தேடல்


2:251
2:251 فَهَزَمُوْهُمْ بِاِذْنِ اللّٰهِ ۙ وَقَتَلَ دَاوٗدُ جَالُوْتَ وَاٰتٰٮهُ اللّٰهُ الْمُلْكَ وَالْحِکْمَةَ وَعَلَّمَهٗ مِمَّا يَشَآءُ ‌ؕ وَلَوْلَا دَفْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَعْضٍ لَّفَسَدَتِ الْاَرْضُ وَلٰـکِنَّ اللّٰهَ ذُوْ فَضْلٍ عَلَى الْعٰلَمِيْنَ‏
فَهَزَمُوْهُمْ ஆகவே அவர்களைத் தோற்கடித்தார்கள் بِاِذْنِ அனுமதி கொண்டு اللّٰهِ ۙ அல்லாஹ்வின் وَقَتَلَ இன்னும் கொன்றார் دَاوٗدُ தாவூது جَالُوْتَ ஜாலூத்தை وَاٰتٰٮهُ இன்னும் அவருக்குக் கொடுத்தான் اللّٰهُ அல்லாஹ் الْمُلْكَ ஆட்சியை وَالْحِکْمَةَ இன்னும் ஞானம் وَعَلَّمَهٗ இன்னும் அவருக்குக் கற்பித்தான் مِمَّا எதிலிருந்து يَشَآءُ ؕ நாடுகிறான் وَلَوْلَا இல்லையென்றால் دَفْعُ தடுப்பது اللّٰهِ அல்லாஹ்வின் النَّاسَ மக்களை بَعْضَهُمْ அவர்களில் சிலரை விட்டு بِبَعْضٍ சிலரைக் கொண்டு لَّفَسَدَتِ உறுதியாக அழிந்து விடும் الْاَرْضُ பூமி وَلٰـکِنَّ எனினும் اللّٰهَ அல்லாஹ் ذُوْ فَضْلٍ அருளுடையவன் عَلَى மீது الْعٰلَمِيْنَ‏ உலகத்தார்கள்
2:251. இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.
2:273
2:273 لِلْفُقَرَآءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَآءَ مِنَ التَّعَفُّفِ‌ۚ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْ‌ۚ لَا يَسْــٴَــلُوْنَ النَّاسَ اِلْحَــافًا ‌ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ‏
لِلْفُقَرَآءِ ஏழைகளுக்கு الَّذِيْنَ எவர்கள் اُحْصِرُوْا தடுக்கப்பட்டார்கள் فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் لَا يَسْتَطِيْعُوْنَ இயலமாட்டார்கள் ضَرْبًا பயணிக்க فِى الْاَرْضِ பூமியில் يَحْسَبُهُمُ அவர்களை நினைக்கிறார் الْجَاهِلُ அறியாதவர் اَغْنِيَآءَ செல்வந்தர்களாக مِنَ التَّعَفُّفِ‌ۚ ஒழுக்கத்தால் تَعْرِفُهُمْ நீர் அவர்களை புரியலாம் بِسِيْمٰهُمْ‌ۚ அவர்களின் அடையாளத்தால் لَا یَسْـَٔلُوْنَ யாசிக்க மாட்டார்கள் النَّاسَ மக்களிடம் اِلْحَــافًا ؕ வலியுறுத்திக் கேட்பது وَمَا எதை تُنْفِقُوْا நீங்கள் தர்மம் புரிந்தாலும் مِنْ خَيْرٍ செல்வத்திலிருந்து فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் بِهٖ அதை عَلِيْمٌ‏ நன்கறிந்தவன்
2:273. பூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்; அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்; அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.
