71. ஸூரத்து நூஹ்
மக்கீ, வசனங்கள்: 28

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
71:1
71:1 اِنَّاۤ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِيَهُمْ عَذَابٌ اَلِيْمٌ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنَا அனுப்பினோம் نُوْحًا நூஹை اِلٰى قَوْمِهٖۤ அவருடைய மக்களின் பக்கம் اَنْ اَنْذِرْ ஏனெனில், நீர் எச்சரிப்பீராக! قَوْمَكَ உமது மக்களை مِنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِيَهُمْ அவர்களுக்கு வருவதற்கு عَذَابٌ தண்டனை اَلِيْمٌ‏ வலி தரக்கூடிய
71:1. நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்: “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம்.
71:1. நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் (நம்) தூதராக அனுப்பிவைத்து, (அவரை நோக்கி) ‘‘நீர் உமது மக்களுக்குத் துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன்னதாகவே, அவர்களுக்கு அதைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக'' என்று கட்டளையிட்டோம்.
71:1. நாம் நூஹை இந்த ஏவுரையுடன் அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம். உம்முடைய சமுதாயத்தை எச்சரிப்பீராக; துன்புறுத்தும் வேதனை அவர்களிடம் வருவதற்கு முன்பாக!
71:1. நிச்சயமாக, நாம் நூஹை அவருடைய சமூகத்தவரின்பால் “துன்புறுத்தும் வேதனை அவர்களுக்கு வரும் முன், உம்முடைய சமூகத்தினருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” என்று (தூதராக) நாம் அனுப்பி வைத்தோம்.
71:2
71:2 قَالَ يٰقَوْمِ اِنِّىْ لَـكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌۙ‏
قَالَ அவர் கூறினார் يٰقَوْمِ என் மக்களே! اِنِّىْ நிச்சயமாக நான் لَـكُمْ உங்களுக்கு نَذِيْرٌ எச்சரிப்பாளர் مُّبِيْنٌۙ‏ தெளிவான
71:2. “என் சமூகத்தார்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்று கூறினார்.
71:2. (அவரும் அவ்வாறே அவர்களை நோக்கி) கூறினார்: ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.
71:2. அவர் கூறினார்: “என் சமூகத்தினரே! நான் உங்களுக்குத் தெள்ளத் தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடிய தூதர் ஆவேன்.
71:2. “என்னுடைய சமூகத்தினரே! நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவன்” என்று (அவர்களிடம்) கூறினார்.
71:3
71:3 اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاتَّقُوْهُ وَاَطِيْعُوْنِۙ‏
اَنِ اعْبُدُوا அதாவது, நீங்கள் வணங்குங்கள்! اللّٰهَ அல்லாஹ்வை وَاتَّقُوْهُ இன்னும் அவனை அஞ்சுங்கள் وَاَطِيْعُوْنِۙ‏ இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்!
71:3. “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; எனக்கும் கீழ்ப்படியுங்கள்.
71:3. அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கே நீங்கள் பயப்படுங்கள். எனக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடங்கள்.
71:3. (நான் உங்களுக்கு இதனை உணர்த்துகின்றேன்:) அல்லாஹ்வுக்கு அடிபணியுங்கள். அவனுக்கு அஞ்சுங்கள். மேலும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்.
71:3. “அல்லாஹ்வை (அவன் ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள், இன்னும், அவனை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், எனக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடங்கள்”.
71:4
71:4 يَغْفِرْ لَـكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَيُؤَخِّرْكُمْ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى‌ؕ اِنَّ اَجَلَ اللّٰهِ اِذَا جَآءَ لَا يُؤَخَّرُ‌‌ۘ لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏
يَغْفِرْ அவன் மன்னிப்பான் لَـكُمْ உங்களுக்கு مِّنْ ذُنُوْبِكُمْ உங்கள் பாவங்களை وَيُؤَخِّرْكُمْ இன்னும் அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான் اِلٰٓى اَجَلٍ தவணை வரை مُّسَمًّى‌ؕ குறிப்பிட்ட اِنَّ நிச்சயமாக اَجَلَ தவணை اللّٰهِ அல்லாஹ்வின் اِذَا جَآءَ வந்துவிட்டால் لَا يُؤَخَّرُ‌ۘ அது பிற்படுத்தப்படாது لَوْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ நீங்கள் அறிபவர்களாக இருக்க வேண்டுமே!
71:4. “(இவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய பாவங்களை அவன் மன்னிப்பான்; மேலும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவன் உங்களுக்கு அவகாசமளிப்பான்; நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வரும்போது, அது பிற்படுத்தப்படமாட்டாது - (இதை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).
71:4. (அவ்வாறு நீங்கள் நடந்தால், அல்லாஹ்) உங்கள் குற்றங்களை மன்னித்து, குறிப்பிட்ட காலம் வரை உங்களை (அமைதியாக வாழ) விட்டு வைப்பான். நிச்சயமாக (வேதனைக்காகக் குறிப்பிடப்பட்ட) அல்லாஹ்வுடைய தவணை வரும் சமயத்தில், அது ஒரு சிறிதும் பிந்தாது (இதை) நீங்கள் உறுதியாக நம்ப வேண்டாமா?''
