79. ஸூரத்துந் நாஜிஆத்(பறிப்பவர்கள்)
மக்கீ, வசனங்கள்: 46

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
79:1
79:1 وَالنّٰزِعٰتِ غَرْقًا ۙ‏
وَالنّٰزِعٰتِ பறிப்பவர்கள் மீது சத்தியமாக غَرْقًا ۙ‏ கடுமையாக
79:1. (பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
79:1. (பாவிகளின் உயிர்களைப்) பலமாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!
79:1. ஆழ்ந்து பற்றியிழுக்கின்ற,
79:1. (பாவிகளின் உயிர்களை) பலமாகப் பறிப்பவா்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
79:2
79:2 وَّالنّٰشِطٰتِ نَشْطًا ۙ‏
وَّالنّٰشِطٰتِ கைப்பற்றுவோர் மீது சத்தியமாக نَشْطًا ۙ‏ மென்மையாக
79:2. (நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:2. (நல்லவர்களின் ஆத்மாவை) எளிதாகக் கைப்பற்றுபவர்கள் மீது சத்தியமாக!
79:2. மேலும், மெதுவாக வெளிக்கொணர்கின்ற (வான)வர்கள்மீது சத்தியமாக!
79:2. (நல்லோரின் ஆத்மாவை எளிதாகக்) கைப்பற்றுபவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
79:3
79:3 وَّالسّٰبِحٰتِ سَبْحًا ۙ‏
وَّالسّٰبِحٰتِ நீந்துவோர்மீது சத்தியமாக! سَبْحًا ۙ‏ நீந்துதல்
79:3. வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:3. (ஆகாயத்திலும், கடலிலும்) அதிவேகமாக(ப் பறந்து) நீந்திச் செல்லும் வானவர்கள் மீது சத்தியமாக!
79:3. மேலும், (பேரண்டத்தில்) அதிவேகமாக நீந்தித் திரிகின்ற
79:3. அதிவேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்குகளின் மீது சத்தியமாக-
79:4
79:4 فَالسّٰبِقٰتِ سَبْقًا ۙ‏
فَالسّٰبِقٰتِ முந்துவோர் மீது சத்தியமாக سَبْقًا ۙ‏ முந்துதல்
79:4. முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:4. (இறைவனின் கட்டளையை நிறைவேற்ற) போட்டி போட்டுக்கொண்டு முந்தி செல்பவர்கள் மீதும் சத்தியமாக!
79:4. மேலும், (கட்டளைகளை நிறைவேற்றுவதில்) ஒருவருக்கொருவர் முந்துகின்றவர்கள் மீதும் சத்தியமாக!
79:4. (கைப்பற்றிய நல்லோர்களின் உயிர்களை அல்லாஹ்வின் சன்னிதிக்கு எடுத்துச் செல்லப் போட்டி போட்டுக் கொண்டு முந்திச் செல்வோர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:5
79:5 فَالْمُدَبِّرٰتِ اَمْرًا‌ ۘ‏
فَالْمُدَبِّرٰتِ நிர்வகிப்போர் மீது சத்தியமாக! اَمْرًا‌ ۘ‏ காரியத்தை
79:5. ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:5. எல்லாக் காரியங்களையும் (இறைவனின் கட்டளைப்படி) நிர்வகிக்கின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!
79:5. பிறகு (இறைக்கட்டளைகளுக்கிணங்க) விவகாரங்களை முறைப்படி நிர்வகித்து வருகின்றவர்கள் மீதும் சத்தியமாக!
79:5. சகல காரியங்களையும் (அல்லாஹ்வின் கட்டளைப்படி) நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:6
79:6 يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ ۙ‏
يَوْمَ நாளில் تَرْجُفُ அதிர்ச்சியுறுகின்ற الرَّاجِفَةُ ۙ‏ பூமி
79:6. பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்:
79:6. (கொடிய பூகம்பத்தால் பூமி) பலமாக அதிர்ச்சியுறும் நாளில்,
79:6. எந்த நாளில் பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ
79:6. (முதல் முறை குழல் ஊதப்பட்டபின் பூமியை) கடுமையாக நடுக்கக் கூடியது நடுக்கும் நாளில்-
79:7
79:7 تَتْبَعُهَا الرَّادِفَةُ ؕ‏
تَتْبَعُهَا அதைத் தொடரும் الرَّادِفَةُ ؕ‏ பின்தொடரக்கூடியது
79:7. அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
79:7. (மேலும்) அதைத் தொடர்ந்து (பல பூகம்ப அதிர்ச்சிகள்) வரும் (நாளில் உலகம் முடிவுற்றே தீரும்).
