69. ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)

மக்கீ, வசனங்கள்: 52

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحَآقَّةُ ۟ؕ
وَ مَاۤமேலும் எதுاَدْرٰىكَஉமக்கு அறிவித்ததுمَاஎன்னவென்றுالْحَآقَّةُؕஅந்த உறுதியான நிகழ்ச்சி
வ மா அத்ராக மல் ஹாக்கஹ்
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ بِالْقَارِعَةِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்ثَمُوْدُஸமூதுوَ عَادٌۢமேலும் ஆதுبِالْقَارِعَةِதிடுக்கிடச் செய்யும் நாளை
கத்தBபத் தமூது வ 'ஆதும் Bபில் காரி'அஹ்
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِیَةِ ۟
فَاَمَّاஎனவேثَمُوْدُஸமூதுفَاُهْلِكُوْاஅழிக்கப்பட்டனர்بِالطَّاغِیَةِவரம்பு மீறிய பேரொலியால்
Fப-அம்மா தமூது Fப உஹ்லிகூ Bபித்தாகியஹ்
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِیْحٍ صَرْصَرٍ عَاتِیَةٍ ۟ۙ
وَ اَمَّاஇன்னும்عَادٌஆது சமுதாயமோفَاُهْلِكُوْاஅவர்கள் அழிக்கப்பட்டார்கள்بِرِیْحٍஒரு காற்றினால்صَرْصَرٍகடுங்குளிருடையعَاتِیَةٍۙகட்டுக்கடங்காத
வ அம்மா 'ஆதுன் Fப உஹ்லிகூ Bபி ரீஹின் ஸர்ஸரின் 'ஆதியஹ்
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
سَخَّرَهَا عَلَیْهِمْ سَبْعَ لَیَالٍ وَّثَمٰنِیَةَ اَیَّامٍ ۙ حُسُوْمًاۙ فَتَرَی الْقَوْمَ فِیْهَا صَرْعٰی ۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِیَةٍ ۟ۚ
سَخَّرَهَاஅதனை அவன் ஏவினான்عَلَیْهِمْஅவர்கள் மீதுسَبْعَஏழுلَیَالٍஇரவுகள்وَّ ثَمٰنِیَةَமேலும் எட்டுاَیَّامٍ ۙநாட்கள்حُسُوْمًا ۙதொடர்ச்சியாகفَتَرَیஅப்போது நீர் காண்பீர்الْقَوْمَஅந்த மக்களைفِیْهَاஅதில்صَرْعٰی ۙவீழ்ந்து கிடப்பவர்களாகكَاَنَّهُمْஅவர்கள் இருப்பதைப் போலاَعْجَازُஅடிமரங்கள்نَخْلٍபேரீச்ச மரத்தின்خَاوِیَةٍۚஉள்ளீடற்ற
ஸக்கர ஹா 'அலய்ஹிம் ஸBப்'அ ல யாலி(ன்)வ் வ தமானியத அய்யாமின் ஹுஸூமன் Fபதரல் கவ்ம Fபீஹா ஸர்'ஆ க அன்னஹும் அஃஜாZஜு னக்லின் காவியஹ்
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
فَهَلْ تَرٰی لَهُمْ مِّنْ بَاقِیَةٍ ۟
فَهَلْஎனவேتَرٰیகாண்கிறீராلَهُمْஅவர்களில்مِّنْۢஏதேனும்بَاقِیَةٍஎஞ்சியிருப்பதை
Fபஹல் தரா லஹும் மின் Bபாகியஹ்
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
وَجَآءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَاطِئَةِ ۟ۚ
وَ جَآءَமேலும் வந்தான்فِرْعَوْنُஃபிர்அவ்ன்وَ مَنْமேலும் எவர்قَبْلَهٗஅவனுக்கு முன்னால்وَ الْمُؤْتَفِكٰتُமேலும் தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்களும்بِالْخَاطِئَةِۚபாவத்துடன்
வ ஜா'அ Fபிரவ்னு வ மன் கBப்லஹூ வல் மு'தFபிகாது Bபில் காதி'அஹ்
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِیَةً ۟
فَعَصَوْاஎனவே அவர்கள் மாறுசெய்தார்கள்رَسُوْلَதூதருக்குرَبِّهِمْதங்கள் இறைவனின்فَاَخَذَهُمْஎனவே அவன் அவர்களைப் பிடித்தான்اَخْذَةًஒரு பிடியாகرَّابِیَةًகடுமையான
Fப 'அஸவ் ரஸூல ரBப்Bபிஹிம் Fப அகதஹும் அக்ததர் ராBபியஹ்
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர்; ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
اِنَّا لَمَّا طَغَا الْمَآءُ حَمَلْنٰكُمْ فِی الْجَارِیَةِ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்لَمَّاபொழுதுطَغَاபொங்கி உயர்ந்தالْمَآءُதண்ணீர்حَمَلْنٰكُمْஉங்களை நாம் சுமந்தோம்فِیஇல்الْجَارِیَةِۙகப்பல்
