23. ஸூரத்துல் முஃமினூன்(விசுவாசிகள்)
மக்கீ, வசனங்கள்: 118

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
23:1
23:1 قَدْ اَفْلَحَ الْمُؤْمِنُوْنَۙ‏
قَدْ اَفْلَحَ வெற்றி பெற்று விட்டார்கள் الْمُؤْمِنُوْنَۙ‏ நம்பிக்கையாளர்கள்
23:1. ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.
23:1. நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டனர்.
23:1. திண்ணமாக, இறைநம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்றுவிட்டனர்.
23:1. விசுவாசிகள் திட்டமாக வெற்றியடைந்து விட்டனர்.
23:2
23:2 الَّذِيْنَ هُمْ فِىْ صَلَاتِهِمْ خَاشِعُوْنَ ۙ‏
الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் فِىْ صَلَاتِهِمْ தங்கள் தொழுகையில் خَاشِعُوْنَ ۙ‏ உள்ளச்சமுடையவர்கள்
23:2. அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
23:2. அவர்கள் மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள்;
23:2. அவர்கள் எத்தகையவர்கள் எனில், தங்களுடைய தொழுகையில் பயபக்தியை மேற்கொள்கின்றார்கள்;
23:2. அவர்கள் எத்தகையோரென்றால், தம் தொழுகையில் மிக்க உள்ளச்சம் உடையவர்கள்.
23:3
23:3 وَالَّذِيْنَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُوْنَۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் عَنِ اللَّغْوِ வீணான விஷயங்களை விட்டு مُعْرِضُوْنَۙ‏ விலகியவர்கள்
23:3. இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.
23:3. அவர்கள் வீணான காரியங்களிலிருந்து விலகி இருப்பார்கள்;
23:3. மேலும், வீணானவற்றைவிட்டு விலகியிருக்கின்றார்கள்;
23:3. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், வீணானவற்றைப் புறக்கணித்து இருப்பவர்கள்.
23:4
23:4 وَالَّذِيْنَ هُمْ لِلزَّكٰوةِ فَاعِلُوْنَۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் لِلزَّكٰوةِ ஸகாத்தை فَاعِلُوْنَۙ‏ நிறைவேற்றக்கூடியவர்கள்
23:4. ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.
23:4. அவர்கள் ஜகாத்து கொடுத்து வருவார்கள்;
23:4. இன்னும் ஜகாத்தை அதன் நெறிமுறைப்படி செயல்படுத்தக் கூடியவராய் இருக்கின்றார்கள்.
23:4. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், ஜகாத்தை (முறைப்படி) செய்துவிடுகிறவர்கள்.
23:5
23:5 وَالَّذِيْنَ هُمْ لِفُرُوْجِهِمْ حٰفِظُوْنَۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் لِفُرُوْجِهِمْ தங்கள் மர்மஸ்தலங்களை حٰفِظُوْنَۙ‏ பாதுகாக்கக் கூடியவர்கள்
23:5. மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள்.
23:5. அவர்கள் தங்கள் மர்மஸ்தானத்தை (விபசாரத்திலிருந்து) காப்பாற்றிக் கொள்வார்கள்;
23:5. மேலும், தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாக்கின்றார்கள்;
23:5. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் வெட்கத்தலங்களை (விபச்சாரத்திலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறவர்கள்.
23:6
23:6 اِلَّا عَلٰٓى اَزْوَاجِهِمْ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُمْ فَاِنَّهُمْ غَيْرُ مَلُوْمِيْنَ‌ۚ‏
اِلَّا தவிர عَلٰٓى اَزْوَاجِهِمْ தங்கள் மனைவியர்களிடம் اَوْ அல்லது مَا مَلَـكَتْ சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம் اَيْمَانُهُمْ தங்கள் வலக்கரங்கள் فَاِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் غَيْرُ அல்லர் مَلُوْمِيْنَ‌ۚ‏ பழிக்கப்படுபவர்கள்
23:6. ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர - (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டும்) நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள்.
23:6. எனினும், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலது கரம் சொந்தமாக்கிக் கொண்ட (அடிமைப்) பெண்களிடமோ (சேர்வதில்) நிச்சயமாக (அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள். ஆகவே, இவ்விஷயத்தில்) அவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள்.
23:6. தங்களுடைய மனைவியரிடமோ, தங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடமோ தவிர! அத்தகைய நிலையில் அவர்கள் பழிப்பிற்குரியவர்கள் அல்லர்.
23:6. (ஆனால்,) தங்கள் மனைவியரிடமோ, அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்(களான அடிமைப்பெண்)களிடமோ தவிர (இவர்களோடுள்ள உறவில்) நிச்சயமாக அவர்கள் நிந்திக்கப்படுபவர்களல்லர்.
23:7
23:7 فَمَنِ ابْتَغٰى وَرَآءَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْعٰدُوْنَ‌ ۚ‏
فَمَنِ யார் ابْتَغٰى தேடுவார்களோ وَرَآءَ பின்னர் ذٰ لِكَ அதற்கு فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْعٰدُوْنَ‌ ۚ‏ எல்லை மீறிகள்
23:7. ஆனால், இதற்கு அப்பால் (வேறு வழிகளை) எவர் நாடுகிறாரோ அ(த்தகைய)வர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.
23:7. இதற்குப் புறம்பானதை எவரேனும் விரும்பினால் அவர்கள் வரம்பு மீறியவர்களாகி (குற்றவாளிகளாகி) விடுவார்கள்.
23:7. ஆயினும், எவர்கள் இதற்கப்பாலும் ஆசைப்படுகின்றார்களோ அவர்களே வரம்பு மீறக்கூடியவர்களாவர்.
23:7. ஆகவே, எவர்கள் இதனைத்தவிர (வேறு தவறான வழிகளைத்) தேடுகிறார்களோ அப்போது அவர்கள் தாம் வரம்பு மீறியவர்கள்.
23:8
23:8 وَالَّذِيْنَ هُمْ لِاَمٰنٰتِهِمْ وَعَهْدِهِمْ رَاعُوْنَ ۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் لِاَمٰنٰتِهِمْ தங்கள் அமானிதங்களையும் وَعَهْدِهِمْ இன்னும் தங்கள் உடன்படிக்கையையும் رَاعُوْنَ ۙ‏ பேணக்கூடியவர்கள்
23:8. இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.
23:8. மேலும், அவர்கள் (தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருளையும், தங்கள் வாக்குறுதியையும் பேணி நடப்பார்கள்;
23:8. இன்னும் அவர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களையும் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளையும் பேணிக் காக்கக்கூடியவராய் இருக்கின் றார்கள்.
23:8. இன்னும், அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுடைய அமானிதங்களையும், தங்களுடைய வாக்குறுதியையும் (பேணிக்) காப்பாற்றுகிறவர்கள்.
23:9
23:9 وَالَّذِيْنَ هُمْ عَلٰى صَلَوٰتِهِمْ يُحَافِظُوْنَ‌ۘ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் عَلٰى صَلَوٰتِهِمْ தங்கள் தொழுகைகளை يُحَافِظُوْنَ‌ۘ‏ பாதுகாப்பார்கள்
23:9. மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
23:9. அவர்கள் தங்கள் தொழுகைகளையும் (காலாகாலத்தில் தவறாது) கடைப் பிடித்து தொழுது வருவார்கள்.
23:9. மேலும், தங்களுடைய தொழுகைகளையும் பேணுபவராய் இருக்கின்றார்கள்.
23:9. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகைகளைப் பேணுவார்கள்.
23:10
23:10 اُولٰٓٮِٕكَ هُمُ الْوَارِثُوْنَ ۙ‏
اُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْوَارِثُوْنَ ۙ‏ சொந்தமாக்கிக் கொள்பவர்கள்
23:10. இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள்.
23:10. இவர்கள்தான் (சொர்க்கத்திற்கு) உண்மையான வாரிசுதாரர்கள்.
23:10. இவர்கள்தாம் ‘ஃபிர்தவ்ஸ்’ எனும் சொர்க்கத்தைப் பெறும் வாரிசுகளாவர்.
23:10. இத்தகையோர்தாம் (சுவர்க்கத்தை) அனந்தரம் கொள்பவர்கள்.
23:11
23:11 الَّذِيْنَ يَرِثُوْنَ الْفِرْدَوْسَؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
الَّذِيْنَ يَرِثُوْنَ சொந்தமாக்கிக் கொள்வார்கள் الْفِرْدَوْسَؕ ஃபிர்தவ்ஸ் சொர்க்கத்தை هُمْ அவர்கள் فِيْهَا அதில் خٰلِدُوْنَ‏ நிரந்தரமானவர்கள்
23:11. இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
23:11. ஆகவே, இவர்கள் ‘ஃபிர்தவ்ஸ்' என்னும் சொர்க்கத்திற்கு வாரிசுகளாகி அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
23:11. இன்னும், அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள்.
23:11. இவர்கள் எத்தகையோரென்றால் ‘ஃபிர்தௌஸ்’ (என்னும் சுவனபதியை) அனந்தரமாகக் கொள்வார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள்.
23:12
23:12 وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ‌ ۚ‏
وَلَقَدْ திட்டவட்டமாக خَلَقْنَا நாம் படைத்தோம் الْاِنْسَانَ மனிதனை مِنْ سُلٰلَةٍ ஈரச்சத்திலிருந்து مِّنْ طِيْنٍ‌ ۚ‏ களிமண்ணிலிருந்து
23:12. நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.
23:12. நிச்சயமாக (ஆரம்பத்தில் முதல்) மனிதனை களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம்.
23:12. மனிதனை நாம் களி மண்ணின் சத்திலிருந்து படைத்தோம்.
23:12. நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம்.
23:13
23:13 ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِىْ قَرَارٍ مَّكِيْنٍ‏
ثُمَّ பிறகு جَعَلْنٰهُ அவனை நாம் வைத்தோம் نُطْفَةً ஒரு இந்திரியத் துளியாக فِىْ قَرَارٍ ஒரு தங்குமிடத்தில் مَّكِيْنٍ‏ உறுதியான
23:13. பின்னர் நாம் (மனிதனைப் படைப்பதற்காக) அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.
23:13. பின்னர், அதை நாம் இந்திரியமாக்கி ஒரு பத்திரமான இடத்தில் வைத்தோம்.
23:13. பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் (செலுத்தப்பட்ட) விந்தாக ஆக்கினோம்.
23:13. பின்னர், (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாம் அவனை இந்திரியத் துளியாக்கினோம்.
23:14
23:14 ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ‌ ؕ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ ؕ‏
ثُمَّ பிறகு خَلَقْنَا நாம் படைத்தோம் النُّطْفَةَ இந்திரியத் துளியை عَلَقَةً ஒரு இரத்தக்கட்டியாக فَخَلَقْنَا நாம் படைத்தோம் الْعَلَقَةَ இரத்தக் கட்டியை مُضْغَةً ஒரு சதைத் துண்டாக فَخَلَقْنَا நாம் படைத்தோம் الْمُضْغَةَ சதைத் துண்டை عِظٰمًا எலும்புகளாக فَكَسَوْنَا அணிவித்தோம் الْعِظٰمَ எலும்புகளுக்கு لَحْمًا சதையை ثُمَّ பிறகு اَنْشَاْنٰهُ அவனைப் படைத்தோம் خَلْقًا படைப்பாக اٰخَرَ‌ ؕ வேறு ஒரு فَتَبٰـرَكَ மிக்க அருள் வளம் நிறைந்து விட்டான் اللّٰهُ அல்லாஹ் اَحْسَنُ மிக அழகியவனாகிய الْخٰلِقِيْنَ ؕ‏ செய்பவர்களில்
23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
23:14. பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதை வேறு ஒரு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன்.
23:14. பிறகு அந்த விந்தினை இரத்தக் கட்டியின் வடிவத்தில் அமைத்தோம். பின்னர் அந்த இரத்தக் கட்டியை சதைக்கட்டியாய் ஆக்கினோம். பிறகு, அச்சதைக்கட்டியை எலும்புகளாய் ஆக்கினோம். பின்னர் அவ்வெலும்புகளைச் சதையால் போர்த்தினோம். பிறகு, அதனை முற்றிலும் வேறொரு படைப்பாக வளரச் செய்தோம். பெரும் அருட்பேறுகள் உடையவன் ஆவான் அல்லாஹ், படைப்பாளர்களிலெல்லாம் மிக அழகான படைப்பாளன்!
23:14. பின்னர், அந்த இந்திரியத்தை இரத்தக் கட்டியாகப் படைத்தோம், பின்னர் அவ்விரத்தக் கட்டியை மாமிசத்துண்டாகப் படைத்தோம், பின்னர் அம்மாமிசத்துண்டை எலும்புகளாகப் படைத்தோம், பின்னர் அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம், பின்னர், நாம் அதனை வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம், ஆகவே படைக்கிறவர்களில் மிக அழகானவனான (பெரும்பாக்கியங்களுக்குரிய) அல்லாஹ் உயர்வானவன்
23:15
23:15 ثُمَّ اِنَّكُمْ بَعْدَ ذٰلِكَ لَمَيِّتُوْنَؕ‏
ثُمَّ பிறகு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் بَعْدَ ذٰلِكَ இதற்குப் பின்னர் لَمَيِّتُوْنَؕ‏ இறப்பெய்யக் கூடியவர்கள்தான்
23:15. பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள்.
23:15. (மனிதர்களே!) இதற்குப் பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பவர்களே!
23:15. பின்னர், நிச்சயமாக நீங்கள் இதற்குப் பிறகு மரணிக்கக் கூடியவர்கள்தாம்!
23:15. (மனிதர்களே!) பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பெய்தக் கூடியவர்கள்.
23:16
23:16 ثُمَّ اِنَّكُمْ يَوْمَ الْقِيٰمَةِ تُبْعَثُوْنَ‏
ثُمَّ பிறகு اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் يَوْمَ الْقِيٰمَةِ மறுமை நாளில் تُبْعَثُوْنَ‏ எழுப்பப்படுவீர்கள்
23:16. பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.
23:16. அதற்குப் பின்னர் மறுமைநாளில் நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்.
23:16. பிறகு, திண்ணமாக, நீங்கள் மறுமைநாளில் எழுப்பப்படுவீர்கள்.
23:16. பின்னர், மறுமைநாளின்போது நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்.
23:17
23:17 وَلَقَدْ خَلَقْنَا فَوْقَكُمْ سَبْعَ طَرَآٮِٕقَ ۖ  وَمَا كُنَّا عَنِ الْخَـلْقِ غٰفِلِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக خَلَقْنَا நாம் படைத்தோம் فَوْقَكُمْ உங்களுக்கு மேல் سَبْعَ ஏழு طَرَآٮِٕقَ வானங்களை ۖ  وَمَا كُنَّا நாம் இருக்கவில்லை عَنِ الْخَـلْقِ படைப்பைப் பற்றி غٰفِلِيْنَ‏ கவனமற்றவர்களாக
23:17. அன்றியும், உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைத் திடனாக நாம் படைத்திருக்கிறோம் - (நமது) படைப்பைக் குறித்து நாம் எப்பொழுதுமே பராமுகமாக இருக்கவில்லை.
23:17. (மனிதர்களே! இவ்வாறு நாம் உங்களை மட்டுமா படைத்திருக்கிறோம்?) நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு வானங்களையும் நாமே படைத்தோம். (அவை ஒவ்வொன்றிலும் எத்தனையோ படைப்புகள் இருக்கின்றன. இவற்றைப் படைத்து இருப்பதுடன்) இப்படைப்புக(ளுக்கு வேண்டியவைக)ளைப் பற்றி நாம் பராமுகமாகவும் இருக்கவில்லை. (அவற்றுக்கு வேண்டியவை அனைத்தையும் முழுமையாக நாம் படைத்தும் இருக்கிறோம்.)
23:17. திண்ணமாக, நாம் உங்களுக்கு மேலே ஏழு பாதைகளைப் படைத்திருக்கின்றோம். மேலும், படைக்கும் கலையில் நாம் எதுவும் அறியாதவராக இல்லை.
23:17. நிச்சயமாக உங்களுக்கு மேலுள்ள ஏழு பாதைகளை (வானங்களை)யும் நாமே படைத்திருக்கிறோம், இப்படைப்புகளைப்பற்றி ஒருபோதும் நாம் பராமுகமானவர்களாகவும் இருக்கவில்லை.
23:18
23:18 وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ‌ۖ وَاِنَّا عَلٰى ذَهَابٍۢ بِهٖ لَقٰدِرُوْنَ‌ ۚ‏
وَاَنْزَلْنَا இன்னும் நாம் இறக்கினோம் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து مَآءًۢ மழையை بِقَدَرٍ ஓர் அளவின் படி فَاَسْكَنّٰهُ அதை தங்க வைத்தோம் فِى الْاَرْضِ‌ۖ பூமியில் وَاِنَّا நிச்சயமாக நாம் عَلٰى ذَهَابٍۢ போக்கி விடுவதற்கு بِهٖ அதை لَقٰدِرُوْنَ‌ ۚ‏ ஆற்றலுடையவர்கள்தான்
23:18. மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்.
23:18. மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதைப் பூமியில் தங்கும் படியும் செய்கிறோம். அதைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நிச்சயமாக நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்.
23:18. இன்னும், வானிலிருந்து நாம் சரியாகக் கணக்கிட்டு குறிப்பிட்ட அளவு மழையை இறக்கினோம். பின்னர், அதனைப் பூமியில் தேக்கி வைத்தோம். நாம் (விரும்புகின்றபடி) அதனை இல்லாமல் ஆக்கிவிடவும் ஆற்றலுடையோம்.
23:18. வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைக்கிறோம், (அதன் பின்னர்) அதனைப் பூமியில் தங்குமாறு செய்கின்றோம், நிச்சயமாக அதனைப் (பூமிக்குள் இழுக்கப்பட்டு) போக்கிவைக்கவும் நாம் ஆற்றலுடையோர் (ஆவோம்.)
23:19
23:19 فَاَنْشَاْنَا لَـكُمْ بِهٖ جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّ اَعْنَابٍ‌ ۘ لَـكُمْ فِيْهَا فَوَاكِهُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۙ‏
فَاَنْشَاْنَا நாம் உருவாக்கினோம் لَـكُمْ உங்களுக்காக بِهٖ அதன் மூலம் جَنّٰتٍ தோட்டங்களை مِّنْ نَّخِيْلٍ பேரீட்சை மரங்கள் وَّ اَعْنَابٍ‌ ۘ இன்னும் திராட்சை செடிகள் لَـكُمْ உங்களுக்கு فِيْهَا அதில் فَوَاكِهُ பழங்கள் كَثِيْرَةٌ அதிகமான وَّمِنْهَا அவற்றிலிருந்து تَاْكُلُوْنَ ۙ‏ நீங்கள் சாப்பிடுகிறீர்கள்
23:19. அதனைக் கொண்டு, நாம் உங்களுக்கு பேரீச்சை திராட்சை தோட்டங்களை உண்டாக்கியிருக்கின்றோம்; அவற்றில் உங்களுக்கு ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன; அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
23:19. அதைக் கொண்டு பேரீச்சை, திராட்சை (ஆகிய) தோப்புகளையும் உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கிறோம். அவற்றில் உங்களுக்கு வேண்டிய பல கனிவர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றில் (பலவற்றை) நீங்கள் புசிக்கிறீர்கள்.
23:19. மேலும், அதன் மூலம் பேரீச்சை மற்றும் திராட்சைத் தோட்டங்களை உங்களுக்காக நாம் உருவாக்கினோம். இத்தோட்டங்களில் (சுவை மிகுந்த) ஏராளமான கனிகள் உங்களுக்கு இருக்கின்றன. இன்னும் அவற்றிலிருந்து நீங்கள் உணவைப் பெற்றுக் கொள்கின்றீர்கள்.
23:19. பின்னர் அதனைக்கொண்டு பேரீச்சை, திராட்சைகள் (முதலிய) தோட்டங்களை உங்களுக்காக நாம் உற்பத்தி செய்திருக்கின்றோம், அவைகளில் உங்களுக்கு அநேகக் கனிகள் இருக்கின்றன, இன்னும் அவற்றிலிருந்தும் நீங்கள் உண்ணுகின்றீர்கள்.
23:20
23:20 وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُوْرِ سَيْنَآءَ تَنْۢبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْاٰكِلِيْنَ‏
وَشَجَرَةً இன்னும் ஒரு மரத்தை تَخْرُجُ உற்பத்தி ஆகக்கூடியது مِنْ طُوْرِ மலையிலிருந்து سَيْنَآءَ ஸினாய் تَنْۢبُتُ முளைப்பிக்கிறது بِالدُّهْنِ எண்ணையை وَصِبْغٍ சுவையான உணவை لِّلْاٰكِلِيْنَ‏ உண்பவர்களுக்கு
23:20. இன்னும் தூர் ஸினாய் மலைக்கருகே உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் உண்டாக்கினோம்) அது எண்ணெயை உற்பத்தி செய்கிறது. மேலும் (ரொட்டி போன்றவற்றை) சாப்பிடுவோருக்கு தொட்டு சாப்பிடும் பொருளாகவும் (அது அமைந்துள்ளது).
23:20. ‘தூர்ஸீனாய்' மலையில் முளைக்கின்ற (ஜைத்தூன் என்னும் ஒலிவ) மரத்தையும் (நாம் உற்பத்தி செய்கிறோம்). அது எண்ணையையும் புசிப்பவர்களுக்கு ஒரு சுவையையும் (குழம்பையும்) தருகிறது.
23:20. மேலும், ‘தூர் ஸைனா’ வளர்கின்ற மரத்தையும் நாம் படைத்தோம். எண்ணெய்யுடனும் உண்ணுகின்றவர்களுக்குக் குழம்புடனும் அது முளைக்கின்றது.
23:20. தூர் ஸைனாவிலிருந்து (முளைத்து) வெளிப்படும் ஒரு மரத்தையும் (நாம் படைத்தோம்.) அது எண்ணையையும், புசிப்போருக்கு (சுவைமிக்க) குழம்பையும் கொண்டு முளைக்கிறது.
