69. ஸூரத்துல் ஹாஃக்ஃகா (நிச்சயமானது)

மக்கீ, வசனங்கள்: 52

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
وَمَاۤ اَدْرٰىكَ مَا الْحَآقَّةُ ۟ؕ
وَمَاۤ اَدْرٰٮكَஉமக்கு எது அறிவித்தது!?مَا الْحَــآقَّةُ ؕ‏உண்மையான நிகழ்வு என்றால் என்ன?
வ மா அத்ராக மல் ஹாக்கஹ்
அன்றியும் நிச்சயமானது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
كَذَّبَتْ ثَمُوْدُ وَعَادٌ بِالْقَارِعَةِ ۟
كَذَّبَتْபொய்ப்பித்தனர்ثَمُوْدُஸமூது மக்களும்وَعَادٌۢஆது மக்களும்بِالْقَارِعَةِ‏தட்டக்கூடிய மறுமை நாளை
கத்தBபத் தமூது வ 'ஆதும் Bபில் காரி'அஹ்
ஸமூது (கூட்டத்தாரு)ம், ஆது (கூட்டத்தாரு)ம் திடுக்கிடச் செய்வதை (கியாம நாளைப்) பொய்ப்பித்தனர்.
فَاَمَّا ثَمُوْدُ فَاُهْلِكُوْا بِالطَّاغِیَةِ ۟
فَاَمَّا ثَمُوْدُஆக, ஸமூது மக்கள்فَاُهْلِكُوْاஅழிக்கப்பட்டனர்بِالطَّاغِيَةِ‏எல்லை மீறிய சப்தத்தைக் கொண்டு
Fப-அம்மா தமூது Fப உஹ்லிகூ Bபித்தாகியஹ்
எனவே, ஸமூது கூட்டத்தார் (அண்டம் கிடுகிடச் செய்யும்) பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
وَاَمَّا عَادٌ فَاُهْلِكُوْا بِرِیْحٍ صَرْصَرٍ عَاتِیَةٍ ۟ۙ
وَاَمَّاஆக,عَادٌஆது மக்கள்فَاُهْلِكُوْاஅழிக்கப்பட்டார்கள்بِرِيْحٍஒரு காற்றைக் கொண்டுصَرْصَرٍகடுமையான குளிருடன் வீசக்கூடியعَاتِيَةٍۙ‏அதி வேகமான
வ அம்மா 'ஆதுன் Fப உஹ்லிகூ Bபி ரீஹின் ஸர்ஸரின் 'ஆதியஹ்
இன்னும், ஆது கூட்டத்தாரோ பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் அழிக்கப்பட்டனர்.
سَخَّرَهَا عَلَیْهِمْ سَبْعَ لَیَالٍ وَّثَمٰنِیَةَ اَیَّامٍ ۙ حُسُوْمًاۙ فَتَرَی الْقَوْمَ فِیْهَا صَرْعٰی ۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ خَاوِیَةٍ ۟ۚ
سَخَّرَهَاஅவன் அதை கட்டுப்படுத்தி வைத்திருந்தான்عَلَيْهِمْஅவர்கள் மீதுسَبْعَ لَيَالٍஏழு இரவுகளும்وَّثَمٰنِيَةَ اَيَّامٍۙஎட்டு பகல்களும்حُسُوْمًا ۙதொடர்ச்சியாகفَتَرَىபார்ப்பீர்الْقَوْمَமக்களைفِيْهَاஅதில்صَرْعٰىۙசெத்து மடிந்தவர்களாகكَاَنَّهُمْபோல்/அவர்களோاَعْجَازُஅடிப்பகுதிகளைنَخْلٍபேரீட்ச மரத்தின்خَاوِيَةٍ‌ ۚ‏அழிந்துபோன
ஸக்கர ஹா 'அலய்ஹிம் ஸBப்'அ ல யாலி(ன்)வ் வ தமானியத அய்யாமின் ஹுஸூமன் Fபதரல் கவ்ம Fபீஹா ஸர்'ஆ க அன்னஹும் அஃஜாZஜு னக்லின் காவியஹ்
அவர்கள் மீது, அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை, அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.
