46. ஸூரத்துல் அஹ்காஃப் (மணல் திட்டுகள்)

மக்கீ, வசனங்கள்: 35

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
تَنْزِیْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
تَنْزِیْلُஅருளப்பட்டதுالْكِتٰبِஇவ்வேதம்مِنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்الْعَزِیْزِமிகைத்தவன்الْحَكِیْمِஞானமிக்கவன்
தன்Zஜீலுல் கிதாBபி மினல் லாஹில்-'அZஜீZஜில் ஹகீம்
இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.
مَا خَلَقْنَا السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّی ؕ وَالَّذِیْنَ كَفَرُوْا عَمَّاۤ اُنْذِرُوْا مُعْرِضُوْنَ ۟
مَاஇல்லைخَلَقْنَاநாம் படைத்தோம்السَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَமற்றும் பூமியைوَ مَاமேலும் எவற்றைبَیْنَهُمَاۤஅவ்விரண்டிற்கும் இடையில்اِلَّاதவிரبِالْحَقِّசத்தியத்தைக் கொண்டுوَ اَجَلٍமற்றும் ஒரு காலக்கெடுவுடனும்مُّسَمًّی ؕநிர்ணயிக்கப்பட்டوَ الَّذِیْنَஆனால் எவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோعَمَّاۤஎதை விட்டும்اُنْذِرُوْاஅவர்கள் எச்சரிக்கப்பட்டார்களோمُعْرِضُوْنَபுறக்கணிக்கிறார்கள்
மா கலக்னஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா இல்லா Bபில்ஹக்கி வ அஜலிம் முஸம்மா; வல்லதீன கFபரூ 'அம்மா உன்திரூ முஃரிளூன்
வானங்களையும், பூமியையும் இவையிரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் உண்மையையும், ஒரு குறிப்பிட்ட தவணையையும் கொண்டல்லாமல் நாம் படைக்கவில்லை; ஆனால் நிராகரிப்பவர்களோ, தங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்டதைப் புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள்.
قُلْ اَرَءَیْتُمْ مَّا تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ اَرُوْنِیْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِی السَّمٰوٰتِ ؕ اِیْتُوْنِیْ بِكِتٰبٍ مِّنْ قَبْلِ هٰذَاۤ اَوْ اَثٰرَةٍ مِّنْ عِلْمٍ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
قُلْகூறுவீராகاَرَءَیْتُمْநீங்கள் கவனித்தீர்களாمَّاஎவற்றைتَدْعُوْنَநீங்கள் அழைக்கிறீர்களோمِنْஅன்றிدُوْنِதவிரاللّٰهِஅல்லாஹ்வைاَرُوْنِیْஎனக்குக் காட்டுங்கள்مَا ذَاஎதனைخَلَقُوْاஅவர்கள் படைத்தார்கள்مِنَஇருந்துالْاَرْضِபூமியில்اَمْஅல்லதுلَهُمْஅவர்களுக்குشِرْكٌபங்குفِیஇல்السَّمٰوٰتِ ؕவானங்களில்اِیْتُوْنِیْஎனக்குக் கொண்டு வாருங்கள்بِكِتٰبٍஒரு வேதத்தைمِّنْஇருந்துقَبْلِமுன்னர்هٰذَاۤஇதற்குاَوْஅல்லதுاَثٰرَةٍசான்றுمِّنْஇருந்துعِلْمٍஅறிவின்اِنْஇருந்தால்كُنْتُمْநீங்கள்صٰدِقِیْنَஉண்மையாளர்களாக
குல் அர'அய்தும் மா தத்'ஊன மின் தூனில் லாஹி அரூனீ மாதா கலகூ மினல் அர்ளி அம் லஹும் ஷிர்குன் Fபிஸ் ஸமாவாதி ஈதூனீ Bபி கிதாBபிம் மின் கBப்லி ஹாதா அவ் அதாரதிம் மின் 'இல்மின் இன் குன்தும் ஸாதிகீன்
“நீங்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை கவனித்தீர்களா? பூமியிலுள்ள எதை அவை படைத்துள்ளன; அல்லது அவற்றுக்கு வானங்களில் ஏதாவது பங்கு உண்டா? என்பதை எனக்குக் காண்பியுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், இதற்கு, முன்னேயுள்ள ஒரு வேதத்தையோ அல்லது (முன்னோர்களின்) அறிவு ஞானங்களில் மிஞ்சிய ஏதேனும் பகுதியையோ (உங்கள் கூற்றுக்கு ஆதாரமாக) என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
وَمَنْ اَضَلُّ مِمَّنْ یَّدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَنْ لَّا یَسْتَجِیْبُ لَهٗۤ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ وَهُمْ عَنْ دُعَآىِٕهِمْ غٰفِلُوْنَ ۟
وَ مَنْமேலும் எவர்اَضَلُّமிகவும் வழிகெட்டவர்مِمَّنْஅவரை விடیَّدْعُوْاபிரார்த்திக்கிறாரோمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைمَنْஎவர்களைلَّاமாட்டார்களோیَسْتَجِیْبُபதிலளிக்கلَهٗۤஅவருக்குاِلٰیவரைیَوْمِநாள்الْقِیٰمَةِமறுமைوَ هُمْமேலும் அவர்கள்عَنْபற்றிدُعَآىِٕهِمْஅவர்களின் பிரார்த்தனையைغٰفِلُوْنَகவனமற்றவர்கள்
வ மன் அளல்லு மிம்ம(ன்)ய் யத்'ஊ மின் தூனில் லாஹி மல்லா யஸ்தஜீBபு லஹூ இலா யவ்மில் கியாமதி வ ஹும்'அன் து'ஆ'இஹிம் காFபிலூன்
கியாம நாள்வரை (அழைத்தாலும்) தனக்கு பதில் கொடுக்க மாட்டாத - அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களைவிட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறியமுடியாது.
وَاِذَا حُشِرَ النَّاسُ كَانُوْا لَهُمْ اَعْدَآءً وَّكَانُوْا بِعِبَادَتِهِمْ كٰفِرِیْنَ ۟
وَ اِذَاமேலும் எப்போதுحُشِرَஒன்றுதிரட்டப்படுவார்களோالنَّاسُமனிதர்கள்كَانُوْاஅவர்கள் ஆகிவிடுவார்கள்لَهُمْஅவர்களுக்குاَعْدَآءًபகைவர்களாகوَّ كَانُوْاமேலும் அவர்கள் இருப்பார்கள்بِعِبَادَتِهِمْஅவர்களின் வணக்கத்தைكٰفِرِیْنَநிராகரிப்பவர்களாக
வ இதா ஹுஷிரன் னாஸு கானூ லஹும் அஃதா'அ(ன்)வ் வ கானூ Bபி'இBபாததிஹிம் காFபிரீன்
அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும் (அந்நாளில்) இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர்; அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து (மறுத்து) விடுவர்.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ هٰذَا سِحْرٌ مُّبِیْنٌ ۟ؕ
وَ اِذَاமேலும் எப்போதுتُتْلٰیஓதிக்காட்டப்படுகிறதோعَلَیْهِمْஅவர்களுக்குاٰیٰتُنَاநம்முடைய வசனங்கள்بَیِّنٰتٍதெளிவானவைகளாகقَالَகூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلِلْحَقِّசத்தியத்தைப் பற்றிلَمَّاபோதுجَآءَهُمْ ۙஅவர்களிடம் வந்தهٰذَاஇதுسِحْرٌசூனியம்مُّبِیْنٌؕதெளிவானது
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலல் லதீன கFபரூ லில்ஹக்கி லம்மா ஜா'அஹும் ஹாதா ஸிஹ்ரும் முBபீன்
மேலும், நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால் தங்களிடம் வந்த அந்த உண்மையை நிராகரித்து விட்டார்களே அவர்கள், “இது தெளிவான சூனியமே!” என்றும் கூறுகிறார்கள்.