79:7. அதன் பின்னர் இன்னொரு பூகம்பத்தின் உலுக்கல் ஏற்படுமோ
79:7. அதனை அடுத்து வரக்கூடியது (இரண்டாவது முறை குழல் ஊதுவது) தொடரும்.
79:8
79:8 قُلُوْبٌ يَّوْمَٮِٕذٍ وَّاجِفَةٌ ۙ‏
قُلُوْبٌ உள்ளங்கள் يَّوْمَٮِٕذٍ அந்நாளில் وَّاجِفَةٌ ۙ‏ நடுங்கும்
79:8. அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
79:8. அந்நாளில், உள்ளங்களெல்லாம் திடுக்கிட்டு நடுங்கிக் கொண்டிருக்கும்.
79:8. அந்த நாளில் சில இதயங்கள் பயந்து நடுநடுங்கிக் கொண்டிருக்கும்.
79:8. அந்நாளில் இதயங்கள் (திடுக்கிட்டு) கலக்கமுடையவையாக இருக்கும்.
79:9
79:9 اَبْصَارُهَا خَاشِعَةٌ‌ ۘ‏
اَبْصَارُهَا அவற்றின் பார்வைகள் خَاشِعَةٌ‌ ۘ‏ கீழ் நோக்கும்
79:9. அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
79:9. பார்வைகளெல்லாம் (பயத்தால்) கீழ்நோக்கி நிற்கும்.
79:9. அவர்களின் பார்வைகள் அச்சத்தால் கீழே தாழ்ந்துவிட்டிருக்கும்.
79:9. அவைகளின் (அவ்விதயங்களை உடையோரின்) பார்வைகள் (பயத்தால்) கீழ்நோக்கி (தாழ்ந்தவையாக)யிருக்கும்.
79:10
79:10 يَقُوْلُوْنَ ءَاِنَّا لَمَرْدُوْدُوْنَ فِى الْحَـافِرَةِ ؕ‏
يَقُوْلُوْنَ கூறுகிறார்கள் ءَاِنَّا ?/நிச்சயமாக நாம் لَمَرْدُوْدُوْنَ திருப்பப்படுவோமா? فِى الْحَـافِرَةِ ؕ‏ முந்தியநிலைமைக்கு
79:10. “நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?” என்று கூறுகிறார்கள்.
79:10. (இவ்வாறிருக்க, நிராகரிப்பவர்கள் இதை மறுத்து) ‘‘நாம் (இறந்த பின்னர்) மெய்யாகவே நாம் (உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?''
79:10. இந்த மக்கள் கூறுகின்றார்கள்: “நாம் (இறந்த பிறகு) உண்மையில் பழைய நிலைக்குத் திரும்பக் கொண்டு வரப்படு வோமா,
79:10. “நிச்சயமாக நாம் (இறந்த பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோரா? என்று அவர்கள் கேட்கின்றனர்.
79:11
79:11 ءَاِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً ؕ‏
ءَاِذَا كُنَّا நாம் மாறி இருந்தாலுமா? عِظَامًا எலும்புகளாக نَّخِرَةً ؕ‏ உக்கிப்போன
79:11. “மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?”
79:11. (அதுவும்) நாம் உக்கி எலும்பாகப் போனதன் பின்னரா (உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம்?) என்று கூறுகின்றனர்.
79:11. இற்றுப்போன எலும்புகளாய் நாம் ஆனாலுமா?”
79:11. “நாம் உக்கிய எலும்புகளாக ஆகிவிட்ட போதிலுமா? (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவோம்?” (என்று கேட்கின்றனர்)
79:12
79:12 قَالُوْا تِلْكَ اِذًا كَرَّةٌ خَاسِرَةٌ‌ ۘ‏
قَالُوْا கூறுகிறார்கள் تِلْكَ அது اِذًا அவ்வாறாயின் كَرَّةٌ திரும்புதல் خَاسِرَةٌ‌ ۘ‏ நஷ்டமான
79:12. “அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள்.
79:12. ‘‘அவ்வாறாயின், அது பெரும் நஷ்டமான மீட்சிதான் என்றும் அவர்கள் (பரிகாசமாகக்)'' கூறுகின்றனர்.