فَهَلْ تَرٰی لَهُمْ مِّنْ بَاقِیَةٍ ۟
فَهَلْ تَرٰىநீர் பார்க்கிறீரா?لَهُمْஅவர்களில்مِّنْۢ بَاقِيَةٍ‏உயிரோடு மீதம் இருப்பவர் யாரையும்
Fபஹல் தரா லஹும் மின் Bபாகியஹ்
ஆகவே, அவர்களில் எஞ்சிய எவரையும் நீர் காண்கிறீரா?
وَجَآءَ فِرْعَوْنُ وَمَنْ قَبْلَهٗ وَالْمُؤْتَفِكٰتُ بِالْخَاطِئَةِ ۟ۚ
وَجَآءَசெய்தனர்فِرْعَوْنُஃபிர்அவ்னும்وَمَنْ قَبْلَهٗஅவனுக்கு முன்னுள்ளவர்களும்وَالْمُؤْتَفِكٰتُதலைக்கீழாக புரட்டப்பட்ட ஊரார்களும்بِالْخَـاطِئَةِ‌ۚ‏தீய செயல்களை
வ ஜா'அ Fபிரவ்னு வ மன் கBப்லஹூ வல் மு'தFபிகாது Bபில் காதி'அஹ்
அன்றியும் ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் இருந்தோரும் தலை கீழாய்ப்புரட்டப்பட்ட ஊராரும், (மறுமையை மறுத்து) பாவங்களைச் செய்து வந்தனர்.
فَعَصَوْا رَسُوْلَ رَبِّهِمْ فَاَخَذَهُمْ اَخْذَةً رَّابِیَةً ۟
فَعَصَوْاஅவர்கள் மாறுசெய்தனர்رَسُوْلَதூதருக்குرَبِّهِمْதங்கள் இறைவனின்فَاَخَذَهُمْஆகவே, அவன் அவர்களைப் பிடித்தான்اَخْذَةًபிடியால்رَّابِيَةً‏கடுமையான
Fப 'அஸவ் ரஸூல ரBப்Bபிஹிம் Fப அகதஹும் அக்ததர் ராBபியஹ்
அதனால், அவர்கள் தம் இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர்; ஆதலால் அவன் அவர்களைப் பலமான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.
اِنَّا لَمَّا طَغَا الْمَآءُ حَمَلْنٰكُمْ فِی الْجَارِیَةِ ۟ۙ
اِنَّاநிச்சயமாக நாம்لَمَّاமிக அதிகமாகிய போதுطَغَا الْمَآءُதண்ணீர்حَمَلْنٰكُمْஉங்களை ஏற்றினோம்فِى الْجَارِيَةِ ۙ‏கப்பலில்
இன்னா லம்மா தகல் மா'உ ஹமல்னாகும் Fபில் ஜாரியஹ்
தண்ணீர் பொங்கிய போது நிச்சயமாக நாம் உங்களைக் கப்பலில் ஏற்றி(க் காப்பாற்றி)னோம்.
لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَّتَعِیَهَاۤ اُذُنٌ وَّاعِیَةٌ ۟
لِنَجْعَلَهَاஅதை ஆக்குவதற்காகவும்لَـكُمْஉங்களுக்குتَذْكِرَةًஓர் உபதேசமாகوَّتَعِيَهَاۤஅவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும்اُذُنٌசெவிகள்وَّاعِيَةٌ‏கவனித்து செவியுறுகின்ற
லி னஜ்'அலஹா லகும் தத்கி ரத(ன்)வ்-வ த'இயஹா உதுனு(ன்)வ் வா'இயஹ்
அதை உங்களுக்கு நினைவூட்டும் ஒரு படிப்பினையாக்குவதற்கும், பேணிக்காக்கும் செவி (அதை நினைவில் ஞாபகத்தில் வைத்து)ப் பேணிக்கொள்வதற்கும் (ஆக அவ்வாறு செய்தோம்).
