الشمائل المحمدية

44. باب ماجاء في قراءة رسول الله صلى الله عليه وسلم

அஷ்-ஷமாயில் அல்-முஹம்மதிய்யா

44. சய்யிதினா முஹம்மது நபிவின் ஓதல்

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ يَعَلَى بْنِ مَمْلَكٍ، أَنَّهُ سَأَلَ أُمَّ سَلَمَةَ، عَنْ قِرَاءَةِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، فَإِذَا هِيَ تَنْعَتُ قِرَاءَةً مُفَسَّرَةً حَرْفًا حَرْفًا‏.‏
இப்னு அபீ முலைக்கா அறிவித்தார்கள்:

யஃலா இப்னு மம்லக் அவர்கள், உம்மு ஸலமா (ரழி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குர்ஆன் ஓதுதல் முறை குறித்துக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், ஒவ்வொரு எழுத்தையும் தெளிவாகப் பிரித்து ஓதக்கூடிய குர்ஆன் ஓதுதல் முறையாக அதை விவரித்தார்கள்.

ஹதீஸ் தரம் : ஹஸன் (ஸுபைர் அலீ ஸயீ)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرِ بْنِ حَازِمٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، قَالَ‏:‏ قُلْتُ لأَنَسِ بْنِ مَالِكٍ‏:‏ كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم‏؟‏ فَقَالَ‏:‏ مَدًّا‏.‏
கத்தாதா கூறினார்கள்:
“நான் அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குர்ஆன் ஓதுதல் எப்படி இருந்தது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அவர்கள் நீட்டி ஓதுவார்கள்’ என்று கூறினார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் இஸ்னாத் (ஸுபைர் அலி ஸயீ)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ‏:‏ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم، يَقْطَعُ قِرَاءَتَهُ، يَقُولُ‏:‏ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ثُمَّ يَقِفُ، ثُمَّ يَقُولُ‏:‏ الرَّحْمَنِ الرَّحِيمِ ثُمَّ يَقِفُ، وَكَانَ يَقْرَأُ مَلِكِ يَوْمِ الدِّينِ‏.‏
உம்மு ஸலமா (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் தங்களின் குர்ஆன் ஓதுதலை நிறுத்தி நிறுத்தி ஓதுவார்கள். அவர்கள், “எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியது அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்,” என்பார்கள், பிறகு நிறுத்துவார்கள். பிறகு, “அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் அர்ரஹ்மானிர் ரஹீம்,” என்பார்கள், பிறகு நிறுத்திவிட்டு, “தீர்ப்பு நாளின் அதிபதி மாலிகி யவ்மித்தீன்” என்று ஓதுவார்கள்."

ஹதீஸ் தரம் : ஸனத் ளயீஃப் வல்-ஹதீஸ் ஹஸன் (ஸுபைர் அலி ஸயீ)
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي قَيْسٍ، قَالَ‏:‏ سَأَلْتُ عَائِشَةَ، عَنْ قِرَاءَةِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَكَانَ يُسِرُّ بِالْقِرَاءَةِ أَمْ يَجْهَرُ‏؟‏ قَالَتْ‏:‏ كُلُّ ذَلِكَ قَدْ كَانَ يَفْعَلُ قَدْ كَانَ رُبَّمَا أَسَرَّ وَرُبَّمَا جَهَرَ فَقُلْتُ‏:‏ الْحَمْدُ لِلَّهِ، الَّذِي جَعَلَ فِي الأَمْرِ سَعَةً‏.‏
அப்துல்லாஹ் இப்னு அபீ கைஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:

"நான் ஆயிஷா (ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் குர்ஆன் ஓதுதல் பற்றி, “அவர்கள் குர்ஆனை மெதுவாக ஓதுவார்களா அல்லது சப்தமாக ஓதுவார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: “அவர்கள் இரண்டு விதமாகவும் செய்வார்கள். சில சமயங்களில் மெதுவாகவும், சில சமயங்களில் சப்தமாகவும் ஓதுவார்கள்.” அதனால் நான், “இந்த விஷயத்தில் நமக்கு இலகுத்தன்மையை வழங்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!” என்று கூறினேன்."

