81. ஸூரத்துத் தக்வீர் (சுருட்டுதல்)
மக்கீ, வசனங்கள்: 29

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
81:1
81:1 اِذَا الشَّمْسُ كُوِّرَتْۙ‏
اِذَا போது الشَّمْسُ சூரியன் كُوِّرَتْۙ‏ மங்க வைக்கப்படும்
81:1. சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-
81:1. (உலக முடிவுக்காகச்) சூரியனின் பிரகாசம் மங்க வைக்கப்படும்போது,
81:1. சூரியன் சுருட்டப்பட்டுவிடும்போது,
81:1. சூரியன் (ஒளி நீக்கப்பட்டுச்) சுருட்டப்பட்டுவிடும்போது-
81:2
81:2 وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது النُّجُوْمُ நட்சத்திரங்கள் انْكَدَرَتْۙ‏ உதிர்ந்துவிடும்
81:2. நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
81:2. நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும்போது,
81:2. மேலும், தாரகைகள் உதிர்ந்து விடும்போது,
81:2. நட்சத்திரங்களும் (ஒளியிழந்து) உதிர்ந்துவிடும்போது-
81:3
81:3 وَاِذَا الْجِبَالُ سُيِّرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْجِبَالُ மலைகள் سُيِّرَتْۙ‏ அகற்றப்படும்
81:3. மலைகள் பெயர்க்கப்படும் போது-
81:3. மலைகள் அதனிடங்களில் இருந்து அகற்றப்படும் போது,
81:3. மேலும், மலைகள் நடத்திச் செல்லப்படும்போது,
81:3. மலைகளும் (பூமியிலிருந்து) பெயர்க்கப்பட்டு விடும்போது-
81:4
81:4 وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْعِشَارُ நிறைமாத ஒட்டகங்கள் عُطِّلَتْۙ‏ கவனிப்பற்று விடப்படும்
81:4. சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
81:4. (இந்த அமளிகளால் பத்துமாத) கர்ப்பமடைந்த ஒட்டகங்கள் (கவனிப்பின்றி) விடப்படும்போது.
81:4. மேலும், பத்து மாத நிறைகர்ப்ப ஒட்டகங்கள் அப்படியே விட்டு விடப்படும்போது,
81:4. பத்துமாத நிறை கர்ப்பமுடைய ஒட்டகங்களும் கவனிப்பாரற்று (அலைய)விடப்படும்போது-
81:5
81:5 وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْوُحُوْشُ காட்டு மிருகங்கள் حُشِرَتْۙ‏ ஒன்று சேர்க்கப்படும்
81:5. காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
81:5. காட்டு மிருகங்கள் (பயந்து ஊர்களில் வந்து) ஒன்றுகூடும்போது.
81:5. மேலும், வன விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது,
81:5. வனவிலங்குகளும் (ஊர்களுக்குள் வந்து) ஒன்று திரட்டப்படும்போது-
81:6
81:6 وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْبِحَارُ கடல்கள் سُجِّرَتْۙ‏ தீ மூட்டப்படும்
81:6. கடல்கள் தீ மூட்டப்படும்போது-
81:6. கடல் நீர் நெருப்பாக மாற்றப்படும்போது. (இவ்வாறு உலகம் முடிவுபெற்று, விசாரணைக் காலம் ஏற்படும்.)
81:6. மேலும், கடல்கள் கொளுத்தப்படும்போது,
81:6. கடல்களும் தீ மூட்டப்படும்போது-
81:7
81:7 وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْۙ‏
وَاِذَا இன்னும் போது النُّفُوْسُ உயிர்கள் زُوِّجَتْۙ‏ இணைக்கப்படும்
81:7. உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
81:7. அப்போது உயிர்கள் உடலுடன் (மீண்டும்) சேர்க்கப்படும்.
81:7. மேலும், உயிர்கள் (உடல்களுடன்) ஒன்றிணைக்கப்படும்போது,
81:7. உயிர்களும் ஒன்று சேர்க்கப்படும்போது-
81:8
81:8 وَاِذَا الْمَوْءٗدَةُ سُٮِٕلَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْمَوْءٗدَةُ புதைக்கப்பட்ட பெண் குழந்தை سُٮِٕلَتْۙ‏ விசாரிக்கப்படும்
81:8. உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
81:8. அப்போது (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தைகளை நோக்கி கேட்கப்படும்,
81:8. மேலும், உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியிடம் கேட்கப்படும்போது,
81:8. உயிருடன் புதைக்கப்ப்டட (பெண் குழந்தையான)வளும் வினவப்படும்போது-
81:9
81:9 بِاَىِّ ذَنْۢبٍ قُتِلَتْ‌ۚ‏
بِاَىِّ ذَنْۢبٍ எந்தக் குற்றத்திற்காக قُتِلَتْ‌ۚ‏ கொல்லப்பட்டாள்
81:9. “எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-
81:9. ‘‘எந்த குற்றத்திற்காக நீங்கள் (உயிருடன் புதைக்கப்பட்டுக்) கொலை செய்யப்பட்டீர்கள்?'' என்று.
