66. ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)
மதனீ, வசனங்கள்: 12

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
66:1
66:1 يٰۤاَيُّهَا النَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكَ‌ۚ تَبْتَغِىْ مَرْضَاتَ اَزْوَاجِكَ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
يٰۤاَيُّهَا النَّبِىُّ நபியே! لِمَ تُحَرِّمُ நீர் ஏன் விலக்கிக் கொள்கிறீர் مَاۤ اَحَلَّ ஆகுமாக்கியதை اللّٰهُ அல்லாஹ் لَـكَ‌ۚ உமக்கு تَبْتَغِىْ நாடுகிறீர் مَرْضَاتَ பொருத்தத்தை اَزْوَاجِكَ‌ؕ உமது மனைவிகளின் وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
66:1. யா அய்யுஹன் னBபிய்யு லிம துஹர்ரிமு மா அஹல்லல் லாஹு லக தBப்தகீ மர்ளாத அZஜ்வாஜிக்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
66:1. நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
66:2
66:2 قَدْ فَرَضَ اللّٰهُ لَـكُمْ تَحِلَّةَ اَيْمَانِكُمْ‌ؕ وَاللّٰهُ مَوْلٰٮكُمْ‌ۚ وَهُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏
قَدْ திட்டமாக فَرَضَ கடமையாக்கியுள்ளான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு تَحِلَّةَ முறிப்பதை اَيْمَانِكُمْ‌ؕ உங்கள் சத்தியங்களை وَاللّٰهُ அல்லாஹ்தான் مَوْلٰٮكُمْ‌ۚ உங்கள் எஜமானன் وَهُوَ அவன்தான் الْعَلِيْمُ நன்கறிந்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
66:2. கத் Fபரளல் லாஹு லகும் தஹில்லத அய்மானிகும்; வல்லாஹு மவ்லாகும் வ ஹுவல் 'அலீமுல் ஹகீம்
66:2. அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
66:3
66:3 وَاِذْ اَسَرَّ النَّبِىُّ اِلٰى بَعْضِ اَزْوَاجِهٖ حَدِيْثًا‌ۚ فَلَمَّا نَـبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْۢ بَعْضٍ‌ۚ فَلَمَّا نَـبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْۢبَاَكَ هٰذَا‌ؕ قَالَ نَـبَّاَنِىَ الْعَلِيْمُ الْخَبِیْرُ‏
وَاِذْ اَسَرَّ النَّبِىُّ இரகசியமாக பேசியபோது/நபி اِلٰى بَعْضِ சிலரிடம் اَزْوَاجِهٖ தனது மனைவிமார்களில் حَدِيْثًا‌ۚ ஒரு பேச்சை فَلَمَّا نَـبَّاَتْ بِهٖ அவள் அறிவித்து விட்டபோது/அதை وَاَظْهَرَهُ இன்னும் அதை வெளிப்படுத்தினான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِ அவருக்கு عَرَّفَ அவர் அறிவித்தார் بَعْضَهٗ அதில் சிலவற்றை وَاَعْرَضَ இன்னும் புறக்கணித்து விட்டார் عَنْۢ بَعْضٍ‌ۚ சிலவற்றை فَلَمَّا نَـبَّاَهَا بِهٖ அவர் அவளுக்கு அறிவித்த போது/அதை قَالَتْ அவள் கூறினாள் مَنْ யார் اَنْۢبَاَكَ உமக்கு அறிவித்தார் هٰذَا‌ؕ இதை قَالَ அவர் கூறினார் نَـبَّاَنِىَ எனக்கு அறிவித்தான் الْعَلِيْمُ நன்கறிபவன் الْخَبِیْرُ‏ ஆழ்ந்தறிபவன்
66:3. வ இத் அஸர்ரன் னBபிய்யு இலா Bபஃளி அZஜ்வாஜிஹீ ஹதீதன் Fபலம்மா னBப்Bப அத் Bபிஹீ வ அள்ஹரஹுல் லாஹு 'அலய்ஹி 'அர்ரFப Bபஃளஹூ வ அ'ரள 'அம் Bபஃளின் Fபலம்மா னBப்Bப அஹா Bபிஹீ காலத் மன் அம்Bப அக ஹாத கால னBப்Bப அனியல் 'அலீமுல் கBபீர்
66:3. மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான்; அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்: “(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) எனக்குத் தெரிவித்தான்” என்று (பதில்) கூறினார்.
