தேடல்


12:71
12:71 قَالُوْا وَاَقْبَلُوْا عَلَيْهِمْ مَّاذَا تَفْقِدُوْنَ‏
قَالُوْا கூறினர் وَاَقْبَلُوْا இன்னும் முன்னோக்கி வந்தனர் عَلَيْهِمْ அவர்கள் பக்கம் مَّاذَا எதை? تَفْقِدُوْنَ‏ இழக்கிறீர்கள்
12:71. (அதற்கு) அவர்கள் இவர்களை முன்னோக்கி வந்து, “நீங்கள் எதனை இழந்து விட்டீர்கள்” எனக் கேட்டார்கள்.
12:82
12:82 وَسْــٴَــلِ الْقَرْيَةَ الَّتِىْ كُنَّا فِيْهَا وَالْعِيْرَ الَّتِىْ اَقْبَلْنَا فِيْهَا‌ؕ وَاِنَّا لَصٰدِقُوْنَ‏
وَسْــٴَــلِ நீர் கேட்பீராக الْقَرْيَةَ ஊரை الَّتِىْ எது كُنَّا நாங்கள் இருந்தோம் فِيْهَا அதில் وَالْعِيْرَ இன்னும் பயணக் கூட்டம் الَّتِىْ எது اَقْبَلْنَا வந்தோம் فِيْهَا‌ؕ அதில் وَاِنَّا நிச்சயமாக நாங்கள் لَصٰدِقُوْنَ‏ உண்மையாளர்கள்தான்
12:82. “நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்“ (என்றும் சொல்லுங்கள்” என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).
15:47
15:47 وَنَزَعْنَا مَا فِىْ صُدُوْرِهِمْ مِّنْ غِلٍّ اِخْوَانًا عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ‏
وَنَزَعْنَا நீக்கிவிடுவோம் مَا எதை فِىْ நெஞ்சங்களில் صُدُوْرِهِمْ அவர்களுடைய مِّنْ غِلٍّ குரோதத்தை اِخْوَانًا சகோதரர்களாக عَلٰى سُرُرٍ கட்டில்கள் மீது مُّتَقٰبِلِيْنَ‏ ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக
15:47. மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவரையொருவர் முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்திருப்பார்கள்.
25:23
25:23 وَقَدِمْنَاۤ اِلٰى مَا عَمِلُوْا مِنْ عَمَلٍ فَجَعَلْنٰهُ هَبَآءً مَّنْثُوْرًا‏
وَقَدِمْنَاۤ நாம் நாடுவோம் اِلٰى مَا عَمِلُوْا அவர்கள் செய்ததை مِنْ عَمَلٍ செயல்களில் فَجَعَلْنٰهُ பிறகு அதை ஆக்கிவிடுவோம் هَبَآءً புழுதியாக مَّنْثُوْرًا‏ பரத்தப்பட்ட
25:23. இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.
28:31
28:31 وَاَنْ اَ لْقِ عَصَاكَ‌ ؕ فَلَمَّا رَاٰهَا تَهْتَزُّ كَاَنَّهَا جَآنٌّ وَّلّٰى مُدْبِرًا وَّلَمْ يُعَقِّبْ‌ ؕ يٰمُوْسٰٓى اَ قْبِلْ وَلَا تَخَفْ‌ اِنَّكَ مِنَ الْاٰمِنِيْنَ‏
وَاَنْ اَ لْقِ இன்னும் எறிவீராக! عَصَاكَ‌ ؕ உமது கைத்தடியை فَلَمَّا ஆக, அவர் பார்த்தபோது رَاٰهَا அதை تَهْتَزُّ நெளிவதாக كَاَنَّهَا ஒரு போன்று/அது جَآنٌّ பாம்பை وَّلّٰى திரும்பி ஓடினார் مُدْبِرًا புறமுதுகிட்டவராக وَّلَمْ يُعَقِّبْ‌ ؕ அவர் பார்க்கவில்லை يٰمُوْسٰٓى மூஸாவே! اَ قْبِلْ முன்னே வருவீராக! وَلَا تَخَفْ‌ பயப்படாதீர்! اِنَّكَ நிச்சயமாக நீர் مِنَ الْاٰمِنِيْنَ‏ பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்
28:31. “உம் கைத்தடியைக் கீழே எறியும்” என்றும் (கட்டளையிடப்பட்டார். அவ்வாறு எறிந்ததும்) அது பாம்பைப் போன்று நெளிவதைக் கண்டு, அவர் திரும்பிப் பார்க்காமல் பின் வாங்கி ஓடினார்; (அப்பொழுது): “மூஸாவே! முன்னோக்கி வாரும்! இன்னும், அஞ்சாதீர்; நீர் அடைக்கலம் பெற்றவர்களில் உள்ளவர்.”
