34. ஸூரத்துஸ் ஸபா

மக்கீ, வசனங்கள்: 54

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ وَلَهُ الْحَمْدُ فِی الْاٰخِرَةِ ؕ وَهُوَ الْحَكِیْمُ الْخَبِیْرُ ۟
اَلْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கே!الَّذِىْஎப்படிப்பட்டவன்لَهٗஅவனுக்கே உரியனمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவை(யும்)وَمَا فِى الْاَرْضِபூமியில் உள்ளவையும்وَلَـهُஅவனுக்கேالْحَمْدُஎல்லாப் புகழும்فِى الْاٰخِرَةِ ؕமறுமையிலும்وَهُوَஅவன்தான்الْحَكِيْمُமகாஞானமுடையவன்الْخَبِيْرُ‏ஆழ்ந்தறிபவன்
அல்ஹம்து லில்லாஹில் லதீ லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில் அர்ளி வ லஹுல் ஹம்து Fபில் ஆகிரஹ்; வ ஹுவல் ஹகீமுல் கBபீர்
அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
یَعْلَمُ مَا یَلِجُ فِی الْاَرْضِ وَمَا یَخْرُجُ مِنْهَا وَمَا یَنْزِلُ مِنَ السَّمَآءِ وَمَا یَعْرُجُ فِیْهَا ؕ وَهُوَ الرَّحِیْمُ الْغَفُوْرُ ۟
يَعْلَمُஅவன் நன்கறிவான்مَا يَلِجُநுழைவதை(யும்)فِى الْاَرْضِபூமியில்وَمَا يَخْرُجُவெளியேறுவதையும்مِنْهَاஅதிலிருந்துوَمَا يَنْزِلُஇறங்குவதையும்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துوَمَا يَعْرُجُஏறுவதையும்فِيْهَا ؕஅதில்وَهُوَஅவன்தான்الرَّحِيْمُமகா கருணையாளன்الْغَفُوْرُ‏மகா மன்னிப்பாளன்
யஃலமு மா யலிஜு Fபில் அர்ளி வமா யக்ருஜு மின்ஹா வமா யன்Zஜிலு மினஸ் ஸமா'இ வமா யஃருஜு Fபீஹா; வ ஹுவர் ரஹீமுல் கFபூர்
பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன் பால் உயருவதையும் (ஆகிய அனைத்தையும்) அவன் அறிகிறான். அவன் மிக்க அன்புடையவன், மிகவும் மன்னிப்பவன்.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَا تَاْتِیْنَا السَّاعَةُ ؕ قُلْ بَلٰی وَرَبِّیْ لَتَاْتِیَنَّكُمْ ۙ عٰلِمِ الْغَیْبِ ۚ لَا یَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰلِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِیْ كِتٰبٍ مُّبِیْنٍ ۟ۗۙ
وَقَالَகூறுகின்றனர்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பாளர்கள்لَا تَاْتِيْنَاஎங்களிடம் வராதுالسَّاعَةُ ؕமறுமைقُلْகூறுவீராக!بَلٰىஏன் (வராது)وَرَبِّىْஎன் இறைவன் மீது சத்தியமாகلَـتَاْتِيَنَّكُمْۙநிச்சயமாக அது உங்களிடம் வரும்عٰلِمِநன்கறிந்தவனாகியالْغَيْبِ ۚமறைவானவற்றைلَا يَعْزُبُஎதுவும் மறைந்துவிடாதுعَنْهُஅவனை விட்டும்مِثْقَالُஅளவும்ذَرَّةٍஅணுفِى السَّمٰوٰتِவானங்களிலும்وَلَا فِى الْاَرْضِபூமியிலும்وَلَاۤ اَصْغَرُசிறியது இல்லைمِنْ ذٰ لِكَஅதை விடوَلَاۤ اَكْبَرُபெரியது இல்லைاِلَّاதவிரفِىْ كِتٰبٍபதிவேட்டில் இருந்தேمُّبِيْنٍۙ‏தெளிவான
வ காலல் லதீன கFபரூ லா தாதீனஸ் ஸா'அஹ்; குல் Bபலா வ ரBப்Bபீ லதாதியன்னகும் 'ஆலிமுல் கய்Bப்; லா யஃZஜுBபு 'அன்ஹு மித்காலு தர்ரதின் Fபிஸ் ஸமாவாதி வலா Fபில் அர்ளி வ லா அஸ்கரு மின் தாலிக வ லா அக்Bபரு இல்லா Fபீ கிதாBபிம் முBபீன்
எனினும் நிராகரிப்பவர்கள்: “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
لِّیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ اُولٰٓىِٕكَ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟
لِّيَجْزِىَஅவன் கூலிகொடுப்பதற்காகالَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கை கொண்டவர்களுக்குوَعَمِلُوْاஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِؕநன்மைகளைاُولٰٓٮِٕكَ لَهُمْஅவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்பு(ம்)وَّرِزْقٌவாழ்க்கையும்كَرِيْمٌ‏கண்ணியமான
லியஜ்Zஜியல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாத்; உலா'இக லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது); அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.
وَالَّذِیْنَ سَعَوْ فِیْۤ اٰیٰتِنَا مُعٰجِزِیْنَ اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ مِّنْ رِّجْزٍ اَلِیْمٌ ۟
وَالَّذِيْنَ سَعَوْமுயற்சிப்பவர்கள்فِىْۤ اٰيٰتِنَاநமது வசனங்களில்مُعٰجِزِيْنَஅவர்கள் முறியடிப்பதற்காகاُولٰٓٮِٕكَ لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனை உண்டுمِّنْ رِّجْزٍகெட்ட தண்டனையின்اَلِيْمٌ‏மிகவும் வலிமிக்க
வல்லதீன ஸ'அவ் Fபீ ஆயாதினா மு'ஆஜிZஜீன உலா 'இக லஹும் 'அதாBபும் மிர் ரிஜ்Zஜின் அலீம்
மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு.
وَیَرَی الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ الَّذِیْۤ اُنْزِلَ اِلَیْكَ مِنْ رَّبِّكَ هُوَ الْحَقَّ ۙ وَیَهْدِیْۤ اِلٰی صِرَاطِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟
وَيَرَىஅறிவார்கள்الَّذِيْنَ اُوْتُواகொடுக்கப்பட்டவர்கள்الْعِلْمَகல்விالَّذِىْۤ اُنْزِلَஇறக்கப்பட்டதைاِلَيْكَஉமக்குمِنْ رَّبِّكَஉமது இறைவனிடமிருந்துهُوَஅதுதான்الْحَـقَّ ۙசத்தியம்وَيَهْدِىْۤஇன்னும் நேர்வழி காட்டுகிறதுاِلٰى صِرَاطِபாதைக்குالْعَزِيْزِ الْحَمِيْدِ‏மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின்
வ யரல் லதீன ஊதுல் 'இல்மல் லதீ உன்Zஜில இலய்க மிர் ரBப்Bபிக ஹுவல் ஹக்க வ யஹ்தீ இலா ஸிராதில் 'அZஜீZஜில் ஹமீத்
எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்.
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا هَلْ نَدُلُّكُمْ عَلٰی رَجُلٍ یُّنَبِّئُكُمْ اِذَا مُزِّقْتُمْ كُلَّ مُمَزَّقٍ ۙ اِنَّكُمْ لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ۟ۚ
وَقَالَகூறுகின்றனர்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்هَلْ نَدُلُّكُمْநாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா?عَلٰى رَجُلٍஓர் ஆடவரைيُّنَبِّئُكُمْஅவர் உங்களுக்கு அறிவிக்கின்றார்اِذَا مُزِّقْتُمْநீங்கள் கிழிக்கப்பட்ட பின்னர்كُلَّ مُمَزَّقٍۙசுக்கு நூறாகاِنَّكُمْநிச்சயமாக நீங்கள்لَفِىْ خَلْقٍபடைப்பாக (உருவாக்கப்படுவீர்கள்)جَدِيْدٍۚ‏புதிய
வ காலல் லதீன கFபரூ ஹல் னதுல்லுகும் 'அலா ரஜுலி(ன்)ய் யுனBப்Bபி 'உகும் இதா முZஜ்Zஜிக்தும் குல்ல முமZஜ்Zஜகின் இன்னகும் லFபீ கல்கின் ஜதீத்
ஆனால், நிராகரிக்கிறார்களே அவர்கள்: “நீங்கள் (இறந்து, மக்கித் தூளாகச்) சிதறடிக்கப்பட்ட பின், நீங்கள் ஒரு புதிய படைப்பாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கும் மனிதரை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவா?” என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
اَفْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَمْ بِهٖ جِنَّةٌ ؕ بَلِ الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ فِی الْعَذَابِ وَالضَّلٰلِ الْبَعِیْدِ ۟
اَ فْتَـرٰىஅவர் இட்டுக்கட்டுகிறாராعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதுكَذِبًاபொய்யைاَمْஅல்லதுبِهٖஅவருக்குجِنَّةٌ  ؕபைத்தியம் (பிடித்திருக்கிறதா?)بَلِமாறாகالَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَநம்பிக்கை கொள்ளாதவர்கள்بِالْاٰخِرَةِமறுமையைفِى الْعَذَابِவேதனையிலும்وَالضَّلٰلِவழிகேட்டிலும்الْبَعِيْدِ‏தூரமான
அFப்தரா 'அலல் லாஹி கதிBபன் அம் Bபிஹீ ஜின்னஹ்; Bபலில் லதீன லா யு'மினூன Bபில் ஆகிரதி Fபில்'அதாBபி வள் ளலாலில் Bப'ஈத்
அன்றியும், இ(வ்வாறு கூறுகின்ற)வர் அல்லாஹ்வின் மீது “பொய்யை இட்டுக் கட்டுகிறாரா; அல்லது இவருக்கு பைத்தியமா?” (என்றும் கேட்கிறார்கள்.) அவ்வாறல்ல! மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் வேதனையிலும் வெகு தூரமான வழி கேட்டிலுமே இருக்கிறார்கள்.
