110. ஸூரத்துந் நஸ்ர் (உதவி)

மதனீ, வசனங்கள்: 3

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُ ۟ۙ
اِذَا جَآءَவந்தால்نَصْرُஉதவிاللّٰهِஅல்லாஹ்வுடையوَالْفَتْحُۙ‏இன்னும் வெற்றி
இத ஜா'அ னஸ்ருல்-லாஹி வல்Fபத்ஹ்
அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும்,
وَرَاَیْتَ النَّاسَ یَدْخُلُوْنَ فِیْ دِیْنِ اللّٰهِ اَفْوَاجًا ۟ۙ
وَرَاَيْتَஇன்னும் நீர் பார்த்தால்النَّاسَமக்களைيَدْخُلُوْنَநுழைபவர்களாகفِىْ دِيْنِமார்க்கத்தில்اللّٰهِஅல்லாஹ்வுடையاَفْوَاجًا ۙ‏கூட்டம் கூட்டமாக
வ ர-அய்தன் னாஸ யத்குலூன Fபீ தீனில் லாஹி அFப்வஜா
மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا ۟۠
فَسَبِّحْதுதித்து தூய்மைப்படுத்துவீராகبِحَمْدِபுகழைرَبِّكَஉம் இறைவனின்وَاسْتَغْفِرْهُ‌ ؔؕஇன்னும் அவனிடம் மன்னிப்புக் கோருவீராகاِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருக்கிறான்تَوَّابًا‏மகா மன்னிப்பாளனாக
FபஸBப்Bபிஹ் Bபிஹம்தி ரBப்Bபிக வஸ்தக்Fபிர்ஹ், இன்னஹூ கான தவ்வாBபா
உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.