63. ஸூரத்துல் முனாஃபிஃகூன் (நயவஞ்சகர்கள்)
மதனீ, வசனங்கள்: 11

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
63:1
63:1 اِذَا جَآءَكَ الْمُنٰفِقُوْنَ قَالُوْا نَشْهَدُ اِنَّكَ لَرَسُوْلُ اللّٰهِ ‌ۘ وَاللّٰهُ يَعْلَمُ اِنَّكَ لَرَسُوْلُهٗ ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّ الْمُنٰفِقِيْنَ لَـكٰذِبُوْنَ‌ ۚ‏
اِذَا جَآءَكَ உம்மிடம் வந்தால் الْمُنٰفِقُوْنَ நயவஞ்சகர்கள் قَالُوْا கூறுவார்கள் نَشْهَدُ நாங்கள் சாட்சி பகருகிறோம் اِنَّكَ நிச்சயமாக நீர் لَرَسُوْلُ தூதர்தான் என்று اللّٰهِ ۘ அல்லாஹ்வின் وَاللّٰهُ அல்லாஹ் يَعْلَمُ நன்கறிவான் اِنَّكَ நிச்சயமாக நீர் لَرَسُوْلُهٗ ؕ அவனது தூதர்தான் என்று وَاللّٰهُ அல்லாஹ் يَشْهَدُ சாட்சி பகருகின்றான் اِنَّ நிச்சயமாக الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்கள் لَـكٰذِبُوْنَ‌ ۚ‏ பொய்யர்கள்தான்
63:1. இதா ஜா'அகல் முனாFபிகூன காலூ னஷ்ஹது இன்னக ல ரஸூலுல் லாஹ்; வல்லாஹு யஃலமு இன்னக ல ரஸூலுஹூ வல்லாஹு யஷ்ஹது இன்னல் முனாFபிகீன லகாதிBபூன்
63:1. “(நபியே!) முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடம் வந்து, “நிச்சயமாக, நீர் அல்லாஹ்வின் தூதராக இருக்கின்றீர்” என்று நாங்கள் சாட்சி சொல்கிறோம்” என்று கூறுகின்றனர். மேலும், அல்லாஹ், “நிச்சயமாக நீர் அவனுடைய தூதராக இருக்கின்றீர்” என்பதை நன்கு அறிவான். ஆனால், அல்லாஹ், நிச்சயமாக முனாஃபிக்குகள் (வஞ்சகமாகப்) பொய்யுரைப்பவர்கள்” என்பதாகச் சாட்சி சொல்கிறான்.
63:2
63:2 اِتَّخَذُوْۤا اَيْمَانَهُمْ جُنَّةً فَصَدُّوْا عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ اِنَّهُمْ سَآءَ مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
اِتَّخَذُوْۤا ஆக்கிக் கொண்டனர் اَيْمَانَهُمْ தங்கள் சத்தியங்களை جُنَّةً கேடயமாக فَصَدُّوْا தடுத்தனர் عَنْ سَبِيْلِ பாதையை விட்டு اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் سَآءَ மிகக் கெட்டுவிட்டன مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ அவர்கள் செய்துகொண்டிருந்தவை
63:2. இத்தகதூ அய்மானஹும் ஜுன்னதன் Fபஸத்தூ 'அன் ஸBபீலில் லாஹ்; இன்னஹும் ஸா'அ மா கானூ யஃமலூன்
63:2. இவர்கள் தங்களுடைய (பொய்ச்)சத்தியங்களைக் கேடயமாக வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தும் வருகின்றனர்; நிச்சயமாக இவர்கள் செய்து கொண்டிருப்பது மிகவும் கெட்டது.
63:3
63:3 ذٰلِكَ بِاَنَّهُمْ اٰمَنُوْا ثُمَّ كَفَرُوْا فَطُبِعَ عَلٰى قُلُوْبِهِمْ فَهُمْ لَا يَفْقَهُوْنَ‏
ذٰلِكَ அதற்கு காரணம் بِاَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் اٰمَنُوْا நம்பிக்கை கொண்டனர் ثُمَّ பிறகு كَفَرُوْا நிராகரித்தனர் فَطُبِعَ ஆகவே, முத்திரை இடப்பட்டுவிட்டது عَلٰى قُلُوْبِهِمْ அவர்களின் உள்ளங்கள் மீது فَهُمْ ஆகவே, அவர்கள் لَا يَفْقَهُوْنَ‏ புரிய மாட்டார்கள்
63:3. தாலிக Bபி அன்னஹும் ஆமனூ தும்ம கFபரூ FபதுBபி'அ 'அலா குலூBபிஹிம் Fபஹும் லா யFப்கஹூன்
63:3. இது நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகி விட்டதனாலேயாகும்; ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது; எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்.