اَفَلَمْ یَرَوْا اِلٰی مَا بَیْنَ اَیْدِیْهِمْ وَمَا خَلْفَهُمْ مِّنَ السَّمَآءِ وَالْاَرْضِ ؕ اِنْ نَّشَاْ نَخْسِفْ بِهِمُ الْاَرْضَ اَوْ نُسْقِطْ عَلَیْهِمْ كِسَفًا مِّنَ السَّمَآءِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً لِّكُلِّ عَبْدٍ مُّنِیْبٍ ۟۠
اَفَلَمْ يَرَوْاஅவர்கள் பார்க்கவில்லையா?اِلٰى مَا بَيْنَ اَيْدِيْهِمْதங்களுக்கு முன்னுள்ளوَمَا خَلْفَهُمْஇன்னும் தங்களுக்கு பின்னுள்ளمِّنَ السَّمَآءِவானத்தையும்وَالْاَرْضِ ؕபூமியையும்اِنْ نَّشَاْநாம் நாடினால்نَخْسِفْசொருகிவிடுவோம்بِهِمُஅவர்களைالْاَرْضَபூமியில்اَوْஅல்லதுنُسْقِطْவிழவைப்போம்عَلَيْهِمْஅவர்கள் மீதுكِسَفًاதுண்டுகளைمِّنَ السَّمَآءِ ؕவானத்தின்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கின்றதுلَاٰيَةًஒர் அத்தாட்சிلِّكُلِّ عَبْدٍஎல்லா அடியார்களுக்கும்مُّنِيْبٍ‏திரும்பக்கூடிய
அFபலம் யரவ் இலா மா Bபய்ன அய்தீஹிம் வமா கல்Fபஹும் மினஸ் ஸமா'இ வல் அர்ள்; இன் னஷத் னக்ஸிFப் Bபிஹிமுல் அர்ள அவ் னுஸ்கித் 'அலய்ஹிம் கிஸFபம் மினஸ் ஸமா'; இன்ன Fபீ தாலிக ல ஆயதல் லிகுல்லி 'அBப்திம் முனீBப்
வானத்திலும், பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும் அவர்களுக்குப் பின்னாலுள்ளதையும் அவர்கள் பார்க்க வில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.  
وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ مِنَّا فَضْلًا ؕ یٰجِبَالُ اَوِّبِیْ مَعَهٗ وَالطَّیْرَ ۚ وَاَلَنَّا لَهُ الْحَدِیْدَ ۟ۙ
وَلَقَدْதிட்டவட்டமாகاٰتَيْنَاவழங்கினோம்دَاوٗدَதாவூதுக்குمِنَّاநம் புறத்தில் இருந்துفَضْلًا ؕமேன்மையைيٰجِبَالُமலைகளே!اَوِّبِىْநீங்கள் துதியுங்கள்مَعَهٗஅவருடன்وَالطَّيْرَ ۚபறவைகளே!وَاَلَــنَّاஇன்னும் மென்மையாக்கினோம்لَـهُஅவருக்குالْحَدِيْدَ ۙ‏இரும்பை
வலகத் ஆதய்னா தாவூத மின்னா Fபள்ல(ன்)ய் யா ஜிBபாலு அவ்விBபீ ம'அஹூ வத்தய்ர வ அலன்னா லஹுல் ஹதீத்
இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
اَنِ اعْمَلْ سٰبِغٰتٍ وَّقَدِّرْ فِی السَّرْدِ وَاعْمَلُوْا صَالِحًا ؕ اِنِّیْ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
اَنِ اعْمَلْசெய்வீராக!سٰبِغٰتٍஉருக்குச் சட்டைகள்وَّقَدِّرْஇன்னும் அளவாக செய்வீராக!فِى السَّرْدِஆணிகளைوَاعْمَلُوْاஇன்னும் செய்யுங்கள்صَالِحًـا ؕநன்மையைاِنِّىْநிச்சயமாக நான்بِمَا تَعْمَلُوْنَநீங்கள் செய்வதைبَصِيْرٌ‏உற்று நோக்குகின்றேன்
அனிஃமல் ஸாBபிகாதி(ன்)வ் வ கத்திர் Fபிஸ் ஸர்தி வஃமலூ ஸாலிஹன் இன்னீ Bபிமா தஃமலூன Bபஸீர்
“வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றேன்” (என்றும் சொன்னோம்.)
وَلِسُلَیْمٰنَ الرِّیْحَ غُدُوُّهَا شَهْرٌ وَّرَوَاحُهَا شَهْرٌ ۚ وَاَسَلْنَا لَهٗ عَیْنَ الْقِطْرِ ؕ وَمِنَ الْجِنِّ مَنْ یَّعْمَلُ بَیْنَ یَدَیْهِ بِاِذْنِ رَبِّهٖ ؕ وَمَنْ یَّزِغْ مِنْهُمْ عَنْ اَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِیْرِ ۟
وَلِسُلَيْمٰنَஇன்னும் சுலைமானுக்குالرِّيْحَகாற்றை(யும்)غُدُوُّهَاஅதன் காலைப்பொழுது(ம்)شَهْرٌஒரு மாதமாகும்وَّرَوَاحُهَاஇன்னும் அதன் மாலைப்பொழுதும்شَهْرٌۚஒரு மாதமாகும்وَ اَسَلْنَاஇன்னும் ஓட வைத்தோம்لَهٗஅவருக்குعَيْنَசுரங்கத்தைالْقِطْرِؕசெம்பினுடையوَمِنَ الْجِنِّஇன்னும் ஜின்களிலிருந்துمَنْ يَّعْمَلُவேலை செய்கின்றவர்களைبَيْنَ يَدَيْهِஅவருக்கு முன்னால்بِاِذْنِஉத்தரவின் படிرَبِّهِؕஅவரது இறைவனின்وَمَنْயார்يَّزِغْவிலகுவாரோمِنْهُمْஅவர்களில்عَنْ اَمْرِنَاநமது கட்டளையை விட்டுنُذِقْهُஅவருக்கு நாம் சுவைக்க வைப்போம்مِنْ عَذَابِதண்டனையைالسَّعِيْرِ‏கொழுந்துவிட்டெரியும் நெருப்பின்
வ லி-ஸுலய்மானர் ரீஹ குதுவ்வுஹா ஷஹ்ரு(ன்)வ் வ ர-வாஹுஹா ஷஹ்ரு(ன்)வ் வ அஸல்னா லஹூ 'அய்னல் கித்ர்; வ மினல் ஜின்னி மய் யஃமலு Bபய்ன யதய்ஹி Bபி இத்னி ரBப்Bபிஹ்; வ மய் யZஜிக் மின்ஹும் 'அன் அம்ரினா னுதிக்ஹு மின் 'அதாBபிஸ் ஸ'ஈர்
(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
یَعْمَلُوْنَ لَهٗ مَا یَشَآءُ مِنْ مَّحَارِیْبَ وَتَمَاثِیْلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُوْرٍ رّٰسِیٰتٍ ؕ اِعْمَلُوْۤا اٰلَ دَاوٗدَ شُكْرًا ؕ وَقَلِیْلٌ مِّنْ عِبَادِیَ الشَّكُوْرُ ۟
يَعْمَلُوْنَஅவை செய்கின்றனلَهٗஅவருக்குمَا يَشَآءُஅவர் நாடுகின்ற(தை)مِنْ مَّحَارِيْبَதொழுமிடங்களை(யும்)وَتَمَاثِيْلَசிலைகளையும்وَجِفَانٍபாத்திரங்களையும்كَالْجَـوَابِநீர் தொட்டிகளைப் போன்றوَقُدُوْرٍசட்டிகளையும்رّٰسِيٰتٍ ؕஉறுதியானاِعْمَلُوْۤاசெய்யுங்கள்اٰلَகுடும்பத்தார்களே!دَاوٗدَதாவூதின்شُكْرًا ؕநன்றி செலுத்துவதற்காகوَقَلِيْلٌகுறைவானவர்களேمِّنْ عِبَادِىَஎன் அடியார்களில்الشَّكُوْرُ‏நன்றி செலுத்துபவர்கள்
யஃமலூன லஹூ ம யஷா'உ மிம் மஹாரீBப வ தமாதீல வ ஜிFபானின் கல்ஜவாBபி வ குதூரிர் ராஸியாத்; இஃமலூ ஆல தாவூத ஷுக்ரா; வ கலீலும் மின் 'இBபாதியஷ் ஷகூர்
அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).
