தேடல்


2:62
2:62 اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَالَّذِيْنَ هَادُوْا وَالنَّصٰرٰى وَ الصّٰبِـِٕیْنَ مَنْ اٰمَنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَعَمِلَ صَالِحًـا فَلَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْۚ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ‏
اِنَّ நிச்சயமாக الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கையாளர்கள் وَالَّذِيْنَ هَادُوْا இன்னும் யூதர்கள் وَالنَّصٰرٰى இன்னும் கிறித்தவர்கள் وَ الصّٰبِـِٕیْنَ இன்னும் ஸாபியீன்கள் مَنْ எவர் اٰمَنَ நம்பிக்கை கொண்டார் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ இன்னும் நாளை الْاٰخِرِ இறுதி وَعَمِلَ இன்னும் செய்தார் صَالِحًـا நன்மையை فَلَهُمْ அவர்களுக்கு اَجْرُهُمْ கூலி/அவர்களின் عِنْدَ இடம் رَبِّهِمْۚ அவர்களின் இறைவன் وَلَا இன்னும் இல்லை خَوْفٌ பயம் عَلَيْهِمْ அவர்கள் மீது وَلَا இன்னும் மாட்டார்கள் هُمْ அவர்கள் يَحْزَنُوْنَ‏ கவலைப்பட
2:62. ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது; மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
3:114
3:114 يُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وَ يَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَيُسَارِعُوْنَ فِىْ الْخَيْرٰتِ ؕ وَاُولٰٓٮِٕكَ مِنَ الصّٰلِحِيْنَ‏
يُؤْمِنُوْنَ நம்பிக்கை கொள்கிறார்கள் بِاللّٰهِ அல்லாஹ்வை وَالْيَوْمِ الْاٰخِرِ இன்னும் இறுதி நாளை وَ يَاْمُرُوْنَ இன்னும் ஏவுகிறார்கள் بِالْمَعْرُوْفِ நன்மையைக்கொண்டு وَيَنْهَوْنَ இன்னும் தடுக்கிறார்கள் عَنِ الْمُنْكَرِ தீமையை விட்டும் وَيُسَارِعُوْنَ இன்னும் விரைகிறார்கள் فِىْ الْخَيْرٰتِ ؕ நன்மைகளில் وَاُولٰٓٮِٕكَ இன்னும் இவர்கள்தான் مِنَ الصّٰلِحِيْنَ‏ நல்லோரில்
3:114. அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.
4:69
4:69 وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌ ۚ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ؕ‏
وَمَنْ எவர்(கள்) يُّطِعِ கீழ்ப்படிகிறார்(கள்) اللّٰهَ அல்லாஹ்வுக்கு وَالرَّسُوْلَ இன்னும் தூதருக்கு فَاُولٰٓٮِٕكَ அவர்கள் مَعَ உடன் الَّذِيْنَ எவர்கள் اَنْعَمَ அருள் புரிந்தான் اللّٰهُ அல்லாஹ் عَلَيْهِمْ அவர்கள் மீது مِّنَ இருந்து النَّبِيّٖنَ நபிமார்கள் وَالصِّدِّيْقِيْنَ இன்னும் சத்தியவான்கள் وَالشُّهَدَآءِ இன்னும் உயிர்நீத்த தியாகிகள் وَالصّٰلِحِيْنَ‌ ۚ இன்னும் நல்லவர்கள் وَحَسُنَ அழகிய اُولٰٓٮِٕكَ இவர்கள் رَفِيْقًا ؕ‏ தோழர்கள்
4:69. யார் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப்பெற்ற நபிமார்கள், ஸித்தீகீன்கள் (சத்தியவான்கள்) ஷுஹதாக்கள் (உயிர்த்தியாகிகள்) ஸாலிஹீன்கள் (நற்கருமங்களுடையவர்கள்) ஆகியவர்களுடன் இருப்பார்கள் - இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள்.
