21. ஸூரத்துல் அன்பியா(நபிமார்கள்)
மக்கீ, வசனங்கள்: 112

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
21:1
21:1 اِقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِىْ غَفْلَةٍ مُّعْرِضُوْنَ‌ۚ‏
اِقْتَرَبَ நெருங்கிவிட்டது لِلنَّاسِ மக்களுக்கு حِسَابُهُمْ அவர்களின் விசாரணை وَهُمْ அவர்களோ فِىْ غَفْلَةٍ அலட்சியத்தில் مُّعْرِضُوْنَ‌ۚ‏ புறக்கணிக்கின்றனர்
21:1. மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கி விட்டது; ஆனால் அவர்களோ (அதனைப்) புறக்கணித்துப் பராமுகமாக இருக்கிறார்கள்.
21:1. மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு (நாள்) நெருங்கிக் கொண்டே வருகிறது; எனினும், அவர்களோ அதைப் புறக்கணித்துக் கவலை அற்றவர்களாக இருக்கின்றனர்.
21:1. நெருங்கி வந்திருக்கிறது; மக்களுக்கு அவர்களின் விசாரணைக்கான நேரம்! எனினும், அவர்களோ கவனமற்ற நிலையில் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
21:1. மனிதர்களுக்கு அவர்களுடைய (கேள்வி) கணக்கு (நாள்) நெருங்கிவிட்டது, அவர்களோ (அதனைப்) புறக்கணித்தவர்களாக மறதியில் இருக்கின்றனர்.
21:2
21:2 مَا يَاْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنْ رَّبِّہِمْ مُّحْدَثٍ اِلَّا اسْتَمَعُوْهُ وَهُمْ يَلْعَبُوْنَۙ‏
مَا يَاْتِيْهِمْ அவர்களுக்கு வராது مِّنْ ذِكْرٍ அறிவுரை ஏதும் مِّنْ رَّبِّہِمْ அவர்களுடைய இறைவனிடமிருந்து مُّحْدَثٍ புதிய اِلَّا தவிர اسْتَمَعُوْهُ அதை அவர்கள் செவிமடுத்தே وَهُمْ அவர்கள் يَلْعَبُوْنَۙ‏ விளையாடுபவர்களாக
21:2. அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய நினைவூட்டுதல் வரும்போது அவர்கள் விளையாடியவர்களாக அதை செவி மடுக்கிறார்களே தவிர வேறில்லை.
21:2. தங்கள் இறைவனிடமிருந்து புதிதாக ஒரு நல்லுபதேசம் வரும் போதெல்லாம் அதை அவர்கள் (நம்பாது பரிகாசம் செய்து) விளையாடிக் கொண்டே கேட்கிறார்கள்.
21:2. அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிது புதிதாக எந்த அறிவுரை அவர்களிடம் வந்தாலும் அதனை விருப்பமின்றியே செவியேற்கிறார்கள்; கேளிக்கைகளிலும் இலயித்துக் கொண்டிருக்கிறார்கள்.
21:2. அவர்களுடைய இரட்சகனிடமிருந்து புதிதாக யாதொரு நினைவூட்டுதல் - அவர்கள் விளையாடியவர்களாக- அதைச் செவிமடுத்தேயல்லாது அவர்களுக்கு வருவதில்லை.
21:3
21:3 لَاهِيَةً قُلُوْبُهُمْ‌ ؕ وَاَسَرُّوا النَّجْوَى‌ۖ الَّذِيْنَ ظَلَمُوْا ‌ۖ  هَلْ هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ‌ ۚ اَفَتَاْتُوْنَ السِّحْرَ وَاَنْتُمْ تُبْصِرُوْنَ‏
لَاهِيَةً அலட்சியம் செய்கின்றன قُلُوْبُهُمْ‌ ؕ அவர்களது உள்ளங்கள் وَاَسَرُّوا பகிரங்கப்படுத்திக் கொண்டனர் النَّجْوَى‌ۖ பேச்சை الَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்கள் ۖ  هَلْ هٰذَاۤ இவர் இல்லை اِلَّا بَشَرٌ மனிதரே தவிர مِّثْلُكُمْ‌ ۚ உங்களைப் போன்ற اَفَتَاْتُوْنَ ஏற்றுக்கொள்கிறீர்களா السِّحْرَ சூனியத்தை وَاَنْتُمْ நீங்கள் تُبْصِرُوْنَ‏ அறிந்துகொண்டே
21:3. அவர்களுடைய உள்ளங்கள் அலட்சியமாக இருக்கின்றன; இன்னும் இத்தகைய அநியாயக்காரர்கள் தம்மிடையே இரகசியமாக: “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே அன்றி வேறில்லை; நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின்பால் வருகிறீர்களா?” என்று கூறிக்கொள்கின்றனர்.
21:3. அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச்) சிந்திப்பதே இல்லை. இத்தகைய அநியாயக்காரர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறென்ன? நீங்கள் பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தில் சிக்க வருகிறீர்களா?'' என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக் கொள்கின்றனர்.
21:3. அவர்களுடைய உள்ளங்கள் (வேறு சிந்தனைகளில்) மூழ்கியிருக்கின்றன. கொடுமையாளர்கள் தமக்கிடையே இரகசியமாகப் பேசிக்கொள்கின்றார்கள். “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தானே! இதனை நீங்கள் கண்கொண்டு பார்த்தும் மாயவலையில் சிக்கிக் கொள்வீர்களா, என்ன?”
21:3. அவர்களுடைய உள்ளங்கள் (உண்மையைச் சிந்திக்காது) மறதியாக இருக்கும் நிலையில் - (செவியேற்கின்றனர்) இன்னும், இத்தகைய அநியாயக்காரர்கள், (நம்முடைய தூதரைப்பற்றி) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி, (வேறு) இல்லை, நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்க (அவருடைய) சூனியத்திற்கு (அதைப்பின்பற்றி) வருகிறீர்களா?” என்று தங்களுக்குள் இரகசியமாகப் பேசிக்கொள்கின்றனர்.
21:4
21:4 قٰلَ رَبِّىْ يَعْلَمُ الْقَوْلَ فِى السَّمَآءِ وَالْاَرْضِ‌ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏
قٰلَ அவர் கூறினார் رَبِّىْ என் இறைவன் يَعْلَمُ அறிகிறான் الْقَوْلَ பேச்சுகளை فِى السَّمَآءِ வானத்திலும் وَالْاَرْضِ‌ பூமியிலும் وَهُوَ السَّمِيْعُ அவன்தான் நன்கு செவியுறுபவன் الْعَلِيْمُ‏ நன்கு அறிபவன்
21:4. “என்னுடைய இறைவன் வானங்களிலும் பூமியிலும் (பேசப்படும்) சொல்லையெல்லாம் நன்கறிபவன்; அவன் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்” என்று அவர் கூறினார்.
21:4. ‘‘வானங்களிலோ பூமியிலோ (ரகசியமாகவும், வெளிப்படையாகவும் பேசப்படும்) எல்லா வாக்கியங்களையும் என் இறைவன் நன்கறிவான். ஏனென்றால், அவன்தான் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான்'' என்று (நம் தூதர்) பதில் கூறினார்.
21:4. அதற்கு இறைத்தூதர் கூறினார்: “என்னுடைய இறைவன் வானம் மற்றும் பூமியில் பேசப்படுபவை அனைத்தையும் அறிகின்றான். அவன் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிபவனுமாவான்.”
21:4. “என்னுடைய இரட்சகன், வானிலும் பூமியிலும் உள்ள கூற்றை நன்கறிவான், (ஏனென்றால்) அவனோ (யாவையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்” என்று (நபியாகிய) அவர் கூறினார்.
21:5
21:5 بَلْ قَالُوْۤا اَضْغَاثُ اَحْلَامٍۢ بَلِ افْتَـرٰٮهُ بَلْ هُوَ شَاعِرٌ ‌ ۖۚ فَلْيَاْتِنَا بِاٰيَةٍ كَمَاۤ اُرْسِلَ الْاَوَّلُوْنَ‏
بَلْ மாறாக قَالُوْۤا கூறினர் اَضْغَاثُ பயமுறுத்துகின்ற اَحْلَامٍۢ கனவுகள் بَلِ மாறாக افْتَـرٰٮهُ இதை இட்டுக்கட்டுகிறார் بَلْ மாறாக هُوَ இவர் شَاعِرٌ ۖۚ ஒரு கவிஞர் فَلْيَاْتِنَا ஆகவே எங்களிடம் கொண்டு வரட்டும் بِاٰيَةٍ ஓர் அத்தாட்சியை كَمَاۤ போன்று اُرْسِلَ அனுப்பப்பட்டது الْاَوَّلُوْنَ‏ முந்தியவர்கள்
21:5. அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்” இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர்.
21:5. (தவிர, அவர்கள் நம் வசனங்களைப் பற்றி) மாறாக, ‘‘இவை சிதறிய சிந்தனை(யால் ஏற்பட்ட வாக்கியங்)கள் என்றும், நம் தூதர் இதைப் பொய்யாகத் தாமே கற்பனை செய்துகொண்டார் என்றும், இவர் ஒரு கவிஞர்தான்; (தன் கவிதை ஆற்றலால் அமைத்த வாக்கியங்களே இவை) என்றும் (கூறுவதுடன்) முற்காலத்தில் அனுப்பப்பட்ட தூதர்கள் (கொண்டு வந்ததைப்) போல இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்'' என்றும் கூறுகின்றனர்!
21:5. அதற்கு அவர்கள் கூறுகின்றார்கள்: “இவை வீண் கனவுகள்; இல்லையில்லை இவை, இவர் கற்பனை செய்து கொண்டவை. இன்னும் சொல்லப்போனால், இவர் ஒரு கவிஞரே! இல்லையென்றால் முற்காலத்து இறைத்தூதர்கள் சான்றுகளுடன் அனுப்பப்பட்டதுபோல் இவரும் நமக்கு ஒரு சான்றினைக் கொண்டுவரட்டும்!”
21:5. அதற்கவர்கள் அவ்வாறல்ல! “இவை அர்த்தமற்ற கனவுகளாகும்!, அல்ல, அவரே அதனை(ப் பொய்யாக)க் கற்பனை செய்து கொண்டார்! அல்ல, அவர் ஒரு கவிஞர்” ஆகவே, (அவர் அல்லாஹ்வின் உண்மையான தூதராக இருப்பின்) முந்தையவர்கள் (அத்தாட்சிகளுடன்) அனுப்பப்பட்டது போன்று இவரும் (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்று கூறுகின்றனர்.
21:6
21:6 مَاۤ اٰمَنَتْ قَبْلَهُمْ مِّنْ قَرْيَةٍ اَهْلَـكْنٰهَا‌ۚ اَفَهُمْ يُؤْمِنُوْنَ‏
مَاۤ اٰمَنَتْ நம்பிக்கை கொள்ளவில்லை قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் مِّنْ قَرْيَةٍ எந்த சமுதாயமும் اَهْلَـكْنٰهَا‌ۚ ஆகவே, அவர்களை அழித்தோம் اَفَهُمْ ?/எனவே, இவர்கள் يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொண்டு விடுவார்கள்
21:6. இவர்களுக்கு முன்னர் நாம் அழித்து விட்ட எந்த ஊ(ரா)ரும் ஈமான் கொள்ளவில்லை; அவ்வாறிருக்க இவர்கள் ஈமான் கொள்வார்களா?
21:6. இவர்களுக்கு முன்னர் நாம் அழித்துவிட்ட ஊராரில் ஒருவருமே (அவர்கள் விரும்பிய அத்தாட்சிகளைக் கண்ட பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. (அவ்வாறிருக்க) இவர்களா நம்பிக்கை கொள்ளப் போகின்றனர்!
21:6. உண்மை யாதெனில், இவர்களுக்கு முன்னால் நாம் அழிவிற்குள்ளாக்கிய எந்த ஊரும் நம்பிக்கை கொள்ளவில்லை. இனி, இவர்கள் நம்பிக்கை கொள்ளப்போகிறார்களா?
21:6. இவர்களுக்கு முன்னர், நாம் அதை அழித்துவிட்ட எந்த ஊ(ரா)ரும் விசுவாசங்கொள்ளவில்லை, (அவ்வாறிருக்க) இவர்கள் விசுவாசங்கொள்வார்களா?
21:7
21:7 وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ اِلَّا رِجَالًا نُّوْحِىْۤ اِلَيْهِمْ‌ فَسْــٴَــلُوْۤا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ‏
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை قَبْلَكَ உமக்கு முன்னர் اِلَّا தவிர رِجَالًا ஆடவர்களை نُّوْحِىْۤ வஹீ அறிவிப்போம் اِلَيْهِمْ‌ அவர்களுக்கு فَسْــٴَــلُوْۤا ஆகவே, கேட்டறிந்து கொள்ளுங்கள் اَهْلَ الذِّكْرِ வேதத்தையுடையவர்களிடம் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் لَا تَعْلَمُوْنَ‏ அறியாதவர்களாக
21:7. (நபியே!) உமக்கு முன்னரும் மானிடர்களையே அன்றி (வேறெவரையும்) நம்முடைய தூதர்களாக நாம் அனுப்பவில்லை; அவர்களுக்கே நாம் வஹீ அறிவித்தோம். எனவே “(இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (நினைவுபடுத்தும்) வேதங்களுடையோரிடம் கேட்டுத் (தெரிந்து) கொள்ளுங்கள்” (என்று நபியே! அவர்களிடம் கூறும்).
21:7. (நபியே!) உமக்கு முன்னரும் (மனிதர்களில்) ஆண்களையே தவிர வேறொருவரையும் நாம் நம் தூதராக அனுப்பவில்லை. (உமக்கு அறிவிப்பது போன்றே நம் கட்டளைகளை) அவர்களுக்கும் வஹ்யி (மூலம்) அறிவித்தோம். ஆகவே, (இவர்களை நோக்கி கூறுவீராக. இது) உங்களுக்குத் தெரியாதிருந்தால் (முன்னுள்ள வேத) ஞானமுடையவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
21:7. மேலும் (நபியே!) உமக்கு முன்னரும் நாம் மனிதர்களையே தூதர்களாக அனுப்பியுள்ளோம். அவர்களுக்கும் நாம் வஹி அருளியிருந்தோம். நீங்கள் ஞானமற்றவர்களாயிருந்தால் வேதம் அருளப்பட்டவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
21:7. மேலும், (நபியே!) உமக்கு முன்னரும்) மனிதர்களிலிருந்து) ஆடவர்களையே அன்றி, வேறெவரையும் நாம் நம்முடைய தூதராக அனுப்பவில்லை, (உமக்கு அறிவிக்கிற பிரகாரமே) அவர்களுக்கு நாம் வஹீ அறிவித்தோம், ஆகவே, (இவர்களிடம் நீர் கூறுவீராக! இதனை) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (வேதத்தை) அறிந்தோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
21:8
21:8 وَمَا جَعَلْنٰهُمْ جَسَدًا لَّا يَاْكُلُوْنَ الطَّعَامَ وَمَا كَانُوْا خٰلِدِيْنَ‏
وَمَا جَعَلْنٰهُمْ நாம் அவர்களை ஆக்கவில்லை جَسَدًا உடல்களாக لَّا يَاْكُلُوْنَ சாப்பிடாத الطَّعَامَ உணவு وَمَا كَانُوْا இன்னும் இருக்கவில்லை خٰلِدِيْنَ‏ நிரந்தர தன்மை உள்ளவர்களாக
21:8. அன்றியும் நாம் அவர்களுக்கு உணவு அருந்தாத உடலை அமைக்கவில்லை; மேலும், (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் அவர்களிருக்கவில்லை.
21:8. உணவே உட்கொள்ளாத உடலை அவர்களுக்கு (தூதர்களுக்கு) நாம் கொடுக்க வில்லை. தவிர, அவர்கள் (பூமியில் என்றுமே மரணிக்காத) நிரந்தரம் பெற்றவர்களாகவும் இருக்கவில்லை.
21:8. அத்தூதர்களுக்கு உணவு உட்கொள்ளாத உடலை நாம் அளிக்கவில்லை. மேலும், அவர்கள் நித்திய ஜீவிகளாயும் இருக்கவில்லை.
21:8. அன்றியும், அவர்களுக்கு உணவே உண்ணாதிருக்கக்கூடிய உடலை நாம் ஆக்கவில்லை, மேலும், அவர்கள் (பூமியில்) நிரந்தரமானவர்களாகவும் இருக்கவில்லை.
21:9
21:9 ثُمَّ صَدَقْنٰهُمُ الْوَعْدَ فَاَنْجَيْنٰهُمْ وَمَنْ نَّشَآءُ وَاَهْلَكْنَا الْمُسْرِفِيْنَ‏
ثُمَّ பிறகு صَدَقْنٰهُمُ நாம் அவர்களுக்கு உண்மைப்படுத்தினோம் الْوَعْدَ வாக்கை فَاَنْجَيْنٰهُمْ நாம் பாதுகாத்தோம் وَمَنْ نَّشَآءُ நாம் நாடியவர்களையும் وَاَهْلَكْنَا நாம் அழித்தோம் الْمُسْرِفِيْنَ‏ வரம்பு மீறியவர்களை
21:9. பின்னர், (நம்) வாக்குறுதியை அவர்களுக்கு நாம் நிறைவேற்றினோம்; அவ்வாறு நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம்; ஆனால் வரம்பு மீறியவர்களை நாம் அழித்தோம்.
21:9. பின்னர், (அவர்களை பாதுகாத்துக் கொள்வதாக நாம்) அவர்களுக்களித்த வாக்குறுதியை உண்மையாக்கும் பொருட்டு அவர்களையும், நாம் விரும்பிய மற்றவர்களையும் பாதுகாத்துக் கொண்டு வரம்புமீறியவர்களை அழித்துவிட்டோம்.
21:9. பின்னர் பாருங்கள், நாம் அவர்களிடம் அளித்திருந்த வாக்குறுதியையும் நிறைவேற்றினோம். மேலும் அவர்களையும், நாம் யார் யாரை நாடினோமோ அவர்கள் அனைவரையும் காப்பாற்றினோம். மேலும், வரம்பு மீறியவர்களை அழித்து விட்டோம்.
21:9. பின்னர், (அவர்களைக் காப்பாற்றுவதாக,) அவர்களுக்கு (அளித்த) வாக்குறுதியை நாம் உண்மையாக்கினோம், ஆகவே அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம், வரம்பு மீறியவர்களை நாம் அழித்தும் விட்டோம்.
21:10
21:10 لَقَدْ اَنْزَلْنَاۤ اِلَيْكُمْ كِتٰبًا فِيْهِ ذِكْرُكُمْ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
لَقَدْ திட்டமாக اَنْزَلْنَاۤ இறக்கி இருக்கிறோம் اِلَيْكُمْ உங்களுக்கு كِتٰبًا ஒரு வேதத்தை فِيْهِ அதில் ذِكْرُكُمْ‌ؕ உங்களைப் பற்றிய சிறப்பு இருக்கிறது اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
21:10. உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேதத்தை அருளியிருக்கின்றோம்; அதில் உங்களின் கண்ணியம் இருக்கின்றது. நீங்கள் அறிய மாட்டீர்களா?  
21:10. உங்களுக்கு(ப் போதுமான) நல்லுபதேசங்கள் உள்ள வேதத்தையே நிச்சயமாக உங்களுக்கு அருளியிருக்கிறோம். இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
21:10. (மக்களே!) உங்களுக்கு ஒரு வேதத்தை அனுப்பியுள்ளோம். அதில் உங்களைப் பற்றியே கூறப்பட்டுள்ளது. என்ன, நீங்கள் அறிந்துகொள்ள மாட்டீர்களா?
21:10. திட்டமாக, உங்கள் பால் ஒரு வேதத்தை நாம் இறக்கி இருக்கிறோம் - அதில் உங்களுடைய நினைவுகூர்தல் (உங்களைப்பற்றிய சிறப்பு) இருக்கிறது, (அதை) நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?
21:11
21:11 وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَّاَنْشَاْنَا بَعْدَهَا قَوْمًا اٰخَرِيْنَ‏
وَكَمْ எத்தனையோ قَصَمْنَا நாம் அழித்தோம் مِنْ قَرْيَةٍ பல ஊர்களை كَانَتْ அவை இருந்தன ظَالِمَةً தீயவையாக وَّاَنْشَاْنَا உருவாக்கினோம் بَعْدَهَا அவற்றுக்குப் பின்னர் قَوْمًا اٰخَرِيْنَ‏ வேறு மக்களை
21:11. மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையோ நாம் அழித்தோம்; அதற்குப் பின் (அங்கு) வேறு சமூகத்தை உண்டாக்கினோம்.
21:11. அநியாயக்காரர்கள் வசித்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து நாசமாக்கி விட்டோம். அவர்களுக்குப் பின்னர் (அவ்விடத்தில்) வேறு மக்களை உற்பத்தி செய்தோம்.
21:11. கொடுமைகள் புரிந்துகொண்டிருந்த எத்தனையோ ஊர்களை நாம் தகர்த்தெறிந்திருக்கிறோம். அதற்குப் பின் வேறு ஒரு சமூகத்தைத் தோற்றுவித்தோம்.
21:11. அநியாயம் செய்து கொண்டிருந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டோம், அதற்குப் பின்னர், (அவ்விடத்தில்) வேறு சமூகத்தவர்களை உண்டாக்கினோம்.
21:12
21:12 فَلَمَّاۤ اَحَسُّوْا بَاْسَنَاۤ اِذَا هُمْ مِّنْهَا يَرْكُضُوْنَؕ‏
فَلَمَّاۤ اَحَسُّوْا அவர்கள் உணர்ந்தபோது بَاْسَنَاۤ நமது வேதனையை اِذَا هُمْ அப்போது அவர்கள் مِّنْهَا அதிலிருந்து يَرْكُضُوْنَؕ‏ விரைந்து ஓடினர்
21:12. ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.
21:12. அவர்களும் நம் வேதனையின் அறிகுறியை உணர்ந்து கொண்ட மாத்திரத்தில் தங்கள் ஊரைவிட்டு விரைந்து ஓட ஆரம்பித்தார்கள்.
21:12. நம்முடைய வேதனைச் சாட்டை தங்கள் மீது படப் போகிறது என அவர்கள் உணர்ந்தபோது, அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர்.
21:12. அவர்கள் மீது வேதனையை (அது அவர்களுக்கு வரவிருப்பதை) உணர்ந்து கொண்டபொழுது, அதே சமயம் அவர்கள் அங்கிருந்து (துரிதமாக) வெருண்டோடலானார்கள்.
21:13
21:13 لَا تَرْكُضُوْا وَ ارْجِعُوْۤا اِلٰى مَاۤ اُتْرِفْتُمْ فِيْهِ وَمَسٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـٴَــلُوْنَ‏
لَا تَرْكُضُوْا விரைந்து ஓடாதீர்கள் وَ ارْجِعُوْۤا திரும்புங்கள் اِلٰى مَاۤ எதன் பக்கம் اُتْرِفْتُمْ நீங்கள் பெரும் இன்பம் கொடுக்கப்பட்டீர்கள் فِيْهِ அதில் وَمَسٰكِنِكُمْ உங்கள் இல்லங்களின் لَعَلَّكُمْ تُسْـٴَــلُوْنَ‏ நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்
21:13. “விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக” (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).
21:13. (அச்சமயம் நாம் அவர்களை நோக்கி) ‘‘நீங்கள் வேகமாக ஓடாதீர்கள்! நீங்கள் மிக்க ஆடம்பரமாக அனுபவித்து வந்த செல்வத்தின் பக்கமும், உங்கள் வீடுகளுக்கும் நீங்கள் திரும்புங்கள். அங்கு நீங்கள் அது பற்றி கேட்கப்படுவீர்கள்'' (என்று கூறினோம்.)
21:13. (அப்போது கூறப்பட்டது:) “ஓடாதீர்கள்! நீங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த ஆடம்பர வாழ்வு மற்றும் இன்புற்று வாழ்ந்த இல்லங்கள் ஆகியவற்றை நோக்கிச் செல்லுங்கள். நீங்கள் அவற்றைப் பற்றி வினவப்படக் கூடும்.”
21:13. (அது சமயம்) “நீங்கள் வெருண்டோடாதீர்கள்! எதில் நீங்கள் சுகபோக வாழ்வு கொடுக்கப்பட்டிருந்தீர்களோ அதன்பாலும், இன்னும் உங்கள் குடியிருப்புகளின்பாலும் திரும்பிச் செல்லுங்கள், நீங்கள் (அதுபற்றிக்) கேட்கப்படலாம்” (என்று கூறினோம்).
21:14
21:14 قَالُوْا يٰوَيْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் يٰوَيْلَنَاۤ எங்கள் நாசமே اِنَّا كُنَّا நிச்சயமாக நாங்கள் இருந்தோம் ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
21:14. (இதற்கு அவர்கள்) “எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று வருந்திக் கூறினார்கள்.