34:9
34:9 اَفَلَمْ يَرَوْا اِلٰى مَا بَيْنَ اَيْدِيْهِمْ وَمَا خَلْفَهُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ اِنْ نَّشَاْ نَخْسِفْ بِهِمُ الْاَرْضَ اَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِّنَ السَّمَآءِ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً لِّكُلِّ عَبْدٍ مُّنِيْبٍ‏
اَفَلَمْ يَرَوْا அவர்கள் பார்க்கவில்லையா? اِلٰى مَا بَيْنَ اَيْدِيْهِمْ தங்களுக்கு முன்னுள்ள وَمَا خَلْفَهُمْ இன்னும் தங்களுக்கு பின்னுள்ள مِّنَ السَّمَآءِ வானத்தையும் وَالْاَرْضِ ؕ பூமியையும் اِنْ نَّشَاْ நாம் நாடினால் نَخْسِفْ சொருகிவிடுவோம் بِهِمُ அவர்களை الْاَرْضَ பூமியில் اَوْ அல்லது نُسْقِطْ விழவைப்போம் عَلَيْهِمْ அவர்கள் மீது كِسَفًا துண்டுகளை مِّنَ السَّمَآءِ ؕ வானத்தின் اِنَّ நிச்சயமாக فِىْ ذٰ لِكَ இதில் இருக்கின்றது لَاٰيَةً ஒர் அத்தாட்சி لِّكُلِّ عَبْدٍ எல்லா அடியார்களுக்கும் مُّنِيْبٍ‏ திரும்பக்கூடிய
34:9. வானத்திலும், பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும் அவர்களுக்குப் பின்னாலுள்ளதையும் அவர்கள் பார்க்க வில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.  
37:27
37:27 وَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏
وَاَقْبَلَ முன்னோக்கி(னர்) بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலரை يَّتَسَآءَلُوْنَ‏ விசாரித்துக் கொள்வார்கள்
37:27. அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி, ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு(த் தர்க்கித்துக்) கொண்டும் இருப்பார்கள்.
37:44
37:44 عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيْنَ‏
عَلٰى سُرُرٍ கட்டில்கள் மீது مُّتَقٰبِلِيْنَ‏ ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக
37:44. ஒருவரையொருவர் முன்னோக்கியவாறு கட்டில்கள் மீது (அமர்ந்திருப்பார்கள்).
37:50
37:50 فَاَقْبَلَ بَعْضُهُمْ عَلٰى بَعْضٍ يَّتَسَآءَلُوْنَ‏
فَاَقْبَلَ முன்னோக்குவார்(கள்) بَعْضُهُمْ அவர்களில் சிலர் عَلٰى بَعْضٍ சிலரை يَّتَسَآءَلُوْنَ‏ விசாரிப்பார்கள்
37:50. (அப்பொழுது) அவர்களில் ஒரு சிலர் சிலரை முன்னோக்கியவாறு பேசிக் கொண்டிருப்பார்கள்.
39:17
39:17 وَالَّذِيْنَ اجْتَنَـبُـوا الطَّاغُوْتَ اَنْ يَّعْبُدُوْهَا وَاَنَابُوْۤا اِلَى اللّٰهِ لَهُمُ الْبُشْرٰى‌ ۚ فَبَشِّرْ عِبَادِ ۙ‏
وَالَّذِيْنَ எவர்கள் اجْتَنَـبُـوا விலகினார்கள் الطَّاغُوْتَ தாகூத்துகளை اَنْ يَّعْبُدُوْهَا இவர்களை வணங்குவதை விட்டு وَاَنَابُوْۤا இன்னும் திரும்பினார்கள் اِلَى اللّٰهِ அல்லாஹ்வின் பக்கம் لَهُمُ அவர்களுக்கு الْبُشْرٰى‌ ۚ நற்செய்தி فَبَشِّرْ ஆகவே, நற்செய்தி சொல்லுங்கள் عِبَادِ ۙ‏ என் அடியார்களுக்கு
39:17. எவர்கள் ஷைத்தான்களை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அவற்றிலிருந்து விலகி முற்றிலும் அல்லாஹ்வின் பால் முன்னோக்கியிருக்கிறார்களோ, அவர்களுக்குத் தான் நன்மாராயம்; ஆகவே (என்னுடைய) நல்லடியார்களுக்கு நன்மாராயங் கூறுவீராக!