86. ஸூரத்துத் தாரிஃக்(விடிவெள்ளி)
மக்கீ, வசனங்கள்: 17

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
86:1
86:1 وَالسَّمَآءِ وَالطَّارِقِۙ‏
وَالسَّمَآءِ வானத்தின் மீது சத்தியமாக وَالطَّارِقِۙ‏ ‘தாரிக்’கின் மீது சத்தியமாக
86:1. வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீதும் சத்தியமாக
86:1. வானத்தின் மீதும், (இரவில்) உதயமாகக்கூடியதின் மீதும் சத்தியமாக!
86:1. வானத்தின் மீது சத்தியமாக! மேலும், இரவில் தோன்றக்கூடியதன் மீதும் சத்தியமாக!
86:1. வானத்தின் மீதும், “தாரிக்”கின் மீதும் சத்தியமாக.
86:2
86:2 وَمَاۤ اَدْرٰٮكَ مَا الطَّارِقُۙ‏
وَمَاۤ இன்னும் எது اَدْرٰٮكَ உமக்கு அறிவித்தது مَا என்ன(வென்று) الطَّارِقُۙ‏ தாரிக்
86:2. தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
86:2. (நபியே!) உதயமாகக்கூடியது என்னவென்று நீர் அறிவீரா!
86:2. இரவில் தோன்றக்கூடியது எது என்று உமக்குத் தெரியுமா, என்ன?
86:2. “தாரிக்”, என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
86:3
86:3 النَّجْمُ الثَّاقِبُۙ‏
النَّجْمُ நட்சத்திரம் الثَّاقِبُۙ‏ மின்னக்கூடிய
86:3. அது இலங்கும் ஒரு நட்சத்திரம்.
86:3. (இதுதான்) இரவெல்லாம் சுடரிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற நட்சத்திரம்.
86:3. அது ஓர் ஒளிரும் தாரகை.
86:3. (அதுதான்) பிரகாசித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரம்.
86:4
86:4 اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌؕ‏
اِنْ இல்லை كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆன்மாவும் لَّمَّا தவிர عَلَيْهَا அதன் மீது حَافِظٌؕ‏ ஒரு காவலர்
86:4. ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
86:4. ஒவ்வொரு மனிதனிடமும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) கண்காணிக்கக் கூடிய ஒரு (வான)வர் இல்லாமலில்லை.
86:4. பாதுகாப்பாளன் இல்லாத எந்த ஓர் உயிருமில்லை.
86:4. ஓவ்வொரு ஆத்மாவுக்கும் (நம்மால் ஏற்படுத்தப்பட்ட) பாதுகாப்பாளர் ஒருவா் அதன் மீதில்லாமலில்லை.
86:5
86:5 فَلْيَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَؕ‏
فَلْيَنْظُرِ ஆகவே பார்க்கட்டும் الْاِنْسَانُ மனிதன் مِمَّ எதிலிருந்து خُلِقَؕ‏ படைக்கப்பட்டான்
86:5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதை கவனிக்கட்டும்.
86:5. ஆகவே, மனிதன், தான் எதனால் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை கவனிக்கவும்.
86:5. பிறகு, மனிதன் தான் எப்பொருளிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றான் என்பதையாவது சற்று கவனித்துப் பார்க்கட்டுமே!
86:5. ஆகவே, மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கின்றானென்பதை அவன் (கவனித்துப்)பார்க்கவும்.
86:6
86:6 خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍۙ‏
خُلِقَ படைக்கப்பட்டான் مِنْ مَّآءٍ தண்ணீரிலிருந்து دَافِقٍۙ‏ வேகமாக ஊற்றப்படக்கூடிய
86:6. குதித்து வெளிப்படும் (ஒரு துளி) நீரினால் படைக்கப்பட்டான்.
86:6. குதித்து வெளிப்படும் ஒரு துளித் தண்ணீரைக் கொண்டே படைக்கப்பட்டான்.
86:6. பீறிட்டுப் பாயும் நீரிலிருந்து படைக்கப்பட்டுள்ளான்!
86:6. குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்படடான்.
