95. ஸூரத்துத் தீன் (அத்தி)
மக்கீ, வசனங்கள்: 8

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
95:1
95:1 وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ‏
95:1. அத்தியின் மீதும், ஒலிவத்தின் (ஜைத்தூன்) மீதும் சத்தியமாக-
95:2
95:2 وَطُوْرِ سِيْنِيْنَۙ‏
95:2. “ஸினாய்” மலையின் மீதும் சத்தியமாக-
95:3
95:3 وَهٰذَا الْبَلَدِ الْاَمِيْنِۙ‏
95:3. மேலும் அபயமளிக்கும் இந்த (மக்கமா) நகரத்தின் மீதும் சத்தியமாக-
95:4
95:4 لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْۤ اَحْسَنِ تَقْوِيْمٍ‏
95:4. திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
95:5
95:5 ثُمَّ رَدَدْنٰهُ اَسْفَلَ سَافِلِيْنَۙ‏
95:5. பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
95:6
95:6 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍؕ‏
95:6. எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கைளைச் செய்தார்களோ அவர்களுக்கு என்றும் முடிவில்லாத (நற்)கூலியுண்டு.
95:7
95:7 فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّيْنِ‏
95:7. எனவே (இதற்குப்) பின்னர், நியாயத் தீர்ப்பு நாளைப்பற்றி உம்மிடம் எது பொய்யாக்க முடியும்?
95:8
95:8 اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ‏
95:8. அல்லாஹ் தீர்ப்புச் செய்வோரில் எல்லாம் மிக மேலாகத் தீர்ப்புச் செய்பவனில்லையா?