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ قُلْ اِنِ افْتَرَیْتُهٗ فَلَا تَمْلِكُوْنَ لِیْ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ هُوَ اَعْلَمُ بِمَا تُفِیْضُوْنَ فِیْهِ ؕ كَفٰی بِهٖ شَهِیْدًا بَیْنِیْ وَبَیْنَكُمْ ؕ وَهُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟
اَمْஅல்லதுیَقُوْلُوْنَஅவர்கள் கூறுகிறார்களாافْتَرٰىهُ ؕஇதனை அவர் இட்டுக்கட்டிக்கொண்டார்قُلْநீர் கூறுவீராகاِنِஒருவேளைافْتَرَیْتُهٗநான் இதனை இட்டுக்கட்டியிருந்தால்فَلَاஅப்படியானால் இல்லைتَمْلِكُوْنَநீங்கள் சக்தி பெற்றவர்கள்لِیْஎனக்காகمِنَஇடமிருந்துاللّٰهِஅல்லாஹ்شَیْـًٔا ؕஎதனையும்هُوَஅவன்اَعْلَمُநன்கறிந்தவன்بِمَاஎதில்تُفِیْضُوْنَநீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்களோفِیْهِ ؕஅதில்كَفٰیபோதுமானவன்بِهٖஅவனேشَهِیْدًۢاசாட்சியாகبَیْنِیْஎனக்கும்وَ بَیْنَكُمْ ؕஉங்களுக்கும் இடையில்وَ هُوَமேலும் அவன்الْغَفُوْرُமிக்க மன்னிப்பவன்الرَّحِیْمُமிகக் கருணையுடையவன்
அம் யகூலூனFப் தராஹு குல் இனிFப் தரய்துஹூ Fபலா தம்லிகூன லீ மினல் லாஹி ஷய்'அன் ஹுவ அஃலமு Bபிமா துFபீளூன Fபீஹி கFபா Bபிஹீ ஷஹீதம் Bபய்னீ வ Bபய்னகும் வ ஹுவல் கFபூருர் ரஹீம்
அல்லது, “இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார்” என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக: “நான் இதை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே; அப்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்கு ஏற்படும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள். நீங்கள் இதைப் பற்றி என்னென்ன கூறுகிறீர்களோ, அதை அவன் நன்கறிகிறவன்; எனக்கும் உங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான்; அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்” என்று (நபியே! நீர் கூறும்).
قُلْ مَا كُنْتُ بِدْعًا مِّنَ الرُّسُلِ وَمَاۤ اَدْرِیْ مَا یُفْعَلُ بِیْ وَلَا بِكُمْ ؕ اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ وَمَاۤ اَنَا اِلَّا نَذِیْرٌ مُّبِیْنٌ ۟
قُلْகூறுவீராகمَاஇல்லைكُنْتُநான்بِدْعًاபுதியவன்مِّنَஇருந்துالرُّسُلِதூதர்கள்وَ مَاۤமேலும் இல்லைاَدْرِیْநான் அறிவேன்مَاஎன்னیُفْعَلُசெய்யப்படும்بِیْஎனக்குوَ لَاமேலும் இல்லைبِكُمْ ؕஉங்களுக்குاِنْஇல்லைاَتَّبِعُநான் பின்பற்றுகிறேன்اِلَّاதவிரمَاஎதைیُوْحٰۤیஅறிவிக்கப்படுகிறதோاِلَیَّஎனக்குوَ مَاۤமேலும் இல்லைاَنَاநான்اِلَّاதவிரنَذِیْرٌஎச்சரிக்கை செய்பவன்مُّبِیْنٌதெளிவான
குல் மா குன்து Bபித்'அம் மினல் ருஸுலி வ மா அத்ரீ ம யுFப்'அலு Bபீ வலா Bபிகும் இன் அத்தBபி'உ இல்லா மா யூஹா இலய்ய வ மா அன இல்லா னதீரும் முBபீன்
“(இறை) தூதர்களில் நாம் புதிதாக வந்தவனல்லன்; மேலும் என்னைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ, என்ன செய்யப்படும் என்பதை நான் அறியமாட்டேன், எனக்கு என்ன வஹீ அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர (வேறெதையும்) நான் பின்பற்றுவதில்லை; தெளிவாக அச்சமூட்டி எச்சரிப்பவனேயன்றி நான் வேறில்லை” என்று (நபியே!) நீர் கூறும்.
قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ وَكَفَرْتُمْ بِهٖ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ بَنِیْۤ اِسْرَآءِیْلَ عَلٰی مِثْلِهٖ فَاٰمَنَ وَاسْتَكْبَرْتُمْ ؕ اِنَّ اللّٰهَ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟۠
قُلْகூறுவீராகاَرَءَیْتُمْநீங்கள் கவனித்தீர்களாاِنْஒருவேளைكَانَஇருந்தால்مِنْஇருந்துعِنْدِஇடத்திலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்وَ كَفَرْتُمْமேலும் நீங்கள் நிராகரித்தீர்கள்بِهٖஇதனைوَ شَهِدَமேலும் சாட்சி கூறினார்شَاهِدٌஒரு சாட்சியாளர்مِّنْۢஇருந்துبَنِیْۤசந்ததியினரில்اِسْرَآءِیْلَஇஸ்ராயீல்عَلٰیமீதுمِثْلِهٖஇதைப் போன்றதின்فَاٰمَنَஆகவே அவர் நம்பிக்கை கொண்டார்وَ اسْتَكْبَرْتُمْ ؕமேலும் நீங்கள் பெருமையடித்தீர்கள்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَاமாட்டான்یَهْدِیநேர்வழி காட்டالْقَوْمَகூட்டத்தாருக்குالظّٰلِمِیْنَ۠அநியாயக்கார
குல் அர'அய்தும் இன் கான மின் 'இன்தில் லாஹி வ கFபர்தும் Bபிஹீ வ ஷஹித ஷாஹிதும் மிம் Bபனீ இஸ்ரா'ஈல 'அலா மித்லிஹீ Fப ஆமன வஸ்தக் Bபர்தும் இன்னல் லாஹ லா யஹ்தில் கவ்மள் ளாலிமீன்
“இது அல்லாஹ்விடமிருந்து வந்திருந்து இஸ்ராயீலின் மக்களில் ஒரு சாட்சியானவர் இது போன்றது (வர வேண்டியிருந்தது) என்பதில் சாட்சியங்கூறி ஈமான் கொண்டிருக்கும் போது இதனை நீங்கள் நிராகரித்து பெருமை அடித்துக் கொண்டால் (உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் கவனித்தீர்களா?” என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார சமூகத்திற்கு நேர்வழி காட்டமாட்டான்.  
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوْا لَوْ كَانَ خَیْرًا مَّا سَبَقُوْنَاۤ اِلَیْهِ ؕ وَاِذْ لَمْ یَهْتَدُوْا بِهٖ فَسَیَقُوْلُوْنَ هٰذَاۤ اِفْكٌ قَدِیْمٌ ۟
وَ قَالَமேலும் கூறினார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோلِلَّذِیْنَஎவர்களைக் குறித்துاٰمَنُوْاஈமான் கொண்டார்களோلَوْஒருவேளைكَانَஅது இருந்திருந்தால்خَیْرًاநன்மையாகمَّاஇல்லைسَبَقُوْنَاۤஎங்களை முந்தியிருக்கاِلَیْهِ ؕஅதன்பால்وَ اِذْமேலும் எப்போதுلَمْஇல்லைیَهْتَدُوْاஅவர்கள் நேர்வழி பெறبِهٖஅதைக் கொண்டுفَسَیَقُوْلُوْنَஅப்பொழுது அவர்கள் கூறுவார்கள்هٰذَاۤஇதுاِفْكٌபொய்قَدِیْمٌபழமையான
வ காலல் லதீன கFபரூ லில்லதீன ஆமனூ லவ் கான கய்ரம் மா ஸBபகூனா இல்ய்ஹ்; வ இத் லம் யஹ்ததூ Bபிஹீ Fபஸ யகூலூன ஹாதா இFப்குன் கதீம்
நிராகரிப்பவர்கள் ஈமான் கொண்டவர்களைப்பற்றி: “இது (குர்ஆன்) நல்லதாக இருந்தால், இவர்கள் எங்களைவிட அதன்பால் முந்தியிருக்க மாட்டார்கள்” என்று கூறினார்கள். மேலுமவர்கள் இதைக் கொண்டு நேர்வழி பெறாத போது “இது பண்டைக்காலக் கட்டுக் கதை” எனக் கூறுவார்கள்.
وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ وَهٰذَا كِتٰبٌ مُّصَدِّقٌ لِّسَانًا عَرَبِیًّا لِّیُنْذِرَ الَّذِیْنَ ظَلَمُوْا ۖۗ وَبُشْرٰی لِلْمُحْسِنِیْنَ ۟ۚ
وَ مِنْமேலும் இதற்குقَبْلِهٖமுன்னர்كِتٰبُவேதம்مُوْسٰۤیமூஸாவின்اِمَامًاவழிகாட்டியாகவும்وَّ رَحْمَةً ؕஓர் அருளாகவும்وَ هٰذَاமேலும் இதுكِتٰبٌஒரு வேதமாகும்مُّصَدِّقٌமெய்ப்பிக்கக்கூடியلِّسَانًاமொழியில்عَرَبِیًّاஅரபுلِّیُنْذِرَஎச்சரிப்பதற்காகالَّذِیْنَஎவர்கள்ظَلَمُوْا ۖۗஅநீதி இழைத்தார்களோوَ بُشْرٰیமேலும் நற்செய்தியாகلِلْمُحْسِنِیْنَۚநன்மை செய்வோருக்கு
வ மின் கBப்லிஹீ கிதாBபு மூஸா இமாம(ன்)வ்-வ ரஹ்மஹ்; வ ஹாதா கிதாBபும் முஸத் திகுல் லிஸானன் 'அரBபிய்யல் லியுன்திரல் லதீன ளலமூ வ Bபுஷ்ரா லில்முஹ்ஸினீன்
இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது; (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.
اِنَّ الَّذِیْنَ قَالُوْا رَبُّنَا اللّٰهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۚ
اِنَّநிச்சயமாகالَّذِیْنَஎவர்கள்قَالُوْاகூறினார்களோرَبُّنَاஎங்கள் இறைவன்اللّٰهُஅல்லாஹ்ثُمَّபின்னர்اسْتَقَامُوْاஉறுதியாக நிலைத்திருந்தார்களோفَلَاஆகவே இல்லைخَوْفٌஅச்சம்عَلَیْهِمْஅவர்களுக்குوَ لَاமேலும் இல்லைهُمْஅவர்கள்یَحْزَنُوْنَۚகவலைப்படுவார்கள்
இன்னல் லதீன காலூ ரBப்Bபுனல் லாஹு தும்மஸ் தகாமூ Fபலா கவ்Fபுன் 'அலய்ஹிம் வ லாஹும் யஹ்Zஜனூன்
நிச்சயமாக எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்வே” என்று கூறி, பிறகு அதிலேயே நிலைத்து நிற்கிறார்களோ அவர்களுக்கு பயமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِ خٰلِدِیْنَ فِیْهَا ۚ جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
اُولٰٓىِٕكَஅவர்களேاَصْحٰبُவாசிகள்الْجَنَّةِசுவனத்தின்خٰلِدِیْنَநிலைத்திருப்பவர்கள்فِیْهَا ۚஅதில்جَزَآءًۢகூலியாகبِمَاஎதனால்كَانُوْاஅவர்கள்یَعْمَلُوْنَசெய்து கொண்டிருந்தார்களோ
உலா'இக அஸ்ஹாBபுல் ஜன்னதி காலிதீன Fபீஹா ஜZஜா'அம் Bபிமா கானூ யஃமலூன்
அவர்கள் தாம் சுவர்க்கவாசிகள்; அதில் அவர்கள் நன்மை செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாக அதில் அவர்கள் என்றென்றும் தங்குவார்கள்.
وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ اِحْسٰنًا ؕ حَمَلَتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا ؕ وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰثُوْنَ شَهْرًا ؕ حَتّٰۤی اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِیْنَ سَنَةً ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَصْلِحْ لِیْ فِیْ ذُرِّیَّتِیْ ؕۚ اِنِّیْ تُبْتُ اِلَیْكَ وَاِنِّیْ مِنَ الْمُسْلِمِیْنَ ۟
وَ وَصَّیْنَاமேலும் நாம் உபதேசித்தோம்الْاِنْسَانَமனிதனுக்குبِوَالِدَیْهِஅவனது பெற்றோருக்குاِحْسٰنًا ؕநன்மை செய்யுமாறுحَمَلَتْهُஅவனைச் சுமந்தாள்اُمُّهٗஅவனது தாய்كُرْهًاசிரமத்துடன்وَّ وَضَعَتْهُமேலும் அவனைப் பெற்றெடுத்தாள்كُرْهًا ؕசிரமத்துடன்وَ حَمْلُهٗமேலும் அவனைச் சுமப்பதும்وَ فِصٰلُهٗமேலும் அவனது பால்குடி மறப்பதும்ثَلٰثُوْنَமுப்பதுشَهْرًا ؕமாதங்களாகும்حَتّٰۤیவரைاِذَاபோதுبَلَغَஅவன் அடைந்தاَشُدَّهٗதனது வாலிபத்தைوَ بَلَغَமேலும் அவன் அடைந்தاَرْبَعِیْنَநாற்பதுسَنَةً ۙஆண்டுகளைقَالَஅவன் கூறுவான்رَبِّஎன் இறைவனேاَوْزِعْنِیْۤஎனக்கு அருள்வாயாகاَنْநான்اَشْكُرَநன்றி செலுத்தنِعْمَتَكَஉனது அருட்கொடைக்குالَّتِیْۤஎத்தகையதென்றால்اَنْعَمْتَநீ அருளினாயோعَلَیَّஎன் மீதுوَ عَلٰیமேலும் மீதுوَالِدَیَّஎன் பெற்றோர்وَ اَنْமேலும் நான்اَعْمَلَசெய்யصَالِحًاநற்செயலைتَرْضٰىهُநீ அதனைப் பொருந்திக் கொள்வாய்وَ اَصْلِحْமேலும் சீராக்குவாயாகلِیْஎனக்காகفِیْஇல்ذُرِّیَّتِیْ ؕۚஎன் சந்ததியினரைاِنِّیْநிச்சயமாக நான்تُبْتُபாவமன்னிப்புத் தேடி மீண்டேன்اِلَیْكَஉன்பால்وَ اِنِّیْமேலும் நிச்சயமாக நான்مِنَஉள்ளவன்الْمُسْلِمِیْنَமுஸ்லிம்களில்
வ வஸ்ஸய்னல் இன்ஸான Bபிவாலிதய்ஹி இஹ்ஸான; ஹமலத் ஹு உம்முஹூ குர்ஹ(ன்)வ்-வ வள'அத் ஹு குர்ஹ(ன்)வ் வ ஹம்லுஹூ வ Fபிஸாலுஹூ தலாதூன ஷஹ்ரா; ஹத்தா இதா Bபலக அஷுத்தஹூ வ Bபலக அர்Bப'ஈன ஸனதன் கால ரBப்Bபி அவ்Zஜிஃ னீ அன் அஷ்குர னிஃமதகல் லதீ அன்'அம்த 'அலய்ய வ 'அலா வாலிதய்ய வ அன் அஃமல ஸாலிஹன் தர்ளாஹு வ அஸ்லிஹ் லீ Fபீ துர்ரிய்யதீ; இன்னீ துBப்து இலய்க வ இன்னீ மினல் முஸ்லிமீன்
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ نَتَقَبَّلُ عَنْهُمْ اَحْسَنَ مَا عَمِلُوْا وَنَتَجَاوَزُ عَنْ سَیِّاٰتِهِمْ فِیْۤ اَصْحٰبِ الْجَنَّةِ ؕ وَعْدَ الصِّدْقِ الَّذِیْ كَانُوْا یُوْعَدُوْنَ ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்الَّذِیْنَஎவர்கள்نَتَقَبَّلُநாம் ஏற்றுக்கொள்வோமோعَنْهُمْஅவர்களிடமிருந்துاَحْسَنَமிகச்சிறந்ததைمَاஎவற்றைعَمِلُوْاசெய்தார்களோوَ نَتَجَاوَزُமேலும் நாம் மன்னிப்போமோعَنْவிட்டுسَیِّاٰتِهِمْஅவர்களின் தீமைகளைفِیْۤஉள்ளاَصْحٰبِவாசிகளில்الْجَنَّةِ ؕசுவனத்தின்وَعْدَவாக்குறுதியாகும்الصِّدْقِஉண்மையானالَّذِیْஎதைكَانُوْاஇருந்தார்களோیُوْعَدُوْنَவாக்களிக்கப்பட்டு
உலா'இகல் லதீன னத கBப்Bபலு 'அன்ஹும் அஹ்ஸன மா 'அமிலூ வ னதஜாவZஜு 'அன் ஸய்யிஆதிஹிம் Fபீ அஸ்ஹாBபில் ஜன்னதி வஃதஸ் ஸித்கில் லதீ கானூ யூ'அதூன்
சுவனவாசிகளான இ(த்தகைய)வர்கள் செய்தவற்றில் அழகான - நன்மையானவற்றை நாம் அங்கீகரித்துக் கொண்டு, இவர்களின் தீவினைகளைப் பொறுப்போம்; இவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதி உண்மையான வாக்குறுதியாகும்.