فَلَمَّا قَضَیْنَا عَلَیْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلٰی مَوْتِهٖۤ اِلَّا دَآبَّةُ الْاَرْضِ تَاْكُلُ مِنْسَاَتَهٗ ۚ فَلَمَّا خَرَّ تَبَیَّنَتِ الْجِنُّ اَنْ لَّوْ كَانُوْا یَعْلَمُوْنَ الْغَیْبَ مَا لَبِثُوْا فِی الْعَذَابِ الْمُهِیْنِ ۟ؕ
فَلَمَّا قَضَيْنَاநாம் முடிவு செய்தபோதுعَلَيْهِஅவருக்குالْمَوْتَமரணத்தைمَا دَلَّهُمْஅவர்களுக்கு அறிவிக்கவில்லைعَلٰى مَوْتِهٖۤஅவர் மரணித்து விட்டதைاِلَّاதவிரدَآ بَّةُ الْاَرْضِகரையானைتَاْ كُلُதின்ற(து)مِنْسَاَتَهُ ۚஅவருடைய தடியைفَلَمَّا خَرَّஅவர் கீழே விழுந்தபோதுتَبَيَّنَتِதெளிவாக தெரிய வந்ததுالْجِنُّஜின்களுக்குاَنْ لَّوْ كَانُوْا يَعْلَمُوْنَதாங்கள் அறிந்துகொண்டிருந்தால்الْغَيْبَமறைவானவற்றைمَا لَبِثُوْاதங்கி இருந்திருக்க மாட்டார்கள்فِى الْعَذَابِவேதனையில்الْمُهِيْنِ ؕ‏இழிவான
Fபலம்மா களய்னா 'அலய்ஹில் மவ்த ம தல்லஹும் 'அலா மவ்திஹீ இல்லா தாBப்Bபதுல் அர்ளி தாகுலு மின்ஸ அதஹூ Fபலம்மா கர்ர தBபய்யனதில் ஜின்னு அல் லவ் கானூ யஃலமூனல் கய்Bப மா லBபிதூ Fபில் 'அதாBபில் முஹீன்
அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.
لَقَدْ كَانَ لِسَبَاٍ فِیْ مَسْكَنِهِمْ اٰیَةٌ ۚ جَنَّتٰنِ عَنْ یَّمِیْنٍ وَّشِمَالٍ ؕ۬ كُلُوْا مِنْ رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوْا لَهٗ ؕ بَلْدَةٌ طَیِّبَةٌ وَّرَبٌّ غَفُوْرٌ ۟
لَقَدْதிட்டவட்டமாகكَانَஇருக்கின்றதுلِسَبَاٍசபா நகர மக்களுக்குفِىْ مَسْكَنِهِمْஅவர்களின் தங்குமிடத்தில்اٰيَةٌ  ۚஓர் அத்தாட்சிجَنَّتٰنِஇரண்டு தோட்டங்கள்عَنْ يَّمِيْنٍவலது பக்கத்திலும்وَّشِمَالٍ ؕஇடது பக்கத்திலும்کُلُوْاஉண்ணுங்கள்!مِنْ رِّزْقِஉணவைرَبِّكُمْஉங்கள் இறைவனின்وَاشْكُرُوْاஇன்னும் நன்றி செலுத்துங்கள்لَهٗ ؕஅவனுக்குبَلْدَةٌ طَيِّبَةٌநல்ல ஊர்وَّرَبٌّஇன்னும் இறைவன்غَفُوْرٌ‏‏மகா மன்னிப்பாளன்
லகத் கான லி ஸBப-இன் Fபீ மஸ்கனிஹிம் ஆயதுன் ஜன்னதானி 'அ(ன்)ய் யமீனி(ன்)வ் வ ஷிமாலின் குலூ மிர் ரிZஜ்கி ரBப்Bபிகும் வஷ்குரூலஹ்; Bபல்ததுன் தய்யிBபது(ன்)வ் வ ரBப்Bபுன் கFபூர்
நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).
فَاَعْرَضُوْا فَاَرْسَلْنَا عَلَیْهِمْ سَیْلَ الْعَرِمِ وَبَدَّلْنٰهُمْ بِجَنَّتَیْهِمْ جَنَّتَیْنِ ذَوَاتَیْ اُكُلٍ خَمْطٍ وَّاَثْلٍ وَّشَیْءٍ مِّنْ سِدْرٍ قَلِیْلٍ ۟
فَاَعْرَضُوْاஆனால் புறக்கணித்தனர்فَاَرْسَلْنَاஆகவே அனுப்பினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுسَيْلَபெரும் வெள்ளத்தைالْعَرِمِஅடியோடு அரித்து செல்கின்றوَبَدَّلْنٰهُمْஇன்னும் மாற்றிவிட்டோம் அவர்களுக்குبِجَنَّتَيْهِمْஅவர்களின் இரண்டு தோட்டங்களுக்குப் பதிலாகجَنَّتَيْنِஇரண்டு தோட்டங்களைذَوَاتَىْஉடையاُكُلٍபழங்கள்خَمْطٍகசப்பான (துர்நாற்றமுள்ள)وَّاَثْلٍஇன்னும் காய்க்காத மரங்கள்وَّ شَیْءٍஇன்னும் சிலمِّنْ سِدْرٍஇலந்தை மரங்களைقَلِیْلٍமிகக் குறைவான
Fப அஃரளூ Fப-அர்ஸல்னா 'அலய்ஹிம் ஸய்லல் 'அரிமி வ Bபத்தல்னாஹும் Bபிஜன்னதய்ஹிம் ஜன்னதய்னி தவாதய் உகுலின் கம்தி(ன்)வ் வ அத்லி(ன்)வ் வ ஷய்'இம் மின் ஸித்ரின் கலீல்
ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.
ذٰلِكَ جَزَیْنٰهُمْ بِمَا كَفَرُوْا ؕ وَهَلْ نُجٰزِیْۤ اِلَّا الْكَفُوْرَ ۟
ذٰ لِكَஇதுجَزَيْنٰهُمْஅவர்களுக்கு நாம் கூலி கொடுத்தோம்بِمَا كَفَرُوْا ؕஅவர்கள் நிராகரித்ததற்காகوَهَلْ نُـجٰزِىْۤமற்றவர்களையா நாம் தண்டிப்போம்اِلَّاதவிரالْـكَفُوْرَ‏நிராகரிப்பாளர்களை
தாலிக ஜZஜய்னாஹும் Bபிமா கFபரூ வ ஹல் னுஜாZஜீ இல்லல் கFபூர்
அவர்கள் நிராகரித்ததின் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா?
وَجَعَلْنَا بَیْنَهُمْ وَبَیْنَ الْقُرَی الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا قُرًی ظَاهِرَةً وَّقَدَّرْنَا فِیْهَا السَّیْرَ ؕ سِیْرُوْا فِیْهَا لَیَالِیَ وَاَیَّامًا اٰمِنِیْنَ ۟
وَجَعَلْنَاநாம் ஏற்படுத்தினோம்بَيْنَهُمْஅவர்களுக்கு இடையிலும்وَبَيْنَஇடையிலும்الْقُرَىஊர்களுக்குالَّتِىْ بٰرَكْنَاநாம் அருள்வளம் புரிந்தفِيْهَاஅவற்றில்قُرًىபல ஊர்களைظَاهِرَةًதெளிவாகத் தெரியும்படியானوَّقَدَّرْنَاநிர்ணயித்தோம்فِيْهَاஅவற்றில்السَّيْرَ ؕபயணத்தைسِيْرُوْاபயணியுங்கள்فِيْهَاஅவற்றில்لَيَالِىَபல இரவுகளும்وَاَيَّامًاபல பகல்களும்اٰمِنِيْنَ‏பாதுகாப்பு பெற்றவர்களாக
வ ஜ'அல்னா Bபய்னஹும் வ Bபய்னல் குரல் லதீ Bபாரக்னா Fபீஹா குரன் ளாஹிரத(ன்)வ் வ கத்தர்னா Fபீஹஸ் ஸய்ர்; ஸீரூ Fபீஹா ல யாலிய வ அய்யாமன் ஆமினீன்
இன்னும், அவர்களுக்கிடையிலும், நாம் பரக்கத்து (அவற்றில்) செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் (வழியில்) தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் (போக்குவரத்து(ப் பாதைகளையு)ம் அமைத்தோம்; “அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்” (என்று கூறினோம்).
فَقَالُوْا رَبَّنَا بٰعِدْ بَیْنَ اَسْفَارِنَا وَظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَجَعَلْنٰهُمْ اَحَادِیْثَ وَمَزَّقْنٰهُمْ كُلَّ مُمَزَّقٍ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟
فَقَالُوْاஆனால் அவர்கள் கூறினர்رَبَّنَاஎங்கள் இறைவா!بٰعِدْதூரத்தை ஏற்படுத்து!بَيْنَமத்தியில்اَسْفَارِنَاஎங்கள் பயணங்களுக்குوَظَلَمُوْۤاஇன்னும் அநீதி இழைத்தனர்اَنْفُسَهُمْதங்களுக்குத் தாமேفَجَعَلْنٰهُمْஆகவே, அவர்களை ஆக்கிவிட்டோம்اَحَادِيْثَபேசப்படக்கூடிய கதைகளாகوَمَزَّقْنٰهُمْஅவர்களை கிழித்துவிட்டோம்كُلَّ مُمَزَّقٍ ؕசுக்கு நூறாகاِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் இருக்கின்றனلَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لّـِكُلِّஎல்லோருக்கும்صَبَّارٍபெரும் பொறுமையாளர்(கள்)شَكُوْرٍ‏அதிகம் நன்றி செலுத்துகின்றவர்(கள்)
Fபகாலூ ரBப்Bபனா Bபா'இத் Bபய்ன அஸ்Fபாரினா வ ளலமூ அன்Fபுஸஹும் Fபஜ'அல்னாஹும் அஹாதீத வ மZஜ்Zஜக் னாஹும் குல்ல முமZஜ்Zஜக்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகுல்லி ஸBப்Bபாரின் ஷகூர்
ஆனால், அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!” என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்; ஆகவே அவர்களை (பழங்) கதைகளாக ஆக்கி விட்டோம் இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப்போகும் படியாய் சிதற வைத்தோம்; நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَلَقَدْ صَدَّقَ عَلَیْهِمْ اِبْلِیْسُ ظَنَّهٗ فَاتَّبَعُوْهُ اِلَّا فَرِیْقًا مِّنَ الْمُؤْمِنِیْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகصَدَّقَஉண்மையாக்கினான்عَلَيْهِمْஅவர்கள் மீதுاِبْلِيْسُஇப்லீஸ்ظَنَّهٗதன் எண்ணத்தைفَاتَّبَعُوْهُஆகவே, அவர்கள் அவனை பின்பற்றினர்اِلَّاதவிரفَرِيْقًاபிரிவினரைمِّنَ الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கைகொண்டவர்கள்
வ லகத் ஸத்தக் 'அலய்ஹிம் இBப்லீஸு ளன்னBப்ஹூ Fபத்தBப'ஊஹு இல்லா Fபரீகம் மினல் மு'மினீன்
அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயமாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர, (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள்.
