34. ஸூரத்துஸ் ஸபா
மக்கீ, வசனங்கள்: 54

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
34:1
34:1 اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِىْ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ وَلَـهُ الْحَمْدُ فِى الْاٰخِرَةِ ؕ وَهُوَ الْحَكِيْمُ الْخَبِيْرُ‏
اَلْحَمْدُ எல்லாப் புகழும் لِلّٰهِ அல்லாஹ்விற்கே! الَّذِىْ எப்படிப்பட்டவன் لَهٗ அவனுக்கே உரியன مَا فِى السَّمٰوٰتِ வானங்களில் உள்ளவை(யும்) وَمَا فِى الْاَرْضِ பூமியில் உள்ளவையும் وَلَـهُ அவனுக்கே الْحَمْدُ எல்லாப் புகழும் فِى الْاٰخِرَةِ ؕ மறுமையிலும் وَهُوَ அவன்தான் الْحَكِيْمُ மகாஞானமுடையவன் الْخَبِيْرُ‏ ஆழ்ந்தறிபவன்
34:1. அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
34:1. புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவைகளே! மறுமையிலும் எல்லா புகழும் அவனுக்குரியதே! அவன்தான் ஞானமுடையவன், அனைத்தையும் நன்கறிந்தவன்.
34:1. வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! மேலும், மறுமையிலும்கூட புகழ் அவனுக்கே உரித்தானது. அவன் நுண்ணறிவாளனாகவும், யாவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
34:1. புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் எத்தகையவனென்றால், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியதாகும். மறுமையிலும் சகல புகழும் அவனுக்கே உரியதாகும், மேலும், அவன் தீர்க்கமான அறிவுடையவன், (யாவையும்) நன்குணர்பவன்.
34:2
34:2 يَعْلَمُ مَا يَلِجُ فِى الْاَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيْهَا ؕ وَهُوَ الرَّحِيْمُ الْغَفُوْرُ‏
يَعْلَمُ அவன் நன்கறிவான் مَا يَلِجُ நுழைவதை(யும்) فِى الْاَرْضِ பூமியில் وَمَا يَخْرُجُ வெளியேறுவதையும் مِنْهَا அதிலிருந்து وَمَا يَنْزِلُ இறங்குவதையும் مِنَ السَّمَآءِ வானத்திலிருந்து وَمَا يَعْرُجُ ஏறுவதையும் فِيْهَا ؕ அதில் وَهُوَ அவன்தான் الرَّحِيْمُ மகா கருணையாளன் الْغَفُوْرُ‏ மகா மன்னிப்பாளன்
34:2. பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன் பால் உயருவதையும் (ஆகிய அனைத்தையும்) அவன் அறிகிறான். அவன் மிக்க அன்புடையவன், மிகவும் மன்னிப்பவன்.
34:2. பூமிக்குள் பதிகின்ற (வித்து போன்ற)வற்றையும், அதில் இருந்து (முளைத்து செடிகொடிகளாக) வெளிப்படுகின்றவற்றையும் வானத்தில் இருந்து இறங்குபவற்றையும், அதன் பக்கம் ஏறுகின்றவற்றையும் அவன் நன்கறிவான். அவன் மகா கருணையுடையவன் மிக்க மன்னிப்பவன்.
34:2. பூமியினுள் செல்பவற்றையும் அதிலிருந்து வெளிப்படுபவற்றையும் வானத்திலிருந்து இறங்குகின்றவற்றையும் அதில் ஏறுகின்றவற்றையும் ஆக எல்லாவற்றையும் அவன் நன்கறிகின்றான். அவன் தனிப்பெருங் கிருபையாளனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்.
34:2. பூமிக்குள் நுழைகின்றதையும், அதிலிருந்து வெளிப்படுகின்றதையும், வானத்திலிருந்து இறங்குகின்றதையும், அதில் ஏறுகின்றதையும் அவன் அறிவான். மேலும், அவன் மிகக் கிருபையுடையவன், மிக்க மன்னிப்பவன்.
34:3
34:3 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَاْتِيْنَا السَّاعَةُ ؕ قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتَاْتِيَنَّكُمْۙ عٰلِمِ الْغَيْبِ ۚ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍۙ‏
وَقَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பாளர்கள் لَا تَاْتِيْنَا எங்களிடம் வராது السَّاعَةُ ؕ மறுமை قُلْ கூறுவீராக! بَلٰى ஏன் (வராது) وَرَبِّىْ என் இறைவன் மீது சத்தியமாக لَـتَاْتِيَنَّكُمْۙ நிச்சயமாக அது உங்களிடம் வரும் عٰلِمِ நன்கறிந்தவனாகிய الْغَيْبِ ۚ மறைவானவற்றை لَا يَعْزُبُ எதுவும் மறைந்துவிடாது عَنْهُ அவனை விட்டும் مِثْقَالُ அளவும் ذَرَّةٍ அணு فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَلَا فِى الْاَرْضِ பூமியிலும் وَلَاۤ اَصْغَرُ சிறியது இல்லை مِنْ ذٰ لِكَ அதை விட وَلَاۤ اَكْبَرُ பெரியது இல்லை اِلَّا தவிர فِىْ كِتٰبٍ பதிவேட்டில் இருந்தே مُّبِيْنٍۙ‏ தெளிவான
34:3. எனினும் நிராகரிப்பவர்கள்: “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
34:3. (எனினும்) “மறுமை நமக்கு வராது'' என்று (இந்)நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக: ‘‘ ஏன் வராது, மறைவானவை அனைத்தையும் அறிந்தவனான என் இறைவன் மீது சத்தியம்! கண்டிப்பாக அது உங்களிடம் வந்தே தீரும். அவன் அறிவை விட்டும் வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவைவிட சிறியதோ அல்லது பெரியதோ (ஒவ்வொன்றும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.''
34:3. “மறுமை நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.”
34:3. மேலும் நிராகரிப்போர், “மறுமை நாள் நமக்கு (வரவே) வராது” என்று கூறுகின்றனர், (நபியே!) நீர் கூறுவீராக: “அவ்வாறல்ல! மறைவானவற்றை அறியக்கூடிய என் இரட்சகனின் மீது சத்தியமாக, நிச்சயமாக அது உங்களிடம் வந்தே தீரும். வானங்களிலோ, பூமியிலோ (உள்ளவற்றில்) ஓர் அணுவளவும் அவனை விட்டும் மறையாது; இன்னும், அதைவிட மிகச் சிறியதோ, மிகப்பெரியதோ (ஒவ்வொன்றும் லவ்ஹுல் மஹ்ஃபுள் என்னும்) தெளிவான புத்தகத்தில் இல்லாமலில்லை.”
34:4
34:4 لِّيَجْزِىَ الَّذِيْنَ اٰمَنُوا وَعَمِلُوْا الصّٰلِحٰتِؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ‏
لِّيَجْزِىَ அவன் கூலிகொடுப்பதற்காக الَّذِيْنَ اٰمَنُوا நம்பிக்கை கொண்டவர்களுக்கு وَعَمِلُوْا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِؕ நன்மைகளை اُولٰٓٮِٕكَ لَهُمْ அவர்களுக்கு مَّغْفِرَةٌ மன்னிப்பு(ம்) وَّرِزْقٌ வாழ்க்கையும் كَرِيْمٌ‏ கண்ணியமான
34:4. ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது); அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.
34:4. நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தவர்களுக்குக் கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு அதில் பதியப்பட்டுள்ளது). இத்தகையவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் (வாழ்க்கையும்) உண்டு.
34:4. மேலும், இந்த மறுமை வருவதுநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவதற்காகத்தான்! அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன.
34:4. விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்தோருக்கு (அந்நாளில்) அவன் கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு அதில் பதியப்பட்டுள்ளது), அத்தகையோர்_ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
34:5
34:5 وَالَّذِيْنَ سَعَوْ فِىْۤ اٰيٰتِنَا مُعٰجِزِيْنَ اُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِيْمٌ‏
وَالَّذِيْنَ سَعَوْ முயற்சிப்பவர்கள் فِىْۤ اٰيٰتِنَا நமது வசனங்களில் مُعٰجِزِيْنَ அவர்கள் முறியடிப்பதற்காக اُولٰٓٮِٕكَ لَهُمْ அவர்களுக்கு عَذَابٌ வேதனை உண்டு مِّنْ رِّجْزٍ கெட்ட தண்டனையின் اَلِيْمٌ‏ மிகவும் வலிமிக்க
34:5. மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு.
34:5. எவர்கள் நம் வசனங்களுக்கு எதிராக (நம்மை)த் தோற்கடிக்க முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் தண்டனையின் வேதனை உண்டு.
34:5. எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச்செய்திடக் கடுமையாக முயற்சி செய்தார்களோ அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய மிக மோசமான வேதனை இருக்கிறது.
34:5. மேலும், நம்முடைய வசனங்கள் விஷயத்தில் (நம்மை) இயலாமையிலாக்குகின்ற (எண்ணங்கொண்ட)வர்களாக (நமக்கு எதிராக) முயற்சி செய்தார்களே அத்தகையோர்_அவர்களுக்கு வேதனையில் துன்புறுத்தும் வேதனையுண்டு.
34:6
34:6 وَيَرَى الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ الَّذِىْۤ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ هُوَ الْحَـقَّ ۙ وَيَهْدِىْۤ اِلٰى صِرَاطِ الْعَزِيْزِ الْحَمِيْدِ‏
وَيَرَى அறிவார்கள் الَّذِيْنَ اُوْتُوا கொடுக்கப்பட்டவர்கள் الْعِلْمَ கல்வி الَّذِىْۤ اُنْزِلَ இறக்கப்பட்டதை اِلَيْكَ உமக்கு مِنْ رَّبِّكَ உமது இறைவனிடமிருந்து هُوَ அதுதான் الْحَـقَّ ۙ சத்தியம் وَيَهْدِىْۤ இன்னும் நேர்வழி காட்டுகிறது اِلٰى صِرَاطِ பாதைக்கு الْعَزِيْزِ الْحَمِيْدِ‏ மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின்
34:6. எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்.
34:6. (நபியே!) எவர்களுக்கு ஞானம் கொடுக்கப்பட்டதோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தை, உமது இறைவனால் அருளப்பட்ட உண்மையான வேதம் என்றும்; அது அனைவரையும் மிகைத்த மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியை அறிவிக்கக்கூடியது என்றும் எண்ணுவார்கள்.
34:6. (நபியே!) உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருப்பது எதுவோ அது முற்றிலும் உண்மையானதென்றும், அதுவே, ஆற்றல் மிக்கவனும் மாபெரும் புகழுக்குரியவனுமான இறைவனின் பாதையைக் காண்பிக்கின்றது என்றும் ஞானமுடையவர்கள் நன்கறிகின்றார்கள்.
34:6. (நபியே!) இன்னும், (வேதக்)கல்வி கொடுக்கப்பட்டார்களே அத்தகையோர்_உம்திரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேத)த்தை இதுவே உண்மை(யான வேதம்) என்றும், யாவரையும் மிகைத்த, மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியின்பால் இது வழிகாட்டும் என்றும் காண்கிறார்கள்.
34:7
34:7 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا هَلْ نَدُلُّكُمْ عَلٰى رَجُلٍ يُّنَبِّئُكُمْ اِذَا مُزِّقْتُمْ كُلَّ مُمَزَّقٍۙ اِنَّكُمْ لَفِىْ خَلْقٍ جَدِيْدٍۚ‏
وَقَالَ கூறுகின்றனர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் هَلْ نَدُلُّكُمْ நாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா? عَلٰى رَجُلٍ ஓர் ஆடவரை يُّنَبِّئُكُمْ அவர் உங்களுக்கு அறிவிக்கின்றார் اِذَا مُزِّقْتُمْ நீங்கள் கிழிக்கப்பட்ட பின்னர் كُلَّ مُمَزَّقٍۙ சுக்கு நூறாக اِنَّكُمْ நிச்சயமாக நீங்கள் لَفِىْ خَلْقٍ படைப்பாக (உருவாக்கப்படுவீர்கள்) جَدِيْدٍۚ‏ புதிய
34:7. ஆனால், நிராகரிக்கிறார்களே அவர்கள்: “நீங்கள் (இறந்து, மக்கித் தூளாகச்) சிதறடிக்கப்பட்ட பின், நீங்கள் ஒரு புதிய படைப்பாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கும் மனிதரை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவா?” என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
34:7. எனினும், நிராகரித்தவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இறந்து, மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடிய ஒரு மனிதரை நாம் உங்களுக்கு அறிவிக்கவா'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
34:7. நிராகரிப்பாளர்கள் (மக்களிடம்) கூறுகின்றார்கள்: “(நீங்கள் மரணமாகி) உங்கள் உடல் அணு அணுவாய் சிதைந்து போய்விட்ட பிறகு நீங்கள் மீண்டும் புதிதாகப் படைக்கப்படுவீர்கள் என்று உங்களுக்குச் செய்தி அறிவிக்கும் ஒருவரை நாங்கள் உங்களுக்குக் காண்பித்துத் தரவா?”
34:7. இன்னும், நிராகரிக்கிறார்களே அவர்கள், (மற்றவர்களிடம்,) “நீங்கள் (இறந்து மக்கி) முற்றிலுமாக துண்டு துண்டாக ஆக்கப்பட்டுவிடுவீர்களானால், நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) புதிய படைப்பில் இருப்பீர்களென்று உங்களுக்குத் தெரிவிக்கும் ஒரு மனிதனை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?” என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
34:8
34:8 اَ فْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَمْ بِهٖ جِنَّةٌ  ؕ بَلِ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ فِى الْعَذَابِ وَالضَّلٰلِ الْبَعِيْدِ‏
اَ فْتَـرٰى அவர் இட்டுக்கட்டுகிறாரா عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை اَمْ அல்லது بِهٖ அவருக்கு جِنَّةٌ  ؕ பைத்தியம் (பிடித்திருக்கிறதா?) بَلِ மாறாக الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்ளாதவர்கள் بِالْاٰخِرَةِ மறுமையை فِى الْعَذَابِ வேதனையிலும் وَالضَّلٰلِ வழிகேட்டிலும் الْبَعِيْدِ‏ தூரமான
34:8. அன்றியும், இ(வ்வாறு கூறுகின்ற)வர் அல்லாஹ்வின் மீது “பொய்யை இட்டுக் கட்டுகிறாரா; அல்லது இவருக்கு பைத்தியமா?” (என்றும் கேட்கிறார்கள்.) அவ்வாறல்ல! மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் வேதனையிலும் வெகு தூரமான வழி கேட்டிலுமே இருக்கிறார்கள்.
34:8. என்ன, (இம்மனிதர்) ‘‘அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ'' (என்று அவர்களிடம் கூறுகின்றனர்.) மாறாக. எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள்தான் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்.
34:8. “இந்த மனிதர் அல்லாஹ்வின் பெயரால் பொய்யைப் புனைந்து கூறுகின்றாரா? அல்லது இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றதா என்பது புரியவில்லையே!” இல்லை, உண்மையில், மறுமையை நம்பாதவர்கள்தாம் வேதனைக்கு ஆளாகப் போகிறார்கள். மேலும், மிக மோசமாக வழிகெட்டுப் போனவர்களும் அவர்கள்தாம்!
34:8. “அல்லாஹ்வின் மீது அவர் பொய்யை இட்டுக்கட்டுகிறாரா? அல்லது அவருக்குப் பைத்தியமா?” (என்றும் கூறுகின்றனர்) அல்ல! மறுமையை நம்பவில்லையே அவர்கள் தாம் (பெரும்) வேதனையிலும், வெகுதூரமான வழிகேட்டிலும் இருக்கின்றனர்.
