66. ஸூரத்துத் தஹ்ரீம் (விலக்குதல்)
மதனீ, வசனங்கள்: 12

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
66:1
66:1 يٰۤاَيُّهَا النَّبِىُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰهُ لَـكَ‌ۚ تَبْتَغِىْ مَرْضَاتَ اَزْوَاجِكَ‌ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
يٰۤاَيُّهَا النَّبِىُّ நபியே! لِمَ تُحَرِّمُ நீர் ஏன் விலக்கிக் கொள்கிறீர் مَاۤ اَحَلَّ ஆகுமாக்கியதை اللّٰهُ அல்லாஹ் لَـكَ‌ۚ உமக்கு تَبْتَغِىْ நாடுகிறீர் مَرْضَاتَ பொருத்தத்தை اَزْوَاجِكَ‌ؕ உமது மனைவிகளின் وَاللّٰهُ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ மகா கருணையாளன்
66:1. நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
66:1. நபியே! நீர் உமது மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்தவற்றை (எடுத்துக் கொள்வது இல்லை என்று) நீர் ஏன் (சத்தியம் செய்து அதை ஹராம் என்று) விலக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.
66:1. நபியே! அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கிய பொருளை நீர் ஏன் விலக்கிக் கொள்கின்றீர்? நீர் உம் மனைவியரின் திருப்தியை விரும்புகின்றீர் (என்பதற்காகவா?) அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபைமிக்கவனாகவும் இருக்கின்றான்.
66:1. நபியே! உம்முடைய மனைவியரின் திருப்தியை நீர் தேடியவராக அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்ததை நீர் ஏன் (சத்தியம் செய்து ஹராம் என்று) விலக்கிக் கொண்டீர்? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக்கிருபையுடையவன்.
66:2
66:2 قَدْ فَرَضَ اللّٰهُ لَـكُمْ تَحِلَّةَ اَيْمَانِكُمْ‌ؕ وَاللّٰهُ مَوْلٰٮكُمْ‌ۚ وَهُوَ الْعَلِيْمُ الْحَكِيْمُ‏
قَدْ திட்டமாக فَرَضَ கடமையாக்கியுள்ளான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ உங்களுக்கு تَحِلَّةَ முறிப்பதை اَيْمَانِكُمْ‌ؕ உங்கள் சத்தியங்களை وَاللّٰهُ அல்லாஹ்தான் مَوْلٰٮكُمْ‌ۚ உங்கள் எஜமானன் وَهُوَ அவன்தான் الْعَلِيْمُ நன்கறிந்தவன் الْحَكِيْمُ‏ மகா ஞானவான்
66:2. அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சில போது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்; மேலும் அல்லாஹ் உங்கள் எஜமானன். மேலும், அவன் நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
66:2. ஆகவே, உங்கள் அந்தச் சத்தியத்திற்கு (நீங்கள் பரிகாரம் கொடுத்து) அதை நீக்கிவிடுமாறு நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிடுகிறான். அல்லாஹ்தான் உங்கள் எஜமானன். அவன் (அனைவரையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
66:2. அல்லாஹ், நீங்கள் செய்யும் சத்தியங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடுவதற்கான வழியை உங்களுக்கு நிர்ணயித் துள்ளான். அல்லாஹ் உங்கள் பாதுகாவலன். மேலும், அவன் யாவும் அறிந்தவன்; நுண்ணறிவாளன்!
66:2. உங்களுடைய சத்தியங்களை (அதனால் தடுக்கப்பட்டவற்றை மீண்டும் ஆகுமாக்கிக் கொள்ள) முறித்துவிடுவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான், மேலும், அல்லாஹ்தான் உங்களுக்கு பாதுகாவலன், இன்னும், அவன்தான் (யாவற்றையும்) நன்கிறகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்.
