80. ஸூரத்து அபஸ (கடு கடுத்தார்)
மக்கீ, வசனங்கள்: 42

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
80:1
80:1 عَبَسَ وَتَوَلّٰٓىۙ‏
عَبَسَ கடுகடுத்தார் وَتَوَلّٰٓىۙ‏ இன்னும் புறக்கணித்தார்
80:1. 'அBபஸ வ தவல்லா.
80:1. அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2
80:2 اَنْ جَآءَهُ الْاَعْمٰىؕ‏
اَنْ جَآءَهُ அவரிடம் வந்ததற்காக الْاَعْمٰىؕ‏ பார்வையற்றவர்
80:2. அன் ஜா-அஹுல் அஃ-மா
80:2. அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3
80:3 وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏
وَمَا يُدْرِيْكَ இன்னும் நீர் அறிவீரா? لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏ அவர் பரிசுத்தமடையலாம்
80:3. வமா யுத்ரீக ல'அல்லஹு யZஜ் Zஜக்கா.
80:3. (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4
80:4 اَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰىؕ‏
اَوْ அல்லது يَذَّكَّرُ அவர் அறிவுரை பெறுவார் فَتَنْفَعَهُ அவருக்கு பலனளிக்கலாம் الذِّكْرٰىؕ‏ அறிவுரை
80:4. அவ் யத்தக்கரு Fபதன்Fப 'அஹுத் திக்ரா.
80:4. அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
80:5
80:5 اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ‏
اَمَّا مَنِ ஆக, எவன் اسْتَغْنٰىۙ‏ தேவையற்றவனாகக் கருதினானோ
80:5. அம்மா மனிஸ் தக்னா
80:5. (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
80:6
80:6 فَاَنْتَ لَهٗ تَصَدّٰىؕ‏
فَاَنْتَ நீர் لَهٗ அவனை تَصَدّٰىؕ‏ முன்னோக்குகிறீர்
80:6. Fப-அன்த லஹு தஸத்தா
80:6. நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7
80:7 وَمَا عَلَيْكَ اَلَّا يَزَّكّٰٓىؕ‏
وَمَا இன்னும் இல்லை عَلَيْكَ உம்மீது اَلَّا يَزَّكّٰٓىؕ‏ அவன் பரிசுத்தமடையாதது
80:7. வ ம 'அலய்க அல்லா யZஜ் Zஜக்க.
80:7. ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8
80:8 وَاَمَّا مَنْ جَآءَكَ يَسْعٰىۙ‏
وَاَمَّا مَنْ ஆக, எவர் جَآءَ வந்தாரோ كَ உம்மிடம் يَسْعٰىۙ‏ விரைந்தவராக
80:8. வ அம்மா மன் ஜா-அக யஸ்'ஆ
80:8. ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9
80:9 وَهُوَ يَخْشٰىۙ‏
وَهُوَ அவரோ يَخْشٰىۙ‏ பயப்படுகிறவராக
80:9. வஹுவ யக்-ஷா,
80:9. அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10
80:10 فَاَنْتَ عَنْهُ تَلَهّٰى‌ۚ‏
فَاَنْتَ நீர் عَنْهُ அவரை تَلَهّٰى‌ۚ‏ அலட்சியப்படுத்துகிறீர்
80:10. Fப-அன்த 'அன்ஹு தலஹ் ஹா.
80:10. அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.
80:11
80:11 كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۚ‏
كَلَّاۤ அவ்வாறல்ல اِنَّهَا நிச்சயமாக இது تَذْكِرَةٌ ۚ‏ ஓர் அறிவுரை
80:11. கல்லா இன்னஹ தத்கிரஹ்
80:11. அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.
80:12
80:12 فَمَنْ شَآءَ ذَكَرَهٗ‌ۘ‏
فَمَنْ ஆகவே, யார் شَآءَ நாடுகிறாரோ ذَكَرَهٗ‌ۘ‏ இதை நினைவில் வைப்பார்
80:12. Fபமன் ஷா அ தகரஹ்
80:12. எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார்.