23:21
23:21 وَ اِنَّ لَـكُمْ فِى الْاَنْعَامِ لَعِبْرَةً‌   ؕ نُسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهَا وَلَـكُمْ فِيْهَا مَنَافِعُ كَثِيْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۙ‏
وَ اِنَّ நிச்சயமாக لَـكُمْ உங்களுக்கு فِى الْاَنْعَامِ கால்நடையில் لَعِبْرَةً‌   ؕ ஒரு படிப்பினை نُسْقِيْكُمْ உங்களுக்கு நாம் புகட்டுகிறோம் مِّمَّا فِىْ بُطُوْنِهَا அவற்றின் வயிற்றிலிருந்து وَلَـكُمْ இன்னும் உங்களுக்கு فِيْهَا அவற்றில் مَنَافِعُ பலன்களும் كَثِيْرَةٌ அதிகமான وَّمِنْهَا இன்னும் அவற்றிலிருந்து تَاْكُلُوْنَ ۙ‏ நீங்கள் புசியுங்கள்
23:21. நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) பிராணிகளில் ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிறுகளிலிருந்து (சுரக்கும் பாலை) நாம் உங்களுக்கு புகட்டுகிறோம்; இன்னும் அவற்றில் உங்களுக்கு அநேக பயன்கள் இருக்கின்றன; அவற்றி(ன் மாமிசத்தி)லிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.  
23:21. நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும், உங்களுக்கு அவற்றில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள்.
23:21. திண்ணமாக, கால்நடைகளிலும் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. அவற்றின் வயிற்றுக்குள் இருப்பவற்றிலிருந்து ஒரு பொருளை (பாலை) உங்களுக்கு நாம் புகட்டுகின்றோம். மேலும், அவற்றில் ஏராளமான பயன்களும் உங்களுக்கு இருக்கின்றன. நீங்கள் அவற்றை உண்ணவும் செய்கின்றீர்கள்.
23:21. இன்னும், நிச்சயமாக (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளில் உங்களுக்கொரு படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிறுகளில் உள்ளவற்றிலிருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம், அவைகளில் உங்களுக்கு அநேகப் பயன்களும் இருக்கின்றன, மேலும் அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கின்றீர்கள்.
23:22
23:22 وَعَلَيْهَا وَعَلَى الْـفُلْكِ تُحْمَلُوْنَ‏
وَعَلَيْهَا அவற்றின் மீதும் وَعَلَى الْـفُلْكِ கப்பல்கள் மீதும் تُحْمَلُوْنَ‏ நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள்
23:22. மேலும் அவற்றின் மீதும், கப்பல்களிலும் நீங்கள் சுமக்கப்படுகின்றீர்கள்.
23:22. அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள்.
23:22. அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் நீங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றீர்கள்.
23:22. அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகின்றீர்கள்.
23:23
23:23 وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ ؕ اَفَلَا تَتَّقُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் نُوْحًا நூஹை اِلٰى قَوْمِهٖ அவருடைய மக்களிடம் فَقَالَ அவர் கூறினார் يٰقَوْمِ எனது மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا இல்லை لَـكُمْ உங்களுக்கு مِّنْ اِلٰهٍ கடவுள் யாரும் غَيْرُهٗ ؕ அவனையன்றி اَفَلَا تَتَّقُوْنَ‏ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
23:23. இன்னும்: நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடத்தில் அனுப்பினோம்; அப்போது அவர் (தம் சமூகத்தாரிடம்) “என் சமூகத்தவர்களே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் - அவனன்றி உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை, நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” என்று கூறினார்.
23:23. நிச்சயமாக நாம் ‘‘நூஹ்' (நபியை) நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கூறினார்.
23:23. திண்ணமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். அவர் கூறினார்: “என் சமுதாய மக்களே! அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை. நீங்கள் அஞ்சமாட்டீர்களா?”
23:23. மேலும், நிச்சயமாக நாம் “நூஹை” நம்முடைய தூதராக அவருடைய சமூகத்தாரின்பால் அனுப்பிவைத்தோம், அவர் (அவர்களிடம்) “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள், அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) வேறு நாயன் உங்களுக்கு இல்லை, (அவனுக்கு) நீங்கள் பயப்பட மாட்டீர்களா?” என்று கூறினார்.
23:24
23:24 فَقَالَ الْمَلَؤُا الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ يُرِيْدُ اَنْ يَّـتَفَضَّلَ عَلَيْكُمْ ؕ وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَنْزَلَ مَلٰٓٮِٕكَةً  ۖۚ مَّا سَمِعْنَا بِهٰذَا فِىْۤ اٰبَآٮِٕنَا الْاَوَّلِيْنَ‌ ۚ‏
فَقَالَ கூறினர் الْمَلَؤُا தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய மக்களில் مَا இல்லை هٰذَاۤ இவர் اِلَّا தவிர بَشَرٌ மனிதரே مِّثْلُكُمْ ۙ உங்களைப் போன்ற يُرِيْدُ அவர் நாடுகிறார் اَنْ يَّـتَفَضَّلَ மேன்மை அடைய عَلَيْكُمْ ؕ உங்கள் மீது وَلَوْ شَآءَ நாடியிருந்தால் اللّٰهُ அல்லாஹ் لَاَنْزَلَ இறக்கி இருப்பான் مَلٰٓٮِٕكَةً  ۖۚ வானவர்களை مَّا سَمِعْنَا நாங்கள் கேள்விப்பட்டதில்லை بِهٰذَا இதை فِىْۤ اٰبَآٮِٕنَا எங்கள் மூதாதைகளில் الْاَوَّلِيْنَ‌ ۚ‏ முன்னோர்களான
23:24. ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்: “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள்.
23:24. அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தமது மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. எனினும், அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (மெய்யாகவே) அல்லாஹ் (நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப) நாடியிருந்தால் வானவர்களையே அனுப்பிவைத்திருப்பான். முன்னுள்ள எங்கள் மூதாதைகளிடம் இத்தகைய விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும்,
23:24. அவருடைய சமுதாயத்தில் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைவர்கள் கூறலானார்கள்: “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களைவிட உயர்வடைய வேண்டும் என நினைக்கின்றார்! அல்லாஹ் யாரையேனும் தூதராக அனுப்ப நாடியிருந்தால் வானவர்களை அனுப்பி வைத்திருப்பான். (மனிதர் இறைத்தூதராய் வருவார் எனும்) இச்செய்தியை எங்கள் மூதாதையரிடமிருந்து நாங்கள் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லையே!
23:24. அப்போது (அவரை) நிராகரித்துவிட்ட அவருடைய சமூகத்தாரில் உள்ள தலைவர்கள் “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை, (எனினும்) இவர், உங்கள் மீது சிறப்புப்பெற நாடுகிறார், மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் மலக்குகளைத் திட்டமாக இறக்கி வைத்திருப்பான், முன்னுள்ள நம் மூதாதையர்களிடம், இதனைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள்.
23:25
23:25 اِنْ هُوَ اِلَّا رَجُلٌۢ بِهٖ جِنَّةٌ فَتَرَبَّصُوْا بِهٖ حَتّٰى حِيْنٍ‏
اِنْ هُوَ அவர் இல்லை اِلَّا தவிர رَجُلٌۢ ஓர் ஆடவரே بِهٖ அவருக்கு جِنَّةٌ பைத்தியம் (ஏற்பட்டிருக்கிறது) فَتَرَبَّصُوْا எதிர் பார்த்திருங்கள் بِهٖ அவருக்கு حَتّٰى வரை حِيْنٍ‏ ஒரு காலம்
23:25. “இவர் ஒரு பைத்தியக்கார மனிதரேயன்றி வேறில்லை; எனவே இவருடன் நீங்கள் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்” (எனவும் கூறினர்).
23:25. ‘‘ இவர் ஒரு பைத்தியக்காரராகவே தவிர வேறில்லை. ஆகவே, இவர் விஷயத்தில் (இவர் கூறுவது நிகழும் வரை) சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்'' என்றும் கூறினார்கள்.
23:25. இந்த மனிதருக்குக் கொஞ்சம் பைத்தியம் பிடித்திருக்கின்றது என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. இவருடைய விஷயத்தில் இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள். (இவருடைய பைத்தியம் தெளியக்கூடும்!)”
23:25. “இவர் ஒரு பைத்தியக்கார மனிதரே தவிர வேறில்லை, ஆகவே சிறிது காலம்வரை இவரை எதிர்பார்த்திருங்கள் (என்றும் கூறினார்கள்.)
23:26
23:26 قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா انْصُرْنِىْ எனக்கு நீ உதவுவாயாக بِمَا كَذَّبُوْنِ‏ அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்
23:26. “என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!” என்று கூறினார்.
23:26. (அதற்கு நூஹ் நபி) ‘‘என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, நீ எனக்கு உதவி செய்'' என்று பிரார்த்தித்தார்.
23:26. அதற்கு நூஹ் “என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யனென்று கூறிவிட்டதனால் இனி நீயே எனக்கு உதவி செய்வாயாக!” என்று இறைஞ்சினார்.
23:26. “என்னுடைய இரட்சகனே! என்னை இவர்கள் பொய்யாக்கியதன் காரணமாக நீ எனக்கு உதவி செய்வாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
23:27
23:27 فَاَوْحَيْنَاۤ اِلَيْهِ اَنِ اصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَ وَحْيِنَا فَاِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّـنُّوْرُ‌ۙ فَاسْلُكْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ مِنْهُمْ‌ۚ وَلَا تُخَاطِبْنِىْ فِى الَّذِيْنَ ظَلَمُوْا‌ۚ اِنَّهُمْ مُّغْرَقُوْنَ‏
فَاَوْحَيْنَاۤ நாம் வஹீ அறிவித்தோம் اِلَيْهِ அவருக்கு اَنِ اصْنَعِ நீர் செய்வீராக الْفُلْكَ கப்பலை بِاَعْيُنِنَا நமது கண்களுக்கு முன்னும் وَ وَحْيِنَا நமது அறிவிப்பின்படியும் فَاِذَا جَآءَ வந்துவிட்டால் اَمْرُنَا நம் கட்டளை وَفَارَ பொங்க ஆரம்பித்து விட்டால் التَّـنُّوْرُ‌ۙ அடுப்பு فَاسْلُكْ அதில் فِيْهَا ஏற்றுவீராக مِنْ كُلٍّ எல்லாவற்றிலிருந்தும் زَوْجَيْنِ ஜோடிகளையும் اثْنَيْنِ இரண்டு وَاَهْلَكَ இன்னும் உமது குடும்பத்தினரையும் اِلَّا தவிர مَنْ எவன் سَبَقَ முந்திவிட்டதோ عَلَيْهِ அவன் மீது الْقَوْلُ வாக்கு مِنْهُمْ‌ۚ அவர்களில் وَلَا تُخَاطِبْنِىْ இன்னும் என்னிடம் நீர் உரையாடாதீர் فِى الَّذِيْنَ ظَلَمُوْا‌ۚ அநியாயக்காரர்கள் விஷயத்தில் اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் مُّغْرَقُوْنَ‏ மூழ்கடிக்கப்படுவார்கள்
23:27. அதற்கு, “நீர் நம் கண் முன் நம்முடைய வஹீயறிவிப்பின்படியும் கப்பலைச் செய்வீராக! பிறகு நம்முடைய கட்டளை வந்து, அடுப்புக் கொதிக்கும் போது, ஒவ்வொன்றிலும் ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜதையையும், உம்முடைய குடும்பத்தினரில் எவர் மீது நம் (தண்டனை பற்றிய) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவரைத் தவிர, (மற்றவர்களையும்) அதில் ஏற்றிக் கொள்ளும்; இன்னும்: அநியாயம் செய்தார்களே அவர்களைப் பற்றி நீர் என்னிடம் பரிந்து பேச வேண்டாம் - நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று அவருக்கு நாம் அறிவித்தோம்.
23:27. அதற்கு நாம் அவரை நோக்கி நீர் ‘‘நாம் அறிவிக்கின்றபடி நம் கண்முன் ஒரு கப்பலைச் செய்வீராக. நம் உத்தரவு ஏற்பட்டு அடுப்புப்பொங்க ஆரம்பித்தால் (ஒவ்வோர் உயிர்ப் பிராணிகளிலும்) ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜோடியையும், உமது குடும்பத்தினரையும் நீர் அதில் ஏற்றிக் கொள்வீராக. ஆயினும், எவன் மீது நம் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவனைத் தவிர. (ஏனென்றால்,) அநியாயம் செய்பவ(ர் உங்கள் குடும்பத்தவராயினும் அவ)ரைப் பற்றி நீர் என்னிடம் ஏதும் (சிபாரிசாகப்) பேசாதீர். நிச்சயமாக அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்'' என்று வஹ்யி அறிவித்தோம்.
23:27. நாம் அவருக்கு வஹி அறிவித்தோம். நாம் அறிவிக்கின்றபடியும், நமது கண்காணிப்பிலும் ஒரு கப்பலைத் தயார் செய்யும்! பின்னர், நம் கட்டளை வந்ததும் உலையிலிருந்து தண்ணீர் பொங்கி எழ ஆரம்பித்தால், எல்லா வகைப் பிராணிகளிலிருந்தும் ஒவ்வொரு ஜோடியையும், உமது குடும்பத்தாரையும் அதில் ஏற்றிக் கொள்ளும்; அவர்களில் யாருக்கு எதிராக முன்னரே தீர்ப்பாகி விட்டதோ அவர்களைத் தவிர! மேலும், கொடுமைக்காரர்களைப் பற்றி நீர் எம்மிடம் எதுவும் பேசாதீர். இதோ! இவர்கள் மூழ்கடிக்கப்படவிருக்கின்றார்கள்;
23:27. (அதற்கு) “நீர் நம் கண்களின் முன்பாகவும் நாம் அறிவிக்கின்ற பிரகாரமும் ஒரு கப்பலைச் செய்வீராக! நம்முடைய உத்தரவு வந்து அடுப்புக்கொதிக்க ஆரம்பித்தால், (ஒவ்வொரு ஜீவராசிகளிலும்) ஆண், பெண், இரண்டிரண்டு சேர்ந்த ஜோடிகளையும் உம்முடைய குடும்பத்தினரில், எவர் மீது நம்முடைய (தண்டனை பற்றிய) வாக்கு முந்திவிட்டதோ அவரைத் தவிர, மற்ற (உம்முடைய குடும்பத்த)வரையும் நீர் அதில் ஏற்றிக் கொள்வீராக! அநியாயம் செய்து விட்டார்களே அவர்களைப் பற்றி, நீர் என்னிடம் பேசாதீர், நிச்சயமாக அவர்கள் (பெரு வெள்ளத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுபவர்கள்” என்று அவருக்கு நாம் வஹீ அறிவித்தோம்.
23:28
23:28 فَاِذَا اسْتَوَيْتَ اَنْتَ وَمَنْ مَّعَكَ عَلَى الْـفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ نَجّٰٮنَا مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
فَاِذَا اسْتَوَيْتَ நீர் ஏறிவிட்டால் اَنْتَ நீரும் وَمَنْ مَّعَكَ இன்னும் உன்னுடன் இருப்பவரும் عَلَى الْـفُلْكِ கப்பலில் فَقُلِ கூறுவீராக الْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே الَّذِىْ எவன் نَجّٰٮنَا எங்களை பாதுகாத்தான் مِنَ الْقَوْمِ மக்களிடமிருந்து الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
23:28. “நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்: “அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக!
23:28. நீரும் உம்முடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்து கொண்டதன் பின்னர் ‘‘ அநியாயக்கார இந்த மக்களில் இருந்து எங்களை பாதுகாத்துக் கொண்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்'' என்று கூறுவீராக.
23:28. நீரும் உம்முடனிருப்பவர்களும் கப்பலில் ஏறிக் கொண்டதும் கூறுவீர்களாக: “கொடுமைபுரியும் மக்களிடமிருந்து எங்களை விடுவித்த அல்லாஹ்வுக்கே அனைத்து நன்றியும்!”
23:28. ஆகவே, நீரும், உம்முடன் உள்ளவர்களும் கப்பலில் ஏறி அமர்ந்துவிட்டால் அப்போது “அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்து எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” என்று கூறுவீராக! (என்றும்)
23:29
23:29 وَقُلْ رَّبِّ اَنْزِلْنِىْ مُنْزَلًا مُّبٰـرَكًا وَّاَنْتَ خَيْرُ الْمُنْزِلِيْنَ‏
وَقُلْ இன்னும் கூறுவீராக رَّبِّ என் இறைவா اَنْزِلْنِىْ என்னை தங்க வைப்பாயாக مُنْزَلًا ஓர் இடத்தில் مُّبٰـرَكًا அருள் நிறைந்த وَّاَنْتَ நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الْمُنْزِلِيْنَ‏ தங்க வைப்பவர்களில்
23:29. மேலும் “இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள - இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்திரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்” என்று பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்).
23:29. ‘‘என் இறைவனே! நீ என்னை மிக்க பாக்கியமுள்ள(வனாக பாக்கியம் பெற்ற இடத்தில் உன்) விருந்தாளியாக(க் கப்பலில் இருந்து) இறக்கிவைப்பாயாக! நீயோ விருந்தாளிகளை வரவேற்று உபசரிப்பதில் மிக்க மேலானவன் என்றும் பிரார்த்திப்பீராக'' (என்றும் கூறினோம்.)
23:29. மேலும், கூறுவீராக: “என் இறைவனே! அருள் வளம் கொண்டதோர் இடத்தில் என்னை இறக்குவாயாக! நீ மிகச் சிறந்த இடத்தை நல்கக் கூடியவன்.”
23:29. “மேலும், என் இரட்சகனே! நீ என்னை மிக்க பாக்கியம் செய்யப்பட்ட இறங்கும் இடத்தில் இறக்கி வைப்பாயாக! நீயே இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன் என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவீராக!” (என்றும் கூறினோம்.)
23:30
23:30 اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ وَّاِنْ كُنَّا لَمُبْتَلِيْنَ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் உள்ளன لَاٰيٰتٍ (பல) அத்தாட்சிகள் وَّاِنْ كُنَّا நிச்சயமாக நாம் இருந்தோம் لَمُبْتَلِيْنَ‏ சோதிப்பவர்களாகவே
23:30. நிச்சயமாக இவற்றில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன; நாம் (இவ்வாறே மனிதர்களைச்) சோதிப்பவராக இருக்கின்றோம்.
23:30. நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (நிச்சயமாக மனிதர்களின் நம்பிக்கையை) நாம் சோதிப்பவர்களாக இருக்கிறோம்.
23:30. திண்ணமாக, இவ்வரலாற்றில் பெரும் சான்றுகள் உள்ளன. திண்ணமாக, நாம் சோதனை செய்து கொண்டுதான் இருக்கின்றோம்.
23:30. (இவ்வாறு) நாம் சோதிப்பவர்களாக இருப்பினும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
23:31
23:31 ثُمَّ اَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قَرْنًا اٰخَرِيْنَ‌ ۚ‏
ثُمَّ பிறகு اَنْشَاْنَا நாம் உருவாக்கினோம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ அவர்களுக்கு قَرْنًا தலைமுறையினரை اٰخَرِيْنَ‌ ۚ‏ வேறு ஒரு
23:31. பின்னர், (பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களை அடுத்து வேறொரு தலைமுறையினரை உண்டாக்கினோம்.
23:31. (வெள்ளப் பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களுக்குப் பின்னர் நாம் (‘ஆது' என்னும்) மற்றொரு வகுப்பினரை உற்பத்தி செய்தோம்.
23:31. அவர்களுக்குப் பிறகு நாம் வேறொரு கால கட்டத்து சமூகத்தினரைத் தோற்றுவித்தோம்.
23:31. அப்பால் (பெருவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட) இவர்களுக்குப் பின்னர், மற்றொரு தலைமுறையினரை நாம் உண்டாக்கினோம்.
23:32
23:32 فَاَرْسَلْنَا فِيْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ اَنِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ اَفَلَا تَتَّقُوْنَ‏
فَاَرْسَلْنَا நாம் அனுப்பினோம் فِيْهِمْ அவர்களில் رَسُوْلًا ஒரு தூதரை مِّنْهُمْ அவர்களில் اَنِ اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا இல்லை لَـكُمْ உங்களுக்கு مِّنْ اِلٰهٍ வணங்கத்தகுதியான (வேறு) கடவுள் யாரும் غَيْرُهٗ‌ ؕ அவனையன்றி اَفَلَا تَتَّقُوْنَ‏ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
23:32. அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம். “அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி, உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை; நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?” (என்றும் அவர் கூறினார்.)  
23:32. அவர்களில் உள்ள (‘ஹூது' என்ற) ஒருவரையே அவர்களுக்கு நம் தூதராக நாம் அனுப்பிவைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு இறைவன் இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' (என்று கூறினார்.)
23:32. பிறகு, அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிடம் நாம் அனுப்பினோம். (அவர் அவர்களுக்கு இவ்வாறு அழைப்பு விடுத்தார்:) “அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் உங்களுக்கு வேறு யாரும் இல்லை; நீங்கள் அஞ்சுவதில்லையா என்ன?”
23:32. ஆகவே, அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களிலே நாம் அனுப்பி வைத்தோம், அவர் (அவர்களிடம்,) “அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள், அவனைத்தவிர உங்களுக்கு (வணக்கத்திற்குரிய) வேறு நாயன் இல்லை, (அவனுக்கு) நீங்கள் பயப்படமாட்டீர்களா?” (என்று கூறினார்.)
