اِنَّاநிச்சயமாக நாம்خَلَقْنَاபடைத்தோம்الْاِنْسَانَமனிதனைمِنْ نُّطْفَةٍவிந்துத் துளியிலிருந்துاَمْشَاجٍۖகலக்கப்பட்டنَّبْتَلِيْهِஅவனை நாம் சோதிக்கின்றோம்فَجَعَلْنٰهُஆகவே, அவனை ஆக்கினோம்سَمِيْعًۢاசெவியுறுபவனாகبَصِيْرًاபார்ப்பவனாக
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).
وَيُطَافُ عَلَيْهِمْஅவர்கள் முன் சுற்றி வரப்படும்بِاٰنِيَةٍபாத்திரங்கள்مِّنْ فِضَّةٍவெள்ளியினால்وَّاَكْوَابٍகெண்டிகள்كَانَتْஇருக்கின்றقَوَارِيْرَا۟ؔ ۙகண்ணாடிகளாக
وَيَطُوْفُஇன்னும் சுற்றி வருவார்(கள்)عَلَيْهِمْஅவர்களைوِلْدَانٌசிறுவர்கள்مُّخَلَّدُوْنَۚநிரந்தரமானவர்கள்اِذَا رَاَيْتَهُمْநீர் அவர்களைப் பார்த்தால்حَسِبْتَهُمْஅவர்களை எண்ணுவீர்لُـؤْلُـؤًاமுத்துக்களாகمَّنْثُوْرًاபரப்பி வைக்கப்பட்ட
இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.
அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக; அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.
நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர்; அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.
நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.
அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.