فَاِذَا نُفِخَ فِی الصُّوْرِ نَفْخَةٌ وَّاحِدَةٌ ۟ۙ
فَاِذَا نُفِخَஊதப்பட்டால்فِى الصُّوْرِசூரில்نَفْخَةٌஊதுதல்وَّاحِدَةٌ ۙ‏ஒரு முறை
Fப இதா னுFபிக Fபிஸ் ஸூரி னFப்கது(ன்)வ் வாஹிதஹ்
எனவே, ஸூரில் (எக்காளத்தில்) ஊதல் ஒருமுறை ஊதப்படும் போது:
وَّحُمِلَتِ الْاَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَّاحِدَةً ۟ۙ
وَحُمِلَتِசுமக்கப்பட்டுالْاَرْضُபூமி(யும்)وَ الْجِبَالُமலைகளும்فَدُكَّتَاஇரண்டும் அடித்து நொறுக்கப்பட்டால்دَكَّةًஅடியாகوَّاحِدَةً ۙ‏ஒரே
வ ஹுமிலதில் அர்ளு வல் ஜிBபாலு Fபதுக்கதா தக்கத(ன்)வ் வாஹிதஹ்
இன்னும் பூமியும் மலைகளும் தூக்கி (எறியப்பட்டு) பின்னர் ஒன்றோடு ஒன்று மோதி அவையிரண்டும் ஒரே தூளாக ஆக்கப்பட்டால் -
فَیَوْمَىِٕذٍ وَّقَعَتِ الْوَاقِعَةُ ۟ۙ
فَيَوْمَٮِٕذٍஅந்நாளில்தான்وَّقَعَتِநிகழும்الْوَاقِعَةُ ۙ‏நிகழக்கூடிய நாள்
Fப யவ்ம'இதி(ன்)வ் வக'அதில் வாகி'அஹ்
அந்த நாளில் தான் நிகழ வேண்டிய (மாபெரும் சம்பவம்) நிகழும்.
وَانْشَقَّتِ السَّمَآءُ فَهِیَ یَوْمَىِٕذٍ وَّاهِیَةٌ ۟ۙ
وَانْشَقَّتِஇன்னும் பிளந்து விடும்السَّمَآءُவானம்فَهِىَஅதுيَوْمَٮِٕذٍஅந்நாளில்وَّاهِيَةٌ ۙ‏பலவீனப்பட்டு விடும்
வன்ஷக்கதிஸ் ஸமா'உ Fபஹிய யவ்ம 'இதி(ன்)வ்-வாஹியஹ்
வானமும் பிளந்து, அன்னாளில் அது அடியோடு தன் சக்தியை இழந்து விடும்.
وَّالْمَلَكُ عَلٰۤی اَرْجَآىِٕهَا ؕ وَیَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ یَوْمَىِٕذٍ ثَمٰنِیَةٌ ۟ؕ
وَّالْمَلَكُ عَلٰٓى اَرْجَآٮِٕهَا ؕவானவர்கள்/அதன் ஓரங்களில் இருப்பார்கள்وَيَحْمِلُசுமப்பார்(கள்)عَرْشَஅர்ஷைرَبِّكَஉமது இறைவனின்فَوْقَهُمْதங்களுக்கு மேல்يَوْمَٮِٕذٍஅந்நாளில்ثَمٰنِيَةٌ ؕ‏எட்டு வானவர்கள்
வல் மலகு 'அலா அர்ஜா'இஹா; வ யஹ்மிலு 'அர்ஷ ரBப்Bபிக Fபவ்கஹும் யவ்ம'இதின் தமானியஹ்
இன்னும் மலக்குகள் அதன் கோடியிலிருப்பார்கள்; அன்றியும், அந்நாளில் உம்முடைய இறைவனின் அர்ஷை (வானவர்) எட்டுப்பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள்.
یَوْمَىِٕذٍ تُعْرَضُوْنَ لَا تَخْفٰی مِنْكُمْ خَافِیَةٌ ۟
يَوْمَٮِٕذٍஅந்நாளில்تُعْرَضُوْنَநீங்கள் சமர்ப்பிக்கப்படுவீர்கள்لَا تَخْفٰىமறைந்துவிடாதுمِنْكُمْஉங்களிடமிருந்துخَافِيَةٌ‏மறையக்கூடியது எதுவும்
யவ்ம'இதின் துஃரளூன லா தக்Fபா மின் கும் காFபியஹ்
(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது.
فَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِیَمِیْنِهٖ ۙ فَیَقُوْلُ هَآؤُمُ اقْرَءُوْا كِتٰبِیَهْ ۟ۚ
فَاَمَّا مَنْஆகவே, யார்اُوْتِىَகொடுக்கப்பட்டாரோكِتٰبَهٗதனது செயலேடுبِيَمِيْنِهٖۙதனது வலது கரத்தில்فَيَقُوْلُஅவர் கூறுவார்هَآؤُمُவாருங்கள்!اقْرَءُوْاபடியுங்கள்!كِتٰبِيَهْ‌ۚ‏எனது செயலேட்டை
Fப அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபியமீனிஹீ Fப யகூலு ஹா'உமுக் ர'ஊ கிதாBபியஹ்
ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), “இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்” எனக் கூறுவார்.
اِنِّیْ ظَنَنْتُ اَنِّیْ مُلٰقٍ حِسَابِیَهْ ۟ۚ
اِنِّىْநிச்சயமாக நான்ظَنَنْتُநம்பினேன்اَنِّىْநிச்சயமாக நான்مُلٰقٍசந்திப்பேன்حِسَابِيَهْ‌ۚ‏எனது விசாரணையை
இன்னீ ளனன்து அன்னீ முலாகின் ஹிஸாBபியஹ்
“நிச்சயமாக, நான் என்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.”
فَهُوَ فِیْ عِیْشَةٍ رَّاضِیَةٍ ۟ۙ
فَهُوَஆகவே, அவர்فِىْ عِيْشَةٍவாழ்க்கையில்رَّاضِيَةٍۙ‏மகிழ்ச்சியான
Fபஹுவ Fபீ 'ஈஷதிர் ராளியஹ்
ஆகவே, அவர் திருப்தியான சுக வாழ்க்கையில் -
فِیْ جَنَّةٍ عَالِیَةٍ ۟ۙ
فِىْ جَنَّةٍசொர்க்கத்தில்عَالِيَةٍۙ‏உயர்ந்த
Fபீ ஜன்ன்னதின் 'ஆலியஹ்
உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார்.
قُطُوْفُهَا دَانِیَةٌ ۟
قُطُوْفُهَاஅதன் கனிகள்دَانِيَةٌ‏மிக சமீபமாக
குதூFபுஹா தானியஹ்
அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திலிருக்கும்.
كُلُوْا وَاشْرَبُوْا هَنِیْٓـًٔا بِمَاۤ اَسْلَفْتُمْ فِی الْاَیَّامِ الْخَالِیَةِ ۟
كُلُوْاஉண்ணுங்கள்وَاشْرَبُوْاஇன்னும் பருகுங்கள்هَنِيْٓـــٴًــا ۢஇன்பமாகبِمَاۤ اَسْلَفْتُمْநீங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாகفِى الْاَيَّامِ الْخَـالِيَةِ‏கடந்த காலங்களில்
குலூ வஷ்ரBபூ ஹனீ'அம் Bபிமா அஸ்லFப்தும் Fபில் அய்யாமில் காலியஹ்
“சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்” (என அவர்களுக்குக் கூறப்படும்).
وَاَمَّا مَنْ اُوْتِیَ كِتٰبَهٗ بِشِمَالِهٖ ۙ۬ فَیَقُوْلُ یٰلَیْتَنِیْ لَمْ اُوْتَ كِتٰبِیَهْ ۟ۚ
وَاَمَّا مَنْஆக, யார்اُوْتِىَகொடுக்கப்பட்டாரோكِتٰبَهٗதனது செயலேடுبِشِمَالِهٖ  ۙதனது இடது கையில்فَيَقُوْلُகூறுவார்يٰلَيْتَنِىْ لَمْ اُوْتَஎனக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதே!كِتٰبِيَهْ‌ۚ‏எனது செயலேடு
வ அம்மா மன் ஊதிய கிதாBபஹூ Bபிஷிமாலிஹீ Fப யகூலு யாலய்தனீ லம் ஊத கிதாBபியஹ்
ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்: “என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே!
