8. ஸூரத்துல் அன்ஃபால்(போரில் கிடைத்த வெற்றிப்பொருள்கள்)

மதனீ, வசனங்கள்: 75

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
یَسْـَٔلُوْنَكَ عَنِ الْاَنْفَالِ ؕ قُلِ الْاَنْفَالُ لِلّٰهِ وَالرَّسُوْلِ ۚ فَاتَّقُوا اللّٰهَ وَاَصْلِحُوْا ذَاتَ بَیْنِكُمْ ۪ وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗۤ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟
يَسْــٴَــلُوْنَكَஉம்மிடம் கேட்கிறார்கள்عَنِ الْاَنْفَالِ‌ ؕஅன்ஃபால் பற்றிقُلِகூறுவீராகالْاَنْفَالُ(போரில் கிடைத்த) வெற்றிப் பொருள்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குوَالرَّسُوْلِ‌ ۚஇன்னும் தூதருக்குفَاتَّقُواஆகவே, அஞ்சுங்கள்اللّٰهَஅல்லாஹ்வைوَاَصْلِحُوْاஇன்னும் சீர்திருத்தம் செய்யுங்கள்ذَاتَ بَيْنِكُمْ‌உங்களுக்கு மத்தியில்وَاَطِيْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَرَسُوْلَهٗۤஇன்னும் அவனுடைய தூதருக்குاِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏நீங்கள் இருந்தால்/நம்பிக்கையாளர்களாக
யஸ்'அலூனக 'அனில் அன்Fபாலி குலில் அன்Fபாலு லில்லாஹி வர் ரஸூலி Fபத்தகுல் லாஹ வ அஸ்லிஹூ தாத Bபய்னிகும் வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ இன் குன்தும் மு'மினீன்
போரில் கிடைத்த வெற்றிப்பொருள்(அன்ஃபால்)களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: அன்ஃபால் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமானதாகும்; ஆகவே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்.
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اِذَا ذُكِرَ اللّٰهُ وَجِلَتْ قُلُوْبُهُمْ وَاِذَا تُلِیَتْ عَلَیْهِمْ اٰیٰتُهٗ زَادَتْهُمْ اِیْمَانًا وَّعَلٰی رَبِّهِمْ یَتَوَكَّلُوْنَ ۟ۚۖ
اِنَّمَا الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள் எல்லாம்الَّذِيْنَஎவர்கள்اِذَا ذُكِرَநினைவுகூரப்பட்டால்اللّٰهُஅல்லாஹ்வைوَجِلَتْநடுங்கும்قُلُوْبُهُمْஉள்ளங்கள்/அவர்களுடையوَاِذَا تُلِيَتْஇன்னும் ஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் முன்اٰيٰتُهٗவசனங்கள்/அவனுடையزَادَتْهُمْஅவை அதிகப்படுத்தும்/அவர்களுக்குاِيْمَانًاஇறை நம்பிக்கையைوَّعَلٰى رَبِّهِمْஇன்னும் தங்கள் இறைவன் மீதேيَتَوَكَّلُوْنَ ۖநம்பிக்கை வைப்பார்கள்
இன்னமல் மு'மினூனல் லதீன இதா துகிரல் லாஹு வஜிலத் குலூBபுஹும் வ இதா துலியத் 'அலய்ஹிம் ஆயாதுஹூ Zஜாதத் ஹும் ஈமான(ன்)வ் வ 'அலா ரBப்Bபிஹிம் யதவக்கலூன்
உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.
الَّذِیْنَ یُقِیْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟ؕ
الَّذِيْنَஎவர்கள்يُقِيْمُوْنَநிலைநிறுத்துவார்கள்الصَّلٰوةَதொழுகையைوَمِمَّاஇன்னும் எதிலிருந்துرَزَقْنٰهُمْகொடுத்தோம்/அவர்களுக்குيُنْفِقُوْنَؕ‏தர்மம் புரிவார்கள்
அல்லதீன யுகீமூனஸ் ஸலாத வ மிம்மா ரZஜக்னாஹும் யுன்Fபிகூன்
அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; அவர்களுக்கு நாம் அளித்த (செல்வத்)திலிருந்து நன்கு செலவு செய்வார்கள்.
اُولٰٓىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ؕ لَهُمْ دَرَجٰتٌ عِنْدَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟ۚ
اُولٰۤٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்حَقًّا ؕஉண்மையில்لَهُمْஅவர்களுக்குدَرَجٰتٌபல பதவிகள்عِنْدَ رَبِّهِمْஅவர்களின் இறைவனிடம்وَمَغْفِرَةٌஇன்னும் மன்னிப்புوَّرِزْقٌஇன்னும் உணவுكَرِيْمٌ‌ۚ‏கண்ணியமானது
உலா'இக ஹுமுல் மு'மினூன ஹக்கா; லஹும் தரஜாதுன் 'இன்த ரBப்Bபிஹிம் வ மக் Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
இத்தகையவர் தாம் உண்மையான முஃமின்கள் ஆவார்கள்; அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உயர் பதவிகளும், பாவ மன்னிப்பும் சங்கையான உணவும் உண்டு.
كَمَاۤ اَخْرَجَكَ رَبُّكَ مِنْ بَیْتِكَ بِالْحَقِّ ۪ وَاِنَّ فَرِیْقًا مِّنَ الْمُؤْمِنِیْنَ لَكٰرِهُوْنَ ۟ۙ
كَمَاۤபோன்றேاَخْرَجَكَவெளியேற்றினான்/உம்மைرَبُّكَஉம் இறைவன்مِنْۢஇருந்துبَيْتِكَஉம் இல்லம்بِالْحَـقِّசத்தியத்தைக் கொண்டுوَاِنَّநிச்சயமாகفَرِيْقًاஒரு பிரிவினர்مِّنَ الْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களில்لَـكٰرِهُوْنَۙ‏வெறுப்பவர்களே
கமா அக்ரஜக ரBப்Bபுக மிம் Bபய்திக Bபில்ஹக்க்; வ இன்ன Fபரீகம் மினல் மு'மினீன லகாரிஹூன்
(நபியே!) உம் இறைவன் உம்மை உம் வீட்டைவிட்டு சத்தியத்தைக் கொண்டு (பத்ரு களம் நோக்கி) வெளியேற்றிய போது முஃமின்களில் ஒரு பிரிவினர் (உம்முடன் வர இணக்கமில்லாது) வெறுத்துக் கொண்டிருந்தது போல.
یُجَادِلُوْنَكَ فِی الْحَقِّ بَعْدَ مَا تَبَیَّنَ كَاَنَّمَا یُسَاقُوْنَ اِلَی الْمَوْتِ وَهُمْ یَنْظُرُوْنَ ۟ؕ
يُجَادِلُوْنَكَதர்க்கிக்கின்றனர்/உம்முடன்فِى الْحَـقِّஉண்மையில்بَعْدَபின்னர்مَا تَبَيَّنَதெளிவானதுكَاَنَّمَاபோன்றுيُسَاقُوْنَஓட்டிச் செல்லப்படுகிறார்கள்اِلَىபக்கம்الْمَوْتِமரணம்وَهُمْஅவர்கள் இருக்கيَنْظُرُوْنَؕ‏பார்ப்பவர்களாக
யுஜாதிலூனக Fபில் ஹக்கி Bபஃத மா தBபய்யன க'அன்னமா யஸாகூன இலல் மவ்தி வ ஹும் யன்ளுரூன்
அவர்களுக்கு தெளிவான பின்னரும் சத்தியத்தில் அவர்கள் உம்முடன் விவாதம் செய்கின்றனர்; அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே யாரோ அவர்களை மரணத்தின்பால் இழுத்துக் கொண்டு செல்வது போன்று (நினைக்கின்றார்கள்).
وَاِذْ یَعِدُكُمُ اللّٰهُ اِحْدَی الطَّآىِٕفَتَیْنِ اَنَّهَا لَكُمْ وَتَوَدُّوْنَ اَنَّ غَیْرَ ذَاتِ الشَّوْكَةِ تَكُوْنُ لَكُمْ وَیُرِیْدُ اللّٰهُ اَنْ یُّحِقَّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَیَقْطَعَ دَابِرَ الْكٰفِرِیْنَ ۟ۙ
وَاِذْசமயம்يَعِدُكُمُவாக்களித்தான்/உங்களுக்குاللّٰهُஅல்லாஹ்اِحْدَىஒன்றைالطَّآٮِٕفَتَيْنِஇரு கூட்டங்களில்اَنَّهَاநிச்சயம் அதுلَـكُمْஉங்களுக்குوَتَوَدُّوْنَவிரும்பினீர்கள்اَنَّநிச்சயமாகغَيْرَஅல்லாததுذَاتِஉடையதுالشَّوْكَةِஆயுதம் (பலம்)تَكُوْنُஆகவேண்டும்لَـكُمْஉங்களுக்குوَيُرِيْدُஇன்னும் நாடுகிறான்اللّٰهُஅல்லாஹ்اَنْ يُّحِقَّஉண்மைப்படுத்தالْحَـقَّஉண்மையைبِكَلِمٰتِهٖதன் வாக்குகளைக் கொண்டுوَيَقْطَعَஇன்னும் துண்டித்துவிடدَابِرَவேரைالْـكٰفِرِيْنَۙ‏நிராகரிப்பவர்கள்
வ இத் ய'இதுகுமுல் லாஹு இஹ்தத் தா'இFபதய்னி அன்னஹா லகும் வ தவத்தூன அன்ன கய்ர தாதிஷ் ஷவ்கதி தகூனு லகும் வ யுரீதுல் லாஹு அய் யுஹிக்கல் ஹக்க Bபிகலிமாதிஹீ வ யக்த'அ தாBபிரல் காFபிரீன்
(அபூஸுஃப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம் அபூஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்; (ஆனால்) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும் காஃபிர்களை வேரறுக்கவுமே நாடுகிறான்.
لِیُحِقَّ الْحَقَّ وَیُبْطِلَ الْبَاطِلَ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ۟ۚ
لِيُحِقَّஅவன் உண்மைப்படுத்தالْحَـقَّஉண்மையைوَيُبْطِلَஇன்னும் அழித்துவிட, பெய்ப்பித்து விடالْبَاطِلَபொய்யைوَلَوْ كَرِهَவெறுத்தாலும்الْمُجْرِمُوْنَ‌ۚ‏பாவிகள், குற்றவாளிகள்
லியுஹிக்கல் ஹக்க வ யுBப்திலல் Bபாதில வ லவ் கரிஹல் முஜ்ரிமூன்
மேலும் குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து ஹக்கை-உண்மையை - நிலைநாட்டவே (நாடுகிறான்).
اِذْ تَسْتَغِیْثُوْنَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ اَنِّیْ مُمِدُّكُمْ بِاَلْفٍ مِّنَ الْمَلٰٓىِٕكَةِ مُرْدِفِیْنَ ۟
اِذْசமயம்تَسْتَغِيْثُوْنَநீங்கள் பாதுகாப்புத் தேடுகிறீர்கள்رَبَّكُمْஉங்கள் இறைவனிடம்فَاسْتَجَابَபதிலளித்தான்لَـكُمْஉங்களுக்குاَنِّىْநிச்சயமாக நான்مُمِدُّஉதவுவேன்كُمْஉங்களுக்குبِاَلْفٍஆயிரத்தைக்கொண்டுمِّنَ الْمَلٰۤٮِٕكَةِவானவர்களில்مُرْدِفِيْنَ‏தொடர்ந்து வரக்கூடியவர்கள்
இத் தஸ்தகீதூன ரBப்Bபகும் Fபஸ்தஜாBப லகும் அன்னீ முமித்துகும் Bபி அல்Fபிம் மினல் மலா'இகதி முர்திFபீன்
(நினைவு கூறுங்கள்:) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது: “(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்” என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.
وَمَا جَعَلَهُ اللّٰهُ اِلَّا بُشْرٰی وَلِتَطْمَىِٕنَّ بِهٖ قُلُوْبُكُمْ ۚ وَمَا النَّصْرُ اِلَّا مِنْ عِنْدِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠
وَمَاஇல்லைجَعَلَهُஅதை ஆக்கاللّٰهُஅல்லாஹ்اِلَّاதவிரبُشْرٰىஒரு நற்செய்தியாகوَلِتَطْمَٮِٕنَّஇன்னும் நிம்மதி பெறுவதற்காகبِهٖஅதன் மூலம்قُلُوْبُكُمْ‌ۚஉங்கள் உள்ளங்கள்وَمَاஇல்லைالنَّصْرُஉதவிاِلَّاதவிரمِنْஇருந்தேعِنْدِ اللّٰهِ‌ؕஅல்லாஹ்விடம்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
வமா ஜ'அலஹுல் லாஹு இல்லா Bபுஷ்ரா வ லிதத்ம'இன்ன Bபிஹீ குலூBபுகும்; வ மன் னஸ்ரு இல்லா மின் 'இன்தில் லாஹ்; இன்னல் லாஹ அZஜீZஜுன் ஹகீம்
உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.  
اِذْ یُغَشِّیْكُمُ النُّعَاسَ اَمَنَةً مِّنْهُ وَیُنَزِّلُ عَلَیْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّیُطَهِّرَكُمْ بِهٖ وَیُذْهِبَ عَنْكُمْ رِجْزَ الشَّیْطٰنِ وَلِیَرْبِطَ عَلٰی قُلُوْبِكُمْ وَیُثَبِّتَ بِهِ الْاَقْدَامَ ۟ؕ
اِذْசமயம்يُغَشِّيْكُمُசூழவைக்கிறான்/உங்கள் மீதுالنُّعَاسَசிறு தூக்கத்தைاَمَنَةًஅச்சமற்றிருப்பதற்காகمِّنْهُதன் புறத்திலிருந்துوَيُنَزِّلُஇன்னும் இறக்குகிறான்عَلَيْكُمْஉங்கள் மீதுمِّنَஇருந்துالسَّمَآءِவானம்,மேகம்مَآءًநீரை, மழையைلِّيُطَهِّرَஅவன் சுத்தப்படுத்துவற்காகكُمْஉங்களைبِهٖஅதன் மூலம்وَيُذْهِبَஇன்னும் அவன் போக்குவதற்காகعَنْكُمْஉங்களை விட்டுرِجْزَஅசுத்தத்தைالشَّيْطٰنِஷைத்தானுடையوَلِيَرْبِطَஇன்னும் அவன் பலப்படுத்துவதற்காகعَلٰى قُلُوْبِكُمْஉங்கள் உள்ளங்களைوَيُثَبِّتَஇன்னும் அவன் உறுதிபடுத்துவதற்காகبِهِஅதன் மூலம்الْاَقْدَامَؕ‏பாதங்களை
இத் யுகஷ்ஷீகுமுன் னு'அஸ்ஸ அமனதம் மின்ஹு வ யுனZஜ்Zஜிலு 'அலய்கும் மினஸ் ஸமா'இ மா'அல் லியுதஹ் ஹிரகும் Bபிஹீ வ யுத்ஹிBப 'அன்கும் ரிஜ்Zஜஷ் ஷய்தானி வ லியர்Bபித 'அல குலூBபிகும் வ யுதBப்Bபித Bபிஹில் அக்தாம்
(நினைவு கூறுங்கள்:) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.