71:4. அல்லாஹ் உங்கள் பாவங்களை மன்னிப்பான். மேலும், ஒரு நிர்ணயிக்கப்பட்ட காலம் வரையில் உங்களை விட்டு வைப்பான். திண்ணமாக அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்ட நேரம் வந்துவிட்டால் அது ஒத்தி வைக்கப்பட மாட்டாது. அந்தோ, இதை நீங்கள் அறிந்திருக்க வேண்டுமே!
71:4. “(அவ்வாறு நீங்கள் நடந்தால்) உங்களுடைய குற்றங்களை உங்களுக்கு அவன் மன்னிப்பான், இன்னும், குறிப்பிடப்பட்ட காலம் வரையில் உங்களை (அமைதியாக வாழவிட்டு)ப் பிற்ப்படுத்தி வைப்பான், நிச்சயமாக அல்லாஹ்வுடைய தவணை-அது வந்துவிடுமானால் அது பிற்படுத்தப்படமாட்டாது, (இதனை) நீங்கள் அறிந்து கொண்டவர்களாக இருந்தால்” (என்றும் கூறினார்).
71:5
71:5 قَالَ رَبِّ اِنِّىْ دَعَوْتُ قَوْمِىْ لَيْلًا وَّنَهَارًا ۙ‏
قَالَ அவர் கூறினார் رَبِّ என் இறைவா! اِنِّىْ நிச்சயமாக நான் دَعَوْتُ அழைத்தேன் قَوْمِىْ எனது மக்களை لَيْلًا இரவிலும் وَّنَهَارًا ۙ‏ பகலிலும்
71:5. பின்னர் அவர்: “என் இறைவா! நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்.
71:5. (அவ்வாறு அவர் எவ்வளவோ காலம் கூறியும் அவர்கள் அதை மறுத்து அவரைப் புறக்கணித்து விடவே, அவர் தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் மக்களை இரவு பகலாக அழைத்தேன்.
71:5. அவர் பணிந்து கூறினார்: “என் அதிபதியே! நான் என் சமூகத்தினருக்கு இரவு பகலாக அழைப்பு விடுத்தேன்.
71:5. (அவர் நீண்ட காலம் ஏகத்துவப்பிரச்சாரம் செய்தும் அவரைப் புறக்கணித்து விடவே,) “என் இரட்சகனே! நிச்சயமாக நான் என்னுடைய சமூகத்தாரை (உன் வழியில்) இரவிலும், பகலிலும் அழைத்தேன்” என்று கூறினார்.
71:6
71:6 فَلَمْ يَزِدْهُمْ دُعَآءِىْۤ اِلَّا فِرَارًا‏
فَلَمْ يَزِدْ அதிகப்படுத்தவில்லை هُمْ அவர்களுக்கு دُعَآءِىْۤ எனது அழைப்பு اِلَّا தவிர فِرَارًا‏ விரண்டோடுவதை
71:6. “ஆனால் என் அழைப்பு அவர்கள் (நேர்வழியிலிருந்து) வெருண்டு ஓடுதலை அதிகரித்ததல்லாமல் வேறில்லை.
71:6. வெருண்டோடுவதையே தவிர, (வேறொன்றையும்) என் அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.
71:6. ஆனால், என்னுடைய அழைப்போ விரண்டோடுவதையே அவர்களிடம் அதிகப்படுத்தியது.
71:6. “அப்போது என்னுடைய அழைப்பு, அவர்களுக்கு வெருண்டோடுவதையே அன்றி, (வேறொன்றையும்) அதிகப்படுத்தவில்லை
71:7
71:7 وَاِنِّىْ كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوْۤا اَصَابِعَهُمْ فِىْۤ اٰذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَاَصَرُّوْا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا‌ ۚ‏
وَاِنِّىْ நிச்சயமாக நான் كُلَّمَا دَعَوْتُهُمْ அவர்களை அழைத்த போதெல்லாம் لِتَغْفِرَ நீ மன்னிப்பதற்காக لَهُمْ அவர்களை جَعَلُوْۤا ஆக்கிக் கொண்டனர் اَصَابِعَهُمْ தங்கள் விரல்களை فِىْۤ اٰذَانِهِمْ தங்கள் காதுகளில் وَاسْتَغْشَوْا இன்னும் மூடிக்கொண்டனர் ثِيَابَهُمْ தங்கள் ஆடைகளால் وَاَصَرُّوْا இன்னும் பிடிவாதம் பிடித்தனர் وَاسْتَكْبَرُوا இன்னும் பெருமையடித்தனர் اسْتِكْبَارًا‌ ۚ‏ பெருமையடித்தல்
71:7. “அன்றியும்: நீ அவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதற்காக, (உன் பக்கம்) நிச்சயமாக அவர்களை நான் அழைத்தபோதெல்லாம், தம் காதுகளில் தம் விரல்களை வைத்துக் கொண்டனர்; மேலும், தங்களைத் தம் ஆடைகளைக் கொண்டு மூடிக் கொண்டனர், அன்றியும், அவர்கள் (தம் வழிகேட்டில்) பிடிவாதமாகவும்; பெரும் மமதை பெருமையடித்துக் கொள்வோராகவுமே இருக்கிறார்கள்.
