102. ஸூரத்துத் தகாஸுர்(பேராசை)
மக்கீ, வசனங்கள்: 8

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
102:1
102:1 اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏
اَلْهٰٮكُمُ உங்களை ஈடுபடுத்தியது التَّكَاثُرُۙ‏ அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல்
102:1. செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
102:1,2,1. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).
102:1. பிறரைவிடக் கூடுதலாக உலக வசதிகளைப் பெற வேண்டும் என்னும் எண்ணம் உங்களை மெய்மறதியில் ஆழ்த்தி வைத்திருக்கின்றது.
102:1. (செல்வத்தையும், மக்களையும்) ஒருவருக்கொருவர் அதிகமாகத் தேடிக் கொள்வது உங்களைப் பராக்காக்கிவிட்டது.
102:2
102:2 حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ‏
حَتّٰى زُرْتُمُ நீங்கள் சந்திக்கின்ற வரை الْمَقَابِرَؕ‏ புதை குழிகளை
102:2. நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை.
102:1,2,2. நீங்கள் புதைக்குழிகளைச் சந்திக்கும் வரை (பொருளை) அதிகப்படுத்திக் கொள்ளும் பேராசை (அல்லாஹ்வை விட்டும்) உங்களைப் பராக்காக்கி விட்டது (திருப்பிவிட்டது).
102:2. நீங்கள் மண்ணறைகளைச் சென்றடையும் வரையில் (இதே சிந்தனையிலேயே மூழ்கி இருக்கின்றீர்கள்).
102:2. மண்ணறைகளை நீங்கள் சந்திக்கும்வரை.
102:3
102:3 كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ‏
كَلَّا அவ்வாறல்ல سَوْفَ تَعْلَمُوْنَۙ‏ (விரைவில்) அறிவீர்கள்
102:3. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
102:3. நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவை என்ன என்பதை) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
102:3. அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்.
102:3. (உண்மை நிலை) அவ்வாறல்ல! (அதன் விளைவை) அடுத்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
102:4
102:4 ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ‏
ثُمَّ பிறகு كَلَّا அவ்வாறல்ல سَوْفَ تَعْلَمُوْنَؕ‏ (விரைவில்) அறிவீர்கள்
102:4. பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
102:4. பின்னர், நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அவற்றின் பலன்களையும்) நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.
102:4. இன்னும் (கேட்டுக் கொள்ளுங்கள்:) அவ்வாறன்று! விரைவில் உங்களுக்குப் புரிந்துவிடும்
102:4. பின்னர், அவ்வாறல்ல! (அதன் விளைவை) அடுத்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
102:5
102:5 كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ‏
كَلَّا அவ்வாறல்ல لَوْ تَعْلَمُوْنَ நீங்கள் அறிந்தால் عِلْمَ الْيَقِيْنِؕ‏ மிக உறுதியாக அறிவது
102:5. அவ்வாறல்ல - மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
102:5. நீங்கள் நினைப்பது போன்றல்ல. (அதன் பலனைச்) சந்தேகமற உறுதியாக நீங்கள் அறிவீர்களாயின்,
102:5. (இந்த நடத்தையின் இறுதி முடிவினை) உறுதியாக நீங்கள் அறிந்திருந்தால் (உங்கள் நடத்தை இப்படி இருந்திருக்காது).
102:5. (உண்மை நிலை) அவ்வாறால்ல! (எதன்பால் உங்கள் முடிவிருக்குமோ அதுபற்றி) நீங்கள் உறுதியான அறிவாக அறிவீர்களாயின் (நீங்கள் ஈடுபட்டிருக்கும் பயனற்ற செயல் உங்களைப் பராக்காக்கியிருக்காது)
102:6
102:6 لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ‏
لَتَرَوُنَّ நிச்சயமாகப் பார்ப்பீர்கள் الْجَحِيْمَۙ‏ ஜஹீம் நரகத்தை
102:6. நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
102:6. நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள்.
102:6. திண்ணமாக, நீங்கள் நரகத்தைப் பார்க்கத்தான் போகின்றீர்கள்.
102:6. (அல்லாஹ்வின் மீது) சத்தியமாக (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் நரகத்தை (வெகுதூரத்திலிருந்து) பார்ப்பீர்கள்.
102:7
102:7 ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ‏
ثُمَّ பிறகு لَتَرَوُنَّهَا அதை நிச்சயமாகப் பார்ப்பீர்கள் عَيْنَ الْيَقِيْنِۙ‏ கண்கூடாக
102:7. பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
102:7. பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள்.
102:7. இன்னும் (கேட்டுக் கொள்ளுங்கள்) திண்ணமாக நீங்கள் அதனைக் கண்கூடாகப் பார்க்கத்தான் போகின்றீர்கள்
102:7. பின்னர், நீங்கள் அதை கண்ணுக்கெதிரில் (வெகு அருகில்) பார்ப்பீர்கள்.
102:8
102:8 ثُمَّ لَـتُسْــٴَــلُنَّ يَوْمَٮِٕذٍ عَنِ النَّعِيْمِ‏
ثُمَّ பிறகு لَـتُسْــٴَــلُنَّ நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள் يَوْمَٮِٕذٍ அந்நாளில் عَنِ النَّعِيْمِ‏ அருட்கொடையைப் பற்றி
102:8. பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
102:8. (உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
102:8. பிறகு அந்நாளில் இந்த அருட்கொடைகளைப் பற்றி கட்டாயம் நீங்கள் வினவப் படத்தான் போகின்றீர்கள்.
102:8. பின்னர், அந்நாளில் (உலகில் நீங்கள் அனுபவித்து வந்த அனைத்து) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.