66:4
66:4 اِنْ تَتُوْبَاۤ اِلَى اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَا‌ۚ وَاِنْ تَظٰهَرَا عَلَيْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰٮهُ وَجِبْرِيْلُ وَصَالِحُ الْمُؤْمِنِيْنَ‌ۚ وَالْمَلٰٓٮِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِيْرٌ‏
اِنْ تَتُوْبَاۤ நீங்கள் இருவரும் திரும்பிவிட்டால் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் فَقَدْ ஏனெனில், திட்டமாக صَغَتْ சாய்ந்து விட்டன قُلُوْبُكُمَا‌ۚ உங்கள் இருவரின் உள்ளங்களும் وَاِنْ تَظٰهَرَا நீங்கள் இருவரும் உதவினால் عَلَيْهِ அவருக்கு எதிராக فَاِنَّ اللّٰهَ هُوَ ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் مَوْلٰٮهُ அவருக்குப் பாதுகாவலன் وَجِبْرِيْلُ இன்னும் ஜிப்ரீலும் وَصَالِحُ الْمُؤْمِنِيْنَ‌ۚ இன்னும் நல்ல முஃமின்களும் وَالْمَلٰٓٮِٕكَةُ வானவர்களும் بَعْدَ ذٰلِكَ இதற்குப் பின்னர் ظَهِيْرٌ‏ உதவியாளர்கள்
66:4. இன் ததூBபா இலல் லாஹி Fபகத் ஸகத் குலூBபுகுமா வ இன் தளாஹரா 'அலய்ஹி Fப இன்னல் லாஹ ஹுவ மவ்லாஹு வ ஜிBப்ரீலு வ ஸாலிஹுல் மு'மினீன்; வல் மலா'இகது Bபஃத தாலிக ளஹீர்
66:4. நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்) ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன - தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் (அவருக்கு உதவுவான்; அன்றியும்) ஜிப்ரீலும், ஸாலிஹான முஃமின்களும் (உதவுவார்கள்.) அதன் பின் மலக்குகளும் (அவருக்கு) உதவியாளராக இருப்பார்கள்.
66:5
66:5 عَسٰى رَبُّهٗۤ اِنْ طَلَّقَكُنَّ اَنْ يُّبْدِلَهٗۤ اَزْوَاجًا خَيْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓٮِٕبٰتٍ عٰبِدٰتٍ سٰٓٮِٕحٰتٍ ثَيِّبٰتٍ وَّاَبْكَارًا‏
عَسٰى கூடும் رَبُّهٗۤ அவருடைய இறைவன் اِنْ طَلَّقَكُنَّ அவர் உங்களை விவாகரத்து செய்து விட்டால் اَنْ يُّبْدِلَهٗۤ அவருக்கு பகரமாக வழங்குவான் اَزْوَاجًا மனைவிகளை خَيْرًا சிறந்தவர்களான مِّنْكُنَّ உங்களை விட مُسْلِمٰتٍ முற்றிலும் பணியக்கூடிய مُّؤْمِنٰتٍ நம்பிக்கை கொள்ளக்கூடிய قٰنِتٰتٍ கீழ்ப்படியக்கூடிய تٰٓٮِٕبٰتٍ வணக்க வழிபாடு செய்யக்கூடிய عٰبِدٰتٍ வணக்க வழிபாடு செய்யக்கூடிய سٰٓٮِٕحٰتٍ நோன்பு நோற்கக்கூடிய ثَيِّبٰتٍ கன்னி கழிந்தவர்களும் وَّاَبْكَارًا‏ கன்னிகளும்
66:5. அஸா ரBப்Bபுஹூ இன் தல்லககுன்ன அ(ன்)ய்யுBப்திலஹூ அZஜ்வாஜன் கய்ரம் மின்குன்ன முஸ்லிமாதிம் மு'மினாதின் கானிதாதின் தா'இBபாதின் 'ஆBபிதாதின் ஸா'இஹாதின் தய்யிBபாதி(ன்)வ் வ அBப்காரா
66:5. அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.