71:7. நீ அவர்களுக்கு மன்னிப்பளிக்க (உன் பக்கம்) நான் அவர்களை அழைத்த போதெல்லாம், தங்கள் காதுகளில் தங்கள் விரல்களைப் புகுத்தி அடைத்துக் கொண்டு, (என்னைப் பார்க்காது) தங்கள் ஆடைகளைக் கொண்டும் தங்களை மறைத்துக் கொண்டார்கள். பெரும் அகங்காரம் கொண்டு, (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தார்கள்.
71:7. மேலும், நீ அவர்களை மன்னிக்க வேண்டும் என்பதற்காக நான் அவர்களை அழைத்த போதெல்லாம் அவர்கள் காதுகளில் விரல்களைத் திணித்துக் கொண்டார்கள். மேலும், தம் துணிகளால் முகத்தை மூடிக்கொண்டார்கள். மேலும், தம்முடைய தவறான நடத்தையில் பிடிவாதமாய் இருந்தார்கள். மிகவும் அகம்பாவம் கொண்டிருந்தார்கள்.
71:7. மேலும், நிச்சயமாக நான்-“அவர்களுக்கு நீ மன்னிப்பளிப்பதற்காக (உன்பால்) நான் அவர்களை அழைத்த பொழுதெல்லாம் (அதைக்கேட்காதிருக்க) தங்களுடைய காதுகளில் தங்களுடைய விரல்களை விட்டுக்கொண்டார்கள், (என்னைப் பார்க்காதிருக்க) தங்கள் ஆடைகளைக் கொண்டு தங்(களின் முகங்க)ளை மூடிக்கொண்டுமிருந்தனர், மேலும், (தங்கள் தவறின் மீதே பிடிவாதமாக) நிலைத்திருந்தனர், பெரும் அகந்தையாகவும் அகந்தை கொண்டனர்.
71:8
71:8 ثُمَّ اِنِّىْ دَعَوْتُهُمْ جِهَارًا ۙ‏
ثُمَّ பிறகு اِنِّىْ நிச்சயமாக நான் دَعَوْتُهُمْ அவர்களை அழைத்தேன் جِهَارًا ۙ‏ உரக்க
71:8. “பின்னர், நிச்சயமாக நான் அவர்களை சப்தமாக அழைத்(தும் போதித்)தேன்.
71:8. பிறகு, நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமிட்டு (அதட்டியும்) அழைத்தேன்.
71:8. மீண்டும் நான் அவர்களை உரக்கக் கூவி அழைத்தேன்.
71:8. “பின்னும், நிச்சயமாக நான் அவர்களைச் சப்தமாக அழைத்தேன்”
71:9
71:9 ثُمَّ اِنِّىْۤ اَعْلَـنْتُ لَهُمْ وَاَسْرَرْتُ لَهُمْ اِسْرَارًا ۙ‏
ثُمَّ பிறகு اِنِّىْۤ நிச்சயமாக நான் اَعْلَـنْتُ வெளிப்படையாகப் பேசினேன் لَهُمْ அவர்களிடம் وَاَسْرَرْتُ இன்னும் இரகசியமாகப் பேசினேன் لَهُمْ அவர்களிடம் اِسْرَارًا ۙ‏ தனியாக, இரகசியமாக பேசுதல்
71:9. “அதன் பின்னர், நிச்சயமாக நான் அவர்களிடம் பகிரங்கமாகவும் பேசினேன்; இரகசியமாக அந்தரங்கத்திலும் பேசினேன்.
71:9. மேலும். நான் அவர்களுக்குப் பகிரங்கமாகவும் கூறினேன்; இரகசியமாகவும் அவர்களுக்குக் கூறினேன்.
71:9. பின் நான் வெளிப்படையாகவும் அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அந்தரங்கமாகவும் விளக்கினேன்.
71:9. “பின்னும் நிச்சயமாக நான் அவர்களுக்கு (அழைப்பை) பகிரங்கப்படுத்தினேன், அவர்களுக்கு (எனது பிரச்சாரத்தை) மறைமுகமாக மறைத்தும் செய்தேன்.
71:10
71:10 فَقُلْتُ اسْتَغْفِرُوْا رَبَّكُمْؕ اِنَّهٗ كَانَ غَفَّارًا ۙ‏
فَقُلْتُ நான் கூறினேன் اسْتَغْفِرُوْا நீங்கள் பாவமன்னிப்புக் கேளுங்கள்! رَبَّكُمْؕ உங்கள் இறைவனிடம் اِنَّهٗ நிச்சயமாக அவன் كَانَ இருக்கின்றான் غَفَّارًا ۙ‏ மகா மன்னிப்பாளனாக
71:10. மேலும், “நீங்கள் உங்களுடைய இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்; நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவன்” என்றுங் கூறினேன்.
