3. ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)
மதனீ, வசனங்கள்: 200

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
3:1 الٓمّٓ ۚۙ‏
3:1. அலிஃப், லாம், மீம்.
3:1. அலிஃப்; லாம்; மீம்.
3:1. அலிஃப், லாம், மீம்.
3:1. அலிப் லாம் மீம்.
3:2 اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُؕ‏
3:2. அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.
3:2. அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் நிரந்தரமானவன்; என்றும் நிலையானவன்.
3:2. அல்லாஹ் நித்திய ஜீவன் (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை.
3:2. அல்லாஹ் (அவன் எத்தகையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய (வேறு) நாயன் இல்லை. (அவன்) நித்திய ஜீவன். (என்றும்) நிலையானவன்.
3:3 نَزَّلَ عَلَيْكَ الْـكِتٰبَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَاَنْزَلَ التَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَۙ‏
3:3. (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்; இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
3:3. (நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உங்கள் மீது இறக்கி வைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்த தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
3:3. (நபியே!) அவனே உம்மீது இந்த வேதத்தை இறக்கியுள்ளான். அதுவோ சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும்
3:3. (நபியே முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை-இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உண்மைப்படுத்தக்கூடியதாக (இது) இருக்க, உம்மீது அ(த்தகயை)வன்தான் இறக்கி வைத்தான், தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.
3:4 مِنْ قَبْلُ هُدًى لِّلنَّاسِ وَاَنْزَلَ الْفُرْقَانَ  ؕ‌ اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِ اللّٰهِ لَهُمْ عَذَابٌ شَدِيْدٌ  ‌ؕ وَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍؕ‏
3:4. இதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ; அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு; அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.
3:4. (அன்றி, நன்மை தீமைகளைப்) பிறித்தறிவிக்கக் கூடிய (மற்ற)வைகளையும் அருள் புரிந்திருக்கின்றான். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய (அவ்)வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக கடினமான வேதனையுண்டு. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும், (தீயவர்களைத்) தண்டிப்பவனுமாக இருக்கின்றான்.
3:4. இது தனக்கு முன்னர் அருளப்பட்ட வேத நூல்களை உண்மைப்படுத்துகிறது. மேலும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக இதற்கு முன் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் இறக்கியிருக்கின்றான். மெய்யையும், பொய்யையும் வேறுபடுத்திக் காட்டும் (உரைகல்லான) இந்த ஃபுர்கானையும் இறக்கியுள்ளான். (இனி) எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்க மறுக்கின்றார்களோ அவர்களுக்குத் திண்ணமாய்க் கடுமையான தண்டனை உண்டு. மேலும், அல்லாஹ் வல்லமை மிக்கவனும் தீய செயல்களுக்கு பழிவாங்குபவனும் ஆவான்.
3:4. முன்னர் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (வேதங்களை அவனே இறக்கிவைத்தான்.) மேலும் (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக் கூடிய புர்க்கா(ன் எனும் குர்ஆ)னையும் அவனே இறக்கிவைத்தான். நிச்சயமாக அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்-அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. இன்னும், (யாவரையும்) மிகைத்தவன், (தீயவர்களை) தண்டித்தலையுடையவன்.
3:5 اِنَّ اللّٰهَ لَا يَخْفٰى عَلَيْهِ شَىْءٌ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَآءِ ؕ‏
3:5. வானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.
3:5. நிச்சயமாக பூமியிலோ, வானத்திலோ (உள்ள) எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று.
3:5. திண்ணமாக வானத்திலும் பூமியிலும் உள்ள எப்பொருளும் அல்லாஹ்வுக்கு மறைந்ததன்று!
3:5. நிச்சயமாக அல்லாஹ்-அவனுக்கு பூமியில் மற்றும் வானத்தில் (உள்ள) எப்பொருளும் மறைந்ததன்று.
3:6 هُوَ الَّذِىْ يُصَوِّرُكُمْ فِى الْاَرْحَامِ كَيْفَ يَشَآءُ ‌ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
3:6. அவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை; அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.
3:6. அவன்தான் கர்ப்பப் பைகளில் தான் விரும்பியவாறு (ஆணாகவோ, பெண்ணாகவோ) உருவம் அமைக்கின்றான். (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.
3:6. அவனே (உங்கள் அன்னை யரின்) கருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான். மிக்க வல்லமையும் நுண்ணறிவும் கொண்ட அவனேயன்றி வேறு இறைவன் இல்லை.
3:6. அவன் எத்தகையவனென்றால், கர்ப்பப்பைகளில் தான் எவ்வாறு நாடுகிறானோ, அவ்வாறு உங்களை அவன் வடிவமைக்கிறான். அவனையன்றி (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன், (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
3:7 هُوَ الَّذِىْۤ اَنْزَلَ عَلَيْكَ الْكِتٰبَ مِنْهُ اٰيٰتٌ مُّحْكَمٰتٌ هُنَّ اُمُّ الْكِتٰبِ وَاُخَرُ مُتَشٰبِهٰتٌ‌ؕ فَاَمَّا الَّذِيْنَ فِىْ قُلُوْبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُوْنَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَآءَ الْفِتْنَةِ وَابْتِغَآءَ تَاْوِيْلِهٖۚؔ وَمَا يَعْلَمُ تَاْوِيْلَهٗۤ اِلَّا اللّٰهُ ؔ‌ۘ وَ الرّٰسِخُوْنَ فِى الْعِلْمِ يَقُوْلُوْنَ اٰمَنَّا بِهٖۙ كُلٌّ مِّنْ عِنْدِ رَبِّنَا ‌ۚ وَمَا يَذَّكَّرُ اِلَّاۤ اُولُوا الْاَلْبَابِ‏
3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
3:7. (நபியே!) அவனே இவ்வேதத்தையும் உங்கள்மீது இறக்கி வைத்தான். இதில் முற்றிலும் தெளிவான பொருள் கொண்ட வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மேலும், (உங்களுக்கு) முழுமையான பொருள் தெரிய முடியாத வசனங்களும் இருக்கின்றன. எவர்களுடைய உள்ளங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள் தெளிவற்ற பொருள்களுடைய வசனங்களையே தேடிப் பின்பற்றுவார்கள். குழப்பத்தை உண்டுபண்ணக் கருதியும் அதை (தங்களின் தவறான நோக்கத்திகேற்ப) மாற்றுவதற்காகவும் இவ்வாறு செய்கின்றனர். ஆயினும், இதன் உண்மைக் கருத்தை அல்லாஹ்வையன்றி ஒருவரும் அறிய மாட்டார்கள். உறுதிமிக்க கல்விமான்களோ (அதன் கருத்து தங்களுக்கு முழுமையாக விளங்காவிட்டாலும்) இதனையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (இவ்விருவகை வசனங்கள்) அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான் என்று கூறுவார்கள். அறிவுடையவர்களையன்றி மற்ற எவரும் (இவைகளைக் கொண்டு) நல்லுபதேசம் அடைய மாட்டார்கள்.
3:7. (நபியே!) அ(ந்த இறை)வனே இவ்வேத நூலை உம்மீது இறக்கியருளினான். இதில் இருவிதமான வசனங்கள் உள்ளன. ஒன்று: “முஹ்கமாத்”* எனும் வசனங்களாகும். அவைதாம் வேதத்தின் அடிப்படை. இரண்டாவது: “முதஷாபிஹாத்”• எனும் வசனங்களாகும். எவர்களுடைய இதயங்களில் கோளாறு உள்ளதோ அவர்கள் குழப்பம் செய்யும் நோக்கில் முதஷாபிஹான வசனங்களைத் தேடித்திரிந்து கொண்டும், அவற்றின் கருத்தைத் திரித்துக் கூற முயற்சி செய்து கொண்டுமிருப்பார்கள். எனினும், அவற்றின் உண்மைப் பொருளை அல்லாஹ்வை அன்றி எவரும் அறியார்! இதற்கு மாறாக, அறிவுத் திறன் மிக்கவர்கள், “இவற்றை நாங்கள் நம்புகின்றோம்; இவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்டவைதாம்” என்று கூறுகிறார்கள். மேலும் உண்மை யாதெனில், அறிவாளிகள் தாம் (எதிலும்) சரியான படிப்பினை பெறுகின்றார்கள்.
3:7. அவன் எத்தகையவனென்றால், இவ்வேதத்தை உம்மீது அவன் இறக்கி வைத்தான். இதில் தெளிவான கருத்துக்களுடைய வசனங்களும் இருக்கின்றன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை, பலபொருள்களைக் கொண்டவையாகும். ஆகவே, எவர்களுடைய இதயங்களில் சறுகுதல் இருக்கிறதோ அத்தகையோர் அதில் குழப்பத்தை உண்டு பண்ணக்கருதி அதில் பல பொருள்கள் கொண்டவைகளையே தேடிப் பின்பற்றுவார்கள். மேலும், இதன் உண்மைக்கருத்தை அல்லாஹ்வையன்றி எவரும் அறியமாட்டார்கள். கல்வியறிவில் நிலை பெற்றவர்களோ (அதன் கருத்து தங்களுக்குப் பூரணமாக விளங்காவிடினும்) இதனையும் நாங்கள் விசுவாசித்திருக்கிறோம். (இவ்விருவகை வசனங்கள்) ஒவ்வொன்றும் எங்கள் இரட்சகனிடமிருந்து உள்ளவைதாம்” என்று கூறுவார்கள். அறிவுடையோர்களையன்றி மற்றெவரும் (இவைகளைக் கொண்டு) நல்லுபதேசமடையமாட்டார்கள்.
3:8 رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً ‌ ۚ اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ‏
3:8. “எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.)
3:8. (அன்றி அவர்கள்) "எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேரான வழியை அறிவித்ததன் பின்னர் எங்களுடைய உள்ளங்கள் (அதில் இருந்து) தவறிவிடுமாறு செய்யாதே. உன் (அன்பான) அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளி!"
3:8. அவர்கள் இவ்வாறு அல்லாஹ்விடம் இறைஞ்சிய வண்ணம் இருக்கிறார்கள்: “எங்கள் இறைவனே! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்திடாதே! மேலும், எங்களுக்கு உன் அருளிலிருந்து கொடை வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையில் தாராளமாக வழங்குபவனாய் இருக்கின்றாய்.
3:8. (அறிவுடைய அவர்கள்) “எங்கள் இரட்சகனே! நீ எங்களுக்கு நேர்வழி காட்டிய பின்னர், எங்களுடைய இதயங்களை (அதிலிருந்து) சறுகிவிடுமாறு செய்து விடாதிருப்பாயாக! மேலும், உன் புறத்திலிருந்து அருளையும் எங்களுக்கு அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெரும் கொடையாளியாவாய் (என்றும்),
3:9 رَبَّنَاۤ اِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ‌ؕ اِنَّ اللّٰهَ لَا يُخْلِفُ الْمِيْعَادَ‏
3:9. “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான்” (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).
3:9. "எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ ஒரு நாளில் மனிதர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். அ(ந்நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் தவறுபவனல்ல" (என்று கூறுவார்கள்.)
3:9. எங்கள் இறைவனே! திண்ணமாக நீ எல்லா மனிதர்களையும் ஒருநாளில் ஒன்று திரட்டக்கூடியவனாய் இருக்கின்றாய்; அந்நாள் வருவதில் எத்தகைய ஐயமும் இல்லை. நிச்சயமாக நீ வாக்குறுதி மீறுபவன் அல்லன்.”
3:9. “எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நீ ஒரு நாளைக்காக மனிதர்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். அ(ந் நாள் வருவ)தில் சந்தேகமேயில்லை. (ஏனென்றால்,) நிச்சயமாக, அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறு செய்யமாட்டான்” (என்றும் பிரார்த்திப்பார்கள்).
3:10 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْئًا‌ ؕ وَاُولٰٓٮِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِۙ‏
3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கப்படமாட்டாது; இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.
3:10. நிச்சயமாக எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (அந்நாளில்) அவர்களுடைய பொருளும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி) லிருந்து எதையும் அறவே தவிர்த்து விடமுடியாது. இவர்கள்தான் (உண்மையாகவே) நரகத்தின் எரிகட்டையாக இருக்கின்றனர்.
3:10. நிச்சயமாக, இறைநிராகரிப்புப் போக்கை மேற்கொண்டவர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் அல்லாஹ்விடத்தில் சிறிதும் பலன் அளித்திட மாட்டா. அவர்கள் நரகின் எரிபொருளாய்த்தான் இருப்பார்கள்.
3:10. நிச்சயமாக (அந்நாளை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_(அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து யாதொன்றையும் அவர்களைவிட்டும் ஒரு போதும் தேவையறச் செய்து விடாது. இன்னும் இவர்கள்தாம் (உண்மையாகவே நரக) நெருப்பின் எரிபொருட்கள் ஆவர்.
3:11 كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَۙ وَالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕ كَذَّبُوْا بِاٰيٰتِنَا ‌ۚ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ‌ؕ وَاللّٰهُ شَدِيْدُ الْعِقَابِ‏
3:11. (இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது; அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்; ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.
3:11. (இவர்களின் நிலை) ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன் இருந்தவர்களின் நிலை போன்று உள்ளது. அவர்களும் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அல்லாஹ் அவர்களின் (இப்)பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்.
3:11. ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்களுக்கும், அவர்களுக்கு முன் (இறைவனுக்கு அடிபணியாமல்) வாழ்ந்தவர்களுக்கும் நேர்ந்த கதியைப் போல்தான் (இவர்களுக்கும்) நேரும்! அவர்கள் நம் வசனங்களைப் பொய்யென்று கூறினார்கள். எனவே அவர்களுடைய பாவங்களின் காரணத்தால் அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான். (உண்மையில்) அல்லாஹ் கடுமையாகத் தண்டிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.
3:11. (இவர்களின் நிலை செயல் யாவும்) ஃபிர் அவ்னைச் சார்ந்தவர்கள். இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் நிலை போன்று இருக்கின்றது. அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள்; ஆதலால், அல்லாஹ் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடித்துக் கொண்டான். இன்னும் அல்லாஹ் தண்டிப்பதில் மிகக்கடுமையானவன்.
3:12 قُلْ لِّلَّذِيْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰى جَهَنَّمَ‌ؕ وَبِئْسَ الْمِهَادُ‏
3:12. நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: “வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்; அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்.
3:12. எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களோ அவர்களுக்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றிகொள்ளப்படுவீர்கள். அன்றி (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடம்."
3:12. எனவே (நபியே!) உமது அழைப்பை ஏற்க மறுத்தவர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் வெகு விரைவில் கீழடக்கப்படுவீர்கள். மேலும், நீங்கள் நரகத்தை நோக்கி கூட்டமாக விரட்டிச் செல்லப்படுவீர்கள்; அதுவோ மிகக் கெட்ட தங்குமிடமாகும்!”
3:12. இவ்வேதத்தை நிராகரிக்கின்றார்களே, அத்தகையோருக்கு (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் (விசுவாசிகளால்) வெற்றி கொள்ளப்படுவீர்கள். (மறுமையில்) நரகத்தின் பாலும் நீங்கள் (எழுப்பி) ஒன்று திரட்டப்படுவீர்கள். இன்னும், தங்குமிடமான (அ)து மிகக்கெட்டதாகும்.
3:13 قَدْ كَانَ لَـكُمْ اٰيَةٌ فِىْ فِئَتَيْنِ الْتَقَتَا ؕ فِئَةٌ تُقَاتِلُ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَاُخْرٰى كَافِرَةٌ يَّرَوْنَهُمْ مِّثْلَيْهِمْ رَاْىَ الْعَيْنِ‌ؕ وَاللّٰهُ يُؤَيِّدُ بِنَصْرِهٖ مَنْ يَّشَآءُ  ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَعِبْرَةً لِّاُولِى الْاَبْصَارِ‏
3:13. (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.
3:13. (பத்ரு போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் மெய்யாகவே உங்களுக்கொரு அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகின்றான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர் களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது.
3:13. (பத்ரில்) மோதிக் கொண்ட இரு பிரிவினரிடம் திண்ணமாக உங்களுக்குப் படிப்பினை தரும் சான்று இருக்கிறது. ஒரு பிரிவினர் அல்லாஹ்வுடைய வழியில் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். மற்றொரு பிரிவினர் (அவனை) நிராகரிப்பவர்களாக இருந்தார்கள். நம்பிக்கையாளர்களைவிட நிராகரிப்பாளர்கள் இரு மடங்கு அதிகமாய் இருந்ததை பார்ப்பவர்கள் தம் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆயினும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களுக்கு உதவி செய்து வலுவூட்டுகின்றான் (என்பதைப் போரின் முடிவு நிரூபித்து விட்டது). திண்ணமாக அகப்பார்வை உடையோருக்கு இதில் மாபெரும் படிப்பினை (பொதிந்து) இருக்கிறது.
3:13. (பத்ரு யுத்த களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் திட்டமாக உங்களுக்கோர் அத்தாட்சி இருந்தது. (அதில் ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் சேனையுமாகும், மற்றொன்று (அல்லாஹ்வை) நிராகரிக்கக் கூடியது(மான சேனையு)மாகும். (நிராகரிப்போர்) தம்மை விட (முஸ்லீம்களான) அவர்களை இரு மடங்காகத் தங்கள் கண்களால் (நேரடியாகக்) கண்டனர். அல்லாஹ்வோ, தான் நாடியவர்களை தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; பார்வைகள் உடையோருக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கின்றது.
3:14 زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ‌ؕ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ‌ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ‏
3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
3:14. பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு.
3:14. பெண்கள், பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியினாலான பெருங் குவியல்கள், உயர்ரகக் குதிரைகள், கால்நடைகள் மற்றும் வேளாண்மை நிலங்கள் ஆகியவற்றின் மீது மோகம் கொள்வது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. ஆனால் இவை அனைத்தும் இவ்வுலகின் சில நாள் வாழ்க்கைக்குரிய சாதனங்களே ஆகும். திண்ணமாக அழகிய உறைவிடம் அல்லாஹ்விடம்தான் இருக்கின்றது.
3:14. பெண்கள், ஆண்மக்கள், பொன் வெள்ளிகளினால் சேர்த்து வைக்கப்பட்ட பெருங்குவியல்கள் அடையாளமிடப்பட்ட குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் முதலிய) கால் நடைகள், வேளாண்மை ஆகிய (மனதுக்கு) ஆசையூட்டப்பட்டவற்றை நேசிப்பது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவை(யாவும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே. அல்லாஹ்வோ-அவனிடத்தில் (நிலையான) அழகிய திரும்பிச் செல்லுமிடம் உண்டு.
3:15 قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِّنْ ذٰ لِكُمْ‌ؕ لِلَّذِيْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ‌ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِ‌ۚ‏
3:15. (நபியே!) நீர் கூறும்: “அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு; அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன; அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு; இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.
3:15. (நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கின்றவர்களுக்கு அவர்கள் இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. (இவைகளன்றி, மகத்தான) அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.
3:15. (நபியே!) நீர் கூறும்: “இவற்றைவிடச் சிறந்தது எது என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? யார் இறையச்சத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் சுவனங்கள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவர்கள் அங்கேயே நிலையாகத் தங்கி வாழ்வார்கள். தூய்மையான மனைவியரும் உடனிருப்பர். அல்லாஹ்வின் உவப்பையும் பெறுவார்கள்.” அல்லாஹ் தன்னுடைய அடிமைகளின் நடத்தையை ஆழ்ந்து கவனிப்பவனாக இருக்கின்றான்.
3:15. (நபியே! மனிதர்களிடம்) நீர் கூறுவீராக! (இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கின்றார்களே அத்தகையவர்களுக்கு அவர்களின் இரட்சகனிடத்தில் சுவனபதிகள் உண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக(த்தங்கி) இருப்பவர்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவியரும் (இவைகளன்றி, மகத்தான) அல்லாஹ்விடமிருந்து பொருத்தமும் உண்டு. மேலும் அல்லாஹ் தன் அடியார்களைப் பார்க்கிறவன்
3:16 اَلَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اِنَّنَاۤ اٰمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ‌ۚ‏
3:16. இத்தகையோர் (தம் இறைவனிடம்): “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள்.
3:16. இத்தகையவர்கள் (தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் உன்னை நம்பிக்கை கொள்கின்றோம். ஆதலால் நீ எங்களுடைய பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து, நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் எங்களை காப்பாற்றுவாயாக!" என்றும் (தொடர்ந்து) பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்.
3:16. இவர்கள் பிரார்த்தனை புரிந்தவண்ணம் இருப்பார்கள்: “எங்களுடைய இறைவனே! திண்ணமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களுடைய பாவங்களை நீ மன்னித்தருள்; இன்னும் நரக வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்!”
3:16. இத்தகையோர் “எங்கள் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் (உன்னை) விசுவாசிக்கின்றோம். ஆதலால், நீ எங்களுக்கு எங்களுடைய பாவங்களை மன்னித்து (அருள் புரிந்து நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் நீ எங்களை (ஈடேற்றம் பெற)க்காத்தருள்வாயாக” என்றும்(பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.
3:17 اَلصّٰــبِرِيْنَ وَالصّٰدِقِــيْنَ وَالْقٰنِتِــيْنَ وَالْمُنْفِقِيْنَ وَالْمُسْتَغْفِرِيْنَ بِالْاَسْحَارِ‏
3:17. (இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.
3:17. அன்றி (அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையே பேசுகின்றவர்களாகவும், (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தானம் செய்கின்றவர்களாகவும், "ஸஹர்" நேரங்களில் (வைகறைப் பொழுதில் அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோருகின்றவர்களாகவும் இருக்கின்றனர்.
3:17. இவர்கள் பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும், கீழ்ப்படிபவர்களாகவும் மற்றும் (இறைவழியில் தாராளமாகச்) செலவழிப்பவர்களாகவும் இருப்பதுடன் பின்னிரவு நேரங்களில் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பிற்காக இறைஞ்சுபவர்களாகவும் இருக்கிறார்கள்.
3:17. (இன்னும், அவர்கள்) பொறுமையாளர்களாகவும், உண்மையாளர்களாகவும் (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்டு நடப்பவர்களாகவும், தர்மம் செய்கின்றவர்களாகவும், “ஸஹர்” நேரங்களில் (அல்லாஹ்விடம் பாவ) மன்னிப்புக் கோருகின்றவர்களாகவும் இருப்பர்.
3:18 شَهِدَ اللّٰهُ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ وَالْمَلٰٓٮِٕكَةُ وَاُولُوا الْعِلْمِ قَآٮِٕمًا ۢ بِالْقِسْطِ‌ؕ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُؕ‏
3:18. அல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை; அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.
3:18. (நபியே! நீதவானாகிய) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான்: "நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை." அவ்வாறே மலக்குகளும் (வேதத்தை ஆராய்ந்த) கல்வியாளர்களும் சாட்சி கூறுகின்றனர்; (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடைய வனுமான அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.
3:18. வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்பதற்கு அல்லாஹ்வே சான்று பகர்கின்றான். மேலும், அந்த வல்லமைமிக்க நுண்ணறிவாளனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதற்கு வானவர்களும், அறிவுடையோரும் நேர்மையிலும் நீதியிலும் நிலைத்தவண்ணம் சான்று பகர்கின்றனர்.
3:18. (நபியே!) அல்லாஹ் சாட்சி கூறுகின்றான், “நிச்சயமாக அவன்-அவனைத்தவிர (வேறு) வணக்கத்திற்குரியவன் இல்லை” (அவ்வாறே) மலக்குகளும், (வேத ஞானம் பெற்ற) கல்விமான்களும் (சாட்சி கூறுகின்றனர்.) நீதத்தை நிலை நிறுத்தியவனாக (அல்லாஹ் சாட்சி கூறுகிறான்) “அவனைத் தவிர (வேறு) வணக்கத்திற்குரியவன் இல்லை, (அவனே யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.”
3:19 اِنَّ الدِّيْنَ عِنْدَ اللّٰهِ الْاِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ اِلَّا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ بَغْيًا ۢ بَيْنَهُمْ‌ؕ وَمَنْ يَّكْفُرْ بِاٰيٰتِ اللّٰهِ فَاِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏
3:19. நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.
3:19. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் ("இதுதான் உண்மையான வேதம்" என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, (இவ்வாறு) எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்.
3:19. திண்ணமாக, இஸ்லாம் மட்டுமே அல்லாஹ்விடம் (ஒப்புக் கொள்ளப்பட்ட) வாழ்க்கை நெறி (தீன்) ஆகும். வேதம் அருளப்பட்டவர்கள் இந்த இஸ்லாமிய வாழ்க்கை நெறியிலிருந்து பிறழ்ந்து பல்வேறு வழிகளை மேற்கொண்டது, அவர்களுக்கு சத்தியம் இன்னதென்று தெளிவுபடுத்தப்படாததனால் அல்ல. மாறாக, தம்மிடம் மெய்யறிவு வந்த பிறகுதான் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டார்கள்; தங்களுக்கிடையே அநீதி இழைப்பதற்காக! மேலும் யாரேனும் அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அவர்களிடம் கணக்கு வாங்குவதில் திண்ணமாக அல்லாஹ் விரைவானவனாய் இருக்கின்றான்.
3:19. நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும். மேலும், வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கிடையே உள்ள (பிடிவாதம்) பொறாமையால் (இதுதான் உண்மையான மார்க்கம் என்ற) அறிவு அவர்களுக்கு வந்ததன் பின்னரே தவிர மாறுபடவில்லை. இன்னும், எவர் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கின்றாரோ-(அவரைப் பற்றி) நிச்சயமாக, அல்லாஹ் கணக்கெடுப்பதில் துரிதமானவன்.
3:20 فَاِنْ حَآجُّوْكَ فَقُلْ اَسْلَمْتُ وَجْهِىَ لِلّٰهِ وَمَنِ اتَّبَعَنِ‌ؕ وَقُلْ لِّلَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ وَالْاُمِّيّٖنَ ءَاَسْلَمْتُمْ‌ؕ فَاِنْ اَسْلَمُوْا فَقَدِ اهْتَدَوْا ‌ۚ وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَيْكَ الْبَلٰغُ ‌ ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِالْعِبَادِ‏
3:20. (இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே!) நீர் கூறுவீராக: “நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)” தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்: “நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா?” என்று கேளும்; அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்; ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.
3:20. (நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உங்களுடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர் களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி "நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கின்றீர்களா?" என்று கேளுங்கள். (அவ்வாறே) அவர்களும் தலை சாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அன்றி அவர்கள் புறக்கணித்துவிட்டால் (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள். நம்முடைய தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உங்கள் மீது கடமையாக இருக்கின்றது. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்கினவனாக இருக்கின்றான்.
3:20. (நபியே! இனி) அவர்கள் உம்மோடு தர்க்கம் புரிந்தால் அவர்களிடம், “நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வின் முன் அடிபணிந்து விட்டோம்” என்று கூறுவீராக! இன்னும் வேதம் அருளப்பட்டவர்களையும் வேதம் அருளப்படாதவர்களையும் நோக்கி, “நீங்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ்வதை ஏற்றுக்கொண்டீர்களா?” என்று கேளுங்கள். அவர்கள் ஏற்றுக்கொண்டால் திண்ணமாக நேர்வழி அடைந்தவர்களாவர். அவர்கள் புறக்கணித்தாலோ (இறைத்தூதை அவர்களிடம்) எடுத் துரைப்பது மட்டுமே உம்மீது கடமையாகும். அல்லாஹ் தன் அடிமைகளின் செயற்பாடுகளை நன்கு பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
3:20. எனவே, (நபியே! இதற்குப்)பின்னும் அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் அப்போது (அவர்களிடம்) நான் என் முகத்தைத்திருப்பி அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் பணிந்து விட்டேன். (அவ்வாறே) என்னைப் பின்பற்றியவர்களும் (பணிந்து விட்டனர்) என்று கூறுவீராக! மேலும், வேதமளிக்கப்பட்டவர்களிடமும், பாமரர்களிடமும் “நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்கு முற்றிலும் பணிந்துவிட்டீர்களா” என்று கேட்பீராக; (அவ்வாறே) அவர்கள் பணிந்து விட்டால், திட்டமாக அவர்கள் நேரான வழியை அடைந்துவிட்டார்கள். அன்றியும் அவர்கள் புறக்கணித்துவிட்டால்-அதற்காக நீர் கவலைப்படாதீர்). உம்மீதுள்ள கடமையெல்லாம் (நம்முடைய தூதை) எத்திவைப்பதுதான். மேலும், அல்லாஹ் தன், அடியார்களைப் பார்க்கிறவன்.
3:21 اِنَّ الَّذِيْنَ يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ النَّبِيّٖنَ بِغَيْرِ حَقٍّۙ وَّيَقْتُلُوْنَ الَّذِيْنَ يَاْمُرُوْنَ بِالْقِسْطِ مِنَ النَّاسِۙ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَ لِيْمٍ‏
3:21. “நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும் மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
3:21. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, நியாயமின்றி இறைத்தூதர்களையும், நீதத்தை ஏவுகின்ற (மற்ற) மனிதர்களையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீங்கள் நற்செய்தி கூறுங்கள்.
3:21. நிச்சயமாக யார் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும் நல்லொழுக்க அறிவுரைகளையும் ஏற்க மறுத்து, இறைத்தூதர்களை அநியாயமாகக் கொலை புரிகிறார்களோ, இன்னும் மனிதர்களில் நீதியைக் கைக்கொள்ளுமாறு ஏவியவர்களை கொலை செய்கின்றார்களோ, அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு எனும் “நற்செய்தி” சொல்வீராக!
3:21. நிச்சயமாக அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, உரிமையின்றி நபிமார்களையும் கொலை செய்து, மனிதர்களில் நீதத்தைக் கொண்டு ஏவுகின்றோர்களையும் கொலை செய்கிறார்களே அத்தகையோர்-அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயங்கூறுவீராக!
3:22 اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ حَبِطَتْ اَعْمَالُهُمْ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏
3:22. அவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்து விட்டன; இன்னும் அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர்.
3:22. இவர்கள் செய்த (நற்) செயல்கள் (அனைத்தும்) இம்மையிலும் மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி, முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) இவர்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.
3:22. இவர்களின் செயல்கள் இம்மை, மறுமை இரண்டிலும் வீணாகி விட்டன. மேலும் இவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.
3:22. அவர்கள் எத்தகையோரென்றால், அவர்களுடைய செயல்கள் (யாவும்) இம்மையிலும், மறுமையிலும் (எத்தகைய பலனுமின்றி முற்றிலும்) அழிந்துவிட்டன. (மறுமையில்) அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமில்லை.
3:23 اَلَمْ تَرَ اِلَى الَّذِيْنَ اُوْتُوْا نَصِيْبًا مِّنَ الْكِتٰبِ يُدْعَوْنَ اِلٰى كِتٰبِ اللّٰهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلّٰى فَرِيْقٌ مِّنْهُمْ وَهُمْ مُّعْرِضُوْنَ‏
3:23. வேதத்திலும் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.
3:23. (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீங்கள் கவனிக்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தைத் தீர்த்துவைக்க அவர்களிடமுள்ள) அல்லாஹ்வின் வேதத்தின் மூலமே தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் இதனைப் புறக்கணித்து விலகிக் கொண்டார்கள்.
3:23. வேதத்திலிருந்து சிறிதளவு அறிவு கொடுக்கப்பட்டோரின் நிலை என்னவென்று நீர் கவனிக்கவில்லையா? அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் (வாருங்கள் என) அவர்கள் அழைக்கப்படும் போது, அவர்களில் ஒரு பிரிவினர் அதனைப் புறக்கணித்துத் திரும்பிச் செல்கிறார்கள்.
3:23. (நபியே!) வேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்ட (யூதர்களாகிய இ)வர்களை நீர் (கவனித்துப்) பார்க்கவில்லையா? (அவர்களுக்குள் ஏற்பட்ட விவகாரத்தில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்க அல்லாஹ்வின் வேதத்தின்பால் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்களில் ஒரு பிரிவினர் (இதனைப் புறக்கணித்தவர்களாக திரும்பிச்செல்கின்றனர்.
3:24 ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَنْ تَمَسَّنَا النَّارُ اِلَّاۤ اَيَّامًا مَّعْدُوْدٰتٍ‌ وَغَرَّهُمْ فِىْ دِيْنِهِمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
3:24. இதற்குக் காரணம்: எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான்; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.
3:24. இதன் காரணம்: "சில நாள்களைத் தவிர நரகத்தின் நெருப்பு நிச்சயமாக எங்களைத் தீண்டாது" என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான். அன்றி, தங்கள் மார்க்க (விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறி வந்ததும் அவர்களையே ஏமாற்றிவிட்டது.
3:24. அவர்களின் இந்நடத்தைக்குக் காரணம், “சில குறிப்பிட்ட நாட்களைத் தவிர நரக நெருப்பு எங்களைத் திண்ணமாகத் தீண்டாது” என்று அவர்கள் கூறி வந்ததேயாகும். தாமே இயற்றிக் கொண்ட கோட்பாடுகள்தாம் அவர்களின் சமய விவகாரங்களில் அவர்களைப் பல தவறான கருத்துகளில் உழல வைத்திருக்கின்றன.
3:24. இது “எண்ணிக் கணக்கிடப்பட்ட சில நாட்களைத் தவிர, (நரகத்தின்) நெருப்பு நிச்சயமாக ஒருபோதும் எங்களைத் தீண்டாது” என்று அவர்கள் கூறிக்கொண்டிருந்த காரணத்தினாலாகும். தங்கள் மார்க்க (விஷயத்தில், அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து (கூறி) வந்ததும் அவர்களை ஏமாற்றிவிட்டது.
3:25 فَكَيْفَ اِذَا جَمَعْنٰهُمْ لِيَوْمٍ لَّا رَيْبَ فِيْهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
3:25. சந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும்? அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
3:25. (நபியே!) சந்தேகமற்ற ஒரு (விசாரணை) நாளில் நாம் அவர்களை ஒன்று சேர்த்து (அவர்களுடைய) ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அதன் செயலுக்குத் தக்க பலன் முழுமையாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எவ்வாறு இருக்கும்? அவர்கள் (தங்கள் பிரதிபலனை அடைவதில்) சிறிதும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
3:25. ஆனால் ஐயமின்றி வரவிருக்கின்ற ஒருநாளில் நாம் அவர்களை ஒன்று திரட்டும்போது அவர்களின் நிலை என்னவாகும்? அந்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் சம்பாதித்ததற்குரிய கூலி முழுமையாய் வழங்கப்படும். மேலும் யார் மீதும் அநீதி இழைக்கப்படமாட்டாது.
3:25. (நபியே!) எது நடந்தேறுமென்ப)தில் சந்தேகமில்லையோ, அந்நாளைக்காக நாம் அவர்களை ஒன்று சேர்த்து ஒவ்வோர் ஆத்மாவும் அது சம்பாதித்தவற்றை (அதன் பலனை)ப்பூரணமாக அளிக்கப்பட்டால் (அவர்களின் நிலைமை) எவ்வாறிருக்கும்? அவர்களும் (தங்கள் பிரதிபலனை அடைவதில் சிறிதும்) அநியாயம் செய்யப்படமாட்டார்கள்.
3:26 قُلِ اللّٰهُمَّ مٰلِكَ الْمُلْكِ تُؤْتِى الْمُلْكَ مَنْ تَشَآءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَآءُ وَتُعِزُّ مَنْ تَشَآءُ وَتُذِلُّ مَنْ تَشَآءُ‌ ؕ بِيَدِكَ الْخَيْرُ‌ؕ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
3:26. (நபியே! பிரார்த்தித்து) நீங்கள் கூறுங்கள்: "எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர் களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப் படுத்துகின்றாய். நீ விரும்பியவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.
3:26. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரம் அனைத்திற்கும் அதிபதியே! நீ நாடுகின்றவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடுகின்றவர்களுக்குக் கண்ணியத்தை வழங்குகின்றாய். மேலும், நீ நாடுகின்றவர்களை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. திண்ணமாக, நீ ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவன்.
3:26. (நபியே!) பிரார்த்தித்து) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே (இம்மை மறுமையின் சகல) ஆட்சிக்கும் அதிபதியே” நீ நாடியவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய், நீ நாடியவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தும் விடுகின்றாய். மேலும், நீ நாடியவரை கண்ணியப்படுத்துகின்றாய், இன்னும் நீ நாடியவரை இழிவு படுத்துகின்றாய் நன்மை(யாவும்) உன் கைவசமே (இருக்கின்றது). நிச்சயமாக, நீ ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
3:27 تُوْلِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَتُوْلِجُ النَّهَارَ فِى الَّيْلِ‌ وَتُخْرِجُ الْحَـىَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَـىِّ‌ وَتَرْزُقُ مَنْ تَشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏
3:27. (நாயனே!) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்; நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்; மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்; நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்; மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.
3:27. நீதான் இரவைப் பகலில் நுழைய வைக்கின்றாய். நீதான் பகலை இரவில் நுழைய வைக்கின்றாய். இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குவதும் நீயே! உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குவதும் நீயே! நீ விரும்பியவர்களுக்கு கணக்கின்றியே அளிக்கின்றாய்."
3:27. நீயே இரவைப் பகலில் கோக்கச் செய்கின்றாய்; மேலும் பகலை இரவிலும் கோக்கச் செய்கின்றாய்; இன்னும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளியாக்குகின்றாய். மேலும் நீ நாடுபவர்களுக்குக் கணக்கின்றி வழங்குகின்றாய்.”
3:27. “நீ இரவைப் பகலில் நுழையச் செய்கின்றாய், இன்னும் நீ பகலை இரவில் நுழையச் செய்கின்றாய், உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும் நீயே வெளியாக்குகின்றாய், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் நீயே வெளியாக்குகின்றாய், மேலும் நீ நாடியவர்களுக்குக் கணக்கின்றியே அளிக்கின்றாய்.”
3:28 لَا يَتَّخِذِ الْمُؤْمِنُوْنَ الْكٰفِرِيْنَ اَوْلِيَآءَ مِنْ دُوْنِ الْمُؤْمِنِيْنَ‌ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ فَلَيْسَ مِنَ اللّٰهِ فِىْ شَىْءٍ اِلَّاۤ اَنْ تَتَّقُوْا مِنْهُمْ تُقٰٮةً  ؕ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ‌ ؕوَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ‏
3:28. முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை; இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.