وَالَّذِیْ قَالَ لِوَالِدَیْهِ اُفٍّ لَّكُمَاۤ اَتَعِدٰنِنِیْۤ اَنْ اُخْرَجَ وَقَدْ خَلَتِ الْقُرُوْنُ مِنْ قَبْلِیْ ۚ وَهُمَا یَسْتَغِیْثٰنِ اللّٰهَ وَیْلَكَ اٰمِنْ ۖۗ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۖۚ فَیَقُوْلُ مَا هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
وَ الَّذِیْமேலும் எவன்قَالَகூறினானோلِوَالِدَیْهِதன் பெற்றோருக்குاُفٍّசீلَّكُمَاۤஉங்கள் இருவருக்கும்اَتَعِدٰنِنِیْۤஎனக்கு வாக்களிக்கிறீர்களாاَنْஎன்றுاُخْرَجَநான் எழுப்பப்படுவேன்وَ قَدْமேலும் திண்ணமாகخَلَتِகடந்து சென்றுவிட்டனالْقُرُوْنُதலைமுறைகள்مِنْஇருந்துقَبْلِیْ ۚஎனக்கு முன்னால்وَ هُمَاஅவர்கள் இருவரும்یَسْتَغِیْثٰنِமன்றாடுகிறார்கள்اللّٰهَஅல்லாஹ்விடம்وَیْلَكَஉனக்குக் கேடு உண்டாகட்டும்اٰمِنْ ۖۗநம்பிக்கை கொள்اِنَّநிச்சயமாகوَعْدَவாக்குறுதிاللّٰهِஅல்லாஹ்வின்حَقٌّ ۖۚஉண்மையானதுفَیَقُوْلُஅதற்கு அவன் கூறுகிறான்مَاஇல்லைهٰذَاۤஇதுاِلَّاۤஅன்றிاَسَاطِیْرُகட்டுக்கதைகள்الْاَوَّلِیْنَமுன்னோர்களின்
வல்லதீ கால லிவாலி தய்ஹி உFப்Fபில் லகுமா அத'இதனினீ அன் உக்ரஜ வ கத் கலதில் குரூனு மின் கBப்லீ வ ஹுமா யஸ்தகீதானில் லாஹ வய்லக ஆமின் இன்ன வஃதல் லாஹி ஹக்க், Fப யகூலு மா ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
ஆனால் (சன்மார்க்கத்தை தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி; “சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான் உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகிறீர்களா? திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்டனரே (அவர்கள் எழுப்பப்படவில்லையா)!” என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும், (அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்) “உனக்கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது” என்று அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்; அதற்கவன் “இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று கூறுகிறான்.
اُولٰٓىِٕكَ الَّذِیْنَ حَقَّ عَلَیْهِمُ الْقَوْلُ فِیْۤ اُمَمٍ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمْ مِّنَ الْجِنِّ وَالْاِنْسِ ؕ اِنَّهُمْ كَانُوْا خٰسِرِیْنَ ۟
اُولٰٓىِٕكَஅத்தகையோர்الَّذِیْنَஎவர்கள்حَقَّஉறுதியாகிவிட்டதுعَلَیْهِمُஅவர்கள் மீதுالْقَوْلُவாக்குفِیْۤஇடையேاُمَمٍசமுதாயங்களின்قَدْஏற்கனவேخَلَتْகழிந்துவிட்டمِنْஇருந்துقَبْلِهِمْஅவர்களுக்கு முன்னால்مِّنَஆகியالْجِنِّஜின்கள்وَ الْاِنْسِ ؕமற்றும் மனிதர்கள்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்كَانُوْاஇருந்தார்கள்خٰسِرِیْنَநஷ்டமடைந்தவர்கள்
உலா'இகல் லதீன ஹக்க 'அலய்ஹிமுல் கவ்லு Fபீ உமமின் கத் கலத் மின் கBப்லிஹிம் மினல் ஜின்னி வல் இன்ஸி இன்னஹும் கானூ காஸிரீன்
இத்தகையோரின் நிலையோ, இவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்கள் மனிதர்கள் கூட்டத்தினரில் (பாவம் செய்ததினால்) எவர்களுக்கு எதிராக (அல்லாஹ்வின்) வாக்கு மெய்யாக உறுதியாய் விடுகிறதோ, அது போன்றது தான்; நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாய் விட்டனர்.