اِذْ یُوْحِیْ رَبُّكَ اِلَی الْمَلٰٓىِٕكَةِ اَنِّیْ مَعَكُمْ فَثَبِّتُوا الَّذِیْنَ اٰمَنُوْا ؕ سَاُلْقِیْ فِیْ قُلُوْبِ الَّذِیْنَ كَفَرُوا الرُّعْبَ فَاضْرِبُوْا فَوْقَ الْاَعْنَاقِ وَاضْرِبُوْا مِنْهُمْ كُلَّ بَنَانٍ ۟ؕ
اِذْசமயம்يُوْحِىْவஹீ அறிவிக்கிறான்رَبُّكَஉம் இறைவன்اِلَى الْمَلٰۤٮِٕكَةِவானவர்களுக்குاَنِّىْநிச்சயமாக நான்مَعَكُمْஉங்களுடன்فَثَبِّتُواஆகவே உறுதிப்படுத்துங்கள்الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْا‌ ؕநம்பிக்கை கொண்டார்கள்سَاُلْقِىْபோடுவேன்فِىْ قُلُوْبِஉள்ளங்களில்الَّذِيْنَஎவர்கள்كَفَرُواநிராகரித்தனர்الرُّعْبَதிகிலைفَاضْرِبُوْاஆகவே நீங்கள் வெட்டுங்கள்فَوْقَமேல்الْاَعْنَاقِகழுத்துகள்وَاضْرِبُوْاஇன்னும் வெட்டுங்கள்مِنْهُمْஅவர்களின்كُلَّ بَنَانٍؕ‏எல்லா கணுக்களை
இத் யூஹீ ரBப்Bபுக இலல் மலா'இகதி அன்னீ ம'அகும் FபதBப்Bபிதுல் லதீன ஆமனூ; ஸ உல்கீ Fபீ குலூBபில் லதீன கFபருர் ருஃBப Fபள்ரிBபூ Fபவ்கல் அஃனாகி வள்ரிBபூ மின்ஹும் குல்ல Bபனான்
(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி: “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்” என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.
ذٰلِكَ بِاَنَّهُمْ شَآقُّوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ۚ وَمَنْ یُّشَاقِقِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَاِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
ذٰ لِكَ بِاَنَّهُمْஅதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்شَآ قُّواபிளவுபட்டனர், முரண்பட்டனர்اللّٰهَஅல்லாஹ்விற்குوَرَسُوْلَهٗ‌ ۚஇன்னும் அவனுடைய தூதருக்குوَمَنْஎவர்يُّشَاقِقِபிளவுபடுகிறார்اللّٰهَஅல்லாஹ்விற்குوَرَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதருக்குفَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்شَدِيْدُகடுமையானவன்الْعِقَابِ‏தண்டிப்பதில்
தாலிக Bபி அன்னஹும் ஷாக்குல் லாஹ வ ரஸூலஹ்; வ மய் யுஷகிகில் லாஹ வ ரஸூலஹூ Fப இன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
இதற்கு காரணம்: நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.
ذٰلِكُمْ فَذُوْقُوْهُ وَاَنَّ لِلْكٰفِرِیْنَ عَذَابَ النَّارِ ۟
ذٰ لِكُمْஅதுفَذُوْقُوْهُஅதை சுவையுங்கள்وَاَنَّநிச்சயமாகلِلْكٰفِرِيْنَநிராகரிப்பவர்களுக்குعَذَابَவேதனைالنَّارِ‏நரகம்
தாலிகும் Fபதூகூஹு வ அன்ன லில்காFபிரீன 'அதாBபன் னார்
“இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு” என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِیْتُمُ الَّذِیْنَ كَفَرُوْا زَحْفًا فَلَا تُوَلُّوْهُمُ الْاَدْبَارَ ۟ۚ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِذَا لَقِيْتُمُநீங்கள் சந்தித்தால்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்زَحْفًاபெரும் படையாகفَلَا تُوَلُّوْதிருப்பாதீர்கள்هُمُஅவர்களுக்குالْاَدْبَارَ‌ۚ‏பின்புறங்களை
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா லகீதுமுல் லதீன கFபரூ Zஜஹ்Fபன் Fபலா துவல்லூஹுமுல் அத்Bபார்
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.
وَمَنْ یُّوَلِّهِمْ یَوْمَىِٕذٍ دُبُرَهٗۤ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوْ مُتَحَیِّزًا اِلٰی فِئَةٍ فَقَدْ بَآءَ بِغَضَبٍ مِّنَ اللّٰهِ وَمَاْوٰىهُ جَهَنَّمُ ؕ وَبِئْسَ الْمَصِیْرُ ۟
وَمَنْஎவர்يُّوَلِّهِمْதிருப்புவார்/அவர்களுக்குيَوْمَٮِٕذٍஅந்நாளில்دُبُرَهٗۤதன் பின் புறத்தைاِلَّاஅல்லாமல்مُتَحَرِّفًاஒதுங்கக்கூடியவராகلِّقِتَالٍசண்டையிடுவதற்குاَوْஅல்லதுمُتَحَيِّزًاசேர்ந்து கொள்பவராகاِلٰى فِئَةٍஒரு கூட்டத்துடன்فَقَدْ بَآءَசார்ந்துவிட்டார்بِغَضَبٍகோபத்தில்مِّنَ اللّٰهِஅல்லாஹ்வின்وَمَاْوٰٮهُஇன்னும் அவருடைய தங்குமிடம்جَهَـنَّمُ‌ؕநரகம்وَبِئْسَஇன்னும் கெட்டு விட்டதுالْمَصِيْرُ‏மீளுமிடத்தால்
வ மய் யுவல்லிஹிம் யவ்ம'இதின் துBபுரஹூ இல்லா முதஹர்ரிFபல் லிகிதாலின் அவ் முதஹய்யிZஜன் இலா Fபி'அதின் Fபகத் Bபா'அ BபிகளBபிம் மினல் லாஹி வ ம'வாஹு ஜஹன்னமு வ Bபி'ஸல் மஸீர்
(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே; இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.
فَلَمْ تَقْتُلُوْهُمْ وَلٰكِنَّ اللّٰهَ قَتَلَهُمْ ۪ وَمَا رَمَیْتَ اِذْ رَمَیْتَ وَلٰكِنَّ اللّٰهَ رَمٰی ۚ وَلِیُبْلِیَ الْمُؤْمِنِیْنَ مِنْهُ بَلَآءً حَسَنًا ؕ اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
فَلَمْ تَقْتُلُوْநீங்கள் கொல்லவில்லைهُمْஅவர்களைوَلٰـكِنَّஎன்றாலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்قَتَلَهُمْகொன்றான்/அவர்களைوَمَا رَمَيْتَநீர் எறியவில்லைاِذْபோதுرَمَيْتَஎறிந்தீர்وَ لٰـكِنَّஎன்றாலும் நிச்சயமாகاللّٰهَ رَمٰى‌ ۚஅல்லாஹ்/எறிந்தான்وَلِيُبْلِىَஇன்னும் அவன் சோதிப்பதற்காகالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களைمِنْهُஅதன் மூலம்بَلَاۤءًசோதனையாகحَسَنًا‌ ؕஅழகியاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
Fபலம் தக்துலூஹும் வ லாகின்னல் லாஹ கதலஹும்; வமா ரமய்த இத் ரமய்த வ லாகின்னல் லாஹ ரமா; வ லியுBப்லியல் மு'மினீன மின்ஹு Bபலா'அன் ஹஸனா; இன்னல் லாஹ ஸமீ'உன் அலீம்
(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.
ذٰلِكُمْ وَاَنَّ اللّٰهَ مُوْهِنُ كَیْدِ الْكٰفِرِیْنَ ۟
ذٰ لِكُمْஅவைوَاَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مُوْهِنُபலவீனப்படுத்துபவன்كَيْدِசூழ்ச்சியைالْـكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களின்
தாலிகும் வ அன்னல் லாஹ மூஹினு கய்தில் காFபிரீன்
இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)
اِنْ تَسْتَفْتِحُوْا فَقَدْ جَآءَكُمُ الْفَتْحُ ۚ وَاِنْ تَنْتَهُوْا فَهُوَ خَیْرٌ لَّكُمْ ۚ وَاِنْ تَعُوْدُوْا نَعُدْ ۚ وَلَنْ تُغْنِیَ عَنْكُمْ فِئَتُكُمْ شَیْـًٔا وَّلَوْ كَثُرَتْ ۙ وَاَنَّ اللّٰهَ مَعَ الْمُؤْمِنِیْنَ ۟۠
اِنْ تَسْتَفْتِحُوْاநீங்கள் தீர்ப்புத் தேடினால்فَقَدْ جَآءَவந்துவிட்டதுكُمُஉங்களுக்குالْفَتْحُ‌ۚதீர்ப்புوَاِنْ تَنْتَهُوْاநீங்கள் விலகினால்فَهُوَ خَيْرٌஅது சிறந்ததுلَّـكُمْ‌ۚஉங்களுக்குوَ اِنْ تَعُوْدُوْاநீங்கள் திரும்பினால்نَـعُدْ‌ۚதிரும்புவோம்وَلَنْ تُغْنِىَபலனளிக்காதுعَنْكُمْஉங்களுக்குفِئَتُكُمْஉங்கள் கூட்டம்شَيْـٴًـــاஎதையும்وَّلَوْ كَثُرَتْۙஅது அதிகமாக இருந்தாலும்وَاَنَّஇன்னும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَعَஉடன்الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்கள்
இன் தஸ்தFப்திஹூ Fபகத் ஜா'அகுமுல் Fபத்ஹு வ இன் தன்தஹூ Fபஹுவ கய்ருல் லகும் வ இன் த'ஊதூ ன'உத் வ லன் துக்னிய 'அன்கும் Fபி'அதுகும் ஷய்'அ(ன்)வ் வ லவ் கதுரத் வ அன்னல் லாஹ ம'அல் மு'மினீன்
(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது; இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَاَنْتُمْ تَسْمَعُوْنَ ۟ۚۖ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاَطِيْعُواகீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்விற்குوَرَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதருக்குوَلَا تَوَلَّوْاவிலகாதீர்கள்عَنْهُஅவரை விட்டுوَاَنْـتُمْநீங்கள் இருக்கتَسْمَعُوْنَ‌ ۚ‏செவிமடுப்பவர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ வலா தவல்லவ் 'அன்ஹு வ அன்தும் தஸ்ம'ஊன்
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ قَالُوْا سَمِعْنَا وَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟
وَلَا تَكُوْنُوْاஆகிவிடாதீர்கள்كَالَّذِيْنَஎவர்களைப் போல்قَالُوْاகூறினர்سَمِعْنَاசெவியுற்றோம்وَهُمْஅவர்கள் இருக்கلَا يَسْمَعُوْنَ‌‏செவியேற்காதவர்களாக
வ லா தகூனூ கல்லதீன காலூ ஸமிஃனா வ ஹும் லா யஸ்ம'ஊன்
(மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, “நாங்கள் செவியுற்றோம்” என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.
اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الصُّمُّ الْبُكْمُ الَّذِیْنَ لَا یَعْقِلُوْنَ ۟
اِنَّநிச்சயமாகشَرَّமிகக் கொடூரமானவர்(கள்)الدَّوَآبِّஊர்வனவற்றில்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்الصُّمُّசெவிடர்கள்الْبُكْمُஊமைகளானالَّذِيْنَ لَا يَعْقِلُوْنَ‏எவர்கள்/சிந்தித்து புரியமாட்டார்கள்
இன்ன ஷர்ரத் தவாBப்Bபி 'இன்தல் லாஹிஸ் ஸும்முல் Bபுக்முல் லதீன லா யஃகிலூன்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.
وَلَوْ عَلِمَ اللّٰهُ فِیْهِمْ خَیْرًا لَّاَسْمَعَهُمْ ؕ وَلَوْ اَسْمَعَهُمْ لَتَوَلَّوْا وَّهُمْ مُّعْرِضُوْنَ ۟
وَلَوْ عَلِمَஅறிந்திருந்தால்اللّٰهُஅல்லாஹ்فِيْهِمْஅவர்களிடம்خَيْرًاஒரு நன்மையைلَّاَسْمَعَهُمْ‌ؕசெவியுறச் செய்திருப்பான்/அவர்களைوَلَوْ اَسْمَعَهُمْஅவன் அவர்களை செவியுறச் செய்தாலும்لَـتَوَلَّوْاவிலகி இருப்பார்கள்وَّهُمْஅவர்கள் இருக்கمُّعْرِضُوْنَ‏புறக்கணிப்பவர்களாக
வ லவ் 'அலிமல் லாஹு Fபீஹிம் கய்ரல் ல அஸ்ம'அஹும்; வ லவ் அஸ்ம'அஹும் லதவல்லவ் வ ஹும் முஃரிளூன்
அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اسْتَجِیْبُوْا لِلّٰهِ وَلِلرَّسُوْلِ اِذَا دَعَاكُمْ لِمَا یُحْیِیْكُمْ ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَحُوْلُ بَیْنَ الْمَرْءِ وَقَلْبِهٖ وَاَنَّهٗۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கையாளர்களேاسْتَجِيْبُوْاபதிலளியுங்கள்لِلّٰهِஅல்லாஹ்வுக்குوَلِلرَّسُوْلِஇன்னும் தூதருக்குاِذَا دَعَاஅழைத்தால்كُمْஉங்களைلِمَاஎதற்குيُحْيِيْكُمْ‌ۚவாழவைக்கும்/உங்களைوَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَحُوْلُதடையாகிறான்بَيْنَநடுவில்الْمَرْءِமனிதனுக்குوَقَلْبِهٖஇன்னும் அவனுடைய உள்ளத்திற்குوَاَنَّهٗۤஇன்னும் நிச்சயமாக நீங்கள்اِلَيْهِஅவனிடமேتُحْشَرُوْنَ‏ஒன்று திரட்டப்படுவீர்கள்
யா அய்யுஹல் லதீன ஆமனுஸ் தஜீBபூ லில்லாஹி வ லிர் ரஸூலி இதா த'ஆகும் லிமா யுஹ்யீகும் வஃலமூ அன்னல் லாஹ யஹூலு Bபய்னல் மர்'இ வ கல்Bபிஹீ வ அன்னஹூ இலய்ஹி துஹ்ஷரூன்
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.