71:10. ‘‘உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்'' என்றும் கூறினேன்.
71:10. நான் கூறினேன்: “உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான்.
71:10. ஆகவே, (முந்திய உங்கள் பாவங்களுக்காக) “உங்கள் இரட்சகனிடம் மன்னிப்புத் தேடுங்கள், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான்” என்றும் கூறினேன்.
71:11
71:11 يُّرْسِلِ السَّمَآءَ عَلَيْكُمْ مِّدْرَارًا ۙ‏
يُّرْسِلِ அவன் அனுப்புவான் السَّمَآءَ மழையை عَلَيْكُمْ உங்களுக்கு مِّدْرَارًا ۙ‏ தாரை தாரையாக
71:11. “(அப்படிச் செய்வீர்களாயின்) அவன் உங்கள் மீது தொடர்ந்து மழையை அனுப்புவான்.
71:11. (அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான்.
71:11. அவன் உங்கள் மீது வானத்திலிருந்து நிறைய மழையைப் பொழியச் செய்வான்.
71:11. “(அவ்வாறு செய்வீர்களாயின், தடைப்பட்டிருக்கும்) மழையை உங்களுக்குத் தொடர்ச்சியாக அனுப்புவான்”
71:12
71:12 وَّيُمْدِدْكُمْ بِاَمْوَالٍ وَّبَنِيْنَ وَيَجْعَلْ لَّـكُمْ جَنّٰتٍ وَّيَجْعَلْ لَّـكُمْ اَنْهٰرًا ؕ‏
وَّيُمْدِدْكُمْ இன்னும் உங்களுக்கு உதவுவான் بِاَمْوَالٍ செல்வங்களாலும் وَّبَنِيْنَ ஆண் பிள்ளைகளாலும் وَيَجْعَلْ இன்னும் ஏற்படுத்துவான் لَّـكُمْ உங்களுக்கு جَنّٰتٍ தோட்டங்களை وَّيَجْعَلْ இன்னும் ஏற்படுத்துவான் لَّـكُمْ உங்களுக்கு اَنْهٰرًا ؕ‏ நதிகளை
71:12. “அன்றியும் அவன் உங்களுக்குப் பொருள்களையும், புதல்வர்களையும் கொண்டு உதவி செய்வான்; இன்னும், உங்களுக்காகத் தோட்டங்களை உண்டாக்குவான்; உங்களுக்காக ஆறுகளையும் (பெருக்கெடுத்து ஓடுமாறு) உண்டாக்குவான்.
71:12. பொருள்களையும், ஆண் மக்களையும் கொடுத்து, உங்களுக்கு உதவி புரிவான்; உங்களுக்குத் தோட்டங்களையும் உற்பத்தி செய்து, அவற்றில் நதிகளையும் ஓட வைப்பான்.
71:12. செல்வத்தையும் சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காகத் தோட்டங்களை உருவாக்குவான். உங்களுக்காக ஆறுகளையும் ஓடச் செய்வான்.
71:12. “செல்வங்களையும், ஆண் மக்களையும் (கொடுப்பது) கொண்டு, உங்களுக்கு உதவி புரிவான், உங்களுக்காகத் தோட்டங்களையும் ஆக்குவான், உங்களுக்காக ஆறுகளையும் (அவற்றில்) ஆக்குவான்”
71:13
71:13 مَا لَـكُمْ لَا تَرْجُوْنَ لِلّٰهِ وَقَارًا‌ ۚ‏
مَا لَـكُمْ உங்களுக்கு என்ன? لَا تَرْجُوْنَ நீங்கள் பயப்படுவதில்லை لِلّٰهِ அல்லாஹ்வின் وَقَارًا‌ ۚ‏ கண்ணியத்தை
71:13. “உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை(யும், மேன்மையையும்) நீங்கள் உணராமலிருக்கின்றீர்கள்.
71:13. உங்களுக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் நம்பவில்லை!
71:13. உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? அல்லாஹ்வுக்கு மகத்துவமும் மாண்பும் ஏதேனும் இருக்கிறது என்ற உணர்வே உங்களிடம் இல்லையே!
71:13. “அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் அறிந்து (அவனைப்பயந்து) கொள்ளாமலிருக்க உங்களுக்கென்ன நேர்ந்தது?”
71:14
71:14 وَقَدْ خَلَقَكُمْ اَطْوَارًا‏
وَقَدْ திட்டமாக خَلَقَكُمْ அவன் உங்களை படைத்தான் اَطْوَارًا‏ பல நிலைகளாக
71:14. “நிச்சயமாக அவன் உங்களை பல நிலைகளிலிருந்து படைத்தான்.
71:14. உங்களை விதவிதமாகவும் அவன் படைத்திருக்கிறான்.
71:14. உண்மையில் அவன் உங்களைப் பல நிலைகளாகப் படைத்திருக்கின்றான்.
71:14. பல நிலைகளிலும் உங்களை அவன் நிச்சயமாகப் படைத்தான்.