79:12. இவர்கள் மேலும் கூறலானார்கள்: “அப்பொழுது இது பேரிழப்புக்குரிய திரும்பலாகத்தான் இருக்கும்.”
79:12. “அது அப்போது (பெரும்) நஷ்டமான திரும்புதலாகும்” என்றும் அவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றார்கள்.
79:13
79:13 فَاِنَّمَا هِىَ زَجْرَةٌ وَّاحِدَةٌ ۙ‏
فَاِنَّمَا هِىَ அதுவெல்லாம் زَجْرَةٌ ஓர் அதட்டல்தான் وَّاحِدَةٌ ۙ‏ ஒரே
79:13. ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
79:13. (இது அவர்களுக்கு அசாத்தியமாகத் தோன்றலாம்; எனினும், நமக்கோ) அது ஓர் அதட்டல் (ஒரு உறுத்தல், ஒரு சப்தம்)தான்.
79:13. உண்மையில், இது ஓர் உரத்த அதட்டலாகத்தான் இருக்கும்.
79:13. ஆகவே, அது ஒரே ஒரு (பெரும்) சப்தம்தான்-
79:14
79:14 فَاِذَا هُمْ بِالسَّاهِرَةِ ؕ‏
فَاِذَا هُمْ அப்போது அவர்கள் بِالسَّاهِرَةِ ؕ‏ பூமியின் மேற்பரப்பில்
79:14. அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
79:14. உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்றெழுந்து) வந்து ஒரு திடலில் கூடிவிடுவார்கள்.
79:14. உடனே, இவர்கள் வெட்ட வெளியில் ஆஜராகி இருப்பார்கள்!
79:14. அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) பூமியின் மேல் பரப்பில் இருப்பர்.
79:15
79:15 هَلْ اَتٰٮكَ حَدِيْثُ مُوْسٰى‌ۘ‏
هَلْ اَتٰٮكَ உமக்கு வந்ததா? حَدِيْثُ செய்தி مُوْسٰى‌ۘ‏ மூஸாவுடைய
79:15. (நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
79:15. (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு எட்டியதா?
79:15. மூஸாவின் வரலாறு உமக்குக் கிடைத்ததா?
79:15. (நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
79:16
79:16 اِذْ نَادٰٮهُ رَبُّهٗ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى‌ۚ‏
اِذْ نَادٰٮهُ அவரை அழைத்த சமயத்தை رَبُّهٗ அவருடைய இறைவன் بِالْوَادِ பள்ளத்தாக்கில் الْمُقَدَّسِ பரிசுத்தமான طُوًى‌ۚ‏ துவா
79:16. “துவா” என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
79:16. ‘துவா' என்னும் பரிசுத்தமான ஓடைக்கு அவருடைய இறைவன் அவரை அழைத்ததை நினைவு கூறுங்கள்.
79:16. ‘துவா’ எனும் புனிதப் பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்துக் கூறினான்:
79:16. ‘துவா’ என்னும் பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இரட்சகன் அவரை அழைத்தபோது,
79:17
79:17 اِذْهَبْ اِلٰى فِرْعَوْنَ اِنَّهٗ طَغٰى ۖ‏
اِذْهَبْ செல்வீராக اِلٰى فِرْعَوْنَ ஃபிர்அவ்னிடம் اِنَّهٗ நிச்சயமாக அவன் طَغٰى ۖ‏ வரம்பு மீறினான்
79:17. “நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.”
79:17. ‘‘ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
79:17. “ஃபிர்அவ்னிடம் செல்வீராக! திண்ணமாக, அவன் வரம்பு மீறிவிட்டான்.
79:17. நீர் ஃபிர் அவ்னின் பால் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
79:18
79:18 فَقُلْ هَلْ لَّكَ اِلٰٓى اَنْ تَزَكّٰى ۙ‏
فَقُلْ இன்னும் கூறுவீராக هَلْ لَّكَ உனக்கு விருப்பமா? اِلٰٓى اَنْ تَزَكّٰى ۙ‏ நீ பரிசுத்தமடைவதற்கு
79:18. இன்னும் (ஃபிர்அவ்னிடம்: “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.
79:18. (அவனிடம்) கூறுவீராக! ‘‘(பாவங்களை விட்டும்) நீ பரிசுத்தவானாக ஆக உனக்கு விருப்பம் தானா?
79:18. எனவே, நீர் (அவனிடம்) கூறும்: நீ தூய்மை பெற விரும்புகின்றாயா?