21:14. அதற்கவர்கள் ‘‘எங்கள் கேடே! நிச்சயமாக நாங்கள் (வரம்பு மீறிய) தீயவர்களாக இருந்தோம்'' என்று கூக்குரலிட்டார்கள்.
21:14. அதற்கு அவர்கள் புலம்பலானார்கள்: “அந்தோ, எங்கள் துர்பாக்கியமே! திண்ணமாக, நாங்கள் அக்கிரமக்காரர்களாயிருந்தோம்.”
21:14. அ(தற்க)வர்கள்” எங்களுடைய கேடே! நிச்சயமாக நாங்கள் (இரட்சகனை மறுத்து) அநியாயக்காரர்களாக இருந்தோம்” என (வருந்தி)க் கூறினார்கள்.
21:15
21:15 فَمَا زَالَتْ تِّلْكَ دَعْوٰٮهُمْ حَتّٰى جَعَلْنٰهُمْ حَصِيْدًا خٰمِدِيْنَ‏
فَمَا زَالَتْ நீடித்திருந்தது تِّلْكَ அதுவே دَعْوٰٮهُمْ அவர்களது கூப்பாடாக حَتّٰى இறுதியாக جَعَلْنٰهُمْ அவர்களை நாம் ஆக்கிவிட்டோம் حَصِيْدًا வெட்டப்பட்டவர்களாக خٰمِدِيْنَ‏ அழிந்தவர்களாக
21:15. அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தழிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.
21:15. அவர்களுடைய அக்கூக்குரல் அவர்களை நாம் அழித்துச் சாம்பலாக்கும் வரை நீடித்திருந்தது.
21:15. தொடர்ந்து அவர்கள் புலம்பிக் கொண்டே இருந்தார்கள். எதுவரையெனில், வாழ்வின் ஒரு பொறியும் அவர்களிடம் எஞ்சி நிற்காத அளவுக்கு, அரிதாள்கள் அழிக்கப்படுவதுபோல் நாம் அவர்களை அழிக்கும்வரை!
21:15. அறுவடை செய்யப்பட்ட (வயலின்) அரிதாள்களைப் போன்று கரிந்து அழிந்து விட்டவர்களாக நாம் அவர்களை ஆக்கும் வரையில் (எங்களுடைய கேடே! என்ற) இதுவே அவர்களின் அழைப்பாக, (கூப்பாடாக) நீங்காமல் இருந்தது.
21:16
21:16 وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا لٰعِبِيْنَ‏
وَمَا خَلَقْنَا நாம் படைக்கவில்லை السَّمَآءَ வானத்தையும் وَالْاَرْضَ பூமியையும் وَمَا بَيْنَهُمَا அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் لٰعِبِيْنَ‏ விளையாடுபவர்களாக
21:16. மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.
21:16. வானங்களையும், பூமியையும், அதற்கு மத்தியில் உள்ளவற்றையும் வீண் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.
21:16. நாம் இந்த வானத்தையும் பூமியையும், அவற்றிற்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக படைக்கவில்லை.
21:16. வானையும், பூமியையும், அவ்விரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் விளையாடியவர்களாக (வீண் விளையாட்டுக்காக) நாம் படைக்கவில்லை.
21:17
21:17 لَوْ اَرَدْنَاۤ اَنْ نَّـتَّخِذَ لَهْوًا لَّا تَّخَذْنٰهُ مِنْ لَّدُنَّاۤ  ۖ  اِنْ كُنَّا فٰعِلِيْنَ‏
لَوْ اَرَدْنَاۤ நாம் நாடி இருந்தால் اَنْ نَّـتَّخِذَ நாம் ஏற்படுத்திக் கொள்ள لَهْوًا வேடிக்கையை لَّا تَّخَذْنٰهُ அதை ஏற்படுத்திக் கொண்டிருப்போம் مِنْ لَّدُنَّاۤ நம்மிடமிருந்தே ۖ  اِنْ كُنَّا நாம் இல்லை فٰعِلِيْنَ‏ செய்பவர்களாக
21:17. வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.
21:17. நாம் வீண் விளையாட்டுக்காரனாக இருந்து விளையாட வேண்டும் என்று நாம் கருதியும் இருந்தால் நம்மிடமுள்ள (நமக்குத் தகுதியான)தை நாம் எடுத்து (விளையாடி)க் கொண்டிருப்போம்.
21:17. விளையாட்டிற்காக நாம் ஏதேனும் ஒன்றைச் செய்ய நாடியிருந்தால் அதை மட்டுமே நாம் செய்ய வேண்டும் என்றிருந்தால் நம் சார்பாகவே அதனைச் செய்துவிட்டிருப்போம்.
21:17. (வீண்) விளையாட்டுக்கென (மனைவி, மக்கள் கொண்ட) எதனையும் ஆக்கிக்கொள்ள நாம் நாடி, (அதை) செய்வோராக நாம் இருந்திருப்பின் நம்மிடத்தில் உள்ளவற்றிலிருந்தே அதை நாம் எடுத்துக் கொண்டிருப்போம்.
21:18
21:18 بَلْ نَـقْذِفُ بِالْحَـقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ‌ ؕ وَلَـكُمُ الْوَيْلُ مِمَّا تَصِفُوْنَ‏
بَلْ மாறாக نَـقْذِفُ எறிகிறோம் بِالْحَـقِّ சத்தியத்தை عَلَى الْبَاطِلِ அசத்தியத்தின் மீது فَيَدْمَغُهٗ அது அதை உடைத்து விடுகிறது فَاِذَا அப்போது هُوَ அது زَاهِقٌ‌ ؕ அழிந்து விடுகிறது وَلَـكُمُ உங்களுக்கு الْوَيْلُ நாசம்தான் مِمَّا تَصِفُوْنَ‏ வர்ணிப்பதால்
21:18. அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.
21:18. அவ்வாறன்று; மெய்யைப் பொய்யின் மீது எறிகிறோம். அது அதை (அதன் தலையை) உடைத்து விடுகிறது. பின்னர் அது அழிந்தும் விடுகிறது. (ஆகவே, இறைவனைப் பற்றி அவனுக்கு மனைவி உண்டென்றும், சந்ததி உண்டென்றும்) நீங்கள் கூறுபவற்றின் காரணமாக உங்களுக்குக் கேடுதான்.
21:18. ஆயினும், நாம் சத்தியத்தைக் கொண்டு அசத்தியத்திற்கு அடி கொடுக்கின்றோம். அது, அசத்தியத்தின் தலையைப் பெயர்த்துவிடுகின்றது. பிறகு பார்த்துக் கொண்டிருக்கவே அசத்தியம் அழிந்தும் விடுகின்றது. நீங்கள் இட்டுக்கட்டிய பேச்சின் காரணத்தால் உங்களுக்குக் கேடுதான் இருக்கிறது.
21:18. அவ்வாறன்று! சத்தியத்தை அசத்தியத்தின் மீது எறிகின்றோம், அ(ந்த சத்தியமான)து அ(சத்தியத்)தை அடக்கி விடுகின்றது, உடனே அது அழிந்து விடுகின்றது, அல்லாஹ்வைப் பற்றி அவனுக்கு தகுதியற்றவைகளை(க் கூறி) நீங்கள் வர்ணிப்பதிலிருந்து உங்களுக்குக் கேடுதான் (உண்டு)
21:19
21:19 وَلَهٗ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَمَنْ عِنْدَهٗ لَا يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا يَسْتَحْسِرُوْنَ‌ۚ‏
وَلَهٗ அவனுக்கே مَنْ எவர்கள் فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَالْاَرْضِ‌ؕ பூமியிலும் وَمَنْ இன்னும் எவர்கள் عِنْدَهٗ அவனிடம் لَا يَسْتَكْبِرُوْنَ பெருமையடிக்க மாட்டார்கள் عَنْ عِبَادَتِهٖ அவனை வணங்குவதைவிட்டு وَلَا يَسْتَحْسِرُوْنَ‌ۚ‏ இன்னும் சோர்வடைய மாட்டார்கள்
21:19. வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.
21:19. வானங்களிலும் பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுக்குரியனவே! அவனிடத்தில் இருக்கக்கூடிய (வானவர்களாயினும் சரி; அவர்களும் அவனுடைய அடியார்களே! அ)வர்கள் அவனை வணங்காது பெருமை அடிக்கவும் மாட்டார்கள், சோர்வுறவும் மாட்டார்கள்.
21:19. வானங்களிலும், பூமியிலும் உள்ள படைப்பினங்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எவர்கள் அவன் அருகில் இருக்கின்றார்களோ (அதாவது வானவர்கள்) அவர்கள் கர்வம் கொண்டு அவனுக்கு அடிபணிய மறுப்பதில்லை; களைத்துப் போவதுமில்லை.
21:19. வானங்களிலும், பூமியிலும் உள்ளோர் அவனுக்கே உரியவர்கள், மேலும் அவனிடமிருப்பவர்கள் (ஆகிய மலக்குகள்) அவனை வணங்குவதை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள், சோர்வடையவுமாட்டார்கள்.
21:20
21:20 يُسَبِّحُوْنَ الَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُوْنَ‏
يُسَبِّحُوْنَ அவர்கள் துதிக்கின்றனர் الَّيْلَ இரவு وَالنَّهَارَ பகலாக لَا يَفْتُرُوْنَ‏ பலவீனப்படுவதில்லை
21:20. இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
21:20. அவர்கள் இரவு பகல் எந்நேரமும் இடைவிடாது அவனைப் போற்றி புகழ்ந்து துதித்துக் கொண்டே இருக்கின்றனர்.
21:20. (மாறாக) இரவு பகல் எந்நேரமும் அவனைப் புகழ்ந்து துதி பாடிக்கொண்டேயிருக்கின்றார்கள்; சோர்வடைவதும் இல்லை.
21:20. அவர்கள் இரவிலும், பகலிலும் துதி செய்கின்றனர், (ஆனால் அதில்) அவர்கள் தளர்ச்சியடையமாட்டார்கள்.
21:21
21:21 اَمِ اتَّخَذُوْۤا اٰلِهَةً مِّنَ الْاَرْضِ هُمْ يُنْشِرُوْنَ‏
اَمِ اتَّخَذُوْۤا எடுத்துக் கொண்டார்களா? اٰلِهَةً கடவுள்களை مِّن الْاَرْضِ பூமியில் هُمْ அவர்கள் يُنْشِرُوْنَ‏ உயிர்ப்பிக்கின்ற கடவுள்களை
21:21. பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களே! அவை (இறந்தோரை) உயிர் கொடுத்து எழுப்புமா?
21:21. பூமியில் உள்ளவற்றை இவர்கள் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அவை (மரணித்தவர்களை) உயிர்ப்பிக்குமா?
21:21. இவர்கள் உருவாக்கிய பூலோக தெய்வங்கள் (உயிரில்லாதவற்றிற்கு உயிர் கொடுத்து) எழுப்பிக் கொண்டு வரக்கூடியவையா, என்ன!
21:21. பூமியிலுள்ளவற்றிலிருந்து அவர்கள் (வணக்கத்திற்குரிய) தெய்வங்காளக எடுத்துக் கொண்டிருக்கின்றனரே அவர்கள் (மரணித்தோரை) உயிர் கொடுத்து எழுப்புவார்களா?
21:22
21:22 لَوْ كَانَ فِيْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَـفَسَدَتَا‌ۚ فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا يَصِفُوْنَ‏
لَوْ كَانَ இருந்திருந்தால் فِيْهِمَاۤ அவை இரண்டிலும் اٰلِهَةٌ கடவுள்கள் اِلَّا اللّٰهُ அல்லாஹ்வைத் தவிர لَـفَسَدَتَا‌ۚ அவை இரண்டும் சீரழிந்து இருக்கும் فَسُبْحٰنَ மகாத் தூயவன் اللّٰهِ அல்லாஹ் رَبِّ அதிபதியான الْعَرْشِ அர்ஷுடைய عَمَّا விட்டு يَصِفُوْنَ‏ அவர்கள் வர்ணிப்பதை
21:22. (வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.
21:22. வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும். அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய குற்றம் குறைகளான) தன்மைகளிலிருந்து மிகப் பரிசுத்தமானவன்.
21:22. வானத்திலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனைத் தவிர மற்ற கடவுளர்களும் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும். எனவே, அவர்களின் பொய்யான வர்ணனையிலிருந்து ‘அர்ஷு’க்கு* உரியவனான அல்லாஹ் மிகப் புனிதமானவன்.
21:22. (வானங்கள், பூமி ஆகிய) அவை இரண்டிலும் அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், அவை இரண்டும் சீர்குலைந்து (அழிந்து) போயிருக்கும், ஆகவே, அர்ஷின் இரட்சகனாகிய அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகப்பரிசுத்தமானவன்.
21:23
21:23 لَا يُسْـٴَــلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْـٴَـــلُوْنَ‏
لَا يُسْـٴَــلُ அவன் கேள்வி கேட்கப்பட மாட்டான் عَمَّا பற்றி يَفْعَلُ அவன் செய்வதை وَهُمْ அவர்கள்தான் يُسْـٴَـــلُوْنَ‏ கேள்வி கேட்கப்படுவார்கள்
21:23. அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது; ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.
21:23. அவன் செய்பவற்றைப் பற்றி (ஏன் செய்தாய், எதற்காகச் செய்தாய் என்று) எவருமே அவனைக் கேட்க முடியாது. (அவ்வளவு சர்வ சுதந்திரமும், வல்லமையும் உள்ளவன் அவன்.) எனினும், படைப்புகள்தான் (அவரவர்களுடைய செயலைப் பற்றிக்) கேட்கப்படுவார்கள்.
21:23. அவன் தன்னுடைய செயல்களுக்கு (எவர் முன்னிலையிலும்) பதில் சொல்ல வேண்டியவனல்லன். மற்றவர்கள் அனைவரும் பதில் சொல்ல வேண்டியவர்களே!
21:23. அவன் செய்பவைகளைப் பற்றி, (எவராலும் விசாரணை செய்து) அவன் கேட்கப்பட மாட்டான், (ஆனால்) அவர்கள்தாம் (அவனால் விசாரணை செய்து) கேட்கப்படுவர்.
21:24
21:24 اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً ‌ ؕ قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ‌ ۚ هٰذَا ذِكْرُ مَنْ مَّعِىَ وَذِكْرُ مَنْ قَبْلِىْ‌ ؕ بَلْ اَكْثَرُهُمْ لَا يَعْلَمُوْنَ ۙ الْحَـقَّ‌ فَهُمْ مُّعْرِضُوْنَ‏
اَمِ اتَّخَذُوْا அவர்கள் எடுத்துக் கொண்டார்களா? مِنْ دُوْنِهٖۤ அவனையன்றி اٰلِهَةً  ؕ கடவுள்களை قُلْ கூறுவீராக هَاتُوْا கொண்டு வாருங்கள் بُرْهَانَكُمْ‌ ۚ உங்கள் ஆதாரத்தை هٰذَا இது ذِكْرُ பேச்சாகும் مَنْ مَّعِىَ என்னுடன் உள்ளவர்களைப் பற்றி وَذِكْرُ இன்னும் பேச்சாகும் مَنْ قَبْلِىْ‌ ؕ எனக்கு முன் உள்ளவர்களைப் பற்றி بَلْ மாறாக اَكْثَرُهُمْ அவர்களில் அதிகமானவர்கள் لَا يَعْلَمُوْنَ ۙ அறியமாட்டார்கள் الْحَـقَّ‌ சத்தியத்தை فَهُمْ ஆகவே, அவர்கள் مُّعْرِضُوْنَ‏ புறக்கணிக்கிறார்கள்
21:24. அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? “அப்படியாயின், உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றன” என்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள்.
21:24. (நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றைக் கடவுள்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) ''என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்னுள்ளவர்களின் வேதமும் இதோ இருக்கின்றன. (இவற்றிலிருந்து இதற்கு) உங்கள் ஆதாரத்தை நீங்கள் கொண்டு வாருங்கள்'' என்று கூறுவீராக. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையை அறிந்து கொள்ள சக்தி அற்றவர்கள். ஆதலால் அவர்கள் (இவ்வேதத்தையும்) புறக்கணிக்கின்றனர்.
21:24. அவனை விடுத்து அவர்கள் மற்ற கடவுள்களை ஏற்றுக்கொண்டார்களா? (நபியே! இவர்களிடம்) கூறும்: “உங்களின் சான்றினைக் கொண்டு வாருங்கள். இந்த வேதமும் இருக்கிறது. இதில் நான் வாழும் காலத்தைச் சார்ந்தவர்களுக்கு அறிவுரை நல்கப்பட்டுள்ளது. மேலும், எனக்கு முன் சென்றுபோன மக்களுக்கு அறிவுரை வழங்கிய வேதங்களும் இருக்கின்றன.” ஆயினும், அவர்களில் பெரும்பாலோர் உண்மையைப் புரியாதவர்களாய் இருக்கின்றனர்; எனவே, அவர்கள் முகம் திருப்பிச் செல்பவர்களாய் இருக்கின்றனர்.
21:24. (நபியே!) அவர்கள் அவனையன்றி (வணக்கத்திற்குரிய) வேறு தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? “(அவ்வாறாயின், அது பற்றிய) உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள், (இன்னும், அவர்களிடம்) இது (-குர் ஆன்) என்னுடன் இருப்பவர்களின் உபதேசமும், எனக்கு முன் சென்றவர்களின் உபதேசமுமாகும்” என்று கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிந்து கொள்ள மாட்டார்கள், ஆகவே, (இதனை) அவர்கள் புறக்கணிக்கக் கூடியவர்கள்.
21:25
21:25 وَمَاۤ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ مِنْ رَّسُوْلٍ اِلَّا نُوْحِىْۤ اِلَيْهِ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّاۤ اَنَا فَاعْبُدُوْنِ‏
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை مِنْ قَبْلِكَ உமக்கு முன்னர் مِنْ رَّسُوْلٍ எந்த தூதரையும் اِلَّا தவிர نُوْحِىْۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلَيْهِ அவர்களுக்கு اَنَّهٗ நிச்சயமாக விஷயமாவது لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّاۤ اَنَا என்னைத் தவிர فَاعْبُدُوْنِ‏ ஆகவே, என்னையே வணங்குங்கள்
21:25. (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரிடமும்: “நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) நாயன் என்னைத் தவிர வேறு எவருமில்லை; எனவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்” என்று நாம் வஹீ அறிவிக்காமலில்லை.
21:25. உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், ‘‘நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லவே இல்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்'' என்று நாம் வஹ்யி அறிவிக்காமலில்லை.
21:25. உமக்கு முன்னர் நாம் அனுப்பிய எந்தத் தூதரிடத்திலும், “நிச்சயமாக என்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. எனவே, என்னையே நீங்கள் அடிபணிய வேண்டும்” என்றே வஹி*யின் மூலம் நாம் அறிவித்திருந்தோம்.
21:25. மேலும், நிச்சயமாக என்னைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் இல்லை, எனவே, என்னையே நீங்கள் வணங்க வேண்டும் என்று நாம் வஹீ அறிவிக்காமல் (நபியே!) உமக்கு முன்னர் எந்தத் தூதரையும் நாம் அனுப்பவில்லை.
21:26
21:26 وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا‌ سُبْحٰنَهٗ‌ ؕ بَلْ عِبَادٌ مُّكْرَمُوْنَ ۙ‏
وَقَالُوا அவர்கள் கூறுகின்றனர் اتَّخَذَ எடுத்துக் கொண்டான் الرَّحْمٰنُ பேரருளாளன் وَلَدًا‌ ஒரு குழந்தையை سُبْحٰنَهٗ‌ ؕ அவன் மகா தூயவன் بَلْ மாறாக عِبَادٌ அடியார்கள் مُّكْرَمُوْنَ ۙ‏ அவனுடைய கண்ணியமான
21:26. அவர்கள்: “அர்ரஹ்மான் ஒரு குமாரனைத் தனக்கென எடுத்துக் கொண்டிருக்கின்றான்” என்று கூறுகிறார்கள்; (ஆனால்) அவனோ மிகவும் தூயவன்! அப்படியல்ல: (அல்லாஹ்வின் குமாரர்கள் என்று இவர்கள் கூறுவோரெல்லோரும் அல்லாஹ்வின்) கண்ணியமிக்க அடியார்களே ஆவார்கள்.
21:26. (அவ்வாறிருந்தும்) ரஹ்மான் (வானவர்களை தனக்குப் பெண்) சந்ததியாக்கிக் கொண்டான் என்று இவர்கள் கூறுகின்றனர். அவனோ மிகப் பரிசுத்தமானவன். (வானவர்கள் அவனுடைய சந்ததிகளன்று,) எனினும், (அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள் ஆவர்.
21:26. (கருணைமிக்க இறைவனாகிய) ரஹ்மானுக்கு பிள்ளைகள் உண்டு என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவன் மிகத் தூய்மையானவன்! உண்மையில் அவர்கள் (வானவர்கள்) அடியார்களாவர். அவர்களுக்குக் கண்ணியம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
21:26. மேலும், அவர்கள், “அர்ரஹ்மான் (தனக்காக) குமாரனை எடுத்துக் கொண்டான்” என்று கூறுகின்றனர், அவன் மிகப் பரிசுத்தமானவன், (மலக்குகள் அவனுடைய சந்ததிகள்) அல்ல. (அவர்கள் அவனுடைய) கண்ணியமிக்க அடியார்கள்.
21:27
21:27 لَا يَسْبِقُوْنَهٗ بِالْقَوْلِ وَهُمْ بِاَمْرِهٖ يَعْمَلُوْنَ‏
لَا يَسْبِقُوْنَهٗ அவர்கள் அவனை முந்தமாட்டார்கள் بِالْقَوْلِ பேச்சில் وَهُمْ அவர்கள் بِاَمْرِهٖ அவனுடைய கட்டளைக் கொண்டே يَعْمَلُوْنَ‏ செய்கின்றனர்
21:27. அவர்கள் (எந்த ஒரு பேச்சையும்) அவனை முந்திப் பேச மாட்டார்கள்; அவர்கள் அவன் கட்டளைப் படியே (எதையும்) செய்கிறார்கள்.
21:27. (அவனுக்கு முன்னால்) இ(வ்வான)வர்கள் ஒரு வார்த்தையும் மீறிப் பேச மாட்டார்கள். அவன் இட்ட கட்டளையை இவர்கள் செய்து கொண்டு இருப்பார்கள்.
21:27. அவர்கள் அவனது திருமுன் யாதொரு வார்த்தையையும் மீறிப் பேசுவதில்லை. அவனது கட்டளை எதுவோ அதன்படியே செயல்படுகின்றார்கள்.
21:27. சொல்லைக்கொண்டு அவனை அவர்கள் முந்தவுமாட்டார்கள், அவர்களோ அவனின் கட்டளையைக் கொண்டு செயல்படுவார்கள்.
21:28
21:28 يَعْلَمُ مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ وَ لَا يَشْفَعُوْنَۙ اِلَّا لِمَنِ ارْتَضٰى وَهُمْ مِّنْ خَشْيَـتِهٖ مُشْفِقُوْنَ‏
يَعْلَمُ அவன் நன்கறிவான் مَا بَيْنَ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன் உள்ளதையும் وَمَا خَلْفَهُمْ அவர்களுக்குப் பின் உள்ளதையும் وَ لَا يَشْفَعُوْنَۙ அவர்கள் சிபாரிசு செய்ய மாட்டார்கள் اِلَّا தவிர لِمَنِ ارْتَضٰى அவன் விரும்பியவர்களுக்கே وَهُمْ அவர்கள் مِّنْ خَشْيَـتِهٖ அவனுடைய அச்சத்தால் مُشْفِقُوْنَ‏ பயப்படுகிறார்கள்
21:28. அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவற்றையும் அவன் நன்கறிவான்; இன்னும் எவரை அவன் பொருந்தி ஏற்றுக் கொள்கிறானோ அ(த் தகைய)வருக்கன்றி - அவர்கள் பரிந்து பேச மாட்டார்கள். இன்னும் அவர்கள் அவன் பால் உள்ள அச்சத்தால் நடுங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
21:28. அவர்களுக்கு முன்னிருப்பவற்றையும், பின்னிருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கே தவிர மற்றெவருக்கும் இவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். இன்னும், அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பார்கள்.
21:28. அவர்களுக்கு முன் உள்ளவற்றையும் அவன் அறிகின்றான்; அவர்களுக்கு மறைவாக இருப்பவற்றையும் அவன் அறிகின்றான். அவர்கள் யாருக்கும் பரிந்துரை செய்வதில்லை; எவருக்காகப் பரிந்துரை செய்வதை அல்லாஹ் விரும்புகின்றானோ அவர்களுக்காகத் தவிர! மேலும், அவர்கள் அவனுடைய அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
21:28. அவர்களுக்கு முன்னிருப்பவற்றையும் பின்னிருப்பவற்றையும் அவன் நன்கறிவான், அவன் பொருந்திக் கொண்டவரைத் தவிர (மற்றெவருக்கும்) இவர்கள் பரிந்துரை செய்யவுமாட்டார்கள், இன்னும் அவனது பயத்தால் அவர்கள் நடுங்குபவர்களாவர்.