இன்னா லம்மா தகல் மா'உ ஹமல்னாகும் Fபில் ஜாரியஹ்
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَّتَعِیَهَاۤ اُذُنٌ وَّاعِیَةٌ ۟
لِنَجْعَلَهَاநாம் அதனை ஆக்குவதற்காகلَكُمْஉங்களுக்குتَذْكِرَةًஒரு நினைவூட்டலாகوَّ تَعِیَهَاۤமேலும் அதனை நினைவில் இருத்தவும்اُذُنٌசெவிوَّاعِیَةٌநினைவில் இருத்தும்
லி னஜ்'அலஹா லகும் தத்கி ரத(ன்)வ்-வ த'இயஹா உதுனு(ன்)வ் வா'இயஹ்
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
فَاِذَا نُفِخَ فِی الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۟ۙ
فَاِذَاஆகவே எப்போதுنُفِخَஊதப்படுமோفِیஇல்الصُّوْرِஸூர் (எக்காளம்)نَفْخَةٌஊதுதல்وَّاحِدَةٌۙஒரே ஒரு
Fப இதா னுFபிக Fபிஸ் ஸூரி னFப்கது(ன்)வ் வாஹிதஹ்
எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
وَّحُمِلَتِ الْاَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۟ۙ
وَّ حُمِلَتِமேலும் தூக்கப்பட்டுالْاَرْضُபூமியும்وَ الْجِبَالُமலைகளும்فَدُكَّتَاபின்னர் அவ்விரண்டும் தூளாக்கப்படும்دَكَّةًதூளாக்கலாகوَّاحِدَةًۙஒரே
வ ஹுமிலதில் அர்ளு வல் ஜிBபாலு Fபதுக்கதா தக்கத(ன்)வ் வாஹிதஹ்
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
فَیَوْمَىِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ
فَیَوْمَىِٕذٍஅந்நாளில்وَّقَعَتِநிகழும்الْوَاقِعَةُۙநிகழவேண்டிய அச்சம்பவம்
Fப யவ்ம'இதி(ன்)வ் வக'அதில் வாகி'அஹ்
அந்த நாளில் தான் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِیَ یَوْمَىِٕذٍ وَّاهِیَةٌ ۟ۙ
وَ انْشَقَّتِமேலும் பிளந்துவிடும்السَّمَآءُவானம்فَهِیَஆகவே அதுیَوْمَىِٕذٍஅந்நாளில்وَّاهِیَةٌۙபலவீனமானதாகிவிடும்
வன்ஷக்கதிஸ் ஸமா'உ Fபஹிய யவ்ம 'இதி(ன்)வ்-வாஹியஹ்
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
وَّالْمَلَكُ عَلٰۤی اَرْجَآىِٕهَا ؕ وَیَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ یَوْمَىِٕذٍ ثَمٰنِیَةٌ ۟ؕ
وَّ الْمَلَكُவானவர்கள்عَلٰۤیமீதுاَرْجَآىِٕهَا ؕஅதன் ஓரங்கள்وَ یَحْمِلُமேலும் சுமப்பார்கள்عَرْشَஅர்ஷைرَبِّكَஉமது இறைவனின்فَوْقَهُمْதங்களுக்கு மேல்یَوْمَىِٕذٍஅந்நாளில்ثَمٰنِیَةٌؕஎட்டுப் பேர்
வல் மலகு 'அலா அர்ஜா'இஹா; வ யஹ்மிலு 'அர்ஷ ரBப்Bபிக Fபவ்கஹும் யவ்ம'இதின் தமானியஹ்
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
یَوْمَىِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰی مِنْكُمْ خَافِیَةٌ ۟
یَوْمَىِٕذٍஅந்நாளில்تُعْرَضُوْنَநீங்கள் கொண்டுவரப்படுவீர்கள்لَاஇல்லைتَخْفٰیமறைந்திருக்கும்مِنْكُمْஉங்களில்خَافِیَةٌஎந்த இரகசியமும்
யவ்ம'இதின் துஃரளூன லா தக்Fபா மின் கும் காFபியஹ்
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۙ فَیَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِیَهْ ۟ۚ
فَاَمَّاஎனவேمَنْஎவர்اُوْتِیَகொடுக்கப்பட்டாரோكِتٰبَهٗதனது ஏட்டைبِیَمِیْنِهٖ ۙதனது வலது கையில்فَیَقُوْلُஅவர் கூறுவார்هَآؤُمُஇதோاقْرَءُوْاவாசியுங்கள்كِتٰبِیَهْۚஎனது ஏட்டை
Fப அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபியமீனிஹீ Fப யகூலு ஹா'உமுக் ர'ஊ கிதாBபியஹ்
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), “இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்” எனக் கூறுவார்.