63:4
63:4 وَاِذَا رَاَيْتَهُمْ تُعْجِبُكَ اَجْسَامُهُمْ‌ ؕ وَاِنْ يَّقُوْلُوْا تَسْمَعْ لِقَوْلِهِمْ‌ ؕ كَاَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ   ‌ؕ يَحْسَبُوْنَ كُلَّ صَيْحَةٍ عَلَيْهِمْ‌ ؕ هُمُ الْعَدُوُّ فَاحْذَرْهُمْ‌ ؕ قَاتَلَهُمُ اللّٰهُ‌ اَنّٰى يُـؤْفَكُوْنَ‏
وَاِذَا رَاَيْتَهُمْ நீர் அவர்களைப் பார்த்தால் تُعْجِبُكَ உம்மைக் கவரும் اَجْسَامُهُمْ‌ ؕ அவர்களின் உடல்கள் وَاِنْ يَّقُوْلُوْا அவர்கள் கூறினால் تَسْمَعْ நீர் செவியுறுவீர் لِقَوْلِهِمْ‌ ؕ அவர்களின் கூற்றை كَاَنَّهُمْ خُشُبٌ அவர்கள் மரப்பலகைகளைப் போல் مُّسَنَّدَةٌ   ؕ சாய்த்து வைக்கப்பட்ட يَحْسَبُوْنَ எண்ணுவார்கள் كُلَّ ஒவ்வொரு صَيْحَةٍ சப்தத்தையும் عَلَيْهِمْ‌ ؕ தங்களுக்கு பாதகமாகவே هُمُ அவர்கள்தான் الْعَدُوُّ எதிரிகள் فَاحْذَرْهُمْ‌ ؕ ஆகவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! قَاتَلَهُمُ அவர்களை அழிப்பான் اللّٰهُ‌ அல்லாஹ் اَنّٰى எவ்வாறு يُـؤْفَكُوْنَ‏ அவர்கள் திருப்பப்படுகின்றார்கள்
63:4. வ இதா ர அய்தஹும் துஃஜிBபுக அஜ்ஸாமுஹும் வ இ(ன்)ய் யகூலூ தஸ்மஃ லிகவ்லிஹிம் க'அன்னஹும் குஷுBபும் முஸன்னதஹ்; யஹ்ஸBபூன குல்ல ஸய்ஹதின் 'அலய்ஹிம்; ஹுமுல் 'அதுவ்வு Fபஹ்தர்ஹும்; காதலஹுமுல் லாஹு அன்னா யு'Fபகூன்
63:4. இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர்; சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக்கின்றனர்; ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதிரானது என்று எண்ணுகிறார்கள்; இவர்கள்தாம் (உம்) பகைவர்கள்; ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக; அல்லாஹ் இவர்களை அழித்து விடுவான்; இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?
63:5
63:5 وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَـكُمْ رَسُوْلُ اللّٰهِ لَـوَّوْا رُءُوْسَهُمْ وَرَاَيْتَهُمْ يَصُدُّوْنَ وَهُمْ مُّسْتَكْبِرُوْنَ‏
وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் لَهُمْ அவர்களிடம் تَعَالَوْا வாருங்கள் يَسْتَغْفِرْ மன்னிப்புத் தேடுவார் لَـكُمْ உங்களுக்காக رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வின் لَـوَّوْا வேகமாக அசைக்கிறார்கள் رُءُوْسَهُمْ தங்கள் தலைகளை وَرَاَيْتَهُمْ இன்னும் அவர்களை நீர் பார்ப்பீர் يَصُدُّوْنَ புறக்கணிப்பவர்களாகவே وَهُمْ அவர்கள் مُّسْتَكْبِرُوْنَ‏ கர்வம் கொள்பவர்கள்
63:5. வ இதா கீல லஹும் த'ஆலவ் யஸ்தக்Fபிர் லகும் ரஸூலுல் லாஹி லவ்வவ் ரு'ஊ ஸஹும் வ ர அய்தஹும் யஸுத்தூன வ ஹும் முஸ்தக்Bபிரூன்
63:5. இன்னும், “வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (இறைவனிடம்) பாவமன்னிப்புத் தேடுவார் என்று இவர்களிடம் கூறப்பட்டால், இவர்கள் தங்கள் தலைகளைச் சாய்த்துக் கொண்டு, பெருமை கொண்டவர்களாகத் திருப்பிச் செல்வதை நீர் காண்பீர்.