6:85
6:85 وَزَكَرِيَّا وَيَحْيٰى وَعِيْسٰى وَاِلْيَاسَ‌ؕ كُلٌّ مِّنَ الصّٰلِحِيْنَۙ‏
وَزَكَرِيَّا இன்னும் ஸகரிய்யாவை وَيَحْيٰى இன்னும் யஹ்யாவை وَعِيْسٰى இன்னும் ஈஸாவை وَاِلْيَاسَ‌ؕ இன்னும் இல்யாûஸ كُلٌّ எல்லோரும் مِّنَ الصّٰلِحِيْنَۙ‏ நல்லோரில்
6:85. இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
7:73
7:73 وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا‌ ۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوْا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ‌ ؕ هٰذِهٖ نَاقَةُ اللّٰهِ لَـكُمْ اٰيَةً‌ فَذَرُوْهَا تَاْكُلْ فِىْۤ اَرْضِ اللّٰهِ‌ وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَيَاْخُذَكُمْ عَذَابٌ اَ لِيْمٌ‏
وَاِلٰى ثَمُوْدَ ‘ஸமூது’க்கு اَخَاهُمْ அவர்களுடைய சகோதரர் صٰلِحًا‌ ۘ ஸாலிஹை قَالَ கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே اعْبُدُوْا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ்வை مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ اِلٰهٍ வணங்கப்படும் ஒரு கடவுள் غَيْرُهٗ‌ ؕ அவனையன்றி قَدْ நிச்சயமாக جَآءَتْكُمْ உங்களிடம் வந்துவிட்டது بَيِّنَةٌ ஓர் அத்தாட்சி مِّنْ இருந்து رَّبِّكُمْ‌ ؕ உங்கள் இறைவன் هٰذِهٖ இது نَاقَةُ ஒட்டகம் اللّٰهِ அல்லாஹ்வுடைய لَـكُمْ உங்களுக்கு اٰيَةً‌ ஓர் அத்தாட்சியாக فَذَرُوْهَا ஆகவே, விட்டு விடுங்கள்/அதை تَاْكُلْ அது மேயும் فِىْۤ اَرْضِ பூமியில் اللّٰهِ‌ அல்லாஹ்வுடைய وَلَا تَمَسُّوْهَا அதை தொடாதீர்கள் بِسُوْٓءٍ தீமையைக் கொண்டு فَيَاْخُذَكُمْ பிடிக்கும்/உங்களை عَذَابٌ வேதனை اَ لِيْمٌ‏ துன்புறுத்தும்
7:73. “ஸமூது” கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது; அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது; எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.
7:75
7:75 قَالَ الْمَلَاُ الَّذِيْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖ‌ؕ قَالُـوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ‏
قَالَ கூறினார்(கள்) الْمَلَاُ தலைவர்கள் الَّذِيْنَ எவர்கள் اسْتَكْبَرُوْا பெருமையடித்தனர் مِنْ قَوْمِهٖ அவருடைய சமுதாயத்தில் لِلَّذِيْنَ எவர்களுக்கு اسْتُضْعِفُوْا பலவீனர்களாக கருதப்பட்டனர் لِمَنْ எவருக்கு اٰمَنَ நம்பிக்கை கொண்டார் مِنْهُمْ அவர்களில் اَتَعْلَمُوْنَ அறிவீர்களா? اَنَّ صٰلِحًا நிச்சயமாக ஸாலிஹ் مُّرْسَلٌ அனுப்பப்பட்டவர் مِّنْ رَّبِّهٖ‌ؕ தன் இறைவனிடமிருந்து قَالُـوْۤا கூறினார்கள் اِنَّا நிச்சயமாக நாங்கள் بِمَاۤ எதைக் கொண்டு اُرْسِلَ அனுப்பப்பட்டார் بِهٖ அதைக் கொண்டு مُؤْمِنُوْنَ‏ நம்பிக்கை கொண்டவர்கள்
7:75. அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?” எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், “நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்” என்று (பதில்) கூறினார்கள்.
7:77
7:77 فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَ قَالُوْا يٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِيْنَ‏
فَعَقَرُوا ஆகவே அறுத்தனர் النَّاقَةَ பெண் ஒட்டகத்தை وَعَتَوْا இன்னும் மீறினர் عَنْ اَمْرِ கட்டளையை رَبِّهِمْ தங்கள் இறைவனின் وَ قَالُوْا இன்னும் கூறினர் يٰصٰلِحُ ஸாலிஹே ائْتِنَا வருவீராக/எங்களிடம் بِمَا எதைக் கொண்டு تَعِدُنَاۤ அச்சுறுத்துகிறீர்/எங்களை اِنْ كُنْتَ நீர் இருந்தால் مِنَ الْمُرْسَلِيْنَ‏ தூதர்களில்
7:77. பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); “ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
7:79
7:79 فَتَوَلّٰى عَنْهُمْ وَقَالَ يٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّىْ وَنَصَحْتُ لَـكُمْ وَلٰـكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِيْنَ‏
فَتَوَلّٰى திரும்பினார் عَنْهُمْ அவர்களை விட்டு وَقَالَ இன்னும் கூறினார் يٰقَوْمِ என் சமுதாயமே لَقَدْ اَبْلَغْتُكُمْ திட்டவட்டமாக/ எடுத்துரைத்தேன்/உங்களுக்கு رِسَالَةَ தூதை رَبِّىْ என் இறைவனின் وَنَصَحْتُ உபதேசித்தேன் لَـكُمْ உங்களுக்கு وَلٰـكِنْ எனினும் لَّا تُحِبُّوْنَ நீங்கள் நேசிப்பதில்லை النّٰصِحِيْنَ‏ உபதேசிப்பவர்களை
7:79. அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் “என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, “உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை” என்று கூறினார்.