وَمَا كَانَ لَهٗ عَلَیْهِمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّا لِنَعْلَمَ مَنْ یُّؤْمِنُ بِالْاٰخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِیْ شَكٍّ ؕ وَرَبُّكَ عَلٰی كُلِّ شَیْءٍ حَفِیْظٌ ۟۠
وَمَا كَانَஇருக்கவில்லைلَهٗஅவனுக்குعَلَيْهِمْஅவர்கள் மீதுمِّنْ سُلْطٰنٍஅறவே அதிகாரம்اِلَّاஇருந்தாலும்لِنَعْلَمَநாம் அறிவதற்காகمَنْஎவர்يُّـؤْمِنُநம்புகின்றார்بِالْاٰخِرَةِமறுமையைمِمَّنْஇருந்து/எவர்கள்هُوَஅவர்(கள்)مِنْهَاஅதில்فِىْ شَكٍّ ؕசந்தேகத்தில்وَ رَبُّكَஉமது இறைவன்عَلٰى كُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்حَفِيْظٌ‏கண்காணிக்கின்றவன்
வமா கான லஹூ 'அலய்ஹிம் மின் ஸுல்தானின் இல்லா லினஃலம மய் யு மினு Bபில் ஆகிரதி மிம்மன் ஹுவ மின்ஹா Fபீ ஷக்க்; வ ரBப்Bபுக 'அலா குல்லி ஷய்'இன் ஹFபீள்
எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான்.  
قُلِ ادْعُوا الَّذِیْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ ۚ لَا یَمْلِكُوْنَ مِثْقَالَ ذَرَّةٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ وَمَا لَهُمْ فِیْهِمَا مِنْ شِرْكٍ وَّمَا لَهٗ مِنْهُمْ مِّنْ ظَهِیْرٍ ۟
قُلِகூறுவீராக!ادْعُواஅழையுங்கள்!الَّذِيْنَ زَعَمْتُمْநீங்கள் பிதற்றிக் கொண்டிருந்தவர்களைمِّنْ دُوْنِ اللّٰهِۚஅல்லாஹ்வையன்றிلَا يَمْلِكُوْنَஅவர்கள் உரிமை பெறமாட்டார்கள்مِثْقَالَ ذَرَّةٍஅணு அளவுக்கு(ம்)فِى السَّمٰوٰتِவானங்களிலும்وَلَا فِى الْاَرْضِபூமியிலும்وَمَا لَهُمْஅவர்களுக்கு இல்லைفِيْهِمَاஅவ்விரண்டிலும்مِنْ شِرْكٍஎவ்வித பங்கும்وَّمَا لَهٗஅவனுக்கு இல்லைمِنْهُمْஅவர்களில்مِّنْ ظَهِيْرٍ‏உதவியாளர் எவரும்
குலித் 'உல் லதீன Zஜ'அம்தும் மின் தூனில் லாஹி லா யம்லிகூன மித்கால தர்ரதின் Fபிஸ்ஸமாவாதி வலா Fபில் அர்ளி வமா லஹும் Fபீஹிமா மின் ஷிர்கி(ன்)வ் வமா லஹூ மின்ஹும் மின் ளஹீர்
“அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை - அவற்றில் இவர்களுக்கு எத்தகைய பங்கும் இல்லை - இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை.
وَلَا تَنْفَعُ الشَّفَاعَةُ عِنْدَهٗۤ اِلَّا لِمَنْ اَذِنَ لَهٗ ؕ حَتّٰۤی اِذَا فُزِّعَ عَنْ قُلُوْبِهِمْ قَالُوْا مَاذَا ۙ قَالَ رَبُّكُمْ ؕ قَالُوا الْحَقَّ ۚ وَهُوَ الْعَلِیُّ الْكَبِیْرُ ۟
وَلَا تَنْفَعُபலன்தராதுالشَّفَاعَةُசிபாரிசுعِنْدَهٗۤஅவனிடம்اِلَّاதவிரلِمَنْஎவருக்குاَذِنَஅவன் அனுமதி அளித்தானோلَهٗ ؕஅவருக்கேحَتّٰٓىஇறுதியாகاِذَا فُزِّعَதிடுக்கம் சென்றுவிட்டால்عَنْ قُلُوْبِهِمْஅவர்களது உள்ளங்களை விட்டுقَالُوْاகேட்பார்கள்مَاذَا ۙஎன்ன?قَالَகூறினான்رَبُّكُمْ ؕஉங்கள் இறைவன்قَالُواகூறுவார்கள்الْحَـقَّ ۚஉண்மையைத்தான்وَهُوَஅவன்தான்الْعَلِىُّமிக உயர்ந்தவன்الْكَبِيْرُ‏மகா பெரியவன்
வ லா தன்Fப'உஷ் ஷFபா'அது 'இன்தஹூ இல்லா லிமன் அதின லஹ்; ஹத்தா இதா FபுZஜ்Zஜி'அ 'அன் குலூBபிஹிம் காலூ மாதா கால ரBப்Bபுகும்; காலுல் ஹக்க், வ ஹுவல் 'அலியுல் கBபீர்
அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது; எனவே (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இருதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப்படுமானால் “உங்கள் இறைவன் என்ன கூறினான்” என்று கேட்பார்கள். “உண்மையானதையே! மேலும், அவனே மிக்க உயர்ந்தவன் மகாப்பெரியவன்” என்று கூறுவார்கள்.
قُلْ مَنْ یَّرْزُقُكُمْ مِّنَ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ قُلِ اللّٰهُ ۙ وَاِنَّاۤ اَوْ اِیَّاكُمْ لَعَلٰی هُدًی اَوْ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟
قُلْகூறுவீராக!مَنْயார்?يَّرْزُقُكُمْஉங்களுக்கு உணவளிப்பான்مِّنَஇருந்துالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِؕஇன்னும் பூமிقُلِநீர் கூறுவீராக!اللّٰهُ ۙஅல்லாஹ்தான்وَ اِنَّاۤநிச்சயமாக நாங்கள்اَوْஅல்லதுاِيَّاكُمْநீங்களா?لَعَلٰى هُدًىநேர்வழியில்اَوْஅல்லதுفِىْ ضَلٰلٍவழிகேட்டில்مُّبِيْنٍ‏தெளிவான
குல் மய் யர்Zஜுகுகும் மினஸ் ஸமாவாதி வல் அர்ளி குலில் லாஹு வ இன்னா அவ் இய்யாகும் ல'அலா ஹுதன் அவ் Fபீ ளலாலிம் முBபீன்
“வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு (வசதிகளை) அளிப்பவன் யார்?” என்று (நபியே!) நீர் கேளும்; “அல்லாஹ்தான்! இன்னும் நிச்சயமாக, நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள்” என்றும் கூறும்.
قُلْ لَّا تُسْـَٔلُوْنَ عَمَّاۤ اَجْرَمْنَا وَلَا نُسْـَٔلُ عَمَّا تَعْمَلُوْنَ ۟
قُلْகூறுவீராக!لَّا تُسْــٴَــلُوْنَநீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்عَمَّاۤ اَجْرَمْنَاநாங்கள் செய்த குற்றத்தைப் பற்றிوَلَا نُسْــٴَــلُநாங்கள் விசாரிக்கப்படமாட்டோம்عَمَّا تَعْمَلُوْنَ‏நீங்கள் செய்கின்ற அமல்களைப் பற்றி
குல் லா துஸ்'அலூன 'அம்மா அஜ்ரம்னா வலா னுஸ்'அலு 'அம்மா தஃமலூன்
“நாங்கள் செய்த குற்றம் குறித்து நீங்கள் வினவப்படமாட்டீர்கள்; நீங்கள் செய்தவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம்” என்றும் கூறுவீராக.
