَسْتَخْفُوْا அல்லது மறைப்பதற்காக مِنْهُ‌ؕ அவனிடமிருந்து اَلَا அறிவீராக حِيْنَ நேரம், சமயம் يَسْتَغْشُوْنَ மறைத்துக் கொள்கிறார்கள் ثِيَابَهُمْۙ ஆடைகளால்/தங்கள் يَعْلَمُ அறிகின்றான் مَا يُسِرُّوْنَ எதை/மறைக்கிறார்கள் وَمَا يُعْلِنُوْنَ‌ۚ இன்னும் எதை/பகிரங்கப்படுத்துகிறார்கள் اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلِيْمٌۢ நன்கறிபவன் بِذَاتِ الصُّدُوْرِ‏ நெஞ்சங்களில் உள்ளவற்றை
11:5. “அவர்கள் தங்களை (அல்லாஹ்விடமிருந்து) மறைத்துக் கொள்வதற்காகத் தங்கள் இருதயங்களை (மறைத்து) மூடுகிறார்கள்! அவர்கள் தம் ஆடைகளால் (தம்மைப்) போர்த்திக்கொண்டாலும், அவர்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படையாகக் காட்டுவதையும் அவன் அறிகிறான் - ஏனெனில் நிச்சயமாக அவன் இதயங்களின் (இரகசியங்கள்) யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான்” (என்பதை அறிந்து கொள்வீர்களாக)!
11:6
11:6 وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا وَ يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا‌ؕ كُلٌّ فِىْ كِتٰبٍ مُّبِيْنٍ‏
وَمَا இல்லை مِنْ دَآ بَّةٍ எந்த/ஓர் உயிரினம் فِى الْاَرْضِ பூமியில் اِلَّا தவிர عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் رِزْقُهَا அதற்கு உணவளிப்பது وَ يَعْلَمُ இன்னும் அறிகின்றான் مُسْتَقَرَّهَا அவற்றின் தங்குமிடத்தை وَمُسْتَوْدَعَهَا‌ؕ இன்னும் அவற்றின் அடங்குமிடத்தை كُلٌّ எல்லாம் فِىْ كِتٰبٍ பதிவேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான(து)
11:6. இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.
11:7
11:7 وَ هُوَ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ فِىْ سِتَّةِ اَ يَّامٍ وَّكَانَ عَرْشُهٗ عَلَى الْمَآءِ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَلَٮِٕنْ قُلْتَ اِنَّكُمْ مَّبْعُوْثُوْنَ مِنْۢ بَعْدِ الْمَوْتِ لَيَـقُوْلَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏
وَ هُوَ அவன் الَّذِىْ எத்தகையவன் خَلَقَ படைத்தான் السَّمٰوٰتِ வானங்களை وَالْاَرْضَ இன்னும் பூமியை فِىْ سِتَّةِ இல்/ஆறு اَ يَّامٍ நாள்கள் وَّكَانَ இன்னும் இருந்தது عَرْشُهٗ அவனுடைய அர்ஷு عَلَى الْمَآءِ மீது/நீர் لِيَبْلُوَكُمْ அவன் சோதிப்பதற்காக/உங்களை اَيُّكُمْ உங்களில் யார் اَحْسَنُ மிக அழகியவர் عَمَلًا ؕ செயலால் وَلَٮِٕنْ قُلْتَ நீர் கூறினால் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مَّبْعُوْثُوْنَ எழுப்பப்படுவீர்கள் مِنْۢ بَعْدِ பின்னர் الْمَوْتِ இறப்பு لَيَـقُوْلَنَّ நிச்சயம் கூறுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْۤا நிராகரித்தார்கள் اِنْ இல்லை هٰذَاۤ இது اِلَّا தவிர سِحْرٌ சூனியமே مُّبِيْنٌ‏ பகிரங்கமான(து)
11:7. மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது. உங்களில் யார் அமலில் (செய்கையில்) மேலானவர் என்பதைச் சோதிக்கும் பொருட்டு (இவற்றைப் படைத்தான்; இன்னும் நபியே! அவர்களிடம்) “நிச்சயமாக நீங்கள் மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், (அதற்கு அவர்களிலுள்ள நிராகரிப்பவர்கள்) காஃபிர்கள், “இது தெளிவான சூனியத்தைத் தவிர வேறில்லை” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
11:8
11:8 وَلَٮِٕنْ اَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ اِلٰٓى اُمَّةٍ مَّعْدُوْدَةٍ لَّيَـقُوْلُنَّ مَا يَحْبِسُهٗؕ اَلَا يَوْمَ يَاْتِيْهِمْ لَـيْسَ مَصْرُوْفًا عَنْهُمْ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ
وَلَٮِٕنْ اَخَّرْنَا நாம் பிற்படுத்தினால் عَنْهُمُ அவர்களை விட்டு الْعَذَابَ வேதனையை اِلٰٓى اُمَّةٍ வரை/ஒரு காலம் مَّعْدُوْدَةٍ எண்ணப்பட்டது لَّيَـقُوْلُنَّ நிச்சயம் கூறுவார்கள் مَا எது? يَحْبِسُهٗؕ தடுக்கின்றது/அதை اَلَا அறிந்துகொள்ளுங்கள் يَوْمَ நாளில் يَاْتِيْهِمْ அது வரும்/அவர்களிடம் لَـيْسَ مَصْرُوْفًا அறவே திருப்பப்படாது عَنْهُمْ அவர்களை விட்டு وَحَاقَ بِهِمْ இன்னும்சூழும்/அவர்களை مَّا எது كَانُوْا இருந்தனர் بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகாசம்செய்கின்றனர்
11:8. (குஃப்ரின் காரணமாக அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய) வேதனையை ஒரு குறித்தகாலம் வரை நாம் பிற்படுத்தினால் “அதைத் தடுத்தது யாது?” என்று அவர்கள் நிச்சயமாக (ஏளனமாகக்) கேட்பார்கள்; அவர்களுக்கு வேதனை வரும் நாளில் அவர்களை விட்டும் (அது) தடுக்கப்படாது என்பதையும், எதை அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
11:9
11:9 وَلَٮِٕنْ اَذَقْنَا الْاِنْسَانَ مِنَّا رَحْمَةً ثُمَّ نَزَعْنٰهَا مِنْهُ‌ۚ اِنَّهٗ لَيَــــٴُـوْسٌ كَفُوْرٌ‏
وَلَٮِٕنْ اَذَقْنَا நாம் சுவைக்க வைத்தால் الْاِنْسَانَ மனிதனுக்கு مِنَّا நம்மிடமிருந்து رَحْمَةً ஓர் அருளை ثُمَّ பிறகு نَزَعْنٰهَا நீக்கினோம்/அதை مِنْهُ‌ۚ அவனிடமிருந்து اِنَّهٗ நிச்சயமாக அவன் لَيَــــٴُـوْسٌ நிராசையாளனாக كَفُوْرٌ‏ நன்றி கெட்டவனாக
11:9. நாம் நம்மிடமிருந்து நற்கிருபையை மனிதன் சுவைக்கும்படிச் செய்து; பின்பு அதனை அவனை விட்டும் நாம் நீக்கி விட்டால், நிச்சயமாக அவன் நிராசைப்பட்டு பெரும் நன்றி கெட்டவனாகி விடுகின்றான்.
11:10
11:10 وَلَٮِٕنْ اَذَقْنٰهُ نَـعْمَآءَ بَعْدَ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَـقُوْلَنَّ ذَهَبَ السَّيِّاٰتُ عَنِّىْ‌ ؕ اِنَّهٗ لَـفَرِحٌ فَخُوْرٌۙ‏
وَلَٮِٕنْ اَذَقْنٰهُ நாம் சுவைக்க வைத்தால்/அவனுக்கு نَـعْمَآءَ இன்பத்தை بَعْدَ ضَرَّآءَ பின்னர்/துன்பம் مَسَّتْهُ அவனுக்குஏற்பட்ட(து) لَيَـقُوْلَنَّ நிச்சயம் கூறுவான் ذَهَبَ சென்றன السَّيِّاٰتُ தீமைகள் عَنِّىْ‌ ؕ என்னை விட்டு اِنَّهٗ நிச்சயமாக அவன் لَـفَرِحٌ மகிழ்பவனாக فَخُوْرٌۙ‏ தற்பெருமையாளனாக
11:10. அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்குப் பின், நாம் அருட்கொடைகளை அவன் அனுபவிக்கும்படிச் செய்தால், “என்னை விட்டுக் கேடுகள் எல்லாம் போய்விட்டன” என்று நிச்சயமாகக் கூறுவான்; நிச்சயமாக அவன் பெருமகிழ்ச்சியும் பெருமையும் கொள்பவனாக இருக்கின்றான்.
11:11
11:11 اِلَّا الَّذِيْنَ صَبَرُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ‏
اِلَّا الَّذِيْنَ தவிர/எவர்கள் صَبَرُوْا சகித்தார்கள் وَعَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِؕ நன்மைகளை اُولٰٓٮِٕكَ அவர்கள் لَهُمْ அவர்களுக்கு مَّغْفِرَةٌ மன்னிப்பு وَّاَجْرٌ كَبِيْرٌ‏ இன்னும் கூலி/பெரிய(து)
11:11. ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு.
11:12
11:12 فَلَعَلَّكَ تَارِكٌۢ بَعْضَ مَا يُوْحٰٓى اِلَيْكَ وَضَآٮِٕقٌ ۢ بِهٖ صَدْرُكَ اَنْ يَّقُوْلُوْا لَوْلَاۤ اُنْزِلَ عَلَيْهِ كَنْزٌ اَوْ جَآءَ مَعَهٗ مَلَكٌ‌ ؕ اِنَّمَاۤ اَنْتَ نَذِيْرٌ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ ؕ‏
فَلَعَلَّكَ நீர் ஆகலாம் تَارِكٌۢ بَعْضَ விட்டுவிடக்கூடிய வராக/சிலவற்றை مَا يُوْحٰٓى எவை/வஹ்யி அறிவிக்கப்படுகிறது اِلَيْكَ உமக்கு وَضَآٮِٕقٌ ۢ இன்னும் நெருக்கடியாக بِهٖ அதன் மூலம் صَدْرُكَ நெஞ்சம்/உம் اَنْ يَّقُوْلُوْا அவர்கள் கூறுவது لَوْلَاۤ اُنْزِلَ இறக்கப்பட வேண்டாமா? عَلَيْهِ அவருக்கு كَنْزٌ ஒரு பொக்கிஷம் اَوْ அல்லது جَآءَ வரவேண்டாமா مَعَهٗ அவருடன் مَلَكٌ‌ ؕ ஒரு வானவர் اِنَّمَاۤ اَنْتَ நீரெல்லாம் نَذِيْرٌ‌ ؕ ஓர் எச்சரிப்பாளர்தான் وَاللّٰهُ அல்லாஹ்தான் عَلٰى மீது كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் وَّكِيْلٌ ؕ‏ பொறுப்பாளன்
11:12. (நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும்; நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை; அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான்.
11:13
11:13 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ‌ ؕ قُلْ فَاْتُوْا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهٖ مُفْتَرَيٰتٍ وَّ ادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
اَمْ அல்லது يَقُوْلُوْنَ அல்லது கூறுகிறார்கள் افْتَـرٰٮهُ‌ ؕ அவர்புனைந்தார்/இதை قُلْ கூறுவீராக فَاْتُوْا வாருங்கள் بِعَشْرِ கொண்டு/பத்து سُوَرٍ அத்தியாயங்கள் مِّثْلِهٖ இது போன்ற مُفْتَرَيٰتٍ புனையப்பட்டவை وَّ ادْعُوْا இன்னும் நீங்கள் அழையுங்கள் مَنِ எவர் اسْتَطَعْتُمْ சாத்தியப்பட்டீர்கள் مِّنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
11:13. அல்லது ”இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்” என்று அவர்கள் கூறுகிறார்கள்? “(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
11:14
11:14 فَاِلَّمْ يَسْتَجِيْبُوْا لَـكُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اُنْزِلَ بِعِلْمِ اللّٰهِ وَاَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ‏
فَاِلَّمْ يَسْتَجِيْبُوْا அவர்கள் பதில் அளிக்கவில்லையெனில் لَـكُمْ உங்களுக்கு فَاعْلَمُوْۤا اَنَّمَاۤ அறியுங்கள்/எல்லாம் اُنْزِلَ இறக்கப்பட்டது بِعِلْمِ அறிவைக் கொண்டே اللّٰهِ அல்லாஹ்வின் وَاَنْ لَّاۤ இன்னும் நிச்சயமாக இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّا هُوَ‌ۚ தவிர/அவன் فَهَلْ ஆகவே اَنْتُمْ مُّسْلِمُوْنَ‏ நீங்கள் முஸ்லிம்கள்
11:14. அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கா விட்டால்: “அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இது அல்லாஹ்வின் ஞானத்தைக் கொண்டே அருளப்பட்டது; இன்னும் வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறில்லை; இனியேனும் நீங்கள் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடுவீர்களா?” (என்று கூறவும்.)
11:15
11:15 مَنْ كَانَ يُرِيْدُ الْحَيٰوةَ الدُّنْيَا وَ زِيْنَتَهَا نُوَفِّ اِلَيْهِمْ اَعْمَالَهُمْ فِيْهَا وَهُمْ فِيْهَا لَا يُبْخَسُوْنَ‏
مَنْ எவர்(கள்)/ இருந்தார்(கள்) كَانَ நாடுவார்(கள்) يُرِيْدُ வாழ்க்கையை الْحَيٰوةَ உலக(ம்) الدُّنْيَا இன்னும் அதன் அலங்காரத்தை وَ زِيْنَتَهَا முழுமையாக கூலி தருவோம் نُوَفِّ அவர்களுக்கு اِلَيْهِمْ அவர்களின் செயல்களை اَعْمَالَهُمْ فِيْهَا அதில் وَهُمْ அவர்கள் فِيْهَا அதில் لَا يُبْخَسُوْنَ‏ குறைக்கப்பட மாட்டார்கள்
11:15. எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்; அவற்றில், அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள்.
11:16
11:16 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ لَـيْسَ لَهُمْ فِىْ الْاٰخِرَةِ اِلَّا النَّارُ‌ ‌ۖ  وَحَبِطَ مَا صَنَعُوْا فِيْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا يَعْمَلُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் لَـيْسَ இல்லை لَهُمْ அவர்களுக்கு فِىْ الْاٰخِرَةِ மறுமையில் اِلَّا النَّارُ‌ ‌ۖ  தவிர/நெருப்பு وَحَبِطَ இன்னும் அழிந்தன مَا صَنَعُوْا எவை/அல்லது செய்தனர் فِيْهَا அதில் وَبٰطِلٌ இன்னும் வீணானவையே مَّا كَانُوْا எவை/இருந்தனர் يَعْمَلُوْنَ‏ செய்வார்கள்
11:16. இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை, (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்துவிட்டன; அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!
11:17
11:17 اَفَمَنْ كَانَ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَيَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰٓى اِمَامًا وَّرَحْمَةً‌  ؕ اُولٰٓٮِٕكَ يُؤْمِنُوْنَ بِهٖ‌ ؕ وَمَنْ يَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ‌ ۚ فَلَا تَكُ فِىْ مِرْيَةٍ مِّنْهُ‌ اِنَّهُ الْحَـقُّ مِنْ رَّبِّكَ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ‏
اَفَمَنْ ? / எவர்(கள்) كَانَ عَلٰى இருக்கின்றார்(கள்)/மீது بَيِّنَةٍ தெளிவானஅத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّهٖ தன் இறைவன் وَيَتْلُوْهُ இன்னும் ஓதுகிறார்/அதை شَاهِدٌ சாட்சியாளர் مِّنْهُ அவன் புறத்திலிருந்து وَمِنْ قَبْلِهٖ இன்னும் அதற்கு முன்னர் كِتٰبُ வேதம் مُوْسٰٓى மூஸாவின் اِمَامًا வழிகாட்டியாக وَّرَحْمَةً‌  ؕ இன்னும் அருளாக اُولٰٓٮِٕكَ அவர்கள் يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்வார்கள் بِهٖ‌ ؕ இதை وَمَنْ எவர் يَّكْفُرْ நிராகரிப்பார் بِهٖ இதை مِنَ الْاَحْزَابِ கூட்டங்களில் فَالنَّارُ நரகம் مَوْعِدُهٗ‌ ۚ அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாகும் فَلَا تَكُ இருக்காதீர் فِىْ مِرْيَةٍ சந்தேகத்தில் مِّنْهُ‌ இதில் اِنَّهُ நிச்சயமாக இது الْحَـقُّ உண்மைதான் مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் وَلٰـكِنَّ எனினும் اَكْثَرَ பலர் النَّاسِ மக்களில் لَا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
11:17. எவர் தன் இறைவனிடமிருந்து (பெற்ற)தெளிவின் மீது இருக்கிறாரோ மேலும் இறைவனிடமிருந்து ஒரு சாட்சியாளர் எவரிடம் (பக்க பலமாய்) வந்திருக்கிறாரோ மேலும் இதற்கு முன்னால் மூஸாவுடைய வேதம் வழிகாட்டியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறதோ அவர்கள் தான் இதனை நம்புவார்கள்; ஆனால் (இக்) கூட்டதார்களில் எவர் இதை நிராகரிக்கிறாரோ அவருக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் நரக நெருப்பேயாகும். ஆதலால் (நபியே!) இதைப் பற்றி நீர் சந்தேகத்திலிருக்க வேண்டாம் - இ(வ்வேதமான)து நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும் - எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை.
11:18
11:18 وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا‌ ؕ اُولٰٓٮِٕكَ يُعْرَضُوْنَ عَلٰى رَبِّهِمْ وَ يَقُوْلُ الْاَشْهَادُ هٰٓؤُلَاۤءِ الَّذِيْنَ كَذَبُوْا عَلٰى رَبِّهِمْ‌ ۚ اَلَا لَـعْنَةُ اللّٰهِ عَلَى الظّٰلِمِيْنَۙ‏
وَمَنْ யார்? اَظْلَمُ மகா அநியாயக்காரன் مِمَّنِ விட/எவர் افْتَـرٰى புனைந்தார் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا‌ ؕ பொய்யை اُولٰٓٮِٕكَ அவர்கள் يُعْرَضُوْنَ அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள் عَلٰى முன் رَبِّهِمْ தங்கள் இறைவன் وَ يَقُوْلُ கூறுவார்(கள்) الْاَشْهَادُ சாட்சியாளர்கள் هٰٓؤُلَاۤءِ இவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَذَبُوْا பொய்யுரைத்தார்கள் عَلٰى மீது رَبِّهِمْ‌ ۚ தங்கள் இறைவன் اَلَا அறிந்துகொள்ளுங்கள் لَـعْنَةُ சாபம் اللّٰهِ அல்லாஹ்வின் عَلَى மீது الظّٰلِمِيْنَۙ‏ அநியாயக்காரர்கள்
11:18. அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன்முன் நிறுத்தப்படுவார்கள்; “இவர்கள்தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்” என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள்; இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.