71:15
71:15 اَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللّٰهُ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا ۙ‏
اَلَمْ تَرَوْا நீங்கள் பார்க்கவில்லையா? كَيْفَ எப்படி خَلَقَ படைத்தான் اللّٰهُ அல்லாஹ் سَبْعَ ஏழு سَمٰوٰتٍ வானங்களை طِبَاقًا ۙ‏ அடுக்கடுக்காக
71:15. “ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படிப் படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா,
71:15. ஏழு வானங்களையும், அடுக்கடுக்காக எவ்வாறு அல்லாஹ் படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?
71:15. அல்லாஹ் எவ்வாறு ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதையும்,
71:15. “ஏழு வானங்களை, அடுக்கடுக்காக அல்லாஹ் எவ்வாறு படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா,”
71:16
71:16 وَّجَعَلَ الْقَمَرَ فِيْهِنَّ نُوْرًا ۙ وَّجَعَلَ الشَّمْسَ سِرَاجًا‏
وَّجَعَلَ இன்னும் அவன் ஆக்கினான் الْقَمَرَ சந்திரனை فِيْهِنَّ அவற்றில் نُوْرًا ۙ ஒளியாக وَّجَعَلَ இன்னும் ஆக்கினான் الشَّمْسَ சூரியனை سِرَاجًا‏ விளக்காக
71:16. “இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கின்றான்.
71:16. அவனே, அவற்றில் சந்திரனைப் பிரதிபலிக்கும் வெளிச்சமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அமைத்தான்.
71:16. அவற்றில் சந்திரனை ஒளியாகவும், சூரியனை விளக்காகவும் அமைத்துள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?
71:16. “இன்னும், அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான்.”
71:17
71:17 وَاللّٰهُ اَنْۢبَتَكُمْ مِّنَ الْاَرْضِ نَبَاتًا ۙ‏
وَاللّٰهُ அல்லாஹ்தான் اَنْۢبَتَكُمْ உங்களை முளைக்க வைத்தான் مِّنَ الْاَرْضِ பூமியில் இருந்து نَبَاتًا ۙ‏ முளைக்க வைத்தல்
71:17. “அல்லாஹ்வே உங்களை பூமியிலிருந்து சிறந்த முறையில் உருவாக்கினான்.
71:17. அல்லாஹ்வே உங்களை (ஒரு செடியைப் போல்) பூமியில் வளரச் செய்தான் (வெளிப்படுத்தினான்).
71:17. மேலும், அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்து வியக்கத்தக்க விதத்தில் முளைக்கச் செய்தான்.
71:17. மேலும், “அல்லாஹ் உங்களை(ப்புற் பூண்டுகளைப்போல்) பூமியின் மண்ணிலிருந்து உற்பத்தி செய்வதாக உற்பத்தி செய்தான்.”
71:18
71:18 ثُمَّ يُعِيْدُكُمْ فِيْهَا وَيُخْرِجُكُمْ اِخْرَاجًا‏
ثُمَّ பிறகு يُعِيْدُكُمْ அவன் உங்களை மீட்பான் فِيْهَا அதில்தான் وَيُخْرِجُكُمْ இன்னும் அவன் உங்களை வெளியேற்றுவான் اِخْرَاجًا‏ வெளியேற்றுதல்
71:18. “பின்னர் அந்த பூமியிலேயே உங்களை மீண்டும் சேர்த்து, மற்றொருமுறை உங்களை (அதிலிருந்து) வெளிப்படுத்துவான்.
71:18. பின்னர், அதில்தான் உங்களை (மரணிக்கவைத்து அதில்) சேர்த்துவிடுவான். (அதிலிருந்தே) மற்றொரு முறையும் உங்களை வெளிப்படுத்துவான்.
71:18. பின்னர், உங்களை இதே பூமிக்குத் திரும்பக் கொண்டு செல்வான். மேலும், அதிலிருந்து திடீரென உங்களை எழுப்பி நிறுத்துவான்.
71:18. “பின்னர் அதில் உங்களை (மரணிக்கச் செய்து) அவன் மீளவைப்பான், மேலும், (அதிலிருந்தே) உங்களை வெளிப்படுத்துவதாக அவன் வெளிப்படுத்துவான்.
71:19
71:19 وَاللّٰهُ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ بِسَاطًا ۙ‏
وَاللّٰهُ அல்லாஹ் جَعَلَ ஆக்கினான் لَـكُمُ உங்களுக்கு الْاَرْضَ பூமியை بِسَاطًا ۙ‏ விரிப்பாக
71:19. “அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.
71:19. அல்லாஹ்தான் உங்களுக்குப் பூமியை விரிப்பாக அமைத்தான்.
71:19. மேலும், அல்லாஹ் பூமியை உங்களுக்காக விரிப்பாக அமைத்தான்;
71:19. “அன்றியும் அல்லாஹ் உங்களுக்குப் பூமியை விரிப்பாக ஆக்கினான்”.
