தேடல்


4:157
4:157 وَّقَوْلِهِمْ اِنَّا قَتَلْنَا الْمَسِيْحَ عِيْسَى ابْنَ مَرْيَمَ رَسُوْلَ اللّٰهِ‌ ۚ وَمَا قَتَلُوْهُ وَمَا صَلَبُوْهُ وَلٰـكِنْ شُبِّهَ لَهُمْ‌ ؕ وَاِنَّ الَّذِيْنَ اخْتَلَـفُوْا فِيْهِ لَفِىْ شَكٍّ مِّنْهُ‌ ؕ مَا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ اِلَّا اتِّبَاعَ الظَّنِّ‌ ۚ وَمَا قَتَلُوْهُ يَقِيْنًا ۢ ۙ‏
وَّقَوْلِهِمْ இன்னும் அவர்கள் கூறியதாலும் اِنَّا நிச்சயமாக நாம் قَتَلْنَا கொன்றோம் الْمَسِيْحَ மஸீஹை عِيْسَى ஈஸா ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய رَسُوْلَ தூதர் اللّٰهِ‌ ۚ அல்லாஹ்வின் وَمَا இல்லை قَتَلُوْهُ அவர்கள் அவரை கொன்றார்கள் وَمَا இன்னும் இல்லை صَلَبُوْهُ அவரை அவர்கள் சிலுவையில் அறைய وَلٰـكِنْ எனினும் شُبِّهَ தோற்றமாக்கப்பட்டான் لَهُمْ‌ ؕ அவர்களுக்கு وَاِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اخْتَلَـفُوْا முரண்பட்டனர் فِيْهِ அவர் விஷயத்தில் لَفِىْ شَكٍّ சந்தேகத்தில்தான் مِّنْهُ‌ ؕ அதில் مَا لَهُمْ அவர்களுக்கு இல்லை بِهٖ அதில் مِنْ عِلْمٍ ஓர் அறிவும் اِلَّا தவிர اتِّبَاعَ பின்பற்றுவது الظَّنِّ‌ ۚ சந்தேகத்தை وَمَا இன்னும் இல்லை قَتَلُوْهُ அவர்கள் அவரை கொல்ல يَقِيْنًا ۢ ۙ‏ உறுதியாக
4:157. இன்னும், “நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்” என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்; மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.
4:159
4:159 وَاِنْ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اِلَّا لَيُـؤْمِنَنَّ بِهٖ قَبْلَ مَوْتِهٖ‌ ۚ وَيَوْمَ الْقِيٰمَةِ يَكُوْنُ عَلَيْهِمْ شَهِيْدًا‌ ۚ‏
وَاِنْ இல்லை (இருக்கமாட்டார்) مِّنْ اَهْلِ الْكِتٰبِ வேதக்காரர்களில் எவரும் اِلَّا தவிர لَيُـؤْمِنَنَّ நிச்சயமாக நம்பிக்கை கொள்வார் بِهٖ அவரை قَبْلَ முன்னர் مَوْتِهٖ‌ ۚ அவர் இறப்பதற்கு وَيَوْمَ الْقِيٰمَةِ இன்னும் மறுமை நாளில் يَكُوْنُ இருப்பார் عَلَيْهِمْ இவர்களுக்கு எதிராக شَهِيْدًا‌ ۚ‏ சாட்சி கூறுபவராக
4:159. வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை; ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்.
4:163
4:163 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ‌ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ‌ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا‌ ۚ‏
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு كَمَاۤ போன்றே اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى نُوْحٍ நூஹுக்கு وَّالنَّبِيّٖنَ இன்னும் நபிமார்களுக்கு مِنْۢ بَعْدِهٖ‌ ۚ அவருக்குப் பின்னர் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلٰٓى اِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَعِيْسٰى இன்னும் ஈஸா وَاَيُّوْبَ இன்னும் அய்யூப் وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَهٰرُوْنَ இன்னும் ஹாரூன் وَسُلَيْمٰنَ‌ ۚ இன்னும் ஸுலைமான் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا‌ ஸபூரை
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம்.