79:18. ஆகவே, நீ பரிசுத்தமடைய (ஈமான் கொள்ள) உனக்கு (விருப்பம்) உண்டா? என்று நீர் கேட்பீராக!
79:19
79:19 وَاَهْدِيَكَ اِلٰى رَبِّكَ فَتَخْشٰى‌ۚ‏
وَاَهْدِيَكَ இன்னும் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்கு اِلٰى பக்கம் رَبِّكَ உன் இறைவன் فَتَخْشٰى‌ۚ‏ ஆகவே நீ பயந்து கொள்வாய்
79:19. “அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்” (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
79:19. (அவ்வாறாயின்) உன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய வழியை நான் உனக்கு அறிவிக்கிறேன். அவனுக்கு நீ பயந்துகொள்'' (இவ்வாறு, மூஸாவுக்கு இறைவன் கட்டளையிட்டான்).
79:19. மேலும், உன் இறைவனின் பக்கம் செல்லும் வழியினை நான் உனக்குக் காண்பிக்கட்டுமா? அதன் மூலம் (அவனைக் குறித்து) உனக்குள் அச்சம் ஏற்படும்!”
79:19. இன்னும், உன் இரட்சகன் பக்கம் (செல்லும்) வழியினை நான் உனக்கு காட்டுகிறேன்; (அதன்) பின்னர் அவனுக்கு நீ பயந்து கொள்வாய் (என்று கூறுவீராக!)
79:20
79:20 فَاَرٰٮهُ الْاٰيَةَ الْكُبْرٰى ۖ‏
فَاَرٰٮهُ ஆகவே அவனுக்குக் காண்பித்தார் الْاٰيَةَ அத்தாட்சியை الْكُبْرٰى ۖ‏ மிகப்பெரிய
79:20. ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
79:20. (மூஸா அவனிடம் சென்று அவ்வாறு கூறிப்) பெரியதொரு அத்தாட்சியையும் அவனுக்குக் காண்பித்தார்.
79:20. பிறகு, (மூஸா ஃபிர்அவ்னிடம் சென்று) அவனுக்குப் பெரும் சான்றினைக் காண்பித்தார்.
79:20. பின்னர், மிகப்பெரும் அத்தாட்சியை அவனுக்கு அவர் காண்பித்தார்.
79:21
79:21 فَكَذَّبَ وَعَصٰى ۖ‏
فَكَذَّبَ ஆனால், அவன் பொய்ப்பித்தான் وَعَصٰى ۖ‏ இன்னும் மாறுசெய்தான்
79:21. ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
79:21. (எனினும்) அவனோ, அதைப் பொய்யாக்கி (அவர் கூறியதற்கு) மாறு செய்தான்.
79:21. ஆனால், அவன் அதனைப் பொய் எனக் கூறினான். மேலும், அவன் ஏற்க மறுத்தான்.
79:21. அப்போது அவன், (மூஸாவையும், அவர் கொண்டு வந்ததையும்) பொய்யாக்கினான்; மேலும் (அவரின் இரட்சகனுக்கு) மாறு செய்தான்.
79:22
79:22 ثُمَّ اَدْبَرَ يَسْعٰىۖ‏
ثُمَّ பிறகு اَدْبَرَ விலகினான் يَسْعٰىۖ‏ முயன்றவனாக
79:22. பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
79:22. பின்னர் (அவரை விட்டும்) விலகி (அவருக்குத் தீங்கிழைக்கவும்) முயற்சி செய்தான்.
79:22. பின்னர் சூழ்ச்சிகள் செய்திடத் திரும்பினான்.
79:22. பின்னர் அவன் பின்வாங்கி (அவருக்கு எதிராகக் குழப்பம் செய்ய) முயற்சித்தான்.
79:23
79:23 فَحَشَرَ فَنَادٰىۖ‏
فَحَشَرَ இன்னும் ஒன்று சேர்த்தான் فَنَادٰىۖ‏ இன்னும் கூவி அழைத்தான்
79:23. அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
79:23. இதற்காக(த் தன் மக்களை) ஒன்று கூட்டி (அவர்களுக்கு) அறிக்கையிட்டான்.
79:23. மேலும், மக்களை ஒன்று திரட்டினான். அவர்களை அழைத்து,
79:23. ஆகவே, அவன் (தன் கூட்டத்தாரை) ஒன்று திரட்டினான், பின்னர் அழைத்தான்.