قُلْ یَجْمَعُ بَیْنَنَا رَبُّنَا ثُمَّ یَفْتَحُ بَیْنَنَا بِالْحَقِّ ؕ وَهُوَ الْفَتَّاحُ الْعَلِیْمُ ۟
قُلْகூறுவீராக!يَجْمَعُஒன்று சேர்ப்பான்بَيْنَـنَاநமக்கு மத்தியில்رَبُّنَاநமது இறைவன்ثُمَّபிறகுيَفْتَحُஅவன் தீர்ப்பளிப்பான்بَيْنَـنَاநமக்கு மத்தியில்بِالْحَـقِّ ؕஉண்மையைக் கொண்டுوَهُوَஅவன்தான்الْـفَتَّاحُஉண்மையான தீர்ப்பளிப்பவன்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
குல் யஜ்ம'உ Bபய்னனா ரBப்Bபுனா தும்ம யFப்தஹு Bபய்னனா Bபில்ஹக்க்; வ ஹுவல் Fபத்தாஹுல் 'அலீம்
“நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன்” என்றும் கூறுவீராக.
قُلْ اَرُوْنِیَ الَّذِیْنَ اَلْحَقْتُمْ بِهٖ شُرَكَآءَ كَلَّا ؕ بَلْ هُوَ اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
قُلْகூறுவீராக!اَرُوْنِىَஎனக்கு அறிவியுங்கள்الَّذِيْنَஎவர்கள்اَ لْحَـقْتُمْநீங்கள் சேர்ப்பித்தீர்கள்بِهٖஅவனுடன்شُرَكَآءَஇணைகளாகكَلَّا ؕஒருக்காலும் முடியாதுبَلْமாறாகهُوَஅவன்தான்اللّٰهُஅல்லாஹ்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
குல் அரூனியல் லதீன அல்ஹக்தும் Bபிஹீ ஷுரகா'அ கல்லா; Bபல் ஹுவல் லாஹுல் 'அZஜீZஜுல் ஹகீம்
“அவனுக்கு இணையானவர்களென நீங்கள் சேர்த்தீர்களே அவர்களை எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! (அவனுக்கு எவருமே இணையில்லை.) அவனோ அல்லாஹ்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்” என்றும் சொல்லும்.
وَمَاۤ اَرْسَلْنٰكَ اِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِیْرًا وَّنَذِیْرًا وَّلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
وَمَاۤ اَرْسَلْنٰكَஉம்மை நாம் அனுப்பவில்லைاِلَّاதவிரكَآفَّةًஅனைவருக்கும்لِّلنَّاسِமக்கள்بَشِيْرًاநற்செய்தி சொல்பவராக(வும்)وَّنَذِيْرًاஎச்சரிப்பவராகவும்وَّلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்கள்النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வ மா அர்ஸல்னாக இல்லா காFப்Fபதல் லின்னாஸி Bபஷீர(ன்)வ் வ னதீர(ன்)வ் வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
وَيَقُوْلُوْنَகூறுகின்றார்கள்مَتٰىஎப்போதுهٰذَاஇந்தالْوَعْدُவாக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்صٰدِقِيْنَ‏உண்மையாளர்களாக
வ யகூலூன மதா ஹாதல் வஃது இன் குன்தும் ஸாதிகீன்
இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “உண்மையாளராக நீங்கள் இருப்பின் (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்)?” என்று.
قُلْ لَّكُمْ مِّیْعَادُ یَوْمٍ لَّا تَسْتَاْخِرُوْنَ عَنْهُ سَاعَةً وَّلَا تَسْتَقْدِمُوْنَ ۟۠
قُلْகூறுவீராக!لَّـكُمْஉங்களுக்குمِّيْعَادُவாக்களிக்கப்பட்டيَوْمٍஒரு நாள்لَّا تَسْتَاْخِرُوْنَநீங்கள் பிந்த(வும்) மாட்டீர்கள்عَنْهُஅதை விட்டும்سَاعَةًசிறிது நேரம்وَّلَا تَسْتَقْدِمُوْنَ‏முந்தவும் மாட்டீர்கள்
குல் லகும் மீ'ஆது யவ்மில் லா தஸ்த'கிரூன 'அன்ஹு ஸா'அத(ன்)வ் வலா தஸ்தக்திமூன்
“(அந்த வாக்கு நிறைவேறுவதற்கு) உங்களுக்கு ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டீர்கள், முந்தவும் மாட்டீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ نُّؤْمِنَ بِهٰذَا الْقُرْاٰنِ وَلَا بِالَّذِیْ بَیْنَ یَدَیْهِ ؕ وَلَوْ تَرٰۤی اِذِ الظّٰلِمُوْنَ مَوْقُوْفُوْنَ عِنْدَ رَبِّهِمْ ۖۚ یَرْجِعُ بَعْضُهُمْ اِلٰی بَعْضِ لْقَوْلَ ۚ یَقُوْلُ الَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْا لَوْلَاۤ اَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِیْنَ ۟
وَقَالَகூறினார்கள்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரிப்பவர்கள்لَنْ نُّؤْمِنَநாங்கள் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்بِهٰذَا الْقُرْاٰنِஇந்த குர்ஆனை(யும்)وَلَا بِالَّذِىْ بَيْنَ يَدَيْهِؕஇதற்கு முன்னுள்ளதையும்وَلَوْ تَرٰٓىநீர் பார்த்தால்اِذِசமயத்தைالظّٰلِمُوْنَஅநியாயக்காரர்கள்مَوْقُوْفُوْنَநிறுத்தி வைக்கப்பட்டவர்கள்عِنْدَ رَبِّهِمْ ۖۚதங்கள் இறைவன் முன்னால்يَرْجِعُஎதிர்த்துப் பேசுவார்(கள்)بَعْضُهُمْஅவர்களில் சிலர்اِلٰى بَعْضِசிலரிடம்اۨلْقَوْلَ‌ۚபேசுவதுيَقُوْلُகூறுவார்கள்الَّذِيْنَ اسْتُضْعِفُوْاபலவீனர்கள்لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْاபெருமை அடித்தவர்களுக்குلَوْلَاۤ اَنْـتُمْநீங்கள் இல்லை என்றால்لَـكُـنَّاநாங்கள் ஆகியிருப்போம்مُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்களாக
வ காலல் லதீன கFபரூ லன் னு'மின Bபிஹாதல் குர்'ஆனி வலா Bபில்லதீ Bபய்ன யதய்ஹ்; வ லவ் தரா இதிள் ளாலிமூன மவ்கூFபூன 'இன்த ரBப்Bபிஹிம் யர்ஜி'உ Bபஃளுஹும் இலா Bபஃளினில் கவ்ல யகூலுல் லதீனஸ் துள்'இFபூ லில்லதீனஸ் தக்Bபரூ லவ் லா அன்தும் லகுன்னா மு'மினீன்
“இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்” என்று காஃபிரானவர்கள் கூறுகிறார்கள்; இந்த அநியாயக் காரார்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது பேச்சைத் திருப்பி பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, “நீங்கள் இல்லாதிருந்திருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்” என்று கூறுவார்கள்.
قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا لِلَّذِیْنَ اسْتُضْعِفُوْۤا اَنَحْنُ صَدَدْنٰكُمْ عَنِ الْهُدٰی بَعْدَ اِذْ جَآءَكُمْ بَلْ كُنْتُمْ مُّجْرِمِیْنَ ۟
قَالَகூறுவார்கள்الَّذِيْنَ اسْتَكْبَرُوْاபெருமை அடித்தவர்கள்لِلَّذِيْنَ اسْتُضْعِفُوْۤاபலவீனர்களுக்குاَنَحْنُநாங்களா?صَدَدْنٰكُمْஉங்களை தடுத்தோம்عَنِ الْهُدٰىநேர்வழியை விட்டும்بَعْدَ اِذْ جَآءَவந்த பின்னர்كُمْஉங்களிடம்بَلْமாறாகكُنْتُمْநீங்கள்தான் இருந்தீர்கள்مُّجْرِمِيْنَ‏குற்றவாளிகளாக
காலல் லதீனஸ் தக்Bபரூ லில்லதீனஸ் துள்'இFபூ அனஹ்னு ஸதத்னாகும் 'அனில் ஹுதா Bபஃத இத் ஜா'அகும் Bபல் குன்தும் முஜ்ரிமீன்
பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்களிடம், “உங்களிடம் நேர்வழி வந்தபின், அதை விட்டும் உங்களை நாங்களா தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் (நேர்வழி ஏற்காத) குற்றாவளிகளாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
وَقَالَ الَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْا بَلْ مَكْرُ الَّیْلِ وَالنَّهَارِ اِذْ تَاْمُرُوْنَنَاۤ اَنْ نَّكْفُرَ بِاللّٰهِ وَنَجْعَلَ لَهٗۤ اَنْدَادًا ؕ وَاَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَاَوُا الْعَذَابَ ؕ وَجَعَلْنَا الْاَغْلٰلَ فِیْۤ اَعْنَاقِ الَّذِیْنَ كَفَرُوْا ؕ هَلْ یُجْزَوْنَ اِلَّا مَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
وَقَالَகூறுவார்கள்الَّذِيْنَ اسْتُضْعِفُوْاபலவீனர்கள்لِلَّذِيْنَ اسْتَكْبَرُوْاபெருமை அடித்தவர்களுக்குبَلْமாறாகمَكْرُசூழ்ச்சியாகும்الَّيْلِஇரவிலும்وَ النَّهَارِபகலிலும்اِذْ تَاْمُرُوْنَـنَاۤநீங்கள் எங்களை ஏவிய சமயத்தை நினைவு கூருங்கள்اَنْ نَّـكْفُرَநாங்கள் நிராகரிப்பதற்கு(ம்)بِاللّٰهِஅல்லாஹ்வைوَنَجْعَلَநாங்கள்ஏற்படுத்துவதற்கும்لَهٗۤஅவனுக்குاَنْدَادًا ؕஇணைகளைوَاَسَرُّواஇன்னும் அவர்கள் வெளிப்படுத்துவார்கள்النَّدَامَةَதுக்கத்தைلَمَّا رَاَوُاஅவர்கள் கண்ணால் காணும்போதுالْعَذَابَ ؕவேதனையைوَجَعَلْنَاநாம் ஆக்குவோம்الْاَغْلٰلَ(சங்கிலி)விலங்குகளைفِىْۤ اَعْنَاقِகழுத்துகளில்الَّذِيْنَ كَفَرُوْا ؕநிராகரித்தவர்களின்هَلْ يُجْزَوْنَகூலி கொடுக்கப்படுவார்களா?اِلَّا مَا كَانُوْا يَعْمَلُوْنَ‏தவிர/அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கே
வ காலல் லதீனஸ்துள்'இFபூ லில்லதீனஸ் தக்Bபரூ Bபல் மக்ருல் லய்லி வன்னஹாரி இத் த'முரூனனா அன் னக்Fபுர Bபில்லாஹி வ னஜ்'அல லஹூ அன்தாதா; வ அஸர்ருன் னதாமத லம்மா ர அவுல் 'அதாBப்; வ ஜ'அல்னல் அக்லால Fபீ அஃனாகில் லதீன கFபரூ; ஹல் யுஜ்Zஜவ்ன இல்லா மா கானூ யஃமலூன்
அதற்கு பலஹீனர்களாகக் கருதப் பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், “அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்” என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டுவிடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா?