66:3
66:3 وَاِذْ اَسَرَّ النَّبِىُّ اِلٰى بَعْضِ اَزْوَاجِهٖ حَدِيْثًا‌ۚ فَلَمَّا نَـبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْۢ بَعْضٍ‌ۚ فَلَمَّا نَـبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْۢبَاَكَ هٰذَا‌ؕ قَالَ نَـبَّاَنِىَ الْعَلِيْمُ الْخَبِیْرُ‏
وَاِذْ اَسَرَّ النَّبِىُّ இரகசியமாக பேசியபோது/நபி اِلٰى بَعْضِ சிலரிடம் اَزْوَاجِهٖ தனது மனைவிமார்களில் حَدِيْثًا‌ۚ ஒரு பேச்சை فَلَمَّا نَـبَّاَتْ بِهٖ அவள் அறிவித்து விட்டபோது/அதை وَاَظْهَرَهُ இன்னும் அதை வெளிப்படுத்தினான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِ அவருக்கு عَرَّفَ அவர் அறிவித்தார் بَعْضَهٗ அதில் சிலவற்றை وَاَعْرَضَ இன்னும் புறக்கணித்து விட்டார் عَنْۢ بَعْضٍ‌ۚ சிலவற்றை فَلَمَّا نَـبَّاَهَا بِهٖ அவர் அவளுக்கு அறிவித்த போது/அதை قَالَتْ அவள் கூறினாள் مَنْ யார் اَنْۢبَاَكَ உமக்கு அறிவித்தார் هٰذَا‌ؕ இதை قَالَ அவர் கூறினார் نَـبَّاَنِىَ எனக்கு அறிவித்தான் الْعَلِيْمُ நன்கறிபவன் الْخَبِیْرُ‏ ஆழ்ந்தறிபவன்
66:3. மேலும், நபி தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக ஆக்கிவைத்த போது அவர் (மற்றொருவருக்கு) அதை அறிவித்ததும், அ(வ்விஷயத்)தை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கி வைத்தான்; அவர் அதில் சிலதை தெரிவித்ததும், சிலதை(த் தெரிவிக்காது) புறக்கணித்தும் இருந்தார், (இவ்வாறு) அவர் அதைத் தெரிவித்த போது “உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?” என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்: “(யாவற்றையும்) நன்கறிந்தோனும் உணர்ந்தோனும் (ஆகிய அல்லாஹ்) எனக்குத் தெரிவித்தான்” என்று (பதில்) கூறினார்.
66:3. (நம்) நபி தன் மனைவிகளில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகக் கூறிய சமயத்தில், அப்பெண் அதை (மற்றொரு மனைவிக்கு) அறிவித்து விட்டார். அதை அல்லாஹ் அவருக்கு வெளியாக்கித் தந்தான். நபி (அதில்) சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்துச் சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்து விட்டார். (இவ்வாறு) நபி தன் மனைவிக்கு அறிவிக்கவே, அம்மனைவி ‘‘இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?'' எனக் கேட்டார். அதற்கு அவர் “(அனைத்தையும்) நன்கறிந்து தெரிந்தவனே அதை எனக்கு அறிவித்தான்'' என்று கூறினார்.
66:3. (மேலும், இந்த விவகாரமும் கவனிக்கத்தக்கதாகும்:) நபி தம்முடைய ஒரு மனைவியிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார். பிறகு, அந்த மனைவி அதனை (வேறொருவரிடம்) தெரிவிக்கவும் (அப்படி இரகசியம் வெளிப்பட்டதை) அல்லாஹ் நபியிடம் அறிவிக்கவும் செய்தபோது, அதில் சிலவற்றை அந்த மனைவியிடம் அவர் தெரியப்படுத்தினார். வேறு சிலவற்றைப் புறக்கணித்தார். பின்னர், (இரகசியம் வெளிப்பட்டது பற்றி) நபி தம் மனைவியிடம் தெரிவித்தபோது மனைவி கேட்டார், “தங்களுக்கு இதனைத் தெரிவித்தது யார்?” என்று! அதற்கு நபி பதிலளித்தார்: “அனைத்தையும் அறிந்தவனும் நன்கு தெரிந்தவனும்தான் எனக்கு அறிவித்தான்.”
66:3. மேலும், (நபி, தன்னுடைய மனைவியரில் சிலர்பால் ஒரு விஷயத்தை ரகசியமாகக் கூறியதை- (நினைவு கூர்க!) பின்னர் அ(ம்மனைவியான)வர் அதனை (நபியின் மற்றொரு மனைவிக்கு) அறிவித்து அதனை அல்லாஹ் (நபியாகிய) அவருக்கு வெளியாக்கி வைத்தபோது அவர் அதில் சிலவற்றை (அம்மனைவிக்கு) அறிவித்து, சிலவற்றை (அறிவிக்காது) புறக்கணித்தும் விட்டார், பின்னர், அவர் அவருடைய மனைவிக்கு அதை அறிவித்தபோது, “இதனை உங்களுக்கு அறிவித்தவர் யார்?” என அவர் (அந்த மனைவி) கேட்டார், அதற்கு அவர் “(யாவற்றையும்) நன்கறிந்தோன், நன்குணர்ந்தோன் (ஆகிய அல்லாஹ் அதனை) எனக்கறிவித்தான்” என்று கூறினார்.
