88. ஸூரத்துல் காஷியா (மூடிக் கொள்ளுதல்)

மக்கீ, வசனங்கள்: 26

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
هَلْ اَتٰىكَ حَدِیْثُ الْغَاشِیَةِ ۟ؕ
هَلْ اَتٰٮكَஉமக்கு வந்ததா?حَدِيْثُசெய்திالْغَاشِيَةِؕ‏சூழக்கூடியதின்
ஹல் அதாக ஹதீதுல் காஷியஹ்
சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ خَاشِعَةٌ ۟ۙ
وُجُوْهٌமுகங்கள்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்خَاشِعَةٌ ۙ‏இழிவடையும்
வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதின் காஷி'அஹ்
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.
عَامِلَةٌ نَّاصِبَةٌ ۟ۙ
عَامِلَةٌஅனுபவிக்கும்نَّاصِبَةٌ ۙ‏களைப்படையும்
'ஆமிலதுன் னாஸிBபஹ்
அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.
تَصْلٰی نَارًا حَامِیَةً ۟ۙ
تَصْلٰىபற்றி எரியும்نَارًاநெருப்பில்حَامِيَةً ۙ‏கடுமையாக எரியக்கூடிய
தஸ்லா னாரன் ஹாமியஹ்
கொழுந்து விட்டெறியும் நெருப்பில் அவை புகும்.
تُسْقٰی مِنْ عَیْنٍ اٰنِیَةٍ ۟ؕ
تُسْقٰىபுகட்டப்படும்مِنْஇருந்துعَيْنٍஊற்றுاٰنِيَةٍؕ‏கொதிக்கக்கூடிய
துஸ்கா மின் 'அய்னின் ஆனியஹ்
கொதிக்கும் ஊற்றிலிருந்து, (அவர்களுக்கு) நீர் புகட்டப்படும்.
لَیْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِیْعٍ ۟ۙ
لَـيْسَஇல்லைلَهُمْஅவர்களுக்குطَعَامٌஉணவுاِلَّاதவிரمِنْ ضَرِيْعٍۙ‏விஷச் செடியிலிருந்து
லய்ஸ லஹும் த'ஆமுன் இல்லா மின் ளரீ'
அவர்களுக்கு விஷச் செடிகளைத் தவிர, வேறு உணவில்லை.
لَّا یُسْمِنُ وَلَا یُغْنِیْ مِنْ جُوْعٍ ۟ؕ
لَّا يُسْمِنُகொழுக்க வைக்காதுوَلَا يُغْنِىْஇன்னும் போக்காதுمِنْ جُوْعٍؕ‏பசியை
லா யுஸ்மினு வலா யுக்னீ மின் ஜூ'
அது அவர்களைக் கொழு(த்துச் செழி)க்கவும் வைக்காது; அன்றியும் பசியையும் தணிக்காது.
وُجُوْهٌ یَّوْمَىِٕذٍ نَّاعِمَةٌ ۟ۙ
وُجُوْهٌமுகங்கள்يَّوْمَٮِٕذٍஅந்நாளில்نَّاعِمَةٌ ۙ‏இன்புற்றிருக்கும்
வுஜூஹு(ன்)ய் யவ்ம 'இதின் னா'இமஹ்
அந்நாளில் சில முகங்கள் செழுமையாக இருக்கும்.
لِّسَعْیِهَا رَاضِیَةٌ ۟ۙ
لِّسَعْيِهَاதன் செயலுக்காகرَاضِيَةٌ ۙ‏திருப்தியடைந்திருக்கும்
லிஸஃயிஹா ராளியஹ்
தம் முயற்சி (நற்பயன் அடைந்தது) பற்றி திருப்தியுடன் இருக்கும்.
لَّا تَسْمَعُ فِیْهَا لَاغِیَةً ۟ؕ
لَّا تَسْمَعُசெவியுறாதுفِيْهَاஅதில்لَاغِيَةً ؕ‏வீண் பேச்சை
லா தஸ்ம'உ Fபீஹா லாகியஹ்
அதில் யாதொரு பயனற்ற சொல்லையும் அவை செவியுறுவதில்லை.
فِیْهَا عَیْنٌ جَارِیَةٌ ۟ۘ
فِيْهَاஅதில் இருக்கும்عَيْنٌஊற்றுجَارِيَةٌ‌ ۘ‏ஓடக்கூடிய
Fபீஹா 'அய்னுன் ஜாரியஹ்
அதில் ஓடிக் கொண்டிருக்கும் நீரூற்று உண்டு.
فِیْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۟ۙ
فِيْهَاஅதில் இருக்கும்سُرُرٌகட்டில்கள்مَّرْفُوْعَةٌ ۙ‏உயர்வான
Fபீஹா ஸுருரும் மர்Fபூ'அஹ்
அதில் உயர்ந்த ஆசனங்கள் உண்டு.
وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۟ۙ
وَّاَكْوَابٌஇன்னும் குவளைகள்مَّوْضُوْعَةٌ ۙ‏(நிரப்பி) வைக்கப்பட்ட
வ அக்வாBபும் மவ்ளூ'அஹ்
(அருந்தக்) குவளைகளும் வைக்கப் பட்டிருக்கும்.
وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۟ۙ
وَّنَمَارِقُஇன்னும் தலையணைகள்مَصْفُوْفَةٌ ۙ‏வரிசையாக வைக்கப்பட்ட
வ னமாரிகு மஸ்FபூFபஹ்
மேலும், அணி அணியாக்கப்பட்டுள்ள திண்டுகளும்-
وَّزَرَابِیُّ مَبْثُوْثَةٌ ۟ؕ
وَّزَرَابِىُّஇன்னும் உயர்ரக விரிப்புகள்مَبْثُوْثَةٌ ؕ‏விரிக்கப்பட்ட
வ ZஜராBபிய்யு மBப்தூதஹ்
விரிக்கப்பட்ட உயர்ந்த கம்பளங்களும் உண்டு.
اَفَلَا یَنْظُرُوْنَ اِلَی الْاِبِلِ كَیْفَ خُلِقَتْ ۟ۥ
اَفَلَا يَنْظُرُوْنَபார்க்கமாட்டார்களா?اِلَىபக்கம்الْاِ بِلِஒட்டகத்தின்كَيْفَஎவ்வாறுخُلِقَتْ‏அது படைக்கப்பட்டுள்ளது
அFபலா யன்ளுரூன இலலிBபிலி கய்Fப குலிகத்
(நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று-
وَاِلَی السَّمَآءِ كَیْفَ رُفِعَتْ ۟ۥ
وَاِلَىஇன்னும் பக்கம்السَّمَآءِவானத்தின்كَيْفَஎவ்வாறுرُفِعَتْ‏அது உயர்த்தப்பட்டுள்ளது
வ இலஸ் ஸமா'இ கய்Fப ருFபி'அத்
மேலும் வானத்தை அது எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கிறது? என்றும்,
وَاِلَی الْجِبَالِ كَیْفَ نُصِبَتْ ۟ۥ
وَاِلَىஇன்னும் பக்கம்الْجِبَالِமலைகளின்كَيْفَஎவ்வாறுنُصِبَتْ‏அது நிறுவப்பட்டுள்ளது
வ இலல் ஜிBபாலி கய்Fப னுஸிBபத்
இன்னும் மலைகளையும் அவை எப்படி நாட்டப்பட்டிருக்கின்றன? என்றும்,
وَاِلَی الْاَرْضِ كَیْفَ سُطِحَتْ ۟ۥ
وَاِلَىஇன்னும் பக்கம்الْاَرْضِபூமியின்كَيْفَஎவ்வாறுسُطِحَتْ‏அது விரிக்கப்பட்டுள்ளது
வ இலல் அர்ளி கய்Fப ஸுதிஹத்
இன்னும் பூமி அது எப்படி விரிக்கப்பட்டிருக்கிறது? (என்றும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?)
فَذَكِّرْ ؕ۫ اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ۟ؕ
فَذَكِّرْ ؕஆகவே, அறிவுரை கூறுவீராகاِنَّمَاۤ اَنْتَநீரெல்லாம்مُذَكِّرٌ ؕ‏அறிவுரை கூறுபவர்தான்
Fபதக்கிர் இன்னம அன்த முதக்கிர்
ஆகவே, (நபியே! இவற்றைக் கொண்டு) நீர் நல்லுபதேசம் செய்வீராக; நிச்சயமாக நீர் நல்லுபதேசம் செய்பவர் தாம்.
لَسْتَ عَلَیْهِمْ بِمُصَۜیْطِرٍ ۟ۙ
لَـسْتَநீர் இல்லைعَلَيْهِمْஅவர்களைبِمُصَۜيْطِرٍۙ‏நிர்ப்பந்திப்பவராக
லஸ்த 'அலய்ஹிம் Bபிமுஸய்திர்
அவர்கள் மீது பொறுப்புச் சாட்டப்பட்டவர் அல்லர்.
اِلَّا مَنْ تَوَلّٰی وَكَفَرَ ۟ۙ
اِلَّاஎனினும்مَنْயார்تَوَلّٰىவிலகினாரோوَكَفَرَۙ‏இன்னும் நிராகரித்தாரோ
இல்லா மன் தவல்லா வ கFபர்
ஆயினும், எவன் (சத்தியத்தைப்) புறக்கணித்து, மேலும் நிராகரிக்கின்றானோ-
فَیُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَ ۟ؕ
فَيُعَذِّبُهُஅவரை வேதனைசெய்வான்اللّٰهُஅல்லாஹ்الْعَذَابَவேதனையால்الْاَكْبَرَؕ‏மிகப்பெரும்
Fப யு'அத்திBபுஹுல் லாஹுல் 'அதாBபல் அக்Bபர்
அவனை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையைக் கொண்டு வேதனைப்படுத்துவான்.
اِنَّ اِلَیْنَاۤ اِیَابَهُمْ ۟ۙ
اِنَّநிச்சயமாகاِلَيْنَاۤநம் பக்கம்தான்اِيَابَهُمْۙ‏அவர்களின் திரும்புதல்
இன்னா இலய்னா இயாBபஹும்
நிச்சயமாக, நம்மிடமே அவர்களுடைய மீளுதல் இருக்கிறது.
ثُمَّ اِنَّ عَلَیْنَا حِسَابَهُمْ ۟۠
ثُمَّபிறகுاِنَّ عَلَيْنَاநிச்சயமாக நம்மீதேحِسَابَهُمْ‏அவர்களை விசாரிப்பது
தும்ம இன்ன 'அலய்னா ஹிஸாBபஹும்
பின்னர், நிச்சயமாக நம்மிடமே அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் இருக்கிறது.