100. ஸூரத்துல் ஆதியாத்தி(வேகமாகச் செல்லுபவை)
மக்கீ, வசனங்கள்: 11

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
100:1
100:1 وَالْعٰدِيٰتِ ضَبْحًا ۙ‏
100:1. மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் (குதிரைகள்) மீது சத்தியமாக-
100:2
100:2 فَالْمُوْرِيٰتِ قَدْحًا ۙ‏
100:2. பின்னர், (குளம்பை) அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும்,
100:3
100:3 فَالْمُغِيْرٰتِ صُبْحًا ۙ‏
100:3. பின்னர், அதிகாலையில் விரைந்து (எதிரிகள் மீது) பாய்ந்து செல்பவற்றின் மீதும்-
100:4
100:4 فَاَثَرْنَ بِهٖ نَقْعًا ۙ‏
100:4. மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும்,
100:5
100:5 فَوَسَطْنَ بِهٖ جَمْعًا ۙ‏
100:5. அப்பால் (பகைப்படையின்) மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக-
100:6
100:6 اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَـكَنُوْدٌ ۚ‏
100:6. நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.
100:7
100:7 وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيْدٌ ۚ‏
100:7. அன்றியும், நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான்.
100:8
100:8 وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ؕ‏
100:8. இன்னும், நிச்சயமாக அவன் பொருளை நேசிப்பதில் அளவு கடந்தே இருக்கின்றான்.
100:9
100:9 اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ‏
100:9. அவன் அறிந்து கொள்ளவில்லையா? மண்ணறைகளிலிருந்து, அவற்றிலிருப்பவை எழுப்பப்படும் போது-
100:10
100:10 وَحُصِّلَ مَا فِى الصُّدُوْرِۙ‏
100:10. மேலும், இதயங்களில் உள்ளவை வெளியாக்கப்படும் போது-
100:11
100:11 اِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَٮِٕذٍ لَّخَبِيْرٌ
100:11. நிச்சயமாக, அவர்களுடைய இறைவன் அவர்களைப்பற்றி, அந்நாளில் நன்கறிந்தவன்.