اِنِّیْ ظَنَنْتُ اَنِّیْ مُلٰقٍ حِسَابِیَهْ ۟ۚ
اِنِّیْநிச்சயமாக நான்ظَنَنْتُஉறுதியாக நம்பினேன்اَنِّیْநான்مُلٰقٍசந்திப்பேன் என்றுحِسَابِیَهْۚஎனது கணக்கை
இன்னீ ளனன்து அன்னீ முலாகின் ஹிஸாBபியஹ்
“நிச்சயமாக, நான் என்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”
فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ۙ
فَهُوَஆகவே அவர்فِیْஇல்عِیْشَةٍவாழ்க்கைرَّاضِیَةٍۙதிருப்தியான
Fபஹுவ Fபீ 'ஈஷதிர் ராளியஹ்
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
قُطُوْفُهَا دَانِیَةٌ ۟
قُطُوْفُهَاஅதன் கனிக்குலைகள்دَانِیَةٌதாழ்ந்து தொங்கும்
குதூFபுஹா தானியஹ்
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும்.
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَاۤ اَسْلَفْتُمْ فِی الْاَیَّامِ الْخَالِیَةِ ۟
كُلُوْاஉண்ணுங்கள்وَ اشْرَبُوْاமேலும் பருகுங்கள்هَنِیْٓـًٔۢاமகிழ்ச்சியுடன்بِمَاۤஎதன்பொருட்டுاَسْلَفْتُمْநீங்கள் முற்படுத்தினீர்களோفِیஇல்الْاَیَّامِநாட்கள்الْخَالِیَةِகடந்த
குலூ வஷ்ரBபூ ஹனீ'அம் Bபிமா அஸ்லFப்தும் Fபில் அய்யாமில் காலியஹ்
“சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்).
وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ۙ۬ فَیَقُوْلُ یٰلَیْتَنِیْ لَمْ اُوْتَ كِتٰبِیَهْ ۟ۚ
وَ اَمَّاஆனால்مَنْஎவன்اُوْتِیَகொடுக்கப்பட்டானோكِتٰبَهٗஅவனது குறிப்பேட்டைبِشِمَالِهٖ ۙ۬அவனது இடது கையில்فَیَقُوْلُஅவன் கூறுவான்یٰلَیْتَنِیْஅந்தோ! நான்لَمْஇல்லையேاُوْتَகொடுக்கப்பட்டிருக்கكِتٰبِیَهْۚஎனது குறிப்பேட்டை
வ அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபிஷிமாலிஹீ Fப யகூலு யாலய்தனீ லம் ஊத கிதாBபியஹ்
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
وَلَمْ اَدْرِ مَا حِسَابِیَهْ ۟ۚ
وَ لَمْமேலும் இல்லைاَدْرِநான் அறியمَاஎன்னவென்றுحِسَابِیَهْۚஎனது கணக்கு
வ லம் அத்ரி மா ஹிஸாBபியஹ்
“அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
یٰلَیْتَهَا كَانَتِ الْقَاضِیَةَ ۟ۚ
یٰلَیْتَهَاஅந்தோ! அதுவேكَانَتِஇருந்திருக்கக் கூடாதாالْقَاضِیَةَۚமுடிவாக
யா லய்தஹா கானதில் காளியஹ்
“(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
مَاۤ اَغْنٰی عَنِّیْ مَالِیَهْ ۟ۚ
مَاۤஇல்லைاَغْنٰیபயனளித்ததுعَنِّیْஎனக்குمَالِیَهْۚஎன்னுடைய செல்வம்
மா அக்னா 'அன்னீ மாலியஹ்
“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
هَلَكَ عَنِّیْ سُلْطٰنِیَهْ ۟ۚ
هَلَكَஅழிந்துவிட்டதுعَنِّیْஎன்னிடமிருந்துسُلْطٰنِیَهْۚஎன் அதிகாரம்
ஹலக 'அன்னீ ஸுல்தானியஹ்
“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).