34:9
34:9 اَفَلَمْ يَرَوْا اِلٰى مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ اِنْ نَّشَاْ نَخْسِفْ بِهِمُ الْاَرْضَ اَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِّنَ السَّمَآءِ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّكُلِّ عَبْدٍ مُّنِيْبٍ‏
اَفَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اِلٰى مَا بَيْنَ اَيْدِيْهِمْ தங்களுக்கு முன்னுள்ள وَمَا خَلْفَهُمْ இன்னும் தங்களுக்கு பின்னுள்ள مِّنَ السَّمَآءِ வானத்தையும் وَالْاَرْضِ ؕ பூமியையும் اِنْ نَّشَاْ நாம் நாடினால் نَخْسِفْ சொருகிவிடுவோம் بِهِمُ அவர்களை الْاَرْضَ பூமியில் اَوْ அல்லது نُسْقِطْ விழவைப்போம் عَلَيْهِمْ அவர்கள் மீது كِسَفًا துண்டுகளை مِّنَ السَّمَآءِ ؕ வானத்தின் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கின்றது لَاٰيَةً ஒர் அத்தாட்சி لِّكُلِّ عَبْدٍ எல்லா அடியார்களுக்கும் مُّنِيْبٍ‏ திரும்பக்கூடிய
34:9. வானத்திலும், பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும் அவர்களுக்குப் பின்னாலுள்ளதையும் அவர்கள் பார்க்க வில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.  
34:9. வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவற்றை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகிவிடுவோம் அல்லது வானத்திலிருந்து சில துண்டுகளை அவர்கள் மேல் எறிந்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) நோக்கி நிற்கும் ஒவ்வொரு அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
34:9. இவர்கள் தங்களுக்கு முன்னாலும் பின்னாலும் சூழ்ந்துள்ள வானத்தையும் பூமியையும் என்றுமே பார்த்ததில்லையா, என்ன? நாம் நாடினால் இவர்களைப் பூமிக்கடியில் ஆழ்த்தியிருப்போம். அல்லது வானத்தின் சில துண்டுகளை இவர்கள் மீது விழச் செய்திருப்போம். இறைவன் பக்கம் திரும்புகின்ற ஒவ்வோர் அடியானுக்கும் உண்மையில் இதில் ஒரு சான்று இருக்கிறது.
34:9. வானத்திலும், பூமியிலும், அவர்களுக்கு முன்னிருப்பதையும், பின்னிருப்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமிக்குள் அழுந்தச்செய்துவிடுவோம், அல்லது வானத்திலிருந்து பல துண்டுகளை அவர்கள் மேல் விழச் செய்து (அவர்களை அழித்து) விடுவோம், நிச்சயமாக தவ்பாச்செய்து (அல்லாஹ்வின் பக்கமே) திரும்பும் ஒவ்வொரு அடியானுக்கும் இதில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
34:10
34:10 وَلَقَدْ اٰتَيْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا ؕ يٰجِبَالُ اَوِّبِىْ مَعَهٗ وَالطَّيْرَ ۚ وَاَلَــنَّا لَـهُ الْحَدِيْدَ ۙ‏
وَلَقَدْ திட்டவட்டமாக اٰتَيْنَا வழங்கினோம் دَاوٗدَ தாவூதுக்கு مِنَّا நம் புறத்தில் இருந்து فَضْلًا ؕ மேன்மையை يٰجِبَالُ மலைகளே! اَوِّبِىْ நீங்கள் துதியுங்கள் مَعَهٗ அவருடன் وَالطَّيْرَ ۚ பறவைகளே! وَاَلَــنَّا இன்னும் மென்மையாக்கினோம் لَـهُ அவருக்கு الْحَدِيْدَ ۙ‏ இரும்பை
34:10. இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
34:10. மெய்யாகவே நாம் நம் புறத்திலிருந்து தாவூதுக்கு பெரும் அருள் புரிந்தோம். மலைகளே! பறவைகளே! ‘‘ நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதி செய்யுங்கள்'' (என்றும் கட்டளையிட்டோம்). மேலும், அவருக்கு இரும்பை (மெழுகைப் போல்) மென்மையாக்கித் தந்தோம்.
34:10. நாம் தாவூதுக்கு நம்மிடமிருந்து பெரும் அருட்பேற்றினை வழங்கியிருந்தோம். (நாம் ஆணையிட்டோம்:) “மலைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் துதி பாடுங்கள். இவ்வாறே பறவைகளுக்கும் (நாம் கட்டளையிட்டிருந்தோம்.) நாம் அவருக்காக இரும்பை மென்மையாக்கிக் கொடுத்தோம்.
34:10. இன்னும் திட்டமாக நாம் தாவூதுக்கு நம்மிடமிருந்து பேரருளைக் கொடுத்தோம், “மலைகளே! நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதி(யை எதிரொலிக்கச் செய்)யுங்கள்” (என்று கூறினோம்), இன்னும் பறவைகளையும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அன்றியும், அவருக்கு இரும்பை மிருதுவாக்கியிருந்தோம்.
34:11
34:11 اَنِ اعْمَلْ سٰبِغٰتٍ وَّقَدِّرْ فِى السَّرْدِ وَاعْمَلُوْا صَالِحًـا ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ‏
اَنِ اعْمَلْ செய்வீராக! سٰبِغٰتٍ உருக்குச் சட்டைகள் وَّقَدِّرْ இன்னும் அளவாக செய்வீராக! فِى السَّرْدِ ஆணிகளை وَاعْمَلُوْا இன்னும் செய்யுங்கள் صَالِحًـا ؕ நன்மையை اِنِّىْ நிச்சயமாக நான் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை بَصِيْرٌ‏ உற்று நோக்குகின்றேன்
34:11. “வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றேன்” (என்றும் சொன்னோம்.)
34:11. மேலும், (சங்கிலி) வளையங்களை செய்து (அவற்றை முறைப்படி) ஒழுங்காக இணைத்து போர்ச்சட்டை செய்யவும் (என்று கட்டளையிட்டதுடன் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நோக்கி) ‘‘நீங்கள் நற்செயல்களையே செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நான், நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்'' (என்றோம்).
34:11. “போர்க்கவசங்கள் செய்வீராக! அவற்றின் வளையங்களைச் சரியான அளவில் அமைப்பீராக” என்ற கட்டளையுடன்! (தாவூதுடைய வழித்தோன்றல்களே!) நற்செயல்கள் புரியுங்கள்; நீங்கள் செய்வதனைத்தையும் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
34:11. (மேலும்) “நிறைவான போர்க்கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களில் (அளவை) ஒழுங்கு படுத்துவீராக” என்றும், நீங்கள் நற்கருமங்களையே செய்துகொண்டிருங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை பார்க்கிறவன்” (என்றும் கூறினோம்).
34:12
34:12 وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ غُدُوُّهَا شَهْرٌ وَّرَوَاحُهَا شَهْرٌۚ وَ اَسَلْنَا لَهٗ عَيْنَ الْقِطْرِؕ وَمِنَ الْجِنِّ مَنْ يَّعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِاِذْنِ رَبِّهِؕ وَمَنْ يَّزِغْ مِنْهُمْ عَنْ اَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيْرِ‏
وَلِسُلَيْمٰنَ இன்னும் சுலைமானுக்கு الرِّيْحَ காற்றை(யும்) غُدُوُّهَا அதன் காலைப்பொழுது(ம்) شَهْرٌ ஒரு மாதமாகும் وَّرَوَاحُهَا இன்னும் அதன் மாலைப்பொழுதும் شَهْرٌۚ ஒரு மாதமாகும் وَ اَسَلْنَا இன்னும் ஓட வைத்தோம் لَهٗ அவருக்கு عَيْنَ சுரங்கத்தை الْقِطْرِؕ செம்பினுடைய وَمِنَ الْجِنِّ இன்னும் ஜின்களிலிருந்து مَنْ يَّعْمَلُ வேலை செய்கின்றவர்களை بَيْنَ يَدَيْهِ அவருக்கு முன்னால் بِاِذْنِ உத்தரவின் படி رَبِّهِؕ அவரது இறைவனின் وَمَنْ யார் يَّزِغْ விலகுவாரோ مِنْهُمْ அவர்களில் عَنْ اَمْرِنَا நமது கட்டளையை விட்டு نُذِقْهُ அவருக்கு நாம் சுவைக்க வைப்போம் مِنْ عَذَابِ தண்டனையை السَّعِيْرِ‏ கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்
34:12. (அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
34:12. மேலும், ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம். அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமுமாக இருந்தது. இன்னும், செம்பை ஊற்று (நீரை)ப் போல் நாம் அவருக்கு (உருகி) ஓடச்செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்து (அவருக்கு கட்டுப்பட்டு நடப்பதில்) அவர்களில் எவன் நம் கட்டளையைப் புறக்கணிக்கிறானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்றோம்).
34:12. மேலும், நாம் ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அதனுடைய காலைப் புறப்பாடு ஒரு மாத தூரம் வரையிலாகும்; மாலைப் புறப்பாடும் ஒரு மாத தூரம் வரையிலாகும். நாம் அவருக்காக உருகிய செம்பின் ஊற்றை ஓடச் செய்தோம். மேலும், ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவைகளோ தம் இறைவனின் கட்டளைப்படி பணிபுரிந்து கொண்டிருந்தன. அவற்றில் எது நம்முடைய கட்டளையை விட்டும் பிறழ்கின்றதோ அதனைக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம்.
34:12. இன்னும், ஸுலைமானுக்குக் காற்றை_(நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்.) அதன் காலை பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது, மேலும், நாம் அவருக்காக செம்பு ஊற்றை (தண்ணீரைப் போன்று உருகி) ஓடச் செய்தோம், தன் இரட்சகனுடைய அனுமதிப்படி அவருக்குமுன் வேலை செய்யக்கூடிய ஜின்களையும் (நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்,) அவர்களில் எவர் நம்முடைய கட்டளையை விட்டும் (புறக்கணித்துத்) திரும்புகின்றாரோ அவரை, கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையிலிருந்து சுவைக்குமாறு நாம் செய்வோம் (என்று கூறினோம்).
34:13
34:13 يَعْمَلُوْنَ لَهٗ مَا يَشَآءُ مِنْ مَّحَارِيْبَ وَتَمَاثِيْلَ وَجِفَانٍ كَالْجَـوَابِ وَقُدُوْرٍ رّٰسِيٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِيْلٌ مِّنْ عِبَادِىَ الشَّكُوْرُ‏
يَعْمَلُوْنَ அவை செய்கின்றன لَهٗ அவருக்கு مَا يَشَآءُ அவர் நாடுகின்ற(தை) مِنْ مَّحَارِيْبَ தொழுமிடங்களை(யும்) وَتَمَاثِيْلَ சிலைகளையும் وَجِفَانٍ பாத்திரங்களையும் كَالْجَـوَابِ நீர் தொட்டிகளைப் போன்ற وَقُدُوْرٍ சட்டிகளையும் رّٰسِيٰتٍ ؕ உறுதியான اِعْمَلُوْۤا செய்யுங்கள் اٰلَ குடும்பத்தார்களே! دَاوٗدَ தாவூதின் شُكْرًا ؕ நன்றி செலுத்துவதற்காக وَقَلِيْلٌ குறைவானவர்களே مِّنْ عِبَادِىَ என் அடியார்களில் الشَّكُوْرُ‏ நன்றி செலுத்துபவர்கள்
34:13. அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).
34:13. ஸுலைமான் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், (பெரிய பெரிய) தண்ணீர்த் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத பெரிய (பெரிய) ‘தேகு' (சமையல் பாத்திரங்)களையும் அவை செய்து கொண்டிருந்தன. (அவருடைய குடும்பத்தினரை நோக்கி) ‘‘தாவூதுடைய சந்ததிகளே ! இவற்றுக்காக நீங்கள் (நமக்கு) நன்றி செலுத்திக் கொண்டிருங்கள்'' (என்று கட்டளையிட்டோம்). எனினும், என் அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சொற்பமே ஆவார்கள்.
34:13. அந்த ஜின்கள் ஸுலைமானுக்காக அவர் விரும்பியவை அனைத்தையும் உயர்ந்த மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகத்தையொத்த பெரிய தட்டுகளையும், இருப்பிடத்தை விட்டகலாத பெரும் அண்டாக்களையும் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தன தாவூதுடைய வழித்தோன்றல்களே! நன்றி செலுத்தும் வகையில் செயலாற்றுங்கள். என்னுடைய அடிமைகளில் மிகச் சிலர்தான் நன்றி செலுத்துவோராயிருக்கின்றனர்.
34:13. அவைகள் (ஸுலைமானாகியா) அவர் நாடிய, மிஹ்ராபுகளை (பள்ளிகள், கோட்டைகள் உயர்ந்த குடியிருப்புத்தலங்கள் ஆகியவற்றை)யும், சிற்பங்களையும், (பெரிய பெரிய தண்ணீர்த்) தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத (நிலையான) பெரிய (சமையல்) பாத்திரங்களையும் அவருக்காகச் செய்து கொண்டிருந்தன: (ஆகவே,) “தாவூதுடைய சந்ததிகளே! (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதற்காக செயல்படுங்கள், மேலும், என்னுடைய அடியார்களில் நன்றிசெலுத்துவோர் (வெகு) சொற்பமேயாவர்” (என்று கூறினோம்).
34:14
34:14 فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلٰى مَوْتِهٖۤ اِلَّا دَآ بَّةُ الْاَرْضِ تَاْ كُلُ مِنْسَاَتَهُ ۚ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ اَنْ لَّوْ كَانُوْا يَعْلَمُوْنَ الْغَيْبَ مَا لَبِثُوْا فِى الْعَذَابِ الْمُهِيْنِ ؕ‏
فَلَمَّا قَضَيْنَا நாம் முடிவு செய்தபோது عَلَيْهِ அவருக்கு الْمَوْتَ மரணத்தை مَا دَلَّهُمْ அவர்களுக்கு அறிவிக்கவில்லை عَلٰى مَوْتِهٖۤ அவர் மரணித்து விட்டதை اِلَّا தவிர دَآ بَّةُ الْاَرْضِ கரையானை تَاْ كُلُ தின்ற(து) مِنْسَاَتَهُ ۚ அவருடைய தடியை فَلَمَّا خَرَّ அவர் கீழே விழுந்தபோது تَبَيَّنَتِ தெளிவாக தெரிய வந்தது الْجِنُّ ஜின்களுக்கு اَنْ لَّوْ كَانُوْا يَعْلَمُوْنَ தாங்கள் அறிந்துகொண்டிருந்தால் الْغَيْبَ மறைவானவற்றை مَا لَبِثُوْا தங்கி இருந்திருக்க மாட்டார்கள் فِى الْعَذَابِ வேதனையில் الْمُهِيْنِ ؕ‏ இழிவான
34:14. அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.
34:14. ஸுலைமானுக்கு நாம் மரணத்தை விதித்தபொழுது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் சாய்ந்திருந்த தடியை அரித்து விட்ட பூச்சியைத் தவிர (மற்ற எவரும்) அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. (அவர் சாய்ந்திருந்த தடியைக் கரையான் பூச்சிகள் அரித்து விட்டன. ஆகவே, அதன் மீது சாய்ந்திருந்த ஸுலைமான் கீழே விழுந்துவிட்டார்.) அவர் கீழே விழவே (வேலை செய்து கொண்டிருந்த) அந்த ஜின்களுக்கு தாங்கள் மறைவான விஷயங்களை அறியக் கூடுமாக இருந்தால் (இரவு பகலாக உழைக்க வேண்டிய) இழிவு தரும் இவ்வேதனையில் தங்கி இருக்க மாட்டோம் என்று தெளிவாகத் தெரிந்தது.
