தேடல்


58:4
58:4 فَمَنْ لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ مِنْ قَبْلِ اَنْ يَّتَمَآسَّاؕ فَمَنْ لَّمْ يَسْتَطِعْ فَاِطْعَامُ سِتِّيْنَ مِسْكِيْنًا‌ؕ ذٰلِكَ لِتُؤْمِنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ‌ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ؕ وَلِلْكٰفِرِيْنَ عَذَابٌ اَلِیْمٌ‏
فَمَنْ எவர் لَّمْ يَجِدْ வசதி பெறவில்லையோ فَصِيَامُ நோன்பிருக்க வேண்டும் شَهْرَيْنِ இரண்டு மாதங்கள் مُتَتَابِعَيْنِ தொடர்ந்து مِنْ قَبْلِ முன்னர் اَنْ يَّتَمَآسَّاؕ இருவரும் இணைவதற்கு فَمَنْ எவர் لَّمْ يَسْتَطِعْ சக்தி பெறவில்லையோ فَاِطْعَامُ உணவளிக்கட்டும் سِتِّيْنَ அறுபது مِسْكِيْنًا‌ؕ ஏழைகளுக்கு ذٰلِكَ இது لِتُؤْمِنُوْا ஏனெனில்/நம்பிக்கை கொள்கின்றீர்கள் بِاللّٰهِ அல்லாஹ்வையும் وَرَسُوْلِهٖ‌ؕ அவனது தூதரையும் وَتِلْكَ இவை حُدُوْدُ சட்டங்களாகும் اللّٰهِ‌ؕ அல்லாஹ்வின் وَلِلْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களுக்கு عَذَابٌ தண்டனை اَلِیْمٌ‏ வலி தரக்கூடிய(து)
58:4. ஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும்; நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்லாஹ் விதிக்கும் வரம்புகளாகும்; அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.
66:5
66:5 عَسٰى رَبُّهٗۤ اِنْ طَلَّقَكُنَّ اَنْ يُّبْدِلَهٗۤ اَزْوَاجًا خَيْرًا مِّنْكُنَّ مُسْلِمٰتٍ مُّؤْمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓٮِٕبٰتٍ عٰبِدٰتٍ سٰٓٮِٕحٰتٍ ثَيِّبٰتٍ وَّاَبْكَارًا‏
عَسٰى கூடும் رَبُّهٗۤ அவருடைய இறைவன் اِنْ طَلَّقَكُنَّ அவர் உங்களை விவாகரத்து செய்து விட்டால் اَنْ يُّبْدِلَهٗۤ அவருக்கு பகரமாக வழங்குவான் اَزْوَاجًا மனைவிகளை خَيْرًا சிறந்தவர்களான مِّنْكُنَّ உங்களை விட مُسْلِمٰتٍ முற்றிலும் பணியக்கூடிய مُّؤْمِنٰتٍ நம்பிக்கை கொள்ளக்கூடிய قٰنِتٰتٍ கீழ்ப்படியக்கூடிய تٰٓٮِٕبٰتٍ வணக்க வழிபாடு செய்யக்கூடிய عٰبِدٰتٍ வணக்க வழிபாடு செய்யக்கூடிய سٰٓٮِٕحٰتٍ நோன்பு நோற்கக்கூடிய ثَيِّبٰتٍ கன்னி கழிந்தவர்களும் وَّاَبْكَارًا‏ கன்னிகளும்
66:5. அவர் உங்களை “தலாக்” சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த - முஸ்லிம்களான, முஃமினான, (இறைவனுக்கு) வழிபட்டு நடப்பவர்களான, தவ்பா செய்பவர்களான, வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான - கன்னிமை கழிந்தவர், இன்னும் கன்னிப் பெண்டிர் - இத்தகையவரை அவருடைய இறைவன் அவருக்கு (உங்களுக்குப்) பகரமாக, மனைவியராய் கொடுக்கப் போதுமானவன்.