وَمَاۤ اَرْسَلْنَا فِیْ قَرْیَةٍ مِّنْ نَّذِیْرٍ اِلَّا قَالَ مُتْرَفُوْهَاۤ ۙ اِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைفِىْ قَرْيَةٍஓர் ஊரில்مِّنْ نَّذِيْرٍஎச்சரிப்பாளரைاِلَّاதவிரقَالَகூறியேمُتْـرَفُوْهَاۤஅதன் சுகவாசிகள்ۙاِنَّاநிச்சயமாக நாங்கள்بِمَاۤஎதைக்கொண்டுاُرْسِلْـتُمْநீங்கள் அனுப்பப்பட்டீர்கள்بِهٖஅதைكٰفِرُوْنَ‏நிராகரிக்கின்றோம்
வ மா அர்ஸல்னா' Fபீ கர்யதின் மின் னதீரின் இல்லா கால முத்ரFபூஹா இன்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ காFபிரூன்
அன்றியும் அச்சமூட்டி எச்சரிப்போரை நாம் (எந்த) ஓர் ஊருக்கு அனுப்பிய போதும், அங்கிருந்த செல்வந்தர்கள்; “நிச்சயமாக நாங்கள் நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிராகரிக்கின்றோம்” என்று கூறாமல் இருக்கவில்லை.
وَقَالُوْا نَحْنُ اَكْثَرُ اَمْوَالًا وَّاَوْلَادًا ۙ وَّمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟
وَ قَالُوْاஅவர்கள் கூறினர்نَحْنُநாங்கள்اَكْثَرُஅதிகமானவர்கள்اَمْوَالًاசெல்வங்களாலும்وَّاَوْلَادًا ۙபிள்ளைகளாலும்وَّمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ‏ஆகவே, நாங்கள் மறுமையிலும் அறவே தண்டிக்கப்பட மாட்டோம்.
வ காலூ னஹ்னு அக்தரு அம்வால(ன்)வ் வ அவ்லாத(ன்)வ் வமா னஹ்னு Bபிமு 'அத்தBபீன்
இன்னும்: “நாங்கள் செல்வங்களாலும் மக்களாலும் மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்” என்றும் கூறுகிறார்கள்.
قُلْ اِنَّ رَبِّیْ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟۠
قُلْகூறுவீராக!اِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்يَبْسُطُவிசாலமாக தருகின்றான்الرِّزْقَவாழ்வாதாரத்தைلِمَنْ يَّشَآءُஅவன் நாடுகின்றவர்களுக்குوَيَقْدِرُஇன்னும் சுருக்கி கொடுக்கின்றான்وَلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்கள்النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
குல் இன்ன ரBப்Bபீ யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திரு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
“நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.  
وَمَاۤ اَمْوَالُكُمْ وَلَاۤ اَوْلَادُكُمْ بِالَّتِیْ تُقَرِّبُكُمْ عِنْدَنَا زُلْفٰۤی اِلَّا مَنْ اٰمَنَ وَعَمِلَ صَالِحًا ؗ فَاُولٰٓىِٕكَ لَهُمْ جَزَآءُ الضِّعْفِ بِمَا عَمِلُوْا وَهُمْ فِی الْغُرُفٰتِ اٰمِنُوْنَ ۟
وَمَاۤ اَمْوَالُـكُمْஉங்கள் செல்வங்கள் இல்லைوَلَاۤ اَوْلَادُكُمْஇன்னும் உங்கள் பிள்ளைகள்بِالَّتِىْ تُقَرِّبُكُمْஉங்களை நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாகعِنْدَنَاஎங்களிடம்زُلْفٰٓىநெருக்கமாகاِلَّاஎனினும்مَنْஎவர்கள்اٰمَنَநம்பிக்கை கொண்டுوَعَمِلَசெய்வார்களோصَالِحًـاநன்மையைفَاُولٰٓٮِٕكَ لَهُمْஅவர்களுக்கு உண்டுجَزَآءُகூலிالضِّعْفِஇரு மடங்குبِمَا عَمِلُوْاஅவர்கள் செய்ததற்கு பகரமாகوَهُمْஅவர்கள்فِى الْغُرُفٰتِஅறைகளில்اٰمِنُوْنَ‏நிம்மதியாக
வ மா அம்வாலுகும் வ லா அவ்லாதுகும் Bபில்லதீ துகர்ரிBபுகும் 'இன்தனா Zஜுல்Fபா இல்லா மன் ஆமன வ 'அமில ஸாலிஹன் Fப உலா'இக லஹும் ஜZஜா'உள் ளிஃFபி Bபிமா 'அமிலூ வ ஹும் Fபில் குருFபாதி ஆமினூன்
இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்.
وَالَّذِیْنَ یَسْعَوْنَ فِیْۤ اٰیٰتِنَا مُعٰجِزِیْنَ اُولٰٓىِٕكَ فِی الْعَذَابِ مُحْضَرُوْنَ ۟
وَ الَّذِيْنَஎவர்கள்يَسْعَوْنَமுயல்வார்களோفِىْۤ اٰيٰتِنَاநமது வசனங்களில்مُعٰجِزِيْنَபலவீனப்படுத்தاُولٰٓٮِٕكَஅவர்கள்فِى الْعَذَابِவேதனைக்குمُحْضَرُوْنَ‏கொண்டு வரப்படுவார்கள்
வல்லதீன யஸ்'அவ்ன Fபீ ஆயாதினா மு'ஆஜிZஜீன உலா'இக Fபில்'அதாBபி முஹ்ளரூன்
அன்றியும், எவர்கள் நம்முடைய வசனங்களிலே தோல்வியை உண்டாக்க முயல்கிறார்களோ, அவர்கள் வேதனையில் கொண்டு வரப்படுவார்கள்.
قُلْ اِنَّ رَبِّیْ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ وَیَقْدِرُ لَهٗ ؕ وَمَاۤ اَنْفَقْتُمْ مِّنْ شَیْءٍ فَهُوَ یُخْلِفُهٗ ۚ وَهُوَ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟
قُلْகூறுவீராக!اِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்يَبْسُطُவிசாலமாக்குகின்றான்الرِّزْقَவாழ்வாதாரத்தைلِمَنْ يَّشَآءُதான் நாடியவர்களுக்குمِنْ عِبَادِهٖதனது அடியார்களில்وَيَقْدِرُஇன்னும் சுருக்கி விடுகின்றான்لَهٗ ؕஅவனுக்குوَمَاۤ اَنْفَقْتُمْநீங்கள் தர்மம் செய்தாலும்مِّنْ شَىْءٍஎதைفَهُوَஅவன்يُخْلِفُهٗ ۚஅதற்கு பகரத்தை ஏற்படுத்துவான்وَهُوَஅவன்خَيْرُமிகச் சிறந்தவன்الرّٰزِقِيْنَ‏உணவளிப்பவர்களில்
குல் இன்ன ரBப்Bபீ யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ மின் 'இBபாதிஹீ வ யக்திரு லஹ்; வ மா அன்Fபக்தும் மின் ஷய்'இன் Fபஹுவ யுக்லிFபுஹூ வ ஹுவ கய்ருர் ராZஜிகீன்
“நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறும்.
وَیَوْمَ یَحْشُرُهُمْ جَمِیْعًا ثُمَّ یَقُوْلُ لِلْمَلٰٓىِٕكَةِ اَهٰۤؤُلَآءِ اِیَّاكُمْ كَانُوْا یَعْبُدُوْنَ ۟
وَيَوْمَ يَحْشُرُஅவன் ஒன்று திரட்டும் நாளில்هُمْஅவர்கள்جَمِيْعًاஅனைவரையும்ثُمَّபிறகுيَقُوْلُஅவன் கூறுவான்لِلْمَلٰٓٮِٕكَةِவானவர்களுக்குاَهٰٓؤُلَاۤءِ?/இவர்கள்اِيَّاكُمْஉங்களைكَانُوْا يَعْبُدُوْنَ‏வணங்கிக் கொண்டிருந்தார்கள்
வ யவ்ம யஹ்ஷுருஹும் ஜமீ'அன் தும்ம யகூலு லில்மலா'இகதி அ-ஹா'உலா'இ இய்யாகும் கானூ யஃBபுதூன்
(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்” என்று (அல்லாஹ்) கேட்பான்.