11:19
11:19 الَّذِيْنَ يَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ وَيَبْغُوْنَهَا عِوَجًا ؕ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ‏
الَّذِيْنَ எவர்கள் يَصُدُّوْنَ தடுப்பார்கள் عَنْ விட்டு سَبِيْلِ பாதை اللّٰهِ அல்லாஹ்வின் وَيَبْغُوْنَهَا இன்னும் தேடுவார்கள்/அதில் عِوَجًا ؕ கோணலை وَهُمْ அவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை هُمْ அவர்கள் كٰفِرُوْنَ‏ நிராகரிப்பவர்கள்
11:19. அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கின்றார்கள்; மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள் - இவர்கள் தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்.
11:20
11:20 اُولٰٓٮِٕكَ لَمْ يَكُوْنُوْا مُعْجِزِيْنَ فِى الْاَرْضِ وَمَا كَانَ لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَآءَ‌ ۘ يُضٰعَفُ لَهُمُ الْعَذَابُ‌ ؕ مَا كَانُوْا يَسْتَطِيْعُوْنَ السَّمْعَ وَمَا كَانُوْا يُبْصِرُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் لَمْ يَكُوْنُوْا அல்லது இருக்கவில்லை مُعْجِزِيْنَ பலவீனப்படுத்து பவர்களாக فِى الْاَرْضِ பூமியில் وَمَا كَانَ இன்னும் இல்லை لَهُمْ அவர்களுக்கு مِّنْ دُوْنِ اللّٰهِ அன்றி/அல்லாஹ் مِنْ اَوْلِيَآءَ‌ ۘ உதவியாளர்கள்எவரும் يُضٰعَفُ பன்மடங்காக்கப்படும் لَهُمُ அவர்களுக்கு الْعَذَابُ‌ ؕ வேதனை مَا كَانُوْا அல்லது இருக்கவில்லை يَسْتَطِيْعُوْنَ சக்தி பெறுகிறார்கள் السَّمْعَ செவியேற்க وَمَا كَانُوْا இன்னும்அல்லதுஇருக்கவில்லை يُبْصِرُوْنَ‏ பார்ப்பவர்களாக
11:20. இவர்கள் பூமியில் (அல்லாஹ் திட்டமிட்டிருப்பதைத்) தோற்கடித்து விடமுடியாது, அல்லாஹ்வைத் தவிர இவர்களுக்கு வேறு பாதுகாவலர்கள் இல்லை; இவர்களுக்கு வேதனை இரட்டிப்பாக்கப்படும்; அவர்கள் (நல்லவற்றைக்) கேட்கும் சக்தியை இழந்து விட்டார்கள் - இவர்கள் (நேர்வழியைக்) காணவும் மாட்டார்கள்.
11:21
11:21 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள் الَّذِيْنَ எவர்கள் خَسِرُوْۤا நட்டமடைந்தார்கள் اَنْفُسَهُمْ தமக்குத் தாமே وَضَلَّ இன்னும் மறைந்துவிடும் عَنْهُمْ அவர்களை விட்டு مَّا كَانُوْا எவை/இருந்தனர் يَفْتَرُوْنَ‏ அல்லது புனைவார்கள்
11:21. இவர்கள்தாம் தங்களுக்கு தாங்களே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்கள்; இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) யாவும் (தீர்ப்பு நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும்.
11:22
11:22 لَا جَرَمَ اَ نَّهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ‏
لَا جَرَمَ சந்தேகமின்றி اَ نَّهُمْ நிச்சயமாக அவர்கள் فِى الْاٰخِرَةِ மறுமையில் هُمُ الْاَخْسَرُوْنَ‏ மகா நஷ்டவாளிகள்
11:22. நிச்சயமாக இவர்கள் மறுமையில் பெரும் நஷ்டமடைந்தவர்களாக இருப்பார்கள் என்பதில் (சிறிதும்) சந்தேகமில்லை.
11:23
11:23 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخْبَـتُوْۤا اِلٰى رَبِّهِمْۙ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْجَـنَّةِ‌ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
اِنَّ الَّذِيْنَ நிச்சயமாக/எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் وَعَمِلُوا இன்னும் செய்தனர் الصّٰلِحٰتِ நன்மைகளை وَاَخْبَـتُوْۤا இன்னும் பயத்துடனும் மிக்க பணிவுடனும் திரும்பினார்கள் اِلٰى பக்கம் رَبِّهِمْۙ தங்கள் இறைவனின் اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ الْجَـنَّةِ‌ؕ சொர்க்கவாசிகள் هُمْ فِيْهَا அவர்கள் அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
11:23. நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்கருமங்கள் செய்து இன்னும் தங்கள் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்றார்களோ அவர்களே சுவனபதிக்குரியவர்கள்; அங்கு அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
11:24
11:24 مَثَلُ الْفَرِيْقَيْنِ كَالْاَعْمٰى وَالْاَصَمِّ وَالْبَـصِيْرِ وَالسَّمِيْعِ‌ ؕ هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا‌ ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ
مَثَلُ உதாரணம் الْفَرِيْقَيْنِ இரு பிரிவினரின் كَالْاَعْمٰى குருடனைப் போன்று وَالْاَصَمِّ இன்னும் செவிடன் وَالْبَـصِيْرِ இன்னும் பார்ப்பவன் وَالسَّمِيْعِ‌ ؕ இன்னும் கேட்பவன் هَلْ يَسْتَوِيٰنِ இருவரும் சமமாவார்களா? مَثَلًا‌ ؕ உதாரணத்தால் اَفَلَا تَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?
11:24. இவ்விரு பிரிவினர்களுக்கு உதாரணம்: (ஒரு பிரிவினர்) குருடர், செவிடர் போலவும் (இனியொரு பிரிவினர் நல்ல) பார்வையுள்ளவர், (நல்ல) கேட்கும் சக்தியுடையவர் போலவும் இருக்கின்றனர், இவ்விரு பிரிவினரும் ஒப்புவமையில் சமமாவாரா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
11:25
11:25 وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا அனுப்பினோம் نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ நூஹை/அவருடைய மக்களிடம் اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு نَذِيْرٌ ஓர் எச்சரிப்பாளன் مُّبِيْنٌۙ‏ பகிரங்கமான
11:25. நிச்சயமாக நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (அவர்களை நோக்கி) “நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்.”
11:26
11:26 اَنْ لَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ‌ؕ اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ‏
اَنْ لَّا تَعْبُدُوْۤا நீங்கள் வணங்காதீர்கள் اِلَّا தவிர اللّٰهَ‌ؕ அல்லாஹ் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ يَوْمٍ வேதனையை/நாளின் اَلِيْمٍ‏ துன்புறுத்தக் கூடியது
11:26. “நீங்கள் அல்லாஹ்வை அன்றி (வேறெவரையும், எதனையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் நோவினை தரும் நாளின் வேதனையை உங்களுக்கு அஞ்சுகிறேன்” (என்று கூறினார்).
11:27
11:27 فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰٮكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰٮكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُــنَا بَادِىَ الرَّاْىِ‌ۚ وَمَا نَرٰى لَـكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِيْنَ‏
فَقَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْ قَوْمِهٖ அவருடைய சமுதாயத்தில் مَا نَرٰٮكَ நாம் பார்க்கவில்லை/ உம்மை اِلَّا தவிர بَشَرًا ஒரு மனிதராக مِّثْلَنَا எங்களைப் போன்ற وَمَا نَرٰٮكَ நாம் பார்க்கவில்லை/ உம்மை اتَّبَعَكَ பின்பற்றினார்/உம்மை اِلَّا الَّذِيْنَ தவிர/எவர்கள் هُمْ அவர்கள் اَرَاذِلُــنَا எங்களில் மிக இழிவானவர்கள் بَادِىَ الرَّاْىِ‌ۚ வெளிப் பார்வையில் وَمَا نَرٰى நாங்கள்பார்க்கவில்லை لَـكُمْ உங்களுக்கு عَلَيْنَا எங்களைவிட مِنْ فَضْلٍۢ எந்த ஒரு மேன்மையையும் بَلْ نَظُنُّكُمْ மாறாக/கருதுகிறோம்/உங்களை كٰذِبِيْنَ‏ பொய்யர்களாக
11:27. அவரை நிராகரித்த அவருடைய சமூகத்தின் தலைவர்கள் (அவரை நோக்கி), “நாம் உம்மை எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாகக்) காணவில்லை; எங்களுக்குள்ளே ஆழ்ந்து யோசனை செய்யாத இழிவானர்களேயன்றி (வேறெவரும்) உம்மைப் பின்பற்றி நடப்பதாகவும் நாம் காணவில்லை; எங்களைவிட உங்களுக்கு எந்த விதமான மேன்மை இருப்பதாகவும் நாம் காணவில்லை - மாறாக உங்களை (யெல்லாம்) பொய்யர்கள் என்றே நாங்கள் எண்ணுகிறோம்” என்று கூறினார்கள்.
11:28
11:28 قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّىْ وَاٰتٰٮنِىْ رَحْمَةً مِّنْ عِنْدِهٖ فَعُمِّيَتْ عَلَيْكُمْؕ اَنُلْزِمُكُمُوْهَا وَاَنْـتُمْ لَـهَا كٰرِهُوْنَ‏
قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اَرَءَيْتُمْ நீங்கள் கவனித்தீர்களா? اِنْ كُنْتُ நான் இருந்து عَلٰى بَيِّنَةٍ மீது/ஒரு தெளிவான அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّىْ என் இறைவன் وَاٰتٰٮنِىْ இன்னும் அளித்தான் எனக்கு رَحْمَةً அருளை مِّنْ عِنْدِهٖ தன்னிடம்/இருந்து فَعُمِّيَتْ அவை மறைக்கப்பட்டன عَلَيْكُمْؕ உங்களுக்கு اَنُلْزِمُكُمُوْهَا நாம் நிர்ப்பந்திப்போமா?/உங்களை/அவற்றை وَاَنْـتُمْ நீங்களும் لَـهَا அவற்றை كٰرِهُوْنَ‏ வெறுப்பவர்களாக
11:28. (அதற்கு) அவர் (மக்களை நோக்கி) “என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?” என்று கூறினார்.
11:29
11:29 وَيٰقَوْمِ لَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ مَالًا ؕاِنْ اَجْرِىَ اِلَّا عَلَى اللّٰهِ‌ وَمَاۤ اَنَا بِطَارِدِ الَّذِيْنَ اٰمَنُوْا‌ ؕ اِنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَلٰـكِنِّىْۤ اَرٰٮكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ‏
وَيٰقَوْمِ என் மக்களே لَاۤ اَسْــٴَــلُكُمْ நான் கேட்கவில்லை/உங்களிடம் عَلَيْهِ இதன் மீது مَالًا ஒரு செல்வத்தை ؕاِنْ اَجْرِىَ இல்லை/என் கூலி اِلَّا தவிர عَلَى اللّٰهِ‌ அல்லாஹ்/மீது وَمَاۤ اَنَا இல்லை / நான் بِطَارِدِ விரட்டுபவனாக الَّذِيْنَ எவர்களை اٰمَنُوْا‌ ؕ நம்பிக்கை கொண்டார்கள் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مُّلٰقُوْا சந்திப்பவர்கள் رَبِّهِمْ தங்கள் இறைவனை وَلٰـكِنِّىْۤ என்றாலும் நிச்சயமாக நான் اَرٰٮكُمْ காண்கிறேன்/உங்களை قَوْمًا மக்களாக تَجْهَلُوْنَ‏ நீங்கள் அறிய மாட்டீர்கள்
11:29. “அன்றியும், என் சமூகத்தவர்களே! இதற்காக (அல்லாஹ்வின் கட்டளையை எடுத்துச் சொல்வதற்காக) நான் உங்களிடம் எந்தப் பொருளையும் கேட்கவில்லை; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை; எனவே ஈமான் கொண்டவர்களை (அவர்கள் நிலை எப்படி இருப்பினும்) நான் விரட்டி விடுபவன் அல்லன்; நிச்சயமாக அவர்கள் தம் இறைவனை (நன்மையுடன்) சந்திப்பவர்களாக இருக்கின்றனர்; ஆனால் உங்களையே அறிவில்லா சமூகத்தவர்களாகவே நான் காண்கிறேன்,
11:30
11:30 وَيٰقَوْمِ مَنْ يَّـنْصُرُنِىْ مِنَ اللّٰهِ اِنْ طَرَدْتُّهُمْ‌ؕ اَفَلَا تَذَكَّرُوْنَ‏
وَيٰقَوْمِ என் மக்களே مَنْ யார்? يَّـنْصُرُنِىْ உதவுவார்/எனக்கு مِنَ اللّٰهِ அல்லாஹ்விடத்தில் اِنْ طَرَدْتُّهُمْ‌ؕ நான் விரட்டினால்/அவர்களை اَفَلَا تَذَكَّرُوْنَ‏ நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
11:30. “என் சமூகத்தவர்களே! நான் அவர்களை விரட்டிவிட்டால்; அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எனக்கு உதவி செய்பவர் யார்? (இதை) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
11:31
11:31 وَلَاۤ اَقُوْلُ لَـكُمْ عِنْدِىْ خَزَآٮِٕنُ اللّٰهِ وَلَاۤ اَعْلَمُ الْغَيْبَ وَلَاۤ اَقُوْلُ اِنِّىْ مَلَكٌ وَّلَاۤ اَقُوْلُ لِلَّذِيْنَ تَزْدَرِىْۤ اَعْيُنُكُمْ لَنْ يُّؤْتِيَهُمُ اللّٰهُ خَيْرًا‌ ؕ اَللّٰهُ اَعْلَمُ بِمَا فِىْۤ اَنْفُسِهِمْ‌ ۖۚ اِنِّىْۤ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ‏
وَلَاۤ اَقُوْلُ நான் கூறமாட்டேன் لَـكُمْ உங்களுக்கு عِنْدِىْ خَزَآٮِٕنُ என்னிடம் اللّٰهِ பொக்கிஷங்கள் وَلَاۤ اَعْلَمُ அல்லாஹ்வின் الْغَيْبَ இன்னும் அறியமாட்டேன் وَلَاۤ மறைவை اَقُوْلُ اِنِّىْ இன்னும் கூறமாட்டேன் مَلَكٌ நிச்சயமாக நான் وَّلَاۤ اَقُوْلُ ஒரு வானவன் لِلَّذِيْنَ இன்னும் கூறமாட்டேன் تَزْدَرِىْۤ திசீஷீலிஇபீரூ اَعْيُنُكُمْ இழிவாகக் காண்கிறது لَنْ يُّؤْتِيَهُمُ اللّٰهُ கண்கள்/உங்கள் خَيْرًا‌ ؕ அறவே கொடுக்கவே மாட்டான்/அவர்களுக்கு/ அல்லாஹ் اَللّٰهُ ஒரு நன்மை اَعْلَمُ அல்லாஹ் بِمَا மிக அறிந்தவன் فِىْۤ اَنْفُسِهِمْ‌ ۖۚ எதை/ உள்ளங்களில்/அல்லது اِنِّىْۤ நிச்சயமாக நான் اِذًا அப்போது لَّمِنَ الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களில்தான்
11:31. “அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் என்னிடம் இருக்கின்றன என்று நான் உங்களிடம் கூறவில்லை; மறைவானவற்றை நான் அறிந்தவனுமல்லன், நிச்சயமாக நான் ஒரு மலக்கு என்றும் நான் கூறவில்லை; எவர்களை உங்களுடைய கண்கள் இழிவாக நோக்குகின்றனவோ, அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறவில்லை; அவர்களின் இதயங்களில் உள்ளதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன் (இவ்வுண்மைகளுக்கு மாறாக நான் எதுவும் செய்தால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்” (என்றும் கூறினார்).
11:32
11:32 قَالُوْا يٰـنُوْحُ قَدْ جَادَلْتَـنَا فَاَكْثَرْتَ جِدَالَـنَا فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏ ‏
قَالُوْا கூறினார்கள் يٰـنُوْحُ நூஹே قَدْ جَادَلْتَـنَا நீர் தர்க்கித்து விட்டீர்/எங்களுடன் فَاَكْثَرْتَ அதிகப்படுத்தினீர் جِدَالَـنَا தர்க்கத்தை/ எங்களுடன் فَاْتِنَا ஆகவே வருவீராக/எங்களிடம் بِمَا تَعِدُنَاۤ எதைக் கொண்டு/வாக்களித்தீர்/எங்களுக்கு اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الصّٰدِقِيْنَ‏ ‏ உண்மையாளர்களில்
11:32. (அதற்கு) அவர்கள், “நூஹே! நிச்சயமாக நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர்; அதிகமாகவே நீர் எங்களுடன் தர்க்கம் செய்தீர். எனவே, நீர் உண்மையாளராக இருந்தால், எங்களுக்கு நீர் வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
11:33
11:33 قَالَ اِنَّمَا يَاْتِيْكُمْ بِهِ اللّٰهُ اِنْ شَآءَ وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ‏
قَالَ கூறினார் اِنَّمَا எல்லாம் يَاْتِيْكُمْ بِهِ அதைக் கொண்டு வருவான்/உங்களிடம் اللّٰهُ அல்லாஹ்தான் اِنْ شَآءَ அவன் நாடினால் وَمَاۤ اَنْتُمْ நீங்கள் இல்லை بِمُعْجِزِيْنَ‏ பலவீனப்படுத்து பவர்களாக
11:33. (அதற்கு) அவர், “நிச்சயமாக அல்லாஹ் நாடினால், அதை உங்களிடம் கொண்டு வருபவன் அவனே ஆவான்; அதை நீங்கள் தடுத்து விடக்கூடியவர்களும் அல்லர்” என்று கூறினார்.
11:34
11:34 وَلَا يَنْفَعُكُمْ نُصْحِىْۤ اِنْ اَرَدْتُّ اَنْ اَنْصَحَ لَكُمْ اِنْ كَانَ اللّٰهُ يُرِيْدُ اَنْ يُّغْوِيَكُمْ‌ؕ هُوَ رَبُّكُمْ وَاِلَيْهِ تُرْجَعُوْنَؕ‏
وَلَا يَنْفَعُكُمْ பலனளிக்காது/உங்களுக்கு نُصْحِىْۤ என் நல்லுபதேசம் اِنْ اَرَدْتُّ நான் நாடினால் اَنْ اَنْصَحَ நான் நல்லுபதேசம்புரிய لَكُمْ உங்களுக்கு اِنْ كَانَ اللّٰهُ இருந்தால்/அல்லாஹ் يُرِيْدُ நாடுகிறான் اَنْ يُّغْوِيَكُمْ‌ؕ அவன் வழிகெடுக்க/உங்களை هُوَ அவன் رَبُّكُمْ உங்கள் இறைவன் وَاِلَيْهِ அவனிடமே تُرْجَعُوْنَؕ‏ நீங்கள் திருப்பப்படுவீர்கள்
11:34. “நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக்கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பலனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்).