21:29
21:29 وَمَنْ يَّقُلْ مِنْهُمْ اِنِّىْۤ اِلٰـهٌ مِّنْ دُوْنِهٖ فَذٰلِكَ نَجْزِيْهِ جَهَـنَّمَ‌ؕ كَذٰلِكَ نَجْزِى الظّٰلِمِيْنَ‏
وَمَنْ يَّقُلْ யார் கூறுவாரோ مِنْهُمْ அவர்களில் اِنِّىْۤ நிச்சயமாக நான்தான் اِلٰـهٌ கடவுள் مِّنْ دُوْنِهٖ அவனையன்றி فَذٰلِكَ அவர் نَجْزِيْهِ அவருக்கு கூலியாக கொடுப்போம் جَهَـنَّمَ‌ؕ நரகத்தையே كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِى கூலி கொடுப்போம் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களுக்கு
21:29. இன்னும், அவர்களில் எவரேனும் “அவனன்றி நிச்சயமாக நானும் நாயன்தான்” என்று கூறுவாரேயானால், அ(த்தகைய)வருக்கு - நாம் நரகத்தையே கூலியாகக் கொடுப்போம் - இவ்வாறே நாம் அநியாயக்காரர்களுக்குக் கூலி கொடுப்போம்.
21:29. அவர்களில் எவரேனும் ‘‘அல்லாஹ்வையன்றி நிச்சயமாக நானும் வணக்கத்திற்குரிய ஓர் இறைவன்தான்'' என்று கூறினால், அவருக்கு நரகத்தையே நாம் கூலியாக்குவோம். அநியாயக்காரர்களுக்கு அவ்வாறே கூலி கொடுப்போம்.
21:29. “அல்லாஹ்வையன்றி நானும் ஒரு கடவுள்தான்” என்று அவர்களில் எவரேனும் கூறினால், அவருக்கு நாம் நரகத்தினுடைய தண்டனையைக் கொடுப்போம். கொடுமையாளர்களுக்கு நாம் கொடுக்கும் கூலி இதுதான்.
21:29. இன்னும் அவர்களில் எவர், “(அல்லாஹ்வாகிய) அவனையன்றி நிச்சயமாக நான்தான் (வணக்கத்திற்குரிய) நாயன்” என்று கூறுகிறாரோ அ(வ்வாறு கூறுப)வர் - அவருக்கு நரகத்தையே நாம் கூலியாகக் கொடுப்போம், அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாம் கூலி கொடுப்போம்.
21:30
21:30 اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌ ؕ وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌ ؕ اَفَلَا يُؤْمِنُوْنَ‏
اَوَلَمْ يَرَ அவர்கள் அறியவேண்டாமா الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பவர்கள் اَنَّ நிச்சயமாக السَّمٰوٰتِ வானங்களும் وَالْاَرْضَ பூமியும் كَانَـتَا அவ்விரண்டும் இருந்தன رَتْقًا சேர்ந்து فَفَتَقْنٰهُمَا‌ ؕ நாம்தான் அவற்றைப் பிளந்தோம் وَجَعَلْنَا ஏற்படுத்தினோம் مِنَ الْمَآءِ தண்ணீரிலிருந்து كُلَّ شَىْءٍ எல்லாவஸ்துகளையும் حَىٍّ‌ ؕ உயிருள்ள اَفَلَا يُؤْمِنُوْنَ‏ அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்களா
21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
21:30. (ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து, (வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அந்த மழை) நீரைக் கொண்டு உயிருள்ள ஒவ்வொன்றையும் (வாழ்ந்திருக்கச்) செய்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா?
21:30. (நபியின் கூற்றை) நிராகரித்தவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள், பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு அவற்றை நாம் தனித்தனியாகப் பிளந்தோம்; ஒவ்வொரு உயிரினத்தையும் தண்ணீரிலிருந்து நாம் படைத்தோம்; (நமது இந்தப் படைப்புத்திறனை) அவர்கள் ஏற்கமாட்டார்களா?
21:30. (ஆரம்பத்தில்) நிச்சயமாக வானங்களும், பூமியும் (இடைவெளியின்றி) இணைந்திருந்தன, பின்னர், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து உண்டாக்கினோம் என்பதையும் இந்நிராகரிப்போர் அறியவில்லையா? (இதை அறிந்தும்) அவர்கள் விசுவாசங்கொள்ள மாட்டார்களா?
21:31
21:31 وَجَعَلْنَا فِى الْاَرْضِ رَوَاسِىَ اَنْ تَمِيْدَ بِهِمْ وَجَعَلْنَا فِيْهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏
وَجَعَلْنَا இன்னும் நாம் ஏற்படுத்தினோம் فِى الْاَرْضِ பூமியில் رَوَاسِىَ மலைகளை اَنْ تَمِيْدَ அது சாய்ந்து விடாமல் இருப்பதற்காக بِهِمْ அவர்களுடன் وَجَعَلْنَا ஏற்படுத்தினோம் فِيْهَا அதில் فِجَاجًا விசாலமான سُبُلًا பாதைகளை لَّعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏ அவர்கள் வழிபெறுவதற்காக
21:31. இன்னும்: இப்பூமி (மனிதர்களுடன்) ஆடி சாயாமலிருக்கும் பொருட்டு, நாம் அதில் நிலையான மலைகளை அமைத்தோம்; அவர்கள் நேரான வழியில் செல்லும் பொருட்டு, நாம் விசாலமான பாதைகளையும் அமைத்தோம்.
21:31. பூமி மனிதர்களுடன் சாய்ந்துவிடாதிருக்கும் பொருட்டு அதில் மலைகளை நாம்தான் நாட்டினோம். அவர்கள் விரும்பிய இடத்திற்கு சரியாக செல்லும் பொருட்டு அதில் விசாலமான வழிகளையும் நாம்தான் ஏற்படுத்தினோம்.
21:31. மேலும், பூமியில் நாம் மலைகளை ஊன்றி வைத்தோம்; அவர்களோடு அது சாய்ந்துவிடாமலிருப்பதற்காக! மேலும், அதில் அகன்ற சாலைகளையும் அமைத்தோம். மக்கள் தங்கள் பாதைகளை அறிந்து கொள்வதற்காக.
21:31. இன்னும், பூமி, (மனிதர்களாகிய) அவர்களைக் கொண்டு அசைத்து விடாதிருப்பதற்காக, அதில் உறுதியான மலைகளை நாம் ஆக்கினோம், அவர்கள் நேரான வழியைப் பெறுவதற்காக அதில் விசாலமான பாதைகளையும் நாம் ஆக்கினோம்.
21:32
21:32 وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا ۖۚ وَّهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ‏
وَجَعَلْنَا நாம் ஆக்கினோம் السَّمَآءَ வானத்தை سَقْفًا ஒரு முகடாக مَّحْفُوْظًا ۖۚ பாதுகாக்கப்பட்ட وَّهُمْ அவர்கள் عَنْ اٰيٰتِهَا அதன் அத்தாட்சிகளை مُعْرِضُوْنَ‏ புறக்கணிக்கின்றார்கள்
21:32. இன்னும் வானத்தை நாம் பாதுகாப்பான விதானமாக அமைத்தோம் -எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்.
21:32. மேலும், வானத்தைப் பத்திரமான ஒரு முகட்டைப்போல் நாம்தான் அமைத்தோம். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவற்றிலுள்ள அத்தாட்சிகளை அவர்கள் புறக்கணிக்கின்றனர்.
21:32. மேலும், வானத்தைப் பாதுகாக்கப்பட்ட ஒரு கூரையாகவும் அமைத்தோம். ஆயினும், அவர்கள் பேரண்டத்திலுள்ள சான்றுகளைக் கவனிப்பதேயில்லை.
21:32. வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாகவும் நாம் ஆக்கினோம், அவர்களோ அவற்றின் அத்தாட்சிகளை விட்டும் புறக்கணிக்கின்றவர்களாக இருக்கின்றனர்.
21:33
21:33 وَهُوَ الَّذِىْ خَلَقَ الَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ‌ؕ كُلٌّ فِىْ فَلَكٍ يَّسْبَحُوْنَ‏
وَهُوَ الَّذِىْ அவன்தான் خَلَقَ படைத்தான் الَّيْلَ وَالنَّهَارَ இரவையும் பகலையும் وَالشَّمْسَ சூரியனையும் وَالْقَمَرَ‌ؕ சந்திரனையும் كُلٌّ ஒவ்வொன்றும் فِىْ فَلَكٍ சுற்று வட்டத்தில் يَّسْبَحُوْنَ‏ நீந்துகின்றன
21:33. இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தத்தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன.
21:33. அவனே இரவையும் பகலையும் (படைத்தான்.) சூரியனையும் சந்திரனையும் படைத்தான். இவை எல்லாம் வானத்தில் நீந்திச் செல்(வதைப் போல் செல்)கின்றன.
21:33. இரவையும் பகலையும் ஏற்படுத்தியவனும், சூரியனையும், சந்திரனையும் படைத்தவனும் அந்த அல்லாஹ்தான்! அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு மண்டலங்களில் நீந்திக் கொண்டிருக்கின்றன.
21:33. இன்னும், அவன் எத்தகையவனென்றால் இரவையும், பகலையும் சூரியனையும், சந்திரனையும் படைத்தான், (அவை) ஒவ்வொன்றும் (வானத்தில் தமக்குரிய) மண்டலங்களில் நீந்திச் செல்கின்றன.
21:34
21:34 وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّنْ قَبْلِكَ الْخُـلْدَ‌ ؕ اَفَا۟ٮِٕنْ مِّتَّ فَهُمُ الْخٰـلِدُوْنَ‏
وَمَا جَعَلْنَا நாம் ஆக்கவில்லை لِبَشَرٍ எந்த மனிதருக்கும் مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் الْخُـلْدَ‌ ؕ நிரந்தரத்தை اَفَا۟ٮِٕنْ இருந்து விடுவார்களா مِّتَّ நீர்மரணித்துவிட்டால் فَهُمُ الْخٰـلِدُوْنَ‏ அவர்கள் நிரந்தரமானவர்களாக
21:34. (நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்கும் (அவன்) என்றென்னும் இருக்கக்கூடிய நித்திய வாழ்வை நாம் (இங்கு) கொடுக்கவில்லை; ஆகவே நீர் மரித்தால் அவர்கள் மட்டும் என்றென்றும் வாழப் போகிறார்களா?
21:34. (நபியே!) உமக்கு முன்னர் எந்த மனிதனுக்குமே நாம் மரணமற்ற வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை. ஆகவே, நீர் இறந்துவிட்ட பின்னர் (என்ன) இவர்கள் என்றென்றும் வாழப்போகிறார்களா?
21:34. (நபியே!) நாம் உமக்கு முன்னரும் எவருக்கும் நிரந்தர வாழ்வைக் கொடுக்கவில்லை. எனவே, நீர் இறந்துவிட்டால், இவர்கள் மட்டும் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்களா?
21:34. மேலும், (நபியே!) உமக்கு முன்னர் எம்மனிதருக்கும் (இவ்வுலகில்) நிரந்தர (ஜீவிய)த்தை நாம் ஆக்கவில்லை, ஆகவே, நீர் இறந்துவிட்டால் அவர்கள் (மட்டும் என்றென்றும்) நிரந்தரமாக இருக்கப்போகிறார்களா?
21:35
21:35 كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ؕ وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً‌  ؕ وَاِلَيْنَا تُرْجَعُوْنَ‏
كُلُّ ஒவ்வோர் نَفْسٍ ஆன்மாவும் ذَآٮِٕقَةُ சுவைக்கக் கூடியது الْمَوْتِ‌ؕ மரணத்தை وَنَبْلُوْ நாம் சோதிப்போம் كُمْ உங்களை بِالشَّرِّ துன்பத்தைக் கொண்டு وَالْخَيْرِ இன்னும் இன்பத்தைக்கொண்டு فِتْنَةً‌  ؕ சோதிப்பதற்காக وَاِلَيْنَا நம்மிடமே تُرْجَعُوْنَ‏ திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.
21:35. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
21:35. ஒவ்வோர் உயிரினமும் மரணத்தைச் சுவைத்தே தீரும். மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதித்துக் கொண்டிருக்கின்றோம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
21:35. ஓவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக்கூடியதாகவே இருக்கிறது, தீமையை (துன்பங்களை)க் கொண்டும், நன்மையை (இன்பங்களை)க் கொண்டும் பரீட்சிப்பதற்காக உங்களை நாம் சோதிக்கிறோம், மேலும் நீங்கள் நம்மிடமே திருப்பப்படுவீர்கள்.
21:36
21:36 وَاِذَا رَاٰكَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِنْ يَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ اَهٰذَا الَّذِىْ يَذْكُرُ اٰلِهَـتَكُمْ‌ۚ وَهُمْ بِذِكْرِ الرَّحْمٰنِ هُمْ كٰفِرُوْنَ‏
وَاِذَا رَاٰكَ உம்மைப் பார்த்தால் الَّذِيْنَ كَفَرُوْۤا நிராகரிப்பாளர்கள் اِنْ يَّتَّخِذُوْنَكَ உம்மை எடுத்துக் கொள்ளமாட்டார்கள் اِلَّا தவிர هُزُوًا ؕ பரிகாசமாகவே اَهٰذَا இவரா الَّذِىْ يَذْكُرُ விமர்ச்சிக்கிறார் اٰلِهَـتَكُمْ‌ۚ உங்களது கடவுள்களை وَهُمْ அவர்களோ بِذِكْرِ பெயர் கூறுவதையும் الرَّحْمٰنِ பேரருளாளனின் هُمْ அவர்கள் كٰفِرُوْنَ‏ மறுக்கின்றனர்
21:36. இன்னும் (நபியே!) காஃபிர்கள் உம்மைப் பார்த்தால், “உங்கள் தெய்வங்களைப் பற்றிக் (குறை) கூறுபவர் இவர்தானா?” - என்று (தங்களுக்குள் பேசிக் கொண்டு) உம்மைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை; மேலும் அவர்கள் ரஹ்மானுடைய நினைவை நிராகரிக்கின்றனர்.
21:36. (நபியே!) நிராகரிப்பவர்கள் உம்மைக் கண்டால் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரை நோக்கி) ‘‘உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவர்தானா?'' என்று உம்மை(ச் சுட்டிக் காண்பித்து)ப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை. எனினும், அவர்களோ ரஹ்மா(ன் அளவற்ற அருளாளன் என்று இறைவ)னின் பெயரைக் கூறுவதையும் மறுக்கின்றனர்.
21:36. உண்மையை நிராகரிக்கும் இவர்கள் உம்மைக் காணும்போது கேலி செய்கின்றார்கள். “உங்களுடைய தெய்வங்களை (இழிவாகப்) பேசுகிறவர் இவர்தாமா?” (என்று கேட்கின்றார்கள்). ஆனால், இவர்களோ (கருணை மிக்க இறைவனாகிய) ரஹ்மானை நினைவுகூரவும் மறுக்கின்றார்கள்.
21:36. (நபியே!) நிராகரிப்போர் உம்மைக் கண்டால் உம்மை அவர்கள் பரிகாசமாகவேயன்றி எடுத்துக்கொள்வதில்லை, “உங்கள் தெய்வங்களைக் குறை கூறுபவர் இவரா?” (என்று உம்மைச் சுட்டிக்காட்டி அதிசயமாகக் கூறுகின்றனர்) அவர்களோ, “ரஹ்மான்” என்று (இரட்சகனின் பெயரைக்) கூறுவதையும் மறுப்பவர்களாக இருக்கின்றனர்.
21:37
21:37 خُلِقَ الْاِنْسَانُ مِنْ عَجَلٍ‌ؕ سَاُورِيْكُمْ اٰيٰتِىْ فَلَا تَسْتَعْجِلُوْنِ‏
خُلِقَ படைக்கப்பட்டான் الْاِنْسَانُ مِنْ عَجَلٍ‌ؕ மனிதன்/விரைவாக سَاُورِيْكُمْ உங்களுக்குக் காண்பிப்போம் اٰيٰتِىْ எனது அத்தாட்சிகளை فَلَا تَسْتَعْجِلُوْنِ‏ என்னிடம் அவசரப்படாதீர்கள்
21:37. மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான்; விரைவில் (வேதனைக்கான) என் அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பேன்; ஆகவே நீங்கள் அவசரப்படாதீர்கள்.
21:37. மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கிறான். (ஆகவே, அவர்களை நோக்கி நபியே! கூறுவீராக: ‘‘வேதனைகளாகிய) என் அத்தாட்சிகளை நான் அதிசீக்கிரத்தில் உங்களுக்குக் காண்பிப்பேன். ஆகவே, நீங்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.''
21:37. மனிதன் மிகவும் அவசரப்படக்கூடிய படைப்பாவான். வெகு சீக்கிரத்தில் நான் என்னுடைய சான்றுகளை உங்களுக்குக் காண்பிக்கப் போகின்றேன். எனவே, நீங்கள் என்னிடம் அவசரப்படாதீர்கள்
21:37. மனிதன் அவசரக்காரனாகப் படைக்கப்பட்டிருக்கின்றான், (ஆகவே வேதனை பற்றிய) என்னுடைய அத்தாட்சிகளை நான் உங்களுக்குக் காண்பிப்பேன், (அதற்காக) நீங்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.
21:38
21:38 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ அவர்கள் கூறுகிறார்கள் مَتٰى எப்போது هٰذَا இந்த الْوَعْدُ வாக்குறுதி اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
21:38. “நீங்கள் உண்மையாளர்களாகயிருப்பின், இந்த (வேதனைக்கான) வாக்குறுதி எப்பொழுது (நிறைவேற்றப்படும்)?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.
21:38. (அந்நிராகரிப்பவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘வேதனை வரும் என்று) நீங்கள் கூறுவதில் உண்மையானவர்களாக இருந்தால் இந்த (மிரட்டல்) வாக்கு எப்பொழுது வரும்'' என்று அவர்கள் கேட்கிறார்கள்.
21:38. அவர்கள் கேட்கின்றார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாயின் இந்த வாக்குறுதி எப்பொழுது நிறைவேறும்?”
21:38. மேலும், “(வேதனை வருமென்ற கூற்றில் விசுவாசிகளாகிய) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்குறுதி எப்பொழுது (நடந்தேறும்)?” என்று அவர்கள் (நிராகரிப்பவர்கள்) கேட்கிறார்கள்.
21:39
21:39 لَوْ يَعْلَمُ الَّذِيْنَ كَفَرُوْا حِيْنَ لَا يَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ يُنْصَرُوْنَ‏
لَوْ يَعْلَمُ அறிந்து கொண்டால்... الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் حِيْنَ (அந்த) நேரத்தை لَا يَكُفُّوْنَ தடுக்க மாட்டார்களே عَنْ وُّجُوْهِهِمُ தங்களது முகங்களை விட்டும் النَّارَ நரக நெருப்பை وَلَا இன்னும் عَنْ ظُهُوْرِ முதுகுகளை விட்டும் هِمْ தங்களது وَلَا هُمْ يُنْصَرُوْنَ‏ இன்னும் அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்களே
21:39. தம் முகங்களையும், தம் முதுகுகளையும் (நரக) நெருப்பைத் தடுத்துக் கொள்ள முடியாமலும், (எவராலும்) உதவி செய்யப்படமாலும் இருப்பார்களே அந்த நேரத்தை காஃபிர்கள் அறிந்து கொள்வார்களானால்! (இறுதி நேரம் பற்றிக் கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.)
21:39. அவர்கள் தங்கள் முகங்களில் இருந்தும், தங்கள் முதுகுகளில் இருந்தும் நரக நெருப்பைத் தட்டிக்கொள்ள முடியாமலும், அவர்களுக்கு உதவி செய்ய ஒருவரும் கிடைக்காமலும் போகக்கூடிய (ஒரு) காலம் வருமென்பதை இந்த நிராகரிப்பவர்கள் அறிந்திருந்தால் (அது இவர்களுக்கே நன்று).
21:39. அந்தோ! தங்களுடைய முகங்களையும் முதுகுகளையும் நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள முடியாத, மேலும், தமக்கு எங்கிருந்தும் உதவி கிட்டாத ஒரு நேரத்தைக் குறித்து இந்நிராகரிப்பாளர்கள் கொஞ்சம் அறிந்திருக்க வேண்டுமே!
21:39. தங்கள் முகங்களையும், தங்கள் முதுகுகளையும் (நரக) நெருப்பிலிருந்து தடுத்துக்கொள்ள முடியாமலும் யாராலும் தங்களுக்கு உதவி செய்யப்படாமலும் இருப்பார்களே, அந்த நேரத்தை நிராகரிப்பவர்களாகிய (இ)வர்கள் அறிந்து கொள்வார்களானால் (அதுபற்றி கேட்கமாட்டார்கள்).
21:40
21:40 بَلْ تَاْتِيْهِمْ بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا يَسْتَطِيْعُوْنَ رَدَّهَا وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏
بَلْ மாறாக تَاْتِيْهِمْ அது அவர்களிடம் வரும் بَغْتَةً திடீரென فَتَبْهَتُهُمْ அது அவர்களை திடுக்கிடச் செய்யும் فَلَا يَسْتَطِيْعُوْنَ அவர்கள் இயலமாட்டார்கள் رَدَّهَا அதை தடுப்பதற்கு وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏ இன்னும் அவர்கள் தாமதிக்கப்பட மாட்டார்கள்
21:40. அவ்வாறல்ல! அது அவர்களிடம் திடீரென வந்து, அவர்களைத் தட்டழியச் செய்து விடும். அதைத் தடுத்துக் கொள்ள அவர்களால் இயலாது; அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்பட மாட்டாது.
21:40. எனினும், அது இவர்களிடம் திடுகூறாகவே வந்து அவர்களைத் தட்டுக் கெட்டுத் தடுமாறும்படிச் செய்து விடும்; அதைத் தட்டிக் கழித்துவிட இவர்களால் முடியாது. இவர்களுக்கு சிறிதும் அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டாது.
21:40. ஆயினும் அந்த ஆபத்து திடீரென்று அவர்களைத் தாக்கும். அது அவர்களை எந்த அளவு திகைப்படையச் செய்து விடும் எனில், அவர்களால் அதனைத் தடுக்க முடியாது; மேலும், ஒரு கணப்பொழுது கூட அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட மாட்டாது.
21:40. அவ்வாறல்ல! அது இவர்களிடம் திடீரென வந்து அவர்களைத் தட்டுக்கெட்டுத் தடுமாறச் செய்துவிடும், அதனைத் தட்டி(க் கழித்து) விட இவர்கள் சக்திபெற மாட்டார்கள், இவர்கள் (தப்பித்துக்கொள்ள) அவகாசம் கொடுக்கப்படவுமாட்டார்கள்.
21:41
21:41 وَلَـقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِيْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏
وَلَـقَدِ اسْتُهْزِئَ பரிகசிக்கப்பட்டுள்ளது بِرُسُلٍ பல தூதர்களை مِّنْ قَبْلِكَ உமக்கு முன்னர் فَحَاقَ வந்து இறங்கியது بِالَّذِيْنَ سَخِرُوْا ஏளனம் செய்தவர்களை مِنْهُمْ அவர்களில் مَّا எது كَانُوْا இருந்தார்களோ بِهٖ அதை يَسْتَهْزِءُوْنَ‏ பரிகசித்தார்கள்
21:41. இன்னும், (நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னர் வந்த தூதர்களும் (இவ்வாறே) பரிகசிக்கப் பட்டார்கள் - ஆனால் அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்த (வேதனையான)து அவர்களை சூழ்ந்து கொண்டது.  
21:41. உமக்கு முன்னர் வந்த நம் தூதர்களும் (இவ்வாறே எதிரிகளால்) பரிகாசம் செய்யப்பட்டனர். ஆகவே, பரிகாசம் செய்து கொண்டிருந்தவர்களை அவர்கள் பரிகாசம் செய்த வேதனை வந்து சூழ்ந்து கொண்டது.
21:41. (நபியே!) உமக்கு முன்பும் தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். ஆயினும், அவர்களைப் பரிகாசம் செய்தவர்கள், எதைக் குறித்துப் பரிகாசம் செய்தார்களோ அதுவே அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டது.
21:41. (நபியே!) உமக்கு முன்னர் (வந்த நம்முடைய) தூதர்களும் (இவ்வாறே விரோதிகளால்) பரிகாசம் செய்யப்பட்டனர், ஆகவே, அவர்கள் எதனைப்பற்றிப் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களில் பரிகாசம் செய்து வந்தோரைச் சூழ்ந்து கொண்டது.