وَاتَّقُوْا فِتْنَةً لَّا تُصِیْبَنَّ الَّذِیْنَ ظَلَمُوْا مِنْكُمْ خَآصَّةً ۚ وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟
وَاتَّقُوْاஅஞ்சுங்கள்فِتْنَةًஒரு வேதனையைلَّا تُصِيْبَنَّஅடையாதுالَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்களைمِنْكُمْஉங்களில்خَآصَّةً‌ ۚமட்டுமேوَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِيْدُகடுமையானவன்الْعِقَابِ‏தண்டிப்பதில்
வத்தகூ Fபித்னதல் லா துஸீBபன்னல் லதீன ளலமூ மின்கும் காஸ்ஸத் வ'லமூ அன்னல் லாஹ ஷதீதுல் 'இகாBப்
நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
وَاذْكُرُوْۤا اِذْ اَنْتُمْ قَلِیْلٌ مُّسْتَضْعَفُوْنَ فِی الْاَرْضِ تَخَافُوْنَ اَنْ یَّتَخَطَّفَكُمُ النَّاسُ فَاٰوٰىكُمْ وَاَیَّدَكُمْ بِنَصْرِهٖ وَرَزَقَكُمْ مِّنَ الطَّیِّبٰتِ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَاذْكُرُوْۤاநினைவு கூருங்கள்اِذْ(இருந்த) சமயத்தைاَنْـتُمْநீங்கள்قَلِيْلٌகுறைவானவர்களாகمُّسْتَضْعَفُوْنَபலவீனர்களாகفِى الْاَرْضِபூமியில்تَخَافُوْنَபயந்தவர்களாகاَنْஉங்களைيَّتَخَطَّفَكُمُதாக்கிவிடுவதைالنَّاسُமக்கள்فَاٰوٰٮكُمْஅவன் இடமளித்தான்/உங்களுக்குوَاَيَّدَكُمْபலப்படுத்தினான்/உங்களைبِنَصْرِهٖதன் உதவியைக் கொண்டுوَرَزَقَكُمْஉணவளித்தான்/உங்களுக்குمِّنَ الطَّيِّبٰتِநல்ல உணவுகளில்لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
வத்குரூ இத் அன்தும் கலீலும் முஸ்தள் 'அFபூன Fபிலர்ளி தகாFபூன அய் யதகத் தFபகுமுன் னாஸு Fப ஆவாகும் வ அய்யதகும் Bபினஸ்ரிஹீ வ ரZஜககும் மினத் தய்யிBபாதி ல'அல்லகும் தஷ்குரூன்
“நீங்கள் பூமியில் (மக்காவில்) சிறு தொகையினராகவும், பலஹீனர்களாகவும் இருந்த நிலையில், உங்களை (எந்த நேரத்திலும்) மனிதர்கள் இறாஞ்சிக் கொண்டு சென்று விடுவார்கள் என்று நீங்கள் பயப்பட்டுக் கொண்டிருந்த போது அவன் உங்களுக்கு (மதீனாவில்) புகலிடம் அளித்துத் தன் உதவியைக் கொண்டு உங்களை பலப்படுத்தினான் - இன்னும் பரிசுத்தமான ஆகாரங்களையும் அவன் உங்களுக்கு அளித்தான்; இவற்றை நினைவு கூர்ந்து (அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக!”
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَخُوْنُوا اللّٰهَ وَالرَّسُوْلَ وَتَخُوْنُوْۤا اَمٰنٰتِكُمْ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْاநம்பிக்கையாளர்களேلَا تَخُوْنُواமோசம்செய்யாதீர்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்குوَالرَّسُوْلَஇன்னும் தூதருக்குوَتَخُوْنُوْۤاஇன்னும் மோசம் செய்யாதீர்கள்اَمٰنٰتِكُمْஅமானிதங்களுக்கு/உங்கள்وَاَنْـتُمْநீங்கள் இருக்கتَعْلَمُوْنَ‏அறிந்தவர்களாக
யா அய்யுஹல் லதீன ஆமனூ லா தகூனல் லாஹ வர் ரஸூல வ தகூனூ அமானாதிகும் வ அன்தும் தஃலமூன்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள்; நீங்கள் அறிந்து கொண்டே, உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்.
وَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اَمْوَالُكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ ۙ وَّاَنَّ اللّٰهَ عِنْدَهٗۤ اَجْرٌ عَظِیْمٌ ۟۠
وَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّمَاۤஎல்லாம்اَمْوَالُكُمْசெல்வங்கள்/உங்கள்وَاَوْلَادُكُمْஇன்னும் சந்ததிகள்/உங்கள்فِتْنَةٌ  ۙஒரு சோதனைوَّاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்عِنْدَهٗۤஅவனிடம்தான்اَجْرٌகூலிعَظِيْمٌ‏மகத்தானது
வஃலமூ அன்னமா அம்வாலுகும் வ அவ்லாதுகும் Fபித்னது(ன்)வ் வ அன்னல் லாஹ 'இன்தஹூ அஜ்ருன் அளீம்
“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِنْ تَتَّقُوا اللّٰهَ یَجْعَلْ لَّكُمْ فُرْقَانًا وَّیُكَفِّرْ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களேاِنْ تَتَّقُواஅஞ்சினால்اللّٰهَஅல்லாஹ்வைيَجْعَلْஏற்படுத்துவான்لَّـكُمْஉங்களுக்குفُرْقَانًاஒரு வித்தியாசத்தைوَّيُكَفِّرْஇன்னும் அகற்றி விடுவான்عَنْكُمْஉங்களை விட்டுسَيِّاٰتِكُمْஉங்கள் பாவங்களைوَيَغْفِرْஇன்னும் மன்னிப்பான்لَـكُمْ‌ؕஉங்களைوَ اللّٰهُஅல்லாஹ்ذُو الْفَضْلِஅருளுடையவன்الْعَظِيْمِ‏மகத்தானது
யா அய்யுஹல் லதீன ஆமனூ இன் தத்தகுல் லாஹ யஜ்'அல் லகும் Fபுர்கான(ன்)வ் வ யுகFப்Fபிர் 'அன்கும் ஸய்யி ஆதிகும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு துல் Fபள்லில் 'அளீம்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான்; இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான்; ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன்.
وَاِذْ یَمْكُرُ بِكَ الَّذِیْنَ كَفَرُوْا لِیُثْبِتُوْكَ اَوْ یَقْتُلُوْكَ اَوْ یُخْرِجُوْكَ ؕ وَیَمْكُرُوْنَ وَیَمْكُرُ اللّٰهُ ؕ وَاللّٰهُ خَیْرُ الْمٰكِرِیْنَ ۟
وَاِذْசமயம்يَمْكُرُசூழ்ச்சி செய்வார்(கள்)بِكَஉமக்குالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்لِيُثْبِتُوْكَஅவர்கள் சிறைப்படுத்த/உம்மைاَوْஅல்லதுيَقْتُلُوْكَஉம்மை அவர்கள் கொல்லاَوْஅல்லதுيُخْرِجُوْكَ‌ؕஅவர்கள் வெளியேற்ற/உம்மைوَيَمْكُرُوْنَஇன்னும் சூழ்ச்சி செய்கின்றனர்وَيَمْكُرُஇன்னும் சூழ்ச்சி செய்கிறான்اللّٰهُ‌ؕஅல்லாஹ்وَاللّٰهُஅல்லாஹ்خَيْرُமிகச் சிறந்தவன்الْمٰكِرِيْنَ‏சூழ்ச்சி செய்பவர்களில்
வ இத் யம்குரு Bபிகல் லதீன கFபரூ லியுத்Bபிதூக அவ் யக்துலூக அவ் யுக்ரிஜூக்; வ யம்குரூன வ யம்குருல் லாஹு வல்லாஹு கய்ருல் மாகிரீன்
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்.
وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیٰتُنَا قَالُوْا قَدْ سَمِعْنَا لَوْ نَشَآءُ لَقُلْنَا مِثْلَ هٰذَاۤ ۙ اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟
وَاِذَا تُتْلٰىஓதப்பட்டால்عَلَيْهِمْஅவர்கள் மீதுاٰيٰتُنَاநம் வசனங்கள்قَالُوْاகூறுகின்றனர்قَدْ سَمِعْنَاசெவியேற்று விட்டோம்لَوْ نَشَآءُநாம் நாடியிருந்தால்لَـقُلْنَاகூறியிருப்போம்مِثْلَ هٰذَٓا‌ ۙஇது போன்றுاِنْ هٰذَاۤ اِلَّاۤஇவை இல்லை/தவிரاَسَاطِيْرُகட்டுக் கதைகளேالْاَوَّلِيْنَ‏முன்னோரின்
வ இதா துத்லா 'அலய்ஹிம் ஆயாதுனா காலூ கத் ஸமிஃனா லவ் னஷா'உ லகுல்னா மித்ல ஹாதா இன் ஹாதா இல்லா அஸாதீருல் அவ்வலீன்
அவர்கள் மீது நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள், “நாம் நிச்சயமாக இவற்றை (முன்னரே) கேட்டிருக்கின்றோம்; நாங்கள் நாடினால் இதைப் போல் சொல்லிவிடுவோம்; இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை” என்று சொல்கிறார்கள்.
وَاِذْ قَالُوا اللّٰهُمَّ اِنْ كَانَ هٰذَا هُوَ الْحَقَّ مِنْ عِنْدِكَ فَاَمْطِرْ عَلَیْنَا حِجَارَةً مِّنَ السَّمَآءِ اَوِ ائْتِنَا بِعَذَابٍ اَلِیْمٍ ۟
وَاِذْசமயம்قَالُواகூறினர்اللّٰهُمَّஅல்லாஹ்வேاِنْ كَانَஇருக்குமேயானால்هٰذَا هُوَஇதுதான்الْحَـقَّஉண்மையாகمِنْ عِنْدِكَஉன்னிடமிருந்துفَاَمْطِرْபொழிعَلَيْنَاஎங்கள் மீதுحِجَارَةًகல்லைمِّنَ السَّمَآءِவானத்திலிருந்துاَوِஅல்லதுائْتِنَاஎங்களிடம் வாبِعَذَابٍவேதனையைக் கொண்டுاَ لِيْمٍ‏துன்புறுத்தும்
வ இத் காலுல் லாஹும்ம இன் கான ஹாதா ஹுவல் ஹக்க மின் 'இன்திக Fப அம்திர் 'அலய்னா ஹிஜாரதம் மினஸ் ஸமா'இ அவி'தினா Bபி 'அதாBபின் அலீம்
(இன்னும் நிராகரிப்போர்:) “அல்லாஹ்வே! இது உன்னிடமிருந்து வந்த உண்மையானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மாரி பெய்யச் செய், அல்லது எங்களுக்கு நோவினைமிக்க வேதனையை அனுப்பு!” என்று கூறினார்கள் (அதையும் நபியே! நீர் நினைவு கூறும்).
وَمَا كَانَ اللّٰهُ لِیُعَذِّبَهُمْ وَاَنْتَ فِیْهِمْ ؕ وَمَا كَانَ اللّٰهُ مُعَذِّبَهُمْ وَهُمْ یَسْتَغْفِرُوْنَ ۟
وَمَا كَانَஇல்லைاللّٰهُஅல்லாஹ்لِيُعَذِّبَهُمْஅவர்களை வேதனை செய்பவனாகوَاَنْتَநீர் இருக்கفِيْهِمْ‌ؕஅவர்களுடன்وَمَا كَانَஇல்லைاللّٰهُஅல்லாஹ்مُعَذِّبَهُمْவேதனை செய்பவனாக/அவர்களைوَهُمْஅவர்கள் இருக்கيَسْتَغْفِرُوْنَ‏மன்னிப்புத் தேடுபவர்களாக
வமா கானல் லாஹு லியு'அத் திBபஹும் வ அன்த Fபீஹிம்; வமா கானல் லாஹு மு'அத் திBபஹும் வ ஹும் யஸ்தக்Fபிரூன்
ஆனால் நீர் அவர்களிடையே இருக்கும் வரையிலும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்ய மாட்டான்; மேலும் அவர்கள் பாவமன்னிப்பைக் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை.