3:28. நம்பிக்கையாளர்கள் (தங்களைப் போன்ற) நம்பிக்கை யாளர்களை விடுத்து நிராகரிப்பவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்கன்றி எவரேனும் இவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். (நீங்கள்) அல்லாஹ்விடம் தான் (இறுதியாகச்) செல்ல வேண்டியதிருக்கின்றது.
3:28. இறைநம்பிக்கையாளர்கள், (தங்களைப் போன்ற) நம்பிக்கையாளர்களை விடுத்து நிராகரிப்போரை (ஒருபோதும் தம்) நேசர்களாய், ஆதரவாளர்களாய் ஆக்கிக்கொள்ள வேண்டாம். அவர்களுடைய கொடுமைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி! உங்களில் எவரேனும் அவ்வாறு நட்புகொண்டால், அவர்களுக்கு அல்லாஹ்வுடன் எத்தகைய தொடர்பும் இல்லை. மேலும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். இன்னும் அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது.
3:28. விசுவாசிகள் (தங்களைப்போன்ற) விவசுவாசிகளையன்றி, நிராகரிப்போரை(த் தங்களுக்கு)ப் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். அவர்களிலிருந்து (தங்களைக்) காப்பாற்றிக் கொள்வதை நீங்கள் பயந்தாலன்றி, எவரேனும் அவ்வாறு செய்தால் அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எத்தகைய சம்பந்தமுமில்லை; மேலும் அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான்; அல்லாஹ்விடமே மீளுதலும் இருக்கின்றது.
3:29 قُلْ اِنْ تُخْفُوْا مَا فِىْ صُدُوْرِكُمْ اَوْ تُبْدُوْهُ يَعْلَمْهُ اللّٰهُ‌ؕ وَيَعْلَمُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِؕ‌ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
3:29. (நபியே!) நீர் கூறும்: “உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்; இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்; அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.”
3:29. (நபியே!) நீங்கள் கூறுங்கள்: உங்கள் மனதிலுள்ளதை நீங்கள் மறைத்துக் கொண்டாலும் அல்லது அதை வெளிப்படுத்தினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான். (இது மட்டிலுமா?) வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அவன் அறிகின்றான். (அறிவது மட்டுமல்ல) அல்லாஹ் (இவை) அனைத்தின் மீதும் பேராற்றலுடையவனாகவும் இருக்கின்றான்.
3:29. நபியே! (மக்களை) எச்சரிப்பீராக: “உங்களின் நெஞ்சங்களில் இருப்பவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது அவற்றை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அவற்றை நன்கறிகின்றான்.” மேலும், வானங்கள் மற்றும் பூமியில் உள்ளவற்றை அவன் அறிகின்றான். அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
3:29. “உங்கள் நெஞ்சங்களில் இருப்பதை நீங்கள் மறைத்தாலும் அல்லது அதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதை அறிவான்; (என்றும்) வானங்களில் மற்றும், பூமியில் உள்ளவற்றை அவன் அறிவான்” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக! மேலும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
3:30 يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُّحْضَرًا ۖۚ ۛ وَّمَا عَمِلَتْ مِنْ سُوْٓءٍ ۚۛ  تَوَدُّ لَوْ اَنَّ بَيْنَهَا وَبَيْنَهٗۤ اَمَدًاۢ بَعِيْدًا ‌ؕ وَيُحَذِّرُكُمُ اللّٰهُ نَفْسَهٗ‌ؕ وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ‏
3:30. ஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன் முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்; அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்; இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.
3:30. ஒவ்வொரு ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். ஏனென்றால், அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிகக் கருணையுடையவனாக இருக்கின்றான்.
3:30. ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த நன்மைகளும், தான் செய்த தீமைகளும் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதைக் காணும் நாள் வந்தே தீரும். அப்போது, “அந்தோ! தனக்கும் அந்நாளுக்குமிடையே மிக தூரமான இடைவெளி இருந்திருக்கக் கூடாதா!” என மனிதன் ஆவலுறுவான். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். மேலும் அல்லாஹ் தன் அடிமைகள் மீது மிகவும் இரக்கமுள்ளவனாய் இருக்கின்றான்.
3:30. ஓவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்தவற்றையும், தீமையில் தான் செய்தவற்றையும் தன் முன் ஆஜராக்கப்பட்டதாகப் பெறும் (அந்)நாளில், அது தான் செய்தவைகளுக்கும் தனக்கும் மத்தியில் வெகுதூரம் இருந்திருக்க வேண்டுமே என விரும்பும். அன்றியும், அல்லாஹ் தன்னைப் பற்றி (அவனது தண்டனையை நினைவு கூருமாறு) உங்களை எச்சரிக்கை செய்கிறான். இன்னும், அல்லாஹ் (தன்) அடியார்கள் மீது மிக்க இரக்கமுடையவன்.
3:31 قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
3:31. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
3:31. (நபியே! மனிதர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்."
3:31. (நபியே! மக்களிடம்) நீர் கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாய் இருந்தால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுடைய பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் பெருங்கருணையுடையவனுமாவான்.”
3:31. (நபியே! மனிதர்களிடம்,) நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால், என்னை நீங்கள் பின்பற்றுங்கள்; (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான்; உங்கள் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்துவிடுவான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
3:32 قُلْ اَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ‌‌ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْكٰفِرِيْنَ‏
3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
3:32. (நபியே! மேலும்) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்படியுங்கள். அன்றி நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை".
3:32. (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்.” பிறகு அவர்கள் (உம்முடைய இந்த அழைப்பை) புறக்கணிப்பார்களாயின் திண்ணமாக அல்லாஹ் (தனக்கும் தன் தூதருக்கும் கீழ்ப்படிய) மறுப்பவர்களை நேசிக்க மாட்டான்.
3:32. (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடங்கள். பின்னர் அவர்கள் புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரை நேசிக்கமாட்டான்.
3:33 اِنَّ اللّٰهَ اصْطَفٰۤى اٰدَمَ وَنُوْحًا وَّاٰلَ اِبْرٰهِيْمَ وَاٰلَ عِمْرٰنَ عَلَى الْعٰلَمِيْنَۙ‏
3:33. ஆதமையும், நூஹையும், இப்ராஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.
3:33. நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், (அவருக்குப் பின்னர்) நூஹையும் (அவ்வாறே) இப்ராஹீமுடைய குடும்பத்தையும், இம்ரானுடைய குடும்பத்தையும் அகிலகத்தாரைவிட மேலாக தேர்ந்தெடுத்தான்.
3:33. திண்ணமாக அல்லாஹ், அகிலத்தார்களைக் காட்டிலும் (முன்னுரிமை வழங்கி தனது தூதுப் பணிக்காக) ஆதத்தையும், நூஹையும், இப்ராஹீமின் வழித்தோன்றல்களையும், இம்ரானின் வழித்தோன்றல்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
3:33. நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்ராஹீமுடைய குடும்பத்தினரையும், இம்ரானுடைய குடும்பத்தினரையும் அகிலத்தாரைவிட மேலாகத் தேர்ந்தெடுத்தான்.
3:34 ذُرِّيَّةًۢ بَعْضُهَا مِنْۢ بَعْضٍ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ‌ۚ‏
3:34. (அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
3:34. அவர்களில் ஒருவர் மற்றவருடைய சந்ததிதான். அல்லாஹ் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
3:34. இவர்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய வழித்தோன்றல்களாவர். அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும், நன்கறிபவனுமாய் இருக்கின்றான்.
3:34. அவற்றில் சில, சிலரிலுள்ள சந்ததிதான். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
3:35 اِذْ قَالَتِ امْرَاَتُ عِمْرٰنَ رَبِّ اِنِّىْ نَذَرْتُ لَـكَ مَا فِىْ بَطْنِىْ مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىْ ۚ اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ‌‏
3:35. இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதையும்-
3:35. இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) "என் இறைவனே! நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (பிரார்த்தனைகளை) செவியுறுபவனும், (மனதில் உள்ளவற்றை) நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறியபின்,
3:35. இம்ரானைச் சார்ந்த பெண் “என் இறைவனே! நான் எனது வயிற்றில் இருக்கும் குழந்தையை உனது திருப்பணிக்காக அர்ப்பணிக்க நேர்ச்சை செய்துள்ளேன். எனவே இதனை (காணிக்கையை) என்னிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக! திண்ணமாக நீ நன்கு செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று இறைஞ்சிக் கொண்டிருந்ததையும் அல்லாஹ் செவியுற்றவனாகவே இருந்தான்.
3:35. இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண்குழந்தை பெற விரும்பி இரட்சகனிடம்,) “என் இரட்சகனே! நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ளதை உனக்காக உரிமை விடப்பட்டதாக நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால் (அதனை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (பிரார்த்தனைகளைச்) செவியுறுகிறவன், (மனத்திலுள்ளவற்றை) நன்கறிகிறவன்” என்று) பிரார்த்தித்துக் கூறியதை (நினைவு கூர்வீராக!)
3:36 فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ اِنِّىْ وَضَعْتُهَاۤ اُنْثٰىؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا وَضَعَتْؕ وَ لَيْسَ الذَّكَرُ كَالْاُنْثٰى‌‌ۚ وَاِنِّىْ سَمَّيْتُهَا مَرْيَمَ وَاِنِّىْۤ اُعِيْذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطٰنِ الرَّجِيْمِ‏
3:36. (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
3:36. அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்" என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ் (தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு "மர்யம்" எனப் பெயரிட்டேன். அதனையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனை களி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கின்றேன்!" என்றார்.
3:36. பிறகு அவள் அதைப் (பெண் குழந்தையாகப்) பெற்றெடுத்தபோது கூறினாள்: “என் இறைவா! நான் அதைப் பெண் குழந்தையாய்ப் பெற்றுவிட்டேனே!” ஆயினும் அவள் எதைப் பெற்றெடுத்தாளோ அதைப் பற்றி அல்லாஹ் மிகவும் அறிந்தவன் “மேலும் ஆண் குழந்தை, பெண் குழந்தையைப் போலன்று; நான் அக்குழந்தைக்கு ‘மர்யம்’ எனப் பெயர் சூட்டியுள்ளேன். மேலும் நான் அக்குழந்தைக்காகவும் அதன் வருங்கால வழித்தோன்றலுக்காகவும் சபிக்கப்பட்ட ஷைத்தா(னின் தீங்கி)னை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.”
3:36. பின்னர், அதனை அவள் (தன் விருப்பத்திற்கு மாறாக ஒரு பெண்குழந்தையாகப்) பெற்றபோது, “என் இரட்சகனே! நிச்சயமாகவே நான் (என் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண்ணையே பெற்றுள்ளேன்” என்று கூறினாள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ்வே மிக்க அறிந்தவன். ஆயினும், ஆண் (இந்தப்) பெண்ணைப் போன்றதல்ல, (பிறகு இம்ரானின் மனைவி) “நிச்சயமாக நான் அதற்கு மர்யம் எனப் பெயரிட்டுள்ளேன். அதனையும் அதன் சந்ததியையும், வெருட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து உன்னிடம் நிச்சயமாக நான் காக்கத் தேடுகிறேன்!” என்றாள்.
3:37 فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُوْلٍ حَسَنٍ وَّاَنْۢبَتَهَا نَبَاتًا حَسَنًا ۙ وَّكَفَّلَهَا زَكَرِيَّا ‌ؕ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَۙ وَجَدَ عِنْدَهَا رِزْقًا ‌ۚ‌ قَالَ يٰمَرْيَمُ اَنّٰى لَـكِ هٰذَا ؕ‌ قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يَرْزُقُ مَنْ يَّشَآءُ بِغَيْرِ حِسَابٍ‏
3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்.
3:37. ஆகவே அவருடைய இறைவன் அதனை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதனை வளரச் செய்து அதனை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு "மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)" என்று கேட்பார். அதற்கவள் "இது அல்லாஹ் விடமிருந்துதான் (வருகின்றது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கின்றான்" என்று கூறுவாள்.
3:37. ஆகவே அவளுடைய இறைவன் அ(ந்தப் பெண் குழந்தை)தனை அன்போடு ஏற்றுக்கொண்டான். மேலும் அதைச் சிறப்புடன் வளர்த்தான். ஜகரிய்யாவை அக்குழந்தைக்குப் பாதுகாவலராகவும் ஆக்கினான். மர்யம் இருந்த மாடத்தினுள் ஜகரிய்யா செல்லும் போதெல்லாம், ஏதேனும் உணவுப் பொருள் அவளிடத்தில் இருப்பதைக் காண்பார். “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்தது?” எனக் கேட்பார். “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது. தான் நாடியவர்களுக்குத் திண்ணமாக அல்லாஹ் கணக்கின்றி வழங்குகின்றான்” என்று மர்யம் பதிலுரைப்பார்.
3:37. ஆகவே, அவளுடைய இரட்சகன் அவளை அழகான முறையில் அங்கீகரித்து (பரிசுத்தமாகவும்) அழகான வளர்ச்சியாகவும் அவளை வளரச்செய்தான். மேலும், அவளுக்கு (பாதுகாவலராக) ஜகரிய்யாவைப் பொறுப்பேற்கச் செய்தான். ஜகரிய்யா அவளிடம் மாடத்திற்குள் நுழையும்போதெல்லாம் அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப்பொருள் இருப்பதைக் கண்டு “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று கேட்டார் அ(தற்க)வள் “இது அல்லாஹ்விடமிருந்துதான் (வருகின்றது ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்” என்று கூறினாள்.
3:38 هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهٗ‌ ‌ۚ قَالَ رَبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً‌ ‌ ۚ اِنَّكَ سَمِيْعُ الدُّعَآءِ‏
3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”
3:38. (அப்பொழுது) ஜகரிய்யா, அவ்விடத்தில் (தனக்காகத்) தன் இறைவனிடம் பிரார்த்தித்து "என் இறைவனே! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை செவியேற்பவனாக இருக்கின்றாய்" என்று கூறினார்.
3:38. அங்கு இந்நிலையைக் கண்ட ஜகரிய்யா தம் இறைவனிடம் இறைஞ்சினார்: “என் இறைவனே! எனக்குத் தூய ஒரு வழித் தோன்றலை உனது ஆற்றலால் வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பிரார்த்தனையைச் செவியேற்பவன்!”
3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா, தன் இரட்சகனை (பிரார்த்தித்து) அழைத்தார். “என் இரட்சகனே! உன்பாலிருந்து எனக்கொரு பரிசுத்தமான சந்ததியை அளிப்பாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியுறுகிறவன்” என்று கூறினார்.
3:39 فَنَادَتْهُ الْمَلٰٓٮِٕكَةُ وَهُوَ قَآٮِٕمٌ يُّصَلِّىْ فِى الْمِحْرَابِۙ اَنَّ اللّٰهَ يُبَشِّرُكَ بِيَحْيٰى مُصَدِّقًۢا بِكَلِمَةٍ مِّنَ اللّٰهِ وَسَيِّدًا وَّحَصُوْرًا وَّنَبِيًّا مِّنَ الصّٰلِحِيْنَ‏
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.
3:39. ஆகவே அவர் மாடத்தில் ("மிஹ்ராப்") நின்று தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரை நோக்கி) மலக்குகள் சப்தமிட்டுக் கூறினார்கள்: (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ் "யஹ்யா" (என்ற ஒரு மக)வை உங்களுக்கு அளிப்பதாக நற்செய்தி கூறுகின்றான். அவர் அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை (முன்னறிக்கையை) உண்மைப்படுத்தி வைப்பார். (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண்கள்) இன்பத்தைத் துறந்தவராகவும், நபியாகவும், நல்லொழுக்கம் உடையவராகவும் இருப்பார்.
3:39. அதற்கு மறுமொழியாக அவர், மிஹ்ராபில் மாடத்தினுள் நின்று தொழுது கொண்டிருக்கும்போது, வானவர்கள் குரல் கொடுத்தார்கள்: “அல்லாஹ் உமக்கு யஹ்யா (என்ற மக)வைக் கொண்டு நிச்சயமாக நற்செய்தி சொல்கின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து வரப்போகும் ஒரு வாக்கினை, மெய்ப்படுத்தக் கூடியவராய் விளங்குவார். மேலும், அவரிடம் தலைமைத்துவம் மற்றும் மகத்துவத்தின் பண்புகள் காணப்படும். மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும் இருப்பார்; நபித்துவம் அருளப்பட்டவராகவும் இருப்பார். மேலும் ஒழுக்க சீலர்களில் ஒருவராகவும் திகழ்வார்.”
3:39. பின்னர் மாடத்தில் நின்று அவர் தொழுது கொண்டிருந்த சமயத்தில் (அவரிடம்) மலக்குகள், (ஜகரிய்யாவே!) நிச்சயமாக அல்லாஹ், யஹ்யா (என்ற ஒரு மக)வை உமக்கு (அளிப்பதாக) நன்மாராயங் கூறுகின்றான். அவர்(தகப்பனின்றி) அல்லாஹ்விடமிருந்து(ள்ள) ஒரு வார்த்தையை(க் கொண்டு உண்டாகக் கூடிய ஈஸா நபியை_முன்னறிக்கையாக) உண்மைப் படுத்தக் கூடியவராகவும், (மனிதர்களுக்குத்) தலைவராகவும், (பெண் இன்பத்தைத்)துறந்தவராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” என்று (கூறி) அவரை சப்தமிட்டு அழைத்தனர்.
3:40 قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ غُلٰمٌ وَّقَدْ بَلَغَنِىَ الْكِبَرُ وَامْرَاَتِىْ عَاقِرٌ‌ؕ قَالَ كَذٰلِكَ اللّٰهُ يَفْعَلُ مَا يَشَآءُ‏
3:40. அவர் கூறினார்: “என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;” அதற்கு (இறைவன்), “அவ்வாறே நடக்கும்; அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்” என்று கூறினான்.
3:40. (அதற்கு) ஜகரிய்யா (அல்லாஹ்வை நோக்கி) "என் இறைவனே! எனக்கு எவ்வாறு சந்ததி உண்டாகும். நிச்சயமாக நானோ முதுமையை அடைந்து விட்டேன். என் மனைவியோ மலடியாயிருக்கின்றாள்" என்று கூறினார். (அதற்கு இறைவன்) "இவ்வாறே (நடைபெறும்.) அல்லாஹ், தான் விரும்பியதை (அவசியம்) செய்(தே தீரு)வான்" என்று கூறினான்.
3:40. ஜகரிய்யா வினவினார்: “என் இறைவா! எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்? நானோ முதுமையடைந்து விட்டேன்; என் மனைவியோ மலடியாய் இருக்கின்றாள்.” அதற்கு இறைவன் “இவ்வாறே நடைபெறும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைச் செய்(தே தீரு)வான்” என்று பதிலளித்தான்.
3:40. (அதற்கு ஜகரிய்யாவாகிய) அவர் (அல்லாஹ்விடம்,) என் இரட்சகனே! எனக்கு எவ்வாறு மகன் உண்டாக முடியும்? நிச்சயமாக முதுமையும் என்னை அடைந்துவிட்டது. என் மனைவியோ மலடியாயிருக்கின்றாள்!” என்று கூறினார். “அவ்வாறே (நடைபெறும்), அல்லாஹ் தான் நாடியதை (அவசியம்) செய்(தே தீரு)வான் என்று (அல்லாஹ்வாகிய) அவன் கூறினான்.
3:41 قَالَ رَبِّ اجْعَلْ لِّىْۤ اٰيَةً ‌ؕ قَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَةَ اَيَّامٍ اِلَّا رَمْزًا ؕ‌ وَاذْكُرْ رَّبَّكَ كَثِيْرًا وَّسَبِّحْ بِالْعَشِىِّ وَالْاِبْكَارِ‏
3:41. “என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!” என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), “உமக்கு அறிகுறியாவது: மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!” என்று கூறினான்.
3:41. (அதற்கு) ஜகரிய்யா "என் இறைவனே! இதற்கு எனக்கொரு அத்தாட்சி அளிப்பாயாக" என்று கேட்டார். அதற்கு (இறைவன்) "உங்களுக்களிக்கப்படும் அத்தாட்சியாவது மூன்று நாள்கள் வரையில் ஜாடையாகவே தவிர நீங்கள் மனிதர்களுடன் பேசமாட்டீர்கள். (அந்நாள்களில்) நீங்கள் உங்கள் இறைவனை அதிகமாக நினைத்துக் கொண்டும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதிசெய்து கொண்டும் இருங்கள்" என்று கூறினான்.
3:41. அதற்கு அவர், “என் இறைவனே! எனக்கு ஓர் அடையாளத்தை நிர்ணயம் செய்!” என்று (பணிந்து) கேட்டார். அதற்கு, “நீர் மூன்று நாட்கள் வரை சைகையினாலே அன்றி மக்களிடம் பேச மாட்டீர் (பேச இயலாது) என்பதே அடையாளமாகும். இக்கால கட்டத்தில் உம் இறைவனை அதிகமாய் நினைவுகூருவீராக! மேலும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதித்துக் கொண்டிருப்பீராக!” எனக் கூறினான்.
3:41. அ(தற்க)வர், “என் இரட்சகனே! (இதற்கு) எனக்கோர் அடையாளத்தை ஆக்குவாயாக!” என்று கேட்டார். (அதற்கு) அவன் “உமக்கு (அளிக்கப்படும்) அடையாளமாவது, மூன்று நாட்கள் வரையில் சைகை மூலமன்றி நீர் மனிதர்களுடன் பேசாமல் இருப்பதாகும். (அந்நாட்களில்) நீர் உமதிரட்சகனை அதிகமாக நினைவுகூர்வீராக! காலையிலும், மாலையிலும் (அவனைப்போற்றி) துதி செய்து கொண்டுமிருப்பீராக!” என்று கூறினான்.
3:42 وَاِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰٮكِ عَلٰى نِسَآءِ الْعٰلَمِيْنَ‏
3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),
3:42. (நபியே! மர்யமை நோக்கி) மலக்குகள் கூறிய சமயத்தில் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உங்களைத் தேர்ந்தெடுத் திருக்கின்றான். உங்களை பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கின்றான். உலகத்திலுள்ள பெண்கள் அனைவரையும்விட உங்களை மேன்மையாக்கியும் வைத்திருக்கின்றான், (என்றும்)
3:42. மேலும், அந்நேரம் வந்தபோது வானவர்கள் கூறினார்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்துத் தூய்மையாக்கினான். மேலும் அகிலத்துப் பெண்கள் அனைவரினும் (உனக்கு முதலிடம் அளித்து, தனது திருப்பணிக்காக) உன்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்.
3:42. இன்னும், மலக்குகள் (மர்யமிடம்) “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான், உன்னைப் பரிசுத்தமாகவும் ஆக்கியிருக்கின்றான், அகிலத்தாரிலுள்ள பெண்களை விட உன்னைத் தேர்ந்தெடுத்துமிருக்கின்றான்” என்று கூறிய சமயத்தில் (நடந்தவற்றை நபியே! நினைவு கூர்வீராக! அப்போது)
3:43 يٰمَرْيَمُ اقْنُتِىْ لِرَبِّكِ وَاسْجُدِىْ وَارْكَعِىْ مَعَ الرّٰكِعِيْنَ‏
3:43. “மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக” (என்றும்) கூறினர்.
3:43. (ஆகவே) மர்யமே! நீங்கள் உங்களுடைய இறைவனுக்கு வழிப்பட்டு குனிந்து (சிரம் பணிந்து) வணங்குபவர்களுடன் நீங்களும் குனிந்து (சிரம் பணிந்து) வணங்குங்கள்!" (என்று கூறினார்கள்.)
3:43. மர்யமே! உன் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டு நடப்பாயாக! மேலும் ஸஜ்தா செய்வாயாக! (அவனது திருமுன்) பணிபவர்களுடன் சேர்ந்து நீயும் பணிவாயாக!”
3:43. “மர்யமே! நீர் உன்னுடைய இரட்சகனுக்கு வழிபாடு செய்வீராக! சாஷ்டாங்கமும் செய்வீராக! குனிந்து (சிரம்பணிந்து) வணங்குபவர்களுடன் நீரும் குனிந்து (சிரம்பணிந்து) வணங்குவீராக!” (என்றும் கூறினார்கள்.)
3:44 ذٰ لِكَ مِنْ اَنْۢـبَآءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَ‌ؕ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يُلْقُوْنَ اَقْلَامَهُمْ اَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ يَخْتَصِمُوْنَ‏
3:44. (நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்; மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை; (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
3:44. (நபியே!) இவை (அனைத்தும் நீங்கள் அறியாத) மறைவான விஷயங்களாகும். இவைகளை நாம் உங்களுக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். அன்றி, மர்யமை (வளர்க்க) யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும் நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை.
3:44. (நபியே!) இவை யாவும் மறைவான செய்திகள். இவற்றை உமக்கு, வஹி மூலம் நாம் அறிவிக்கின்றோம். (வழிபாட்டில்லத்தின் பணியாளர்களான அவர்கள்) தங்களில் யார் மர்யத்திற்குப் பொறுப்பு ஏற்பவர் என்று முடிவு செய்ய, தத்தமது எழுதுகோல்களை எறிந்து கொண்டிருந்தபோது அவர்களிடையே நீர் இருக்கவில்லை. மேலும் அவர்கள் வாக்குவாதம் செய்துகொண்டிருந்த நேரத்திலும் அவர்களிடையே நீர் இருக்கவில்லை.
3:44. (நபியே!) இவை (யாவும் நீர் அறியாத) மறைவான செய்திகளில் உள்ளவையாகும். இவைகளை நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். இன்னும், மர்யமுக்கு (அவரை வளர்க்க) அவர்களில் எவர் பொறுப்பேற்றுக் கொள்வதென்று (முடிவுசெய்ய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும்) நீர் அவர்களிடத்தில் இருக்கவில்லை, (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்துக் கொண்டபோதும் அவர்களிடத்தில் நீர் இருக்கவில்லை.
3:45 اِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۖ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏
3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
3:45. (மேலும், மர்யமை நோக்கி) மலக்குகள் "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உங்களுக்கு (ஒரு குழந்தையை அளிக்க) நற்செய்தி கூறுகின்றான்" என்றும் "அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம்" என்பதாகும். அவர் இம்மை மறுமையில் மிக்க கம்பீரமானவராகவும், (இறைவனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்" என்றும் கூறினார்கள்.
3:45. வானவர்கள் இவ்வாறு கூறியதை நினைவுகூருங்கள்: “மர்யமே! திண்ணமாக அல்லாஹ் உனக்கு தனது கட்டளை பற்றி நற்செய்தி சொல்கின்றான். அதன் பெயர் மர்யத்தின் குமாரர் ஈஸா ‘அல் மஸீஹ்’ என்பதாகும். அவர் இம்மையிலும், மறுமையிலும் கண்ணியமிக்கவராகவும், அல்லாஹ்விடம் நெருங்கிய நல்லடியார்களில் ஒருவராகவும் திகழ்வார்.
3:45. (மேலும், மர்யமிடம்) மலக்குகள் “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக!என்ற) ஒரு வார்த்தையைக் கொண்டு உனக்கு (ஒரு மகவை அளிக்க) நன்மாராயங் கூறுகின்றான். அவரின் பெயர் மஸீஹ்_ மர்யமுடைய மகன் ‘ஈஸா’ என்பதாகும், அவர் இம்மையிலும், மறுமையிலும் மிக்க அந்தஸ்தையுடையவராகவும் (இரட்சகனுக்கு) மிக்க நெருங்கியவர்களில் ஒருவராகவும் இருப்பார்” என்று கூறியபோது.
3:46 وَيُكَلِّمُ النَّاسَ فِى الْمَهْدِ وَكَهْلًا وَّمِنَ الصّٰلِحِيْنَ‏
3:46. “மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.”
3:46. அன்றி "அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும் பொழுது (தன் தாயின் பரிசுத்தத் தன்மையைப் பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப் பற்றி) வாலிபத்திலும் மனிதர்களுடன் பேசுவார். தவிர நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராகவும் இருப்பார்" (என்றும் கூறினார்கள்.)
3:46. மேலும் அவர் தொட்டில் பருவத்திலும் பக்குவமான வயதை அடைந்த பின்பும் மக்களிடம் பேசுவார். மேலும் நல்லொழுக்கமுடையவர்களில் ஒருவராயும் திகழ்வார்.”
3:46. “அவர் தொட்டிலில் (குழந்தையாக) இருக்கும்பொழுது (தன் தாயின் பரிசுத்த தன்மையைப்பற்றியு)ம், (தன் நபித்துவத்தைப்பற்றி) பருவ வயதிலும் மனிதர்களுடன் பேசுவார். இன்னும், நல்லொழுக்கமுடையோரில் உள்ளவராகவுமிருப்பார்” (என்றும் கூறினார்கள்).
3:47 قَالَتْ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِىْ وَلَدٌ وَّلَمْ يَمْسَسْنِىْ بَشَرٌ ‌ؕ قَالَ كَذٰلِكِ اللّٰهُ يَخْلُقُ مَا يَشَآءُ‌ ؕ اِذَا قَضٰٓى اَمْرًا فَاِنَّمَا يَقُوْلُ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
3:47. (அச்சமயம் மர்யம்) கூறினார்: “என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?” (அதற்கு) அவன் கூறினான்: “அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் “ஆகுக” எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.”
3:47. (அதற்கு மர்யம், தன் இறைவனை நோக்கி) "என் இறைவனே! (மனிதர்களில்) ஒருவருமே என்னைத் தீண்டாதிருக்கும் போது, எனக்கு எவ்வாறு சந்ததி ஏற்பட்டுவிடும்?" என்று கூறினார். (அதற்கு) "இவ்வாறே, அல்லாஹ் தான் நாடியதை படைக்கின்றான். அவன் ஒரு பொருளை (படைக்க) நாடினால் அதனை "ஆகுக" என அவன் கூறியவுடனே அது ஆகிவிடும்" என்று கூறினான்.
3:47. (இதனைக் கேட்ட) மர்யம், “என் இறைவனே! என்னை எந்த மனிதனும் தீண்டாமலிருக்க, எனக்கு எப்படிக் குழந்தை பிறக்கும்?” என்று வினவினார். அல்லாஹ் கூறினான்: “அவ்வாறுதான் நடக்கும்! அல்லாஹ் தான் நாடுகின்றவற்றைப் படைக்கின்றான். அவன் எதையேனும் (செய்யத்) தீர்மானித்தால் ‘ஆகுக’ என்றுதான் அதற்குக் கட்டளை இடுவான். உடனே அது ஆகிவிடுகின்றது.” (பிறகு வானவர்கள் தமது பேச்சைத் தொடர்ந்தார்கள்:)
3:47. (அதற்கு மர்யம்) “என் இரட்சகனே! எந்த ஒரு மனிதருமே என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்? என்று கூறினாள். (அதற்கு) “அவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவெடுத்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் “ஆகுக” என்பதுதான், அது ஆகிவிடும்” என்று கூறினான்.
3:48 وَيُعَلِّمُهُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَالتَّوْرٰٮةَ وَالْاِنْجِيْلَ‌ۚ‏
3:48. இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
3:48. மேலும் அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும், தவ்றாத்தையும் இன்ஜீலையும் கற்பிப்பான்.
3:48. “இன்னும் அல்லாஹ் அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிப்பான். தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுத்தருவான்.
3:48. மேலும், அவன் அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்றாத்தையும், இன்ஜீலையும் கற்பிப்பான்.
3:49 وَرَسُوْلًا اِلٰى بَنِىْۤ اِسْرٰٓءِيْلَ ۙ اَنِّىْ قَدْ جِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ ۙۚ اَنِّىْۤ  اَخْلُقُ لَـكُمْ مِّنَ الطِّيْنِ كَهَیْــٴَــةِ الطَّيْرِ فَاَنْفُخُ فِيْهِ فَيَكُوْنُ طَيْرًاۢ بِاِذْنِ اللّٰهِ‌‌ۚ وَاُبْرِئُ الْاَكْمَهَ وَالْاَبْرَصَ وَاُحْىِ الْمَوْتٰى بِاِذْنِ اللّٰهِ‌ۚ وَ اُنَبِّئُكُمْ بِمَا تَاْكُلُوْنَ وَمَا تَدَّخِرُوْنَۙ فِىْ بُيُوْتِكُمْ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ‏
3:49. இஸ்ராயீலின் சந்ததியினருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்:) “நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்; நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்; அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது” (என்று கூறினார்).
3:49. இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் ஆக்குவான் (என்றும் இறைவன் கூறினான். பின்னர், ஈஸா பிறந்து தன் வாலிபத்தை அடைந்து இஸ்ராயீலின் சந்ததிகளிடம் சென்றபொழுது அவர்களை நோக்கிக் கூறியதாவது:) "நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக) உங்களுக்கு ஒரு அத்தாட்சி கொண்டு வந்திருக் கின்றேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையைப் போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (பறக்கும்) பறவை ஆகிவிடும். பிறவிக் குருடனையும் வெண் குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித் தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவைகளையும், உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவைகளையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு (திருப்தி அளிக்கக்கூடிய) ஒரு அத்தாட்சி இருக்கின்றது (என்றும்,)
3:49. மேலும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அவரைத் தன் தூதராகவும் நியமிப்பான்.” (இறைத்தூதர் எனும் அந்தஸ்தில் அவர் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களிடம் வந்தபோது கூறினார்:) “திண்ணமாக நான் உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்று கொண்டு வந்துள்ளேன். நான் உங்கள் முன் களிமண்ணிலிருந்து பறவையின் உருவத்தைப் போல் ஒன்றைச் செய்து அதில் ஊதுவேன்; அது அல்லாஹ்வின் கட்டளையினால் பறவையாகி விடும். மேலும் நான் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டமுடையவனையும் குணமாக்குவேன். இன்னும் இறந்தவர்களை அவனது அனுமதி கொண்டு உயிர்பெற்றெழச் செய்வேன். அதுமட்டுமன்று! நீங்கள் உண்பவற்றையும் உங்கள் இல்லங்களில் சேமித்து வைப்பவற்றையும் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின் இவற்றிலெல்லாம் உங்களுக்குப் போதிய சான்று உண்டு.
3:49. இஸ்ராயீலின் மக்களுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (அனுப்புவான் என்றும் அல்லாஹ் கூறினான். பின்னர் ஈஸா பிறந்து தன் வாலிபத்தையடைந்து, இஸ்ராயீலின் மக்களிடம் சென்றபொழுது அவர்களிடம் கூறியதாவது) “திட்டமாக நான் உங்கள் இரட்சகனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதன் என்பதற்குரிய!) ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையின் கோலத்தைப்போல் செய்து பின்னர் அதில் நான் ஊதுவேன், அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (உயிருள்ள) பறவையாகிவிடும், பிறவிக்குருடனையும், வெண்குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன்; மேலும், அல்லாஹ்வின் அனுமதிகொண்டு இறந்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன்; மேலும், நீங்கள் சேகரித்து வைத்திருப்பவைகளையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன்; மெய்யாகவே நீங்கள் விசுவாசங்கொள்பவர்களாக இருந்தால் நிச்சயமாக இதில் உங்களுக்கு(த் திருப்தி அளிக்கக்கூடிய) ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
3:50 وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ التَّوْرٰٮةِ وَلِاُحِلَّ لَـكُمْ بَعْضَ الَّذِىْ حُرِّمَ عَلَيْكُمْ‌وَجِئْتُكُمْ بِاٰيَةٍ مِّنْ رَّبِّكُمْ فَاتَّقُوْا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‏
3:50. “எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.”
3:50. என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்ட வைகளில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற்காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கின்றேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னை பின்பற்றுங்கள்.
3:50. மேலும் தற்பொழுது தவ்ராத்தின் அறிவுரைகளிலிருந்து எவை என் முன் உள்ளனவோ அவற்றை மெய்ப்படுத்திடவும், உங்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கும் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக்கி வைத்திடவும் நான் வந்துள்ளேன். நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்றினைக் கொண்டு வந்துள்ளேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
3:50. மேலும், “என் முன் இருக்கும் தவ்றாத்தையும் நான்) உண்மையாக்கி வைக்கிறவனாகவும், (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவைகளில் சிலவற்றை உங்களுக்கு நான் ஆகுமாக்கி வைப்பதற்காகவும், மேலும் உங்கள் இரட்சகனிடமிருந்து (இத்தகைய) ஓர் அத்தாட்சியைக்கொண்டு உங்களிடம் நான் வந்திருக்கின்றேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுககுப் பயந்து எனக்கும் கீழ்ப்படியுங்கள்” (என்றும்,)
3:51 اِنَّ اللّٰهَ رَبِّىْ وَرَبُّكُمْ فَاعْبُدُوْهُ‌ ؕ هٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ‏
3:51. “நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்.”
3:51. நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள். இதுதான் நேரான வழி" (என்றும் கூறினார்.)
3:51. உறுதியாக அல்லாஹ்தான் என்னுடைய அதிபதியும் உங்களுடைய அதிபதியுமாவான்! எனவே நீங்கள் அவனுக்கே பணிந்து வாழுங்கள்! இதுதான் நேரான வழியாகும்.”
3:51. “நிச்சயமாக அல்லாஹ்தான் என் இரட்சகனும், உங்கள் இரட்சகனும் ஆவான். ஆகவே அவனையே நீங்கள் வணங்குங்கள். இதுதான் நேரான வழி” (என்றும் கூறினார்).
3:52 فَلَمَّاۤ اَحَسَّ عِيْسٰى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ اَنْصَارِىْۤ اِلَى اللّٰهِ‌ؕ قَالَ الْحَـوَارِيُّوْنَ نَحْنُ اَنْصَارُ اللّٰهِ‌ۚ اٰمَنَّا بِاللّٰهِ‌ۚ وَاشْهَدْ بِاَنَّا مُسْلِمُوْنَ‏
3:52. அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?” என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: “நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்” எனக் கூறினர்.
3:52. அவர்களில் பலர் (தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த பொழுது (அவர்களை நோக்கி) "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?" எனக் கேட்டார். (அதற்கு) அவருடைய தோழர்கள் "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்களுக்கு) உதவி செய்கின்றோம். மெய்யாகவே! அல்லாஹ்வை நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். (ஆதலால்) நிச்சயமாக நாங்கள் முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டோம் என்பதாக நீங்கள் சாட்சி கூறுங்கள்" என்று கூறினார்கள்.