23:33
23:33 وَقَالَ الْمَلَاُ مِنْ قَوْمِهِ الَّذِيْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِلِقَآءِ الْاٰخِرَةِ وَاَتْرَفْنٰهُمْ فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ يَاْكُلُ مِمَّا تَاْكُلُوْنَ مِنْهُ وَيَشْرَبُ مِمَّا تَشْرَبُوْنَ ۙ‏
وَقَالَ கூறினர் الْمَلَاُ தலைவர்கள் مِنْ قَوْمِهِ அவருடைய மக்களில் الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا இன்னும் நிராகரித்தனர் وَكَذَّبُوْا இன்னும் பொய்யாக்கினர் بِلِقَآءِ சந்திப்பை الْاٰخِرَةِ மறுமையின் وَاَتْرَفْنٰهُمْ நாம் அவர்களுக்கு செல்வத்தை வழங்கியிருந்தோம் فِى الْحَيٰوةِ الدُّنْيَا ۙ உலக வாழ்வில் مَا இல்லை هٰذَاۤ இவர் اِلَّا தவிர بَشَرٌ மனிதரே مِّثْلُكُمْ ۙ உங்களைப் போன்ற يَاْكُلُ அவர் சாப்பிடுகிறார் مِمَّا تَاْكُلُوْنَ நீங்கள் சாப்பிடுவதிலிருந்து مِنْهُ அதில் وَيَشْرَبُ இன்னும் அவர் குடிக்கிறார் مِمَّا تَشْرَبُوْنَ ۙ‏ நீங்கள் குடிப்பதிலிருந்து
23:33. ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும், இறுதித் தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சுகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
23:33. (ஹூது நபியுடைய) மக்களுக்கு இவ்வுலக வாழ்க்கையின் சுகபோகங்களை நாம் கொடுத்திருந்தும் அவர்களுடைய தலைவர்கள் (அவற்றையும்) அவரையும் நிராகரித்துவிட்டு மறுமையைச் சந்திப்பதையும் பொய்யாக்கி (‘ஹூது' நபியை சுட்டிக் காண்பித்து) ‘‘ இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதனே தவிர வேறில்லை. நீங்கள் புசிப்பதையே அவரும் புசிக்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.
23:33. மேலும் அவருடைய சமூகத்தில் எந்தத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ இன்னும் இறுதிநாளின் சந்திப்பை, பொய்யென்று வாதாடினார்களோ மேலும், இவ்வுலகில் ஆடம்பரமான வாழ்க்கையை எவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோமோ அந்தத் தலைவர்கள் கூறலானார்கள்; “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்ணுகின்றவற்றையே இவரும் உண்ணுகின்றார். மேலும், நீங்கள் பருகுகின்றவற்றையே இவரும் பருகுகின்றார்.
23:33. அதற்கு அவருடைய சமூகத்தாரிலிருந்து (அவரை) நிராகரித்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யாக்கி இவ்வுலக வாழ்க்கையில் சுகபோகங்களை நாம் யாருக்குக் கொடுத்திருந்தோமோ அத்தகைய தலைவர்கள் (இந் நபியைக் காண்பித்து) “இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை, நீங்கள் எதிலிருந்து உண்ணுகிறீர்களோ அதையே அவரும் உண்கிறார், நீங்கள் குடிப்பதிலிருந்து அவரும் குடிக்கிறார்” என்று கூறினார்கள்.
23:34
23:34 وَلَٮِٕنْ اَطَعْتُمْ بَشَرًا مِّثْلَـكُمْ اِنَّكُمْ اِذًا لَّخٰسِرُوْنَۙ‏
وَلَٮِٕنْ اَطَعْتُمْ நீங்கள் கீழ்ப்படிந்து நடந்தால் بَشَرًا மனிதருக்கு مِّثْلَـكُمْ உங்களைப் போன்ற اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اِذًا அப்போது لَّخٰسِرُوْنَۙ‏ நஷ்டவாளிகள்தான்
23:34. எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே!
23:34. ஆகவே உங்களைப் போன்ற (இம்) மனிதனை நீங்கள் பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமே அடைந்துவிடுவீர்கள்.
23:34. எனவே, உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கீழ்ப்படிவீர்களாயின் அப்போது திண்ணமாக, நீங்கள் இழப்பிற்குரியவர்களாகி விடுவீர்கள்!
23:34. ஆகவே, “உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் அப்போது நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்கள்”(என்றும்)-
23:35
23:35 اَيَعِدُكُمْ اَنَّكُمْ اِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَّعِظَامًا اَنَّكُمْ مُّخْرَجُوْنَ ۙ‏
اَيَعِدُكُمْ அவர் உங்களுக்கு வாக்குறுதி கூறுகிறாரா اَنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اِذَا مِتُّمْ நீங்கள் மரணித்துவிட்டால் وَكُنْتُمْ இன்னும் ஆகிவிட்டால் تُرَابًا மண்ணாகவும் وَّعِظَامًا எலும்புகளாகவும் اَنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مُّخْرَجُوْنَ ۙ‏ வெளியேற்றப்படுவீர்கள்
23:35. “நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பின்னர் நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?
23:35. நீங்கள் இறந்து எலும்பாகவும், மண்ணாகவும் ஆனதன் பின்னர் நிச்சயமாக நீங்கள் (உயிருடன்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களை பயமுறுத்துகிறாரா?
23:35. நீங்கள் இறந்து, மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்ட பிறகு நீங்கள் (மண்ணறைகளிலிருந்து) வெளியாக்கப்படுவீர்கள் என்று இவர் உங்களிடம் எச்சரிக்கின்றாரா?
23:35. “நிச்சயமாக நீங்கள் இறந்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால், நிச்சயமாக நீங்கள் (மீண்டும் உயிர் கொடுத்து) வெளிப்படுத்தப்படுபவர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?” என்றும்)-
23:36
23:36 هَيْهَاتَ هَيْهَاتَ لِمَا تُوْعَدُوْنَ ۙ‏
هَيْهَاتَ வெகு தூரம் هَيْهَاتَ வெகு தூரம் لِمَا تُوْعَدُوْنَ ۙ‏ நீங்கள் வாக்களிக்கப்படுவது
23:36. “(அப்படியாயின்) உங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது, வெகு தொலைவு, வெகு தொலைவு (ஆகவே இருக்கிறது.)
23:36. அவர் உங்களை பயமுறுத்தும் விஷயம் வெகு தூரமோ தூரம் (அது ஆகக்கூடியதன்று).
23:36. உங்களிடம் விடுக்கப்படும் இந்த எச்சரிக்கை சாத்தியமற்றது; முற்றிலும் சாத்தியமற்றது!
23:36. “உங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது (எவ்வாறு நடந்தேறும்) அது வெகுதொலைவு, (அது) வெகு தொலைவு” (என்றும்),
23:37
23:37 اِنْ هِىَ اِلَّا حَيَاتُنَا الدُّنْيَا نَمُوْتُ وَنَحْيَا وَمَا نَحْنُ بِمَبْعُوْثِيْنَ ۙ‏
اِنْ هِىَ இது اِلَّا தவிர حَيَاتُنَا நமது வாழ்க்கை الدُّنْيَا உலக نَمُوْتُ நாம் இறந்து விடுகிறோம் وَنَحْيَا இன்னும் நாம் வாழ்கிறோம் وَمَا இன்னும் அல்லர் نَحْنُ நாம் بِمَبْعُوْثِيْنَ ۙ‏ எழுப்பப்படுபவர்கள்
23:37. “நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்படப் போகிறவர்கள் அல்ல.
23:37. நமக்கு இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு வாழ்க்கை இல்லை. இதிலேயே நாம் வாழ்ந்திருந்து இதிலேயே இறந்துவிடுவோம். (இதற்குப் பின்னர் உயிர் கொடுக்கப்பட்டு) நாம் எழுப்பப்படப் போவதில்லை.
23:37. நம்முடைய இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு ஒரு வாழ்க்கை இல்லை; நாம் இறக்கப்போவதும் உயிர் வாழ்வதும் இங்குதான்! நாம் ஒருபோதும் எழுப்பப்படமாட்டோம்.
23:37. “இது நம்முடைய இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு எதுவும் இல்லை, (இதிலேயே) நாம் இறந்துவிடுவோம், “(இப்போது) நாம் உயிரோடும் உள்ளோம், (ஆனால், நாம் இறந்தபின்னர்) நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படப்போகிறவர்களும் அல்லர்” (என்றும்)-
23:38
23:38 اِنْ هُوَ اِلَّا رَجُلُ اۨفْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا وَّمَا نَحْنُ لَهٗ بِمُؤْمِنِيْنَ‏
اِنْ هُوَ அவர் இல்லை اِلَّا தவிர رَجُلُ ஒரு மனிதரே اۨفْتَـرٰى இட்டுக்கட்டினார் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ்வின் كَذِبًا பொய்யை وَّمَا இல்லை نَحْنُ நாங்கள் لَهٗ அவரை بِمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கை கொண்டவர்களாக
23:38. “இவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டும் மனிதரேயன்றி வேறில்லை - எனவே இவரை நாம் நம்பமாட்டோம்” என்று (கூறினர்).
23:38. (ஹூது நபி என்னும்) இம்மனிதர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுபவரே தவிர வேறில்லை. இவரை நாம் நம்பவே மாட்டோம்'' என்றார்கள்.
23:38. அல்லாஹ்வின் பேரில் பொய்யைப் புனைந்து உரைத்துக் கொண்டிருக்கும் மனிதரே இவர். நாம் ஒருபோதும் இவரை நம்பமாட்டோம்!”
23:38. “இவர், அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்து கூறும் ஒரு மனிதரே தவிர வேறில்லை, இவரை நாம் நம்பக்கூடியவர்களாகவும் இல்லை (என்றும் கூறினார்கள்.)
23:39
23:39 قَالَ رَبِّ انْصُرْنِىْ بِمَا كَذَّبُوْنِ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா انْصُرْنِىْ எனக்கு நீ உதவுவாயாக بِمَا كَذَّبُوْنِ‏ அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால்
23:39. “என் இறைவா! என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று கூறினார்.
23:39. அதற்கவர் ‘‘ என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். நீதான் எனக்கு உதவிசெய்ய வேண்டும்'' என்று பிரார்த்தித்தார்.
23:39. அதற்கு அந்தத் தூதர் இறைஞ்சினார். “என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யன் என்று தூற்றிவிட்ட காரணத்தால் நீயே எனக்கு உதவி புரிந்திடுவாய்!”
23:39. அ(தற்க)வர் “என் இரட்சகனே! இவர்கள் என்னைப் பொய்ப்படுத்திவிட்டதன் காரணத்தால் நீ எனக்கு உதவி செய்வாயாக!” என்று( பிரார்த்தித்துக்) கூறினார்.
23:40
23:40 قَالَ عَمَّا قَلِيْلٍ لَّيُصْبِحُنَّ نٰدِمِيْنَ‌ۚ‏
قَالَ கூறினான் عَمَّا قَلِيْلٍ விரைவில் لَّيُصْبِحُنَّ அவர்கள் ஆகிவிடுவார்கள் نٰدِمِيْنَ‌ۚ‏ கைசேதப்பட்டவர்களாக
23:40. “சிறிது காலத்தில் அவர்கள் நிச்சயமாகக் கைசேதப்பட்டவர்களாகி விடுவார்கள்” என்று கூறினார்.
23:40. அதற்கு இறைவன் ‘‘(ஹூதே சிறிது பொறுத்திரும்!) அதிசீக்கிரத்தில் இவர்கள் துக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள்'' என்று கூறினான்.
23:40. அதற்கு இறைவன், “நெருங்கிவிட்டது இவர்கள் (தாங்கள் செய்தவற்றைக் குறித்து) வருந்தப்போகின்ற காலம்!” என பதில் அளித்தான்.
23:40. (அதற்கு) “சிறிது காலத்தில் நிச்சயமாக அவர்கள் கைசேதத்தை உடையோராக ஆகிவிடுவர்” என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
23:41
23:41 فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ بِالْحَـقِّ فَجَعَلْنٰهُمْ غُثَآءً‌ۚ فَبُعْدًا لِّـلْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
فَاَخَذَتْهُمُ அவர்களைப் பிடித்துக் கொண்டது الصَّيْحَةُ பெரிய சப்தம் بِالْحَـقِّ உண்மையில் فَجَعَلْنٰهُمْ அவர்களை மாற்றி விடுவோம் غُثَآءً‌ۚ நுரைகளாக فَبُعْدًا தொலைந்து போகட்டும் لِّـلْقَوْمِ கூட்டம் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார
23:41. அப்பால், (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் நியாயமான முறையில் அவர்களைப் பிடித்துக்கொண்டது; நாம் அவர்களை கூளங்களாக ஆக்கிவிட்டோம்; எனவே அநியாயக்கார சமூகத்தார் (இறை ரஹ்மத்திலிருந்தும்) தொலைவிலே ஆகிவிட்டார்கள்.
23:41. ஆகவே (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் மெய்யாகவே அவர்களைப் பிடித்துக் கொண்டது. நாம் அவர்களை (அழித்துக்) குப்பைக் கூளங்களைப் போல் ஆக்கிவிட்டோம். ஆகவே, அநியாயக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது.
23:41. இறுதியில் முற்றிலும் நியாயத்திற்கேற்பவே ஓர் உரத்த ஓசை அவர்களைப் பிடித்துக்கொண்டது. அவர்களை நாம் குப்பைக் கூளங்களாக்கி எறிந்துவிட்டோம். தொலைந்து போகட்டும் கொடுமை புரிந்த சமூகத்தார்!
23:41. ஆகவே, ஒரு பெரும சப்தம் உண்மையாக அவர்களைப் பிடித்துக் கொண்டது, அவர்களை (வெள்ளத்தில் மிதக்கும்) குப்பை கூளங்களாய் நாம் ஆக்கிவிட்டோம், ஆகவே, அநியாயக்கார சமூகத்தார்க்கு அல்லாஹ்வின் அருள் தூரமாகிவிட்டது.
23:42
23:42 ثُمَّ اَنْشَاْنَا مِنْۢ بَعْدِهِمْ قُرُوْنًا اٰخَرِيْنَؕ‏
ثُمَّ பிறகு اَنْشَاْنَا நாம் உருவாக்கினோம் مِنْۢ بَعْدِ பின்னர் هِمْ அவர்களுக்கு قُرُوْنًا தலைமுறைகளை اٰخَرِيْنَؕ‏ வேறு (பல)
23:42. அப்பால், நாம் அவர்களுக்குப் பின் வேறு தலைமுறையினர்களையும் உண்டாக்கினோம்.
23:42. இவர்களுக்குப் பின்னரும் மற்ற வகுப்பினர் பலரை நாம் உற்பத்தி செய்தோம்.
23:42. பின்னர், வேறு பல சமூகங்களை அவர்களுக்குப் பிறகு நாம் தோற்றுவித்தோம்.
23:42. பிறகு அவர்களுக்குப் பின் வேறு பல தலைமுறையினரையும் நாம் உண்டாக்கினோம்.
23:43
23:43 مَا تَسْبِقُ مِنْ اُمَّةٍ اَجَلَهَا وَمَا يَسْتَـاْخِرُوْنَؕ‏
مَا تَسْبِقُ முந்தவும் மாட்டார்கள் مِنْ اُمَّةٍ எந்த ஒரு சமுதாயம் اَجَلَهَا தனது தவணையை وَمَا يَسْتَـاْخِرُوْنَؕ‏ இன்னும் பிந்தவும் மாட்டார்கள்
23:43. எந்த ஒரு சமுதாயமும் அதற்குரிய தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்.
23:43. (அவர்களில் எனக்கு மாறுசெய்த) ஒவ்வொரு வகுப்பாரும் (அவர்கள் அழிந்துபோக நாம் ஏற்படுத்திய) அவர்களது தவணையை முந்தவுமில்லை; பிந்தவுமில்லை. (சரியாக அத்தவணையில் அழிந்து விட்டனர்.)
23:43. எந்தச் சமூகமும் தன்னுடைய தவணை வருமுன் அழிந்து போவதுமில்லை; அதற்குப்பிறகு வாழ்வதும் இல்லை.
23:43. எந்த ஒரு சமுதாயமும் அதனுடைய தவணையை முந்தவும் மாட்டாது அவர்கள் பிந்தவுமாட்டார்கள்.
23:44
23:44 ثُمَّ اَرْسَلْنَا رُسُلَنَا تَتْـرَا‌ ؕ كُلَّ مَا جَآءَ اُمَّةً رَّسُوْلُهَا كَذَّبُوْهُ‌ فَاَتْبَـعْنَا بَعْـضَهُمْ بَعْـضًا وَّجَعَلْنٰهُمْ اَحَادِيْثَ‌ ۚ فَبُـعْدًا لِّـقَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ‏
ثُمَّ பிறகு اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் رُسُلَنَا நமது தூதர்களை تَتْـرَا‌ ؕ தொடர்ச்சியாக كُلَّ مَا جَآءَ வந்தபோதெல்லாம் اُمَّةً ஒரு சமுதாயத்திற்கு رَّسُوْلُهَا அதன் தூதர் كَذَّبُوْهُ‌ அவர்கள் அவரை பொய்ப்பித்தனர் فَاَتْبَـعْنَا ஆகவே, பின்னர் கொண்டு வந்தோம் بَعْـضَهُمْ அவர்களில் சிலரை بَعْـضًا சிலரை وَّجَعَلْنٰهُمْ அவர்களை நாம் ஆக்கிவிட்டோம் اَحَادِيْثَ‌ ۚ படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக فَبُـعْدًا தொலைந்து போகட்டும் لِّـقَوْمٍ மக்கள் لَّا يُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
23:44. பின்னரும் நாம் நம்முடைய தூதர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தோம். ஒரு சமுதாயத்திடம் அதன் தூதர் வந்த போதெல்லாம், அவர்கள் அவரைப் பொய்யாக்கவே முற்பட்டார்கள்; ஆகவே நாம் அச்சமூகத்தாரையும் (அழிவில்) ஒருவருக்குப் பின் ஒருவராக்கி நாம் அவர்களை(ப் பின் வருவோர் பேசும் பழங்)கதைகளாகச் செய்தோம். எனவே, நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு (அல்லாஹ்வின் ரஹ்மத்) நெடுந்தொலைவேயாகும்.
23:44. பின்னரும் நம் தூதர்களை ஒருவர் பின் ஒருவராக நாம் அனுப்பிக் கொண்டே இருந்தோம். ஒரு வகுப்பாரிடம் அவர்களுடைய தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே, நாமும் (அவ்வகுப்பினர்களை) ஒருவருக்குப் பின் ஒருவராக அழித்துக் கொண்டே வந்து அவர்கள் அனைவரையும் (பின்னுள்ளவர்கள் பேசக்கூடிய) வெறும் சரித்திரமாக்கி விட்டோம். ஆகவே, நம்பிக்கை கொள்ளாத (இத்தகைய) மக்களுக்குக் கேடுதான்.
23:44. பிறகு, நாம் தொடர்ந்து நம் தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். எந்த ஒரு சமூகத்திலும் அதனுடைய தூதர் அதனிடம் வந்தபோது அந்தச் சமூகத்தினர் அவரைப் பொய்யரென்றே தூற்றினர். நாமும் அந்தச் சமூகங்களை ஒன்றன் பின் ஒன்றாக அழித்துக் கொண்டே வந்தோம். இறுதியில் அவர்களை நாம் வெறும் கதைகளாய் ஆக்கிவிட்டோம். சாபம் உண்டாகட்டும், நம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது!
23:44. பின்னர், நாம் நம்முடைய தூதர்களை தொடர்ச்சியாக (ஒருவர் பின் ஒருவராக) அனுப்பிவைத்தோம், ஏதேனும் ஒரு சமுதாயத்திற்கு அதன் தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தார்கள், ஆகவே, அவர்களில் சிலரை சிலருக்குப் பின் (அழிப்பதில்) நாம் தொடரச்செய்தோம், அவர்களை (பின் வந்தோர் பேசும்) கதைகளாக்கி விட்டோம், ஆகவே, விசுவாசங்கொள்ளாத (இத்தைகய) சமூகத்தவர்க்கு (அல்லாஹ்வின் அருள்) வெகுதூரமாகிவிட்டது.
23:45
23:45 ثُمَّ اَرْسَلْنَا مُوْسٰى وَاَخَاهُ هٰرُوْنَ ۙ بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ‏
ثُمَّ பிறகு اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் مُوْسٰى மூஸாவையும் وَاَخَاهُ இன்னும் அவருடையசகோதரர் هٰرُوْنَ ۙ ஹாரூனையும் بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளைக் கொண்டும் وَسُلْطٰنٍ இன்னும் ஆதாரத்தைக் கொண்டும் مُّبِيْنٍۙ‏ தெளிவான
23:45. பின்னர், நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும், நம்முடைய அத்தாட்சிகளுடனும், தெளிவான சான்றுகளுடனும் அனுப்பினோம்-
23:45. பின்னர், மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம் வசனங்களைக் கொண்டும், தெளிவான ஆதாரங்களைக் கொண்டும் நாம் அனுப்பினோம்.
23:45. பிறகு, நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம் சான்றுகள் மற்றும் தெளிவான ஆதாரத்துடன்
23:45. பின்னர் நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும் நம்முடைய அத்தாட்சிகளைக் கொண்டும், தெளிவான சான்றைக்கொண்டும் (நம்முடைய தூதர்களாக) அனுப்பினோம்-
23:46
23:46 اِلٰى فِرْعَوْنَ وَمَلَا۟ٮِٕهٖ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا عٰلِيْنَ‌ ۚ‏
اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடமும் وَمَلَا۟ٮِٕهٖ இன்னும் அவனுடைய சமுதாயத் தலைவர்களிடமும் فَاسْتَكْبَرُوْا அவர்கள் பெருமையடித்தனர் وَكَانُوْا அவர்கள் இருந்தனர் قَوْمًا மக்களாக عٰلِيْنَ‌ ۚ‏ ஆதிக்கம் செலுத்தக்கூடிய
23:46. ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய பிரமுகர்களிடத்திலும் - அவர்கள் ஆணவங்கொண்டு பெருமையடிக்கும் சமூகத்தாராக இருந்தார்கள்.
23:46. ஃபிர்அவ்னிடமும் அவனுடைய பிரதானிகளிடமும் (அனுப்பிவைத்தோம்). அவர்களோ கர்வம் கொண்டு பெருமை அடிக்கும் மக்களாக இருந்தார்கள்.
23:46. ஃபிர்அவ்னிடமும் அவனுடைய அரசவைப் பிரமுகர்களிடமும் அனுப்பினோம். ஆனால், அவர்கள் பெரும் செருக்குடன் நடந்து கொண்டனர். மேலும், ஆணவம் கொண்ட மக்களாகவும் இருந்தனர்.