81:9. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் என்று
81:9. எக்குற்றத்திற்காக அவள் கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும்போது)-
81:10
81:10 وَاِذَا الصُّحُفُ نُشِرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الصُّحُفُ ஏடுகள் نُشِرَتْۙ‏ விரிக்கப்படும்
81:10. பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
81:10. அப்போது (விசாரணைக்காக மனிதர்களுடைய) ஏடுகள் விரிக்கப்படும்.
81:10. மேலும், வினைச் சுவடிகள் விரிக்கப்படும்போது,
81:10. (விசாரணைக்காக மனிதர்களுடைய) பதிவுப் புத்தகங்களும் விரிக்கப்படும்போது-
81:11
81:11 وَاِذَا السَّمَآءُ كُشِطَتْۙ‏
وَاِذَا இன்னும் போது السَّمَآءُ வானம் كُشِطَتْۙ‏ அகற்றப்படும்
81:11. வானம் அகற்றப்படும் போது-
81:11. அப்போது வானம் (பிளந்து) அகற்றப்பட்டுவிடும்.
81:11. மேலும், வானத் திரை அகற்றப்படும்போது,
81:11. வானமும் (பிளந்து) அகற்றப்படும்போது-
81:12
81:12 وَاِذَا الْجَحِيْمُ سُعِّرَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْجَحِيْمُ நரகம் سُعِّرَتْۙ‏ கடுமையாக எரிக்கப்படும்
81:12. நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
81:12. அப்போது நரகம் எரிக்கப்படும்.
81:12. மேலும், நரகம் எரிக்கப்படும்போது
81:12. நரகமும் கடுமையாக எரிக்கப்படும்போது-
81:13
81:13 وَاِذَا الْجَـنَّةُ اُزْلِفَتْۙ‏
وَاِذَا இன்னும் போது الْجَـنَّةُ சொர்க்கம் اُزْلِفَتْۙ‏ சமீபமாக்கப்படும்
81:13. சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
81:13. அப்போது சொர்க்கம் சமீபமாகக் கொண்டு வரப்படும்.
81:13. மேலும், சுவனம் அருகே கொண்டு வரப்படும்போது,
81:13. சுவனமும் (பயபக்தியுடையோருக்காக அலங்கரிக்கப்பட்டு,) சமீபமாகக் கொண்டு வரப்படும்போது-
81:14
81:14 عَلِمَتْ نَفْسٌ مَّاۤ اَحْضَرَتْؕ‏
عَلِمَتْ அறியும் نَفْسٌ ஓர் ஆன்மா مَّاۤ எதை اَحْضَرَتْؕ‏ தான் கொண்டு வந்தது
81:14. ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
81:14. (அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் (நன்மையோ தீமையோ) தான் செய்து கொண்டு வந்திருப்பதை நன்கறிந்து கொள்ளும்.
81:14. அந்நேரத்தில் ஒவ்வொரு மனிதனும் எதனைக் கொண்டு வந்துள்ளான் என்பதை அறிந்து கொள்வான்.
81:14. ஓவ்வோர் ஆத்மாவும் தான் (உலகில் செய்து) கொண்டு வந்ததை நன்கறிந்து கொள்ளும்.
81:15
81:15 فَلَاۤ اُقْسِمُ بِالْخُنَّسِۙ‏
فَلَاۤ اُقْسِمُ சத்தியம் செய்கிறேன்! بِالْخُنَّسِۙ‏ மறைகின்ற நட்சத்திரங்கள் மீது
81:15. எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
81:15. (மனிதர்களே!) சென்றவழியே மேலும் செல்லும் நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!
81:15. அவ்வாறில்லை! மீண்டும் மீண்டும் திரும்பி வரக்கூடிய தாரகைகள்மீதும்,
81:15. (மனிதர்களே! நட்சத்திரங்களில்) பின் சென்று விலகக்கூடியவற்றைக் கொண்டு நான் சத்தியம் செய்கிறேன்.
81:16
81:16 الْجَوَارِ الْكُنَّسِۙ‏
الْجَوَارِ வேகமாகச் செல்கின்ற நட்சத்திரங்கள் الْكُنَّسِۙ‏ தோன்றுகின்ற
81:16. முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
81:16. தோன்றி மறையும் (வால்) நட்சத்திரங்கள் மீது சத்தியமாக!