66:6
66:6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! قُوْۤا பாதுகாத்துக் கொள்ளுங்கள் اَنْفُسَكُمْ உங்களையும் وَاَهْلِيْكُمْ உங்கள் குடும்பத்தாரையும் نَارًا நரகத்தைவிட்டு وَّقُوْدُهَا அதன் எரிபொருள் النَّاسُ மக்களும் وَالْحِجَارَةُ கற்களும் عَلَيْهَا அவற்றின் மீது مَلٰٓٮِٕكَةٌ வானவர்கள் غِلَاظٌ முரடர்களாக شِدَادٌ கடுமையானவர்களான لَّا يَعْصُوْنَ மாறு செய்யமாட்டார்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ அவன் அவர்களுக்கு ஏவியதில்/இன்னும் செய்வார்கள் مَا يُؤْمَرُوْنَ‏ அவர்கள் எதற்கு ஏவப்பட்டார்களோ
66:6. யா அய்யுஹல் லதீன ஆமனூ கூ அன்Fபுஸகும் வ அஹ்லீகும் னார(ன்)வ் வகூது ஹன் னாஸு வல் ஹிஜாரது 'அலய்ஹா மலா'இகதுன் கிலாளுன் ஷிதாதுல் லா யஃஸூனல் லாஹ மா அமரஹும் வ யFப்'அலூன மா யு'மரூன்
66:6. முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
66:7
66:7 يٰۤاَيُّهَا الَّذِيْنَ كَفَرُوْا لَا تَعْتَذِرُوا الْيَوْمَ‌ؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களே! لَا تَعْتَذِرُوا நீங்கள் காரணம் கூறாதீர்கள் الْيَوْمَ‌ؕ இன்று اِنَّمَا تُجْزَوْنَ நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்
66:7. யா அய்யுஹல் லதீன கFபரூ ல தஃததிருல் யவ்ம இன்னமா துஜ்Zஜவ்ன மா குன்தும் தஃமலூன்
66:7. (அன்று காஃபிர்களிடம்) நிராகரித்தோரே! இன்று நீங்கள் எந்தப்புகலும் கூறாதீர்கள்; நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்ததற்குத்தான்.
