58. ஸூரத்துல் முஜாதலா (தர்க்கித்தல்)
மதனீ, வசனங்கள்: 22

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
58:1
58:1 قَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّتِىْ تُجَادِلُكَ فِىْ زَوْجِهَا وَ تَشْتَكِىْۤ اِلَى اللّٰهِ ‌ۖ وَاللّٰهُ يَسْمَعُ تَحَاوُرَكُمَا‌ ؕ اِنَّ اللّٰهَ سَمِيْعٌ ۢ بَصِيْرٌ‏
قَدْ திட்டமாக سَمِعَ செவியுற்றான் اللّٰهُ அல்லாஹ் قَوْلَ பேச்சை الَّتِىْ تُجَادِلُكَ உம்மிடம் விவாதிக்கின்றவளின் فِىْ زَوْجِهَا தனது கணவரின் விஷயத்தில் وَ تَشْتَكِىْۤ முறையிடுகிறாள் اِلَى اللّٰهِ ۖ அல்லாஹ்விடம் وَاللّٰهُ அல்லாஹ் يَسْمَعُ செவியுறுகின்றான் تَحَاوُرَ உரையாடலை كُمَا‌ ؕ உங்கள் இருவரின் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் سَمِيْعٌ ۢ நன்கு செவியுறுபவன் بَصِيْرٌ‏ உற்று நோக்குபவன்
58:1. கத் ஸமி'அல் லாஹு கவ்லல் லதீ துஜாதிலுக Fபீ Zஜவ்ஜிஹா வ தஷ்தகீ இலல் லாஹி வல்லாஹு யஸ்ம'உ தஹாவுரகுமா; இன்னல் லாஹ ஸமீ'உம் Bபஸீர்
58:1. (நபியே!) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்கித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.
58:2
58:2 اَلَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْكُمْ مِّنْ نِّسَآٮِٕهِمْ مَّا هُنَّ اُمَّهٰتِهِمْ‌ؕ اِنْ اُمَّهٰتُهُمْ اِلَّا الّٰٓـىِْٔ وَلَدْنَهُمْ‌ؕ وَاِنَّهُمْ لَيَقُوْلُوْنَ مُنْكَرًا مِّنَ الْقَوْلِ وَزُوْرًا‌ؕ وَ اِنَّ اللّٰهَ لَعَفُوٌّ غَفُوْرٌ‏
اَلَّذِيْنَ எவர்கள் يُظٰهِرُوْنَ ளிஹார் செய்கின்றார்களோ مِنْكُمْ உங்களில் مِّنْ نِّسَآٮِٕهِمْ தங்கள் பெண்கள் இடம் مَّا هُنَّ அவர்கள் ஆகமுடியாது اُمَّهٰتِهِمْ‌ؕ அவர்களின் தாய்மார்களாக اِنْ اُمَّهٰتُهُمْ அவர்களின் தாய்மார்கள் இல்லை اِلَّا தவிர الّٰٓـىِْٔ எவர்கள் وَلَدْنَهُمْ‌ؕ அவர்களை பெற்றெடுத்தார்கள் وَاِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَيَقُوْلُوْنَ கூறுகின்றனர் مُنْكَرًا மிகத் தீயதை مِّنَ الْقَوْلِ பேச்சில் وَزُوْرًا‌ؕ இன்னும் பொய்யானதை وَ اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَعَفُوٌّ மிகவும் பிழை பொறுப்பவன் غَفُوْرٌ‏ மகா மன்னிப்பாளன்
58:2. அல்லதீன யுளாஹிரூன மின்கும் மின் னிஸா'இஹிம் மா ஹுன்னா உம்மஹாதிஹிம் இன் உம்மஹாதுஹும் இல்லல் லா'ஈ வலத்னஹும்; வ இன்னாஹும் ல யகூலூன முன்கரம் மினல் கவ்லி வ Zஜூரா; வ இன்னல் லாஹ ல'அFபுவ்வுன் கFபூர்
58:2. “உங்களில் சிலர் தம் மனைவியரைத் “தாய்கள்” எனக் கூறிவிடுகின்றனர்; அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்” (ஆகிவிடுவது) இல்லை; இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன்; மிகவும் மன்னிப்பவன்.