23:46. ஃபிர் அவ்னிடமும், அவனுடைய பிரதானிகளிடமும் (அனுப்பினோம்.) அவர்கள் கர்வங்கொண்டு (தங்களை) உயர்வாகக் கருதும் சமூகத்தவராக இருந்தார்கள்.
23:47
23:47 فَقَالُـوْۤا اَنُؤْمِنُ لِبَشَرَيْنِ مِثْلِنَا وَقَوْمُهُمَا لَـنَا عٰبِدُوْنَ‌ۚ‏
فَقَالُـوْۤا கூறினர் اَنُؤْمِنُ நாங்கள் நம்பிக்கை கொள்வோமா لِبَشَرَيْنِ இரு மனிதர்களை مِثْلِنَا எங்களைப் போன்ற وَقَوْمُهُمَا அவ்விருவரின் சமுதாயமோ لَـنَا எங்களுக்கு عٰبِدُوْنَ‌ۚ‏ பணிந்தவர்களாக இருக்கின்றனர்
23:47. எனவே: “நம்மைப் போன்ற இவ்விரு மனிதர்கள் மீதுமா நாம் ஈமான் கொள்வது? (அதிலும்) இவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு அடிபணிந்து (தொண்டூழியம் செய்து) கொண்டிருக்கும் நிலையில்!” எனக் கூறினர்.
23:47. நம்மைப் போன்ற மனிதர்களான (இந்த) இருவரை நாம் நம்பிக்கை கொள்வோமா? (அதுவும்) அவர்களது சமூகத்தினரோ, நமக்கு அடிமைகளாக இருக்கின்றனர்.
23:47. “எங்களைப் போன்ற இரு மனிதர்கள் மீது நாங்கள் நம்பிக்கை கொள்ள வேண்டுமா? அவர்களின் சமூகத்தினர் எங்களுக்கு அடிமைகளாயிற்றே!” என்று கூறலானார்கள்.
23:47. ஆகவே, “நம்மைப் போன்ற இரு மனிதர்களை நாம் விசுவாசிப்போமா? அவ்விருவரின் சமூகத்தாரும் நமக்கு (ஊழியம் செய்து) அடிமைகளாக இருக்கும் நிலையில்” என்று கூறினார்கள்.
23:48
23:48 فَكَذَّبُوْهُمَا فَكَانُوْا مِنَ الْمُهْلَـكِيْنَ‏
فَكَذَّبُوْ அவர்கள் பொய்ப்பித்தனர் هُمَا அவ்விருவரையும் فَكَانُوْا ஆகவே, அவர்கள் ஆகிவிட்டனர் مِنَ الْمُهْلَـكِيْنَ‏ அழிக்கப்பட்டவர்களில்
23:48. ஆகவே இவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; (அதன் விளைவாய்) அவர்கள் அழிந்தோராயினர்.
23:48. ஆகவே, இவ்விருவரையும் பொய்யரென அவர்கள் கூறினார்கள். இதன் காரணமாக அவர்கள் அழிக்கப்பட்டுப் போயினர்.
23:48. ஆக, அவர்கள் அவ்விருவரையும் பொய்யர்கள் என்றனர். எனவே, அழிக்கப்பட்டவர்களில் இவர்களும் சேர்க்கப்பட்டனர்.
23:48. ஆகவே, அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள், எனவே அவர்கள் அழிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டனர்.
23:49
23:49 وَلَـقَدْ اٰتَيْنَا مُوْسَى الْـكِتٰبَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏
وَلَـقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا நாம் கொடுத்தோம் مُوْسَى மூஸாவிற்கு الْـكِتٰبَ வேதத்தை لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏ அவர்கள் நேர்வழி பெறுவதற்காக
23:49. (தவிர) அவர்கள் நேர்வழி பெறுவதற்காக நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தையும் கொடுத்தோம்.
23:49. அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக மூஸாவுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்தோம். (எனினும், அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.)
23:49. மேலும், மூஸாவுக்கு நாம் வேதம் வழங்கினோம், மக்கள் (அதன் மூலம்) நேர்வழி அடைய வேண்டும் என்பதற்காக!
23:49. அவர்கள் நேர்வழி பெறுவதற்காக, மூஸாவுக்குத் திட்டமாக நாம் வேதத்தையும் கொடுத்தோம்.
23:50
23:50 وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَاُمَّهٗۤ اٰيَةً وَّاٰوَيْنٰهُمَاۤ اِلٰى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَّمَعِيْنٍ‏
وَجَعَلْنَا இன்னும் நாம் ஆக்கினோம் ابْنَ மகனையும் مَرْيَمَ மர்யமுடைய وَاُمَّهٗۤ அவருடைய தாயையும் اٰيَةً ஓர் அத்தாட்சியாக وَّاٰوَيْنٰهُمَاۤ இன்னும் அவ்விருவரையும் ஒதுங்க வைத்தோம் اِلٰى رَبْوَةٍ உயரமானதின் பக்கம் ذَاتِ உறுதியாக قَرَارٍ சமமான இடத்திற்கும் وَّمَعِيْنٍ‏ ஓடும் நீரூற்றுக்கும்
23:50. மேலும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக்கினோம்; அன்றியும் அவ்விருவருக்கும், வசதியான நீரூற்றுகள் நிரம்பியதும், தங்குவதற்கு வசதியுள்ளதுமான மேட்டுப் பாங்கான நல்லிடத்தைக் கொடுத்தோம்.  
23:50. மர்யமுடைய மகனையும் அவருடைய தாயையும் நாம் ஓர் அத்தாட்சி ஆக்கி அவ்விருவரையும் மிக்க செழிப்பும், நீர் வளமும் பொருந்திய, வசிப்பதற்கு மிகவும் தகுதியான உயரிய பூமியில் வசிக்கும்படிச் செய்தோம்.
23:50. மேலும், நாம் மர்யத்தின் குமாரரையும், அவருடைய அன்னையையும் ஒரு சான்றாக ஆக்கினோம். அமைதியான நீரூற்று ஓடிக்கொண்டிருக்கக்கூடிய ஓர் உயரமான இடத்தில் அவ்விருவருக்கும் நாம் தஞ்சம் அளித்தோம்.
23:50. இன்னும், மர்யமுடையமகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம், தங்கும் வசதியும், நீர்வளமும் பொருந்திய (தகுதியான) உயர்ந்த இடத்தில் அவ்விருவரையும் நாம் தங்கவும் வைத்தோம்.
23:51
23:51 يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌ ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ ؕ‏
يٰۤـاَيُّهَا الرُّسُلُ தூதர்களே كُلُوْا சாப்பிடுங்கள் مِنَ الطَّيِّبٰتِ நல்லவற்றிலிருந்து وَاعْمَلُوْا இன்னும் செய்யுங்கள் صَالِحًـا‌ ؕ நல்ல செயலை اِنِّىْ நிச்சயமாக நான் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை عَلِيْمٌ ؕ‏ நன்கறிந்தவன்
23:51. (நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன் (என்றும்)
23:51. (நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரையும் நோக்கி) “என் தூதர்களே! நீங்கள் பரிசுத்தமானவற்றையே புசியுங்கள். நற்காரியங்களையே செய்யுங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை நன்கறிவேன்.
23:51. தூதர்களே! உண்ணுங்கள் தூய்மையானவற்றை! செய்யுங்கள் நன்மைகளை! நீங்கள் செய்யும் அனைத்தையும் நான் நன்கு அறியக்கூடியவனாக இருக்கின்றேன்.
23:51. (என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள், நல்ல காரியத்தையும் செய்யுங்கள், நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகிறவன் (என்றும்)
23:52
23:52 وَاِنَّ هٰذِهٖۤ اُمَّتُكُمْ اُمَّةً وَّاحِدَةً وَّاَنَا رَبُّكُمْ فَاتَّقُوْنِ‏
وَاِنَّ நிச்சயமாக هٰذِهٖۤ இதுதான் اُمَّتُكُمْ உங்களது மார்க்கம் اُمَّةً மார்க்கம் وَّاحِدَةً ஒரே ஒரு وَّاَنَا நான்தான் رَبُّكُمْ உங்கள் இறைவன் فَاتَّقُوْنِ‏ ஆகவே, என்னை அஞ்சிக் கொள்ளுங்கள்
23:52. “இன்னும், நிச்சயமாக (சன்மார்க்கமான) உங்கள் சமுதாயம் (முழுவதும்) ஒரே சமுதாயம் தான்; மேலும், நானே உங்களுடைய இறைவனாக இருக்கின்றேன்; எனவே நீங்கள் எனக்கே அஞ்சுங்கள்” (என்றும் கூறினோம்).
23:52. நிச்சயமாக உங்கள் இந்த மார்க்கம் ஒரே ஒரு வழிதான். (இதில் வேற்றுமை கிடையாது.) நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, நீங்கள் என்னையே அஞ்சுங்கள்'' (என்று கட்டளை இட்டிருந்தோம். அவர்களும் தம் மக்களுக்கு இவ்வாறே கூறி வந்தனர்.)
23:52. மேலும், உங்களுடைய இந்தச் சமுதாயம் திண்ணமாக ஒரே சமுதாயமாகும். மேலும், நான் உங்கள் அதிபதி ஆவேன்; எனவே, எனக்கே அஞ்சுங்கள்.
23:52. “நிச்சயமாக (உங்களுக்குத் தெளிவு செய்யப்பட்ட) இது ஒரே மார்க்கமான உங்களுடைய மார்க்கமாகும், “இன்னும் நான் (தான்) உங்கள் இரட்சகன், ஆகவே, என்னையே நீங்கள் பயப்படுங்கள்” (என்றும் கூறினோம்.)
23:53
23:53 فَتَقَطَّعُوْۤا اَمْرَهُمْ بَيْنَهُمْ زُبُرًا‌ ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏
فَتَقَطَّعُوْۤا அவர்கள் பிரித்துக் கொண்டனர் اَمْرَ காரியத்தை هُمْ தங்களது بَيْنَهُمْ தங்களுக்கு மத்தியில் زُبُرًا‌ ؕ பல வேதங்களாக كُلُّ ஒவ்வொரு حِزْبٍۢ பிரிவும் بِمَا لَدَيْهِمْ தங்களிடம் உள்ளதைக் கொண்டு فَرِحُوْنَ‏ பெருமைப்படுகின்றனர்
23:53. ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் மார்க்க காரியத்தில் சிதறுண்டு, தமக்கிடையே பல பிரிவுகளாய் பிரிந்து, ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர்களாய் இருக்கின்றனர்.
23:53. எனினும், (யூதர்களும், கிறித்தவர்களும்) தங்கள் வேதத்தை(ப் புரட்டி) பலவாறாகப் பிரித்துக்கொண்டு (அவர்களில்) ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் உள்ளவற்றைக் கொண்டு சந்தோஷம் அடைகின்றனர்.
23:53. ஆயினும், (பிற்காலத்தில்) மக்கள் தங்களுடைய தீனைநெறியை தங்களுக்கிடையே துண்டு துண்டாக்கிக் கொண்டார்கள். ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் எது இருக்கின்றதோ அதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றார்கள்
23:53. பிறகு (அச்சமூகத்தவர்களான) அவர்கள் தங்கள் (மார்க்கக்)காரியத்தைத் தங்களிடையே பல பிரிவுகளாகப் பிரித்து விட்டனர், ஒவ்வொரு வகுப்பாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைபவர்களாக உள்ளனர்.
23:54
23:54 فَذَرْهُمْ فِىْ غَمْرَتِهِمْ حَتّٰى حِيْنٍ‏
فَذَرْهُمْ ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக! فِىْ غَمْرَتِهِمْ அவர்களுடைய வழிகேட்டில் حَتّٰى வரை حِيْنٍ‏ காலம்
23:54. எனவே, அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க விட்டுவிடும்.
23:54. ஆகவே, (நபியே!) நீர் அவர்களை ஒரு காலம் வரை அவர்களுடைய மயக்கத்தில் ஆழ்ந்து கிடக்க விட்டு விடுவீராக.
23:54. சரி, அவர்களை விட்டுவிடுவீராக; ஒரு குறிப்பிட்ட காலம் வரை தம் அலட்சியப்போக்கில் அவர்கள் மூழ்கிக் கிடக்கட்டும்!
23:54. எனவே, (நபியே!) நீர் ஒரு காலம் வரையில் அவர்களை அவர்களுடைய வழிகேட்டிலேயே (ஆழ்ந்து கிடக்க) விட்டு விடுவிராக!
23:55
23:55 اَيَحْسَبُوْنَ اَنَّمَا نُمِدُّهُمْ بِهٖ مِنْ مَّالٍ وَّبَنِيْنَۙ‏
اَيَحْسَبُوْنَ அவர்கள் எண்ணுகின்றனரா اَنَّمَا نُمِدُّ நிச்சயமாக எதை நாம் கொடுக்கிறோமோ هُمْ அவர்களுக்கு بِهٖ அதை مِنْ مَّالٍ செல்வத்திலிருந்தும் وَّبَنِيْنَۙ‏ ஆண் பிள்ளைகளிலிருந்தும்
23:55. அவர்களுக்கு நாம் செல்வத்தையும் சந்ததிகளையும் அதிகமாகக் கொடுத்திருப்பது பற்றி அவர்கள் என்ன எண்ணிக்கொண்டார்கள்?
23:55. நாம் அவர்களுக்கு ஆண் சந்ததிகளையும் பொருள்களையும் கொடுத்து வருவதைப் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டனர்?
23:55. நாம் அவர்களுக்குப் பொருளையும், மக்களையும் அளித்து உதவி புரிந்து கொண்டிருக்கின்றோமெனில்,
23:55. “செல்வத்தாலும், குமாரர்களாலும் எதை நாம் அவர்களுக்கு கொடுத்து உதவினோமோ, அது பற்றி அவர்கள் எண்ணிக் கொண்டார்களா?
23:56
23:56 نُسَارِعُ لَهُمْ فِى الْخَيْـرٰتِ‌ ؕ بَلْ لَّا يَشْعُرُوْنَ‏
نُسَارِعُ நாம் விரைகிறோம் لَهُمْ அவர்களுக்கு فِى الْخَيْـرٰتِ‌ ؕ நன்மைகளில் بَلْ மாறாக لَّا يَشْعُرُوْنَ‏ அவர்கள் உணர மாட்டார்கள்
23:56. அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை.
23:56. இதனால் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நன்மை செய்வதில் தீவிரமாக இருக்கிறோம் என்று நினைக்கின்றனரா? அவ்வாறல்ல! (அது எதற்காக என்பதை) அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை.
23:56. நாம் அவர்களுக்கு நன்மைகளை வழங்குவதில் அதிவேகமாய் இருக்கின்றோம் என்று அவர்கள் கருதுகின்றார்களா? (இல்லை, உண்மை நிலவரத்தை) அவர்கள் அறிவதில்லை.
23:56. (அவ்வாறு நாம் செய்வதால்) அவர்களுக்கு நன்மையானவற்றை விரைந்து வழங்குகின்றோம், (என எண்ணிக் கொண்டார்களா?) அவ்வாறல்ல, (அது ஏன் என) அவர்கள் உணரமாட்டார்கள்.
23:57
23:57 اِنَّ الَّذِيْنَ هُمْ مِّنْ خَشْيَةِ رَبِّهِمْ مُّشْفِقُوْنَۙ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் مِّنْ خَشْيَةِ பயத்தால் رَبِّهِمْ தங்கள் இறைவனின் مُّشْفِقُوْنَۙ‏ அச்சம் கொண்டவர்கள்
23:57. நிச்சயமாக, எவர்கள் தம் இறைவனிடம் அஞ்சுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களும்-
23:57. நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்களும்,
23:57. உண்மையில் எவர்கள் தம் இறைவனின் அச்சத்தால் நடுங்கக்கூடியவர்களாய் இருக்கின்றார்களோ,
23:57. நிச்சயமாக, தங்கள் இரட்சகனின் பயத்தால் அஞ்சி எச்சரிக்கையாக இருக்கிறார்களே அத்தகையோரும்-
23:58
23:58 وَالَّذِيْنَ هُمْ بِاٰيٰتِ رَبِّهِمْ يُؤْمِنُوْنَۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் بِاٰيٰتِ வசனங்களை رَبِّهِمْ தங்கள் இறைவனின் يُؤْمِنُوْنَۙ‏ நம்பிக்கை கொள்பவர்கள்
23:58. இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும்-
23:58. எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கைகொள்கிறார்களோ அவர்களும்,
23:58. மேலும், எவர்கள் தம் இறைவனின் வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கின்றார்களோ,
23:58. இன்னும், தங்கள் இரட்சகனின் வசனங்களை விசுவாசிக்கின்றார்களே அத்தகையோரும்-
23:59
23:59 وَالَّذِيْنَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُوْنَۙ‏
وَالَّذِيْنَ இன்னும் எவர்கள் هُمْ அவர்கள் بِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு لَا يُشْرِكُوْنَۙ‏ இணைவைக்காதவர்கள்
23:59. இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எதையும்) இணையாக்காதிருக்கிறார்களோ அவர்களும்-
23:59. எவர்கள் தங்கள் இறைவனுக்கு எவரையும் இணை ஆக்காமல் இருக்கின்றனரோ அவர்களும்,
23:59. இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எவரையும்) இணைவைக்காது இருக்கின்றார்களோ,
23:59. இன்னும், தங்கள் இரட்சகனுக்கு (எதனையும்) இணையாக்காதிருக்கின்றனரே அத்தகையோரும்-
23:60
23:60 وَالَّذِيْنَ يُؤْتُوْنَ مَاۤ اٰتَوْا وَّ قُلُوْبُهُمْ وَجِلَةٌ اَنَّهُمْ اِلٰى رَبِّهِمْ رٰجِعُوْنَ ۙ‏
وَالَّذِيْنَ இன்னும் அவர்கள் يُؤْتُوْنَ கொடுப்பார்கள் مَاۤ اٰتَوْا எதைக் கொடுத்தார்கள் وَّ قُلُوْبُهُمْ அவர்களுடைய உள்ளங்களோ وَجِلَةٌ பயந்தவையாக இருக்கும் اَنَّهُمْ நிச்சயம் தாங்கள் اِلٰى பக்கம் رَبِّهِمْ தங்கள் இறைவனின் رٰجِعُوْنَ ۙ‏ திரும்பக்கூடியவர்கள்
23:60. இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்லவேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் (நாம் கொடுத்ததிலிருந்து) தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்-
23:60. எவர்கள் தங்களுக்குச் சாத்தியமான வரை தானம் கொடுப்பதுடன் அவர்களுடைய உள்ளங்கள் நிச்சயமாக தங்கள் இறைவனிடம் செல்வோம் என்று பயந்து கொண்டிருக்கின்றனவோ அவர்களும்,
23:60. எவர்கள் தானதர்மங்கள் வழங்கிக் கொண்டு இருக்கின்றார்களோ, மேலும், தம் இறைவனிடம் திரும்பிச் செல்ல வேண்டியவர்களாயிருக்கின்றோம் எனும் எண்ணத்தில் இதயம் நடுங்கியவாறு இருக்கின்றார்களோ
23:60. இன்னும், தம் இரட்சகனின்பால் தாங்கள் திரும்பக்கூடியவர்கள் என்று அவர்களுடைய இதயங்கள் அஞ்சக்கூடியதாகியிருக்க (தான தர்மங்களாக) அவர்கள் கொடுத்தவற்றை (அல்லாஹ்விற்காக) கொடுக்கிறார்களே அத்தகையோரும்-
23:61
23:61 اُولٰٓٮِٕكَ يُسَارِعُوْنَ فِىْ الْخَيْـرٰتِ وَهُمْ لَهَا سٰبِقُوْنَ‏
اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் يُسَارِعُوْنَ விரைகின்றார்கள் فِىْ الْخَيْـرٰتِ நன்மைகளில் وَهُمْ இன்னும் அவர்கள் لَهَا அவற்றுக்கு سٰبِقُوْنَ‏ முந்தக் கூடியவர்கள்
23:61. இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள்.
23:61. ஆகிய இவர்கள்தான் நன்மையான காரியங்களில் விரைந்து செல்கிறவர்கள். மேலும், அவர்கள் அவற்றை செய்வதில் ஒருவரை ஒருவர் முந்திக் கொள்கின்றனர்.
23:61. அத்தகையவர்கள் மட்டுமே நன்மைகளின் பக்கம் விரைந்து செல்பவர்களாகவும் அவர்கள் ஒருவரையொருவர் முந்திச் சென்று அவற்றை அடையக் கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.
23:61. (ஆகிய) இவர்கள்தாம் நன்மையான காரியங்களில் விரைகின்றனர், இன்னும், (அதை நிறைவேற்ற) அவற்றிற்காக அவர்கள் முந்திக்கொள்ளக்கூடியவர்கள்.
23:62
23:62 وَلَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا‌ وَلَدَيْنَا كِتٰبٌ يَّـنْطِقُ بِالْحَـقِّ‌ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَلَا نُـكَلِّفُ நாம் சிரமம் தருவதில்லை نَفْسًا எந்த ஓர் ஆன்மாவுக்கும் اِلَّا தவிர وُسْعَهَا‌ அதன் வசதிக்கு உட்பட்டே وَلَدَيْنَا இன்னும் நம்மிடம் இருக்கின்றது كِتٰبٌ ஒரு புத்தகம் يَّـنْطِقُ பேசுகின்றது بِالْحَـقِّ‌ சத்தியத்தைக் கொண்டு وَهُمْ அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
23:62. நாம் எந்த ஆத்மாவையும், அதன் சக்திக்கு ஏற்றவாறு அல்லாமல் (அதிகம் செய்யுமாறு) நிர்ப்பந்திக்க மாட்டோம்; மேலும் உண்மையை பேசும் ஒரு (பதிவுப்) புத்தகம் நம்மிடம் இருக்கிறது; இன்னும் அவர்களுக்கு (ஒரு சிறிதும்) அநியாயம் செய்யப்பட மாட்டாது.