34:14. பிறகு நாம் ஸுலைமான் மீது மரணத்தை விதித்தபோது, அவருடைய கைத்தடியைத் தின்றுகொண்டிருந்த கரையான்களைத் தவிர வேறெதுவும் அவருடைய மரணத்தைப் பற்றி அந்த ஜின்களுக்கு அறிவித்துக்கொடுக்கவில்லை. இவ்வாறு ஸுலைமான் கீழே சாய்ந்ததும் ஜின்களுக்குப் புலப்பட்டது. மறைவானவற்றை அவர்கள் அறிபவர்களாய் இருந்திருந்தால் இழிவுதரும் இவ்வேதனையில் அவர்கள் சிக்கியிருந்திருக்க மாட்டார்களே!
34:14. அவர்மீது நாம் மரணத்தை விதியாக்கிய பொழுது, அவருடைய மரணத்தைப் பற்றி (அவர் சாய்ந்திருந்த) அவருடைய தடியை அரித்துவிட்ட கறையானைத் தவிர, (வேறெதுவும்) அ(ந்த ஜின் இனத்த)வர்களுக்கு அறிவிக்கவில்லை, பின்னர், அவர் கீழே விழவே, “மறைவானதை அறியக்கூடியவர்களாக தாங்கள் இருந்திருந்தால் இழிவான வேதனையில் தாங்கள் தரிப்பட்டிருக்க வேண்டியதில்லை!” என்று ஜின்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டன.
34:15
34:15 لَقَدْ كَانَ لِسَبَاٍ فِىْ مَسْكَنِهِمْ اٰيَةٌ  ۚ جَنَّتٰنِ عَنْ يَّمِيْنٍ وَّشِمَالٍ ؕ  کُلُوْا مِنْ رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوْا لَهٗ ؕ بَلْدَةٌ طَيِّبَةٌ وَّرَبٌّ غَفُوْرٌ‏‏
لَقَدْ திட்டவட்டமாக كَانَ இருக்கின்றது لِسَبَاٍ சபா நகர மக்களுக்கு فِىْ مَسْكَنِهِمْ அவர்களின் தங்குமிடத்தில் اٰيَةٌ  ۚ ஓர் அத்தாட்சி جَنَّتٰنِ இரண்டு தோட்டங்கள் عَنْ يَّمِيْنٍ வலது பக்கத்திலும் وَّشِمَالٍ ؕ இடது பக்கத்திலும் کُلُوْا உண்ணுங்கள்! مِنْ رِّزْقِ உணவை رَبِّكُمْ உங்கள் இறைவனின் وَاشْكُرُوْا இன்னும் நன்றி செலுத்துங்கள் لَهٗ ؕ அவனுக்கு بَلْدَةٌ طَيِّبَةٌ நல்ல ஊர் وَّرَبٌّ இன்னும் இறைவன் غَفُوْرٌ‏‏ மகா மன்னிப்பாளன்
34:15. நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).
34:15. மெய்யாகவே ‘ஸபா'வாசிகள் வசித்திருந்த இடத்தில் அவர்களுக்கு நல்லதோர் அத்தாட்சியிருந்தது. (அதன் வழியாகச் செல்பவர்களுக்கு) வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரு சோலைகள் இருந்தன. ‘‘ உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்தவற்றைப் புசியுங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துங்கள். (இம்மையில்) வளமான நகரமும், (மறுமையில்) மிக்க மன்னிப்புடைய இறைவனும் (உங்களுக்கு) உண்டு'' (எனவும் கூறப்பட்டது).
34:15. ஸபஃ சமுதாயத்தினர்க்கு அவர்கள் வசித்த இடத்திலேயே ஒரு சான்று இருந்தது. வலப்புறமும் இடப்புறமும் இரு தோட்டங்கள் இருந்தன. உண்ணுங்கள், உங்கள் இறைவன் வழங்கிய உணவை! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துங்கள். நாடோ நன்கு தூய்மையாக இருக்கிறது. படைத்த இறைவனோ பெரும் மன்னிப்பாளனாக இருக்கின்றான்.
34:15. திட்டமாக ஸபஉ (என்னும் ஊர்) வாசிகளுக்கு அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஒரு (நல்ல) அத்தாட்சியிருந்தது, (அதுவே) வலப் புறத்திலும், இடப் புறத்திலும் (இருந்த) இரு சோலைகள். “உங்கள் இரட்சகனின் உணவிலிருந்து உண்ணுங்கள், அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள், பரிசுத்தமான நகரம், மிக்க மன்னிப்பளிக்கும் இரட்சகன்” (எனவும் கூறப்பட்டது).
34:16
34:16 فَاَعْرَضُوْا فَاَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنٰهُمْ بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَىْ اُكُلٍ خَمْطٍ وَّاَثْلٍ وَّشَىْءٍ مِّنْ سِدْرٍ قَلِيْلٍ‏
فَاَعْرَضُوْا ஆனால் புறக்கணித்தனர் فَاَرْسَلْنَا ஆகவே அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது سَيْلَ பெரும் வெள்ளத்தை الْعَرِمِ அடியோடு அரித்து செல்கின்ற وَبَدَّلْنٰهُمْ இன்னும் மாற்றிவிட்டோம் அவர்களுக்கு بِجَنَّتَيْهِمْ அவர்களின் இரண்டு தோட்டங்களுக்குப் பதிலாக جَنَّتَيْنِ இரண்டு தோட்டங்களை ذَوَاتَىْ உடைய اُكُلٍ பழங்கள் خَمْطٍ துர்நாற்றமுள்ள وَّاَثْلٍ இன்னும் காய்க்காத மரங்கள் وَّشَىْءٍ مِّنْ سِدْرٍ قَلِيْلٍ‏ இன்னும் மிகக் குறைவான சில இலந்தை மரங்களை
34:16. ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.
34:16. எனினும், அவர்கள் (அதைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தானதொரு அணையை உடைக்கக்கூடிய) பெரும் வெள்ளத்தை அவர்களுக்குக் கேடாக அனுப்பிவைத்தோம். அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளைக் கசப்பும், புளிப்புமுள்ள காய்களையுடைய மரங்களாலும், சில இலந்தை மரங்களாலும் நிரம்பிய தோப்புகளாக மாற்றிவிட்டோம்.
34:16. ஆயினும், அவர்கள் புறக்கணித்துவிட்டார்கள். ஆகவே, அவர்கள் மீது அணை உடைத்து ஓடும் வெள்ளத்தை நாம் அனுப்பினோம். மேலும், அவர்களுடைய (முந்தைய) இரு தோட்டங்களுக்குப் பகரமாக வேறு இரு தோட்டங்களைக் கொடுத்தோம். அவற்றில் கசப்பான காய்களும், காற்றாடி மரங்களும் இன்னும் மிகச் சில இலந்தை மரங்களுமே இருந்தன.
34:16. ஆனால், அவர்கள் (நம்மைப்) புறக்கணித்துவிட்டனர், (ஆகவே, “மஆரிப்” அணையை உடைக்கக்கூடிய) பெரு வெள்ளத்தை அவர்கள் மீது நாம் அனுப்பி வைத்தோம்; அவர்களுடைய (சுவைமிகுந்த கனிகளையுடைய) இரு சோலைகளை, கசப்பும் புளிப்புமுள்ள பழங்களையுடைய மரங்களாகவும், சில இலந்தை மரங்களையும் உடைய இரு சோலைகளாகவும் நாம் மாற்றிவிட்டோம்.
34:17
34:17 ذٰ لِكَ جَزَيْنٰهُمْ بِمَا كَفَرُوْا ؕ وَهَلْ نُـجٰزِىْۤ اِلَّا الْـكَفُوْرَ‏
ذٰ لِكَ இது جَزَيْنٰهُمْ அவர்களுக்கு நாம் கூலி கொடுத்தோம் بِمَا كَفَرُوْا ؕ அவர்கள் நிராகரித்ததற்காக وَهَلْ نُـجٰزِىْۤ மற்றவர்களையா நாம் தண்டிப்போம் اِلَّا தவிர الْـكَفُوْرَ‏ நிராகரிப்பாளர்களை
34:17. அவர்கள் நிராகரித்ததின் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா?
34:17. நம் நன்றியை அவர்கள் மறந்ததற்கு இதை நாம் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம். நன்றி கெட்டவர்களுக்கே தவிர (மற்றெவருக்கும் இத்தகைய) கூலியை நாம் கொடுப்போமா?
34:17. இதுவே அவர்கள் நிராகரித்ததற்குப் பகரமாக நாம் வழங்கிய கூலியாகும். மேலும், நன்றி கொல்லும் மனிதர்களுக்கே அன்றி வேறெவருக்கும் நாம் இத்தகைய கூலி கொடுப்பதில்லை.
34:17. அவர்கள் நிராகரித்ததன் காரணமாக, இதனை நாம் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம், நிராகரிப்போருக்கே தவிர, (இதுபோன்ற) கூலியை நாம் கொடுப்போமா?
34:18
34:18 وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا قُرًى ظَاهِرَةً وَّقَدَّرْنَا فِيْهَا السَّيْرَ ؕ سِيْرُوْا فِيْهَا لَيَالِىَ وَاَيَّامًا اٰمِنِيْنَ‏
وَجَعَلْنَا நாம் ஏற்படுத்தினோம் بَيْنَهُمْ அவர்களுக்கு இடையிலும் وَبَيْنَ இடையிலும் الْقُرَى ஊர்களுக்கு الَّتِىْ بٰرَكْنَا நாம் அருள்வளம் புரிந்த فِيْهَا அவற்றில் قُرًى பல ஊர்களை ظَاهِرَةً தெளிவாகத் தெரியும்படியான وَّقَدَّرْنَا நிர்ணயித்தோம் فِيْهَا அவற்றில் السَّيْرَ ؕ பயணத்தை سِيْرُوْا பயணியுங்கள் فِيْهَا அவற்றில் لَيَالِىَ பல இரவுகளும் وَاَيَّامًا பல பகல்களும் اٰمِنِيْنَ‏ பாதுகாப்பு பெற்றவர்களாக
34:18. இன்னும், அவர்களுக்கிடையிலும், நாம் பரக்கத்து (அவற்றில்) செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் (வழியில்) தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் (போக்குவரத்து(ப் பாதைகளையு)ம் அமைத்தோம்; “அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்” (என்று கூறினோம்).
34:18. அவர்களு(டைய ஊரு)க்கும் நாம் அருள்புரிந்த (சிரியாவிலுள்ள செழிப்பான) ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களையும் உண்டுபண்ணி அவற்றில் பாதைகளையும் அமைத்து, ‘‘ இரவு பகல் எந்த நேரத்திலும் அச்சமற்றவர்களாக அதில் பிரயாணம் செய்யுங்கள்'' (என்று கூறியிருந்தோம்).
34:18. மேலும், அவர்களுக்கும் நாம் அருட்பேறுகள் வழங்கியிருந்த ஊர்களுக்குமிடையில் எல்லோருக்கும் தெரியும்படியான ஊர்களை அமைத்திருந்தோம். அவற்றில் பயணத்தூரத்தை அளவிட்டு நிர்ணயித்திருந்தோம். “பயணம் செய்யுங்கள் இவ்வழிகளினூடே; இரவு பகல் முழுவதும் அச்சமற்றவர்களாய்!”
34:18. இன்னும், அவர்களுக்கிடையேயும், நாம் பரக்கத்துச் செய்திருந்த ஊர்களுக்கிடையேயும் வெளிப்படையாகத் தென்படக்கூடிய பல ஊர்களையும் ஆக்கி, அவைகளில் பிரயாணத்தை நாம் அமைத்தோம். “இரவுகளிலும், பகல்களிலும் அவற்றில் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்” (என்று கூறினோம்.)
34:19
34:19 فَقَالُوْا رَبَّنَا بٰعِدْ بَيْنَ اَسْفَارِنَا وَظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَجَعَلْنٰهُمْ اَحَادِيْثَ وَمَزَّقْنٰهُمْ كُلَّ مُمَزَّقٍ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ لّـِكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ‏
فَقَالُوْا ஆனால் அவர்கள் கூறினர் رَبَّنَا எங்கள் இறைவா! بٰعِدْ தூரத்தை ஏற்படுத்து! بَيْنَ மத்தியில் اَسْفَارِنَا எங்கள் பயணங்களுக்கு وَظَلَمُوْۤا இன்னும் அநீதி இழைத்தனர் اَنْفُسَهُمْ தங்களுக்குத் தாமே فَجَعَلْنٰهُمْ ஆகவே, அவர்களை ஆக்கிவிட்டோம் اَحَادِيْثَ பேசப்படக்கூடிய கதைகளாக وَمَزَّقْنٰهُمْ அவர்களை கிழித்துவிட்டோம் كُلَّ مُمَزَّقٍ ؕ சுக்கு நூறாக اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கின்றன لَاٰيٰتٍ பல அத்தாட்சிகள் لّـِكُلِّ எல்லோருக்கும் صَبَّارٍ பெரும் பொறுமையாளர்(கள்) شَكُوْرٍ‏ அதிகம் நன்றி செலுத்துகின்றவர்(கள்)
34:19. ஆனால், அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!” என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்; ஆகவே அவர்களை (பழங்) கதைகளாக ஆக்கி விட்டோம் இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப்போகும் படியாய் சிதற வைத்தோம்; நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
34:19. ஆனால், அவர்கள் (இந்த நன்றியைப் புறக்கணித்து ‘‘தொடர்ச்சியாக ஊர்கள் இருப்பது எங்கள் பயணத்திற்கு இன்பம் அளிக்கவில்லை.) எங்கள் இறைவனே! எங்கள் பயணங்கள் நெடுந்தூரமாகும்படிச் செய்(வதற்காக மத்தியில் தொடர்ச்சியாக உள்ள இக்கிராமங்களை அழித்து விடு)வாயாக!'' என்று பிரார்த்தித்துத் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ஆகவே, (அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து) அவர்களையும் பல இடங்களுக்குச் சிதறடித்துப் பலரும் (இழிவாகப்) பேசப்படக்கூடிய கதைகளாக்கிவிட்டோம். பொறுமையுடையவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
34:19. ஆயினும், அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவனே! எங்களின் பயணத் தூரத்தை நீளமாக்கித் தருவாயாக!” அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்தார்கள். இறுதியில் அவர்களை நாம் வெறும் பழங்கதைகளாக்கி விட்டோம். அவர்களை முற்றிலும் சின்னாபின்னமாக்கிச் சிதறடித்து விட்டோம். ஒவ்வொரு பொறுமைசாலிக்கும் நன்றி உடையவர்க்கும் இதில் திண்ணமாக சான்றுகள் இருக்கின்றன.
34:19. ஆனால், அவர்கள் “எங்கள் இரட்சகனே! எங்கள் யாத்திரைகளை நெடுந்தூரமாகும்படி செய்வாயாக! என்று கூறி, தமக்குத் தாமே அவர்கள் அநியாயம் செய்து கொண்டனர், ஆகவே அவர்களை(ப்பற்றி அதிசயமாக ஜனங்கள் பேசும்) செய்திகளாக்கிவிட்டோம். இன்னும் அவர்களை (பல ஊர்களில்) சிதறடித்து(ப்பிரித்து) விட்டோம், பொறுமையுடையவர், நன்றி செலுத்துபவர் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இதில் (பல) படிப்பினைகள் இருக்கின்றன.
34:20
34:20 وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ اِبْلِيْسُ ظَنَّهٗ فَاتَّبَعُوْهُ اِلَّا فَرِيْقًا مِّنَ الْمُؤْمِنِيْنَ‏
وَلَقَدْ திட்டவட்டமாக صَدَّقَ உண்மையாக்கினான் عَلَيْهِمْ அவர்கள் மீது اِبْلِيْسُ இப்லீஸ் ظَنَّهٗ தன் எண்ணத்தை فَاتَّبَعُوْهُ ஆகவே, அவர்கள் அவனை பின்பற்றினர் اِلَّا தவிர فَرِيْقًا பிரிவினரை مِّنَ الْمُؤْمِنِيْنَ‏ நம்பிக்கைகொண்டவர்கள்
34:20. அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர, (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள்.
