71. ஸூரத்து நூஹ்
மக்கீ, வசனங்கள்: 28

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
71:1
71:1 اِنَّاۤ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِيَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنَا அனுப்பினோம் نُوْحًا நூஹை اِلٰى قَوْمِهٖۤ அவருடைய மக்களின் பக்கம் اَنْ اَنْذِرْ ஏனெனில், நீர் எச்சரிப்பீராக! قَوْمَكَ உமது மக்களை مِنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِيَهُمْ அவர்களுக்கு வருவதற்கு عَذَابٌ தண்டனை اَلِيْمٌ‏ வலி தரக்கூடிய
71:1. இன்னா அர்ஸல்னா னூஹன் இலா கவ்மிஹீ அன் அன்திர் கவ்மக மின் கBப்லி அ(ன்)ய் யா'தியஹும் 'அதாBபுன் அலீம்
71:1. நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்: “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம்.
71:2
71:2 قَالَ يٰقَوْمِ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ‏
قَالَ அவர் கூறினார் يٰقَوْمِ என் மக்களே! اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு نَذِيْرٌ எச்சரிப்பாளர் مُّبِيْنٌۙ‏ தெளிவான
71:2. கால யா கவ்மி இன்னீ லகும் னதீரும் முBபீன்
71:2. “என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்று கூறினார்.
71:3
71:3 اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ وَاَطِيْعُوْنِۙ‏
اَنِ اعْبُدُوا அதாவது, நீங்கள் வணங்குங்கள்! اللّٰهَ அல்லாஹ்வை وَاتَّقُوْهُ இன்னும் அவனை அஞ்சுங்கள் وَاَطِيْعُوْنِۙ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
71:3. அனிஃ-Bபுதுல் லாஹ வத்த கூஹு வ அதீ'ஊன்
71:3. “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.
71:4
71:4 يَغْفِرْ لَـكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُؤَخِّرْكُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌ؕ اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَآءَ لَا يُؤَخَّرُ‌‌ۘ لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
يَغْفِرْ அவன் மன்னிப்பான் لَـكُمْ உங்களுக்கு مِّنْ ذُنُوْبِكُمْ உங்கள் பாவங்களை وَيُؤَخِّرْكُمْ இன்னும் அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான் اِلٰٓى اَجَلٍ தவணை வரை مُّسَمًّى‌ؕ குறிப்பிட்ட اِنَّ நிச்சயமாக اَجَلَ தவணை اللّٰهِ அல்லாஹ்வின் اِذَا جَآءَ வந்துவிட்டால் لَا يُؤَخَّرُ‌ۘ அது பிற்படுத்தப்படாது لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ நீங்கள் அறிபவர்களாக இருக்க வேண்டுமே!
71:4. யக்Fபிர் லகும் மின் துனூBபிகும் வ யு'அக்கிர்கும் இலா அஜலிம் முஸம்மா; இன்னா அஜலல் லாஹி இதா ஜா'அ லா யு'அக்கர்; லவ் குன்தும் தஃலமூன்
71:4. “(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).
71:5
71:5 قَالَ رَبِّ اِنِّىْ دَعَوْتُ قَوْمِىْ لَيْلًا وَّنَهَارًا ۙ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் دَعَوْتُ அழைத்தேன் قَوْمِىْ எனது மக்களை لَيْلًا இரவிலும் وَّنَهَارًا ۙ‏ பகலிலும்
71:5. கால ரBப்Bபி இன்னீ த'அவ்து கவ்மீ லய்ல(ன்)வ் வ னஹரா
71:5. பின்னர் அவர்: “என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.
71:6
71:6 فَلَمْ يَزِدْهُمْ دُعَآءِىْۤ اِلَّا فِرَارًا‏
فَلَمْ يَزِدْ அதிகப்படுத்தவில்லை هُمْ அவர்களுக்கு دُعَآءِىْۤ எனது அழைப்பு اِلَّا தவிர فِرَارًا‏ விரண்டோடுவதை
71:6. Fபலம் யZஜித் ஹும் து'ஆ 'ஈ இல்லா Fபிராரா
71:6. “ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.