58:3
58:3 وَالَّذِيْنَ يُظٰهِرُوْنَ مِنْ نِّسَآٮِٕهِمْ ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا قَالُوْا فَتَحْرِيْرُ رَقَبَةٍ مِّنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّا‌ ؕ ذٰ لِكُمْ تُوْعَظُوْنَ بِهٖ‌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
وَالَّذِيْنَ எவர்கள் يُظٰهِرُوْنَ ளிஹார்செய்கிறார்கள் مِنْ نِّسَآٮِٕهِمْ தங்கள் பெண்களிடம் ثُمَّ பிறகு يَعُوْدُوْنَ மீளுகின்றார்களோ لِمَا قَالُوْا தாங்கள் கூறியதற்கு فَتَحْرِيْرُ உரிமையிடவேண்டும் رَقَبَةٍ ஓர் அடிமையை مِّنْ قَبْلِ முன்னர் اَنْ يَّتَمَآسَّا‌ ؕ அவர்கள் இருவரும் இணைவதற்கு ذٰ لِكُمْ இதுதான் تُوْعَظُوْنَ உபதேசிக் கப்படுகிறீர்கள் بِهٖ‌ ؕ وَاللّٰهُ இதற்கு/அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை خَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
58:3. வல்லதீன யுளாஹிரூன மின் னிஸா'இஹிம் தும்ம ய'ஊதூன லிமா காலூ Fபதஹ்ரீரு ரகBபதிம் மின் கBப்லி அ(ன்)ய்-யதமாஸ்ஸா; தாலிகும் தூ'அளூன Bபிஹ்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
58:3. மேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.
58:4
58:4 فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّاؕ فَمَنْ لَّمْ يَسْتَطِعْ فَاِطْعَامُ سِتِّيْنَ مِسْكِيْنًا‌ؕ ذٰلِكَ لِتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ؕ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ اَلِیْمٌ‏
فَمَنْ எவர் لَّمْ يَجِدْ வசதி பெறவில்லையோ فَصِيَامُ நோன்பிருக்க வேண்டும் شَهْرَيْنِ இரண்டு மாதங்கள் مُتَتَابِعَيْنِ தொடர்ந்து مِنْ قَبْلِ முன்னர் اَنْ يَّتَمَآسَّاؕ இருவரும் இணைவதற்கு فَمَنْ எவர் لَّمْ يَسْتَطِعْ சக்தி பெறவில்லையோ فَاِطْعَامُ உணவளிக்கட்டும் سِتِّيْنَ அறுபது مِسْكِيْنًا‌ؕ ஏழைகளுக்கு ذٰلِكَ இது لِتُؤْمِنُوْا ஏனெனில்/நம்பிக்கை கொள்கின்றீர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَرَسُوْلِهٖ‌ؕ அவனது தூதரையும் وَتِلْكَ இவை حُدُوْدُ சட்டங்களாகும் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَلِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابٌ தண்டனை اَلِیْمٌ‏ வலி தரக்கூடிய(து)
58:4. Fபமல் லம் யஜித் Fப ஸியாமு ஷஹ்ரய்னி முததாBபி'அய்னி மின் கBப்லி அ(ன்)ய்-யதமாஸ்ஸா Fபமல் லம் யஸ்ததிஃ Fப-இத்'ஆமு ஸித்தீன மிஸ்கீன; தாலிக லிது'மினூ Bபில்லாஹி வ ரஸூலிஹ்'வ தில்க ஹுதூதுல் லாஹ்; வ லில்காFபிரீன 'அதாBபுன் அலீம்
58:4. ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
58:5
58:5 اِنَّ الَّذِيْنَ يُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗ كُبِتُوْا كَمَا كُبِتَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ وَقَدْ اَنْزَلْنَاۤ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ‌ ؕ وَ لِلْكٰفِرِيْنَ عَذَابٌ مُّهِيْنٌ‌ ۚ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يُحَآدُّوْنَ முரண்படுகிறார்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு(ம்) وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் كُبِتُوْا இழிவு படுத்தப்படுவார்கள் كَمَا போன்று كُبِتَ இழிவுபடுத்தப்பட்டது الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ இவர்களுக்கு முன்னுள்ளவர்கள் وَقَدْ திட்டமாக اَنْزَلْنَاۤ நாம் இறக்கினோம் اٰيٰتٍۢ அத்தாட்சிகளை بَيِّنٰتٍ‌ ؕ தெளிவான(வை) وَ لِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابٌ مُّهِيْنٌ‌ ۚ‏ இழிவுதரும்தண்டனை
58:5. இன்னல் லதீன யுஹாத்தூனல் லாஹ வ ரஸூலஹூ குBபிதூ கமா குBபிதல் லதீன மின் கBப்லிஹிம்; வ கத் அன்Zஜல்னா ஆயாதிம் Bபய்யினாத்; வலில் காFபிரீன 'அதாBபும் முஹீன்
58:5. எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப்பட்டதைப் போல் இழிவாக்கப்படுவார்கள் - திட்டமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காஃபிர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
58:6
58:6 يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا‌ ؕ اَحْصٰٮهُ اللّٰهُ وَنَسُوْهُ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‌
يَوْمَ நாளில் يَبْعَثُهُمُ எழுப்புவான்/ அவர்களை اللّٰهُ அல்லாஹ் جَمِيْعًا அனைவரையும் فَيُنَبِّئُهُمْ அவர்களுக்கு அறிவிப்பான் بِمَا عَمِلُوْا‌ ؕ அவர்கள் செய்தவற்றை اَحْصٰٮهُ அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் وَنَسُوْهُ‌ ؕ அவற்றை மறந்துவிட்டார்கள் وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் شَهِيْدٌ‌‏ கண்காணிப்பவன்
58:6. யவ்ம யBப்'அதுஹுமுல் லாஹு ஜமீ'அன் FபயுனBப்Bபி'உஹும் Bபிமா 'அமிலூ; அஹ்ஸாஹுல் லாஹு வ னஸூஹ்; வல்லாஹு 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீத்
58:6. அல்லாஹ் அவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.