81:16. மறையக்கூடிய தாரகைகள் மீதும்,
81:16. (அவை) செல்கின்றவை, மறையக்கூடியவை.
81:17
81:17 وَالَّيْلِ اِذَا عَسْعَسَۙ‏
وَالَّيْلِ இரவின் மீது சத்தியமாக اِذَا عَسْعَسَۙ‏ பின்செல்லும் போது
81:17. பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
81:17. செல்கின்ற இரவின் மீதும் சத்தியமாக!
81:17. விடை பெற்றுச் செல்லும் இரவின் மீதும்,
81:17. இரவின் மீதும் சத்தியமாக அது பின்னோக்கிச் சென்றுவிடும்போது-
81:18
81:18 وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَۙ‏
وَالصُّبْحِ காலைப் பொழுதின் மீது சத்தியமாக اِذَا تَنَفَّسَۙ‏ அது தெளிவாகிவிடும் போது
81:18. மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
81:18. உதயமாகும் காலையின் மீதும் சத்தியமாக!
81:18. புலரும் வைகறையின் மீதும் நான் சத்தியம் செய்கின்றேன்.
81:18. காலையின் மீதும் சத்தியமாக! அது (வெளிப்பட்டு, அதன் ஒளி) தெளிவாகிவிடும்போது-
81:19
81:19 اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۙ‏
اِنَّهٗ நிச்சயாக இது لَقَوْلُ கூற்றாகும் رَسُوْلٍ தூதர் كَرِيْمٍۙ‏ கண்ணியத்திற்குரியவர்
81:19. நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும்.
81:19. நிச்சயமாக (திரு குர்ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரயீல் என்னும்) ஒரு (வானவத்) தூதர் மூலம் கூறப்பட்டதாகும்.
81:19. உண்மையில், இது கண்ணியமிக்க தூதர் ஒருவரின் வாக்காகும்.
81:19. நிச்சயமாக (குர் ஆன் என்னும்) இது மிக்க கண்ணியமுள்ள (ஜிப்ரீல் என்னும்) ஒரு தூதரின் (மூலம் அனுப்பப்பட்ட) கூற்றாகும்.
81:20
81:20 ذِىْ قُوَّةٍ عِنْدَ ذِى الْعَرْشِ مَكِيْنٍۙ‏
ذِىْ قُوَّةٍ பலமுடையவர் عِنْدَ ذِى الْعَرْشِ அர்ஷுடையவனிடம் مَكِيْنٍۙ‏ பதவியாளர்
81:20. (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
81:20. அவர் மிக்க பலவான். அவருக்கு அர்ஷுடையவனிடத்தில் பெரும் பதவியுண்டு.
81:20. அவர் வலிமையுடையவர்; அர்ஷுக்குரியவனிடம் உயர் மதிப்பு பெற்றவர்.
81:20. அவர் மிக்க சக்தியுடையவர்; அர்ஷுக்குரியவனிடம் பெரும் பதவியுடையவர்
81:21
81:21 مُّطَاعٍ ثَمَّ اَمِيْنٍؕ‏
مُّطَاعٍ கீழ்ப்படியப்படுகிறவர் ثَمَّ அங்கு اَمِيْنٍؕ‏ நம்பிக்கைக்குரியவர்
81:21. (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
81:21. (அவர் அவ்விடத்திலுள்ள வானவர்களின்) தலைவர்; மிக்க நம்பிக்கையுடையவர்.
81:21. அங்கு அவருடைய கட்டளை ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அவர் நம்பிக்கைக்குரியவராயும் இருக்கின்றார்.
81:21. (வானுலகமான) அங்கு (மலக்குகளால்) கீழ்ப்படியப்படுபவர்; மிக்க நம்பிக்கைக்குரியவர்.
81:22
81:22 وَ مَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍ‌ۚ‏
وَ مَا صَاحِبُكُمْ இன்னும் உங்கள் தோழர் இல்லை بِمَجْنُوْنٍ‌ۚ‏ பைத்தியக்காரராக
81:22. மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
81:22. (மக்காவாசிகளே! நம் தூதராகிய) உங்கள் தோழர் பைத்தியக்காரரல்ல.
81:22. மேலும், (மக்காவாசிகளே!) உங்கள் நண்பர் பைத்தியக்காரர் அல்லர்.
81:22. (மக்காவாசிகளே! நம்முடைய தூதராகிய) உங்களுடைய தோழர் பைத்தியக்காரருமல்லர்.
81:23
81:23 وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِيْنِ‌ۚ‏
وَلَقَدْ இன்னும் திட்டவட்டமாக رَاٰهُ அவர் அவரைக் கண்டார் بِالْاُفُقِ கோடியில் الْمُبِيْنِ‌ۚ‏ தெளிவான
81:23. அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
81:23. நிச்சயமாக அவர் (ஜிப்ரயீலை) தெளிவான வானத்தின் கோடியில் மெய்யாகவே கண்டார்.