66:4
66:4 اِنْ تَتُوْبَاۤ اِلَى اللّٰهِ فَقَدْ صَغَتْ قُلُوْبُكُمَا‌ۚ وَاِنْ تَظٰهَرَا عَلَيْهِ فَاِنَّ اللّٰهَ هُوَ مَوْلٰٮهُ وَجِبْرِيْلُ وَصَالِحُ الْمُؤْمِنِيْنَ‌ۚ وَالْمَلٰٓٮِٕكَةُ بَعْدَ ذٰلِكَ ظَهِيْرٌ‏
اِنْ تَتُوْبَاۤ நீங்கள் இருவரும் திரும்பிவிட்டால் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் فَقَدْ ஏனெனில், திட்டமாக صَغَتْ சாய்ந்து விட்டன قُلُوْبُكُمَا‌ۚ உங்கள் இருவரின் உள்ளங்களும் وَاِنْ تَظٰهَرَا நீங்கள் இருவரும் உதவினால் عَلَيْهِ அவருக்கு எதிராக فَاِنَّ اللّٰهَ هُوَ ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் مَوْلٰٮهُ அவருக்குப் பாதுகாவலன் وَجِبْرِيْلُ இன்னும் ஜிப்ரீலும் وَصَالِحُ الْمُؤْمِنِيْنَ‌ۚ இன்னும் நல்ல முஃமின்களும் وَالْمَلٰٓٮِٕكَةُ வானவர்களும் بَعْدَ ذٰلِكَ இதற்குப் பின்னர் ظَهِيْرٌ‏ உதவியாளர்கள்
66:4. நீங்கள் இருவரும் - இதற்காக அல்லாஹ்விடம் தவ்பா செய்வீர்களாயின் (அது உங்களுக்கு நலமாகும்) ஏனெனில் நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் (இவ்விஷயத்தில் கோணிச்) சாய்ந்து விட்டன - தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் - அவருடைய எஜமானன் (அவருக்கு உதவுவான்; அன்றியும்) ஜிப்ரீலும், ஸாலிஹான முஃமின்களும் (உதவுவார்கள்.) அதன் பின் மலக்குகளும் (அவருக்கு) உதவியாளராக இருப்பார்கள்.
66:4. (நபியுடைய அவ்விரு மனைவிகளே!) நீங்கள் இருவரும் (உங்கள் குற்றங்களைப் பற்றி) அல்லாஹ்வின் பக்கம் கைசேதப்பட்டு மன்னிப்புக் கோரி மீண்டுவிட்டால் அது உங்களுக்கே நன்று. ஏனென்றால், உங்கள் இருவரின் உள்ளங்கள் (நேரான வழியில் இருந்து) சாய்ந்துவிட்டன. ஆகவே, நீங்கள் இருவரும் அவருக்கு விரோதமாக ஒன்று சேர்ந்தால், நிச்சயமாக அல்லாஹ் அவரை பாதுகாப்பவனாக இருக்கிறான். இன்னும் ஜிப்ரயீலும், நம்பிக்கையாளர்களிலுள்ள நல்லடியார்களும், இவர்களுடன் (மற்ற) வானவர்களும் (அவருக்கு) உதவியாக இருப்பார்கள்.
66:4. நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி மீண்டால், (அது உங்களுக்கு சிறந்ததாகும்.) ஏனெனில், உங்களுடைய உள்ளங்கள் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்துவிட்டிருக்கின்றன. மேலும், இறைத்தூதருக்கு எதிராக நீங்கள் அணி சேர்ப்பீர்களானால் அறிந்து கொள்ளுங்கள்: திண்ணமாக, அல்லாஹ் அவருடைய பாதுகாவலனாக இருக்கின்றான். மேலும், அவனுக்கு அடுத்து ஜிப்ரீலும் சான்றோர்களான இறைநம்பிக்கையாளர்கள் அனைவரும், அனைத்து வானவர்களும் அவருக்கு உதவியாளர்களாக இருக்கின்றார்கள்.
66:4. (நபியுடைய மனைவியராகிய) நீங்கள் இருவரும் (உங்கள் குற்றங்களுக்காக) பச்சாதாபப்பட்டு (தவ்பாச் செய்து) அல்லாஹ்வின்பால் மீண்டால், (அது உங்களுக்கு நன்மையாகும், இது ஏனென்றால்) உங்கள் இருவரின் இதயங்கள் (உண்மையிலிருந்து) சாய்ந்துவிட்டன, ஆகவே, நீங்களிருவரும் (நபியாகிய) அவருக்கு விரோதமாக (ஒருவருக்கொருவர் உதவிசெய்ய) ஒன்று சேர்ந்தால், நிச்சயமாக அல்லாஹ் (நபியாகிய) அவருக்கு காப்பாளன், ஜிப்ரீலும், விசுவாசிகளிலுள்ள நல்லடியார்களும், (அவருக்கு உதவியாளர்களாக இருப்பார்கள்) அன்றியும், அதன் பின்னர் (அவருக்கு மற்ற) மலக்குகளும் உதவியாளர்களாவர்.
66:5
66:5 عَسٰى رَبُّهٗۤ اِنْ طَلَّقَكُنَّ اَنْ يُّبْدِلَهٗۤ اَزْوَاجًا خَيْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓٮِٕبٰتٍ عٰبِدٰتٍ سٰٓٮِٕحٰتٍ ثَيِّبٰتٍ وَّاَبْكَارًا‏
عَسٰى கூடும் رَبُّهٗۤ அவருடைய இறைவன் اِنْ طَلَّقَكُنَّ அவர் உங்களை விவாகரத்து செய்து விட்டால் اَنْ يُّبْدِلَهٗۤ அவருக்கு பகரமாக வழங்குவான் اَزْوَاجًا மனைவிகளை خَيْرًا சிறந்தவர்களான مِّنْكُنَّ உங்களை விட مُسْلِمٰتٍ முற்றிலும் பணியக்கூடிய مُّؤْمِنٰتٍ நம்பிக்கை கொள்ளக்கூடிய قٰنِتٰتٍ கீழ்ப்படியக்கூடிய تٰٓٮِٕبٰتٍ வணக்க வழிபாடு செய்யக்கூடிய عٰبِدٰتٍ வணக்க வழிபாடு செய்யக்கூடிய سٰٓٮِٕحٰتٍ நோன்பு நோற்கக்கூடிய ثَيِّبٰتٍ கன்னி கழிந்தவர்களும் وَّاَبْكَارًا‏ கன்னிகளும்
66:5. அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.