71:7
71:7 وَاِنِّىْ كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوْۤا اَصَابِعَهُمْ فِىْۤ اٰذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَاَصَرُّوْا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا‌ ۚ‏
وَاِنِّىْ நிச்சயமாக நான் كُلَّمَا دَعَوْتُهُمْ அவர்களை அழைத்த போதெல்லாம் لِتَغْفِرَ நீ மன்னிப்பதற்காக لَهُمْ அவர்களை جَعَلُوْۤا ஆக்கிக் கொண்டனர் اَصَابِعَهُمْ தங்கள் விரல்களை فِىْۤ اٰذَانِهِمْ தங்கள் காதுகளில் وَاسْتَغْشَوْا இன்னும் மூடிக்கொண்டனர் ثِيَابَهُمْ தங்கள் ஆடைகளால் وَاَصَرُّوْا இன்னும் பிடிவாதம் பிடித்தனர் وَاسْتَكْبَرُوا இன்னும் பெருமையடித்தனர் اسْتِكْبَارًا‌ ۚ‏ பெருமையடித்தல்
71:7. வ இன்னீ குல்லமா த'அவ்துஹும் லிதக்Fபிர லஹும் ஜ'அலூ அஸாBபி'அஹும் Fபீ ஆதானிஹிம் வஸ்தக்ஷவ் தியாBபஹும் வ அஸார்ரூ வஸ்தக்Bபருஸ் திக்Bபாரா
71:7. “அன்றியும்: நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர்; மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.
71:8
71:8 ثُمَّ اِنِّىْ دَعَوْتُهُمْ جِهَارًا ۙ‏
ثُمَّ பிறகு اِنِّىْ நிச்சயமாக நான் دَعَوْتُهُمْ அவர்களை அழைத்தேன் جِهَارًا ۙ‏ உரக்க
71:8. தும்ம இன்னீ த'அவ் துஹும் ஜிஹாரா
71:8. “பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.
71:9
71:9 ثُمَّ اِنِّىْۤ اَعْلَـنْتُ لَهُمْ وَاَسْرَرْتُ لَهُمْ اِسْرَارًا ۙ‏
ثُمَّ பிறகு اِنِّىْۤ நிச்சயமாக நான் اَعْلَـنْتُ வெளிப்படையாகப் பேசினேன் لَهُمْ அவர்களிடம் وَاَسْرَرْتُ இன்னும் இரகசியமாகப் பேசினேன் لَهُمْ அவர்களிடம் اِسْرَارًا ۙ‏ தனியாக, இரகசியமாக பேசுதல்
71:9. தும்மா இன்னீ அஃலன்து லஹும் வ அஸ்ரர்து லஹும் இஸ்ராரா
71:9. “அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.
71:10
71:10 فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْؕ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ‏
فَقُلْتُ நான் கூறினேன் اسْتَغْفِرُوْا நீங்கள் பாவமன்னிப்புக் கேளுங்கள்! رَبَّكُمْؕ உங்கள் இறைவனிடம் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் غَفَّارًا ۙ‏ மகா மன்னிப்பாளனாக
71:10. Fபகுல்துஸ் தக்Fபிரூ ரBப்Bபகும் இன்னஹூ கான கFப்Fபாரா
71:10. மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன்.
71:11
71:11 يُّرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا ۙ‏
يُّرْسِلِ அவன் அனுப்புவான் السَّمَآءَ மழையை عَلَيْكُمْ உங்களுக்கு مِّدْرَارًا ۙ‏ தாரை தாரையாக
71:11. யுர்ஸிலிஸ் ஸமா'அ 'அலய்கும் மித்ராரா
71:11. “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.