58:7
58:7 اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ مَا يَكُوْنُ مِنْ نَّجْوٰى ثَلٰثَةٍ اِلَّا هُوَ رَابِعُهُمْ وَلَا خَمْسَةٍ اِلَّا هُوَ سَادِسُهُمْ وَلَاۤ اَدْنٰى مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْثَرَ اِلَّا هُوَ مَعَهُمْ اَيْنَ مَا كَانُوْا‌ۚ ثُمَّ يُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اَنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவற்றை(யும்) وَمَا فِى الْاَرْضِ‌ؕ பூமியில் உள்ளவற்றையும் مَا يَكُوْنُ இருக்காது مِنْ نَّجْوٰى உரையாடல் ثَلٰثَةٍ மூன்று நபர்களின் اِلَّا தவிர هُوَ அவன் رَابِعُهُمْ அவர்களில் நான்காமவனாக وَلَا இருக்காது خَمْسَةٍ ஐந்து நபர்களின் اِلَّا தவிர هُوَ அவன் سَادِسُهُمْ அவர்களில் ஆறாவதாக وَلَاۤ இன்னும் இருக்காது اَدْنٰى குறைவாக مِنْ ذٰ لِكَ அதை விட وَلَاۤ اَكْثَرَ இன்னும் அதிகமாக இருக்காது اِلَّا தவிர هُوَ அவன் مَعَهُمْ அவர்களுடன் اَيْنَ مَا كَانُوْا‌ۚ அவர்கள் எங்கிருந்தாலும் சரியே ثُمَّ பிறகு يُنَبِّئُهُمْ அவர்களுக்கு அறிவிப்பான் بِمَا عَمِلُوْا அவர்கள் செய்தவற்றை يَوْمَ الْقِيٰمَةِ‌ ؕ மறுமை நாளில் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
58:7. அலம் தர அன்னல் லாஹ யஃலமு மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி மா யகூனு மின் னஜ்வா தலாததின் இல்லா ஹுவ ராBபி'உஹும் வலா கம்ஸதின் இல்லா ஹுவ ஸாதிஸுஹும் வ லா அத்னா மின் தாலிக வ லா அக்தர இல்லா ஹுவ ம'அஹும் அய்ன, மா கானூ தும்ம யுனBப்Bபி'உஹும் Bபிமா 'அமிலூ யவ்மல் கியாமஹ்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் அலீம்
58:7. நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை; இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை; இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.