79:24
79:24 فَقَالَ اَنَا رَبُّكُمُ الْاَعْلٰى ۖ‏
فَقَالَ இன்னும் கூறினான் اَنَا நான்தான் رَبُّكُمُ உங்கள் இறைவன் الْاَعْلٰى ۖ‏ மிக உயர்வான
79:24. “நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.
79:24. (அவர்களை நோக்கி) ‘‘நான்தான் உங்கள் மேலான இறைவன்'' என்று கூறினான்.
79:24. “நான்தான் உங்களின் மாபெரும் இறைவன்” எனக் கூறினான்.
79:24. அப்போது, “நான் தான் உங்களுடைய மிக மேலான இரட்சகன்” என்று (அவர்களிடம்) கூறினான்.
79:25
79:25 فَاَخَذَهُ اللّٰهُ نَڪَالَ الْاٰخِرَةِ وَالْاُوْلٰى ؕ‏
فَاَخَذَهُ ஆகவே அவனைப் பிடித்தான் اللّٰهُ அல்லாஹ் نَڪَالَ தண்டனையைக் கொண்டு الْاٰخِرَةِ மறுமையின் وَالْاُوْلٰى ؕ‏ இன்னும் இம்மை
79:25. இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
79:25. ஆதலால், அல்லாஹ் அவனை இம்மை மறுமையின் வேதனையைக் கொண்டு பிடித்துக் கொண்டான்.
79:25. இறுதியில் அவனை மறுமை மற்றும் இம்மையின் வேதனையைக் கொண்டு அல்லாஹ் பிடித்தான்.
79:25. ஆதலால், அவனை மறுமை மற்றும் இம்மையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் பிடித்துக் கொண்டான்.
79:26
79:26 اِنَّ فِىْ ذٰلِكَ لَعِبْرَةً لِّمَنْ يَّخْشٰىؕ‏
اِنَّ நிச்சயமாக فِىْ ذٰلِكَ இதில் இருக்கிறது لَعِبْرَةً ஒரு படிப்பினை لِّمَنْ يَّخْشٰىؕ‏ பயப்படுகிறவருக்கு
79:26. நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.  
79:26. பயப்படுபவர்களுக்கு மெய்யாகவே இதில் ஒரு நல்ல படிப்பினை இருக்கிறது.
79:26. அஞ்சி வாழும் ஒவ்வொருவருக்கும் உண்மையில் இதில் பெரும் படிப்பினை இருக்கின்றது.
79:26. நிச்சயமாக இதில் (அல்லாஹ்வைப்) பயந்து கொள்கிறவருக்கு ஒரு படிப்பினை இருக்கிறது.
79:27
79:27 ءَاَنْتُمْ اَشَدُّ خَلْقًا اَمِ السَّمَآءُ‌ ؕ بَنٰٮهَا‏
ءَاَنْتُمْ நீங்களா? اَشَدُّ மிகக் கடினமானவர்கள் خَلْقًا படைப்பால் اَمِ அல்லது السَّمَآءُ‌ ؕ வானமா? بَنٰٮهَا‏ அதை அமைத்தான்
79:27. உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
79:27. (மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அவ்வானத்தைப் படைத்தான்.
79:27. உங்களைப் படைப்பது அதிகச் சிரமமான வேலையா? அல்லது வானத்தைப் படைப்பதா?
79:27. படைப்பால் நீங்கள் மிகக் கடினமா(னவர்களா)? அல்லது வானமா? அதனை அவன் படைத்தான்.
79:28
79:28 رَفَعَ سَمْكَهَا فَسَوّٰٮهَا ۙ‏
رَفَعَ உயர்த்தினான் سَمْكَهَا அதன் முகட்டை فَسَوَّٮهَا ۙ‏ இன்னும் அதை ஒழுங்குபடுத்தினான்
79:28. அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
79:28. அவனே அதன் முகட்டை உயர்த்தி, அதை ஒழுங்குபடுத்தினான்.
79:28. அல்லாஹ் அதனை நிர்மாணித்தான். அதன் முகட்டை நன்கு உயர்த்தினான். பிறகு அதைச் சமப்படுத்தினான்.
79:28. அதன் முகட்டை அவன் உயா்த்தினான்; பின்னர் அதைச் சமப்படுத்தினான்.
79:29
79:29 وَ اَغْطَشَ لَيْلَهَا وَاَخْرَجَ ضُحٰٮهَا‏
وَ اَغْطَشَ இன்னும் இருளாக்கினான் لَيْلَهَا அதன் இரவை وَاَخْرَجَ இன்னும் வெளியாக்கினான் ضُحٰٮهَا‏ அதன் பகலை
79:29. அவன்தான் இரவை இருளுடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான்.