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் இஸ்னாத் (ஸுபைர் அலி ஸயீ)
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلانَ، قَالَ‏:‏ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ أَبِي الْعَلاءِ الْعَبْدِيِّ، عَنْ يَحْيَى بْنِ جَعْدَةَ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ‏:‏ كُنْتُ أَسْمَعُ قِرَاءَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم، بِاللَّيْلِ وَأَنَا عَلَى عَرِيشِي‏.‏
உம்மு ஹானி (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“நான் எனது படுக்கையில் இருந்தபடியே, இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதுவதை கேட்பேன்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (ஸுபைர் அலீ ஸயீ)
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلانَ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، قَالَ‏:‏ سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ مُغَفَّلٍ، يَقُولُ‏:‏ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم، عَلَى نَاقَتِهِ يَوْمَ الْفَتْحِ، وَهُوَ يَقْرَأُ‏:‏ إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ، قَالَ‏:‏ فَقَرَأَ وَرَجَّعَ، قَالَ‏:‏ وَقَالَ مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ‏:‏ لَوْلا أَنْ يَجْتَمِعَ النَّاسُ عَلَيَّ لأَخَذْتُ لَكُمْ فِي ذَلِكَ الصَّوْتِ أَوْ قَالَ‏:‏ اللَّحْنِ‏.‏
அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரழி) கூறினார்கள்:

“வெற்றி நாளில் நபி (ஸல்) அவர்கள் தமது பெண் ஒட்டகத்தின் மீது இருந்து, “நிச்சயமாக நாம் உமக்கு ஒரு தெளிவான வெற்றியை வழங்கியுள்ளோம். அல்லாஹ் உங்களுடைய முந்தைய மற்றும் பிந்தைய பாவங்களை மன்னிப்பதற்காக இன்னஃபதஹ்னா ல-க ஃபத்ஹன் முபீனா லி-யஃக்ஃபிர ல-க ல்லாஹு மா தகத்தம மின் தன்பி-க வ மா தஅஃக்கற.” (அல் குர்ஆன் 48:1-2) என்று ஓதிக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்கள் தழுதழுத்த குரலில் ஓதினார்கள்.”

ஹதீஸ் தரம் : ஸஹீஹ் இஸ்னாத் (ஸுபைர் அலி ஸயீ)
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا نُوحُ بْنُ قَيْسٍ الْحُدَّانِيُّ، عَنْ حُسَامِ بْنِ مِصَكٍّ، عَنْ قَتَادَةَ، قَالَ‏:‏ مَا بَعَثَ اللَّهُ نَبِيًّا إِلا حَسَنَ الْوَجْهِ، حَسَنَ الصَّوْتِ، وَكَانَ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم حَسَنَ الْوَجْهِ، حَسَنَ الصَّوْتِ، وَكَانَ لا يُرَجِّعُ‏.‏
கதாதா கூறினார்கள்:
“அல்லாஹ், அழகான முகத்தையும் அழகான குரலையும் வழங்கியே அன்றி எந்த நபியையும் அனுப்பியதில்லை; உங்கள் நபி (ஸல்) அவர்கள் அழகான முகத்தையும் அழகான குரலையும் கொண்டிருந்தார்கள், மேலும், அவர்கள் நடுங்கும் குரலில் ஓதமாட்டார்கள்.”

ஹதீஸ் தரம் : பலவீனமான அறிவிப்பாளர் தொடர் (ஸுபைர் அலீ ஸயீ)
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، قَالَ‏:‏ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ‏:‏ كَانَتْ قِرَاءَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم، رُبَّمَا يَسْمَعُهَا مَنْ فِي الْحُجْرَةِ وَهُوَ فِي الْبَيْتِ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
: “நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும்போது, அவர்களின் குர்ஆன் ஓதுதல் சில சமயங்களில் அறையில் உள்ளவர்களுக்குக் கேட்கும்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் இஸ்நாத் (ஸுபைர் அலீ ஸயீ)