58:8
58:8 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ نُهُوْا عَنِ النَّجْوٰى ثُمَّ يَعُوْدُوْنَ لِمَا نُهُوْا عَنْهُ وَيَتَنٰجَوْنَ بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُوْلِ وَاِذَا جَآءُوْكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللّٰهُۙ وَيَقُوْلُوْنَ فِىْۤ اَنْفُسِهِمْ لَوْلَا يُعَذِّبُنَا اللّٰهُ بِمَا نَقُوْلُ‌ؕ حَسْبُهُمْ جَهَنَّمُ‌ۚ يَصْلَوْنَهَا‌ۚ فَبِئْسَ الْمَصِيْرُ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلَى الَّذِيْنَ نُهُوْا தடுக்கப்பட்டவர்களை عَنِ النَّجْوٰى கூடிப் பேசுவதை விட்டும் ثُمَّ பிறகு يَعُوْدُوْنَ திரும்புகிறார்கள் لِمَا نُهُوْا எதிலிருந்து தடுக்கப்பட்டார்களோ عَنْهُ அதிலிருந்து وَيَتَنٰجَوْنَ கூடிப் பேசுகிறார்கள் بِالْاِثْمِ பாவத்தையும் وَالْعُدْوَانِ வரம்புமீறுவதையும் وَمَعْصِيَتِ மாறுசெய்வதையும் الرَّسُوْلِ وَاِذَا جَآءُوْكَ தூதருக்கு/அவர்கள் உம்மிடம் வந்தால் حَيَّوْكَ உமக்கு முகமன் கூறுகிறார்கள் بِمَا لَمْ يُحَيِّكَ உமக்கு எதை முகமன் கூறவில்லையோ بِهِ அதை اللّٰهُۙ அல்லாஹ் وَيَقُوْلُوْنَ கூறுகிறார்கள் فِىْۤ اَنْفُسِهِمْ தங்கள் மனதிற்குள் لَوْلَا يُعَذِّبُنَا நம்மை வேதனை செய்யாமல் இருக்க வேண்டுமே اللّٰهُ بِمَا نَقُوْلُ‌ؕ அல்லாஹ்/நாம் சொல்வதைக் கொண்டு حَسْبُهُمْ அவர்களுக்கு போதும் جَهَنَّمُ‌ۚ நரகமே يَصْلَوْنَهَا‌ۚ அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள் فَبِئْسَ الْمَصِيْرُ‏ அது மீளுமிடங்களில் மிகக் கெட்டதாகும்
58:8. அலம் தர இலல் லதீன னுஹூ 'அனின் னஜ்வா தும்ம ய'ஊதூன லிமா னுஹூ 'அன்ஹு வ யதனாஜவ்ன Bபில் இத்மி வல்'உத்வானி வ மஃஸியதிர் ரஸூலி வ இதா ஜா'ஊக ஹய்யவ்க Bபிமா லம் யுஹய் யிக Bபிஹில் லாஹு வ யகூலூன Fபீ அன்Fபுஸிஹிம் லவ் லா யு'அத்திBபுனல் லாஹு Bபிமா னகூல்; ஹஸ்Bபுஹும் ஜஹன்ன்னமு யஸ்லவ்னஹா FபBபி'ஸல் மஸீர்
58:8. இரகசியம் பேசுவதை விட்டுத்தடுக்கப்பட்டிருந்தும், எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன் பால் மீண்டு பாவத்தையும் வரம்பு மீறுதலையும், ரஸூலுக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? பின்னர் அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக் கொண்டு ஸலாம் (முகமன்) கூறவில்லையோ அதைக் கொண்டு (முகமன்) கூறுகிறார்கள். பிறகு, அவர்கள் தங்களுக்குள் “நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை” என்றும் கூறிக் கொள்கின்றனர். நரகமே அவர்களுக்கு போதுமானதாகும்; அவர்கள் அதில் நுழைவார்கள் - மீளும் தலத்தில் அது மிகக் கெட்டதாகும்.
58:9
58:9 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَنَاجَيْتُمْ فَلَا تَـتَـنَاجَوْا بِالْاِثْمِ وَالْعُدْوَانِ وَمَعْصِيَتِ الرَّسُوْلِ وَتَنَاجَوْا بِالْبِرِّ وَالتَّقْوٰى‌ؕ وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْۤ اِلَيْهِ تُحْشَرُوْنَ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا تَنَاجَيْتُمْ நீங்கள் கூடிப்பேசினால் فَلَا تَـتَـنَاجَوْا கூடிப்பேசாதீர்கள் بِالْاِثْمِ பாவமானதையும் وَالْعُدْوَانِ வரம்புமீறும் காரியத்தையும் وَمَعْصِيَتِ மாறுசெய்வதையும் الرَّسُوْلِ தூதருக்கு وَتَنَاجَوْا கூடிப்பேசுங்கள்! بِالْبِرِّ நன்மையான விஷயத்தையும் وَالتَّقْوٰى‌ؕ இறையச்சம் மிகுந்த விஷயத்தையும் وَاتَّقُوا அஞ்சிக் கொள்ளுங்கள்! اللّٰهَ அல்லாஹ்வை الَّذِىْۤ எவன் اِلَيْهِ அவனிடம்தான் تُحْشَرُوْنَ‏ நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்
58:9. யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா தனாஜய்தும் Fபலா ததனாஜவ் Bபில் இத்மி வல் 'உத்வானி வ மஃஸியதிர் ரஸூலி வ தனாஜவ் Bபில் Bபிர்ரி வத்தக்வா வத்தகுல் லாஹல் லதீ இலய்ஹி துஹ்ஷரூன்
58:9. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள்; ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு - எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
58:10
