தேடல்


6:112
6:112 وَكَذٰلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِىٍّ عَدُوًّا شَيٰطِيْنَ الْاِنْسِ وَالْجِنِّ يُوْحِىْ بَعْضُهُمْ اِلٰى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُوْرًا‌ ؕ وَلَوْ شَآءَ رَبُّكَ مَا فَعَلُوْهُ‌ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُوْنَ‏
وَكَذٰلِكَ இவ்வாறே جَعَلْنَا ஆக்கினோம் لِكُلِّ نَبِىٍّ ஒவ்வொரு நபிக்கும் عَدُوًّا எதிரிகளாக شَيٰطِيْنَ ஷைத்தான்களை الْاِنْسِ மனிதர்களில் وَالْجِنِّ இன்னும் ஜின்களில் يُوْحِىْ அறிவிக்கிறார் بَعْضُهُمْ அவர்களில் சிலர் اِلٰى بَعْضٍ சிலருக்கு زُخْرُفَ الْقَوْلِ அலங்காரமான சொல்லாக غُرُوْرًا‌ ؕ ஏமாற்றுவதற்காக وَلَوْ شَآءَ நாடியிருந்தால் رَبُّكَ உம் இறைவன் مَا மாட்டார்கள் فَعَلُوْهُ‌ அதை அவர்கள் செய்திருக்க فَذَرْهُمْ ஆகவே அவர்களை விட்டுவிடுவீராக! وَمَا இன்னும் எதை يَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுகின்றனர்
6:112. இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.
6:116
6:116 وَاِنْ تُطِعْ اَكْثَرَ مَنْ فِى الْاَرْضِ يُضِلُّوْكَ عَنْ سَبِيْلِ اللّٰهِ‌ؕ اِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ‏
وَاِنْ تُطِعْ நீர் கீழ்ப்படிந்தால் اَكْثَرَ அதிகமானோருக்கு مَنْ فِى الْاَرْضِ இப்பூமியில் உள்ளவர்களில் يُضِلُّوْكَ வழிகெடுப்பார்கள்/ உம்மை عَنْ سَبِيْلِ பாதையிலிருந்து اللّٰهِ‌ؕ அல்லாஹ்வுடைய اِنْ يَّتَّبِعُوْنَ பின்பற்ற மாட்டார்கள் اِلَّا தவிர الظَّنَّ யூகம் وَاِنْ இல்லை هُمْ அவர்கள் اِلَّا தவிர يَخْرُصُوْنَ‏ கற்பனை செய்பவர்களாக
6:116. பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.
6:138
6:138 وَقَالُوْا هٰذِهٖۤ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ ‌ۖ لَّا يَطْعَمُهَاۤ اِلَّا مَنْ نَّشَآءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا يَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَيْهَا افْتِرَآءً عَلَيْهِ ‌ؕ سَيَجْزِيْهِمْ بِمَا كَانُوْا يَفْتَرُوْنَ‏
وَقَالُوْا கூறினர் هٰذِهٖۤ இவை اَنْعَامٌ கால்நடைகள் وَّحَرْثٌ இன்னும் விவசாயம் حِجْرٌ ۖ தடுக்கப்பட்டவை لَّا மாட்டார் يَطْعَمُهَاۤ அவற்றை புசிக்க اِلَّا தவிர مَنْ எவர் نَّشَآءُ நாடுகிறோம் بِزَعْمِهِمْ தங்கள் எண்ணப்படி وَاَنْعَامٌ இன்னும் கால்நடைகள் حُرِّمَتْ தடுக்கப்பட்டன ظُهُوْرُهَا அவற்றின் முதுகுகள் وَاَنْعَامٌ இன்னும் கால்நடைகள் لَّا يَذْكُرُوْنَ கூறமாட்டார்கள் اسْمَ اللّٰهِ அல்லாஹ்வின் பெயரை عَلَيْهَا அவற்றின் மீது افْتِرَآءً இட்டுக்கட்டுகின்றனர் عَلَيْهِ ؕ அவன் மீது سَيَجْزِيْهِمْ கூலி கொடுப்பான்/அவர்களுக்கு بِمَا எதன் காரணமாக كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுகின்றனர்
6:138. இன்னும் அவர்கள் (தம் கால்நடைகளைக் குறிப்பிட்டு) “ஆடு, மாடு, ஒட்டகம்; விவசாயத்தில் காணும் இந்த விளைச்சல் ஆகியவற்றை நாம் விரும்புபவர்களைத் தவிர வேறு யாரும் புசிப்பது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்; மேலும் சில கால்நடைகளைச் சவாரி செய்யவும், சுமைகளைச் சுமந்து செல்லவும் பயன் படுத்துவது தடுக்கப்பட்டுள்ளது என்றும்; இன்னும் சில கால்நடைகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் கூறக்கூடாதென்றும்; அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து சொல்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களுடைய பொய்க் கூற்றுகளுக்காக அவர்களுக்குக் கூலி கொடுப்பான்.