3:52. இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் நிராகரிக்க முனைந்து விட்டதை ஈஸா உணர்ந்து கொண்டபோது, “அல்லாஹ்வின் வழியில் எனக்கு உதவி புரிவோர் யார்?” என வினவினார். ‘ஹவாரிகள்’* பதிலளித்தார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாய் இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். திண்ணமாக நாங்கள் இறை ஆணைக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம் என்பதற்கு நீரே சாட்சியாக இரும்.
3:52. அவர்களிலிருந்து (ஒரு சிலர் தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்தபொழுது (அவர்களை நோக்கி,) “அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர்கள் யார்? எனக் கேட்டார். (அதற்கு அவருடைய) சீடர்கள் “நாங்கள் அல்லாஹ்வுடைய உதவியாளர்கள்; அல்லாஹ்வை நாங்கள் விசுவாசிக்கின்றோம். நிச்சயமாக நாங்கள் (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லீம்கள் என்பதாகவும் நீர் சாட்சி கூறுவீராக” என்று கூறினார்கள்.
3:53 رَبَّنَاۤ اٰمَنَّا بِمَاۤ اَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُوْلَ فَاكْتُبْنَا مَعَ الشّٰهِدِيْنَ‏
3:53. “எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)
3:53. (அன்றி) "எங்கள் இறைவனே! நீ அருட்செய்த (வேதத்)தை நாங்கள் நம்புகின்றோம். (உன்னுடைய) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கின்றோம். ஆதலால், (அவரை) உண்மைப் படுத்தியவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" (என்றும் அந்தத் தோழர்கள் பிரார்த்தித்தனர்.)
3:53. எங்கள் இறைவனே! நீ இறக்கியருளிய கட்டளைகளை நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்; தூதரையும் பின்பற்றுகின்றோம். எனவே நீ எங்கள் பெயர்களை சத்தியத்திற்குச் சான்று வழங்குவோருடன் சேர்த்து எழுதுவாயாக!”
3:53. “எங்கள் இரட்சகனே! நீ (இவருக்கு) இறக்கிவைத்த(வேதத்)தை நாங்கள் விசுவாசிக்கின்றோம். (உன்னுடைய) இத்தூதரையும் நாங்கள் பின்பற்றி நடக்கின்றோம். ஆதலால், (சத்தியத்திற்காக) சாட்சி கூறுபவர்களுடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக” (என்றும் சீடர்கள் பிரார்த்தித்தனர்.)
3:54 وَمَكَرُوْا وَمَكَرَاللّٰهُ ‌ؕ وَاللّٰهُ خَيْرُ الْمَاكِرِيْنَ‏
3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.
3:54. (ஈஸாவை நிராகரித்த) அவர்கள் (அவரைக் கொலை செய்ய) சதி செய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரைக் காப்பாற்றி தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்து விடும்படி) அல்லாஹ் (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். அல்லாஹ், சதி செய்பவர்களில் மிக மேலான(சதி செய்ப)வன்.
3:54. பிறகு இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள் (ஈஸாவிற்கெதிராக) சதித் திட்டங்கள் தீட்டினார்கள். (அதற்குப் பதிலாக) அல்லாஹ்வும் தகுந்த திட்டங்களைத் தீட்டினான். மேலும் இத்தகைய திட்டங்களைத் தீட்டுவதில் அல்லாஹ் யாவரினும் வல்லவன்.
3:54. மேலும், (ஈஸாவை நிராகரித்த) அவர்கள், (அவரைக் கொலை செய்யச்) சதிசெய்தார்கள். (எனினும், அல்லாஹ் அவரை இரட்சித்துக்கொண்டு, தங்களில் ஒருவனையே அவர்கள் கொலை செய்துவிடும்படி) அல்லாஹ்வும், (அவர்களுக்குச்) சதி செய்துவிட்டான். இன்னும் அல்லாஹ், சதிசெய்பவர்களின் சதியை முறியடித்துக் கூலி கொடுப்பவர்களில் மிகச்சிறந்தவன்.
3:55 اِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسٰۤى اِنِّىْ مُتَوَفِّيْكَ وَرَافِعُكَ اِلَىَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِيْنَ كَفَرُوْا وَجَاعِلُ الَّذِيْنَ اتَّبَعُوْكَ فَوْقَ الَّذِيْنَ كَفَرُوْۤا اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ ‌‌ۚ ثُمَّ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاَحْكُمُ بَيْنَكُمْ فِيْمَا كُنْتُمْ فِيْهِ تَخْتَلِفُوْنَ‏
3:55. “ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்” என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
3:55. (ஈஸாவை நோக்கி) அல்லாஹ் கூறியதை (அவர்களுக்கு) ஞாபகப்படுத்துங்கள்: "ஈஸாவே நிச்சயமாக நான் உங்களுக்கு (உங்களுடைய) ஆயுளை முழுமைபடுத்துவேன். உங்களை நம்மளவில் உயர்த்திக் கொள்வேன். நிராகரிப்பவர்களி(ன் அவதூறி)லிருந்து உங்களைப் பரிசுத்தமாக்கி வைப்பேன். உங்களைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பவர்கள் மீது இறுதிநாள் வரையில் மேலாக்கியும் வைப்பேன்" (என்று கூறி, ஈஸாவே! அந்நிராகரிப்பவர்களை நோக்கி, நான் கூறியதாக நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வாகிய) என்னிடமே நீங்கள் பின்னும் வருவீர்கள். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பவைகளைப் பற்றி (அந்நேரத்தில்) நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்" (என்றும் கூறினான்.)
3:55. (அத்தகையதோர் திட்டத்தை நிறைவேற்றவே) அவன் கூறினான்: “ஈஸாவே! நிச்சயமாக நான் இப்போது உம்மைத் திரும்ப அழைத்துக் கொள்வேன். மேலும் உம்மை என்னிடம் உயர்த்திக் கொள்வேன்; உம்மை நிராகரித்தவர்களிடமிருந்து (அதாவது அவர்களுடைய தொடர்பிலிருந்தும், அவர்களுடைய தூய்மையற்ற சூழ்நிலையில் நீர் வாழ்வதிலிருந்தும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; இறுதித் தீர்ப்புநாள்வரை உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்பவர்களைவிட உயர்த்தியே வைப்பேன். இறுதியில் என்னிடம் நீங்கள் அனைவரும் வந்தேயாக வேண்டும். அப்போது நீங்கள் கருத்து வேற்றுமை கொண்டிருந்தவற்றில் நான் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன்;
3:55. (ஈஸாவை நோக்கி) ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றிக் கொள்பவனாகவும், உம்மை என்னிடம் உயர்த்திக் கொள்பவனாகவும் இருக்கிறேன். மேலும், நிராகரிப்போரி(ன் அவதூறி)லிருந்து உம்மையும் பரிசுத்தப்படுத்துகிறவனாகவும், மேலும் உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்போரை விட மறுமை நாள்வரை மேலாக்கி வைப்பவனாகவும் இருக்கிறேன் – பின்னர், உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. அப்போது எதில் நீங்கள் மாறுபட்டவர்களாக இருந்தீர்களோ அதில் நான் உங்களுக்கிடையில் தீர்ப்பளிப்பேன்” என்று கூறியதை (நினைவு கூர்வீராக!)
3:56 فَاَمَّا الَّذِيْنَ كَفَرُوْا فَاُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيْدًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِيْنَ‏
3:56. எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்; அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
3:56. ஆகவே, (அவர்களில்) எவர்கள் (உங்களை) நிராகரிக் கின்றார்களோ அவர்களை நான் இம்மையிலும் மறுமையிலும் கடினமாக வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
3:56. ஆகவே அவர்களில் எவர் நிராகரிக்கும் போக்கினை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு இம்மை, மறுமை இரண்டிலும் கடுமையான தண்டனை அளிப்பேன். மேலும், அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இரார்.
3:56. ஆகவே, (உம்மை) நிராகரிக்கின்றார்களே அத்தகையோர்_அவர்களை நான் இம்மையிலும், மறுமையிலும் கடினமான வேதனையாக வேதனை செய்வேன். அன்றியும், அவர்களுக்கு உதவி செய்வோர் (எவரும்) இல்லை.
3:57 وَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيْهِمْ اُجُوْرَهُمْ‌ؕ وَ اللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ‏
3:57. ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
3:57. எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கின்றார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்குப் முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை.
3:57. ஆனால், இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களுக்குரிய கூலி முழுமையாக வழங்கப்படும். மேலும் (நன்கு அறிந்து கொள்ளுங்கள்:) அநீதி இழைப்போரை அல்லாஹ் ஒருபோதும் நேசிப்பதில்லை.
3:57. மேலும், விசுவாசித்து நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்- அவர்களின் (நற்)கூலியை அவர்களுக்குப் பூரணமாக (அல்லாஹ்) அளிப்பான். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான்.
3:58 ذٰ لِكَ نَـتْلُوْهُ عَلَيْكَ مِنَ الْاٰيٰتِ وَ الذِّكْرِ الْحَكِيْمِ‏
3:58. (நபியே!) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்; ஞானம் நிரம்பிய நற்செய்தியாகவும் இருக்கின்றன.
3:58. (நபியே!) நாம் உங்கள்மீது ஓதிய இவை (இறைவனுடைய) வசனங்களாகவும், ஞான(ம் நிறைந்த) உபதேசங்களாகவும் இருக்கின்றன.
3:58. (நபியே!) நாம் எடுத்துரைக்கும் இவை, சான்றுகளும் ஞானமும் நிறைந்த அறிவுரைகளாகும்.
3:58. (நபியே! மேற்கூறப்பட்ட) அது (என்னுடைய) வசனங்களிலிருந்தும், தீர்க்கமான அறிவுகள் நிறைந்த உபதேசத்திலிருந்தும் (உள்ளவையாகும்) அதை நாம் உம்மீது ஓதிக்காட்டுகிறோம்.
3:59 اِنَّ مَثَلَ عِيْسٰى عِنْدَ اللّٰهِ كَمَثَلِ اٰدَمَ‌ؕ خَلَقَهٗ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏
3:59. அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான்; அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.
3:59. நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம் ஆதமுடைய உதாரணத்தைப் போன்றதே! அவன் அவரை மண்ணால் உற்பத்திச் செய்து (மனிதனாக) "ஆகு" என்று கூறினான். உடனே (அவ்வாறு) ஆகிவிட்டது.
3:59. திண்ணமாக, அல்லாஹ்விடத்தில் ஈஸாவின் உவமை ஆதத்தைப் போன்றதாகும். அல்லாஹ் அவரை மண்ணினால் படைத்தான். பிறகு ‘ஆகுக’ என்று கட்டளையிட்டான். உடனே அவர் ஆகிவிட்டார்.
3:59. நிச்சயமாக, அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு உதாரணம்: ஆதமுடைய உதாரணத்தைப்போன்றதே! அவன், அவரை மண்ணால் படைத்துப் பின் அதற்கு (மனிதனாக!) “ஆகுக” என்று கூறினான், அவர்(அவ்வாறு) ஆகிவிட்டார்.
3:60 اَلْحَـقُّ مِنْ رَّبِّكَ فَلَا تَكُنْ مِّنَ الْمُمْتَرِيْنَ‏
3:60. (நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்; எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.
3:60. (நபியே! ஈஸாவைப் பற்றி) உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த இவ்விஷயங்கள்தான் உண்மையானவை. ஆகவே (இதைப்பற்றி) சந்தேகப்படுபவர்களில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம்.
3:60. இந்த உண்மைகள் உம்முடைய இறைவனிடமிருந்து எடுத்துரைக்கப்படுகின்றன. எனவே ஐயம் கொள்வோரில் நீரும் ஒருவராகிவிடாதீர்.
3:60. (நபியே! ஈஸாவைப் பற்றிய இந்த) உண்மை உமதிரட்சகனிடமிருந்துள்ளதாகும். ஆகவே, (இதைப் பற்றிச்) சந்தேகப்படுவோரில் உள்ளவராக நீர் ஆகிவிடவேண்டாம்.
3:61 فَمَنْ حَآجَّكَ فِيْهِ مِنْۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ اَبْنَآءَنَا وَاَبْنَآءَكُمْ وَنِسَآءَنَا وَنِسَآءَكُمْ وَاَنْفُسَنَا وَاَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَل لَّعْنَتَ اللّٰهِ عَلَى الْكٰذِبِيْنَ‏
3:61. (நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்: “வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) ”பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் பிரார்த்திப்போம்!” என நீர் கூறும்.
3:61. (நபியே!) இதைப்பற்றி உங்களுக்கு உண்மையான விவரம் கிடைத்த பின்னரும், உங்களிடம் எவரும் தர்க்கித்தால் (அவர்களுக்கு) நீங்கள் கூறுங்கள்: "வாருங்கள் எங்களுடைய பிள்ளைகளையும், உங்களுடைய பிள்ளைகளையும், எங்களுடைய பெண்களையும், உங்களுடைய பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைத்து (ஒன்று சேர்த்து) வைத்துக்கொண்டு (ஒவ்வொருவரும் நாம் கூறுவதுதான் உண்மையென) சத்தியம் செய்து (இதற்கு மாறாகக் கூறும்) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக! என பிரார்த்திப்போம்" (என்று கூறும்படி கட்டளையிட்டான். இவ்வாறு நபியவர்கள் அழைத்த சமயத்தில் ஒருவருமே இவ்வாறு சத்தியம் செய்ய முன்வரவில்லை.)
3:61. இந்த அறிவு உம்மிடம் வந்த பின்பு யாரேனும் உம்மிடம் இவ்விவகாரத்தில் தர்க்கம் செய்தால் (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “வாருங்கள்! உங்கள் மக்களையும் எங்கள் மக்களையும், உங்கள் பெண்களையும், எங்கள் பெண்களையும், நாங்களும் நீங்களும் அழைத்துக் கொண்டு ‘பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று பணிந்து இறைஞ்சுவோம்.”
3:61. (நபியே! இதுபற்றி) உண்மையான அறிவு உமக்கு வந்த பின் இதைப் பற்றி உம்மிடம் எவரும் தர்க்கித்தால் நீர் கூறுவீராக! “வாருங்கள்; நாம் எங்களுடைய புதல்வர்களையும், உங்களுடைய புதல்வர்களையும், எங்களுடைய பெண்களையும், உங்களுடைய பெண்களையும் எங்களையும், உங்களையும் அழைத்து, பிறகு நாம் பிரார்த்திப்போம். பொய்யர்கள்மீது அல்லாஹ்வின் சாபத்தை நாம் ஆக்குவோம்” (என்று கூறும்படிக்கு கட்டளையிட்டான்).
3:62 اِنَّ هٰذَا لَهُوَ الْقَصَصُ الْحَـقُّ ‌‌ۚ وَمَا مِنْ اِلٰهٍ اِلَّا اللّٰهُ‌ؕ وَاِنَّ اللّٰهَ لَهُوَ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
3:62. நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு; அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை; நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன்.
3:62. நிச்சயமாக இதுதான் உண்மை வரலாறு. வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் (இல்லவே) இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
3:62. இவை யாவும் முற்றிலும் சரியான நிகழ்ச்சிகளாகும். மேலும் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. உண்மை யாதெனில், திண்ணமாக அல்லாஹ்வுடைய வலிமையே அனைத்தையும்விட மேலோங்கியிருக்கிறது. மேலும், அவனுடைய நுண்ணறிவே இப்பேரண்டத்தின் அமைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
3:62. நிச்சயமாக இதுவேதான் உண்மையான சரித்திரம். அல்லாஹ்வைத்தவிர வேறு எந்த வணக்கத்துக்குரியவனுமில்லை. மேலும், நிச்சயமாக அல்லாஹ் – அவனே (யாவற்றையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
3:63 فَاِنْ تَوَلَّوْا فَاِنَّ اللّٰهَ عَلِيْمٌۢ بِالْمُفْسِدِيْنَ‏
3:63. அவர்கள் புறக்கணித்தால் - திடமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்வோரை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
3:63. (நபியே! இதற்குப் பின்னரும் உங்களை நம்பிக்கை கொள்ளாமல்) அவர்கள் புறக்கணிப்பார்களேயானால், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) விஷமிகளை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
3:63. எனவே அவர்கள் (மேற்கூறப்பட்ட நிபந்தனையின்படி தர்க்கம் புரிய) முன் வராமல் புறக்கணித்து விட்டால் (அவர்கள் குழப்ப வாதிகள் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும்.) குழப்ப வாதிகளை அல்லாஹ் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்.
3:63. (நபியே! இதற்குப் பின்னரும் உம்மை விசுவாசிக்காது) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால், நிச்சயமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்பவர்களை மிக்க அறிந்தவன்.
3:64 قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ تَعَالَوْا اِلٰى كَلِمَةٍ سَوَآءٍۢ بَيْنَـنَا وَبَيْنَكُمْ اَلَّا نَـعْبُدَ اِلَّا اللّٰهَ وَلَا نُشْرِكَ بِهٖ شَيْئًا وَّلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ‌ؕ فَاِنْ تَوَلَّوْا فَقُوْلُوا اشْهَدُوْا بِاَنَّا مُسْلِمُوْنَ‏
3:64. (நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
3:64. (நபியே! பின்னும் அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "வேதத்தை உடையவர்களே! நமக்கும் உங்களுக்கும் ஒரு சமத்துவமான விஷயத்தின் பக்கம் வருவீர்களாக! (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்க மாட்டோம். நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்க மாட்டோம். நம்மில் ஒருவரும் அல்லாஹ்வையன்றி எவரையும் இறைவனாக எடுத்துக் கொள்ள மாட்டோம்" (என்று கூறுங்கள். நம்பிக்கையாளர்களே! இதனையும்) அவர்கள் புறக்கணித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே) வழிப்பட்டவர்கள் என்று நீங்கள் சாட்சி கூறுங்கள்!" என்று நீங்கள் கூறிவிடுங்கள்.
3:64. (நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்: ‘அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் நாம் அடிபணிய மாட்டோம். அவனோடு எதனையும் எவரையும் நாம் இணைவைக்க மாட்டோம். மேலும் நம்மில் எவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் இறைவனாய் ஆக்கிக் கொள்ளக்கூடாது.’ அவர்கள் (இந்த அழைப்பினை) ஏற்க மறுப்பார்களேயானால், திண்ணமாக நாங்கள் முஸ்லிம்கள் (அதாவது அல்லாஹ்வுக்கு மட்டுமே கீழ்ப்படிகின்றவர்கள்) என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (தெளிவாகக்) கூறி விடுங்கள்.
3:64. (நபியே! பின்னும் அவர்களிடம்) நீர் கூறுவீராக: “வேதத்தையுடையவர்களே! எங்களுக்கும், இன்னும் உங்களுக்குமிடையே, நாம் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் வணங்ககூடாது; நாம் அவனுக்கு யாதொன்றையும் இணையாக்கவும் கூடாது; நம்மில் சிலர், சிலரை அல்லாஹ்வையன்றி தெய்வங்களாக எடுத்துக் கொள்ளவும் கூடாது என்ற சமமானதொரு வார்த்தையின் பால் வாருங்கள்; (இதை ஏற்காது) அவர்கள் புறக்கணித்தால், (அவர்களிடம்,) “நிச்சயமாக நாங்கள் (அவன் ஒருவனுக்கே முற்றிலும் கீழ்படிந்த) முஸ்லிம்கள் என நீங்கள் சாட்சியம் கூறுவீர்களாக!” என்று நீங்கள் கூறி(விட்டு) விடுங்கள்.
3:65 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تُحَآجُّوْنَ فِىْۤ اِبْرٰهِيْمَ وَمَاۤ اُنْزِلَتِ التَّوْرٰٮةُ وَالْاِنْجِيْلُ اِلَّا مِنْۢ بَعْدِهٖؕ اَفَلَا تَعْقِلُوْنَ‏
3:65. வேதத்தையுடையோரே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீணாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே; (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா?
3:65. வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்தவராகவோதான் இருந்தாரென்று) ஏன் வீணே தர்க்கம் செய்து கொள்கின்றீர்கள். (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், (கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகு காலத்திற்குப்) பின்னரே அருளப்பட்டன. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?
3:65. வேதம் அருளப்பட்டவர்களே! இப்ராஹீம் (உடைய தீனைப்) பற்றி ஏன் தர்க்கம் புரிகின்றீர்கள்? அவருக்குப் பின்னர் தாம் தவ்ராத்தும் இன்ஜீலும் இறக்கியருளப்பட்டன. (இதனைக் கூட) நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா?
3:65. வேதத்தையுடையவர்களே! இப்ராஹீமுடைய விஷயத்தில் (அவர் யூதராகவோ அல்லது கிறிஸ்துவராகவோ தான் இருந்தாரென்று) ஏன் வீணே தர்க்கம் செய்துகொள்கின்றீர்கள் ? (யூதர்களுடைய வேதமாகிய) தவ்றாத்தும், கிறிஸ்தவர்களுடைய வேதமாகிய) இன்ஜீலும் அவருக்கு (வெகுகாலத்திற்கு)ப் பின்னரேயன்றி இறக்கிவைக்கப்படவில்லை; (இவ்வளவு கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளமாட்டீர்களா?
3:66 هٰۤاَنْـتُمْ هٰٓؤُلَآءِ حٰجَجْتُمْ فِيْمَا لَـكُمْ بِهٖ عِلْمٌ فَلِمَ تُحَآجُّوْنَ فِيْمَا لَـيْسَ لَـكُمْ بِهٖ عِلْمٌ‌ؕ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏
3:66. உங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள்? அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.
3:66. நீங்கள் (ஏதும்) அறிந்த விஷயத்தில் வீணாக இதுவரையில் தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் ஒரு சிறிதும் அறியாத விஷயத்திலும் ஏன் தர்க்கிக்க முன் வந்துவிட்டீர்கள். அல்லாஹ் தான் (இவை அனைத்தையும்) நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
3:66. நீங்கள் எவற்றை அறிந்து வைத்திருக்கின்றீர்களோ, அவற்றில் நன்கு தர்க்கம் புரிந்துவிட்டீர்கள். (இப்போது) நீங்கள் முற்றிலும் அறியாதவற்றில் தர்க்கம் புரிய ஏன் முற்படுகின்றீர்கள்? அல்லாஹ் நன்கறிகின்றான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
3:66. அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள்தான் அவர்கள்_ உங்களுக்கு எதில் அறிவு இருக்கிறதோ அதில் நீங்கள் தர்க்கித்துக்கொண்டிருந்தீர்கள்; இப்போது எதில் உங்களுக்கு அறிவு இல்லையோ அதில் நீங்கள் ஏன் தர்க்கிக்கிறீர்கள்? மேலும், அல்லாஹ்தான் (இவை யாவற்றையும்) நன்கறிந்தவன்; நீங்களோ அறியமாட்டீர்கள்.
3:67 مَا كَانَ اِبْرٰهِيْمُ يَهُوْدِيًّا وَّلَا نَصْرَانِيًّا وَّ لٰكِنْ كَانَ حَنِيْفًا مُّسْلِمًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
3:67. இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை; ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்; அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.
3:67. இப்ராஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறிஸ்தவராகவும் இருக்கவில்லை. எனினும், இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட நேரான முஸ்லிமாகவே இருந்தார். அன்றி அவர் இணைவைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை.
3:67. இப்ராஹீம் யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் ஒருமனப்பட்ட முஸ்லிமாக இருந்தார். மேலும் அவர் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் எப்போதும் இருந்ததில்லை.
3:67. இப்ராஹீம் யூதராக இருக்கவில்லை; அல்லது கிறிஸ்துவராகவும் இல்லை. எனினும், அவர் ஹனீஃபாக (அசத்திய மார்கங்கள் அனைத்தையும் விட்டும் நீங்கி சத்திய மார்கத்தின்பால் சார்ந்தவராக), முஸ்லிமாக (அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்படிந்தவராக) இருந்தார்; மேலும், அவர் இணைவைப்போரில் (உள்ளவராகவும்) இருக்கவில்லை.
3:68 اِنَّ اَوْلَى النَّاسِ بِاِبْرٰهِيْمَ لَـلَّذِيْنَ اتَّبَعُوْهُ وَهٰذَا النَّبِىُّ وَالَّذِيْنَ اٰمَنُوْا ‌ؕ وَاللّٰهُ وَلِىُّ الْمُؤْمِنِيْنَ‏
3:68. நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
3:68. நிச்சயமாக இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை (நேசித்து) பாதுகாப்பவனாக இருக்கின்றான்.
3:68. இப்ராஹீமுடன் தமக்குத் தொடர்பு இருப்பதாக உரிமை கொண்டாடுவதற்கு மனிதர்களிலே மிகவும் அருகதையானவர்கள் (யாரெனில்) அவரைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும், (இப்போது) இந்த நபியும், இவரது தூதுத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுமே ஆவர். அல்லாஹ், நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உதவியாளனாகவும், ஆதரவாளனாகவும் இருக்கின்றான்.
3:68. நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிக்க நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (இவரை) விசுவாசங் கொண்டார்களே அவர்களும் ஆவர்; இன்னும் அல்லாஹ் விசுவாசிகளின் பாதுகாவலன்.
3:69 وَدَّتْ طَّآٮِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ لَوْ يُضِلُّوْنَكُمْؕ وَمَا يُضِلُّوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَ‏
3:69. வேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது; எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.
3:69. வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்திட விரும்புகின்றார்கள். அவர்கள் தங்களையேயன்றி (உங்களை) வழி கெடுத்திட முடியாது. (இதனை) அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை.
3:69. (இறைநம்பிக்கை கொண்டோரே!) வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் உங்களை நேரிய வழியிலிருந்து பிறழச் செய்திட வேண்டும் என விரும்புகிறார்கள். ஆயினும், அவர்கள் தங்களைத் தாங்களே வழிகேட்டிலாழ்த்திக் கொள்கின்றார்கள். ஆனால் இதனை அவர்கள் உணர்வதில்லை!
3:69. வேதத்தையுடையோர்களில் ஒரு கூட்டத்தார் உங்களை வழி கெடுத்துவிடவேண்டுமே என்று விரும்புகின்றார்கள்; அவர்கள் தங்களையே தவிர (உங்களை) வழி கெடுத்துவிடவும் முடியாது; (இதனை) அவர்கள் உணர்ந்துகொள்வதுமில்லை.
3:70 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَاَنْـتُمْ تَشْهَدُوْنَ‏
3:70. வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
3:70. வேதத்தையுடையவர்களே! நீங்கள் (பல அத்தாட்சிகளைக்) கண்டதன் பின்னரும், அல்லாஹ்வுடைய வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
3:70. வேதம் அருளப்பட்டவர்களே! நீங்கள் கண்கூடாகப் பார்த்துக்கொண்டே அல்லாஹ்வின் சான்றுகளை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
3:70. “வேதத்தையுடையோர்களே! (பல அத்தாட்சிகளைக்) கண்கூடாகக் கண்டவர்களாக நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?”
3:71 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَلْبِسُوْنَ الْحَـقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوْنَ الْحَـقَّ وَاَنْـتُمْ تَعْلَمُوْنَ‏
3:71. வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்?
3:71. வேதத்தையுடையவர்களே! உண்மையை பொய்யுடன் ஏன் கலக்கின்றீர்கள். நீங்கள் நன்கறிந்து கொண்டே உண்மையை ஏன் மறைக்கின்றீர்கள்.
3:71. வேதம் அருளப்பட்டவர்களே! சத்தியத்தை அசத்தியத்தோடு கலந்து ஏன் அதனைச் சந்தேகத்துக்குரியதாய் ஆக்குகின்றீர்கள்? நீங்கள் நன்கு அறிந்துகொண்டே சத்தியத்தை ஏன் மறைக்கின்றீர்கள்?
3:71. “வேதத்தையுடையோர்களே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் கலந்துவிடுகிறீர்கள்?” இன்னும், நீங்கள் (நன்கு) அறிந்து கொண்டே மெய்யை (ஏன்) மறைக்கின்றீர்கள்?
3:72 وَقَالَتْ طَّآٮِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اٰمِنُوْا بِالَّذِىْۤ اُنْزِلَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوْۤا اٰخِرَهٗ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‌‌ۚ‌ ۖ‏
3:72. வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்): “ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்; இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்” என்று கூறுகின்றனர்.
3:72. வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறுகின்றனர்: "நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தைக் காலையில் நம்பிக்கை கொண்டு மாலையில் (அதனை) நிராகரித்து விடுங்கள். (இதனால் நம்பிக்கை கொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் நம்பிக்கையிலிருந்து) விலகி விடக்கூடும்" (என்றும்)
3:72. வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் (தங்களுக்கிடையே) கூறிக் கொள்கிறார்கள்: “(இந்த நபியை) நம்பியவர்கள் மீது இறக்கியருளப்பட்டவற்றை முற்பகலில் நம்பி, பிற்பகலில் நிராகரித்து விடுங்கள்! (இப்படிச் செய்வதால்) நம்பிக்கையாளர்கள் (தம் நம்பிக்கையை விட்டு) திரும்பிவிடக்கூடும்.
3:72. வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கி) “நீங்கள் விசுவாசங் கொண்டவர்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதத்)தை பகலின் துவக்கத்தில் (காலையில்) விசுவாசித்து, அதன் முடிவில் (மாலையில் அதனை) நிராகரித்து விடுங்கள்; (இதனால் விசுவாசங் கொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் விசுவாசத்திலிருந்து) திரும்பிவிடக் கூடும்” எனவும் கூறுகின்றனர்.
3:73 وَلَا تُؤْمِنُوْۤا اِلَّا لِمَنْ تَبِعَ دِيْنَكُمْؕ قُلْ اِنَّ الْهُدٰى هُدَى اللّٰهِۙ اَنْ يُّؤْتٰٓى اَحَدٌ مِّثْلَ مَاۤ اُوْتِيْتُمْ اَوْ يُحَآجُّوْكُمْ عِنْدَ رَبِّكُمْ‌ؕ قُلْ اِنَّ الْفَضْلَ بِيَدِ اللّٰهِۚ يُؤْتِيْهِ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ ۚۙ‏
3:73. “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள்” (என்றும் கூறுகின்றனர். நபியே!) நீர் கூறும்: நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்; உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா?” (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது; அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.
3:73. "உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் நம்பாதீர்கள்" (என்றும் கூறுகின்றனர்). இதற்கு (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "உண்மையான நேர்வழி அல்லாஹ்வின் நேர்வழிதான்." (அன்றி அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி) "உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று (வேதம்) மற்றெவருக்கும் கொடுக்கப்படும் என்பதையோ அல்லது அந்த நம்பிக்கையாளர்கள் உங்கள் இறைவன் முன்பாக தர்க்கித்து உங்களை வெற்றிக் கொள்வார்கள் என்பதையோ நம்பாதீர்கள்!" (என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(வேதம் என்னும்) பெரும்பாக்கியம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கின்றது. அதனை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கின்றான். அல்லாஹ் மிக விசாலமானவனும், (மனிதர்களின் தகுதியை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
3:73. மேலும் உங்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர வேறு யாரையும் நம்பாதீர்கள்!” (நபியே!) நீர் கூறும்: “திண்ணமாக, அல்லாஹ்வுடைய வழிகாட்டுதல்தான் உண்மையான வழிகாட்டுதலாகும். மேலும் உங்களுக்குக் கிடைத்திருப்பது போலவே மற்றவர்களுக்கும் கிடைத்திருக்கிறது என்றால் அல்லது உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக சமர்ப்பிப்பதற்காக வலுவான வாதங்கள் மற்றவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன என்றால், அது இறைவன் வழங்கியதேயாகும்.” (நபியே! அவர்களிடம்) நீர் கூறும்: “திண்ணமாக, சிறப்பனைத்தும் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளன. தான் நாடுபவர்களுக்கே அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பரந்த நோக்குடையவனும் யாவற்றையும் நன்கு அறிபவனுமாவான்.
3:73. மேலும், “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்), நீங்கள் நம்பாதீர்கள்” (என்றும்) கூறுகின்றனர். இதற்கு நபியே! நீர் கூறுவீராக: நிச்சயமாக நேர்வழி(யானது) அல்லாஹ்வின் நேர்வழி(யே)யாகும். (அன்றி அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி,) நீங்கள் கொடுக்கப்பட்ட (வேதத்தைப் போன்று வேறொருவரும் கொடுக்கப்படுவார் என்பதையோ அல்லது அவர்கள் உங்கள் இரட்சகன் முன்பாக வாதிப்பார்கள் (அல்லது உங்களை வெற்றி கொள்வார்கள்) என்பதையோ (நம்பாதீர்கள்!”) என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: (பெரும் பாக்கியமெனும்) பேரருள் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கின்றது. அதனை அவன் நாடியவர்களுக்கே கொடுக்கின்றான். இன்னும், அல்லாஹ் விசாலமானவன், யாவற்றையும் நன்கறிகிறவன்.
3:74 يَّخْتَصُّ بِرَحْمَتِهٖ مَنْ يَّشَآءُ ‌ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِيْمِ‏
3:74. அவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு தான் நாடியோரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றான்; இன்னும் அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
3:74. அல்லாஹ் தான் விரும்பியவர்களை தன் அருளுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். அவன் மகத்தான கொடையாளி யாகவும் இருக்கின்றான்.
3:74. தான் நாடுபவர்களைத் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக்குகின்றான். மேலும் அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகும்.”
3:74. (அல்லாஹ்வாகிய) அவன், தான் நாடியவர்களைத் தன் அருளுக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறான். இன்னும், அல்லாஹ் மகத்தான பேரருளுடையவன்.
3:75 وَمِنْ اَهْلِ الْكِتٰبِ مَنْ اِنْ تَاْمَنْهُ بِقِنْطَارٍ يُّؤَدِّهٖۤ اِلَيْكَ‌ۚ وَمِنْهُمْ مَّنْ اِنْ تَاْمَنْهُ بِدِيْنَارٍ لَّا يُؤَدِّهٖۤ اِلَيْكَ اِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَآٮِٕمًا ‌ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ قَالُوْا لَيْسَ عَلَيْنَا فِىْ الْاُمِّيّٖنَ سَبِيْلٌۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَ هُمْ يَعْلَمُوْنَ‏
3:75. (நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்; அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள்; அதற்குக் காரணம், “பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை” என்று அவர்கள் கூறுவதுதான்; மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்.
3:75. (நபியே!) வேதத்தையுடையவர்களில் சிலர் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஒரு (பொற்) குவியலையே நம்பி ஒப்படைத்தபோதிலும் (யாதொரு குறைவுமின்றி) உங்களிடம் திரும்ப செலுத்தி விடுவார்கள். அவர்களில் வேறு சிலரும் இருக்கின்றனர். அவர்களிடம் நீங்கள் ஓர் அற்ப நாணயத்தையே நம்பி ஒப்படைத்தாலும் அதற்காக நீங்கள் (வம்பு செய்து) அவர்கள் (தலை) மேல் நிற்காத வரையில் அதனைத் திரும்பக் கொடுக்க மாட்டார்கள். இதன் காரணம்: (தங்களையல்லாத) "பாமரர் விஷயத்தில் (நாம் என்ன கொடுமை செய்தபோதிலும் அதற்காக) நம்மை குற்றம் பிடிக்க வழியில்லை" என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுவதுதான். ஆனால், அவர்கள் அறிந்து கொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்.
3:75. வேதம் அருளப்பட்டவர்களில் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி நீர் ஒரு செல்வக் குவியலை அவர்களிடம் ஒப்படைத்தாலும், உம்மிடம் அதனைத் திருப்பித் தந்துவிடுவார்கள். அவர்களில் இன்னும் சிலர் உள்ளனர்; அவர்களை நம்பி ஒரு காசைக் கொடுத்தாலும்கூட நீர் அதற்காக விடாப்பிடியாய் நின்றாலேயொழிய அதனை உம்மிடம் திருப்பித் தரமாட்டார்கள். இதற்கு (அவர்களின் இந்த நாணயமின்மைக்குக்) காரணம் அவர்கள் இவ்வாறு கூறிக் கொண்டிருந்ததுதான்: “உம்மிகள் (யூதர் அல்லாதவர்) விஷயத்தில் நாங்கள் அல்லாஹ்வினால் விசாரிக்கப்பட மாட்டோம்!” இவ்வாறு அல்லாஹ்வின் மீது அவர்கள் அப்பட்டமான பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள். ஆனால் (உண்மையில் அல்லாஹ் இதுபோன்ற எதையும் சொல்லவில்லை என்பதை) அவர்கள் நன்கு அறிந்தே இருக்கின்றார்கள்.
3:75. (நபியே!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள். நீர் அவரிடம் ஒரு (பொற்)குவியலையே நம்பி ஒப்படைத்த போதிலும், (யாதொரு குறைவுமின்றி) அதை உம்மிடம் திரும்பச் செலுத்தி விடுவார். இன்னும் அவர்களில் சிலர் இருக்கிறார்கள்; அவரிடம் ஒரு தங்க நாணயத்தை நம்பி ஒப்படைத்த போதிலும் நீர் அவரிடம் (வம்புசெய்து) தொடர்ந்து நின்றிருந்தாலே தவிர, அதை உமக்குத் திரும்பச் செலுத்த மாட்டார். இது பாமரர்கள் விஷயத்தில் (நாம் என்ன செய்தபோதிலும் அதற்காக) நம்மை(க் குற்றம்) பிடிக்க வழியில்லை” என்று அவர்கள் (பகிரங்கமாகக்) கூறுகின்ற காரணத்தினாலாகும். அவர்கள் அறிந்துகொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய்யையும் கூறுகின்றனர்.
3:76 بَلٰى مَنْ اَوْفٰى بِعَهْدِهٖ وَاتَّقٰى فَاِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَّقِيْنَ‏
3:76. அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.
3:76. (உண்மை) அவ்வாறன்று. எவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, (இறைவனுக்கு) பயந்து நடக்கின்றார்களோ அவர்கள்தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) இறை அச்சம் உடையவர்களை நேசிக்கின்றான்.