وَمَا لَهُمْ اَلَّا یُعَذِّبَهُمُ اللّٰهُ وَهُمْ یَصُدُّوْنَ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ وَمَا كَانُوْۤا اَوْلِیَآءَهٗ ؕ اِنْ اَوْلِیَآؤُهٗۤ اِلَّا الْمُتَّقُوْنَ وَلٰكِنَّ اَكْثَرَهُمْ لَا یَعْلَمُوْنَ ۟
وَمَاஎன்ன?لَهُمْஅவர்களுக்குاَلَّا يُعَذِّبَهُمُ(அவன்) வேதனை செய்யாமலிருக்க / அவர்களைاللّٰهُஅல்லாஹ்وَهُمْஅவர்களோيَصُدُّوْنَதடுக்கின்றனர்عَنِ الْمَسْجِدِமஸ்ஜிதை விட்டுالْحَـرَامِபுனிதமானதுوَمَا كَانُوْۤاஅவர்கள் இல்லைاَوْلِيَآءَهٗ‌ ؕஅதன் பொறுப்பாளர்களாகاِنْஇல்லைاَوْلِيَآؤُهٗۤஅதன் பொறுப்பாளர்கள்اِلَّاதவிரالْمُتَّقُوْنَஇறை அச்சமுள்ளவர்கள்وَلٰـكِنَّஎனினும் நிச்சயமாகاَكْثَرَஅதிகமானோர்هُمْஅவர்களில்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வமா லஹும் அல்லா யு'அத் திBபஹுமுல் லாஹு வ ஹும் யஸுத்தூன 'அனில் மஸ்ஜிதில்-ஹராமி வமா கானூ அவ்லியா'அஹ்; இன் அவ்லியா' உஹூ இல்லல் முத்தகூன வ லாகின்ன அக்தரஹும் லா யஃலமூன்
(இக்காரணங்கள் இல்லாது) அல்லாஹ் அவர்களை வேதனை செய்யாமலிருக்க (வேறு காரணம்) என்ன இருக்கிறது? அவர்கள் (கஃபாவின்) காரியஸ்தர்களாக இல்லாத நிலையில் அந்த சங்கையான பள்ளிக்கு (மக்கள் செல்வதை)த் தடுக்கின்றனர்; அதன் காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இருக்கமுடியாது; எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதனை) அறியமாட்டார்கள்.
وَمَا كَانَ صَلَاتُهُمْ عِنْدَ الْبَیْتِ اِلَّا مُكَآءً وَّتَصْدِیَةً ؕ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ ۟
وَمَا كَانَஇருக்கவில்லைصَلَاتُهُمْவழிபாடு/அவர்களுடையعِنْدَஅருகில்الْبَيْتِஇறை ஆலயம்اِلَّاதவிரمُكَآءًசீட்டியடிப்பதுوَّتَصْدِيَةً‌  ؕஇன்னும் கை தட்டுவதுفَذُوْقُواசுவையுங்கள்الْعَذَابَவேதனையைبِمَاஎதன் காரணமாகكُنْتُمْஇருந்தீர்கள்تَكْفُرُوْنَ‏நிராகரிக்கிறீர்கள்
வமா கான ஸலாதுஹும் 'இன்தல் Bபய்தி இல்லா முகா அ(ன்)வ்-வ தஸ்தியஹ்; Fபதூகுல் 'அதாBப Bபிமா குன்தும் தக்Fபுரூன்
அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையெல்லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் நிராகரித்ததின் காரணமாக (இப்போது) வேதனையைச் சுவையுங்கள்” (என்று).
اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا یُنْفِقُوْنَ اَمْوَالَهُمْ لِیَصُدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ فَسَیُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَیْهِمْ حَسْرَةً ثُمَّ یُغْلَبُوْنَ ؕ۬ وَالَّذِیْنَ كَفَرُوْۤا اِلٰی جَهَنَّمَ یُحْشَرُوْنَ ۟ۙ
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்يُنْفِقُوْنَசெலவு செய்கின்றனர்اَمْوَالَهُمْதங்கள் செல்வங்களைلِيَـصُدُّوْاஅவர்கள் தடுப்பதற்குعَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்فَسَيُنْفِقُوْنَهَاசெலவு செய்வார்கள்/அவற்றைثُمَّபிறகுتَكُوْنُஅவை ஆகும்عَلَيْهِمْஅவர்கள் மீதுحَسْرَةًதுக்கமாகثُمَّபிறகுيُغْلَبُوْنَ ؕவெற்றி கொள்ளப்படுவார்கள்وَالَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரிப்பாளர்கள்اِلٰى جَهَـنَّمَநரகத்தின் பக்கமேيُحْشَرُوْنَۙ‏ஒன்று திரட்டப்படுவார்கள்
இன்னல் லதீன கFபரூ யுன்Fபிகூன அம்வாலஹும் லியஸுத்தூ 'அன் ஸBபீலில் லாஹ்; Fபஸயுன்Fபிகூனஹா தும்ம தகூனு 'அலய்ஹிம் ஹஸ்ரதன் தும்ம யுக்லBபூன்; வல் லதீன கFபரூ இலா ஜஹன்ன்னம யுஹ்ஷரூனா
நிச்சயமாக நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதற்காக தங்கள் செல்வங்களை செலவு செய்கின்றனர்; (இவ்வாறே அவர்கள் தொடர்ந்து) அவற்றை செலவு செய்து கொண்டிருப்பார்கள் - முடிவில் (அது) அவர்களுக்கே துக்கமாக அமைந்துவிடும்; பின்னர் அவர்கள் வெற்றி கொள்ளப்படுவார்கள்; (இறுதியில்) நிராகரிப்பவர்கள் நரகத்தில் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
لِیَمِیْزَ اللّٰهُ الْخَبِیْثَ مِنَ الطَّیِّبِ وَیَجْعَلَ الْخَبِیْثَ بَعْضَهٗ عَلٰی بَعْضٍ فَیَرْكُمَهٗ جَمِیْعًا فَیَجْعَلَهٗ فِیْ جَهَنَّمَ ؕ اُولٰٓىِٕكَ هُمُ الْخٰسِرُوْنَ ۟۠
لِيَمِيْزَபிரிப்பதற்காகاللّٰهُஅல்லாஹ்الْخَبِيْثَகெட்டவர்களைمِنَஇருந்துالطَّيِّبِநல்லவர்கள்وَ يَجْعَلَஇன்னும் ஆக்குவதற்குالْخَبِيْثَகெட்டவர்களைبَعْضَهٗஅவர்களில் சிலரைعَلٰى بَعْضٍசிலர் மீதுفَيَرْكُمَهٗஅவன் ஒன்றிணைத்து/அவர்கள்جَمِيْعًاஅனைவரையும்فَيَجْعَلَهٗஅவர்களை ஆக்குவதற்காகவும்فِىْ جَهَـنَّمَ‌ؕநரகத்தில்اُولٰٓٮِٕكَ هُمُஇவர்கள்தான்الْخٰسِرُوْنَ‏நஷ்டவாளிகள்
லியமீZஜல் லாஹுல் கBபீத மினத் தய்யிBபி வ யஜ்'அலல் கBபீத Bபஃளஹூ 'அல Bபஃளின் Fபயர்குமஹூ ஜமீ'அன் Fபயஜ்'அலஹூ Fபீ ஜஹன்ன்னம்; உலா'இக ஹுமுல் காஸிரூன்
அல்லாஹ் நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரிப்பதற்காகவும், கெட்டவர்கள் ஒருவர் மீது ஒருவராக அடுக்கப்பெற்று ஒன்று சேர்க்கப்பட்டபின் அவர்களை நரகத்தில் போடுவதற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்; எனவே) இவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள்.  
قُلْ لِّلَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ یَّنْتَهُوْا یُغْفَرْ لَهُمْ مَّا قَدْ سَلَفَ ۚ وَاِنْ یَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِیْنَ ۟
قُلْகூறுவீராகلِّـلَّذِيْنَ كَفَرُوْۤاநிராகரிப்பவர்களுக்குاِنْ يَّنْتَهُوْاஅவர்கள் விலகிக் கொண்டால்يُغْفَرْமன்னிக்கப்படும்لَهُمْஅவர்களுக்குمَّا قَدْ سَلَفَۚஎவை/முன் சென்றனوَاِنْ يَّعُوْدُوْاஅவர்கள் திரும்பினால்فَقَدْ مَضَتْசென்றுவிட்டதுسُنَّتُவழிமுறைالْاَوَّلِيْنَ‏முன்னோரின்
குல் லில்லதீன கFபரூ இ(ன்)ய் யன்தஹூ யுக்Fபர் லஹும் மா கத் ஸலFப வ இ(ன்)ய் யஃஊதூ Fபகத் மளத் ஸுன்னதுல் அவ்வலீன்
நிராகரிப்போருக்கு (நபியே!) நீர் கூறும்: இனியேனும் அவர்கள் (விஷமங்களை) விட்டும் விலகிக் கொள்வார்களானால், (அவர்கள்) முன்பு செய்த (குற்றங்கள்) அவர்களுக்கு மன்னிக்கப்படும். (ஆனால் அவர்கள் முன்போலவே விஷமங்கள் செய்ய) மீண்டும் முற்படுவார்களானால், முன்சென்றவர்களுக்குச் செய்தது நிச்சயமாக நடந்தேறி இருக்கிறது. (அதுவே இவர்களுக்கும்.)
وَقَاتِلُوْهُمْ حَتّٰی لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّیَكُوْنَ الدِّیْنُ كُلُّهٗ لِلّٰهِ ۚ فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللّٰهَ بِمَا یَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
وَقَاتِلُوْபோரிடுங்கள்هُمْஇவர்களிடம்حَتّٰவரைلَا تَكُوْنَஇல்லாமல் ஆகும்فِتْنَةٌகுழப்பம்وَّيَكُوْنَஇன்னும் ஆகும்الدِّيْنُவழிபாடுكُلُّهٗஎல்லாம்لِلّٰهِ‌ۚஅல்லாஹ்வுக்குفَاِنِ انْـتَهَوْاஅவர்கள் விலகிக் கொண்டால்فَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِمَاஎதைيَعْمَلُوْنَஅவர்கள் செய்கிறார்கள்بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
வ காதிலூஹும் ஹத்தா லா தகூன Fபித்னது(ன்)வ் வ யகூனத்தீனு குல்லுஹூ லில்லாஹ்; Fப இனின் தஹவ் Fப இன்னல்லாஹ Bபிமா யஃமலூன Bபஸீர்
(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.
وَاِنْ تَوَلَّوْا فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ مَوْلٰىكُمْ ؕ نِعْمَ الْمَوْلٰی وَنِعْمَ النَّصِیْرُ ۟
وَاِنْ تَوَلَّوْاஅவர்கள் விலகினால்فَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்مَوْلٰٮكُمْ‌ؕஉங்கள் எஜமானன்نِعْمَசிறந்தவன்الْمَوْلٰىஎஜமானன்وَنِعْمَசிறந்தவன்النَّصِيْرُ‏உதவியாளன்
வ இன் தவல்லவ் Fபஃலமூ அன்னல் லாஹ மவ்லாகும்; னிஃமல் மவ்லா வ னிஃமன் னஸீர்
அவர்கள் மாறு செய்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய பாதுகாவலன் என்பதை அறிந்து கொள்ளுங்கள் - அவன் பாதுகாப்பதிலும் மிகச் சிறந்தவன்; இன்னும் உதவி செய்வதிலும் மிகவும் சிறந்தவன்.
وَاعْلَمُوْۤا اَنَّمَا غَنِمْتُمْ مِّنْ شَیْءٍ فَاَنَّ لِلّٰهِ خُمُسَهٗ وَلِلرَّسُوْلِ وَلِذِی الْقُرْبٰی وَالْیَتٰمٰی وَالْمَسٰكِیْنِ وَابْنِ السَّبِیْلِ ۙ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ وَمَاۤ اَنْزَلْنَا عَلٰی عَبْدِنَا یَوْمَ الْفُرْقَانِ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ ؕ وَاللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
وَاعْلَمُوْۤاஅறிந்து கொள்ளுங்கள்اَنَّمَاநிச்சயமாக எதுغَنِمْتُمْவென்றீர்கள்مِّنْ شَىْءٍஒரு பொருள்فَاَنَّநிச்சயமாகلِلّٰهِஅல்லாஹ்வுக்குخُمُسَهٗஅதில் ஐந்தில் ஒன்றுوَ لِلرَّسُوْلِஇன்னும் தூதருக்குوَلِذِى الْقُرْبٰىஇன்னும் உறவினர்களுக்குوَالْيَتٰمٰىஇன்னும் அநாதைகளுக்குوَالْمَسٰكِيْنِஇன்னும் ஏழைகளுக்குوَابْنِ السَّبِيْلِ ۙஇன்னும் பயணிகளுக்குاِنْ كُنْتُمْநீங்கள் இருந்தால்اٰمَنْتُمْநம்பிக்கை கொண்டவர்களாகبِاللّٰهِஅல்லாஹ்வைوَمَاۤ اَنْزَلْنَاஇன்னும் எதை இறக்கினோம்عَلٰى عَبْدِنَاநம் அடியார் மீதுيَوْمَநாளில்الْفُرْقَانِபிரித்தறிவித்தيَوْمَநாளில்الْتَقَىசந்தித்தார்(கள்)الْجَمْعٰنِ‌ ؕஇரு கூட்டங்கள், இரு படைகள்وَاللّٰهُநிச்சயமாகஅல்லாஹ்عَلٰىமீதுكُلِّ شَىْءٍஎல்லாவற்றின்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
வஃலமூ அன்னமா கனிம்தும் மின் ஷ'இன் Fப அன்ன லில்லாஹி குமுஸஹூ வ லிர் ரஸூலி வ லிதில் குர்Bப வல்யதாமா வல்மஸாகீனி வBப்னிஸ் ஸBபீலி இன் குன்தும் ஆமன்தும் Bபில்லாஹி வ மா அன்Zஜல்னா 'அல 'அBப்தினா யவ்மல் Fபுர்கானி யவ்மல்தகல் ஜம்'ஆன்; வல் லாஹு 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
(முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
اِذْ اَنْتُمْ بِالْعُدْوَةِ الدُّنْیَا وَهُمْ بِالْعُدْوَةِ الْقُصْوٰی وَالرَّكْبُ اَسْفَلَ مِنْكُمْ ؕ وَلَوْ تَوَاعَدْتُّمْ لَاخْتَلَفْتُمْ فِی الْمِیْعٰدِ ۙ وَلٰكِنْ لِّیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ۙ۬ لِّیَهْلِكَ مَنْ هَلَكَ عَنْ بَیِّنَةٍ وَّیَحْیٰی مَنْ حَیَّ عَنْ بَیِّنَةٍ ؕ وَاِنَّ اللّٰهَ لَسَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
اِذْசமயம்اَنْتُمْநீங்கள்بِالْعُدْوَةِபள்ளத்தாக்கில்الدُّنْيَاசமீபமானதுوَهُمْஅவர்கள்بِالْعُدْوَةِபள்ளத்தாக்கில்الْقُصْوٰىதூரமானதுوَ الرَّكْبُவாகனக்காரர்கள்اَسْفَلَகீழேمِنْكُمْ‌ؕஉங்களுக்குوَلَوْ تَوَاعَدْتُّمْநீங்கள் வாக்குறுதி செய்து கொண்டிருந்தால்لَاخْتَلَفْتُمْதவறிழைத்திருப்பீர்கள்فِى الْمِيْعٰدِ‌ۙகுறிப்பிட்ட நேரத்தில்وَلٰـكِنْஎனினும்لِّيَقْضِىَநிறைவேற்றுவதற்காகاللّٰهُஅல்லாஹ்اَمْرًاஒரு காரியத்தைكَانَஇருக்கின்றதுمَفْعُوْلًا ۙமுடிவுசெய்யப்பட்டதாகلِّيَهْلِكَஅழிவதற்காகمَنْஎவன்هَلَكَஅழிந்தான்عَنْۢ بَيِّنَةٍஆதாரத்துடன்وَّيَحْيٰىஇன்னும் வாழ்வதற்காகمَنْஎவன்حَىَّவாழ்ந்தான்عَنْۢ بَيِّنَةٍ‌ ؕஆதாரத்துடன்وَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்தான்لَسَمِيْعٌநன்குசெவியுறுபவன்عَلِيْمٌۙ‏நன்கறிந்தவன்
இத் அன்தும் Bபில்'உத்வதித் துன்யா வ ஹும் Bபில்'உத்வதில் குஸ்வா வர்ரக்Bபு அஸ்Fபல மின்கும்; வ லவ் தவாத்தும் லக்தலFப்தும் Fபில் மீ'ஆதி வ லாகில் லியக்ளியல் லாஹு அம்ரன் கான மFப்'ஊலல் லியஹ்லிக மன் ஹலக 'அம் Bபய்யினதி(ன்)வ் வ யஹ்யா மன் ஹய்ய 'அம் Bபய்யினஹ்; வ இன்னல் லாஹ ல ஸமீ'உன் 'அலீம்
(பத்ரு போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப்புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம் இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும் அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாகக் கருத்து வேற்றுமை கொண்டிருப்பீர்கள்; ஆனால் செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப் பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்) - நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.