11:35
11:35 اَمْ يَقُوْلُوْنَ افْتَـرٰٮهُ‌ ؕ قُلْ اِنِ افْتَرَيْتُهٗ فَعَلَىَّ اِجْرَامِىْ وَاَنَا بَرِىْٓءٌ مِّمَّا تُجْرِمُوْنَ
اَمْ அல்லது يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் افْتَـرٰٮهُ‌ ؕ அவர் புனைந்தார்/இதை قُلْ கூறுவீராக اِنِ افْتَرَيْتُهٗ நான் புனைந்திருந்தால்/அதை فَعَلَىَّ என் மீதே اِجْرَامِىْ என் குற்றம் وَاَنَا இன்னும் நான் بَرِىْٓءٌ விலகியவன் مِّمَّا تُجْرِمُوْنَ‏ விட்டு/எவை/நீங்கள் குற்றம் புரிகிறீர்கள்
11:35. (நபியே! நீர் இதைக் கூறும் போது:) “இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்” என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: “நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்; நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.”
11:36
11:36 وَاُوْحِىَ اِلٰى نُوْحٍ اَنَّهٗ لَنْ يُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَٮِٕسْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ‌ ۖ ‌ ۚ‏
وَاُوْحِىَ இன்னும் வஹ்யி அறிவிக்கப்பட்டது اِلٰى نُوْحٍ நூஹ்வுக்கு اَنَّهٗ நிச்சயமாக செய்தி لَنْ يُّؤْمِنَ அறவே நம்பிக்கை கொள்ள மாட்டார் مِنْ قَوْمِكَ உமது மக்களில் اِلَّا தவிர مَنْ قَدْ اٰمَنَ எவர்/நம்பிக்கை கொண்டு விட்டார் فَلَا تَبْتَٮِٕسْ ஆகவே நீர் கவலைப்படாதீர் بِمَا காரணமாக/எவை كَانُوْا இருந்தனர் يَفْعَلُوْنَ‌ ۖ ۚ‏ அவர்கள் செய்வார்கள்
11:36. மேலும், நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: “(முன்னர்) ஈமான் கொண்டவர்களைத் தவிர, (இனி) உம்முடைய சமூகத்தாரில் நிச்சயமாக எவரும் நம்பிக்கை கொள்ளமாட்டார்; ஆதலால் அவர்கள் செய்வதைப்பற்றி நீர் விசாரப்படாதீர்.
11:37
11:37 وَاصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِىْ فِى الَّذِيْنَ ظَلَمُوْا‌ ۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ‏
وَاصْنَعِ இன்னும் செய்வீராக الْفُلْكَ கப்பலை بِاَعْيُنِنَا நம் கண்கள் முன்பாக وَوَحْيِنَا இன்னும்நம்அறிவிப்புப்படி وَلَا تُخَاطِبْنِىْ என்னிடம் பேசாதீர் فِى الَّذِيْنَ இல்/எவர்கள் ظَلَمُوْا‌ ۚ அநியாயம் செய்தார்கள் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مُّغْرَقُوْنَ‏ மூழ்கடிக்கப்படுபவர்கள்
11:37. “நம் பார்வையில் நம்(வஹீ) அறிவிப்புக்கு ஒப்ப கப்பலைக் கட்டும்; அநியாயம் செய்தவர்களைப் பற்றி(ப் பரிந்து இனி) நீர் என்னிடம் பேசாதீர்; நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்.”
11:38
11:38 وَيَصْنَعُ الْفُلْكَ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَاٌ مِّنْ قَوْمِهٖ سَخِرُوْا مِنْهُ‌ؕ قَالَ اِنْ تَسْخَرُوْا مِنَّا فَاِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُوْنَؕ‏
وَيَصْنَعُ அவர் செய்கிறார் الْفُلْكَ கப்பலை وَكُلَّمَا مَرَّ கடந்தபோதெல்லாம் عَلَيْهِ அவருக்கு அருகில் مَلَاٌ முக்கிய பிரமுகர்கள் مِّنْ இருந்து قَوْمِهٖ அவருடைய மக்கள் سَخِرُوْا பரிகசித்தனர் مِنْهُ‌ؕ قَالَ அவரை/கூறினார் اِنْ تَسْخَرُوْا நீங்கள் பரிகசித்தால் مِنَّا எங்களை فَاِنَّا நிச்சயமாக நாங்கள் نَسْخَرُ பரிகசிப்போம் مِنْكُمْ உங்களை كَمَا تَسْخَرُوْنَؕ‏ நீங்கள் பரிகசிப்பது போன்று
11:38. அவர் கப்பலைக் கட்டிக் கொண்டிருந்த போது, அவருடைய சமூகத்தின் தலைவர்கள் அவர் பக்கமாகச் சென்றபோதெல்லாம் அவரைப் பரிகசித்தனர்; (அதற்கு) அவர்: “நீங்கள் எங்களைப் பரிகசிப்பீர்களானால், நிச்சயமாக நீங்கள் பரிகசிப்பதுபோலவே, (அதிசீக்கிரத்தில்) நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்” என்று கூறினார்.
11:39
11:39 فَسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ يَّاْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيْمٌ‏
فَسَوْفَ تَعْلَمُوْنَۙ நீங்கள் அறிவீர்கள் مَنْ எவர் يَّاْتِيْهِ வரும்/அவருக்கு عَذَابٌ ஒரு வேதனை يُّخْزِيْهِ இழிவுபடுத்தும்/அவரை وَيَحِلُّ இன்னும் இறங்கும் عَلَيْهِ அவர் மீது عَذَابٌ ஒரு வேதனை مُّقِيْمٌ‏ நிலையானது
11:39. “அன்றியும், எவன்மீது அவனை இழிவு படுத்தும் வேதனை வருமென்றும், எவன்மீது நிலைத்திருக்கும் வேதனை இறங்கும் என்றும் வெகு விரைவில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்” (என்றும் கூறினார்).
11:40
11:40 حَتّٰۤى اِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُۙ قُلْنَا احْمِلْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَ‌ؕ وَمَاۤ اٰمَنَ مَعَهٗۤ اِلَّا قَلِيْلٌ‏
حَتّٰۤى இறுதியாக اِذَا போது جَآءَ வந்தது اَمْرُنَا நம் கட்டளை وَفَارَ இன்னும் பொங்கியது التَّنُّوْرُۙ அடுப்பு قُلْنَا கூறினோம் احْمِلْ ஏற்றுவீராக فِيْهَا அதில் مِنْ இருந்து كُلٍّ எல்லாம் زَوْجَيْنِ இரு ஜோடியை اثْنَيْنِ இரண்டு وَاَهْلَكَ இன்னும்உமதுகுடும்பத்தை اِلَّا مَنْ தவிர/எவர் سَبَقَ முந்தி விட்டது عَلَيْهِ அவர் மீது الْقَوْلُ வாக்கு وَمَنْ இன்னும் எவர் اٰمَنَ‌ؕ நம்பிக்கைகொண்டார் وَمَاۤ اٰمَنَ நம்பிக்கை கொள்ளவில்லை مَعَهٗۤ اِلَّا அவருடன்/தவிர قَلِيْلٌ‏ குறைவானவர்கள்
11:40. இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி:) “உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர; உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்” என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை.
11:41
11:41 وَقَالَ ارْكَبُوْا فِيْهَا بِسْمِ اللّٰهِ مَجْرٖؔٮھَا وَمُرْسٰٮهَا ؕ اِنَّ رَبِّىْ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ ‏
وَقَالَ கூறினார் ارْكَبُوْا பயணியுங்கள் فِيْهَا இதில் بِسْمِ பெயர் கொண்டு اللّٰهِ அல்லாஹ்வின் مَجْرٖؔٮٰھَا அது ஓடும் போது وَمُرْسٰٮهَا ؕ நிறுத்தப்படும் போது اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் لَـغَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ ‏ பெரும் கருணையாளன்
11:41. இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். என்று கூறினார்.
11:42
11:42 وَهِىَ تَجْرِىْ بِهِمْ فِىْ مَوْجٍ كَالْجِبَالِ وَنَادٰى نُوْحُ اۨبْنَهٗ وَكَانَ فِىْ مَعْزِلٍ يّٰبُنَىَّ ارْكَبْ مَّعَنَا وَلَا تَكُنْ مَّعَ الْكٰفِرِيْنَ‏
وَهِىَ அது (கப்பல்) تَجْرِىْ செல்கிறது بِهِمْ அவர்களைக்கொண்டு فِىْ مَوْجٍ அலையில் كَالْجِبَالِ மலைகளைப் போன்று وَنَادٰى نُوْحُ இன்னும் சப்தமிட்டு அழைத்தார்/நூஹ் اۨبْنَهٗ தன் மகனை وَكَانَ இருந்தான் فِىْ مَعْزِلٍ ஒரு விலகுமிடத்தில் يّٰبُنَىَّ என் மகனே ارْكَبْ பயணி مَّعَنَا எங்களுடன் وَلَا تَكُنْ ஆகிவிடாதே مَّعَ உடன் الْكٰفِرِيْنَ‏ நிராகரிப்பாளர்கள்
11:42. பின்னர் அக்கப்பல், மலைகளைப் போன்ற அலைகளுக்கிடையே அவர்களை சுமந்து கொண்டு செல்லலாயிற்று; (அப்போது தம்மை விட்டு) விலகி நின்ற தம் மகனை நோக்கி “என்னருமை மகனே! எங்களோடு நீயும் (கப்பலில்) ஏறிக்கொள்; காஃபிர்களுடன் (சேர்ந்து) இராதே!” என்று நூஹ் அழைத்தார்.
11:43
11:43 قَالَ سَاٰوِىْۤ اِلٰى جَبَلٍ يَّعْصِمُنِىْ مِنَ الْمَآءِ‌ؕ قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ اَمْرِ اللّٰهِ اِلَّا مَنْ رَّحِمَ‌ۚ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِيْنَ‏
قَالَ கூறினான் سَاٰوِىْۤ ஒதுங்குவேன் اِلٰى மேல் جَبَلٍ ஒரு மலை يَّعْصِمُنِىْ காக்கும்/என்னை مِنَ இருந்து الْمَآءِ‌ؕ நீர் قَالَ கூறினார் لَا அறவே இல்லை عَاصِمَ பாதுகாப்பவர் الْيَوْمَ இன்று مِنْ இருந்து اَمْرِ கட்டளை اللّٰهِ அல்லாஹ்வின் اِلَّا தவிர مَنْ எவர் رَّحِمَ‌ۚ கருணை காட்டினான் وَحَالَ இன்னும் தடையானது بَيْنَهُمَا அவ்விருவருக்கும் இடையில் الْمَوْجُ அலை فَكَانَ ஆகவே ஆகினான் مِنَ الْمُغْرَقِيْنَ‏ மூழ்கடிக்கப்பட்டவர்களில்
11:43. அதற்கு அவன்: “என்னைத் தண்ணீரிலிருந்து பாதுகாக்கக் கூடிய ஒரு மலையின் மேல் சென்று நான் (தப்பி) விடுவேன்” எனக் கூறினான்; இன்றைய தினம் அல்லாஹ் யாருக்கு அருள் புரிந்திருக்கிறானோ அவரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றப்படுபவர் எவருமில்லை என்று கூறினார். அச்சமயம் அவர்களிடையே பேரலை ஒன்று எழுந்து குறுக்கிட்டது; அவன் மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஒருவனாகி விட்டான்.
11:44
11:44 وَقِيْلَ يٰۤاَرْضُ ابْلَعِىْ مَآءَكِ وَيٰسَمَآءُ اَقْلِعِىْ وَغِيْضَ الْمَآءُ وَقُضِىَ الْاَمْرُ وَاسْتَوَتْ عَلَى الْجُوْدِىِّ‌ وَقِيْلَ بُعْدًا لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
وَقِيْلَ கூறப்பட்டது يٰۤاَرْضُ பூமியே ابْلَعِىْ விழுங்கு مَآءَكِ தண்ணீரை/உன் وَيٰسَمَآءُ இன்னும் வானமே اَقْلِعِىْ நிறுத்து وَغِيْضَ இன்னும் வற்றியது الْمَآءُ தண்ணீர் وَقُضِىَ இன்னும் முடிக்கப்பட்டது الْاَمْرُ காரியம் وَاسْتَوَتْ இன்னும் தங்கியது عَلَى الْجُوْدِىِّ‌ ஜூதி மலையில் وَقِيْلَ இன்னும் கூறப்பட்டது بُعْدًا அழிவுதான் لِّـلْقَوْمِ மக்களுக்கு الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
11:44. பின்னர்: “பூமியே! நீ உன் நீரை விழுங்கி விடு! வானமே! (மழையை) நிறுத்திக்கொள்” என்று சொல்லப்பட்டது; நீரும் குறைக்கப்பட்டது; (இதற்குள் நிராகரித்தோர் நீரில் மூழ்கி அவர்கள்) காரியமும் முடிந்து விட்டது; (கப்பல்) ஜூதி மலைமீது தங்கியது - அநியாயம் செய்த மக்களுக்கு (இத்தகைய) அழிவுதான் என்று கூறப்பட்டது.
11:45
11:45 وَنَادٰى نُوْحٌ رَّبَّهٗ فَقَالَ رَبِّ اِنَّ ابْنِىْ مِنْ اَهْلِىْ وَاِنَّ وَعْدَكَ الْحَـقُّ وَاَنْتَ اَحْكَمُ الْحٰكِمِيْنَ‏
وَنَادٰى அழைத்தார் نُوْحٌ நூஹ் رَّبَّهٗ தன் இறைவனை فَقَالَ கூறினார் رَبِّ என் இறைவா اِنَّ ابْنِىْ நிச்சயமாக/என் மகன் مِنْ اَهْلِىْ என் குடும்பத்திலுள்ளவன் وَاِنَّ நிச்சயமாக وَعْدَكَ உன் வாக்கு الْحَـقُّ உண்மையானது وَاَنْتَ நீ اَحْكَمُ மகா தீர்ப்பாளன் الْحٰكِمِيْنَ‏ தீர்ப்பளிப்பவர்களில்
11:45. நூஹ் தன் இறைவனிடம் “என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே; உன் வாக்குறுதி நிச்சயமாக உண்மையானது; நீதி வழங்குவோர்களிலெல்லாம் மேலான நீதிபதியாய் நீ இருக்கிறாய்” எனக் கூறினார்.
11:46
11:46 قَالَ يٰـنُوْحُ اِنَّهٗ لَـيْسَ مِنْ اَهْلِكَ ‌ۚاِنَّهٗ عَمَلٌ غَيْرُ صَالِحٍ ‌‌ۖ فَلَا تَسْـــٴَـــلْنِ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنِّىْۤ اَعِظُكَ اَنْ تَكُوْنَ مِنَ الْجٰهِلِيْنَ‏
قَالَ கூறினான் يٰـنُوْحُ நூஹே اِنَّهٗ அவன் لَـيْسَ இல்லை مِنْ اَهْلِكَ உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவன் ۚاِنَّهٗ நிச்சயமாக இது عَمَلٌ செயல் غَيْرُ அல்ல صَالِحٍ ۖ நல்ல(து) فَلَا تَسْـــٴَـــلْنِ கேட்காதே/என்னிடம் مَا لَـيْسَ எதை/இல்லை لَـكَ உமக்கு بِهٖ அதில் عِلْمٌ‌ ؕ ஞானம் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَعِظُكَ உபதேசிக்கிறேன்/உமக்கு اَنْ تَكُوْنَ நீர் ஆகுவதை مِنَ الْجٰهِلِيْنَ‏ @ஙுக்ஷிலஸிசீஷீலிகுஜீ
11:46. அ(தற்கு இறை)வன் கூறினான்: “நூஹே! உண்மையாகவே அவன் உம் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களையே செய்து கொண்டிருந்தான்; ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம்; நீர் அறியாதவர்களில் ஒருவராகி விடவேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்.”
11:47
11:47 قَالَ رَبِّ اِنِّىْۤ اَعُوْذُ بِكَ اَنْ اَسْــٴَــلَكَ مَا لَـيْسَ لِىْ بِهٖ عِلْمٌ‌ؕ وَاِلَّا تَغْفِرْ لِىْ وَتَرْحَمْنِىْۤ اَكُنْ مِّنَ الْخٰسِرِيْنَ‏
قَالَ கூறினார் رَبِّ என் இறைவா اِنِّىْۤ நிச்சயமாக நான் اَعُوْذُ பாதுகாப்புக் கோருகிறேன் بِكَ உன்னிடம் اَنْ اَسْــٴَــلَكَ நான்கேட்பதைவிட்டு مَا لَـيْسَ எதை/இல்லை لِىْ بِهٖ எனக்கு/அதில் عِلْمٌ‌ؕ ஞானம் وَاِلَّا تَغْفِرْ நீ மன்னிக்க வில்லையெனில் لِىْ என்னை وَتَرْحَمْنِىْۤ கருணை காட்டவில்லையெனில்/எனக்கு اَكُنْ ஆகிவிடுவேன் مِّنَ الْخٰسِرِيْنَ‏ நஷ்டவாளிகளில்
11:47. “என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
11:48
11:48 قِيْلَ يٰـنُوْحُ اهْبِطْ بِسَلٰمٍ مِّنَّا وَبَرَكٰتٍ عَلَيْكَ وَعَلٰٓى اُمَمٍ مِّمَّنْ مَّعَكَ‌ؕ وَاُمَمٌ سَنُمَتِّعُهُمْ ثُمَّ يَمَسُّهُمْ مِّنَّا عَذَابٌ اَلِيْمٌ‏
قِيْلَ கூறப்பட்டது يٰـنُوْحُ நூஹே اهْبِطْ நீர் இறங்குவீராக بِسَلٰمٍ பாதுகாப்புடன் مِّنَّا நமது وَبَرَكٰتٍ இன்னும் அருள்வளங்கள் عَلَيْكَ உம்மீது وَعَلٰٓى இன்னும் மீது اُمَمٍ உயிரினங்கள் مِّمَّنْ مَّعَكَ‌ؕ உம்முடன் இருக்கின்றவர்கள் وَاُمَمٌ இன்னும் சமுதாயங்கள் سَنُمَتِّعُهُمْ சுகமளிப்போம்/அவர்களுக்கு ثُمَّ பிறகு يَمَسُّهُمْ அடையும்/அவர்களை مِّنَّا நம்மிடமிருந்து عَذَابٌ ஒரு வேதனை اَلِيْمٌ‏ துன்புறுத்தக் கூடியது
11:48. “நூஹே! உம் மீதும் உம்மோடு இருக்கின்ற மக்கள் மீதும் நமது பாதுகாப்புடனும் அபிவிருத்திகளுடனும் நீர் இறங்குவீராக; இன்னும் சில மக்களுக்கு நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் நம்மிடமிருந்து நோவினை தரும் வேதனை அவர்களை தீண்டும்” என்று கூறப்பட்டது.