خُذُوْهُ فَغُلُّوْهُ ۟ۙ
خُذُوْهُஅவனைப் பிடியுங்கள்فَغُلُّوْهُۙபின்னர் அவனுக்கு விலங்கிடுங்கள்
குதூஹு Fபகுல்லூஹ்
“(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”
ثُمَّ الْجَحِیْمَ صَلُّوْهُ ۟ۙ
ثُمَّபின்னர்الْجَحِیْمَநரகத்தில்صَلُّوْهُۙஅவனைப் புகுத்துங்கள்
தும்மல் ஜஹீம ஸல்லூஹ்
“பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
ثُمَّ فِیْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ۟ؕ
ثُمَّபின்னர்فِیْஒருسِلْسِلَةٍசங்கிலியில்ذَرْعُهَاஅதன் நீளம்سَبْعُوْنَஎழுபதுذِرَاعًاமுழம்فَاسْلُكُوْهُؕஅவனைப் பிணைத்து விடுங்கள்
தும்ம Fபீ ஸில்ஸிலதின் தர்'உஹா ஸBப்'ஊன திரா'அன் Fபஸ்லுகூஹ்
“பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்று உத்தரவிடப்படும்).
اِنَّهٗ كَانَ لَا یُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِیْمِ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்لَاஇல்லைیُؤْمِنُநம்பிக்கை கொள்பவனாகبِاللّٰهِஅல்லாஹ்வின் மீதுالْعَظِیْمِۙமகத்துவமிக்க
இன்னஹூ கான லா யு'மினு Bபில்லாஹில் 'அளீம்
“நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.”
وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ؕ
وَ لَاமேலும் இல்லைیَحُضُّஅவன் தூண்டுவதுعَلٰیமீதுطَعَامِஉணவளிப்பதின்الْمِسْكِیْنِؕஏழைக்கு
வ லா யஹுள்ளு 'அலா த'ஆமில் மிஸ்கீன்
“அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.”
فَلَیْسَ لَهُ الْیَوْمَ هٰهُنَا حَمِیْمٌ ۟ۙ
فَلَیْسَஎனவே இல்லைلَهُஅவனுக்குالْیَوْمَஇன்றுهٰهُنَاஇங்கேحَمِیْمٌۙஉற்ற நண்பன்
Fபலய்ஸ லஹுல் யவ்ம ஹாஹுனா ஹமீம்
“எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.”
وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِیْنٍ ۟ۙ
وَّ لَاமேலும் இல்லைطَعَامٌஉணவுاِلَّاதவிரمِنْஇருந்துغِسْلِیْنٍۙசீழ்
வ லா த'ஆமுன் இல்லா மின் கிஸ்லீன்
“சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.”
لَّا یَاْكُلُهٗۤ اِلَّا الْخَاطِـُٔوْنَ ۟۠
لَّاஇல்லைیَاْكُلُهٗۤஅதனை உண்பார்கள்اِلَّاதவிரالْخَاطِـُٔوْنَ۠பாவிகள்
லா ய'குலுஹூ இல்லல் காதி'ஊன்
“குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.”  
فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَ ۟ۙ
فَلَاۤஆகவேاُقْسِمُநான் சத்தியம் செய்கிறேன்بِمَاஎவற்றின் மீதுتُبْصِرُوْنَۙநீங்கள் காண்கிறீர்களோ
Fபலா உக்ஸிமு Bபிமா துBப்ஸிரூன்
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
وَمَا لَا تُبْصِرُوْنَ ۟ۙ
وَ مَاமேலும் எவற்றைلَاஇல்லைتُبْصِرُوْنَۙநீங்கள் பார்க்கிறீர்களோ
வமா லா துBப்ஸிரூன்
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۚۙ
اِنَّهٗநிச்சயமாக இதுلَقَوْلُநிச்சயமாக ஒரு சொல்رَسُوْلٍதூதரின்كَرِیْمٍۚۙகண்ணியமிக்க
இன்னஹூ லகவ்லு ரஸூலின் கரீம்
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
وَّمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ؕ قَلِیْلًا مَّا تُؤْمِنُوْنَ ۟ۙ
وَّ مَاமேலும் அல்லهُوَஅதுبِقَوْلِசொல்شَاعِرٍ ؕஒரு கவிஞரின்قَلِیْلًاமிகக் குறைவாகவேمَّاதான்تُؤْمِنُوْنَۙநீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள்
வமா ஹுவ Bபிகவ்லி ஷா'இர்; கலீலன் மா து'மினூன்
இது ஒரு கவிஞனின் சொல்லன்று; (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
وَلَا بِقَوْلِ كَاهِنٍ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟ؕ
وَ لَاமேலும் இல்லைبِقَوْلِசொல்லும்كَاهِنٍ ؕகுறிசொல்பவனின்قَلِیْلًاமிகக் குறைவாகவேمَّاநீங்கள்تَذَكَّرُوْنَؕநல்லுணர்வு பெறுகிறீர்கள்
வ லா Bபிகவ்லி காஹின்; கலீலன் மா ததக்கரூன்
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று; (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
تَنْزِیْلٌஇறக்கியருளப்பட்டதாகும்مِّنْஇருந்துرَّبِّஇறைவன்الْعٰلَمِیْنَஅகிலங்களின்
தன்Zஜீலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
وَلَوْ تَقَوَّلَ عَلَیْنَا بَعْضَ الْاَقَاوِیْلِ ۟ۙ
وَ لَوْமேலும் ஒருவேளைتَقَوَّلَஇட்டுக்கட்டியிருந்தால்عَلَیْنَاநம் மீதுبَعْضَசிலالْاَقَاوِیْلِۙசொற்களை
வ லவ் தகவ்வல 'அலய்னா Bபஃளல் அகாவீல்
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
لَاَخَذْنَا مِنْهُ بِالْیَمِیْنِ ۟ۙ
لَاَخَذْنَاநிச்சயமாக நாம் பிடித்திருப்போம்مِنْهُஅவனைبِالْیَمِیْنِۙவலக்கரத்தால்
ல-அகத்னா மின்ஹு Bபில்யமீன்
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِیْنَ ۟ؗۖ
ثُمَّபின்னர்لَقَطَعْنَاநாம் நிச்சயமாகத் துண்டித்திருப்போம்مِنْهُஅவனிடமிருந்துالْوَتِیْنَؗۖஉயிர்நாடியை
தும்ம லகதஃனா மின்ஹுல் வதீன்
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حٰجِزِیْنَ ۟
فَمَاஆகவே இல்லைمِنْكُمْஉங்களில்مِّنْஎந்தاَحَدٍஒருவரும்عَنْهُஅவரிடமிருந்துحٰجِزِیْنَதடுப்பவர்களாக
Fபமா மின்கும் மின் அஹதின்'அன்ஹு ஹாஜிZஜீன்
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِیْنَ ۟
وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக இதுلَتَذْكِرَةٌஒரு நினைவூட்டலாகும்لِّلْمُتَّقِیْنَஇறையச்சமுடையோருக்கு
வ இன்னஹூ லதத்கிரதுல் லில்முத்தகீன்
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِیْنَ ۟
وَ اِنَّاமேலும் நிச்சயமாக நாம்لَنَعْلَمُதிண்ணமாக அறிவோம்اَنَّஎன்பதைمِنْكُمْஉங்களில்مُّكَذِّبِیْنَபொய்ப்பிப்பவர்கள்
வ இன்ன லனஃலமு அன்ன மின்கும் முகத்திBபீன்
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
وَاِنَّهٗ لَحَسْرَةٌ عَلَی الْكٰفِرِیْنَ ۟
وَ اِنَّهٗநிச்சயமாக அதுلَحَسْرَةٌஒரு கைசேதமாகும்عَلَیமீதுالْكٰفِرِیْنَநிராகரிப்பவர்கள்
வ இன்னஹு லஹஸ்ரதுன் 'அலல் காFபிரீன்
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
وَاِنَّهٗ لَحَقُّ الْیَقِیْنِ ۟
وَ اِنَّهٗமேலும் நிச்சயமாக அதுلَحَقُّஉண்மையானالْیَقِیْنِஉறுதியாகும்
வ இன்னஹூ லஹக்குல் யகீன்
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
فَسَبِّحْஎனவே துதிப்பீராகبِاسْمِதிருநாமத்தைக் கொண்டுرَبِّكَஉமது இறைவனின்الْعَظِیْمِ۠மகத்துவமிக்க
Fபஸ்ஸBப்Bபிஹ் Bபிஸ்மி ரBப்Bபிகல் 'அளீம்
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.