66:5. நபி உங்களை ‘தலாக்' கூறி (விலக்கி) விட்டால், உங்களைவிட மேலான பெண்களை அவருடைய இறைவன் அவருக்கு மனைவியாக்கி வைக்க முடியும். (மனைவியாக வரக்கூடிய அப்பெண்களோ) முஸ்லிமானவர்களாக, நம்பிக்கைக் கொண்டவர்களாக, (இறைவனுக்குப்) பயந்து (நம் நபிக்கு கட்டுப்பட்டு) நடக்கக்கூடியவர்களாக, (பாவத்தைவிட்டு) விலகியவர்களாக, (இறைவனை) வணங்குபவர்களாக, நோன்பு நோற்பவர்களாக, கன்னியர்களாகவும், கன்னியர் அல்லாதவர்களாகவும் இருப்பார்கள். (ஆகவே, இதனால் உங்களுக்குத்தான் நஷ்டம், அவருக்கு அல்ல.)
66:5. நபி தம் மனைவியராகிய உங்கள் அனைவரையும் மணவிலக்கு செய்துவிடுவாராயின், உங்களுக்குப் பதிலாக உங்களை விடவும் சிறந்த மனைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கிவிடலாம். அவர்கள் வாய்மையான முஸ்லிம்களாய், இறைநம்பிக்கையுடையோராய், கீழ்ப்படிபவர்களாய், பாவமன்னிப்புக் கோருபவர்களாய், அடிபணிந்து வணங்குபவர்களாய், நோன்பு நோற்பவர்களாய்த் திகழ்வார்கள்; அவர்கள் விதவைகளாயினும் கன்னிகளாயினும் சரியே!
66:5. (நம் நபியாகிய) அவர் உங்களை “தலாக்” கூறி விலக்கிவிட்டால், உங்களைவிடச் சிறந்த முஸ்லிம்களான, விசுவாசிகளான (அல்லாஹ்வுக்குப் பயந்து) கீழ்ப்படிந்து நடப்பவர்களான, (பாவத்தைவிட்டு விலகி தவ்பாச் செய்பவர்களான, வணங்கக்கூடியவர்களான, நோன்பு நோற்கக் கூடியவர்களான கன்னிமை கழிந்தவர்களான, கன்னியர்களான இத்தகையோரை (உங்களுக்குப் பகரமாக) அவருடைய இரட்சகன் அவருக்கு மனைவியராக மாற்றித்தரப் போதுமானவன்.
66:6
66:6 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا قُوْۤا اَنْفُسَكُمْ وَاَهْلِيْكُمْ نَارًا وَّقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلٰٓٮِٕكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَّا يَعْصُوْنَ اللّٰهَ مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! قُوْۤا பாதுகாத்துக் கொள்ளுங்கள் اَنْفُسَكُمْ உங்களையும் وَاَهْلِيْكُمْ உங்கள் குடும்பத்தாரையும் نَارًا நரகத்தைவிட்டு وَّقُوْدُهَا அதன் எரிபொருள் النَّاسُ மக்களும் وَالْحِجَارَةُ கற்களும் عَلَيْهَا அவற்றின் மீது مَلٰٓٮِٕكَةٌ வானவர்கள் غِلَاظٌ முரடர்களாக شِدَادٌ கடுமையானவர்களான لَّا يَعْصُوْنَ மாறு செய்யமாட்டார்கள் اللّٰهَ அல்லாஹ்விற்கு مَاۤ اَمَرَهُمْ وَيَفْعَلُوْنَ அவன் அவர்களுக்கு ஏவியதில்/இன்னும் செய்வார்கள் مَا يُؤْمَرُوْنَ‏ அவர்கள் எதற்கு ஏவப்பட்டார்களோ
66:6. முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
66:6. நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை, மனிதர்களும் (சிலைகளாக இருந்த) கற்களுமாகும். அதில் கடின சித்தமுடைய பலசாலிகளான வானவர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு ஏவியதில் ஒரு சிறிதும் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் (பாவிகளை வேதனை செய்யுமாறு) தங்களுக்கிடப்பட்ட கட்டளைகளையே செய்து வருவார்கள்.
66:6. இறைநம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும் கற்களும் எரிபொருள்களாகக்கூடிய அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும் உங்கள் மனைவி மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது, கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள்.