21:42
21:42 قُلْ مَنْ يَّكْلَـؤُكُمْ بِالَّيْلِ وَالنَّهَارِ مِنَ الرَّحْمٰنِ‌ؕ بَلْ هُمْ عَنْ ذِكْرِ رَبِّهِمْ مُّعْرِضُوْنَ‏
قُلْ கூறுவீராக مَنْ யார் يَّكْلَـؤُ பாதுகாப்பவர் كُمْ உங்களை بِالَّيْلِ இரவிலும் وَالنَّهَارِ பகலிலும் مِنَ الرَّحْمٰنِ‌ؕ ரஹ்மானிடமிருந்து بَلْ மாறாக هُمْ அவர்கள் عَنْ ذِكْرِ அறிவுரையை رَبِّهِمْ தங்கள் இறைவனின் مُّعْرِضُوْنَ‏ புறக்கணிக்கிறார்கள்
21:42. “உங்களை, இரவிலும், பகலிலும் அர்ரஹ்மானுடைய (வேதனையிலிருந்து) பாதுகாக்கக்கூடியவர் எவர்?” என்று (நபியே!) நீர் கேளும்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனை நினைப்பதையே புறக்கணிப்பவர்கள்.
21:42. (நபியே! இவர்களை நோக்கி) ‘‘இரவிலோ பகலிலோ வரக்கூடிய ரஹ்மானுடைய வேதனையில் இருந்து உங்களை பாதுகாப்பவர் யார்?'' என்று கேட்பீராக. எனினும் இவர்களோ தங்கள் இறைவனை நினைப்பதையே முற்றிலும் புறக்கணித்து விட்டனர்.
21:42. (நபியே!) “இரவிலோ, பகலிலோ கருணை மிக்க இறைவனின் பிடியிலிருந்து உங்களைக் காப்பாற்றக் கூடியவர் யார்?” என்று நீர் அவர்களிடம் கேளும். ஆயினும், அவர்கள் தம்முடைய இறைவனின் நல்லுரையைப் புறக்கணிப்பவர்களாகவே இருக்கின்றார்கள்.
21:42. (நபியே! இவர்களிடம்) இரவிலும், பகலிலும் (வரக்கூடிய) அர்ரஹ்மானின் வேதனையி(லிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடியவர் யார்? என்று நீர் கேட்பீராக! ஆனால் இவர்களோ தங்கள் இரட்சகனை நினைப்பதையே முற்றிலும் புறக்கணிக்கக் கூடியவர்களாவர்.
21:43
21:43 اَمْ لَهُمْ اٰلِهَةٌ تَمْنَعُهُمْ مِّنْ دُوْنِنَا ‌ؕ لَا يَسْتَطِيْعُوْنَ نَـصْرَ اَنْفُسِهِمْ وَلَا هُمْ مِّنَّا يُصْحَبُوْنَ‏
اَمْ لَهُمْ அவர்களுக்கு உண்டா اٰلِهَةٌ கடவுள்கள் تَمْنَعُهُمْ பாதுகாக்கின்ற/ அவர்களை مِّنْ دُوْنِنَا ؕ நம்மை அன்றி لَا يَسْتَطِيْعُوْنَ இயலமாட்டார்கள் نَـصْرَ உதவுவதற்கே اَنْفُسِهِمْ தங்களுக்கு وَلَا இன்னும் هُمْ அவர்கள் مِّنَّا நம்மிடமிருந்து يُصْحَبُوْنَ‏ பாதுகாக்கப்பட மாட்டார்கள்
21:43. அல்லது, (நம்முடைய வேதனையிலிருந்து) நம்மையன்றி அவர்களைக் காப்பாற்றும் தெய்வங்கள் அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத்தாமே உதவிசெய்ய சக்தியற்றவர்கள். மேலும் அவர்கள் நம்மிடமிருந்து காப்பாற்றப்படுபவர்களும் அல்லர்.
21:43. இவர்களை (நம் வேதனையிலிருந்து) தடுக்கக்கூடிய தெய்வங்கள் நம்மைத் தவிர இவர்களுக்கு வேறு இருக்கின்றனவா? (இவர்கள் தெய்வங்கள் எனக் கூறும்) அவை (இவர்களுக்கு உதவி செய்வதென்ன!) தமக்குத்தாமே உதவி செய்துகொள்ளவும் சக்தியற்றவை. ஆகவே, நமக்கெதிராக அவை இவர்களுக்குத் துணை புரியாது.
21:43. நமக்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கக்கூடிய வேறு கடவுள்கள் அவர்களுக்கு இருக்கிறார்களா, என்ன? அவை தமக்கே உதவி செய்ய முடியாதவையாக இருக்கின்றன. மேலும், நம்முடைய ஆதரவையும் அவை பெற்றிருக்கவில்லை.
21:43. இவர்களை (நம்முடைய வேதனையை) விட்டும் தடுக்கக்கூடிய (வேறு) தெய்வங்கள் நம்மையன்றி அவர்களுக்கு இருக்கின்றனவா? அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ள சக்தி பெறமாட்டார்கள், இன்னும் அவர்கள் நம்மிடமிருந்து (நம் வேதனையை விட்டும்) காப்பாற்றப்படவுமாட்டார்கள்.
21:44
21:44 بَلْ مَتَّـعْنَا هٰٓؤُلَاۤءِ وَ اٰبَآءَهُمْ حَتّٰى طَالَ عَلَيْهِمُ الْعُمُرُ ‌ؕ اَفَلَا يَرَوْنَ اَنَّا نَاْتِى الْاَرْضَ نَـنْقُصُهَا مِنْ اَطْرَافِهَا ؕ‌ اَفَهُمُ الْغٰلِبُوْنَ‏
بَلْ மாறாக مَتَّـعْنَا சுகமளித்தோம் هٰٓؤُلَاۤءِ இவர்களுக்கு وَ اٰبَآءَ இன்னும் மூதாதைகளுக்கு هُمْ இவர்களின் حَتّٰى இறுதியாக طَالَ நீண்டது عَلَيْهِمُ இவர்களுக்கு الْعُمُرُ ؕ வாழ்க்கை اَفَلَا يَرَوْنَ அவர்கள் பார்க்கவில்லையா اَنَّا நிச்சயமாக நாம் نَاْتِى வருகிறோம் الْاَرْضَ பூமியை نَـنْقُصُهَا அதை அழிக்கிறோம் مِنْ اَطْرَافِهَا ؕ அதன் சுற்றுப்புறங்களிலிருந்து اَفَهُمُ ஆகவே, இவர்கள் الْغٰلِبُوْنَ‏ மிகைத்து விடுவார்களா
21:44. எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்; நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்?
21:44. இவர்களையும் இவர்களுடைய மூதாதைகளையும் (நீண்ட காலம் வரை) சுகமனுபவிக்கச் செய்தோம். அதனால் அவர்களின் ஆயுளும் அதிகரித்தது. (ஆகவே, அவர்கள் கர்வங்கொண்டு விட்டார்களா?) நிச்சயமாக நாம் இவர்களைச் சூழ்ந்துள்ள பூமியை(ப் படிப்படியாக)க் குறைத்து (இவர்களை நெருக்கி)க் கொண்டே வருவதை இவர்கள் காணவில்லையா? இவர்களா (நம்மை) வென்று விடுவார்கள்?
21:44. உண்மை யாதெனில், இவர்களுக்கும் இவர்களுடைய மூதாதையருக்கும் நாம் வாழ்க்கை வசதிகளை அளித்துக் கொண்டிருந்தோம். அவ்வாறு அவர்களுடைய காலம் நீண்டு ஓடியது...! ஆனால், நாம் பூமியை பல்வேறு திசையிலிருந்தும் குறைத்துக் கொண்டே வருகிறோம் என்பது இவர்களுக்குத் தென்படவில்லையா? பிறகு, இவர்கள் (நம்மை) வெற்றி கொண்டு விடுவார்களா?
21:44. எனினும், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் இவர்களின் ஆயுட்காலம் நீண்டதாக ஆகும்வரை சுகமனுபவிக்கச் செய்தோம், நிச்சயமாக நாம் பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்துக்கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் பார்க்கவில்லையா? (அவ்வாறிருக்க) இவர்களா நம்மை மிகைத்து விடுகிறவர்கள்?
21:45
21:45 قُلْ اِنَّمَاۤ اُنْذِرُكُمْ بِالْوَحْىِ ‌‌ۖ  وَلَا يَسْمَعُ الصُّمُّ الدُّعَآءَ اِذَا مَا يُنْذَرُوْنَ‏
قُلْ கூறுவீராக اِنَّمَاۤ اُنْذِرُ எச்சரிப்பதெல்லாம் كُمْ உங்களை بِالْوَحْىِ ۖ  வஹீ ன் மூலமாகத்தான் وَلَا يَسْمَعُ செவிசாய்க்க மாட்டார்கள் الصُّمُّ செவிடர்கள் الدُّعَآءَ அழைப்புக்கு اِذَا போது مَا يُنْذَرُوْنَ‏ எச்சரிக்கப்படும்
21:45. “நிச்சயமாக நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைக் கொண்டேதான்” என்று (நபியே!) நீர் கூறும்; எனினும், செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கப்படும் போது, (அவர்கள் நேர்வழி பெறும்) அந்த அழைப்பைச் செவிமடுக்க மாட்டார்கள்.
21:45. (நபியே! அவர்களை நோக்கி ‘‘வேதனையைக் கொண்டு) நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹ்யின் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டவற்றையே! (நான் சுயமாக எதையும் கூறவில்லை)'' என்று கூறுவீராக. (எனினும், இவர்கள் செவிடர்களைப் போல் இருக்கின்றனர். ஆகவே) இந்த செவிடர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டால் அதை அவர்கள் செவியேற்க மாட்டார்கள்.
21:45. நபியே! நீர் அவர்களிடம் கூறும்: “நான் வஹியின் அடிப்படையில் உங்களுக்கு எச்சரிக்கை செய்து கொண்டிருக்கின்றேன்” ஆயினும், செவிடர்கள் அழைப்பை செவியேற்கவே மாட்டார்கள்அவர்கள் எச்சரிக்கப்படும்போது!
21:45. (நபியே! அவர்களிடம்) “நான் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதெல்லாம் வஹீயைக் கொண்டுதான்” என்று நீர் கூறுவீராக! இன்னும் அவர்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்படும்பொழுது, அச்செவிடர்கள் உம் அழைப்பை செவியேற்கமாட்டார்கள்
21:46
21:46 وَلَٮِٕنْ مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَيَقُوْلُنَّ يٰوَيْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِيْنَ‏
وَلَٮِٕنْ مَّسَّتْهُمْ அவர்களை அடைந்தால் نَفْحَةٌ ஒரு பகுதி مِّنْ عَذَابِ தண்டனையிலிருந்து رَبِّكَ உமது இறைவனின் لَيَقُوْلُنَّ நிச்சயமாக கூறுவார்கள் يٰوَيْلَنَاۤ எங்கள் நாசமே اِنَّا நிச்சயமாக நாங்கள் كُنَّا இருந்தோம் ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
21:46. உம்முடைய இறைவனிடமிருந்துள்ள வேதனையிலிருந்து ஒரு மூச்சு அவர்களைத் தீண்டுமானாலும், “எங்களுக்குக் கேடு தான்! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தோம்” என்று அவர்கள் நிச்சயமாக கூ(றிக் கத)றுவார்கள்.
21:46. உமது இறைவனுடைய வேதனையின் வாடை இவர்கள் மீது பட்டாலே போதும் ‘‘நாங்கள் அழிந்தோம்; நிச்சயமாக நாங்களே எங்களுக்குத் தீங்கு இழைத்துக் கொண்டோம்!'' என்று கூச்சல் இடுவார்கள்.
21:46. உம்முடைய இறைவன் தரும் வேதனை சிறிதளவு அவர்களைத் தீண்டிவிட்டால் கூட “எங்களின் துர்ப்பாக்கியமே! திண்ணமாக, நாங்கள் கொடுமையாளர்களாய் இருந்தோம்” என்று அலறுவார்கள்.
21:46. மேலும், உம் இரட்சகனுடைய வேதனையிலிருந்து ஒரு சிறிதளவு அவர்களைத் தொட்டு விடுமானால், “எங்களுக்கு ஏற்பட்ட கேடே! திட்டமாக நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று நிச்சயமாகக் கூறுவார்கள்.
21:47
21:47 وَنَضَعُ الْمَوَازِيْنَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيٰمَةِ فَلَا تُظْلَمُ نَـفْسٌ شَيْــٴًـــا‌ ؕ وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَيْنَا بِهَا‌ ؕ وَكَفٰى بِنَا حٰسِبِيْنَ‏
وَنَضَعُ நாம் வைப்போம் الْمَوَازِيْنَ தராசுகளை الْقِسْطَ நீதமான لِيَوْمِ الْقِيٰمَةِ மறுமை நாளில் فَلَا تُظْلَمُ அநீதி இழைக்கப்படாது نَـفْسٌ ஓர் ஆன்மாவுக்கு شَيْــٴًـــا‌ ؕ அறவே وَاِنْ كَانَ இருந்தாலும் مِثْقَالَ அளவு حَبَّةٍ விதை مِّنْ خَرْدَلٍ கடுகின் اَتَيْنَا بِهَا‌ ؕ அதை நாம் கொண்டு வருவோம் وَكَفٰى بِنَا நாமே போதுமானவர்கள் حٰسِبِيْنَ‏ விசாரிப்பவர்களாக
21:47. இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
21:47. மறுமை நாளில் சரியான தராசையே நாம் நிறுத்துவோம். எந்த ஓர் ஆத்மாவுக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (வேறெவரின் உதவியும் நமக்குத் தேவையில்லை.)
21:47. நாம் மறுமைநாளில் துல்லியமாக எடை போடும் தராசுகளை நிறுவுவோம். பிறகு, எவருக்கும் இம்மியளவும் அநீதி இழைக்கப்படமாட்டாது. எவருடைய ஒரு கடுகு மணியளவு செயலாயினும் அதனை நாம் (அங்கு) அவர்முன் கொண்டு வருவோம். கணக்கு வாங்குவதற்கு நாமே போதும்.
21:47. மேலும், மறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம், எந்த ஓர் ஆத்மாவும் (எதையும் குறைத்தோ, கூட்டியோ) சிறிதளவும் அநியாயம் செய்யப்படமாட்டாது, (நன்மையோ, தீமையோ) ஒரு கடுகின் வித்தளவு அது இருந்தபோதிலும், அதனையும் நிறுக்கக்) கொண்டு வருவோம், கணக்கெடுப்பவர்களில் (நமக்கு) நாமே போதும், (கணக்கெடுக்க மற்றவரின் உதவி நமக்குத் தேவையில்லை.)
21:48
21:48 وَلَـقَدْ اٰتَيْنَا مُوْسٰى وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِيَآءً وَّذِكْرًا لِّـلْمُتَّقِيْنَۙ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் مُوْسٰى மூஸா وَهٰرُوْنَ இன்னும் ஹாரூனுக்கு الْفُرْقَانَ பிரித்தறிவிக்கக்கூடிய وَضِيَآءً வெளிச்சத்தை وَّذِكْرًا ஓர் அறிவுரையை لِّـلْمُتَّقِيْنَۙ‏ இறையச்ச முள்ளவர்களுக்குரிய
21:48. இன்னும், நாம் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் வேதத்தை நிச்சயமாக நாம் கொடுத்தோம்; (அது) பயபக்தியுடையவர்களுக்கு ஓர் ஒளியாகவும், நினைவூட்டும் நற்போதனையாகவும் இருந்தது.
21:48. மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தையே நாம் கொடுத்திருந்தோம். அதை பிரகாசமாகவும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசமாகவும் ஆக்கினோம்.
21:48. முன்பு நாம் மூஸாவிற்கும், ஹாரூனுக்கும் (சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்தக்கூடிய) ஃபுர்கானையும், ஒளியையும், அறிவுரையையும் அருளியிருந்தோம். இவை இறையச்சமுடையோருக்கு பயனளிக்கக் கூடியவையாகும்.
21:48. இன்னும், மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக் கூடியதையும் ஒளியையும், பயபக்தியுடையோருக்கு உபதேசத்தையும் நிச்சயமாக நாம் கொடுத்திருந்தோம்.
21:49
21:49 الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ‏
الَّذِيْنَ எவர்கள் يَخْشَوْنَ பயப்படுவார்கள் رَبَّهُمْ தங்கள் இறைவனை بِالْغَيْبِ மறைவில் وَهُمْ இன்னும் அவர்கள் مِّنَ السَّاعَةِ மறுமையைப் பற்றி مُشْفِقُوْنَ‏ அஞ்சுவார்கள்
21:49. அவர்கள் தங்கள் இறைவனை அந்தரங்கத்திலும் அஞ்சுவார்கள்; இன்னும் அந்த (இறுதி) வேளையைக் குறித்துப் பயந்து கொண்டும் இருப்பார்கள்.
21:49. (இறையச்சமுடையவர்கள்) தங்கள் இறைவனைத் தங்கள் கண்ணால் பார்க்காவிடினும் அவனுக்குப் பயப்படுவதுடன், மறுமையைப் பற்றியும் அவர்கள் (எந்நேரமும் பயந்து) நடுங்கிக் கொண்டிருப்பார்கள்.
21:49. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் எனில், கண்ணால் பார்க்காமலே தம் இறைவனுக்கு அஞ்சுகின்றார்கள். மேலும் (கணக்கு வாங்கும்) அந்நாளைப் பற்றி அஞ்சுகின்றார்கள்.
21:49. (பயபக்தியுடைய) அவர்கள் எத்தகையோரென்றால், மறைந்த நிலையில் தங்கள் இரட்சகனை பயப்படுவார்கள், இன்னும், அவர்கள் மறுமையைப் பற்றியும் பயந்து (நடுங்கி)க் கொண்டிருப்பவர்கள்.
21:50
21:50 وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُ‌ؕ اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ‏
وَهٰذَا இது ذِكْرٌ அறிவுரையாகும் مُّبٰرَكٌ அருள்மிகுந்த اَنْزَلْنٰهُ‌ؕ இதை இறக்கினோம் اَفَاَنْتُمْ ?/நீங்கள் لَهٗ இதை مُنْكِرُوْنَ‏ மறுக்கின்றீர்கள்
21:50. இன்னும் இது (குர்ஆன்) நாம் அருள் செய்த பாக்கியம் மிக்க புனிதமான உபதேசமாகும். இதனையா நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்?  
21:50. இந்த குர்ஆன் மிக்க பாக்கியமுடைய நல்லுபதேசமாகும். இதை நாமே இறக்கி வைத்தோம். இதை நீங்கள் நிராகரித்து விடுவீர்களா?
21:50. மேலும், பாக்கியங்கள் நிறைந்த இந்த அறிவுரையை இப்பொழுது நாம் (உங்களுக்காக) இறக்கியிருக்கின்றோம். இனி, நீங்கள் இதனை ஏற்க மறுக்கின்றீர்களா, என்ன?
21:50. இன்னும், இந்த குர் ஆனாகிற(து) அதன் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்ட (நிலையில்) பரக்கத்துச் செய்யப்பட்ட நல்லுபதேசமாகும், இதனை நாம் இறக்கி வைத்தோம், இதனை நீங்கள் மறுக்கக்கூடியவர்களா?
21:51
21:51 وَلَـقَدْ اٰتَيْنَاۤ اِبْرٰهِيْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَ كُنَّا بِهٖ عٰلِمِيْنَ‌ۚ‏
وَلَـقَدْ اٰتَيْنَاۤ நாம் கொடுத்தோம் اِبْرٰهِيْمَ இப்றாஹீமுக்கு رُشْدَهٗ அவருடைய நேர்வழியை مِنْ قَبْلُ முன்னர் وَ كُنَّا நாம் இருந்தோம் بِهٖ அவரை عٰلِمِيْنَ‌ۚ‏ நன்கறிந்தவர்களாக
21:51. இன்னும், நாம் முன்னரே இப்ராஹீமுக்கு அவருக்குத் தகுந்த நேர்மையான வழியைத் திடனாக கொடுத்தோம் - அவரைப் பற்றி நாம் அறிந்திருந்தோம்.
21:51. நிச்சயமாக நாம் இப்றாஹீமுக்கு இதற்கு முன்னரே நல்லறிவைக் கொடுத்திருந்தோம். (அதற்குரிய) அவருடைய தன்மையை நன்கறிந்தோம்.
21:51. அதற்கும் முன்பு நாம் இப்ராஹீமுக்கு நல்லறிவை வழங்கியிருந்தோம். மேலும், நாம் அவரை நன்கு அறிந்திருந்தோம்.
21:51. நிச்சயமாக இப்றாஹீமுக்கு முன்னரே (சிறு பிராயத்திலிருந்தே) அவருடைய நல்வழியை நாம் கொடுத்திருந்தோம், அவரைப்பற்றி நாம் நன்கறிந்தோராகவும் இருந்தோம்.
21:52
21:52 اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِيْلُ الَّتِىْۤ اَنْتُمْ لَهَا عٰكِفُوْنَ‏
اِذْ சமயத்தை قَالَ கூறினார் لِاَبِيْهِ தனது தந்தைக்கு وَقَوْمِهٖ இன்னும் தனது சமுதாயத்திற்கு مَا என்ன هٰذِهِ இந்த التَّمَاثِيْلُ உருவங்கள் الَّتِىْۤ எது اَنْتُمْ நீங்கள் لَهَا இதன்மீது عٰكِفُوْنَ‏ நிலையாக இருக்கின்ற
21:52. அவர் தம் தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் “நீங்கள் வழிபடும் இந்த உருவங்கள் என்ன?” என்று கேட்ட போது:
21:52. அவர் தன் தந்தையையும், தன் மக்களையும் நோக்கி ‘‘நீங்கள் (மிக்க உற்சாகத்தோடு) வணங்கிவரும் இச்சிலைகள் என்ன? (எதற்காக நீங்கள் இவற்றை வணங்குகிறீர்கள்)'' என்று கேட்டதற்கு,
21:52. அவர் தம்முடைய தந்தையிடமும், தம் சமூகத்தாரிடமும் இவ்வாறு கூறியதை நினைத்துப் பாரும். “என்ன இது! நீங்கள் இந்த உருவச்சிலைகள் மீது இத்தனை ஆர்வத்துடன் பற்று கொண்டுள்ளீர்களே!”
21:52. அவர் தன் தந்தையிடமும், தன் சமூகத்தாரிடமும், “இச்சிலைகளென்ன? அவை எத்தகையவையென்றால் நீங்கள் அவற்றிற்காக (வழிபடுவதில்) நிலைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டபோது,
21:53
21:53 قَالُوْا وَجَدْنَاۤ اٰبَآءَنَا لَهَا عٰبِدِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் وَجَدْنَاۤ கண்டோம் اٰبَآءَنَا எங்கள் மூதாதைகளை لَهَا அவற்றை عٰبِدِيْنَ‏ வணங்குபவர்களாக
21:53. அவர்கள், “எங்கள் மூதாதையவர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கண்டோம் என்று கூறினார்கள்.
21:53. அவர்கள் ‘‘எங்கள் மூதாதைகள் இவற்றை வணங்கிக் கொண்டிருக்க நாங்கள் கண்டோம். (ஆதலால் நாங்களும் அவற்றை வணங்குகிறோம்)'' என்று கூறினார்கள்.
21:53. அதற்கு அவர்கள், “எங்கள் மூதாதையர் அவற்றை வணங்கி வந்ததை நாங்கள் கண்டோம்” என்று மறுமொழி தந்தார்கள்.
21:53. அவர்கள், “எங்கள் மூதாதையர்கள் இவைகளை வணங்கக்கூடியவர்களாக (இருந்ததை) நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள்.
21:54
21:54 قَالَ لَـقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
قَالَ கூறினார் لَـقَدْ திட்டமாக كُنْتُمْ இருக்கின்றீர்கள் اَنْتُمْ நீங்களும் وَاٰبَآؤُ மூதாதைகளும் كُمْ உங்கள் فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
21:54. (அதற்கு) அவர், “நிச்சயமாக நீங்களும், உங்களுடைய மூதாதையரும் - பகிரங்கமான வழி கேட்டில் தான் இருந்து வருகிறீர்கள்” என்று கூறினார்.
21:54. அதற்கவர் ‘‘நீங்களும் உங்கள் மூதாதைகளும் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கிறீர்கள்'' என்று கூறினார்.
21:54. அதற்கு அவர் கூறினார்: “நீங்களும் வழி பிறழ்ந்திருக்கின்றீர்கள்; உங்களுடைய மூதாதையரும் வெளிப்படையான வழிகேட்டில் கிடந்தார்கள்”
21:54. அ(தற்க)வர், “திட்டமாக நீங்களும், உங்கள் மூதாதையரும் பகிரங்கமான வழிகேட்டில்(தான்) இருந்துவிட்டீர்கள்” என்று கூறினார்.