11:49
11:49 تِلْكَ مِنْ اَنْۢبَآءِ الْغَيْبِ نُوْحِيْهَاۤ اِلَيْكَ‌ۚ مَا كُنْتَ تَعْلَمُهَاۤ اَنْتَ وَلَا قَوْمُكَ مِنْ قَبْلِ هٰذَا‌ ‌ۛؕ فَاصْبِرْ‌ ‌ۛؕ اِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِيْنَ
تِلْكَ مِنْ اَنْۢبَآءِ இவை/சரித்திரங்களில் الْغَيْبِ மறைவான(து) نُوْحِيْهَاۤ வஹ்யி அறிவிக்கிறோம்/இவற்றை اِلَيْكَ‌ۚ உமக்கு مَا كُنْتَ நீர் இருக்கவில்லை تَعْلَمُهَاۤ அறிவீர்/இவற்றை اَنْتَ நீரோ وَلَا قَوْمُكَ இன்னும் இல்லை/உமது மக்களோ مِنْ قَبْلِ முன்னர் هٰذَا‌ ۛؕ இதற்கு فَاصْبِرْ‌ ۛؕ ஆகவே பொறுப்பீராக اِنَّ الْعَاقِبَةَ நிச்சயமாக முடிவு لِلْمُتَّقِيْنَ‏ அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு
11:49. (நபியே! உமக்கு) இது மறைவான நிகழ்ச்சிகளில் உள்ளதாகும்; நாம் இதனை உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தோம், நீரோ அல்லது உம்முடைய கூட்டத்தினரோ இதற்கு முன் இதனை அறிந்திருக்கவில்லை; நீரும் பொறுமையைக் கைக் கொள்வீராக! நிச்சயமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடையவர்களுக்குத் தான் (கிட்டும்).
11:50
11:50 وَاِلٰى عَادٍ اَخَاهُمْ هُوْدًا‌ ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ اِنْ اَنْتُمْ اِلَّا مُفْتَرُوْنَ‏
وَاِلٰى இடம் عَادٍ ஆது اَخَا சகோதரர் هُمْ அவர்களுடைய هُوْدًا‌ ؕ ஹ¨தை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ இல்லை/உங்களுக்கு مِّنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ‌ ؕ அவனை அன்றி اِنْ اَنْتُمْ இல்லை/நீங்கள் اِلَّا தவிர مُفْتَرُوْنَ‏ புனைபவர்களாகவே
11:50. “ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள், அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை.
11:51
11:51 يٰقَوْمِ لَاۤ اَسْــٴَــلُكُمْ عَلَيْهِ اَجْرًا‌ ؕ اِنْ اَجْرِىَ اِلَّا عَلَى الَّذِىْ فَطَرَنِىْ ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
يٰقَوْمِ என் மக்களே لَاۤ اَسْــٴَــلُكُمْ நான் கேட்கவில்லை/உங்களிடம் عَلَيْهِ அதற்காக اَجْرًا‌ ؕ ஒரு கூலியை اِنْ اَجْرِىَ இல்லை/என் கூலி اِلَّا عَلَى தவிர/மீது الَّذِىْ எத்தகையவன் فَطَرَنِىْ ؕ படைத்தான்/என்னை اَفَلَا تَعْقِلُوْنَ‏ சிந்தித்துப் புரிய மாட்டீர்களா?
11:51. “என் சமூகத்தார்களே! இதற்காக நான் உங்களிடம் ஒரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி எல்லாம் என்னைப்படைத்த அல்லாஹ்விடமே இருக்கிறது. நீங்கள் இதை விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? (என்றும்.)
11:52
11:52 وَيٰقَوْمِ اسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ يُرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا وَّيَزِدْكُمْ قُوَّةً اِلٰى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِيْنَ‏
وَيٰقَوْمِ என் மக்களே اسْتَغْفِرُوْا மன்னிப்புக் கோருங்கள் رَبَّكُمْ உங்கள்இறைவனிடம் ثُمَّ பிறகு تُوْبُوْۤا திருந்தி திரும்புங்கள் اِلَيْهِ அவன் பக்கம் يُرْسِلِ அனுப்புவான் السَّمَآءَ மழையை عَلَيْكُمْ உங்களுக்கு مِّدْرَارًا தாரை தாரையாக وَّيَزِدْكُمْ இன்னும் அதிகப்படுத்துவான்/உங்களுக்கு قُوَّةً பலத்தை اِلٰى قُوَّتِكُمْ உங்கள் பலத்துடன் وَلَا تَتَوَلَّوْا திரும்பி விடாதீர்கள் مُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளாக
11:52. “என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்).
11:53
11:53 قَالُوْا يٰهُوْدُ مَا جِئْتَـنَا بِبَيِّنَةٍ وَّمَا نَحْنُ بِتٰـرِكِىْۤ اٰلِهَـتِنَا عَنْ قَوْلِكَ وَمَا نَحْنُ لَـكَ بِمُؤْمِنِيْنَ‏
قَالُوْا يٰهُوْدُ கூறினர்/ஹ¨தே! مَا جِئْتَـنَا நீர் வரவில்லை/நம்மிடம் بِبَيِّنَةٍ ஓர் அத்தாட்சியைக் கொண்டு وَّمَا نَحْنُ இன்னும் இல்லை/நாங்கள் بِتٰـرِكِىْۤ விடுபவர்களாக اٰلِهَـتِنَا தெய்வங்களை/எங்கள் عَنْ قَوْلِكَ உம் சொல்லுக்காக وَمَا نَحْنُ இன்னும் இல்லை/நாங்கள் لَـكَ உம்மை بِمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொண்டவர்களாக
11:53. (அதற்கு) அவர்கள்: “ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்” என்று (பதில்) கூறினார்.
11:54
11:54 اِنْ نَّقُوْلُ اِلَّا اعْتَـرٰٮكَ بَعْضُ اٰلِهَتِنَا بِسُوْٓءٍ‌ ؕ قَالَ اِنِّىْۤ اُشْهِدُ اللّٰهَ وَاشْهَدُوْۤا اَنِّىْ بَرِىْٓءٌ مِّمَّا تُشْرِكُوْنَ ۙ‏
اِنْ نَّقُوْلُ கூறமாட்டோம் اِلَّا தவிர اعْتَـرٰٮكَ بَعْضُ தீண்டி விட்டன/உம்மை/சில اٰلِهَتِنَا எங்கள்தெய்வங்களில் بِسُوْٓءٍ‌ ؕ ஒரு தீமையைக் கொண்டு قَالَ கூறினார் اِنِّىْۤ நிச்சயமாக நான் اُشْهِدُ சாட்சியாக்குகிறேன் اللّٰهَ அல்லாஹ்வை وَاشْهَدُوْۤا நீங்கள் சாட்சி கூறுங்கள் اَنِّىْ நிச்சயமாக நான் بَرِىْٓءٌ விலகியவன் مِّمَّا تُشْرِكُوْنَ ۙ‏ நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து
11:54. “எங்களுடைய தெய்வங்களில் சில கேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை” (என்றும் கூறினார்கள்: அதற்கு) அவர், “நிச்சயமாக நான் அல்லாஹ்வைச் சாட்சியாக்குகிறேன்; நீங்கள் இணை வைப்பவற்றை விட்டும் நிச்சயமாக நான் விலகிக் கொண்டேன் என்பதற்கு நீங்களும் சாட்சியாய் இருங்கள்” என்று கூறினார்.
11:55
11:55 مِنْ دُوْنِهٖ‌ فَكِيْدُوْنِىْ جَمِيْعًا ثُمَّ لَا تُنْظِرُوْنِ‏
مِنْ دُوْنِهٖ‌ @சீஷ] @uஙு فَكِيْدُوْ ஆகவே, சூழ்ச்சி செய்யுங்கள் نِىْ எனக்கு جَمِيْعًا அனைவரும் ثُمَّ பிறகு لَا تُنْظِرُوْنِ‏ அவகாசமளிக்காதீர்கள்/எனக்கு
11:55. “(ஆகவே) அவனையன்றி நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எனக்குச் சூழ்ச்சியைச் செய்து பாருங்கள்; (இதில்) நீங்கள் எனக்கு எந்த அவகாசமும் கொடுக்க வேண்டாம்” (என்றும் கூறினார்).
11:56
11:56 اِنِّىْ تَوَكَّلْتُ عَلَى اللّٰهِ رَبِّىْ وَرَبِّكُمْ ‌ؕ مَا مِنْ دَآبَّةٍ اِلَّا هُوَ اٰخِذٌ ۢ بِنَاصِيَتِهَا ؕ اِنَّ رَبِّىْ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
اِنِّىْ நிச்சயமாக நான் تَوَكَّلْتُ நம்பிக்கை வைத்து விட்டேன் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது رَبِّىْ என் இறைவன் وَرَبِّكُمْ ؕ இன்னும்உங்கள் இறைவன் مَا مِنْ இல்லை/எதுவும் دَآبَّةٍ உயிரினம் اِلَّا தவிர هُوَ அவன் اٰخِذٌ ۢ பிடித்தே بِنَاصِيَتِهَا ؕ அதன் உச்சி முடியை اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் عَلٰى صِرَاطٍ வழியில் مُّسْتَقِيْمٍ‏ நேரானது
11:56. நிச்சயமாக நான், எனக்கும் உங்களுக்கும் இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்; எந்த உயிர்ப் பிராணியாயினும் அதன் முன்நெற்றி உரோமத்தை அவன் பிடித்தவனாகவே இருக்கின்றான்; நிச்சயமாக என் இறைவன் நேரான வழியிலிருக்கின்றான்.
11:57
11:57 فَاِنْ تَوَلَّوْا فَقَدْ اَبْلَغْتُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖۤ اِلَيْكُمْ‌ ؕ وَيَسْتَخْلِفُ رَبِّىْ قَوْمًا غَيْرَكُمْۚ وَلَا تَضُرُّوْنَهٗ شَيْئًا‌ ؕ اِنَّ رَبِّىْ عَلٰى كُلِّ شَىْءٍ حَفِيْظٌ‏
فَاِنْ تَوَلَّوْا நீங்கள் விலகினால் فَقَدْ திட்டமாக اَبْلَغْتُكُمْ எடுத்துரைத்து விட்டேன்/உங்களுக்கு مَّاۤ எதை اُرْسِلْتُ அனுப்பப்பட்டேன் بِهٖۤ அதைக் கொண்டு اِلَيْكُمْ‌ ؕ உங்களிடம் وَيَسْتَخْلِفُ இன்னும் தோன்றச் செய்வான் رَبِّىْ என் இறைவன் قَوْمًا ஹிபீலிஷ[ غَيْرَ அல்லாத(வர்கள்) كُمْۚ நீங்கள் وَلَا تَضُرُّوْنَهٗ நீங்கள் தீங்கிழைக்க முடியாது/அவனுக்கு شَيْئًا‌ ؕ எதையும் اِنَّ رَبِّىْ நிச்சயமாக என் இறைவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் மீது حَفِيْظٌ‏ பாதுகாவலன்
11:57. “நீங்கள் (இவ்வுபதேசத்தைப்) புறக்கணிப்பீர்களாயின் எதற்காக நான் உங்களிடம் அனுப்பப் பட்டேனோ அதனை நிச்சயமாக நான் உங்களிடம் சேர்ப்பித்துவிட்டேன்; இன்னும் என்னுடைய இறைவன் நீங்கள் அல்லாத (வேறு) ஒரு சமூகத்தை உங்களுக்கு பதிலாக வைத்துவிடுவான்; அவனுக்கு எப் பொருளையும் கொண்டு நீங்கள் அவனுக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது. நிச்சயமாக என் இறைவன் யாவற்றையும் பாதுகாப்பவனாக இருக்கின்றான்” (என்றும் கூறினார்).
11:58
11:58 وَ لَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا هُوْدًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا ۚ وَ نَجَّيْنٰهُمْ مِّنْ عَذَابٍ غَلِيْظٍ‏
وَ لَمَّا جَآءَ வந்தபோது اَمْرُنَا நம் உத்தரவு نَجَّيْنَا பாதுகாத்தோம் هُوْدًا ஹ¨தை وَّالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗ அவருடன் بِرَحْمَةٍ مِّنَّا ۚ நமது அருளால் وَ نَجَّيْنٰهُمْ இன்னும் பாதுகாத்தோம்/அவர்களை مِّنْ عَذَابٍ வேதனையிலிருந்து غَلِيْظٍ‏ கடுமையானது
11:58. நம்முடைய (தண்டனைக்கான) உத்தரவு வந்தபோது, ஹூதையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நம் ரஹ்மத்தை (கிருபையைக்) கொண்டு காப்பாற்றினோம் - இன்னும் கடுமையான வேதனையை விட்டும் அவர்களை ஈடேற்றினோம்.
11:59
11:59 وَتِلْكَ عَادٌ‌ جَحَدُوْا بِاٰيٰتِ رَبِّهِمْ وَعَصَوْا رُسُلَهٗ وَاتَّبَعُوْۤا اَمْرَ كُلِّ جَبَّارٍ عَنِيْدٍ‏
وَتِلْكَ இவர்கள் عَادٌ‌ جَحَدُوْا ஆது/மறுத்தனர் بِاٰيٰتِ அத்தாட்சிகளை رَبِّهِمْ தங்கள் இறைவனின் وَعَصَوْا இன்னும் மாறு செய்தனர் رُسُلَهٗ தூதர்களுக்கு/அவனுடைய وَاتَّبَعُوْۤا இன்னும் பின்பற்றினர் اَمْرَ கட்டளை كُلِّ எல்லோருடைய جَبَّارٍ பிடிவாதக்காரர்கள் عَنِيْدٍ‏ முரடர்கள்
11:59. (நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.
11:60
11:60 وَاُتْبِعُوْا فِىْ هٰذِهِ الدُّنْيَا لَعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِ‌ؕ اَلَاۤ اِنَّ عَادًا كَفَرُوْا رَبَّهُمْ‌ؕ اَلَا بُعْدًا لِّعَادٍ قَوْمِ هُوْدٍ
وَاُتْبِعُوْا இன்னும் சேர்ப்பிக்கப் பட்டார்கள் فِىْ هٰذِهِ الدُّنْيَا இந்த உலகத்தில் لَعْنَةً சாபத்தை وَّيَوْمَ الْقِيٰمَةِ‌ؕ இன்னும் மறுமையில் اَلَاۤ அறிந்து கொள்ளுங்கள் اِنَّ عَادًا நிச்சயமாக/ஆது كَفَرُوْا நிராகரித்தனர் رَبَّهُمْ‌ؕ தங்கள் இறைவனுக்கு اَلَا அறிந்து கொள்ளுங்கள் بُعْدًا கேடுதான் لِّعَادٍ ஆதுக்கு قَوْمِ மக்கள் هُوْدٍ‏ ஹ¨துடைய
11:60. எனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத் தீர்ப்பு நாளிலும் (அல்லாஹ்வின்) சாபத்தினால் தொடரப்பெற்றனர்; அறிந்து கொள்வீர்களாக! நிச்சயமாக “ஆது” கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்; இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாயமான “ஆது” கூட்டத்தாருக்கு கேடுதான்.
11:61
11:61 ‌وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا‌ۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ‌ ؕ اِنَّ رَبِّىْ قَرِيْبٌ مُّجِيْبٌ‏
وَاِلٰى ثَمُوْدَ இன்னும் இடம்/ஸமூது اَخَاهُمْ சகோதரர்/அவர்களுடைய صٰلِحًا‌ۘ ஸாலிஹை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ் مَا لَـكُمْ இல்லை/உங்களுக்கு مِّنْ @ஸசீ اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ‌ ؕ அவனை அன்றி هُوَ அவனே اَنْشَاَ உருவாக்கினான் كُمْ உங்களை مِّنَ الْاَرْضِ பூமி/இருந்து وَاسْتَعْمَر வசிக்க வைத்தான் َكُمْ فِيْهَا உங்களை/அதில் فَاسْتَغْفِرُوْ ஆகவே, மன்னிப்புக் கோருங்கள் هُ அவனிடம் ثُمَّ பிறகு تُوْبُوْۤا திருந்தி திரும்புங்கள் اِلَيْهِ‌ ؕ அவன் பக்கம் اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் قَرِيْبٌ மிகச் சமீபமானவன் مُّجِيْبٌ‏ பதிலளிப்பவன்
11:61. இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”
11:62
11:62 قَالُوْا يٰصٰلِحُ قَدْ كُنْتَ فِيْنَا مَرْجُوًّا قَبْلَ هٰذَآ‌ اَتَـنْهٰٮنَاۤ اَنْ نَّـعْبُدَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَا وَاِنَّنَا لَفِىْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَيْهِ مُرِيْبٍ‏
قَالُوْا கூறினர் يٰصٰلِحُ ஸாலிஹே قَدْ كُنْتَ திட்டமாகநீர்இருந்தீர் فِيْنَا எங்களில் مَرْجُوًّا ஆதரவுக்குரியவராக قَبْلَ முன்பு هٰذَآ‌ اَتَـنْهٰٮنَاۤ இது/நீர் தடுக்கிறீரா?/எங்களை اَنْ نَّـعْبُدَ நாங்கள் வணங்குவதை விட்டு مَا يَعْبُدُ எதை வணங்குவார் اٰبَآؤُنَا மூதாதைகள்/எங்கள் وَاِنَّنَا நிச்சயமாக நாங்கள் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில் مِّمَّا இருந்து/எவை تَدْعُوْ அழைக்கிறீர் نَاۤ எங்களை اِلَيْهِ எதன் பக்கம் مُرِيْبٍ‏ மிக ஆழமான சந்தேகம்
11:62. அதற்கு அவர்கள், “ஸாலிஹே! இதற்கு முன்னரெல்லாம் நீர் எங்களிடையே நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்; எங்களுடைய மூதாதையர்கள் எதை வணங்கினார்களோ அதை வணங்குவதைவிட்டு எங்களை விலக்குகின்றீரா? மேலும் நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள் பெருஞ் சந்தேகத்திலிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
11:63
11:63 قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّىْ وَاٰتٰٮنِىْ مِنْهُ رَحْمَةً فَمَنْ يَّـنْصُرُنِىْ مِنَ اللّٰهِ اِنْ عَصَيْتُهٗ‌ فَمَا تَزِيْدُوْنَنِىْ غَيْرَ تَخْسِيْرٍ‏
قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اَرَءَيْتُمْ அறிவியுங்கள் اِنْ كُنْتُ நான் இருந்தால் عَلٰى بَيِّنَةٍ மிறூ னஸிகுசீல] @ழீஸிலலீ£«ஜீ مِّنْ இருந்து رَّبِّىْ என் இறைவன் وَاٰتٰٮنِىْ இன்னும் தந்தான்/எனக்கு مِنْهُ தன்னிடமிருந்து رَحْمَةً அருளை فَمَنْ யார்? يَّـنْصُرُنِىْ உதவுவார்/எனக்கு مِنَ اللّٰهِ அல்லாஹ்விடத்தில் اِنْ عَصَيْتُهٗ‌ நான் மாறு செய்தால்/அவனுக்கு فَمَا تَزِيْدُوْنَنِىْ அதிகமாக்க மாட்டீர்கள்/எனக்கு غَيْرَ تَخْسِيْرٍ‏ அன்றி/நஷ்டம் ஏற்படுத்துவது
11:63. “என் சமூகத்தாரே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடத்திலிருந்து தெளிவான அத்தாட்சியைப் பெற்றிருக்க, அவன் தன்னிடமிருந்து எனக்கு ரஹ்மத்தும் (அருளும்) வழங்கியிருக்க நான் அவனுக்கு மாறு செய்தால், அல்லாஹ்வை விட்டும் எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்களோ, எனக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கி விடமாட்டீர்கள்” என்று கூறினார்.