قَالُوْا سُبْحٰنَكَ اَنْتَ وَلِیُّنَا مِنْ دُوْنِهِمْ ۚ بَلْ كَانُوْا یَعْبُدُوْنَ الْجِنَّ ۚ اَكْثَرُهُمْ بِهِمْ مُّؤْمِنُوْنَ ۟
قَالُوْاஅவர்கள் கூறுவார்கள்سُبْحٰنَكَநீ மகா தூயவன்اَنْتَநீதான்وَلِيُّنَاஎங்கள் பாதுகாவலன்مِنْ دُوْنِهِمْۚஅவர்கள் இன்றிبَلْ كَانُوْا يَعْبُدُوْنَமாறாக/வணங்கிக் கொண்டிருந்தனர்الْجِنَّ ۚஜின்களைاَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்بِهِمْஅவர்களைத்தான்مُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொண்டவர்கள்
காலூ ஸுBப்ஹானக அன்த வலிய்யுனா மின் தூனிஹிம் Bபல் கானூ யஃBபுதூனல் ஜின்ன அக்தருஹும் Bபிஹிம் மு'மினூன்
(இதற்கு மலக்குகள்:) “நீ மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர்(ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்” என்று கூறுவார்கள்.
فَالْیَوْمَ لَا یَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ نَّفْعًا وَّلَا ضَرًّا ؕ وَنَقُوْلُ لِلَّذِیْنَ ظَلَمُوْا ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّتِیْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ ۟
فَالْيَوْمَஇன்றைய தினம்لَا يَمْلِكُஉரிமை பெறமாட்டார்بَعْضُكُمْஉங்களில் சிலர்لِبَعْضٍசிலருக்குنَّفْعًاநன்மைசெய்வதற்கோوَّلَا ضَرًّا ؕதீமை செய்வதற்கோوَنَـقُوْلُநாம் கூறுவோம்لِلَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்களுக்குذُوْقُوْاநீங்கள் சுவையுங்கள்عَذَابَ النَّارِநரக வேதனையைالَّتِىْ كُنْتُمْ بِهَا تُكَذِّبُوْنَ‏நீங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்த
Fபல் யவ்ம லா யம்லிகு Bபஃளுகும் லிBபஃளின் னFப்'அ(ன்)வ் வலா ளர்ரா; வ னகூலு லில் லதீன ளலமூ தூகூ 'அதாBபன் னாரில் லதீ குன்தும் Bபிஹா துகத்திBபூன்
“இன்றைய தினம், உங்களில் சிலர் (உங்களில் மற்றும்) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்யச் சக்தியற்றவர்களாவீர்; நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அந்(நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள் என்றும் அநியாயம் செய்தார்களே அவர்களிடம்” நாம் கூறுவோம்.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا بَیِّنٰتٍ قَالُوْا مَا هٰذَاۤ اِلَّا رَجُلٌ یُّرِیْدُ اَنْ یَّصُدَّكُمْ عَمَّا كَانَ یَعْبُدُ اٰبَآؤُكُمْ ۚ وَقَالُوْا مَا هٰذَاۤ اِلَّاۤ اِفْكٌ مُّفْتَرًی ؕ وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلْحَقِّ لَمَّا جَآءَهُمْ ۙ اِنْ هٰذَاۤ اِلَّا سِحْرٌ مُّبِیْنٌ ۟
وَاِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் முன்اٰيٰتُنَاநமது வசனங்கள்بَيِّنٰتٍதெளிவானقَالُوْاஅவர்கள் கூறினர்مَا هٰذَاۤஇவர் இல்லைاِلَّاதவிரرَجُلٌஓர் ஆடவரேيُّرِيْدُநாடுகின்றனர்اَنْ يَّصُدَّكُمْஇவர் உங்களைத் தடுக்கعَمَّا كَانَ يَعْبُدُவணங்கிக்கொண்டிருந்தவற்றை விட்டும்اٰبَآؤُமூதாதைகள்كُمْ‌ ۚஉங்கள்وَقَالُوْاஇன்னும் அவர்கள்கூறினர்مَا هٰذَاۤஇது இல்லைاِلَّاۤதவிரاِفْكٌபொய்مُّفْتَـرً ىؕஇட்டுக்கட்டப்பட்டوَقَالَஇன்னும் கூறினர்الَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்لِلْحَقِّசத்தியம்لَمَّا جَآءَவந்த போதுهُمْ ۙதங்களிடம்اِنْ هٰذَاۤஇது இல்லைاِلَّاதவிரسِحْرٌசூனியமேمُّبِيْنٌ‏தெளிவான
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா Bபய்யினாதின் காலூ மா ஹாதா இல்லா ரஜுலு(ன்)ய் யுரீது அய்-யஸுத்தகும் 'அம்மா கான யஃBபுது ஆBபா'உகும் வ காலூ மா ஹாதா இல்லா இFப்கும் முFப்தரா; வ காலல் லதீன கFபரூ லில்ஹக்கி லம்மா ஜா'அஹும் இன் ஹாதா இல்லா ஸிஹ்ரும் முBபீன்
நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை; உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் “இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்: திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, “இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
وَمَاۤ اٰتَیْنٰهُمْ مِّنْ كُتُبٍ یَّدْرُسُوْنَهَا وَمَاۤ اَرْسَلْنَاۤ اِلَیْهِمْ قَبْلَكَ مِنْ نَّذِیْرٍ ۟ؕ
وَمَاۤ اٰتَيْنٰهُمْஅவர்களுக்கு நாம் கொடுத்ததில்லைمِّنْ كُتُبٍவேதங்களைيَّدْرُسُوْنَهَاஅவர்கள் அவற்றை படிக்கின்றனர்وَمَاۤ اَرْسَلْنَاۤநாம் அனுப்பியதில்லைاِلَيْهِمْஅவர்களிடம்قَبْلَكَஉமக்கு முன்னர்مِنْ نَّذِيْرٍؕ‏எச்சரிப்பவர் எவரையும்
வ மா ஆதய்னாஹும் மின் குதுBபி(ன்)ய் யத்ருஸூனஹா வ மா அர்ஸல்னா இலய்ஹிம் கBப்லக மின் னதீர்
எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.
وَكَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۙ وَمَا بَلَغُوْا مِعْشَارَ مَاۤ اٰتَیْنٰهُمْ فَكَذَّبُوْا رُسُلِیْ ۫ فَكَیْفَ كَانَ نَكِیْرِ ۟۠
وَكَذَّبَபொய்ப்பித்தனர்الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۙஇவர்களுக்கு முன்னுள்ளவர்களும்وَمَا بَلَـغُوْاஅடையவில்லைمِعْشَارَ مَاۤ اٰتَيْنٰهُمْஅவர்களுக்கு நாம் கொடுத்ததில் பத்தில் ஒன்றை(க்கூட)فَكَذَّبُوْا(இருந்தும்) அவர்கள் பொய்ப்பித்தனர்رُسُلِىْஎனது தூதர்களைفَكَيْفَஎப்படிكَانَஇருந்ததுنَكِيْرِ‏எனது மாற்றம்
வ கத்தBபல் லதீன மின் கBப்லிஹிம் வமா Bபலகூ மிஃஷார மா ஆதய்னாஹும் Fபகத்தBபூ ருஸுலீ; Fபகய்Fப கான னகீர்
மேலும் இவர்களுக்கு முன்னிருந்த (ஏனைய சமூகத்த)வர்களும் (இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை; ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூறட்டும்)
قُلْ اِنَّمَاۤ اَعِظُكُمْ بِوَاحِدَةٍ ۚ اَنْ تَقُوْمُوْا لِلّٰهِ مَثْنٰی وَفُرَادٰی ثُمَّ تَتَفَكَّرُوْا ۫ مَا بِصَاحِبِكُمْ مِّنْ جِنَّةٍ ؕ اِنْ هُوَ اِلَّا نَذِیْرٌ لَّكُمْ بَیْنَ یَدَیْ عَذَابٍ شَدِیْدٍ ۟
قُلْகூறுவீராக!اِنَّمَاۤ اَعِظُكُمْநான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம்بِوَاحِدَةٍ ۚஒன்றே ஒன்றைத்தான்اَنْ تَقُوْمُوْاநீங்கள் நில்லுங்கள்لِلّٰهِஅல்லாஹ்விற்காகمَثْنٰىஇருவர் இருவராகوَفُرَادٰىஇன்னும் ஒருவர் ஒருவராகثُمَّபிறகுتَتَفَكَّرُوْاசிந்தியுங்கள்مَا بِصَاحِبِكُمْஉங்கள் இந்த தோழருக்கு அறவே இல்லைمِّنْ جِنَّةٍ ؕபைத்தியம்اِنْ هُوَஅவர் இல்லைاِلَّاதவிரنَذِيْرٌஎச்சரிப்பவரேلَّـكُمْஉங்களுக்குبَيْنَ يَدَىْமுன்னர்عَذَابٍவேதனைக்குشَدِيْدٍ‏கடுமையான(து)
குல் இன்னமா அ'இளுகும் Bபிவாஹிததின் அன் தகூமூ லில்லாஹி மத்னா வ Fபுராதா தும்ம ததFபக்கரூ; மா BபிஸாஹிBபிகும் மின் ஜின்னஹ்; இன் ஹுவ இல்லா னதீருல் லகும் Bபய்ன யதய் 'அதாBபின் ஷதீத்
“நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் நண்பருக்கு பைத்தியம் எதுவுமில்லை; உங்களுக்குக் கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல் அவர் வேறில்லை.”