34:20. நிச்சயமாக (அவர்கள் தன்னைப் பின்பற்றுவார்களென்று) இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை உண்மை என்றே அவன் கண்டு கொண்டான். ஆகவே, நம்பிக்கை கொண்ட சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அவனையே பின்பற்றினார்கள்.
34:20. அவர்களின் விவகாரத்தில் இப்லீஸ் தன் எண்ணம் சரியாக நிறைவேறக் கண்டான். மேலும், அவர்கள் அவனையே பின்பற்றினார்கள், இறைநம்பிக்கையாளர்களின் ஒரு சிறு பிரிவினரைத் தவிர!
34:20. நிச்சயமாக (ஸபஉ வாசிகளான) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை அவன் உண்மை ஆக்கிக்கொண்டான், ஆகவே, விசுவாசங்கொண்ட ஒரு பிரிவினரைத் தவிர, (மற்றவர்கள்) அவனைப் பின்பற்றினர்.
34:21
34:21 وَمَا كَانَ لَهٗ عَلَيْهِمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّا لِنَعْلَمَ مَنْ يُّـؤْمِنُ بِالْاٰخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِىْ شَكٍّ ؕ وَ رَبُّكَ عَلٰى كُلِّ شَىْءٍ حَفِيْظٌ‏
وَمَا كَانَ இருக்கவில்லை لَهٗ அவனுக்கு عَلَيْهِمْ அவர்கள் மீது مِّنْ سُلْطٰنٍ அறவே அதிகாரம் اِلَّا இருந்தாலும் لِنَعْلَمَ நாம் அறிவதற்காக مَنْ எவர் يُّـؤْمِنُ நம்புகின்றார் بِالْاٰخِرَةِ மறுமையை مِمَّنْ இருந்து/எவர்கள் هُوَ அவர்(கள்) مِنْهَا அதில் فِىْ شَكٍّ ؕ சந்தேகத்தில் وَ رَبُّكَ உமது இறைவன் عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாவற்றையும் حَفِيْظٌ‏ கண்காணிக்கின்றவன்
34:21. எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான்.  
34:21. எனினும், அவர்களை நிர்ப்பந்திக்க அவனுக்கு ஒரு அதிகாரமும் இல்லை. ஆயினும், மறுமையை நம்பாத அவர்களில் (மறுமையை) நம்புபவர் எவர் என்பதை நாம் தெளிவாக அறி(வித்து விடு)வதற்காகவே இவ்வாறு நடைபெற்றது. உம் இறைவனே எல்லா பொருள்களையும் பாதுகாப்பவன் ஆவான்.
34:21. இப்லீசுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இருக்கவில்லை. ஆனால் (இதெல்லாம் நடந்தது) மறுமையை நம்புகின்றவர் யார், அதைப்பற்றி சந்தேகப்படுகின்றவர் யார் என்பதை நாம் கண்டறிந்து கொள்வதற்காகத்தான்! உம் இறைவன் ஒவ்வொன்றையும் கண்காணிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
34:21. மேலும், அவர்கள் மீது அவனுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை_ ஆயினும், மறுமையை நம்பாது அவர்களில் சந்தேகத்திலிருப் போரிலிருந்து (மறுமையை) நம்புவர் எவர் என்பதை நாம் தெளிவாக அறி(வித்து விடு)வதற்காகவே, (இது நடந்தது.) இன்னும், உமதிரட்சகன் ஒவ்வொரு பொருளையும் பாதுகாப்பவன்.
34:22
34:22 قُلِ ادْعُوا الَّذِيْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِۚ لَا يَمْلِكُوْنَ مِثْقَالَ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَمَا لَهُمْ فِيْهِمَا مِنْ شِرْكٍ وَّمَا لَهٗ مِنْهُمْ مِّنْ ظَهِيْرٍ‏
قُلِ கூறுவீராக! ادْعُوا அழையுங்கள்! الَّذِيْنَ زَعَمْتُمْ நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்தவர்களை مِّنْ دُوْنِ اللّٰهِۚ அல்லாஹ்வையன்றி لَا يَمْلِكُوْنَ அவர்கள் உரிமை பெறமாட்டார்கள் مِثْقَالَ ذَرَّةٍ அணு அளவுக்கு(ம்) فِى السَّمٰوٰتِ வானங்களிலும் وَلَا فِى الْاَرْضِ பூமியிலும் وَمَا لَهُمْ அவர்களுக்கு இல்லை فِيْهِمَا அவ்விரண்டிலும் مِنْ شِرْكٍ எவ்வித பங்கும் وَّمَا لَهٗ அவனுக்கு இல்லை مِنْهُمْ அவர்களில் مِّنْ ظَهِيْرٍ‏ உதவியாளர் எவரும்
34:22. “அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை - அவற்றில் இவர்களுக்கு எத்தகைய பங்கும் இல்லை - இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை.
34:22. (நபியே!) கூறுவீராக: அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர்களோ அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. மேலும், அவற்றை படைப்பதில் அவர்களுக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை. (அவற்றை படைப்பதில்) அவை அவனுக்கு உதவி செய்யவுமில்லை.
34:22. (நபியே, இந்த இணைவைப்பாளர்களிடம்) கூறும்: “அல்லாஹ்வை விடுத்து உங்களின் கடவுளர்களாக நீங்கள் யாரைக் கருதுகின்றீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் வானங்களிலோ பூமியிலோ உள்ள அணுவளவு பொருளுக்கும் உரிமையுடையவர்களல்லர். வானம் மற்றும் பூமியின் உடைமையில் அவர்கள் பங்காளியாகவும் இல்லை. அவர்களில் யாரும் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாயும் இல்லை.
34:22. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வையன்றி, நீங்கள் (கடவுள்களெனத் தவறாக) எண்ணிகொண்டீர்களே அவர்களை, நீங்கள் அழைத்துப் பாருங்கள், வானங்களிலோ, பூமியிலோ அவர்கள் ஓர் அணுவளவையும் சொந்தமாக்கிக் கொள்ளமாட்டார்கள், அவ்விரண்டிலும், அவர்களுக்கு எத்தகைய கூட்டுமில்லை, (இதில்) அவனுக்கு உதவியாளரும் அவர்களில் யாருமில்லை.
34:23
34:23 وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهٗۤ اِلَّا لِمَنْ اَذِنَ لَهٗ ؕ حَتّٰٓى اِذَا فُزِّعَ عَنْ قُلُوْبِهِمْ قَالُوْا مَاذَا ۙ قَالَ رَبُّكُمْ ؕ قَالُوا الْحَـقَّ ۚ وَهُوَ الْعَلِىُّ الْكَبِيْرُ‏
وَلَا تَنْفَعُ பலன்தராது الشَّفَاعَةُ சிபாரிசு عِنْدَهٗۤ அவனிடம் اِلَّا தவிர لِمَنْ எவருக்கு اَذِنَ அவன் அனுமதி அளித்தானோ لَهٗ ؕ அவருக்கே حَتّٰٓى இறுதியாக اِذَا فُزِّعَ திடுக்கம் சென்றுவிட்டால் عَنْ قُلُوْبِهِمْ அவர்களது உள்ளங்களை விட்டு قَالُوْا கேட்பார்கள் مَاذَا ۙ என்ன? قَالَ கூறினான் رَبُّكُمْ ؕ உங்கள் இறைவன் قَالُوا கூறுவார்கள் الْحَـقَّ ۚ உண்மையைத்தான் وَهُوَ அவன்தான் الْعَلِىُّ மிக உயர்ந்தவன் الْكَبِيْرُ‏ மகா பெரியவன்
34:23. அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது; எனவே (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இருதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப்படுமானால் “உங்கள் இறைவன் என்ன கூறினான்” என்று கேட்பார்கள். “உண்மையானதையே! மேலும், அவனே மிக்க உயர்ந்தவன் மகாப்பெரியவன்” என்று கூறுவார்கள்.
34:23. அவனுடைய அனுமதி பெற்ற (வான)வர்களைத் தவிர மற்றவர்கள் அவனிடத்தில் பரிந்து பேசுவதும் பயனளிக்காது. (அல்லாஹ்வுடைய ஒரு கட்டளை பிறக்கும் சமயத்தில் அவர்கள் பயந்து நடுங்குகின்றனர்.) அவர்களுடைய உள்ளத்தில் இருந்து நடுக்கம் நீங்கியதும் (அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி) ‘‘ உங்கள் இறைவன் என்ன கட்டளையிட்டான்?'' என்று கேட்பார்கள். அதற்கு மற்றவர்கள் ‘‘ (இடவேண்டிய) நியாயமான கட்டளையையே இட்டான்; அவனோ மிக்க மேலானவன், மிகப் பெரியவன் ஆவான்'' என்று கூறுவார்கள்.
34:23. மேலும், அல்லாஹ்விடத்தில் எந்த ஒரு பரிந்துரையும் யாருக்காகவும் பயனளிக்க முடியாது யாருக்கு அல்லாஹ் பரிந்துரை வழங்க அனுமதி தந்திருக்கின்றானோ அவரைத்தவிர! இவ்வாறு மக்களுடைய உள்ளங்களிலிருந்து அச்சம் அகலும்போது (பரிந்துரைப்பவர்களிடம்) “உங்களுடைய இறைவன் என்ன பதிலுரைத்தான்?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு, “சரியான பதில் தந்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனாகவும் மாபெரியவனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவார்கள்.
34:23. இன்னும் யாருக்கு அவன் அனுமதி அழித்தானோ அவருக்குத் தவிர அவனிடத்தில் பரிந்துரை பயனளிக்காது, முடிவாக அவர்களுடைய இதயங்களிலிருந்து நடுக்கம் நீக்கப்படுமானால், (அவர்களில் ஒருவர் மற்றவர்களிடம்,) உங்கள் இரட்சகன் என்ன கூறினான்?” என்று கேட்பார்கள். (அதற்கு மற்றவர்கள்,) “உண்மையையே கூறினான். அவனோ மிக்க உயர்ந்தவன், மிகப்பெரியவன்” என்று கூறுவார்கள்.
34:24
34:24 قُلْ مَنْ يَّرْزُقُكُمْ مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِؕ قُلِ اللّٰهُ ۙ وَ اِنَّاۤ اَوْ اِيَّاكُمْ لَعَلٰى هُدًى اَوْ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏
قُلْ கூறுவீராக! مَنْ யார்? يَّرْزُقُكُمْ உங்களுக்கு உணவளிப்பான் مِّنَ இருந்து السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِؕ இன்னும் பூமி قُلِ நீர் கூறுவீராக! اللّٰهُ ۙ அல்லாஹ்தான் وَ اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اَوْ அல்லது اِيَّاكُمْ நீங்களா? لَعَلٰى هُدًى நேர்வழியில் اَوْ அல்லது فِىْ ضَلٰلٍ வழிகேட்டில் مُّبِيْنٍ‏ தெளிவான
34:24. “வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு (வசதிகளை) அளிப்பவன் யார்?” என்று (நபியே!) நீர் கேளும்; “அல்லாஹ்தான்! இன்னும் நிச்சயமாக, நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள்” என்றும் கூறும்.
34:24. (நபியே! நிராகரிக்கும் இவர்களை நோக்கி) ‘‘வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?'' என்று கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன?) ‘‘அல்லாஹ்தான்'' என்று (நீரே) கூறி ‘‘மெய்யாகவே நேரான வழியில் இருப்பவர் அல்லது பகிரங்கமான தவறான வழியில் இருப்பவர் நீங்களா அல்லது நாமா?'' என்றும் கேட்பீராக.
34:24. (நபியே,) இவர்களிடம் கேளும்: “வானங்கள் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன் யார்?” கூறும்: “அல்லாஹ்தானே!” இப்போது திட்டவட்டமாக நம் இருவரில் நாமோ அல்லது நீங்களோ யாராவது ஒருவர்தான் நேர்வழியில் இருக்கிறோம். அல்லது வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்திருக்கின்றோம்.”
34:24. (நபியே!) “வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?” என்று (நிராகரிப்போரிடம்) கேட்பீராக! (அதற்கு பதிலாக) “அல்லாஹ்தான் என்று கூறுவீராக! இன்னும், நேர் வழியின் மீது, அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பது நிச்சயமாக நாங்களா? அல்லது நீங்களா? (என்றும் கேட்பீராக!)
34:25
34:25 قُلْ لَّا تُسْــٴَــلُوْنَ عَمَّاۤ اَجْرَمْنَا وَلَا نُسْــٴَــلُ عَمَّا تَعْمَلُوْنَ‏
قُلْ கூறுவீராக! لَّا تُسْــٴَــلُوْنَ நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள் عَمَّاۤ اَجْرَمْنَا நாங்கள் செய்த குற்றத்தைப் பற்றி وَلَا نُسْــٴَــلُ நாங்கள் விசாரிக்கப்படமாட்டோம் عَمَّا تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்கின்ற அமல்களைப் பற்றி
34:25. “நாங்கள் செய்த குற்றம் குறித்து நீங்கள் வினவப்படமாட்டீர்கள்; நீங்கள் செய்தவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம்” என்றும் கூறுவீராக.
34:25. (நபியே!) கூறுவீராக: ‘‘நாங்கள் செய்யும் குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்; (அவ்வாறே) நீங்கள் செய்பவற்றைப் பற்றி நாங்கள் கேட்கப்பட மாட்டோம்''
34:25. (இவர்களிடம்) கூறும்: “நாங்கள் செய்த குற்றங்களைப் பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது. நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி எங்களிடம் கேட்கப்பட மாட்டாது.”
34:25. (நபியே!) நீர் கூறுவீராக. ”நாங்கள் செய்த குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள், (அவ்வாறே) நீங்கள் செய்பவற்றைப் பற்றி நாங்களும் கேட்கப்படமாட்டோம்.”
34:26
34:26 قُلْ يَجْمَعُ بَيْنَـنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَـنَا بِالْحَـقِّ ؕ وَهُوَ الْـفَتَّاحُ الْعَلِيْمُ‏
قُلْ கூறுவீராக! يَجْمَعُ ஒன்று சேர்ப்பான் بَيْنَـنَا நமக்கு மத்தியில் رَبُّنَا நமது இறைவன் ثُمَّ பிறகு يَفْتَحُ அவன் தீர்ப்பளிப்பான் بَيْنَـنَا நமக்கு மத்தியில் بِالْحَـقِّ ؕ உண்மையைக் கொண்டு وَهُوَ அவன்தான் الْـفَتَّاحُ உண்மையான தீர்ப்பளிப்பவன் الْعَلِيْمُ‏ நன்கறிந்தவன்
34:26. “நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன்” என்றும் கூறுவீராக.
34:26. (நபியே!) கூறுவீராக: ‘‘முடிவில் (மறுமை நாளில்) நமது இறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து, பிறகு நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான். அவன் தீர்ப்பளிப்பதில் மிக்க மேலானவனும் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஆவான்.''
34:26. கூறும்: “நம்முடைய அதிபதி நம்மை ஒன்று கூட்டுவான். பிறகு நம்மிடையே சரியாகத் தீர்ப்பு வழங்குவான். அவனோ யாவற்றையும் அறிந்திருக்கின்ற ஆற்றல் மிக்க தீர்ப்பாளனாவான்.”
34:26. (மேலும்) நீர் கூறுவீராக: “(மறுமை நாளில்) எங்களுடைய இரட்சகன் நமக்கிடையில் ஒன்று சேர்ப்பான், பின்னர் நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான், இன்னும் அவனே தீர்ப்பளிப்பவன், (யாவையும்) நன்கறிகிறவன்.