6:144
6:144 وَمِنَ الْاِبِلِ اثْنَيْنِ وَمِنَ الْبَقَرِ اثْنَيْنِ‌ ؕ قُلْ ءٰٓالذَّكَرَيْنِ حَرَّمَ اَمِ الْاُنْثَيَيْنِ اَمَّا اشْتَمَلَتْ عَلَيْهِ اَرْحَامُ الْاُنْثَيَيْنِ‌ ؕ اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ وَصّٰٮكُمُ اللّٰهُ بِهٰذَا‌ ۚ فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا لِّيُضِلَّ النَّاسَ بِغَيْرِ عِلْمٍ‌ ؕ اِنَّ اللّٰهَ لَا يَهْدِى الْقَوْمَ الظّٰلِمِيْنَ‏
وَمِنَ الْاِبِلِ இன்னும் ஒட்டகையிலும் اثْنَيْنِ இரண்டை وَمِنَ الْبَقَرِ இன்னும் மாட்டிலும் اثْنَيْنِ‌ ؕ இரண்டை قُلْ கூறுவீராக ءٰٓالذَّكَرَيْنِ இரு ஆண்களையா? حَرَّمَ தடை செய்தான் اَمِ அல்லது الْاُنْثَيَيْنِ இரு பெண்களையா اَمَّا அல்லது/எவை اشْتَمَلَتْ சுமந்தன عَلَيْهِ அவற்றை اَرْحَامُ கர்ப்பங்கள் الْاُنْثَيَيْنِ‌ ؕ இரு பெண்களின் اَمْ كُنْتُمْ இருந்தீர்களா? شُهَدَآءَ சாட்சிகளாக اِذْ وَصّٰٮكُمُ போது/கட்டளையிட்டான்/உங்களுக்கு اللّٰهُ அல்லாஹ் بِهٰذَا‌ ۚ فَمَنْ இதை/யார் اَظْلَمُ மிகப் பெரிய அநியாயக்காரன் مِمَّنِ எவனைவிட افْتَـرٰى இட்டுக்கட்டினான் عَلَى மீது اللّٰهِ அல்லாஹ் كَذِبًا பொய்யை لِّيُضِلَّ வழி கெடுப்பதற்காக النَّاسَ மக்களை بِغَيْرِ عِلْمٍ‌ ؕ கல்வி இன்றி اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் لَا يَهْدِى நேர்வழி செலுத்த மாட்டான் الْقَوْمَ மக்களை الظّٰلِمِيْنَ‏ அநியாயக்காரர்கள்
6:144. இன்னும், “ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கட்டளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?” என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக் காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான்.