86:7
86:7 يَّخْرُجُ مِنْۢ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَآٮِٕبِؕ‏
يَّخْرُجُ அது வெளியேறுகிறது مِنْۢ بَيْنِ மத்தியிலிருந்து الصُّلْبِ முதுகந்தண்டுக்கும் وَالتَّرَآٮِٕبِؕ‏ நெஞ்செலும்புகளுக்கும்
86:7. முதுகந் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.
86:7. அது, முதுகந்தண்டுக்கும் நெஞ்சுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.
86:7. அது, முதுகெலும்புக்கும், நெஞ்செலும்புக்கும் இடையிலிருந்து வெளியாகின்றது.
86:7. அது (ஆணிண்) முதுகந்தண்டிற்கும் (பெண்ணின் மார்பகங்களுக்கு மேல்) நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகின்றது.
86:8
86:8 اِنَّهٗ عَلٰى رَجْعِهٖ لَقَادِرٌؕ‏
اِنَّهٗ நிச்சயமாக அவன் عَلٰى رَجْعِهٖ அவனை மீட்பதற்கு لَقَادِرٌؕ‏ ஆற்றல் மிக்கவனே
86:8. இறைவன் (மனிதன் இறந்த பின் அவனை உயிர்ப்பித்து) மீட்டும் சக்தியுடையவன்.
86:8. (இவ்வாறு படைக்கின்ற) அவன் (மனிதன் இறந்தபின் உயிர் கொடுத்து) அவனை மீளவைக்கவும் நிச்சயமாக ஆற்றலுடையவன்ன!
86:8. திண்ணமாக, அவன் (அந்தப் படைப்பாளன்) மீண்டும் அவனைப் படைப்பதற்கு ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
86:8. நிச்சயமாக அவன், அவனை மீளவைப்பதின் மீது ஆற்றலுடையோன்.
86:9
86:9 يَوْمَ تُبْلَى السَّرَآٮِٕرُۙ‏
يَوْمَ நாளில் تُبْلَى சோதிக்கப்படுகின்ற السَّرَآٮِٕرُۙ‏ இரகசியங்கள்
86:9. இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில்.
86:9. என்றைய தினம் எல்லா மர்மங்களும் வெளிப்பட்டுவிடுமோ,
86:9. எந்நாளில் மறைவான இரகசியங்கள் சோதனை இடப்படுமோ அந்நாளில்
86:9. சகல மர்மங்களும் வெளிப்பட்டுவிடும் நாளில்-
86:10
86:10 فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍؕ‏
فَمَا ஆகவே இல்லை لَهٗ அவனுக்கு مِنْ قُوَّةٍ எந்த சக்தியும் وَّلَا نَاصِرٍؕ‏ இன்னும் எந்த உதவியாளரும் இல்லை
86:10. மனிதனுக்கு எந்த பலமும் இராது; (அவனுக்கு) உதவி செய்பவனும் இல்லை.
86:10. (அன்றைய தினம்) மனிதனுக்கு ஒரு சக்தியும் இருக்காது. உதவி செய்பவனும் இருக்க மாட்டான்.
86:10. மனிதனிடம் எந்த சுய வலிமையும் இராது; அவனுக்குத் துணை புரிபவர் எவரும் இருக்கமாட்டார்.
86:10. அவனுக்கு யாதொரு சக்தியுமிராது, (அவனுக்கு) உதவி செய்பவரும் இருக்கமாட்டார்.
86:11
86:11 وَالسَّمَآءِ ذَاتِ الرَّجْعِۙ‏
وَالسَّمَآءِ வானத்தின் மீது சத்தியமாக ذَاتِ الرَّجْعِۙ‏ மழைபொழியும்
86:11. (திரும்பத் திரும்பப்) பொழியும் மழையை உடைய வானத்தின் மீது சத்தியமாக,
86:11. மழை பொழியும் வானத்தின் மீது சத்தியமாக!,
86:11. மழையைப் பொழிகின்ற வானத்தின் மீது சத்தியமாக!
86:11. (திருமபத் திரும்ப) மழை பொழிதலையுடைய வானத்தின் மீது சத்தியமாக,
86:12
86:12 وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِۙ‏
وَالْاَرْضِ பூமியின் மீது சத்தியமாக ذَاتِ الصَّدْعِۙ‏ தாவரங்களை முளைப்பிக்கும்
86:12. (தாவரங்கள் முளைப்பதற்குப்) பிளவு படும் பூமியின் மீதும் சத்தியமாக,
86:12. (புற்பூண்டுகள் முளைக்க) வெடிக்கும் பூமியின் மீதும் சத்தியமாக!