80:13
80:13 فِىْ صُحُفٍ مُّكَرَّمَةٍۙ‏
فِىْ صُحُفٍ ஏடுகளில் مُّكَرَّمَةٍۙ‏ கண்ணி யப்படுத்தப்பட்ட
80:13. Fபி ஸுஹுFபிம் முகர் ரமா,
80:13. (அது) சங்கையாக்கப்பட்ட ஏடுகளில் இருக்கிறது.
80:14
80:14 مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍ ۭۙ‏
مَّرْفُوْعَةٍ உயர்வாக்கப்பட்ட مُّطَهَّرَةٍ ۭۙ‏ தூய்மையாக்கப்பட்ட
80:14. மர்Fபூ'அதிம் முதஹ் ஹரா,
80:14. உயர்வாக்கப்பட்டது; பரிசுத்தமாக்கப்பட்டது.
80:15
80:15 بِاَيْدِىْ سَفَرَةٍۙ‏
بِاَيْدِىْ கைகளில் سَفَرَةٍۙ‏ எழுதுபவர்களின்
80:15. Bபி'அய்தீ ஸFபரா
80:15. (வானவர்களான) எழுதுபவர்களின் கைகளால்-
80:16
80:16 كِرَامٍۢ بَرَرَةٍؕ‏
كِرَامٍۢ கண்ணிய மானவர்களான بَرَرَةٍؕ‏ நல்லவர்களான
80:16. கிராமிம் Bபரரஹ்.
80:16. (லவ்ஹுல் மஹ்ஃபூளிலிருந்து எழுதிய அவ்வானவர்கள்) சங்கை மிக்கவர்கள்; நல்லோர்கள்.
80:17
80:17 قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗؕ‏
قُتِلَ அழியட்டும் الْاِنْسَانُ மனிதன் مَاۤ اَكْفَرَهٗؕ‏ அவன் எவ்வளவு நன்றி கெட்டவன்
80:17. குதிலல்-இன்ஸானு மா அக்Fபரஹ்.
80:17. (நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்!
80:18
80:18 مِنْ اَىِّ شَىْءٍ خَلَقَهٗؕ‏
مِنْ اَىِّ شَىْءٍ எந்த பொருளிலிருந்து خَلَقَهٗؕ‏ அவனைப் படைத்தான்
80:18. மின் அய்யி ஷய்-இன் கலகஹ்
80:18. எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?)
80:19
80:19 مِنْ نُّطْفَةٍؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۙ‏
مِنْ نُّطْفَةٍؕ விந்திலிருந்து خَلَقَهٗ அவனைப் படைத்தான் فَقَدَّرَهٗ ۙ‏ அவனை அமைத்தான்
80:19. மின் னுத்Fபதின் கலகஹூ Fபகத்தரஹ்.
80:19. (ஒரு துளி) இந்திரியத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான்.
80:20
80:20 ثُمَّ السَّبِيْلَ يَسَّرَهٗۙ‏
ثُمَّ பிறகு السَّبِيْلَ பாதையை يَسَّرَهٗۙ‏ அதை எளிதாக்கினான்
80:20. தும்மஸ் ஸBபீல யஸ்-ஸரஹ்
80:20. பின் அவனுக்காக வழியை எளிதாக்கினான்.
80:21
80:21 ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ‏
ثُمَّ اَمَاتَهٗ பிறகு அவனை மரணிக்கச் செய்தான் فَاَقْبَرَهٗۙ‏ அவனைப் புதைக்குழியில் தள்ளினான்
80:21. தும்ம அமதஹு Fப-அக்Bபரஹ்
80:21. பின் அவனை மரணிக்கச் செய்து, அவனை கப்ரில்” ஆக்குகிறான்.
80:22
80:22 ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗؕ‏
ثُمَّ பிறகு اِذَا شَآءَ அவன் நாடியபோது اَنْشَرَهٗؕ‏ அவனை உயிர்ப்பிப்பான்
80:22. தும்ம இத ஷா-அ அன்ஷரஹ்
80:22. பின்னர், அவன் விரும்பும்போது அவனை (உயிர்ப்பித்து) எழுப்புவான்.