وَلِكُلٍّ دَرَجٰتٌ مِّمَّا عَمِلُوْا ۚ وَلِیُوَفِّیَهُمْ اَعْمَالَهُمْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟
وَ لِكُلٍّமேலும் ஒவ்வொருவருக்கும்دَرَجٰتٌபதவிகள்مِّمَّاஎவற்றிலிருந்துعَمِلُوْا ۚஅவர்கள் செய்தார்களோوَ لِیُوَفِّیَهُمْமேலும் அவர்களுக்கு முழுமையாகக் கொடுப்பதற்காகاَعْمَالَهُمْஅவர்களின் செயல்களைوَ هُمْமேலும் அவர்கள்لَاமாட்டார்கள்یُظْلَمُوْنَஅநீதி இழைக்கப்பட
வ லிகுல்லின் தரஜாதும் மிம்மா 'அமிலூ வ லியுவFப் Fபியஹும் அஃமாலஹும் வ ஹும் லா யுள்லமூன்
அன்றியும், ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்த செய்கைகளுக்குத் தகுந்த பதவிகள் (மறுமையில்) உண்டு - ஆகவே அவர்கள் தங்கள் செயலுக்குரிய கூலியைப் பூரணமாகப் பெறுவதற்காக, ஆகவே அவர்கள் (இதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
وَیَوْمَ یُعْرَضُ الَّذِیْنَ كَفَرُوْا عَلَی النَّارِ ؕ اَذْهَبْتُمْ طَیِّبٰتِكُمْ فِیْ حَیَاتِكُمُ الدُّنْیَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا ۚ فَالْیَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُوْنِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُوْنَ فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُوْنَ ۟۠
وَ یَوْمَமேலும் அந்நாளில்یُعْرَضُகொண்டு வரப்படுவார்கள்الَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோعَلَیமுன்النَّارِ ؕநரக நெருப்பின்اَذْهَبْتُمْநீங்கள் போக்கிவிட்டீர்கள்طَیِّبٰتِكُمْஉங்கள் சுகபோகங்களைفِیْஇல்حَیَاتِكُمُஉங்கள் வாழ்க்கையில்الدُّنْیَاஉலகوَ اسْتَمْتَعْتُمْமேலும் நீங்கள் அனுபவித்தீர்கள்بِهَا ۚஅவற்றைக் கொண்டுفَالْیَوْمَஎனவே இன்றைய தினம்تُجْزَوْنَகூலியாகக் கொடுக்கப்படுவீர்கள்عَذَابَவேதனையைالْهُوْنِஇழிவானبِمَاகாரணத்தால்كُنْتُمْநீங்கள் இருந்தتَسْتَكْبِرُوْنَபெருமையடித்துக் கொண்டுفِیஇல்الْاَرْضِபூமியில்بِغَیْرِஇன்றிالْحَقِّநியாயம்وَ بِمَاமேலும் காரணத்தால்كُنْتُمْநீங்கள் இருந்தتَفْسُقُوْنَ۠வரம்பு மீறிக்கொண்டு
வ யவ்ம யுஃரளுல் லதீன கFபரூ 'அலன் னாரி அத்ஹBப்தும் தய்யிBபாதிகும் Fபீ ஹயாதிகுமுத் துன்யா வஸ்தம் தஃதும் Bபிஹா Fபல் யவ்ம துஜ்Zஜவ்ன 'அதாBபல் ஹூனி Bபிமா குன்தும் தஸ்தக்Bபிரூன Fபில் அர்ளி Bபிகய்ரில் ஹக்கி வ Bபிமா குன்தும் தFப்ஸுகூன்
அன்றியும் (நரக) நெருப்பின் முன் நிராகரிப்பவர்கள் கொண்டுவரப்படும் நாளில், “உங்கள் உலக வாழ்க்கையின் போது உங்களுக்குக் கிடைத்திருந்த மணமான பொருட்களையெல்லாம், வீண் செலவு செய்து, (உலக) இன்பம் தேடினீர்கள், “ஆகவே நீங்கள் பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டும், வரம்பு மீறி (வாழ்ந்து) கொண்டும் இருந்த காரணத்தால், இழிவு தரும் வேதனையை இன்று நீங்கள் கூலியாகக் கொடுக்கப்படுகிறீர்கள்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).  
وَاذْكُرْ اَخَا عَادٍ ؕ اِذْ اَنْذَرَ قَوْمَهٗ بِالْاَحْقَافِ وَقَدْ خَلَتِ النُّذُرُ مِنْ بَیْنِ یَدَیْهِ وَمِنْ خَلْفِهٖۤ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ اِنِّیْۤ اَخَافُ عَلَیْكُمْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟
وَ اذْكُرْமேலும் நினைவு கூர்வீராகاَخَاசகோதரரைعَادٍ ؕஆது (சமூகத்தாரின்)اِذْபோதுاَنْذَرَஅவர் எச்சரித்தقَوْمَهٗதம் சமூகத்தினரைبِالْاَحْقَافِஅஹ்காஃப் பகுதியில்وَ قَدْமேலும் திண்ணமாகخَلَتِகடந்து சென்றுவிட்டனர்النُّذُرُஎச்சரிக்கையாளர்கள்مِنْۢஇருந்துبَیْنِமுன்னால்یَدَیْهِஅவருக்குوَ مِنْமேலும்خَلْفِهٖۤஅவருக்குப் பின்னால்اَلَّاவணங்காதீர்கள் என்றுتَعْبُدُوْۤاநீங்கள்اِلَّاதவிரاللّٰهَ ؕஅல்லாஹ்வைاِنِّیْۤநிச்சயமாக நான்اَخَافُஅஞ்சுகிறேன்عَلَیْكُمْஉங்கள் மீதுعَذَابَவேதனையைیَوْمٍஒரு நாளின்عَظِیْمٍமகத்தான
வத்குர் அகா 'ஆத், இத் அன்தர கவ்மஹூ Bபில் அஹ்காFபி வ கத் கலதின் னுதுரு மிம் Bபய்னி யதய்ஹி வ மின் கல்Fபிஹீ அல்லா தஃBபுதூ இல்லல் லாஹ இன்னீ அகாFபு 'அலய்கும் 'அதாBப யவ்மின் 'அளீம்
மேலும் “ஆது” (சமூகத்தாரின்) சகோதரர் (ஹூத்) திடமாகவே, அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள் (இறை தூதர்கள்) வந்திருக்கிறார்கள் - (அவர்) தம் சமூகத்தாரை, “அல்லாஹ்வையன்றி (வேறு எதனையும்) நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும் என்று நான் பயப்படுகிறேன்” என்று மணல் குன்றுகளிலிருந்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்ததை (நபியே!) நீர் நினைவு கூர்வீராக.
قَالُوْۤا اَجِئْتَنَا لِتَاْفِكَنَا عَنْ اٰلِهَتِنَا ۚ فَاْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
قَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَجِئْتَنَاநீர் எங்களிடம் வந்தீராلِتَاْفِكَنَاஎங்களைத் திருப்புவதற்காகعَنْவிட்டுاٰلِهَتِنَا ۚஎங்கள் தெய்வங்களைفَاْتِنَاஎனவே எங்களிடம் கொண்டு வாரும்بِمَاஎதைக் கொண்டுتَعِدُنَاۤநீர் எங்களை எச்சரிக்கிறீரோاِنْஎன்றால்كُنْتَநீர் இருந்தால்مِنَஒருவராகالصّٰدِقِیْنَஉண்மையாளர்களில்
காலூ அஜி'தனா லி தா Fபிகனா 'அன் ஆலிஹதினா Fப'தினா Bபிமா த'இதுனா இன் குன்த மினஸ் ஸாதிகீன்
அதற்கு அவர்கள்: “எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்” என்று கூறினார்கள்.
قَالَ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ ۖؗ وَاُبَلِّغُكُمْ مَّاۤ اُرْسِلْتُ بِهٖ وَلٰكِنِّیْۤ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ۟
قَالَஅவர் கூறினார்اِنَّمَاமட்டுமேالْعِلْمُஅறிவுعِنْدَஇடத்தில்اللّٰهِ ۖؗஅல்லாஹ்வின்وَ اُبَلِّغُكُمْமேலும் நான் உங்களுக்கு எத்திவைக்கிறேன்مَّاۤஎதைاُرْسِلْتُநான் அனுப்பப்பட்டேனோبِهٖஅதைக் கொண்டுوَ لٰكِنِّیْۤஆனால் நான்اَرٰىكُمْஉங்களைக் காண்கிறேன்قَوْمًاஒரு சமூகமாகتَجْهَلُوْنَஅறியாமையில் இருக்கிறீர்கள்
கால இன்னமல் 'இல்மு இன்தல் லாஹி வ உBபல்லிகுகும் மா உர்ஸில்து Bபிஹீ வ லாகின்னீ அராகும் கவ்மன் தஜ்ஹலூன்
அதற்கவர்: “(அது எப்பொழுது வரும் என்ற) ஞானம் நிச்சயமாக அல்லாஹ்விடம் தான் இருக்கிறது; மேலும், நான் எதைக் கொண்டு உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கிறேனோ அதையே நான் உங்களுக்குச் சேர்ப்பித்து, எடுத்துரைக்கின்றேன் - எனினும் நான் உங்களை அறிவில்லாத சமூகத்தாராகவே காண்கிறேன்” என்று கூறினார்.
فَلَمَّا رَاَوْهُ عَارِضًا مُّسْتَقْبِلَ اَوْدِیَتِهِمْ ۙ قَالُوْا هٰذَا عَارِضٌ مُّمْطِرُنَا ؕ بَلْ هُوَ مَا اسْتَعْجَلْتُمْ بِهٖ ؕ رِیْحٌ فِیْهَا عَذَابٌ اَلِیْمٌ ۟ۙ
فَلَمَّاபின்னர்رَاَوْهُஅதை அவர்கள் கண்டபோதுعَارِضًاஒரு மேகமாகمُّسْتَقْبِلَமுன்னோக்கி வரும்اَوْدِیَتِهِمْ ۙதங்கள் பள்ளத்தாக்குகளைقَالُوْاஅவர்கள் கூறினார்கள்هٰذَاஇதுعَارِضٌஒரு மேகம்مُّمْطِرُنَا ؕநமக்கு மழை தரக்கூடியதுبَلْமாறாகهُوَஅதுمَاஎதைاسْتَعْجَلْتُمْநீங்கள் அவசரப்பட்டீர்களோبِهٖ ؕஅதைக் கொண்டுرِیْحٌஒரு காற்றுفِیْهَاஅதில்عَذَابٌவேதனைاَلِیْمٌۙநோவினை தரும்
Fபலம்மா ர அவ்ஹு 'ஆரிளம் முஸ்தக்Bபில அவ்தியதிஹிம் காலூ ஹாதா 'ஆரிளும் மும்திருனா; Bபல் ஹுவ மஸ்தஃஜல்தும் Bபிஹீ ரீஹுன் Fபீஹா 'அதாBபுன் அலீம்
ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், “இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்” எனக் கூறினார்கள்; “அப்படியல்ல, இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது:
تُدَمِّرُ كُلَّ شَیْءٍ بِاَمْرِ رَبِّهَا فَاَصْبَحُوْا لَا یُرٰۤی اِلَّا مَسٰكِنُهُمْ ؕ كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟
تُدَمِّرُஅது அழித்துவிடும்كُلَّஒவ்வொருشَیْءٍۭபொருளையும்بِاَمْرِகட்டளையினால்رَبِّهَاஅதன் இறைவனின்فَاَصْبَحُوْاஆகவே அவர்கள் ஆகிவிட்டனர்لَاஎதுவும்یُرٰۤیகாணப்படவில்லைاِلَّاதவிரمَسٰكِنُهُمْ ؕஅவர்களின் இருப்பிடங்களைத்كَذٰلِكَஇவ்வாறேنَجْزِیநாம் கூலி கொடுக்கிறோம்الْقَوْمَகூட்டத்தாருக்குالْمُجْرِمِیْنَகுற்றவாளிகளான
துதம்மிரு குல்ல ஷய்'இம் Bபி-அம்ரி ரBப்Bபிஹா Fப அஸ்Bபஹூ லா யுரா இல்லா மஸாகினுஹும்; கதாலிக னஜ்Zஜில் கவ்மல் முஜ்ரிமீன்
“அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்” (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது, (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
وَلَقَدْ مَكَّنّٰهُمْ فِیْمَاۤ اِنْ مَّكَّنّٰكُمْ فِیْهِ وَجَعَلْنَا لَهُمْ سَمْعًا وَّاَبْصَارًا وَّاَفْـِٕدَةً ۖؗ فَمَاۤ اَغْنٰی عَنْهُمْ سَمْعُهُمْ وَلَاۤ اَبْصَارُهُمْ وَلَاۤ اَفْـِٕدَتُهُمْ مِّنْ شَیْءٍ اِذْ كَانُوْا یَجْحَدُوْنَ ۙ بِاٰیٰتِ اللّٰهِ وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠
وَ لَقَدْநிச்சயமாக நாம்مَكَّنّٰهُمْஅவர்களுக்கு வசதியளித்திருந்தோம்فِیْمَاۤஎவற்றில்اِنْஇல்லைمَّكَّنّٰكُمْஉங்களுக்கு நாம் வசதியளித்தோமோفِیْهِஅதில்وَ جَعَلْنَاமேலும் நாம் ஏற்படுத்தினோம்لَهُمْஅவர்களுக்குسَمْعًاசெவிப்புலனைوَّ اَبْصَارًاமேலும் பார்வைகளையும்وَّ اَفْـِٕدَةً ۖؗமேலும் இதயங்களையும்فَمَاۤஆனால் இல்லைاَغْنٰیபயன் தந்ததுعَنْهُمْஅவர்களுக்குسَمْعُهُمْஅவர்களுடைய செவிப்புலன்وَ لَاۤஇன்னும் இல்லைاَبْصَارُهُمْஅவர்களுடைய பார்வைகள்وَ لَاۤஇன்னும் இல்லைاَفْـِٕدَتُهُمْஅவர்களுடைய இதயங்கள்مِّنْஎதிலிருந்தும்شَیْءٍஎதனையும்اِذْஏனெனில்كَانُوْاஅவர்கள் இருந்தார்கள்یَجْحَدُوْنَ ۙநிராகரித்துக் கொண்டுبِاٰیٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்وَ حَاقَமேலும் சூழ்ந்து கொண்டதுبِهِمْஅவர்களைمَّاஎதுكَانُوْاஅவர்கள் இருந்தார்களோبِهٖஅதைக் கொண்டுیَسْتَهْزِءُوْنَ۠பரிகசித்துக் கொண்டு
வ லகத் மக்கன்னாஹும் Fபீமா இம் மக்கன்னாகும் Fபீஹி வஜ்'அல்னா லஹும் ஸம்'அ(ன்)வ் வ அBப்ஸார(ன்)வ் வ அFப்'இததன் Fபமா அக்னா 'அன்ஹும் ஸம்'உஹும் வ லா அBப்ஸாருஹும் வ லா அFப்'இததுஹும் மின் ஷய்'இன் இத் கானூ யஜ்ஹதூன Bபி ஆயாதில் லாஹி வ ஹாக Bபிஹிம் மா கானூ Bபிஹீ யஸ்தஹ்Zஜி'ஊன்
உங்களுக்கு (மக்காவாசிகளுக்கு) இங்கு எதில் வசதிகள் செய்து கொடுக்காதிருந்தோமோ அவ்வசதிகளையெல்லாம் நாம் அவர்களுக்குத் திடமாகச் செய்து கொடுத்திருந்தோம். மேலும் அவர்களுக்கும் செவிப் புலனையும் பார்வைகளையும் இருதயங்களையும் நாம் கொடுத்திருந்தோம்; ஆயினும் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டிருந்த போது, அவர்களுடைய செவிப் புலனும், பார்வைகளும் இருதயங்களும் அவர்களுக்கு யாதோர் பயனுமளிக்கவில்லை - எ(வ்வே)தனைப் பற்றி அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்தார்களோ, அதுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது.  
وَلَقَدْ اَهْلَكْنَا مَا حَوْلَكُمْ مِّنَ الْقُرٰی وَصَرَّفْنَا الْاٰیٰتِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
وَ لَقَدْநிச்சயமாகاَهْلَكْنَاநாம் அழித்தோம்مَاஎவைحَوْلَكُمْஉங்களைச் சுற்றியுள்ளனவோمِّنَஅத்தகையالْقُرٰیஊர்களைوَ صَرَّفْنَاமேலும் நாம் பலவாறாக விவரித்தோம்الْاٰیٰتِஅத்தாட்சிகளைلَعَلَّهُمْஅவர்கள்یَرْجِعُوْنَதிரும்புவதற்காக
வ லகத் அஹ்லக்னா ம ஹவ்லகும் மினல் குரா வ ஸர்ரFப்னல் ஆயாதி ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
அன்றியும், உங்களைச் சுற்றி இருந்த ஊ(ரா)ர்களையும் திடமாக நாம் அழித்திருக்கிறோம், அவர்கள் (நேர்வழிக்கு) மீளும் பொருட்டு நாம் (அவர்களுக்குப்) பல அத்தாட்சிகளைத் திருப்பித் திருப்பிக் காண்பித்தோம்.