3:76. அவ்வாறல்ல, (அவர்கள் ஏன் விசாரிக்கப்படக் கூடாது?) எவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, தீவினையிலிருந்து விலகிக்கொள்கின்றாரோ அவரே, அல்லாஹ்வின் நேசத்திற்குரியவராவார். ஏனெனில், தீவினையிலிருந்து விலகிக் கொள்பவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:76. ஏன் இல்லை? எவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றி (அல்லாஹ்வுக்குப்) பயந்தும் நடக்கிறாரோ அப்போது (அவர் தான் குற்றம் பிடிக்கப்படமாட்டார்.) நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பயபக்தியுடையவர்களை நேசிக்கின்றான்.
3:77 اِنَّ الَّذِيْنَ يَشْتَرُوْنَ بِعَهْدِ اللّٰهِ وَاَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيْلًا اُولٰٓٮِٕكَ لَا خَلَاقَ لَهُمْ فِى الْاٰخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللّٰهُ وَلَا يَنْظُرُ اِلَيْهِمْ يَوْمَ الْقِيٰمَةِ وَلَا يُزَكِّيْهِمْ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
3:77. யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை; அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்; மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு.
3:77. எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தங்களுடைய சத்தியங்களையும் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக யாதொரு (நற்)பாக்கியமுமில்லை. அன்றி அல்லாஹ் மறுமையில் அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான்; (அன்புடன்) அவர்களை இறுதிநாளில் திரும்பிப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைப் புனிதப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
3:77. எவர்கள் அல்லாஹ்வுடன் செய்துகொண்ட உடன்படிக்கையையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது.
3:77. நிச்சயமாக, அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதிக்கும், தங்கள் சத்தியங்களுக்கும் பகரமாக சொற்பக் கிரயத்தை வாங்குகின்றார்களே அத்தகையோர்-அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக யாதொரு (நற்)பாக்கியமுமில்லை. அல்லாஹ் (மறுமை நாளில்) அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான், (அன்புடன்) அவர்களை மறுமை நாளில் பார்க்கவுமாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான் மேலும், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
3:78 وَاِنَّ مِنْهُمْ لَـفَرِيْقًا يَّلْوٗنَ اَلْسِنَتَهُمْ بِالْكِتٰبِ لِتَحْسَبُوْهُ مِنَ الْكِتٰبِ‌ وَمَا هُوَ مِنَ الْكِتٰبِۚ وَيَقُوْلُوْنَ هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللّٰهِ‌ۚ وَيَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ وَ هُمْ يَعْلَمُوْنَ‏
3:78. நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக; ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல; “அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல; இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.
3:78. நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். (அவர்கள்) வேதத்தை ஓதும்போது (அத்துடன் பல வாக்கியங் களைக் கலந்து, அதுவும்) வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக்கொள்வதற்காக தங்கள் நாவைக் கோணி உளறுகின்றனர். எனினும் அது வேதத்திலுள்ளது அல்ல. அன்றி "அது அல்லாஹ்விடமிருந்து வந்தது" என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் நன்கறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது இவ்வாறு பொய் கூறுகின்றனர்.
3:78. அவர்களில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள்; வேதத்தைப் படிக்கும்போது தம் நாவுகளை அவர்கள் சுழற்றுகின்றார்கள்; அவர்கள் படிக்கின்ற யாவும் வேதத்தில் உள்ளவையே என்று நீங்கள் எண்ணிக் கொள்ள வேண்டும் என்பதற்காக! உண்மை யாதெனில், அவர்கள் படிப்பவை வேதத்திலுள்ளவையல்ல. (நாங்கள் படிக்கின்ற) “இவை யாவும் இறைவனிட மிருந்து வந்தவை” என்று அவர்கள் கூறுகின்றார்கள்; ஆனால் அவை உண்மையில் இறைவனிடமிருந்து வந்தவையல்ல! அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள்.
3:78. நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர்-அவர்கள் வேதத்தைக்கொண்டு-(ஓதும்போது அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து) அதுவும் வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக் கொள்ளும் பொருட்டு தங்கள் நாவுகளைச் சாய்த்துக் கொள்கின்றனர். அது வேதத்தில் உள்ளதும் அல்ல, அன்றியும் அவர்கள் அது அல்லாஹ்விடமிருந்துள்ளது” என்றும் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்துள்ளதும் அல்ல, இன்னும் அவர்கள் நன்கறிந்தவர்களாக, அல்லாஹ்வின்மீது (இவ்வாறு) பொய்யைக் கூறுகின்றனர்.
3:79 مَا كَانَ لِبَشَرٍ اَنْ يُّؤْتِيَهُ اللّٰهُ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُوْلَ لِلنَّاسِ كُوْنُوْا عِبَادًا لِّىْ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰـكِنْ كُوْنُوْا رَبَّانِيّٖنَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُوْنَ الْكِتٰبَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُوْنَۙ‏
3:79. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் “அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்” என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது; ஆனால் அவர் (பிற மனிதரிடம்) “நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்” (என்று தான் சொல்லுவார்).
3:79. ஒரு மனிதருக்கு, வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி "அல்லாஹ்வை அன்றி என்னை வணங்குங்கள்" என்று கூறுவதற்கு இல்லை. ஆயினும் (மனிதர்களை நோக்கி) "நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதில் உள்ளவாறு) இறைவன் ஒருவனையே வணங்கும் மனிதர்களாக ஆகிவிடுங்கள்" என்றுதான் கூறுவார்.
3:79. ஒருவருக்கு அல்லாஹ் வேதத்தையும், இறைத்தூதுத் துவத்தையும், ஞானத்தையும் வழங்கியிருக்க அதனைப் பெற்ற பின்னர், “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து எனக்கு அடிமைகளாகி விடுங்கள்!” என்று மக்களிடம் கூறுவது அவருக்கு அனுமதிக்கப்பட்டதன்று. மாறாக, “நீங்கள் ஓதிக்கொண்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருக்கும் வேத அறிவுரைகளின் தேட்டப்படி ரப்பானீகளாய்த் திகழுங்கள்!” என்றே அவர் கூறுவார்.
3:79. எந்த ஒரு மனிதருக்கும், வேதத்தையும் ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் அவருக்குக் கொடுத்திருக்க, பின்னர் அவர், மனிதர்களிடம், “அல்லாஹ்வையன்றி எனக்கே அடியார்களாகி (என்னையே வணங்கி) விடுங்கள்” என்று கூற இயலாது. எனினும், (மனிதர்களிடம்) “நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்கு)க் கற்றுக்கொடுத்துக்கொண்டும், கற்றுக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதிலுள்ளவாறு) இரட்சக(ன் ஒருவனையே வணங்கி அவ)னைச் சார்ந்த அடியார்களாக ஆகிவிடுங்கள்” (என்றுதான் கூறுவார்கள்.)
3:80 وَلَا يَاْمُرَكُمْ اَنْ تَتَّخِذُوا الْمَلٰٓٮِٕكَةَ وَالنَّبِيّٖنَ اَرْبَابًا‌ ؕ اَيَاْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ اِذْ اَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏
3:80. மேலும் அவர், “மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா?.
3:80. தவிர "மலக்குகளையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்" என்றும் அவர் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார். என்னே! இறைவன் ஒருவனையே நீங்கள் அங்கீகரித்த பின்னர் (அவனை) நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா?
3:80. வானவர்களையோ இறைத்தூதர்களையோ உங்கள் கடவுளர்களாய் ஆக்கிக்கொள்ளும்படி உங்களுக்கு ஒருபோதும் அவர் கட்டளையிடமாட்டார். நீங்கள் முற்றிலும் இறைவனுக்குப் பணிந்துவிட்ட பிறகு (முஸ்லிம்களாய்த் திகழும்போது) நிராகரிக்கும் போக்கை மேற்கொள்ளும்படி ஒரு நபி உங்களுக்குக் கட்டளையிடுவாரா, என்ன?
3:80. மேலும், “மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய தெய்வங்களான) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும், உங்களுக்கு அவர் கட்டளையிட மாட்டார். (அல்லாஹ் ஒருவனுக்கே) நீங்கள் முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக (முஸ்லீம்களாக) ஆனதன் பின்னர் (அதனை) நிராகரிக்கும்படி உங்களுக்கு அவர் கட்டளையிடுவாரா?
3:81 وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ النَّبِيّٖنَ لَمَاۤ اٰتَيْتُكُمْ مِّنْ كِتٰبٍ وَّحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُوْلٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَـتُؤْمِنُنَّ بِهٖ وَلَـتَـنْصُرُنَّهٗ ‌ؕ قَالَ ءَاَقْرَرْتُمْ وَاَخَذْتُمْ عَلٰى ذٰ لِكُمْ اِصْرِىْ‌ؕ قَالُوْۤا اَقْرَرْنَا ‌ؕ قَالَ فَاشْهَدُوْا وَاَنَا مَعَكُمْ مِّنَ الشّٰهِدِيْنَ‏
3:81. (நினைவு கூறுங்கள்:) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, “நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக” (எனக் கூறினான்). “நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா?” என்றும் கேட்டான்; ”நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்” என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) “நீங்கள் சாட்சியாக இருங்கள்; நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று கூறினான்.
3:81. நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) "வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கின்றேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்ய வேண்டும்" (என்று கூறி) "இதனை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என்னுடைய இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "நாங்கள் (அதனை) அங்கீகரித்துக் கொண்டோம்" என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் "இதற்கு) நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கின்றேன்" என்று கூறினான்.
3:81. அல்லாஹ் நபிமார்களிடம் இவ்வாறு உறுதிமொழி வாங்கிய நேரத்தை நினைவுகூருங்கள்: “நான் (இப்போது) உங்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் வழங்கியிருக்கின்றேன். இனி ஏற்கனவே உங்களிடமுள்ள அறிவுரைகளை மெய்ப்படுத்தக்கூடிய வேறோர் இறைத்தூதர் உங்களிடம் வந்தால் கண்டிப்பாக அவர் மீது நம்பிக்கை கொண்டு நீங்கள் அவருக்கு உதவி புரிந்திடவும் வேண்டும்” (இவ்வாறு கூறிவிட்டு) அல்லாஹ் வினவினான்: “இதனை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா? மேலும், இதற்காக என்னுடன் நீங்கள் செய்துகொண்ட பெரும் ஒப்பந்தத்தை (அதனால் ஏற்படும் மாபெரும் பொறுப்புகளை) ஏற்றுக் கொள்கிறீர்களா?” அவர்கள், “(ஆம்!) நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்” என்றார்கள். அல்லாஹ் கூறினான்: “அப்படியானால் நீங்கள் (இதற்கு) சாட்சியாக இருங்கள். நானும் உங்களோடு சாட்சியாக இருக்கின்றேன்.
3:81. மேலும், அல்லாஹ் நபிமார்களிடம்: வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களிடம்,) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்து, (இதற்குப்) பின்னர், உங்களிடமுள்ளதை உண்மைப் படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால், அவரை நீங்கள் உண்மையாக விசுவாசித்து, நிச்சயமாக அவருக்கு உதவி செய்வீர்கள் (என்று கூறி, “இதனை) நீங்களும் உறுதிப்படுத்தினீர்களா?” இதன்மீது என்னுடைய வாக்குறுதியை எடுத்துக் கொண்டீர்களா?” என்று கேட்டதற்கு, அவர்கள் “நாங்கள் (அதனை) உறுதிப்படுத்துகிறோம்” என்றே கூறினார்கள். (“இதற்கு) நீங்கள் சாட்சியாக இருங்கள், நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் உள்ளவனாக இருக்கின்றேன்” என்று கூறினான்.
3:82 فَمَنْ تَوَلّٰى بَعْدَ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ‏
3:82. எனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.
3:82. இதற்குப் பின்னரும் எவரேனும் புறக்கணித்தால் நிச்சயமாக அவர்கள்தான் பெரும் பாவிகள் ஆவர்.
3:82. இதன் பிறகு (அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையிலிருந்து) யார் பின்வாங்கிச் செல்கின்றார்களோ அவர்களே பாவிகளாவர்.”
3:82. எனவே, இதற்குப் பின்னர் எவரேனும் புறக்கணித்தால், நிச்சயமாக அவர்கள்தாம் பாவிகள்.
3:83 اَفَغَيْرَ دِيْنِ اللّٰهِ يَبْغُوْنَ وَلَهٗۤ اَسْلَمَ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ طَوْعًا وَّكَرْهًا وَّاِلَيْهِ يُرْجَعُوْنَ‏
3:83. அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன; மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.
3:83. அல்லாஹ்வுடைய மார்க்கத்தையன்றி (வேறு மார்க்கத்தை)யா இவர்கள் விரும்புகின்றார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அனைத்துமே (அவை) விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவனுக்குக் கீழ்ப்படிந்தே நடக்கின்றன. அன்றி (அவையனைத்தும்) அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும்.
3:83. இனி அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும் தீனை (வாழ்க்கை நெறியை) விட்டு வேறொரு வாழ்க்கை நெறியையா இவர்கள் விரும்புகின்றார்கள்? உண்மை என்னவெனில், வானங்கள், பூமி ஆகியவற்றில் உள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே கீழ்ப்படிந்து (முஸ்லிமாக) இருக்கின்றன; மேலும் அவனிடமே அவர்கள் அனைவரும் திரும்ப வேண்டியவராய் இருக்கின்றனர்.
3:83. அல்லாஹ்வுடைய மார்க்கமல்லாத (வேறு மார்க்கத்)தையா அவர்கள் தேடுகின்றார்கள்? வானங்கள், மற்றும் பூமியில் உள்ளவை, (அவை) விரும்பினாலும், வெறுத்தாலும் அவனுக்கே முழுமையாகக் கீழ்ப்படிந்து (தங்களை ஒப்படைத்து) விட்டன. மேலும், அவனளவிலேயே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்.
3:84 قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَيْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِىَ مُوْسٰى وَ عِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ‏
3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
3:84. (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவை களையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவைகளையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம் (என்றும் கூறுங்கள்.)
3:84. நீர் கூறுவீராக: “நாங்கள் அல்லாஹ்வையும் எங்கள் மீது இறக்கியருளப்பட்டிருக்கும் அறிவுரைகளையும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் யஃகூபின் வழித்தோன்றல்கள் ஆகியோர் மீது இறக்கியருளப்பட்டவற்றையும் ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். இன்னும் மூஸா, ஈஸா மற்றுமுள்ள நபிமார்களுக்கு அவர்களுடைய அதிபதியிடமிருந்து இறக்கியருளப்பட்டவற்றையும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். இவர்களுக்கிடையே நாங்கள் எவ்வித வேற்றுமையும் காட்டுவதில்லை. மேலும் நாங்கள் அல்லாஹ்வுக்கே முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்கும் முஸ்லிம்களாக இருக்கின்றோம்.
3:84. “அல்லாஹ்வையும், நம்மீது இறக்கி வைக்கப் பட்டதையும், இன்னும், இப்ராஹீம், இஸ்மாயீல் இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள்மீதும், இறக்கி வைக்கப்பட்டவைகளையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும், நபிமார்களுக்கும் அவர்கள் இரட்சகனால் கொடுக்கப் பட்டவைகளையும் நாம் விசுவாசிக்கிறோம். அவர்களில் எவருக்குமிடையில் நாம் (பிரித்து) வேற்றுமை பாராட்ட மாட்டோம். அ(ல்லாஹ் ஒரு)வனுக்கே நாங்கள் (முற்றிலும் கீழ்ப்படிந்த) முஸ்லீம்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
3:85 وَمَنْ يَّبْتَغِ غَيْرَ الْاِسْلَامِ دِيْنًا فَلَنْ يُّقْبَلَ مِنْهُ‌ ۚ وَهُوَ فِى الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِيْنَ‏
3:85. இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.
3:85. இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார்.
3:85. இவ்வாறு அவனுக்குப் பணிந்து வாழும் நடத்தையை (இஸ்லாத்தை) விடுத்து வேறொரு வாழ்க்கை நெறியை யாரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவனிடமிருந்து ஒருபோதும் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் மறுமையில் அவன் நஷ்டமடைந்தவரில் ஒருவனாக இருப்பான்.
3:85. “இன்னும் இஸ்லாம் அல்லாததை மார்க்கமாக எவராவது தேடினால், அப்பொழுது அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கப்படவே மாட்டாது. மேலும், மறுமையில் அவர் நஷ்டமடைந்தோரில் இருப்பார்”
3:86 كَيْفَ يَهْدِى اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ وَشَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَآءَهُمُ الْبَيِّنٰتُ‌ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
3:86. அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.
3:86. அல்லாஹ் எவ்வாறு ஒரு சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவான். அவர்களோ, தங்களிடம் வந்த பல அத்தாட்சிகளின் மூலம் நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்டதன் பின்னரும் (அத்தூதரை) நிராகரிக்கின்றனர். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவதில்லை.
3:86. இறைநம்பிக்கை கொண்ட பிறகு நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்ட மக்களுக்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்? அவர்களோ இவர் உண்மையான தூதர்தான் என்று சாட்சியம் அளித்திருந்தார்கள். மேலும் தெளிவான சான்றுகளும் அவர்களிடம் வந்திருந்தன. இவ்வாறு கொடுமை புரியும் சமுதாயத்தவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
3:86. தங்களுடைய விசுவாசத்திற்குப் பின்னர் நிராகரித்து விட்ட ஒரு சமூகத்தினருக்கு அல்லாஹ் எவ்வாறு நேர் வழிகாட்டுவான்? நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என்றும் அவர்கள் சாட்சியமும் கூறினர். அவர்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளும் வந்திருந்தன. அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தாரை நேரான வழியில் செலுத்த மாட்டான்.
3:87 اُولٰٓٮِٕكَ جَزَآؤُهُمْ اَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَالْمَلٰٓٮِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَۙ‏
3:87. நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.
3:87. இத்தகையவர்களுக்கு (அவர்கள் செயலுக்குத் தக்க) பிரதிபலனாவது: இவர்கள் மீது நிச்சயமாக அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவருடைய சாபம்தான் உள்ளது.
3:87. (அவர்கள் புரிந்த கொடுமைக்காக) அல்லாஹ்வும் வானவர்களும், மக்கள் அனைவரும் அவர்கள் மீது இடுகின்ற சாபம்தான் அவர்களுக்குரிய சரியான கூலியாகும்!
3:87. அத்தகையோர் - அவர்களுக்குரிய கூலி, நிச்சயமாக அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் (ஆகிய!) யாவருடைய சாபம் அவர்கள் மீது உண்டு என்பதுதான்.
3:88 خٰلِدِيْنَ فِيْهَا ‌ۚ لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُوْنَۙ‏
3:88. இ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது; அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.
3:88. இ(ச்சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவும் மாட்டாது.
3:88. சாபக்கேடான நிலையிலேயே அவர்கள் என்றென்றும் மூழ்கிக் கிடப்பார்கள்; தண்டனை அவர்களுக்குக் குறைக்கப்படவும் மாட்டாது. மேலும் அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படமாட்டாது.
3:88. இ(ச்சாபத்)திலேயே அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள், அவர்களை விட்டும் வேதனை இலேசாக்கப்படவுமாட்டாது. (வேதனை செய்யப்படுவதிலிருந்து) அவர்கள் கால அவகாசம் கொடுக்கப்படவுமாட்டார்கள்.
3:89 اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْۢ بَعْدِ ذٰ لِكَ وَاَصْلَحُوْا  فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
3:89. எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.
3:89. எனினும், இதற்குப் பின்னரும் எவரேனும் வருத்தப்பட்டு (பாவங்களில் இருந்து) விலகி நற்செயல்களைச் செய்தால் (அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.
3:89. ஆயினும் அதற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரி, தமது நடத்தையைத் திருத்திக் கொண்டவர்களைத் தவிர! (அவர்கள் தப்பித்துக் கொள்வார்கள்.) ஏனெனில் திண்ணமாக அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும், கருணை பொழிபவனும் ஆவான்.
3:89. அதன்பின்னர் பச்சாதாபப்பட்டு, (பாவங்களிலிருந்து விலகி) தங்களை சீர்திருத்திக் கொண்டார்களே அத்தகையோரைத் தவிர-(அல்லாஹ் அவர்களை மன்னித்துவிடுவான். ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கின்றவன், மிக்க கிருபையுடையவன்.
3:90 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا بَعْدَ اِيْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ‌ۚ وَاُولٰٓٮِٕكَ هُمُ الضَّآ لُّوْنَ‏
3:90. எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது; அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.
3:90. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும் அந்நிராகரிப்பையே அதிகப்படுத்து கின்றார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள்.
3:90. ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டபின் நிராகரிப்பை மேற்கொண்டனரோ, மேலும் நிராகரிப்பிலேயே மூழ்கிக் கொண்டு போகின்றனரோ அவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது; அவர்கள்தான் (முதிர்ந்த) வழிகேடர்கள்.
3:90. நிச்சயமாக, தங்களுடைய விசுவாசத்திற்கு பின்னர் நிராகரித்து, மேலும் நிராகரிப்பை அதிகமாக்கிக் கொண்டார்களே அத்தகையோர்-அவர்களுடைய தவ்பா(மன்னிப்புக்கோருதல்) அங்கீகரிக்கப்படவேமாட்டாது. மேலும், அவர்கள் தாம் (முற்றிலும்)வழி கெட்டவர்கள்.
3:91 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰى بِهٖ ؕ اُولٰٓٮِٕكَ لَـهُمْ عَذَابٌ اَلِـيْمٌۙ وَّمَا لَـهُمْ مِّــنْ نّٰصِــرِيْنَ‏
3:91. எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு; இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.
3:91. நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதனைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இத்தகையவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்!
3:91. திண்ணமாக, எவர்கள் நிராகரிப்பை மேற்கொண்டு அதே நிலையில் மரணமடைந்து விடுகின்றார்களோ அவர்கள் தம்மைத் தண்டனையிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பூமி நிரம்பப் பொன்னை ஈட்டுத் தொகையாகத் தந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இத்தகையோருக்குத் துன்புறுத்தும் தண்டனை இருக்கிறது. மேலும் அவர்களுக்கு உதவி புரிவோர் எவரும் இரார்.
3:91. நிச்சயமாக, நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்தவர்களாகவே இறந்தும் விடுகின்றனரே, அத்தகையோர்-பொன்னால் இப்பூமி நிறைய உள்ளதை-அதனை(த்தன் குற்றம் மன்னிக்கப்படுவதற்கு) ஈடாக அவர் கொடுத்த போதிலும், (அது) அவர்களில் எவரிடமிருந்தும் அங்கீகரிக்கப்படவேமாட்டாது. அத்தகையோருக்கே துன்புறுத்தும் வேதனையுமுண்டு. அவர்களுக்கு உதவிசெய்வோரும் எவரும் இல்லை.
3:92 لَنْ تَنَالُوا الْبِرَّ حَتّٰى تُنْفِقُوْا مِمَّا تُحِبُّوْنَ ؕ  وَمَا تُنْفِقُوْا مِنْ شَىْءٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
3:92. நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்; எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
3:92. உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் (தானமாக) செலவு செய்யாத வரையில் நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள். ஒரு சொற்பத்தை நீங்கள் தானம் செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனையும் நன்கறிவான்.
3:92. உங்களுக்கு விருப்பமானவற்றை (இறைவழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது. மேலும் எதனை நீங்கள் செலவழித்தாலும் திண்ணமாக, அல்லாஹ் அதனை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
3:92. (தர்மம் செய்தால்) நீங்கள் விரும்புகின்றனவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யாதவரையில், நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள். நீங்கள் எதைச் செலவு செய்தபோதிலும் நிச்சயமாக, அல்லாஹ் அதனை நன்கறிந்தவன்.
3:93 كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَآءِيْلُ عَلٰى نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰٮةُ ‌ؕ قُلْ فَاْتُوْا بِالتَّوْرٰٮةِ فَاتْلُوْهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
3:93. இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று.
3:93. இஸ்ரவேலர்களுக்கு தவ்றாத் அருளப்படுவதற்கு முன்னர் எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது. எனினும், இஸ்ராயீல் தனக்கு விலக்கிக் கொண்டவற்றைத் தவிர. (ஆகவே இதற்கு மாறாகக் கூறும் யூதர்களை நோக்கி நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் தவ்றாத்தைக் கொண்டுவந்து ஓதிக் காண்பியுங்கள்."
3:93. (முஹம்மத் நபியுடைய ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும்) உண்பொருள்கள் அனைத்தும் இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தன. ஆனால் தவ்ராத் அருளப்படுவதற்கு முன் சில பொருட்களை இஸ்ராயீல் (அதாவது யஃகூப்) தாமாகவே தமக்கு தடுக்கப்பட்டனவாய் (ஹராமாய்) ஆக்கிக் கொண்டிருந்தார். எனவே நபியே! அவர்களிடம் நீர் கூறும்: (“உங்கள் ஆட்சேபணையில்) நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், தவ்ராத்தைக் கொண்டுவந்து அதிலிருந்து ஒரு வாசகத்தையேனும் படித்துக் காட்டுங்கள்!”
3:93. தவ்றாத் இறக்கப்படுவதற்கு முன்னர் இஸ்ராயீல் (எனும் யாஃகூப்) தன் மீது விலக்கிக் கொண்டதைத் தவிர, எல்லா உணவுகளும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக இருந்தது. (ஆகவே, இதற்கு மாறாகக் கூறும் யூதர்களிடம், நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், தவ்றாத்தைக் கொண்டு வந்து அதனை ஓதுங்கள்” (அதன் மூலம் உண்மை தெளிவாகும்.)
3:94 فَمَنِ افْتَرٰى عَلَى اللّٰهِ الْكَذِبَ مِنْۢ بَعْدِ ذٰ لِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَؔ‏
3:94. இதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள்.
3:94. இதற்குப் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறினால் அவர்கள்தான் அநியாயக்காரர்கள்.
3:94. எனவே அதற்குப் பின்னரும் யார் அல்லாஹ்வின்மீது பொய்யைப் புனைந்துரைத்தவாறு இருக்கின்றார்களோ, அவர்கள்தாம் உண்மையில் கொடுமையாளர்கள் ஆவர்.
3:94. எனவே, இதற்குப் பின்னரும் எவரேனும் அல்லாஹ்வின்மீது பொய்யைக் கற்பனை செய்தால் அவர்கள் தாம் அநியாயக்காரர்களாவார்கள்.
3:95 قُلْ صَدَقَ اللّٰهُ‌ فَاتَّبِعُوْا مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ؕ وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ‏
3:95. (நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.”
3:95. (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "(இவைகளைப் பற்றி) அல்லாஹ் கூறியவைதான் (முற்றிலும்) உண்மை. ஆகவே (நம்பிக்கை யாளர்களே! இவர்களைப் புறக்கணித்து விட்டு) நேரான வழியில் சென்ற இப்ராஹீமுடைய மார்க்கத்தையே பின்பற்றுங்கள். அவர் இணைவைத்து வணங்குபவராக இருக்கவில்லை.
3:95. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ் உண்மையே உரைக்கின்றான். நீங்கள் ஒருமனப்பட்ட இப்ராஹீமின் வழிமுறையைப் பின்பற்றுங்கள்! மேலும் இப்ராஹீம் இறைவனுக்கு இணைவைப்போரில் ஒருவராய் இருந்ததில்லை.”
3:95. (நபியே!) நீர் கூறுவீராக! (இவைகளைப் பற்றி) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான். ஆகவே (விசுவாசிகளே! இவர்களைப் புறக்கணித்து விட்டு) சத்தியவழியைச் சார்ந்தவரான இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவர் இணைவைத்துக் கொண்டிருப்போரில் (ஒருவராக) இருக்கவில்லை.
3:96 اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏
3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
3:96. (இவ்வுலகில் இறைவனை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு அமைக்கப்பட்ட ஆலயங்களில் முதன்மையானது நிச்சயமாக "பக்கா"வில் (மக்காவில்) இருப்பதுதான். அது மிக்க பாக்கியமுள்ளதாகவும், உலகத்தாருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும் இருக்கின்றது.
3:96. திண்ணமாக, மனிதர்களுக்காகக் கட்டப்பட்ட முதல் வணக்கத்தலம் மக்காவிலுள்ளதேயாகும். அருள்நலம் வழங்கப்பட்ட இடமாகவும், அகிலத்தார் அனைவருக்கும் வழிகாட்டும் மையமாகவும் அது உள்ளது.
3:96. (இவ்வுலகில், அல்லாஹ்வை வணங்குவதற்கென) மனிதர்களுக்கு வைக்கப்பட்ட முதல் வீடு நிச்சயமாக பக்கா (மக்கா)வில் இருப்பது தான். பரக்கத்துச் செய்யப்பட்டதாக (அதில் நன்மைகள் பன்மடங்காக்கப்பட்டதாக)வும், அகிலத்தார்க்கு நேர்வழியாகவும் இருக்கின்றது.
3:97 فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَۚ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏
3:97. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.
3:97. அதில் தெளிவான அத்தாட்சிகளும் இருக்கின்றன. இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இடமும் இருக்கின்றது. எவர் அதில் நுழைகின்றாரோ அவர் (பாதுகாப்பு பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார். ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்குச் சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாக இருக்கின்றான்.
3:97. அங்குத் தெளிவான சான்றுகளும் இப்ராஹீம் நின்று தொழுத இடமும் உள்ளன. மேலும் (அது எத்தகைய ஆலயமெனில்) அங்கு எவர் நுழைந்தாலும் அவர் அச்சமற்றவராகி விடுகின்றார். மேலும், அந்த ஆலயத்திற்குச் சென்றுவர மக்களில் எவர்கள் சக்தி பெற்றவர்களோ அவர்கள் ஹஜ் செய்வதானது அல்லாஹ்வுக்காக ஆற்றவேண்டிய கடமையாகும். ஆனால் யாரேனும் இக்கட்டளையைச் செயல்படுத்த மறுத்தால் (அவர் தெரிந்து கொள்ளட்டும்) உலகத்தார் அனைவரை விட்டும், நிச்சயம் அல்லாஹ் தேவையற்றவனாய் இருக்கின்றான்.
3:97. அதில் தெளிவான அத்தாட்சிகளும், இப்ராஹீம் (தொழுகைக்காக) நின்ற இட(மான ‘மகாம் இப்ராஹீ’)மும் இருக்கின்றது, மேலும் எவர் அதில் நுழைகின்றாரோ அவர், (அபயம் பெற்று) அச்சமற்றவராகி விடுகின்றார். (ஆகவே) எவர்கள் அங்கு யாத்திரை செல்லச் சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ, அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று அவ்)வீட்டை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் அப்போது (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் அனைவரை விட்டும் தேவையற்றவன்.
3:98 قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ ۖ وَاللّٰهُ شَهِيْدٌ عَلٰى مَا تَعْمَلُوْنَ‏
3:98. “வேதத்தையுடையோரே! அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
3:98. (நபியே!) நீங்கள் கூறுங்கள்: "வேதத்தை உடையவர்களே! அல்லாஹ்வின் வசனங்களை நீங்கள் ஏன் நிராகரிக்கின்றீர்கள். அல்லாஹ்வோ நீங்கள் செய்யும் அனைத்திற்கும் சாட்சியாக இருக்கின்றான்."’
3:98. (நபியே!) நீர் கூறுவீராக: “வேதம் அருளப்பட்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்”
3:98. (நபியே!) நீர் கூறுவீராக! “வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின், வசனங்களை நீங்கள் ஏன் நிராகரிக்கின்றீர்கள்? அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றிற்கு சாட்சியாக (நேருக்குநேர் பார்ப்பவனாக) இருக்கின்றான்.
3:99 قُلْ يٰۤـاَهْلَ الْكِتٰبِ لِمَ تَصُدُّوْنَ عَنْ سَبِيْلِ اللّٰهِ مَنْ اٰمَنَ تَبْغُوْنَهَا عِوَجًا وَّاَنْتُمْ شُهَدَآءُ ‌ؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ‏
3:99. “வேதத்தையுடையோரே! நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள்? (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை” என்றும் (நபியே!) நீர் கூறுவீராக.
3:99. (மேலும்) நீங்கள் கூறுங்கள்: வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையில் (செல்லும்) நம்பிக்கையாளர்களை ஏன் தடை செய்கின்றீர்கள். (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சியம் கூறிக்கொண்டே அதனைக் கோணலாக்க விரும்புகின்றீர்களா? உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாய் இல்லை.
3:99. (நபியே!) நீர் கூறும்: “வேதம் அருளப்பட்டவர்களே! அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்றுக்கொண்டவரை அல்லாஹ்வுடைய வழியில் செல்லவிடாமல் ஏன் தடுக்கின்றீர்கள்? (அவர்கள் நேரான வழியில்தான் செல்கின்றார்கள் என்பதற்கு) நீங்களே சான்று வழங்குவோராயிருந்தும், அவர்கள் கோணலான வழியில் செல்ல வேண்டுமென ஏன் விரும்புகின்றீர்கள்? உங்கள் செயல்களைக் குறித்து அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.”
3:99. (நபியே!) நீர் கூறுவீராக: “வேதத்தையுடையவர்களே! அல்லாஹ்வின் பாதையிலிருந்து விசுவாசிகளை ஏன் தடை செய்கின்றீர்கள்? (அது உண்மைதான் என்று) நீங்கள் சாட்சியம் கூறிக்கொண்டே, அதனைக் கோணலாக்கத் தேடுகின்றீர்கள். இன்னும் நீங்கள் செய்பவைகளைப் பற்றி அல்லாஹ் பாராமுகமானவனல்லன்.
3:100 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِيْعُوْا فَرِيْقًا مِّنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ يَرُدُّوْكُمْ بَعْدَ اِيْمَانِكُمْ كٰفِرِيْنَ‏
3:100. நம்பிக்கை கொண்டோரே! வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.
3:100. நம்பிக்கையாளர்களே! வேதத்தையுடையவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் கீழ்படிந்தால், நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதற்கு பின் உங்களை அவர்கள் அவனை நிராகரிப்பவர்களாக மாற்றி விடுவார்கள்.
3:100. இறைநம்பிக்கை கொண்டவர்களே! வேதம் அருளப்பட்டவர்களில் ஒரு பிரிவினரின் கருத்துகளை நீங்கள் ஏற்றுக் கொண்டால், அவர்கள் உங்களுடைய நம்பிக்கையிலிருந்து உங்களைப் பிறழச் செய்து இறைமறுப்பின்பால் உங்களைக் கொண்டுபோய் விடுவார்கள்.
3:100. விசுவாசங் கொண்டோரே! வேதங்கொடுக்கப்பட்டோரில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு நீங்கள் கீழ்படிந்து நடந்தால், உங்களுடைய விசுவாசத்திற்குப் பின்னரும் நிராகரிப்போராக உங்களை அவர்கள் திருப்பிவிடுவார்கள்.
3:101 وَكَيْفَ تَكْفُرُوْنَ وَاَنْـتُمْ تُتْلٰى عَلَيْكُمْ اٰيٰتُ اللّٰهِ وَفِيْكُمْ رَسُوْلُهٗ ‌ؕ وَمَنْ يَّعْتَصِمْ بِاللّٰهِ فَقَدْ هُدِىَ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏
3:101. அவனுடைய ரஸூல் உங்களிடையே இருந்து கொண்டு; - அல்லாஹ்வின் ஆயத்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.
3:101. நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிப்பவராக ஆகிவிட முடியும்? அல்லாஹ்வுடைய தூதர் உங்கள் மத்தியில் இருந்து கொண்டு அவனுடைய வசனங்களை உங்களுக்கு ஓதிக்காண்பித்துக் கொண்டும் இருக்கின்றார். ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டு விட்டார்.
3:101. உங்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. மேலும் அவனுடைய தூதரும் உங்களிடையே இருக்கின்றார். அவ்வாறிருக்க, இறைமறுப்பின்பால் செல்ல உங்களுக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? யார் அல்லாஹ்வை இறுகப் பற்றிக் கொள்கின்றாரோ, அவர் நேரான வழியினை நிச்சயம் பெற்றுக் கொள்வார்.
3:101. இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் வசனங்கள் உங்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டிருக்க, உங்களுக்கு மத்தியில் அவனுடைய தூதரும் இருக்க, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? இன்னும், எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தைப்) பலமாகப் பற்றிக் கொள்கின்றாரோ அப்போது அவர் திட்டமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டு விட்டார்.
3:102 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏
3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்காதீர்கள்.
3:102. நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் இறந்துவிட வேண்டாம்.
3:102. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.
3:102. விசுவாசங் கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை-அவனைப் பயப்பட வேண்டிய முறைப்படி பயப்படுங்கள், மேலும், நிச்சயமாக (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லீம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம்.
3:103 وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا ۚ وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ؕ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏
3:103. இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.
3:103. மேலும், நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாக(ப் பிரிந்து) இருந்த சமயத்தில் உங்கள் உள்ளங்களுக்குள் (இஸ்லாமின் மூலம்) அன்பை ஊட்டி ஒன்று சேர்த்தான். ஆகவே, அல்லாஹ்வின் அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள். (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக் கிடங்கிற்கு அருகில் இருந்தீர்கள். அதிலிருந்தும் அவன் உங்களை காப்பாற்றிக் கொண்டான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்திக் காண்பிக்கின்றான்.
3:103. நீங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் கயிற்றை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள்; பிரிந்து விடாதீர்கள். மேலும், அல்லாஹ் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாய் இருந்த நேரத்தில் அவன் உங்களுக்கிடையே உளப்பூர்வமான இணக்கத்தை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள். மேலும், நெருப்புப் படுகுழியின் விளிம்பில் நீங்கள் நின்று கொண்டிருந்தீர்கள். அல்லாஹ் உங்களை அதிலிருந்து காப்பாற்றி விட்டான். இவ்விதம் அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்; இதன் மூலம் நீங்கள் வெற்றிக்கான பாதையை அடைந்து கொள்ளக்கூடும் என்பதற்காக!
3:103. மேலும், நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள், (உங்களுக்குள் கருத்துவேறுபட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம், மேலும், உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் (ஒருவர் மற்றவருக்கு) விரோதிகளாக இருந்த சமயத்தில், அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பை உண்டாக்கினான், ஆகவே., அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள், (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக்குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள், அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேறச்செய்தான், நீங்கள் நேர்வழிப் பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான்.