71:20
71:20 لِّـتَسْلُكُوْا مِنْهَا سُبُلًا فِجَاجًا‏
لِّـتَسْلُكُوْا நீங்கள் செல்வதற்காக مِنْهَا அதில் سُبُلًا பல பாதைகளில் فِجَاجًا‏ விசாலமான
71:20. “அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்” (என்றும் போதித்தார்).  
71:20. அதில் (பல பாகங்களுக்கும்) நீங்கள் செல்வதற்காக, விரிவான பாதைகளையும் அமைத்தான்'' (என்றெல்லாம் அவர் தன் மக்களுக்குக் கூறினார்).''
71:20. நீங்கள் அதன் திறந்த பாதைகளில் நடந்து செல்ல வேண்டும் என்பதற்காக!
71:20. “அதில் உள்ள விரிவான பாதைகளில் நீங்கள் செல்லும் பொருட்டு” (என்றெல்லாம் தன் சமூகத்தாரிடம் கூறினார்.)
71:21
71:21 قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِىْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ يَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا‌ ۚ‏
قَالَ கூறினார் نُوْحٌ நூஹ் رَّبِّ என் இறைவா! اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் عَصَوْنِىْ எனக்கு மாறுசெய்தனர் وَاتَّبَعُوْا இன்னும் பின்பற்றினர் مَنْ எவன் لَّمْ அதிகப்படுத்தவில்லையோ يَزِدْهُ அவனுக்கு مَالُهٗ அவனுடைய செல்வமும் وَوَلَدُهٗۤ இன்னும் அவனுடைய பிள்ளையும் اِلَّا خَسَارًا‌ ۚ‏ நஷ்டத்தைத் தவிர
71:21. நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்; அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.
71:21. (பின்னர் நூஹ் நபி தன் இறைவனை நோக்கி) கூறினார்: ‘‘என் இறைவனே! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர். பொருள்களும் சந்ததிகளும் எவர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவர்களையே பின்பற்றுகின்றனர்.
71:21. நூஹ் கூறினார்: “என் அதிபதியே! இவர்கள் என் பேச்சை நிராகரித்து விட்டார்கள். மேலும், இவர்கள் சில (தலைவ)ர்களைப் பின்பற்றியுள்ளார்கள். அந்தத் தலைவர்களுக்குத் தங்கள் செல்வமும் பிள்ளைகளும் அதிக நஷ்டத்தைத் தவிர வேறு எந்தப் பயனையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
71:21. (பின்னும்) நூஹ் கூறினார், “என் இரட்சகனே! நிச்சயமாக அவர்கள் என(து கட்டளை)க்கு மாறு செய்து விட்டனர், அன்றியும், எவருக்கு அவருடைய செல்வமும், அவருடைய மக்களும் நஷ்டத்தைத்தவிர வேறு எதையும் அதிகப்படுத்தவில்லையோ, அவரையே அவர்கள் பின்பற்றினர்”.
71:22
71:22 وَمَكَرُوْا مَكْرًا كُبَّارًا‌ ۚ‏
وَمَكَرُوْا இன்னும் சூழ்ச்சி செய்தார்கள் مَكْرًا சூழ்ச்சி كُبَّارًا‌ ۚ‏ மிகப் பெரிய
71:22. “மேலும் (எனக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சியாகச் சூழ்ச்சி செய்கின்றனர்.”
71:22. பெரும் பெரும் சூழ்ச்சிகளையும் (எனக்கெதிராக) செய்கின்றனர்.
71:22. இவர்கள் பெரியதொரு சூழ்ச்சி வலையை விரித்து வைத்திருக்கின்றார்கள்.
71:22. “மேலும், மிகப் பெரிய சூழ்ச்சியாக அவர்கள் சூழ்ச்சி செய்தனர்”.
71:23
71:23 وَ قَالُوْا لَا تَذَرُنَّ اٰلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَّلَا سُوَاعًا  ۙ وَّ لَا يَغُوْثَ وَيَعُوْقَ وَنَسْرًا‌ ۚ‏
وَ قَالُوْا இன்னும் கூறினார்கள் لَا تَذَرُنَّ நீங்கள் விட்டுவிடாதீர்கள் اٰلِهَتَكُمْ உங்கள் தெய்வங்களை وَلَا تَذَرُنَّ இன்னும் விட்டுவிடாதீர்கள் وَدًّا وَّلَا سُوَاعًا  ۙ வத்து/இன்னும் சுவாஃ وَّ لَا يَغُوْثَ இன்னும் யகூஸ் وَيَعُوْقَ இன்னும் யவூக் وَنَسْرًا‌ ۚ‏ இன்னும் நஸ்ர்
71:23. மேலும் அவர்கள்: “உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்; இன்னும் வத்து, ஸுவாஉ, யகூஸு, யஊக், நஸ்ரு ஆகியவற்றை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் சொல்கின்றனர்.