58:10 اِنَّمَا النَّجْوٰى مِنَ الشَّيْطٰنِ لِيَحْزُنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَلَيْسَ بِضَآرِّهِمْ شَيْـٴًـــا اِلَّا بِاِذْنِ اللّٰهِ‌ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
اِنَّمَا النَّجْوٰى கூடிப்பேசுவது مِنَ الشَّيْطٰنِ ஷைத்தான் புறத்திலிருந்து தூண்டப்படுகிறது لِيَحْزُنَ கவலைப்படுத்து வதற்காக الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை وَلَيْسَ அது இல்லை بِضَآرِّهِمْ அவர்களுக்கு தீங்கு செய்வதாக شَيْـٴًـــا அறவே اِلَّا بِاِذْنِ அனுமதி இல்லாமல் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَعَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீதே فَلْيَتَوَكَّلِ நம்பிக்கை வைக்கட்டும் الْمُؤْمِنُوْنَ‏ நம்பிக்கையாளர்கள்
58:10. இன்னமன் னஜ்வா மினஷ் ஷய்தானி லியஹ்Zஜுனல் லதீன ஆமனூ வ லய்ஸ Bபிளார்ரிஹிம் ஷய்'அன் இல்லா Bபி-இத்னில் லாஹ்; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் மு'மினூன்
58:10. ஈமான் கொண்டவர்களைக் கவலைப்படச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்துள்ளதே (இந்த) இரகசிய(ப் பேச்சாகு)ம்; ஆனால், அல்லாஹ்வுடையை அனுமதியின்றி (அவர்களுக்கு) அவனால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது; எனவே முஃமின்கள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டும்.
58:11
58:11 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ‌ ۚ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا قِيْلَ கூறப்பட்டால் لَـكُمْ உங்களுக்கு تَفَسَّحُوْا இடம் கொடுங்கள் فِى الْمَجٰلِسِ சபைகளில் فَافْسَحُوْا இடம் கொடுங்கள்! يَفْسَحِ விசாலப்படுத்துவான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ‌ ۚ உங்களுக்கு وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் انْشُزُوْا நீங்கள் புறப்படுங்கள் فَانْشُزُوْا நீங்கள் புறப்படுங்கள் يَرْفَعِ உயர்த்துவான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை مِنْكُمْ ۙ உங்களில் وَالَّذِيْنَ اُوْتُوا இன்னும் கொடுக்கப்பட்டவர்களை الْعِلْمَ கல்வி دَرَجٰتٍ ؕ பல அந்தஸ்துகள் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை خَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
58:11. யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா கீல லகும் தFபஸ்ஸஹூ Fபில் மஜாலிஸி FபFப்ஸஹூ யFப்ஸஹில் லாஹு லகும் வ இதா கீலன் ஷுZஜூ Fபன்ஷுZஜூ யர்Fப'இல் லாஹுல் லதீன ஆமனூ மின்கும் வல்லதீன ஊதுல் 'இல்ம தரஜாத்; வல்லாஹு Bபிமா தஃமலூன கBபீர்
58:11. ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
58:12
58:12 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَاجَيْتُمُ الرَّسُوْلَ فَقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقَةً  ‌ؕ ذٰ لِكَ خَيْرٌ لَّكُمْ وَاَطْهَرُ ‌ؕ فَاِنْ لَّمْ تَجِدُوْا فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا نَاجَيْتُمُ நீங்கள் கூடிப்பேசினால் الرَّسُوْلَ தூதரிடம் فَقَدِّمُوْا முற்படுத்துங்கள் بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ நீங்கள் கூடிப்பேசுவதற்கு முன்னர் صَدَقَةً  ؕ தர்மத்தை ذٰ لِكَ அது خَيْرٌ لَّكُمْ உங்களுக்கு மிகச் சிறந்தது(ம்) وَاَطْهَرُ ؕ மிக பரிசுத்தமானதும் فَاِنْ لَّمْ تَجِدُوْا நீங்கள் வசதி பெறவில்லை என்றால் فَاِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
58:12. யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா னாஜய்துமுர் ரஸூல Fபகத்திமூ Bபய்ன யதய் னஜ்வாகும் ஸதகஹ்; தாலிக கய்ருல் லகும் வ அத்ஹர்; Fப இல் லம் தஜிதூ Fப இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
58:12. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றிராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
58:13