23:62. எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு அதிகமாக (எதையும் செய்யும்படி) நாம் நிர்ப்பந்திப்பதில்லை. (ஒவ்வொருவரின்) உண்மையை உரைக்கும் தினசரிக் குறிப்பும் நம்மிடம் இருக்கிறது. (அவர்களின் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகப்படுத்தியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
23:62. நாம் எந்த மனிதனுக்கும் அவனது சக்திக்கு அதிகமாக சிரமம் அளிப்பதில்லை. (ஒவ்வொருவரின் நிலையையும்) மிகச்சரியாக எடுத்துரைக்கக்கூடிய ஓர் ஏடு நம்மிடம் இருக்கிறது. ஆகையால் மக்கள் அநீதியிழைக்கப்படமாட்டார்கள்.
23:62. நாம் எந்த ஆத்மாவையும், அதனுடைய சக்திக்குத் தக்கவாறல்லாது (அதிகமாக) சிரமப்படுத்தமாட்டோம், மேலும், (அவர்களின் செயல்கள் பற்றிய) உண்மை பேசும் புத்தகம் நம்மிடம் இருக்கிறது, (சிறிதளவேனும்) அவர்கள் அநியாயம் செய்யப்படவுமாட்டார்கள்.
23:63
23:63 بَلْ قُلُوْبُهُمْ فِىْ غَمْرَةٍ مِّنْ هٰذَا وَلَهُمْ اَعْمَالٌ مِّنْ دُوْنِ ذٰلِكَ هُمْ لَهَا عٰمِلُوْنَ‏
بَلْ மாறாக قُلُوْبُهُمْ அவர்களது உள்ளங்கள் فِىْ غَمْرَةٍ அறியாமையில் مِّنْ هٰذَا இதை விட்டு وَلَهُمْ இன்னும் அவர்களுக்கு اَعْمَالٌ செயல்கள் مِّنْ دُوْنِ ذٰلِكَ வேறு உள்ளன هُمْ அவர்கள் لَهَا அதைத்தான் عٰمِلُوْنَ‏ செய்பவர்கள்
23:63. ஆனால் அவர்களுடைய இதயங்கள் இதைக் குறித்து அறியாமையிலேயே (ஆழ்ந்து) கிடக்கின்றன; இன்னும், அவர்களுக்கு இதுவன்றி (வேறு தீய) காரியங்களும் உண்டு. அதனை அவர்கள் செய்து வருகிறார்கள்.
23:63. எனினும், (நிராகரிக்கும்) அவர்களுடைய உள்ளங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி (சந்தேகித்து) மடமையில் ஆழ்ந்து கிடக்கின்றன. இதையன்றி அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேறு பல (தீய)காரியங்களும் இருக்கின்றன.
23:63. ஆயினும், இம்மக்கள் இதனைப் பற்றி அறியாமலிருக்கின்றார்கள். மேலும், அவர்களுடைய செயல்களும் (மேலே கூறப்பட்ட) அந்த வழி முறைக்கு மாறுபட்டிருக்கின்றன. அவர்கள் இத்தகைய செயல்களைச் செய்து கொண்டேயிருப்பார்கள்.
23:63. எனினும் அவர்களுடைய இதயங்கள் இ(வ்வேதத்)தைப் பற்றி மறதியில் ஆழ்ந்து கிடக்கின்றன, இன்னும், இதுவன்றி அவர்களுக்கு வேறு (தீய) காரியங்களும் உண்டு, அவற்றை அவர்கள் செய்யக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
23:64
23:64 حَتّٰۤى اِذَاۤ اَخَذْنَا مُتْـرَفِيْهِمْ بِالْعَذَابِ اِذَا هُمْ يَجْــٴَــرُوْنَؕ‏
حَتّٰۤى இறுதியாக اِذَاۤ اَخَذْنَا நாம் பிடித்தால் مُتْـرَفِيْهِمْ அவர்களின் சுகவாசிகளை بِالْعَذَابِ வேதனையைக் கொண்டு اِذَا هُمْ அப்போது அவர்கள் يَجْــٴَــرُوْنَؕ‏ கதறுகின்றனர்
23:64. (இவ்வுலக) சுகானுபவங்களில் மூழ்கிக் கிடப்போரை நாம் வேதனையைக் கொண்டு பிடிக்கும்போது, உதவிக்காக அவர்கள் அபயக் குரல் எழுப்புவார்கள்.
23:64. ஆகவே, அவர்களின் தலைவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டாலோ, அவர்கள் (அந்நேரத்தில் திடுக்கிட்டுத் தங்களை காப்பாற்றும்படி) பயந்து சப்தமிடுகின்றனர்.
23:64. இறுதியில், அவர்களில் சுகபோகங்களிலேயே மூழ்கிக்கிடப்பவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொள்ளும்போது அவர்கள் ஓலமிட்டு அலறத் தொடங்குவார்கள்;
23:64. முடிவாக அவர்களில் சுகபோக வாழ்க்கைக் கொடுக்கப்பட்டவர்களை வேதனையைக் கொண்டு நாம் பிடித்துக் கொண்டால், அப்போது அவர்கள் அபயம் தேடி சப்தமிடுவார்கள்.
23:65
23:65 لَا تَجْــٴَــرُوا الْيَوْمَ‌ اِنَّكُمْ مِّنَّا لَا تُنْصَرُوْنَ‏
لَا تَجْــٴَــرُوا கதறாதீர்கள் الْيَوْمَ‌ இன்றைய தினம் اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் مِّنَّا நம்மிடமிருந்து لَا تُنْصَرُوْنَ‏ பாதுகாக்கப்பட மாட்டீர்கள்
23:65. “இன்று நீங்கள் உதவிக்காக அபயக் குரலை எழுப்பாதீர்கள்; நிச்சயமாக, நீங்கள் நம்மிடமிருந்து உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
23:65. (அச்சமயம் அவர்களை நோக்கி) ‘‘இன்றைய தினம் நீங்கள் பயந்து சப்தமிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் நம்மால் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
23:65. இன்று நீங்கள் எதைப்பற்றியும் முறையிடவோ, புலம்பவோ வேண்டாம். நிச்சயம் எம்மிடமிருந்து எந்த உதவியையும் பெறமாட்டீர்கள்!
23:65. “இன்றையத் தினம் நீங்கள் சப்தமிடாதீர்கள், நிச்சயமாக நீங்கள் நம்மால் உதவி செய்யப்படமாட்டீர்கள்” என்று அவர்களிடம் கூறப்படும்.
23:66
23:66 قَدْ كَانَتْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَـكُنْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ تَـنْكِصُوْنَۙ‏
قَدْ திட்டமாக كَانَتْ இருந்தன اٰيٰتِىْ எனது வசனங்கள் تُتْلٰى ஓதப்பட்டும் عَلَيْكُمْ உங்கள் மீது فَـكُنْتُمْ நீங்கள் இருந்தீர்கள் عَلٰٓى மீது اَعْقَابِكُمْ உங்கள் குதிங்கால்கள் تَـنْكِصُوْنَۙ‏ பின்னோக்கி செல்பவர்களாக
23:66. என்னுடைய வசனங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன; ஆனால் நீங்கள் புறங்காட்டிச் சென்று கொண்டிருந்தீர்கள்.
23:66. நிச்சயமாக எனது வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட அச்சமயம் (அவற்றைப் புறக்கணித்து) நீங்கள் பின் வாங்கினீர்கள்.
23:66. என் வசனங்கள் உங்களிடம் ஓதிக்காட்டப்பட்டு வந்தன. அப்போது (தூதரின் குரலைக் கேட்டதும்) பின்னோக்கி ஓடினீர்கள்.
23:66. “நிச்சயமாக, என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டன, ஆனால், நீங்கள் உங்கள் குதிங்கால்கள்மீது திரும்பிச் சென்று கொண்டிருந்தீர்கள்.
23:67
23:67 مُسْتَكْبِرِيْنَ ‌ۖ  بِهٖ سٰمِرًا تَهْجُرُوْنَ‏
مُسْتَكْبِرِيْنَ பெருமை அடித்தவர்களாக ۖ  بِهٖ அதைக் கொண்டு سٰمِرًا இரவில் நிம்மதியாக இதைப் பேசியவர்களாக تَهْجُرُوْنَ‏ வீணானதைக் கூறுகின்றனர்
23:67. ஆணவங் கொண்டவர்களாக இராக்காலத்தில் கூடி குர்ஆனை பற்றி கட்டுக்கதைகள் போல் வீண் வார்த்தையாடியவர்களாக (அதைப் புறக்கணித்தீர்கள் என்று அவர்களிடம் கூறப்படும்).
23:67. நீங்கள் கர்வங்கொண்டு (உங்கள்) இராக் கதைகளிலும் இதைப் பற்றி (பரிகாசம் செய்து) பிதற்றிக் கொண்டிருந்தீர்கள்'' (என்று கூறப்படும்).
23:67. இறுமாப்புக் கொண்டவர்களாய் அவரை அலட்சியம் செய்து கொண்டும், தங்கள் அவைகளில் அவரைப் பழித்துரைத்துக் கொண்டும், பொல்லாங்கு கூறிக்கொண்டும் இருந்தீர்கள்!
23:67. “நீங்கள் கர்வங்கொண்டவர்களாக இராக்காலத்தில் (கூடி, குர் ஆனாகிய) அதனைப்பற்றி குறைகளைக் கூறி வந்தீர்கள்” (என்றும் அவர்களிடம் கூறப்படும்.)
23:68
23:68 اَفَلَمْ يَدَّبَّرُوا الْقَوْلَ اَمْ جَآءَهُمْ مَّا لَمْ يَاْتِ اٰبَآءَهُمُ الْاَوَّلِيْنَ‏
اَفَلَمْ يَدَّبَّرُوا இவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா الْقَوْلَ இந்த பேச்சை اَمْ அல்லது جَآءَ வந்ததா هُمْ இவர்களிடம் مَّا لَمْ يَاْتِ எது/வரவில்லை اٰبَآءَ மூதாதைகளுக்கு هُمُ இவர்களது الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களான
23:68. (குர்ஆனின்) சொல்லைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது தம் முன்னவர்களான மூதாதையருக்கு வராத ஒன்று அவர்களுக்கு வந்துவிட்டதா?
23:68. (நம்) வாக்கியத்தை அவர்கள் கவனிக்கவில்லையா? அல்லது அவர்களுடைய முந்திய மூதாதைகளுக்கு வராதது ஏதும் இவர்களுக்கு வந்துவிட்டதா?
23:68. என்ன, இவர்கள் இந்த (இறை)வாக்கைச் சிந்திக்கவில்லையா? அல்லது இவர்களின் பண்டைக்கால மூதாதையர்களிடம் ஒருபோதும் வந்திராத ஏதேனும் கருத்தையா இவர்களிடம் இது சமர்ப்பிக்கின்றது?
23:68. “(குர் ஆனின்) வாக்கியத்தைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? அல்லது அவர்களுடைய முந்தையவர்களான மூதாதையருக்கு வராதது ஏதும் அவர்களுக்கு வந்துவிட்டதா?
23:69
23:69 اَمْ لَمْ يَعْرِفُوْا رَسُوْلَهُمْ فَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ‏
اَمْ அல்லது لَمْ يَعْرِفُوْا அறியவில்லையா رَسُوْلَهُمْ தங்களது தூதரை فَهُمْ ஆகவே, அவர்கள் لَهٗ அவரை مُنْكِرُوْنَ‏ மறுக்கின்றனரா
23:69. அல்லது அவர்கள் தங்களுடைய (இறுதித்) தூதரைச் சரிவர அறிந்து கொள்ளாது அவரை நிராகரிக்கிறவர்களாய் இருக்கின்றார்களா?
23:69. அல்லது தங்களிடம் வந்த தூதரை தாங்கள் அறியவில்லை என்பதாக(க் கூறி) அவர்கள் நிராகரிக்கின்றனரா?
23:69. அல்லது தங்களின் இந்தத் தூதரை இவர்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லையா? (அப்படி அறியாது இருந்த காரணத்தாலா) அவரைப் புறக்கணிக்கின்றார்கள்?
23:69. அல்லது தங்களுடைய தூதரை தாங்கள் அறிந்து கொள்ளவில்லையா? அதனால் அவர்கள் அவரை நிராகரிக்ககூடியவர்களா?
23:70
23:70 اَمْ يَـقُوْلُوْنَ بِهٖ جِنَّةٌ  ؕ بَلْ جَآءَهُمْ بِالْحَـقِّ وَاَكْثَرُهُمْ لِلْحَقِّ كٰرِهُوْنَ‏
اَمْ அல்லது يَـقُوْلُوْنَ இவர்கள் கூறுகின்றனரா بِهٖ அவருக்கு جِنَّةٌ  ؕ பைத்தியம் بَلْ மாறாக جَآءَ வந்துள்ளார் هُمْ அவர்களிடம் بِالْحَـقِّ உண்மையைக் கொண்டு وَاَكْثَرُ இன்னும் அதிகமானவர்கள் هُمْ அவர்களில் لِلْحَقِّ உண்மையை كٰرِهُوْنَ‏ வெறுக்கின்றார்கள்
23:70. அல்லது, “அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது” என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை; அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார், எனினும் அவர்களில் பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.
23:70. அல்லது ‘‘ அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது'' என இவர்கள் கூறுகின்றனரா? இவை ஒன்றுமில்லை. (நம் தூதர்) அவர்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்தார். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த சத்தியத்தையே வெறுக்கின்றனர்.
23:70. அல்லது ‘அவருக்குப் பைத்தியம் பிடித்துள்ளது’ என்று கூறுகின்றார்களா? இல்லை, மாறாக அவர்களிடம் அவர் சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றார். சத்தியத்தை விரும்பாதவர்களாகவே அவர்களில் பெரும்பாலோர் இருக்கின்றனர்.
23:70. அல்லது “அவருக்குப் பைத்தியமிருக்கின்றது” என்று அவர்கள் கூறுகின்றனரா? இல்லை (நம் தூதராகிய) அவர் அவர்களுக்குச் சத்தியத்தைக் கொண்டு வந்தார், இன்னும், அவர்களில் பெரும்பாலோர் அந்தச் சத்தியத்தை வெறுக்கின்றவர்கள்.
23:71
23:71 وَلَوِ اتَّبَعَ الْحَـقُّ اَهْوَآءَهُمْ لَفَسَدَتِ السَّمٰوٰتُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّ‌ؕ بَلْ اَتَيْنٰهُمْ بِذِكْرِهِمْ فَهُمْ عَنْ ذِكْرِهِمْ مُّعْرِضُوْنَؕ‏
وَلَوِ اتَّبَعَ பின்பற்றினால் الْحَـقُّ உண்மையாளன் اَهْوَآءَ விருப்பங்களை هُمْ அவர்களது لَفَسَدَتِ நாசமடைந்து இருப்பார்கள் السَّمٰوٰتُ வானங்களும் وَالْاَرْضُ இன்னும் பூமியும் وَمَنْ فِيْهِنَّ‌ؕ இன்னும் அவற்றில் உள்ளவர்களும் بَلْ اَتَيْنٰهُمْ மாறாக அவர்களுக்குக் கொடுத்தோம் بِذِكْرِهِمْ அவர்களுக்குரிய விளக்கத்தை فَهُمْ ஆனால் அவர்கள் عَنْ ذِكْرِ கூறப்பட்ட விளக்கத்தை هِمْ தங்களுக்கு مُّعْرِضُوْنَؕ‏ புறக்கணிக்கக் கூடியவர்கள்
23:71. இன்னும் அந்த உண்மை அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றி இருக்குமாயின் நிச்சயமாக வானங்களும், பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர்கெட்டுப் போயிருக்கும்; அதனால், அவர்களுக்கு நாம் நினைவூட்டும் நல்லுபதேசமான திக்ரை - குர்ஆனை அளித்தோம். எனினும் அவர்கள் தங்களிடம் வந்த திக்ரை - குர்ஆனை புறக்கணிக்கின்றனர்.
23:71. சத்தியம் அவர்களுடைய (தப்பான) விருப்பத்தைப் பின்பற்றுவதென்றால் நிச்சயமாக வானங்களும் பூமியும் அவற்றில் உள்ளவையும் அழிந்துவிடும். எனினும், அவர்களுக்கு நல்ல உபதேசத்தையே அனுப்பினோம். அவர்களோ தங்களிடம் வந்த நல்லுபதேசத்தை புறக்கணித்து விட்டனர்.
23:71. மேலும், சத்தியம் அவர்களின் மன இச்சைகளைப் பின்பற்றிச் செல்லுமாயின் வானங்கள், பூமி மற்றும் அவற்றில் வாழும் அனைத்தின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும் இல்லை, மாறாக அவர்களுக்கே உரிய நல்லுரையை அவர்களிடம் நாம் கொண்டு வந்திருக்கின்றோம்; அவர்களோ தங்களுக்கே உரிய நல்லுரையைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
23:71. இன்னும், (இச்) சத்தியம் அவர்களுடைய அனேக இச்சைகளைப் பின்பற்றுவதென்றால், வானங்களும் பூமியும் அவற்றிலுள்ளவைகளும் சீர் கெட்டுவிடும், மாறாக அவர்களுடைய நல்லுபதேசத்தை (குர் ஆனை) அவர்களுக்கு நாம் கொடுத்தோம், ஆனாலும் அவர்கள், தங்களுடைய நல்லுபதேசத்தை (குர் ஆனை)ப் புறக்கணிக்கக் கூடியவர்கள் (ஆக இருக்கின்றனர்.)
23:72
23:72 اَمْ تَسْـٴَــلُهُمْ خَرْجًا فَخَرٰجُ رَبِّكَ خَيْرٌ‌ ‌ۖ  وَّهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏
اَمْ அல்லது تَسْـٴَــلُهُمْ அவர்களிடம் நீர் எதையும் கேட்கிறீரா خَرْجًا கூலி فَخَرٰجُ எனவே கூலிதான் رَبِّكَ உமது இறைவனின் خَيْرٌ‌ ۖ மிகச் சிறந்தது  وَّهُوَ அவன் خَيْرُ மிகச் சிறந்தவன் الرّٰزِقِيْنَ‏ கொடை வழங்குபவர்களில்
23:72. அல்லது நீர் அவர்களிடம் கூலி ஏதும் கேட்கிறீரா? (இல்லை! ஏனெனில்) உம்முடைய இறைவன் கொடுக்கும் கூலியே மிகவும் மேலானது - இன்னும் அளிப்பவர்களில் அவனே மிக்க மேலானவன்.
23:72. அல்லது, நீர் அவர்களிடம் ஒரு கூலியை கேட்கிறீரா? (அதுவும் இல்லை. ஏனென்றால்,) உமது இறைவன் (உமக்குத்) தரும் கூலியே மிக்க மேலானதாகும். அவனோ கொடையாளிகளிலெல்லாம் மிக்க மேலானவன் ஆவான்.
23:72. அல்லது நீர் அவர்களிடம் ஏதேனும் கூலி கேட்கின்றீரா, என்ன? உமக்கு உம் இறைவன் வழங்கியதே மிகச் சிறந்ததாகும். மேலும், வாழ்வாதாரம் வழங்குபவர்களில் எல்லாம் அவன் மிகச் சிறந்தவனாவான்.
23:72. அல்லது அவர்களிடம் நீர் கூலியைக் கேட்கின்றீரா? (இல்லை, ஏனெனில்) உமதிரட்சகனின் கூலியே மிக்க மேலானது, அவனோ கொடுப்பவர்களில் மிக்க மேலானவன்.
23:73
23:73 وَاِنَّكَ لَـتَدْعُوْهُمْ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
وَاِنَّكَ நிச்சயமாக நீர் لَـتَدْعُوْ அழைக்கிறீர் هُمْ அவர்களை اِلٰى பக்கம் صِرَاطٍ பாதையின் مُّسْتَقِيْمٍ‏ நேரான
23:73. மேலும், நிச்சயமாக நீர் அவர்களை - ஸிராத்தும் முஸ்தகீம் (நேரான வழியின்) பக்கமே அழைக்கின்றீர்.
23:73. (நபியே!) நிச்சயமாக நீர் அவர்களை நேரான வழிக்கே அழைக்கிறீர்.
23:73. திண்ணமாக, நீர் அவர்களை நேரிய வழியில் அழைத்துக் கொண்டிருக்கின்றீர்.
23:73. இன்னும், (நபியே!) நிச்சயமாக, நீர் அவர்களை நேரான வழியின் பால் அழைக்கிறீர்.
23:74
23:74 وَاِنَّ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ عَنِ الصِّرَاطِ لَـنٰكِبُوْنَ‏
وَاِنَّ நிச்சயமாக الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ளாதவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை عَنِ الصِّرَاطِ பாதையை விட்டு لَـنٰكِبُوْنَ‏ விலகக்கூடியவர்கள்தான்
23:74. இன்னும் எவர் மறுமையை நம்பவில்லையோ, நிச்சயமாக அவர் அந்த (நேர்) வழியை விட்டு விலகியவர் ஆவார்.
23:74. எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ நிச்சயமாக அவர்கள் நேரான வழியைப் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றனர்.
23:74. ஆயினும் மறுமையை நம்பாதவர்கள் நேரிய வழியை விட்டு விலகிச் செல்ல விரும்புகின்றார்கள்.
23:74. இன்னும், நிச்சயமாக மறுமையை விசுவாசங்கொள்ளவில்லையே அத்தகையவர்கள், (நேரான) வழியை விட்டும் பிசகியவர்களாவர்.
23:75
23:75 وَلَوْ رَحِمْنٰهُمْ وَكَشَفْنَا مَا بِهِمْ مِّنْ ضُرٍّ لَّـلَجُّوْا فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ‏
وَلَوْ رَحِمْنٰهُمْ அவர்கள் மீது நாம் கருணை புரிந்தால் وَكَشَفْنَا இன்னும் நாம் நீக்கி விட்டால் مَا بِهِمْ அவர்களுக்குள்ள مِّنْ ضُرٍّ தீங்கை لَّـلَجُّوْا பிடிவாதம் பிடித்திருப்பார்கள் فِىْ طُغْيَانِهِمْ தங்களது வரம்பு மீறுவதில்தான் يَعْمَهُوْنَ‏ அவர்கள் தடுமாறியவர்களாக
23:75. ஆனால் அ(த்தகைய)வர்கள் மீது கிருபை கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிடுவோமானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக தங்கள் வழிகேட்டிலேயே அவர்கள் நீடிக்கின்றனர்.