3:104 وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ‌ؕ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏
3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.
3:104. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.
3:104. நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவவேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்கவேண்டும். எவர்கள் இப்பணியை புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்.
3:104. இன்னும், (விசுவாசங்கொண்டோரே!) உங்களில் ஒரு கூட்டத்தார்-அவர்கள் (மனிதர்களை) நன்மையின்பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக்கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும், அவர்களே தாம் வெற்றி பெற்றோர்.
3:105 وَلَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ تَفَرَّقُوْا وَاخْتَلَفُوْا مِنْۢ بَعْدِ مَا جَآءَهُمُ الْبَيِّنٰتُ‌ؕ وَاُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ عَظِيْمٌۙ‏
3:105. (இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.
3:105. எவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். இத்தகையவர்களுக்கே (மறுமையில்) மகத்தான வேதனையும் உண்டு.
3:105. எவர்கள் தம்மிடம் தெளிவான அறிவுரைகள் வந்த பின்னர் தங்களுக்குள் கருத்து வேறுபாடு கொண்டு பற்பல பிரிவினராய்ச் சிதறுண்டு விட்டார்களோ அவர்களைப் போல் நீங்களும் ஆகி விடாதீர்கள். (யார் இத்தகைய நடத்தையை மேற்கொள்கிறார்களோ) அவர்களுக்கு மறுமைநாளில் மாபெரும் தண்டனை உண்டு.
3:105. மேலும், தங்களிடம் தெளிவான சான்றுகள் வந்ததன் பின்னரும் தங்களுக்குள் பிரிவை உண்டாக்கிக்கொண்டு, (கருத்து) வேறுபட்டுப் போனார்களே, அத்தகையோரைப்போல நீங்களும் ஆகிவிட வேண்டாம், அத்தகையோருக்குத்தான் மறுமையில் மகத்தான வேதனையுமுண்டு
3:106 يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ  ؕ فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْ اَكَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ‏
3:106. அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து: நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்).
3:106. ஒருநாளில் சில முகங்கள் (சந்தோஷத்தால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கறுத்து (வாடியு)மிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்து (வாடி) இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) "நீங்கள் நம்பிக்கை கொண்டபின் (அதனை) நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, உங்கள் நிராகரிப்பின் காரணமாக நரக வேதனையை சுவைத்துக் கொண்டு இருங்கள்" (என்று கூறப்படும்.)
3:106. அந்நாளில் சிலரின் முகங்கள் மகிழ்ச்சியால் மின்னிக் கொண்டிருக்கும். மற்றும் சிலரின் முகங்களோ துயரத்தால் கறுத்துப் போயிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்திருக்குமோ அவர்களை நோக்கி, “நீங்கள் நம்பிக்கை எனும் அருட்கொடையைப் பெற்றுக் கொண்ட பின்னர், நன்றி கொல்லும் போக்கினை மேற்கொண்டீர்களல்லவா? இவ்வாறு நீங்கள் நன்றி மறந்து வாழும் போக்கினை மேற்கொண்டதால் இப்போது நரக வேதனையைச் சுவையுங்கள்!” என்று சொல்லப்படும்.
3:106. சில முகங்கள் (மலர்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்), கறுத்து (வாடியு)மிருக்கும் நாளில் அவர்களுக்கு மகத்தான வேதனை உண்டு, ஆகவே, எவர்களுடைய முகங்கள் கறுத்து(வாடி) இருக்கின்றனவோ, (அவர்களிடம்,) “நீங்கள் விசுவாசங் கொண்டபின் (அதனை) நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்ததன் காரணமாக (நரக) வேதனையைச் சுவையுங்கள்” என்று கூறப்படும்.
3:107 وَاَمَّا الَّذِيْنَ ابْيَـضَّتْ وُجُوْهُهُمْ فَفِىْ رَحْمَةِ اللّٰهِ ؕ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
3:107. எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.
3:107. எவர்களுடைய முகங்கள் (மகிழ்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாக இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) "நீங்கள் அல்லாஹ்வின் அருளில் தங்கிவிடுங்கள்" (என்று கூறப்படும்.) அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
3:107. எவருடைய முகங்கள் மின்னிக் கொண்டிருக்குமோ, அவர்கள் அல்லாஹ்வுடைய அருளில் இருப்பார்கள். மேலும் அதிலே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்.
3:107. இன்னும், எவர்களுடைய முகங்கள் (மலர்ச்சியால் பிரகாசமுள்ள) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.
3:108 تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَـتْلُوْهَا عَلَيْكَ بِالْحَـقِّ‌ؕ وَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعٰلَمِيْنَ‏
3:108. (நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்; மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.
3:108. (நபியே!) இவையனைத்தும் அல்லாஹ்வுடைய வசனங்களாகும். அவைகளை உண்மையாகவே நாம் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கின்றோம். அன்றி, அல்லாஹ் உலகத்தாருக்கு சிறிதளவும் அநியாயம் (செய்ய) நாட மாட்டான்.
3:108. இவை அல்லாஹ்வின் அருளுரைகள்! இவற்றை மிகச் சரியாக உமக்கு நாம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றோம். ஏனெனில், அல்லாஹ் அகிலத்தாருக்குக் கொடுமைபுரிய நாடுவதில்லை.
3:108. (நபியே!) இவை அல்லாஹ்வுடைய வசனங்களாகும், உண்மையைக் கொண்டுள்ள அவற்றை நாம் உமக்கு ஓதிக்காண்பிக்கின்றோம், மேலும் அல்லாஹ் அகிலத்தார்க்கு அநீதியை (ச்செய்ய) நாட மாட்டான்.
3:109 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ‏
3:109. வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை; எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
3:109. வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியதே! (இவை சம்பந்தமான) எல்லா காரியங்களும் அல்லாஹ்விடமே கொண்டு வரப்படும்.
3:109. வானங்கள், பூமி இவற்றிலுள்ள அனைத்துப் பொருள்களின் உரிமையாளன் அல்லாஹ்வே ஆவான். மேலும் எல்லா விவகாரங்களும் அல்லாஹ்விடமே திரும்பக் கொண்டுவரப்படுகின்றன.
3:109. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும், அல்லாஹ்வுக்கே உரியன, (இவை சம்பந்தமான) சகல காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.
3:110 كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُوْنَ بِاللّٰهِ‌ؕ وَلَوْ اٰمَنَ اَهْلُ الْكِتٰبِ لَڪَانَ خَيْرًا لَّهُمْ‌ؕ مِنْهُمُ الْمُؤْمِنُوْنَ وَاَكْثَرُهُمُ الْفٰسِقُوْنَ‏
3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
3:110. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை) நன்மையான காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கின்றீர்கள். (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டால் (அது) அவர்களுக்குத்தான் மிக நன்று. நம்பிக்கை கொண்ட வர்களும் அவர்களில் இருந்தபோதிலும் அவர்களில் பெரும் பாலானவர்கள் (நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
3:110. இனி மனித இனத்தைச் சீர்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டிருக்கும் மிகச் சிறந்த சமூகத்தவராய் நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மை புரியும்படி ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதம் அருளப்பட்ட இவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால் அது அவர்களுக்குத்தான் நன்மை யாக இருந்திருக்கும். ஆனால் அவர்களில் சிலரே நம்பிக்கை யாளராய் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறுபவர்களாய் இருக்கின்றனர்.
3:110. (விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தார்களிலெல்லாம்) மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில் நன்மையான காரியங்களை நீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும், நீங்கள் அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள், மேலும், (இவ்வாறே) வேதத்தையுடையவர்களும் விசுவாசித்து நடந்தால் அது அவர்களுக்கு நன்மையாக இருந்திருக்கும், விசுவாசிப்போரும் அவர்களில் (சிலா்) இருக்கின்றனர்; இன்னும், அவர்களில் அதிகமானவர்கள், (அல்லாஹ்வின் கட்டளையை மீறும்) பாவிகளாவர்.
3:111 لَنْ يَّضُرُّوْكُمْ اِلَّاۤ اَذًى‌ؕ وَاِنْ يُّقَاتِلُوْكُمْ يُوَلُّوْكُمُ الْاَدْبَارَ ثُمَّ لَا يُنْصَرُوْنَ‏
3:111. இத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்; இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
3:111. (நம்பிக்கையாளர்களே!) இத்தகையவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர் புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெற மாட்டார்கள்.
3:111. அவர்களால் உங்களுக்குத் தீங்கு எதையும் இழைத்துவிட முடியாது; சிறுசிறு தொல்லைகள் தருவதைத் தவிர! ஆயினும் உங்களோடு போரிட்டால் அவர்கள் புறங்காட்டி ஓடுவார்கள். பிறகு எங்கிருந்தும் அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது.
3:111. (விசுவாசிகளே! இத்தகையோர்) உங்களுக்குச் சிறிது தொல்லையிழைப்பதைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்துவிடவே முடியாது, மேலும், உங்களுடன் அவர்கள் யுத்தம் புரிய முற்பட்டாலோ, அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டியே ஓடுவார்கள், பின்னர் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படமாட்டார்கள்.
3:112 ضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ اَيْنَ مَا ثُقِفُوْۤا اِلَّا بِحَبْلٍ مِّنَ اللّٰهِ وَحَبْلٍ مِّنَ النَّاسِ وَبَآءُوْ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ الْمَسْكَنَةُ  ؕ ذٰ لِكَ بِاَنَّهُمْ كَانُوْا يَكْفُرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ وَيَقْتُلُوْنَ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ‌ؕ ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏
3:112. அவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது; அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது); அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்; ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது; இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்; அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்; இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை ) மீறி நடந்து கொண்டும் இருந்ததுதான் (காரணமாகும்).
3:112. அவர்கள் எங்கு சென்றபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் (நம்பிக்கை கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) கயிற்றைக் கொண்டுமே அன்றி (அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது.) அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். (வீழ்ச்சி என்னும்) துர்ப்பாக்கியமும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி இறைத் தூதர்களைக் கொலை செய்துகொண்டும் இருந்ததுதான். தவிர, வரம்பு கடந்து பாவம் செய்துகொண்டிருந்ததும் இதற்குக் காரணமாகும்.
3:112. அவர்கள் எங்கு காணப்படினும், அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ்வின் பொறுப்பில் அல்லது மனிதர்களின் பொறுப்பில் எங்கேனும் அவர்களுக்கு பாதுகாப்புக் கிட்டினாலே தவிர! மேலும் அவர்கள் அல்லாஹ்வின் சினத்திற்கும் ஆளாகிவிட்டனர். இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது சுமத்தப்பட்டுவிட்டன. இவற்றிற்கெல்லாம் காரணம், அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து வந்ததும் அவனுடைய தூதர்களை நியாயமின்றிக் கொலை செய்ததும்தான்; அவர்கள் (இறைவனுக்கு) மாறு செய்ததாலும் வரம்பு மீறிச் செயல்பட்டதாலும் ஏற்பட்ட விளைவுகளாகும் இவை!
3:112. அவர்கள் எங்கு காணப்பட்டபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது, (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் உடன்படிக்கையைக் கொண்டும் (விசுவாசங் கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) உடன்படிக்கையைக் கொண்டுமேயன்றி (அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது.) மேலும், அல்லாஹ்விடமிருந்துள்ள கோபத்தைக்கொண்டு அவர்கள் திரும்பிவிட்டார்கள், ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டுவிட்டது, இது (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக்கொண்டும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்துகொண்டும் இருந்ததின் காரணத்தினாலாகும், (மேலும்) அது அவர்கள் மாறு செய்துகொண்டும் வரம்பு மீறிக்கொண்டும் இருந்த காரணத்தினாலாகும்.
3:113 لَـيْسُوْا سَوَآءً ‌ؕ مِنْ اَهْلِ الْكِتٰبِ اُمَّةٌ قَآٮِٕمَةٌ يَّتْلُوْنَ اٰيٰتِ اللّٰهِ اٰنَآءَ الَّيْلِ وَ هُمْ يَسْجُدُوْنَ‏
3:113. (எனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்; வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்கள்; இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.
3:113. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் (நல்லோரான) ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம் பணிந்து வணங்குகின்றனர்.
3:113. ஆனால், வேதம் அருளப்பட்டோர் அனைவரும் ஒரே மாதிரியானவர்களாய் இல்லை. அவர்களில் நேரிய வழியில் நிலைத்து நிற்கும் ஒரு குழுவினரும் இருக்கின்றனர்; அவர்கள் இராக்காலங்களில் இறைவசனங்களை ஓதுகின்றனர். (அல்லாஹ்வின் முன்னிலையில்) ஸுஜூது சிரம்தாழ்த்திப் பணிகின்றனர்.
3:113. அவர்கள் (அனைவரும்) சமமானவர்களல்லர், வேதத்தையுடையவர்களில் (நேர்வழியில்) நிற்கும் ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர், அவர்கள் இரவுக்காலங்களில் சிரம் பணிந்தவர்களாக (தொழுபவர்களாக) அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதுகின்றனர்.
3:114 يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُسَارِعُوْنَ فِىْ الْخَيْرٰتِ ؕ وَاُولٰٓٮِٕكَ مِنَ الصّٰلِحِيْنَ‏
3:114. அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.
3:114. அன்றி, அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, (மனிதர்களுக்கு) நன்மையான காரியங்களை ஏவி, தீமையான காரியங்களிலிருந்து தடுத்து, நன்மையான காரியங்களைச் செய்ய விரை(ந்தும் செல்)கின்றனர். இத்தகைய வர்களும் நல்லவர்களில் உள்ளவர்களே.
3:114. இன்னும் அல்லாஹ்வையும், மறுமைநாளையும் நம்புகின்றனர். நல்லவை புரியுமாறு ஏவி, தீயவற்றிலிருந்து தடுக்கின்றனர். மேலும், நற்பணிகளில் முனைப்புடன் ஈடுபடுகின்றனர். இவர்கள்தாம் நன் மக்களில் உள்ளவர்களாவர்.
3:114. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் விசுவாசிக்கின்றனர், இன்னும், நன்மையைக் கொண்டும் (மனிதர்களை) ஏவுகின்றனர், தீமையை (விட்டும்) தடுக்கின்றனர், இன்னும், நன்மையானவற்றில் விரைந்தும் செல்கின்றனர், மேலும், இவர்கள் நல்லோர்களில் உள்ளோராவர்.
3:115 وَمَا يَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَلَنْ يُّكْفَرُوْهُ ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِالْمُتَّقِيْنَ‏
3:115. இவர்கள் செய்யும் எந்த நன்மையும் (நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது; அன்றியும், அல்லாஹ் பயபக்தியுடையோரை நன்றாக அறிகிறான்.
3:115. இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட மாட்டாது. (அதற்குரிய பிரதிபலனை அடைந்தே தீருவார்கள். ஏனென்றால், இத்தகைய) இறையச்சமுடையவர்களை அல்லாஹ் நன்கறிவான்.
3:115. மேலும், இவர்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அது புறக்கணிக்கப்படமாட்டாது. இறையச்சமுள்ளவர்களை அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
3:115. இவர்கள் எந்த நன்மையைச் செய்தபோதிலும் அதற்காக நற்கூலி பெறுவதை மறுக்கப்படமாட்டார்கள், இத்தகைய பயபக்தியுடையோரை அல்லாஹ் நன்கறிகிறவன்.
3:116 اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ تُغْنِىَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَيْئًا  ؕ وَاُولٰٓٮِٕكَ اَصْحٰبُ النَّارِ‌ۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ‏
3:116. நிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.
3:116. நிச்சயமாக (வேதத்தையுடையவர்களில்) எவர்கள் (மறுமையை) நிராகரிக்கின்றார்களோ அவர்களுடைய பொருள்களும், அவர்களுடைய சந்ததிகளும், (அந்நாளில்) அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து அவர்களை ஒரு சிறிதும் காப்பாற்றிவிடாது. அவர்கள் நரகவாசிகள்தான். அதில் என்றென்றும் அவர்கள் தங்கிவிடுவார்கள்.
3:116. எவர்கள் நிராகரிப்புப் போக்கினை மேற்கொண்டார்களோ அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களும் சரி, பிள்ளைகளும் சரி அல்லாஹ்விடத்தில் சிறிதும் பலனளிக்கமாட்டா! அவர்கள்தாம் நரகவாசிகள்! மேலும் அதிலேயே அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்.
3:116. நிச்சயமாக நிராகரிக்கின்றார்களே அத்தகையோர், அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய மக்களும். அல்லாஹ்வினுடைய வேதனையிலிருந்து அவர்களை விட்டு எந்த ஒன்றையும் தேவையுறச் செய்யாது, மேலும், அவர்கள் நரகவாசிகள்தாம், அதில் நிரந்தரமாக அவர்கள் (தங்கி) இருப்பவர்கள்.
3:117 مَثَلُ مَا يُنْفِقُوْنَ فِىْ هٰذِهِ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَثَلِ رِيْحٍ فِيْهَا صِرٌّ اَصَابَتْ حَرْثَ قَوْمٍ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَاَهْلَكَتْهُ ‌ؕ وَمَا ظَلَمَهُمُ اللّٰهُ وَلٰـكِنْ اَنْفُسَهُمْ يَظْلِمُوْنَ‏
3:117. இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும்; அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்துவிடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை; அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள்.
3:117. இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம், ஒரு காற்றைப்போல் இருக்கின்றது. அது (அளவு கடந்து) குளிர்ந்து (பனிப்புயலாகித்) தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு வகுப்பாரின் பயிரில் பட்டு அதனை அழித்துவிட்டது. அல்லாஹ் இவர்களுக்கு ஒன்றும் தீங்கிழைத்து விடவில்லை. எனினும், இவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
3:117. இவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பதற்கான உவமை கடும் பனிப்புயல் போன்றதாகும். அதுவோ தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டோரின் வேளாண்மை நிலத்தைத் தாக்கி நாசப்படுத்துகிறது. அல்லாஹ் அவர்களுக்குக் கொடுமை இழைக்கவில்லை; உண்மையில் அவர்கள் தமக்குத்தாமே கொடுமை இழைத்துக் கொள்கிறார்கள்.
3:117. இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாத்திற்கு விரோதமாக) அவர்கள் செலவு செய்யும் பொருளின் உதாரணம்: ஒரு காற்றைப் போல் இருக்கின்றது, அதில் கடுமையான குளிர் இருக்கிறது, தமககுத் தாமே அநியாயமிழைத்துக்கொண்ட ஒரு கூட்டத்தாரின் பயிரில் பட்டு அப்போது அதனை அது அழித்துவிடுகிறது, அல்லாஹ்வோ அவர்களுக்கு அநியாயமிழைத்து விடவில்லை, எனினும் இவர்கள் தமக்குத்தாமே அநியாயமிழைத்துக் கொள்கின்றனர்.
3:118 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَتَّخِذُوْا بِطَانَةً مِّنْ دُوْنِكُمْ لَا يَاْلُوْنَكُمْ خَبَالًا ؕ وَدُّوْا مَا عَنِتُّمْ‌ۚ قَدْ بَدَتِ الْبَغْضَآءُ مِنْ اَفْوَاهِهِمْ  ۖۚ وَمَا تُخْفِىْ صُدُوْرُهُمْ اَكْبَرُ‌ؕ قَدْ بَيَّنَّا لَـكُمُ الْاٰيٰتِ‌ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ‏
3:118. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்; நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்; அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது; அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்; நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்; நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).
3:118. நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்) களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகின்றார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்களில் மறைந்திருப்பவைகளோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்து விட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.)
3:118. இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களைச் சார்ந்தவர்களைத் தவிர, மற்றவர்களை உங்கள் அந்தரங்க நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பலவீனங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் எந்த ஒரு வாய்ப்பையும் அவர்கள் நழுவவிடுவதில்லை. உங்களைத் துன்புறுத்தக்கூடியது அவர்களுக்கு விருப்பமானதாய் இருக்கிறது. அவர்களுடைய வாய் மூலமாகவே அவர்களுடைய காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது. இன்னும் அவர்கள் தங்கள் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருப்பவை (இவற்றைவிட) அதிகக் கொடியனவாக இருக்கின்றன. நிச்சயமாக நாம் தெளிவான அறிவுரைகளை உங்களுக்கு அளித்திருக்கின்றோம். நீங்கள் அறிவுடையோராயின் (அவர்களோடு தொடர்பு கொள்வதில் விழிப்புடன் இருங்கள்!)
3:118. விசுவாசங்கொண்டோரே! உங்கள் இனத்தவர்களையன்றி (மற்றவர்களை) உங்களுடைய அந்தரங்கச்செய்திகளை அறிபவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள், (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறை செய்வதில்லை, மேலும், நீங்கள் துன்புறுவதை அவர்கள் விரும்புகிறார்கள், அவர்களுடைய வாய்ச் சொற்களிலிருந்தே (அவர்களுடைய) வெறுப்பு திட்டமாக வெளிப்பட்டுவிட்டது, (உங்களைப்பற்றி) அவர்களுடைய நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பவையோ மிகப்பெரிதாகும், நீங்கள் விளங்கிக்கொள்பவர்களாக இருந்தால், நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்குத் தெளிவாக்கி விட்டோம்.
3:119 هٰۤاَنْتُمْ اُولَاۤءِ تُحِبُّوْنَهُمْ وَلَا يُحِبُّوْنَكُمْ وَتُؤْمِنُوْنَ بِالْكِتٰبِ كُلِّهٖ ‌ۚ وَاِذَا لَقُوْكُمْ قَالُوْۤا اٰمَنَّا  ۖۚ وَاِذَا خَلَوْا عَضُّوْا عَلَيْكُمُ الْاَنَامِلَ مِنَ الْغَيْظِ‌ؕ قُلْ مُوْتُوْا بِغَيْظِكُمْؕ‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ ۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
3:119. (முஃமின்களே!) அறிந்து கொள்ளுங்கள்; நீங்கள் இவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை; நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்; ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது: “நாங்களும் நம்புகிறோம்” என்று கூறுகிறார்கள்; எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனிகளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்.
3:119. (நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கின்றீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், "(உங்களுடைய வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்" என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்."
3:119. அவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்கள்; ஆனால் அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. நீங்களோ எல்லா இறைவேதங்களின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்! அவர்கள் உங்களைச் சந்திக்கும்போது, “நாங்களும் (உங்களுடைய தூதரையும், வேதத்தையும்) நம்புகின்றோம்” எனக் கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் உங்களை விட்டுப் பிரிந்து சென்றதுமே, உங்கள் மீது மன எரிச்சல் கொண்டு தம் விரல் நுனிகளைக் கடிக்கின்றார்கள். அவர்களிடம் நீர் கூறுவீராக: “நீங்கள் உங்கள் எரிச்சலிலேயே மூழ்கிச் சாகுங்கள். திண்ணமாக, அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”
3:119. (விசுவாசங்கொண்டோரே! தெரிந்து கொள்ளுங்கள்) நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள், அவர்களோ, உங்களை நேசிப்பதில்லை, நீங்கள் வேதங்கள் யாவற்றையும் விசுவாசிக்கிறீர்கள். இன்னும், அவர்கள் உங்களைச் சந்தித்தால், “நாங்கள் விசுவாசிக்கிறோம்”, என்று கூறுகின்றனர், இன்னும் (உங்களிலிருந்து விலகி) அவர்கள் தனித்துவிட்டாலோ (உங்கள் மீதுள்ள) ஆத்திரத்தினால் (தங்கள் கை) விரல்களின் நுனிகளை கடித்துக் கொள்கின்றனர், ஆகவே, (நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! “உங்கள் ஆத்திரத்திலேயே நீங்கள் இறந்து விடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிகிறவன்”
3:120 اِنْ تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَاِنْ تُصِبْكُمْ سَيِّئَةٌ يَّفْرَحُوْا بِهَا ‌ۚ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا ؕ اِنَّ اللّٰهَ بِمَا يَعْمَلُوْنَ مُحِيْطٌ‏
3:120. ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.
3:120. உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கின்றது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயலை சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.
3:120. உங்களுக்கு நன்மை ஏதும் கிட்டிவிட்டால் அது அவர்களை வருந்தச் செய்கின்றது. மேலும், உங்களுக்குத் துன்பம் நேர்ந்து விட்டாலோ அது அவர்களை மகிழ்வுறச் செய்கிறது. ஆனால் நீங்கள் நிலைகுலையாமலும், அல்லாஹ்வுக்கு அஞ்சியும் வாழ்ந்தால் (உங்களுக்கெதிராக) அவர்கள் கையாளுகின்ற சூழ்ச்சி எந்தப் பலனையும் தரப்போவதில்லை. திண்ணமாக, அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற அனைத்தையும் அல்லாஹ் சூழ்ந்து கொண்டிருக்கின்றான்.
3:120. உங்களுக்கு யாதொரு நன்மை ஏற்படின் (அது) அவர்களை வருந்தச் செய்கின்றது. உங்களுக்கு யாதொரு தீங்கு ஏற்பட்டாலோ, அதற்காக அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர், ஆகவே, நீங்கள் பொறுமையுடனிருந்து (அல்லாஹ்வை) பயந்தும் கொள்வீர்களாயின் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு யாதொரு தீங்கையும் விளைவித்து விடாது, (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்பவற்றைச் சூழ்ந்து அறிகிறவன்.
3:121 وَاِذْ غَدَوْتَ مِنْ اَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِيْنَ مَقَاعِدَ لِلْقِتَالِ‌ؕ وَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌۙ‏
3:121. (நபியே!) நினைவு கூர்வீராக:) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்; அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
3:121. (நபியே!) நீங்கள் உங்கள் குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டு(ச் சென்று) நம்பிக்கை கொண்டவர்களை போர்க்களத்தில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்ததை நினைத்துப் பாருங்கள். (அனைத்தையும்) அல்லாஹ் செவியுறுபவனாகவும், நன்கறிந்த வனாகவும் இருக்கிறான்.
3:121. (நபியே!) நீர் அதிகாலையில் உமது வீட்டை விட்டுப் புறப்பட்டு முஸ்லிம்களை (உஹதுப் போர்க்களத்தில் அவரவருக்குரிய அணிவகுப்பு) இடங்களில் போருக்காக நிறுத்திக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தை (முஸ்லிம்களுக்கு) நினைவூட்டுவீராக! அல்லாஹ் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.
3:121. (நபியே! நீர் உம் குடும்பத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டுச் சென்று) விசுவாசங் கொண்டவர்களை (உஹத் யுத்த களத்தில்) போருக்காக (அவரவருக்குரிய) இடங்களில் அமர்த்தி ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்ததை (நினைத்துப் பார்ப்பீராக! யாவற்றையும்) அல்லாஹ் செவியுறுகிறவன், உங்கள் இதயங்களில் இருப்பதை நன்கறிகிறவன்.
3:122 اِذْ هَمَّتْ طَّآٮِٕفَتٰنِ مِنْكُمْ اَنْ تَفْشَلَا ۙ وَاللّٰهُ وَلِيُّهُمَا‌ ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
3:122. (அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்; ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.
3:122. (அந்த போரில்) உங்களில் இரு பிரிவினர் தைரியமிழந்து ("உஹுத்" என்னும் போர்க்களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று) இருந்த சமயத்தில் அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்பவனாக இருந்தான். (ஆகவே!) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பார்களாக!
3:122. உங்களில் இரு பிரிவினர் கோழைத்தனம் காட்ட முனைந்த நேரத்தை நினைவுகூரும். அல்லாஹ்வோ அவர்களுக்கு உதவி செய்ய இருந்தான். எனவே இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பவர்களாய்த் திகழ வேண்டும்.
3:122. (அந்த யுத்தத்தில்) உங்களிலிருந்து இரு பிரிவினர் தைரியம் இழந்து (“உஹத்” என்னும் யுத்த களத்தை விட்டுச் சென்று) விட(லாமா என்று நாடிய சமயத்தில்) போர்க்களத்தில் அவர்களை அமர்த்திக் கொண்டிருந்தீர், மேலும் அல்லாஹ் அவ்விருசாராருக்கும் உதவியாளன், இன்னும் அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் (தங்கள் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கவும்.
3:123 وَلَقَدْ نَصَرَكُمُ اللّٰهُ بِبَدْرٍ وَّاَنْـتُمْ اَذِلَّةٌ  ۚ فَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏
3:123. “பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
3:123. பத்ரில் (நடந்த போரில்) நீங்கள் (எதிரிகளைவிட ஆயுதத்திலும், தொகையிலும்) குறைந்தவர்களாக இருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவனுக்குப் பயந்து (வழிப்பட்டு) நடங்கள்.
3:123. (இதற்கு முன்) பத்ரு போரிலே அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருந்தான். அப்போது நீங்கள் மிகவும் வலுவற்றவர்களாய் இருந்தீர்கள். எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி கொல்வதிலிருந்து விலகி வாழுங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துவோராய்த் திகழக்கூடும்.
3:123. பத்ரில் (நடந்த யுத்தத்தில்) நீங்கள் (எண்ணிக்கையிலும், ஆயுத பலத்திலும் மிகக்) குறைந்தவர்களாகயிருந்த சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தான், ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.
3:124 اِذْ تَقُوْلُ لِلْمُؤْمِنِيْنَ اَلَنْ يَّكْفِيَكُمْ اَنْ يُّمِدَّكُمْ رَبُّكُمْ بِثَلٰثَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ مُنْزَلِيْنَؕ‏
3:124. (நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று.
3:124. (நபியே! அப்பொழுது) நீங்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி "(வானத்திலிருந்து) இறங்கிய மூவாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?" என்று கூறியதையும் ஞாபகமூட்டுங்கள்.
3:124. “உங்களுடைய இறைவன் மூவாயிரம் வானவர்களை இறக்கி உங்களுக்கு உதவி செய்திருந்தது போதுமானதில்லையா?” என்று நீர் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டதை நினைவுகூரும்.
3:124. (நபியே!) விசுவாசங்கொண்டோரிடம், “(வானத்திலிருந்து) இறக்கி வைக்கப்பட்ட மூவாயிரம் மலக்குகளைக் கொண்டு, உங்கள் இரட்சகன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று நீர் கூறியதையும் நினைவுகூர்வீராக!
3:125 بَلٰٓى ۙ اِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا وَيَاْتُوْكُمْ مِّنْ فَوْرِهِمْ هٰذَا يُمْدِدْكُمْ رَبُّكُمْ بِخَمْسَةِ اٰلَافٍ مِّنَ الْمَلٰٓٮِٕكَةِ مُسَوِّمِيْنَ‏
3:125. ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.
3:125. நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து பொறுமையுடன் இருந்தால், இதே சமயத்தில் (எதிரிகள்) உங்கள் மீது அடர்ந்தேறியபோதிலும் (மூவாயிரம் என்ன?) அடையாள மிடப்பட்ட ஐயாயிரம் மலக்குகளால் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வான்.
3:125. ஆம். நீங்கள் நிலைகுலையாமலிருந்து இறைவனுக்கு அஞ்சிப் பணியாற்றினால் எந்தக் கணத்தில் பகைவர்கள் உங்கள் மீது படையெடுத்து வருகின்றார்களோ, அந்தக் கணத்தில் உங்கள் இறைவன் (மூவாயிரம் என்ன) போர் அடையாளமுடைய ஐயாயிரம் வானவர்களின் மூலம் உங்களுக்கு உதவி செய்வான்.
3:125. “ஆம், நீங்கள் பொறுமையுடனிருந்து (அல்லாஹ்வுக்கு) பயந்தும் கொள்வீர்களானால், அந்நேரத்திலேயே உங்களிடம் (உங்களைத்தாக்க) அவர்கள் வந்தபோதிலும், (மூவாயிரமென்ன?) போர்க்குறிகள் கொண்டவர்களான மலக்குகளில் ஐயாயிரத்தைக் கொண்டு உங்கள் இரட்சகன் உங்களுக்கு உதவி செய்வான்”
3:126 وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰى لَـكُمْ وَلِتَطْمَٮِٕنَّ قُلُوْبُكُمْ بِهٖ‌ؕ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِۙ‏
3:126. உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.
3:126. உங்களுடைய உள்ளங்கள் திருப்தியடையவும், உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவுமே அல்லாஹ் இவ்வுதவியை புரிந்தான். (அனைவரையும்) மிகைத்தவனும், ஞானமுடையவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே அன்றி (வேறு யாரிடம் இருந்தும் இந்த) உதவி (உங்களுக்கு) கிடைக்கவில்லை. (கிடைக்கவும் செய்யாது.)
3:126. அல்லாஹ் இந்தச் செய்தியை உங்களுக்கு அறிவித்தது, நீங்கள் மகிழ்ச்சி அடைவதற்காகவும், உங்கள் இதயங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காகவுமே! வெற்றி என்பது மிக்க வலிமையுடையவனும், நுண்ணறிவாளனுமான அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கின்றது.
3:126. உங்களுக்கு ஒரு நன்மாராயமாகவும், இதைக் கொண்டு உங்களுடைய இதயங்கள் திருப்தியடைவதற்காகவுமே, தவிர அல்லாஹ் இதை ஆக்கவில்லை, இன்னும் மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன், ஆகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி (உங்களுக்கு) இல்லை.
3:127 لِيَقْطَعَ طَرَفًا مِّنَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَوْ يَكْبِتَهُمْ فَيَنْقَلِبُوْا خَآٮِٕبِيْنَ‏
3:127. (அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்.
3:127. (அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததெல்லாம்) நிராகரிப்பவர்களில் ஒரு பாகத்தினரைக் குறைக்கவோ அல்லது அவர்கள் சிறுமைப்பட்டு (தோல்வி அடைந்தவர்களாகத்) திரும்பிச் சென்று விடுவதற்காகவேதான்.
3:127. அல்லாஹ் இத்தகைய உதவியை உங்களுக்குச் செய்வதெல்லாம், நிராகரித்தவர்களில் ஒரு பகுதியினரை அழிப்பதற்காக அல்லது அவர்களைப் படுதோல்வியில் ஆழ்த்தி அவர்கள் ஏமாற்றமடைந்தவர்களாய் திரும்பிச் செல்வதற்காகத்தான்!
3:127. (அவன் உங்களுக்கு இவ்வுதவி புரிந்ததன் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழித்துவிடுவதற்காக, அல்லது அவர்களைச் சிறுமைபடுத்துவதற்காகவேயாகும், அப்போது அவர்கள் நஷ்டமடைந்தவர்களாக (ஏமாந்து) திரும்பிச் சென்று விடுவர்.
3:128 لَيْسَ لَكَ مِنَ الْاَمْرِ شَىْءٌ اَوْ يَتُوْبَ عَلَيْهِمْ اَوْ يُعَذِّبَهُمْ فَاِنَّهُمْ ظٰلِمُوْنَ‏
3:128. (நபியே!) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்து விடலாம்; அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக.
3:128. (நபியே!) இவ்விஷயத்தில் உங்களுக்கு யாதொரு அதிகாரமுமில்லை. (அல்லாஹ்) அவர்களை (இஸ்லாமைத் தழுவும்படிச் செய்து) மன்னித்துவிடலாம். அல்லது அவர்கள் அநியாயக்காரர்களாக இருப்பதனால் அவர்களை வேதனையும் செய்யலாம்.
3:128. (நபியே! தீர்ப்பு வழங்குவதற்கான) அதிகாரத்தில் உமக்கு யாதொரு பங்குமில்லை; அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவதோ அல்லது அக்கிரமக்காரர்களாய் இருப்பதால் அவர்களுக்கு தண்டனை அளிப்பதோ அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு உட்பட்டவையாகும்.
3:128. (நபியே!) இக்காரியத்தில் (நாம் கட்டளையிட்டதைத் தவிர) உமக்கு யாதோர் அதிகாரமுமில்லை, ஒன்று அவன் அவர்களின் தவ்பாவை ஏற்றுக்கொள்ளலாம், அல்லது அவர்களை வேதனையும் செய்யலாம், அதன் காரணம், நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களாவர்.
3:129 وَلِلّٰهِ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ يَغْفِرُ لِمَنْ يَّشَآءُ وَ يُعَذِّبُ مَنْ يَّشَآءُ‌ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
3:129. வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்; இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.
3:129. (ஏனென்றால்) வானங்களில் உள்ளவை அனைத்தும், பூமியிலுள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன் விரும்பியவர்களை மன்னிப்பான்; அவன் விரும்பியவர்களைத் தண்டிப்பான். ஆனால், அல்லாஹ் மிக மன்னிப்பவனும் நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.
3:129. வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அவன் மன்னிப்பை அருள்வான்; மேலும் தான் நாடுகின்றவர்களுக்கு வேதனையை அளிப்பான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் கருணை பொழிபவனுமாய் இருக்கின்றான்.
3:129. வானங்களிலுள்ளவை, மற்றும் பூமியிலுள்ளவை அல்லாஹ்வுக்கே உரியவை, அவன் நாடியவருக்கு மன்னிப்பளிப்பான்; இன்னும் அவன் நாடியவரை வேதனை செய்வான், அல்லாஹ்வோ மிக்க மன்னிப்பவன். மிக கிருபையுடையவன்.
3:130 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰٓوا اَضْعَافًا مُّضٰعَفَةً ‌ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏
3:130. ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.
3:130. நம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி)த் தின்னாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதனைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
3:130. இறைநம்பிக்கை கொண்டவர்களே! பன்மடங்காகப் பெருகி வளரும் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நீங்கள் வெற்றி பெறக்கூடும்.
3:130. விசுவாசங்கொண்டோரே! அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டியாகவும் இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டியை உண்ணாதீர்கள், இன்னும் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள், (இதனைத் தவிர்த்துக்கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
3:131 وَاتَّقُوا النَّارَ الَّتِىْۤ اُعِدَّتْ لِلْكٰفِرِيْنَ‌ۚ‏
3:131. தவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
3:131. (நரக) நெருப்பிற்குப் பயந்து கொள்ளுங்கள். அது (இறைவனுடைய இக்கட்டளையை) நிராகரிப்பவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.
3:131. இன்னும் இறை மறுப்பாளர்களுக்குத் தயார் செய்து வைக்கப்பட்டுள்ள நெருப்புக்கு அஞ்சுங்கள்.
3:131. இன்னும் (நரக நெருப்பிற்குப் பயந்து கொள்ளுங்கள்.) அது எத்தகையதென்றால் நிராகரிப்போருக்காகத் தயார் படுத்தப்பட்டுள்ளது.