34:27
34:27 قُلْ اَرُوْنِىَ الَّذِيْنَ اَ لْحَـقْتُمْ بِهٖ شُرَكَآءَ كَلَّا ؕ بَلْ هُوَ اللّٰهُ الْعَزِيْزُ الْحَكِيْمُ‏
قُلْ கூறுவீராக! اَرُوْنِىَ எனக்கு அறிவியுங்கள் الَّذِيْنَ எவர்கள் اَ لْحَـقْتُمْ நீங்கள் சேர்ப்பித்தீர்கள் بِهٖ அவனுடன் شُرَكَآءَ இணைகளாக كَلَّا ؕ ஒருக்காலும் முடியாது بَلْ மாறாக هُوَ அவன்தான் اللّٰهُ அல்லாஹ் الْعَزِيْزُ மிகைத்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
34:27. “அவனுக்கு இணையானவர்களென நீங்கள் சேர்த்தீர்களே அவர்களை எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! (அவனுக்கு எவருமே இணையில்லை.) அவனோ அல்லாஹ்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்” என்றும் சொல்லும்.
34:27. ‘‘ (சிலை வணங்கிகளே) அவனுக்கு இணைதெய்வங்களை நீங்கள் ஏற்படுத்தினீர்களே அவற்றைப்பற்றி எனக்கு கூறுங்கள்'' அவ்வாறு (எதுவும் அவனுக்கு இணை) இல்லை. மாறாக, அவனோ அனைவரையும் மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆகிய (ஒரே இறைவனான) அல்லாஹ் ஆவான். (ஆகவே அவனுக்கு அறவே இணை துணை இல்லை)'' என்று (நபியே!) கூறுவீராக.
34:27. (இவர்களிடம்) கூறும்: “நீங்கள் எவர்களை அவனோடு இணையானவர்களாய்ச் சேர்த்து வைத்திருக்கின்றீர்களோ அவர்களை எனக்குக் கொஞ்சம் காண்பியுங்களேன்!” ஒருபோதும் முடியாது! உண்மையில் யாவற்றையும் மிகைத்தோனும், நுண்ணறிவாளனும் அந்த அல்லாஹ் ஒருவன்தான்!
34:27. (அன்றி) “அவனுக்கு இணையானவர்கள் என(க் கூறி) நீங்கள் அவனுடன் சேர்த்து வைத்தீர்களே அவர்களை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! மாறாக, அவன்தான் அல்லாஹ்! யாவரையும் மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்” என்று கூறுவீராக!
34:28
34:28 وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِيْرًا وَّنَذِيْرًا وَّلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
وَمَاۤ اَرْسَلْنٰكَ உம்மை நாம் அனுப்பவில்லை اِلَّا தவிர كَآفَّةً அனைவருக்கும் لِّلنَّاسِ மக்கள் بَشِيْرًا நற்செய்தி சொல்பவராக(வும்) وَّنَذِيْرًا எச்சரிப்பவராகவும் وَّلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
34:28. இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
34:28. (நபியே!) நாம் உம்மை (இவ்வுலகில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்ளவில்லை.
34:28. மேலும், (நபியே!) நாம் உங்களை மனிதகுலம் முழுவதற்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கின்றோம். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
34:28. மேலும், (நபியே!) உம்மை மனிதர்கள் அனைவருக்கும் நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி நாம் அனுப்பவில்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்துகொள்ளமாட்டர்கள்.
34:29
34:29 وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏
وَيَقُوْلُوْنَ கூறுகின்றார்கள் مَتٰى எப்போது هٰذَا இந்த الْوَعْدُ வாக்கு اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ‏ உண்மையாளர்களாக
34:29. இன்னும, அவர்கள் கூறுகிறார்கள்: “உண்மையாளராக நீங்கள் இருப்பின் (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்)?” என்று.
34:29. ‘‘ நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (விசாரணைக் காலம் என்று) நீங்கள் கூறும் வாக்குறுதி எப்பொழுது வரும்?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.
34:29. மேலும், இவர்கள் உம்மிடம் “நீங்கள் உண்மையாளராயின் அந்த (மறுமையைப் பற்றிய) வாக்குறுதி எப்பொழுது நிறைவேறும்” என்று கேட்கின்றார்கள்.
34:29. மேலும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இந்த வாக்குறுதி எப்பொழுது (வரும்?”) என்று (நபியே! உம்மிடம்) அவர்கள் கேட்கின்றனர்.
34:30
34:30 قُلْ لَّـكُمْ مِّيْعَادُ يَوْمٍ لَّا تَسْتَاْخِرُوْنَ عَنْهُ سَاعَةً وَّلَا تَسْتَقْدِمُوْنَ‏
قُلْ கூறுவீராக! لَّـكُمْ உங்களுக்கு مِّيْعَادُ வாக்களிக்கப்பட்ட يَوْمٍ ஒரு நாள் لَّا تَسْتَاْخِرُوْنَ நீங்கள் பிந்த(வும்) மாட்டீர்கள் عَنْهُ அதை விட்டும் سَاعَةً சிறிது நேரம் وَّلَا تَسْتَقْدِمُوْنَ‏ முந்தவும் மாட்டீர்கள்
34:30. “(அந்த வாக்கு நிறைவேறுவதற்கு) உங்களுக்கு ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டீர்கள், முந்தவும் மாட்டீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  
34:30. அதற்கு நீர் கூறுவீராக: ‘‘உங்களுக்காக ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவுமாட்டீர்கள்; முந்தவுமாட்டீர்கள்.''
34:30. நீர் கூறும்: “உங்களுக்காக எத்தகைய ஒரு நாள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது எனில், அதன் வருகையை ஒரு நிமிடம் பிற்படுத்தவும் உங்களால் முடியாது; ஒரு நிமிடம் முற்படுத்தவும் முடியாது.”
34:30. அதற்கு நீர் கூறுவீராக: “உங்களுக்காக ஒரு நாளின் தவணையிருக்கிறது, அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும்மாட்டீர்கள், முந்தவும்மாட்டீர்கள்
34:31
34:31 وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَنْ نُّؤْمِنَ بِهٰذَا الْقُرْاٰنِ وَلَا بِالَّذِىْ بَيْنَ يَدَيْهِؕ وَلَوْ تَرٰٓى اِذِ الظّٰلِمُوْنَ مَوْقُوْفُوْنَ عِنْدَ رَبِّهِمْ ۖۚ يَرْجِعُ بَعْضُهُمْ اِلٰى بَعْضِ اۨلْقَوْلَ‌ۚ يَقُوْلُ الَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا لَوْلَاۤ اَنْـتُمْ لَـكُـنَّا مُؤْمِنِيْنَ‏
وَقَالَ கூறினார்கள் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரிப்பவர்கள் لَنْ نُّؤْمِنَ நாங்கள் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம் بِهٰذَا الْقُرْاٰنِ இந்த குர்ஆனை(யும்) وَلَا بِالَّذِىْ بَيْنَ يَدَيْهِؕ இதற்கு முன்னுள்ளதையும் وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذِ சமயத்தை الظّٰلِمُوْنَ அநியாயக்காரர்கள் مَوْقُوْفُوْنَ நிறுத்தி வைக்கப்பட்டவர்கள் عِنْدَ رَبِّهِمْ ۖۚ தங்கள் இறைவன் முன்னால் يَرْجِعُ எதிர்த்துப் பேசுவார்(கள்) بَعْضُهُمْ அவர்களில் சிலர் اِلٰى بَعْضِ சிலரிடம் اۨلْقَوْلَ‌ۚ பேசுவது يَقُوْلُ கூறுவார்கள் الَّذِيْنَ اسْتُضْعِفُوْا பலவீனர்கள் لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا பெருமை அடித்தவர்களுக்கு لَوْلَاۤ اَنْـتُمْ நீங்கள் இல்லை என்றால் لَـكُـنَّا நாங்கள் ஆகியிருப்போம் مُؤْمِنِيْنَ‏ நம்பிக்கையாளர்களாக
34:31. “இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்” என்று காஃபிரானவர்கள் கூறுகிறார்கள்; இந்த அநியாயக் காரார்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது பேச்சைத் திருப்பி பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, “நீங்கள் இல்லாதிருந்திருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்” என்று கூறுவார்கள்.
34:31. ‘‘ நிச்சயமாக நாங்கள் இந்த குர்ஆனையும் நம்பமாட்டோம்; இதற்கு முன்னுள்ள வேதங்களையும் நம்பவேமாட்டோம்'' என்று (இந்த) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, இவ்வக்கிரமக்காரர்கள் தங்கள் இறைவன்முன் நிறுத்தப்பட்டு அவர்களில் சிலர் சிலரை நிந்திப்பதையும்; பலவீனமானவர்கள் கர்வம் கொண்டவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இல்லையெனில் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டேயிருப்போம்'' என்று கூறுவதையும் நீர் பார்ப்பீராயின் (அவர்களின் இழி நிலைமையைக் கண்டு கொள்வீர்).
34:31. இந்நிராகரிப்பாளர்கள் (உம்மிடம்) கூறுகின்றார்கள்: “நாங்கள் ஒருபோதும் இந்தக் குர்ஆனையும் நம்ப மாட்டோம்; இதற்கு முன்பு வந்திருந்த எந்த வேதத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” அந்தோ! கொடுமை புரியும் இவர்கள் தம்முடைய இறைவனின் திருமுன் நிறுத்தப்படும்போது இவர்களின் நிலையை நீர் பார்க்க வேண்டுமே! (அவ்வேளை) இவர்கள் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்திக்கொண்டிருப்பார்கள். (உலகில்) தங்களைப் பெரியவர்களாய்க் கருதிக்கொண்டிருந்தவர்களை நோக்கி ஒடுக்கப்பட்டிருந்தவர்கள் கூறுவார்கள்: “நீங்கள் இல்லாதிருந்தால் நாங்கள் இறைநம்பிக்கையாளர்களாய் இருந்திருப்போம்.”
34:31. “நிச்சயமாக நாங்கள் இந்தக் குர் ஆனையும், இதற்கு முன்னுள்ள (வேதத்)தையும் நம்பவேமாட்டோம்” என்று (இந்த) நிராகரிப்போர் கூறுகின்றனர், ஆகவே இந்த அநியாயக்காரர்கள் தங்கள் இரட்சகன் முன் நிறுத்தபட்டவர்களாக நீர் பார்ப்பீராயின், அவர்களில் சிலர் சிலரின்பால் கூற்றைத் திருப்புவர், (அப்போது) பலவீனமாகக் கருதப்பட்டவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தோரிடம், “நீங்கள் இல்லாவிடில், நிச்சயமாக நாங்கள் விசுவாசங்கொண்டவர்களாகியிருந்திருப்போம்” என்று கூறுவார்கள்.
34:32
34:32 قَالَ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْۤا اَنَحْنُ صَدَدْنٰكُمْ عَنِ الْهُدٰى بَعْدَ اِذْ جَآءَكُمْ بَلْ كُنْتُمْ مُّجْرِمِيْنَ‏
قَالَ கூறுவார்கள் الَّذِيْنَ اسْتَكْبَرُوْا பெருமை அடித்தவர்கள் لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْۤا பலவீனர்களுக்கு اَنَحْنُ நாங்களா? صَدَدْنٰكُمْ உங்களை தடுத்தோம் عَنِ الْهُدٰى நேர்வழியை விட்டும் بَعْدَ اِذْ جَآءَ வந்த பின்னர் كُمْ உங்களிடம் بَلْ மாறாக كُنْتُمْ நீங்கள்தான் இருந்தீர்கள் مُّجْرِمِيْنَ‏ குற்றவாளிகளாக
34:32. பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்களிடம், “உங்களிடம் நேர்வழி வந்தபின், அதை விட்டும் உங்களை நாங்களா தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் (நேர்வழி ஏற்காத) குற்றாவளிகளாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
34:32. அதற்கு (அவர்களில்) கர்வம் கொண்டிருந்தவர்கள் பலவீனமாக இருந்தவர்களை நோக்கி ‘‘உங்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் (நீங்கள் அதில் செல்லாது) நாங்களா உங்களைத் தடுத்தோம்? (அவ்வாறு) இல்லை; நீங்கள்தான் (அதில் செல்லாது) குற்றவாளிகளாக ஆனீர்கள்'' என்று கூறுவார்கள்.
34:32. தங்களைப் பெரியவர்களாய்க் காட்டிக்கொண்டிருந்தவர்கள் இந்த ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி பதில் சொல்வார்கள்: “உங்களிடம் நேர் வழி வந்ததன் பின்னர் நாங்களா அதனை விட்டு உங்களைத் தடுத்தோம்? இல்லை! மாறாக, நீங்களே குற்றவாளிகளாயிருந்தீர்கள்.”
34:32. (அதற்கு அவர்களில்) பெருமையடித்துக்கொண்டிருந்தவர்கள், பலவீனமாகக் கருதப்பட்டவர்களிடம், “உங்களிடம் நேர் வழி வந்ததன் பின்னர், (நீங்கள் அதில் சொல்லாது) அதை விட்டும் நாங்களா உங்களை தடுத்தோம்? (அவ்வாறு) இல்லை, நீங்கள் தாம் (அதில் செல்லாது) குற்றவாளிகளாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
34:33
34:33 وَقَالَ الَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا بَلْ مَكْرُ الَّيْلِ وَ النَّهَارِ اِذْ تَاْمُرُوْنَـنَاۤ اَنْ نَّـكْفُرَ بِاللّٰهِ وَنَجْعَلَ لَهٗۤ اَنْدَادًا ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ؕ وَجَعَلْنَا الْاَغْلٰلَ فِىْۤ اَعْنَاقِ الَّذِيْنَ كَفَرُوْا ؕ هَلْ يُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏
وَقَالَ கூறுவார்கள் الَّذِيْنَ اسْتُضْعِفُوْا பலவீனர்கள் لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْا பெருமை அடித்தவர்களுக்கு بَلْ மாறாக مَكْرُ சூழ்ச்சியாகும் الَّيْلِ இரவிலும் وَ النَّهَارِ பகலிலும் اِذْ تَاْمُرُوْنَـنَاۤ நீங்கள் எங்களை ஏவிய சமயத்தை நினைவு கூருங்கள் اَنْ نَّـكْفُرَ நாங்கள் நிராகரிப்பதற்கு(ம்) بِاللّٰهِ அல்லாஹ்வை وَنَجْعَلَ நாங்கள்ஏற்படுத்துவதற்கும் لَهٗۤ அவனுக்கு اَنْدَادًا ؕ இணைகளை وَاَسَرُّوا இன்னும் அவர்கள் வெளிப்படுத்துவார்கள் النَّدَامَةَ துக்கத்தை لَمَّا رَاَوُا அவர்கள் கண்ணால் காணும்போது الْعَذَابَ ؕ வேதனையை وَجَعَلْنَا நாம் ஆக்குவோம் الْاَغْلٰلَ (சங்கிலி)விலங்குகளை فِىْۤ اَعْنَاقِ கழுத்துகளில் الَّذِيْنَ كَفَرُوْا ؕ நிராகரித்தவர்களின் هَلْ يُجْزَوْنَ கூலி கொடுக்கப்படுவார்களா? اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ தவிர/அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கே
34:33. அதற்கு பலஹீனர்களாகக் கருதப் பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், “அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்” என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டுவிடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா?
34:33. அதற்கு, பலவீனமாயிருந்தவர்கள் கர்வம் கொண்டிருந்தவர்களை நோக்கி, ‘‘sஎன்னே! நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணை வைக்குமாறு நீங்கள் எங்களை ஏவி, இரவு பகலாக சூழ்ச்சி செய்யவில்லையா?'' என்று கூறுவார்கள். ஆகவே, இவர்கள் அனைவருமே வேதனையைக் (கண்ணால்) காணும் சமயத்தில் தங்கள் துக்கத்தை மறைத்துக்கொண்டு (இவ்வாறு) கூறுவார்கள். (ஆனால்,) நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம். இவர்கள், தாங்கள் செய்துகொண்டிருந்த (தீய) செயலுக்குத் தக்க கூலியே தவிர மற்றெதுவும் கொடுக்கப்படுவார்களா?