79:29. அவனே, அதன் இரவை இருளாக்கி(ச் சூரியனைக் கொண்டு) அதன் பகலை வெளியாக்கி (வெளிச்சமாக்கி)னான்.
79:29. மேலும், அதன் இரவை மூடி, அதன் பகலை வெளிப்படுத்தினான்.
79:29. அவனே அதன் இரவை இருளாக்கி, (சூரியனைக்கொண்டு பிரகாசிக்கும்) அதன் பகலையும் வெளியாக்கினான்.
79:30
79:30 وَالْاَرْضَ بَعْدَ ذٰلِكَ دَحٰٮهَا ؕ‏
وَالْاَرْضَ இன்னும் பூமியை بَعْدَ ذٰلِكَ அதன் பின்னர் دَحٰٮهَا ؕ‏ அதை விரித்தான்
79:30. இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.
79:30. இதற்குப் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
79:30. இதன் பின்னர், பூமியை அவன் விரித்தான்!
79:30. மேலும், பூமியை-அதன்பின் அவன்-அதை (ஒழுங்குபடுத்தி) விரித்தான்.
79:31
79:31 اَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعٰٮهَا‏
اَخْرَجَ வெளியாக்கினான் مِنْهَا அதிலிருந்து مَآءَهَا அதன் நீரை وَمَرْعٰٮهَا‏ இன்னும் அதன் மேய்ச்சலை
79:31. அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
79:31. அவனே அதிலிருந்து நீரையும், மேய்ச்சல் பொருள்களையும் வெளியாக்குகிறான்.
79:31. அதனுள்ளிலிருந்து அதன் தண்ணீரையும் மேய்ச்சலுக்கானவற்றையும் வெளிக்கொணர்ந்தான்.
79:31. அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் (மீதுள்ள பிராணிகளுக்கு) மேய்ச்சல் பொருளையும் அவன் வெளியாக்கினான்.
79:32
79:32 وَالْجِبَالَ اَرْسٰٮهَا ۙ‏
وَالْجِبَالَ இன்னும் மலைகளை اَرْسٰٮهَا ۙ‏ அவற்றை நிறுவினான்
79:32. அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
79:32. மலைகளையும் அவனே (அதில்) உறுதியாக ஊன்றினான்.
79:32. மேலும் (அதில்) மலைகளை ஊன்றி வைத்தான்;
79:32. மலைகளையும்-அவற்றை அவன் (பூமிக்கு முளைகளாக) உறுதிப்படுத்தினான்-
79:33
79:33 مَتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ‏
مَتَاعًا பலன் தருவதற்காக لَّـكُمْ உங்களுக்கும் وَلِاَنْعَامِكُمْؕ‏ இன்னும் உங்கள் கால்நடைகளுக்கும்
79:33. உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
79:33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிக்கக்கூடியவையாக (அவற்றை அதில் அமைத்தான்).
79:33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரப் பொருள்களாய் ஆகும் பொருட்டு!
79:33. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (அவற்றை இவ்வாறு செய்தான்)
79:34
79:34 فَاِذَا جَآءَتِ الطَّآمَّةُ الْكُبْرٰى ۖ‏
فَاِذَا جَآءَتِ ஆகவே, வந்தால் الطَّآمَّةُ பயங்கரமானஅழிவு الْكُبْرٰى ۖ‏ மிகப்பெரிய
79:34. எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
79:34. (மறுமையின்) பெரும் அமளி வந்தால்,
79:34. எனவே, மாபெரும் அமளி தோன்றும்போது,
79:34. எனவே, (இரண்டாவது முறையாக குழல் ஊதப்படுவதான) மாபெரும் அமளி வந்துவிட்டால்-
79:35
79:35 يَوْمَ يَتَذَكَّرُ الْاِنْسَانُ مَا سَعٰىۙ‏
يَوْمَ يَتَذَكَّرُ (அந்)நாளில் நினைத்துப் பார்ப்பான் الْاِنْسَانُ மனிதன் مَا سَعٰىۙ‏ தான் செய்ததை
79:35. அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
79:35. மனிதன் செய்ததெல்லாம் அந்நாளில் அவனுடைய ஞாபகத்திற்கு வந்துவிடும்.
79:35. அன்று மனிதன் தான் செய்த செயல்கள் அனைத்தையும் நினைத்துப் பார்ப்பான்.