71:12
71:12 وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّـكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّـكُمْ اَنْهٰرًا ؕ‏
وَّيُمْدِدْكُمْ இன்னும் உங்களுக்கு உதவுவான் بِاَمْوَالٍ செல்வங்களாலும் وَّبَنِيْنَ ஆண் பிள்ளைகளாலும் وَيَجْعَلْ இன்னும் ஏற்படுத்துவான் لَّـكُمْ உங்களுக்கு جَنّٰتٍ தோட்டங்களை وَّيَجْعَلْ இன்னும் ஏற்படுத்துவான் لَّـكُمْ உங்களுக்கு اَنْهٰرًا ؕ‏ நதிகளை
71:12. வ யும்தித்கும் Bபி அம் வாலி(ன்)வ் வ Bபனீன வ யஜ்'அல் லகும் ஜன்னாதி(ன்)வ் வ யஜ்'அல் லகும் அன்ஹாரா
71:12. “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.
71:13
71:13 مَا لَـكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًا‌ ۚ‏
مَا لَـكُمْ உங்களுக்கு என்ன? لَا تَرْجُوْنَ நீங்கள் பயப்படுவதில்லை لِلّٰهِ அல்லாஹ்வின் وَقَارًا‌ ۚ‏ கண்ணியத்தை
71:13. மா லகும் லா தர்ஜூன லில்லாஹி வகாரா
71:13. “உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும், மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.
71:14
71:14 وَقَدْ خَلَقَكُمْ اَطْوَارًا‏
وَقَدْ திட்டமாக خَلَقَكُمْ அவன் உங்களை படைத்தான் اَطْوَارًا‏ பல நிலைகளாக
71:14. வ கத் கலககும் அத் வாரா
71:14. “நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.
71:15
71:15 اَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللّٰهُ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ۙ‏
اَلَمْ تَرَوْا நீங்கள் பார்க்கவில்லையா? كَيْفَ எப்படி خَلَقَ படைத்தான் اللّٰهُ அல்லாஹ் سَبْعَ ஏழு سَمٰوٰتٍ வானங்களை طِبَاقًا ۙ‏ அடுக்கடுக்காக
71:15. அலம் தரவ் கய்Fப கலகல் லாஹு ஸBப்'அ ஸமாவாதின் திBபாகா
71:15. “ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா,
71:16
71:16 وَّجَعَلَ الْقَمَرَ فِيْهِنَّ نُوْرًا ۙ وَّجَعَلَ الشَّمْسَ سِرَاجًا‏
وَّجَعَلَ இன்னும் அவன் ஆக்கினான் الْقَمَرَ சந்திரனை فِيْهِنَّ அவற்றில் نُوْرًا ۙ ஒளியாக وَّجَعَلَ இன்னும் ஆக்கினான் الشَّمْسَ சூரியனை سِرَاجًا‏ விளக்காக
71:16. வ ஜ'அலல் கமர Fபீஹின்ன னூர(ன்)வ் வ ஜ'அலஷ் ஷம்ஸ ஸிராஜா
71:16. “இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.
71:17
71:17 وَاللّٰهُ اَنْۢبَتَكُمْ مِّنَ الْاَرْضِ نَبَاتًا ۙ‏
وَاللّٰهُ அல்லாஹ்தான் اَنْۢبَتَكُمْ உங்களை முளைக்க வைத்தான் مِّنَ الْاَرْضِ பூமியில் இருந்து نَبَاتًا ۙ‏ முளைக்க வைத்தல்
71:17. வல்லாஹு அம்Bபதகும் மினல் அர்ளி னBபாதா
71:17. “அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.
71:18
71:18 ثُمَّ يُعِيْدُكُمْ فِيْهَا وَيُخْرِجُكُمْ اِخْرَاجًا‏
ثُمَّ பிறகு يُعِيْدُكُمْ அவன் உங்களை மீட்பான் فِيْهَا அதில்தான் وَيُخْرِجُكُمْ இன்னும் அவன் உங்களை வெளியேற்றுவான் اِخْرَاجًا‏ வெளியேற்றுதல்
71:18. தும்ம யு'ஈதுகும் Fபீஹா வ யுக்ரிஜுகும் இக்ராஜா
71:18. “பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.