66:8
66:8 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَى اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ؕ عَسٰى رَبُّكُمْ اَنْ يُّكَفِّرَ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيُدْخِلَـكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ يَوْمَ لَا يُخْزِى اللّٰهُ النَّبِىَّ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ‌ ۚ نُوْرُهُمْ يَسْعٰى بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَ تْمِمْ لَـنَا نُوْرَنَا وَاغْفِرْ لَـنَا‌ ۚ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! تُوْبُوْۤا திரும்புங்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் تَوْبَةً பாவமன்னிப்புக் கேட்டு نَّصُوْحًا ؕ உண்மையாக عَسٰى கூடும் رَبُّكُمْ உங்கள் இறைவன் اَنْ يُّكَفِّرَ போக்குவதற்கு عَنْكُمْ உங்களை விட்டும் سَيِّاٰتِكُمْ உங்கள் பாவங்களை وَيُدْخِلَـكُمْ இன்னும் உங்களை பிரவேசிக்க வைப்பான் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ ۙ நதிகள் يَوْمَ அந்நாளில் لَا يُخْزِى கேவலப்படுத்த மாட்டான் اللّٰهُ அல்லாஹ் النَّبِىَّ நபியையும் وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ‌ ۚ நம்பிக்கை கொண்டவர்களையும்/அவருடன் نُوْرُهُمْ அவர்களின் ஒளி يَسْعٰى விரைந்து வரும் بَيْنَ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன்னும் وَبِاَيْمَانِهِمْ அவர்களின் வலப்பக்கங்களிலும் يَقُوْلُوْنَ கூறுவார்கள் رَبَّنَاۤ எங்கள் இறைவா! اَ تْمِمْ முழுமையாக்கு! لَـنَا எங்களுக்கு نُوْرَنَا எங்கள் ஒளியை وَاغْفِرْ لَـنَا‌ ۚ இன்னும் எங்களை மன்னிப்பாயாக! اِنَّكَ நிச்சயமாக நீ عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்கள் மீதும் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
66:8. யா அய்யுஹல் லதீன ஆமனூ தூBபூ இலல் லாஹி தவ்Bபதன் னஸூஹன் 'அஸா ரBப்Bபுகும் அ(ன்)ய்-யுகFப்Fபிர 'அன்கும் ஸய்யி ஆதிகும் வ யுத்கிலகும் ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு யவ்ம லா யுக்Zஜில் லாஹுன் னBபிய்ய வல்லதீன ஆமனூ ம'அஹூ னூருஹும் யஸ்'ஆ Bபய்ன அய்தீஹிம் வ Bபி அய்மானிஹிம் யகூலூன ரBப்Bபனா அத்மிம் லனா னூரனா வக்Fபிர் லன இன்னக 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
66:8. ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.
66:9
66:9 يٰۤاَيُّهَا النَّبِىُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْ‌ؕ وَمَاْوٰٮهُمْ جَهَنَّمُ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏
يٰۤاَيُّهَا النَّبِىُّ நபியே! جَاهِدِ ஜிஹாது செய்வீராக الْكُفَّارَ நிராகரிப்பாளர்களிடமும் وَالْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களிடமும் وَاغْلُظْ இன்னும் கடுமை காட்டுவீராக عَلَيْهِمْ‌ؕ அவர்களிடம் وَمَاْوٰٮهُمْ அவர்களின் தங்குமிடம் جَهَنَّمُ‌ؕ நரகம்தான் وَبِئْسَ மிகக் கெட்டதாகும் الْمَصِيْرُ‏ மீளுமிடங்களில்
66:9. யா அய்யுஹன் னBபிய்யு ஜாஹிதில் குFப்Fபார வல்முனா-Fபிகீன வக்லுள் 'அலய்ஹிம்; வ ம'வாஹும் ஜஹன்னமு வ Bபி'ஸல் மஸீர்
66:9. நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் போரிட்டு, அவர்களிடம் கண்டிப்புடன் இருப்பீராக! அன்றியும் அவர்கள் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அது மிகவும் கெட்ட சேருமிடம் ஆகும்.