وَلَمْ اَدْرِ مَا حِسَابِیَهْ ۟ۚ
وَلَمْ اَدْرِநான் அறியமாட்டேன்مَا حِسَابِيَهْ‌ۚ‏எனது விசாரணை என்னவாகும்
வ லம் அத்ரி மா ஹிஸாBபியஹ்
“அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே-
یٰلَیْتَهَا كَانَتِ الْقَاضِیَةَ ۟ۚ
يٰلَيْتَهَا كَانَتِஅதுவே, இருந்திருக்க வேண்டுமே!الْقَاضِيَةَ‌ ۚ‏முடிக்கக்கூடியதாக
யா லய்தஹா கானதில் காளியஹ்
“(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா?
مَاۤ اَغْنٰی عَنِّیْ مَالِیَهْ ۟ۚ
مَاۤ اَغْنٰىபலனளிக்கவில்லைعَنِّىْஎனக்குمَالِيَهْۚ‏எனது செல்வம்
மா அக்னா 'அன்னீ மாலியஹ்
“என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே!
هَلَكَ عَنِّیْ سُلْطٰنِیَهْ ۟ۚ
هَلَكَஅழித்துவிட்டதுعَنِّىْஎன்னை விட்டுسُلْطٰنِيَهْ‌ۚ‏எனது ஆட்சி அதிகாரம்
ஹலக 'அன்னீ ஸுல்தானியஹ்
“என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!” (என்று அரற்றுவான்).
خُذُوْهُ فَغُلُّوْهُ ۟ۙ
خُذُوْهُஅவனைப் பிடியுங்கள்!فَغُلُّوْهُ ۙ‏அவனை விலங்கிடுங்கள்!
குதூஹு Fபகுல்லூஹ்
“(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.”
ثُمَّ الْجَحِیْمَ صَلُّوْهُ ۟ۙ
ثُمَّபிறகுالْجَحِيْمَநரகத்தில்صَلُّوْهُ ۙ‏அவனை எரித்து பொசுக்குங்கள்!
தும்மல் ஜஹீம ஸல்லூஹ்
“பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள்.
ثُمَّ فِیْ سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُوْنَ ذِرَاعًا فَاسْلُكُوْهُ ۟ؕ
ثُمَّபிறகுفِىْ سِلْسِلَةٍஒரு சங்கிலியில்ذَرْعُهَاஅதன் முழம்سَبْعُوْنَ ذِرَاعًاஎழுபது முழம்فَاسْلُكُوْهُ ؕ‏அவனைபுகுத்துங்கள்!
தும்ம Fபீ ஸில்ஸிலதின் தர்'உஹா ஸBப்'ஊன திரா'அன் Fபஸ்லுகூஹ்
“பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்று உத்தரவிடப்படும்).
اِنَّهٗ كَانَ لَا یُؤْمِنُ بِاللّٰهِ الْعَظِیْمِ ۟ۙ
اِنَّهٗநிச்சயமாக அவன்كَانَஇருந்தான்لَا يُؤْمِنُநம்பிக்கை கொள்ளாதவனாகبِاللّٰهِஅல்லாஹ்வைالْعَظِيْمِۙ‏மகத்தான
இன்னஹூ கான லா யு'மினு Bபில்லாஹில் 'அளீம்
“நிச்சயமாக அவன் மகத்துவமிக்க அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்ளாதிருந்தான்.”
وَلَا یَحُضُّ عَلٰی طَعَامِ الْمِسْكِیْنِ ۟ؕ
وَلَا يَحُضُّஇன்னும் தூண்டாத வனாக இருந்தான்عَلٰى طَعَامِஉணவிற்குالْمِسْكِيْنِؕ‏ஏழைகளின்
வ லா யஹுள்ளு 'அலா த'ஆமில் மிஸ்கீன்
“அன்றியும், அவன் ஏழைகளுக்கு(த் தானும் உணவளிக்கவில்லை, பிறரையும்) உணவளிக்கத் தூண்டவில்லை.”