3:14
3:14 زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَـنِيْنَ وَالْقَنَاطِيْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَـيْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَـرْثِ‌ؕ ذٰ لِكَ مَتَاعُ الْحَيٰوةِ الدُّنْيَا ‌ۚ وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ‏
زُيِّنَ அலங்கரிக்கப்பட்டுள்ளது لِلنَّاسِ மக்களுக்கு حُبُّ நேசிப்பது الشَّهَوٰتِ விருப்பங்கள் مِنَ இருந்து النِّسَآءِ பெண்கள் وَالْبَـنِيْنَ இன்னும் ஆண் பிள்ளைகள் وَالْقَنَاطِيْرِ இன்னும் குவியல்கள் الْمُقَنْطَرَةِ குவிக்கப்பட்டவை مِنَ இருந்து الذَّهَبِ தங்கம் وَالْفِضَّةِ இன்னும் வெள்ளி وَالْخَـيْلِ இன்னும் குதிரைகள் الْمُسَوَّمَةِ அடையாளமிடப் பட்டவை وَالْاَنْعَامِ இன்னும் கால்நடைகள் وَالْحَـرْثِ‌ؕ இன்னும் விளை நிலம் ذٰ لِكَ இவை مَتَاعُ இன்பம் الْحَيٰوةِ வாழ்வின் الدُّنْيَا ۚ உலகம் وَاللّٰهُ அல்லாஹ் عِنْدَهٗ அவனிடம்தான் حُسْنُ அழகிய الْمَاٰبِ‏ தங்குமிடம்
3:14. பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
3:42
3:42 وَاِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ اصْطَفٰٮكِ وَطَهَّرَكِ وَاصْطَفٰٮكِ عَلٰى نِسَآءِ الْعٰلَمِيْنَ‏
وَاِذْ சமயம் قَالَتِ கூறினா(ர்க)ள் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يٰمَرْيَمُ மர்யமே! اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் اصْطَفٰٮكِ உம்மைத் தேர்ந்தெடுத்தான் وَطَهَّرَكِ இன்னும் உம்மைப் பரிசுத்தப்படுத்தினான் وَاصْطَفٰٮكِ இன்னும் உம்மைத் தேர்ந்தெடுத்தான் عَلٰى نِسَآءِ பெண்களைவிட الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களின்
3:42. (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள்; மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்” (என்றும்),
3:45
3:45 اِذْ قَالَتِ الْمَلٰٓٮِٕكَةُ يٰمَرْيَمُ اِنَّ اللّٰهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ ۖ اسْمُهُ الْمَسِيْحُ عِيْسَى ابْنُ مَرْيَمَ وَجِيْهًا فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏
اِذْ قَالَتِ கூறியசமயம் الْمَلٰٓٮِٕكَةُ வானவர்கள் يٰمَرْيَمُ மர்யமே! اِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் يُبَشِّرُكِ உமக்கு நற்செய்தி கூறுகிறான் بِكَلِمَةٍ ஒரு வார்த்தையைக் கொண்டு مِّنْهُ ۖ அவனிடமிருந்து اسْمُهُ அதன் பெயர் الْمَسِيْحُ அல் மஸீஹ் عِيْسَى ஈஸா ابْنُ مَرْيَمَ மர்யமுடைய மகன் وَجِيْهًا கம்பீரமானவராக فِى الدُّنْيَا இம்மையில் وَالْاٰخِرَةِ இன்னும் மறுமை وَمِنَ الْمُقَرَّبِيْنَۙ‏ நெருக்கமானவர்களில்
3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;
3:96
3:96 اِنَّ اَوَّلَ بَيْتٍ وُّضِعَ لِلنَّاسِ لَـلَّذِىْ بِبَكَّةَ مُبٰرَكًا وَّهُدًى لِّلْعٰلَمِيْنَ‌‌ۚ‏
اِنَّ நிச்சயமாக اَوَّلَ முதல் بَيْتٍ இல்லம் وُّضِعَ அமைக்கப்பட்டது لِلنَّاسِ மக்களுக்கு لَـلَّذِىْ எதுதான் بِبَكَّةَ பக்கா வில் مُبٰرَكًا அருள்செய்யப்பட்டது وَّهُدًى இன்னும் நேர்வழி لِّلْعٰلَمِيْنَ‌ۚ‏ அகிலத்தார்களுக்கு
3:96. (இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.
3:97
3:97 فِيْهِ اٰيٰتٌ ۢ بَيِّنٰتٌ مَّقَامُ اِبْرٰهِيْمَۚ  وَمَنْ دَخَلَهٗ كَانَ اٰمِنًا ‌ؕ وَلِلّٰهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ اِلَيْهِ سَبِيْلًا ‌ؕ وَمَنْ كَفَرَ فَاِنَّ اللّٰهَ غَنِىٌّ عَنِ الْعٰلَمِيْنَ‏
فِيْهِ அதில் اٰيٰتٌ ۢ அத்தாட்சிகள் بَيِّنٰتٌ தெளிவானவை مَّقَامُ நின்ற இடம் اِبْرٰهِيْمَۚ இப்றாஹீம் وَمَنْ இன்னும் எவர் دَخَلَهٗ நுழைகிறார்/அதில் كَانَ ஆகி விட்டார் اٰمِنًا ؕ அச்சமற்றவராக وَلِلّٰهِ அல்லாஹ்வுக்காக عَلَى மீது النَّاسِ மக்கள் حِجُّ ஹஜ் செய்வது الْبَيْتِ இல்லத்தை مَنِ எவர் اسْتَطَاعَ சக்தி பெற்றார் اِلَيْهِ அதன் பக்கம் سَبِيْلًا ؕ பாதையால் وَمَنْ இன்னும் எவர் كَفَرَ நிராகரித்தார் فَاِنَّ اللّٰهَ நிச்சயமாக அல்லாஹ் غَنِىٌّ தேவையற்றவன் عَنِ விட்டு الْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களை
3:97. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான்.
