105. ஸூரத்துல் ஃபீல் (யானை)
மக்கீ, வசனங்கள்: 5

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
105:1
105:1 اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِاَصْحٰبِ الْفِيْلِؕ‏
اَلَمْ تَرَ நீர் பார்க்கவில்லையா? كَيْفَ எப்படி فَعَلَ செய்தான் رَبُّكَ உம் இறைவன் بِاَصْحٰبِ الْفِيْلِؕ‏ யானைப் படைகளை
105:1. (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
105:1. (நபியே!) யானைப் படையினரை உமது இறைவன் எவ்வாறு (அழியச்) செய்தான் என்பதை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா?
105:1. யானைப் படையினருடன் உம் இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?
105:1. (நபியே! அப்ரஹாவின்) யானைக்காரர்களை உமதிரட்சகன் எவ்வாறு செய்தான் என்பதை நீர் தெரிந்திருக்கவில்லையா?
105:2
105:2 اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِىْ تَضْلِيْلٍۙ‏
اَلَمْ يَجْعَلْ அவன் ஆக்கவில்லையா كَيْدَ சூழ்ச்சியை هُمْ அவர்களுடைய فِىْ تَضْلِيْلٍۙ‏ வீணாக
105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?
105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிட வில்லையா?
105:2. அவர்களின் சதித்திட்டத்தை அவன் வீணடித்து விடவில்லையா?
105:2. அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிடவில்லையா?
105:3
105:3 وَّاَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا اَبَابِيْلَۙ‏
وَّاَرْسَلَ இன்னும் அனுப்பினான் عَلَيْهِمْ அவர்கள் மீது طَيْرًا பறவைகளை اَبَابِيْلَۙ‏ பல கூட்டங்களாக
105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.
105:3. அவர்கள் மீது பறவைகளை கூட்டங்கூட்டமாக அனுப்பிவைத்தான்.
105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டம் கூட்டமாக அவன் அனுப்பினான்.
105:3. மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக தொடர்ந்தவையாக அவன் அனுப்பி வைத்தான்.
105:4
105:4 تَرْمِيْهِمْ بِحِجَارَةٍ مِّنْ سِجِّيْلٍۙ‏
تَرْمِيْهِمْ அவர்களை எறிந்தன بِحِجَارَةٍ கல்லைக் கொண்டு مِّنْ سِجِّيْلٍۙ‏ சுடப்பட்ட களிமண்ணின்
105:4. சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.
105:4. (கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்கள் மீது எறிந்தன.
105:4. அவை அவர்களின் மீது சுடப்பட்ட களிமண் கற்களை எறிந்து கொண்டிருந்தன.
105:4. (கெட்டியான) சுடப்பட்ட சிறிய கற்களை அவர்கள்மீது அவை எறிந்தன.
105:5
105:5 فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّاْكُوْلٍ‏
فَجَعَلَهُمْ ஆகவே அவர்களை ஆக்கினான் كَعَصْفٍ வைக்கோலைப் போன்று مَّاْكُوْلٍ‏ திண்ணப்படும்
105:5. அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
105:5. அதனால், அவன் அவர்களை(ப் பறவைகளால்) கொத்தித் தின்னப்பட்ட கதிர்களைப்போல் ஆக்கி (அழித்து) விட்டான்.
105:5. பிறகு (கால்நடைகளால்) மென்று தின்னப்பட்ட வைக்கோல் போன்று அவர்களை ஆக்கிவிட்டான்.
105:5. பிறகு (கால்நடைகளால்) தின்னப்பட்ட வைக்கோல்களைப் போல் அவர்களை அவன் ஆக்கி அழித்துவிட்டான்.