66:10
66:10 ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّ امْرَاَتَ لُوْطٍ‌ ؕ كَانَـتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَـيْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَيْــٴًــا وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِيْنَ‏
ضَرَبَ விவரிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் مَثَلًا ஓர் உதாரணமாக لِّـلَّذِيْنَ كَفَرُوا நிராகரித்தவர்களுக்கு امْرَاَتَ மனைவியையும் نُوْحٍ நூஹூடைய وَّ امْرَاَتَ மனைவியையும் لُوْطٍ‌ ؕ லூத்துடைய كَانَـتَا இருவரும் இருந்தனர் تَحْتَ கீழ் عَبْدَيْنِ இரு அடியார்களுக்கு مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் صَالِحَـيْنِ நல்ல(வர்கள்) فَخَانَتٰهُمَا அவ்விருவரும் அவ்விருவருக்கும் மோசடி செய்தனர் فَلَمْ يُغْنِيَا ஆகவே, அவ்விருவரும் தடுக்கவில்லை عَنْهُمَا அவ்விருவரைவிட்டும் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் شَيْــٴًــا எதையும் وَّقِيْلَ கூறப்பட்டது ادْخُلَا நீங்கள் இருவரும் நுழையுங்கள் النَّارَ நரகத்தில் مَعَ الدّٰخِلِيْنَ‏ நுழைபவர்களுடன்
66:10. ளரBபல் லாஹு மதலல் லில்லதீன கFபரும் ர அத னூஹி(ன்)வ் வம்ர அத லூத், கானதா தஹ்த 'அBப்தய்னி மின் 'இBபாதினா ஸாலிஹய்னி Fபகானதாஹுமா Fபலம் யுக்னியா 'அன்ஹுமா மினல் லாஹி ஷய் அ(ன்)வ்-வ கீலத் குலன் னார ம'அத் தாகிலீன்
66:10. நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
66:11
66:11 وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ اٰمَنُوْا امْرَاَتَ فِرْعَوْنَ‌ۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏
وَضَرَبَ விவரிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் مَثَلًا உதாரணமாக لِّـلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களுக்கு امْرَاَتَ மனைவியை فِرْعَوْنَ‌ۘ ஃபிர்அவ்னின் اِذْ قَالَتْ அவள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! رَبِّ என் இறைவா ابْنِ அமைத்துத் தா! لِىْ எனக்கு عِنْدَكَ உன்னிடம் بَيْتًا ஓர் இல்லத்தை فِى الْجَـنَّةِ சொர்க்கத்தில் وَنَجِّنِىْ இன்னும் என்னை பாதுகாத்துக் கொள் مِنْ فِرْعَوْنَ ஃபிர்அவ்னை விட்டும் وَعَمَلِهٖ இன்னும் அவனது செயல்களை وَنَجِّنِىْ இன்னும் என்னை பாதுகாத்துக் கொள் مِنَ الْقَوْمِ மக்களை விட்டும் الظّٰلِمِيْنَۙ‏ அநியாயக்கார(ர்கள்)
66:11. வ ளரBபல் லாஹு மதலல் லில் லீதீன ஆமனும்ர அத Fபிர்'அவ்ன்; இத் காலத் ரBப் BபிBப்னி லீ 'இன்தக Bபய்தன் Fபில் ஜன்னதி வ னஜ்ஜினீ மின் Fபிர்'அவ்ன வ 'அமலிஹீ வ னஜ்ஜினீ மினல் கவ்மிள் ளாலிமீன்
66:11. மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
66:12
66:12 وَمَرْيَمَ ابْنَتَ عِمْرٰنَ الَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمٰتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقٰنِتِيْنَ
وَمَرْيَمَ இன்னும் மர்யமை ابْنَتَ மகள் عِمْرٰنَ இம்ரானின் الَّتِىْۤ எவள் اَحْصَنَتْ பேணிக்கொண்டாள் فَرْجَهَا தனது மறைவிடத்தை فَنَفَخْنَا ஆகவே நாம் ஊதினோம் فِيْهِ அதில் مِنْ رُّوْحِنَا நமது உயிரிலிருந்து وَصَدَّقَتْ இன்னும் உண்மைப்படுத்தினாள் بِكَلِمٰتِ வாக்கியங்களையும் رَبِّهَا தனது இறைவனின் وَكُتُبِهٖ அவனது வேதங்களையும் وَكَانَتْ இன்னும் இருந்தாள் مِنَ الْقٰنِتِيْنَ‏ மிகவும் பணிந்தவர்களில்
66:12. வ மர்யமBப் னத 'இம்ரானல் லதீ அஹ்ஸனத் Fபர்ஜஹா FபனFபக்னா Fபீஹீ மிர் ரூஹினா வ ஸத்தகத் Bபி கலிமாதி ரBப்Bபிஹா வ குதுBபிஹீ வகானத் மினல் கானிதீன்
66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.