80:23
80:23 كَلَّا لَمَّايَقْضِ مَاۤ اَمَرَهٗؕ‏
كَلَّا அவ்வாறல்ல لَـمَّا يَقْضِ அவன் நிறைவேற்றவில்லை مَاۤ اَمَرَهٗؕ‏ எதை/கட்டளையிட்டான்/அவனுக்கு
80:23. கல்ல லம்ம யக்ளி மா அமரஹ்.
80:23. (இவ்வாறிருந்தும் அல்லாஹ் மனிதனுக்கு) எதை ஏவினானோ அதை அவன் நிறைவேற்றுவதில்லை.
80:24
80:24 فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤۙ‏
فَلْيَنْظُرِ ஆகவே பார்க்கட்டும் الْاِنْسَانُ மனிதன் اِلٰى பக்கம் طَعَامِهٖۤۙ‏ தன் உணவின்
80:24. Fபல்யன்ளுரில் இன்ஸனு இலா த-அமிஹ்
80:24. எனவே, மனிதன் தன் உணவின் பக்கமே (அது எவ்வாறு பெறப்படுகிறது) என்பதை நோட்டமிட்டுப் பார்க்கட்டும்.
80:25
80:25 اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۙ‏
اَنَّا நிச்சயமாக நான் صَبَبْنَا பொழிந்தோம் الْمَآءَ நீரை صَبًّا ۙ‏ பொழிதல்
80:25. அன்ன ஸBபBப் னல்மா-அ ஸBப்Bபா.
80:25. நிச்சயமாக நாமே மழையை நன்கு பொழியச் செய்கிறோம்.
80:26
80:26 ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۙ‏
ثُمَّ பிறகு شَقَقْنَا பிளந்தோம் الْاَرْضَ பூமியை شَقًّا ۙ‏ பிளத்தல்
80:26. தும்ம ஷ கக்னல்-அர்ள ஷக்கா.
80:26. பின், பூமியைப் பிளப்பதாகப் பிளந்து-
80:27
80:27 فَاَنْۢبَتْنَا فِيْهَا حَبًّا ۙ‏
فَاَنْۢبَتْنَا இன்னும் முளைக்க வைத்தோம் فِيْهَا அதில் حَبًّا ۙ‏ தானியம்
80:27. Fப அம்Bபத்ன Fபீஹா ஹBப்Bபா
80:27. பின் அதிலிருந்து வித்தை முளைப்பிக்கிறோம்.
80:28
80:28 وَّ عِنَبًا وَّقَضْبًا ۙ‏
وَّ عِنَبًا இன்னும் திராட்சை وَّقَضْبًا ۙ‏ இன்னும் காய்கறி
80:28. வ 'இனBபவ்-வ கள்Bபா
80:28. திராட்சைகளையும், புற்பூண்டுகளையும்-
80:29
80:29 وَّزَيْتُوْنًا وَّنَخْلًا ؕ‏
وَّزَيْتُوْنًا இன்னும் ஸைத்தூன் وَّنَخْلًا ؕ‏ இன்னும் பேரிச்சை மரம்
80:29. வ Zஜய்தூனவ் வனக் ல'
80:29. ஒலிவ மரத்தையும், பேரீச்சையையும் -
80:30
80:30 وَحَدَآٮِٕقَ غُلْبًا ۙ‏
وَحَدَآٮِٕقَ இன்னும் தோட்டங்கள் غُلْبًا ۙ‏ அடர்ந்த
80:30. வ ஹதா-இக குல்Bபா
80:30. அடர்ந்த தோட்டங்களையும்,
80:31
80:31 وَّفَاكِهَةً وَّاَبًّا ۙ‏
وَّفَاكِهَةً இன்னும் கனி وَّاَبًّا ۙ‏ இன்னும் புற்பூண்டு
80:31. வ Fபகி ஹதவ்-வ அBப்Bபா.
80:31. பழங்களையும், தீவனங்களையும்-
80:32
80:32 مَّتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ‏
مَّتَاعًا பலன் தருவதற்காக لَّـكُمْ உங்களுக்கும் وَلِاَنْعَامِكُمْؕ‏ உங்கள் கால்நடைகளுக்கும்
80:32. மத'அல்-லகும் வ லி-அன்'அமிகும்.