71:19
71:19 وَاللّٰهُ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ بِسَاطًا ۙ‏
وَاللّٰهُ அல்லாஹ் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்கு الْاَرْضَ பூமியை بِسَاطًا ۙ‏ விரிப்பாக
71:19. வல்லாஹு ஜ'அல லகுமுல் அர்ள Bபிஸாதா
71:19. “அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
71:20
71:20 لِّـتَسْلُكُوْا مِنْهَا سُبُلًا فِجَاجًا
لِّـتَسْلُكُوْا நீங்கள் செல்வதற்காக مِنْهَا அதில் سُبُلًا பல பாதைகளில் فِجَاجًا‏ விசாலமான
71:20. லிதஸ்லுகூ மின்ஹா ஸுBபுலன் Fபிஜாஜா
71:20. “அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்” (என்றும் போதித்தார்).  
71:21
71:21 قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِىْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ يَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا‌ ۚ‏
قَالَ கூறினார் نُوْحٌ நூஹ் رَّبِّ என் இறைவா! اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் عَصَوْنِىْ எனக்கு மாறுசெய்தனர் وَاتَّبَعُوْا இன்னும் பின்பற்றினர் مَنْ எவன் لَّمْ அதிகப்படுத்தவில்லையோ يَزِدْهُ அவனுக்கு مَالُهٗ அவனுடைய செல்வமும் وَوَلَدُهٗۤ இன்னும் அவனுடைய பிள்ளையும் اِلَّا خَسَارًا‌ ۚ‏ நஷ்டத்தைத் தவிர
71:21. கால னூஹுர் ரBப்Bபி இன்னஹும் 'அஸவ்னீ வத்தBப'ஊ மல் லம் யZஜித் ஹு மாலுஹூ வ வலதுஹூ இல்லா கஸாரா
71:21. நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்; அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.
71:22
71:22 وَمَكَرُوْا مَكْرًا كُبَّارًا‌ ۚ‏
وَمَكَرُوْا இன்னும் சூழ்ச்சி செய்தார்கள் مَكْرًا சூழ்ச்சி كُبَّارًا‌ ۚ‏ மிகப் பெரிய
71:22. வ மகரூ மக்ரன் குBப்Bபாரா
71:22. “மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்.”
71:23
71:23 وَ قَالُوْا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًا  ۙ وَّ لَا يَغُوْثَ وَيَعُوْقَ وَنَسْرًا‌ ۚ‏
وَ قَالُوْا இன்னும் கூறினார்கள் لَا تَذَرُنَّ நீங்கள் விட்டுவிடாதீர்கள் اٰلِهَتَكُمْ உங்கள் தெய்வங்களை وَلَا تَذَرُنَّ இன்னும் விட்டுவிடாதீர்கள் وَدًّا وَّلَا سُوَاعًا  ۙ வத்து/இன்னும் சுவாஃ وَّ لَا يَغُوْثَ இன்னும் யகூஸ் وَيَعُوْقَ இன்னும் யவூக் وَنَسْرًا‌ ۚ‏ இன்னும் நஸ்ர்
71:23. வ காலூ லா ததருன்ன ஆலிஹதகும் வலா ததருன்ன வத்த(ன்)வ் வலா ஸுவா'அ(ன்)வ் வலா யகூத வ ய'ஊக வ னஸ்ரா
71:23. மேலும் அவர்கள்: “உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் சொல்கின்றனர்.
71:24
71:24 وَقَدْ اَضَلُّوْا كَثِيْرًا‌ ‌ ۚ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا ضَلٰلًا‏
وَقَدْ திட்டமாக اَضَلُّوْا அவர்கள் வழி கெடுத்தனர் كَثِيْرًا‌  ۚ பலரை وَلَا تَزِدِ நீ அதிகப்படுத்தாதே! الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு اِلَّا ضَلٰلًا‏ வழிகேட்டைத் தவிர
71:24. வ கத் அளல்லூ கதீ ர(ன்)வ் வலா தZஜிதிள் ளாலிமீன இல்லா ளலாலா
71:24. “நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர்; ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே.”