3:132 وَاَطِيْعُوا اللّٰهَ وَالرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ‌ۚ‏
3:132. அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.
3:132. அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்படிந்து நடங்கள். அதனால் நீங்கள் (அல்லாஹ்வின்) அன்பை அடையலாம்.
3:132. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (அதனால்) நீங்கள் கருணை காட்டப்படலாம்.
3:132. அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் கீழ்ப்படியுங்கள், (அதனால்) நீங்கள் (அல்லாஹ்வின்) கிருபைக்குள்ளாக்கப்படுவீர்கள்.
3:133 وَسَارِعُوْۤا اِلٰى مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمٰوٰتُ وَالْاَرْضُۙ اُعِدَّتْ لِلْمُتَّقِيْنَۙ‏
3:133. இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
3:133. உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும், சுவர்க்கத்துக்கும் விரைந்து செல்லுங்கள். அதன் விசாலம் வானங்கள், பூமியின் விசாலத்தைப் போன்றது. (அது) இறை அச்சம் உடையவர் களுக்காக(வே) தயார்படுத்தப்பட்டுள்ளது.
3:133. இறைவனிடமிருந்து வழங்கப்படும் மன்னிப்பு மற்றும் சுவனத்தின் பக்கம் (செல்லும் பாதையில்) விரைந்து செல்லுங்கள்! அது வானங்கள், பூமியின் அளவிற்கு விரிவானது. மேலும் அது இறையச்சமுடையோர்க்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
3:133. உங்கள் இரட்சகனின் மன்னிப்பின்பாலும், சுவனபதியின்பாலும் விரைந்து கொள்ளுங்கள், அதன் அகலமாகிறது வானங்களும், பூமியுமாகும், அது பயபக்தியுடையவர்களுக்காக(வே) தயார் செய்யப்பட்டுள்ளது.
3:134 الَّذِيْنَ يُنْفِقُوْنَ فِى السَّرَّآءِ وَالضَّرَّآءِ وَالْكٰظِمِيْنَ الْغَيْظَ وَالْعَافِيْنَ عَنِ النَّاسِ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‌ۚ‏
3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:134. அவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தானம் செய்து கொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கின்றான்.
3:134. அவர்கள் எத்தகையோர் எனில் வசதியுள்ள நிலையிலும், வசதியற்ற நிலையிலும் செலவழிப்பார்கள். மேலும் அவர்கள் சினத்தை அடக்கிக் கொள்வார்கள். மேலும் மக்(களின் தவறு)களை மன்னித்து விடுவார்கள். இத்தகைய உயர்ந்த பண்பினரை (முஹ்ஸின்களை) அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:134. அவர்கள் எத்தகையோரென்றால், செல்வ நிலையிலும், வறுமை நிலையிலும் செலவு செய்து கொண்டிருப்பார்கள், கோபத்தையும் அடக்கிக்கொள்ளக் கூடியவர்கள், மனிதர்(களின் குற்றங்)களையும் மன்னித்து விடக்கூடியவர்கள், அல்லாஹ்வோ (இத்தகைய) நன்மை செய்வோரை நேசிக்கின்றான்.
3:135 وَالَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَاحِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَاسْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ  وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ‏
3:135. தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.
3:135. அன்றி, அவர்கள் யாதொரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்களுடைய பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வையன்றி (இத்தகையவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.)
3:135. மேலும் அவர்கள் எத்தகையோர் எனில், மானக்கேடான செயலைச் செய்துவிட்டால் அல்லது (ஏதேனும் பாவங்கள் செய்து) தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டால், உடனே அவர்கள் அல்லாஹ்வை நினைத்து, தம் பாவங்களுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். (ஏனெனில்) அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னித்தருள்பவன் வேறு யார்? மேலும் தாம் செய்தவற்றில் அறிந்து கொண்டே பிடிவாதமாக இருக்கமாட்டார்கள்.
3:135. இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால், யாதொரு மானக்கேடான காரியத்தை அவர்கள் செய்து விட்டால், அல்லது (ஏதும் பாவமிழைத்துத்) தங்களுக்குத் தாங்களே அநீதமிழைத்துக் கொண்டால், (உடனே) அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள், இன்னும் (அவனிடமே) தங்களுடைய பாவங்களுக்காக மன்னிக்கத்தேடுவார்கள், (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்) அல்லாஹ்வைத் தவிர, (இத்தகையோரின்) குற்றங்களை மன்னிப்பவனும் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை(த்தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டே, (அதில்) நிலைத்திருக்கவுமாட்டார்கள். (உடனே அதிலிருந்து விலகி விடுவார்கள்).
3:136 اُولٰٓٮِٕكَ جَزَآؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا‌ ؕ وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَؕ‏
3:136. அத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும்; சுவனபதிகளும் ஆகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்; அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்; இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.
3:136. இத்தகையவர்களுக்குப் பிரதிபலன், அவர்கள் இறைவனுடைய மன்னிப்பும், நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் சுவனபதிகளும் ஆகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கிவிடுவார்கள். நன்மை செய்தவர்களின் கூலியும் நன்றே!
3:136. இத்தகையோரின் கூலி, அவர்களுடைய இறைவனிட மிருந்து கிடைக்கின்ற மன்னிப்பும், கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களுமாகும். அவர்கள் அங்கு என்றென்றும் தங்கி வாழ்வார்கள். நற்செயல்கள் புரிவோருக்கான கூலி எத்துணை நன்றாய் இருக்கின்றது!
3:136. அத்தகையோர் - அவர்களுடைய கூலி அவர்களுடைய இரட்சகனிடமிருந்து மன்னிப்பு, மற்றும் சுவனபதிகாளாகும், இவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவர்கள் அவற்றில் நிரந்தரமாக (த்தங்கி) இருப்பவர்கள், (இத்தகு) காரியங்கள் செய்தோரின் கூலி அது மிக நல்லது.
3:137 قَدْ خَلَتْ مِنْ قَبْلِكُمْ سُنَنٌ ۙ فَسِيْرُوْا فِى الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ‏
3:137. உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன; ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.
3:137. உங்களுக்கு முன்னரும் (இத்தகைய) பல நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. (ஆகவே) நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இறைவனுடைய வசனங்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள்.
3:137. உங்களுக்கு முன் பல்வேறு காலகட்டங்கள் கடந்து சென்றிருக்கின்றன. பூமியில் சுற்றித் திரிந்து (அல்லாஹ்வின் சட்டதிட்டங்களையும், அறிவுரைகளையும்) பொய் என்று கூறியவர்களின் இறுதி முடிவு என்னவாயிற்று என்பதைப் பாருங்கள்!
3:137. திட்டமாக உங்களுக்கு முன்னரும் (இத்தகைய) பலவழிமுறைகள் சென்றிருக்கின்றன, ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (அல்லாஹ்வுடைய வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்.
3:138 هٰذَا بَيَانٌ لِّلنَّاسِ وَهُدًى وَّمَوْعِظَةٌ لِّلْمُتَّقِيْنَ‏
3:138. இது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.
3:138. இது (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மையைத்) தெளிவாக்கக் கூடியதாகவும், (சிறப்பாக) இறை அச்சமுடைய வர்களுக்கு வழிகாட்டியாகவும், நல்லுபதேசமாகவும் இருக்கின்றது.
3:138. இது மக்களுக்குரிய தெளிவான விளக்கமாகும். மேலும், இறைவனை அஞ்சி வாழ்வோர்க்கு வழிகாட்டியும், அறவுரையுமாகும்.
3:138. இது, (பொதுவாக) மனிதர்களுக்கு (உண்மை) விளக்கமாகவும், (குறிப்பாக) பயபக்தியுடையோர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும், நல்லுபதேசமாகவும் இருக்கிறது.
3:139 وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
3:139. எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
3:139. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.
3:139. நீங்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் இறைநம்பிக்கையுடையோராயின், நீங்களே மேலோங்குவீர்கள்.
3:139. (விசுவாசங்கொண்டோரே!) நீங்கள் தைரியத்தை இழந்துவிட வேண்டாம், கவலையும் பட வேண்டாம், (உண்மையாகவே) நீங்கள் விசுவாசங் கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் தாம் மிக்க மேலானவர்கள்.
3:140 اِنْ يَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ‌ؕ وَتِلْكَ الْاَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِۚ وَلِيَـعْلَمَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ‌ؕ وَاللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَۙ‏
3:140. உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
3:140. நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) காயமடைந்திருக்கின்றனர். இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறி மாறி வரும்படி நாம்தாம் செய்கின்றோம். ஏனென்றால், உங்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்(தறிவிப்ப) தற்காகவுமே (இவ்வாறு செய்கின்றான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
3:140. (இப்பொழுது) உங்களுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்றால், இதற்கு முன்னர் (உங்கள்) எதிரணியினருக்கும் இதேபோன்ற காயம் ஏற்படத்தான் செய்தது. இவையெல்லாம் கால(த்தின் மாற்ற)ங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறிமாறி வரச் செய்கின்றோம். (உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கையுடையவர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உண்மையிலேயே சத்தியத்திற்குச் சான்று பகர்கின்றவர்களை (ஷுஹதா) உங்களிலிருந்து வேறுபடுத்துவதற்காகத் தான்! ஏனெனில் அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
3:140. உங்களுக்கு (உஹதுப்போரில் தோல்வியுற்றுக்) காயம் ஏற்பட்டதென்றால் (அதைப் பற்றி அதைரியமடையாதீர்கள், ஏனென்றால்,) அந்த ஜனங்களுக்கும், இதைப் போன்றே (பத்ரில் தோல்வியுற்றுக்) காயம் ஏற்பட்டுள்ளது, அந்த (சோதனையான) நாட்களை மனிதர்களுக்கிடையில் மாறி மாறி வரும்படி நாம் செய்கின்றோம், ஏனென்றால், (உங்களில்) உண்மையாகவே விசுவாசங் கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறிவித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரைத் தத்தம் செய்யும் மாபெரும்) தியாகிகளை அவன் எடு(த்தறிவி)ப்பதற்காகவுமே இவ்வாறு செய்கின்றான்). இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
3:141 وَلِيُمَحِّصَ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا وَيَمْحَقَ الْكٰفِرِيْنَ‏
3:141. நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.
3:141. நிராகரிப்பவர்களை அழித்து உண்மை நம்பிக்கை யாளர்களை வடிகட்டி எடுப்பதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்.)
3:141. (இவ்வாறெல்லாம் சோதனை செய்வதன் மூலம்) நம்பிக்கையாளர்களைப் பிரித்துத் தேர்ந்தெடுக்கவும், நிராகரிப்போரை நசுக்கவும் அல்லாஹ் நாடியிருந்தான்.
3:141. விசுவாசங்கொண்டிருந்தார்களே, அவர்களை அல்லாஹ் பரிசுத்தமாக்குவதற்காகவும், நிராகரிப்போர்களை அழிப்பதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்).
3:142 اَمْ حَسِبْتُمْ اَنْ تَدْخُلُوا الْجَـنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللّٰهُ الَّذِيْنَ جَاهَدُوْا مِنْكُمْ وَيَعْلَمَ الصّٰبِرِيْنَ‏
3:142. உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
3:142. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) போர் புரிபவர்கள் யார்? (கஷ்டங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார்? என்பதை அல்லாஹ் (பரிசோதித்து) அறிவதற்கு முன்னதாகவே நீங்கள் சுவர்க்கம் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா?
3:142. உங்களில் யார் அவனுடைய பாதையில் முனைப்போடு போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியாமலும், உங்களில் நிலைகுலையாமல் நிற்பவர்கள் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் (எளிதில்) சுவனம் புகுந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா?
3:142. (விசுவாசங்கொண்டோரே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) யுத்தம் செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் பரிசோதித்து அறியாமலும் இன்னும் (துன்பங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார், என்பதை அவன் அறியாமலும் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களா?
3:143 وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّوْنَ الْمَوْتَ مِنْ قَبْلِ اَنْ تَلْقَوْهُ فَقَدْ رَاَيْتُمُوْهُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ‏
3:143. நீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்களே! இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்?)
3:143. நீங்கள் இறந்து விடுவதற்கு முன்னதாகவே, (அல்லாஹ்வின் பாதையில் உங்கள்) உயிரை அர்ப்பணம் செய்ய விரும்பிக் கொண்டிருந்தீர்களே! (இப்போது) அது உங்கள் கண் முன் இருப்பதைத் திட்டமாகப் பார்த்து விட்டீர்கள். (ஆகவே இந்த போரில் ஏன் தயங்குகின்றீர்கள்?)
3:143. மரணம் உங்கள் எதிரில் வருவதற்கு முன்பு நீங்கள் நிச்சயமாக அதனை விரும்பிக் கொண்டிருந்தீர்கள். இதோ, இப்பொழுது அது உங்கள் முன் வந்துவிட்டது! அதனை நீங்கள் கண்கூடாய்ப் பார்த்துவிட்டீர்கள்.
3:143. மேலும், நீங்கள் மரணத்தை – அதை நீங்கள் சந்திப்பதற்கு முன்னதாக திட்டமாக ஆசிக்கக் கூடியவர்களாக இருந்தீர்கள், ஆகவே (கண்ணுக்கெதிரில்) நீங்கள் கண்டவர்களாக இருக்க, அதை திட்டமாக நீங்கள் பார்த்து விட்டீர்கள், (எனவே, இந்த யுத்தத்தில் ஏன் தயங்குகின்றீர்கள்?)
3:144 وَمَا مُحَمَّدٌ اِلَّا رَسُوْلٌ  ۚ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ‌ؕ اَفَا۟ٮِٕنْ مَّاتَ اَوْ قُتِلَ انْقَلَبْتُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ‌ؕ وَمَنْ يَّنْقَلِبْ عَلٰى عَقِبَيْهِ فَلَنْ يَّضُرَّ اللّٰهَ شَيْئًا‌ ؕ وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏
3:144. முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்; அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்; அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.
3:144. முஹம்மது (நபி) ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக் கூடிய இறைவன்) அல்ல. அவருக்கு முன்னரும் (இவ்வாறே) பல தூதர்கள் சென்றிருக்கின்றனர். அவர் இறந்துவிட்டால் அல்லது வெட்டப்பட்டு விட்டால் நீங்கள் புறங்காட்டிச் சென்று விடுவீர்களோ? (அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்றுவிட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கி விடமாட்டான். நன்றியறிபவர்களுக்கு அல்லாஹ் அதிசீக்கிரத்தில் (நற்)கூலியைத் தருவான்.
3:144. முஹம்மத் ஒரு தூதரேயன்றி வேறல்லர். திண்ணமாக, அவருக்கு முன்பும் தூதர்கள் பலர் சென்றுள்ளனர். எனவே அவர் மரணமெய்திவிட்டால், அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் முந்திய வாழ்க்கைக்குத் திரும்பிச் சென்று விடுவீர்களா? நினைவிருக்கட்டும்! எவன் அவ்வாறு திரும்பிச் செல்கின்றானோ, அவனால் அல்லாஹ்விற்கு எத்தகையத் தீங்கும் செய்துவிட முடியாது. ஆயினும், நன்றி செலுத்தி வாழ்பவர்க்கு அல்லாஹ் மிக விரைவில் அதற்குரிய கூலியை வழங்குவான்.
3:144. இன்னும், முஹம்மது ஒரு தூதரேயன்றி (இறக்காமல் இருக்கக்கூடியவர்) இல்லை, அவருக்கு முன்னரும், (இவ்வாறே) தூதர்கள் பலர் திட்டமாகச் சென்றிருக்கின்றனர், அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டுவிட்டால் நீங்கள் உங்கள் குதிங்கால்களின் மேல் (புறங்காட்டித்)திரும்பிச் சென்று) விடுவீர்களா? (அவ்வாறு) எவரேனும் தனது இரு குதிங்கால்களின் மீது (புறங்காட்டித்)திரும்பிச் சென்று) விட்டால், அதனால் அவர் அல்லாஹ்வுக்கு எந்த இடையூரும் செய்யவேமாட்டார், மேலும், நன்றி செலுத்துவோருக்கு அல்லாஹ் (நற்)கூலியைத் தருவான்.
3:145 وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَ مَنْ يُّرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَا ‌ۚ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ‌ؕ وَسَنَجْزِى الشّٰكِرِيْنَ‏
3:145. மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை; எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்; இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாக நற்கூலி கொடுக்கிறோம்.
3:145. யாதொரு ஆத்மாவும் அல்லாஹ்வின் அனுமதியின்றி இறப்பதில்லை. இது தவணை நிர்ணயிக்கப்பட்ட விதியாகும். எவர் (தன் செயலுக்கு) இந்த உலகத்தின் நன்மையை (மட்டும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை (மட்டும்) அளிப்போம். எவர் மறுமையின் நன்மையை(யும்) விரும்புகின்றாரோ அவருக்கு அதனை(யும்) வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் அதிசீக்கிரத்தில் நற்பயனை வழங்குவோம்.
3:145. எந்த உயிரினமும் அல்லாஹ்வுடைய உத்தரவின்றி இறக்க முடியாது. மரண நேரம் விதிக்கப்பட்டுவிட்டது. எவர் உலகாயத லாபங்களைக் கருதிச் செயலாற்றுகின்றாரோ அவருக்கு அதிலிருந்தே நாம் வழங்குவோம். எவர் மறுமைப் பேற்றைக் கருதிச் செயலாற்றுகின்றாரோ அவருக்கு அதிலிருந்தே நாம் வழங்குவோம். மேலும், நன்றி செலுத்துவோர்க்கு அதிவிரைவில் நாம் கூலி வழங்கிடுவோம்.
3:145. மேலும், எந்த ஆன்மாவுக்கும் ஏற்கனவே (அதற்கு) நேரம் குறிக்கப்பட்ட (அல்லாஹ்வின்) எழுத்துப்படி, அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டே தவிர, அது மரணிப்பதற்கில்லை, மேலும், எவர் (தன் செயலுக்கு) இவ்வுலகத்தின் நன்மையை நாடுகிறாரோ) அவருக்கு, அதிலிருந்தே வழங்குவோம், இன்னும் எவர் மறுமையின் நன்மையை நாடுகிறாரோ அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம், நன்றி செலுத்துவோருக்கு நாம் நற்கூலியும் அளிப்போம்.
3:146 وَكَاَيِّنْ مِّنْ نَّبِىٍّ قٰتَلَ ۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌ ۚ فَمَا وَهَنُوْا لِمَاۤ اَصَابَهُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ‏
3:146. மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
3:146. எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்து விடவும் இல்லை. (இவ்வாறு கஷ்டங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:146. (இதற்கு முன்பு) எத்தனையோ இறைத்தூதர்(களும் அவர்)களோடு சேர்ந்து இறை அன்பர்கள் பலரும் போர் புரிந்துள்ளார்கள். அல்லாஹ்வின் வழியில், அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களினால் அவர்கள் மனந்தளர்ந்து விடவில்லை; ஊக்கம் குன்றிவிடவுமில்லை. (அசத்தியத்திற்கு முன்) அவர்கள் பணிந்திடவுமில்லை. நிலைகுலையாத இத்தகைய பொறுமையாளர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:146. மேலும், எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் அல்லாஹ்வின் நல்லடியார்கள் கொண்ட அநேகம்பேர் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) யுத்தம் செய்திருக்கின்றனர், ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்ததனால்) தங்களுக்கு (துன்பங்கள்) ஏற்பட்டவற்றின் காரணமாக அவர்கள் தைரியமிழந்துவிடவில்லை, பலவீவனமடைந்துவிடவுமில்லை, (எதிரிகளுக்கு) ஐக்கியப்பட்டுவிடவுமில்லை, மேலும், (இவ்வாறு துன்பங்களைச் சகித்துக் கொள்ளும்) பொறுமையாளர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:147 وَمَا كَانَ قَوْلَهُمْ اِلَّاۤ اَنْ قَالُوْا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَاِسْرَافَنَا فِىْۤ اَمْرِنَا وَ ثَبِّتْ اَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ‏
3:147. மேலும், “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக! காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக” என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.
3:147. (இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் இறைவனை நோக்கி) "எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்பு மீறிய (குற்றத்)தையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றி பெற நீ எங்களுக்கு உதவிபுரிவாயாக!" என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) கூறியதில்லை.
3:147. அவர்களுடைய பிரார்த்தனை இதுவாகத்தான் இருந்தது: “எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் பிழைகளையும் நீ மன்னித்தருள்வாயாக! எங்கள் பணிகளில் உன் வரம்பை மீறி நாங்கள் செய்தவற்றை நீ மன்னிப்பாயாக! மேலும் எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! சத்தியத்தை நிராகரிப்பவர்களை வெற்றிகொள்ள எங்களுக்கு நீ உதவி செய்வாயாக!”
3:147. (இத்தகைய சந்தர்ப்பங்களில், அவர்கள் தங்கள் இரட்சகனிடம்,) “எங்கள் இரட்சகனே! எங்கள் பாவங்களையும், எங்கள் செயல்களில் நாங்கள் வரம்புமீறிய (குற்றத்)தையும் நீ எங்களுக்கு மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (யுத்தத்தில் நழுவாது) நீ உறுதிப்படுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் சமுதாயத்தினர்க்கு எதிராக (வெற்றி கொள்ள) நீ எங்களுக்கு உதவியும் புரிவாயாக” என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) அவர்களின் கூற்றாக இருக்கவில்லை.
3:148 فَاٰتٰٮهُمُ اللّٰهُ ثَوَابَ الدُّنْيَا وَحُسْنَ ثَوَابِ الْاٰخِرَةِ‌ ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُحْسِنِيْنَ‏
3:148. ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்; இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.
3:148. ஆதலால் அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் வழங்கினான். அல்லாஹ் (இத்தகைய) நல்லவர்களையே நேசிக்கின்றான்.
3:148. இறுதியில் இவர்களுக்கு அல்லாஹ் இவ்வுலக நன்மைகளையும் அளித்தான்; அதைவிட உன்னதமான மறுமைப் பேறுகளையும் வழங்கினான். இத்தகைய நற்செயல்கள் புரியும் முஹ்ஸின்கள் தாம் அல்லாஹ்வின் விருப்பத்திற்கு உரியவர்கள்.
3:148. ஆதலால், அவர்களுக்கு இவ்வுலகத்தின் நன்மையையும் மறுமையின் நன்மையில் அழகானதையும் கொடுத்தான், இன்னும் அல்லாஹ் (இத்தகைய) நற்கருமங்கள் செய்வோரை நேசிக்கின்றான்.
3:149 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنْ تُطِيْعُوا الَّذِيْنَ كَفَرُوْا يَرُدُّوْكُمْ عَلٰٓى اَعْقَابِكُمْ فَتَـنْقَلِبُوْا خٰسِرِيْنَ‏
3:149. நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்; அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.
3:149. நம்பிக்கையாளர்களே! (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை (உங்கள் நம்பிக்கையி லிருந்து நீங்கள் விலகி)ப் பின் செல்லும்படி திருப்பி விடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே மாறிவிடுவீர்கள்.
3:149. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிராகரிக்கும் போக்கினை மேற்கொண்டவர்களின் கூற்றுகளை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை முந்திய வாழ்க்கைக்குத் திருப்பி விடுவார்கள். மேலும் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள். (அவர்களுடைய கூற்று தவறானவையே!
3:149. விசுவாசங்கொண்டோரே! (அல்லாஹ்வை) நிராகரிப்போருக்கு நீங்கள் கீழ்படிந்து நடந்தால் அவர்கள் உங்களை (உங்கள் விசுவாசத்திலிருந்து நீங்கள் விலகி) குதிங்கால்களின் மீது (பின் செல்லும்படி) திருப்பிவிடுவார்கள், அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகத் திரும்பிவிடுவீர்கள்.
3:150 بَلِ اللّٰهُ مَوْلٰٮكُمْ‌ۚ وَهُوَ خَيْرُ النّٰصِرِيْنَ‏
3:150. (இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.
3:150. (இவர்கள்) அல்ல, அல்லாஹ்தான் உங்கள் பாதுகாவலன். அவன் உதவி செய்பவர்களில் மிகச் சிறந்தவனுமாக இருக்கின்றான்.
3:150. உண்மை என்னவெனில்) அல்லாஹ்தான் உங்களின் பாதுகாவலன். மேலும் அவன் உதவி செய்வோரில் மிகச் சிறந்தவன்.
3:150. (இவர்கள் அல்ல, அல்லாஹ்தான்) உங்கள் பாதுகாவலன், இன்னும், அவனே உதவிசெய்வோரில் மிகச்சிறந்தவன்.
3:151 سَنُلْقِىْ فِىْ قُلُوْبِ الَّذِيْنَ كَفَرُوا الرُّعْبَ بِمَاۤ اَشْرَكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا ‌‌ۚ وَمَاْوٰٮهُمُ النَّارُ‌ؕ وَ بِئْسَ مَثْوَى الظّٰلِمِيْنَ‏
3:151. விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம்; ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்; அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.
3:151. நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் அதிசீக்கிரத்தில் நாம் திகிலை உண்டுபண்ணி விடுவோம். ஏனென்றால், அவர்கள் இணை வைப்பதற்கு அல்லாஹ் எவ்வித ஆதாரமும் அவர்களுக்கு அளிக்காதிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றார்கள். இவர்கள் தங்குமிடம் நரகம்தான். (நரகத்திலும்) இந்த அநியாயக்காரர்கள் தங்குமிடம் மிகக் கெட்டது.
3:151. (சத்தியத்தை) நிராகரிப்போரின் உள்ளங்களில் வெகுவிரைவில் நாம் பேரச்சத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில், இறைவனுக்கு இணையானவை என்று நிரூபிக்கும் எந்த ஆதாரத்தையும் எவற்றுக்கு அல்லாஹ் இறக்கிடவில்லையோ அவற்றை அவனுடன் இணையாக்கிவிட்டார்கள். இவர்கள் இறுதியாகப் போய்ச் சேருமிடம் நரகமே! அக்கிரமக்காரர்கள் சேர இருக்கும் இந்த இடம் எத்துணைக் கெட்டது!
3:151. எதற்கு அவன் சான்றை இறக்கி வைக்கவில்லையோ, அதை அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்ததன் காரணமாக நிராகரித்து விட்டார்களே, அவர்களுடைய இதயங்களில், நாம் திகிலைப் போடுவோம், அன்றியும் அவர்கள் தங்குமிடம் நரகந்தான், மேலும், இந்த அநியாயக்காரர்களின் தங்குமிடம் (அது) மிகக் கெட்டது.
3:152 وَلَقَدْ صَدَقَكُمُ اللّٰهُ وَعْدَهٗۤ اِذْ تَحُسُّوْنَهُمْ بِاِذْنِهٖ‌ۚ حَتّٰۤی اِذَا فَشِلْتُمْ وَتَـنَازَعْتُمْ فِى الْاَمْرِ وَعَصَيْتُمْ مِّنْۢ بَعْدِ مَاۤ اَرٰٮكُمْ مَّا تُحِبُّوْنَ‌ؕ مِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَّنْ يُّرِيْدُ الْاٰخِرَةَ  ‌‌‌ۚ ثُمَّ صَرَفَكُمْ عَنْهُمْ لِيَبْتَلِيَكُمْ‌ۚ وَلَقَدْ عَفَا عَنْكُمْ‌ؕ وَ اللّٰهُ ذُوْ فَضْلٍ عَلَى الْمُؤْمِنِيْنَ‏
3:152. இன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்; நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்தரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்; நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்; உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள்; இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்; பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்; நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான்; மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.
3:152. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் கட்டளைப்படி (உஹுத் போரில்) நீங்கள் எதிரிகளை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்த சமயத்தில் (உங்களுக்கு உதவி புரிந்து) அல்லாஹ் தன்னுடைய வாக்கை நிச்சயமாக நிறைவேற்றி வைத்தான். ஆனால், நீங்கள் விரும்பியதை (அதாவது வெற்றியை) அல்லாஹ் உங்களுக்குக் காண்பித்ததன் பின்னர் (நபியின் கட்டளைக்கு) மாறு செய்து அவ்விஷயத்தில் நீங்கள் உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு, (நபி உங்களை நிறுத்தி வைத்திருந்த கணவாயிலிருந்து விலகி இறுதியில்) தைரியத்தை இழந்துவிட்டீர்கள். உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உண்டு. மறுமையை விரும்புபவர்களும் உண்டு. ஆகவே உங்களைச் சோதிப்பதற்காக (அவர்களைத் துரத்திச் சென்ற உங்களை) அவர்களைவிட்டு பின்னடையும்படி செய்தான். (இதன் பின்னரும்) நிச்சயமாக அல்லாஹ் உங்(களுடைய குற்றங்)களை மன்னித்து விட்டான். ஏனென்றால், அல்லாஹ் நம்பிக்கையாளர்கள் மீது அருள் புரிபவனாக இருக்கின்றான்.
3:152. அல்லாஹ் உங்களுக்கு (உதவி செய்வதாகக் கூறிய) தனது வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டான். துவக்கத்தில் அவனது அனுமதியின்படி அவர்களை நீங்கள்தாம் (போரில்) வெட்டி வீழ்த்தினீர்கள்! ஆனால் இறுதியில் நீங்கள் ஊக்கமிழந்து உங்களுடைய பணிகள் குறித்து ஒருவருக்கொருவர் பிணங்கிக் கொண்டீர்கள்; மேலும் நீங்கள் மோகம் கொண்டிருந்தவற்றை (போர்ப் பொருட்களை) அல்லாஹ் உங்கள் கண்ணெதிரே காட்டிய உடனேயே (உங்கள் தலைவரின் கட்டளைக்கு) நீங்கள் மாறு செய்தீர்கள். ஏனெனில் உங்களில் சிலர் இம்மையை விரும்புவோராய் இருந்தனர்; வேறு சிலர் மறுமையை விரும்புவோராய் இருந்தனர். பிறகு அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு இறைமறுப்பாளர்களை எதிர்த்து நிற்க முடியாத வண்ணம் உங்களை திசை திருப்பிவிட்டான். இதன் பிறகும் அவன் உங்களை மன்னித்தருளினான். ஏனெனில், அல்லாஹ் இறைநம்பிக்கையுடையோர் மீது பெரிதும் கருணை பொழிபவனாக இருக்கின்றான்.
3:152. இன்னும், அவன் அனுமதிகொண்டு (எதிரிகளாகிய) அவர்களை நீங்கள் கொன்றழித்த சமயத்தில் அல்லாஹ் திட்டமாக தனது வாக்குறுதியை உங்களுக்கு உண்மையாக்கி வைத்தான், முடிவாக நீங்கள் கோழைகளாகி உங்களுக்கிடப்பட்ட கட்டளையில் தர்க்கித்துக் கொண்டுமிருந்தீர்கள், நீங்கள் எதை விரும்பினீர்களோ அதை அவன் உங்களுக்குக் காட்டிய பிறகும் மாறு செய்யலானீர்கள், உங்களில் இம்மையை விரும்புவோரும் உண்டு, உங்களில் மறுமையை விரும்புவோரும் உண்டு, பின்னர் உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளை விட்டும் உங்களைத் திருப்பினான், மேலும், திட்டமாக அவன் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிட்டான். அல்லாஹ்வே விசுவாசிகள் மீது பேரருளுடையவன்.
3:153 اِذْ تُصْعِدُوْنَ وَلَا تَلْوٗنَ عَلٰٓى اَحَدٍ وَّالرَّسُوْلُ يَدْعُوْكُمْ فِىْۤ اُخْرٰٮكُمْ فَاَثَابَكُمْ غَمًّا ۢ بِغَمٍّ لِّـكَيْلَا تَحْزَنُوْا عَلٰى مَا فَاتَكُمْ وَلَا مَاۤ اَصَابَكُمْ‌ؕ وَاللّٰهُ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏
3:153. (நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள்; ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான்; ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
3:153. (உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு பின்னால் இருந்தவாறு "(என்னிடம் வாருங்கள்!) வாருங்கள்" என்று உங்களை(க் கூவி) அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில் நீங்கள் ஒருவரையுமே திரும்பிப்பாராது வெருண்டோடிக் கொண்டிருந்ததையும் சிந்தித்துப் பாருங்கள். (நம் தூதருக்கும் நீங்கள் உண்டுபண்ணிய) இத்துயரத்தின் காரணமாக உங்களுக்கும் (தோல்வியின்) துயரத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான். ஏனென்றால், உங்களிடமிருந்து (யாதொரு பொருள்) தவறிவிட்டதைப் பற்றியும், உங்களுக்கு ஏற்பட்ட (நஷ்டத்)தைப் பற்றியும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்துவிடாமல் இருப்பதற்(குரிய சகிப்புத் தன்மையை உங்களுக்கு உண்டுபண்ணுவதற்)காகவே (இத்தகைய கஷ்டத்தை உங்களுக்குக் கொடுத்தான்.) நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தே இருக்கின்றான்.
3:153. இறைத்தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காதவாறு ஓடிக் கொண்டிருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். இதன் விளைவாக அல்லாஹ் உங்களுக்குத் துன்பத்திற்கு மேல் துன்பத்தைக் கொடுத்தான். ஏனெனில், உங்களை விட்டு நழுவிப் போனவை பற்றியும், உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டது பற்றியும், (இனிமேல்) நீங்கள் வருந்தக் கூடாது எனும் படிப்பினையை இதிலிருந்து பெறவேண்டும் என்பதற்காக! அல்லாஹ் நீங்கள் செய்வதனைத்தையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.
3:153. (உஹத் யுத்தத்தில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்கள் பின்னிருந்துக்கொண்டு (“என்னிடம் வாருங்கள்” என்று) உங்களை அழைத்துக் கொண்டிருந்த சமயத்தில்) நீங்கள் ஒருவரையுமே திரும்பிப் பாராது (வெருண்டோடி மலையில்) ஏறிக்கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள், அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் உண்டு பண்ணிய இத்) துக்கத்தின் காரணமாக, உங்களுக்கும் (தோல்வியின்) துக்கத்தையே பிரதிபலனாகக் கொடுத்தான், ஏனென்றால் (இனி) உங்களுக்கு எது தவறிவிட்டதோ, அதன் மீதும், உங்களுக்கு எது ஏற்பட்டுவிட்டதோ, அதன் மீதும் நீங்கள் கவலை கொள்ளாதிருப்பதற்காகவேயாகும், மேலும், நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு உணர்பவன்.
3:154 ثُمَّ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنْۢ بَعْدِ الْغَمِّ اَمَنَةً نُّعَاسًا يَّغْشٰى طَآٮِٕفَةً مِّنْكُمْ‌ۙ وَطَآٮِٕفَةٌ قَدْ اَهَمَّتْهُمْ اَنْفُسُهُمْ يَظُنُّوْنَ بِاللّٰهِ غَيْرَ الْحَـقِّ ظَنَّ الْجَـاهِلِيَّةِ‌ؕ يَقُوْلُوْنَ هَلْ لَّنَا مِنَ الْاَمْرِ مِنْ شَىْءٍ‌ؕ قُلْ اِنَّ الْاَمْرَ كُلَّهٗ لِلّٰهِ‌ؕ يُخْفُوْنَ فِىْۤ اَنْفُسِهِمْ مَّا لَا يُبْدُوْنَ لَكَ‌ؕ يَقُوْلُوْنَ لَوْ كَانَ لَنَا مِنَ الْاَمْرِ شَىْءٌ مَّا قُتِلْنَا هٰهُنَا ‌ؕ قُلْ لَّوْ كُنْتُمْ فِىْ بُيُوْتِكُمْ لَبَرَزَ الَّذِيْنَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ اِلٰى مَضَاجِعِهِمْ‌ۚ وَلِيَبْتَلِىَ اللّٰهُ مَا فِىْ صُدُوْرِكُمْ وَلِيُمَحِّصَ مَا فِىْ قُلُوْبِكُمْ‌ؕ وَاللّٰهُ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏
3:154. பிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்; உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது; மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்: “இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா?” (என்று, அதற்கு) “நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது” என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்; அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்: “இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;” “நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையும் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்!” என்று (நபியே!) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சுத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
3:154. (நம்பிக்கையாளர்களே!) இத்துயரத்திற்குப் பின்னர் (அல்லாஹ்) உங்களுக்கு ஆறுதலை அளிக்கக்கூடிய நித்திரையை இறக்கி வைத்தான். உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினருக்கோ அவர்களுடைய கவலையே பெரிதாகி மடையர்கள் எண்ணுவதைப்போல அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாதவைகளை எல்லாம் (தவறாக) எண்ண ஆரம்பித்து "நம்மிடம் (இதற்குப் பரிகாரம் செய்ய) அதிகாரம் ஏதும் உண்டா?" என்று கேட்டனர். (இதற்கு) "எல்லா அதிகாரங்களும் அல்லாஹ்வுடையதே!" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள். (இவையன்றி) அவர்கள் உங்களுக்கு வெளியாக்காத பல விஷயங்களையும் தங்கள் மனதில் மறைத்துக் கொண்டு "நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால், இங்கு வந்து (இவ்வாறு) நாம் வெட்டப்பட்டிருக்க மாட்டோம்" எனவும் கூறுகின்றனர். (இதற்கு நபியே! அந்நயவஞ்சகர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உங்கள் வீட்டில் (தங்கி) இருந்தபோதிலும் எவர்கள் மீது வெட்டப்பட்டே இறக்க வேண்டுமென்று விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தாங்கள் வெட்டப்பட வேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே தீருவார்கள்" என்றும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) அல்லாஹ் உங்கள் மனதிலுள்ளதைப் பரிசோதனை செய்வதற் காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்கு வதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படிச் செய்தான் என்றும் கூறுங்கள். உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிவான்.