34:33. ஒடுக்கப்பட்ட மக்கள் பெரியவர்களாய்க் காட்டிக் கொண்டிருந்தவர்களிடம் கூறுவார்கள்: “இல்லை; இரவு பகலாக நீங்கள் செய்துகொண்டிருந்த வஞ்சனையாகும் இது! நாங்கள் அல்லாஹ்வை நிராகரிக்கும்படியும் மற்றவர்களை அவனுக்கு இணையாக்கும்படியும் நீங்கள் எங்களிடம் கூறியவண்ணம் இருந்தீர்கள்.” இறுதியில் இவர்கள் வேதனையைக் காணும்போது உள்ளூர வருந்துவார்கள். மேலும், நாம் இந்நிராகரிப்பாளர்களின் பிடரிகளில் விலங்குகளைப் பூட்டுவோம். தாம் எவ்விதம் செயல்பட்டார்களோ அதற்கேற்பவே கூலி கிடைக்கும் என்பதைத் தவிர வேறு பிரதிபலன் ஏதேனும் மக்களுக்குக் கிடைக்குமா என்ன?
34:33. அன்றியும், பலவீனமாகக் கருதப்பட்டவர்கள், பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களிடம், “அவ்வாறல்ல! நாங்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும், அவனுக்குச் சமமானவர்களை (_கூட்டுக்காரர்களை) நாங்கள் ஆக்குவதற்கும் நீங்கள் எங்களை ஏவிய பொழுது, (உங்களுக்குக் கீழ்ப்படியசெய்தது) இரவிலும், பகலிலும் (எங்களுக்கு நீங்கள்) செய்த சூழ்ச்சியாகும். “இன்னும், அவர்கள் (யாவருமே) வேதனையைக் (கண்ணால்) காணும் சமயத்தில், தங்கள் கைசேதத்தை (தங்களுக்குள்) மறைத்துக் கொள்வார்கள், மேலும், நிராகரித்தோருடைய கழுத்துகளில் நாம் விலங்குகளை ஆக்குவோம், அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கல்லாமல் (வேறெதற்கும்) அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்களா?
34:34
34:34 وَمَاۤ اَرْسَلْنَا فِىْ قَرْيَةٍ مِّنْ نَّذِيْرٍ اِلَّا قَالَ مُتْـرَفُوْهَاۤ ۙاِنَّا بِمَاۤ اُرْسِلْـتُمْ بِهٖ كٰفِرُوْنَ‏
وَمَاۤ اَرْسَلْنَا நாம் அனுப்பவில்லை فِىْ قَرْيَةٍ ஓர் ஊரில் مِّنْ نَّذِيْرٍ எச்சரிப்பாளரை اِلَّا தவிர قَالَ கூறியே مُتْـرَفُوْهَاۤ அதன் சுகவாசிகள் ۙاِنَّا நிச்சயமாக நாங்கள் بِمَاۤ எதைக்கொண்டு اُرْسِلْـتُمْ நீங்கள் அனுப்பப்பட்டீர்கள் بِهٖ அதை كٰفِرُوْنَ‏ நிராகரிக்கின்றோம்
34:34. அன்றியும் அச்சமூட்டி எச்சரிப்போரை நாம் (எந்த) ஓர் ஊருக்கு அனுப்பிய போதும், அங்கிருந்த செல்வந்தர்கள்; “நிச்சயமாக நாங்கள் நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிராகரிக்கின்றோம்” என்று கூறாமல் இருக்கவில்லை.
34:34. அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நமது) தூதரை நாம் எங்கெங்கு அனுப்பினோமோ அங்கெல்லாம் இருந்த செல்வந்தர்கள் (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் நீங்கள் கொண்டு வந்த தூதை நிராகரிக்கிறோம்'' என்று கூறாமல் இருக்கவில்லை.
34:34. எச்சரிக்கை செய்யக்கூடிய ஒருவரை எந்த ஊருக்கு நாம் அனுப்பி வைத்தாலும் அவ்வூரில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள், “நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற தூதுச் செய்தியை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்றே கூறினார்கள்.
34:34. இன்னும், எந்த ஊருக்கும்_அங்கிருந்த செல்வந்தர்கள், “நிச்சயமாக நீங்கள் எதைக் கொண்டு அனுப்பட்டீர்களோ அதை நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்று கூறியே தவிர, நாம் அச்சமூட்டி எச்சரிப்போரை அனுப்பவில்லை.
34:35
34:35 وَ قَالُوْا نَحْنُ اَكْثَرُ اَمْوَالًا وَّاَوْلَادًا ۙ وَّمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ‏
وَ قَالُوْا அவர்கள் கூறினர் نَحْنُ நாங்கள் اَكْثَرُ அதிகமானவர்கள் اَمْوَالًا செல்வங்களாலும் وَّاَوْلَادًا ۙ பிள்ளைகளாலும் وَّمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ‏ ஆகவே, நாங்கள் மறுமையிலும் அறவே தண்டிக்கப்பட மாட்டோம்.
34:35. இன்னும்: “நாங்கள் செல்வங்களாலும் மக்களாலும் மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்” என்றும் கூறுகிறார்கள்.
34:35. மேலும், ‘‘நாங்கள் அதிகமான செல்வங்களையும் சந்ததிகளையும் உடையவர்கள். ஆகவே, (மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்பட மாட்டோம்'' என்று கூறினர்.
34:35. மேலும், அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் (உங்களைவிட) அதிகமான செல்வமும் சந்ததிகளும் உடையவர்கள். நாங்கள் ஒருபோதும் தண்டனை பெறக்கூடியவர்கள் அல்லர்.”
34:35. அன்றியும், “செல்வங்களாலும், மக்களாலும் நாங்கள் மிக அதிகமானவர்கள், (ஆகவே மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்றும் அவர்கள் கூறினர்.
34:36
34:36 قُلْ اِنَّ رَبِّىْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ وَيَقْدِرُ وَلٰـكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُوْنَ‏
قُلْ கூறுவீராக! اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் يَبْسُطُ விசாலமாக தருகின்றான் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِمَنْ يَّشَآءُ அவன் நாடுகின்றவர்களுக்கு وَيَقْدِرُ இன்னும் சுருக்கி கொடுக்கின்றான் وَلٰـكِنَّ என்றாலும் اَكْثَرَ அதிகமானவர்கள் النَّاسِ மக்களில் لَا يَعْلَمُوْنَ‏ அறியமாட்டார்கள்
34:36. “நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  
34:36. (அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.''
34:36. (நபியே, இவர்களிடம் நீர்) கூறும்: “என் இறைவன் தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு அளவோடு கொடுக்கின்றான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் (இந்த உண்மையை) அறிவதில்லை.”
34:36. (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இரட்சகன், தான் நாடியவர்களுக்கு சம்பத்தை விசாலமாகவும் கொடுக்கின்றான், (தான் நாடியவர்களுக்கு அளவோடு) சுருக்கியும் கொடுக்கின்றான், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அதன் கருத்தை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.
34:37
34:37 وَمَاۤ اَمْوَالُـكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ بِالَّتِىْ تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفٰٓى اِلَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًـا فَاُولٰٓٮِٕكَ لَهُمْ جَزَآءُ الضِّعْفِ بِمَا عَمِلُوْا وَهُمْ فِى الْغُرُفٰتِ اٰمِنُوْنَ‏
وَمَاۤ اَمْوَالُـكُمْ உங்கள் செல்வங்கள் இல்லை وَلَاۤ اَوْلَادُكُمْ இன்னும் உங்கள் பிள்ளைகள் بِالَّتِىْ تُقَرِّبُكُمْ உங்களை நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாக عِنْدَنَا எங்களிடம் زُلْفٰٓى நெருக்கமாக اِلَّا எனினும் مَنْ எவர்கள் اٰمَنَ நம்பிக்கை கொண்டு وَعَمِلَ செய்வார்களோ صَالِحًـا நன்மையை فَاُولٰٓٮِٕكَ لَهُمْ அவர்களுக்கு உண்டு جَزَآءُ கூலி الضِّعْفِ இரு மடங்கு بِمَا عَمِلُوْا அவர்கள் செய்ததற்கு பகரமாக وَهُمْ அவர்கள் فِى الْغُرُفٰتِ அறைகளில் اٰمِنُوْنَ‏ நிம்மதியாக
34:37. இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்.
34:37. (நீங்கள் எண்ணுகிறவாறு) உங்கள் செல்வங்களும் உங்கள் சந்ததிகளும் உங்களை நம்மிடம் சேர்க்கக் கூடியவை அல்ல. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ (அவையே அவர்களை நம்மிடம் சேர்க்கும்.) அவர்களுக்கு அவர்கள் செய்த (நற்)செயலின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு. மேலும், அவர்கள் (சொர்க்கத்திலுள்ள) மேல் மாடிகளில் கவலையற்றும் வசிப்பார்கள்.
34:37. உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை நம்மிடத்தில் மிகவும் நெருக்கமாக்கி வைக்கக்கூடியவை அல்ல; ஆயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களைத் தவிர! அத்தகையவர்களுக்கே, அவர்கள் செய்த செயல்களின் கூலி இரு மடங்கு இருக்கிறது. மேலும், அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியோடிருப்பார்கள்.
34:37. உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களை நம்மிடத்தில் சமீபமாக நெருக்கிவைப்பவர்கள் அல்லர்_ விசுவாசங்கொண்டு நற்செயல்களும் செய்தவரைத்தவிர_ அவர்களுக்கு அவர்கள் செய்த (நல்) வினையின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு, அவர்களோ (சுவனபதியிலுள்ள) உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியாக இருப்பவர்கள்.
34:38
34:38 وَ الَّذِيْنَ يَسْعَوْنَ فِىْۤ اٰيٰتِنَا مُعٰجِزِيْنَ اُولٰٓٮِٕكَ فِى الْعَذَابِ مُحْضَرُوْنَ‏
وَ الَّذِيْنَ எவர்கள் يَسْعَوْنَ முயல்வார்களோ فِىْۤ اٰيٰتِنَا நமது வசனங்களில் مُعٰجِزِيْنَ பலவீனப்படுத்த اُولٰٓٮِٕكَ அவர்கள் فِى الْعَذَابِ வேதனைக்கு مُحْضَرُوْنَ‏ கொண்டு வரப்படுவார்கள்
34:38. அன்றியும், எவர்கள் நம்முடைய வசனங்களிலே தோல்வியை உண்டாக்க முயல்கிறார்களோ, அவர்கள் வேதனையில் கொண்டு வரப்படுவார்கள்.
34:38. நம் வசனங்களுக்கு எதிராக (நம்மை) தோற்கடிக்க முயற்சிப்பவர்கள் மறுமை நாளன்று வேதனையில் தள்ளப்படுவார்கள்.
34:38. ஆனால், எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச் செய்வதற்காகக் கடும் முயற்சி செய்கின்றார்களோ அவர்கள் வேதனையில் ஆழ்த்தப்படுவார்கள்.
34:38. மேலும், நம்முடைய வசனங்கள் விஷயத்தில் இயலாமையிலாக்குகின்ற (எண்ணங்கொண்ட)வர்களாக முயற்சிக்கின்றார்களே அத்தகையோர்_ (மறுமையில்) நரக வேதனையில் முன்னிலைப்படுத்தப்(பட்டு சேர்க்கப்)படுபவர்கள்.
34:39
34:39 قُلْ اِنَّ رَبِّىْ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَيَقْدِرُ لَهٗ ؕ وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ شَىْءٍ فَهُوَ يُخْلِفُهٗ ۚ وَهُوَ خَيْرُ الرّٰزِقِيْنَ‏
قُلْ கூறுவீராக! اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் يَبْسُطُ விசாலமாக்குகின்றான் الرِّزْقَ வாழ்வாதாரத்தை لِمَنْ يَّشَآءُ தான் நாடியவர்களுக்கு مِنْ عِبَادِهٖ தனது அடியார்களில் وَيَقْدِرُ இன்னும் சுருக்கி விடுகின்றான் لَهٗ ؕ அவனுக்கு وَمَاۤ اَنْفَقْتُمْ நீங்கள் தர்மம் செய்தாலும் مِّنْ شَىْءٍ எதை فَهُوَ அவன் يُخْلِفُهٗ ۚ அதற்கு பகரத்தை ஏற்படுத்துவான் وَهُوَ அவன் خَيْرُ மிகச் சிறந்தவன் الرّٰزِقِيْنَ‏ உணவளிப்பவர்களில்
34:39. “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறும்.
34:39. (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு அதிகமான வாழ்வாதாரத்தைக் கொடுக்கிறான்; தான் விரும்பியவர்களுக்கு குறைத்து விடுகிறான். ஆகவே, நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் அவன் அதற்குப் பிரதி கொடுத்தே தீருவான். அவன் கொடையளிப்பவர்களில் மிக்க மேலானவன்.
34:39. (நபியே, இவர்களிடம்) கூறும்: என்னுடைய இறைவன் தன் அடிமைகளில் தான் நாடுவோருக்கு தாராளமாய் வாழ்வாதாரம் வழங்குகின்றான். இன்னும் தான் நாடுவோருக்கு அளவோடு கொடுக்கின்றான். நீங்கள் செலவு செய்கின்றவற்றுக்குப் பகரமாக இன்னும் பலவற்றை அவனே உங்களுக்குத் தருகின்றான். வாழ்வாதாரம் வழங்குவோரில் அவன் மிகச் சிறந்தவனாவான்.
34:39. (நபியே!) நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இரட்சகன், தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு, வாழ்வாதாரத்தை விசாலப் படுத்துகிறான், (தான் விரும்பியவர்களுக்கு) அளவோடும் கொடுக்கிறான். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்த போதிலும் அதற்குப் பகரமானதை அவன் அளிக்கிறான், இன்னும், வாழ்வாதாரங்களை நல்குவோரில் அவன் மிகச் சிறந்தவன்.
34:40
34:40 وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيْعًا ثُمَّ يَقُوْلُ لِلْمَلٰٓٮِٕكَةِ اَهٰٓؤُلَاۤءِ اِيَّاكُمْ كَانُوْا يَعْبُدُوْنَ‏
وَيَوْمَ يَحْشُرُ அவன் ஒன்று திரட்டும் நாளில் هُمْ அவர்கள் جَمِيْعًا அனைவரையும் ثُمَّ பிறகு يَقُوْلُ அவன் கூறுவான் لِلْمَلٰٓٮِٕكَةِ வானவர்களுக்கு اَهٰٓؤُلَاۤءِ ?/இவர்கள் اِيَّاكُمْ உங்களை كَانُوْا يَعْبُدُوْنَ‏ வணங்கிக் கொண்டிருந்தார்கள்
34:40. (மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்” என்று (அல்லாஹ்) கேட்பான்.
34:40. (வானவர்களை வணங்கிக் கொண்டிருந்த) அவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளில், வானவர்களை நோக்கி ‘‘இவர்கள் உங்களையா வணங்கி வந்தார்கள்?'' என்று கேட்கப்படும்.
34:40. மேலும், அந்நாளில் அவன் மனிதர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவான். பிறகு வானவர்களிடம் கேட்பான்: “என்ன, இவர்கள் உங்களைத்தானா வணங்கிக் கொண்டிருந்தார்கள்?”
34:40. (மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் அவன் (_அல்லாஹ்) ஒன்றுதிரட்டும் நாளை (நினைவு கூறுங்கள்). பின்னர் மலக்குகளிடம், இவர்கள்தானா உங்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள்? என்று அவன் கேட்பான்.