فَلَیْسَ لَهُ الْیَوْمَ هٰهُنَا حَمِیْمٌ ۟ۙ
فَلَيْسَஆகவே இருக்க மாட்டார்لَـهُஅவனுக்குالْيَوْمَஇன்றுهٰهُنَاஇங்குحَمِيْمٌۙ‏நெருக்கமான நண்பர்
Fபலய்ஸ லஹுல் யவ்ம ஹாஹுனா ஹமீம்
“எனவே, அவனுக்கு இன்றைய தினம் இங்கே (அனுதாபப்படும்) எந்த நண்பனும் இல்லை.”
وَّلَا طَعَامٌ اِلَّا مِنْ غِسْلِیْنٍ ۟ۙ
وَّلَا طَعَامٌஇன்னும் உணவும் இருக்காதுاِلَّاதவிரمِنْ غِسْلِيْنٍۙ‏சீழ் சலங்களைத்
வ லா த'ஆமுன் இல்லா மின் கிஸ்லீன்
“சீழ் நீரைத் தவிர, அவனுக்கு வேறு எந்த உணவுமில்லை.”
لَّا یَاْكُلُهٗۤ اِلَّا الْخَاطِـُٔوْنَ ۟۠
لَّا يَاْكُلُهٗۤஅதை சாப்பிட மாட்டார்(கள்)اِلَّا الْخٰطِئُوْنَ‏பாவிகளை தவிர
லா ய'குலுஹூ இல்லல் காதி'ஊன்
“குற்றவாளிகளைத் தவிர, வேறு எவரும் அதைப் புசியார்.”  
فَلَاۤ اُقْسِمُ بِمَا تُبْصِرُوْنَ ۟ۙ
فَلَاۤ اُقْسِمُசத்தியம் செய்கிறேன்!بِمَا تُبْصِرُوْنَۙ‏நீங்கள் பார்க்கின்றவற்றின் மீதும்
Fபலா உக்ஸிமு Bபிமா துBப்ஸிரூன்
ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றின் மீதும் சத்தியம் செய்கிறேன்.
وَمَا لَا تُبْصِرُوْنَ ۟ۙ
وَمَا لَا تُبْصِرُوْنَۙ‏நீங்கள் பார்க்காதவற்றின் மீதும்
வமா லா துBப்ஸிரூன்
நீங்கள் பார்க்காதவற்றின் மீதும், (சத்தியம் செய்கிறேன்.)
اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِیْمٍ ۟ۚۙ
اِنَّهٗநிச்சயமாக இதுلَقَوْلُவேத வாக்காகும்رَسُوْلٍதூதருடையكَرِيْمٍۚ ۙ‏கண்ணியமான
இன்னஹூ லகவ்லு ரஸூலின் கரீம்
நிச்சயமாக, இது (நாம் அருளியவாறு ஓதி வரும்) கண்ணியமிக்க தூதரின் சொல்லாகும்.
وَّمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ؕ قَلِیْلًا مَّا تُؤْمِنُوْنَ ۟ۙ
وَّمَا هُوَ بِقَوْلِஇது வாக்கல்லشَاعِرٍ‌ؕகவிஞரின்قَلِيْلًاமிகக் குறைவாகவேمَّا تُؤْمِنُوْنَۙ‏நம்பிக்கை கொள்கிறீர்கள்
வமா ஹுவ Bபிகவ்லி ஷா'இர்; கலீலன் மா து'மினூன்
இது ஒரு கவிஞனின் சொல்லன்று; (எனினும்) நீங்கள் மிகவும் சொற்பமாகவே நம்புகிறீர்கள்.
وَلَا بِقَوْلِ كَاهِنٍ ؕ قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟ؕ
وَلَا بِقَوْلِஇன்னும் இது வாக்குமல்லكَاهِنٍ‌ؕஜோசியக்காரனின்قَلِيْلًاமிகக் குறைவாகவேمَّا تَذَكَّرُوْنَؕ‏நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்
வ லா Bபிகவ்லி காஹின்; கலீலன் மா ததக்கரூன்
(இது) ஒரு குறிகாரனின் சொல்லுமன்று; (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள்.
تَنْزِیْلٌ مِّنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟
تَنْزِيْلٌஇறக்கப்பட்ட வேதம்مِّنْ رَّبِّஇறைவனிடமிருந்துالْعٰلَمِيْنَ‏அகிலங்களின்
தன்Zஜீலும் மிர் ரBப்Bபில் 'ஆலமீன்
அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும்.