3:154. பின்னர் இத் துன்பத்திற்குப் பிறகு மன ஆறுதலை அளிக்கக்கூடிய சிற்றுறக்கத்தை அல்லாஹ் உங்களுக்கு அருளினான். உங்களில் ஒரு குழுவினரை அது ஆட்கொண்டது. ஆனால் மற்றும் சிலரோ தமது நலன்களையே முக்கியமாகக் கருதி உண்மைக்குப் புறம்பாக, அல்லாஹ்வைப் பற்றி அறியாமை மிக்க பல யூகங்களைக் கொண்டிருந்தனர். “இந்த விவகாரங்களில் எங்களுக்கும் ஏதாவது பங்குண்டா?” என்று அவர்கள் வினவுகின்றனர். நீர் கூறும்: “(யாருக்கும் எத்தகையப் பங்குமில்லை.) இவற்றின் அனைத்து அதிகாரங்களும் நிச்சயமாக அல்லாஹ்வின் கைவசமே உள்ளன.” உண்மையில் அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை உம்மிடம் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் கேட்டதன் பொருள் இதுதான்: “தலைமையதிகாரங்களில் எங்களுக்கும் சிறிது பங்கு இருந்திருந்தால், நாங்கள் இங்குக் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” என்று அவர்கள் சொல்கின்றார்கள். அதற்கு நீர் கூறும்: “நீங்கள் உங்கள் வீடுகளில் அடைந்திருந்தாலும் யாருடைய விதியில் மரணம் எழுதப்பட்டு விட்டதோ, அவர்கள் தம் மரணக்களங்களை நோக்கி வந்தே தீருவர்!” மேலும் அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றைச் சோதிக்கவும் உங்கள் இதயங்களில் படிந்திருக்கும் மாசுகளை அகற்றவுமே இவ்வாறெல்லாம் நிகழும்படிச் செய்தான். அல்லாஹ் உங்கள் உள்ளங்களின் நிலையை நன்கறிபவனாக இருக்கின்றான்.
3:154. பிறகு, விசுவாசங்கொண்டோரே! இத்துக்கத்திற்குப் பின்னர், (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு அமைதியை அளிக்கக் கூடிய சிறு தூக்கத்தை இறக்கி வைத்தான், உங்களில் ஒரு கூட்டத்தினரை அது சூழ்ந்து கொண்டது, மற்றதொரு கூட்டத்தினரோ, திட்டமாக அவர்களுடைய மனங்கள் அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தி விட்டன, அறியாமைக் காலத்தின் எண்ணம் போல, அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாததை (தவறாக) எண்ண ஆரம்பித்து “காரியத்தில் நமக்கேதும் உண்டா?” என்று அவர்கள் கூறினர், (அதற்கு) “நிச்சயமாக காரியம்-அது அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே” என்று (நபியே!) நீர் கூறுவீராக! (இவையன்றி) அவர்கள் உமக்கு வெளியிடாததை தங்கள் மனங்களில் மறைத்திருக்கின்றனர், நம்மிடம் ஏதும் அதிகாரம் இருந்திருந்தால் இங்கு வந்து (இவ்வாறு) நாம் கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” எனக் கூறுகின்றனர், (இதற்கு நபியே! அந்த முனாஃபிக்குகளிடம்) நீர் கூறுவீராக! “நீங்கள் உங்கள் வீடுகளில் (தங்கி) இருந்திருந்த போதிலும் கொல்லப்பட்டே இறக்க வேண்டுமென்று எவர்கள்மீது விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள், தாங்கள் (கொல்லப்பட்டு) விழ வேண்டிய இடங்களுக்கு(த் தாமாக) வந்தே இருப்பார்கள்” உங்கள் நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ் பரிசோதனை செய்வதற்காகவும், உங்கள் இதயங்களில் உள்ளவற்றைச் சுத்தப்படுத்தி விடுவதற்காகவும் (இவ்வாறு சம்பவிக்கும்படி செய்தான்), மேலும், (உங்கள்) நெஞ்சங்களிலுள்ளவற்றை அல்லாஹ் நன்கறிகிறவன்.
3:155 اِنَّ الَّذِيْنَ تَوَلَّوْا مِنْكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِۙ اِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطٰنُ بِبَعْضِ مَا كَسَبُوْا ‌ۚ وَلَقَدْ عَفَا اللّٰهُ عَنْهُمْ‌ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ‏
3:155. இரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்; நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுமையுடையோனாகவும் இருக்கின்றான்.
3:155. (நம்பிக்கையாளர்களே!) இரு கூட்டத்தாரும் (உஹுது போருக்காகச்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் அதிலிருந்து வெருண்டோடினார்களோ, (அவர்கள் நிராகரிப்பின் காரணமாக ஓடவில்லை.) அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக ஷைத்தான்தான் அவர்களுடைய கால்களைச் சறுக்கும்படிச் செய்தான். எனினும், அல்லாஹ் அவர்களின் குற்றங்களை மன்னித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மிக்க பொறுமையுடையவனாகவும் இருக்கின்றான்.
3:155. இரு கூட்டத்தாரும் மோதிக் கொண்ட நாளில் உங்களில் யார் புறங்காட்டி ஓடினார்களோ, அவர்கள் செய்த சில தவறுகள் காரணமாகத்தான் ஷைத்தான் அவர்களை அடிசறுக்கச் செய்தான். எனினும் அல்லாஹ் அவர்களைப் பொறுத்தருளினான். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் சகிப்புத்தன்மையுடையவனுமாய் இருக்கின்றான்.
3:155. (விசுவாசங்கொண்டோரே!) இரு கூட்டத்தாரும் (போர்முனையில்) சந்தித்த நாளில் உங்களில் (அதிலிருந்து) திரும்பிவிட்டார்களே அவர்கள்- அவர்கள் சம்பாதித்துக்கொண்ட (தீவினைகள்) சிலவற்றின் காரணமாக - அவர்களை (அதிலிருந்து திரும்பி)ச் சறுகுமாறு செய்ததெல்லாம் ஷைத்தானே. திட்டமாக அல்லாஹ் அவர்(களின் குற்றங்)களை மன்னித்தும் விட்டான், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், சகிப்புத் தன்மையுடையவன்.
3:156 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَكُوْنُوْا كَالَّذِيْنَ كَفَرُوْا وَقَالُوْا لِاِخْوَانِهِمْ اِذَا ضَرَبُوْا فِى الْاَرْضِ اَوْ كَانُوْا غُزًّى لَّوْ كَانُوْا عِنْدَنَا مَا مَاتُوْا وَمَا قُتِلُوْا ۚ لِيَجْعَلَ اللّٰهُ ذٰ لِكَ حَسْرَةً فِىْ قُلُوْبِهِمْ‌ؕ وَاللّٰهُ يُحْىٖ وَيُمِيْتُ‌ؕ وَ اللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
3:156. முஃமின்களே! நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்; பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்: “அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்” என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்; மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்கச் செய்கிறான்; இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
3:156. நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பவர்களைப் போல நீங்களும் ஆகிவிட வேண்டாம். அவர்கள் வெளியூருக்கோ அல்லது போருக்கோ சென்று (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் அவர்கள் இறந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்" என்று கூறுகின்றனர். அவர்களுடைய உள்ளங்களில் (என்றென்றுமே) இதை ஒரு கடும் துயரமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் செய்கிறான். அல்லாஹ்வே உயிருடன் வாழச் செய்பவன்; மரணிக்கவும் செய்பவன். நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.
3:156. இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிராகரிப்போரைப் போன்று பேசாதீர்கள்! அவர்கள், தங்களுடைய உற்றார் உறவினர் எப்போதேனும் பயணம் சென்றால், அல்லது போரில் கலந்து (ஏதேனும் துன்பத்திற்குள்ளாகி) விட்டால், “இவர்கள் எங்களுடன் இருந்திருந்தால் மரணமடைந்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்” என்று கூறுகின்றார்கள். அவர்களுடைய இப்படிப்பட்ட பேச்சுகளின் காரணமாக, அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் கடுந்துயரத்தை ஏற்படுத்துகிறான். உண்மையில் உயிரைக் கொடுப்பவனும், உயிரைப் பறிப்பவனும் அல்லாஹ்வே ஆவான்; மேலும், நீங்கள் செய்கின்றவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
3:156. விசுவாசங்கொண்டோரே! நிராகரித்துக்கொண்டிருப்போரைப் போல் நீங்கள் ஆகிவிட வேண்டாம், அவர்கள், பூமியில் பிரயாணம் செய்தோ, அல்லது யுத்தம் செய்வோராகவோ இருந்து (இறந்து)விட்ட தங்கள் சகோதரர்களைப் பற்றி “அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால், அவர்கள் இறந்திருக்கவுமாட்டார்கள், கொல்லப்படடிருக்கவுமாட்டார்கள்” என்று கூறுகின்றனர், அவர்களுடைய இதயங்களில், (என்றென்றுமே) இதை ஒரு (கடும்) துக்கமாக்குவதற்காகவே இவ்வாறு (அவர்கள் நினைக்கும்படி) அல்லாஹ் செய்கின்றான், அல்லாஹ்வே உயிர் கொடுக்கின்றான், அவனே மரணிக்கச் செய்கின்றான், மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்க்கிறவன்.
3:157 وَلَٮِٕنْ قُتِلْتُمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ اَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُوْنَ‏
3:157. இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.
3:157. அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும் அல்லது இறந்துவிட்டாலும் (அதற்காக) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும், அவனுடைய அன்பும் அவர்கள் சேகரித்து(க் குவித்து) வைத்திருக்கும் பொருள்களைவிட மிக மேலானதாக இருக்கும்.
3:157. நீங்கள் அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டாலோ அல்லது மரணமடைந்தாலோ, அப்போது உங்களுக்கு வழங்கப்படவிருக்கும் அல்லாஹ்வின் மன்னிப்பும் கருணையும் இ(ந்நிராகரிப்ப)வர்கள் திரட்டி வைத்துக் கொண்டிருக்கின்ற அனைத்தையும்விட மிகச் சிறந்தவையாகும்.
3:157. அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும், அல்லது இறந்துவிட்டாலும் (அதற்காக) நிச்சயமாக அல்லாஹ்விடம் கிடைக்கும் மன்னிப்பும் (அவனுடைய) அருளும், அவர்கள் சேகரித்து வைத்திருப்பவைகளைவிட மிக மேலானதாகும்.
3:158 وَلَٮِٕنْ مُّتُّمْ اَوْ قُتِلْتُمْ لَا۟ اِلَى اللّٰهِ تُحْشَرُوْنَ‏
3:158. நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.
3:158. நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்துவிட்டாலும் அல்லது கொல்லப்பட்டாலும் (அதற்காக ஏன் கவலைப்பட வேண்டும்?) அல்லாஹ்விடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.
3:158. நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்வின் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
3:158. நீங்கள் (அல்லாஹ்வுடைய பாதையில்) இறந்து விட்டாலும் அல்லது கொல்லப் பட்டாலும் (கூட) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே ஒன்றுதிரட்டப்படுவீர்கள்.
3:159 فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللّٰهِ لِنْتَ لَهُمْ‌ۚ وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيْظَ الْقَلْبِ لَانْفَضُّوْا مِنْ حَوْلِكَ‌ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِى الْاَمْرِ‌ۚ فَاِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللّٰهِ‌ؕ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُتَوَكِّلِيْنَ‏
3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
3:159. (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீங்கள் அவர்கள் மீது மென்மையானவராக நடந்து கொண்டீர்கள். நீங்கள் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீர்களானால் உங்களிடமிருந்து அவர்கள் வெருண்டோடி இருப்பார்கள். ஆகவே, அவர்(களின் குற்றங்)களை நீங்கள் மன்னித்து (இறைவனும்) அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! அன்றி, (யுத்தம், சமாதானம் ஆகிய) மற்ற காரியங்களிலும் அவர்களுடன் கலந்து ஆலோசித்தே வாருங்கள்! (யாதொரு விஷயத்தை செய்ய) நீங்கள் முடிவு செய்தால் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படையுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன்னிடம்) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான்.
3:159. (நபியே!) அல்லாஹ்வின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்து கொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும் வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள். ஆகவே இவர்(களின் தவறு)களைப் பொறுத்துக் கொள்வீராக! மேலும் இவர்களுக்காக (இறைவனிடம்) மன்னிப்புக் கோருவீராக! மேலும் தீனுடைய பணிகளில் இவர்களையும் கலந்தாலோசிப்பீராக! (ஏதாவதொரு விஷயத்தில்) நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால், அப்பொழுது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! திண்ணமாக, தன்னை முழுமையாகச் சார்ந்திருந்து செயல்படுவோரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:159. (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (இரக்கமுள்ளவராக) நடந்து கொள்கிறீர், மேலும், சொல்லில் கடுகடுப்பானவராக இரக்கமற்ற இதயமுள்ளவராக நீர் இருந்திருப்பீரானால், உம்மிடமிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள், ஆகவே, அவர்(களின் பிழை)களை நீர் மன்னித்து, (அல்லாஹ்விடம்) அவர்களுக்காக மன்னிக்க கோருவீராக! மேலும் (யுத்தம், சமாதானம் முதலிய மற்ற) காரியத்தில் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக! (யாதொரு காரியத்தை) நீர் முடிவு செய்தால், அல்லாஹ்வின் மீது நீர் (உம்முடைய காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்பீராக! (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் (தம் காரியங்களை அவனிடம் ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைப்போரை நேசிக்கின்றான்.
3:160 اِنْ يَّنْصُرْكُمُ اللّٰهُ فَلَا غَالِبَ لَـكُمْ‌ۚ وَاِنْ يَّخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِىْ يَنْصُرُكُمْ مِّنْۢ بَعْدِهٖ ‌ؕ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏
3:160. (முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.
3:160. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர்கள் ஒருவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை கொள்ளவும்.
3:160. அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானாகில், பிறகு எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது! மேலும் உங்களுக்கு அவன் உதவி செய்யாவிட்டாலோ, அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? எனவே வாய்மையான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்வை முழுமையாகச் சார்ந்திருக்க வேண்டும்.
3:160. (விசுவாசிகளே!) உங்களுக்கு உதவிசெய்தால், உங்களை மிகைப்பவர் எவருமில்லை, உங்களை அவன் (உதவிசெய்யாது) விட்டுவிட்டாலோ, அதற்குப் பின்னர், உங்களுக்கு உதவி செய்பவர் யார்? இன்னும் அல்லாஹ்வின் மீதே விசுவாசிகள் (தங்களின் காரியங்களை ஒப்படைத்து முழுமையாக) நம்பிக்கை வைக்கவும்.
3:161 وَمَا كَانَ لِنَبِىٍّ اَنْ يَّغُلَّ‌ؕ وَمَنْ يَّغْلُلْ يَاْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيٰمَةِ‌ ۚ ثُمَّ تُوَفّٰى كُلُّ نَفْسٍ مَّا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
3:161. எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
3:161. மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசம் செய்தால் அவர் அந்த மோசம் செய்த பொருளையும் மறுமையில் (தம்முடன்) கொண்டு வர வேண்டியதாகும். பின்னர் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்கு(ரிய பலனை) முழுமையாக அளிக்கப்படும். அவை அநீதி செய்யப்பட மாட்டாது.
3:161. வஞ்சனை செய்தல் எந்த ஒரு நபிக்குரிய செயலாகவும் இருக்க முடியாது. எனவே எவர் வஞ்சனை செய்கின்றாரோ அவர் மறுமைநாளில் தான் செய்த வஞ்சனையுடன்தான் வருவார். பின்னர் ஒவ்வொரு மனிதனுக்கும் அவரவர் சம்பாதித்ததற்கான கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். அவர்களில் யார் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
3:161. மேலும், (போரில் கிடைத்த பொருட்களில்) மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுமானதன்று, எவரேனும் மோசம் செய்தால் அவர், அந்த மோசம் செய்ததுடன் மறுமை நாளில் வருவார், பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்த வினைக்கு(ரிய பயனை)ப் பூரணமாக அளிக்கப்படும், (அவை செய்த நன்மையைக் குறைத்தோ, தீமையை அதிகரித்தோ எவ்வகையிலும்) அவர்கள் நீதி செய்யப்படவுமாட்டார்கள்.
3:162 اَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللّٰهِ كَمَنْۢ بَآءَ بِسَخَطٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰٮهُ جَهَنَّمُ‌ؕ وَ بِئْسَ الْمَصِيْرُ‏
3:162. அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின் பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா? (அல்ல - கோபத்தை வரவழைத்துக் கொண்டோருடைய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்; அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும்.
3:162. அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றுபவர் அல்லாஹ்வின் கோபத்தில் சிக்கியவனைப் போல் ஆவாரா? (அல்ல! கோபத்தில் சிக்கிய) அவன் தங்குமிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.
3:162. எப்பொழுதுமே அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றி நடக்கும் ஒருவர் அல்லாஹ்வின் சினத்துக்கு ஆளானவரைப் போலவும், மிகவும் கெட்ட இருப்பிடமான நரகத்தைப் புகலிடமாகப் பெற்றிருப்பவரைப் போலவும் செயல்படுவாரா?
3:162. அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பின்பற்றியவர் அல்லாஹ்வின் கோபத்தைக் கொண்டு மீண்டவரைப் போன்றவரா? (அன்று! கோபத்தில் சிக்கிய) அவருடைய ஒதுங்குமிடமோ நரகமாகும், மேலும், சேருமிடத்தில் (அது) மிகக் கெட்டது.
3:163 هُمْ دَرَجٰتٌ عِنْدَ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ بَصِيْرٌۢ بِمَا يَعْمَلُوْنَ‏
3:163. அல்லாஹ்விடத்தில் அவர்களுக்குப் பல நிலைகள் உள்ளன - இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.
3:163. (அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல (உயர்) பதவிகளை அடைகின்றனர். அல்லாஹ் அவர்களின் செய்கைகளை உற்று நோக்கினவனாகவே இருக்கின்றான்.
3:163. அல்லாஹ்விடம் இவ்விரு வகை மனிதர்களுக்கும் இடையில் வேறுபட்ட படித்தரங்கள் இருக்கின்றன. மேலும், அல்லாஹ் இவர்கள் அனைவரின் செயல்களையும் நன்கு பார்ப்பவனாக இருக்கின்றான்.
3:163. (அல்லாஹ்வின் பொருத்தத்தைப்பின்பற்றிய) அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல படித்தரங்களில் உள்ளனர், இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்க்கிறவன்.
3:164 لَقَدْ مَنَّ اللّٰهُ عَلَى الْمُؤْمِنِيْنَ اِذْ بَعَثَ فِيْهِمْ رَسُوْلًا مِّنْ اَنْفُسِهِمْ يَتْلُوْا عَلَيْهِمْ اٰيٰتِهٖ وَيُزَكِّيْهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ  ۚ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
3:164. நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்; அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்; அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்; மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.
3:164. அல்லாஹ், நம்பிக்கையாளர்களின் மீது மெய்யாகவே அருள் புரிந்திருக்கின்றான். அவர்களுக்காக ஒரு தூதரை (அதுவும்) அவர்களில் இருந்தே அனுப்பினான். அவர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களை பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார். அன்றி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருந்தனர்.
3:164. திண்ணமாக, அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கு மகத்தான பேருதவி புரிந்துள்ளான். அதாவது, அவர்களிடையே தன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பிப்பவரும், அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துபவரும், அவர்களுக்கு வேதத்தையும் நுண்ணறிவையும் கற்றுக்கொடுப்பவருமான ஒரு தூதரை அவர்களிலிருந்தே அவன் தோற்றுவித்தான். ஆனால், அவர்களோ இதற்கு முன் அப்பட்டமான வழிகேட்டில்தான் இருந்தார்கள்.
3:164. அல்லாஹ் விசுவாசிகள் மீது – அவர்களில் ஒரு தூதரை, (அதுவும்) அவர்களிலிருந்தே அவன் அனுப்பிவைத்த சமயத்தில் திட்டமாக பேரருள் செய்துவிட்டான். அவர், அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களைப் (பாவத்திலிருந்து) பரிசுத்தமாக்கியும் வைக்கின்றார், அவர்களுக்கு வேதத்தையும், (குர் ஆனையும்) ஞானத்தையும், (ஸுன்னத்தையும்) கற்றுக் கொடுக்கின்றார், நிச்சயமாக அவர்கள் இதற்குமுன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
3:165 اَوَلَمَّاۤ اَصَابَتْكُمْ مُّصِيْبَةٌ قَدْ اَصَبْتُمْ مِّثْلَيْهَا ۙ قُلْتُمْ اَنّٰى هٰذَا‌ؕ قُلْ هُوَ مِنْ عِنْدِ اَنْفُسِكُمْ ‌ؕ اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
3:165. இன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், “இது எப்படி வந்தது?” என்று கூறுகிறிர்கள்; (நபியே!) நீர் கூறும்: இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,”
3:165. (நம்பிக்கையாளர்களே! "பத்ரு" போரில்) இதைவிட இருமடங்கு கஷ்டத்தை நீங்கள் அவர்களுக்கு உண்டு பண்ணியிருந்தும் இந்தக் கஷ்டம் (உஹுத் போரில்) உங்களுக்கு ஏற்பட்ட சமயத்தில் இது எவ்வாறு (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட்(க ஆரம்பித்துவிட்)டீர்கள். (நீங்கள் செய்த தவறின் காரணமாக) உங்களால்தான் இது ஏற்பட்டதென்றும், நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான் என்றும் (நபியே!) நீங்கள் கூறுங்கள்.
3:165. (என்னே உங்கள் நிலை!) உங்களுக்கு ஏதேனும் துன்பம் வரும்போது, “அது எங்கிருந்து வந்தது?” என்று கேட்கிறீர்கள். (ஆனால் பத்ருப் போரில்) இது போன்ற இரு மடங்கு துன்பம் உங்கள் கைகளால் எதிரிகளுக்கு ஏற்பட்டிருந்ததே! (நபியே!) நீர் அவர்களுக்குக் கூறும்: “இத்துன்பம் உங்களால்தான் வந்தது. திண்ணமாக, அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.”
3:165. இன்னும், உங்களுக்கு (உஹதுப் போரில்) ஒரு துன்பம் ஏற்பட்டபோது நிச்சயமாக நீங்கள் (பத்ருப்போரில்) இதுபோன்று இருமடங்குத் துன்பத்தை ஏற்படுத்தி விட்டிருந்தீர்கள், (இவ்வாறு செய்துவிட்டு) இது எவ்வாறு (யாரால்) ஏற்பட்டது?” என நீங்கள் கேட்கிறீர்களா? “நீங்கள் நம் தூதருக்கு மாறு செய்ததால்) உங்களிடமிருந்தேதான் இது ஏற்பட்டது” என்று (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக, அல்லாஹ் ஒவ்வொரு பொருளின்மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
3:166 وَمَاۤ اَصَابَكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعٰنِ فَبِاِذْنِ اللّٰهِ وَلِيَعْلَمَ الْمُؤْمِنِيْنَۙ‏
3:166. மேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன; இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்.
3:166. இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது.) உண்மை நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்.)
3:166. இரு சாராரும் மோதிக் கொண்ட நாளில் உங்களுக்கு வந்த துன்பங்கள் அல்லாஹ்வின் நாட்டத்தினால்தான் ஏற்பட்டன.
3:166. இன்னும் இரு படைகளும் சந்தித்த நாளன்று, உங்களுக்கு ஏற்பட்டவை(களான துன்பங்)கள் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது) இன்னும், உண்மை விசுவாசிகளை(ப் பிரித்து) அறிவித்து விடு)வதற்காகவே (இவ்வாறு செய்)தான்.
3:167 ‌وَلِيَعْلَمَ الَّذِيْنَ نَافَقُوْا  ۖۚ وَقِيْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ‌ۚ قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّا تَّبَعْنٰكُمْ‌ؕ هُمْ لِلْكُفْرِ يَوْمَٮِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِيْمَانِ‌ۚ يَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَيْسَ فِىْ قُلُوْبِهِمْ‌ؕ وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يَكْتُمُوْنَ‌ۚ‏
3:167. இன்னும் (முனாஃபிக் தனம் செய்யும்) நயவஞ்சகரை(ப் பிரித்து) அறிவதற்கும் தான்; அவர்களிடம் கூறப்பட்டது: “வாருங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுத்து விடுங்கள்,” (அப்போது) அவர்கள் சொன்னார்கள்: “நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்.” அன்றையதினம் அவர்கள் ஈமானைவிட குஃப்ரின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்; தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்; அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.
3:167. (நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு "(இதனை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்" என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கி இருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான்.
3:167. மேலும் உங்களில் நம்பிக்கையாளர்கள் யார், நயவஞ்சகர்கள் யார் என்று அல்லாஹ் இனங்கண்டு கொள்வதற்காகவும்தான் (ஏற்பட்டன). “வாருங்கள், இறைவழியில் போர்புரியுங்கள்; அல்லது குறைந்த பட்சம் (உங்களின் நகரத்தையாவது) தற்காத்துக் கொள்ளுங்கள்” என்று இந்த நயவஞ்சகர்களிடம் கூறப்பட்டது. அதற்கு, “இன்று போர் நடைபெறும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால் நாங்களும் உங்களை நிச்சயம் பின்தொடர்ந்து வந்திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் கூறிய நேரத்தில் இறைநம்பிக்கையைவிட நிராகரிப்புடன் (குஃப்ருடன்) அவர்கள் மிக நெருக்கமாய் இருந்தார்கள். தம் உள்ளங்களில் இல்லாதவற்றை நாவினால் கூறுகின்றார்கள்; மேலும், அவர்கள் தம் உள்ளங்களில் மறைத்திருப்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.
3:167. இன்னும் முனாஃபிக்குகளாக (வேஷதாரிகளாக) ஆகி விட்டார்களே அவர்களையும் (பிரித்து) அறி(வித்துவிடு)வதற்காகத்தான் (இவ்வாறு செய்தான். விசுவாசிகளே! அந்த முனாஃபிக்குகளிடம், நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிய வாருங்கள், அல்லது (அந்த நிராகரிப்பவர்களை) நீங்கள் தடுத்துக்கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டதற்கு, “யுத்தம் பற்றியதுதான் என்று இதனை) நாங்கள் அறிந்திருந்தால் உங்களைத் தொடர்ந்தே வந்திருப்போம், என்று அவர்கள் கூறினார்கள், அன்றையத்தினம் அவர்கள், விசுவாசத்தைவிட, நிராகரிப்புக்கே மிகவும் சமீபத்திலிருந்தார்கள், தங்கள் இதயங்களில் இல்லாதவைகளையே அவர்கள் தங்கள் வாய்களால் கூறுகிறார்கள், மேலும், அவர்கள் (தங்கள் இதயங்களில்) மறைத்துக்கொண்டிருப்பதை அல்லாஹ் மிக அறிபவன்.
3:168 اَلَّذِيْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ‌ؕ قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
3:168. (போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி: “அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்று கூறுகிறார்கள்; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரணம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள் (பார்ப்போம் என்று).
3:168. அன்றி இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்துகொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி "அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இவ்வாறு) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்" என்றும் கூறினார்கள். (ஆகவே நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன!) நீங்கள் உங்களையே மரணத்தில் இருந்து தப்பவையுங்கள்!""
3:168. இவர்கள் எத்தகையவர்களென்றால், தாம் போரில் கலந்து கொள்ளாததுடன் (அதில் பங்கு பெற்று கொல்லப்பட்ட தம் சகோதரர்களைப் பற்றி) “அவர்கள் எங்கள் சொல்லுக்குக் கட்டுப்பட்டிருந்தால், கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் கூறினார்கள். (நபியே!) நீர் அவர்களிடம் கூறும்: “நீங்கள் வாய்மையுடையோராயின், மரணம் வரும்போது உங்களை விட்டு அதனைத் தடுத்து விடுங்கள் பார்ப்போம்!”
3:168. அத்தகையோர், (யுத்தத்திற்குச் செல்லாமல் தங்கள் வீட்டில்) இருந்து கொண்டே (யுத்தத்தில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி “அவர்களும் எங்களுக்கு கீழப்படிந்திருந்தால் (யுத்தத்திற்குச் சென்று இவ்வாறு) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்” என்றும் கூறினார்கள். (ஆகவே) “நீங்கள் உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாகயிருந்தால், (அவர்களை என்ன!) நீங்கள் உங்களுக்கே மரணம் அணுகாதவாறு தடுத்துவிடுங்கள் (பார்ப்போம்) என்று (நபியே!) நீர் கூறுவீராக!
3:169 وَلَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ اَمْوَاتًا ‌ؕ بَلْ اَحْيَآءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُوْنَۙ‏
3:169. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
3:169. (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்து) வெட்டப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் ஒருபோதும் எண்ண வேண்டாம். அவர்கள் தம் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கின்றார்கள். (அன்றி) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது.
3:169. இறைவழியில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக ஒருபோதும் கருதாதீர்! உண்மையில் அவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள். அவர்கள் தம் இறைவனிடமிருந்து தங்களுக்குத் தேவையான வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
3:169. (விசுவாசங்கொண்டோரே!) அல்லாஹ்வின் பாதையில் (யுத்தம் செய்து) கொல்லப்பட்டோரை இறந்துவிட்டவர்களென நீங்கள் நிச்சயமாக எண்ண வேண்டாம், மாறாக அவர்கள் தங்களின் இரட்சகனிடத்தில் உயிருள்ளோராக இருக்கிறார்கள், அவனால் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.
3:170 فَرِحِيْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۙ وَيَسْتَبْشِرُوْنَ بِالَّذِيْنَ لَمْ يَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْۙ اَ لَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‌ۘ‏
3:170. தன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்; மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி “அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” என்று கூறி மகிழ்வடைகிறார்கள்.
3:170. அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைந்த வர்களாக இருக்கின்றார்கள். தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி "அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்" என்று (மற்றொரு) மகிழ்ச்சியடைந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
3:170. அல்லாஹ் தனது அருளிலிருந்து அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்திருக்கின்றார்கள். தங்களுக்குப் பின் உலகில் வாழ்ந்து வருகின்ற இன்னும் தங்களுடன் வந்து சேராமல் இருக்கின்ற இறைநம்பிக்கையாளர்கள் குறித்து, அவர்களுக்கு எத்தகைய அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள் என்று இவர்கள் மனநிறைவு பெறுகின்றார்கள்.
3:170. அல்லாஹ் தன் பேரருளால் அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைந்தவர்களாக இருக்கின்றார்கள், (மேலும், யுத்தத்தில் இறக்காது) தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி, “அவர்களுக்கு எவ்விதப் பயமும் இல்லை, அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்” என்றும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பார்கள்.
3:171 يَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍۙ وَّاَنَّ اللّٰهَ لَا يُضِيْعُ اَجْرَ الْمُؤْمِنِيْنَ  ۛۚ‏
3:171. அல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்.
3:171. அல்லாஹ்வி(ன் அருளி)னால் தாங்கள் அடைந்த பாக்கியத்தைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் "நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் (நற்)கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கிவிடவில்லை" என்றும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள்.
3:171. அல்லாஹ் அளித்த கொடையினாலும், அருளினாலும் அவர்கள் அகமகிழ்வுடன் இருக்கின்றார்கள். இறைநம்பிக்கை கொண்டோரின் நற்கூலி வீணாகி விடுவதில்லை என்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டிருக்கிறது.
3:171. அல்லாஹ்விடமிருந்துள்ள அருட்கொடையைக் கொண்டும், பேரருளைக் கொண்டும்; நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளின் (நற்) கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கமாட்டான் என்பதைப் பற்றியும் மகிழ்ச்சியடைந்து கொண்டிருப்பார்கள்.
3:172 اَلَّذِيْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْۢ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ  ۛؕ لِلَّذِيْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِيْمٌ‌ۚ‏
3:172. அவர்கள் எத்தகையோரென்றால் தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்;அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.
3:172. அவர்கள் எத்தகையவர்கள் என்றால், காயமடைந்த பின்னரும் அல்லாஹ்வுடைய, (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (போருக்கு)ச் சென்றனர். (அல்லாஹ்வுக்குப்) பயந்து நன்மை செய்த இத்தகையவர்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு.
3:172. (அவர்கள் எத்தகைய நம்பிக்கையாளர்கள் என்றால்) அவர்கள் (போரில்) தமக்குக் காயங்கள் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வு(டைய அழைப்பு)க்கும் தூதரு(டைய அழைப்பு)க்கும் மறுமொழியளித்தார்கள். அவர்களில் யார் நற்செயல் புரிந்து பாவங்களிலிருந்து விலகி வாழ்கின்றார்களோ அவர்களுக்கு மாபெரும் கூலியுண்டு.
3:172. அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்குக் காயம் ஏற்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடைய மற்றும் தூதருடைய அழைப்பை ஏற்றனர், (ஆகவே யுத்தத்திற்குச் சென்றனர்) இவர்களில் யார் அழகானவற்றைச் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து (பாவத்திலிருந்து தங்களைக் காத்துக்) கொண்டார்களோ அத்தகையவர்களுக்கு மகத்தான (நற்) கூலியுண்டு.
3:173 اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا  ۖ وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏
3:173. மக்களில் சிலர் அவர்களிடம்; “திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரிடுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று கூறி (அச்சுறுத்தி)னர்; ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது: “அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” என்று அவர்கள் கூறினார்கள்.
3:173. அன்றி ஒருசிலர் அவர்களிடம் (வந்து) "உங்களுக்கு எதிராக (போர் புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர். (ஆதலால்) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்" என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. அன்றி "அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவனாகவும் (பாதுகாவலனாகவும்) இருக்கின்றான்" என்றும் கூறினார்கள்.
3:173. “உங்களுக்கு எதிராகப் பகைவர்கள் (பெரும்படையாகத்) திரண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு அஞ்சுங்கள்!” என்று மக்கள் அவர்களிடம் கூறினார்கள். அதனைக் கேட்டு அவர்களின் இறைநம்பிக்கை இன்னும் அதிகமாகிவிட்டது. அதுமட்டுமல்ல, “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன். அவனே சிறந்த பாதுகாவலன்” என்றும் கூறினார்கள்.
3:173. அவர்கள் எத்தகையோரென்றால் (ஒருசில) மனிதர்கள் அவர்களிடம் (வந்து) உங்களுக்கு விரோதமாக (யுத்தம் புரிய) நிச்சயமாக மனிதர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர், ஆதலால் அவர்களுக்கு(ப் பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) விசுவாசத்தை (-ஈமானை) அதிகப்படுத்தியது. மேலும், அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன், பாதுகாவலரில் அவன் மிக்க நல்லவன்” என்றும் அவர்கள் கூறினார்கள்.
3:174 فَانْقَلَبُوْا بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوْٓءٌ ۙ وَّاتَّبَعُوْا رِضْوَانَ اللّٰهِ ‌ؕ وَاللّٰهُ ذُوْ فَضْلٍ عَظِيْمٍ‏
3:174. இதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள்; எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை; (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.
3:174. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பாக்கியத்தையும் பெற்றுத் திரும்பி வந்தார்கள். அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை. (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தையே பின்பற்றிச் சென்றார்கள். (பொருளை விரும்பிச் செல்லவில்லை.) அல்லாஹ்வோ மகத்தான கொடையுடையவனாக இருக்கின்றான். (ஆகவே பொருளையும் அவர்களுக்கு அளித்தான்.)
3:174. இறுதியில் அவர்கள் அல்லாஹ்வின் பெருங் கொடைகளையும் அருளையும் பெற்றுத் திரும்பினார்கள். அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படவில்லை. இன்னும் அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தின்படி நடந்தார்கள் (எனும் சிறப்பும் அவர்களுக்குக் கிடைத்தது). மேலும், அல்லாஹ் மகத்தான கொடையாளனாக இருக்கின்றான்.
3:174. ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையையும் பேரருளையும் பெற்றுத்திரும்பினார்கள், அவர்களை எத்தகைய தீங்கும் அணுகவில்லை, இன்னும் அவர்கள், அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பின்பற்றிச் சென்றார்கள், அல்லாஹ்வோ மகத்தான பேரருளுடையோன்.
3:175 اِنَّمَا ذٰلِكُمُ الشَّيْطٰنُ يُخَوِّفُ اَوْلِيَآءَهٗ فَلَا تَخَافُوْهُمْ وَخَافُوْنِ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏
3:175. ஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான்; ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.
3:175. இவ்வாறு (அவர்களைப் பயமுறுத்தச்) செய்தது ஒரு ஷைத்தான்தான். அவன் தன் நண்பர்களைப் பற்றி (அவர்களுக்குப்) பயமுறுத்தினான். ஆகவே, நீங்கள் உண்மை நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; எனக்கே பயப்படுங்கள்.
3:175. தன் நண்பர்களைக் கொண்டு உங்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த ஷைத்தானே அவ்வாறு கூறியவன் (என்பது இப்போது உங்களுக்குப் புரிந்துவிட்டது). எனவே நீங்கள் உண்மையிலேயே இறைநம்பிக்கையுடையோராயின் (இனி) அம்மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்!
3:175. இது ஒரு ஷைத்தான்தான், அவன் தன் நண்பர்களைப்பற்றி (அவர்கள் பலசாலிகள், கடுமையானவர்கள் என உங்களைப்) பயமுறுத்துகிறான், ஆகவே, நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால், அவர்களுக்குப் பயப்பட வேண்டாம் எனக்கே பயப்படுங்கள்.
3:176 وَلَا يَحْزُنْكَ الَّذِيْنَ يُسَارِعُوْنَ فِى الْكُفْرِ‌ۚ اِنَّهُمْ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْئًا ‌ؕ يُرِيْدُ اللّٰهُ اَلَّا يَجْعَلَ لَهُمْ حَظًّا فِىْ الْاٰخِرَةِ ‌ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ‏
3:176. “குஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது; அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்; அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.
3:176. (நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்பவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு தீங்கும் செய்துவிட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எத்தகைய பாக்கியமும் கிடைக்காமல் இருக்கும்படிச் செய்ய அல்லாஹ் விரும்புகின்றான். (ஆகவேதான் அவர்கள் நிராகரிக்கின்றனர்.) அன்றி, அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு.
3:176. (நபியே! இன்று) இறைநிராகரிப்பின் வழியில் மும்முரமாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்(களின் நடவடிக்கை)கள் உம்மைத் துயரத்தில் ஆழ்த்திட வேண்டாம். நிச்சயமாக அவர்களால் அல்லாஹ்வுக்குச் சிறிதும் தீங்கு விளைவித்திட முடியாது. அவர்களுக்கு மறுமையில் எத்தகைய நற்பேறும் கிடைக்கக்கூடாது என்பது அல்லாஹ்வின் நாட்டமாகும். இறுதியில் அவர்களுக்கு மிகப்பெரும் தண்டனையும் கிடைக்கும்.