21:55
21:55 قَالُوْۤا اَجِئْتَـنَا بِالْحَـقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِيْنَ‏
قَالُوْۤا கூறினர் اَجِئْتَـنَا நீர் எங்களிடம் வந்தீரா? بِالْحَـقِّ சத்தியத்தைக் கொண்டு اَمْ அல்லது اَنْتَ நீரும் ஒருவரா مِنَ اللّٰعِبِيْنَ‏ விளையாட்டாக பேசுபவர்களில்
21:55. (அதற்கு) அவர்கள் “நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது விளையாடுபவர்களில் ஒருவராக இருக்கின்றீரா?” என்று கேட்டார்கள்.
21:55. அதற்கவர்கள் ‘‘நீர் ஏதும் உண்மையான செய்தியை நம்மிடம் கொண்டு வந்திருக்கிறீரா? அல்லது (இவ்வாறு கூறி நம்முடன்) நீர் விளையாடுகிறீரா?'' என்று கேட்டனர்.
21:55. அதற்கவர்கள் கேட்டார்கள்: “எங்களிடம் உண்மையான கருத்தைத்தான் எடுத்துரைக்கின்றீரா? அல்லது கேலி செய்கின்றீரா?”
21:55. அ(தற்க)வர்கள், “நீர் எங்களிடம் ஏதும் உண்மை(யான செய்தி)யைக் கொண்டு வந்திருக்கின்றீரா? அல்லது விளையாடுபவர்களில் நீர் இருக்கின்றீரா? என்று கேட்டனர்.
21:56
21:56 قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِىْ فَطَرَهُنَّ ‌ۖ  وَاَنَا عَلٰى ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏
قَالَ அவர் கூறினார் بَلْ மாறாக رَّبُّكُمْ உங்களுக்கும் இறைவன் رَبُّ இறைவன்தான் السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமியின் الَّذِىْ எப்படிப்பட்டவன் فَطَرَهُنَّ ۖ  அவற்றைப்படைத்தான் وَاَنَا நானும் ஒருவன் عَلٰى ذٰلِكُمْ இதற்கு مِّنَ الشّٰهِدِيْنَ‏ சாட்சி கூறுபவர்களில்
21:56. “அப்படியல்ல. உங்களுடைய இறைவன் வானங்களுக்கும் பூமிக்கும் இறைவனாவான். அவனே அவற்றைப் படைத்தவன்; இதற்குச் சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்” என்று (இப்ராஹீம்) கூறினார்.
21:56. அதற்கவர் ‘‘(நான் விளையாடுபவன்) இல்லை. உங்கள் (உண்மையான) இறைவன், வானங்களையும், பூமியையும் படைத்த இறைவன்தான். (இந்த சிலைகளல்ல) இதற்கு நானே உங்களுக்குச் சாட்சி கூறுகிறேன்'' என்று கூறினார்.
21:56. அதற்கவர் பதிலளித்தார்: “இல்லை, உண்மையில் வானங்களையும் பூமியையும் படைத்து அவற்றிற்கு அதிபதியாக இருப்பவன் யாரோ அவனே உங்களின் அதிபதி ஆவான். இதற்கு நான் உங்கள் முன் சாட்சியம் கூறுகின்றேன்.
21:56. அ(தற்க)வர், (அவ்வாறு) “அல்ல! உங்களுடைய இரட்சகன் (அவன்தான்) வானங்களுக்கும், பூமிக்கும் இரட்சகனாவான், அவனே அவற்றைப் படைத்தான், இதற்கு சாட்சியம் கூறுபவர்களில் நானும் ஒருவனாக இருக்கிறேன்” என்று (இப்றாஹீம்) கூறினார்.
21:57
21:57 وَ تَاللّٰهِ لَاَكِيْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِيْنَ‏
وَ تَاللّٰهِ அல்லாஹ்வின் மீது சத்தியமாக لَاَكِيْدَنَّ நிச்சயமாக நான் சதி செய்வேன் اَصْنَامَكُمْ உங்கள் சிலைகளுக்கு بَعْدَ பின்னர் اَنْ تُوَلُّوْا مُدْبِرِيْنَ‏ நீங்கள் திரும்பிச் சென்ற
21:57. “இன்னும்: நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்கள் சிலைகளுக்கு ஒரு சதி செய்வேன்!” (என்றும் கூறினார்.)
21:57. (இங்கிருந்து) ‘‘நீங்கள் திரும்பிச் சென்ற பின்னர் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உங்கள் சிலைகளைப் பங்கப்படுத்திவிடுவேன்'' (என்றும் கூறினார்.)
21:57. மேலும், அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் இல்லாத சமயம் உங்களுடைய உருவச் சிலைகளை திண்ணமாக, நான் ஒரு கை பார்ப்பேன்.”
21:57. “இன்னும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் (இங்கிருந்து) புறங்காட்டியவர்களாகத் திரும்பிச் சென்ற பின், உங்கள் சிலைகளுக்குத் திண்ணமாக நான் சதி செய்வேன்” (என்றும் கூறினார்.)
21:58
21:58 فَجَعَلَهُمْ جُذٰذًا اِلَّا كَبِيْرًا لَّهُمْ لَعَلَّهُمْ اِلَيْهِ يَرْجِعُوْنَ‏
فَجَعَلَهُمْ அவற்றை ஆக்கிவிட்டார் جُذٰذًا சிறுசிறு துண்டுகளாக اِلَّا தவிர كَبِيْرًا பெரிய சிலை لَّهُمْ அவர்களுக்குரிய لَعَلَّهُمْ அவர்கள் اِلَيْهِ அதனளவில் يَرْجِعُوْنَ‏ திரும்ப வருவதற்காக
21:58. அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).
21:58. (அவ்வாறே அவர்கள் சென்ற பின்னர்) அவற்றில் பெரிய சிலையைத் தவிர (மற்ற) அனைத்தையும் துண்டு துண்டாக உடைத்துத் தள்ளிவிட்டார். அவர்கள் (திரும்ப வந்த பின்னர் இதைப் பற்றி விசாரிப்பதற்காகப்) பெரிய சிலையிடம் செல்லக் கூடும் (என்று அதை மட்டும் உடைக்கவில்லை).
21:58. பிறகு அவர் அவற்றைத் துண்டு துண்டாய் உடைத்தார். அவற்றில் பெரிய சிலையை மட்டும் விட்டு வைத்தார். அவர்கள் அதனை நோக்கி வரக் கூடும் என்பதற்காக!
21:58. (அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னர்) அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) யாவற்றையும் துண்டு துண்டாக ஆக்கி (உடைத்துத் தள்ளி) விட்டார், (பெரிய சிலையாகிய) அதன்பால் (விளக்கம் கேட்டு) அவர்கள் திரும்புவதற்காக (அதனை மட்டும் உடைக்கவில்லை).
21:59
21:59 قَالُوْا مَنْ فَعَلَ هٰذَا بِاٰلِهَتِنَاۤ اِنَّهٗ لَمِنَ الظّٰلِمِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் مَنْ யார்? فَعَلَ செய்தார் هٰذَا இதை بِاٰلِهَتِنَاۤ எனவே கடவுள்களுக்கு اِنَّهٗ நிச்சயமாக அவர் لَمِنَ الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களில் ஒருவர் ஆவார்
21:59. “எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான்” என்று கூறினார்கள்.
21:59. அவர்கள் (திரும்ப வந்து இக்காட்சியைக் கண்டதும்) ‘‘எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவன் எவன்? நிச்சயமாக அவன் மகா அநியாயக்காரன்'' என்று கூறினார்கள்.
21:59. அவர்கள் (திரும்பி வந்து சிலைகளின் இந்த நிலையைக் கண்டதும்) கேட்கலாயினர்: “நம்முடைய தெய்வங்களை இந்நிலைக்கு ஆளாக்கியவன் யார்? உண்மையில் அவன் பெரும் கொடுமைக்காரனாகத்தான் இருக்க வேண்டும்.”
21:59. (திரும்ப வந்து, இவற்றைக் கண்ட) அவர்கள். “எங்கள் (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை இவ்வாறு செய்தவன் யார்? நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களில் உள்ளவன்” என்று கூறினார்கள்.
21:60
21:60 قَالُوْا سَمِعْنَا فَتًى يَّذْكُرُهُمْ يُقَالُ لَهٗۤ اِبْرٰهِيْمُ ؕ‏
قَالُوْا அவர்கள் கூறினர் سَمِعْنَا நாங்கள் செவியுற்றோம் فَتًى ஒரு வாலிபரை يَّذْكُرُ விமர்சிக்கின்றார் هُمْ அவற்றை يُقَالُ சொல்லப்படும் لَهٗۤ அவருக்கு اِبْرٰهِيْمُ ؕ‏ இப்றாஹீம்
21:60. அதற்கு (அவர்களில் சிலர்) “இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்ராஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது” என்று கூறினார்கள்.
21:60. அதற்கு (அவர்களில் சிலர்) ‘‘ஒரு வாலிபர் இவற்றைப் பற்றி(க் குறை) கூறிக் கொண்டிருப்பதை நாங்கள் செவியுற்று இருக்கிறோம். அவருக்கு ‘இப்றாஹீம்' என்று பெயர் கூறப்படுகிறது'' என்று கூறினார்கள்.
21:60. (சிலர்) கூறினர்: “இப்ராஹீம் எனும் பெயருடைய ஓர் இளைஞர் இந்தச் சிலைகள் பற்றிக் கூறுவதை நாங்கள் கேட்டிருந்தோம்.”
21:60. அ(தற்க)வர்களில் சிலர் “ஒரு இளைஞர் இவைகளைப் பற்றிக் (குறை) கூறிக் கொண்டிருந்ததை நாங்கள் செவியுற்றிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று (பெயர்) கூறப்படுகிறது” என்று கூறினார்கள்.
21:61
21:61 قَالُوْا فَاْتُوْا بِهٖ عَلٰٓى اَعْيُنِ النَّاسِ لَعَلَّهُمْ يَشْهَدُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் فَاْتُوْا கொண்டு வாருங்கள் بِهٖ அவரை عَلٰٓى اَعْيُنِ கண்களுக்கு முன் النَّاسِ மக்களின் لَعَلَّهُمْ يَشْهَدُوْنَ‏ அவர்கள் பார்ப்பதற்காக
21:61. “அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு” என்று சொன்னார்கள்.
21:61. அதற்கவர்கள் ‘‘(அவ்வாறாயின்) அவரை மக்கள் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள். (அவர் கூறும் பதிலுக்கு) அனைவரும் சாட்சியாக இருக்கட்டும்'' என்று கூறினார்கள்.
21:61. அதற்கவர்கள் கூறினர்: “பிடித்துக் கொண்டு வாருங்கள் அவரை, எல்லோர் முன்னிலையிலும்! (அவர் மீது எவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை) மக்கள் பார்க்கட்டும்!”
21:61. அ(தற்க)வர்கள், “அவ்வாறாயின், அவரை மக்களின் கண்களுக்கெதிரில் கொண்டு வாருங்கள் (அவரை யாவரும் பார்த்து) அவர்கள் சாட்சியம் கூறலாம்” என்று கூறினார்கள்.
21:62
21:62 قَالُوْٓا ءَاَنْتَ فَعَلْتَ هٰذَا بِاٰلِهَتِنَا يٰۤاِبْرٰهِيْمُؕ‏
قَالُوْٓا கூறினர் ءَاَنْتَ நீர்தான் فَعَلْتَ செய்தீரா هٰذَا இதை بِاٰلِهَتِنَا எங்கள் கடவுள்களுடன் يٰۤاِبْرٰهِيْمُؕ‏ இப்றாஹீமே
21:62. “இப்ராஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ?” என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.
21:62. (அவ்வாறு இப்றாஹீமைக் கொண்டு வந்து அவரை நோக்கி) ‘‘இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர்தானோ?'' என்று கேட்டனர்.
21:62. (இப்ராஹீம் வந்ததும்) அவர்கள் கேட்டார்கள்: “இப்ராஹீமே! நீர்தாமா எங்கள் கடவுள்களுடன் இவ்வாறு (தரக்குறைவாக) நடந்து கொண்டது?”
21:62. (அவ்வாறு கொண்டு வரப்பட்ட அவரிடம்,) “இப்றாஹீமே! எங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தானா?” என்று கேட்டனர்.
21:63
21:63 قَالَ بَلْ فَعَلَهٗ ‌‌ۖ  كَبِيْرُهُمْ هٰذَا فَسْــٴَــلُوْهُمْ اِنْ كَانُوْا يَنْطِقُوْنَ‏
قَالَ அவர்கள் கூறினர் بَلْ மாறாக فَعَلَهٗ இதை செய்தது ۖ  كَبِيْرُ பெரிய சிலைதான் هُمْ அவற்றில் هٰذَا அவை فَسْــٴَــلُوْ ஆகவே கேளுங்கள் هُمْ அவற்றிடம் اِنْ كَانُوْا இருந்தால் يَنْطِقُوْنَ‏ பேசுபவர்களாக
21:63. அதற்கு அவர் “அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்” என்று கூறினார்.
21:63. அதற்கவர் ‘‘இல்லை. இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே! இதுதான் செய்திருக்கலாம்! (உடைப்பட்ட) இவை பேசக்கூடியவையாக இருந்தால் அவற்றையே கேளுங்கள்'' என்றார்.
21:63. அதற்கு அவர், “இவற்றில் இந்தப் பெரிய சிலைதான் இவற்றையெல்லாம் செய்திருக்க வேண்டும். (துண்டுபட்ட) இவை பேசுமாயின் இவற்றிடமே கேட்டுப் பாருங்கள்” என்றார்.
21:63. அ(தற்க)வர், “அவ்வாறல்ல! அதை அவர்களில் பெரியது தான் செய்தது, (உடைக்கப்பட்ட) அவர்கள் பேசக்கூடியவர்களாக இருந்தால் அவர்களையே கேளுங்கள்! என்று கூறினார்.
21:64
21:64 فَرَجَعُوْۤا اِلٰٓى اَنْـفُسِهِمْ فَقَالُوْۤا اِنَّكُمْ اَنْـتُمُ الظّٰلِمُوْنَۙ‏
فَرَجَعُوْۤا அவர்கள் திரும்பினர் اِلٰٓى பக்கமே اَنْـفُسِهِمْ தங்கள் فَقَالُوْۤا கூறினர் اِنَّكُمْ اَنْـتُمُ நிச்சயமாக நீங்கள்தான் الظّٰلِمُوْنَۙ‏ அநியாயக்காரர்கள்
21:64. (இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) “நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்” என்று பேசிக் கொண்டார்கள்.
21:64. அவர்கள் (இதற்குப் பதில் கூறமுடியாமல் நாணமுற்றுத்) தங்களுக்குள் (ஒருவர் மற்றவரை நோக்கி) “நிச்சயமாக நீங்கள்தான் (இவற்றைத் தெய்வமெனக் கூறி) அநியாயம் செய்து விட்டீர்கள்'' என்று கூறிக் கொண்டார்கள்.
21:64. இதைக் கேட்டு அவர்கள் தங்களுடைய மனச்சாட்சியின் பக்கம் திரும்பினர். பிறகு, ஒவ்வொருவரும் (தங்களுக்குள்) “உண்மையில் நீங்களே அக்கிரமக்காரர்கள்” என்று கூறினார்கள்.
21:64. அவர்கள் (நாணமுற்று) தங்கள் பக்கமே திரும்பி (ஒருவர் மற்றவரிடம்,) “நிச்சயமாக நீங்கள் தான் (இவற்றை வணங்கி) அக்கிரமம் செய்து விட்டீர்கள்” என்று கூறிக்கொண்டார்கள்.
21:65
21:65 ثُمَّ نُكِسُوْا عَلٰى رُءُوْسِہِمْ‌ۚ لَـقَدْ عَلِمْتَ مَا هٰٓؤُلَاۤءِ يَنْطِقُوْنَ‏
ثُمَّ பிறகு نُكِسُوْا மாறினர் عَلٰى رُءُوْسِہِمْ‌ۚ அவர்கள் தலைகீழாக لَـقَدْ திட்டவட்டமாக عَلِمْتَ நீர் அறிவீர் مَا هٰٓؤُلَاۤءِ يَنْطِقُوْنَ‏ இவை பேசாது என்பதை
21:65. பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; “இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!” (என்று கூறினர்).
21:65. பின்னர், அவர்கள் (வெட்கத்தால் சிறிது நேரம்) தலை குனிந்திருந்து (இப்றாஹீமை நோக்கி) ‘‘இவை பேசாது என்பதை நிச்சயமாக நீர் அறிவீரே! (அவ்வாறிருக்க இவற்றிடம் நாங்கள் கேட்கும்படி எங்களிடம் எவ்வாறு கூறுகிறீர்?)'' (என்று கூறினார்கள்).
21:65. ஆனால் பிறகு அவர்களுடைய புத்தி தலைகீழாக மாறிற்று. “இப்ராஹீமே! இவை பேசமாட்டா என்பது உமக்குத் தெரிந்ததுதானே!” என்று கூறினார்கள்.
21:65. பின்னர், (வெட்கத்தால்) அவர்கள் தலைகுனியச் செய்யப்பட்டார்கள், (சற்று நேரத்திற்குப் பிறகு இப்றாஹீமிடம்,) “இவைகள் பேசமாட்டா, என்பதை நிச்சயமாக நீர் அறிந்திருக்கிறீர்” என்று கூறினார்கள்.
21:66
21:66 قَالَ اَفَتَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكُمْ شَيْـٴًـــا وَّلَا يَضُرُّكُمْؕ‏
قَالَ அவர் கூறினார் اَفَتَعْبُدُوْنَ வணங்குகிறீர்களா? مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ அல்லாஹ்வை مَا எவற்றை يَنْفَعُكُمْ உங்களுக்கு شَيْـٴًـــا அறவே وَّلَا يَضُرُّكُمْؕ‏ இன்னும் உங்களுக்கு தீங்கிழைக்காது
21:66. “(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள்” என்று கேட்டார்.
21:66. அதற்கவர் ‘‘உங்களுக்கு ஒரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாத (இ)வற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?
21:66. அதற்கு இப்ராஹீம் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு இலாபத்தையோ, நஷ்டத்தையோ அளிக்க வலிமையற்ற தெய்வங்களையா வணங்குகின்றீர்கள்?
21:66. “கொஞ்சமும் உங்களுக்கு நன்மை செய்யாத, உங்களுக்குத் தீமையும் செய்யாத, அல்லாஹ் அல்லாதவற்றையா நீங்கள் வணங்குகிறீர்கள்?” என்று (இப்றாஹீமாகிய) அவர் கேட்டார்.
21:67
21:67 اُفٍّ لَّـكُمْ وَلِمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
اُفٍّ சீச்சி لَّـكُمْ உங்களுக்கு وَلِمَا تَعْبُدُوْنَ இன்னும் நீங்கள் வணங்குபவர்களுக்கு مِنْ دُوْنِ அன்றி اللّٰهِ‌ؕ அல்லாஹ்வை اَفَلَا تَعْقِلُوْنَ‏ நிச்சயமாக சிந்தித்து புரியமாட்டீர்களா?
21:67. “சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்).
21:67. சீச்சி! (கேவலம் நீங்களென்ன) உங்களுக்கும் கேடுதான்; நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைக(ளென்ன இவை)களுக்கும் கேடுதான். என்னே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறினார்.
21:67. சீச்சி! எவ்வளவு கேவலம்! உங்களுக்கும் நீங்கள் வழிபாடு செய்கின்ற தெய்வங்களுக்கும்! உங்களுக்குக் கொஞ்சமும் அறிவில்லையா, என்ன?”
21:67. “சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத இவைகளுக்கும் (நாசம்தான்,) நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?” என்று கூறினார்.
21:68
21:68 قَالُوْا حَرِّقُوْهُ وَانْصُرُوْۤا اٰلِهَتَكُمْ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறினர் حَرِّقُوْهُ அவரை எரித்து விடுங்கள் وَانْصُرُوْۤا இன்னும் உதவி செய்யுங்கள் اٰلِهَتَكُمْ உங்கள் கடவுள்களுக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் فٰعِلِيْنَ‏ (உதவி)செய்பவர்களாக
21:68. (இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.
21:68. அதற்கவர்கள் (தங்கள் மனிதர்களை நோக்கி,) ‘‘நீங்கள் ஏதும் செய்ய வேண்டுமென்றி ருந்தால் இவரை நெருப்பில் எரித்து உங்கள் தெய்வங்களுக்காக இவரிடம் பழி வாங்குங்கள்'' என்று கூறினார்கள்.
21:68. அதற்கு அவர்கள் கூறினார்கள்: “எரித்துவிடுங்கள் இவரை! உதவுங்கள் உங்கள் தெய்வங்களுக்கு நீங்கள் ஏதும் செய்வதாயிருந்தால்!”
21:68. அ(தற்க)வர்கள், “நீங்கள் ஏதும் செய்பவர்களாக இருந்தால், இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள், (அதன்மூலம்) உங்கள் (வணக்கத்திற்குரிய) தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள் என்று (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினார்கள்.
21:69
21:69 قُلْنَا يٰنَارُ كُوْنِىْ بَرْدًا وَّسَلٰمًا عَلٰٓى اِبْرٰهِيْمَۙ‏
قُلْنَا நாம் கூறினோம் يٰنَارُ நெருப்பே كُوْنِىْ ஆகிவிடு بَرْدًا குளிர்ச்சியாகவும் وَّسَلٰمًا பாதுகாப்பாகவும் عَلٰٓى اِبْرٰهِيْمَۙ‏ இப்றாஹீமுக்கு
21:69. (இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.
21:69. (அவ்வாறே அவர்கள் இப்றாஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) ‘‘நெருப்பே! நீ இப்றாஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!'' என்று நாம் கூறினோம்.
21:69. நாம் கூறினோம்: “நெருப்பே! நீ இப்ராஹீமுக்கு குளுமையாகவும், சாந்தமாகவும் ஆகிவிடு!”
21:69. (அவர்கள், இப்றாஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே,) “நெருப்பே! இப்றாஹீமுக்குக் குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக்கூடியதாகவும் ஆகிவிடு” என்று நாம் கூறினோம்.
21:70
21:70 وَاَرَادُوْا بِهٖ كَيْدًا فَجَعَلْنٰهُمُ الْاَخْسَرِيْنَ‌ۚ‏
وَاَرَادُوْا بِهٖ அவருக்கு நாடினர் كَيْدًا ஒரு சூழ்ச்சியை فَجَعَلْنٰهُمُ அவர்களையே ஆக்கிவிட்டோம் الْاَخْسَرِيْنَ‌ۚ‏ நஷ்டவாளிகளாக
21:70. மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!
21:70. அவர்கள் இப்றாஹீமுக்கு தீங்கிழைக்கக் கருதினார்கள். எனினும், நாம் அவர்களையே நஷ்டமடையும்படிச் செய்து விட்டோம்.
21:70. அவர்கள் இப்ராஹீமுக்குத் தீங்கு செய்ய நாடினார்கள். ஆனால், நாம் அவர்களையே தோல்வியுறச் செய்தோம்.
21:70. மேலும், அவர்கள், அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், நாம் அவர்களையே நஷ்டமடைந்தவர்களாகச் செய்து விட்டோம்.
21:71
21:71 وَنَجَّيْنٰهُ وَلُوْطًا اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا لِلْعٰلَمِيْنَ‏
وَنَجَّيْنٰهُ இன்னும் நாம் பாதுகாத்தோம்/அவரை وَلُوْطًا லூத்தையும் اِلَى பக்கம் الْاَرْضِ பூமியின் الَّتِىْ بٰرَكْنَا அருள்வளம் புரிந்த فِيْهَا அதில் لِلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
21:71. இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
21:71. அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் நாம் பாதுகாத்துக் கொண்டு, மனிதர்கள் பெரும் பாக்கியம் அடையக்கூடியதாக நாம் செய்திருக்கும் (பைத்துல் முகத்தஸ் என்னும்) ஊருக்கு கொண்டு வந்து சேர்த்தோம்.
21:71. நாம் அவரையும், லூத்தையும் காப்பாற்றி, உலக மக்கள் அனைவர்க்கும் நாம் பாக்கியம் பொழிந்திருக்கிற பூமிக்கு அவர்களைக் கொண்டு வந்தோம்.
21:71. நாம், அவரையும், லூத்தையும் அகிலத்தார்க்கு நாம் பாக்கியத்தை நல்கிய பூமியின் (பைத்துல் முகத்தஸின்) பால் (வரச்செய்து) ஈடேற்றம் பெறச் செய்தோம்.
21:72
21:72 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ ؕ وَيَعْقُوْبَ نَافِلَةً‌  ؕ وَكُلًّا جَعَلْنَا صٰلِحِيْنَ‏
وَوَهَبْنَا நாம் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ ؕ இஸ்ஹாக்கையும் وَيَعْقُوْبَ யஃகூபையும் نَافِلَةً‌  ؕ கொடையாக وَكُلًّا அனைவரையும் جَعَلْنَا ஆக்கினோம் صٰلِحِيْنَ‏ நல்லவர்களாக
21:72. இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.