اِذْ یُرِیْكَهُمُ اللّٰهُ فِیْ مَنَامِكَ قَلِیْلًا ؕ وَلَوْ اَرٰىكَهُمْ كَثِیْرًا لَّفَشِلْتُمْ وَلَتَنَازَعْتُمْ فِی الْاَمْرِ وَلٰكِنَّ اللّٰهَ سَلَّمَ ؕ اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟
اِذْ يُرِيْكَهُمُசமயம்/காண்பிக்கிறான்/உமக்கு/அவர்களைاللّٰهُஅல்லாஹ்فِىْ مَنَامِكَஉமது கனவில்قَلِيْلًا ؕகுறைவாகوَّلَوْ اَرٰٮكَهُمْஅவன் காண்பித்திருந்தால் உமக்கு / அவர்களைكَثِيْرًاஅதிகமானவர்களாகلَّـفَشِلْـتُمْநீங்கள் துணிவிழந்திருப்பீர்கள்وَلَـتَـنَازَعْتُمْஇன்னும் தர்க்கித்திருப்பீர்கள்فِى الْاَمْرِகாரியத்தில்وَلٰـكِنَّஎன்றாலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்سَلَّمَ‌ؕகாப்பாற்றினான்اِنَّهٗநிச்சயமாக அவன்عَلِيْمٌۢநன்கறிந்தவன்بِذَاتِ الصُّدُوْرِ‏நெஞ்சங்களில் உள்ளவற்றை
இத் யுரீகஹுமுல் லாஹு Fபீ மனாமிக கலீல; வ லவ் அராகஹும் கதீரல் லFபஷில்தும் வ லதனாZஜஃதும் Fபில் அம்ரி வ லாகின்னல் லாஹ ஸல்லம்; இன்னஹூ 'அலீமும் Bபிதாதிஸ் ஸுதூர்
(நபியே!) உம் கனவில் அவர்களை(த் தொகையில்) உமக்குக் குறைவாகக் காண்பித்ததையும், அவர்களை உமக்கு அதிகமாகக் காண்பித்திருந்தால், நீங்கள் தைரியம் இழந்து (போர் நடத்தும்) காரியத்தில் நீங்கள் (ஒருவருக்கொருவர் பிணங்கித்)தர்க்கம் செய்து கொண்டிருந்திருப்பீர்கள் என்பதையும் நினைவு கூறுவீராக! எனினும் (அப்படி நடந்துவிடாமல் உங்களை) அல்லாஹ் காப்பாற்றினான்; நிச்சயமாக அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.
وَاِذْ یُرِیْكُمُوْهُمْ اِذِ الْتَقَیْتُمْ فِیْۤ اَعْیُنِكُمْ قَلِیْلًا وَّیُقَلِّلُكُمْ فِیْۤ اَعْیُنِهِمْ لِیَقْضِیَ اللّٰهُ اَمْرًا كَانَ مَفْعُوْلًا ؕ وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠
وَ اِذْபோதுيُرِيْكُمُوْகாட்டுகிறான்/உங்களுக்குهُمْஅவர்களைاِذِபோதுالْتَقَيْتُمْநீங்கள் சந்தித்தீர்கள்فِىْۤ اَعْيُنِكُمْஉங்கள் கண்களில்قَلِيْلًاகுறைவாகوَّيُقَلِّلُكُمْஇன்னும் குறைவாக காட்டுகிறான்/உங்களைفِىْۤ اَعْيُنِهِمْஅவர்களுடைய கண்களில்لِيَـقْضِىَநிறைவேற்றுவதற்காகاللّٰهُஅல்லாஹ்اَمْرًاஒரு காரியத்தைكَانَஇருக்கின்றதுمَفْعُوْلًا ؕமுடிவு செய்யப்பட்டதாகوَاِلَى اللّٰهِஅல்லாஹ்வின் பக்கமேتُرْجَعُதிருப்பப்படும்الْاُمُوْرُ‏காரியங்கள்
வ இத் யுரீகுமூஹும் இதில் தகய்தும் Fபீ அஃயுனிகும் கலீல(ன்)வ் வ யுகல்லிலுகும் Fபீ அஃயுனிஹிம் லியக்ளியல் லாஹு அம்ரன் கான மFப்'ஊலா; வ இலல் லாஹி துர்ஜ'உல் உமூர்
நீங்களும் அவர்களும் (போரில்) சந்தித்தபோது அவன் உங்களுடைய பார்வையில் அவர்களுடைய எண்ணிக்கையைக் குறைவாகக் காண்பித்தான்; இன்னும் உங்கள் (தொகையை) அவர்களுடைய பார்வையில் குறைவாகக் காண்பித்தான் - இவ்வாறு அவன் செய்தது, அவன் விதித்த ஒரு காரியத்தை அவன் நிறைவேற்றுவதற்காகவேயாகும் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் சென்று முடிவடைகின்றன.  
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا لَقِیْتُمْ فِئَةً فَاثْبُتُوْا وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟ۚ
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤاநம்பிக்கையாளர்களே!اِذَا لَقِيْتُمْநீங்கள் சந்தித்தால்فِئَةًஒரு கூட்டத்தைفَاثْبُتُوْاஉறுதியாக இருங்கள்وَاذْكُرُواநினைவு கூருங்கள்اللّٰهَஅல்லாஹ்வைكَثِيْرًاஅதிகமாகلَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌ۚ‏நீங்கள் வெற்றி பெறுவதற்காக
யா அய்யுஹல் லதீன ஆமனூ இதா லகீதும் Fபி'அதன் Fபத்Bபுதூ வத்குருல் லாஹ கதீரல் ல'அல்லகும் துFப்லிஹூன்
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் (போரில் எதிரியின்) கூட்டத்தாரைச் சந்திப்பீர்களாயின் உறுதியாக இருங்கள் - அல்லாஹ்வை அதிகமாக தியானம் செய்யுங்கள் - நீங்கள் வெற்றியடைவீர்கள்.
وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِیْحُكُمْ وَاصْبِرُوْا ؕ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِیْنَ ۟ۚ
وَاَطِيْعُواஇன்னும் கீழ்ப்படியுங்கள்اللّٰهَஅல்லாஹ்வுக்கும்وَرَسُوْلَهٗஇன்னும் அவனுடைய தூதருக்கும்وَلَا تَنَازَعُوْاஇன்னும் தர்க்கிக்காதீர்கள்فَتَفْشَلُوْاஅவ்வாறாயின் நீங்கள் துணிவிழப்பீர்கள்وَتَذْهَبَசென்றுவிடும்رِيْحُكُمْ‌உங்கள் ஆற்றல்وَاصْبِرُوْا‌ ؕபொறுத்திருங்கள்اِنَّ اللّٰهَ مَعَநிச்சயமாக அல்லாஹ்/உடன்الصّٰبِرِيْنَ‌ۚ‏பொறுமையாளர்கள்
வ அதீ'உல் லாஹ வ ரஸூலஹூ வலா தனாZஜ'ஊ FபதFப்ஷலூ வ தத்ஹBப ரீஹுகும் வஸ்Bபிரூ; இன்னல் லாஹ ம'அஸ் ஸாBபிரீன்
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
وَلَا تَكُوْنُوْا كَالَّذِیْنَ خَرَجُوْا مِنْ دِیَارِهِمْ بَطَرًا وَّرِئَآءَ النَّاسِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ وَاللّٰهُ بِمَا یَعْمَلُوْنَ مُحِیْطٌ ۟
وَلَا تَكُوْنُوْاஆகிவிடாதீர்கள்كَالَّذِيْنَஎவர்களைப் போல்خَرَجُوْاபுறப்பட்டனர்مِنْஇருந்துدِيَارِهِمْதங்கள் இல்லங்கள்بَطَرًاபெருமைக்காகوَّرِئَآءَஇன்னும் காண்பிப்பதற்காகالنَّاسِமக்களுக்குوَ يَصُدُّوْنَஇன்னும் தடுப்பார்கள்عَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்وَاللّٰهُஅல்லாஹ்بِمَاஎவற்றைيَعْمَلُوْنَசெய்வார்கள்مُحِيْطٌ‏சூழ்ந்திருப்பவன்
வ லா தகூனூ கல்லதீன கரஜூ மின் தியாரிஹிம் Bபதர(ன்)வ் வ ரி'ஆ'அன் னாஸி வ யஸுத்தூன 'அன் ஸBபீலில் லாஹ்; வல்லாஹு Bபிமா யஃமலூன முஹீத்
பெருமைக்காகவும், மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் வீடுகளிலிருந்து வெளிக்கிளம்பி (முஸ்லிம்களுக்கெதிராக பத்ரில்) மக்களை அல்லாஹ்வுடைய பாதையை விட்டுத் தடுத்தார்களே அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் - அவர்கள் செய்வதை அல்லாஹ் சூழ்ந்து அறிந்தவனாக இருக்கிறான்.
وَاِذْ زَیَّنَ لَهُمُ الشَّیْطٰنُ اَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْیَوْمَ مِنَ النَّاسِ وَاِنِّیْ جَارٌ لَّكُمْ ۚ فَلَمَّا تَرَآءَتِ الْفِئَتٰنِ نَكَصَ عَلٰی عَقِبَیْهِ وَقَالَ اِنِّیْ بَرِیْٓءٌ مِّنْكُمْ اِنِّیْۤ اَرٰی مَا لَا تَرَوْنَ اِنِّیْۤ اَخَافُ اللّٰهَ ؕ وَاللّٰهُ شَدِیْدُ الْعِقَابِ ۟۠
وَاِذْசமயம்زَيَّنَஅலங்கரித்தான்لَهُمُஅவர்களுக்குالشَّيْطٰنُஷைத்தான்اَعْمَالَهُمْஅவர்களுடைய செயல்களைوَقَالَஇன்னும் கூறினான்لَاஅறவே இல்லைغَالِبَவெல்பவர்لَـكُمُஉங்களைالْيَوْمَஇன்றுمِنَ النَّاسِமக்களில்وَاِنِّىْநிச்சயமாக நான்جَارٌதுணைلَّـكُمْ‌ۚஉங்களுக்குفَلَمَّاபோதுتَرَآءَتِபார்த்தன ஒன்றுக்கொன்றுالْفِئَتٰنِஇரு கூட்டங்கள்نَكَصَதிரும்பினான்عَلٰى عَقِبَيْهِதன் இரு குதிங்கால்கள் மீதுوَقَالَஇன்னும் கூறினான்اِنِّىْநிச்சயமாக நான்بَرِىْٓءٌவிலகியவன்مِّنْكُمْஉங்களை விட்டுاِنِّىْۤநிச்சயமாக நான்اَرٰىபார்க்கிறேன்مَا لَا تَرَوْنَஎதை/நீங்கள் பார்க்க மாட்டீர்கள்اِنِّىْۤநிச்சயமாக நான்اَخَافُபயப்படுகிறேன்اللّٰهَ‌ؕஅல்லாஹ்வைوَاللّٰهُஅல்லாஹ்شَدِيْدُ الْعِقَابِ‏தண்டிப்பதில் கடுமையானவன்
வ இத் Zஜய்யன லஹுமுஷ் ஷய்தானு அஃமாலஹும் வ கால லா காலிBப லகுமுல் யவ்ம மினன் னாஸி வ இன்னீ ஜாருல் லகும் Fபலம்மா தரா'அதில் Fபி'அதானி னகஸ 'அலா அகிBபய்ஹி வ கால இன்னீ Bபரீ'உம் மின்கும் இன்னீ அரா மா லா தரவ்ன இன்னீ அகாFபுல் லாஹ்; வல்லாஹு ஷதீதுல் 'இகாBப்
ஷைத்தான் அவர்களுடைய (பாவச்)செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து, “இன்று மனிதர்களில் உங்களை வெற்றி கொள்வோர் எவருமில்லை; மெய்யாக நான் உங்களுக்கு துணையாக இருக்கின்றேன்!” என்று கூறினான்; இரு படைகளும் நேருக்கு நேர் சந்தித்தபோது அவன் புறங்காட்டிப் பின்சென்று, “ மெய்யாக நான் உங்களை விட்டு விலகிக் கொண்டேன்; நீங்கள் பார்க்க முடியாததை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்; அல்லாஹ் தண்டனை கொடுப்பதில் கடினமானவன்” என்று கூறினான்.  