قُلْ مَا سَاَلْتُكُمْ مِّنْ اَجْرٍ فَهُوَ لَكُمْ ؕ اِنْ اَجْرِیَ اِلَّا عَلَی اللّٰهِ ۚ وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟
قُلْகூறுவீராக!مَا سَاَ لْـتُكُمْஎதை நான் உங்களிடம் கேட்டேனோمِّنْ اَجْرٍகூலியாகفَهُوَ لَـكُمْ ؕஅது உங்களுக்கேاِنْ اَجْرِىَஎன் கூலி இல்லைاِلَّاதவிரعَلَىமீதேاللّٰهِ ۚஅல்லாஹ்வின்وَهُوَஅவன்தான்عَلٰى كُلِّ شَىْءٍஅனைத்தின் மீதும்شَهِيْدٌ‏சாட்சியாளன்
குல் மா ஸ-அல்துகும் மின் அஜ்ரின் Fபஹுவ லகும் இன் அஜ்ரிய இல்லா 'அலல் லாஹி வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் ஷஹீத்
கூறுவீராக: “நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை; அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை -அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.“
قُلْ اِنَّ رَبِّیْ یَقْذِفُ بِالْحَقِّ ۚ عَلَّامُ الْغُیُوْبِ ۟
قُلْகூறுவீராக!اِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்يَقْذِفُசெய்தியை இறக்குகின்றான்بِالْحَـقِّ‌ۚஉண்மையானعَلَّامُமிக அறிந்தவன்الْغُيُوْبِ‏மறைவான விஷயங்கள் அனைத்தையும்
குல் இன்ன ரBப்Bபீ யக்திFபு Bபில்ஹக்க் 'அல்லாமுல் குயூBப்
கூறுவீராக: “என்னுடைய இறைவன் நிச்சயமாக(ப் பொய்மையை அழித்து) சத்தியத்தை மேலேற்றுகிறான்; மறைவானவற்றையெல்லாம் அவன் நன்கறிந்தவன்.”
قُلْ جَآءَ الْحَقُّ وَمَا یُبْدِئُ الْبَاطِلُ وَمَا یُعِیْدُ ۟
قُلْகூறுவீராக!جَآءَவந்துவிட்டதுالْحَـقُّஉண்மைوَمَا يُبْدِئُபுதிதாக படைக்க(வும்) மாட்டான்الْبَاطِلُபொய்யன்وَمَا يُعِيْدُ‏மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டான்
குல் ஜா'அல் ஹக்கு வமா யுBப்தி'உல் Bபாதிலு வமா யு'ஈத்
கூறுவீராக; “சத்தியம் வந்து விட்டது - அன்றியும் பொய் எதையும் புதிதாகச் செய்வதுமில்லை; இனிச்செய்யப் போவதுமில்லை.”
قُلْ اِنْ ضَلَلْتُ فَاِنَّمَاۤ اَضِلُّ عَلٰی نَفْسِیْ ۚ وَاِنِ اهْتَدَیْتُ فَبِمَا یُوْحِیْۤ اِلَیَّ رَبِّیْ ؕ اِنَّهٗ سَمِیْعٌ قَرِیْبٌ ۟
قُلْகூறுவீராக!اِنْ ضَلَلْتُநான் வழிகெட்டால்فَاِنَّمَاۤ اَضِلُّநான் வழிகெடுவதெல்லாம்عَلٰى نَـفْسِىْ ۚஎனக்குத்தான் தீங்காக அமையும்وَاِنِ اهْتَدَيْتُநான் நேர்வழி பெற்றால்فَبِمَا يُوْحِىْۤவஹீ அறிவிக்கின்ற காரணத்தால் ஆகும்اِلَىَّஎனக்குرَبِّىْ ؕஎன் இறைவன்اِنَّهٗநிச்சயமாக அவன்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்قَرِيْبٌ‏மிக சமீபமானவன்
குல் இன் ளலல்து Fப-இன்னமா அளில்லு 'அலா னFப்ஸீ வ இனிஹ்-ததய்து FபBபிமா யூஹீ இலய்ய ரBப்Bபீ; இன்னஹூ ஸமீ'உன் கரீBப்
கூறுவீராக: “நான் வழிகெடுவேனாயின்; வழிகேடு எனக்கே நஷ்டமாகும்; நான் நேர்வழியில் செல்வேனாயின் (அது) என்னுடைய இறைவன் எனக்கு “வஹீ” மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும்; நிச்சயமாக அவன் (மிகச்) செவியேற்பவன். (மிக) நெருங்கியிருப்பவன்.”
وَلَوْ تَرٰۤی اِذْ فَزِعُوْا فَلَا فَوْتَ وَاُخِذُوْا مِنْ مَّكَانٍ قَرِیْبٍ ۟ۙ
وَلَوْ تَرٰٓىநீர் பார்த்தால்اِذْ فَزِعُوْاஅவர்கள் திடுக்கிடும்போதுفَلَا فَوْتَதப்பிக்கவே முடியாதுوَاُخِذُوْاஅவர்கள் பிடிக்கப்படுவார்கள்مِنْ مَّكَانٍஇடத்திலிருந்துقَرِيْبٍۙ‏வெகு சமீபமான
வ லவ் தரா இத் FபZஜி'ஊ Fபலா Fபவ்த வ உகிதூ மின் மகானின் கரீBப்
இன்னும் (காஃபிர்கள் மறுமையில்) பயத்தால் நடுங்குவதை நீர் காண்பீராயின்: அவர்களுக்குத் தப்பியோட வழியுமிராது; இன்னும் சமீபமான இடத்திலிருந்தே அவர்கள் பிடிபடுவார்கள்.
وَّقَالُوْۤا اٰمَنَّا بِهٖ ۚ وَاَنّٰی لَهُمُ التَّنَاوُشُ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟ۚۖ
وَّقَالُـوْۤاஅவர்கள் கூறுவார்கள்اٰمَنَّاநம்பிக்கை கொண்டோம்بِهٖ‌ ۚஅவனைوَاَنّٰىஎங்கேلَهُمُஅவர்களுக்கு சாத்தியமாகும்التَّنَاوُشُஅடைவதுمِنْ مَّكَانٍۢஇடத்திலிருந்துبَعِيْدٍ ۖۚ‏தூரமான
வ காலூ ஆமன்னா Bபிஹீ வ அன்னா லஹுமுத் தனாவுஷு மின் மகானின் Bப'ஈத்
மேலும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (இப்போது சத்தியத்தின் மீது) ஈமான் கொள்கிறோம்” என்று; ஆனால் (அமல் செய்யவேண்டிய இடத்தை விட்டும்) வெகு தூரத்திலிருந்து கொண்டு அவர்கள் எவ்வாறு (ஈமானை எளிதில்) அடைய முடியும்?
وَّقَدْ كَفَرُوْا بِهٖ مِنْ قَبْلُ ۚ وَیَقْذِفُوْنَ بِالْغَیْبِ مِنْ مَّكَانٍ بَعِیْدٍ ۟
وَّقَدْதிட்டமாகكَفَرُوْاமறுத்து விட்டனர்بِهٖஇதைمِنْ قَبْلُۚமுன்னர்وَيَقْذِفُوْنَஅவர்கள் அதிகம் பேசுகின்றனர்بِالْغَيْبِகற்பனையாகمِنْ مَّكَانٍۢஇடத்திலிருந்துبَعِيْدٍ‌‏வெகு தூரமான
வ கத் கFபரூ Bபிஹீ மின் கBப்லு வ யக்திFபூன Bபில்கய்Bபி மின் மகானின் Bப'ஈத்
ஆனால், இதற்கு முன்னர் அவர்கள் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டும், மறைவாய் உள்ளவைப்பற்றி வெகு தூரத்திலிருந்தவாறு (வெற்று யூகங்களை) எறிந்து கொண்டுமிருந்தார்கள்.
وَحِیْلَ بَیْنَهُمْ وَبَیْنَ مَا یَشْتَهُوْنَ كَمَا فُعِلَ بِاَشْیَاعِهِمْ مِّنْ قَبْلُ ؕ اِنَّهُمْ كَانُوْا فِیْ شَكٍّ مُّرِیْبٍ ۟۠
وَحِيْلَதடுக்கப்பட்டுவிடும்بَيْنَهُمْஅவர்களுக்கு இடையிலும்وَبَيْنَஇடையிலும்مَا يَشْتَهُوْنَஅவர்கள் விரும்புவதற்குكَمَاபோன்றுفُعِلَசெய்யப்பட்டதைبِاَشْيَاعِهِمْஅவர்கள் கூட்டங்களுக்குمِّنْ قَبْلُؕஇதற்கு முன்னர்اِنَّهُمْநிச்சயமாக இவர்கள்كَانُوْاஇருந்தனர்فِىْ شَكٍّசந்தேகத்தில்தான்مُّرِيْبٍ‏பெரிய
வ ஹீல Bபய்னஹும் வ Bபய்ன மா யஷ்தஹூன கமா Fபு'இல Bபி-அஷ்யா'இஹிம் மின் கBப்ல்; இன்னஹும் கானூ Fபீ ஷக்கின் முரீBப்
மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்.