11:64
11:64 وَيٰقَوْمِ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَـكُمْ اٰيَةً فَذَرُوْهَا تَاْكُلْ فِىْۤ اَرْضِ اللّٰهِ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَيَاْخُذَكُمْ عَذَابٌ قَرِيْبٌ‏
وَيٰقَوْمِ என் மக்களே هٰذِهٖ இது نَاقَةُ பெண் ஒட்டகம் اللّٰهِ அல்லாஹ்வின் لَـكُمْ உங்களுக்கு اٰيَةً அத்தாட்சியான فَذَرُوْهَا ஆகவே, விட்டு விடுங்கள்/அதை تَاْكُلْ அது சாப்பி(டட்)டும் فِىْۤ اَرْضِ பூமியில் اللّٰهِ அல்லாஹ்வின் وَلَا تَمَسُّوْهَا அதற்கு செய்யாதீர்கள் بِسُوْٓءٍ ஒரு கெடுதியையும் فَيَاْخُذَكُمْ பிடிக்கும்/உங்களை عَذَابٌ ஒரு வேதனை قَرِيْبٌ‏ அதிசீக்கிரமானது
11:64. “அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும்” (என்று கூறினார்).
11:65
11:65 فَعَقَرُوْهَا فَقَالَ تَمَتَّعُوْا فِىْ دَارِكُمْ ثَلٰثَةَ اَ يَّامٍ ‌ؕذٰ لِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوْبٍ‏
فَعَقَرُوْ வெட்டினார்கள் هَا அதை فَقَالَ ஆகவே, கூறினார் تَمَتَّعُوْا சுகமாக இருங்கள் فِىْ دَارِ இல்லத்தில் كُمْ உங்கள் ثَلٰثَةَ மூன்று اَ يَّامٍ நாள்கள் ؕذٰ لِكَ இது وَعْدٌ ஒரு வாக்கு غَيْرُ مَكْذُوْبٍ‏ னஜிலஸீறீ©பீலிறீஜிறிலஸி
11:65. ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்): “நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சுகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.
11:66
11:66 فَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا صٰلِحًـا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْىِ يَوْمِٮِٕذٍ‌ؕ اِنَّ رَبَّكَ هُوَ الْقَوِىُّ الْعَزِيْزُ‏
فَلَمَّا போது جَآءَ வந்தது اَمْرُنَا நம் கட்டளை نَجَّيْنَا பாதுகாத்தோம் صٰلِحًـا ஸாலிஹை وَّالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗ அவருடன் بِرَحْمَةٍ مِّنَّا நமது அருளைக் கொண்டு وَمِنْ இன்னும் இருந்து خِزْىِ இழிவு يَوْمِٮِٕذٍ‌ؕ அந்நாளின் اِنَّ நிச்சயமாக رَبَّكَ هُوَ உம் இறைவன்தான் الْقَوِىُّ பலமிக்கவன் الْعَزِيْزُ‏ மிகைத்தவன்
11:66. நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.
11:67
11:67 وَاَخَذَ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ‏
وَاَخَذَ இன்னும் பிடித்தது الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوا அநீதியிழைத்தனர் الصَّيْحَةُ இடி முழக்கம் فَاَصْبَحُوْا ஆகவே, காலையில் ஆகிவிட்டனர் فِىْ دِيَارِهِمْ தங்கள் இல்லங்களில் جٰثِمِيْنَۙ‏ இறந்தவர்களாக
11:67. அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,
11:68
11:68 كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا‌ ؕ اَلَاۤ اِنَّ ثَمُوْدَا۟ كَفَرُوْا رَبَّهُمْ‌ؕ اَلَا بُعْدًا لِّـثَمُوْدَ
كَاَنْ لَّمْ يَغْنَوْا ஸஜிலuஈ/(@) சீ£பீலிடிஜீஷஙீ فِيْهَا‌ ؕ @சீtஙுஜீ/அறிந்து கொள்ளுங்கள் اَلَاۤ நிச்சயமாக اِنَّ ஸமூது ثَمُوْدَا۟ நிராகரித்தனர் كَفَرُوْا தங்கள் இறைவனை رَبَّهُمْ‌ؕ اَلَا அறிந்து கொள்ளுங்கள் بُعْدًا சாபம் உண்டாகட்டும் لِّـثَمُوْدَ‏ ஸமூதுக்கு
11:68. (அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! “ஸமூது” (கூட்டத்தினர்)க்கு நாசம்தான்.
11:69
11:69 وَلَقَدْ جَآءَتْ رُسُلُنَاۤ اِبْرٰهِيْمَ بِالْبُشْرٰى قَالُوْا سَلٰمًا‌ ؕ قَالَ سَلٰمٌ‌ فَمَا لَبِثَ اَنْ جَآءَ بِعِجْلٍ حَنِيْذٍ‏
وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَتْ வந்தனர் رُسُلُنَاۤ நம் தூதர்கள் اِبْرٰهِيْمَ இப்றாஹீமிடம் بِالْبُشْرٰى நற்செய்தியைக் கொண்டு قَالُوْا கூறினர் سَلٰمًا‌ ؕ ஈடேற்றம் உண்டாகுக قَالَ கூறினார் سَلٰمٌ‌ ஈடேற்றம் உண்டாகுக فَمَا لَبِثَ அவர் தாமதிக்கவில்லை اَنْ جَآءَ வருவதற்கு بِعِجْلٍ ஒரு கன்றுக் குட்டியைக் கொண்டு حَنِيْذٍ‏ சுடப்பட்டது
11:69. நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்ராஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) “ஸலாம்” (சொன்னார்கள்; இப்ராஹீமும் “ஸலாம்” (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.
11:70
11:70 فَلَمَّا رَاٰۤ اَيْدِيَهُمْ لَا تَصِلُ اِلَيْهِ نَـكِرَهُمْ وَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً‌  ؕ قَالُوْا لَا تَخَفْ اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمِ لُوْطٍ ؕ‏
فَلَمَّا رَاٰۤ அவர் பார்த்தபோது اَيْدِيَهُمْ கைகளை/அவர்களுடைய لَا تَصِلُ சேராது اِلَيْهِ அதன் பக்கம் نَـكِرَ சந்தேகித்தார் هُمْ அவர்களைப் பற்றி وَاَوْجَسَ இன்னும் அவர் மறைத்தார் مِنْهُمْ அவர்களைப் பற்றி خِيْفَةً‌  ؕ பயத்தை قَالُوْا கூறினார்கள் لَا تَخَفْ பயப்படாதீர் اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اُرْسِلْنَاۤ அனுப்பப்பட்டோம் اِلٰى قَوْمِ மக்களின் பக்கம் لُوْطٍ ؕ‏ ‘லூத்’துடைய
11:70. ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) “பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
11:71
11:71 وَامْرَاَ تُهٗ قَآٮِٕمَةٌ فَضَحِكَتْ فَبَشَّرْنٰهَا بِاِسْحٰقَ ۙ وَمِنْ وَّرَآءِ اِسْحٰقَ يَعْقُوْبَ‏
وَامْرَاَ تُهٗ அவருடைய மனைவி قَآٮِٕمَةٌ நின்று கொண்டிருந்தாள் فَضَحِكَتْ சிரித்தாள் فَبَشَّرْنٰهَا நற்செய்தி கூறினோம்/அவளுக்கு بِاِسْحٰقَ ۙ இஸ்ஹாக்கைக் கொண்டு وَمِنْ وَّرَآءِ இன்னும் பின்னால் اِسْحٰقَ இஸ்ஹாக்கிற்கு يَعْقُوْبَ‏ யஅகூப்
11:71. அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.
11:72
11:72 قَالَتْ يٰوَيْلَتٰٓى ءَاَلِدُ وَاَنَا عَجُوْزٌ وَّهٰذَا بَعْلِىْ شَيْخًا ‌ؕ اِنَّ هٰذَا لَشَىْءٌ عَجِيْبٌ‏
قَالَتْ கூறினாள் يٰوَيْلَتٰٓى என் துக்கமே ءَاَلِدُ பிள்ளைபெறுவேனா وَاَنَا நானுமோ عَجُوْزٌ கிழவியாக وَّهٰذَا இவரோ بَعْلِىْ என் கணவராகிய شَيْخًا ؕ வயோதிகராக اِنَّ நிச்சயமாக هٰذَا இது لَشَىْءٌ விஷயம்தான் عَجِيْبٌ‏ வியப்பான(து)
11:72. அதற்கு அவர் கூறினார்: “ஆ கைசேதமே! நான் முதியவளாகவும், இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா? நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்!”
11:73
11:73 قَالُوْۤا اَتَعْجَبِيْنَ مِنْ اَمْرِ اللّٰهِ‌ رَحْمَتُ اللّٰهِ وَبَرَكٰتُهٗ عَلَيْكُمْ اَهْلَ الْبَيْتِ‌ؕ اِنَّهٗ حَمِيْدٌ مَّجِيْدٌ‏
قَالُوْۤا கூறினார்கள் اَتَعْجَبِيْنَ வியப்படைகிறீரா? مِنْ اَمْرِ கட்டளையில் اللّٰهِ‌ அல்லாஹ்வுடைய رَحْمَتُ கருணை اللّٰهِ அல்லாஹ்வின் وَبَرَكٰتُهٗ இன்னும் அவனுடைய அருள்கள் عَلَيْكُمْ உங்கள் மீது اَهْلَ الْبَيْتِ‌ؕ வீட்டாரே اِنَّهٗ நிச்சயமாக அவன் حَمِيْدٌ மகா புகழாளன் مَّجِيْدٌ‏ மகா கீர்த்தியாளன்
11:73. (அதற்கு) அவர்கள், “அல்லாஹ்வின் கட்டளையைப் பற்றி ஆச்சரியப்படுகிறீரா? அல்லாஹ்வின் ரஹ்மத்தும், அவனுடைய பரக்கத்தும் (அருளும், பாக்கியமும்) இவ்வீட்டிலுள்ள உங்கள் மீது உண்டாவதாக! நிச்சயமாக அவன் புகழுடையவனாகவும், மகிமை வாய்ந்தவனாகவும் இருக்கின்றான்” என்று பதிலளித்தார்கள்.
11:74
11:74 فَلَمَّا ذَهَبَ عَنْ اِبْرٰهِيْمَ الرَّوْعُ وَجَآءَتْهُ الْبُشْرٰى يُجَادِلُــنَا فِىْ قَوْمِ لُوْطٍؕ‏
فَلَمَّا ذَهَبَ சென்றபோது عَنْ اِبْرٰهِيْمَ இப்றாஹீமை விட்டு الرَّوْعُ திடுக்கம் وَجَآءَتْهُ இன்னும்வந்தது/அவருக்கு الْبُشْرٰى நற்செய்தி يُجَادِلُــنَا தர்க்கித்தார்/நம்மிடம் فِىْ قَوْمِ மக்கள் விஷயத்தில் لُوْطٍؕ‏ லூத்துடைய
11:74. (இது கேட்டு) இப்ராஹீமை விட்டுப் பயம் நீங்கி, நன்மாராயம் அவருக்கு வந்ததும் லூத்துடைய சமூகத்தாரைப் பற்றி நம்மிடம் வாதிடலானார்.
11:75
11:75 اِنَّ اِبْرٰهِيْمَ لَحَـلِيْمٌ اَوَّاهٌ مُّنِيْبٌ‏
اِنَّ اِبْرٰهِيْمَ நிச்சயமாக இப்றாஹீம் لَحَـلِيْمٌ சகிப்பாளர் اَوَّاهٌ அதிகம் பிரார்த்திப்பவர் مُّنِيْبٌ‏ திரும்பக்கூடியவர்
11:75. நிச்சயமாக இப்ராஹீம் சகிப்புத் தன்மை உடையவராகவும், இளகிய மனங்கொண்டவராகவும் (எதற்கும்) இறைவன் பால் முகம் திரும்புபவராகவும் இருந்தார்.
11:76
11:76 يٰۤـاِبْرٰهِيْمُ اَعْرِضْ عَنْ هٰذَا ۚ اِنَّهٗ قَدْ جَآءَ اَمْرُ رَبِّكَ‌ ۚ وَاِنَّهُمْ اٰتِيْهِمْ عَذَابٌ غَيْرُ مَرْدُوْدٍ‏
يٰۤـاِبْرٰهِيْمُ இப்ராஹீமே اَعْرِضْ புறக்கனிப்பாராக عَنْ هٰذَا ۚ இதை விட்டு اِنَّهٗ நிச்சயமாக قَدْ திட்டமாக جَآءَ வந்தது اَمْرُ கட்டளை رَبِّكَ‌ ۚ உம் இறைவனின் وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اٰتِيْهِمْ வரும்/அவர்களுக்கு عَذَابٌ வேதனை غَيْرُ مَرْدُوْدٍ‏ தடுக்கபடாதது
11:76. “இப்ராஹீமே! (அம்மக்கள் மீது கொண்ட இரக்கத்தால் இதைப் பற்றி வாதிடாது) இ(வ்விஷயத்)தை நீர் புறக்கணியும்; ஏனெனில் உம்முடைய இறைவனின் கட்டளை நிச்சயமாக வந்துவிட்டது - மேலும், அவர்களுக்குத் தவிர்க்கமுடியாத வேதனை நிச்சயமாக வரக்கூடியதேயாகும்.
11:77
11:77 وَلَمَّا جَآءَتْ رُسُلُـنَا لُوْطًا سِىْٓءَ بِهِمْ وَضَاقَ بِهِمْ ذَرْعًا وَّقَالَ هٰذَا يَوْمٌ عَصِيْبٌ‏
وَلَمَّا جَآءَتْ வந்த போது رُسُلُـنَا நம் தூதர்கள் لُوْطًا லூத்திடம் سِىْٓءَ சிரமத்திற்குள்ளானார் بِهِمْ அவர்களால் وَضَاقَ இன்னும் சுருங்கினார் بِهِمْ அவர்களால் ذَرْعًا மனம் وَّقَالَ இன்னும் கூறினார் هٰذَا இது يَوْمٌ நாள் عَصِيْبٌ‏ மிகக் கடுமையான(து)
11:77. நம் தூதர்கள் (வானவர்கள்) லூத்திடம் வந்தபோது, (தம்) மக்களுக்கு அவர் பெரிதும் விசனமடைந்தார்; (அதன் காரணமாக) உள்ளம் சுருங்கியவராக; இது நெருக்கடி மிக்க நாளாகும்” என்று கூறினார்.
11:78
11:78 وَجَآءَهٗ قَوْمُهٗ يُهْرَعُوْنَ اِلَيْهِ ؕ وَمِنْ قَبْلُ كَانُوْا يَعْمَلُوْنَ السَّيِّاٰتِ ‌ؕ قَالَ يٰقَوْمِ هٰٓؤُلَاۤءِ بَنٰتِىْ هُنَّ اَطْهَرُ لَـكُمْ‌ ۚ فَاتَّقُوْا اللّٰهَ وَلَا تُخْزُوْنِ فِىْ ضَيْفِىْ ؕ اَلَيْسَ مِنْكُمْ رَجُلٌ رَّشِيْدٌ‏
وَجَآءَهٗ வந்தார்(கள்)/அவரிடம் قَوْمُهٗ மக்கள்/அவருடைய يُهْرَعُوْنَ விரைந்தவர்களாக اِلَيْهِ ؕ அவர் பக்கம் وَمِنْ قَبْلُ இன்னும் இதற்கு முன்னர் كَانُوْا இருந்தனர் يَعْمَلُوْنَ அல்லது செய்பவர்களாக السَّيِّاٰتِ ؕ தீயவற்றை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே هٰٓؤُلَاۤءِ ஙிசீஷீலிs بَنٰتِىْ என் பெண் பிள்ளைகள் هُنَّ அவர்கள் اَطْهَرُ மிக சுத்தமானவர்(கள்) لَـكُمْ‌ ۚ உங்களுக்கு فَاتَّقُوْا ஆகவே அஞ்சுங்கள் اللّٰهَ அல்லாஹ்வை وَلَا تُخْزُوْنِ அவமானப்படுத்தாதீர் கள்/என்னை فِىْ ضَيْفِىْ ؕ என் விருந்தினர் விஷயத்தில் اَلَيْسَ இல்லையா? مِنْكُمْ உங்களில் رَجُلٌ ஓர் ஆடவர் رَّشِيْدٌ‏ நல்லறிவுள்ளவர்
11:78. அவருடைய சமூகத்தார் அவரிடம் விரைந்தோடி வந்தார்கள்; இன்னும் முன்னிருந்தே அவர்கள் தீய செயல்களே செய்து கொண்டிருந்தார்கள். (அவர்களை நோக்கி லூத்) “என் சமூகத்தார்களே! இதோ இவர்கள் என் புதல்விகள்; இவர்கள் உங்களுக்கு(த் திருமணத்திற்கு)ப் பரிசுத்தமானவர்கள்; எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; இன்னும் என் விருந்தினர் விஷயத்தில் என்னை நீங்கள் அவமானப் படுத்தாதீர்கள்; நல்ல மனிதர் ஒருவர் (கூட) உங்களில் இல்லையா?” என்று கூறினார்.