66:6. விசுவாசிகளே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் (நரக நெருப்பைவிட்டும்) காப்பாற்றிக் கொள்ளுங்கள், அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமாகும், அதில் (குணத்தால்) கடின சித்தமுடைய (தோற்றத்தாலும், அமைப்பாலும்) பலசாலிகளான மலக்குகள் உள்ளனர், அல்லாஹ்விற்கு - அவன் அவர்களை ஏவியவற்றில் அவர்கள் மாறுசெய்யமாட்டார்கள், (இரட்சகனிடமிருந்து) அவர்களுக்குக் கட்டளையிடப்படுவதைச் செய்வார்கள்.
66:7
66:7 يٰۤاَيُّهَا الَّذِيْنَ كَفَرُوْا لَا تَعْتَذِرُوا الْيَوْمَ‌ؕ اِنَّمَا تُجْزَوْنَ مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ كَفَرُوْا நிராகரித்தவர்களே! لَا تَعْتَذِرُوا நீங்கள் காரணம் கூறாதீர்கள் الْيَوْمَ‌ؕ இன்று اِنَّمَا تُجْزَوْنَ நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்
66:7. (அன்று காஃபிர்களிடம்) நிராகரித்தோரே! இன்று நீங்கள் எந்தப்புகலும் கூறாதீர்கள்; நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்ததற்குத்தான்.
66:7. (அந்நாளில் நிராகரிப்பவர்களை நோக்கி) ‘‘நிராகரிப்பவர்களே! இன்றைய தினம் நீங்கள் (வீண்) புகல் கூறாதீர்கள். நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம், நீங்கள் செய்தவற்றுக்குத்தான். (நீங்கள் செய்யாதவற்றுக்கு அல்ல'' என்று கூறப்படும்.)
66:7. அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஒருபோதும் மாறு செய்வதில்லை. அவர்களுக்கு எந்தக் கட்டளை இடப்பட்டாலும் அதனை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள். (அப்போது கூறப்படும்:) “நிராகரிப்பாளர்களே! நீங்கள் இன்று எந்தச் சாக்குப் போக்கும் சொல்லாதீர்கள். நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்ததற்கு ஏற்பவே உங்களுக்கு கூலி கொடுக்கப்படுகின்றது.”
66:7. “நிராகரித்து விட்டோரே! (நீங்கள் மறுத்துக் கொண்டிருந்த மறுமை நாளான) இன்றையத்தினம் நீங்கள் (வீண்) புகல் கூறாதீர்கள், நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம், நீங்கள் செய்து கொண்டிருந்தவைகளுக்குத்தான்” (என்று கூறப்படும்)
66:8
66:8 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَى اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ؕ عَسٰى رَبُّكُمْ اَنْ يُّكَفِّرَ عَنْكُمْ سَيِّاٰتِكُمْ وَيُدْخِلَـكُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ يَوْمَ لَا يُخْزِى اللّٰهُ النَّبِىَّ وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ‌ ۚ نُوْرُهُمْ يَسْعٰى بَيْنَ اَيْدِيْهِمْ وَبِاَيْمَانِهِمْ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَ تْمِمْ لَـنَا نُوْرَنَا وَاغْفِرْ لَـنَا‌ ۚ اِنَّكَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களே! تُوْبُوْۤا திரும்புங்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் تَوْبَةً பாவமன்னிப்புக் கேட்டு نَّصُوْحًا ؕ உண்மையாக عَسٰى கூடும் رَبُّكُمْ உங்கள் இறைவன் اَنْ يُّكَفِّرَ போக்குவதற்கு عَنْكُمْ உங்களை விட்டும் سَيِّاٰتِكُمْ உங்கள் பாவங்களை وَيُدْخِلَـكُمْ இன்னும் உங்களை பிரவேசிக்க வைப்பான் جَنّٰتٍ சொர்க்கங்களில் تَجْرِىْ ஓடும் مِنْ تَحْتِهَا அவற்றின் கீழ் الْاَنْهٰرُ ۙ நதிகள் يَوْمَ அந்நாளில் لَا يُخْزِى கேவலப்படுத்த மாட்டான் اللّٰهُ அல்லாஹ் النَّبِىَّ நபியையும் وَالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ‌ ۚ நம்பிக்கை கொண்டவர்களையும்/அவருடன் نُوْرُهُمْ அவர்களின் ஒளி يَسْعٰى விரைந்து வரும் بَيْنَ اَيْدِيْهِمْ அவர்களுக்கு முன்னும் وَبِاَيْمَانِهِمْ அவர்களின் வலப்பக்கங்களிலும் يَقُوْلُوْنَ கூறுவார்கள் رَبَّنَاۤ எங்கள் இறைவா! اَ تْمِمْ முழுமையாக்கு! لَـنَا எங்களுக்கு نُوْرَنَا எங்கள் ஒளியை وَاغْفِرْ لَـنَا‌ ۚ இன்னும் எங்களை மன்னிப்பாயாக! اِنَّكَ நிச்சயமாக நீ عَلٰى كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள்கள் மீதும் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
66:8. ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப் போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா) ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும் அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்” என்று கூறி(ப் பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.