23:75. நாம் அவர்கள் மீது கருணை காண்பித்து அவர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை நீக்கியபோதிலும் அவர்கள் தங்கள் வழிகேட்டிலேயே மூழ்கித் தட்டழிகின்றனர்.
23:75. இவர்களுக்கு நாம் கருணை புரிவோமாயின், மேலும் (இன்று) இவர்களுக்கு நேர்ந்துள்ள துன்பத்தை நாம் அகற்றி விடுவோமாயின், அவர்கள் தங்களுடைய வரம்பு மீறிய நடத்தையில், முற்றிலும் மூழ்கிவிடுவார்கள்.
23:75. நாம் அவர்கள் மீது அருளும் செய்து அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை நாம் நீக்கி விடுவோமானாலும், அவர்கள் தங்களுடைய அழிச்சாட்டியத்திலேயே தட்டழிகிறவர்களாக நிலைத்து விடுகின்றனர்.
23:76
23:76 وَلَقَدْ اَخَذْنٰهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوْا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُوْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اَخَذْنٰهُمْ அவர்களை நாம் பிடித்தோம் بِالْعَذَابِ வேதனையைக் கொண்டு فَمَا اسْتَكَانُوْا அவர்கள் பணியவில்லை لِرَبِّهِمْ தங்கள் இறைவனுக்கு وَمَا يَتَضَرَّعُوْنَ‏ இன்னும் மன்றாடவும் இல்லை
23:76. திடனாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்திருக்கிறோம்; ஆனால், அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணியவுமில்லை; தாழ்ந்து பிரார்த்திக்கவுமில்லை.
23:76. நிச்சயமாக நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டோம். ஆனால், அவர்கள் தங்கள் இறைவனிடம் திரும்பவும் இல்லை; (அவனிடம்) பணிந்து பிரார்த்தனை செய்யவும் இல்லை.
23:76. (இவர்களின் நிலைமை எப்படிப்பட்டதெனில்) நாம் இவர்களைத் துன்பத்திற் குள்ளாக்கினோம்; அவ்வாறிருந்தும் அவர்கள் தம் இறைவனின் திருமுன் சிரம் சாய்க்கவோ பணிவை மேற்கொள்ளவோ இல்லை.
23:76. திட்டமாக, நாம் அவர்களை வேதனையைக் கொண்டு பிடித்தும் கொண்டோம்; ஆனால் (அதன் மூலம்) அவர்கள் தங்கள் இரட்சகனுக்கு அடிபணியவுமில்லை; அவர்கள் (அவனிடம்) தாழ்ந்து பிரார்த்தனை செய்யவுமில்லை.
23:77
23:77 حَتّٰٓى اِذَا فَتَحْنَا عَلَيْهِمْ بَابًا ذَا عَذَابٍ شَدِيْدٍ اِذَا هُمْ فِيْهِ مُبْلِسُوْنَ‏
حَتّٰٓى இறுதியாக اِذَا فَتَحْنَا நாம் திறந்தால் عَلَيْهِمْ அவர்கள் மீது بَابًا ஒரு கதவை ذَا عَذَابٍ வேதனையுடைய شَدِيْدٍ கடுமையான اِذَا هُمْ அப்போது அவர்கள் فِيْهِ அதில் مُبْلِسُوْنَ‏ கவலைப்பட்டவர்களாக
23:77. எதுவரையிலெனின், நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விடுவோமானால், அவர்கள் அதனால் நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.  
23:77. அவர்கள் மீது கடினமான வேதனையின் ஒரு வாயிலைத் திறந்து விட்டாலோ அவர்கள் திடுக்கிட்டுத் தங்கள் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விடுகின்றனர்.
23:77. இறுதியில், நாம் அவர்கள் மீது கடும் வேதனையின் வாயிலைத் திறந்து விட்டாலோ உடனே அவர்கள் எல்லாவித நன்மைகளை விட்டும் நிராசை அடைந்துவிடுவர் (என்பதை நீர் காண்பீர்!)
23:77. முடிவாக, அவர்கள் மீது கடினமான வேதனையுடைய ஒரு வாயிலை நாம் திறந்து விடுவோமானால், அப்போது அவர்கள் அதில் நிராசையானவர்களாக ஆகிவிடுகின்றனர்.
23:78
23:78 وَهُوَ الَّذِىْۤ اَنْشَاَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ‌  ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏
وَهُوَ الَّذِىْۤ அவன்தான் اَنْشَاَ لَـكُمُ உங்களுக்கு ஏற்படுத்தினான் السَّمْعَ செவியையும் وَالْاَبْصَارَ பார்வையையும் وَالْاَفْـِٕدَةَ‌  ؕ உள்ளங்களையும் قَلِيْلًا குறைவாகவே مَّا تَشْكُرُوْنَ‏ நீங்கள் நன்றிசெலுத்துகிறீர்கள்
23:78. இன்னும் அவனே உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் படைத்தவன்; மிகக் குறைவாகவே அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.
23:78. அவன்தான் உங்களுக்குச் செவி, பார்வை, உள்ளம் ஆகியவற்றைக் கொடுத்தவன். (இவ்வாறிருந்தும்) அவனுக்கு நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
23:78. அந்த அல்லாஹ்தானே உங்களுக்கு கேட்பதற்கும் பார்ப்பதற்கும் வேண்டிய ஆற்றல்களையும், சிந்திப்பதற்கு இதயத்தையும் வழங்கியிருக்கின்றான். ஆயினும், மிகக் குறைவாகவே நீங்கள் நன்றி செலுத்துகின்றீர்கள்.
23:78. இன்னும், (அல்லாஹ்வாகிய) அவன் எத்தகையவனென்றால் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் உண்டாக்கினான், (இவ்வாறிருந்தும் அவனுக்கு) நீங்கள் வெகு சொற்பமாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
23:79
23:79 وَهُوَ الَّذِىْ ذَرَاَكُمْ فِى الْاَرْضِ وَاِلَيْهِ تُحْشَرُوْنَ‏
وَهُوَ الَّذِىْ அவன்தான் ذَرَاَكُمْ உங்களை படைத்தான் فِى الْاَرْضِ பூமியில் وَاِلَيْهِ இன்னும் அவனிடம்தான் تُحْشَرُوْنَ‏ நீங்கள் எழுப்பப்படுவீர்கள்
23:79. மேலும், அவன்தான் உங்களை இப்பூமியில் பல்கிப் பெருகச் செய்தான்; இன்னும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
23:79. அவன்தான் உங்களைப் பூமியில் (பல பாகங்களிலும்) பரந்து (வசிக்க வைத்து) பெருகச் செய்கிறான். (மரணித்த பின்னரும்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
23:79. மேலும், அவன்தான் உங்களைப் பூமியில் பரவச் செய்தான். மேலும், அவன் பக்கமே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
23:79. மேலும், அவன் எத்தகையவனென்றால், உங்களைப் பூமியில் (பல பகுதிகளிலும் பல்கிப் பெருக) பரவச் செய்திருக்கின்றான், மேலும் (மரணத்திற்குப் பிறகு) அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
23:80
23:80 وَهُوَ الَّذِىْ يُحْىٖ وَيُمِيْتُ وَلَـهُ اخْتِلَافُ الَّيْلِ وَالنَّهَارِ‌ؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
وَهُوَ الَّذِىْ இன்னும் அவன்தான் يُحْىٖ உயிர் கொடுக்கின்றான் وَيُمِيْتُ இன்னும் மரணத்தை தருகிறான் وَلَـهُ அவனுடையதுதான் اخْتِلَافُ மாறிமாறி வருவதும் الَّيْلِ இரவு وَالنَّهَارِ‌ؕ இன்னும் பகல் اَفَلَا تَعْقِلُوْنَ‏ நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?
23:80. அவனே உயிர் கொடுக்கிறான்; இன்னும் அவனே மரணிக்கச் செய்கிறான்; மற்றும், இரவும் பகலும் மாறி மாறி வருவதும் அவனுக்குரியதே! (இவற்றை) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
23:80. அவனே உயிர் கொடுக்கிறான்; மரணிக்கவும் செய்விக்கிறான். இரவு பகல் மாறி மாறி வருவதும் அவனுடைய கட்டளையினாலேயே! இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
23:80. அவனே வாழ்வளிக்கின்றான்; மரணமடையச் செய்கின்றான். மேலும், இரவுபகல் மாறி மாறி வருவது அவன் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இவையெல்லாம் உங்கள் அறிவுக்குப் புலப்படவில்லையா என்ன?
23:80. அவன் எத்தகையவனென்றால், அவனே உயிர் கொடுக்கின்றான், இன்னும் அவனே மரணிக்கச்செய்கின்றான், மற்றும் இரவு, பகல் மாறி மாறி வருவதும் அவனுக்கு உரியது, (இவற்றையெல்லாம் தொடக்கத்திலிருந்து செய்து வரும் அவனுக்கு உங்களை உயிர் கொடுத்து எழுப்புவது கடினம் அல்ல என்பதை) நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்களா?
23:81
23:81 بَلْ قَالُوْا مِثْلَ مَا قَالَ الْاَوَّلُوْنَ‏
بَلْ قَالُوْا மாறாக கூறினர் مِثْلَ போன்றே مَا قَالَ கூறியது الْاَوَّلُوْنَ‏ முன்னோர்கள்
23:81. மாறாக, முன்னிருந்தவர்கள் கூறியதைப் போலவே, இவர்களும் கூறுகிறார்கள்.
23:81. என்னே! இவர்களுக்கு முன்னிருந்தவர்கள் கூறியவாறே இவர்களும் கூறுகின்றனர்.
23:81. ஆயினும், இவர்களுடைய முன்னோர்கள் கூறியதைப் போன்றே இவர்களும் கூறுகின்றார்கள்.
23:81. மாறாக, (இவர்களுக்கு) முன்னுள்ளோர்கள் கூறியவாறே இவர்களும் கூறுகின்றனர்.
23:82
23:82 قَالُوْۤا ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّ عِظَامًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ‏
قَالُوْۤا கூறினர் مِتْنَا நாங்கள் இறந்து விட்டால் وَكُنَّا இன்னும் மாறிவிட்டால் تُرَابًا மண்ணாகவும் وَّ عِظَامًا எலும்புகளாகவும் ءَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَمَبْعُوْثُوْنَ‏ எழுப்பப்படுவோமா
23:82. “நாங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நாங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவோம்?” என்று அவர்கள் கூறினார்கள்.
23:82. (அதாவது:) ‘‘ நாம் மரணித்து எலும்பாகவும் உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் எழுப்பப்படுவோமா?'' என்று (அவர்கள் கூறியவாறே இவர்களும்) கூறுகின்றனர்.
23:82. இவர்கள் சொல்கிறார்கள்: “நாங்கள் இறந்து மண்ணோடு மண்ணாகவும் உக்கிய எலும்புகளாகவும் ஆன பின்னர் மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படுவோமா, என்ன?
23:82. (அதாவது!) “நாம் இறந்து மண்ணாகவும், எலும்பாகவும் ஆகிவிட்டாலுமா நிச்சயமாக, நாங்கள் மீண்டும் எழுப்பப் படுபவர்கள்,?” என்று கூறினார்கள்.
23:83
23:83 لَـقَدْ وُعِدْنَا نَحْنُ وَاٰبَآؤُنَا هٰذَا مِنْ قَبْلُ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِيْرُ الْاَوَّلِيْنَ‏
لَـقَدْ திட்டவட்டமாக وُعِدْنَا வாக்களிக்கப்பட்டோம் نَحْنُ நாங்களும் وَاٰبَآؤُنَا எங்கள் மூதாதைகளும் هٰذَا இதை مِنْ قَبْلُ இதற்கு முன்னர் اِنْ هٰذَاۤ இது வேறில்லை اِلَّاۤ தவிர اَسَاطِيْرُ கட்டுக் கதைகளே الْاَوَّلِيْنَ‏ முன்னோர்களின்
23:83. “மெய்யாகவே முன்னர் நாங்கள் (அதாவது) நாமும், எம் மூதாதையரும் - இவ்வாறே வாக்களிக்கப்பட்டிருக்கிறோம்; ஆனால் இது முன்னுள்ளவர்களின் கட்டுக் கதைகளே அன்றி வேறில்லை” (என்றும் கூறுகின்றனர்).
23:83. ‘‘ நிச்சயமாக நாமும் நம் மூதாதைகளும் இவ்வாறே பயமுறுத்தப்பட்டோம். இது முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளே தவிர வேறில்லை'' (என்றும் கூறுகின்றனர்.)
23:83. இத்தகைய எச்சரிக்கைகளை நாங்களும் நிறையக் கேள்விப்படுகின்றோம். இதற்கு முன்னர் எங்கள் முன்னோர்களும் கேள்விப்பட்டிருக்கின்றார்கள். இவை தொன்மையான கட்டுக்கதைகளே அன்றி வேறில்லை!”
23:83. (அன்றி “நாமும் இதற்கு முன்னர் நம்முடைய மூதாதையர்களும் இதனையே திட்டமாக வாக்களிக்கப்பட்டிருக்கிறோம், (ஆனால்) இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகளேயன்றி (வேறு) இல்லை (என்றும் கூறுகின்றனர்.)
23:84
23:84 قُلْ لِّمَنِ الْاَرْضُ وَمَنْ فِيْهَاۤ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
قُلْ கூறுவீராக لِّمَنِ எவனுக்கு சொந்தம் الْاَرْضُ பூமியும் وَمَنْ فِيْهَاۤ இன்னும் அதில் உள்ளவர்களும் اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‏ அறிந்தவர்களாக
23:84. “நீங்கள் அறிந்திருந்தால், இப் பூமியும் இதிலுள்ளவர்களும் யாருக்கு(ச் சொந்தம்?“ என்று (நபியே!) நீர் கேட்பீராக!
23:84. (ஆகவே நபியே! நீர் அவர்களை நோக்கி) ‘‘பூமியும் அதில் உள்ளவையும் யாருக்குரியன? நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள்'' எனக் கேட்பீராக.
23:84. (இவர்களிடம்) கேளுங்கள்: “நீங்கள் அறிந்திருந்தால், பூமியும் இதிலுள்ள அனைவரும் யாருக்குரியவர்கள் என்பதைக் கூறுங்கள்.”
23:84. “பூமியும், அதிலுள்ளவையும் யாருக்கு உரியது என நீங்கள், அறிந்திருந்தால் கூறுங்கள்” என்று (நபியே!) நீர் கேட்பீராக!
23:85
23:85 سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ؕ قُلْ اَفَلَا تَذَكَّرُوْنَ‏
سَيَقُوْلُوْنَ கூறுவார்கள் لِلّٰهِ‌ؕ அல்லாஹ்விற்கே قُلْ கூறுவீராக اَفَلَا تَذَكَّرُوْنَ‏ நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா
23:85. “அல்லாஹ்வுக்கே” என்று அவர்கள் கூறுவார்கள்; “(அவ்வாறாயின் இதை நினைவிற்கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?” என்று கூறுவீராக!
23:85. அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்வுக்குரியனவே'' என்று கூறுவார்கள். (அவ்வாறாயின் இதைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சிப் பெறமாட்டீர்களா? என்று கேட்பீராக.
23:85. திண்ணமாக, அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள், “அல்லாஹ்வுக்கு உரியவர்கள்” என்று! பிறகு, “நீங்கள் ஏன் உணர்ந்து கொள்வதில்லை” என்று கேளுங்கள்.
23:85. அ(தற்க)வர்கள், “அல்லாஹ்வுக்கே உரியன” என்று கூறுவார்கள், “(அவ்வாறாயின் அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்பதை) நீங்கள் நினைத்துப்பார்க்க மாட்டீர்களா?” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
23:86
23:86 قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ‏
قُلْ கூறுவீராக مَنْ யார் رَّبُّ இறைவன் السَّمٰوٰتِ வானங்களின் السَّبْعِ ஏழு وَرَبُّ இன்னும் இறைவன் யார் الْعَرْشِ அர்ஷுடைய الْعَظِيْمِ‏ மகத்தான
23:86. “ஏழு வானங்களுக்கு இறைவனும் மகத்தான அர்ஷுக்கு இறைவனும் யார்?” என்றும் கேட்பீராக.
23:86. ‘‘ ஏழு வானங்களுக்கும், மகத்தான அர்ஷுக்கும் சொந்தக்காரன் யார்?'' என்று கேட்பீராக.
23:86. “ஏழு வானங்களின் உரிமையாளனும் மகத்துவம் மிக்க அர்ஷின் உரிமையாளனும் யார்?” என்று இவர்களிடம் வினவுங்கள்.
23:86. (அன்றி) “ஏழு வானங்களின் இரட்சகனும், மகத்தான அர்ஷின் இரட்சகனும் யார்? என்று (நபியே!) நீர் கேட்பிராக!
23:87
23:87 سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ؕ قُلْ اَفَلَا تَتَّقُوْنَ‏
سَيَقُوْلُوْنَ அவர்கள் கூறுவார்கள் لِلّٰهِ‌ؕ அல்லாஹ்விற்கே قُلْ நீர் கூறுவீராக اَفَلَا تَتَّقُوْنَ‏ ஆகவே நீங்கள் அஞ்ச மாட்டீர்களா?
23:87. “அல்லாஹ்வே” என்று அவர்கள் சொல்வார்கள்; “(அவ்வாறாயின்) நீங்கள் அவனுக்கு அஞ்சி இருக்கமாட்டீர்களா?” என்று கூறுவீராக!
23:87. அதற்கவர்கள் ‘‘அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே'' என்று கூறுவார்கள். ‘‘அவ்வாறாயின் நீங்கள் அவனுக்குப் பயப்பட வேண்டாமா?'' என்று கேட்பீராக.
23:87. இவர்கள் திண்ணமாக பதில் கூறுவார்கள், “அல்லாஹ்தான்” என்று! கேளுங்கள்: “பிறகு ஏன் நீங்கள் அஞ்சுவதில்லை?”
23:87. அ(தற்க)வர்கள் (அவை யாவும்) “அல்லாஹ்வுக்கே உரியன” என்று கூறுவார்கள், “(அவ்வாறாயின்) நீங்கள் (அவனுடைய தண்டனையை) பயப்பட மாட்டீர்களா?” என்று நீர் கூறுவீராக.
23:88
23:88 قُلْ مَنْۢ بِيَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَىْءٍ وَّهُوَ يُجِيْرُ وَلَا يُجَارُ عَلَيْهِ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
قُلْ கூறுவீராக مَنْۢ யாருடைய بِيَدِهٖ அவனுடைய கரத்தில் இருக்கிறது مَلَكُوْتُ பேராட்சி كُلِّ شَىْءٍ எல்லாவற்றின் وَّهُوَ அவன்தான் يُجِيْرُ பாதுகாப்பு அளிக்கின்றான் وَلَا يُجَارُ இன்னும் பாதுகாப்பு அளிக்கப்படாது عَلَيْهِ அவனுக்கு எதிராக اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் تَعْلَمُوْنَ‏ அறிந்தவர்களாக
23:88. “எல்லாப் பொருட்களின் ஆட்சியும் யார் கையில் இருக்கிறது? - யார் எல்லாவற்றையும் பாதுகாப்பவனாக - ஆனால் அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே அவன் யார்? நீங்கள் அறிவீர்களாயின் (சொல்லுங்கள்)” என்று கேட்பீராக.
23:88. ‘‘ எல்லா பொருள்களின் அதிகாரம் யார் கையில் இருக்கிறது? யார் (அனைவரையும்) பாதுகாக்கிறான். அவனை ஒருவரும் பாதுகாப்பதில்லை. நீங்கள் அறிந்திருந்தால் (அவன் யார் எனக் கூறுங்கள்)'' எனக் கேட்பீராக.
23:88. மேலும், அவர்களிடம் கேளுங்கள்: “உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். ஒவ்வொரு பொருளின்மீதுள்ள அதிகாரமும் யாருடைய கைவசம் இருக்கின்றது என்றும் மேலும், அனைவருக்கும் அபயம் அளிப்பவனும் எவராலும் அபயம் அளிக்கப்பட முடியாதவனும் யார் என்றும்!”
23:88. ஓவ்வொரு பொருளின் ஆட்சியும் எவன் கைவசம் இருக்கின்றது? அவன் பாதுகாக்கிறான், (அவனது தண்டனையிலிருந்து தப்ப) அவனுக்கு எதிராக எவரும் பாதுகாக்கப்பட முடியாதே – அவன் யார்? என நீஙகள் அறிந்தவர்களாக இருப்பின் (கூறுங்கள்) என்று கேட்பீராக!
23:89
23:89 سَيَقُوْلُوْنَ لِلّٰهِ‌ؕ قُلْ فَاَنّٰى تُسْحَرُوْنَ‏
سَيَقُوْلُوْنَ அவர்கள் கூறுவார்கள் لِلّٰهِ‌ؕ அல்லாஹ்விற்கு உரியதே قُلْ நீர் கூறுவீராக فَاَنّٰى ஆக, எவ்வாறு تُسْحَرُوْنَ‏ திருப்பப்படுகிறீர்கள்
23:89. அதற்கவர்கள் “(இது) அல்லாஹ்வுக்கே (உரியது)” என்று கூறுவார்கள். (“உண்மை தெரிந்தும்) நீங்கள் ஏன் மதி மயங்குகிறீர்கள்?” என்று கேட்பீராக.
23:89. அதற்கவர்கள் (எல்லா அதிகாரங்களும்) ‘‘அல்லாஹ்வுக்குரியனதான்'' என்று கூறுவார்கள். ‘‘அவ்வாறாயின் நீங்கள் எவ்வாறு உங்கள் அறிவை இழந்து விட்டீர்கள்?'' என்று கேட்பீராக.
23:89. திண்ணமாக, அவர்கள் கூறுவார்கள்: “இவை அல்லாஹ்வுக்கே உரியனவாகும்.” பிறகு, கேளுங்கள்: “எங்கிருந்து நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள்?”