86:12. மேலும் (தாவரங்கள் முளைக்கின்ற போது) பிளந்துவிடுகின்ற பூமியின் மீது சத்தியமாக!
86:12. (தாவர வர்க்கங்கள் முளைக்க) வெடிப்பையுடைய பூமியின் மீதும் சத்தியமாக,
86:13
86:13 اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌۙ‏
اِنَّهٗ நிச்சயமாக இது لَقَوْلٌ கூற்றுதான் فَصْلٌۙ‏ பிரித்தறிவிக்கக்கூடிய
86:13. நிச்சயமாக இது (குர்ஆன் சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்து அறிவிக்கக்கூடிய வாக்காகும்.
86:13. மெய்யாகவே இது (நன்மை தீமைகளைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்.
86:13. திண்ணமாக, இது தீர்க்கமான சொல்லே
86:13. நிச்சயமாக இது (சத்திய அசத்தியத்தைப்) பிரித்தறிவிக்கக்கூடிய சொல்லாகும்.
86:14
86:14 وَّمَا هُوَ بِالْهَزْلِؕ‏
وَّمَا هُوَ இன்னும் இது இல்லை بِالْهَزْلِؕ‏ விளையாட்டாக
86:14. அன்றியும், இது வீணான (வார்த்தைகளைக் கொண்ட)து அல்ல.
86:14. இது வீண் பரிகாசமா(ன வார்த்தைய)ல்ல.
86:14. தவிர கேலியோ விளையாட்டோ அல்ல!
86:14. இன்னும், இது (வீண்) பரிகாசமன்று.
86:15
86:15 اِنَّهُمْ يَكِيْدُوْنَ كَيْدًا ۙ‏
اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் يَكِيْدُوْنَ சூழ்ச்சி செய்கிறார்கள் كَيْدًا ۙ‏ சூழ்ச்சிதான்
86:15. நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
86:15. (நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்கிறார்கள்.
86:15. (மக்காவின் இறைநிராகரிப்பாளர்களான) இவர்கள் சில சூழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
86:15. (நபியே!) நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கின்றார்கள்.
86:16
86:16 وَّاَكِيْدُ كَيْدًا ۚۖ‏
وَّاَكِيْدُ இன்னும் சூழ்ச்சி செய்கிறேன் كَيْدًا ۚۖ‏ சூழ்ச்சிதான்
86:16. நானும் (அவர்களுக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறேன்.
86:16. நானும் (அவர்களுக்கு விரோதமாக) ஒரு சூழ்ச்சி செய்வேன்.
86:16. நானும் ஒரு சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றேன்.
86:16. நானும் (அவர்களுக்கெதிராக அதை முறியடிக்க) ஒரு சூழ்ச்சி செய்வேன்.
86:17
86:17 فَمَهِّلِ الْكٰفِرِيْنَ اَمْهِلْهُمْ رُوَيْدًا‏
فَمَهِّلِ ஆகவே அவகாசமளிப்பீராக الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு اَمْهِلْهُمْ அவர்களுக்கு அவகாசம் அளிப்பீராக رُوَيْدًا‏ கொஞ்சம்
86:17. எனவே, காஃபிர்களுக்கு நீர் அவகாசமளிப்பீராக; சொற்பமாக அவகாசம் அளிப்பீராக.
86:17. ஆகவே, இந்நிராகரிப்பவர்களுக்கு (அது வரை) நீர் அவகாசமளிப்பீராக. (அதிகமல்ல;) ஒரு சொற்ப அவகாசம் அவர்களுக்கு அளிப்பீராக.
86:17. எனவே (நபியே!) விட்டுவிடுவீராக, இந்நிராகரிப்பாளர்களை! சொற்ப காலம் (அவர்களுடைய நிலையிலே) அவர்களை விட்டுவிடுவீராக!
86:17. ஆகவே, நிராகரிப்போருக்கு நீர் அவகாசமளிப்பீராக! சொற்பமாக அவர்களுக்கு அவகாசமளிப்பீராக!