63:6
63:6 سَوَآءٌ عَلَيْهِمْ اَسْتَغْفَرْتَ لَهُمْ اَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْؕ لَنْ يَّغْفِرَ اللّٰهُ لَهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ‏
سَوَآءٌ சமம்தான் عَلَيْهِمْ அவர்களுக்கு اَسْتَغْفَرْتَ நீர் பாவமன்னிப்புத் தேடினாலும் لَهُمْ அவர்களுக்காக اَمْ لَمْ تَسْتَغْفِرْ நீர் பாவமன்னிப்புத் தேடவில்லை என்றாலும் لَهُمْؕ அவர்களுக்காக لَنْ يَّغْفِرَ மன்னிக்கவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் لَهُمْ‌ؕ அவர்களை اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الْفٰسِقِيْنَ‏ பாவிகளான
63:6. ஸவா'உன் 'அலய்ஹிம் அஸ் தக்Fபர்த லஹும் அம் லம் தஸ்தக்Fபிர் லஹும் ல(ன்)ய் யக்Fபிரல் லாஹு லஹும்; இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மல் Fபாஸிகீன்
63:6. அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்; அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
63:7
63:7 هُمُ الَّذِيْنَ يَقُوْلُوْنَ لَا تُنْفِقُوْا عَلٰى مَنْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ حَتّٰى يَنْفَضُّوْا‌ؕ وَلِلّٰهِ خَزَآٮِٕنُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَلٰـكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَفْقَهُوْنَ‏
هُمُ الَّذِيْنَ இவர்கள்தான் يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் لَا تُنْفِقُوْا தர்மம் செய்யாதீர்கள் عَلٰى மீது مَنْ عِنْدَ رَسُوْلِ اللّٰهِ அல்லாஹ்வின் தூதரிடம் இருப்பவர்கள் حَتّٰى இறுதியாக يَنْفَضُّوْا‌ؕ பிரிந்து விடுவார்கள் وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே خَزَآٮِٕنُ பொக்கிஷங்கள் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமியின் وَلٰـكِنَّ என்றாலும் الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்கள் لَا يَفْقَهُوْنَ‏ புரிய மாட்டார்கள்
63:7. ஹுமுல் லதீன யகூலூன லா துன்Fபிகூ 'அலா மன் இன்த ரஸூலில் லாஹி ஹத்தா யன்Fபள்ளூ; வ லில்லாஹி கZஜா' இனுஸ் ஸமாவாதி வல் அர்ளி வ லாகின்னல் முனாFபிகீன ல யFப்கஹூன்
63:7. இவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்கள்; (அவரை விட்டுப்) பிரிந்து செல்லும் வரை அவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள்” என்று கூறியவர்கள்; வானங்களிலும், பூமியிலுமுள்ள பொக்கிஷங்கள் அல்லாஹ்வுக்கே சொந்தமானவை; ஆனால் இந்நயவஞ்சகர்கள் (அதை) உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.