4:171
4:171 يٰۤـاَهْلَ الْكِتٰبِ لَا تَغْلُوْا فِىْ دِيْـنِكُمْ وَلَا تَقُوْلُوْا عَلَى اللّٰهِ اِلَّا الْحَـقَّ‌ ؕ اِنَّمَا الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ رَسُوْلُ اللّٰهِ وَكَلِمَتُهٗ‌ ۚ اَ لْقٰٮهَاۤ اِلٰى مَرْيَمَ وَرُوْحٌ مِّنْهُ‌ فَاٰمِنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ‌ ۚ وَلَا تَقُوْلُوْا ثَلٰثَةٌ‌ ؕ اِنْتَهُوْا خَيْرًا لَّـكُمْ‌ ؕ اِنَّمَا اللّٰهُ اِلٰـهٌ وَّاحِدٌ‌ ؕ سُبْحٰنَهٗۤ اَنْ يَّكُوْنَ لَهٗ وَلَدٌ‌ ۘ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ‌ؕ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا‏
يٰۤـاَهْلَ الْكِتٰبِ வேதக்காரர்களே لَا تَغْلُوْا அளவு கடக்காதீர் فِىْ دِيْـنِكُمْ உங்கள் மார்க்கத்தில் وَلَا تَقُوْلُوْا இன்னும் கூறாதீர்கள் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது اِلَّا الْحَـقَّ‌ ؕ உண்மையைத் தவிர اِنَّمَا எல்லாம் الْمَسِيْحُ மஸீஹ் عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் رَسُوْلُ தூதர் اللّٰهِ அல்லாஹ்வுடைய وَكَلِمَتُهٗ‌ ۚ இன்னும் அவனுடைய வார்த்தை اَ لْقٰٮهَاۤ சேர்ப்பித்தான்/அதை اِلٰى مَرْيَمَ மர்யமின் பக்கம் وَرُوْحٌ இன்னும் உயிர் مِّنْهُ‌ அவன் புறத்திலிருந்து فَاٰمِنُوْا ஆகவே நம்பிக்கை கொள்ளுங்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَرُسُلِهٖ‌ ۚ இன்னும் அவனுடைய தூதர்களை وَلَا تَقُوْلُوْا இன்னும் கூறாதீர்கள் ثَلٰثَةٌ‌ ؕ மூவர் اِنْتَهُوْا விலகுங்கள் خَيْرًا மிக நன்று لَّـكُمْ‌ ؕ உங்களுக்கு اِنَّمَا اللّٰهُ அல்லாஹ் எல்லாம் اِلٰـهٌ ஒரு கடவுள் وَّاحِدٌ‌ ؕ ஒரே سُبْحٰنَهٗۤ அவன் மிக பரிசுத்தமானவன் اَنْ يَّكُوْنَ இருப்பதைவிட்டு لَهٗ அவனுக்கு وَلَدٌ‌ ۘ குழந்தை لَهٗ அவனுக்கே مَا எவை فِى السَّمٰوٰتِ வானங்களில் وَمَا فِى الْاَرْضِ‌ؕ இன்னும் எவை/பூமியில் وَكَفٰى போதுமானவன் بِاللّٰهِ அல்லாஹ்வே وَكِيْلًا‏ பொறுப்பாளனாக
4:171. வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; இன்னும் (“குன்” ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார்; அதை அவன் மர்யமின்பால் போட்டான்; (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்; ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்; அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.
4:172
4:172 لَنْ يَّسْتَـنْكِفَ الْمَسِيْحُ اَنْ يَّكُوْنَ عَبْدًالِّلّٰهِ وَلَا الْمَلٰٓٮِٕكَةُ الْمُقَرَّبُوْنَ‌ؕ وَمَنْ يَّسْتَـنْكِفْ عَنْ عِبَادَ تِهٖ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ اِلَيْهِ جَمِيْعًا‏
لَنْ يَّسْتَـنْكِفَ திமிரு கொள்ளமாட்டார்(கள்) الْمَسِيْحُ ஈஸா (மஸீஹ்) اَنْ يَّكُوْنَ இருப்பதைவிட்டு عَبْدً அடிமையாக الِّلّٰهِ அல்லாஹ்விற்கு وَلَا இன்னும் இல்லை الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் الْمُقَرَّبُوْنَ‌ؕ நெருக்கமானவர்கள் وَمَنْ எவர்(கள்) يَّسْتَـنْكِفْ திமிரு கொள்வார்(கள்) عَنْ விட்டு عِبَادَ تِهٖ அவனைவணங்குவது وَيَسْتَكْبِرْ இன்னும் பெருமை கொள்வார்(கள்) فَسَيَحْشُرُ ஒன்று திரட்டுவான் هُمْ அவர்கள் اِلَيْهِ தன் பக்கம் جَمِيْعًا‏ அனைவரையும்
4:172. (ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய்) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களோ; அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பான்.
