صَحِيحُ ابْنِ حِبَّان

27. كِتَابُ الْكَفَالَةِ

ஸஹீஹ் இப்னு ஹிப்பான்

27. பிணை / ஜாமீன்

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْأَزْدِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: § «مَنْ تَرَكَ مَالًا، فَلِأَهْلِهِ، وَمَنْ تَرَكَ دَيْنًا، فَإِلَيَّ وَعَلَيَّ»
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால், அது அவரது குடும்பத்தினருக்கு (வாரிசுகளுக்கு) உரியதாகும். யாரேனும் கடனை (அல்லது ஆதரவற்ற குடும்பத்தாரை) விட்டுச் சென்றால், (அதை அடைக்கும் அல்லது அவர்களைப் பராமரிக்கும்) பொறுப்பு என்னையே சாரும்."
ஹதீஸ் தரம் : நம்பகமானது, ஆதாரப்பூர்வமானது
حسن صحيح