வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே; எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை; அவர்களும், தங்களுடைய கோட்டைகள் நிச்சயமாக அல்லாஹ்வை விட்டும் தங்களைத் தடுத்துக் கொள்பவை என்று நினைத்தார்கள்; ஆனால், அவர்கள் எண்ணியிராத புறத்திலிருந்து அவர்கள்பால் அல்லாஹ் (வேதனையைக் கொண்டு) வந்து அவர்களுடைய இதயங்களில் பீதியையும் போட்டான்; அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர்; எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக.
وَلَوْلَاۤ اَنْ كَتَبَவிதித்து இருக்கவில்லை என்றால்اللّٰهُஅல்லாஹ்عَلَيْهِمُஅவர்கள் மீதுالْجَـلَاۤءَவெளியேறுவதைلَعَذَّبَهُمْஅவன் கண்டிப்பாக அவர்களை வேதனை செய்து இருப்பான்فِى الدُّنْيَاؕஇவ்வுலகிலேயேوَلَهُمْஇன்னும் அவர்களுக்குفِى الْاٰخِرَةِமறுமையில்عَذَابُவேதனை உண்டுالنَّارِநரக(ம்)
வ லவ் லா அன் கதBபல் லாஹு 'அலய்ஹிமுல் ஜலா'அ ல'அத்தBபஹும் Fபித் துன்யா வ லஹும் Fபில் ஆகிரதி 'அதாBபுன் னார்
தவிரவும், அவர்கள் மீது வெளியேறுகையை அல்லாஹ் விதிக்காதிருந்தால், இவ்வுலகிலேயே அவர்களைக் கடினமாக வேதனை செய்திருப்பான்; இன்னும் அவர்களுக்கு மறுமையிலும் (நரக) நெருப்பின் வேதனை உண்டு.
ذٰ لِكَ بِاَنَّهُمْஅதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்شَآقُّواமாறுசெய்தார்கள்اللّٰهَஅல்லாஹ்விற்கு(ம்)وَرَسُوْلَهٗ ۚஅவனது தூதருக்கும்وَمَنْயார்يُّشَآقِّமாறுசெய்வாரோاللّٰهَஅல்லாஹ்விற்குفَاِنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்شَدِيْدُகடுமையானவன்الْعِقَابِதண்டிப்பதில்
அதற்கு(க் காரணம்): நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள்; அன்றியும், எவன் அல்லாஹ்வை விரோதிக்கின்றானோ, (அவனை) நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன்.
நீங்கள் (அவர்களுடைய) பேரீத்த மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் வேர்களின் மீது அவை நிற்கும்படியாக விட்டு விட்டதோ அல்லாஹ்வின் அனுமதியாலும், அந்த ஃபாஸிக்குகளை(ப் பாவிகளை) அவன் இழிவு படுத்துவதற்காகவுமே தான்.
மேலும், அல்லாஹ் தன் தூதருக்கு அவர்களிலிருந்தும் எதை (மீட்டுக்) கொடுத்தானோ அதற்காக நீங்கள் குதிரைகளையோ, ஒட்டகங்களையோ ஓட்டி(ப் போர் செய்து) விடவில்லை; எனினும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுவோர் மீது தம் தூதர்களுக்கு ஆதிக்கத்தைத் தருகிறான்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப் பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர் அவர்கள் தாம் உண்மையாளர்கள்.
இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் - இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
அலம் தர இலல் லதீன னாFபகூ யகூலூன லி இக்வானிஹிமுல் லதீன கFபரூ மின் அஹ்லில் கிதாBபி ல'இன் உக்ரிஜ்தும் லனக்ருஜன்ன ம'அகும் வலா னுதீ'உ Fபீகும் அஹதன் அBபத(ன்)வ்-வ இன் கூதில்தும் லனன்ஸுரன் னகும் வல்லாஹு யஷ்ஹது இன்னஹும் லகாதிBபூன்
(நபியே!) நயவஞ்சகம் செய்வோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள், வேதத்தை உடையோரிலுள்ள நிராகரித்துக் கொண்டிருப்போரான தம் சகோதரர்களிடம் “நீங்கள் வெளியேற்றப்பட்டால், உங்களுடன் நாங்களும் நிச்சயமாக வெளியேறுவோம்; அன்றியும், (உங்களுக்கெதிராக) நாங்கள் எவருக்கும், எப்பொழுதும் நாம் வழிப்பட மாட்டோம்; மேலும், உங்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம்” என்று கூறுகின்றனர்; ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று அல்லாஹ் சாட்சியங் கூறுகிறான்.