66:8. நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். உங்கள் இறைவனோ அதை உங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக்கி, (மன்னித்து) சொர்க்கங்களிலும் உங்களைப் புகுத்திவிடுவான். அதில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கும். (தன்) நபியையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அந்நாளில் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். அந்நாளில், இவர்களுடைய பிரகாசம் இவர்களுக்கு முன்னும், இவர்களுடைய வலது பக்கத்திலும் ஊடுருவிச் சென்றுகொண்டிருக்கும். இவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பிரகாசத்தை (அணையாது) நீ பரிபூரணமாக்கிவை. எங்கள் குற்றங்களையும் நீ மன்னித்து அருள்புரி. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள்.
66:8. இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; தூய்மையான பாவமன்னிப்பு! விரைவில் அல்லாஹ் உங்கள் தீமைகளை உங்களைவிட்டு அகற்றவும் செய்யலாம்; மேலும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்படியான சுவனங்களில் உங்களைப் புகுத்தவும் செய்யலாம். அது எப்படிப்பட்ட நாளெனில், அன்று அல்லாஹ் தன்னுடைய தூதரையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் இழிவுபடுத்த மாட்டான். அவர்களின் ஒளி அவர்களுக்கு முன்னாலும், அவர்களின் வலப்பக்கத்திலும் பாய்ந்து கொண்டிருக்கும். மேலும், அவர்கள் கூறிக் கொண்டிருப்பார்கள்: “எங்கள் அதிபதியே! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்கித் தருவாயாக! மேலும், எங்களை மன்னிப்பாயாக! திண்ணமாக, அனைத்தின் மீதும் நீ பேராற்றல் உள்ளவனாக இருக்கின்றாய்!”
66:8. விசுவாசிகளே! கலப்பற்ற தவ்பாவாக (தூய மனத்துடன் பாவத்திலிருந்து விலகி,) அல்லாஹ்வின்பால் நீங்கள் தவ்பாச் செய்யுங்கள், (அவ்வாறு நீங்கள் செய்தால் தன்னுடைய) நபியையும், அவருடன் விசுவாசங்கொண்டவர்களையும் அல்லாஹ் இழிவு படுத்தாத நாளில், உங்கள் இரட்சகன் உங்கள் பாவங்களை உங்களைவிட்டுப் போக்கி (மன்னித்து) சுவனபதிகளிலும் உங்களை பிரவேசிக்கச் செய்யப் போதுமானவன், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், (அந்நாளில்) அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறங்களிலும் விரைந்து (சென்று) கொண்டிருக்கும், அவர்கள், “எங்கள் இரட்சகனே! எங்களுக்கு எங்களுடைய பிரகாசத்தை (அணையாது) நீ பரிபூரணமாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பையும் அருள்வாயாக! நிச்சயமாக நீ, ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்” என்று பிரார்த்தனை செய்து கூறுவார்கள்.
66:9
66:9 يٰۤاَيُّهَا النَّبِىُّ جَاهِدِ الْكُفَّارَ وَالْمُنٰفِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْ‌ؕ وَمَاْوٰٮهُمْ جَهَنَّمُ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏
يٰۤاَيُّهَا النَّبِىُّ நபியே! جَاهِدِ ஜிஹாது செய்வீராக الْكُفَّارَ நிராகரிப்பாளர்களிடமும் وَالْمُنٰفِقِيْنَ நயவஞ்சகர்களிடமும் وَاغْلُظْ இன்னும் கடுமை காட்டுவீராக عَلَيْهِمْ‌ؕ அவர்களிடம் وَمَاْوٰٮهُمْ அவர்களின் தங்குமிடம் جَهَنَّمُ‌ؕ நரகம்தான் وَبِئْسَ மிகக் கெட்டதாகும் الْمَصِيْرُ‏ மீளுமிடங்களில்
66:9. நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் போரிட்டு, அவர்களிடம் கண்டிப்புடன் இருப்பீராக! அன்றியும் அவர்கள் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அது மிகவும் கெட்ட சேருமிடம் ஆகும்.
66:9. நபியே! (இந்த) நிராகரிப்பவர்களுடன் (வாளைக் கொண்டும், இந்த) நயவஞ்சகர்களுடன் (தர்க்கத்தைக் கொண்டும்) போர் புரிவீராக. அவர்களுடன் நீங்கள் (தயவு தாட்சண்யம் காட்டாது) கடுமையாகவே இருப்பீராக. அவர்கள் செல்லுமிடம் நரகம்தான்; அது மகாகெட்ட சேரும் இடமாகும்.
66:9. நபியே! நிராகரிப்பாளர்களுடனும், நயவஞ்சகர்களுடனும் போர்புரிவீராக! மேலும், அவர்களிடம் கடுமையாக நடப்பீராக! அவர்கள் போய்ச் சேருமிடம் நரகமாகும். அது மிகவும் மோசமான இருப்பிடமாகும்.