21:72. மேலும், நாம் அவருக்கு (அவருடைய) கோரிக்கைக்கு அதிகமாக இஸ்ஹாக்கையும், யஅகூபையும் அருள் புரிந்தோம். இவர்கள் அனைவரையும் நல்லடியார்களாகவும் நாம் ஆக்கினோம்.
21:72. நாம் அவருக்கு இஸ்ஹாக்கை வழங்கினோம்; அதிகப்படியாக யஃகூபையும் வழங்கினோம். இவர்கள் ஒவ்வொருவரையும் நன்மக்களாகவும் நாம் ஆக்கினோம்.
21:72. அன்றியும், நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், கூடுதலாக யஃகூபையும் அன்பளிப்புச் செய்தோம். (இவர்களில்) ஒவ்வொருவரையும் நல்லோர்களாகவும் நாம் ஆக்கினோம்.
21:73
21:73 وَجَعَلْنٰهُمْ اَٮِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا وَاَوْحَيْنَاۤ اِلَيْهِمْ فِعْلَ الْخَيْرٰتِ وَاِقَامَ الصَّلٰوةِ وَاِيْتَآءَ الزَّكٰوةِ‌ۚ وَكَانُوْا لَـنَا عٰبِدِيْنَ ۙ‌ۚ‏
وَجَعَلْنٰهُمْ இன்னும் அவர்களை ஆக்கினோம் اَٮِٕمَّةً தலைவர்களாக يَّهْدُوْنَ நேர்வழி காட்டுகின்றார்கள் بِاَمْرِنَا நமது கட்டளையின்படி وَاَوْحَيْنَاۤ இன்னும் நாம் வஹீ அறிவித்தோம் اِلَيْهِمْ அவர்களுக்கு فِعْلَ செய்வதற்கும் الْخَيْرٰتِ நன்மைகளை وَاِقَامَ இன்னும் நிலைநிறுத்துவதற்கு الصَّلٰوةِ தொழுகையை وَاِيْتَآءَ இன்னும் கொடுப்பதற்கு الزَّكٰوةِ‌ۚ ஸகாத்தை وَكَانُوْا அவர்கள் இருந்தார்கள் لَـنَا நம்மை عٰبِدِيْنَ ۙ‌ۚ‏ வணங்குபவர்களாக
21:73. இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.
21:73. மேலும், நம் கட்டளைகளை (மக்களுக்கு) ஏவி நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் அவர்களை ஆக்கினோம். நன்மையான காரியங்களைச் செய்யுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ‘ஜகாத்' கொடுத்து வருமாறும் அவர்களுக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். அவர்கள் அனைவரும் நம்மையே வணங்கிக் கொண்டிருந்தார்கள்.
21:73. நாம் அவர்களை நம்முடைய கட்டளைப்படி வழிகாட்டுகின்ற தலைவர்களாக (இமாம்களாக) திகழச் செய்தோம். மேலும், அவர்கள் நற்செயல்கள் புரியும்படியும், தொழுகையை நிலை நாட்டும்படியும், ஜகாத் கொடுத்து வரும்படியும் வஹியின் மூலம் அவர்களுக்கு நாம் வழிகாட்டினோம். அவர்கள் நமக்கே அடிபணிபவர்களாய்த் திகழ்ந்தார்கள்.
21:73. இன்னும், நம்முடைய கட்டளையின்படி நேர் வழி காட்டுகின்ற தலைவர்களாவும் அவர்களை நாம் ஆக்கினோம், அன்றியும், நன்மையான காரியங்களைச் செய்யுமாறும், தொழுகையை நிறைவேற்றுமாறும், ஜகாத்தைக் கொடுத்து வருமாறும் இவர்களுக்கு (வஹீ மூலம்) நாம் அறிவித்தோம், இவர்கள் அனைவரும் நம்மையே வணங்குபவர்களாக இருந்தார்கள்.
21:74
21:74 وَلُوْطًا اٰتَيْنٰهُ حُكْمًا وَّعِلْمًا وَّنَجَّيْنٰهُ مِنَ الْقَرْيَةِ الَّتِىْ كَانَتْ تَّعْمَلُ الْخَبٰٓٮِٕثَ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فٰسِقِيْنَۙ‏
وَلُوْطًا இன்னும் லூத்தை நினைவு கூர்வீராக! اٰتَيْنٰهُ அவருக்கு நாம் கொடுத்தோம் حُكْمًا தீர்ப்பளிக்கின்ற ஆற்றலை(யும்) وَّعِلْمًا கல்வி ஞானத்தையும் وَّنَجَّيْنٰهُ நாம் அவரை பாதுகாத்தோம் مِنَ الْقَرْيَةِ ஊரிலிருந்து الَّتِىْ كَانَتْ இருந்தார்கள் تَّعْمَلُ செய்துகொண்டு الْخَبٰٓٮِٕثَ‌ؕ அசிங்கங்களை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தார்கள் قَوْمَ மக்களாக سَوْءٍ கெட்ட فٰسِقِيْنَۙ‏ பாவிகளாக
21:74. இன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
21:74. லூத்தையும் (நபியாக்கி) அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் கொடுத்துத் தீய காரியங்களைச் செய்து கொண்டிருந்த ஊர் மக்களில் இருந்தும் நாம் அவரை பாதுகாத்துக் கொண்டோம். நிச்சயமாக அவ்வூரார் (மனிதர்களில்) மிகக்கெட்ட மனிதர்களாகவும் பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.
21:74. மேலும், லூத்திற்கு நாம் ஹுக்ம் விவேகத்தையும் ஞானத்தையும் வழங்கினோம். மேலும், அருவருக்கத்தக்க செயல்கள் புரிந்து வந்த ஊரிலிருந்து அவரைக் காப்பாற்றி வெளியேற்றினோம். திண்ணமாக, அவ்வூர் மக்கள் மிகவும் கெட்டவர்களாகவும், பாவிகளாகவும் இருந்தார்கள்
21:74. லூத்தையும் (நபியாக்கி) – அவருக்கு நபித்துவத்ததையும், கல்வியையும் கொடுத்து, அருவருக்கத்தக்க செயல்களைச் செய்து கொண்டிருந்த ஊரிலிருந்தும் நாம் அவரை காப்பாற்றிக் கொண்டோம், நிச்சயமாக, அவர்கள் (மனிதர்களில்) மிகக் கெட்ட சமூகத்தினராக பெரும்பாவிகளாக இருந்தனர்.
21:75
21:75 وَاَدْخَلْنٰهُ فِىْ رَحْمَتِنَا‌ ؕ اِنَّهٗ مِنَ الصّٰلِحِيْنَ‏
وَاَدْخَلْنٰهُ இன்னும் அவரை நாம் நுழைத்தோம் فِىْ رَحْمَتِنَا‌ ؕ நமது அருளில் اِنَّهٗ நிச்சயமாக அவர் مِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் உள்ளவர்
21:75. இன்னும், அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்; நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
21:75. நாம் அவரை நம் அருளில் புகுத்தினோம். நிச்சயமாக அவர் நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.
21:75. மேலும், நாம் லூத்தை நம்முடைய அருளுக்கு உட்படுத்தினோம். அவர் உத்தமர்களில் ஒருவராய்த் திகழ்ந்தார்.
21:75. நூம் (லூத் ஆகிய) அவரை நம்முடைய அருளில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக அவர் நல்லோர்களில் உள்ளவராவார்.
21:76
21:76 وَنُوْحًا اِذْ نَادٰى مِنْ قَبْلُ فَاسْتَجَبْنَا لَهٗ فَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِ‌ۚ‏
وَنُوْحًا இன்னும் நூஹையும் நினைவு கூர்வீராக اِذْ نَادٰى அவர் அழைத்தபோது مِنْ قَبْلُ இதற்கு முன்னர் فَاسْتَجَبْنَا பதிலளித்தோம் لَهٗ அவருக்கு فَنَجَّيْنٰهُ பாதுகாத்தோம் وَاَهْلَهٗ இன்னும் அவருடைய குடும்பத்தாரை مِنَ الْكَرْبِ தண்டனையிலிருந்து الْعَظِيْمِ‌ۚ‏ பெரிய
21:76. இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.
21:76. நூஹையும் (நபியாக அனுப்பிவைத்தோம்.) அவர் இதற்கு முன்னர் செய்து கொண்டிருந்த பிரார்த்தனையை அவருக்காக நாம் அங்கீகரித்துக் கொண்டு, அவரையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் சிரமத்தில் இருந்து பாதுகாத்துக் கொண்டோம்.
21:76. இதே அருட்பேற்றினை நாம் நூஹுக்கும் வழங்கினோம். இவர்களனைவருக்கும் முன்னதாக அவர் நம்மிடம் இறைஞ்சியதை நினைவுகூரும்! நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு, அவரையும் அவர் குடும்பத்தையும் மாபெரும் துன்பத்திலிருந்து விடுவித்தோம்.
21:76. நூஹையும் (நினைவு கூர்வீராக!) முன்னர் அவர் (பிரார்த்தனை செய்து) அழைத்தபோது, அவருக்கு (அவரது பிரார்த்தனையை ஏற்று) நாம் பதில் கூறினோம், (அதன் பொருட்டு) அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெரும் கஷ்டத்திலிருந்து நாம் காப்பாற்றினோம்.
21:77
21:77 وَنَصَرْنٰهُ مِنَ الْقَوْمِ الَّذِيْنَ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمَ سَوْءٍ فَاَغْرَقْنٰهُمْ اَجْمَعِيْنَ‏
وَنَصَرْنٰهُ இன்னும் அவருக்கு நாம் உதவி செய்தோம் مِنَ الْقَوْمِ மக்களிடமிருந்து الَّذِيْنَ எவர்கள் كَذَّبُوْا பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا ؕ நமது அத்தாட்சிகளை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் قَوْمَ மக்களாக سَوْءٍ கெட்ட فَاَغْرَقْنٰهُمْ ஆகவே நாம் மூழ்கடித்தோம்/அவர்களை اَجْمَعِيْنَ‏ அனைவரையும்
21:77. இன்னும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராகவே இருந்தனர் - ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.
21:77. நம் வசனங்களைப் பொய்யாக்கிய மக்களுக்கு விரோதமாக அவருக்கு நாம் உதவி செய்தோம். நிச்சயமாக அவர்களும் மிகக் கெட்ட மக்களாகவே இருந்தனர். ஆதலால், அவர்கள் அனைவரையும் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்து விட்டோம்.
21:77. நம் சான்றுகளைப் பொய்யெனத் தூற்றிய சமுதாயத்தார்க்கு எதிராக நூஹுக்கு நாம் உதவியளித்தோம். திண்ணமாக, அம்மக்கள் மிகவும் தீயவர்களாகவே இருந்தார்கள். எனவே, நாம் அவர்களனைவரையும் மூழ்கடித்தோம்.
21:77. நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கிய சமூகத்தாரிலிருந்து (அவர்களின் தீமையைத் தடுத்து) அவருக்கு நாம் உதவியும் செய்தோம், நிச்சயமாக அவர்களும் மிகக் கெட்ட சமூகத்தவராகவே இருந்தனர், ஆதலால் அவர்கள் யாவரையும் (பெரு வெள்ளத்தில்) மூழ்கடித்துவிட்டோம்.
21:78
21:78 وَدَاوٗدَ وَسُلَيْمٰنَ اِذْ يَحْكُمٰنِ فِى الْحَـرْثِ اِذْ نَفَشَتْ فِيْهِ غَنَمُ الْقَوْمِ‌ۚ وَكُنَّا لِحُكْمِهِمْ شٰهِدِيْنَ ۙ‏
وَدَاوٗدَ இன்னும் தாவூது وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை اِذْ يَحْكُمٰنِ அவ்விருவரும் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக فِى الْحَـرْثِ விவசாயத்தின் விளைச்சலில் اِذْ نَفَشَتْ நுழைந்த போது فِيْهِ அதில் غَنَمُ ஆடுகள் الْقَوْمِ‌ۚ மக்களுடைய وَكُنَّا இருந்தோம் لِحُكْمِهِمْ அவர்களின் தீர்ப்பை شٰهِدِيْنَ ۙ‏ நாம் அறிந்தவர்களாக
21:78. இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.
21:78. தாவூதையும் ஸுலைமானையும் (நபியாக அனுப்பிவைத்தோம்). ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி (தாவூத், சுலைமான் ஆகிய) இருவரும் தீர்ப்புக் கூற இருந்த சமயத்தில் அவர்களுடைய தீர்ப்பை நாம் (கவனித்துப்) பார்த்துக் கொண்டிருந்தோம்.
21:78. இதே அருட்பேற்றினை தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வழங்கினோம். அவர்கள் இருவரும் ஒரு வயல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருந்ததை நினைத்துப் பாரும்: அந்த வயலிலோ இரவு நேரத்தில் மாற்றாரின் ஆடுகள் பரவலாக மேய்ந்து கொண்டிருந்தன. மேலும், அவர்கள் தீர்ப்பு வழங்கியதை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அவ்வேளை நாம் ஸுலைமானுக்குச் சரியான தீர்ப்பினை புலப்படுத்தினோம். ஆயினும், இருவருக்குமே தீர்ப்பு கூறும் நுண்ணறிவையும், ஞானத்தையும் நாம் வழங்கியிருந்தோம்.
21:78. வேளாண்மை நிலத்தில் ஒரு சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்து விட்டபோது, அவ்வேளாண்மை விஷயத்தில் தாவூது, சுலைமான் (ஆகிய இருவரும்) தீர்ப்பளித்த சந்தர்ப்பத்தை (நபியே! நினைவு கூர்வீராக! அப்போது) அவர்களுடைய தீர்ப்பை பார்ப்பவர்களாக நாம் இருந்தோம்.
21:79
21:79 فَفَهَّمْنٰهَا سُلَيْمٰنَ‌‌ۚ وَكُلًّا اٰتَيْنَا حُكْمًا وَّعِلْمًا‌ وَّسَخَّرْنَا مَعَ دَاوٗدَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ‌ ؕ وَكُنَّا فٰعِلِيْنَ‏
فَفَهَّمْنٰهَا அதை புரிய வைத்தோம் سُلَيْمٰنَ‌ۚ சுலைமானுக்கு وَكُلًّا எல்லோருக்கும் اٰتَيْنَا நாம் கொடுத்தோம் حُكْمًا ஞானத்தை(யும்) وَّعِلْمًا‌ இன்னும் கல்வியை وَّسَخَّرْنَا இன்னும் வசப்படுத்தினோம் مَعَ دَاوٗدَ தாவூதுடன் الْجِبَالَ மலைகளை يُسَبِّحْنَ துதிக்கின்றவையாக وَالطَّيْرَ‌ ؕ இன்னும் பறவைகளை وَكُنَّا இன்னும் நாம் இருந்தோம் فٰعِلِيْنَ‏ முடிவு செய்தவர்களாக
21:79. அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹு செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.
21:79. தீர்ப்புக் கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும் ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், ஸுலைமானுக்கு நியாயத்தை விளக்கிக் காண்பித்தோம். மலைகளையும் பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருடன் அல்லாஹ்வை தஸ்பீஹ் (துதி) செய்தன. நாமேதான் இவற்றை எல்லாம் செய்தோம்.
21:79. மலைகளையும், பறவைகளையும் தாவூதுக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அவை அவருடன் துதிபாடிக் கொண்டிருந்தன. இந்தச்செயலைச் செய்தவர்கள் நாமேதாம்!
21:79. தீர்ப்புக் கூறுவதில் நாம் ஸூலைமானுக்கு அ(தன் நியாயத்)தை விளங்க வைத்தோம், (அவ்விருவரில்) ஒவ்வொருவருக்கும் (தீர்ப்புக் கூறும்) அறிவையும், ஞானத்தையும் நாம் கொடுத்திருந்தோம், மலைகளையும், பட்சிகளையும் தாவூதுடன் (தஸ்பீஹ் செய்ய) வசப்படுத்தியும் கொடுத்தோம், அவை (அவருடன் அல்லாஹ்வை) துதி செய்தன, நாம்தாம் (இவற்றையெல்லாம்) செய்வோராய் இருந்தோம்.
21:80
21:80 وَعَلَّمْنٰهُ صَنْعَةَ لَبُوْسٍ لَّـكُمْ لِتُحْصِنَكُمْ مِّنْۢ بَاْسِكُمْ‌ۚ فَهَلْ اَنْـتُمْ شٰكِرُوْنَ‏
وَعَلَّمْنٰهُ நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம் صَنْعَةَ செய்வதை لَبُوْسٍ ஆயுதங்களை لَّـكُمْ உங்களுக்காக لِتُحْصِنَكُمْ உங்களை பாதுகாப்பதற்காக مِّنْۢ بَاْسِكُمْ‌ۚ உங்கள் போரில் فَهَلْ ஆகவே ? اَنْـتُمْ நீங்கள் شٰكِرُوْنَ‏ நன்றி செலுத்துவீர்கள்
21:80. இன்னும் நீங்கள் போரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா?
21:80. (போரில் ஈட்டி, கத்தி ஆகியவற்றின்) காயத்தில் இருந்து உங்களை பாதுகாக்கக் கூடிய கவசங்கள் செய்வதை நாம் அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களா?
21:80. மேலும், உங்கள் நன்மைக்காக கவசம் தயார் செய்யும் கலையை நாம் அவருக்குக் கற்றுத் தந்தோம்; நீங்கள் போரிடும்போது உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக! பிறகு நீங்கள் நன்றியுடையவர்களாய் இருக்கின்றீர்களா, என்ன?
21:80. இன்னும், (நீங்கள் எதிரிகளுடன் போரிடும்போது,) உங்களுடைய யுத்தத்தில் உங்களை தற்காத்துக் கொள்வதற்காக அணிந்துகொள்ளும் கவசங்கள் செய்வதை உங்களுக்காக நாம் அவருக்குக் கற்றுக்கொடுத்தோம், இதற்காக நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருக்கிறீர்களா?
21:81
21:81 وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِىْ بِاَمْرِهٖۤ اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا‌ؕ وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عٰلِمِيْنَ‏
وَلِسُلَيْمٰنَ இன்னும் சுலைமானுக்கு (நாம் வசப்படுத்தினோம்) الرِّيْحَ காற்றை عَاصِفَةً கடுமையாகவீசக்கூடிய تَجْرِىْ செல்லும் بِاَمْرِهٖۤ அவருடைய கட்டளையின்படி اِلَى الْاَرْضِ பூமியின் பக்கம் الَّتِىْ எது بٰرَكْنَا நாம் அருள்வளம் புரிந்தோம் فِيْهَا‌ؕ அதில் وَكُنَّا இன்னும் நாம் இருந்தோம் بِكُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் عٰلِمِيْنَ‏ அறிந்தவர்களாக
21:81. இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.
21:81. ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம்பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச்செல்லும் எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம்.
21:81. மேலும், நாம் ஸுலைமானுக்கு வேகமான காற்றை வசப்படுத்தித் தந்தோம். அது அவருடைய கட்டளைக்கிணங்கி நாம் அருள் வழங்கிய நாடுகளின் பக்கம் வீசிக்கொண்டிருந்தது. மேலும், நாம் ஒவ்வொன்றைப் பற்றியும் அறிந்தவராகவே இருக்கின்றோம்.
21:81. ஸூலைமானுக்கு வேகமாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது அவருடைய கட்டளையின்படி, எந்த பூமியில் பாக்கியத்தை நாம் நல்கினோமோ அந்த பூமியின்பால் (அவரை எடுத்துச்) செல்லும், மேலும், ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நாம் அறிந்தோராக இருந்தோம்.
21:82
21:82 وَمِنَ الشَّيٰطِيْنِ مَنْ يَّغُوْصُوْنَ لَهٗ وَيَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰ لِكَ‌ ۚ وَكُنَّا لَهُمْ حٰفِظِيْنَۙ‏
وَمِنَ الشَّيٰطِيْنِ இன்னும் ஷைத்தான்களில் مَنْ எவர் يَّغُوْصُوْنَ மூழ்கின்றார்கள் لَهٗ அவருக்காக وَيَعْمَلُوْنَ இன்னும் செய்கின்றார்கள் عَمَلًا செயலை دُوْنَ அல்லாத ذٰ لِكَ‌ ۚ அது وَكُنَّا நாம் இருந்தோம் لَهُمْ அவர்களை حٰفِظِيْنَۙ‏ பாதுகாப்பவர்களாக
21:82. இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்; இது தவிர) மற்ற வேலைகளையும் (அந்த ஷைத்தான்கள்) செய்யும்; அன்றியும் நாமே அவற்றைக் கண்காணித்து வந்தோம்.
21:82. கடலில் மூழ்கி (முத்து, பவளம் போன்றவற்றைக் கொண்டு) வரக்கூடிய (மூர்க்க) ஷைத்தான்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். இதைத் தவிர (அவருக்கு அவசியமான) பல வேலைகளையும் அவை செய்துகொண்டு இருந்தன. நாம்தான் அவர்களைக் கண்காணித்து வந்தோம்.
21:82. மேலும், ஷைத்தான்களில் பலவற்றை நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவை அவருக்காக (கடலில்) மூழ்கக்கூடியவையாகவும், இதர பணிகளைப் புரிபவையாகவும் இருந்தன. அவர்கள் அனைவரையும் கண்காணிப்பவராக நாமே இருந்தோம்.
21:82. ஷைத்தான்களிலிருந்து அவருக்காக கடலில் மூழ்கி (முத்துக்களை மற்றும் பவளங்களையும் கொண்டு) வரக்கூடியவர்களையும், (நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்திருந்தோம்.) இது தவிர (அவருக்காக வேறு) வேலைகளையும் அவர்கள் செய்து கொண்டிருந்தனர், மேலும், நாம்தாம் அவர்களைப் பாதுகாப்போராக இருந்தோம்.
21:83
21:83 وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‌ ۖ‌ۚ‏
وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை நினைவு கூர்வீராக اِذْ نَادٰى அழைத்தபோது رَبَّهٗۤ தன் இறைவனை اَنِّىْ நிச்சயமாக நான் مَسَّنِىَ என்னை தொட்டுவிட்டன الضُّرُّ தீங்குகள் وَاَنْتَ நீயோ اَرْحَمُ மகா கருணையாளன் الرّٰحِمِيْنَ‌ ۖ‌ۚ‏ கருணையாளர்களில்
21:83. இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித்த போது,
21:83. ஐயூபையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. (அதை நீ நீக்கி விடு.) நீயோ கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று பிரார்த்தனை செய்தார்.
21:83. இவற்றையே (விவேகம், நுண்ணறிவு மற்றும் ஞானம் ஆகிய அருட்பேறுகளை) நாம் அய்யூபுக்கும் வழங்கியிருந்தோம். அவர், தம்முடைய இறைவனிடம் இறைஞ்சியதை நினைவுகூரும்: “என்னை நோய் பீடித்துவிட்டது; நீயோ கிருபை செய்வோரில் எல்லாம் பெருங்கிருபையாளனாய் இருக்கின்றாய்.”
21:83. (நபியே!) அய்யூபையும் (நினைவு கூர்வீராக!) அவர், தன் இரட்சகனிடம், “நிச்சயமாகத் துன்பம் என்னைப்பீடித்துக் கொண்டது, நீயோ கிருபையாளர்களிலெல்லாம் மிகக் கிருபையாளன்” என்று (பிரார்த்தனை செய்து) அழைத்தபோது,
21:84
21:84 فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ‌ وَّاٰتَيْنٰهُ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰى لِلْعٰبِدِيْنَ‏
فَاسْتَجَبْنَا ஆகவே, நாம் பதிலளித்தோம் لَهٗ அவருக்கு فَكَشَفْنَا அகற்றினோம் مَا بِهٖ அவருக்கு இருந்த مِنْ ضُرٍّ‌ தீங்குகளை وَّاٰتَيْنٰهُ இன்னும் அவருக்கு வழங்கினோம் اَهْلَهٗ அவருடைய குடும்பத்தை وَمِثْلَهُمْ அவர்கள் போன்றவர்களை مَّعَهُمْ அவர்களுடன் رَحْمَةً கருணையாக مِّنْ عِنْدِنَا நம் புறத்திலிருந்து وَذِكْرٰى இன்னும் நினைவூட்டலாகும் لِلْعٰبِدِيْنَ‏ வணக்கசாலிகளுக்கு
21:84. நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
21:84. ஆகவே, நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்து, நம் அருளால் மேலும் அதைப் போன்ற தொகையினரையும் அவருக்குக் (குடும்பமாகக்) கொடுத்தோம். இது (எனக்குப் பயந்து) என்னை வணங்குபவர்களுக்கு(ம் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும்) நல்லுணர்ச்சி ஊட்டக்கூடியதாக இருக்கிறது.