3:108
3:108 تِلْكَ اٰيٰتُ اللّٰهِ نَـتْلُوْهَا عَلَيْكَ بِالْحَـقِّ‌ؕ وَمَا اللّٰهُ يُرِيْدُ ظُلْمًا لِّلْعٰلَمِيْنَ‏
تِلْكَ இவை اٰيٰتُ வசனங்கள் اللّٰهِ அல்லாஹ்வின் نَـتْلُو ஓதுகிறோம் هَا அவற்றை عَلَيْكَ உம்மீது بِالْحَـقِّ‌ؕ உண்மையாகவே وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் يُرِيْدُ நாடுகிறான் ظُلْمًا அநியாயத்தை لِّلْعٰلَمِيْنَ‏ அகிலத்தார்களுக்கு
3:108. (நபியே!) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்; மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.
3:145
3:145 وَمَا كَانَ لِنَفْسٍ اَنْ تَمُوْتَ اِلَّا بِاِذْنِ اللّٰهِ كِتٰبًا مُّؤَجَّلًا ؕ وَ مَنْ يُّرِدْ ثَوَابَ الدُّنْيَا نُؤْتِهٖ مِنْهَا ‌ۚ وَمَنْ يُّرِدْ ثَوَابَ الْاٰخِرَةِ نُؤْتِهٖ مِنْهَا ‌ؕ وَسَنَجْزِى الشّٰكِرِيْنَ‏
وَمَا كَانَ (சாத்தியம்) இல்லை لِنَفْسٍ ஓர் ஆத்மாவிற்கு اَنْ تَمُوْتَ மரணிப்பது اِلَّا தவிர بِاِذْنِ அனுமதியுடன் اللّٰهِ அல்லாஹ்வின் كِتٰبًا விதிக்கு ஏற்ப مُّؤَجَّلًا ؕ காலம் குறிக்கப்பட்ட وَ مَنْ يُّرِدْ இன்னும் எவர்/நாடுவாரோ ثَوَابَ நன்மையை الدُّنْيَا உலகத்தின் نُؤْتِهٖ அவருக்கு கொடுப்போம் مِنْهَا ۚ அதிலிருந்து وَمَنْ இன்னும் எவர் يُّرِدْ நாடுவாரோ ثَوَابَ நன்மையை الْاٰخِرَةِ மறுமையின் نُؤْتِهٖ அவருக்கு கொடுப்போம் مِنْهَا ؕ அதிலிருந்து وَسَنَجْزِى கூலி வழங்குவோம் الشّٰكِرِيْنَ‏ நன்றி செலுத்துபவர்கள்
3:145. மேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹ்வின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை; எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலிருந்தே வழங்குவோம்; இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்; நன்றியுடையோருக்கு அதி சீக்கிரமாக நற்கூலி கொடுக்கிறோம்.
3:185
3:185 كُلُّ نَفْسٍ ذَآٮِٕقَةُ الْمَوْتِ‌ؕ وَاِنَّمَا تُوَفَّوْنَ اُجُوْرَكُمْ يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَاُدْخِلَ الْجَـنَّةَ فَقَدْ فَازَ ‌ؕ وَمَا الْحَيٰوةُ الدُّنْيَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ‏
كُلُّ ஒவ்வொரு نَفْسٍ ஆன்மா ذَآٮِٕقَةُ சுவைக்கக் கூடியது الْمَوْتِ‌ؕ மரணத்தை وَاِنَّمَا எல்லாம் تُوَفَّوْنَ முழுமையாக நிறைவேற்றப்படுவீர்கள் اُجُوْرَكُمْ உங்கள் கூலிகளை يَوْمَ الْقِيٰمَةِ‌ؕ மறுமை நாளில் فَمَنْ ஆகவே, எவர் زُحْزِحَ தூரமாக்கப்பட்டார் عَنِ النَّارِ நெருப்பி லிருந்து وَاُدْخِلَ இன்னும் நுழைக்கப்பட்டார் الْجَـنَّةَ சொர்க்கத்தில் فَقَدْ فَازَ ؕ திட்டமாக வெற்றிபெற்றார் وَمَا இன்னும் இல்லை الْحَيٰوةُ வாழ்க்கை الدُّنْيَاۤ இவ்வுலகம் اِلَّا தவிர مَتَاعُ இன்பம் الْغُرُوْرِ‏ மயக்கக் கூடியது
3:185. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.