66:9. நபியே! நிராகரிப்போருடனும், (வேஷதாரிகளான) முனாஃபிக்குகளுடனும் யுத்தம் புரிவீராக! அவர்கள் விஷயத்தில் நீர் கடுமையாகவே இருப்பீராக! அவர்கள் தங்குமிடம் நரகந்தான், சேருமிடத்திலும் அது மிகக் கெட்டது.
66:10
66:10 ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّ امْرَاَتَ لُوْطٍ‌ ؕ كَانَـتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَـيْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَيْــٴًــا وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِيْنَ‏
ضَرَبَ விவரிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் مَثَلًا ஓர் உதாரணமாக لِّـلَّذِيْنَ كَفَرُوا நிராகரித்தவர்களுக்கு امْرَاَتَ மனைவியையும் نُوْحٍ நூஹூடைய وَّ امْرَاَتَ மனைவியையும் لُوْطٍ‌ ؕ லூத்துடைய كَانَـتَا இருவரும் இருந்தனர் تَحْتَ கீழ் عَبْدَيْنِ இரு அடியார்களுக்கு مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் صَالِحَـيْنِ நல்ல(வர்கள்) فَخَانَتٰهُمَا அவ்விருவரும் அவ்விருவருக்கும் மோசடி செய்தனர் فَلَمْ يُغْنِيَا ஆகவே, அவ்விருவரும் தடுக்கவில்லை عَنْهُمَا அவ்விருவரைவிட்டும் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் شَيْــٴًــا எதையும் وَّقِيْلَ கூறப்பட்டது ادْخُلَا நீங்கள் இருவரும் நுழையுங்கள் النَّارَ நரகத்தில் مَعَ الدّٰخِلِيْنَ‏ நுழைபவர்களுடன்
66:10. நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது.
66:10. நிராகரிக்கும் பெண்களுக்கு, நூஹ் நபியினுடைய மனைவியையும், லூத் நபியினுடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான். இவ்விரு பெண்களும், நம் அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர். எனினும், இவ்விரு பெண்களும் தங்கள் கணவன்மார்களுக்குத் துரோகம் செய்தனர். (ஆகவே, இவர்கள் இருவரும் நபிமார்களின் மனைவிகளாயிருந்தும்) அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் தடுத்துக்கொள்ள முடியவில்லை. (இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களை நோக்கி) ‘‘நரகத்தில் புகுபவர்களுடன் நீங்கள் இருவரும் புகுந்து விடுங்கள்'' என்றே கூறப்பட்டது.
66:10. நூஹ் உடைய மனைவியையும் லூத் உடைய மனைவியையும் அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். இவ்விருவரும் நம்முடைய இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். எனினும், அவ்விரு வரும் தத்தம் கணவருக்கு துரோகம் செய்தனர். பிறகு, அவ்விரு நல்லடியார்களும் அல்லாஹ்வுக்கு எதிராக இவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்க இயலவில்லை (அவ்விருவரையும் நோக்கிக்) கூறப்பட்டது: “நரக நெருப்புக்குள் செல்வோருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்.”
66:10. நிராகரிப்போருக்கு (நபி) நூஹுடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான், அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்குக் கீழ் (மனைவியராக) இருந்தனர், பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர், ஆகவே (தம் மனைவியரான), அவர்களிருவரை விட்டும் அல்லாஹ்வுடைய வேதனையிலிருந்து எதையும் (நபிகளாகிய) அவ்விருவராலும் தடுக்க முடியவில்லை, இவர்கள் துரோகம் செய்ததன் காரணமாக இவர்களிடம்,) நரக நெருப்பில் நுழைவோர்களுடன் நீங்களிருவரும் நுழைந்து கொள்ளுங்கள்” என்று கூறப்பட்டது.
66:11
66:11 وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ اٰمَنُوْا امْرَاَتَ فِرْعَوْنَ‌ۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏
وَضَرَبَ விவரிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் مَثَلًا உதாரணமாக لِّـلَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்களுக்கு امْرَاَتَ மனைவியை فِرْعَوْنَ‌ۘ ஃபிர்அவ்னின் اِذْ قَالَتْ அவள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! رَبِّ என் இறைவா ابْنِ அமைத்துத் தா! لِىْ எனக்கு عِنْدَكَ உன்னிடம் بَيْتًا ஓர் இல்லத்தை فِى الْجَـنَّةِ சொர்க்கத்தில் وَنَجِّنِىْ இன்னும் என்னை பாதுகாத்துக் கொள் مِنْ فِرْعَوْنَ ஃபிர்அவ்னை விட்டும் وَعَمَلِهٖ இன்னும் அவனது செயல்களை وَنَجِّنِىْ இன்னும் என்னை பாதுகாத்துக் கொள் مِنَ الْقَوْمِ மக்களை விட்டும் الظّٰلِمِيْنَۙ‏ அநியாயக்கார(ர்கள்)
66:11. மேலும், ஈமான் கொண்டவர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான். அவர் “இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
66:11. நம்பிக்கைகொண்ட பெண்களுக்கு(ம் இரு பெண்களை) அல்லாஹ் உதாரணமாகக் கூறுகிறான். (முதலாவது:) ஃபிர்அவ்னுடைய மனைவி (ஆசியா). அவள் (தன் இறைவனிடம்) ‘‘என் இறைவனே! உன்னிடத்தில் உள்ள சொர்க்கத்தில் எனக்கு ஒரு வீட்டை அமைத்துத் தா, ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள், அநியாயக்கார சமுதாயத்தை விட்டும் என்னை பாதுகாத்துக்கொள்'' என்று பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தாள்.