21:84. நாம் அவருடைய இறைஞ்சுதலை ஏற்று அவருக்கிருந்த நோயைப் போக்கிவிட்டோம். அவருக்கு நாம் அவருடைய குடும்பத்தை மட்டும் வழங்கவில்லை, அவர்களுடன் அதே அளவுக்கு இன்னும் அதிகமானவர்களையும் வழங்கினோம் இது நம்முடைய சிறப்பான கிருபையாகவும், அடிபணிந்து வணங்குவோருக்கு ஒரு நினைவூட்டுதலாகவும் அமைவதற்காக!
21:84. நாம் அவருக்கு பதிலளித்து, பின்னர், அவருக்கிருந்த துன்பத்தையும் நீக்கிவிட்டோம், அவருடைய குடும்பத்தையும், அவர்களுடன் அவர்களைப் போன்றவர்களையும் அவருக்கு நாம் கொடுத்தோம், இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் (நம்மை) வணங்குவோருக்கு நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.
21:85
21:85 وَاِسْمٰعِيْلَ وَاِدْرِيْسَ وَذَا الْكِفْلِ‌ؕ كُلٌّ مِّنَ الصّٰبِرِيْنَ‌ ۖ‌ۚ‏
وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக وَاِدْرِيْسَ இத்ரீஸையும் وَذَا الْكِفْلِ‌ؕ துல்கிஃப்லையும் كُلٌّ எல்லோரும் مِّنَ الصّٰبِرِيْنَ‌ ۖ‌ۚ‏ பொறுமையாளர்களில் உள்ளவர்கள்
21:85. இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!
21:85. இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிப்லுவையும் (நாம் நம் தூதர்களாக அனுப்பிவைத்தோம்). இவர்கள் அனைவரும் (தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைச்) சகித்துக் கொண்டனர்.
21:85. மேலும், இதே அருட்பேற்றினை இஸ்மாயீலுக்கும், இத்ரீஸுக்கும், துல்கிஃப்லுக்கும் நாம் வழங்கியிருந்தோம். இவர்களனைவரும் பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களாய் இருந்தார்கள்.
21:85. இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிப்லுவையும்- (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) இவர்கள் ஒவ்வொருவரும், பொறுமையாளர்களாக இருந்தனர்.
21:86
21:86 وَاَدْخَلْنٰهُمْ فِىْ رَحْمَتِنَا ؕ اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِيْنَ‏
وَاَدْخَلْنٰهُمْ இவர்களை நுழைத்துக் கொண்டோம் فِىْ رَحْمَتِنَا ؕ நமது அருளில் اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் مِّنَ الصّٰلِحِيْنَ‏ நல்லவர்களில் உள்ளவர்கள்
21:86. இவர்கள் (எல்லோரையும்) நாம் நம் கிருபையில் புகுத்திக் கொண்டோம், நிச்சயமாக இவர்கள் (ஸாலிஹீன்களான) நல்லடியார்களில் நின்றுமுள்ளவர்களே!
21:86. ஆகவே, இவர்கள் அனைவரையும் நாம் நம் அருளில் புகுத்தினோம். ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் அனைவரும் நல்லவர்களே.
21:86. மேலும், நாம் அவர்களை நம்முடைய அருளில் நுழைவித்தோம். ஏனெனில், அவர்கள் அனைவரும் நல்லடியார்களாகவே திகழ்ந்தார்கள்.
21:86. இன்னும், அவர்களை நாம் நம்முடைய அருளில் புகுத்திக்கொண்டோம், நிச்சயமாக அவர்கள் நல்லோர்களில் உள்ளவராவார்கள்.
21:87
21:87 وَ ذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّـقْدِرَ عَلَيْهِ فَنَادٰى فِى الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ‌ۖ  اِنِّىْ كُنْتُ مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ‌ۚ‏
وَ ذَا النُّوْنِ மீனுடையவரை நினைவு கூர்வீராக اِذْ ذَّهَبَ அவர் சென்றபோது مُغَاضِبًا கோபித்தவராக فَظَنَّ எண்ணினார் اَنْ لَّنْ نَّـقْدِرَ நெருக்கடியை கொடுக்கவே மாட்டோம் عَلَيْهِ அவருக்கு فَنَادٰى அவர் அழைத்தார் فِى الظُّلُمٰتِ இருள்களில் இருந்தவராக اَنْ لَّاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரியவன் اِلَّاۤ தவிர اَنْتَ உன்னை سُبْحٰنَكَ நீ மகா பரிசுத்தமானவன் ۖ  اِنِّىْ நிச்சயமாக நான் كُنْتُ சேர்ந்து விட்டேன் مِنَ الظّٰلِمِيْنَ‌ ۖ ۚ‏ அநியாயக்காரர்களில்
21:87. இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.
21:87. (யூனுஸ் நபியாகிய) துன்னூனையும் (நம் தூதராக ஆக்கினோம்). அவர் கோபமாகச் சென்ற சமயத்தில் நாம் அவரைப் பிடித்துக்கொள்ள மாட்டோம் என்று எண்ணிக்கொண்டார். (ஆதலால், அவரை ஒரு மீன் விழுங்கும்படிச் செய்து மீன் வயிற்றின்) இருள்களிலிருந்த அவர் (நம்மை நோக்கி) ‘‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறொருவனும் இல்லை. நீ மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நானோ அநியாயக்காரர்களில் ஒருவனாகிவிட்டேன். (என்னை மன்னித்து அருள் புரிவாயாக!)'' என்று பிரார்த்தனை செய்தார்.
21:87. மேலும், மீன்காரருக்கும் நாம் அருள் பாலித்திருந்தோம். நாம் அவரைப் பிடிக்கமாட்டோம் என்று நினைத்து, கோபப்பட்டுக் கொண்டு அவர் சென்றுவிட்டதை நீர் நினைவுகூரும்! இறுதியில் அவர் இருள்களுக்குள் இருந்துகொண்டு இவ்வாறு இறைஞ்சினார்: “உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை; தூய்மையானவன் நீ! திண்ணமாக, நான் குற்றம் செய்துவிட்டேன்.”
21:87. துன்னூனையும் (யூனுஸ் நபியாகிய மீனுடையவரை நபியே! நினைவு கூர்வீராக! தம் சமூகத்தாரைவிட்டு)- அவர் கோபமாக வெளியேறிய சமயத்தில், (நாம் அவரைப் பிடித்து) நெருக்கடிக்குள்ளாக்கி (தண்டித்து) விட மாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; (ஆகவே மீன் வயிற்றின்) இருள்களில் “(நெருக்கடிக்குள்ளான அவர்,) உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் (வேறு ஒருவனும்) இல்லை; நீ மிகப் பரிசுத்தமானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டேன்;” என்று (பிரார்த்தனை செய்து) அழைத்தார்.
21:88
21:88 فَاسْتَجَبْنَا لَهٗۙ وَنَجَّيْنٰهُ مِنَ الْـغَمِّ‌ؕ وَكَذٰلِكَ نُـنْجِى الْمُؤْمِنِيْنَ‏
فَاسْتَجَبْنَا நாம் பதிலளித்தோம் لَهٗۙ அவருக்கு وَنَجَّيْنٰهُ அவரை நாம் பாதுகாத்தோம் مِنَ الْـغَمِّ‌ؕ துக்கத்திலிருந்து وَكَذٰلِكَ இப்படித்தான் نُـنْجِى நாம் பாதுகாப்போம் الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களை
21:88. எனவே, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவரைத் துக்கத்திலிருந்தும் விடுவித்தோம். இவ்வாறே முஃமின்களையும் விடுவிப்போம்.
21:88. நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (அவருடைய மிக்க துயரமான) சிரமத்திலிருந்தும் அவரை நாம் பாதுகாத்துக் கொண்டோம். இவ்வாறே, (சிரமத்தில் சிக்கி நம்மிடம் பிரார்த்தனை செய்யும்) நம்பிக்கையாளர்களையும் நாம் பாதுகாத்துக் கொள்வோம்.
21:88. அப்போது நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு, துன்பத்திலிருந்து அவரை விடுவித்தோம். மேலும், இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களை நாம் காப்பாற்றிக் கொள்கின்றோம்.
21:88. பின்னர், அவருக்கு நாம் பதிலளித்தோம், (அவருடைய) துக்கத்திலிருந்து அவரை நாம் (விடுவித்துக்) காப்பாற்றினோம், இவ்வாறே விசுவாசிகளையும் நாம் காப்பாற்றுவோம்.
21:89
21:89 وَزَكَرِيَّاۤ اِذْ نَادٰى رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِىْ فَرْدًا وَّاَنْتَ خَيْرُ الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏
وَزَكَرِيَّاۤ இன்னும் ஸகரிய்யாவை நினைவுகூர்வீராக اِذْ نَادٰى அவர் அழைத்தபோது رَبَّهٗ தன் இறைவனை رَبِّ என் இறைவா لَا تَذَرْنِىْ என்னை விட்டுவிடாதே فَرْدًا ஒருத்தனாக وَّاَنْتَ நீதான் خَيْرُ மிகச் சிறந்தவன் الْوٰرِثِيْنَ‌ ۖ‌ۚ‏ வாரிசுகளில்
21:89. இன்னும் ஜகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவா! நீ என்னை (சந்ததியில்லாமல்) ஒற்றையாக விட்டு விடாதே! நீயோ அனந்தரங்கொள்வோரில் மிகவும் மேலானவன்” என்று பிரார்த்தித்த போது:
21:89. ஜகரிய்யாவையும் (தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘என் இறைவனே! நீ என்னை(ச் சந்ததியற்ற) தனித்தவனாக விட்டுவிடாதே! நீயோ வாரிசாகக்கூடியவர்களில் மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தனை செய்த சமயத்தில்,
21:89. மேலும், ஜக்கரிய்யாவுக்கும் அருட்பேற்றினை வழங்கினோம். அவர்தம் இறைவனிடம், “என் இறைவனே! என்னை நீ தன்னந்தனியாக விட்டுவிடாதே! நீயே மிகச்சிறந்த வாரிசு ஆவாய்!” என்று பிரார்த்தித்த சமயத்தை நினைவுகூரும்.
21:89. ஜகரிய்யாவையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) அவர் தன் இரட்சகனை அழைத்து, “என் இரட்சகனே! என்னை(ச் சந்ததியில்லாது) தனித்தவனாக நீ விட்டுவிடாதே! நீயோ, வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்” என்று (பிரார்த்தனை செய்த) சமயத்தில்,
21:90
21:90 فَاسْتَجَبْنَا لَهٗ وَوَهَبْنَا لَهٗ يَحْيٰى وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ‌ؕ اِنَّهُمْ كَانُوْا يُسٰرِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَ يَدْعُوْنَـنَا رَغَبًا وَّرَهَبًا ‌ؕ وَكَانُوْا لَنَا خٰشِعِيْنَ‏
فَاسْتَجَبْنَا நாம் பதிலளித்தோம் لَهٗ அவருக்கு وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗ அவருக்கு يَحْيٰى யஹ்யாவை وَاَصْلَحْنَا இன்னும் சீர்படுத்தினோம் لَهٗ அவருக்கு زَوْجَهٗ ؕ அவருடைய மனைவியை اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் كَانُوْا இருந்தனர் يُسٰرِعُوْنَ விரைகின்றவர்களாக فِىْ الْخَيْـرٰتِ நன்மைகளில் وَ يَدْعُوْنَـنَا இன்னும் நம்மை அழைக்கின்றவர்களாக رَغَبًا ஆர்வத்துடனும் وَّرَهَبًا ؕ பயத்துடனும் وَكَانُوْا இன்னும் இருந்தனர் لَنَا நம்மிடம் خٰشِعِيْنَ‏ பணிவுள்ளவர்களாக
21:90. நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள்.
21:90. நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து (மலடாக இருந்த) அவருடைய மனைவியை குணப்படுத்தி, யஹ்யாவை அவருக்கு(ச் சந்ததியாகக்) கொடுத்தோம். நிச்சயமாக இவர்கள் அனைவரும் நன்மையான காரியங்களைச் செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருந்தார்கள். (நம் அருளை) விரும்பியும் (நம் தண்டனையைப்) பயந்தும் நம்மிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் அனைவரும் நம்மிடம் மிக்க உள்ளச்சமுடையவர்களாகவும் இருந்தார்கள்.
21:90. பிறகு நாம் அவருடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்டு, அவருக்கு யஹ்யாவை கொடையாக வழங்கினோம். அவருடைய மனைவியை அதற்கு அருகதையுள்ளவராகவும் ஆக்கினோம். இவர்கள் யாவரும் நற்பணிகளில் முனைந்து செயற்படுவோராகவும், பேரார்வத்துடனும், அச்சத்துடனும் நம்மிடம் இறைஞ்சக் கூடியவர்களாயும் திகழ்ந்தார்கள். நம் முன் பணிந்தவர்களாயும் விளங்கினார்கள்.
21:90. நாம் அவருக்கு பதில் கூறினோம், யஹ்யாவை அவருக்கு (மகனாக)க் கொடுத்தோம், இன்னும், (மலடாக இருந்த) அவருடைய மனைவியை (மகப்பேறுபெற) சீராக்கினோம், நிச்சயமாக இவர்கள் யாவரும், நன்மைகளில் (மிகத்துரிதமாக) விரைபவர்களாக இருந்தார்கள், (நம்முடைய அருளை) ஆசித்தும், (நம் தண்டனையைப்) பயந்தும், நம்மை (பிரார்த்தனை செய்து) அழைப்பவர்களாகவும் இருந்தார்கள்; இன்னும் அவர்கள் (யாவரும்) நம்மிடம் உள்ளச்சமுடையோர்களாகவும் இருந்தார்கள்.
21:91
21:91 وَالَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَـنَفَخْنَا فِيْهَا مِنْ رُّوْحِنَا وَ جَعَلْنٰهَا وَابْنَهَاۤ اٰيَةً لِّـلْعٰلَمِيْنَ‏
وَالَّتِىْۤ இன்னும் எவள் اَحْصَنَتْ பாதுகாத்துக் கொண்டாள் فَرْجَهَا தனது மறைவிடத்தை فَـنَفَخْنَا நாம் ஊதினோம் فِيْهَا அவளில் مِنْ رُّوْحِنَا நமது உயிரிலிருந்து وَ جَعَلْنٰهَا இன்னும் அவளைஆக்கினோம் وَابْنَهَاۤ அவளுடைய மகனையும் اٰيَةً ஓர் அத்தாட்சியாக لِّـلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
21:91. இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூறும்); எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
21:91. தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வளை(யும் நீர் ஞாபக மூட்டுவீராக. நம் தூதர்) ஜிப்ரயீல் மூலம் அவளுடைய கர்ப்பத்தில் நாம் ஊதினோம். அவளையும் அவளுடைய மகனையும் உலகத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.
21:91. தன்னுடைய கற்பைக் காப்பாற்றிக் கொண்ட அந்தப் பெண்ணிற்குள் நம்முடைய ரூஹிலிருந்து* ஊதினோம். மேலும், அப்பெண்ணையும் அவளுடைய மைந்தரையும் உலகத்தாரனைவருக்கும் சான்றாய் திகழச்செய்தோம்.
21:91. தன் கற்பைக் காத்துக்கொண்ட (மர்யம் என்ப)வரையும் (நீர் நினைவு கூர்வீராக!) நம் ஆன்மாவிலிருந்து அவரில் நாம் ஊதினோம், அவரையும், அவருடைய மகனையும் அகிலத்தார்க்கு ஓர் அத்தாட்சியாகவும் நாம் ஆக்கினோம்.
21:92
21:92 اِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً  ‌ۖ وَّاَنَا رَبُّكُمْ فَاعْبُدُوْنِ‏
اِنَّ நிச்சயமாக هٰذِهٖۤ இதுதான் اُمَّتُكُمْ உங்களது اُمَّةً وَّاحِدَةً  ۖ ஒரே மார்க்கம் وَّاَنَا நான்தான் رَبُّكُمْ உங்கள் இறைவன் فَاعْبُدُوْنِ‏ ஆகவே, என்னை வணங்குங்கள்
21:92. நிச்சயமாக உங்கள் “உம்மத்து” - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.
21:92. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அனைவரும் (ஒரே மார்க்கத்தைப் பின்பற்ற வேண்டிய) ஒரே வகுப்பார்தான். (இதில் ஜாதி வேற்றுமை கிடையாது.) உங்கள் அனைவருக்கும் இறைவன் நான் ஒருவனே! ஆகவே, என்னையே நீங்கள் வணங்குங்கள்.
21:92. உங்களின் இந்தச் சமுதாயம் உண்மையில் ஒரே ஒரு சமுதாயமே. மேலும், நானே உங்கள் அதிபதி. எனவே, நீங்கள் எனக்கே அடிபணியுங்கள்.
21:92. நிச்சயமாக (உங்களுக்குத் தெளிவு செய்யப்பட்ட) இது ஒரே மார்க்கமான உங்களுடைய மார்க்கமாகும், மேலும் நான்(தான்) உங்கள் இரட்சகன், ஆகவே என்னையே வணங்குங்கள்.
21:93
21:93 وَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَيْنَهُمْ‌ؕ كُلٌّ اِلَـيْنَا رٰجِعُوْنَ‏
وَتَقَطَّعُوْۤا பிரிந்து விட்டனர் اَمْرَ காரியத்தில் هُمْ தங்கள் بَيْنَهُمْ‌ؕ தங்களுக்கு மத்தியில் كُلٌّ எல்லோரும் اِلَـيْنَا நம்மிடமே رٰجِعُوْنَ‏ திரும்புவார்கள்
21:93. (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.  
21:93. எனினும் இவர்கள் தங்கள் காரியத்தில் (வேறுபட்டு) பல பிரிவுகளாக பிரிந்து விட்டனர். இவர்கள் அனைவரும் நம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்தான்.
21:93. (ஆயினும், இந்த மக்கள் செய்த தவறு என்னவெனில்) அவர்கள் தமக்கிடையே தம்முடைய தீனை மார்க்கத்தை துண்டு துண்டாக்கிவிட்டார்கள் அனைவரும் நம்மிடமே திரும்பி வரக் கூடியவர்களாவர்.
21:93. தங்களது (மார்க்கக்)காரியத்தில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் பிளவுபட்டும் விட்டனர், இவர்கள் ஒவ்வொருவரும் நம்மிடம் திரும்ப வரக்கூடியவர்கள்.
21:94
21:94 فَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ وَهُوَ مُؤْمِنٌ فَلَا كُفْرَانَ لِسَعْيِهٖ‌ۚ وَاِنَّا لَهٗ كٰتِبُوْنَ‏
فَمَنْ யார் يَّعْمَلْ செய்வாரோ مِنَ الصّٰلِحٰتِ நற்காரியங்களை وَهُوَ مُؤْمِنٌ தான் நம்பிக்கையாளராக இருந்து كُفْرَانَ முயற்சியை لِسَعْيِهٖ‌ۚ அவருடைய وَاِنَّا நிச்சயமாக நாம் لَهٗ அதை كٰتِبُوْنَ‏ பதிவு செய்கிறோம்
21:94. எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்.
21:94. ஆகவே, (இவர்களில்) எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுடைய முயற்சி வீணாகிவிடாது. நிச்சயமாக நாம் அவற்றைப் பதிவு செய்து வருகிறோம்.
21:94. பிறகு, எவர் நம்பிக்கையாளராய்த் திகழ்ந்து நற்செயல்கள் புரிகின்றாரோ அவருடைய உழைப்பு மதிப்பற்றுப் போகாது. மேலும், அதனை நாம் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம்.
21:94. ஆகவே, (இவர்களில்) எவர் விசுவாசங்கொண்டவராக, நற்கருமங்களைச் செய்கின்றாரோ, அவருடைய முயற்சி மறுப்பிற்குரியதல்ல, நிச்சயமாக நாம் அவருக்காக (அவரின் செயல்களை) பதிவு செய்வோராய் இருக்கின்றோம்.
21:95
21:95 وَ حَرٰمٌ عَلٰى قَرْيَةٍ اَهْلَكْنٰهَاۤ اَنَّهُمْ لَا يَرْجِعُوْنَ‏
وَ حَرٰمٌ விதிக்கப்பட்டுவிட்டது عَلٰى மீது قَرْيَةٍ ஊர் (மக்கள்) اَهْلَكْنٰهَاۤ நாம் அழித்து விட்டோம்/அதை اَنَّهُمْ நிச்சயமாக அவர்கள் لَا يَرْجِعُوْنَ‏ திரும்பவே மாட்டார்கள்
21:95. நாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது; நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.
21:95. நாம் எவ்வூரார்களை அழித்துவிட்டோமோ அவர்கள் நிச்சயமாக (உலகிற்கு) திரும்பவே மாட்டார்கள் என விதிக்கப்பட்டுள்ளது.
21:95. எந்த ஊர் மக்களை நாம் அழித்துவிட்டோமோ அவர்கள் மீண்டும் திரும்பி வருவது சாத்தியமில்லை.
21:95. மேலும், எதனை நாம் அழித்துவிட்டோமோ அவ்வூ(ரா)ர் மீது (அவர்கள் உலகிற்குத் திரும்புவது) தடுக்கப்பட்டுள்ளது, நிச்சயமாக அவர்கள் திரும்பமாட்டார்கள்.
21:96
21:96 حَتّٰٓى اِذَا فُتِحَتْ يَاْجُوْجُ وَمَاْجُوْجُ وَهُمْ مِّنْ كُلِّ حَدَبٍ يَّنْسِلُوْنَ‏
حَتّٰٓى இறுதியாக اِذَا فُتِحَتْ திறக்கப்பட்டால் يَاْجُوْجُ யஃஜூஜ் وَمَاْجُوْجُ இன்னும் மஃஜூஜ் وَهُمْ அவர்கள் مِّنْ كُلِّ எல்லா இடத்திலிருந்து حَدَبٍ உயரமான يَّنْسِلُوْنَ‏ விரைந்து வருவார்கள்
21:96. யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.
21:96. யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்திற்கு வழி திறக்கப்பட்டால் அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் (தண்ணீர் பாய்ந்து ஓடுவதைப் போல்) வழிந்து (உலகின் பல பாகங்களிலும் அதிசீக்கிரத்தில் பரவி) விடுவார்கள்.
21:96. எதுவரையெனில், யாஃஜூஜ், மாஃஜுஜ் திறந்துவிடப்பட்டு ஒவ்வொரு உயரமான இடங்களிலிருந்தும் அவர்கள் வெளியேறும் வரை.
21:96. கடைசியாக, யாஜூஜு, மாஜூஜுக்(கூட்டத்திற்)கு (வழி) திறக்கப்பட்டால், அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கி (குழப்பம் விளைவிக்க உலகின் பல பாகங்களிலும்) விரைவார்கள்.
21:97
21:97 وَاقْتَـرَبَ الْوَعْدُ الْحَـقُّ فَاِذَا هِىَ شَاخِصَةٌ اَبْصَارُ الَّذِيْنَ كَفَرُوْا ؕ يٰوَيْلَنَا قَدْ كُنَّا فِىْ غَفْلَةٍ مِّنْ هٰذَا بَلْ كُـنَّا ظٰلِمِيْنَ‏
وَاقْتَـرَبَ சமீபமாகிவிடும் الْوَعْدُ வாக்கு الْحَـقُّ உண்மையான فَاِذَا هِىَ அப்போது شَاخِصَةٌ கூர்மையாகிவிடும் اَبْصَارُ பார்வைகள் الَّذِيْنَ كَفَرُوْا ؕ நிராகரித்தவர்களின் يٰوَيْلَنَا எங்கள் நாசமே قَدْ திட்டமாக كُنَّا இருந்து விட்டோம் فِىْ غَفْلَةٍ அலட்சியத்தில் مِّنْ هٰذَا இதை விட்டு بَلْ மாறாக كُـنَّا இருந்தோம் ظٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்களாக
21:97. (இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள்:) “எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்” (என்று கூறுவார்கள்).
21:97. (உலக முடிவு பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கி விட்டது. (அது வரும் சமயத்தில் அதைக் காணும்) நிராகரிப்பவர்களின் கண்கள் திறந்தது திறந்தவாறே இருக்கும். ‘‘எங்களுக்குக் கேடுதான். நிச்சயமாக நாங்கள் இதைப்பற்றி கவலையற்றவர்களாக இருந்தோமே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோமே!'' (என்றும் அவர்கள் புலம்புவார்கள்).
21:97. மேலும், உண்மையான வாக்குறுதி நிறைவேறும் வேளை வரும் வரை! அப்போது சத்தியத்தை நிராகரித்தவர்களின் விழிகள் நிலைகுத்தி நின்றுவிடும். “ஆ! எங்கள் துர்ப்பாக்கியமே! இவ்விஷயத்தில் நாங்கள் அலட்சியமாக இருந்து விட்டோமே! ஏன், நாங்கள் கொடுமை புரிந்தவர்களாய் இருந்துவிட்டோமே!” என்று அவர்கள் புலம்புவார்கள்.