79:35. அந்நாளில் மனிதன் (உலகில்) தான் முயன்றவற்றை நினைவுபடுத்திக் கொள்வான்.
79:36
79:36 وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِمَنْ يَّرٰى‏
وَبُرِّزَتِ இன்னும் வெளியாக்கப்படும் الْجَحِيْمُ நரகம் لِمَنْ يَّرٰى‏ காண்பவருக்கு
79:36. அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
79:36. மனிதர்கள் கண் முன் நரகம் கொண்டு வந்து வைக்கப்பட்டு விடும்.
79:36. மேலும், பார்ப்பவர் ஒவ்வொருவர் கண்ணெதிரிலும் நரகம் திறந்து வைக்கப்படும்.
79:36. இன்னும், காண்போருக்கு நரகம் (கண் எதிரில்) வெளிப்படுத்தப்படும்.
79:37
79:37 فَاَمَّا مَنْ طَغٰىۙ‏
فَاَمَّا مَنْ ஆகவே, யார் طَغٰىۙ‏ வரம்பு மீறினானோ
79:37. எனவே, எவன் வரம்பை மீறினானோ-
79:37. எவன் வரம்பு மீறினானோ,
79:37. எவன் வரம்பு மீறியிருந்தானோ
79:37. எனவே, எவர் வரம்பு மீறி விட்டாரோ,
79:38
79:38 وَاٰثَرَ الْحَيٰوةَ الدُّنْيَا ۙ‏
وَاٰثَرَ இன்னும் தேர்ந்தெடுத்தானோ الْحَيٰوةَ الدُّنْيَا ۙ‏ உலக வாழ்க்கை
79:38. இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
79:38. (மறுமையைப் புறக்கணித்து) இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து கொண்டானோ,
79:38. மேலும், உலக வாழ்வுக்கு முன்னுரிமை தந்தானோ
79:38. மேலும், இவ்வுலக வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டாரோ-
79:39
79:39 فَاِنَّ الْجَحِيْمَ هِىَ الْمَاْوٰىؕ‏
فَاِنَّ நிச்சயமாக الْجَحِيْمَ هِىَ நரகம்தான் الْمَاْوٰىؕ‏ தங்குமிடம்
79:39. அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
79:39. அவன் செல்லும் இடம் நிச்சயமாக நரகம்தான்.
79:39. அவனுடைய இருப்பிடம் நரகமாகவே இருக்கும்.
79:39. நிச்சயமாக நரகம், அதுவே! (அவர்) ஒதுங்குமிடமாகும்.
79:40
79:40 وَاَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهٖ وَ نَهَى النَّفْسَ عَنِ الْهَوٰىۙ‏
وَاَمَّا مَنْ ஆகவே யார் خَافَ பயந்தான் مَقَامَ (தான்) நிற்கின்ற நாளை رَبِّهٖ தன் இறைவனுக்கு முன் وَ نَهَى இன்னும் தடுத்தானோ النَّفْسَ ஆன்மாவை عَنِ الْهَوٰىۙ‏ இச்சையை விட்டு
79:40. எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
79:40. எவன் தன் இறைவனின் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் (பற்றிப்) பயந்து, (தப்பான) சரீர இச்சையை விட்டுத் தன்னைத்தடுத்துக் கொண்டானோ,
79:40. மேலும், எவன் தன்னுடைய அதிபதியின் முன்னிலையில் நிற்பது குறித்து அஞ்சினானோ இன்னும், தீய இச்சைகளைவிட்டுத் தனது மனத்தைத் தடுத்திருந்தானோ
79:40. மேலும், எவர் தன் இரட்சகனின் (சன்னிதியை அவன்) முன் நிற்பதைப் பயந்து, மனோ இச்சையைவிட்டு (தன்) ஆத்மாவைத் தடுத்துக் கொண்டாரோ அவர்-
79:41
79:41 فَاِنَّ الْجَـنَّةَ هِىَ الْمَاْوٰىؕ‏
فَاِنَّ நிச்சயமாக الْجَـنَّةَ هِىَ சொர்க்கம்தான் الْمَاْوٰىؕ‏ தங்குமிடம்
79:41. நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
79:41. அவன் செல்லுமிடம் நிச்சயமாக சொர்க்கம்தான்.
79:41. அவனுடைய இருப்பிடம் சுவனமாக இருக்கும்.
79:41. அப்போது நிச்சயமாக சுவனம்_ அதுவே! (அவர்) ஒதுங்குமிடமாகும்.