66:11. ஃபிர்அவ்னுடைய மனைவியை அல்லாஹ் இறைநம்பிக்கையாளர்களுக்கான உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான். ஒருபோது அவர் இறைஞ்சினார்: “என் அதிபதியே! எனக்காக உன்னிடத்தில் சுவனத்தில் ஓர் இல்லத்தை அமைத்துத் தருவாயாக! மேலும், ஃபிர்அவ்னை விட்டும் அவனுடைய செயலைவிட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! மேலும், கொடுமை புரியும் சமூகத்திலிருந்து எனக்கு விடுதலை அளிப்பாயாக!”
66:11. விசுவாசங் கொண்டோருக்கு ஃபிர் அவ்னுடைய மனைவியை உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான், (ஃபிர் அவ்னுடைய அக்கிரமங்களைச் சகிக்காமல் தன் இரட்சகனிடம்,) “என் இரட்சகனே! சொர்க்கத்தில் உன்னிடத்தில் எனக்கு ஒரு வீட்டைக் கட்டுவாயாக! ஃபிர் அவ்னை விட்டும், அவனுடைய செயலை விட்டும் என்னைக் காப்பாற்றுவாயாக! அன்றியும் அநியாயக்காரர்களான கூட்டத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக!” என்று (பிரார்த்தனை செய்து) அவர் கூறியதை (நினைவு கூர்வீராக!)
66:12
66:12 وَمَرْيَمَ ابْنَتَ عِمْرٰنَ الَّتِىْۤ اَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيْهِ مِنْ رُّوْحِنَا وَصَدَّقَتْ بِكَلِمٰتِ رَبِّهَا وَكُتُبِهٖ وَكَانَتْ مِنَ الْقٰنِتِيْنَ‏
وَمَرْيَمَ இன்னும் மர்யமை ابْنَتَ மகள் عِمْرٰنَ இம்ரானின் الَّتِىْۤ எவள் اَحْصَنَتْ பேணிக்கொண்டாள் فَرْجَهَا தனது மறைவிடத்தை فَنَفَخْنَا ஆகவே நாம் ஊதினோம் فِيْهِ அதில் مِنْ رُّوْحِنَا நமது உயிரிலிருந்து وَصَدَّقَتْ இன்னும் உண்மைப்படுத்தினாள் بِكَلِمٰتِ வாக்கியங்களையும் رَبِّهَا தனது இறைவனின் وَكُتُبِهٖ அவனது வேதங்களையும் وَكَانَتْ இன்னும் இருந்தாள் مِنَ الْقٰنِتِيْنَ‏ மிகவும் பணிந்தவர்களில்
66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் - (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
66:12. (இரண்டாவது:) இம்ரானுடைய மகள் மர்யம். அவள் தன் கற்பை பாதுகாத்துக் கொண்டாள். ஆகவே, அவளுடைய கர்ப்பத்தில் நம் ரூஹிலிருந்து ஊதினோம். அவள் தன் இறைவனின் வசனங்களையும், வேதங்களையும் உண்மையாக்கி வைத்ததுடன் (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்டவளாகவும் இருந்தாள்.
66:12. மேலும், இம்ரானின் மகள் மர்யத்தை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக்காட்டுகின்றான்: அவர் தம்முடைய வெட்கத்தலத்தைப் பாதுகாத்தார். பிறகு, நாம் நம்மிடமிருந்து ரூஹை அவருள் ஊதினோம்.* மேலும் அவர் தம்முடைய அதிபதியின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் மெய்ப்படுத்தினார். மேலும், அவர் கீழ்ப்படிந்து வாழ்வோரில் ஒருவராயும் இருந்தார்.
66:12. இன்னும் இம்ரானுடைய மகள் மர்யமையும் (விசுவாசிகளுக்கு உதாரணமாக அல்லாஹ் கூறுகிறான்.) அவர் தன்னுடைய மர்மஸ்தானத்தை (க்கற்பை)க் காத்துக் கொண்டார், ஆகவே, நம்முடைய ரூஹிலிருந்து அதில் ஊதினோம், அவர் தன் இரட்சகனின் வார்த்தைகளையும் அவனின் வேதங்களையும் உண்மையாக்கி வைத்தார், முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில் உள்ளவராகவும் அவர் இருந்தார்.