63:8
63:8 يَقُوْلُوْنَ لَٮِٕنْ رَّجَعْنَاۤ اِلَى الْمَدِيْنَةِ لَيُخْرِجَنَّ الْاَعَزُّ مِنْهَا الْاَذَلَّ ‌ؕ وَلِلّٰهِ الْعِزَّةُ وَلِرَسُوْلِهٖ وَلِلْمُؤْمِنِيْنَ وَلٰـكِنَّ الْمُنٰفِقِيْنَ لَا يَعْلَمُوْنَ
يَقُوْلُوْنَ கூறுகின்றனர் لَٮِٕنْ رَّجَعْنَاۤ நாம் திரும்பினால் اِلَى الْمَدِيْنَةِ மதீனாவிற்கு لَيُخْرِجَنَّ நிச்சயமாக வெளியேற்றவேண்டும் الْاَعَزُّ கண்ணியவான்கள் مِنْهَا அதிலிருந்து الْاَذَلَّ ؕ தாழ்ந்தவர்களை وَلِلّٰهِ அல்லாஹ்விற்கு(ம்) الْعِزَّةُ கண்ணியம் وَلِرَسُوْلِهٖ அவனது தூதருக்கும் وَلِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கையாளர்களுக்கும்தான் وَلٰـكِنَّ என்றாலும் الْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்கள் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
63:8. யகூலூன ல'இர் ரஜஃனா இலல் மதீனதி ல யுக்ரிஜன்னல் அ'அZஜ்Zஜு மின்ஹல் அதல்ல்; வ லில்லாஹில் 'இZஜ்Zஜது வலி ரஸூலிஹீ வ லில்மு'மினீன வலாகின்னல் முனாFபிகீன லா யஃலமூன்
63:8. “நாங்கள் அல்மதீனாவுக்குத் திரும்புவோமானால், கண்ணியமானவர்கள் தாழ்ந்தவர்களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்றிவிடுவார்கள்” என்று அவர்கள் கூறுகின்றனர்; ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.  
63:9
63:9 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تُلْهِكُمْ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! لَا تُلْهِكُمْ உங்களை ஈடுபடுத்தி விடவேண்டாம் اَمْوَالُكُمْ உங்கள் செல்வங்களும் وَلَاۤ اَوْلَادُكُمْ உங்கள் பிள்ளைகளும் عَنْ ذِكْرِ اللّٰهِ‌ۚ அல்லாஹ்வின் நினைவை விட்டும் وَمَنْ யார் يَّفْعَلْ செய்துவிடுவார்களோ ذٰلِكَ அப்படி فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْخٰسِرُوْنَ‏ நஷ்டவாளிகள்
63:9. யா அய்யுஹல் லதீன ஆமனூ ல துல்ஹிகும் அம்வாலுகும் வலா அவ்லாதுகும் 'அன்திக்ரில் லாஹ்; வ மய்-யFப்'அல் தாலிக Fப-உலா'இக ஹுமுல் காஸிரூன்
63:9. ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.
63:10
63:10 وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏
وَاَنْفِقُوْا தர்மம் செய்யுங்கள் مِنْ مَّا رَزَقْنٰكُمْ நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து مِّنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِىَ வருவதற்கு اَحَدَكُمُ உங்களில் ஒருவருக்கு الْمَوْتُ மரணம் فَيَقُوْلَ அவர் கூறுவார் رَبِّ என் இறைவா! لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ நீ என்னை பிற்படுத்தி வைக்கமாட்டாயா! اِلٰٓى اَجَلٍ தவணை வரை قَرِيْبٍۙ கொஞ்சம் சமீபமான فَاَصَّدَّقَ நான் தர்மம் செய்வேனே وَاَكُنْ இன்னும் ஆகிவிடுவேனே مِّنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில்
63:10. வ அன்Fபிகூ மிம் மா ரZஜக்னாகும் மின் கBப்லி அ(ன்)ய்-ய'திய அஹதகுமுல் மவ்து Fப யகூல ரBப்Bபி லவ் லா அக்கர்தனீ இலா அஜலின் கரீBபின் Fப அஸ்ஸத்தக வ அகும் மினஸ்ஸாலிஹீன்
63:10. உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாதது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.
63:11
63:11 وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ
وَلَنْ يُّؤَخِّرَ தாமதப்படுத்தவே மாட்டான் اللّٰهُ அல்லாஹ் نَفْسًا ஓர் உயிரை اِذَا جَآءَ வந்துவிட்டால் اَجَلُهَا‌ؕ அதற்குரிய தவணை وَاللّٰهُ அல்லாஹ் خَبِيْرٌۢ ஆழ்ந்தறிபவன் بِمَا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்பவற்றை
63:11. வ ல(ன்)ய் யு 'அக்கிரல் லாஹு னFப்ஸன் இதா ஜா'அ அஜலுஹா; வல்லாஹு கBபீரும் Bபிமா தஃமலூன்
63:11. ஆனால், அல்லாஹ், எந்த ஆத்மாவுக்கும் அதன் தவணை வந்துவிட்டால் (அதனைப்) பிற்படுத்த மாட்டான் - நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் தெரிந்தே இருக்கின்றான்.