34:41
34:41 قَالُوْا سُبْحٰنَكَ اَنْتَ وَلِيُّنَا مِنْ دُوْنِهِمْۚ بَلْ كَانُوْا يَعْبُدُوْنَ الْجِنَّ ۚ اَكْثَرُهُمْ بِهِمْ مُّؤْمِنُوْنَ‏
قَالُوْا அவர்கள் கூறுவார்கள் سُبْحٰنَكَ நீ மகா தூயவன் اَنْتَ நீதான் وَلِيُّنَا எங்கள் பாதுகாவலன் مِنْ دُوْنِهِمْۚ அவர்கள் இன்றி بَلْ كَانُوْا يَعْبُدُوْنَ மாறாக/வணங்கிக் கொண்டிருந்தனர் الْجِنَّ ۚ ஜின்களை اَكْثَرُ அதிகமானவர்கள் هُمْ அவர்களில் بِهِمْ அவர்களைத்தான் مُّؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொண்டவர்கள்
34:41. (இதற்கு மலக்குகள்:) “நீ மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர்(ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்” என்று கூறுவார்கள்.
34:41. அதற்கவர்கள், ‘‘(எங்கள் இறைவனே!) நீ மிகப் பரிசுத்தமானவன். நீதான் எங்கள் பாதுகாவலன்; அவர்களன்று. மாறாக, அவர்கள் ஜின்களையே வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த ஜின்களையே நம்பிக்கை கொண்டும் இருந்தார்கள்'' என்று (வானவர்கள்) கூறுவார்கள்.
34:41. அப்போது அவர்கள் பதில் கூறுவார்கள்: “தூய்மையானவன் நீ! எங்களுடைய தொடர்பு உன்னுடன்தானே தவிர இவர்களுடன் அல்ல! இவர்கள் வணங்கிக் கொண்டிருந்தது எங்களை அல்ல; ஜின்களைத்தான்! இவர்களில் பெரும்பாலோர் அந்த ஜின்களின் மீதே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.”
34:41. அ(தற்க)வர்கள், “(எங்கள் இரட்சகனே!) நீ மிகப் பரிசுத்தமானவன், அவர்களன்றி நீதான் எங்கள் பாதுகாவலன், எனினும் அவர்கள் ஜின்களை வணங்கிக்கொண்டிருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் அவர்களை(_அந்த ஜின்களை) விசுவாசித்துமிருந்தவர்கள்” என்று கூறுவார்கள்.
34:42
34:42 فَالْيَوْمَ لَا يَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ نَّفْعًا وَّلَا ضَرًّا ؕ وَنَـقُوْلُ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّتِىْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏
فَالْيَوْمَ இன்றைய தினம் لَا يَمْلِكُ உரிமை பெறமாட்டார் بَعْضُكُمْ உங்களில் சிலர் لِبَعْضٍ சிலருக்கு نَّفْعًا நன்மைசெய்வதற்கோ وَّلَا ضَرًّا ؕ தீமை செய்வதற்கோ وَنَـقُوْلُ நாம் கூறுவோம் لِلَّذِيْنَ ظَلَمُوْا அநியாயக்காரர்களுக்கு ذُوْقُوْا நீங்கள் சுவையுங்கள் عَذَابَ النَّارِ நரக வேதனையை الَّتِىْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏ நீங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்த
34:42. “இன்றைய தினம், உங்களில் சிலர் (உங்களில் மற்றும்) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்யச் சக்தியற்றவர்களாவீர்; நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அந்(நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள் என்றும் அநியாயம் செய்தார்களே அவர்களிடம்” நாம் கூறுவோம்.
34:42. அந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்றவராக இருப்பார். மேலும், (அச்சமயம்) அவ்வக்கிரமக்காரர்களை நோக்கி ‘‘நீங்கள் (நம் வேதனையைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்த(தன் காரணமாக) இந்நரக வேதனையைச் சுவைத்துப் பாருங்கள்'' எனக் கூறுவோம்.
34:42. (அவ்வேளை நாம் கூறுவோம்:) “இன்று உங்களில் எவரும் வேறெவர்க்கும் இலாபம் அளிக்கவும் முடியாது; நஷ்டம் ஏற்படுத்தவும் முடியாது.” மேலும், கொடுமை புரிந்து கொண்டு இருந்தவர்களிடம் நாம் கூறுவோம்: “இப்பொழுது சுவையுங்கள் இந்த நரகவேதனையை! இதைத்தான் நீங்கள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்கள்!”
34:42. “எனவே, இந்நாளில் உங்களில் சிலர் (மற்ற) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்ய அதிகாரம் பெற மாட்டார்கள்; (இம்மையில்) அநியாயம் செய்தார்களே அவர்களுக்கு “நீங்கள் எதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ அத்தகைய (நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள்” என்றும் நாம் கூறுவோம்.
34:43
34:43 وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا رَجُلٌ يُّرِيْدُ اَنْ يَّصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ اٰبَآؤُكُمْ‌ ۚ وَقَالُوْا مَا هٰذَاۤ اِلَّاۤ اِفْكٌ مُّفْتَـرً ىؕ وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِيْنٌ‏
وَاِذَا تُتْلٰى ஓதப்பட்டால் عَلَيْهِمْ அவர்கள் முன் اٰيٰتُنَا நமது வசனங்கள் بَيِّنٰتٍ தெளிவான قَالُوْا அவர்கள் கூறினர் مَا هٰذَاۤ இவர் இல்லை اِلَّا தவிர رَجُلٌ ஓர் ஆடவரே يُّرِيْدُ நாடுகின்றனர் اَنْ يَّصُدَّكُمْ இவர் உங்களைத் தடுக்க عَمَّا كَانَ يَعْبُدُ வணங்கிக்கொண்டிருந்தவற்றை விட்டும் اٰبَآؤُ மூதாதைகள் كُمْ‌ ۚ உங்கள் وَقَالُوْا இன்னும் அவர்கள்கூறினர் مَا هٰذَاۤ இது இல்லை اِلَّاۤ தவிர اِفْكٌ பொய் مُّفْتَـرً ىؕ இட்டுக்கட்டப்பட்ட وَقَالَ இன்னும் கூறினர் الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்கள் لِلْحَقِّ சத்தியம் لَمَّا جَآءَ வந்த போது هُمْ ۙ தங்களிடம் اِنْ هٰذَاۤ இது இல்லை اِلَّا தவிர سِحْرٌ சூனியமே مُّبِيْنٌ‏ தெளிவான
34:43. நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை; உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் “இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்: திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, “இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
34:43. அவர்களுக்கு நம் தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் ஒரு சாதாரண மனிதரே தவிர வேறில்லை. உங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றிலிருந்து உங்களைத் தடுத்துவிடவே இவர் விரும்புகிறார்'' என்றும் (நம் தூதர் கூறுகின்ற) ‘‘இது வெறும் கட்டுக் கதையே தவிர வேறில்லை'' என்றும் கூறுகின்றனர். மேலும்,”(திரு குர்ஆனாகிய) இந்த உண்மை அவர்களிடம் வந்த சமயத்தில், இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்றும் இந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
34:43. இவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காட்டப்படும்போது இவர்கள் கூறுகின்றார்கள். “இந்த மனிதர் விரும்புவதெல்லாம் உங்களுடைய முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வங்களை விட்டு உங்களைத் தடுத்துவிடுவதுதான்.” மேலும், கூறுகின்றார்கள்: “(குர்ஆன்) புனைந்துரைக்கப்பட்ட வெறும் பொய்யே தவிர வேறில்லை.” இந்நிராகரிப்பாளர்களின் முன்னால் சத்தியம் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இதுவோ வெளிப்படையான சூனியம்!”
34:43. இன்னும் தெளிவான நம்முடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “உங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும், உங்களைத் தடுத்துவிட நாடுகின்ற ஒரு மனிதரேயன்றி இவர் (வேறு) இல்லை” என்று அவர்கள் கூறுகின்றனர், மேலும், அவர்கள், (அவர் கூறுகிற) “இது இட்டுகட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர், மேலும், (திருக்குர் ஆனாகிய இந்த) உண்மை_அவர்களிடம் வந்த சமயத்தில், ‘இது பகிரங்கமான சூனியமேயன்றி (வேறு) இல்லை” என்றும் நிராகரிப்போர் கூறுகின்றனர்.
34:44
34:44 وَمَاۤ اٰتَيْنٰهُمْ مِّنْ كُتُبٍ يَّدْرُسُوْنَهَا وَمَاۤ اَرْسَلْنَاۤ اِلَيْهِمْ قَبْلَكَ مِنْ نَّذِيْرٍؕ‏
وَمَاۤ اٰتَيْنٰهُمْ அவர்களுக்கு நாம் கொடுத்ததில்லை مِّنْ كُتُبٍ வேதங்களை يَّدْرُسُوْنَهَا அவர்கள் அவற்றை படிக்கின்றனர் وَمَاۤ اَرْسَلْنَاۤ நாம் அனுப்பியதில்லை اِلَيْهِمْ அவர்களிடம் قَبْلَكَ உமக்கு முன்னர் مِنْ نَّذِيْرٍؕ‏ எச்சரிப்பவர் எவரையும்
34:44. எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.
34:44. (நபியே! இதற்கு முன்னர்) நாம் (உம்மை நிராகரிக்கும் அரபிகளாகிய) இவர்களுக்கு, இவர்கள் ஓதக்கூடிய வேதம் எதையும் கொடுக்கவில்லை; அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய தூதர் எவரையும் உமக்கு முன்னர் நாம் அவர்களிடம் அனுப்பவில்லை. (இவ்வாறிருந்தும் அவர்கள் உம்மை நிராகரிக்கின்றனர்.)
34:44. நாம் இந்த மக்களுக்கு இவர்கள் படிக்கக்கூடிய வகையில் எந்த வேதத்தையும் முன்னர் வழங்கவில்லை. மேலும், உமக்கு முன்பு எச்சரிக்கை செய்பவர் எவரையும் இவர்களிடம் நாம் அனுப்பவுமில்லை
34:44. (நபியே!) இவர்களுக்கு, (இதற்கு முன்னர்) வேதங்களிலிருந்து எதையும்_ அதனை அவர்கள் ஓதுவதற்காக நாம் கொடுக்கவுமில்லை; அச்சமூட்டி எச்சரிக்ககூடிய எவரையும் உமக்கு முன்னர் நாம் அவர்களின்பால் அனுப்பவுமில்லை.
34:45
34:45 وَكَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۙ وَمَا بَلَـغُوْا مِعْشَارَ مَاۤ اٰتَيْنٰهُمْ فَكَذَّبُوْا رُسُلِىْ فَكَيْفَ كَانَ نَكِيْرِ‏
وَكَذَّبَ பொய்ப்பித்தனர் الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۙ இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் وَمَا بَلَـغُوْا அடையவில்லை مِعْشَارَ مَاۤ اٰتَيْنٰهُمْ அவர்களுக்கு நாம் கொடுத்ததில் பத்தில் ஒன்றை(க்கூட) فَكَذَّبُوْا (இருந்தும்) அவர்கள் பொய்ப்பித்தனர் رُسُلِىْ எனது தூதர்களை فَكَيْفَ எப்படி كَانَ இருந்தது نَكِيْرِ‏ எனது மாற்றம்
34:45. மேலும் இவர்களுக்கு முன்னிருந்த (ஏனைய சமூகத்த)வர்களும் (இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை; ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூறட்டும்)
34:45. இவர்களுக்கு முன்னிருந்த (அரபிகளல்லாத)வர்களும் மற்ற (தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கினார்கள். அவர்களுக்கு நாம் கொடுத்திருந்ததில் பத்தில் ஒரு பாகத்தையும் இவர்கள் அடைந்து விடவில்லை. (அதற்குள்ளாகவே) இவர்கள் எனது தூதர்களைப் பொய்யாக்க முற்பட்டு இருக்கின்றனர். (இவர்களுக்கு முன்னர் நம் தூதர்களை நிராகரித்து பொய்யாக்கியவர்களை) நான் தண்டித்தது எவ்வாறாயிற்று? (என்பதை இவர்கள் கவனிப்பார்களாக)
34:45. இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்ற மக்களும் பொய்யென்று தூற்றிவிட்டிருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியிருந்தவற்றில் பத்திலொரு பங்குகூட இவர்கள் பெறவில்லை. ஆனால், அவர்கள் என்னுடைய தூதர்களைப் பொய்யர்கள் எனத் தூற்றியபோது பாருங்கள்! என்னுடைய வேதனை எத்துணைக் கடுமையாக இருந்தது!
34:45. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கினார்கள். இன்னும் அவர்களுக்கும் நாம் கொடுத்திருந்ததில், பத்தில் ஒரு பாகத்தையேனும் இவர்கள் அடைந்துவிடவில்லை. பின்னர் அவர்கள் என்னுடைய தூதர்களை (நிராகரித்து)ப் பொய்ப்படுத்தினார்கள்; ஆகவே, (என்னை மறுத்ததன் காரணமாக தண்டனையைக் கொண்டும், வேதனையைக் கொண்டும் பிடித்த என்னுடைய) மறுப்பு எவ்வாறிருந்தது?
34:46
34:46 قُلْ اِنَّمَاۤ اَعِظُكُمْ بِوَاحِدَةٍ ۚ اَنْ تَقُوْمُوْا لِلّٰهِ مَثْنٰى وَفُرَادٰى ثُمَّ تَتَفَكَّرُوْا مَا بِصَاحِبِكُمْ مِّنْ جِنَّةٍ ؕ اِنْ هُوَ اِلَّا نَذِيْرٌ لَّـكُمْ بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيْدٍ‏
قُلْ கூறுவீராக! اِنَّمَاۤ اَعِظُكُمْ நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் بِوَاحِدَةٍ ۚ ஒன்றே ஒன்றைத்தான் اَنْ تَقُوْمُوْا நீங்கள் நில்லுங்கள் لِلّٰهِ அல்லாஹ்விற்காக مَثْنٰى இருவர் இருவராக وَفُرَادٰى இன்னும் ஒருவர் ஒருவராக ثُمَّ பிறகு تَتَفَكَّرُوْا சிந்தியுங்கள் مَا بِصَاحِبِكُمْ உங்கள் இந்த தோழருக்கு அறவே இல்லை مِّنْ جِنَّةٍ ؕ பைத்தியம் اِنْ هُوَ அவர் இல்லை اِلَّا தவிர نَذِيْرٌ எச்சரிப்பவரே لَّـكُمْ உங்களுக்கு بَيْنَ يَدَىْ முன்னர் عَذَابٍ வேதனைக்கு شَدِيْدٍ‏ கடுமையான(து)
34:46. “நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் நண்பருக்கு பைத்தியம் எதுவுமில்லை; உங்களுக்குக் கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல் அவர் வேறில்லை.”
34:46. (நபியே!) கூறுவீராக: ‘‘நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். நீங்கள் ஒவ்வொருவராகவோ, இரண்டிரண்டு பேர்களாகவோ அல்லாஹ்வுக்காகச் சிறிது பொறுத்திருந்து, பின்னர் (உங்களுக்குள்) ஆலோசித்துப் பாருங்கள். உங்கள் சிநேகிதராகிய எனக்கு எத்தகைய பைத்தியமும் இல்லை. (நான் உங்களுக்குக்) கடினமான வேதனை வருவதற்கு முன்னர் (அதைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை.''
34:46. (நபியே! இவர்களிடம்) கூறும்: “நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை அறிவுறுத்துகின்றேன்: நீங்கள் அல்லாஹ்வுக்காக தனித் தனியாகவோ இருவரிருவராகவோ சேர்ந்து ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்; உங்களுடைய தோழரிடம் பைத்தியக்காரத்தனம் என்ன இருக்கிறது என்று! அவரோ ஒரு கடினமான வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார்.”
34:46. “நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றிதான், நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ, அல்லாஹ்வுக்காகச் சிறிது எழுந்து (நின்று), பின்னர் (உங்களுக்குள்) சிந்தித்துப்பாருங்கள்” என்று (நபியே! நீர்) கூறுவீராக! “உங்களுடைய சிநேகிதர் (ஆகிய என)க்கு எத்தகைய பைத்தியமுமில்லை, கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அவர் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரே தவிர வேறில்லை” (என்பதை தெளிவாக உணர்வீர்கள்).