5:17
5:17 لَـقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ‌ؕ قُلْ فَمَنْ يَّمْلِكُ مِنَ اللّٰهِ شَيْـٴًـــــا اِنْ اَرَادَ اَنْ يُّهْلِكَ الْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ وَاُمَّهٗ وَمَنْ فِى الْاَرْضِ جَمِيْعًا‌ ؕ وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا‌ ؕ يَخْلُقُ مَا يَشَآءُ‌ ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
لَـقَدْ திட்டவட்டமாக كَفَرَ நிராகரித்தனர் الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினர் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் هُوَ அவன் الْمَسِيْحُ மஸீஹ்தான் ابْنُ மகன் مَرْيَمَ‌ؕ மர்யமுடைய قُلْ கூறுவீராக فَمَنْ யார் يَّمْلِكُ சக்தி பெறுவான் مِنَ இடம் اللّٰهِ அல்லாஹ் شَيْـٴًـــــا ஒரு சிறிதும் اِنْ اَرَادَ நாடினால் اَنْ يُّهْلِكَ அவன் அழிப்பதை الْمَسِيْحَ மஸீஹை ابْنَ மகன் مَرْيَمَ மர்யமுடைய وَاُمَّهٗ இன்னும் அவருடைய தாயை وَمَنْ யார் فِى الْاَرْضِ பூமியில் جَمِيْعًا‌ ؕ அனைவரையும் وَلِلّٰهِ அல்லாஹ்வுக்குரியதே مُلْكُ ஆட்சி السَّمٰوٰتِ வானங்கள் وَالْاَرْضِ இன்னும் பூமி وَمَا بَيْنَهُمَا‌ ؕ இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் يَخْلُقُ படைக்கிறான் مَا يَشَآءُ‌ ؕ எதை/நாடுகிறான் وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى மீதும் كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
5:17. திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்தகையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். “மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும் இன்னும் பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழித்துவிட நாடினால், (அதிலிருந்து அவர்களைக் காக்க) எவர் சிறிதளவேனும் சக்தியோ அதிகாரமோ பெற்றிருக்கிறார்” என்று (நபியே!) நீர் கேளும்; வானங்களிலும், பூமியிலும், அவற்றிற்கு இடையேயும் உள்ள (பொருட்கள் அனைத்)தின் மீதுமுள்ள ஆட்சி அல்லாஹ்வுக்கே சொந்தம்; அவன் நாடியதைப் படைக்கிறான்; இன்னும் அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.
5:19
5:19 يٰۤـاَهْلَ الْـكِتٰبِ قَدْ جَآءَكُمْ رَسُوْلُـنَا يُبَيِّنُ لَـكُمْ عَلٰى فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ اَنْ تَقُوْلُوْا مَا جَآءَنَا مِنْۢ بَشِيْرٍ وَّلَا نَذِيْرٍ‌ فَقَدْ جَآءَكُمْ بَشِيْرٌ وَّنَذِيْرٌ‌ؕ وَاللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏
يٰۤـاَهْلَ الْـكِتٰبِ வேதக்காரர்களே قَدْ جَآءَ வந்துவிட்டார் كُمْ உங்களிடம் رَسُوْلُـنَا நம் தூதர் يُبَيِّنُ தெளிவுபடுத்துகிறார் لَـكُمْ உங்களிடம் عَلٰى فَتْرَةٍ இடைவெளியில் مِّنَ الرُّسُلِ தூதர்களின் اَنْ تَقُوْلُوْا நீங்கள் கூறாதிருக்க مَا جَآءَ வரவில்லை نَا எங்களுக்கு مِنْۢ எவரும் بَشِيْرٍ நற்செய்தி கூறுபவர் وَّلَا இன்னும் இல்லை نَذِيْرٍ‌ எச்சரிப்பவர் فَقَدْ உறுதியாக جَآءَ வந்துவிட்டார் كُمْ உங்களிடம் بَشِيْرٌ நற்செய்தி கூறுபவர் وَّنَذِيْرٌ‌ؕ இன்னும் எச்சரிப்பவர் وَاللّٰهُ அல்லாஹ் عَلٰى மீதும் كُلِّ شَىْءٍ எல்லாப் பொருள் قَدِيْرٌ‏ பேராற்றலுடையவன்
5:19. வேதமுடையவர்களே! நிச்சயமாக (ஈஸாவுக்குப்பின் இதுவரையிலும்) தூதர்கள் வராது இடைப்பட்டிருந்த காலத்தில், “நன்மாராயங் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் ஆகிய எவரும் எங்களிடம் வரவே இல்லையே” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தைத்) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்து விட்டார்; இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் வல்லமையுடையவனாக இருக்கின்றான்.