7:37
7:37 فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَـرٰى عَلَى اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰيٰتِهٖ ؕ اُولٰۤٮِٕكَ يَنَالُهُمْ نَصِيْبُهُمْ مِّنَ الْـكِتٰبِ‌ؕ حَتّٰٓى اِذَا جَآءَتْهُمْ رُسُلُـنَا يَتَوَفَّوْنَهُمْ ۙ قَالُوْۤا اَيْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ‌ ؕ قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِيْنَ‏
فَمَنْ யார்? اَظْلَمُ மிகப்பெரிய அநியாயக்காரன் مِمَّنِ எவனைவிட افْتَـرٰى இட்டுக்கட்டினான் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை اَوْ அல்லது كَذَّبَ பொய்ப்பித்தான் بِاٰيٰتِهٖ ؕ அவனுடைய வசனங்களை اُولٰۤٮِٕكَ இவர்கள் يَنَالُهُمْ அடையும்/இவர்களை نَصِيْبُهُمْ பாகம்/இவர்களுடைய مِّنَ الْـكِتٰبِ‌ؕ விதியில் حَتّٰٓى இறுதியாக اِذَا போது جَآءَتْهُمْ இவர்களிடம் வந்த رُسُلُـنَا நம் தூதர்கள் يَتَوَفَّوْنَهُمْ ۙ உயிர்வாங்குபவர்களாக / இவர்களை قَالُوْۤا கூறுவார்கள் اَيْنَ எங்கே? مَا எவை كُنْتُمْ இருந்தீர்கள் تَدْعُوْنَ பிரார்த்திப்பீர்கள் مِنْ دُوْنِ اللّٰهِ‌ ؕ அல்லாஹ்வையன்றி قَالُوْا கூறினார்கள் ضَلُّوْا மறைந்தனர் عَنَّا எங்களை விட்டு وَشَهِدُوْا இன்னும் சாட்சியளிப்பார்கள் عَلٰٓى எதிராக اَنْفُسِهِمْ தங்களுக்கு اَنَّهُمْ நிச்சயமாக தாங்கள் كَانُوْا இருந்தனர் كٰفِرِيْنَ‏ நிராகரிப்பவர்களாக
7:37. எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) “அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?” எனக் கேட்பார்கள்; (அதற்கு) “அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்” என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
7:53
7:53 هَلْ يَنْظُرُوْنَ اِلَّا تَاْوِيْلَهٗ‌ؕ يَوْمَ يَاْتِىْ تَاْوِيْلُهٗ يَقُوْلُ الَّذِيْنَ نَسُوْهُ مِنْ قَبْلُ قَدْ جَآءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَـقِّ‌ۚ فَهَلْ لَّـنَا مِنْ شُفَعَآءَ فَيَشْفَعُوْا لَـنَاۤ اَوْ نُرَدُّ فَنَعْمَلَ غَيْرَ الَّذِىْ كُنَّا نَـعْمَلُ‌ؕ قَدْ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
هَلْ يَنْظُرُوْنَ எதிர்பார்க்கின்றனரா? اِلَّا தவிர تَاْوِيْلَهٗ‌ؕ அதன் முடிவை يَوْمَ நாள் يَاْتِىْ வரும் تَاْوِيْلُهٗ அதன் முடிவு يَقُوْلُ கூறுவார்(கள்) الَّذِيْنَ எவர்கள் نَسُوْهُ மறந்தனர்/அதை مِنْ قَبْلُ முன்னர் قَدْ جَآءَتْ வந்தா(ர்க)ள் رُسُلُ தூதர்கள் رَبِّنَا எங்கள் இறைவனின் بِالْحَـقِّ‌ۚ உண்மையைக் கொண்டு فَهَلْ لَّـنَا எங்களுக்கு உண்டா? مِنْ شُفَعَآءَ சிபாரிசு செய்பவர்களில் فَيَشْفَعُوْا சிபாரிசு செய்வார்கள் لَـنَاۤ எங்களுக்கு اَوْ அல்லது نُرَدُّ நாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால் فَنَعْمَلَ செய்வோமே غَيْرَ الَّذِىْ அல்லாததை كُنَّا இருந்தோம் نَـعْمَلُ‌ؕ செய்வோம் قَدْ خَسِرُوْۤا நஷ்டமிழைத்துக் கொண்டனர் اَنْفُسَهُمْ தங்களுக்கே وَضَلَّ இன்னும் மறைந்துவிட்டன عَنْهُمْ அவர்களை விட்டு مَّا எவை كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுவார்கள்
7:53. இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், “நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்” என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.  