وَلَوْ تَقَوَّلَ عَلَیْنَا بَعْضَ الْاَقَاوِیْلِ ۟ۙ
وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَاஅவர் இட்டுக்கட்டி பேசினால்/நம்மீதுبَعْضَ الْاَقَاوِيْلِۙ‏சில பேச்சுகளை
வ லவ் தகவ்வல 'அலய்னா Bபஃளல் அகாவீல்
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -
لَاَخَذْنَا مِنْهُ بِالْیَمِیْنِ ۟ۙ
لَاَخَذْنَاநாம் பிடித்திருப்போம்مِنْهُஅவரைبِالْيَمِيْنِۙ‏பலமாக
ல-அகத்னா மின்ஹு Bபில்யமீன்
அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு-
ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ الْوَتِیْنَ ۟ؗۖ
ثُمَّபிறகுلَقَطَعْنَاநாம் வெட்டி இருப்போம்مِنْهُஅவரின்الْوَتِيْنَ  ۖ‏நாடி நரம்பை
தும்ம லகதஃனா மின்ஹுல் வதீன்
பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.
فَمَا مِنْكُمْ مِّنْ اَحَدٍ عَنْهُ حٰجِزِیْنَ ۟
فَمَاஇல்லைمِنْكُمْஉங்களில் இருந்துمِّنْ اَحَدٍஎவரும்عَنْهُஅவரை விட்டும்حَاجِزِيْنَ‏தடுப்பவர்கள்
Fபமா மின்கும் மின் அஹதின்'அன்ஹு ஹாஜிZஜீன்
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை.
وَاِنَّهٗ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِیْنَ ۟
وَاِنَّهٗநிச்சயமாக இதுلَتَذْكِرَةٌஓர் அறிவுரையாகும்لِّلْمُتَّقِيْنَ‏இறையச்சமுள்ளவர்களுக்கு
வ இன்னஹூ லதத்கிரதுல் லில்முத்தகீன்
ஆகவே, நிச்சயமாக அது (குர்ஆன்) பயபக்தியுடையவர்களுக்கு நல்லுபதேசமாகும்.
وَاِنَّا لَنَعْلَمُ اَنَّ مِنْكُمْ مُّكَذِّبِیْنَ ۟
وَاِنَّاநிச்சயமாக நாம்لَنَعْلَمُநாம் நன்கறிவோம்اَنَّநிச்சயமாகمِنْكُمْஉங்களில்مُّكَذِّبِيْنَ‏பொய்ப்பிப்பவர்கள்
வ இன்ன லனஃலமு அன்ன மின்கும் முகத்திBபீன்
ஆயினும், (அதைப்) பொய்ப்பிப்பவர்களும் உங்களில் இருக்கின்றார்கள் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
وَاِنَّهٗ لَحَسْرَةٌ عَلَی الْكٰفِرِیْنَ ۟
وَاِنَّهٗநிச்சயமாக இதுلَحَسْرَةٌதுக்கமானதுதான்عَلَى الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களுக்கு
வ இன்னஹு லஹஸ்ரதுன் 'அலல் காFபிரீன்
அன்றியும், நிச்சயமாக அது காஃபிர்களுக்கு கைசேதமாக இருக்கிறது.
وَاِنَّهٗ لَحَقُّ الْیَقِیْنِ ۟
وَاِنَّهٗநிச்சயமாக இதுلَحَقُّஉண்மையாகும்الْيَقِيْنِ‏மிக உறுதியான
வ இன்னஹூ லஹக்குல் யகீன்
மேலும், அது நிச்சயமாக உறுதியான உண்மையாகும்.
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِیْمِ ۟۠
فَسَبِّحْஆகவே, துதிப்பீராக!بِاسْمِபெயரைرَبِّكَஉமது இறைவனின்الْعَظِيْمِ‏மகத்தான
Fபஸ்ஸBப்Bபிஹ் Bபிஸ்மி ரBப்Bபிகல் 'அளீம்
ஆகவே, மகத்தான உம்முடைய இறைவனின் திருப்பெயரைக் கொண்டு (துதி செய்து) தஸ்பீஹு செய்வீராக.