71:23. (மற்றவர்களை நோக்கி) நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டு விடாதீர்கள். ‘வத்' (என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள். ‘ஸுவாஉ' ‘எகூஸ்' ‘யஊக்' ‘நஸ்ர்' (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டுவிடாதீர்கள்'' என்று கூறுகின்றனர்,
71:23. “உங்களுடைய கடவுள்களை விட்டுவிடாதீர்கள். வத், ஸுவாஉ, யஃகூஸ், யஊஃக் மற்றும் நஸ்ர் ஆகியவற்றை விட்டுவிடாதீர்கள்” என்று இவர்கள் கூறினார்கள்.
71:23. “மேலும், அவர்கள் (தம் சமூகத்தாரிடம்) உங்களுடைய (வணக்கத்திற்குரிய) தெய்வங்களை நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள், வத்து ஸுவாஉ, எகூஸ், யஊக், நஸ்ர், (ஆகிய விக்கிரகங்)களையும் நிச்சயமாக நீங்கள் விட்டுவிடாதீர்கள்” என்றும் கூறினார்கள்.
71:24
71:24 وَقَدْ اَضَلُّوْا كَثِيْرًا‌ ‌ ۚ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا ضَلٰلًا‏
وَقَدْ திட்டமாக اَضَلُّوْا அவர்கள் வழி கெடுத்தனர் كَثِيْرًا‌  ۚ பலரை وَلَا تَزِدِ நீ அதிகப்படுத்தாதே! الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு اِلَّا ضَلٰلًا‏ வழிகேட்டைத் தவிர
71:24. “நிச்சயமாக அவர்கள் அநேகரை வழிகெடுத்துவிட்டனர்; ஆகவே இவ்வநியாயக் காரர்களுக்கு வழி கேட்டைத் தவிர, வேறு எதையும் நீ அதிகப்படுத்தாதே.”
71:24. நிச்சயமாக பலரை வழிகெடுத்து விட்டனர். (ஆகவே, என் இறைவனே!) இந்த அநியாயக்காரர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே!'' (என்றும் பிரார்த்தித்தார்).
71:24. இவர்கள் பலரை வழிகெடுத்திருக்கின்றார்கள். நீயும் இந்தக் கொடுமையாளர்களுக்கு வழிகேட்டைத் தவிர வேறு எதிலும் முன்னேற்றத்தை அளிக்காதே!”
71:24. “நிச்சயமாக அவர்கள் அநேகரை வழி கெடுத்தும் விட்டனர், (ஆகவே, என் இரட்சகனே!) அநியாயக்காரர்களுக்கு வழிக்கேட்டைத் தவிர வேறு எதையும் நீ அதிகப்படுத்தி விடாதே!” (என்றும் பிரார்த்தித்தார்.)
71:25
71:25 مِّمَّا خَطِٓيْئٰتِهِمْ اُغْرِقُوْا فَاُدْخِلُوْا نَارًا  ۙ فَلَمْ يَجِدُوْا لَهُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَنْصَارًا‏
مِّمَّا خَطِٓيْئٰتِهِمْ அவர்களுடைய பாவங்களால் اُغْرِقُوْا அவர்கள் மூழ்கடிக்கப்பட்டார்கள் فَاُدْخِلُوْا பிறகு, நுழைக்கப்பட்டார்கள் نَارًا  ۙ நரகத்தில் فَلَمْ يَجِدُوْا அவர்கள் காணவில்லை لَهُمْ தங்களுக்கு مِّنْ دُوْنِ اللّٰهِ அல்லாஹ்வையன்றி اَنْصَارًا‏ உதவியாளர்களை
71:25. ஆகவே, அவர்கள் தம் பாவங்களினால் மூழ்கடிக்கப்பட்டு, பின்னால் நரக நெருப்பிலும் புகுத்தப்பட்டனர். எனவே, அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் காணவில்லை.
71:25. ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்த பாவத்தின் காரணமாக, (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு, பின்னர் நரகத்திலும் புகுத்தப்பட்டனர். அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவி செய்பவர்களை அவர்கள் காணவில்லை.
71:25. தங்கள் தவறுகளின் காரணத்தால்தான் அவர்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டார்கள்; மேலும், நெருப்பில் வீசி எறியப்பட்டார்கள். பின்பு அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காப்பாற்றி உதவுவோர் எவரையும் அவர்கள் பெற்றிடவில்லை.
71:25. ஆகவே, அவர்களுடைய பாவங்களின் காரணமாக (பெரு வெள்ளத்தில்) அவர்கள் மூழ்கடிக்கப்பட்டு, (பின்னர்) நரகத்திலும் புகுத்தப்பட்டனர், அல்லாஹ்வைத் தவிர அவர்களுக்கு உதவி செய்வோரை அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.
71:26
71:26 وَ قَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى الْاَرْضِ مِنَ الْكٰفِرِيْنَ دَيَّارًا‏
وَ قَالَ கூறினார் نُوْحٌ நூஹ் رَّبِّ என் இறைவா! لَا تَذَرْ நீ விட்டு விடாதே! عَلَى الْاَرْضِ பூமியில் مِنَ الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களில் دَيَّارًا‏ வசிக்கின்ற எவரையும்
71:26. அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே.