3:176. இன்னும், (நபியே!) நிராகரிப்பில் விரைந்து செல்கிறார்களே அத்தகையோர் உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம், (ஏனென்றால், அதனால்) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு யாதொரு இடரும் செய்து விடவே முடியாது, மறுமையில், அவர்களுக்கு எத்தகைய பாக்கியத்தையும் ஆக்காதிருப்பதை அல்லாஹ் நாடுகின்றான், அவர்களுக்கு மகத்தான வேதனையுண்டு.
3:177 اِنَّ الَّذِيْنَ اشْتَرَوُا الْكُفْرَ بِالْاِيْمَانِ لَنْ يَّضُرُّوا اللّٰهَ شَيْئًا ‌ۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
3:177. யார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.
3:177. எவர்கள் (தங்கள்) நம்பிக்கையைக் கொடுத்து நிராகரிப்பைப் பெற்றுக் கொண்டார்களோ, அவர்கள் (அதனால்) நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒரு அற்ப அளவும் தீங்கிழைத்து விடமுடியாது. ஆனால், அவர்களுக்குத்தான் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
3:177. எவர்கள் இறைநம்பிக்கைக்குப் பதிலாக நிராகரிப்பை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ அவர்களால் அல்லாஹ்வுக்கு எத்தகைய தீங்கினையும் திண்ணமாக ஏற்படுத்திட முடியாது. துன்புறுத்தும் வேதனைதான் அவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது.
3:177. (தங்கள்) விசுவாசத்திற்கு பதிலாக நிராகரிப்பை நிச்சயமாக விலைக்கு வாங்கிக் கொண்டார்களே அத்தகையோர் - அவர்கள் அல்லாஹ்வுக்கு ஓர் அணுவளவும் தீங்கிழைத்துவிடவே முடியாது, அவர்களுக்கு (அதனால்) துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
3:178 وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّمَا نُمْلِىْ لَهُمْ خَيْرٌ لِّاَنْفُسِهِمْ‌ؕ اِنَّمَا نُمْلِىْ لَهُمْ لِيَزْدَادُوْۤا اِثْمًا‌ ۚ وَلَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏
3:178. இன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.
3:178. நிராகரிப்பவர்களை (தண்டிக்காமல்) நாம் தாமதப் படுத்துவது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம். (வேதனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்துவதெல்லாம் (அவர்களுடைய) பாவம் (மென்மேலும்) அதிகரிப்பதற்காகவேதான். (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுண்டு.
3:178. இவ்வாறு அவர்களை நாம் (உடனடியாகத் தண்டிக்காமல்) விட்டு வைப்பது தங்களுக்கு நன்மையாகும் என நிராகரிப்பவர்கள் எண்ணிவிட வேண்டாம்! அவர்களை நாம் விட்டு வைப்பதெல்லாம் பாவச் சுமையை அவர்கள் அதிகமாக்கிக் கொள்ளட்டும் என்பதற்காகத்தான்! பின்னர் அவர்களுக்கு இழிவு மிக்க வேதனை இருக்கிறது.
3:178. இன்னும் நிராகரித்து விட்டார்களே அத்தகையோர்-அவர்களை தாமதப்படுத்துவதெல்லாம் தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக அவர்கள் எண்ணிவிட வேண்டாம், நாம் அவர்களுக்கு வேதனையைத் தாமதப்படுத்துவதெல்லாம், பாவத்தை (பின்னும்) அவர்கள் அதிகப்படுத்துவதற்காகவேதான், (முடிவில்) அவர்களுக்கு இழிவு தரும் வேதனையுமுண்டு.
3:179 مَا كَانَ اللّٰهُ لِيَذَرَ الْمُؤْمِنِيْنَ عَلٰى مَاۤ اَنْـتُمْ عَلَيْهِ حَتّٰى يَمِيْزَ الْخَبِيْثَ مِنَ الطَّيِّبِ‌ؕ وَمَا كَانَ اللّٰهُ لِيُطْلِعَكُمْ عَلَى الْغَيْبِ وَ لٰكِنَّ اللّٰهَ يَجْتَبِىْ مِنْ رُّسُلِهٖ مَنْ يَّشَآءُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ۚ وَاِنْ تُؤْمِنُوْا وَتَتَّقُوْا فَلَـكُمْ اَجْرٌ عَظِيْمٌ‏
3:179. (காஃபிர்களே!) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை; இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை; ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; நீங்கள் நம்பிக்கை கொண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.
3:179. (நயவஞ்சகர்களே!) நீங்கள் இருக்கும் இந்த நிலைமையில் நல்லவர்கள் இன்னாரென்றும் தீயவர்கள் இன்னாரென்றும் பிரித்தறிவிக்கும் வரையில் (உங்களுடன் கலந்திருக்க) அல்லாஹ் (நம்பிக்கையாளர்களை) விட்டுவைக்க மாட்டான். அன்றி மறைவான வற்றையும் அல்லாஹ் உங்களுக்கு அறிவிக்க மாட்டான். எனினும் தன் தூதர்களில் தான் விரும்பியவர்களை (இதனை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொள்வான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் (உண்மையாகவே அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்து (நடந்து) கொண்டால் உங்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு.
3:179. இப்பொழுது நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ, அதே நிலையில் அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களை ஒருபோதும் வைத்திருக்க மாட்டான். தூய்மையானவர்களை தூய்மையற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியே தீருவான். மேலும், மறைவானவற்றை உங்களுக்கு அறிவிப்பது அல்லாஹ்வின் நியதியல்ல. எனினும் (அவற்றை அறிவித்துக் கொடுப்பதற்காக) தன்னுடைய தூதர்களில் தான் நாடுகின்றவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுக்கின்றான். எனவே (மறைவானவற்றில்) அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்புங்கள்! நீங்கள் இறைநம்பிக்கை கொண்டு இறையச்சத்தோடும் வாழ்வீர்களாயின் உங்களுக்கு மகத்தான கூலி இருக்கிறது.
3:179. (நயவஞ்சகர்களே!) நல்லோரிலிருந்து தீயோரை பிரித்தறிவிக்கும்வரை நீங்கள் எதன் மீதிருக்கிறீர்களோ அதன்மீது, விசுவாசிகளை விட்டு வைப்பவனாக இல்லை, மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பவனாகவுமில்லை, எனினும், தன் தூதர்களில் தான் நாடியவர்களை (இதனை அறிவிக்க) அல்லாஹ் தேர்ந்தெடுக்கிறான், ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசியுங்கள், நீங்கள் (உண்மையாகவே) விசுவாசித்தும், (அவனுக்குப்) பயந்தும் (நடந்து) கொணடால் உங்களுக்கு மகத்தான (நற்) கூலியுண்டு.
3:180 وَلَا يَحْسَبَنَّ الَّذِيْنَ يَبْخَلُوْنَ بِمَاۤ اٰتٰٮهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ هُوَ خَيْـرًا لَّهُمْ‌ؕ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ‌ؕ سَيُطَوَّقُوْنَ مَا بَخِلُوْا بِهٖ يَوْمَ الْقِيٰمَةِ ‌ؕ وَ لِلّٰهِ مِيْرَاثُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
3:180. அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்; வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.
3:180. எவர்கள், அல்லாஹ் தன் அருளால் தங்களுக்கு வழங்கிய பொருள்களில் கஞ்சத்தனம் செய்கின்றார்களோ அவர்கள் அது தங்களுக்கு நல்லதென்று எண்ணிட வேண்டாம். அது அவர் களுக்குத் தீங்காகவே இருக்கும். கஞ்சத்தனத்தால் சேர்த்த பொருள் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக (இரும்பு வளையமாக) மாட்டப்படும். வானங்கள் பூமியின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.
3:180. அல்லாஹ் தனது அருளிலிருந்து தங்களுக்கு வழங்கியவற்றில் எவர்கள் கஞ்சத்தனம் புரிகின்றார்களோ அவர்கள் அதனைத் தமக்கு நல்லது என எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு மிகவும் கெட்டதாகும். தமது கஞ்சத்தனத்தின் மூலம் அவர்கள் சேமித்து வைத்தவை எல்லாம் மறுமைநாளில் அவர்களின் கழுத்தில் விலங்காகப் பூட்டப்படும். வானங்களும், பூமியும் அல்லாஹ்வுக்கே உரித்தானவையாய் இருக்கின்றன. மேலும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.
3:180. மேலும், தன் பேரருளால் அவர்களுக்குக் கொடுத்தவைகளில் உலோபித்தனம் செய்கின்றார்களே அத்தகையவர்கள், அது தங்களுக்கு நல்லதென்று நிச்சயமாக எண்ணிவிட வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீங்காகும், எதை அவர்கள் உலோபித்தனம் செய்தார்களோ அதைக் கொண்டு மறுமை நாளில் அவர்கள் கழுத்தில் மாலையாக மாட்டப்படுவார்கள், இன்னும் வானங்கள், மற்றும் பூமியின் அனந்தர உரிமை அல்லாஹ்வுக்கே உரியது, மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்கிறவன்.
3:181 لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَآءُ ‌ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ ۙۚ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ‏
3:181. “நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள் தாம் சீமான்கள்” என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்; (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும் அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், “சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்” என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.
3:181. எவர்கள் "நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் சீமான்கள்" என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். (இவ்வாறு) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நிச்சயமாக நாம் பதிவு செய்து கொண்டிருக் கின்றோம். (ஆகவே, மறுமையில் அவர்களை நோக்கி) "எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" என நாம் கூறுவோம்.
3:181. “அல்லாஹ் வறியவன்; நாங்கள் செல்வந்தர்கள்!” என்று கூறியவர்களின் சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். இவ்வாறு அவர்கள் கூறியதை நாம் பதிவு செய்கின்றோம். (இதற்கு முன்) தூதர்களை நியாயமின்றி அவர்கள் கொலை செய்து வந்ததும் செயலேட்டில் பதிக்கப்பட்டுள்ளது. மேலும், (தீர்ப்புக் கூறும் நேரம் வரும்போது) நாம் அவர்களிடம் கூறுவோம்: “இதோ, சுட்டுப் பொசுக்கும் நரக வேதனையை இப்பொழுது சுவையுங்கள்!”
3:181. “நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள் தான் சீமான்கள்” என்று கூறினார்களே, அத்தகையவர்களுடைய சொல்லைத் திட்டமாக அல்லாஹ் செவியேற்றுவிட்டான், (இவ்வாறு) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொண்டிருக்கின்றோம், மேலும், (மறுமையில் அவர்களிடம்) “எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்” என நாம் கூறுவோம்.
3:182 ذٰ لِكَ بِمَا قَدَّمَتْ اَيْدِيْكُمْ وَاَنَّ اللّٰهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيْدِ‌ۚ‏
3:182. இதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்; நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன்.
3:182. (அன்றி) "நீங்கள் உங்கள் கையால் தேடிக் கொண்டதுதான் இதற்குக் காரணமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்வதில்லை" (என்றும் கூறுவோம்.)
3:182. இது உங்கள் கைகள் சம்பாதித்ததுதான்! நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய அடிமைகள்மீது கொடுமை புரிபவன் அல்லன்.
3:182. அது “உங்கள் கைகள் முற்படுத்தி வைத்த (செய்கைகளின்) காரணத்தினாலாகும், நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநியாயமும் செய்பவனல்ல”
3:183 اَلَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ عَهِدَ اِلَيْنَاۤ اَلَّا نُؤْمِنَ لِرَسُوْلٍ حَتّٰى يَاْتِيَنَا بِقُرْبَانٍ تَاْكُلُهُ النَّارُ‌ؕ قُلْ قَدْ جَآءَكُمْ رُسُلٌ مِّنْ قَبْلِىْ بِالْبَيِّنٰتِ وَبِالَّذِىْ قُلْتُمْ فَلِمَ قَتَلْتُمُوْهُمْ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
3:183. மேலும் அவர்கள், “எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசுவாசம் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்” என்று கூறுகிறார்கள். (நபியே!): “எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்” என்று நீர் கூறும்.
3:183. (அன்றி) இவர்கள் "எத்தூதராயினும், அவர் கொடுக்கும் பலியை நெருப்பு (கரித்து) புசிப்பதை அவர் நமக்குக் காட்டும் வரையில் அவரை நாங்கள் நம்பிக்கை கொள்ளக் கூடாதென்று நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியிருக் கின்றான்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனக்கு முன்னர் உங்களிடம் வந்த நபிமார்களில் பலர் நீங்கள் கேட்ட இதனையும் (வேறு பல) தெளிவான அத்தாட்சி களையும் கொண்டு வந்தார்கள். (அவ்வாறிருக்க உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் ஏன் கொலை செய்தீர்கள்?’
3:183. “(திடீரென்று வரும்) நெருப்பு கரித்து விடுகின்ற வண்ணம் ஒரு குர்பானியை (பலியை) எங்கள் கண்ணெதிரே கொண்டு வரும் வரை எந்த ஒருவரையும் இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள வேண்டாமென்று திண்ணமாக அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னவர்களிடம் (நபியே!) நீர் கூறும்: “நிச்சயமாக எனக்கு முன்பு உங்களிடையே தூதர்கள் பலர் தெளிவான பல சான்றுகளுடன் வந்திருந்தனர். (ஏன்) நீங்கள் இப்பொழுது குறிப்பிடுகின்ற சான்றினையும் கூட அவர்கள் கொண்டு வந்தனர். (இறைநம்பிக்கை கொள்வதற்கு இதனை ஒரு நிபந்தனையாய்க் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாயிருந்தால், பிறகு அத்தகைய தூதர்களை ஏன் கொலை செய்தீர்கள்?”
3:183. (யூதர்களாகிய) அத்தகையோர் “எத்தூதராயினும் நம்மிடம் அவர் ஒரு “குர்பானி”யைக் கொண்டுவந்து அதை நெருப்பு உண்ணும்வரை நாங்கள் விசுவாசம் (ஈமான்) கொள்ள வேண்டாம் என, நிச்சயமாக அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி எடுத்துள்ளான்” என்று அவர்கள் கூறுகிறார்கள், (நபியே!) நீர் “எனக்கு முன்னர் வந்த தூதர்கள், தெளிவான அத்தாட்சிகளையும் இன்னும் நீங்கள் கேட்டதையும் உங்களுக்குத் திட்டமாகக் கொண்டு வந்தார்கள், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், அவர்களை ஏன் கொலை செய்தீர்கள்?” என்று கேட்பீராக.
3:184 فَاِنْ كَذَّبُوْكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِّنْ قَبْلِكَ جَآءُوْ بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِ وَالْكِتٰبِ الْمُنِيْرِ‏
3:184. எனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.
3:184. (இதற்குப்) பின்னரும் அவர்கள் உங்களைப் பொய்யரெனக் கூறினால் (அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால்,) உங்களுக்கு முன்னர் வந்த பல தூதர்களையும் அவர்கள் (இவ்வாறே) பொய்யரெனக் கூறினார்கள். அவர்களோ தெளிவான அத்தாட்சிகளையும், வேத நூல்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டுவந்தே இருந்தனர்.
3:184. (முஹம்மதே! இப்போது) இவர்கள் உம்மைப் பொய்யர் எனக் கூறுகின்றார்கள். ஆனால், உமக்கு முன் தெள்ளத் தெளிவான சான்றுகளையும் ஆகமங்களையும், ஒளியூட்டும் வேதங்களையும் கொணர்ந்த தூதர்களில் பலரும் பொய்யர்கள் எனக் கூறப்பட்டனர்.
3:184. (நபியே! இதற்குப்) பின்னரும் அவர்கள் உம்மைப் பொய்யாக்கினால் (அதற்காக கவலைப்பட வேண்டாம், ஏனென்றால்) உமக்கு முன்னர் தெளிவான அத்தாட்சிகளையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டுவந்த தூதர்கள் பலரும் (அவர்கள் கூட்டத்தினரால் இவ்வாறே) பொய்ப்பிக்கப்பட்டிருக்கின்றனர்.
3:185 كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ؕ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
3:185. ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீர வேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக் கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை.
3:185. ஆக ஒவ்வொரு மனிதனும் மரணத்தைச் சுவைக்க வேண்டியவனாய் இருக்கின்றான். நீங்கள் அனைவரும் உங்களுடைய கூலியை மறுமைநாளன்றுதான் முழுமையாகப் பெறுவீர்கள். (அங்கு) எவன் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு, சுவனத்தில் நுழைவிக்கப் படுகின்றானோ அவனே உண்மையில் வெற்றி பெற்றவன் ஆவான்! இவ்வுலக வாழ்வென்பது ஏமாற்றக்கூடிய அற்ப இன்பமேயன்றி வேறில்லை!
3:185. ஓவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதாகும், இன்னும், உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் பூரணமாக்கப்படுவதெல்லாம் மறுமை நாளில்தான், ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பை விட்டும் தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்யப்படுகிறாரோ அவர், திட்டமாக வெற்றியடைந்து விட்டார், மேலும், இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய (அற்ப) இன்பத்தைத்தவிர வேறில்லை.
3:186 لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا‌ؕ وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏
3:186. (முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.
3:186. (நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசைமொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (இத்தகைய கஷ்டங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்து அல்லாஹ்வை பயந்தவர்களாக வாழ்ந்து வந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்.) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும்.
3:186. (முஸ்லிம்களே!) உங்கள் உடைமைகளிலும் உயிர்களிலும் நீங்கள் நிச்சயமாக சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் அருளப்பட்டவர்களிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் அதிகமான வேதனை தரும் பல வார்த்தைகளைத் திண்ணமாக நீங்கள் கேட்பீர்கள். (இத்தகைய நிலைமைகளில்) நீங்கள் பொறுமையும், இறையச்சமும் கொண்ட நடத்தையை வலுவாகக் கடைப்பிடித்தால் திண்ணமாக அது ஊக்கமுடைய செயலாக இருக்கும்.
3:186. (விசுவாசங்கொண்டோரே!) உங்கள் செல்வங்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்டடவர்களாலும், இணைவைப்பவர்களாலும் (வசைமொழி நிந்தனைகளான) அதிகமான நோவினையை நிச்சயமாக நீங்கள் செவியேற்பீர்கள், மேலும், (இத்தகைய கஷ்டங்களில்) நீங்கள் பொறுமையை மேற்கொண்டு பயபக்தியோடும் இருந்தீர்களானால், நிச்சயமாக அதுதான் அனைத்துக் காரியங்களிலும் ஆக்கமான செயலாகும்.
3:187 وَاِذْ اَخَذَ اللّٰهُ مِيْثَاقَ الَّذِيْنَ اُوْتُوْا الْكِتٰبَ لَتُبَيِّنُنَّهٗ لِلنَّاسِ وَلَا تَكْتُمُوْنَهٗ فَنَبَذُوْهُ وَرَآءَ ظُهُوْرِهِمْ وَ اشْتَرَوْا بِهٖ ثَمَنًا قَلِيْلًاؕ فَبِئْسَ مَا يَشْتَرُوْنَ‏
3:187. தவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே! நீர் நினைவுபடுத்துவீராக); அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.
3:187. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் "(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அதை மூடி மறைத்துவிடக் கூடாது" என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீங்கள் அவர்களுக்கு) ஞாபகமூட்டுங்கள். (எனினும்) அவர்கள் (தங்களின்) இவ்வுறுதி மொழியைத் தங்கள் முதுகுப்புறமாக எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டனர். அவர்கள் பெற்றுக் கொண்டது மகா கெட்டதாகும்.
3:187. வேதம் அருளப்பட்டவர்களிடம், “வேதக் கருத்துகளை மக்களிடையே நீங்கள் பரப்பிட வேண்டும்; அவற்றை மறைத்து வைக்கக் கூடாது” என்று அல்லாஹ் வாக்குறுதி வாங்கியதை நீர் அவர்களுக்கு நினைவூட்டுவீராக! எனினும் அவர்கள் வேதத்தைத் தம் முதுகுக்குப் பின்னே எறிந்து விட்டார்கள்! மேலும் அதனை அற்ப ஆதாயத்திற்காக விற்று விட்டார்கள். அவர்களுடைய கொடுக்கல் வாங்கல் எத்துணைத் தரங்கெட்டது!
3:187. வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம், “(உங்களுக்குக் கொடுக்கப்பட்ட) வேதத்தை மறைத்துவிடாது ஜனங்களுக்குத் தெளிவாக நீங்கள் எடுத்துரைக்க வேண்டும்” என்று அல்லாஹ் உறுதிமொழி வாங்கியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவுபடுத்துவீராக!) பினனர் அவர்கள் (தங்களின்) இவ்வுறுதிமொழியைத் தங்கள் முதுகுகளுக்கு அப்பால் எறிந்துவிட்டு இதற்குப் பிரதியாகச் சொற்பக் கிரயத்தை வாங்கிக் கொண்டார்கள், அவர்கள் இவ்வாறு வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.
3:188 لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ يَفْرَحُوْنَ بِمَاۤ اَتَوْا وَّيُحِبُّوْنَ اَنْ يُّحْمَدُوْا بِمَا لَمْ يَفْعَلُوْا فَلَا تَحْسَبَنَّهُمْ بِمَفَازَةٍ مِّنَ الْعَذَابِ‌ۚ وَلَهُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
3:188. எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.
3:188. (நபியே!) எவர்கள் தாங்கள் செய்த (அற்ப) காரியத்தைப் பற்றி மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாத (நன்மையான) காரியங் களைப் பற்றியும், (தாம் செய்ததாக மக்கள்) தம்மைப் புகழ்வதை விரும்புகின்றார்களோ அவர்கள் வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்று நிச்சயமாக (ஒரு காலமும்) நீங்கள் எண்ண வேண்டாம். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுண்டு.
3:188. தாம் செய்கின்ற இழிசெயல்களைக் குறித்து மகிழ்ந்திருப்பவர்கள் செய்யாத செயல்களுக்காகத் தாம் பாராட்டப்பட வேண்டுமென்று விரும்புகின்றவர்கள் தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள் என்று ஒருபோதும் நீர் கருதிவிட வேண்டாம். (உண்மையில்) அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது.
3:188. (நபியே!) தாங்கள் செய்த (அற்பக்) காரியத்தைப் பற்றி மகிழ்ச்சியடைகிறார்களே அவர்களையும், தாம் செய்யாத (நன்மையான) காரியங்களைப் பற்றி புகழப்படுவதை விரும்புகின்றவர்களையும் பற்றி நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம், (அல்லாஹ்வின்) தண்டனையை விட்டும் (தப்பித்து-) வெற்றியில் இருக்கிறார்கள் என்று அவர்களை நீர் திண்ணமாக எண்ண வேண்டாம், அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையுமுண்டு.
3:189 وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
3:189. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
3:189. வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே! அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்.
3:189. வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், அவனுடைய பேராற்றல் யாவற்றையும் உள்ளடக்கியுள்ளது!
3:189. வானங்கள், மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது, இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
3:190 اِنَّ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافِ الَّيْلِ وَالنَّهَارِ لَاٰيٰتٍ لِّاُولِى الْاَلْبَابِ ۚۖ‏
3:190. நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
3:190. வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
3:190. திண்ணமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும், இரவுபகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்குப் பல சான்றுகள் உள்ளன.
3:190. நிச்சயமாக, வானங்கள், மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி, மாறி வருவதிலும், அறிவுடையோர்க்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
3:191 الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ۚ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا ۚ سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏
3:191. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!” (என்றும்;)
3:191. இத்தகையவர்கள் (தங்கள்) நின்ற நிலையிலும், இருப்பிலும், படுக்கையிலும் அல்லாஹ்வையே நினைத்து, வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதை ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், "எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்கவில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காப்பாற்றுவாயாக!
3:191. அவர்கள் எத்தகையவர்கள் எனில் நிற்கும்போதும், உட்காரும்போதும், படுத்திருக்கும்போதும் ஆக எல்லா நிலைகளிலும், அல்லாஹ்வை நினைக்கின்றார்கள்; மேலும், வானங்கள் மற்றும் பூமியின் அமைப்பைக் குறித்துச் சிந்திக்கின்றார்கள். (பிறகு அவர்கள் உணர்ச்சி பொங்க இப்படிப் பிரார்த்திக்கின்றார்கள்:) “எங்கள் இறைவனே! இவையனைத்தையும் நீ வீணாக (யாதொரு நோக்கமுமின்றிப்) படைக்கவில்லை. (வீணான செயல்களை விட்டு) நீ தூய்மையானவன். எனவே, நரக வேதனையிலிருந்து நீ எங்களைக் காப்பாற்றுவாயாக!
3:191. (அறிவுடைய) அத்தகையோர், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களின் மீது (சாய்ந்து)ம் அல்லாஹ்வையே நினைத்து வானங்கள் மற்றும் பூமியின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, “எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணுக்காகப் படைத்துவிடவில்லை, நீ மிகத் தூயவன், (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக” (என்றும்),
3:192 رَبَّنَاۤ اِنَّكَ مَنْ تُدْخِلِ النَّارَ فَقَدْ اَخْزَيْتَهٗ ‌ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏
3:192. “எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!” (என்றும்;)
3:192. எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ எவர்களை (நரக) நெருப்பில் நுழைத்து விட்டாயோ அவர்களை நிச்சயமாக நீ இழிவுபடுத்திவிட்டாய். (அத்தகைய) அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் (ஒருவரும்) இல்லை.
3:192. எங்கள் இறைவனே! நீ யாரை நரகத்தில் புகுத்தினாயோ, அவனை நீ உண்மையில் மிகக் கேவலப்படுத்திவிட்டாய். மேலும் இப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்.
3:192. “எங்கள் இரட்சகனே!! நிச்சயமாக நீ எவரை (நரக) நெருப்பில் புகுத்தினாயோ, அவரை நிச்சயமாக நீ இழிவு படுத்திவிட்டாய், இன்னும் அநியாயக்காரர்களுக்கு உதவி செய்வோர் (ஒருவரும்) இல்லை” (என்றும்),
3:193 رَبَّنَاۤ اِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُّنَادِىْ لِلْاِيْمَانِ اَنْ اٰمِنُوْا بِرَبِّكُمْ فَاٰمَنَّا  ۖ رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّاٰتِنَا وَتَوَفَّنَا مَعَ الْاَبْرَارِ‌ۚ‏
3:193. “எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக; இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!” (என்றும்;)
3:193. எங்கள் இறைவனே! (உன் தூதரின்) அழைப்பை நாங்கள் நிச்சயமாக செவியுற்றோம். (அவர்) எங்களை நம்பிக்கையின் பக்கம் அழைத்து "உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள்" என்று கூறினார். நாங்களும் (அவ்வாறே) நம்பிக்கை கொண்டோம். ஆதலால் எங்கள் இறைவனே! நீ எங்கள் குற்றங்களை மன்னிப் பாயாக! எங்கள் பாவங்களை எங்களை விட்டும் அகற்றிடுவாயாக! (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கும்படிச் செய்வாயாக!
3:193. எங்கள் அதிபதியே! இறைநம்பிக்கையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒருவரின் அழைப்பினை நாங்கள் செவியேற்றோம். ‘உங்கள் இறைவனை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று அவர் கூறினார். நாங்கள் ஏற்றுக்கொண்டோம். எனவே, “எங்கள் அதிபதியே! எங்கள் குற்றங்குறைகளை மன்னித்து அருள்வாயாக! எங்களிடம் உள்ள தீமைகளை அகற்றுவாயாக! மேலும், எங்களை நல்லவர்களுடன் மரணிக்கச் செய்வாயாக!
3:193. “எங்கள் இரட்சகனே! ‘உங்கள் இரட்சகனை விசுவாசியுங்கள்!’ என்று (எங்களை) விசுவாசத்தின்பால் அழைத்தோரின் அழைப்பை நிச்சயமாக நாங்கள் செவியேற்று நாங்களும் (அவ்வாறே) விசுவாசங் கொண்டோம், எங்கள் இரட்சகனே! ஆதலால், நீ எங்கள் குற்றங்களை மன்னிப்பாயாக! எங்களுடைய தீமைகளை எங்களை விட்டு நீக்கியும் விடுவாயாக! மேலும், (முடிவில்) நல்லோர்களுடன் எங்களை மரணிக்கச் செய்வாயாக” (என்றும்),
3:194 رَبَّنَا وَاٰتِنَا مَا وَعَدتَّنَا عَلٰى رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيٰمَةِ ‌ؕ اِنَّكَ لَا تُخْلِفُ الْمِيْعَادَ‏
3:194. “எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).
3:194. எங்கள் இறைவனே! உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு தந்தருள்புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்திவிடாதே! நிச்சயமாக நீ வாக்குறுதி தவறுபவனல்ல" (என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.)
3:194. எங்கள் இறைவா! மேலும், தூதர்களின் வாயிலாக நீ அளித்த வாக்குறுதிகளை எங்களுக்கு நிறைவேற்றித் தந்தருள்வாயாக! மேலும், மறுமைநாளில் எங்களைக் கேவலப்படுத்தி விடாதே! திண்ணமாக, நீ வாக்குறுதி மீறாதவன் ஆவாய்!”
3:194. “எங்கள் இரட்சகனே! இன்னும் உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தந்தருள் புரிவாயாக! மறுமை நாளில் நீ எங்களை இழிவுபடுத்தாதிருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதியில் மாறு செய்யமாட்டாய்” (என்றும் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்)
3:195 فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّىْ لَاۤ اُضِيْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى‌‌ۚ بَعْضُكُمْ مِّنْۢ بَعْضٍ‌‌ۚ فَالَّذِيْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ وَاُوْذُوْا فِىْ سَبِيْلِىْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ‌ۚ ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ‌ؕ وَ اللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ‏
3:195. ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; “உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்; எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்; இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்” (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்; இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.
3:195. ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன் "உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர்கள் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிட மாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணோ பெண்ணோ) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர்தான். (ஆகவே, கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை. உங்களில்) எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என்னுடைய பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டும் நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளிலும் நிச்சயமாக நாம் அவர்களை நுழைய வைப்போம்" (என்று கூறுவான். இது) அல்லாஹ்வினால் (அவர்களுக்குக்) கொடுக்கப்படும் நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் (இன்னும் இதனைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கின்றது.
3:195. அவர்களுடைய அதிபதி அவர்களுக்கு இவ்வாறு மறுமொழி கூறினான்: “உங்களில் எவருடைய நற்செயலையும் நான் வீணாக்கவே மாட்டேன் அவர் ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி! நீங்கள் ஒருவர் மற்றவரிலிருந்து தோன்றிய (ஒரே இனத்த)வர்களே! எனவே (எனக்காக) நாட்டைத் துறந்தவர்கள், மேலும் என் வழியில் தம் இல்லங்களை விட்டு வெளியேற்றப்பட்டு துன்பத்திற்குள்ளாக்கப்பட்டவர்கள், இன்னும் (எனக்காக) போர் புரிந்தவர்கள், கொல்லப்பட்டவர்கள் ஆகியோரின் குற்றங்குறைகளையும் நான் மன்னிப்பேன். இன்னும் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனங்களில் திண்ணமாக அவர்களை நுழைவிப்பேன். இது, அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் நற்கூலியாகும். மேலும் அழகிய நற்கூலி அல்லாஹ்விடமேயுள்ளது.
3:195. ஆதலால், அவர்களுடைய இரட்சகன், அவர்களுடைய (இந்தப்) பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டான், (காரணம்) “உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர் நன்மை செய்தபோதிலும், நிச்சயமாக நான் அதை வீணாக்கி விட மாட்டேன், (ஏனென்றால்) உங்களில் (ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்தபோதிலும்) சிலர் மற்ற சிலரில் உள்ளவர்தான், (ஆகவே கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை, உங்களில்) (ஹிஜ்ரத்துச் செய்து) தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியும் (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என்னுடைய பாதையில் துன்புறுத்தப்பட்டும், யுத்தம் செய்தும், (அதில்) கொல்லப்பட்டும் விட்டனரே அத்தகையோர், அவர்களுடைய (பாவங்களான) தீயவைகளை நிச்சயமாக நான் அவர்களை விட்டும் நீக்கிவிடுவேன், நிச்சயமாக அவர்களை நான் சுவனபதிகளிலும் பிரவேசிக்கச் செய்வேன், அவற்றின்மீது ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், (என்று கூறுவான். இது) அல்லாஹ்விடமிருந்துள்ள நற்கூலியாக அவர்களுக்குக் கிடைக்கும்) அல்லாஹ்விடத்தில் இன்னும் (இதனைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கின்றது.
3:196 لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِيْنَ كَفَرُوْا فِى الْبِلَادِؕ‏
3:196. காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.
3:196. (நபியே!) நிராகரிப்பவர்கள் (பெரும் வியாபாரிகளாகவும் செல்வந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது உங்களை மயக்கி (ஏமாற்றி) விடவேண்டாம்.
3:196. உலகின் பல பகுதிகளில் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவர்களின் நடமாட்டம் உம்மை ஒருபோதும் ஏமாற்றத்தில் ஆழ்த்திட வேண்டாம்.
3:196. (நபியே!) நிராகரிப்போர், (பெரும் வர்த்தகர்களாகவும், தனவந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் திரிந்து கொண்டிருப்பது உம்மை ஏமாற்றிவிட வேண்டாம்.
3:197 مَتَاعٌ قَلِيْلٌ ثُمَّ مَاْوٰٮهُمْ جَهَنَّمُ‌ؕ وَ بِئْسَ الْمِهَادُ‏
3:197. (அது) மிகவும் அற்ப சுகம்; பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும்.
3:197. (இது) அற்ப சுகமாகும். இதற்குப் பின்னர் அவர்கள் தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக்கெட்டது.
3:197. இது (சில நாள் வாழ்க்கையின்) அற்ப இன்பம்தான். பிறகு அவர்கள் சேருமிடம் நரகமேயாகும். எத்துணை இழிவான தங்குமிடம் அது!
3:197. (இது) குறைந்த சுகமாகும், பின்னர், அவர்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடத்தில் மிகக் கெட்டது.
3:198 لٰكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا نُزُلًا مِّنْ عِنْدِ اللّٰهِ‌ؕ وَمَا عِنْدَ اللّٰهِ خَيْرٌ لِّلْاَبْرَارِ‏
3:198. ஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்: (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்; மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்மையுடையதாகும்.
3:198. ஆயினும், எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கின்றார்களோ அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளுண்டு. அதில் அல்லாஹ்வின் விருந்தினராக (என்றென்றுமே) தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும்.
3:198. இதற்கு மாறாக எவர்கள் தம் இறைவனுக்கு அஞ்சிய வண்ணம் வாழ்ந்து வருகின்றார்களோ அவர்களுக்கு, கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். இது அல்லாஹ்விடமிருந்து அளிக்கப்படும் மிகச் சிறந்த உபசரிப்பாகும். மேலும், நல்லவர்களுக்கு அல்லாஹ்விடம் இருப்பவையே மிகவும் சிறந்தவையாகும்.
3:198. ஆயினும், தங்கள் இரட்சகனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கின்றார்களே அத்தகையோர் - அவர்களுக்கு சுவனபதிகளுண்டு, அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் அவர்கள் நிரந்தரமாக(த்தங்கி) இருப்பார்கள், (இது) அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் விருந்தாகும், இன்னும் அல்லாஹ்விடம் இருப்பது நல்லோர்க்கு மிகச் சிறந்ததாகும்.
3:199 وَاِنَّ مِنْ اَهْلِ الْكِتٰبِ لَمَنْ يُّؤْمِنُ بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَيْكُمْ وَمَاۤ اُنْزِلَ اِلَيْهِمْ خٰشِعِيْنَ لِلّٰهِ ۙ لَا يَشْتَرُوْنَ بِاٰيٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِيْلًا ‌ؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ‌ؕ اِنَّ اللّٰهَ سَرِيْعُ الْحِسَابِ‏
3:199. மேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்; இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.
3:199. (நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இத்தகையவர்களும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வைகளையும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வுக்கும் பயந்து நடக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கொடுத்து சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொள்வதுமில்லை. இத்தகையவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களது இறைவனிடத்தில் (மகத்தானதாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
3:199. திண்ணமாக, வேதம் அருளப்பட்டவர்களில் இப்படிச் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் அல்லாஹ்வையும், உம்மீது இறக்கியருளப்பட்டதையும், (முன்னர்) தங்கள் மீது இறக்கியருளப்பட்டதையும் நம்புகிறார்கள். அல்லாஹ்வின் திருமுன் பணிந்த வண்ணமிருக்கின்றார்கள். மேலும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்பதில்லை. அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. திண்ணமாக, அல்லாஹ் கணக்கு வாங்குவதில் விரைவானவனாக இருக்கின்றான்.
3:199. (விசுவாசங்கொண்டோரே!) நிச்சயமாக வேதத்தையுடையோரில் அல்லாஹ்வையும், உங்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட (மற்ற)வைகளையும் அல்லாஹ்வுக்கு பயந்தவர்களாக விசுவாசம் கொள்கின்றவரும் இருக்கின்றனர், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை சொற்பக் கிரயத்திற்கு விற்றுவிட மாட்டார்கள், இத்தகையோருக்கு அவர்களுடைய கூலி அவர்கள் இரட்சகனிடத்தில் (மகத்தானதாக) இருக்கின்றது, நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.
3:200 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
3:200. முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!
3:200. நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஒருவருக்கொருவர் சகித்துக் கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள்.
3:200. இறைநம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையை கைக்கொள்வீர்களாக! அசத்தியவாதிகளுக்கு எதிரில் உறுதியாக நிலைத்து நிற்பீர்களாக! (சத்தியத்திற்காக தொண்டு புரிய) எப்பொழுதும் ஒருங்கிணைந்து முனைப்புடன் இருப்பீர்களாக! மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சியே வாழ்வீர்களாக! (இதனால்) நீங்கள் வெற்றியாளர்களாய்த் திகழக்கூடும்!
3:200. விசுவாசங்கொண்டோரே! நீங்கள் பொறுமையைக் கடைப் பிடியுங்கள், மேலும் (எதிரியை சந்திக்கும் போது) ஒருவருக்கொருவர் உறுதியாக இருந்து கொள்ளுங்கள், மேலும் (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் சித்தமாயிருங்கள், அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்தும் கொள்ளுங்கள், நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றியடைவீர்கள்.