7:89
7:89 قَدِ افْتَرَيْنَا عَلَى اللّٰهِ كَذِبًا اِنْ عُدْنَا فِىْ مِلَّتِكُمْ بَعْدَ اِذْ نَجّٰٮنَا اللّٰهُ مِنْهَا‌ ؕ وَمَا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّعُوْدَ فِيْهَاۤ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّنَا‌ ؕ وَسِعَ رَبُّنَا كُلَّ شَىْءٍ عِلْمًا‌ؕ عَلَى اللّٰهِ تَوَكَّلْنَا‌ ؕ رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَـقِّ وَاَنْتَ خَيْرُ الْفٰتِحِيْنَ‏
قَدِ افْتَرَيْنَا நாங்கள் இட்டுக்கட்டிவிடுவோம் عَلَى اللّٰهِ அல்லாஹ்வின் மீது كَذِبًا பொய்யை اِنْ عُدْنَا நாங்கள் திரும்பினால் فِىْ مِلَّتِكُمْ உங்கள் கொள்கைக்கு بَعْدَ பின்னர் اِذْ போது نَجّٰٮنَا பாதுகாத்தான்/ எங்களை اللّٰهُ அல்லாஹ் مِنْهَا‌ ؕ அதிலிருந்து وَمَا يَكُوْنُ لَـنَاۤ ஆகாது/எங்களுக்கு اَنْ نَّعُوْدَ நாங்கள் திரும்புவது فِيْهَاۤ அதில் اِلَّاۤ தவிர اَنْ يَّشَآءَ நாடியே اللّٰهُ அல்லாஹ் رَبُّنَا‌ ؕ எங்கள் இறைவனாகிய وَسِعَ விசாலமானவன் رَبُّنَا எங்கள் இறைவன் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும்விட عِلْمًا‌ؕ ஞானத்தால் عَلَى மீதே اللّٰهِ அல்லாஹ்வின் تَوَكَّلْنَا‌ ؕ நம்பிக்கைவைத்தோம் رَبَّنَا எங்கள் இறைவா افْتَحْ தீர்ப்பளி(முடிவுசெய்) بَيْنَنَا எங்களுக்கிடையில் وَبَيْنَ இன்னும் இடையில் قَوْمِنَا எங்கள் சமுதாயத்திற்கு بِالْحَـقِّ நியாயமாக وَاَنْتَ நீ خَيْرُ மிகச் சிறந்தவன் الْفٰتِحِيْنَ‏ தீர்ப்பளிப்பவர்களில்
7:89. “உங்கள் மார்க்கத்தை விட்டு, அல்லாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நாங்கள் அதற்கு திரும்பவே மாட்டோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்“ (என்று கூறி), “எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்” (என்றும் பிரார்த்தித்தார்).
7:117
7:117 وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنْ اَلْقِ عَصَاكَ‌ ۚ فَاِذَا هِىَ تَلْقَفُ مَا يَاْفِكُوْنَ ‌ۚ‏
وَاَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى مُوْسٰٓى மூஸாவிற்கு اَنْ اَلْقِ எறிவீராக என்று عَصَاكَ‌ ۚ உம் தடியை فَاِذَا هِىَ تَلْقَفُ அப்போது அது விழுங்கிவிட்டது مَا எவற்றை يَاْفِكُوْنَ போலியாக செய்வார்கள்
7:117. அப்பொழுது நாம் “மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
7:152
7:152 اِنَّ الَّذِيْنَ اتَّخَذُوا الْعِجْلَ سَيَنَالُهُمْ غَضَبٌ مِّنْ رَّبِّهِمْ وَذِلَّـةٌ فِى الْحَيٰوةِ الدُّنْيَا‌ ؕ وَكَذٰلِكَ نَجْزِىْ الْمُفْتَرِيْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ எவர்கள் اتَّخَذُوا எடுத்துக் கொண்டனர் الْعِجْلَ காளைக் கன்றை سَيَنَالُهُمْ அடையும்/அவர்களை غَضَبٌ கோபம் مِّنْ இருந்து رَّبِّهِمْ அவர்களின் இறைவன் وَذِلَّـةٌ இன்னும் இழிவு فِى الْحَيٰوةِ வாழ்க்கையில் الدُّنْيَا‌ ؕ உலகம் وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِىْ கூலி கொடுப்போம் الْمُفْتَرِيْنَ‏ இட்டுக்கட்டுபவர்களுக்கு
7:152. நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்; பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
10:30
10:30 هُنَالِكَ تَبْلُوْا كُلُّ نَفْسٍ مَّاۤ اَسْلَفَتْ‌ وَرُدُّوْۤا اِلَى اللّٰهِ مَوْلٰٮهُمُ الْحَـقِّ‌ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ‏
هُنَالِكَ அங்கு تَبْلُوْا சோதிக்கும் كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆத்மா مَّاۤ எவற்றை اَسْلَفَتْ‌ அது முன்செய்தது وَرُدُّوْۤا இன்னும் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் مَوْلٰٮهُمُ தங்கள் எஜமானன் الْحَـقِّ‌ உண்மையானவன் وَضَلَّ இன்னும் மறைந்துவிடும் عَنْهُمْ அவர்களை விட்டு مَّا எது كَانُوْا இருந்தனர் يَفْتَرُوْنَ‏ இட்டுக்கட்டுகின்றனர்
10:30. அங்கு ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்தனுப்பிய செயல்களின் பயன்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்வர் - பின்பு அவர்கள் தங்கள் உண்மை இறைவனான அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள் - அவர்கள் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் அனைத்தும் அவர்களை விட்டு மறைந்து விடும்.