111. ஸூரத்துல் லஹப்(ஜுவாலை)
மக்கீ, வசனங்கள்: 5

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
111:1
111:1 تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّؕ‏
تَبَّتْ அழியட்டும் يَدَاۤ இரு கரங்கள் اَبِىْ لَهَبٍ அபூலஹபின் وَّتَبَّؕ‏ இன்னும் அவன் அழியட்டும்
111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
111:1. அழியட்டும் அபூலஹபின் இரு கரங்கள்; அவனுமே அழியட்டும்!
111:1. அபூலஹபின் கைகள் முறிந்துவிட்டன. மேலும், அவன் நாசமாகி விட்டான்.
111:1. அபூலஹபின் இரு கைகள் நாசமடைக! அவனும் நாசமாவானாக!
111:2
111:2 مَاۤ اَغْنٰى عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَؕ‏
مَاۤ اَغْنٰى பலனளிக்கவில்லை عَنْهُ அவனுக்கு مَالُهٗ அவனுடைய செல்வமும் وَمَا இன்னும் எது كَسَبَؕ‏ அவன் சம்பாதித்தான்
111:2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
111:2. அவனுடைய பொருளும், அவன் சேகரித்து வைத்திருப்பவைகளும் அவனுக்கு ஒரு பயனுமளிக்காது.
111:2. அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கவில்லை.
111:2. அவனுடைய செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயனளிக்கவில்லை.
111:3
111:3 سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍ ۖۚ‏
سَيَصْلٰى (விரைவில்) பற்றி எரிவார்கள் نَارًا நெருப்பில் ذَاتَ لَهَبٍ ۖۚ‏ ஜுவாலையுடைய
111:3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
111:3. வெகு விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்.
111:3. விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படுவான்.
111:3. மறுமையில் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவன் பிரவேசிப்பான்.
111:4
111:4 وَّامْرَاَ تُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِ‌ۚ‏
وَّامْرَاَ تُهٗ ؕ இன்னும் அவனுடைய மனைவி حَمَّالَةَ சுமப்பவள் الْحَطَبِ‌ۚ‏ விறகு சுள்ளிகளை
111:4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
111:4. விறகு சுமக்கும் அவனுடைய மனைவியோ,
111:4. அவனுடன் அவனுடைய மனைவியும் அவளோ (இங்கும் அங்கும்) புறம்பேசித் திரிபவள்.
111:4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியும்-அந்நரகில் நுழைவாள்).
111:5
111:5 فِىْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ‏
فِىْ جِيْدِهَا அவளுடைய கழுத்தில் حَبْلٌ கயிறுதான் مِّنْ مَّسَدٍ‏ ஈச்சம் பாளையின்
111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).
111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறுதான். (அதனால் சுருக்கிடப்பட்டு அவளும் அழிந்து விடுவாள்.)
111:5. அவளது கழுத்தில் முறுக்கேற்றப்பட்ட கயிறு இருக்கும்!
111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு தான் (இருக்கும், அதனால் அவளும் அழிவாள்).