1. அல்ஃபாத்திஹா(தோற்றுவாய்)
மக்கீ, வசனங்கள்: 7

1:1
1:1 بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
بِسْمِ பெயரால் اللهِ அல்லாஹ்வின் الرَّحْمٰنِ பேரருளாளன் الرَّحِيْمِ பேரன்பாளன்
1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
1:2
1:2 اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏
اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே رَبِّ இறைவன் الْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தார்களின்
1:2. அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
1:3
1:3 الرَّحْمٰنِ الرَّحِيْمِۙ‏
الرَّحْمٰنِ பேரருளாளன் الرَّحِيْمِۙ‏ பேரன்பாளன்
1:3. (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.
1:4
1:4 مٰلِكِ يَوْمِ الدِّيْنِؕ‏
مٰلِكِ அதிபதி يَوْمِ நாளின் الدِّيْنِؕ‏ கூலி
1:4. (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்).
1:5
1:5 اِيَّاكَ نَعْبُدُ وَاِيَّاكَ نَسْتَعِيْنُؕ‏
اِيَّاكَ உன்னையே نَعْبُدُ வணங்குவோம் وَاِيَّاكَ இன்னும் உன்னிடமே نَسْتَعِيْنُؕ‏ உதவி தேடுவோம்
1:5. (இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.
1:6
1:6 اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَۙ‏
اِهْدِنَا எங்களை நேர்வழி நடத்து الصِّرَاطَ பாதையில் الْمُسْتَقِيْمَۙ‏ நேரான
1:6. நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!
1:7
1:7 صِرَاطَ الَّذِيْنَ اَنْعَمْتَ عَلَيْهِمْۙ‏ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَلَا الضَّآلِّيْنَ
صِرَاطَ பாதையில் الَّذِيْنَ எவர்கள் اَنْعَمْتَ அருள் புரிந்தாய் عَلَيْهِمْۙ‏ அவர்கள் மீது غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ அல்லாதவர்கள்/கோபிக்கப்பட்டவர்கள் وَلَا இன்னும் இல்லை الضَّآلِّيْنَ‏ வழிகெட்டவர்கள்
1:7. (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல.