97. ஸூரத்துல் கத்ரி(கண்ணியமிக்க இரவு)

மக்கீ, வசனங்கள்: 5

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِیْ لَیْلَةِ الْقَدْرِ ۟ۚۖ
اِنَّاۤநிச்சயமாக நாம்اَنْزَلْنٰهُஇதை இறக்கினோம்فِىْ لَيْلَةِஇரவில்الْقَدْرِ ۖ ۚ‏கத்ரு
இன்னா அன்Zஜல்னாஹு Fபீ லய்லதில் கத்ர்
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
وَمَاۤ اَدْرٰىكَ مَا لَیْلَةُ الْقَدْرِ ۟ؕ
وَمَاۤஎதுاَدْرٰٮكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்ன(வென்று)لَيْلَةُ الْقَدْرِؕ‏லைலத்துல் கத்ரு
வமா அத்ராக ம லய்லதுல் கத்ர்
மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
لَیْلَةُ الْقَدْرِ ۙ۬ خَیْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ ۟ؕؔ
لَيْلَةُ الْقَدْرِ  ۙலைலத்துல் கத்ருخَيْرٌசிறந்ததுمِّنْவிடاَلْفِஆயிரம்شَهْرٍؕ‏மாதங்கள்
லய்லதுல் கத்ரி கய்ரும் மின் அல்Fபீ ஷஹ்ர்
கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.
تَنَزَّلُ الْمَلٰٓىِٕكَةُ وَالرُّوْحُ فِیْهَا بِاِذْنِ رَبِّهِمْ ۚ مِنْ كُلِّ اَمْرٍ ۟ۙۛ
تَنَزَّلُஇறங்குகிறார்கள்الْمَلٰٓٮِٕكَةُவானவர்களும்وَالرُّوْحُஜிப்ரீலும்فِيْهَاஅதில்بِاِذْنِஅனுமதி கொண்டுرَبِّهِمْ‌ۚதங்கள் இறைவனின்مِّنْஉடன்كُلِّஎல்லாاَمْرٍ ۛۙ‏கட்டளைகள்
தனZஜ் Zஜலுல் மலா-இகது வர் ரூஹு Fபீஹா Bபி இத்னி-ரBப் Bபிஹிம் மின் குல்லி அம்ர்
அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
سَلٰمٌ ۛ۫ هِیَ حَتّٰی مَطْلَعِ الْفَجْرِ ۟۠
سَلٰمٌஈடேற்றம் உண்டாகுக ۛهِىَஅதுحَتّٰىவரைمَطْلَعِஉதயமாகும்الْفَجْرِ‏அதிகாலை
ஸலாமுன் ஹிய ஹத்தா மத் ல'இல் Fபஜ்ர்
சாந்தி (நிலவியிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.