58:13 ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَيْنَ يَدَىْ نَجْوٰٮكُمْ صَدَقٰتٍ‌ ؕ فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَيْكُمْ فَاَقِيْمُوا الصَّلٰوةَ وَ اٰتُوا الزَّكٰوةَ وَاَطِيْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ‌ ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
ءَاَشْفَقْتُمْ நீங்கள் பயப்படுகிறீர்களா? اَنْ تُقَدِّمُوْا நீங்கள் முற்படுத்துவதற்கு بَيْنَ يَدَىْ முன்னர் نَجْوٰٮكُمْ உங்கள் உரையாடலுக்கு صَدَقٰتٍ‌ ؕ தர்மங்களை فَاِذْ لَمْ تَفْعَلُوْا நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால் وَتَابَ மன்னித்துவிட்டதால் اللّٰهُ அல்லாஹ்வும் عَلَيْكُمْ உங்களை فَاَقِيْمُوا நிலை நிறுத்துங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَ اٰتُوا இன்னும் கொடுங்கள்! الزَّكٰوةَ ஸகாத்தை وَاَطِيْعُوا இன்னும் கீழ்ப்படியுங்கள்! اللّٰهَ அல்லாஹ்விற்கு(ம்) وَرَسُوْلَهٗ‌ ؕ அவனது தூதருக்கும் وَاللّٰهُ அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிபவன் بِمَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை
58:13. 'அ-அஷ்Fபக்தும் அன் துகத்திமூ Bபய்ன யதய் னஜ்வாகும் ஸதகாத்; Fப-இத் லம் தFப்'அலூ வ தாBபல் லாஹு 'அலய்கும் Fப அகீமுஸ் ஸலாத வ ஆதுZஜ் Zஜகாத வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹ்; வல்லாஹு கBபீரும் Bபிமா தஃமலூன்
58:13. நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
58:14
58:14 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ تَوَلَّوْا قَوْمًا غَضِبَ اللّٰهُ عَلَيْهِمْؕ مَّا هُمْ مِّنْكُمْ وَلَا مِنْهُمْۙ وَيَحْلِفُوْنَ عَلَى الْكَذِبِ وَهُمْ يَعْلَمُوْنَ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? اِلَى الَّذِيْنَ تَوَلَّوْا நண்பர்களாக எடுத்துக் கொண்டவர்களை قَوْمًا மக்களை غَضِبَ கோபப்பட்டானோ اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْؕ அவர்கள் மீது مَّا هُمْ مِّنْكُمْ அவர்கள் உங்களை சேர்ந்தவர்கள் இல்லை وَلَا مِنْهُمْۙ அவர்களை சேர்ந்தவர்களும் இல்லை وَيَحْلِفُوْنَ இன்னும் சத்தியம் செய்கின்றனர் عَلَى الْكَذِبِ பொய்யான விஷயத்தின் மீது وَهُمْ يَعْلَمُوْنَ‏ அவர்கள் அறிந்து கொண்டே
58:14. அலம் தர இலல் லதீன தவல்லவ் கவ்மன் களிBபல் லாஹு 'அலய்ஹிம் மா ஹும் மின்கும் வலா மின்ஹும் வ யஹ்லிFபூன 'அலல் கதிBபி வ ஹும் யஃலமூன்
58:14. எந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே!) நீர் கவனித்தீரா? அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர்; அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.
58:15
58:15 اَعَدَّ اللّٰهُ لَهُمْ عَذَابًا شَدِيْدًا‌ ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
اَعَدَّ ஏற்படுத்தி இருக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ அவர்களுக்கு عَذَابًا வேதனையை شَدِيْدًا‌ ؕ கடுமையான(து) اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் سَآءَ மிகக் கெட்டவையாகும் مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்துகொண்டிருந்தவை
58:15. அ'அத்தல் லாஹு லஹும் 'அதாBபன் ஷதீதன் இன்னஹும் ஸா'அ மா கானூ யஃமலூன்
58:15. அவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை யெல்லாம் மிகவும் கெட்டவையே.
58:16
58:16 اِتَّخَذُوْۤا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ فَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏
اِتَّخَذُوْۤا எடுத்துக் கொண்டனர் اَيْمَانَهُمْ தங்கள் சத்தியங்களை جُنَّةً ஒரு கேடயமாக فَصَدُّوْا தடுக்கின்றனர் عَنْ سَبِيْلِ மார்க்கத்தை விட்டும் اللّٰهِ அல்லாஹ்வின் فَلَهُمْ ஆகவே, அவர்களுக்கு உண்டு عَذَابٌ தண்டனை مُّهِيْنٌ இழிவுதரக்கூடிய(து)
58:16. இத்தகதூ அய்மானஹும் ஜுன்னதன் Fபஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹி Fபலஹும் 'அதாBபும் முஹீன்
58:16. அவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக்கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள்; ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.
