தேடல்


46:19
46:19 وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا‌ ۚ وَلِيُوَفِّيَهُمْ اَعْمَالَهُمْ وَهُمْ لَا يُظْلَمُوْنَ‏
وَلِكُلٍّ எல்லோருக்கும் دَرَجٰتٌ தகுதிகள் உண்டு مِّمَّا عَمِلُوْا‌ ۚ அவர்கள் செய்தவற்றின் அடிப்படையில் وَلِيُوَفِّيَهُمْ இன்னும் இறுதியாக அவன் அவர்களுக்கு முழு கூலி கொடுப்பான் اَعْمَالَهُمْ அவர்களுடைய செயல்களுக்கு وَهُمْ இன்னும் அவர்கள் لَا يُظْلَمُوْنَ‏ அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்
46:19. அன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு - ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
57:10
57:10 وَ مَا لَـكُمْ اَلَّا تُنْفِقُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ وَلِلّٰهِ مِيْـرَاثُ السَّمٰوٰتِ وَ الْاَرْضِ‌ؕ لَا يَسْتَوِىْ مِنْكُمْ مَّنْ اَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ‌ ؕ اُولٰٓٮِٕكَ اَعْظَمُ دَرَجَةً مِّنَ الَّذِيْنَ اَنْفَقُوْا مِنْۢ بَعْدُ وَقَاتَلُوْا‌ ؕ وَكُلًّا وَّعَدَ اللّٰهُ الْحُسْنٰى‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
وَ مَا لَـكُمْ உங்களுக்கு என்ன ஆனது? اَلَّا تُنْفِقُوْا நீங்கள் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு فِىْ سَبِيْلِ பாதையில் اللّٰهِ அல்லாஹ்வின் وَلِلّٰهِ அல்லாஹ்விற்கே مِيْـرَاثُ சொத்துக்கள் السَّمٰوٰتِ வானங்கள் وَ الْاَرْضِ‌ؕ இன்னும் பூமியின் لَا يَسْتَوِىْ சமமாக மாட்டார் مِنْكُمْ உங்களில் مَّنْ எவரும் اَنْفَقَ தர்மம் செய்தார் مِنْ قَبْلِ முன்னர் الْفَتْحِ வெற்றிக்கு وَقَاتَلَ‌ ؕ இன்னும் போர் செய்தார் اُولٰٓٮِٕكَ அவர்கள்தான் اَعْظَمُ மிக மகத்தான دَرَجَةً பதவி مِّنَ الَّذِيْنَ எவர்களைவிட اَنْفَقُوْا தர்மம் செய்தார்கள் مِنْۢ بَعْدُ இதற்குப் பின்னர் وَقَاتَلُوْا‌ ؕ இன்னும் போர் செய்தார்கள் وَكُلًّا எல்லோருக்கும் وَّعَدَ வாக்களித்துள்ளான் اللّٰهُ அல்லாஹ் الْحُسْنٰى‌ؕ சொர்க்கத்தை وَاللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்வதை خَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
57:10. அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.  
58:11
58:11 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ‌ ۚ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا நம்பிக்கையாளர்களே! اِذَا قِيْلَ கூறப்பட்டால் لَـكُمْ உங்களுக்கு تَفَسَّحُوْا இடம் கொடுங்கள் فِى الْمَجٰلِسِ சபைகளில் فَافْسَحُوْا இடம் கொடுங்கள்! يَفْسَحِ விசாலப்படுத்துவான் اللّٰهُ அல்லாஹ் لَـكُمْ‌ ۚ உங்களுக்கு وَاِذَا قِيْلَ கூறப்பட்டால் انْشُزُوْا நீங்கள் புறப்படுங்கள் فَانْشُزُوْا நீங்கள் புறப்படுங்கள் يَرْفَعِ உயர்த்துவான் اللّٰهُ அல்லாஹ் الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்களை مِنْكُمْ ۙ உங்களில் وَالَّذِيْنَ اُوْتُوا இன்னும் கொடுக்கப்பட்டவர்களை الْعِلْمَ கல்வி دَرَجٰتٍ ؕ பல அந்தஸ்துகள் وَاللّٰهُ அல்லாஹ் بِمَا تَعْمَلُوْنَ நீங்கள் செய்பவற்றை خَبِيْرٌ‏ ஆழ்ந்தறிபவன்
58:11. ஈமான் கொண்டவர்களே! சபைகளில் “நகர்ந்து இடங்கொடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, “எழுந்திருங்கள்” என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள்; அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்; கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
81:20
81:20 ذِىْ قُوَّةٍ عِنْدَ ذِى الْعَرْشِ مَكِيْنٍۙ‏
ذِىْ قُوَّةٍ பலமுடையவர் عِنْدَ ذِى الْعَرْشِ அர்ஷுடையவனிடம் مَكِيْنٍۙ‏ பதவியாளர்
81:20. (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
93:5
93:5 وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضٰىؕ‏
وَلَسَوْفَ يُعْطِيْكَ இன்னும் திட்டமாக உமக்குக் கொடுப்பான் رَبُّكَ உம் இறைவன் فَتَرْضٰىؕ‏ ஆகவே நீர் திருப்தியடைவீர்
93:5. இன்னும், உம்முடைய இறைவன் வெகு சீக்கிரம் உமக்கு (உயர் பதவிகளைக்) கொடுப்பான்; அப்பொழுது நீர் திருப்தியடைவீர்.