23:89. அ(தற்க)வர்கள் “(சகல அதிகாரமும்) அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவார்கள்” (அவ்வாறாயின்) நீங்கள் எங்கிருந்து சூனியமாக்கப்படுகிறீர்கள் (எவ்வாறு மதிமயக்கப்படுகிறீர்கள்) என்று கேட்பீராக!
23:90
23:90 بَلْ اَتَيْنٰهُمْ بِالْحَـقِّ وَاِنَّهُمْ لَكٰذِبُوْنَ‏
بَلْ மாறாக اَتَيْنٰهُمْ நாம் அவர்களுக்கு கொண்டு வந்துள்ளோம் بِالْحَـقِّ உண்மையை وَاِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் لَكٰذِبُوْنَ‏ பொய்யர்கள்தான்
23:90. எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம்; ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள்.
23:90. நாம் அவர்களுக்கு சத்தியத்தையே கொடுத்திருந்தோம். (இதை மறுத்துக் கூறும்) அவர்கள் நிச்சயமாக பொய்யர்களே!
23:90. சரியாகச் சொல்வதானால் சத்தியத்தையே நாம் இவர்கள் முன் கொண்டு வந்துள்ளோம். ஆயினும், இவர்கள் பொய்யர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
23:90. எனினும், நாம் அவர்களுக்குச் சத்தியத்தையே கொடுத்திருந்தோம், (இதனை மறுத்துக்கூறும்) அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்களாகவே இருக்கிறார்கள்.
23:91
23:91 مَا اتَّخَذَ اللّٰهُ مِنْ وَّلَدٍ وَّمَا كَانَ مَعَهٗ مِنْ اِلٰهٍ‌ اِذًا لَّذَهَبَ كُلُّ اِلٰهٍۢ بِمَا خَلَقَ وَلَعَلَا بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ‌ؕ سُبْحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوْنَۙ‏
مَا اتَّخَذَ ஏற்படுத்திக் கொள்ளவில்லை اللّٰهُ அல்லாஹ் مِنْ وَّلَدٍ எந்த ஒரு குழந்தையையும் وَّمَا كَانَ இருக்கவில்லை مَعَهٗ அவனுடன் مِنْ اِلٰهٍ‌ எந்தக் கடவுளும் اِذًا அப்படி இருந்திருந்தால் لَّذَهَبَ கொண்டு சென்று விடுவார்கள் كُلُّ ஒவ்வொரு اِلٰهٍۢ கடவுளும் بِمَا خَلَقَ இன்னும் அவர்களில் சிலர் ஆதிக்கம் செலுத்தி இருப்பார்கள் وَلَعَلَا بَعْضُهُمْ தான் படைத்ததை عَلٰى بَعْضٍ‌ؕ சிலர் மீது سُبْحٰنَ மகா பரிசுத்தமானவன் اللّٰهِ அல்லாஹ் عَمَّا يَصِفُوْنَۙ‏ அவர்கள் வர்ணிக்கின்றவற்றை விட்டு
23:91. அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை; அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.
23:91. அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொள்ளவில்லை. அவனுடன் வணக்கத்திற்குரிய வேறு இறைவனுமில்லை. அவ்வாறாயின் ஒவ்வொரு இறைவனும் தான் படைத்தவற்றைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு, ஒருவர் மற்றவர் மீது போர் புரிய ஆரம்பித்து விடுவர். (நிராகரிக்கும்) இவர்கள் வர்ணிக்கும் இத்தகைய வர்ணிப்புகளை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்.
23:91. அல்லாஹ் யாரையும் தன் பிள்ளைகளாய் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளரும் தன் படைப்புகளை அழைத்துக் கொண்டு தனியே சென்றிருப்பர். மேலும், ஒருவர் மற்றவரைவிட மேலோங்க முனைந்து கொண்டிருப்பர். மிகத்தூய்மையானவனாக இருக்கின்றான் அல்லாஹ், இவர்கள் புனைந்துரைக்கும் தன்மைகளைவிட்டு!
23:91. அல்லாஹ் எந்த ஒரு மகவையும் (தனக்குச் சந்ததியாக) எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடன் (வணக்கத்திற்குரிய வேறு எந்த) நாயனும் இல்லை; (அவர்களின் கற்பனையின்படி) அவ்வாறிருப்பின் ஒவொரு நாயனும் தான் படைத்ததைக் கொண்டு சென்றுவிடுவர்; இன்னும் நம்மில் சிலர் சிலரை (மிகைத்து) உயர்ந்தும் விடுவர். இந்நிராகரிப்பவர்கள் வர்ணிப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிகத் தூயவன்.
23:92
23:92 عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَتَعٰلٰى عَمَّا يُشْرِكُوْنَ‏
عٰلِمِ நன்கறிந்தவன் الْغَيْبِ மறைவையும் وَالشَّهَادَةِ இன்னும் வெளிப்படையையும் فَتَعٰلٰى அவன் மிக உயர்ந்தவன் عَمَّا يُشْرِكُوْنَ‏ அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
23:92. அவன் மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிபவன்; எனவே அவர்கள் (அவனுக்கு) இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.  
23:92. அவன் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன். இவர்கள் இணைவைப்பவற்றை விட அல்லாஹ் மிக்க மேலானவன்.
23:92. வெளிப்படையானவற்றையும், மறைவானவற்றையும் அறியக்கூடியவனாக இருக்கின்றான். அவர்களுடைய இணைவைப்பிலிருந்து அல்லாஹ் மிக மேலானவன்.
23:92. (அவன்) மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவன், இவர்கள் இணைவைப்பவைகளை விட்டும் அவன் மிக்க உயர்ந்தவன்.
23:93
23:93 قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّىْ مَا يُوْعَدُوْنَۙ‏
قُلْ கூறுவீராக رَّبِّ என் இறைவா اِمَّا تُرِيَنِّىْ நீ எனக்கு காண்பித்தால் مَا يُوْعَدُوْنَۙ‏ அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை
23:93. (நபியே!) நீர் கூறுவீராக: “என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) நீ எனக்கு காண்பிப்பதாயின்:
23:93. ‘‘என் இறைவனே! நீ அவர்களுக்கு வாக்களிக்கும் வேதனையை நீ எனக்கு காண்பிப்பதாயின்,
23:93. (நபியே!) இறைஞ்சுவீராக: “என் இறைவனே! எந்த ஒரு வேதனையைப் பற்றி இவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகின்றதோ அதனை, நான் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே நீ நிகழச்செய்தால்
23:93. (நபியே!) நீர் கூறுவீராக! என் இரட்சகனே! எதை அவர்கள் வாக்களிக்கப்பட்டார்களோ, அ(வ்வேதனையான)தை எனக்கு நீ காண்பிப்பதாயின்-
23:94
23:94 رَبِّ فَلَا تَجْعَلْنِىْ فِى الْقَوْمِ الظّٰلِمِيْنَ‏
رَبِّ என் இறைவா فَلَا تَجْعَلْنِىْ ஆகவே, என்னையும் நீ ஆக்கிவிடாதே فِى الْقَوْمِ மக்களில் الظّٰلِمِيْنَ‏ அநியாயக்கார
23:94. “என் இறைவனே! அப்போது என்னை அந்த அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக” என்று.
23:94. என் இறைவனே! (அச்சமயம்) இந்த அநியாயக்கார மக்களுடன் என்னை நீ சேர்த்து விடாதே'' என்று (நபியே!) பிரார்த்திப்பீராக.
23:94. என் இறைவா! கொடுமை இழைக்கும் இந்த சமூகத்தாருடன் என்னையும் சேர்த்து விடாதே!”
23:94. “என் இரட்சகனே! (அது சமயம்) இந்த அநியாயக்காரர்களான சமூகத்தாரில் என்னை நீ ஆக்கிவிடாதிருப்பாயாக” (என்றும் நபியே! நீர் பிரார்த்தித்துக் கூறுவீராக)
23:95
23:95 وَاِنَّا عَلٰٓى اَنْ نُّرِيَكَ مَا نَعِدُهُمْ لَقٰدِرُوْنَ‏
وَاِنَّا நிச்சயமாக عَلٰٓى اَنْ نُّرِيَكَ நாம் உமக்கு காண்பிப்பதற்கு مَا نَعِدُ நாம் வாக்களிப்பதை هُمْ அவர்களுக்கு لَقٰدِرُوْنَ‏ ஆற்றலுடையவர்கள்தான்
23:95. இன்னும், நிச்சயமாக, அவர்களுக்கு வாக்களிப்பதை (வேதனையை) உமக்குக் காண்பிக்க ஆற்றலுடையோம் நாம்.
23:95. ஏனென்றால், நிச்சயமாக நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் வேதனையை உமக்குக் காண்பிக்கவும் ஆற்றலுடையவர்கள் ஆவோம்.
23:95. இவர்களுக்கு நாம் எச்சரிக்கை செய்து கொண்டிருக்கும் அந்த வேதனையை உமது கண்ணெதிரிலேயே கொண்டு வருவதற்கும் உண்மையில் நாம் முழு வலிமை பெற்றிருக்கின்றோம்.
23:95. இன்னும், நிச்சயமாக நாம் அவர்களுக்கு வாக்களித்த ஒன்றை உமக்குக் காண்பிக்கவும் நாம் ஆற்றலுடையோராக உள்ளோம்.
23:96
23:96 اِدْفَعْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ السَّيِّئَةَ‌ ؕ نَحْنُ اَعْلَمُ بِمَا يَصِفُوْنَ‏
اِدْفَعْ தடுப்பீராக بِالَّتِىْ கொண்டு هِىَ اَحْسَنُ மிக அழகிய (குணத்)தை السَّيِّئَةَ‌ ؕ கெட்டதை نَحْنُ நாம் اَعْلَمُ மிக அறிந்தவர்கள் بِمَا يَصِفُوْنَ‏ அவர்கள் வர்ணிக்கின்றவற்றை
23:96. (நபியே!) நீர் அழகிய நன்மையைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அவர்கள் வர்ணிப்பதை நாம் நன்கறிவோம்.
23:96. (நபியே!) தீமையை மிக அழகியதைக் கொண்டே நீர் தடுத்துக் கொள்வீராக. அவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுவதை நாம் நன்கறிவோம்.
23:96. (நபியே!) எது மிக உன்னத வழிமுறையாய் உள்ளதோ அதன் மூலம் தீமையைத் தடுப்பீராக! அவர்கள் (உம்மீது) புனைந்து கூறுகின்றவற்றை நாம் நன்கறிவோம்.
23:96. எது மிக அழகானதோ அதைக்கொண்டு தீமையை நீர் தடுத்துக் கொள்வீராக! அவர்கள் (பொய்யாக) வர்ணிப்பதை நாம் நன்கறிவோம்.
23:97
23:97 وَقُلْ رَّبِّ اَعُوْذُ بِكَ مِنْ هَمَزٰتِ الشَّيٰطِيْنِۙ‏
وَقُلْ கூறுவீராக رَّبِّ என் இறைவா اَعُوْذُ بِكَ உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் مِنْ هَمَزٰتِ நெறிப்பதை விட்டும் الشَّيٰطِيْنِۙ‏ ஷைத்தான்கள்
23:97. இன்னும்: நீர் கூறுவீராக! “என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்” (என்றும்)
23:97. ‘‘ என் இறைவனே! (பாவமான காரியங்களைச் செய்யும்படித் தூண்டும்) ஷைத்தான்களுடைய தூண்டுதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்படி நான் உன்னிடம் கோருகிறேன்.
23:97. மேலும், இறைஞ்சுவீராக! “என் இறைவனே! நான் ஷைத்தான்களின் தூண்டுதல்களிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.
23:97. இன்னும், “என் இரட்சகனே! ஷைத்தானுடைய தூண்டுதல்களிலிருந்து நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்” என்றும் நபியே! நீர் கூறுவீராக!
23:98
23:98 وَاَعُوْذُ بِكَ رَبِّ اَنْ يَّحْضُرُوْنِ‏
وَاَعُوْذُ بِكَ رَبِّ உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் / என் இறைவா! اَنْ يَّحْضُرُوْنِ‏ அவர்கள் என்னிடம் வருவதை விட்டும்
23:98. “இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்” (என்று கூறுவீராக)!
23:98. என் இறைவனே! ஷைத்தான்கள் என்னிடம் வராமலிருக்கவும் நான் உன்னிடம் கோருகிறேன்'' என்று (நபியே!) பிரார்த்தித்துக் கொண்டிருப்பீராக.
23:98. மேலும், என் இறைவனே! அவர்கள் என்னருகில் வருவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.”
23:98. “என் இரட்சகனே! இன்னும் அவை (என் காரியங்களில்) பிரசன்னமாகாதிருக்கவும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்” (என்றும் நபியே! நீர் பிரார்த்தித்துக் கூறுவீராக!
23:99
23:99 حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏
حَتّٰٓى இறுதியாக اِذَا جَآءَ வந்தால் اَحَدَ ஒருவருக்கு هُمُ அவர்களில் الْمَوْتُ மரணம் قَالَ அவன் கூறுகிறான் رَبِّ என் இறைவா! ارْجِعُوْنِۙ‏ என்னை திருப்பு
23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.
23:99. (நிராகரித்துக் கொண்டிருக்கும்) அவர்களில் எவனுக்கும் மரணம் வந்தாலோ (அவன் தன் இறைவனை நோக்கி) ‘‘ என் இறைவனே! என்னை (உலகத்திற்கு) திரும்ப அனுப்பிவிடு.
23:99. (இம்மக்கள் தம் செயல்களைவிட்டு விலகிக் கொள்ளவே மாட்டார்கள்;) இறுதியில் அவர்களில் எவருக்கேனும் மரணம் வந்துவிடுமானால், “என் இறைவனே! நான் விட்டு வந்துள்ள உலகுக்கு என்னைத் திரும்ப அனுப்புவாயாக!
23:99. முடிவாக, அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால் (அவன் தன் இரட்சகனிடம்) “என் இரட்சகனே! என்னை (உலகத்திற்கு)த் திருப்பி அனுப்பிவிடுவாயாக” என்று கூறுவான்.
23:100
23:100 لَعَلِّىْۤ اَعْمَلُ صَالِحًـا فِيْمَا تَرَكْتُ‌ؕ كَلَّا‌ ؕ اِنَّهَا كَلِمَةٌ هُوَ قَآٮِٕلُهَا‌ؕ وَمِنْ وَّرَآٮِٕهِمْ بَرْزَخٌ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‏
لَعَلِّىْۤ اَعْمَلُ நான் செய்வதற்காக صَالِحًـا நல்ல அமல்களை فِيْمَا تَرَكْتُ‌ؕ நான் விட்டுவிட்டவற்றிலிருந்து كَلَّا‌ ؕ ஒரு போதும் அவ்வாறு அல்ல اِنَّهَا நிச்சயமாக இது كَلِمَةٌ ஒரு பேச்சாகும் هُوَ அவன் قَآٮِٕلُهَا‌ؕ அவன் அதைக் கூறிக்கொண்டே இருப்பான் وَمِنْ இருக்கிறது وَّرَآٮِٕهِمْ அவர்களுக்கு முன் بَرْزَخٌ ஒரு தடை اِلٰى يَوْمِ நாள் வரை يُبْعَثُوْنَ‏ எழுப்பப்படுகின்ற
23:100. “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.
23:100. நான் விட்டு வந்த அ(ந்த உலகத்)தில் (இனி) நல்ல காரியங்களையே நான் செய்து கொண்டிருப்பேன்'' என்று கூறுவான். (எனினும்,) அது ஆகக்கூடிய காரியமன்று. (இத்தகைய சந்தர்ப்பங்களில்) அவன் கூறக்கூடியது வெறும் வார்த்தையே (தவிர வேறில்லை). அவர்களுக்கு முன் ஓர் அரண் ஏற்பட்டு விடும். (உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாள் வரை அதில் தங்கிவிடுவார்கள்.
23:100. அங்கு நான் நற்செயல் புரிவேனே!” என்று கூறத் தொடங்குவான் அவ்வாறு ஒருபோதும் நடக்காது. இது அவன் பிதற்றிக் கொண்டிருக்கின்ற வெறும் வார்த்தைகள்தாம்! (இறந்து போகும்) இவர்கள் அனைவருக்கும் பின்னால், ‘பர்ஸக்’* திரையாக இருக்கின்றது; இவர்கள் மீண்டும் உயிர்த்தெழுப்பப்படும் நாள் வரையில்!
23:100. “உலகில் நான் விட்டு வந்ததில், (இனி) நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்.) அவ்வாறன்று! நிச்சயமாக அது – அவன் அதைக் கூறக்கூடிய (வெறும்) ஒரு வார்த்தையாகும், இன்னும், அவர்கள் (மறுமைக்காக) எழுப்பப்படும் நாள்வரை அவர்கள் முன்னே தடுப்பு இருக்கிறது (அதனால் அவர்கள் உலகுக்குத் திரும்பிவர ஆற்றல் பெறமாட்டார்கள்).
23:101
23:101 فَاِذَا نُفِخَ فِى الصُّوْرِ فَلَاۤ اَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَٮِٕذٍ وَّلَا يَتَسَآءَلُوْنَ‏
فَاِذَا نُفِخَ ஊதப்பட்டால் فِى الصُّوْرِ சூரில் فَلَاۤ اَنْسَابَ உறவுகள் அறவே இருக்காது بَيْنَهُمْ அவர்களுக்கு மத்தியில் يَوْمَٮِٕذٍ அந்நாளில் وَّلَا يَتَسَآءَلُوْنَ‏ அவர்கள் தங்களுக்குள் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்
23:101. எனவே ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது; ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.
23:101. சூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்துத்துவம் இருக்காது. ஒருவரின் (சுக துக்க) செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார். (தத்தம் கவலையே பெரிதாக இருக்கும்.)
23:101. பிறகு, சூர்எக்காளம் ஊதப்பட்டதும் அவர்களிடையே எந்த உறவுகளும் அந்நாளில் இருக்காது. ஒருவருக்கொருவர் விசாரித்துக்கொள்ளவும் மாட்டார்கள்.
23:101. ஆகவே சூர் (குழல்), ஊதப்பட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்தங்கள் (பயனளிப்பது) இல்லை, ஒருவரின் செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார்கள், (ஒவ்வொருவருக்கும் அவரவர் கவலையே பெரிதாக இருக்கும்).
23:102
23:102 فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
فَمَنْ எனவே, எவர் ثَقُلَتْ கனத்தனவோ مَوَازِيْنُهٗ அவரின் எடைகள் فَاُولٰٓٮِٕكَ هُمُ அவர்கள்தான் الْمُفْلِحُوْنَ‏ வெற்றி பெற்றவர்கள்
23:102. எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
23:102. ஆகவே, எவர்களுடைய நன்மையின் எடைகள் கணக்கிறதோ அவர்கள்தான் வெற்றி அடைவார்கள்.
23:102. (அவ்வேளை) எவர்களுடைய (நன்மையின்) எடைத் தட்டுகள் கனத்திருக்குமோ அவர்களே வெற்றி பெறுவார்கள்.
23:102. எவர்களுடைய (நன்மையின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.
23:103
23:103 وَمَنْ خَفَّتْ مَوَازِيْنُهٗ فَاُولٰٓٮِٕكَ الَّذِيْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فِىْ جَهَـنَّمَ خٰلِدُوْنَ‌ ۚ‏
وَمَنْ எவர் خَفَّتْ இலகுவாகி விட்டனவோ مَوَازِيْنُهٗ அவரின் எடைகள் فَاُولٰٓٮِٕكَ الَّذِيْنَ அவர்கள்தான் خَسِرُوْۤا நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள் اَنْفُسَهُمْ தங்களுக்குத் தாமே فِىْ جَهَـنَّمَ நரகில் خٰلِدُوْنَ‌ ۚ‏ அவர்கள் நிரந்தரமானவர்கள்
23:103. ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.
23:103. எவர்களுடைய (நன்மையின்) எடைகள் குறைகிறதோ அவர்கள் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டுபண்ணிக் கொண்டு எந்நாளுமே நரகத்தில் தங்கிவிடுவார்கள்.
23:103. எவர்களுடைய எடைத்தட்டுகள் இலேசாக இருக்குமோ அவர்கள் தங்களைத் தாங்களே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டவர்களாவர். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாயிருப்பார்கள்.
23:103. இன்னும் எவர்களுடைய (நன்மையின்) எடைகள் கனம் குறைந்து இருக்கின்றனவோ, அவர்கள் தங்களுக்குத் தாங்களே நஷ்டத்தையுண்டு பண்ணிக் கொண்டவர்கள் (அவர்கள்) நரகத்தில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள்.
23:104
23:104 تَلْفَحُ وُجُوْهَهُمُ النَّارُ وَهُمْ فِيْهَا كٰلِحُوْنَ‏
تَلْفَحُ பொசுக்கிவிடும் وُجُوْهَهُمُ அவர்களது முகத்தை النَّارُ நெருப்பு وَهُمْ இன்னும் அவர்கள் فِيْهَا அதில் كٰلِحُوْنَ‏ உதடுகள் பொசுங்கி பற்கள் வெளிப்பட்டவர்களாக இருப்பார்கள்
23:104. (நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.
23:104. அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்புப் பொசுக்கும். அதில் அவர்களுடைய (உதடுகளெல்லாம் வெந்து சுருண்டு) முகம் விகாரமாக இருக்கும்.
23:104. நெருப்பு அவர்களுடைய முகங்களின் தோலை நக்கித் தின்றுவிடும். மேலும், அங்கே அவர்களின் தாடைகள் வெளிப்பட்டுவிடும்.
23:104. அவர்களுடைய முகங்களை (நரகத்தின்) நெருப்புப் பொசுக்கும், அதில் அவர்கள் விகாரமானவர்களாகவும் இருப்பார்கள்.