9:102
9:102 وَاٰخَرُوْنَ اعْتَرَفُوْا بِذُنُوْبِهِمْ خَلَطُوْا عَمَلًا صَالِحًـا وَّاٰخَرَ سَيِّئًا ؕ عَسَى اللّٰهُ اَنْ يَّتُوْبَ عَلَيْهِمْ‌ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏
وَاٰخَرُوْنَ இன்னும் மற்றவர்கள் (சிலர்) اعْتَرَفُوْا ஒப்புக் கொண்டனர் بِذُنُوْبِهِمْ தங்கள் குற்றங்களை خَلَطُوْا கலந்தனர் عَمَلًا செயலை صَالِحًـا நல்லது وَّاٰخَرَ இன்னும் மற்றதை سَيِّئًا ؕ கெட்டது عَسَى اللّٰهُ اَنْ يَّتُوْبَ கூடும்/அல்லாஹ்/மன்னிக்க عَلَيْهِمْ‌ ؕ அவர்களை اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் غَفُوْرٌ மகா மன்னிப்பாளன் رَّحِيْمٌ‏ பெரும் கருணையாளன்
9:102. வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
11:61
11:61 ‌وَاِلٰى ثَمُوْدَ اَخَاهُمْ صٰلِحًا‌ۘ قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌ ؕ هُوَ اَنْشَاَكُمْ مِّنَ الْاَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيْهَا فَاسْتَغْفِرُوْهُ ثُمَّ تُوْبُوْۤا اِلَيْهِ‌ ؕ اِنَّ رَبِّىْ قَرِيْبٌ مُّجِيْبٌ‏
وَاِلٰى இன்னும் இடம் ثَمُوْدَ ஸமூது اَخَاهُمْ சகோதரர்/அவர்களுடைய صٰلِحًا‌ۘ ஸாலிஹை قَالَ கூறினார் يٰقَوْمِ என் மக்களே اعْبُدُوا வணங்குங்கள் اللّٰهَ அல்லாஹ் مَا لَـكُمْ உங்களுக்கில்லை مِّنْ அறவே اِلٰهٍ வணக்கத்திற்குரியவன் غَيْرُهٗ‌ ؕ அவனையன்றி هُوَ அவனே اَنْشَاَ உருவாக்கினான் كُمْ உங்களை مِّنَ الْاَرْضِ பூமியிலிருந்து وَاسْتَعْمَر வசிக்க வைத்தான் َكُمْ உங்களை فِيْهَا அதில் فَاسْتَغْفِرُوْ ஆகவே, மன்னிப்புக் கோருங்கள் هُ அவனிடம் ثُمَّ பிறகு تُوْبُوْۤا திருந்தி திரும்புங்கள் اِلَيْهِ‌ ؕ அவன் பக்கம் اِنَّ நிச்சயமாக رَبِّىْ என் இறைவன் قَرِيْبٌ மிகச் சமீபமானவன் مُّجِيْبٌ‏ பதிலளிப்பவன்
11:61. இன்னும், ஸமூது (கூட்டத்தினர்) பால் அவர்கள் சகோதரர் ஸாலிஹை (நம் தூதராக அனுப்பினோம்). அவர் சொன்னார்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து உண்டாக்கி, அதிலேயே உங்களை வசிக்கவும் வைத்தான். எனவே, அவனிடமே பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் தவ்பா செய்து அவன் பக்கமே மீளுங்கள். நிச்சயமாக என் இறைவன் (உங்களுக்கு) மிக அருகில் இருக்கின்றான்; (நம் பிரார்த்தனைகளை) ஏற்பவனாகவும் இருக்கின்றான்.”