58:17
58:17 لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْــٴًـــا‌ ؕ اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
لَنْ تُغْنِىَ அறவே தடுக்க மாட்டார்கள் عَنْهُمْ அவர்களை விட்டும் اَمْوَالُهُمْ அவர்களின் செல்வங்களோ وَلَاۤ اَوْلَادُهُمْ அவர்களின் பிள்ளைகளோ مِّنَ اللّٰهِ அல்லாஹ்விடம் شَيْــٴًـــا‌ ؕ எதையும் اُولٰٓٮِٕكَ அவர்கள் اَصْحٰبُ النَّارِ‌ ؕ நரகவாசிகள் هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமாக
58:17. லன் துக்னிய 'அன்ஹும் அம்வாலுஹும் வ லா அவ்லாதுஹும் மினல் லாஹி ஷய்'ஆ; உலா 'இக அஸ் ஹாBபுன் னாரி ஹும் Fபீஹா காலிதூன்
58:17. அவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது; அவர்கள் நரகவாதிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
58:18
58:18 يَوْمَ يَبْعَثُهُمُ اللّٰهُ جَمِيْعًا فَيَحْلِفُوْنَ لَهٗ كَمَا يَحْلِفُوْنَ لَـكُمْ‌ وَيَحْسَبُوْنَ اَنَّهُمْ عَلٰى شَىْءٍ‌ ؕ اَلَاۤ اِنَّهُمْ هُمُ الْكٰذِبُوْنَ‏
يَوْمَ நாளில் يَبْعَثُهُمُ எழுப்புவான்/ அவர்களை اللّٰهُ அல்லாஹ் جَمِيْعًا அனைவரையும் فَيَحْلِفُوْنَ அவர்கள் சத்தியம் செய்வார்கள் لَهٗ அவனுக்கு முன் كَمَا போன்று يَحْلِفُوْنَ அவர்கள் சத்தியம் செய்வது لَـكُمْ‌ உங்களுக்கு முன் وَيَحْسَبُوْنَ அவர்கள் எண்ணுவார்கள் اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் عَلٰى شَىْءٍ‌ ؕ ஒரு செயலின் மீது اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّهُمْ هُمُ நிச்சயமாக அவர்கள்தான் الْكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்
58:18. யவ்ம யBப்'அதுஹுமுல் லாஹுஜமீ'அன் Fப யஹ்லிFபூன லஹூ கமா யஹ்லிFபூன லகும் வ யஹ்ஸBபூன அன்னஹும் 'அலா ஷய்'; அலா இன்னஹும் ஹுமுல் காதிBபூன்
58:18. அவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள்; அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்; அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே!
58:19
58:19 اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطٰنُ فَاَنْسٰٮهُمْ ذِكْرَ اللّٰهِ‌ؕ اُولٰٓٮِٕكَ حِزْبُ الشَّيْطٰنِ‌ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ الشَّيْطٰنِ هُمُ الْخٰسِرُوْنَ‏
اِسْتَحْوَذَ ஆதிக்கம் செலுத்துகின்றான் عَلَيْهِمُ அவர்கள் மீது الشَّيْطٰنُ ஷைத்தான் فَاَنْسٰٮهُمْ அவர்களுக்கு மறக்கவைத்து விட்டான் ذِكْرَ நினைவை اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் حِزْبُ கட்சியினர் الشَّيْطٰنِ‌ؕ ஷைத்தானின் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ حِزْبَ நிச்சயமாக கட்சியினர்தான் الشَّيْطٰنِ ஷைத்தானின் هُمُ அவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏ நஷ்டவாளிகள்
58:19. இஸ்தஹ்வத 'அலய்ஹிமுஷ் ஷய்தானு Fப அன்ஸாஹும் திக்ரல் லாஹ்; உலா'இக ஹிZஜ்Bபுஷ் ஷய்தான்; அலா இன்னா ஹிZஜ்Bபஷ் ஷய்தானி ஹுமுல் காஸிரூன்
58:19. அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர்; அறிந்து கொள்க; ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்!
58:20
58:20 اِنَّ الَّذِيْنَ يُحَآدُّوْنَ اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اُولٰٓٮِٕكَ فِى الْاَذَلِّيْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் يُحَآدُّوْنَ முரண்படுகிறார்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு(ம்) وَرَسُوْلَهٗۤ அவனது தூதருக்கும் اُولٰٓٮِٕكَ அவர்கள் فِى الْاَذَلِّيْنَ‏ மிக இழிவானவர்களில்
58:20. இன்னல் லதீன யுஹாத்தூனல் லாஹ வ ரஸூலஹூ உலா'இக Fபில் அதல்லீன்
58:20. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள்.