79:42
79:42 يَسْــٴَــلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰٮهَا ؕ‏
يَسْــٴَــلُوْنَكَ உம்மிடம் கேட்கிறார்கள் عَنِ السَّاعَةِ மறுமையைப் பற்றி اَيَّانَ எப்போது مُرْسٰٮهَا ؕ‏ அது நிகழும்
79:42. (நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
79:42. (நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.
79:42. “அந்த இறுதிநேரம் எப்பொழுது வரும்?” என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்.
79:42. (நபியே!) மறுமையைப் பற்றி – அது எப்பொழுது (வெளிப்பட்டு) நிலைபெறும் என உம்மிடம் அவர்கள் கேட்கின்றனர்.
79:43
79:43 فِيْمَ اَنْتَ مِنْ ذِكْرٰٮهَاؕ‏
فِيْمَ எதில் இருக்கிறீர்? اَنْتَ நீர் مِنْ ذِكْرٰٮهَاؕ‏ அதைக் கூறுவதற்கு
79:43. அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
79:43. (எப்பொழுது வருமென்று) எதற்காக நீர் கூற வேண்டும்?
79:43. அந் நேரத்தைப் பற்றிக் கூறுவது உம்முடைய பணியல்ல!
79:43. அதைப்பற்றிக் கூறுவதற்கு நீர் எதில் இருக்கிறீர்? (அது பற்றிய பதில் உமக்குத் தெரியாது, அல்லாஹ் மட்டுமே அறிவான்).
79:44
79:44 اِلٰى رَبِّكَ مُنْتَهٰٮهَاؕ‏
اِلٰى رَبِّكَ உம் இறைவன் பக்கம் தான் مُنْتَهٰٮهَاؕ‏ அதன் முடிவு (இருக்கிறது)
79:44. அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
79:44. அதன் முடிவெல்லாம், உமது இறைவனிடமே இருக்கிறது.
79:44. அதைப் பற்றிய ஞானமோ அல்லாஹ்விடம் மட்டுமே இருக்கின்றது.
79:44. அதன் முடி(வு பற்றிய அறி)வு உமதிரட்சகனிடமே இருக்கின்றது.
79:45
79:45 اِنَّمَاۤ اَنْتَ مُنْذِرُ مَنْ يَّخْشٰٮهَاؕ‏
اِنَّمَاۤ اَنْتَ நீரெல்லாம் مُنْذِرُ எச்சரிப்பவரே مَنْ يَّخْشٰٮهَاؕ‏ அதைப் பயப்படுகிறவரை
79:45. அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
79:45. அந்நாளைப் பற்றிப் பயப்படக்கூடியவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர வேறில்லை. (அது வரும் காலத்தையும், நேரத்தையும் அறிவிப்பது உமது கடமையல்ல.)
79:45. அந்நேரத்தை அஞ்சும் ஒவ்வொருவருக்கும் நீர் எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவீர்.
79:45. நிச்சயமாக நீர் அதைப் பயப்படக்கூடியவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யக்கூடியவர்தான்.
79:46
79:46 كَاَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوْۤا اِلَّا عَشِيَّةً اَوْ ضُحٰٮهَا‏
كَاَنَّهُمْ போன்றே/நிச்சயமாக அவர்கள் يَوْمَ நாளில் يَرَوْنَهَا அவர்கள் அதைக் காணுகின்ற لَمْ يَلْبَثُوْۤا தங்கவில்லை اِلَّا தவிர عَشِيَّةً ஒரு மாலை اَوْ அல்லது ضُحٰٮهَا‏ அதன் முற்பகல்
79:46. நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.
79:46. அதை அவர்கள் கண்ணால் காணும் நாளில், மாலையிலோ அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமே தவிர (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றும்.
79:46. இவர்கள் அதனைக் கண்டு கொள்ளும் நாளில், ஒரு பிற்பகல் அல்லது முற்பகல் வரையில் மட்டுமே (இவ்வுலகில் அல்லது மரணநிலையில்) தாங்கள் தங்கியிருந்தது போன்று அவர்களுக்குத் தோன்றும்.
79:46. அதனை அவர்கள் (கண்ணால்) காணும் நாளில் மாலையிலோ அல்லது அதன் முற்பகலிலோ (ஒரு சொற்ப நேரமே) தவிர தங்கியிருக்காதது போன்று (அவர்களுக்குத் தோன்றும்).