80:32. (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக,
80:33
80:33 فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ‏
فَاِذَا جَآءَتِ ஆகவே, வந்தால் الصَّآخَّةُ‏ செவிடாக்கும் சப்தம்
80:33. Fபய்த ஜா-அதிஸ் ஸாகஹ்.
80:33. ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -
80:34
80:34 يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ‏
يَوْمَ நாளில் يَفِرُّ விரண்டோடுவான் الْمَرْءُ மனிதன் مِنْ விட்டும் اَخِيْهِۙ‏ தன் சகோதரன்
80:34. யவ்ம யFபிர்-ருல் மர்-உ மின் அகீஹ்
80:34. அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -
80:35
80:35 وَاُمِّهٖ وَاَبِيْهِۙ‏
وَاُمِّهٖ இன்னும் தன் தாய் وَاَبِيْهِۙ‏ இன்னும் தன் தந்தை
80:35. வ உம்மிஹீ வ அBபீஹ்
80:35. தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;
80:36
80:36 وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِؕ‏
وَصَاحِبَتِهٖ இன்னும் தன் மனைவி وَبَنِيْهِؕ‏ இன்னும் தான் பிள்ளைகள்
80:36. வ ஸாஹி Bபதிஹீ வ Bபனீஹ்.
80:36. தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-
80:37
80:37 لِكُلِّ امْرِیءٍ مِّنْهُمْ يَوْمَٮِٕذٍ شَاْنٌ يُّغْنِيْهِؕ‏
لِكُلِّ امْرِیءٍ ஒவ்வொரு மனிதனுக்கும் مِّنْهُمْ அவர்களில் يَوْمَٮِٕذٍ அந்நாளில் شَاْنٌ நிலைமை يُّغْنِيْهِؕ‏ அவனைத் திருப்பிவிடுகின்ற
80:37. லிகுல் லிம்ரி-இம்-மின்ஹும் யவ்மா-இதின் ஷா னுய்-யுக்னீஹ்
80:37. அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்.
80:38
80:38 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ ۙ‏
وُجُوْهٌ (சில) முகங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் مُّسْفِرَةٌ ۙ‏ ஒளிரக்கூடியதாக
80:38. வுஜூ ஹு(ன்)ய்-யவ்ம-இதிம்-முஸ்Fபிர;
80:38. அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக்கும்.
80:39
80:39 ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ‏
ضَاحِكَةٌ சிரித்தவையாக مُّسْتَبْشِرَةٌ ۚ‏ நற்செய்தி பெற்றவையாக
80:39. ளஹி கதும் முஸ்தBப் ஷிரஹ்
80:39. சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும்.
80:40
80:40 وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌ ۙ‏
وَوُجُوْهٌ இன்னும் (சில) முகங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் عَلَيْهَا அவற்றின் மீது غَبَرَةٌ ۙ‏ புழுதி
80:40. வ வுஜூஹுய் யவ்ம-இதின் 'அலய்ஹ கBபரா
80:40. ஆனால் அந்நாளில் - (வேறு) சில முகங்கள், அவற்றின் மீது புழுதி படிந்திருக்கும்.
80:41
80:41 تَرْهَقُهَا قَتَرَةٌ ؕ‏
تَرْهَقُهَا அவற்றை மூடிக்கொள்ளும் قَتَرَةٌ ؕ‏ கருமை
80:41. தர்ஹகுஹ கதரஹ்.
80:41. அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும்.
80:42
80:42 اُولٰٓٮِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ
اُولٰٓٮِٕكَ هُمُ இவர்கள்தான் الْكَفَرَةُ நிராகரிப்பாளர்கள் الْفَجَرَةُ‏ பெரும் பாவிகளான
80:42. உலா-இக ஹுமுல்-கFப ரதுல்-Fபஜரஹ்.
80:42. அவர்கள்தாம், நிராகரித்தவர்கள்; தீயவர்கள்.