فَلَوْلَا نَصَرَهُمُ الَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ قُرْبَانًا اٰلِهَةً ؕ بَلْ ضَلُّوْا عَنْهُمْ ۚ وَذٰلِكَ اِفْكُهُمْ وَمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟
فَلَوْ لَاஅப்படியென்றால் ஏன்نَصَرَهُمُஅவர்களுக்கு உதவி செய்யவில்லைالَّذِیْنَஎவர்களைاتَّخَذُوْاஅவர்கள் எடுத்துக் கொண்டார்களோمِنْஇருந்துدُوْنِஅன்றிاللّٰهِஅல்லாஹ்வைقُرْبَانًاநெருக்கத்தை தரும் வழியாகاٰلِهَةً ؕதெய்வங்களாகبَلْமாறாகضَلُّوْاஅவர்கள் மறைந்து விட்டார்கள்عَنْهُمْ ۚஅவர்களை விட்டுوَ ذٰلِكَஇன்னும் அதுதான்اِفْكُهُمْஅவர்களின் பொய்وَ مَاஇன்னும் எதைكَانُوْاஅவர்கள் இருந்தார்களோیَفْتَرُوْنَஇட்டுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ
Fபலவ் லா னஸரஹுமுல் லதீனத் தகதூ மின் தூனில் லாஹி குர்Bபானன் ஆலிஹதம் Bபல் ளல்லூ 'அன்ஹும்' வ தாலிக இFப்குஹும் வமா கானூ யFப்தரூன்
(அல்லாஹ்விடம் தங்களை) நெருங்க வைக்கும் தெய்வங்களென்று அல்லாஹ் அல்லாதவற்றை இவர்கள் எடுத்துக் கொண்டார்களே, அவர்கள் ஏன் இவர்களுக்கு உதவி புரியவில்லை? ஆனால், அவர்கள் இவர்களை விட்டும் மறைந்து விட்டனர் - அவர்களே இவர்கள் பொய்யாகக் கூறியவையும், இட்டுக் கட்டியவையுமாகும்.
وَاِذْ صَرَفْنَاۤ اِلَیْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ یَسْتَمِعُوْنَ الْقُرْاٰنَ ۚ فَلَمَّا حَضَرُوْهُ قَالُوْۤا اَنْصِتُوْا ۚ فَلَمَّا قُضِیَ وَلَّوْا اِلٰی قَوْمِهِمْ مُّنْذِرِیْنَ ۟
وَ اِذْஇன்னும் (நினைவுகூருங்கள்)صَرَفْنَاۤநாம் திருப்பியதைاِلَیْكَஉம்மிடம்نَفَرًاஒரு குழுவினரைمِّنَஇருந்துالْجِنِّஜின்களில்یَسْتَمِعُوْنَசெவிமடுப்பவர்களாகالْقُرْاٰنَ ۚகுர்ஆனைفَلَمَّاஆகவே, எப்போதுحَضَرُوْهُஅவர்கள் அதனிடம் வந்தபோதுقَالُوْۤاஅவர்கள் கூறினார்கள்اَنْصِتُوْا ۚமௌனமாகச் செவிசாயுங்கள்فَلَمَّاபின்னர் எப்போதுقُضِیَ(ஓதி) முடிக்கப்பட்டபோதுوَ لَّوْஅவர்கள் திரும்பினார்கள்اِلٰیநோக்கிقَوْمِهِمْதங்கள் சமூகத்தாரிடம்مُّنْذِرِیْنَஎச்சரிக்கை செய்பவர்களாக
வ இத் ஸரFபினா இலய்க னFபரம் மினல் ஜின்னி யஸ்தமி'ஊனல் குர்'ஆன Fபலம்மா ஹளரூஹு காலூ அன்ஸிதூ Fபலம்மா குளிய வல்லவ் இலா கவ்மிஹிம் முன்திரீன்
மேலும் (நபியே!) நாம் உம்மிடம் இந்த குர்ஆனை செவியுறும் பொருட்டு ஜின்களில் சிலரை திருப்பியதும், அவர்கள் அங்கு வந்த போது, “மௌனமாக இருங்கள்” என்று (மற்றவர்களுக்குச்) சொன்னார்கள்; (ஓதுதல்) முடிந்ததும் தம் இனத்தாரிடம் சென்று அவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்தனர்.
قَالُوْا یٰقَوْمَنَاۤ اِنَّا سَمِعْنَا كِتٰبًا اُنْزِلَ مِنْ بَعْدِ مُوْسٰی مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ یَهْدِیْۤ اِلَی الْحَقِّ وَاِلٰی طَرِیْقٍ مُّسْتَقِیْمٍ ۟
قَالُوْاஅவர்கள் கூறினார்கள்یٰقَوْمَنَاۤஎங்கள் சமூகத்தாரேاِنَّاநிச்சயமாக நாங்கள்سَمِعْنَاசெவியுற்றோம்كِتٰبًاஒரு வேதத்தைاُنْزِلَஇறக்கப்பட்டمِنْۢஇருந்துبَعْدِபிறகுمُوْسٰیமூஸாவுக்குمُصَدِّقًاஉண்மைப்படுத்துவதாகلِّمَاஉள்ளதைبَیْنَமுன்னால்یَدَیْهِஅதற்குیَهْدِیْۤஅது வழிகாட்டுகிறதுاِلَیபக்கம்الْحَقِّசத்தியத்தின்وَ اِلٰیமேலும் பக்கம்طَرِیْقٍஒரு வழியின்مُّسْتَقِیْمٍநேரான
காலூ யா கவ்மனா இன்னா ஸமிஃனா கிதாBபன் உன்Zஜில மிம் Bபஃதி மூஸா முஸத்திகல் லிமா Bபய்ன யதய்ஹி யஹ்தீ இலல் ஹக்கி வ இலா தரீகிம் முஸ்தகீம்
(ஜின்கள்) கூறினார்கள்: “எங்களுடைய சமூகத்தார்களே! நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவிமடுத்தோம், அது மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டிருக்கின்றது, அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மை படுத்துகிறது. அது உண்மையின் பக்கமும், நேரான மார்க்கத்தின் பாலும் (யாவருக்கும்) “வழி” காட்டுகின்றது.
یٰقَوْمَنَاۤ اَجِیْبُوْا دَاعِیَ اللّٰهِ وَاٰمِنُوْا بِهٖ یَغْفِرْ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُجِرْكُمْ مِّنْ عَذَابٍ اَلِیْمٍ ۟
یٰقَوْمَنَاۤஎங்கள் சமுதாயத்தாரேاَجِیْبُوْاபதிலளியுங்கள்دَاعِیَஅழைப்பாளருக்குاللّٰهِஅல்லாஹ்வின்وَ اٰمِنُوْاமேலும் நம்பிக்கை கொள்ளுங்கள்بِهٖஅவன் மீதுیَغْفِرْஅவன் மன்னிப்பான்لَكُمْஉங்களுக்குمِّنْஇலிருந்துذُنُوْبِكُمْஉங்கள் பாவங்களைوَ یُجِرْكُمْமேலும் உங்களைப் பாதுகாப்பான்مِّنْஇலிருந்துعَذَابٍவேதனைاَلِیْمٍதுன்புறுத்தும்
யா கவ்மனா அஜீBபூ தா'இயல் லாஹி வ ஆமினூ Bபிஹீ யக்Fபிர் லகும் மின் துனூBபிகும் வ யுஜிர்கும் மின் 'அதாBபின் அலீம்
“எங்கள் சமூகத்தாரே! உங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளித்து (அவர் கூறுவதை ஏற்று) அவர் மீது ஈமான் கொள்ளுங்கள். அவன் உங்கள் பாவங்களிலிருந்து உங்களுக்கு மன்னிப்பளிப்பான், நோவினை தரும் வேதனையிலிருந்து உங்களைப் பாதுகாப்பான்.