34:47
34:47 قُلْ مَا سَاَ لْـتُكُمْ مِّنْ اَجْرٍ فَهُوَ لَـكُمْ ؕ اِنْ اَجْرِىَ اِلَّا عَلَى اللّٰهِ ۚ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ‏
قُلْ கூறுவீராக! مَا سَاَ لْـتُكُمْ எதை நான் உங்களிடம் கேட்டேனோ مِّنْ اَجْرٍ கூலியாக فَهُوَ لَـكُمْ ؕ அது உங்களுக்கே اِنْ اَجْرِىَ என் கூலி இல்லை اِلَّا தவிர عَلَى மீதே اللّٰهِ ۚ அல்லாஹ்வின் وَهُوَ அவன்தான் عَلٰى كُلِّ شَىْءٍ அனைத்தின் மீதும் شَهِيْدٌ‏ சாட்சியாளன்
34:47. கூறுவீராக: “நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை; அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை -அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.“
34:47. (நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘நான் உங்களிடத்தில் ஏதும் கூலியைக் கேட்டிருந்தால் அது உங்களுக்கே சொந்தம் ஆகட்டும். என் கூலி அல்லாஹ்விடமே தவிர (உங்களிடம்) இல்லை. அவன் அனைத்திற்கும் (அவற்றை நன்கறிந்த) சாட்சி ஆவான்.
34:47. இவர்களிடம் கூறும்: “நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. அவ்வாறு கேட்டிருந்தாலும் அதனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய கூலி அல்லாஹ்வின் பொறுப்பிலேயே உள்ளது. அவன் அனைத்து விஷயங்களுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.”
34:47. (நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “நான் உங்களிடம் எவ்விதக் கூலியையும் கேட்கவில்லை, அவ்வாறாயின் அது உங்களுக்கே உரியது, என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை_ அவனோ ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கிறான்.”
34:48
34:48 قُلْ اِنَّ رَبِّىْ يَقْذِفُ بِالْحَـقِّ‌ۚ عَلَّامُ الْغُيُوْبِ‏
قُلْ கூறுவீராக! اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் يَقْذِفُ செய்தியை இறக்குகின்றான் بِالْحَـقِّ‌ۚ உண்மையான عَلَّامُ மிக அறிந்தவன் الْغُيُوْبِ‏ மறைவான விஷயங்கள் அனைத்தையும்
34:48. கூறுவீராக: “என்னுடைய இறைவன் நிச்சயமாக(ப் பொய்மையை அழித்து) சத்தியத்தை மேலேற்றுகிறான்; மறைவானவற்றையெல்லாம் அவன் நன்கறிந்தவன்.”
34:48. (மேலும்) கூறுவீராக: ‘‘நிச்சயமாக எனது இறைவன் (பொய்யை அழிப்பதற்காக) மெய்யைத் தெளிவாக்குகிறான். மறைவானவை அனைத்தையும் அவன் நன்கறிந்தவன்.''
34:48. இவர்களிடம் கூறும்: “என்னுடைய இறைவன் (என்னுள்) சத்தியத்தை உதிக்கச் செய்கின்றான். அவன் மறைவான உண்மைகளை நன்கறிபவனாக இருக்கின்றான்.”
34:48. (மேலும்) நீர் கூறுவீராக, “நிச்சயமாக எனது இரட்சகன் உண்மையைப் போடுகின்றான், (அது பொய்யை அழித்து மேலோங்கி விடுகிறது) மறைவானவற்றை (அவன்) மிக அறிந்தவன்.”
34:49
34:49 قُلْ جَآءَ الْحَـقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيْدُ‏
قُلْ கூறுவீராக! جَآءَ வந்துவிட்டது الْحَـقُّ உண்மை وَمَا يُبْدِئُ புதிதாக படைக்க(வும்) மாட்டான் الْبَاطِلُ பொய்யன் وَمَا يُعِيْدُ‏ மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டான்
34:49. கூறுவீராக; “சத்தியம் வந்து விட்டது - அன்றியும் பொய் எதையும் புதிதாகச் செய்வதுமில்லை; இனிச்செய்யப் போவதுமில்லை.”
34:49. (மேலும்) கூறுவீராக: ‘‘உண்மை வந்துவிட்டது. பொய் புதிதாக எதையும் (இதுவரை) செய்து விடவில்லை. இனியும் செய்யப் போவதில்லை.''
34:49. கூறுவீராக: “சத்தியம் வந்துவிட்டது. இனி, அசத்தியத்தினால் எதுவும் செய்ய முடியாது!”
34:49. (நபியே!) நீர் கூறுவீராக” உண்மை (மார்க்கம்) வந்துவிட்டது, பொய் புதிதாக ஒன்றையும் (இதுவரையில்) செய்யவில்லை, இனியும் செய்யப்போவதுமில்லை.”
34:50
34:50 قُلْ اِنْ ضَلَلْتُ فَاِنَّمَاۤ اَضِلُّ عَلٰى نَـفْسِىْ ۚ وَاِنِ اهْتَدَيْتُ فَبِمَا يُوْحِىْۤ اِلَىَّ رَبِّىْ ؕ اِنَّهٗ سَمِيْعٌ قَرِيْبٌ‏
قُلْ கூறுவீராக! اِنْ ضَلَلْتُ நான் வழிகெட்டால் فَاِنَّمَاۤ اَضِلُّ நான் வழிகெடுவதெல்லாம் عَلٰى نَـفْسِىْ ۚ எனக்குத்தான் தீங்காக அமையும் وَاِنِ اهْتَدَيْتُ நான் நேர்வழி பெற்றால் فَبِمَا يُوْحِىْۤ வஹீ அறிவிக்கின்ற காரணத்தால் ஆகும் اِلَىَّ எனக்கு رَبِّىْ ؕ என் இறைவன் اِنَّهٗ நிச்சயமாக அவன் سَمِيْعٌ நன்கு செவியுறுபவன் قَرِيْبٌ‏ மிக சமீபமானவன்
34:50. கூறுவீராக: “நான் வழிகெடுவேனாயின்; வழிகேடு எனக்கே நஷ்டமாகும்; நான் நேர்வழியில் செல்வேனாயின் (அது) என்னுடைய இறைவன் எனக்கு “வஹீ” மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும்; நிச்சயமாக அவன் (மிகச்) செவியேற்பவன். (மிக) நெருங்கியிருப்பவன்.”
34:50. (மேலும்) கூறுவீராக: ‘‘நான் வழிதவறி இருந்தால் அது எனக்கே நஷ்டமாகும். நான் நேரான வழியை அடைந்து இருந்தால் அது என் இறைவன் எனக்கு வஹ்யி மூலமாக அறிவித்ததன் காரணமாகவே ஆகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் (அனைத்திற்கும்) சமீபமானவனும் ஆவான்.
34:50. கூறுவீராக: “நான் வழிதவறிப் போய்விட்டால், எனது வழிகேட்டின் தீயவிளைவு என்னையே சாரும். நான் நேர்வழியில் இருக்கிறேனென்றால், அது என்னுடைய இறைவன் எனக்கு அனுப்புகின்ற வஹியின்* காரணத்தினாலாகும். அவன் எல்லாவற்றையும் செவியுறுபவனும் அருகிலேயே உள்ளவனுமாவான்.”
34:50. (மேலும்) நீர் கூறுவீராக: “நான் (உண்மையான வழியை விட்டு) வழி தவறிவிடுவேனாயின் அப்போது நான் வழி தவறி விடுவதெல்லாம் என் மீதே (பாவமாகும்) ஆகும். நான் நேர் வழியை அடைந்திருந்தால், (அது) என் இரட்சகன் எனக்கு வஹீ மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும். நிச்சயமாக அவன், (யாவற்றையும்) செவியேற்பவன், (யாவற்றிற்கும்) நெருக்கமானவன்.
34:51
34:51 وَلَوْ تَرٰٓى اِذْ فَزِعُوْا فَلَا فَوْتَ وَاُخِذُوْا مِنْ مَّكَانٍ قَرِيْبٍۙ‏
وَلَوْ تَرٰٓى நீர் பார்த்தால் اِذْ فَزِعُوْا அவர்கள் திடுக்கிடும்போது فَلَا فَوْتَ தப்பிக்கவே முடியாது وَاُخِذُوْا அவர்கள் பிடிக்கப்படுவார்கள் مِنْ مَّكَانٍ இடத்திலிருந்து قَرِيْبٍۙ‏ வெகு சமீபமான
34:51. இன்னும் (காஃபிர்கள் மறுமையில்) பயத்தால் நடுங்குவதை நீர் காண்பீராயின்: அவர்களுக்குத் தப்பியோட வழியுமிராது; இன்னும் சமீபமான இடத்திலிருந்தே அவர்கள் பிடிபடுவார்கள்.
34:51. ‘‘(மறுமையில்) இவர்கள் திடுக்கிட்டு(த் தப்பி) ஓட முயற்சித்த போதிலும் ஒருவருமே தப்பிவிட மாட்டார்கள். மிக்க சமீபத்திலேயே பிடிபட்டு விடுவார்கள்'' என்பதை நீர் காண்பீராயின் (அது எவ்வாறிருக்கும்)!
34:51. (மேலும்) அந்தோ! இவர்கள் திகைப்புற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் இவர்களை நீர் காண வேண்டுமே! இவர்களால் எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. மாறாக, அருகிலிருந்தே பிடிக்கப்படுவார்கள்.
34:51. (இன்னும் மறுமையில் காஃபிர்களான) அவர்கள், திடுக்கமுற்றிருக்கும் பொழுது நீர் காண்பீராயின், அப்பொழுது (அவர்களால் எங்கும்) தப்பிச் செல்ல முடியாது. மிகச் சமீபமான இடத்திலிருந்து அவர்கள் பிடிக்கப் பட்டும் விடுவார்கள்.
34:52
34:52 وَّقَالُـوْۤا اٰمَنَّا بِهٖ‌ ۚ وَاَنّٰى لَهُمُ التَّنَاوُشُ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍ ۖۚ‏
وَّقَالُـوْۤا அவர்கள் கூறுவார்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِهٖ‌ ۚ அவனை وَاَنّٰى எங்கே لَهُمُ அவர்களுக்கு சாத்தியமாகும் التَّنَاوُشُ அடைவது مِنْ مَّكَانٍۢ இடத்திலிருந்து بَعِيْدٍ ۖۚ‏ தூரமான
34:52. மேலும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (இப்போது சத்தியத்தின் மீது) ஈமான் கொள்கிறோம்” என்று; ஆனால் (அமல் செய்யவேண்டிய இடத்தை விட்டும்) வெகு தூரத்திலிருந்து கொண்டு அவர்கள் எவ்வாறு (ஈமானை எளிதில்) அடைய முடியும்?
34:52. (அச்சமயம்) இவர்கள் (திடுக்கிட்டு) அதை (நம்பிக்கை கொண்டோம்) நம்பிக்கை கொண்டோம் என்று கதறுவார்கள். (சத்தியத்திலிருந்து) இவ்வளவு தூரம் சென்றுவிட்ட இவர்கள் (உண்மையான நம்பிக்கையை) எவ்வாறு அடைந்து விடுவார்கள்?
34:52. அப்போது, இவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டோம்.” ஆயினும், அவர்களை விட்டு தூரமாகச் சென்றுவிட்ட ஒன்றை எங்ஙனம் அவர்களால் கைக்கொள்ள முடியும்?
34:52. மேலும், (அச்சமயம்) அவர்கள் (திடுக்கிட்டு) “நாங்கள் அ(வ்வேதத்)தை விசுவாசஙகொண்டோம்” என்று கூறுவார்கள், (அவனிடமிருந்து செயல்களை அங்கீகரிக்கப்படும் இடத்தை விட்டு) மேலும், வெகு தூரமான இடத்திலிருந்து கொண்டு (உண்மை விசுவாசத்தைப்) பெறுதல் எவ்வாறு அவர்களுக்கு முடியும்?
34:53
34:53 وَّقَدْ كَفَرُوْا بِهٖ مِنْ قَبْلُۚ وَيَقْذِفُوْنَ بِالْغَيْبِ مِنْ مَّكَانٍۢ بَعِيْدٍ‌‏
وَّقَدْ திட்டமாக كَفَرُوْا மறுத்து விட்டனர் بِهٖ இதை مِنْ قَبْلُۚ முன்னர் وَيَقْذِفُوْنَ அவர்கள் அதிகம் பேசுகின்றனர் بِالْغَيْبِ கற்பனையாக مِنْ مَّكَانٍۢ இடத்திலிருந்து بَعِيْدٍ‌‏ வெகு தூரமான
34:53. ஆனால், இதற்கு முன்னர் அவர்கள் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டும், மறைவாய் உள்ளவைப்பற்றி வெகு தூரத்திலிருந்தவாறு (வெற்று யூகங்களை) எறிந்து கொண்டுமிருந்தார்கள்.
34:53. இதற்கு முன்னரோ, இவர்கள் அதை நிராகரித்துக் கொண்டும், இவ்வளவு தூரத்தில் அவர்களுக்கு மறைத்திருந்ததைப் (பொய் என்று) பிதற்றிக்கொண்டும் இருந்தனர்.
34:53. இதற்கு முன்போ அவர்கள் அதனை நிராகரித்துவிட்டிருந்தார்கள். மேலும், உண்மையான அறிவில்லாமல், புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தூரமான விஷயங்கள் குறித்து கற்பனைகளைக் கூறிக் கொண்டிருந்தார்கள்.
34:53. (இதற்கு) முன்னர், அதைத்திட்டமாக அவர்கள் நிராகரித்தும்விட்டார்கள், மேலும் வெகு தூரமான இடத்திலிருந்து மறைவானதைப் பற்றி (வீண் எண்ணத்தைக் கொண்டே) எறிந்து (_சொல்லிக்) கொண்டும் இருந்தார்கள்.
34:54
34:54 وَحِيْلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُوْنَ كَمَا فُعِلَ بِاَشْيَاعِهِمْ مِّنْ قَبْلُؕ اِنَّهُمْ كَانُوْا فِىْ شَكٍّ مُّرِيْبٍ‏
وَحِيْلَ தடுக்கப்பட்டுவிடும் بَيْنَهُمْ அவர்களுக்கு இடையிலும் وَبَيْنَ இடையிலும் مَا يَشْتَهُوْنَ அவர்கள் விரும்புவதற்கு كَمَا போன்று فُعِلَ செய்யப்பட்டதை بِاَشْيَاعِهِمْ அவர்கள் கூட்டங்களுக்கு مِّنْ قَبْلُؕ இதற்கு முன்னர் اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் كَانُوْا இருந்தனர் فِىْ شَكٍّ சந்தேகத்தில்தான் مُّرِيْبٍ‏ பெரிய
34:54. மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்.
34:54. அவர்களுக்கும் அவர்கள் விரும்பியவற்றுக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்பட்டுவிடும். அவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்த இவர்களுடைய இனத்தாருக்குச் செய்யப்பட்டது. (ஏனென்றால்,) நிச்சயமாக அவர்களும் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்தே கிடந்தனர்.
34:54. அந்நேரத்தில் எவற்றிற்காக இவர்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்களோ அவற்றைவிட்டு இவர்கள் தடுக்கப்பட்டு விடுவார்கள் இவர்களுக்கு முன்னர் இவர்களைப் போல் வாழ்ந்தவர்கள் தடுக்கப்பட்டதைப் போல! திண்ணமாக, இவர்கள் வழிகெடுக்கும் பெரும் ஐயப்பாட்டில் வீழ்ந்து கிடந்தார்கள்.
34:54. இதற்கு முன்பு இவர்களைப்போன்ற (நிராகரித்த)வர்களுக்கு செய்யப்பட்டது போல் இவர்களுக்கிடையிலும், இவர்கள் விருப்பம் கொண்டிருந்தவைகளுக்கிடையிலும் திரைபோடப்பட்டுவிட்டது, (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்திலேயே இருந்தார்கள்.