اِذْ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالَّذِیْنَ فِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ غَرَّ هٰۤؤُلَآءِ دِیْنُهُمْ ؕ وَمَنْ یَّتَوَكَّلْ عَلَی اللّٰهِ فَاِنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
اِذْபோதுيَقُوْلُகூறினார்(கள்)الْمُنٰفِقُوْنَநயவஞ்சகர்கள்وَالَّذِيْنَஎவர்கள்فِىْ قُلُوْبِهِمْதங்கள் உள்ளங்களில்مَّرَضٌநோய்غَرَّமயக்கி விட்டதுهٰٓؤُلَاۤءِஇவர்களைدِيْنُهُمْؕஇவர்களுடைய மார்க்கம்وَمَنْஎவர்يَّتَوَكَّلْநம்பிக்கை வைப்பார்عَلَى اللّٰهِஅல்லாஹ் மீதுفَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
இத் யகூலுல் முனாFபிகூன வல்லதீன Fபீ குலூBபிஹிம் மரளுன் கர்ர ஹா'உலா'இ தீனுஹும்; வ மய் யதவக்கல் 'அலல் லாஹி Fப இன்னல் லாஹ 'அZஜீ Zஜுன் ஹகீம்
நயவஞ்சகர்களும் தம் இருதயங்களில் நோய் உள்ளவர்களும் (முஸ்லிம்களைச் சுட்டிக்காட்டி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கி (ஏமாற்றி) விட்டது” என்று கூறினார்கள் - அல்லாஹ்வை எவர் முற்றிலும் நம்புகிறாரோ, நிச்சயமாக அல்லாஹ் (சக்தியில்) மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் (என்பதில் உறுதி கொள்வார்களாக).
وَلَوْ تَرٰۤی اِذْ یَتَوَفَّی الَّذِیْنَ كَفَرُوا ۙ الْمَلٰٓىِٕكَةُ یَضْرِبُوْنَ وُجُوْهَهُمْ وَاَدْبَارَهُمْ ۚ وَذُوْقُوْا عَذَابَ الْحَرِیْقِ ۟
وَ لَوْ تَرٰٓىநீர் பார்த்தால்اِذْபோதுيَتَوَفَّىஉயிர் கைப்பற்றுவார்(கள்)الَّذِيْنَ كَفَرُوا‌ ۙநிராகரித்தவர்களைالْمَلٰٓٮِٕكَةُவானவர்கள்يَضْرِبُوْنَஅடித்தவர்களாகوُجُوْهَهُمْஅவர்களுடைய முகங்களில்وَاَدْبَارَهُمْۚஇன்னும் அவர்களுடைய முதுகுகளில்وَذُوْقُوْاஇன்னும் சுவையுங்கள்عَذَابَவேதனையைالْحَرِيْقِ‏எரிக்கக்கூடியது
வ லவ் தரா இத் யதவFப் Fபல் லதீன கFபருல் மலா'இகது யள்ரிBபூன வுஜூஹஹும் வ அத்Bபாரஹும் வ தூகூ 'அதாBபல் ஹரீக்
மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கூறுவார்கள்: “எரிக்கும் நரக வேதனையைச் சுவையுங்கள்” என்று.
ذٰلِكَ بِمَا قَدَّمَتْ اَیْدِیْكُمْ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟ۙ
ذٰلِكَ بِمَاஅதற்குக் காரணம்قَدَّمَتْமுற்படுத்தினاَيْدِيْكُمْஉங்கள் கரங்கள்وَاَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَـيْسَஇல்லைبِظَلَّامٍஅநீதியிழைப்பவன்لِّـلْعَبِيْدِۙ‏அடியார்களுக்கு
தாலிக Bபிமா கத்தமத் அய்தீகும் வான்னல்லாஹ லய்ஸ Bபிளல்லாமில் லில் 'அBபீத்
இதற்கு காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய (பாவச்)செயல்களேயாம் - நிச்சயமாக அல்லாஹ்(தன்) அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட்டான்.
كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَفَرُوْا بِاٰیٰتِ اللّٰهِ فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ اِنَّ اللّٰهَ قَوِیٌّ شَدِیْدُ الْعِقَابِ ۟
كَدَاْبِநிலைமையைப் போன்றுاٰلِசமுதாயம்فِرْعَوْنَ‌ۙஃபிர்அவ்னுடையوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்مِنْ قَبْلِهِمْ‌ؕஅவர்களுக்கு முன்னர்كَفَرُوْاநிராகரித்தனர்بِاٰيٰتِவசனங்களைاللّٰهِஅல்லாஹ்வின்فَاَخَذَهُمُஆகவே அவர்களைத் தண்டித்தான்اللّٰهُஅல்லாஹ்بِذُنُوْبِهِمْ‌ؕஅவர்களுடைய பாவங்களினால்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்قَوِىٌّமிக வலிமையானவன்شَدِيْدُகடுமையானவன்الْعِقَابِ‏தண்டிப்பதில்
கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல் லதீன மின் கBப்லிஹிம்; கFபரூ Bபி ஆயாதில் லாஹி Fப அகதஹு முல் லாஹு BபிதுனூBபிஹிம்; இன்னல் லாஹ கவிய்யுன் ஷதீதுல் 'இகாBப்
(இவர்களின் நிலையை) ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலையைப் போன்றதேயாகும்; (இவர்களைப் போலவே) அவர்களும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தனர்; அவர்களுடைய பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைப் பிடித்துக் கொண்டான்; நிச்சயமாக அல்லாஹ் பேராற்றலுடையோன், தண்டிப்பதில் கடுமையானவன்.
ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ لَمْ یَكُ مُغَیِّرًا نِّعْمَةً اَنْعَمَهَا عَلٰی قَوْمٍ حَتّٰی یُغَیِّرُوْا مَا بِاَنْفُسِهِمْ ۙ وَاَنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ۙ
ذٰلِكَஅதற்குبِاَنَّகாரணம், நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَمْ يَكُஇருக்கவில்லைمُغَيِّرًاமாற்றுபவனாகنِّـعْمَةًஓர் அருட்கொடையைاَنْعَمَهَاஅருள்புரிந்தான்/அதைعَلٰىமீதுقَوْمٍஒரு சமுதாயம்حَتّٰىவரைيُغَيِّرُوْاமாற்றுவார்கள்مَاஎதைبِاَنْفُسِهِمْ‌ۙதங்களிடம்وَاَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்سَمِيْعٌநன்கு செவியுறுபவன்عَلِيْمٌۙ‏நன்கறிந்தவன்
தாலிக Bபி அன்னல் லாஹ லம் யகுமு கய்யிரன் னிஃமதன் அன்'அமஹா 'அலா கவ்மின் ஹத்தா யுகய்யிரூ மா Bபிஅன்Fபுஸிஹிம் வ அன்னல்லாஹ ஸமீ'உன் 'அலீம்
“ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَذَّبُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ ۚ وَكُلٌّ كَانُوْا ظٰلِمِیْنَ ۟
كَدَاْبِநிலைமையைப் போன்றுاٰلِசமுதாயம்فِرْعَوْنَ‌ۙஃபிர்அவ்னுடையوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்مِنْ قَبْلِهِمْ‌ؕஅவர்களுக்கு முன்னர்كَذَّبُوْاபொய்ப்பித்தனர்بِاٰيٰتِவசனங்களைرَبِّهِمْதங்கள் இறைவனின்فَاَهْلَكْنٰهُمْஅழித்தோம்/அவர்களைبِذُنُوْبِهِمْஅவர்களுடைய பாவங்களினால்وَاَغْرَقْنَاۤஇன்னும் மூழ்கடித்தோம்اٰلَசமுதாயம்فِرْعَوْنَ‌ۚஃபிர்அவ்னுடையوَكُلٌّஎல்லோரும்كَانُوْاஇருந்தனர்ظٰلِمِيْنَ‏அநியாயக்காரர்களாக
கதாBபி ஆலி Fபிர்'அவ்ன வல்லதீன மின் கBப்லிஹிம்; கத்தBபூ Bபி ஆயாதி ரBப்Bபிஹிம் Fபாஹ்லக்னாஹும் BபிதுனூBபிஹிம் வ அக்ரக்னா ஆல Fபிர்'அவ்ன்; வ குல்லுன் கானூ ளாலிமீன்
ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களுடையவும், அவர்களுக்கு முன்பு இருந்தவர்களுடையவும் நிலைமையைப் போன்றதேயாகும்; அவர்களும் (இவர்களைப் போலவே தம்) இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள் - ஆகவே நாம் அவர்களை அவர்களுடைய பாவங்களின் காரணமாக அழித்தோம்; இன்னும் ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை மூழ்கடித்தோம் - அவர்கள் அனைவரும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்.
اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنْدَ اللّٰهِ الَّذِیْنَ كَفَرُوْا فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟ۖۚ
اِنَّ شَرَّநிச்சயமாக கொடியவர்கள்الدَّوَآبِّமிருகங்களில்عِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்فَهُمْஆகவே, அவர்கள்لَا يُؤْمِنُوْنَ‌ ۖ‌ ۚ‏நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
இன்ன ஷர்ரத் தவாBப்Bபி 'இன்தல் லாஹில் லதீன கFபரூ Fபஹும் லா யு'மினூன்
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிரினங்களில் மிகவும் கெட்டவர்கள், நிராகரிப்பவர்கள் தாம் - அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
اَلَّذِیْنَ عٰهَدْتَّ مِنْهُمْ ثُمَّ یَنْقُضُوْنَ عَهْدَهُمْ فِیْ كُلِّ مَرَّةٍ وَّهُمْ لَا یَتَّقُوْنَ ۟
اَلَّذِيْنَஎவர்கள்عَاهَدْتَّஒப்பந்தம் செய்தீர்مِنْهُمْஅவர்களிடம்ثُمَّபிறகுيَنْقُضُوْنَமுறிக்கின்றனர்عَهْدَஒப்பந்தத்தைهُمْதங்கள்فِىْ كُلِّஒவ்வொருمَرَّةٍமுறையிலும்وَّهُمْஅவர்கள்لَا يَـتَّـقُوْنَ‏அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை
அல்லதீன'ஆஹத்த மின் ஹும் தும்ம யன்குளூன 'அஹ்தஹும் Fபீ குல்லி மர்ரதி(ன்)வ் வ ஹும் லா யத்தகூன்
(நபியே!) இவர்களில் நீர் எவருடன் உடன்படிக்கை செய்து கொண்டாலும், ஒவ்வொரு தடவையும் அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்தே வருகின்றனர்; அவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுவதேயில்லை.
فَاِمَّا تَثْقَفَنَّهُمْ فِی الْحَرْبِ فَشَرِّدْ بِهِمْ مَّنْ خَلْفَهُمْ لَعَلَّهُمْ یَذَّكَّرُوْنَ ۟
فَاِمَّا تَثْقَفَنَّهُمْநீர் பெற்றுக் கொண்டால் / அவர்களைفِى الْحَـرْبِபோரில்فَشَرِّدْவிரட்டியடிப்பீராகبِهِمْஅவர்களைக்கொண்டுمَّنْஎவர்கள்خَلْفَهُمْஅவர்களுக்குப் பின்لَعَلَّهُمْ يَذَّكَّرُوْنَ‏அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக
Fப இம்மா தத்கFபன்னஹும் Fபில் ஹர்Bபி Fபஷர்ரித் Bபிஹிம் மன் கல்Fபஹும் ல'அல்லஹும் யத்தக்கரூன்
எனவே போரில் நீர் அவர்கள்மீது வாய்ப்பைப் பெற்று விட்டால், அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களும் பயந்தோடும்படி சிதறடித்து விடுவீராக - இதனால் அவர்கள் நல்லறிவு பெறட்டும்.
وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِیَانَةً فَانْۢبِذْ اِلَیْهِمْ عَلٰی سَوَآءٍ ؕ اِنَّ اللّٰهَ لَا یُحِبُّ الْخَآىِٕنِیْنَ ۟۠
وَاِمَّا تَخَافَنَّநீர் பயந்தால்مِنْஇருந்துقَوْمٍஒரு சமுதாயம்خِيَانَةًமோசடியைفَانْۢبِذْஎறிவீராகاِلَيْهِمْஅவர்களிடம்عَلٰى سَوَآءٍ‌ ؕசமமாகاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْخَآٮِٕنِيْنَ‏மோசடிக்காரர்களை
வ இம்மா தகாFபன மின் கவ்மின் கியானதன் Fபம்Bபித் இலய்ஹிம் 'அலா ஸவா'; இன்னல் லாஹ லாயுஹிBப்Bபுல் கா'இனீன்
(உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.  
وَلَا یَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْا سَبَقُوْا ؕ اِنَّهُمْ لَا یُعْجِزُوْنَ ۟
وَلَا يَحْسَبَنَّநிச்சயமாக அவர்(கள்) எண்ண வேண்டாம்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்سَبَقُوْا‌ ؕமுந்திவிட்டனர்اِنَّهُمْநிச்சயமாக அவர்கள்لَا يُعْجِزُوْنَ‏அவர்கள் பலவீனப்படுத்த முடியாது
வ லா யஹ்ஸBபன்னல் லதீன கFபரூ ஸBபகூ; இன்னஹும் லா யுஃஜிZஜூன்
நிராகரிப்பவர்கள் தாங்கள் (தண்டனையிலிருந்து) தப்பித்துக் கொண்டதாக எண்ணவேண்டாம்; நிச்சயமாக அவர்கள் (இறையச்சமுடையோரைத்) தோற்கடிக்கவே முடியாது.