5:46
5:46 وَقَفَّيْنَا عَلٰٓى اٰثَارِهِمْ بِعِيْسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰٮةِ‌ وَاٰتَيْنٰهُ الْاِنْجِيْلَ فِيْهِ هُدًى وَّنُوْرٌ ۙ وَّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ التَّوْرٰٮةِ وَهُدًى وَّمَوْعِظَةً لِّـلْمُتَّقِيْنَ ؕ‏
وَقَفَّيْنَا தொடரச்செய்தோம் عَلٰٓى اٰثَارِهِمْ அவர்களுடைய அடிச்சுவடுகளில் بِعِيْسَى ஈஸாவை ابْنِ மகன் مَرْيَمَ மர்யமுடைய مُصَدِّقًا உண்மைப்படுத்துபவராக لِّمَا எதை بَيْنَ يَدَيْهِ தனக்கு முன் مِنَ இருந்து التَّوْرٰٮةِ‌ தவ்றாத் وَاٰتَيْنٰهُ இன்னும் அவருக்குக் கொடுத்தோம் الْاِنْجِيْلَ இன்ஜீலை فِيْهِ அதில் هُدًى நேர்வழி وَّنُوْرٌ ۙ இன்னும் ஒளி وَّ مُصَدِّقًا உண்மைப்படுத்தக் கூடியது لِّمَا بَيْنَ يَدَيْهِ எதை/தனக்கு முன் مِنَ التَّوْرٰٮةِ தவ்றாத்திலிருந்து وَهُدًى நேர்வழியாக وَّمَوْعِظَةً இன்னும் ஓர் உபதேசமாக لِّـلْمُتَّقِيْنَ ؕ‏ அஞ்சுபவர்களுக்கு
5:46. இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.
5:72
5:72 لَقَدْ كَفَرَ الَّذِيْنَ قَالُوْۤا اِنَّ اللّٰهَ هُوَ الْمَسِيْحُ ابْنُ مَرْيَمَ‌ ؕ وَقَالَ الْمَسِيْحُ يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ اعْبُدُوا اللّٰهَ رَبِّىْ وَرَبَّكُمْ‌ ؕ اِنَّهٗ مَنْ يُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ حَرَّمَ اللّٰهُ عَلَيْهِ الْجَـنَّةَ وَمَاْوٰٮهُ النَّارُ‌ ؕ وَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ اَنْصَارٍ‏
لَقَدْ திட்டவட்டமாக كَفَرَ நிராகரித்தார் الَّذِيْنَ எவர்கள் قَالُوْۤا கூறினார்கள் اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் هُوَ அவன்தான் الْمَسِيْحُ மஸீஹ்தான் ابْنُ மகன் مَرْيَمَ‌ ؕ மர்யமுடைய وَقَالَ கூறினார் الْمَسِيْحُ மஸீஹ் يٰبَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களே! اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை رَبِّىْ என் இறைவன் وَرَبَّكُمْ‌ ؕ இன்னும் உங்கள் இறைவன் اِنَّهٗ நிச்சயமாக செய்தி مَنْ எவர் يُّشْرِكْ இணைவைக்கிறார் بِاللّٰهِ அல்லாஹ்வுக்கு فَقَدْ திட்டமாக حَرَّمَ தடுத்து விடுகிறான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِ அவர் மீது الْجَـنَّةَ சொர்க்கத்தை وَمَاْوٰٮهُ இன்னும் அவருடைய தங்குமிடம் النَّارُ‌ ؕ நரகம்தான் وَمَا இல்லை لِلظّٰلِمِيْنَ அநியாயக்காரர்களுக்கு مِنْ اَنْصَارٍ‏ உதவியாளர்களில் எவரும்
5:72. “நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்” என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: “இஸ்ராயீலின் சந்ததியினரே! என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்று. எனவே எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான், மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும், அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
5:78
5:78 لُعِنَ الَّذِيْنَ كَفَرُوْا مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ عَلٰى لِسَانِ دَاوٗدَ وَعِيْسَى ابْنِ مَرْيَمَ‌ ؕ ذٰ لِكَ بِمَا عَصَوْا وَّكَانُوْا يَعْتَدُوْنَ‏
لُعِنَ சபிக்கப்பட்டார்(கள்) الَّذِيْنَ எவர்கள் كَفَرُوْا நிராகரித்தார்கள் مِنْۢ بَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களில் عَلٰى لِسَانِ நாவினால் دَاوٗدَ தாவூதுடைய وَعِيْسَى இன்னும் ஈஸாவின் ابْنِ மகன் مَرْيَمَ‌ ؕ மர்யமின் ذٰ لِكَ அது بِمَا எதன் காரணமாக عَصَوْا மாறுசெய்தனர் وَّكَانُوْا இன்னும் இருந்தனர் يَعْتَدُوْنَ‏ மீறுபவர்களாக
5:78. இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர் ஏனென்றால் அவர்கள் (இறைவன் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.