71:25
71:25 مِّمَّا خَطِٓيْئٰتِهِمْ اُغْرِقُوْا فَاُدْخِلُوْا نَارًا  ۙ فَلَمْ يَجِدُوْا لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَنْصَارًا‏
مِّمَّا خَطِٓيْئٰتِهِمْ அவர்களுடைய பாவங்களால் اُغْرِقُوْا அவர்கள் மூழ்கடிக்கப்பட்டார்கள் فَاُدْخِلُوْا பிறகு, நுழைக்கப்பட்டார்கள் نَارًا  ۙ நரகத்தில் فَلَمْ يَجِدُوْا அவர்கள் காணவில்லை لَهُمْ தங்களுக்கு مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اَنْصَارًا‏ உதவியாளர்களை
71:25. மிம்மா கதீ' ஆதிஹிம் உக்ரிகூ Fப உத்கிலூ னாரன் Fபலம் யஜிதூ லஹும் மின் தூனில் லாஹி அன்ஸாரா
71:25. ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.
71:26
71:26 وَ قَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى الْاَرْضِ مِنَ الْكٰفِرِيْنَ دَيَّارًا‏
وَ قَالَ கூறினார் نُوْحٌ நூஹ் رَّبِّ என் இறைவா! لَا تَذَرْ நீ விட்டு விடாதே! عَلَى الْاَرْضِ பூமியில் مِنَ الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களில் دَيَّارًا‏ வசிக்கின்ற எவரையும்
71:26. வ கால னூஹுர் ரBப்Bபி லா ததர் 'அலல் அர்ளி மினல் காFபிரீன தய்யாரா
71:26. அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
71:27
71:27 اِنَّكَ اِنْ تَذَرْهُمْ يُضِلُّوْا عِبَادَكَ وَلَا يَلِدُوْۤا اِلَّا فَاجِرًا كَفَّارًا‏
اِنَّكَ நிச்சயமாக நீ اِنْ تَذَرْهُمْ அவர்களை விட்டு விட்டால் يُضِلُّوْا வழிகெடுத்து விடுவார்கள் عِبَادَكَ உனது அடியார்களை وَلَا يَلِدُوْۤا இன்னும் பெற்றெடுக்க மாட்டார்கள் اِلَّا தவிர فَاجِرًا பாவியை كَفَّارًا‏ மிகப் பெரிய நிராகரிப்பாளனை
71:27. இன்னக இன் ததர்ஹும் யுளில் லூ 'இBபாதக வலா யலிதூ இல்லா Fபாஜிரன் கFப்Fபாரா
71:27. “நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
71:28
71:28 رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا تَبَارًا
رَبِّ என் இறைவா! اغْفِرْلِىْ என்னை(யும்) மன்னிப்பாயாக! وَلِـوَالِدَىَّ என் பெற்றோரையும் وَلِمَنْ دَخَلَ நுழைந்து விட்டவரையும் بَيْتِىَ என் வீட்டில் مُؤْمِنًا நம்பிக்கையாளராக وَّلِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்ட ஆண்களையும் وَالْمُؤْمِنٰتِؕ நம்பிக்கை கொண்ட பெண்களையும் وَلَا تَزِدِ அதிகப்படுத்தாதே! الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு اِلَّا تَبَارًا‏ அழிவைத் தவிர
71:28. ரBப்Bபிக் Fபிர் லீ வ லிவா லிதய்ய வ லிமன் தகல Bபய்திய மு'மின(ன்)வ் வ லில் மு'மினீன வல் மு'மினாதி வலா தZஜிதிள் ளாலிமீன இல்லா தBபாரா
71:28. “என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).