71:26. இன்னும், நூஹ் பிரார்தித்தார்: ‘‘என் இறைவனே! பூமியில் இந்நிராகரிப்பவர்களில் ஒருவரையும் நீ வசித்திருக்க விட்டு வைக்காதே!
71:26. மேலும், நூஹ் கூறினார்: “என் அதிபதியே! இந்த நிராகரிப்பாளர்களில் எவரையும் பூமியில் வசிக்க விட்டு வைக்காதே!
71:26. இன்னும், நூஹ் கூறினார், “என் இரட்சகனே! நிராகரிப்போரிலிருந்து பூமியில் வசிக்க ஒருவரையும் நீ விட்டு வைக்காதே!
71:27
71:27 اِنَّكَ اِنْ تَذَرْهُمْ يُضِلُّوْا عِبَادَكَ وَلَا يَلِدُوْۤا اِلَّا فَاجِرًا كَفَّارًا‏
اِنَّكَ நிச்சயமாக நீ اِنْ تَذَرْهُمْ அவர்களை விட்டு விட்டால் يُضِلُّوْا வழிகெடுத்து விடுவார்கள் عِبَادَكَ உனது அடியார்களை وَلَا يَلِدُوْۤا இன்னும் பெற்றெடுக்க மாட்டார்கள் اِلَّا தவிர فَاجِرًا பாவியை كَفَّارًا‏ மிகப் பெரிய நிராகரிப்பாளனை
71:27. “நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால். உன் அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள்; அன்றியும், பாவிகளையும், காஃபிர்களையும் அன்றி அவர்கள் பெற்றெடுக்கமாட்டார்கள்.
71:27. நிச்சயமாக நீ அவர்களை விட்டு வைப்பாயானால், உன் (மற்ற) அடியார்களையும் வழிகெடுத்தே விடுவார்கள். பாவிகளையும் நிராகரிப்பவர்களையும் தவிர, (வேறொரு குழந்தையை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள்.
71:27. நீ இவர்களைவிட்டு வைத்தால் இவர்கள் உன் அடிமைகளை வழிகெடுத்து விடுவார்கள். மேலும் இவர்களின் சந்ததியில் யார் பிறந்தாலும் தீயவனாகவும் நிராகரிப் பாளனாகவும்தான் இருப்பான்.
71:27. “நிச்சயமாக நீ அவர்களை விட்டுவைத்தால் உன்னுடைய (மற்ற) அடியார்களை அவர்கள் வழி கெடுத்துவிடுவார்கள், நிராகரிக்கின்ற பாவியைத் தவிர (வேறு நல்லவர் எவரையும்) அவர்கள் பெற்றெடுக்கவுமாட்டார்கள்” (என்றும்)
71:28
71:28 رَبِّ اغْفِرْلِىْ وَلِـوَالِدَىَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِىَ مُؤْمِنًا وَّلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِؕ وَلَا تَزِدِ الظّٰلِمِيْنَ اِلَّا تَبَارًا‏
رَبِّ என் இறைவா! اغْفِرْلِىْ என்னை(யும்) மன்னிப்பாயாக! وَلِـوَالِدَىَّ என் பெற்றோரையும் وَلِمَنْ دَخَلَ நுழைந்து விட்டவரையும் بَيْتِىَ என் வீட்டில் مُؤْمِنًا நம்பிக்கையாளராக وَّلِلْمُؤْمِنِيْنَ நம்பிக்கை கொண்ட ஆண்களையும் وَالْمُؤْمِنٰتِؕ நம்பிக்கை கொண்ட பெண்களையும் وَلَا تَزِدِ அதிகப்படுத்தாதே! الظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு اِلَّا تَبَارًا‏ அழிவைத் தவிர
71:28. “என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).
71:28. என் இறைவனே! எனக்கும் என் தாய் தந்தைக்கும், நம்பிக்கை கொண்டவராக என் வீட்டில் நுழைந்தவருக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவைத் தவிர நீ அதிகப்படுத்தாதே!''
71:28. என் அதிபதியே! எனக்கும் என் தாய் தந்தையருக்கும், என் வீட்டில் இறைநம்பிக்கை கொண்டவனாக நுழைந்திருக்கும் ஒவ்வொருவனுக்கும், மேலும், நம்பிக்கை கொண்ட ஆண் பெண்கள் அனைவருக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், கொடுமைக்காரர்களுக்கு அதிக அழிவைத் தவிர வேறு எதையும் கொடுக்காதே!”
71:28. “என் இரட்சகனே! எனக்கும், என்னுடைய பெற்றோருக்கும், விசுவாசம் கொண்டவராக என்னுடைய வீட்டில் நுழைந்தவருக்கும் விசுவாசங்கொண்ட ஆண்களுக்கும், விசுவாசங்கொண்ட பெண்களுக்கும் நீ மன்னிப்பளிப்பாயாக! இந்த அநியாயக்காரர்களுக்கு அழிவையே தவிர (வேறு எதையும்) நீ அதிகப்படுத்தாதிருப்பாயாக!” (என்றும் பிரார்த்தித்தார்.)