وَمَنْ لَّا یُجِبْ دَاعِیَ اللّٰهِ فَلَیْسَ بِمُعْجِزٍ فِی الْاَرْضِ وَلَیْسَ لَهٗ مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءُ ؕ اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
وَ مَنْமேலும் எவர்لَّاஇல்லைیُجِبْபதில் அளிக்கிறாரோدَاعِیَஅழைப்பாளருக்குاللّٰهِஅல்லாஹ்வின்فَلَیْسَஎனவே அவர் இல்லைبِمُعْجِزٍதப்பிச் செல்பவராகفِیஇல்الْاَرْضِபூமிوَ لَیْسَமேலும் இல்லைلَهٗஅவருக்குمِنْஇருந்துدُوْنِهٖۤஅவனையன்றிاَوْلِیَآءُ ؕபாதுகாவலர்கள்اُولٰٓىِٕكَஅவர்கள்فِیْஇல்ضَلٰلٍவழிகேடுمُّبِیْنٍதெளிவான
வ மல் லா யுஜிBப் தா'இயல் லாஹி Fபலய்ஸ BபிமுஃஜிZஜின் Fபில் அர்ளி வ லய்ஸ லஹூ மின் தூனிஹீ அவ்லியா'; உலா இக Fபீ ளலாலிம் முBபீன்
“ஆனால், எவர் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவருக்கு பதிலளிக்க வில்லையோ, அவர் பூமியில் (அல்லாஹ்வை) இயலாமல் ஆக்க முடியாது; அவனையன்றி அவரை பாதுகாப்போர் எவருமில்லை, அ(த்தகைய)வர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.”
اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَلَمْ یَعْیَ بِخَلْقِهِنَّ بِقٰدِرٍ عَلٰۤی اَنْ یُّحْیِ الْمَوْتٰی ؕ بَلٰۤی اِنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
اَوَ لَمْஅவர்கள் இல்லையாیَرَوْاபார்க்கவில்லையாاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்الَّذِیْஎவன்خَلَقَபடைத்தானோالسَّمٰوٰتِவானங்களைوَ الْاَرْضَஇன்னும் பூமியைوَ لَمْமேலும் அவன் இல்லைیَعْیَசோர்வடையبِخَلْقِهِنَّஅவற்றை படைப்பதில்بِقٰدِرٍபேராற்றல் உடையவன்عَلٰۤیமீதுاَنْஎன்றுیُّحْیِ َۧஉயிர் கொடுக்கالْمَوْتٰی ؕமரணித்தோருக்குبَلٰۤیஆம்اِنَّهٗநிச்சயமாக அவன்عَلٰیமீதுكُلِّஒவ்வொருشَیْءٍபொருளின்قَدِیْرٌபேராற்றல் மிக்கவன்
அவலம் யரவ் அன்னல் லாஹல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ லம் யஃய Bபிகல் கிஹின்ன Bபிகாதிரின் 'அலா அய்யுஹ்யியல் மவ்தா; Bபலா இன்னஹூ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
வானங்களையும், பூமியையும் படைத்து அவற்றின் படைப்பால் எவ்வித சோர்வுமின்றி இருக்கின்றானே அல்லாஹ் அவன் நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றலுடையவன்; ஆம்! நிச்சயமாக அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?
وَیَوْمَ یُعْرَضُ الَّذِیْنَ كَفَرُوْا عَلَی النَّارِ ؕ اَلَیْسَ هٰذَا بِالْحَقِّ ؕ قَالُوْا بَلٰی وَرَبِّنَا ؕ قَالَ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
وَ یَوْمَமேலும் அந்நாளில்یُعْرَضُகொண்டுவரப்படுவார்களோالَّذِیْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்களோعَلَیமுன்னால்النَّارِ ؕநரக நெருப்பின்اَلَیْسَஇல்லையா?هٰذَاஇதுبِالْحَقِّ ؕஉண்மைقَالُوْاஅவர்கள் கூறுவார்கள்بَلٰیஆம்وَ رَبِّنَا ؕஎங்கள் இறைவன் மீது சத்தியமாகقَالَஅவன் கூறுவான்فَذُوْقُواஎனவே சுவையுங்கள்الْعَذَابَவேதனையைبِمَاஎதன் காரணமாகكُنْتُمْநீங்கள் இருந்தீர்களோتَكْفُرُوْنَநிராகரித்துக் கொண்டு
வ யவ்ம யுஃரளுல் லதீன கFபரூ 'அலன் னாரி அலய்ஸ ஹாத Bபில் ஹக்க்; காலூ Bபலா வ ரBப்Bபினா; கால Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
மேலும், நிராகரிப்பவர்கள் (நரக) நெருப்பின் முன் கொண்டுவரப்படும் நாளில் (அவர்களிடம்) “இது உண்மையல்லவா?” (என்று கேட்கப்படும்;) அதற்கவர்கள், “எங்கள் இறைவன் மீது சத்தியமாக, உண்மைதான்” என்று கூறுவார்கள். “நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததற்காக இவ்வேதனையை அனுபவியுங்கள்” என்று அவன் கூறுவான்.
فَاصْبِرْ كَمَا صَبَرَ اُولُوا الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَّهُمْ ؕ كَاَنَّهُمْ یَوْمَ یَرَوْنَ مَا یُوْعَدُوْنَ ۙ لَمْ یَلْبَثُوْۤا اِلَّا سَاعَةً مِّنْ نَّهَارٍ ؕ بَلٰغٌ ۚ فَهَلْ یُهْلَكُ اِلَّا الْقَوْمُ الْفٰسِقُوْنَ ۟۠
فَاصْبِرْஎனவே பொறுமையாக இருப்பீராகكَمَاபோன்றுصَبَرَபொறுமை காத்தார்களோاُولُواஉடையவர்கள்الْعَزْمِமன உறுதிمِنَஉள்ளالرُّسُلِதூதர்களில்وَ لَاமேலும்تَسْتَعْجِلْஅவசரப்படாதீர்لَّهُمْ ؕஅவர்களுக்காகكَاَنَّهُمْஅவர்கள் என்பது போல்یَوْمَநாளில்یَرَوْنَஅவர்கள் காணும்مَاஎதைیُوْعَدُوْنَ ۙஅவர்கள் வாக்களிக்கப்படுகிறார்களோلَمْஇல்லைیَلْبَثُوْۤاஅவர்கள் தங்கியிருக்கاِلَّاதவிரسَاعَةًஒரு நாழிகைمِّنْஇருந்துنَّهَارٍ ؕபகலில்بَلٰغٌ ۚஇது ஓர் அறிவிப்புفَهَلْஎனவேیُهْلَكُஅழிக்கப்படுவார்களாاِلَّاதவிரالْقَوْمُகூட்டத்தினர்الْفٰسِقُوْنَ۠வரம்பு மீறிய
Fபஸ்Bபிர் கமா ஸBபர உலுல் 'அZஜ்மி மினர் ருஸுலி வலா தஸ்தஃஜில் லஹும்; க அன்னஹும் யவ்ம யரவ்ன மா யூ'அதூன லம் யல்Bபதூ இல்லா ஸா'அதம் மின் னஹார்; Bபலாக்; Fபஹல் யுஹ்லகு இல்லல் கவ்முல் Fபாஸிகூன்
“(நபியே!) நம் தூதர்களில் திடசித்தமுடையவர்கள் பொறுமையாக இருந்தது போல், நீரும் பொறுமையுடன் இருப்பீராக! இவர்களுக்காக (வேதனையை வரவழைக்க) அவசரப்படாதீர்! இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில், அவர்கள் (இப்பூமியில்) ஒரு நாளில் ஒரு நாழிகைக்கு மேல் இருக்கவில்லை (என்று எண்ணுவார்கள். இது) தெளிவாக அறிவிக்க வேண்டியதே! எனவே, வரம்பு மீறியவர்கள் தவிர (வேறு எவரும்) அழிக்கப்படுவார்களா?