23:105
23:105 اَلَمْ تَكُنْ اٰيٰتِىْ تُتْلٰى عَلَيْكُمْ فَكُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏
اَلَمْ تَكُنْ இருந்ததல்லவா اٰيٰتِىْ எனது வசனங்கள் تُتْلٰى ஓதப்படுகின்றன عَلَيْكُمْ உங்கள் மீது فَكُنْتُمْ ஆனால், நீங்கள் இருந்தீர்கள் بِهَا அவற்றை تُكَذِّبُوْنَ‏ பொய்ப்பிக்கின்றீர்கள்
23:105. “என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது நீங்கள் அவற்றைப் பொய்ப்பிக்கலானீர்கள்” (என்று கூறப்படும்)
23:105. (அவர்களை நோக்கி) “உங்கள் மீது எனது வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அவற்றை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டே இருந்தீர்கள்'' (என்று கூறப்படும்.)
23:105. “என்னுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்ட போது, அவற்றைப் பொய்யென்று கூறிய மக்கள் நீங்கள் அல்லவா?”
23:105. “என்னுடைய வசனங்கள் உங்கள் மீது ஓதிக் காண்பிக்கப்படவில்லையா? அப்போது அவற்றை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்.)
23:106
23:106 قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَآلِّيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் رَبَّنَا எங்கள் இறைவா غَلَبَتْ மிகைத்து விட்டது عَلَيْنَا எங்களை شِقْوَتُنَا எனவே துர்பாக்கியம் وَكُنَّا நாங்கள் இருந்தோம் قَوْمًا மக்களாக ضَآلِّيْنَ‏ வழிகெட்டவர்கள்
23:106. “எங்கள் இறைவனே! எங்களை எங்களுடைய துர்பாக்கியம் மிகைத்துவிட்டது; நாங்கள் வழிதவறிய கூட்டத்தினர் ஆகிவிட்டோம்” என்று அவர்கள் கூறுவார்கள்.
23:106. அதற்கவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்கள் துரதிர்ஷ்டம் எங்களை மீறிவிட்டது. ஆதலால் நாங்கள் வழிகெட்ட மக்களாக இருந்தோம்'' என்று கூறுவார்கள்.
23:106. அதற்கு அவர்கள் கூறுவர்: “எங்கள் இறைவனே! எங்களின் துர்ப்பாக்கியம் எங்களை அமுக்கிவிட்டிருந்தது. உண்மையிலேயே நாங்கள் வழிதவறிய மக்களாகவே இருந்தோம்.
23:106. அ(தற்க)வர்கள், “எங்கள் இரட்சகனே! எங்களுடைய துர்பாக்கியம் எங்கள் மீது மிகைத்துவிட்டது, (ஆதலால்) நாங்கள் வழி தவறிவிட்ட சமூகத்தவராகவும் இருந்துவிட்டோம்” என்று கூறுவார்கள்.
23:107
23:107 رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْهَا فَاِنْ عُدْنَا فَاِنَّا ظٰلِمُوْنَ‏
رَبَّنَاۤ எங்கள் இறைவா اَخْرِجْنَا எங்களை வெளியேற்று مِنْهَا அதிலிருந்து فَاِنْ عُدْنَا திரும்பச் சென்றால் فَاِنَّا நிச்சயமாக நாங்கள் ظٰلِمُوْنَ‏ அநியாயக்காரர்கள்தான்
23:107. “எங்கள் இறைவனே! நீ எங்களை இ(ந் நரகத்)தை விட்டு வெளியேற்றுவாயாக! திரும்பவும் (நாங்கள் பாவம் செய்ய) முற்பட்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்!” (என்றும் கூறுவர்.)
23:107. ‘‘எங்கள் இறைவனே! இ(ந்த நரகத்)திலிருந்து எங்களை வெளியேற்றி விடு. மீண்டும் நாங்கள் (பாவத்திற்கு) திரும்பினால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்'' (என்பார்கள்).
23:107. எங்கள் இறைவனே! (இப்பொழுது) எங்களை இதிலிருந்து வெளியேற்றி விடு; நாங்கள் மீண்டும் (இவ்வாறு) தவறு செய்தால் நிச்சயம் நாங்கள் கொடுமைக்காரர்களாவோம்.”
23:107. (அன்றி) “எங்கள் இரட்சகனே! இந்த நரகத்)திலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! பின்னர் நாங்கள் (திரும்பவும் பாவம் செய்ய) மீண்டால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்” (என்பார்கள்.)
23:108
23:108 قَالَ اخْسَــٴُــوْا فِيْهَا وَلَا تُكَلِّمُوْنِ‏
قَالَ அவன் கூறுவான் اخْسَــٴُــوْا நீங்கள் இழிவுடன் தங்கி விடுங்கள் فِيْهَا அதில் وَلَا تُكَلِّمُوْنِ‏ என்னிடம்பேசாதீர்கள்
23:108. (அதற்கவன்) “அதிலேயே இழிந்து கிடங்கள்; என்னுடன் பேசாதீர்கள்!” என்று கூறுவான்.
23:108. அதற்கவன் கூறுவான்: ‘‘அதிலேயே சிறுமைப்பட்டுக் கிடங்கள். நீங்கள் என்னுடன் பேசாதீர்கள்.''
23:108. அல்லாஹ் பதிலளிப்பான்: “விலகிச் செல்லுங்கள் என் எதிரிலிருந்து; அதிலேயே வீழ்ந்து கிடங்கள்! என்னிடம் பேசாதீர்கள்.”
23:108. (அதற்கு) அவன், “அதிலேயே சிறுமைப்பட்டவர்களாகக் கிடங்கள், என்னிடம் நீங்கள் பேசாதீர்கள்” என்று கூறுவான்.
23:109
23:109 اِنَّهٗ كَانَ فَرِيْقٌ مِّنْ عِبَادِىْ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَـنَا وَارْحَمْنَا وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ‌‌ۖ‌ۚ‏
اِنَّهٗ நிச்சயமாக كَانَ இருந்தார்(கள்) فَرِيْقٌ ஒரு கூட்டம் مِّنْ عِبَادِىْ என் அடியார்களில் يَقُوْلُوْنَ கூறுபவர்களாக رَبَّنَاۤ எங்கள் இறைவா اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் فَاغْفِرْ ஆகவே மன்னித்து விடு لَـنَا எங்களை وَارْحَمْنَا எங்கள் மீது கருணை புரி وَاَنْتَ இன்னும் நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الرّٰحِمِيْنَ‌ۖ‌ۚ‏ கருணை புரிபவர்களில்
23:109. நிச்சயமாக என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் “எங்கள் இறைவா! நாங்கள் உன் மீது ஈமான் கொள்கிறோம்; நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது கிருபை செய்வாயாக! கிருபையாளர்களிலெல்லாம் நீ மிகவும் மேலானவன்” என்று பிரார்த்திப்பவர்களாக இருந்தனர்.
23:109. நிச்சயமாக நம் அடியார்களில் ஒரு வகுப்பார் இருந்தனர். அவர்கள் (என்னை நோக்கி) ‘‘ எங்கள் இறைவனே! நாங்கள் (உன்னை) நம்பிக்கை கொள்கிறோம். நீ எங்கள் குற்றங்களை மன்னித்து, எங்கள் மீது அருள் புரிவாயாக! அருள் புரிபவர்களிலெல்லாம் நீ மிக்க மேலானவன்'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
23:109. என் அடியார்களில் சிலர் “எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; எனவே, எங்களை நீ மன்னித்து எங்களுக்கு கருணை புரிவாயாக! கருணை புரிவோரிலெல்லாம் நீயே சிறந்த கருணையாளன்” என்று இறைஞ்சிக்கொண்டிருந்தார்கள்.
23:109. நிச்சயமாக, என்னுடைய அடியார்களில் ஒரு பிரிவினர் “எங்கள் இரட்சகனே! நாங்கள் (உன்னை) விசுவாசம் கொண்டோம்; ஆகவே, நீ எங்களுடைய குற்றங்களை மன்னித்து விடுவாயாக!; மேலும், எங்களுக்குக் கிருபை செய்வாயாக! கிருபை செய்வோரிலெல்லாம் நீயே மிக்க மேலானவன்” என்று பிரார்த்தித்துக் கூறுபவர்களாக இருந்தனர்.
23:110
23:110 فَاتَّخَذْتُمُوْهُمْ سِخْرِيًّا حَتّٰٓى اَنْسَوْكُمْ ذِكْرِىْ وَكُنْتُمْ مِّنْهُمْ تَضْحَكُوْنَ‏
فَاتَّخَذْتُمُوْ ஆனால் எடுத்துக்கொண்டீர்கள் هُمْ அவர்களை سِخْرِيًّا பரிகாசமாக حَتّٰٓى இறுதியாக اَنْسَوْ அவர்கள் மறக்க வைத்துவிட்டார்கள் كُمْ உங்களை ذِكْرِىْ என் நினைவை وَكُنْتُمْ நீங்கள் இருந்தீர்கள் مِّنْهُمْ அவர்களைப் பார்த்து تَضْحَكُوْنَ‏ சிரிக்கின்றீர்கள்
23:110. அப்போது நீங்கள் அவர்களைப் பரிகாசத்திற்கு உரியவர்களாக ஆக்கிக் கொண்டீர்கள், எது வரையெனின் என் நினைவே உங்களுக்கு மறக்கலாயிற்று; இன்னும் அவர்களைப் பற்றி நீங்கள் ஏளனமாக நகைத்துக் கொண்டும் இருந்தீர்கள்.
23:110. ஆனால் நீங்களோ என் நினைவை முற்றிலும் மறந்துவிட்டு அவர்களைப் பரிகசித்து அவர்களைப் பற்றிச் சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.
23:110. அப்போது நீங்கள் அவர்களை ஏளனம் செய்து கொண்டிருந்தீர்கள். எதுவரையெனில், அவர்கள் மீது நீங்கள் கொண்டிருக்கும் பகைமை, நான் ஒருவன் இருக்கின்றேன் என்பதையே உங்களை மறக்கச் செய்து விட்டது. மேலும், நீங்கள் அவர்களைக் குறித்து சிரித்துக் கொண்டிருந்தீர்கள்.
23:110. அப்போது என்னை நினைவு கூறுவதை விட்டும் உங்களை அவர்கள் மறக்கச் செய்யும் வரை, அவர்களை நீங்கள் பரிகாசமாக எடுத்துக் கொண்டீர்கள்; இன்னும், நீங்கள் அவர்கள் பற்றி சிரித்துக் கொண்டுமிருந்தீர்கள்.
23:111
23:111 اِنِّىْ جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوْۤا ۙ اَنَّهُمْ هُمُ الْفَآٮِٕزُوْنَ‏
اِنِّىْ நிச்சயமாக நான் جَزَيْتُهُمُ அவர்களுக்கு கூலியாகக் கொடுத்தேன் الْيَوْمَ இன்றைய தினம் بِمَا صَبَرُوْۤا ۙ அவர்கள் பொறுமையாக இருந்த காரணத்தால் اَنَّهُمْ هُمُ நிச்சயமாக அவர்கள்தான் الْفَآٮِٕزُوْنَ‏ வெற்றியாளர்கள்
23:111. நிச்சயமாக, அவர்கள் பொறுமையாய் இருந்ததற்காக அவர்களுக்கு நான் (அதற்குரிய) நற்கூலியைக் கொடுத்திருக்கின்றேன்; நிச்சயமாக அவர்களே வெற்றியாளர்கள்!”
23:111. (உங்கள் பரிகாசத்தை) அவர்கள் சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாக இன்றைய தினம் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நற்கூலி கொடுத்தோம். மெய்யாகவே அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்.''
23:111. அவர்கள் சகித்துக் கொண்டதற்காக இன்று நான் இந்தக் கூலியை அளிக்கின்றேன். அதாவது, அவர்களே வெற்றி பெற்றவர்கள்.
23:111. “(உங்கள் பரிகாசத்தைப் பற்றிக் கவலைகொள்ளாது) அவர்கள் பொறுமையாக இருந்ததன் காரணமாக, இன்றயைத்தினம் நிச்சயமாக நான் அவர்களுக்கு (நற்)கூலி கொடுத்துவிட்டேன், நிச்சயமாக அவர்கள்தாம் வெற்றி பெற்றோர்” (என்றும் அல்லாஹ் கூறுவான்.)
23:112
23:112 قٰلَ كَمْ لَبِثْتُمْ فِى الْاَرْضِ عَدَدَ سِنِيْنَ‏
قٰلَ கூறுவான் كَمْ எத்தனை لَبِثْتُمْ தங்கி இருந்தீர்கள் فِى الْاَرْضِ பூமியில் عَدَدَ பல سِنِيْنَ‏ ஆண்டுகள்
23:112. “ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?” என்று கேட்பான்.
23:112. ‘‘ நீங்கள் பூமியில் எத்தனை வருடங்கள் இருந்தீர்கள்?'' என அவன் கேட்பான்.
23:112. பிறகு, அல்லாஹ் (அவர்களிடம்) “நீங்கள் பூமியில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தீர்கள்?” என்று கேட்பான்.
23:112. “ஆண்டுகளின் எண்ணிக்கையால் நீங்கள் பூமியில் எவ்வளவு காலம் தங்கியிருந்தீர்கள்?” என்று அவன் கேட்பான்.
23:113
23:113 قَالُوْا لَبِثْنَا يَوْمًا اَوْ بَعْضَ يَوْمٍ فَسْـٴَــلِ الْعَآدِّيْنَ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் لَبِثْنَا தங்கினோம் يَوْمًا ஒரு நாள் اَوْ அல்லது بَعْضَ يَوْمٍ பகுதி நாள் فَسْـٴَــلِ நீ கேட்பாயாக الْعَآدِّيْنَ‏ எண்ணக்கூடியவர்களிடம்
23:113. “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் நாங்கள் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றிக்) கணிப்பவர்களிடம் நீ கேட்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள்.
23:113. அதற்கவர்கள் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றி) கணக்கு வைத்திருப்பவர்களை நீ கேட்பாயாக!'' எனக் கூறுவார்கள்.
23:113. அதற்கவர்கள், “ஒரு நாள் அல்லது ஒரு நாளின் கொஞ்சநேரம் அங்கு நாங்கள் தங்கியிருந்தோம்; கணக்கிடுவோரிடம் கேட்பாயாக!” என்று கூறுவார்கள்.
23:113. அ(தற்க)வர்கள், “ஒரு நாள், அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் தங்கியிருந்திருப்போம், (ஆகவே) கணக்கு வைத்திருப்பவர்களை நீ கேட்பாயாக!” எனக் கூறுவார்கள்.
23:114
23:114 قٰلَ اِنْ لَّبِثْـتُمْ اِلَّا قَلِيْلًا لَّوْ اَنَّكُمْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
قٰلَ அவன் கூறுவான் اِنْ لَّبِثْـتُمْ நீங்கள் தங்கவில்லை اِلَّا தவிர قَلِيْلًا குறைவாகவே لَّوْ اَنَّكُمْ வேண்டுமே كُنْتُمْ நீங்கள் இருந்தீர்கள் تَعْلَمُوْنَ‏ அறிகின்றீர்கள்
23:114. “ஒரு சொற்ப காலம் தவிர (பூமியில் அதிகம்) நீங்கள் தங்கவில்லை. நீங்கள் (இதை) அறிந்திருந்தால்!” என்று (இறைவன்) கூறுவான்.
23:114. அதற்கவன் ‘‘ ஒரு சொற்ப காலத்தைத் தவிர (பூமியில் அதிக காலம்) நீங்கள் தங்கவில்லை. இதை முன்னதாகவே நீங்கள் அறிந்திருக்க வேண்டாமா?'' என்று கூறுவான்.
23:114. அல்லாஹ் கூறுவான்: “நீங்கள் சிறிது காலமே தங்கியிருந்தீர்கள்! (இதனை அப்போது) நீங்கள் அறிந்திருந்தால் எத்தனை நன்றாய் இருந்திருக்கும்!
23:114. அ(தற்க)வன் “ஒரு சொற்ப காலத்தைத் தவிர நீங்கள் தங்கவில்லை, (இதை முன்னதாகவே) நீங்கள் அறிந்திருந்தால்” (இதைப் பற்றித் தெரிந்திருப்பீர்கள்) என்று கூறுவான்.
23:115
23:115 اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ‏
اَفَحَسِبْتُمْ எண்ணிக் கொண்டீர்களா اَنَّمَا خَلَقْنٰكُمْ நாம் உங்களைப் படைத்ததெல்லாம் عَبَثًا வீணாகத்தான் وَّاَنَّكُمْ நிச்சயமாக நீங்கள் اِلَيْنَا நம்மிடம் لَا تُرْجَعُوْنَ‏ திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள்
23:115. “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (என்றும் இறைவன் கேட்பான்.)
23:115. (‘‘என்னே!) நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?'' (என்று கேட்பான்.)
23:115. நாம் உங்களை வீணாகவே படைத்துள்ளோம் என்றும் நம்மிடம் நீங்கள் திரும்பிக் கொண்டு வரப்படவே மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா, என்ன?”
23:115. “உங்களை நாம் படைத்ததெல்லாம் வீணுக்காகத்தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் மீட்டப்படமாட்டீர்கள் என்றும் நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?” (என்று கூறுவான்.)
23:116
23:116 فَتَعٰلَى اللّٰهُ الْمَلِكُ الْحَـقُّ‌ ۚ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌ۚ رَبُّ الْعَرْشِ الْـكَرِيْمِ‏
فَتَعٰلَى எனவே மிக உயர்ந்தவன் اللّٰهُ அல்லாஹ் الْمَلِكُ அரசனாகிய الْحَـقُّ‌ ۚ உண்மையாளனாகிய لَاۤ அறவே இல்லை اِلٰهَ வணக்கத்திற்குரிய இறைவன் اِلَّا தவிர هُوَ‌ۚ அவனை رَبُّ அதிபதி الْعَرْشِ அர்ஷுடைய الْـكَرِيْمِ‏ கண்ணியமிக்க
23:116. ஆகவே, உண்மையில் அரசனான அல்லாஹ், மிக உயர்ந்தவன்; அவனைத் தவிர நாயனில்லை. கண்ணியமிக்க அர்ஷின் இறைவன் அவனே!
23:116. ஆகவே, மெய்யான அரசனாகிய அல்லாஹ் மிக்க உயர்ந்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் அறவே இல்லை. கண்ணியமிக்க அர்ஷுக்குச் சொந்தக்காரன் அவனே!
23:116. மிக உயர்ந்தவனாவான், உண்மையான அரசனாகிய அல்லாஹ்! அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, சங்கைமிகு அர்ஷின் உரிமையாளன்.
23:116. ஆகவே, உண்மையான அரசனாகிய அல்லாஹ் மிக்க உயர்ந்தவன், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை, (அவன்) கண்ணியத்திற்குரிய (அழகான தோற்றமுடைய) அர்ஷின் இரட்சகன்.
23:117
23:117 وَمَنْ يَّدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَۙ لَا بُرْهَانَ لَهٗ بِهٖۙ فَاِنَّمَا حِسَابُهٗ عِنْدَ رَبِّهٖؕ اِنَّهٗ لَا يُفْلِحُ الْـكٰفِرُوْنَ‏
وَمَنْ யார் يَّدْعُ அழைப்பாரோ مَعَ اللّٰهِ அல்லாஹ்வுடன் اِلٰهًا ஒரு கடவுளை اٰخَرَۙ வேறு لَا بُرْهَانَ அறவே ஆதாரம் இல்லாமல் இருக்க لَهٗ அதற்கு بِهٖۙ அவரிடம் فَاِنَّمَا حِسَابُهٗ அவருடைய விசாரணையெல்லாம் عِنْدَ رَبِّهٖؕ அவரது இறைவனிடம்தான் اِنَّهٗ நிச்சயமாக لَا يُفْلِحُ வெற்றி பெறமாட்டார்கள் الْـكٰفِرُوْنَ‏ நிராகரிப்பாளர்கள்
23:117. மேலும், எவன் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கிறானோ அவனுக்கு அதற்காக எவ்வித ஆதாரமும் இல்லை; அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடம்தான் இருக்கிறது; நிச்சயமாக காஃபிர்கள் வெற்றி அடைய மாட்டார்கள்.
23:117. (நபியே!) எவன் அல்லாஹ்வுடன் வேறு ஓர் இறைவனை அழைக்கிறானோ அவனிடத்தில் அதற்குரிய ஓர் அத்தாட்சியும் இல்லை. அவனுடைய (பாவக்) கணக்கு அவனுடைய இறைவனிடத்தில்தான் (தீர்க்கப்படும்). நிச்சயமாக (உண்மையை) நிராகரிப்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.
23:117. யாரேனும் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைத்தால் அது பற்றி அவனிடம் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவனுடைய கணக்கு அவனுடைய இறைவனிடமே உள்ளது! இத்தகைய நிராகரிப்பாளர்கள், ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.
23:117. மேலும் - (நபியே!) எவன் - அல்லாஹ்வுடன் வேறு நாயனை (வணக்கத்திற்குரியவன் என) அழைக்கிறானோ அவனிடத்தில் அதைப்பற்றி யாதொரு சான்றும் இல்லை. அவனுடைய கணக்கெல்லாம் அவனுடைய இரட்சகனிடத்தில்தான் உண்டு, நிச்சயமாக நிராகரிக்கக்கூடியவர்கள் வெற்றி பெறமாட்டார்கள்.
23:118
23:118 وَقُلْ رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَاَنْتَ خَيْرُ الرّٰحِمِيْنَ‏
وَقُلْ கூறுவீராக رَّبِّ என் இறைவா اغْفِرْ மன்னிப்பாயாக وَارْحَمْ இன்னும் கருணைபுரிவாயாக وَاَنْتَ நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الرّٰحِمِيْنَ‏ கருணை புரிபவர்களில்
23:118. இன்னும், “என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன்” என்று (நபியே!) நீர் பிரார்த்திப்பீராக!
23:118. (நபியே!) கூறுவீராக: என் இறைவனே! நீ (என்னை) மன்னித்துக் கருணை செய்வாயாக! கருணை செய்பவர்களிலெல்லாம் நீதான் மிக்க மேலானவன்.
23:118. (நபியே!) நீர் இறைஞ்சுவீராக: “என் இறைவனே! மன்னித்து கிருபை செய்வாயாக! கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகச் சிறந்தவன்!”
23:118. (நபியே!) நீர் கூறுவீராக “என் இரட்சகனே! நீ (என்னை) மன்னிப்பாயாக! கிருபையும் செய்வாயாக! கிருபை செய்பவர்களில் நீயே மிகச் சிறந்தவன்”.