21:97. (மறுமை நாள் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கியும் விட்டது, எனவே, (அது வந்துவிட்டால்) நிராகரிப்போரின் கண்கள் திறந்தது திறந்தவாறே இருக்கும், (அப்பொழுது) “எங்களுடைய கேடே! திட்டமாக நாம் இதனைப் பற்றி மறந்தவர்களாக இருந்துவிட்டோம், அதுமட்டுமல்லாது நாங்கள் அநியாயக்காரர்களாகவுமிருந்தோம்” (என்று கூறுவார்கள்)
21:98
21:98 اِنَّكُمْ وَمَا تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ حَصَبُ جَهَـنَّمَؕ اَنْـتُمْ لَهَا وَارِدُوْنَ‏
اِنَّكُمْ நிச்சயமாக நீங்களும் وَمَا تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குகின்றவையும் مِنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி حَصَبُ எறியப்படுபவை جَهَـنَّمَؕ நரகத்தில் اَنْـتُمْ لَهَا நீங்கள் அதில் وَارِدُوْنَ‏ நுழைவீர்கள்
21:98. நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.)
21:98. (அச்சமயம் அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவையும் நரகத்தின் எரிகட்டையாகி விட்டீர்கள். நீங்கள் அனைவரும் அங்கு செல்ல வேண்டியவர்கள்தான்'' (என்று கூறப்படும்).
21:98. திண்ணமாக, நீங்களும், அல்லாஹ்வை விடுத்து நீங்கள் வழிபட்டுக் கொண்டிருந்தவைகளும் நரகத்தின் எரிபொருள்களாவீர்கள். நீங்கள் அங்குதான் செல்லவேண்டியிருக்கும்.
21:98. (அப்போது அவர்களிடம்) நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வையன்றி (நீங்கள்) வணங்கியவைகளும் நரகத்தின் விறகுகளே! நீங்கள் யாவரும் அதற்கு வரவேண்டியவர்களாவர் (என்று கூறப்படும்.)
21:99
21:99 لَوْ كَانَ هٰٓؤُلَاۤءِ اٰلِهَةً مَّا وَرَدُوْهَا‌ ؕ وَكُلٌّ فِيْهَا خٰلِدُوْنَ‏
لَوْ كَانَ هٰٓؤُلَاۤءِ இருந்திருந்தால் இவை اٰلِهَةً கடவுள்களாக مَّا وَرَدُوْهَا‌ ؕ அதில் நுழைந்திருக்க மாட்டார்கள் وَكُلٌّ எல்லோரும் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமாக தங்கக்கூடியவர்கள்
21:99. இவை தெய்வங்களாக இருந்திருந்தால், (அந் நரகத்திற்கு) வந்து சேர்ந்திருக்க மாட்டா; இன்னும் அனைவரும் அதில் நிரந்தரமாயிருப்பர்.
21:99. (அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த) இவை (உண்மையான) தெய்வங்களாக இருந்தால் நரகத்திற்கு வந்தே இருக்காது. எனினும், அவர்கள் அனைவரும் (நரகத்தில் தள்ளப்பட்டு) என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள்.
21:99. உண்மையில் இவர்கள் தெய்வங்களென்றால், அங்குப் போயிருக்கவே மாட்டார்கள். இனி, இவர்கள் எல்லாரும் என்றென்றும் அதிலேயே தங்க வேண்டியுள்ளது.
21:99. (அவர்களால் வணங்கப்பட்ட) இவை வணக்கத்திற்குரியவர்களாக இருந்தால், அதன் (அந்நரகத்தின்) பால் வந்திருக்கமாட்டா, இன்னும், அவர்கள் யாவரும் நிரந்தரமாக (நரகமாகிய) அதில் (தங்கி) இருப்பவர்கள்.
21:100
21:100 لَهُمْ فِيْهَا زَفِيْرٌ وَّهُمْ فِيْهَا لَا يَسْمَعُوْنَ‏
لَهُمْ அவர்களுக்கு فِيْهَا அதில் உண்டு زَفِيْرٌ மூச்சு வெளியேறுதல் وَّهُمْ இன்னும் அவர்கள் فِيْهَا அதில் لَا يَسْمَعُوْنَ‏ செவியுறமாட்டார்கள்
21:100. அதில் அவர்களுக்கு வேதனை முனக்கம் இருக்கிறது. மேலும் அவர்கள் அதிலே (எதனையும்) செவியுறமாட்டார்கள்.
21:100. அதில் அவர்கள் திணறித் திணறிக் (கழுதையைப் போல்) கதறுவார்கள். அதில் (மற்றெவரின் சப்தத்தை) அவர்கள் செவியுற மாட்டார்கள்.
21:100. அதில் அவர்கள் கதறுவார்கள். நிலைமை எப்படியிருக்குமெனில், கூச்சல் குழப்பத்தால் அவர்கள் எதையும் செவிமடுக்க முடியாது.
21:100. அதில் அவர்களுக்கு (வேதனையின் கடினம் காரணமாக) விம்மிக்கதறுதல் உண்டு, மேலும், அங்கு அவர்கள் (வேறு) எதையும் செவியுறமாட்டார்கள்.
21:101
21:101 اِنَّ الَّذِيْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰٓىۙ اُولٰٓٮِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் سَبَقَتْ முந்திவிட்டது لَهُمْ அவர்களுக்கு مِّنَّا நம்மிடமிருந்து الْحُسْنٰٓىۙ நற்பாக்கியம் اُولٰٓٮِٕكَ அவர்கள் عَنْهَا அதிலிருந்து مُبْعَدُوْنَۙ‏ தூரமாக் கப்பட்டவர்கள்
21:101. நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள்.
21:101. ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நன்மைகள் எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், நிச்சயமாக நரகத்திற்கு வெகு தூரமாக இருப்பார்கள்.
21:101. நம்மிடமிருந்து எவர்களுக்கு நன்மை கிடைக்கும் என்று முன்னரே முடிவு செய்யப்பட்டதோ அவர்கள் திண்ணமாக, நரகத்தைவிட்டு தொலைவில் வைக்கப்படுவார்கள்.
21:101. நிச்சயமாக எவர்களுக்கு நம்மிடமிருந்து நன்மை முந்திவிட்டதோ அத்தகையோர்-அவர்கள் அ(ந்நரகத்)தைவிட்டும் தூரமாக்கப்பட்டவர்களாவர்.
21:102
21:102 لَا يَسْمَعُوْنَ حَسِيْسَهَا‌ ۚ وَهُمْ فِىْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ‌ ۚ‏
لَا يَسْمَعُوْنَ செவியுறமாட்டார்கள் حَسِيْسَهَا‌ ۚ அதனுடைய சப்தத்தை وَهُمْ அவர்கள் فِىْ مَا اشْتَهَتْ விரும்பியவற்றில் اَنْفُسُهُمْ தங்களது உள்ளங்கள் خٰلِدُوْنَ‌ ۚ‏ நிரந்தரமாக இருப்பார்கள்
21:102. (இத்தகைய சுவர்க்கவாசிகள் நரகின்) கூச்சலைக் கேட்கமாட்டார்கள்; தாம் விரும்பும் இன்பத்திலேயே அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.
21:102. அதன் இரைச்சலையும் அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். இன்னும் அவர்கள் தாங்கள் விரும்பிய சுகபோகங்களை(ச் சொர்க்கத்தில்) என்றென்றும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.
21:102. அந்த நரகின் சலசலப்பைக்கூட அவர்கள் கேட்கமாட்டார்கள். தம் மனத்திற்குகந்த இன்பங்களுக்கு மத்தியில் அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்.
21:102. (நரகமாகிய) அதன் (அசைவின்) சப்தத்தை(க்கூட) அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள், அன்றியும் அவர்கள் தங்களின் மனங்கள் விரும்பிய (சுகபோகங்களைச் சுவைப்ப)தில் நிரந்தரமாக இருப்பவர்கள்.
21:103
21:103 لَا يَحْزُنُهُمُ الْـفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰٮهُمُ الْمَلٰٓٮِٕكَةُ ؕ هٰذَا يَوْمُكُمُ الَّذِىْ كُنْـتُمْ تُوْعَدُوْنَ‏
لَا يَحْزُنُهُمُ அவர்களை கவலைக்குள்ளாக்காது الْـفَزَعُ திடுக்கம் الْاَكْبَرُ மிகப்பெரிய وَتَتَلَقّٰٮهُمُ அவர்களை வரவேற்பார்கள் الْمَلٰٓٮِٕكَةُ ؕ வானவர்கள் هٰذَا இது يَوْمُكُمُ உங்கள் நாள் الَّذِىْ எது كُنْـتُمْ இருந்தீர்கள் تُوْعَدُوْنَ‏ நீங்கள் வாக்களிக்கப்படுவீர்கள்
21:103. (அந்நாளில் ஏற்படும்) பெரும் திகில் அவர்களை வருத்தாது, மலக்குகள் அவர்களைச் சந்தித்து: “உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள் இதுதான்” (என்று கூறுவார்கள்).
21:103. (மறுமையில் ஏற்படும்) பெரும் திடுக்கமும் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அச்சமயம்) வானவர்கள் அவர்களை எதிர்கொண்டழைப்பார்கள் ‘‘உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (நல்ல) நாள் இதுதான்'' (என்று நற்செய்தியும் கூறுவார்கள்).
21:103. பெரும் திகிலை ஏற்படுத்தும் அந்நேரம் அவர்களைச் சிறிதளவும் துயரத்தில் ஆழ்த்தாது. மேலும், “உங்களிடம் வாக்களிக்கப்பட்ட நாள்தான் இந்நாள்” என்று கூறிக்கொண்டு வானவர்கள் அவர்களை எதிர் கொண்டு வரவேற்பார்கள்.
21:103. (மறுமைநாளில்) மாபெரும் திடுக்கம், அவர்களை கவலைக்குள்ளாக்காது, மேலும், மலக்குகள் அவர்களை எதிர்கொண்டழைத்து, நீங்கள் வாக்களிக்கப்பட்டிருந்தீர்களே, அத்தகைய உங்களுடைய நாள் இதுதான் (என்று கூறுவார்கள்)
21:104
21:104 يَوْمَ نَـطْوِىْ السَّمَآءَ كَطَـىِّ السِّجِلِّ لِلْكُتُبِ‌ ؕ كَمَا بَدَاْنَاۤ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗ‌ ؕ وَعْدًا عَلَيْنَا‌ ؕ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ‏
يَوْمَ நாளில் نَـطْوِىْ நாம் சுருட்டுவோம் السَّمَآءَ வானத்தை كَطَـىِّ சுருட்டுவதைப் போன்று السِّجِلِّ ஏடுகளை لِلْكُتُبِ‌ ؕ புத்தகங்களின் மீது كَمَا போன்றே بَدَاْنَاۤ நாம் தொடங்கியது اَوَّلَ முதலாவதை خَلْقٍ படைப்பின் نُّعِيْدُهٗ‌ ؕ அதை திருப்பி விடுவோம் وَعْدًا இது வாக்காகும் عَلَيْنَا‌ ؕ நம்மீது கடமையான اِنَّا நிச்சயமாக நாம் كُنَّا இருக்கிறோம் فٰعِلِيْنَ‏ செய்பவர்களாகவே
21:104. எழுதப்பட்ட ஏடுகளைச் சுருட்டுவதைப் போல் வானத்தை நாம் சுருட்டிவிடும் அந்நாளை (நபியே! நினைவூட்டுவீராக!); முதலில் படைப்புகளைப் படைத்தது போன்றே, (அந்நாளில்) அதனை மீட்டுவோம்; இது நம் மீது வாக்குறுதியாகும்; நிச்சயமக நாம் இதனை செய்வோம்.
21:104. எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக. முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீளவைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதைச் செய்தே தீருவோம்.
21:104. எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தை சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் படைப்போம். இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும். திண்ணமாக, அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம்.
21:104. (நபியே!) எழுதப்பட்ட (பெரும்) ஏடுகளைச் சுருட்டுவதைப்போல, நாம் வானத்தைச் சுருட்டிவிடும் நாளை (நினைவு கூர்வீராக!) முதல் படைப்பை நாம் ஆரம்பித்தது போன்றே அதை நாம் (திரும்பவும்) மீளவைப்போம், (இது) நம் மீது கட்டாயமான வாக்குறுதியாகும், நிச்சயமாக நாம் (இதை) செய்வோராய் இருக்கிறோம்.
21:105
21:105 وَلَـقَدْ كَتَبْنَا فِى الزَّبُوْرِ مِنْۢ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ يَرِثُهَا عِبَادِىَ الصّٰلِحُوْنَ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக كَتَبْنَا நாம் எழுதினோம் فِى الزَّبُوْرِ வேதங்களில் مِنْۢ بَعْدِ பின்னர் الذِّكْرِ எழுதப்பட்டதற்கு اَنَّ நிச்சயமாக الْاَرْضَ பூமி يَرِثُهَا அதை அனந்தரமாக அடைவார்கள் عِبَادِىَ எனது அடியார்கள் الصّٰلِحُوْنَ‏ நல்ல
21:105. நிச்சயமாக நாம் ஜபூர் வேதத்தில், (முந்திய வேதத்தைப் பற்றி) நினைவூட்டிய பின்: “நிச்சயமாக பூமியை (ஸாலிஹான) என்னுடைய நல்லடியார்கள் வாரிசாக அடைவார்கள் என்று எழுதியிருக்கிறோம்.
21:105. நிச்சயமாக நாம் ‘ஜபூர்' என்னும் வேதத்தில், நல்லுபதேசங்களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம், ‘‘நிச்சயமாக பூமிக்கு என் அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தான் வாரிசாவார்கள்'' என்று.
21:105. “ஜபூரில்”* நல்லுரை வழங்கிய பிறகு, “நம்முடைய நல்லடியார்களே இப்பூமிக்கு வாரிசுகள் ஆவார்கள்” என்று எழுதி வைத்துவிட்டோம்.
21:105. மேலும், நிச்சயமாக நாம் ஜபூர் (என்னும்) வேதத்தில் நல்லுபதேசங்களுக்குப் பின்னர், “நிச்சயமாக பூமியை என்னுடைய நல்லடியார்கள்தாம் அதை வாரிசாக அடைவார்கள்” என்று எழுதிவிட்டோம்.
21:106
21:106 اِنَّ فِىْ هٰذَا لَبَلٰغًا لّـِقَوْمٍ عٰبِدِيْنَؕ‏
اِنَّ فِىْ هٰذَا நிச்சயமாக இதில் لَبَلٰغًا அறிவுரை இருக்கிறது لّـِقَوْمٍ மக்களுக்கு عٰبِدِيْنَؕ‏ வணங்குகின்ற
21:106. வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது.
21:106. என்னையே வணங்குபவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு நற்செய்தி இருக்கிறது.
21:106. அடிபணிந்து வாழும் மக்களுக்கு இதில் மாபெரும் அறிவிப்பு இருக்கிறது.
21:106. (இரட்சகனையே)! வணங்குகின்ற சமூகத்தார்களுக்கு, நிச்சயமாக இதில் (வழிகாட்டல்களைக் கொண்ட அத்தாட்சிகள்) போதுமானது உள்ளது.
21:107
21:107 وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّـلْعٰلَمِيْنَ‏
وَمَاۤ اَرْسَلْنٰكَ உம்மை அனுப்பவில்லை اِلَّا தவிர رَحْمَةً ஓர் அருளாகவே لِّـلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
21:107. (நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை.
21:107. (நபியே!) உம்மை உலகத்தாருக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை.
21:107. (நபியே!) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம்.
21:107. (நபியே!) உம்மை அகிலத்தார்க்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை.
21:108
21:108 قُلْ اِنَّمَا يُوْحٰۤى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌  ۚ فَهَلْ اَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏
قُلْ நீர் கூறுவீராக اِنَّمَا يُوْحٰۤى வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம் اِلَىَّ எனக்கு اَنَّمَاۤ اِلٰهُكُمْ நிச்சயமாக உங்கள் கடவுள் எல்லாம் اِلٰـهٌ ஒரு கடவுள் وَّاحِدٌ‌  ۚ ஒரே فَهَلْ ? اَنْـتُمْ நீங்கள் مُّسْلِمُوْنَ‏ முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்கள்
21:108. “எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம்: “உங்கள் நாயன் ஒரே நாயன் தான்” என்பதுதான்; ஆகவே நீங்கள் அவனுக்கு வழிப்பட்டு நடப்பீர்களா?” (என்று நபியே!) நீர் கேட்பீராக!
21:108. (ஆகவே) நீர் கூறுவீராக: ‘‘எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் ‘‘உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஓர் இறைவனே'' என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டு நடப்பீர்களாக!
21:108. நீர் அவர்களிடம் கூறும்: “உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு வஹி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நீங்கள் அவனுக்கு அடிபணிந்தவர்களாய் இருக்கிறீர்களா, என்ன?”
21:108. (எனவே) நீர் கூறுவீராக! “எனக்கு வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம், உங்களுடைய (வணக்கத்திற்குரிய) நாயன் ஒரே ஒரு நாயன் என்று தான், ஆகவே நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு (முஸ்லீம்களாக) நடப்பீர்களா?
21:109
21:109 فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْـتُكُمْ عَلٰى سَوَآءٍ ‌ؕ وَاِنْ اَدْرِىْۤ اَقَرِيْبٌ اَمْ بَعِيْدٌ مَّا تُوْعَدُوْنَ‏
فَاِنْ تَوَلَّوْا அவர்கள் விலகிச் சென்றால் فَقُلْ நீர் கூறிவிடுவீராக اٰذَنْـتُكُمْ உங்களுக்கு நான் அறிவித்து விட்டேன் عَلٰى سَوَآءٍ ؕ மிகத் தெளிவாக وَاِنْ اَدْرِىْۤ நான் அறியமாட்டேன் اَقَرِيْبٌ சமீபமாக உள்ளதா اَمْ அல்லது بَعِيْدٌ தூரமாக உள்ளதா مَّا تُوْعَدُوْنَ‏ நீங்கள் வாக்களிக்கப்பட்டது
21:109. ஆனால், அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் “நான் உங்கள் (எல்லோருக்கும்) சமமாக அறிவித்துவிட்டேன்; இன்னும், உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட (வேதனையான)து சமீபத்திலிருக்கிறதா அல்லது தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே!) நீர் சொல்லிவிடுவீராக.
21:109. (நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) ‘‘நான் (என் தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்'' என்று கூறுவீராக.
21:109. அவர்கள் புறக்கணித்தால் நீர் கூறிவிடும்: “நான் வெளிப்படையாக உங்களுக்கு எச்சரிக்கை செய்துவிட்டேன். இனி உங்களிடம் வாக்களிக்கப்படுகின்ற அந்த விஷயம் அண்மையில் இருக்கிறதா அல்லது வெகு தூரத்தில் இருக்கிறதா என்பதை நான் அறியேன்.
21:109. “எனவே அவர்கள் (இதைப்) புறக்கணித்துவிட்டால், நான் (என்னுடைய தூதை) உங்கள் யாவருக்கும் சமமாக அறிவித்துவிட்டேன், நீங்கள் வாக்களிக்கப்பட்டது (வேதனையான அது) சமீபத்திலிருக்கிறதா, அல்லது தூரத்திலிருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
21:110
21:110 اِنَّهٗ يَعْلَمُ الْجَـهْرَ مِنَ الْقَوْلِ وَيَعْلَمُ مَا تَكْتُمُوْنَ‏
اِنَّهٗ நிச்சயமாக அவன் يَعْلَمُ அறிவான் الْجَـهْرَ வெளிப்படையானதை مِنَ الْقَوْلِ பேச்சில் وَيَعْلَمُ இன்னும் அவன் அறிவான் مَا تَكْتُمُوْنَ‏ நீங்கள் மறைப்பதை(யும்)
21:110. வெளிப்படையாக (நீங்கள் பேசும்) பேச்சையும் அவன் நிச்சயமாக அறிகிறான்; நீங்கள் (இருதயத்தில்) மறைத்து வைப்பதையும் அவன் (நிச்சயமாக) அறிகிறான் (என்றும்)
21:110. நிச்சயமாக (என் இறைவன்) நீங்கள் (வாயால்) சப்தமிட்டுப் பேசுவதையும் (உங்கள் உள்ளங்களில் அதற்கு மாறாக) மறைத்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்கிறான்.
21:110. உரக்கக் கூறுவனவற்றையும் நீங்கள் மூடி மறைத்துச் செய்வனவற்றையும் திண்ணமாக அல்லாஹ் அறிவான்.
21:110. “நிச்சயமாக (என் இரட்சகனாகிய) அவன் சொல்லில் பகிரங்கமானதை அறிகிறான், (அதற்கு மாறாக) நீங்கள் மறைத்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்கிறான்”
21:111
21:111 وَاِنْ اَدْرِىْ لَعَلَّهٗ فِتْنَةٌ لَّـكُمْ وَمَتَاعٌ اِلٰى حِيْنٍ‏
وَاِنْ اَدْرِىْ நான்அறியமாட்டேன் لَعَلَّهٗ அது இருக்கலாம் فِتْنَةٌ சோதனையாகவும் لَّـكُمْ உங்களுக்கு وَمَتَاعٌ இன்பமாகவும் اِلٰى வரை حِيْنٍ‏ ஒரு நேரம்
21:111. இந்த தாமதம் உங்களுக்கு சோதனையாகவும் குறிப்பட்ட காலம் வரை சுகம் அனுபவிப்பதற்காகவும் இருக்குமா என்பதை நான் அறியமாட்டேன்.
21:111. (இன்னும் இதுவரை வேதனை செய்யாது) உங்களை விட்டு வைத்திருப்பது உங்களைச் சோதிப்பதற்காகவோ அல்லது குறித்த காலம் வரை நீங்கள் வாழ்ந்திருப்பதற்காகவோ என்பதை நான் அறிய மாட்டேன்.
21:111. நான் புரிந்துகொள்வது இதுவே: ஒருவேளை இது (கால அவகாசம்) உங்களுக்கு ஒரு சோதனையாக இருக்கலாம். மேலும், குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் இன்பம் அனுபவிக்க கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகவும் இருக்கலாம்.”
21:111. “இன்னும் (உங்களுக்கு வேதனையை பிற்படுத்தி வைத்திருப்பதான) அது உங்களுக்குச் சோதனையாகவும், சிறிதுகாலம் வரை (நீங்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் இருக்கலாமோ என்பதையும் நான் அறியமாட்டேன் (என்றும் கூறுவீராக!)
21:112
21:112 قٰلَ رَبِّ احْكُمْ بِالْحَـقِّ‌ؕ وَرَبُّنَا الرَّحْمٰنُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ‏
قٰلَ கூறினார்கள் رَبِّ என் இறைவா احْكُمْ தீர்ப்பளிப்பாயாக بِالْحَـقِّ‌ؕ சத்தியத்தைக் கொண்டு وَرَبُّنَا எங்கள் இறைவன் الرَّحْمٰنُ பேரருளாளன் الْمُسْتَعَانُ அவனிடமே உதவி தேடப்படுகிறது عَلٰى எதிராக مَا تَصِفُوْنَ‏ நீங்கள் வர்ணிப்பதற்கு
21:112. என் இறைவா! சத்தியத் தீர்ப்பு வழங்குவாயாக! என்று கூறினார். எங்கள் இறைவனோ அளவற்ற அருளாளன். நீங்கள் வர்ணிப்பதற்கு எதிராக உதவி தேடப்படுபவன்.
21:112. (மேலும் முஹம்மது) கூறினார்: ‘‘என் இறைவனே! (எனக்கும் இந்நிராகரிப்பவர்களுக்கும் இடையில்) நீ நீதமான தீர்ப்பளிப்பாயாக! எங்கள் இறைவன்தான் பேரருளாளன். உங்கள் (பொய்யான) கூற்றுகளுக்கு எதிராக அவனிடமே உதவி தேடுகிறோம்.''
21:112. இறுதியில் இறைத்தூதர் கூறினார்: “என் அதிபதியே! நீ சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பாயாக! மேலும், மக்களே! நீங்கள் இட்டுக்கட்டி கூறுவதற்கு எதிராக எங்களுக்கு உதவி யாளனாக இருப்பவன் கிருபையுள்ள எங்கள் இறைவன்தான்!”
21:112. (மேலும்) “என் இரட்சகனே! (எனக்கும், சத்தியத்தைப் பொய்யாக்கியோருக்குமிடையில்) சத்தியத்தீர்ப்பு வழங்குவாயாக!” என்று கூறினார், எங்கள் இரட்சகனோ பேரருளாளன், நீங்கள் (பொய்யாக) வர்ணிப்பவைகளுக்கெதிராக உதவி தேடப்படுபவன்.