11:79
11:79 قَالُوْا لَقَدْ عَلِمْتَ مَا لَـنَا فِىْ بَنٰتِكَ مِنْ حَقٍّ‌ ۚ وَاِنَّكَ لَـتَعْلَمُ مَا نُرِيْدُ‏
قَالُوْا கூறினார்கள் لَقَدْ عَلِمْتَ அறிந்து கொண்டீர் مَا இல்லை لَـنَا எங்களுக்கு فِىْ بَنٰتِكَ இடம்/பெண் பிள்ளைகள்/உம் مِنْ حَقٍّ‌ ۚ ஒரு தேவை وَاِنَّكَ நிச்சயமாக நீர் لَـتَعْلَمُ உறுதிபட அறிவீர் مَا نُرِيْدُ‏ எதை/நாடுகிறோம்
11:79. (அதற்கு) அவர்கள் “உம்முடைய புதல்வியரில் எங்களுக்கு எந்த பாத்தியதையுமில்லை என்பதைத் திடமாக நீர் அறிந்திருக்கிறீர்; நிச்சயமாக நாங்கள் விரும்புவது என்ன என்பதையும் நீர் அறிவீர்” என்று கூறினார்கள்.
11:80
11:80 قَالَ لَوْ اَنَّ لِىْ بِكُمْ قُوَّةً اَوْ اٰوِىْۤ اِلٰى رُكْنٍ شَدِيْدٍ‏
قَالَ கூறினார் لَوْ இருக்க வேண்டுமே! اَنَّ لِىْ நிச்சயமாக/எனக்கு بِكُمْ உங்களிடம் قُوَّةً اَوْ பலம்/அல்லது اٰوِىْۤ ஒதுங்குவேன்! اِلٰى رُكْنٍ பக்கம்/ஆதரவாளர் شَدِيْدٍ‏ வலிமையானவர்
11:80. அதற்கு அவர் “உங்களைத் தடுக்க போதுமான பலம் எனக்கு இருக்கவேண்டுமே! அல்லது (உங்களைத் தடுக்கப் போதுமான) வலிமையுள்ள ஆதரவின்பால் நான் ஒதுங்கவேண்டுமே” என்று (விசனத்துடன்) கூறினார்.
11:81
11:81 قَالُوْا يٰلُوْطُ اِنَّا رُسُلُ رَبِّكَ لَنْ يَّصِلُوْۤا اِلَيْكَ‌ فَاَسْرِ بِاَهْلِكَ بِقِطْعٍ مِّنَ الَّيْلِ وَلَا يَلْتَفِتْ مِنْكُمْ اَحَدٌ اِلَّا امْرَاَتَكَ‌ؕ اِنَّهٗ مُصِيْبُهَا مَاۤ اَصَابَهُمْ‌ؕ اِنَّ مَوْعِدَهُمُ الصُّبْحُ‌ؕ اَلَيْسَ الصُّبْحُ بِقَرِيْبٍ‏
قَالُوْا ஊஙு]ஷீ يٰلُوْطُ லூத்தே اِنَّا நிச்சயமாக நாங்கள் رُسُلُ தூதர்கள் رَبِّكَ உம் இறைவனின் لَنْ يَّصِلُوْۤا அறவே சேர மாட்டார்கள் اِلَيْكَ‌ உம் பக்கம் فَاَسْرِ ஆகவே, செல்வீராக بِاَهْلِكَ உம் குடும்பத்தைக் கொண்டு بِقِطْعٍ ஒரு பகுதியில் مِّنَ الَّيْلِ இரவின் وَلَا يَلْتَفِتْ திரும்பிப் பார்க்க வேண்டாம் مِنْكُمْ உங்களில் اَحَدٌ ஒருவரும் اِلَّا தவிர امْرَاَتَكَ‌ؕ உம் மனைவி اِنَّهٗ நிச்சயமாக/செய்தி مُصِيْبُهَا அடையக்கூடியதே/அவளை مَاۤ اَصَابَهُمْ‌ؕ எது/அடைகின்ற(து)/அவர்களை اِنَّ நிச்சயமாக مَوْعِدَهُمُ வாக்களிக்கப்பட்ட நேரம்/இவர்களின் الصُّبْحُ‌ؕ விடியற் காலை اَلَيْسَ இல்லையா? الصُّبْحُ விடியற்காலை بِقَرِيْبٍ‏ சமீபமாக
11:81. (விருந்தினராக வந்த வானவர்கள்) கூறினார்கள்: “மெய்யாகவே நாம் உம்முடைய இறைவனின் தூதர்களாகவே இருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள் உம்மை வந்தடைய முடியாது; எனவே இரவின் ஒரு பகுதி இருக்கும்போதே உம் குடும்பத்துடன் (இவ்வூரை விட்டுச்) சென்றுவிடும்! உம்முடைய மனைவியைத் தவிர, உங்களில் யாரும் திரும்பியும் பார்க்க வேண்டாம். நிச்சயமாக அவர்களுக்கு வரக்கூடிய ஆபத்து அவளையும் பிடித்துக் கொள்ளும். (வேதனை வர) அவர்களுக்கு நிச்சயமாக வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற்காலையாகும்; விடியற்காலை சமீபித்து விடவில்லையா?”
11:82
11:82 فَلَمَّا جَآءَ اَمْرُنَا جَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَاَمْطَرْنَا عَلَيْهَا حِجَارَةً مِّنْ سِجِّيْلٍۙ  مَّنْضُوْدٍۙ‏
فَلَمَّا போது جَآءَ வந்தது اَمْرُنَا நம் கட்டளை جَعَلْنَا ஆக்கினோம் عَالِيَهَا அதன் மேல்புறத்தை سَافِلَهَا அதன் கீழ்ப்புறமாக وَاَمْطَرْنَا இன்னும் மழையாக பொழிந்தோம் عَلَيْهَا அதன் மீது حِجَارَةً கற்களை مِّنْ இருந்து سِجِّيْلٍۙ  இறுக்கமாக்கப்பட்டது مَّنْضُوْدٍۙ‏ சுடப்பட்ட களிமண்
11:82. எனவே (தண்டனை பற்றிய) நம் கட்டளை வந்துவிட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்தட்டைக் கீழ்தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன்மீது சுடப்பட்ட செங்கற்களை மழைபோல் பொழியவைத்தோம்.
11:83
11:83 مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ‌ؕ وَ مَا هِىَ مِنَ الظّٰلِمِيْنَ بِبَعِيْدٍ
مُّسَوَّمَةً அடையாளமிடப்பட்டிருந்தது عِنْدَ رَبِّكَ‌ؕ உங்கள் இறைவனால் وَ مَا இல்லை هِىَ அவை مِنَ இருந்து الظّٰلِمِيْنَ அக்கிரமக்காரர்கள் بِبَعِيْدٍ‏ தூரமாக
11:83. அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப்பட்டிருந்தன; (அவ்வூர்) இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தொலைவிலும் இல்லை.
11:84
11:84 وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا‌ ؕ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ‌ؕ وَلَا تَـنْقُصُوا الْمِكْيَالَ وَالْمِيْزَانَ‌ اِنِّىْۤ اَرٰٮكُمْ بِخَيْرٍ وَّاِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ مُّحِيْطٍ‏
وَاِلٰى مَدْيَنَ ‘மத்யன்’க்கு اَخَا சகோதரர் هُمْ அவர்களுடைய شُعَيْبًا‌ ؕ ஷுஐபை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கு இல்லை مِّنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ ؕ அவனை அன்றி وَلَا تَـنْقُصُوا குறைக்காதீர்கள் الْمِكْيَالَ அளவையில் وَالْمِيْزَانَ‌ இன்னும் நிறுவையில் اِنِّىْۤ நிச்சயமாக நான் اَرٰٮكُمْ காண்கிறேன்/ உங்களை بِخَيْرٍ நல்லதொரு வசதியில் وَّاِنِّىْۤ இன்னும் நிச்சயமாக நான் اَخَافُ பயப்படுகிறேன் عَلَيْكُمْ உங்கள் மீது عَذَابَ வேதனையை يَوْمٍ ஒரு நாளின் مُّحِيْطٍ‏ சூழக்கூடியது
11:84. மத்யனி (நகரத்தி)லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களிடம்: “என்) சமூகத்தவர்களே! அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத்தவிர உங்களுக்கு வேறு நாயனில்லை; அளவையிலும் நிறுவையிலும் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; நீங்கள் நல்ல நிலைமையிலிருப்பதை (இப்பொழுது) நான் காண்கின்றேன்; ஆனால் (அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்தால்) நிச்சயமாக உங்களைச் சூழ்ந்து கொள்ளக்கூடிய வேதனை ஒரு நாள் உங்களை வந்தடையும் என்று நான் பயப்படுகிறேன்.
11:85
11:85 وَيٰقَوْمِ اَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِ‌ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ‏
وَيٰقَوْمِ என் மக்களே اَوْفُوا முழுமைப்படுத்துங்கள் الْمِكْيَالَ அளவையில் وَالْمِيْزَانَ இன்னும் நிறுவையில் بِالْقِسْطِ‌ நீதமாக وَلَا تَبْخَسُوا இன்னும் குறைக்காதீர்கள் النَّاسَ மக்களுக்கு اَشْيَآءَ பொருள்களை هُمْ அவர்களுடைய وَلَا تَعْثَوْا கலகம் செய்யாதீர்கள் فِى الْاَرْضِ பூமியில் مُفْسِدِيْنَ‏ விஷமிகளாக
11:85. “(என்) சமூகத்தவர்களே! அளவையிலும் நிறுவையிலும், நீதியைக் கொண்டு நீங்கள் பூர்த்தி செய்யுங்கள். (மக்களுக்குக் கொடுக்க வேண்டிய) அவர்களுடைய பொருட்களைக் குறைத்து விடாதீர்கள். பூமியில் விஷமம் செய்துகொண்டு (வரம்பு மீறி) அலையாதீர்கள்.
11:86
11:86 بَقِيَّتُ اللّٰهِ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ  ۚ وَمَاۤ اَنَا عَلَيْكُمْ بِحَفِيْظٍ‏
بَقِيَّتُ மீதப்படுத்தியது اللّٰهِ அல்லாஹ் خَيْرٌ மிக மேலானது لَّـكُمْ உங்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் مُّؤْمِنِيْنَ  நம்பிக்கை கொண்டவர்களாக ۚ وَمَاۤ இல்லை اَنَا நான் عَلَيْكُمْ உங்கள் மீது بِحَفِيْظٍ‏ கண்காணிப்பாளன்
11:86. “நீங்கள் உண்மை முஃமின்களாக இருந்தால், அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையுடையதாகும்; நான் உங்களைக் கண்காணிப்பவனும் அல்லன்” என்று கூறினார்.
11:87
11:87 قَالُوْا يٰشُعَيْبُ اَصَلٰوتُكَ تَاْمُرُكَ اَنْ نَّتْرُكَ مَا يَعْبُدُ اٰبَآؤُنَاۤ اَوْ اَنْ نَّـفْعَلَ فِىْۤ اَمْوَالِنَا مَا نَشٰٓؤُا‌ ؕ اِنَّكَ لَاَنْتَ الْحَـلِيْمُ الرَّشِيْدُ‏
قَالُوْا கூறினார்கள் يٰشُعَيْبُ ஷுஐபே اَصَلٰوتُكَ உம் தொழுகையா? تَاْمُرُكَ தூண்டுகிறது/உம்மை اَنْ نَّتْرُكَ நாங்கள் விடுவதற்கு مَا எவற்றை يَعْبُدُ வணங்கினார்கள் اٰبَآؤُنَاۤ மூதாதைகள்/எங்கள் اَوْ அல்லது اَنْ نَّـفْعَلَ நாங்கள் செய்வதை فِىْۤ اَمْوَالِنَا செல்வங்களில்/எங்கள் مَا نَشٰٓؤُا‌ ؕ நாங்கள் நாடுகின்றபடி اِنَّكَ لَاَنْتَ நிச்சயமாக நீர்தான் الْحَـلِيْمُ மகா சகிப்பாளர் الرَّشِيْدُ‏ நல்லறிவாளர்
11:87. (அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நாங்கள் எங்கள் மூதாதையர் வணங்கிய தெய்வங்களை விட்டு விடுமாறும், நாங்கள் எங்கள் பொருட்களை எங்கள் விருப்பப்படிச் செலவு செய்வதை விட்டுவிடுமாறும் உம்முடைய (மார்க்கத்) தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் கிருபையுள்ளவரும் நேர்மையானவரும் தான்” என்று (ஏளனமாகக்) கூறினார்கள்.
11:88
11:88 قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّىْ وَرَزَقَنِىْ مِنْهُ رِزْقًا حَسَنًا‌ ؕ وَمَاۤ اُرِيْدُ اَنْ اُخَالِفَكُمْ اِلٰى مَاۤ اَنْهٰٮكُمْ عَنْهُ‌ ؕ اِنْ اُرِيْدُ اِلَّا الْاِصْلَاحَ مَا اسْتَطَعْتُ‌ ؕ وَمَا تَوْفِيْقِىْۤ اِلَّا بِاللّٰهِ‌ ؕ عَلَيْهِ تَوَكَّلْتُ وَاِلَيْهِ اُنِيْبُ‏
قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اَرَءَيْتُمْ அறிவியுங்கள் اِنْ كُنْتُ நான் இருப்பதால் عَلٰى بَيِّنَةٍ தெளிவான அத்தாட்சியில் مِّنْ رَّبِّىْ என் இறைவனின் وَرَزَقَنِىْ இன்னும் வழங்கினான்/ எனக்கு مِنْهُ தன்னிடமிருந்து رِزْقًا உணவை حَسَنًا‌ ؕ அழகியது/ நல்லது وَمَاۤ اُرِيْدُ நாடமாட்டேன் اَنْ اُخَالِفَكُمْ நான் முரண்படுவதற்கு/உங்களுக்கு اِلٰى مَاۤ இல்/எவை اَنْهٰٮكُمْ தடுக்கிறேன்/உங்களை عَنْهُ‌ ؕ அவற்றை விட்டு اِنْ اُرِيْدُ நாடமாட்டேன் اِلَّا தவிர الْاِصْلَاحَ சீர்திருத்துவதை مَا اسْتَطَعْتُ‌ ؕ நான் இயன்றவரை وَمَا تَوْفِيْقِىْۤ இல்லை /என் நற்பாக்கியம் اِلَّا தவிர بِاللّٰهِ‌ ؕ அல்லாஹ்வைக் கொண்டே عَلَيْهِ அவன் மீதே تَوَكَّلْتُ நம்பிக்கைவைத்தேன் وَاِلَيْهِ அவன் பக்கமே اُنِيْبُ‏ திரும்புகிறேன்
11:88. (அதற்கு) அவர் கூறினார்: “(என்னுடைய) சமூகத்தவர்களே! நான் என்னுடைய இறைவனின் தெளிவான அத்தாட்சி மீது இருப்பதையும், அவன் தன்னிடமிருந்து எனக்கு அழகான ஆகார வசதிகளை அளித்து இருப்பதையும் நீங்கள் அறிவீர்களா? (ஆகவே) நான் எதை விட்டு உங்களை விலக்குகின்றேனோ, (அதையே நானும் செய்து உங்கள் நலனுக்கு) மாறு செய்ய நான் விரும்பவில்லை. என்னால் இயன்ற வரையில் (உங்களின்) சீர் திருத்தத்தையேயன்றி வேறெதையும் நான் நாடவில்லை; மேலும், நான் உதவி பெறுவது அல்லாஹ்வைக் கொண்டல்லாது வேறில்லை, அவனிடமே பொறுப்புக் கொடுத்திருக்கிறேன்; இன்னும் அவன் பாலே மீளுகிறேன்.
11:89
11:89 وَيٰقَوْمِ لَا يَجْرِمَنَّكُمْ شِقَاقِىْۤ اَنْ يُّصِيْبَكُمْ مِّثْلُ مَاۤ اَصَابَ قَوْمَ نُوْحٍ اَوْ قَوْمَ هُوْدٍ اَوْ قَوْمَ صٰلِحٍ‌ؕ وَمَا قَوْمُ لُوْطٍ مِّنْكُمْ بِبَعِيْدٍ‏
وَيٰقَوْمِ என் மக்களே لَا يَجْرِمَنَّكُمْ நிச்சயம் தூண்ட வேண்டாம்/உங்களை شِقَاقِىْۤ என்மீதுள்ளவிரோதம் اَنْ يُّصِيْبَكُمْ அடைவதற்கு/உங்களை مِّثْلُ போன்ற مَاۤ اَصَابَ எது/அடைந்தது قَوْمَ மக்களை نُوْحٍ நூஹ்வுடைய اَوْ அல்லது/மக்களை قَوْمَ ஹ¨துடைய هُوْدٍ அல்லது اَوْ மக்களை قَوْمَ ஸாலிஹ்வுடைய صٰلِحٍ‌ؕ இல்லை وَمَا قَوْمُ மக்கள் لُوْطٍ லூத்துடைய مِّنْكُمْ உங்களுக்கு بِبَعِيْدٍ‏ தூரமாக
11:89. “என் சமூகத்தவர்களே! என்னுடன் நீங்கள் பகைமை கொண்டிருப்பது நூஹ்வுடைய சமூகத்தவரையும், ஹூதுடைய சமூகத்தவரையும், ஸாலிஹு சமூகத்தவரையும் பிடித்துக் கொண்டது போன்ற (வேதனை) உங்களையும் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட வேண்டாம் - லூத்துடைய சமூகத்தவர்கள் உங்களுக்குத் தொலைவில் இல்லை!
11:90
11:90 وَاسْتَغْفِرُوْا رَبَّكُمْ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ‌ؕ اِنَّ رَبِّىْ رَحِيْمٌ وَّدُوْدٌ‏
وَاسْتَغْفِرُوْا மன்னிப்புக் கோருங்கள் رَبَّكُمْ உங்கள் இறைவனிடம் ثُمَّ பிறகு تُوْبُوْۤا திருந்தி திரும்புங்கள் اِلَيْهِ‌ؕ அவன் பக்கமே اِنَّ رَبِّىْ நிச்சயமாக என் இறைவன் رَحِيْمٌ பெரும் கருணையாளன் وَّدُوْدٌ‏ மகா நேசன்
11:90. “ஆகவே உங்களுடைய இறைவனிடம் நீங்கள் மன்னிப்புக் கோரி இன்னும் அவனிடமே தவ்பா செய்து (அவன் பக்கமே) மீளுங்கள்; நிச்சயமாக என்னுடைய இறைவன் மிக்க கிருபையுடையவனாகவும், பிரியமுடையவனாகவும் இருக்கின்றான்” (என்று கூறினார்).