81:23. திண்ணமாக, அவர் அந்தத் தூதரை தெளிவான அடிவானத்தில் கண்டார்.
81:23. மேலும், திட்டமாக (ஜிப்ரீலாகிய) அவரைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்.
81:24
81:24 وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍ‌ۚ‏
وَمَا هُوَ இன்னும் அவர் இல்லை عَلَى الْغَيْبِ மறைவானவற்றில் بِضَنِيْنٍ‌ۚ‏ கஞ்சனாக
81:24. மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
81:24. (அச்சமயம் அவர் கண்ட) மறைவானவற்றை (அறிவிப்பதில்) கஞ்சத்தனம் செய்பவரல்ல.
81:24. மேலும், அவர் மறைவான உண்மைகள் (எனும் இந்த அறிவை மக்களிடம் எடுத்துக்கூறும்) விஷயத்தில் கஞ்சர் அல்லர்.
81:24. அவர், (அவருக்கு வானிலிருந்து அறிவிக்கப்படும்) மறைவானவற்றின் மீது உலோபத்தனம் செய்பவருமல்லர்.
81:25
81:25 وَمَا هُوَ بِقَوْلِ شَيْطٰنٍ رَّجِيْمٍۙ‏
وَمَا هُوَ இன்னும் அது இல்லை بِقَوْلِ கூற்றாக شَيْطٰنٍ ஷைத்தானின் رَّجِيْمٍۙ‏ எறியப்பட்ட
81:25. அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
81:25. இன்னும், இது வெருட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லுமல்ல.
81:25. மேலும், இது விரட்டியடிக்கப்பட்ட ஷைத்தானின் சொல்லும் அன்று.
81:25. இது விரட்டப்பட்ட ஷைத்தானின் சொல்லும் அல்ல.
81:26
81:26 فَاَيْنَ تَذْهَبُوْنَؕ‏
فَاَيْنَ ஆகவே எங்கே? تَذْهَبُوْنَؕ‏ நீங்கள் செல்கிறீர்கள்
81:26. எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
81:26. ஆகவே, (இதைவிட்டு) நீங்கள் எங்கு செல்லுகிறீர்கள்?
81:26. பின்னர், நீங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றீர்கள்?
81:26. ஆகவே, (இதனை ஒதுக்கிவிட்டு) நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?
81:27
81:27 اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَۙ‏
اِنْ هُوَ அது இல்லை اِلَّا தவிர ذِكْرٌ ஓர் அறிவுரையாகவே لِّلْعٰلَمِيْنَۙ‏ அகிலத்தார்களுக்கு
81:27. இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
81:27. இது உலகத்தார் அனைவருக்கும் ஒரு நல்லுபதேசமே தவிர வேறில்லை.
81:27. இதுவோ அனைத்துலக மக்களுக்கும் உரிய ஓர் அறிவுரையாகும்;
81:27. இது அகிலத்தார்க்கெல்லாம் உபதேசமேயன்றி வேறில்லை.
81:28
81:28 لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ يَّسْتَقِيْمَؕ‏
لِمَنْ شَآءَ நாடியவருக்கு مِنْكُمْ உங்களில் اَنْ يَّسْتَقِيْمَؕ‏ நேர்வழி நடக்க
81:28. உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
81:28. உங்களில் எவர் நேரான பாதையில் செல்ல விரும்புகிறாரோ அவருக்கு (இது பயனளிக்கும்).
81:28. உங்களில், நேர்வழியில் நடந்திட விரும்பும் ஒவ்வொருவருக்கும் உரியது.
81:28. உங்களில் (நேர் வழியில்) நிலைத்திருக்க நாடுகிறவருக்கு (இது ஒரு அறிவுரையாகும்.)
81:29
81:29 وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏
وَمَا تَشَآءُوْنَ இன்னும் நாடமாட்டீர்கள் اِلَّاۤ தவிர اَنْ يَّشَآءَ நாடினால் اللّٰهُ அல்லாஹ் رَبُّ இறைவனான الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களின்
81:29. ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.
81:29. எனினும், உலகத்தாரின் இறைவனாகிய அல்லாஹ் நாடினால் தவிர, நீங்கள் (நல்லுணர்ச்சி பெற) விரும்பமாட்டீர்கள்.
81:29. மேலும், நீங்கள் நாடுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை, பிரபஞ்சம் அனைத்திற்கும் அதிபதியான அல்லாஹ் நாடாத வரையில்!
81:29. இன்னும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் (நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள்.