وَاَعِدُّوْا لَهُمْ مَّا اسْتَطَعْتُمْ مِّنْ قُوَّةٍ وَّمِنْ رِّبَاطِ الْخَیْلِ تُرْهِبُوْنَ بِهٖ عَدُوَّ اللّٰهِ وَعَدُوَّكُمْ وَاٰخَرِیْنَ مِنْ دُوْنِهِمْ ۚ لَا تَعْلَمُوْنَهُمْ ۚ اَللّٰهُ یَعْلَمُهُمْ ؕ وَمَا تُنْفِقُوْا مِنْ شَیْءٍ فِیْ سَبِیْلِ اللّٰهِ یُوَفَّ اِلَیْكُمْ وَاَنْتُمْ لَا تُظْلَمُوْنَ ۟
وَاَعِدُّوْاஏற்பாடு செய்யுங்கள்لَهُمْஅவர்களுக்குمَّا اسْتَطَعْتُمْஉங்களுக்கு முடிந்ததைمِّنْஇருந்துقُوَّةٍபலம்وَّمِنْஇன்னும் இருந்துرِّبَاطِ الْخَـيْلِபோர்க் குதிரைகள்تُرْهِبُوْنَநீங்கள் அச்சுறுத்த வேண்டும்بِهٖஅதன் மூலம்عَدُوَّஎதிரிகளைاللّٰهِஅல்லாஹ்வின்وَعَدُوَّஇன்னும் எதிரிகளைكُمْஉங்கள்وَاٰخَرِيْنَஇன்னும் மற்றவர்களைمِنْ دُوْنِهِمْ‌ ۚஅவர்கள் அன்றிلَا تَعْلَمُوْنَهُمُ‌ ۚநீங்கள் அறியமாட்டீர்கள்/அவர்களைاَللّٰهُஅல்லாஹ்يَعْلَمُهُمْ‌ؕஅறிவான்/அவர்களைوَمَا تُـنْفِقُوْاநீங்கள் எதை தர்மம் செய்தாலும்مِنْ شَىْءٍபொருள்களில்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்يُوَفَّமுழுமையாக வழங்கப்படும்اِلَيْكُمْஉங்களுக்குوَاَنْـتُمْநீங்கள்لَا تُظْلَمُوْنَ‏அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்
வ அ'இத்தூ லஹும் மஸ்ததஃதும் மின் குவ்வதி(ன்)வ் வ மிர்ரிBபாதில் கய்லி துர்ஹிBபூன Bபிஹீ 'அதுவ்வல் லாஹி வ 'அதுவ்வகும் வ ஆகரீன மின் தூனிஹிம் லா தஃலமூ னஹும் அல்லாஹு யஃலமுஹும்; வமா துன்Fபிகூ மின் ஷய்'இன் Fபீ ஸBபீலில் லாஹி யுவFப்Fப இலய்கும் வ அன்தும் லா துள்லமூன்
அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்; இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்; அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்); அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்; அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்; (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
وَاِنْ جَنَحُوْا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا وَتَوَكَّلْ عَلَی اللّٰهِ ؕ اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟
وَاِنْ جَنَحُوْاஅவர்கள் இணங்கினால்لِلسَّلْمِசமாதானத்திற்குفَاجْنَحْநீர் இணங்குவீராகلَهَاஅதற்குوَتَوَكَّلْநம்பிக்கை வைப்பீராகعَلَىமீதுاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்اِنَّهٗ هُوَநிச்சயமாக அவன்தான்السَّمِيْعُநன்கு செவியுறுபவன்الْعَلِيْمُ‏நன்கறிந்தவன்
வ இன் ஜனஹூ லிஸ்ஸல்மி Fபஜ்னஹ் லஹா வ தவக்கல் 'அலல் லாஹ்; இன்னஹூ ஹுவஸ் ஸமீ'உல் 'அலீம்
அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்ந்து (இணங்கி) வந்தால், நீங்களும் அதன் பக்கம் சாய்வீராக! அல்லாஹ்வின் மீதே உறுதியான நம்பிக்கை வைப்பீராக - நிச்சயமாக அவன் (எல்லாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ یُّرِیْدُوْۤا اَنْ یَّخْدَعُوْكَ فَاِنَّ حَسْبَكَ اللّٰهُ ؕ هُوَ الَّذِیْۤ اَیَّدَكَ بِنَصْرِهٖ وَبِالْمُؤْمِنِیْنَ ۟ۙ
وَاِنْ يُّرِيْدُوْۤاஅவர்கள் நாடினால்اَنْ يَّخْدَعُوْஅவர்கள் வஞ்சிக்கكَஉம்மைفَاِنَّநிச்சயமாகحَسْبَكَஉமக்குப் போதுமானவன்اللّٰهُ‌ؕஅல்லாஹ்தான்هُوَஅவன்الَّذِىْۤஎவன்اَيَّدَபலப்படுத்தினான்كَஉம்மைبِنَصْرِهٖதன் உதவியைக் கொண்டுوَبِالْمُؤْمِنِيْنَۙ‏நம்பிக்கையாளர்களைக் கொண்டு
வ இ(ன்)ய் யுரீதூ அ(ன்)ய்-யக்த'ஊக Fப இன்ன ஹஸ்Bபகல் லாஹ்; ஹுவல் லதீ அய்யதக Bபினஸ்ரிஹீ வ Bபில்மு'மினீன்
அவர்கள் உம்மை ஏமாற்ற எண்ணினால் - நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் - அவன் தான் உம்மைத் தன் உதவியைக் கொண்டும், முஃமின்களைக் கொண்டும் பலப்படுத்தினான்.
وَاَلَّفَ بَیْنَ قُلُوْبِهِمْ ؕ لَوْ اَنْفَقْتَ مَا فِی الْاَرْضِ جَمِیْعًا مَّاۤ اَلَّفْتَ بَیْنَ قُلُوْبِهِمْ وَلٰكِنَّ اللّٰهَ اَلَّفَ بَیْنَهُمْ ؕ اِنَّهٗ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
وَاَلَّفَஒன்றிணைத்தான்بَيْنَஇடையில்قُلُوْبِهِمْ‌ؕஅவர்களுடைய உள்ளங்கள்لَوْ اَنْفَقْتَநீர் செலவு செய்தால்مَا فِى الْاَرْضِபூமியிலுள்ளவைجَمِيْعًاஅனைத்தையும்مَّاۤ اَلَّفْتَ بَيْنَஒன்றிணைத்திருக்க மாட்டீர்/மத்தியில்قُلُوْبِهِمْஅவர்களுடைய உள்ளங்கள்وَلٰـكِنَّஎன்றாலும் நிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்اَلَّفَஒன்றிணைத்தான்بَيْنَهُمْ‌ؕஅவர்களுக்கு மத்தியில்اِنَّهٗநிச்சயமாக அவன்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
வ அல்லFப Bபய்ன குலூBபிஹிம்; லவ் அன்Fபக்த மா Fபில் அர்ளி ஜமீ'அம் மா அல்லFப்த Bபய்ன குலூBபிஹிம் வ லாகின்னல்லாஹ அல்லFப Bபய்னஹும்; இன்னாஹூ 'அZஜீZஜுன் ஹகீம்
மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.
یٰۤاَیُّهَا النَّبِیُّ حَسْبُكَ اللّٰهُ وَمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِیْنَ ۟۠
يٰۤـاَيُّهَا النَّبِىُّநபியே!حَسْبُكَஉமக்குப் போதுமானவன்اللّٰهُஅல்லாஹ்தான்وَ مَنِஇன்னும் எவருக்குاتَّبَعَكَஉம்மைப் பின்பற்றினார்مِنَஇருந்துمِنَ الْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கையாளர்கள்
யா அய்யுஹன் னBபிய்யு ஹஸ்Bபுகல் லாஹு வ மனித்தBப 'அக மினல் மு'மினீன்
நபியே! உமக்கும், முஃமின்களில் உம்மைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
یٰۤاَیُّهَا النَّبِیُّ حَرِّضِ الْمُؤْمِنِیْنَ عَلَی الْقِتَالِ ؕ اِنْ یَّكُنْ مِّنْكُمْ عِشْرُوْنَ صٰبِرُوْنَ یَغْلِبُوْا مِائَتَیْنِ ۚ وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ یَّغْلِبُوْۤا اَلْفًا مِّنَ الَّذِیْنَ كَفَرُوْا بِاَنَّهُمْ قَوْمٌ لَّا یَفْقَهُوْنَ ۟
يٰۤـاَيُّهَا النَّبِىُّநபியே!حَرِّضِதூண்டுவீராகالْمُؤْمِنِيْنَநம்பிக்கையாளர்களைعَلَى الْقِتَالِ‌ ؕபோருக்குاِنْ يَّكُنْஇருந்தால்مِّنْكُمْஉங்களில்عِشْرُوْنَஇருபது (நபர்கள்)صَابِرُوْنَபொறுமையாளர்கள்يَغْلِبُوْاவெல்வார்கள்مِائَتَيْنِ‌ ۚஇரு நூறு(நபர்களை)وَاِنْ يَّكُنْ مِّنْكُمْஇருந்தால்/உங்களில்مِّائَةٌநூறு (நபர்கள்)يَّغْلِبُوْۤاவெல்வார்கள்اَ لْفًاஆயிரம் (நபர்களை)مِّنَஇருந்துالَّذِيْنَ كَفَرُوْاநிராகரித்தவர்கள்بِاَنَّهُمْகாரணம்/நிச்சயமாக அவர்கள்قَوْمٌமக்கள்لَّا يَفْقَهُوْنَ‏சிந்தித்து விளங்க மாட்டார்கள்
யா அய்யுஹன் னBபிய்யு ஹர்ரிளில் மு'மினீன 'அலல் கிதால்; இ(ன்)ய்-யகும் மின்கும் 'இஷ்ரூன ஸாBபிரூன யக்லிBபூ மி'அதய்ன்; வ இ(ன்)ய்-யகும் மின்கும் மி'அது(ன்)ய் யக்லிBபூ அல்Fபம் மினல் லதீன கFபரூ Bபி அன்னஹும் கவ்முல் லா யFப்கஹூன்
நபியே! நீர் முஃமின்களை போருக்கு ஆர்வ மூட்டுவீராக; உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேரை வெற்றி கொள்வார்கள்; ஏனெனில் (முஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்).
اَلْـٰٔنَ خَفَّفَ اللّٰهُ عَنْكُمْ وَعَلِمَ اَنَّ فِیْكُمْ ضَعْفًا ؕ فَاِنْ یَّكُنْ مِّنْكُمْ مِّائَةٌ صَابِرَةٌ یَّغْلِبُوْا مِائَتَیْنِ ۚ وَاِنْ یَّكُنْ مِّنْكُمْ اَلْفٌ یَّغْلِبُوْۤا اَلْفَیْنِ بِاِذْنِ اللّٰهِ ؕ وَاللّٰهُ مَعَ الصّٰبِرِیْنَ ۟
اَلْـٰٔـنَஇப்போதுخَفَّفَஇலகுவாக்கினான்اللّٰهُஅல்லாஹ்عَنْكُمْஉங்களுக்குوَعَلِمَஇன்னும் அறிந்தான்اَنَّநிச்சயமாகفِيْكُمْஉங்களில்ضَعْفًا‌ؕபலவீனம்فَاِنْ يَّكُنْஇருந்தால்مِّنْكُمْஉங்களில்مِّائَةٌநூறு (நபர்கள்)صَابِرَةٌபொறுமையாளர்கள்يَّغْلِبُوْاவெல்வார்கள்مِائَتَيْنِ‌ۚஇரு நூறு(நபர்களை)وَاِنْ يَّكُنْஇருந்தால்مِّنْكُمْஉங்களில்اَلْفٌஆயிரம் (நபர்கள்)يَّغْلِبُوْۤاவெல்வார்கள்اَلْفَيْنِஇரண்டாயிரம் (நபர்களை)بِاِذْنِஅனுமதி கொண்டுاللّٰهِؕஅல்லாஹ்வின்وَ اللّٰهُஅல்லாஹ்مَعَஉடன்الصّٰبِرِيْنَ‏பொறுமையாளர்கள்
அல்'ஆன கFப்FபFபல் லாஹு 'அன்கும் வ 'அலிம அன்ன Fபீகும் ளஃFபா; Fப-இ(ன்)ய் யகும் மின்கும் மி'அதுன் ஸாBபிரது(ன்)ய் யக்லிBபூ மி'அதய்ன்; வ இ(ன்)ய்-யகும் மின்கும் அல்Fபு(ன்)ய் யக்லிBபூ அல்Fபய்னி Bபி இத்னில் லாஹ்; வல்லாஹு ம'அஸ் ஸாBபிரீன்
நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் - எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் - (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
مَا كَانَ لِنَبِیٍّ اَنْ یَّكُوْنَ لَهٗۤ اَسْرٰی حَتّٰی یُثْخِنَ فِی الْاَرْضِ ؕ تُرِیْدُوْنَ عَرَضَ الدُّنْیَا ۖۗ وَاللّٰهُ یُرِیْدُ الْاٰخِرَةَ ؕ وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟
مَا كَانَஆகுமானதல்லلِنَبِىٍّஒரு நபிக்குاَنْ يَّكُوْنَஇருப்பதுلَهٗۤஅவருக்குاَسْرٰىகைதிகள்حَتّٰىவரைيُثْخِنَகொன்று குவிப்பார்فِى الْاَرْضِ‌ؕபூமியில்تُرِيْدُوْنَநாடுகிறீர்கள்عَرَضَபொருளைالدُّنْيَاஉலகத்தின்ۖ  وَاللّٰهُஅல்லாஹ்يُرِيْدُநாடுகிறான்الْاٰخِرَةَ‌ ؕமறுமையைوَاللّٰهُஅல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
மா கான லி னBபிய்யின் அய் யகூன லஹூ அஸ்ரா ஹத்தா யுத்கின Fபில் அர்ள்; துரீதூன அரளத் துன்யா வல்லாஹு யுரீதுல் ஆகிரஹ்; வல்லாஹு 'அZஜீZஜுன் ஹகீம்
(விஷமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைபிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருள்களை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ மறுமையில் (உங்கள் நலத்தை) நாடுகிறான். அல்லாஹ் (ஆற்றலில்) மிகைத்தோனும், ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
لَوْلَا كِتٰبٌ مِّنَ اللّٰهِ سَبَقَ لَمَسَّكُمْ فِیْمَاۤ اَخَذْتُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟
لَوْلَا كِتٰبٌவிதி இல்லையெனில்مِّنَஇருந்துاللّٰهِஅல்லாஹ்سَبَقَமுந்தியதுلَمَسَّكُمْபிடித்தே இருக்கும்/உங்களைفِيْمَاۤஎதில்اَخَذْتُمْவாங்கினீர்கள்عَذَابٌ عَظِيْمٌ‏மகத்தான வேதனை
லவ் லா கிதாBபும் மினல் லாஹி ஸBபக லமஸ்ஸகும் Fபீ மா அகத்தும் 'அதாBபுன் 'அளீம்
அல்லாஹ்விடம் (உங்களுடைய மன்னிப்பு) ஏற்கனவே எழுதப்படாமலிருந்தால் நீங்கள் (போர்க் கைதிகளிடம் பத்ரில் ஈட்டுப் பணத்தை) எடுத்துக் கொண்டதன் காரணமாக உங்களை ஒரு பெரிய வேதனை பிடித்திருக்கும்.