11:91
11:91 قَالُوْا يٰشُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَـنَرٰٮكَ فِيْنَا ضَعِيْفًا‌ ۚ وَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ‌ وَمَاۤ اَنْتَ عَلَيْنَا بِعَزِيْزٍ‏
قَالُوْا கூறினார்கள் يٰشُعَيْبُ ஷுஐபே مَا نَفْقَهُ நாம் விளங்கவில்லை كَثِيْرًا பலவற்றை مِّمَّا تَقُوْلُ நீர் கூறுவதில் وَاِنَّا நிச்சயமாக நாம் لَـنَرٰٮكَ உம்மை காண்கிறோம் فِيْنَا எங்களில் ضَعِيْفًا‌ ۚ பலவீனராக وَلَوْلَا இல்லாவிடில் رَهْطُكَ உம் இனத்தார் لَرَجَمْنٰكَ‌ கல் எறிந்தே கொன்றிருப்போம்/உம்மை وَمَاۤ اَنْتَ عَلَيْنَا இல்லை/நீர்/நம்மிடம் بِعَزِيْزٍ‏ மதிப்புடையவராக
11:91. (அதற்கு) அவர்கள் “ஷுஐபே! நீர் சொல்பவற்றில் பெரும்பாலானதை நாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லை; நிச்சயமாக உம்மை எங்களிடையே பலஹீனராகவே நாங்கள் காண்கிறோம்; உம் குலத்தார் இல்லை என்றால் உம்மைக் கல்லலெறிந்தே நாங்கள் (கொன்றிருப்போம்); நீர் எங்களில் மதிப்புக்குரியவரும் அல்லர்” என்று கூறினார்கள்.
11:92
11:92 قَالَ يٰقَوْمِ اَرَهْطِىْۤ اَعَزُّ عَلَيْكُمْ مِّنَ اللّٰهِ ؕ وَ اتَّخَذْتُمُوْهُ وَرَآءَكُمْ ظِهْرِيًّا‌ ؕ اِنَّ رَبِّىْ بِمَا تَعْمَلُوْنَ مُحِيْطٌ‏
قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اَرَهْطِىْۤ என் இனத்தாரா? اَعَزُّ அதிகம் மதிப்புடையவர்(கள்) عَلَيْكُمْ உங்களிடம் مِّنَ اللّٰهِ ؕ அல்லாஹ்வை விட وَ اتَّخَذْتُمُوْهُ நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்/அவனை وَرَآءَ பின்னால் كُمْ உங்களுக்கு ظِهْرِيًّا‌ ؕ எறியப்பட்டவனாக اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் بِمَا எவற்றை تَعْمَلُوْنَ செய்கிறீர்கள் مُحِيْطٌ‏ சூழ்ந்த¤ருப்பவன்
11:92. (அதற்கு) அவர் கூறினார்: “(என்) சமூகத்தவர்களே! அல்லாஹ்வைவிட உங்களுக்கு என்னுடைய குடும்பத்தார் அதிக மதிப்புடையவர்களாய் விட்டார்களா? நீங்கள் அவனை முதுகுக்குப் பின் தள்ளிப் (புறக்கணித்து) விட்டீர்கள். நிச்சயமாக என்னுடைய இறைவன் நீங்கள் செய்யும் செயல்களை (எல்லாப் பக்கங்களிலும்) சூழ்ந்து (அறிந்து) கொண்டுதானிருக்கின்றான்.
11:93
11:93 وَيٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّىْ عَامِلٌ‌ ؕ سَوْفَ تَعْلَمُوْنَ ۙ مَنْ يَّاْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَمَنْ هُوَ كَاذِبٌ‌ ؕ وَارْتَقِبُوْۤا اِنِّىْ مَعَكُمْ رَقِيْبٌ‏
وَيٰقَوْمِ என் மக்களே اعْمَلُوْا நீங்கள் செயல்படுங்கள் عَلٰى مَكَانَتِكُمْ உங்கள் தகுதிக்கு ஏற்ப اِنِّىْ நிச்சயமாக நான் عَامِلٌ‌ ؕ செயல்படுகிறேன் سَوْفَ تَعْلَمُوْنَ ۙ அறிவீர்கள் مَنْ யாருக்கு? يَّاْتِيْهِ வரும்/அவருக்கு عَذَابٌ ஒரு வேதனை يُّخْزِيْهِ இழிவுபடுத்தும்/தன்னை وَمَنْ இன்னும் யார்? هُوَ அவர் كَاذِبٌ‌ ؕ பொய்யர் وَارْتَقِبُوْۤا எதிர் பார்த்திருங்கள் اِنِّىْ நிச்சயமாக நான் مَعَكُمْ உங்களுடன் رَقِيْبٌ‏ எதிர்பார்ப்பவன்
11:93. “என் சமூகத்தவர்களே! நீங்கள் உங்களுக்கு இசைந்தவாறு செய்து கொண்டிருங்கள்! நானும் (எனக்கு இசைந்தவாறு) செய்து கொண்டிருக்கிறேன்; இழிவு தரும் வேதனை யாரை வந்தடையும் என்பதையும், பொய்யர் யார் என்பதையும் சீக்கிரமே நீங்கள் அறிந்து கொள்வீர்கள்; (அந்நேரத்தை) நீங்கள் எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்” (என்றும் கூறினார்).
11:94
11:94 وَلَمَّا جَآءَ اَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّا ۚ وَاَخَذَتِ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِىْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ‏
وَلَمَّا جَآءَ வந்த போது اَمْرُنَا நம் கட்டளை نَجَّيْنَا பாதுகாத்தோம் شُعَيْبًا ஷுஐபை وَّالَّذِيْنَ இன்னும் எவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டார்கள் مَعَهٗ அவருடன் بِرَحْمَةٍ அருளைக் கொண்டு مِّنَّا ۚ நமது وَاَخَذَتِ இன்னும் பிடித்தது الَّذِيْنَ எவர்களை ظَلَمُوا அநியாயம்செய்தார்கள் الصَّيْحَةُ فَاَصْبَحُوْا சப்தம்/காலையில் ஆகிவிட்டனர் فِىْ دِيَارِهِمْ தங்கள் இல்லங்களில் جٰثِمِيْنَۙ‏ இறந்தவர்களாக
11:94. (தண்டனைக்குரிய) நம் கட்டளை வந்த போது, ஷுஐபையும் அவருடன் ஈமான் கொண்டவர்களையும் நமது ரஹ்மத்தை கொண்டு நாம் காப்பாற்றினோம்; அநியாயம் செய்தவர்களை (பேரிடியின்) முழக்கம் பிடித்துக் கொண்டது; அவர்கள் தம் வீடுகளில் இருந்தவாறே காலையில் (இறந்து) கிடந்தனர்.
11:95
11:95 كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا‌ ؕ اَلَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْدُ
كَاَنْ لَّمْ يَغْنَوْا அவர்கள் வசிக்காததைப் போல் فِيْهَا‌ ؕ அதில் اَلَا அறிந்துகொள்ளுங்கள் بُعْدًا அழிவு لِّمَدْيَنَ மத்யனுக்கு كَمَا بَعِدَتْ அழிந்தது போன்று ثَمُوْدُ‏ ஸமூத்
11:95. அவ்வீடுகளில் அவர்கள் (ஒரு காலத்திலும்) வாழ்ந்திராதவர்கள் போல் ஆகிவிட்டனர். தெரிந்து கொள்ளுங்கள்: ஸமூது (கூட்டத்தார் சாபக்கேட்டினால்) நாசமானது போன்று, மத்யனுக்கும் நாசம்தான்!
11:96
11:96 وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் مُوْسٰى மூஸாவை بِاٰيٰتِنَا நம் வசனங்களுடன் وَسُلْطٰنٍ இன்னும் அத்தாட்சி مُّبِيْنٍۙ‏ தெளிவான(து)
11:96. நிச்சயமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடன், தெளிவான அத்தாட்சியுடனும், அனுப்பிவைத்தோம்.
11:97
11:97 اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ ٮِٕهٖ فَاتَّبَعُوْۤا اَمْرَ فِرْعَوْنَ‌ۚ وَمَاۤ اَمْرُ فِرْعَوْنَ بِرَشِيْدٍ‏
اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் وَ இன்னும் مَلَا۟ ٮِٕهٖ அவனுடைய முக்கிய பிரமுகர்கள் فَاتَّبَعُوْۤا அவர்கள்பின்பற்றினர் اَمْرَ கட்டளையை فِرْعَوْنَ‌ۚ ஃபிர்அவ்னின் وَمَاۤ اَمْرُ இல்லை/கட்டளை فِرْعَوْنَ ஃபிர்அவ்னுடைய بِرَشِيْدٍ‏ நல்லறிவுடையதாக
11:97. (அவற்றுடன் அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரமுகர்களிடமும் (வந்தார்). அப்போது ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய சமூகத்தார்) பின்பற்றி வந்தார்கள்; ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேர்மையானதாக இருக்கவில்லை.
11:98
11:98 يَقْدُمُ قَوْمَهٗ يَوْمَ الْقِيٰمَةِ فَاَوْرَدَهُمُ النَّارَ‌ؕ وَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُوْدُ‏
يَقْدُمُ முன் செல்வான் قَوْمَهٗ தன் மக்களுக்கு يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் فَاَوْرَدَهُمُ சேர்ப்பான்/அவர்களை النَّارَ‌ؕ நரகத்தில் وَبِئْسَ அது கெட்டது الْوِرْدُ சேருமிடம் الْمَوْرُوْدُ‏ சேரப்படும்
11:98. அவன் (ஃபிர்அவ்ன்) மறுமை நாளில் தன் சமூகத்தாருக்கு முன் சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான்; (அவர்களைக்) கொண்டு போய்ச் சேர்க்குமிடம் மிகவும் கெட்டது.
11:99
11:99 وَاُتْبِعُوْا فِىْ هٰذِهٖ لَـعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُوْدُ‏
وَاُتْبِعُوْا இன்னும் அவர்களை தொடர்ந்தது فِىْ هٰذِهٖ இதில் لَـعْنَةً சாபம் وَّيَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ இன்னும் மறுமை நாளில் بِئْسَ மிகக் கெட்டது الرِّفْدُ சன்மானம் الْمَرْفُوْدُ‏ சன்மானம் கொடுக்கப்பட்டது
11:99. இ(வ்வுலகத்)திலும், கியாம நாளிலும் அவர்கள் சாபத்தால் பின்தொடரப்பட்டனர்; அவர்களுக்கு கிடைக்கும் (இந்த) சன்மானம் மிகவும் கெட்டது.
11:100
11:100 ذٰ لِكَ مِنْ اَنْۢبَآءِ الْـقُرٰى نَقُصُّهٗ عَلَيْكَ‌ مِنْهَا قَآٮِٕمٌ وَّحَصِيْدٌ‏
ذٰ لِكَ இவை مِنْ اَنْۢبَآءِ சரித்திரங்களில் الْـقُرٰى ஊர்கள் نَقُصُّهٗ விவரிக்கிறோம்/ இவற்றை عَلَيْكَ‌ உம் மீது مِنْهَا இவற்றில் قَآٮِٕمٌ நிற்கிறது وَّحَصِيْدٌ‏ இன்னும் அறுக்கப்பட்டது
11:100. (நபியே! மேற்கூறப்பட்ட) இவை (சிற்) சில ஊர்களின் வரலாறுகள் ஆகும்; இவற்றை நாம் உமக்கு எடுத்துரைத்தோம். இவற்றில் சில (இப்போதும்) உள்ளன; சில (அறுவடை செய்யப்பட்டவை போல்) அழிபட்டும் போயின.
11:101
11:101 وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰـكِنْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ‌ فَمَاۤ اَغْنَتْ عَنْهُمْ اٰلِهَتُهُمُ الَّتِىْ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مِنْ شَىْءٍ لَّمَّا جَآءَ اَمْرُ رَبِّكَؕ ‌ وَمَا زَادُوْهُمْ غَيْرَ تَتْبِيْبٍ‏
وَمَا ظَلَمْنٰهُمْ நாம் அநீதி இழைக்கவில்லை/அவர்களுக்கு وَلٰـكِنْ எனினும் ظَلَمُوْۤا அநீதி இழைத்தனர் اَنْفُسَهُمْ‌ தங்களுக்கே فَمَاۤ பலனளிக்கவில்லை اَغْنَتْ அவர்களுக்கு عَنْهُمْ தெய்வங்கள்/ அவர்களுடைய اٰلِهَتُهُمُ எவை الَّتِىْ அழைக்கின்றார்கள் يَدْعُوْنَ அல்லாஹ்வையன்றி مِنْ دُوْنِ اللّٰهِ சிறிதும் مِنْ شَىْءٍ வந்த போது لَّمَّا جَآءَ கட்டளை اَمْرُ உம் இறைவனின் رَبِّكَؕ وَمَا زَادُوْ அவை அதிகப்படுத்தவில்லை هُمْ அவர்களுக்கு غَيْرَ தவிர تَتْبِيْبٍ‏ அழிவை
11:101. அவர்களுக்கு நாம் அநியாயம் செய்யவில்லை; எனினும் அவர்கள் தமக்குத்தாமே அநியாயம் செய்து கொண்டார்கள். உம் இறைவனிடமிருந்து கட்டளை வந்த போது, அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருந்த அவர்களின் தெய்வங்கள் எதுவும் அவர்களுக்கு எவ்விதப்பலனும் அளிக்கவில்லை; மேலும் அவை அவர்களுக்கு நஷ்டத்தை தவிர (வேறெதையும்) அதிகரிக்கச் செய்யவில்லை.
11:102
11:102 وَكَذٰلِكَ اَخْذُ رَبِّكَ اِذَاۤ اَخَذَ الْقُرٰى وَهِىَ ظَالِمَةٌ‌ ؕ اِنَّ اَخْذَهٗۤ اَلِيْمٌ شَدِيْدٌ‏
وَكَذٰلِكَ இது போன்றுதான் اَخْذُ பிடி رَبِّكَ உம் இறைவனின் اِذَاۤ اَخَذَ அவன் பிடித்தால் الْقُرٰى ஊர்களை وَهِىَ அவையோ ظَالِمَةٌ‌ ؕ அநியாயம் புரிந்தவை اِنَّ நிச்சயமாக اَخْذَهٗۤ அவனுடைய பிடி اَلِيْمٌ துன்புறுத்தக் கூடியது شَدِيْدٌ‏ மிகக் கடுமையானது
11:102. அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் - நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவும் மிகக் கடினமானதாகவும் இருக்கும்.
11:103
11:103 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّمَنْ خَافَ عَذَابَ الْاٰخِرَةِ‌ ؕ ذٰ لِكَ يَوْمٌ مَّجْمُوْعٌ  ۙ  لَّهُ النَّاسُ وَذٰ لِكَ يَوْمٌ مَّشْهُوْدٌ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் لَاٰيَةً ஓர் அத்தாட்சி لِّمَنْ எவருக்கு خَافَ பயந்தார் عَذَابَ வேதனை الْاٰخِرَةِ‌ ؕ மறுமையின் ذٰ لِكَ அது يَوْمٌ நாள் مَّجْمُوْعٌ  ۙ ஒன்று சேர்க்கப்படும்  لَّهُ அதில் النَّاسُ மக்கள் وَذٰ لِكَ இன்னும் அது يَوْمٌ நாள் مَّشْهُوْدٌ‏ சமர்ப்பிக்கப்படும்
11:103. நிச்சயமாக மறுமை நாளின் வேதனையைப் பயப்படுகிறவர்களுக்கு இதில் (தக்க) அத்தாட்சி இருக்கிறது; அது மனிதர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளாகும் - அன்றியும் அவர்கள் யாவரும் (இறைவன் முன்னிலையில்) கொண்டுவரப்படும் நாளாகும்.
11:104
11:104 وَمَا نُؤَخِّرُهٗۤ اِلَّا لِاَجَلٍ مَّعْدُوْدٍؕ‏
وَمَا نُؤَخِّرُهٗۤ اِلَّا நாம் பிற்படுத்த மாட்டோம்/அதை/தவிர لِاَجَلٍ ஒரு தவணைக்கே مَّعْدُوْدٍؕ‏ எண்ணப்பட்டது
11:104. குறிப்பிட்ட தவணைக்காகவே தவிர அதனை நாம் பிற்படுத்தவில்லை.
11:105
11:105 يَوْمَ يَاْتِ لَا تَكَلَّمُ نَفْسٌ اِلَّا بِاِذْنِهٖ‌ۚ فَمِنْهُمْ شَقِىٌّ وَّسَعِيْدٌ‏
يَوْمَ يَاْتِ நாளில்/அது வரும் لَا تَكَلَّمُ பேசாது نَفْسٌ எந்த ஓர் ஆன்மா اِلَّا தவிர بِاِذْنِهٖ‌ۚ அவனுடைய அனுமதி கொண்டே فَمِنْهُمْ அவர்களில் شَقِىٌّ துர்ப்பாக்கியவான் وَّسَعِيْدٌ‏ இன்னும் நற்பாக்கியவான்
11:105. அந்நாள் வரும்போது அவனுடைய அனுமதியின்றி எவரும் பேச இயலாது; இன்னும், அவர்களில் துர்பாக்கிய சாலிகளும் இருப்பர்; நற்பாக்கிய சாலிகளும் இருப்பர்.
11:106
11:106 فَاَمَّا الَّذِيْنَ شَقُوْا فَفِى النَّارِ لَهُمْ فِيْهَا زَفِيْرٌ وَّشَهِيْقٌ ۙ‏
فَاَمَّا ஆகவே الَّذِيْنَ شَقُوْا துர்ப்பாக்கியமடைந்தவர்கள் فَفِى النَّارِ நரகில் لَهُمْ அவர்களுக்கு فِيْهَا அதில் زَفِيْرٌ பெரும் கூச்சல் وَّشَهِيْقٌ ۙ‏ இன்னும் இறைச்சல்
11:106. துர்பாக்கிய சாலிகள் (நரக) நெருப்பில் (எறியப்பட்டு) இருப்பார்கள். அதில் அவர்களுக்கு பெருங்கூச்சலும், முணக்கமும்(தான்) இருக்கும்.
11:107
11:107 خٰلِدِيْنَ فِيْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ‌ ؕ اِنَّ رَبَّكَ فَعَّالٌ لِّمَا يُرِيْدُ‏
خٰلِدِيْنَ அல்லதுநிரந்தரமானவர்கள் فِيْهَا அதில் مَا دَامَتِ நிலைத்திருக்கும்வரை السَّمٰوٰتُ வானங்கள் وَالْاَرْضُ இன்னும் பூமி اِلَّا தவிர مَا شَآءَ நாடியதை رَبُّكَ‌ ؕ உம் இறைவன் اِنَّ நிச்சயமாக رَبَّكَ உம் இறைவன் فَعَّالٌ செய்பவன் لِّمَا يُرِيْدُ‏ நாடுவான்/எதை
11:107. உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நீடிக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ந்நரகத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள்; நிச்சயமாக உம் இறைவன் தான் நாடியதைச் செய்து முடிப்பவன்.
