رياض الصالحين

10. كتاب الاعتكاف

ரியாதுஸ் ஸாலிஹீன்

10. இஃதிகாஃப் நூல்

- باب الاعتكاف في رمضان
ரமழான் மாதத்தில் இஃதிகாஃப் இருத்தல்
عن ابن عمر رضي الله عنهما، قال‏:‏ كان رسول الله صلى الله عليه وسلم يعتكف العشر الأواخر من رمضان‏.‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏
இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் (மற்றும் இரவுகளில்) இஃதிகாஃப் இருப்பார்கள்.
وعن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان، حتى توفاه الله، تعالى ثم اعتكف أزواجه من بعده‏.‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்தில் (நாட்களில்) இஃதிகாஃப் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பிறகு, அவர்களுடைய மனைவியரும் இஃதிகாஃப் இருந்தார்கள்.
وعن أبي هريرة رضي الله عنه قال‏:‏ كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان عشرة أيام، فلما كان العام الذي قبض فيه اعتكف عشرين يومًا ‏(‏‏(‏رواه البخاري‏)‏‏)‏‏.‏
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமழானிலும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள்; அவர்கள் மரணித்த ஆண்டில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.