58:21
58:21 كَتَبَ اللّٰهُ لَاَغْلِبَنَّ اَنَا وَرُسُلِىْ‌ؕ اِنَّ اللّٰهَ قَوِىٌّ عَزِيْزٌ‏
كَتَبَ விதித்துவிட்டான் اللّٰهُ அல்லாஹ் لَاَغْلِبَنَّ நிச்சயமாக வெல்வோம் اَنَا நானும் وَرُسُلِىْ‌ؕ எனது தூதரும்தான் اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் قَوِىٌّ மிக வலிமை உள்ளவன் عَزِيْزٌ‏ மிகைத்தவன்
58:21. கதBபல் லாஹு ல அக்லிBபன்ன அன வ ருஸுலீ; இன்னல் லாஹ கவிய்யுன் 'அZஜீZஜ்
58:21. “நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்” என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன்; யாவரையும் மிகைத்தவன்.
58:22
58:22 لَا تَجِدُ قَوْمًا يُّؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ يُوَآدُّوْنَ مَنْ حَآدَّ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَوْ كَانُوْۤا اٰبَآءَهُمْ اَوْ اَبْنَآءَهُمْ اَوْ اِخْوَانَهُمْ اَوْ عَشِيْرَتَهُمْ‌ؕ اُولٰٓٮِٕكَ كَتَبَ فِىْ قُلُوْبِهِمُ الْاِيْمَانَ وَاَيَّدَهُمْ بِرُوْحٍ مِّنْهُ‌ ؕ وَيُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ رَضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ‌ ؕ اُولٰٓٮِٕكَ حِزْبُ اللّٰهِ‌ ؕ اَلَاۤ اِنَّ حِزْبَ اللّٰهِ هُمُ الْمُفْلِحُوْنَ
لَا تَجِدُ நீர் காணமாட்டீர் قَوْمًا மக்களை يُّؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கின்றனர் بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَالْيَوْمِ الْاٰخِرِ மறுமை நாளையும் يُوَآدُّوْنَ நேசிப்பவர்களாக مَنْ எவரை حَآدَّ முரண்படுகின்றார் اللّٰهَ அல்லாஹ்விற்கும் وَرَسُوْلَهٗ அவனது தூதருக்கும் وَلَوْ كَانُوْۤا அவர்கள் இருந்தாலும் சரியே! اٰبَآءَهُمْ தங்கள் தந்தைகளாக اَوْ அல்லது اَبْنَآءَهُمْ தங்கள் பிள்ளைகளாக اَوْ அல்லது اِخْوَانَهُمْ தங்கள் சகோதரர்களாக اَوْ அல்லது عَشِيْرَتَهُمْ‌ؕ தங்கள் குடும்பத்தினராக اُولٰٓٮِٕكَ அவர்கள் كَتَبَ உறுதிபடுத்திவிட்டான் فِىْ قُلُوْبِهِمُ அவர்களின் உள்ளங்களில் الْاِيْمَانَ ஈமானை وَاَيَّدَهُمْ இன்னும் பலப்படுத்தினான்/அவர்களை بِرُوْحٍ உதவியைக் கொண்டு مِّنْهُ‌ ؕ தன் புறத்தில் இருந்து وَيُدْخِلُهُمْ இன்னும் அவர்களை நுழைப்பான் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ நதிகள் خٰلِدِيْنَ நிரந்தரமாக தங்குவார்கள் فِيْهَا‌ ؕ அவற்றில் رَضِىَ பொருந்திக்கொள்வான் اللّٰهُ அல்லாஹ் عَنْهُمْ அவர்களை وَرَضُوْا عَنْهُ‌ ؕ இன்னும் பொருந்திக் கொள்வார்கள்/அவனை اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் حِزْبُ கட்சியினர் اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வின் اَلَاۤ அறிந்துகொள்ளுங்கள்! اِنَّ நிச்சயமாக حِزْبَ கட்சியினர்தான் اللّٰهِ அல்லாஹ்வின் هُمُ அவர்கள் الْمُفْلِحُوْنَ‏ வெற்றியாளர்கள்
58:22. லா தஜிது கவ்ம(ன்)ய் யு'மினூன Bபில்லாஹி வல் யவ்மில் ஆகிரி யுவாத்தூன மன் ஹாத்தல் லாஹ வ ரஸூலஹூ வ லவ் கானூ ஆBபா'அஹும் அவ் அBப்னா'அஹும் அவ் இக்வா னஹும் அவ் 'அஷீரதஹும்; உலா'இக கதBப Fபீ குலூBபிஹி முல் ஈமான வ அய்யதஹும் Bபிரூஹிம்மின்ஹு வ யுத்கிலு ஹும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா; ரளியல் லாஹு 'அன்ஹும் வ ரளூ 'அன்ஹு; உலா 'இக ஹிZஜ்Bபுல் லாஹ்; அலா இன்ன ஹிZஜ்Bபல் லாஹி ஹுமுல் முFப்லிஹூன்
58:22. அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.