11:108
11:108 وَاَمَّا الَّذِيْنَ سُعِدُوْا فَفِى الْجَـنَّةِ خٰلِدِيْنَ فِيْهَا مَا دَامَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ اِلَّا مَا شَآءَ رَبُّكَ‌ ؕ عَطَآءً غَيْرَ مَجْذُوْذٍ‏
وَاَمَّا ஆகவே الَّذِيْنَ سُعِدُوْا நற்பாக்கியமடைந்தவர்கள் فَفِى الْجَـنَّةِ சொர்க்கத்தில் خٰلِدِيْنَ அல்லது நிரந்தரமாக தங்குவார்கள் فِيْهَا அதில் مَا دَامَتِ நிலைத்திருக்கும்வரை السَّمٰوٰتُ وَالْاَرْضُ வானங்கள்/இன்னும் பூமி اِلَّا مَا شَآءَ நாடியதைத் தவிர رَبُّكَ‌ ؕ உம் இறைவன் عَطَآءً அருட்கொடையாக غَيْرَ مَجْذُوْذٍ‏ முடிவுறாதது
11:108. நற்பாக்கிய சாலிகளோ சுவனபதியில் இருப்பார்கள்; உம் இறைவன் நாடினாலன்றி, வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அவர்கள் அ(ச்சுவனத்)திலேயே நிலைபெற்று விடுவார்கள் - இது முடிவுறாத அருட் கொடையாகும்.
11:109
11:109 فَلَا تَكُ فِىْ مِرْيَةٍ مِّمَّا يَعْبُدُ هٰٓؤُلَاۤءِ ‌ؕ مَا يَعْبُدُوْنَ اِلَّا كَمَا يَعْبُدُ اٰبَآؤُهُمْ مِّنْ قَبْلُ‌ؕ وَاِنَّا لَمُوَفُّوْهُمْ نَصِيْبَهُمْ غَيْرَ مَنْقُوْصٍ
فَلَا تَكُ ஆகிவிடாதீர் فِىْ مِرْيَةٍ சந்தேகத்தில் مِّمَّا يَعْبُدُ வணங்குபவற்றில் هٰٓؤُلَاۤءِ ؕ இவர்கள் مَا يَعْبُدُوْنَ இவர்கள் வணங்கவில்லை اِلَّا كَمَا தவிர/போன்றே يَعْبُدُ வணங்கினார்(கள்) اٰبَآؤُ மூதாதைகள் هُمْ இவர்களுடைய مِّنْ قَبْلُ‌ؕ முன்னர் وَاِنَّا நிச்சயமாக நாம் لَمُوَفُّوْهُمْ முழுமையாகக் கொடுப்போம்/இவர்களுக்கு نَصِيْبَهُمْ பாகத்தை/ இவர்களுடைய غَيْرَ مَنْقُوْصٍ‏ குறைக்கப்படாமல்
11:109. (நபியே!) இவர்கள் வணங்குபவை பற்றி நீர் சந்தேகப்பட வேண்டாம்; (இவர்களுக்கு) முன் இவர்களுடைய மூதாதையர் வணங்கி வந்த பிரகாரமே தான் இவர்களும் வணங்குகிறார்கள்; நிச்சயமாக (தண்டனைக்குரிய) இவர்களின் பங்கைக் குறைவின்றி, முழுமையாக நாம் இவர்களுக்குக் கொடுப்போம்.
11:110
11:110 وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَاخْتُلِفَ فِيْهِ‌ ؕ وَ لَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَـقُضِىَ بَيْنَهُمْ‌ ؕ وَاِنَّهُمْ لَفِىْ شَكٍّ مِّنْهُ مُرِيْبٍ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا கொடுத்தோம் مُوْسَى மூஸாவுக்கு الْكِتٰبَ வேதத்தை فَاخْتُلِفَ மாறுபாடு கொள்ளப்பட்டது فِيْهِ‌ ؕ அதில் وَ لَوْلَا இல்லையெனில் كَلِمَةٌ ஒரு வாக்கு سَبَقَتْ முந்தியது مِنْ இருந்து رَّبِّكَ உம் இறைவன் لَـقُضِىَ முடிக்கப்பட்டிருக்கும் بَيْنَهُمْ‌ ؕ இவர்களுக்கிடையில் وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில்தான் مِّنْهُ அதில் مُرِيْبٍ‏ மிக ஆழமான (சந்தேகம்)
11:110. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது; உமது இறைவனிடமிருந்து முந்தி விட்ட வாக்கு இல்லை என்றால் இவர்கள் மத்தியிலே முடிவு செய்யப்பட்டிருக்கும். நிச்சயமாக இவர்கள் இதை (குர்ஆனை)ப் பற்றி சந்தேகத்திலேயே இருக்கின்றனர்.
11:111
11:111 وَاِنَّ كُلًّا لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ رَبُّكَ اَعْمَالَهُمْ‌ ؕ اِنَّهٗ بِمَا يَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
وَاِنَّ நிச்சயமாக كُلًّا எல்லோருக்கும் لَّمَّا لَيُوَفِّيَنَّهُمْ நிச்சயமாகமுழுமையாகக் கொடுப்பான்/அவர்களுக்கு رَبُّكَ உம் இறைவன் اَعْمَالَهُمْ‌ ؕ செயல்களை/அவர்களுடைய اِنَّهٗ நிச்சயமாக அவன் بِمَا يَعْمَلُوْنَ அவர்கள் செய்பவற்றை خَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
11:111. நிச்சயமாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் உம்முடைய இறைவன் அவர்களுடைய செயல்களுக்கு உரிய கூலியை முழுமையாகக் கொடுப்பான் - நிச்சயமாக அவன் அவர்கள் செய்வதை அறிந்தவனாக இருக்கின்றான்.
11:112
11:112 فَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ وَمَنْ تَابَ مَعَكَ وَلَا تَطْغَوْا‌ ؕ اِنَّهٗ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
فَاسْتَقِمْ நிலையாக இருங்கள் كَمَاۤ போன்றே اُمِرْتَ நீர் ஏவப்பட்டீர் وَمَنْ இன்னும் எவர்(கள்) تَابَ திருந்தி திரும்பினார்(கள்) مَعَكَ உம்முடன் وَلَا تَطْغَوْا‌ ؕ வரம்பு மீறாதீர்கள் اِنَّهٗ நிச்சயமாக அவன் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை بَصِيْرٌ‏ உற்றுநோக்குபவன்
11:112. நீரும் உம்மோடு திருந்தியவரும் ஏவப்பட்டவாறே உறுதியாக இருப்பீர்களாக;வரம்பு மீறி விடாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை கவனித்தவனாக இருக்கின்றான்.
11:113
11:113 وَلَا تَرْكَنُوْۤا اِلَى الَّذِيْنَ ظَلَمُوْا فَتَمَسَّكُمُ النَّارُۙ وَمَا لَـكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ اَوْلِيَآءَ ثُمَّ لَا تُنْصَرُوْنَ‏
وَلَا تَرْكَنُوْۤا நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் اِلَى பக்கம் الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا அநீதி இழைத்தார்கள் فَتَمَسَّكُمُ உங்களை அடைந்து விடும் النَّارُۙ நெருப்பு وَمَا இல்லை لَـكُمْ உங்களுக்கு مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி مِنْ اَوْلِيَآءَ பாதுகாப்பவர்கள் எவரும் ثُمَّ لَا تُنْصَرُوْنَ‏ பிறகு/உதவி செய்யப்பட மாட்டீர்கள்
11:113. இன்னும், யார் அநியாயம் செய்கிறார்களோ அவர்களின் பக்கம் நீங்கள் சாய்ந்து விடாதீர்கள் - அப்படிச் செய்தால் நரக நெருப்பு உங்களைப் பிடித்துக்கொள்ளும்; அல்லாஹ்வை அன்றி உங்களைக் காப்பாற்றுவோர் எவருமில்லை; மேலும் (நீங்கள் அவனுக்கெதிராக வேறெவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டீர்கள்.
11:114
11:114 وَاَقِمِ الصَّلٰوةَ طَرَفَىِ النَّهَارِ وَزُلَـفًا مِّنَ الَّيْلِ‌ ؕ اِنَّ الْحَسَنٰتِ يُذْهِبْنَ السَّيِّاٰتِ ‌ؕ ذٰ لِكَ ذِكْرٰى لِلذّٰكِرِيْنَ ‌ۚ‏
وَاَقِمِ நிலை நிறுத்துவீராக! الصَّلٰوةَ தொழுகையை طَرَفَىِ இரு முனைகளில் النَّهَارِ பகலின் وَزُلَـفًا இன்னும் ஒரு பகுதியில் مِّنَ الَّيْلِ‌ ؕ இரவில் اِنَّ الْحَسَنٰتِ நிச்சயமாகநன்மைகள் يُذْهِبْنَ போக்கி விடுகின்றன السَّيِّاٰتِ ؕ பாவங்களை ذٰ لِكَ ذِكْرٰى இது/ஒருநல்லுபதேசம் لِلذّٰكِرِيْنَ ۚ‏ நினைவு கூருபவர்களுக்கு
11:114. பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - நிச்சயமாக நற்செயல்கள், தீச்செயல்களைப் போக்கிவிடும் - (இறைவனை) நினைவு கூறுவோருக்கு இது நல்லுபதேசமாக இருக்கும்.
11:115
11:115 وَاصْبِرْ فَاِنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ‏
وَاصْبِرْ பொறுப்பீராக فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يُضِيْعُ வீணாக்க மாட்டான் اَجْرَ கூலியை الْمُحْسِنِيْنَ‏ நல்லறம் புரிபவர்களின்
11:115. (நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான்.
11:116
11:116 فَلَوْ لَا كَانَ مِنَ الْقُرُوْنِ مِنْ قَبْلِكُمْ اُولُوْا بَقِيَّةٍ يَّـنْهَوْنَ عَنِ الْفَسَادِ فِى الْاَرْضِ اِلَّا قَلِيْلًا مِّمَّنْ اَنْجَيْنَا مِنْهُمْ‌ ۚ وَاتَّبَعَ الَّذِيْنَ ظَلَمُوْا مَاۤ اُتْرِفُوْا فِيْهِ وَكَانُوْا مُجْرِمِيْنَ‏
فَلَوْ لَا كَانَ இருந்திருக்க வேண்டாமா? مِنَ الْقُرُوْنِ தலை முறையினர்களில் مِنْ قَبْلِكُمْ உங்களுக்கு முன்னர் اُولُوْا بَقِيَّةٍ சிறந்தோர் يَّـنْهَوْنَ தடுக்கின்றார்கள் عَنِ الْفَسَادِ விஷமத்தை விட்டு فِى الْاَرْضِ பூமியில் اِلَّا எனினும் قَلِيْلًا குறைவானவர்(கள்) مِّمَّنْ இருந்து/எவர்கள் اَنْجَيْنَا நாம் பாதுகாத்தோம் مِنْهُمْ‌ ۚ அவர்களில் وَاتَّبَعَ இன்னும் பின்பற்றினார்(கள்) الَّذِيْنَ எவர்கள் ظَلَمُوْا அநியாயம் செய்தனர் مَاۤ اُتْرِفُوْا எதில்/இன்பமளிக்கப்பட்டார்கள் فِيْهِ وَكَانُوْا அதில்/இன்னும் இருந்தனர் مُجْرِمِيْنَ‏ குற்றவாளிகளாக
11:116. உங்களுக்கு முன்னால் இருந்த சமுதாயங்களில் இந்த பூமியில் குழப்பங்களை தடுக்கக் கூடிய அறிவுடையோர் இருந்திருக்கக் கூடாதா? மிகக் குறைவாகவே தவிர (அவ்வாறு இருக்கவில்லை.) அவர்களை நாம் காப்பாற்றினோம். யார் அநியாயம் செய்தார்களோ அவர்கள் தங்கள் செல்வச் செருக்கையே பின்பற்றுகிறார்கள்; மேலும் குற்றவாளிகளாகவும் இருந்தார்கள்.
11:117
11:117 وَمَا كَانَ رَبُّكَ لِيُهْلِكَ الْقُرٰى بِظُلْمٍ وَّاَهْلُهَا مُصْلِحُوْنَ‏
وَمَا كَانَ இருக்க வில்லை رَبُّكَ உம் இறைவன் لِيُهْلِكَ அழிப்பவனாக الْقُرٰى ஊர்களை بِظُلْمٍ அநியாயமாக وَّاَهْلُهَا அவற்றில் வசிப்போரோ مُصْلِحُوْنَ‏ சீர்திருத்துபவர்கள்
11:117. (நபியே!) ஓர் ஊராரை, அவ்வூரார் சீர்திருந்திக் கொண்டிருக்கும் நிலையில் - அநியாயமாக உம் இறைவன் அழிக்கமாட்டான்.
11:118
11:118 وَلَوْ شَآءَ رَبُّكَ لَجَـعَلَ النَّاسَ اُمَّةً وَّاحِدَةً‌ وَّلَا يَزَالُوْنَ مُخْتَلِفِيْنَۙ‏
وَلَوْ شَآءَ நாடியிருந்தால் رَبُّكَ உம் இறைவன் لَجَـعَلَ ஆக்கியிருப்பான் النَّاسَ மக்களை اُمَّةً وَّاحِدَةً‌ ஒரே வகுப்பினராக وَّلَا يَزَالُوْنَ مُخْتَلِفِيْنَۙ‏ அவர்கள் மாறுபட்டவர்களாகவே இருந்து கொண்டிருப்பார்கள்
11:118. உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருப்பான்; (அவன் அப்படி ஆக்கவில்லை.) எனவே, அவர்கள் எப்போதும் பேதப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.
11:119
11:119 اِلَّا مَنْ رَّحِمَ رَبُّكَ‌ ؕ وَلِذٰلِكَ خَلَقَهُمْ‌ ؕ وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ لَاَمْلَـئَنَّ جَهَـنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ‏
اِلَّا தவிர مَنْ எவர் رَّحِمَ அருள் புரிந்தான் رَبُّكَ‌ ؕ உம் இறைவன் وَلِذٰلِكَ இதற்காகத்தான் خَلَقَهُمْ‌ ؕ அவன் படைத்தான்/அவர்களை وَتَمَّتْ நிறைவேறியது كَلِمَةُ வாக்கு رَبِّكَ உம் இறைவனின் لَاَمْلَـئَنَّ நிச்சயமாக நான் நிரப்புவேன் جَهَـنَّمَ நரகத்தை مِنَ الْجِنَّةِ ஜின்களில் وَالنَّاسِ இன்னும் மக்கள் اَجْمَعِيْنَ‏ அனைவர்
11:119. (அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர; இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்; “நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும்.
11:120
11:120 وَكُلًّا نَّقُصُّ عَلَيْكَ مِنْ اَنْۢبَآءِ الرُّسُلِ مَا نُثَبِّتُ بِهٖ فُؤَادَكَ‌ ۚ وَجَآءَكَ فِىْ هٰذِهِ الْحَـقُّ وَمَوْعِظَةٌ وَّذِكْرٰى لِلْمُؤْمِنِيْنَ‏
وَكُلًّا எல்லாவற்றையும் نَّقُصُّ விவரிக்கிறோம் عَلَيْكَ உமக்கு مِنْ இருந்து اَنْۢبَآءِ சரித்திரங்கள் الرُّسُلِ தூதர்களின் مَا எதை نُثَبِّتُ உறுதிப்படுத்துவோம் بِهٖ அதைக் கொண்டு فُؤَادَكَ‌ ۚ உம் உள்ளத்தை وَجَآءَكَ இன்னும் வந்தன/உமக்கு فِىْ هٰذِهِ الْحَـقُّ இவற்றில்/உண்மை وَمَوْعِظَةٌ நல்லுபதேசம் وَّذِكْرٰى அறிவுரை لِلْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களுக்கு
11:120. (நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன.
11:121
11:121 وَقُلْ لِّـلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْؕ اِنَّا عٰمِلُوْنَۙ‏
وَقُلْ கூறுவீராக لِّـلَّذِيْنَ எவர்களுக்கு لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் اعْمَلُوْا நீங்கள் செய்யுங்கள் عَلٰى مَكَانَتِكُمْؕ உங்கள் போக்கில் اِنَّا நிச்சயமாக நாங்கள் عٰمِلُوْنَۙ‏ செய்பவர்கள், செய்வோம்
11:121. நம்பிக்கை கொள்ளாதவர்களிடம் (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உங்கள் போக்கில் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக நாங்களும் (எங்கள் போக்கில்) செயல்படுகிறோம்.”
11:122
11:122 وَانْـتَظِرُوْا‌ ۚ اِنَّا مُنْتَظِرُوْنَ‏
وَانْـتَظِرُوْا‌ ۚ எதிர்பாருங்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் مُنْتَظِرُوْنَ‏ எதிர்பார்ப்பவர்கள், எதிர்பார்க்கிறோம்
11:122. நீங்களும் (உங்கள் போக்கின் முடிவை) எதிர் பார்த்துக் கொண்டிருங்கள்; நாங்களும் (அவ்வாறே) எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.”
11:123
11:123 وَلِلّٰهِ غَيْبُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاِلَيْهِ يُرْجَعُ الْاَمْرُ كُلُّهٗ فَاعْبُدْهُ وَتَوَكَّلْ عَلَيْهِ‌ؕ وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ
وَلِلّٰهِ அல்லாஹ்வுக்கே غَيْبُ மறைவானவை السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَاِلَيْهِ அவனிடமே يُرْجَعُ திருப்பப்படும் الْاَمْرُ காரியங்கள் كُلُّهٗ அவை எல்லாம் فَاعْبُدْهُ ஆகவே, வணங்குவீராக/அவனை وَتَوَكَّلْ நம்பிக்கைவைப்பீராக عَلَيْهِ‌ؕ அவன் மீதே وَمَا இல்லை رَبُّكَ உம் இறைவன் بِغَافِلٍ கண்காணிக்காதவனாக عَمَّا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை
11:123. வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைபொருள்கள் (இரகசியங்கள் பற்றிய ஞானம்) அல்லாஹ்வுக்கே உரியது; அவனிடமே எல்லாக் கருமங்களும் (முடிவு காண) மீளும். ஆகவே அவனையே வணங்குங்கள்; அவன் மீதே (பரஞ்சாட்டி) உறுதியான நம்பிக்கை வையுங்கள் - நீங்கள் செய்பவை குறித்து உம் இறைவன் பராமுகமாக இல்லை.