فَكُلُوْا مِمَّا غَنِمْتُمْ حَلٰلًا طَیِّبًا ۖؗ وَّاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟۠
فَكُلُوْاஆகவே, புசியுங்கள்مِمَّاஎதில்غَنِمْتُمْவென்றீர்கள்حَلٰلاًஆகுமானதைطَيِّبًا ۖ நல்லوَّاتَّقُواஅஞ்சுங்கள்اللّٰهَ‌ ؕஅல்லாஹ்வைاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
Fபகுலூ மிம்மா கனிம்தும் ஹலாலன் தய்யிBபா; வத்த குல்லாஹ்; இன்னல் லாஹ கFபூருர் ரஹீம்
ஆகவே, எதிரிகளிடமிருந்து உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களை தூய்மையான - ஹலாலானவையாகக் கருதி புசியுங்கள்; அல்லாஹ்வுக்கே அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.  
یٰۤاَیُّهَا النَّبِیُّ قُلْ لِّمَنْ فِیْۤ اَیْدِیْكُمْ مِّنَ الْاَسْرٰۤی ۙ اِنْ یَّعْلَمِ اللّٰهُ فِیْ قُلُوْبِكُمْ خَیْرًا یُّؤْتِكُمْ خَیْرًا مِّمَّاۤ اُخِذَ مِنْكُمْ وَیَغْفِرْ لَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
يٰۤـاَيُّهَا النَّبِىُّநபியே!قُلْகூறுவீராகلِّمَنْஎவருக்குفِىْۤ اَيْدِيْكُمْஉங்கள் கரங்களில்مِّنَ الْاَسْرٰٓىۙகைதிகளில்اِنْ يَّعْلَمِஅறிந்தால்اللّٰهُஅல்லாஹ்فِىْ قُلُوْبِكُمْஉங்கள் உள்ளங்களில்خَيْرًاநல்லதைيُّؤْتِكُمْகொடுப்பான்/உங்களுக்குخَيْرًاசிறந்ததைمِّمَّاۤஎதைவிடاُخِذَஎடுக்கப்பட்டதுمِنْكُمْஉங்களிடமிருந்துوَيَغْفِرْமன்னிப்பான்لَـكُمْ‌ؕஉங்களைوَاللّٰهُஅல்லாஹ்غَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
யா அய்யுஹன் னBபிய்யு குல் லிமன் Fபீ அய்தீகும் மினல் அஸ்ரா இ(ன்)ய்-யஃலமில்லஹு Fபீ குலூBபிகும் கய்ர(ன்)ய் யு'திகும் கய்ரம் மிம்மா உகித மின்கும் வ யக்Fபிர் லகும்; வல்லாஹு கFபூருர் ரஹீம்
நபியே! உங்கள் வசத்தில் இருக்கும் கைதிகளை நோக்கிக் கூறுவீராக: “உங்களுடைய உள்ளங்களில் ஏதாவது ஒரு நன்மை இருப்பதாக அல்லாஹ் அறிந்தால், உங்களிடமிருந்து (ஈட்டுத்தொகையாக) எடுத்துக் கொள்ளப்பட்டதைவிட (இவ்வுலகில்) மேலானதை உங்களுக்கு அவன் கொடுப்பான்; (மறுமையில்) உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் - அல்லாஹ் மன்னிப்போனாகவும், கிருபை உடையோனாகவும் இருக்கின்றான்.
وَاِنْ یُّرِیْدُوْا خِیَانَتَكَ فَقَدْ خَانُوا اللّٰهَ مِنْ قَبْلُ فَاَمْكَنَ مِنْهُمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
وَاِنْ يُّرِيْدُوْاஅவர்கள் நாடினால்خِيَانَـتَكَஉமக்கு மோசடி செய்யفَقَدْ خَانُواமோசடிசெய்துள்ளனர்اللّٰهَஅல்லாஹ்வுக்குمِنْ قَبْلُமுன்னர்فَاَمْكَنَஆகவே ஆதிக்கமளித்தான்مِنْهُمْ ؕஅவர்கள் மீதுوَاللّٰهُஅல்லாஹ்عَلِيْمٌநன்கறிந்தவன்حَكِيْمٌ‏ஞானவான்
வ இ(ன்)ய்-யுரீதூ கியா னதக Fபகத் கானுல்லாஹ மின் கBப்லு Fப அம்கன மின்ஹும்; வல்லாஹு 'அலீமுன் ஹகீம்
(நபியே!) அவர்கள் உமக்கு மோசம் செய்ய நாடினால் (கவலைப்படாதீர்); இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கே மோசம் செய்யக் கருதினார்கள்; (ஆதலால் தான் அவர்களைச் சிறை பிடிக்க) அவர்கள் மீது உமக்கு சக்தியை அவன் அளித்தான். அல்லாஹ் (எல்லாம்) அறிபவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالَّذِیْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰٓىِٕكَ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ وَالَّذِیْنَ اٰمَنُوْا وَلَمْ یُهَاجِرُوْا مَا لَكُمْ مِّنْ وَّلَایَتِهِمْ مِّنْ شَیْءٍ حَتّٰی یُهَاجِرُوْا ۚ وَاِنِ اسْتَنْصَرُوْكُمْ فِی الدِّیْنِ فَعَلَیْكُمُ النَّصْرُ اِلَّا عَلٰی قَوْمٍ بَیْنَكُمْ وَبَیْنَهُمْ مِّیْثَاقٌ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ بَصِیْرٌ ۟
اِنَّநிச்சயமாகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَهَاجَرُوْاஇன்னும் ஹிஜ்ரா சென்றனர்وَجَاهَدُوْاஇன்னும் போர் புரிந்தனர்بِاَمْوَالِهِمْதங்கள் பொருள்களாலும்وَاَنْفُسِهِمْஇன்னும் தங்கள் உயிர்களாலும்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰوَوْاஅரவணைத்தனர்وَّنَصَرُوْۤاஇன்னும் உதவினர்اُولٰۤٮِٕكَஇவர்கள்بَعْضُهُمْஇவர்களில் சிலர்اَوْلِيَآءُபொறுப்பாளர்கள்بَعْضٍ‌ؕசிலருக்குوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَلَمْ يُهَاجِرُوْاஆனால் ஹிஜ்ரா செல்லவில்லைمَا لَـكُمْஉங்களுக்கு ஆகுமானதல்லمِّنْஇருந்துوَّلَايَتِهِمْஅவர்களுக்கு பொறுப்புمِّنْ شَىْءٍஎந்த ஒன்றுக்கும்حَتّٰىவரைيُهَاجِرُوْا‌ ۚஹிஜ்ரா செல்வார்கள்وَاِنِ اسْتَـنْصَرُوْஅவர்கள் உதவி தேடினால்كُمْஉங்களிடம்فِى الدِّيْنِமார்க்கத்தில்فَعَلَيْكُمُஉங்கள் மீது கடமைالنَّصْرُஉதவுவதுاِلَّاதவிரعَلٰىஎதிராகقَوْمٍۢஒரு சமுதாயம்بَيْنَكُمْஉங்களுக்கிடையில்وَبَيْنَهُمْஇன்னும் அவர்களுக்கு இடையில்مِّيْثَاقٌ ؕஉடன்படிக்கைوَاللّٰهُஅல்லாஹ்بِمَاஎவற்றைتَعْمَلُوْنَசெய்கிறீர்கள்بَصِيْرٌ‏உற்று நோக்குபவன்
இன்னல் லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Bபி அம்வாலிஹிம் வ அன்Fபுஸிஹிம் Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன ஆவவ் வ னஸரூ உலா'இக Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; வல்லதீன ஆமனூ வ லம் யுஹாஜிரூ மா லகும் மி(ன்)வ் வலாயதிஹிம் மின் ஷய்'இன் ஹத்தா யுஹாஜிரூ; வ இனிஸ்தன் ஸரூகும் Fபித் தீனி Fப'அலய்கு முன்னஸ்ரு இல்லா 'அலா கவ்மின் Bபய்னகும் வ Bபய்னஹும் மீதாக்; வல்லாஹு Bபிமா தஃமலூன Bபஸீர்
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு, தம் ஊரைவிட்டு வெளியேறி, தம் செல்வங்களையும், உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்தார்களோ, அவர்களும்; எவர் இத்தகையோருக்குப் புகலிடம் கொடுத்து உதவியும் செய்தார்களோ, அவர்களும்; ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் ஆவார்கள் - எவர் ஈமான் கொண்டு (இன்னும் தம்) ஊரைவிட்டு வெளியேறவில்லையோ, அவர்கள் நாடுதுறக்கும் வரையில், நீங்கள் அவர்களுடைய எவ்விஷயத்திலும் பொறுப்பாளியல்ல; எனினும் அவர்கள் மார்க்க விஷயத்தில் உங்களிடம் உதவி தேடினால், உதவி புரிவது உங்கள் மீது கடமையாகும் - ஆனால் உங்களிடம் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவி செய்வது) கூடாது - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு கவனித்துக் கொண்டே இருக்கின்றான்.
وَالَّذِیْنَ كَفَرُوْا بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ؕ اِلَّا تَفْعَلُوْهُ تَكُنْ فِتْنَةٌ فِی الْاَرْضِ وَفَسَادٌ كَبِیْرٌ ۟ؕ
وَالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلِيَآءُபொறுப்பாளர்கள்بَعْضٍ‌ؕசிலருக்குاِلَّا تَفْعَلُوْهُநீங்கள் செய்யவில்லையென்றால் / அதைتَكُنْஆகிவிடும்فِتْنَةٌகுழப்பம்فِى الْاَرْضِபூமியில்وَفَسَادٌஇன்னும் கலகம்كَبِيْرٌؕ‏பெரியது
வல்லதீன கFபரூ Bபஃளுஹும் அவ்லியா'உ Bபஃள்; இல்லா தFப்'அலூஹு தகுன் Fபித்னதுன் Fபில் அர்ளி வ Fபஸாதுன் கBபீர்
நிராகரிப்பவர்களில் சிலருக்குச் சிலர் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். நீங்கள் இதைச் செய்யாவிட்டால் அதாவது ஒருவருக்கொருவர் பாதுகாவலராக இருக்காவிட்டால் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்பட்டு இருக்கும்.
وَالَّذِیْنَ اٰمَنُوْا وَهَاجَرُوْا وَجٰهَدُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ وَالَّذِیْنَ اٰوَوْا وَّنَصَرُوْۤا اُولٰٓىِٕكَ هُمُ الْمُؤْمِنُوْنَ حَقًّا ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَهَاجَرُوْاஇன்னும் ஹிஜ்ரா சென்றனர்وَجٰهَدُوْاஇன்னும் போர் புரிந்தனர்فِىْ سَبِيْلِபாதையில்اللّٰهِஅல்லாஹ்வின்وَالَّذِيْنَஇன்னும் எவர்கள்اَاوَوْاஅரவணைத்தனர்وَّنَصَرُوْۤاஇன்னும் உதவினர்اُولٰۤٮِٕكَ هُمُஇவர்கள்தான்الْمُؤْمِنُوْنَநம்பிக்கையாளர்கள்حَقًّا‌ ؕஉண்மையில்لَّهُمْஇவர்களுக்குمَّغْفِرَةٌமன்னிப்புوَّرِزْقٌஇன்னும் உணவுكَرِيْمٌ‏கண்ணியமானது
வல்லதீன ஆமனூ வ ஹாஜரூ வ ஜாஹதூ Fபீ ஸBபீலில் லாஹி வல்லதீன ஆவவ் வ னஸரூ உலா'இக ஹுமுல் மு'மினூன ஹக்கா; லஹும் மக்Fபிரது(ன்)வ் வ ரிZஜ்குன் கரீம்
எவர்கள் ஈமான் கொண்டு (தம்) ஊரைத்துறந்து அல்லாஹ்வின் பாதையில் போர் புரிகின்றாரோ அ(த்தகைய)வரும் எவர் அ(த்தகைய)வர்களுக்கு புகலிடம் கொடுத்து, உதவி செய்கின்றார்களோ அவர்களும் தான் உண்மையான முஃமின்கள் ஆவார்கள் - அவர்களுக்கு மன்னிப்பு உண்டு. கண்ணியமான உணவும் உண்டு.
وَالَّذِیْنَ اٰمَنُوْا مِنْ بَعْدُ وَهَاجَرُوْا وَجٰهَدُوْا مَعَكُمْ فَاُولٰٓىِٕكَ مِنْكُمْ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰی بِبَعْضٍ فِیْ كِتٰبِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
وَالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்مِنْۢ بَعْدُபின்னர்وَهَاجَرُوْاஇன்னும் ஹிஜ்ரா சென்றனர்وَجَاهَدُوْاஇன்னும் போர் புரிந்தனர்مَعَكُمْஉங்களுடன்فَاُولٰۤٮِٕكَஅவர்கள்مِنْكُمْ‌ؕஉங்களைச் சேர்ந்தவர்கள்தான்وَاُولُوا الْاَرْحَامِஇரத்த பந்தங்கள்بَعْضُهُمْஅவர்களில் சிலர்اَوْلٰىநெருக்கமானவர்بِبَعْضٍசிலருக்குفِىْ كِتٰبِவேதத்தில்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்اِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்بِكُلِّ شَىْءٍஎல்லாவற்றையும்عَلِيْمٌ‏நன்கறிந்தவன்
வல்லதீன ஆமனூ மின் Bபஃது வ ஹாஜரூ வ ஜாஹதூ ம'அகும் Fப உலா'இக மின்கும்; வ உலுல் அர்ஹாமி Bபஃளுஹும் அவ்லா BபிBபஃளின் Fபீ கிதாBபில் லாஹ்; இன்னல் லாஹ Bபிகுல்லி ஷய்'இன் 'அலீம்
இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மார்க்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே; ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.