لَٮِٕنْ اُخْرِجُوْاஅவர்கள் வெளியேற்றப்பட்டால்لَا يَخْرُجُوْنَஇவர்கள் வெளியேற மாட்டார்கள்مَعَهُمْۚஅவர்களுடன்وَلَٮِٕنْ قُوْتِلُوْاஅவர்கள் போர் செய்யப்பட்டால்لَا يَنْصُرُوْنَهُمْۚஇவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள்وَلَٮِٕنْ نَّصَرُوْهُمْஇவர்கள் அவர்களுக்கு உதவினாலும்لَيُوَلُّنَّ الْاَدْبَارَஇவர்களும் கண்டிப்பாக புறமுதுகுதான் காட்டுவார்கள்ثُمَّ لَا يُنْصَرُوْنَபிறகு/இவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்
ல'இன் உக்ரிஜூ லா யக்ருஜூன ம'அஹும் வ ல'இன் கூதிலூ லா யன்ஸுரூனஹும் வ ல'இன் னஸரூஹும் ல யுவல்லுன்னல் அத்Bபார தும்ம லா யுன்ஸரூன்
அவர்கள் வெளியேற்றப்பட்டால், இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள்; மேலும், அவர்களுக்கெதிராக போர் செய்யப்பெற்றால், இவர்கள் அவர்களுக்கு உதவி செய்யவும் மாட்டார்கள்; அன்றியும் இவர்கள் அவர்களுக்கு உதவி செய்தாலும், நிச்சயமாக புறமுதுகு காட்டிப் பின் வாங்கி விடுவார்கள் - பின்னர் அவர்கள் (எத்தகைய) உதவியும் அளிக்கப்பட மாட்டார்கள்.
நிச்சயமாக, அவர்களுடைய இதயங்களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றிய பயமே பலமாக இருக்கிறது; (அல்லாஹ்வை விட்டும் அவர்கள் உங்களை அதிகம் அஞ்சுவதற்கு காரணம்) அவர்கள் (உண்மையை) உணர்ந்து கொள்ளாத சமூகத்தினராக இருப்பதனால்தான் இந்த நிலை!
لَا يُقَاتِلُوْنَكُمْஉங்களிடம் போர் புரிய மாட்டார்கள்جَمِيْعًاஎல்லோரும் சேர்ந்துاِلَّاதவிரفِىْ قُرًى مُّحَصَّنَةٍபாதுகாப்பான ஊர்களில்اَوْஅல்லதுمِنْ وَّرَآءِபின்னால்جُدُرٍؕசுவர்களுக்குبَاْسُهُمْஅவர்களின் பகைமைبَيْنَهُمْஅவர்களுக்கு மத்தியில்شَدِيْدٌ ؕகடுமையாகتَحْسَبُهُمْநீர் அவர்களை எண்ணுகின்றீர்جَمِيْعًاஒன்றுசேர்ந்தவர்களாகوَّقُلُوْبُهُمْஅவர்களின் உள்ளங்களோشَتّٰىؕபலதரப்பட்டதாகذٰلِكَ بِاَنَّهُمْஅதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள்قَوْمٌ لَّا يَعْقِلُوْنَۚமக்கள்/ நிச்சயமாக அவர்கள் சிந்தித்துப் புரியமாட்டார்கள்
கோட்டைகளால் அரண் செய்யப்பட்ட ஊர்களிலோ அல்லது மதில்களுக்கு அப்பால் இருந்து கொண்டோ அல்லாமல் அவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து உங்களுடன் போரிட மாட்டார்கள்; அவர்களுக்குள்ளேயே போரும், பகையும் மிகக் கடுமையானவை; (இந்நிலையில்) அவர்கள் யாவரும் ஒன்று பட்டிருப்பதாக நீர் எண்ணுகிறீர்; (ஆனால்) அவர்களுடைய இதயங்கள், சிதறிக் கிடக்கின்றன - இதற்குக் காரணம்: மெய்யாகவே அவர்கள் அறிவற்ற சமூகத்தார் என்பதுதான்.
இவர்களுக்கு முன்னர் (காலத்தால்) நெருங்கி இருந்த சிலரைப் போன்றே (இவர்களும் இருக்கின்றனர்) அவர்கள் தம் தீய செயல்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.
ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன்.
وَلَا تَكُوْنُوْاஆகிவிடாதீர்கள்كَالَّذِيْنَ نَسُواமறந்தவர்களைப் போல்اللّٰهَஅல்லாஹ்வைفَاَنْسٰٮهُمْஅவன் அவர்களுக்கு மறக்கச் செய்து விட்டான்اَنْفُسَهُمْؕஅவர்களையேاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْفٰسِقُوْنَபாவிகள்
அன்றியும், அல்லாஹ்வை மறந்து விட்டவர்கள் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்; ஏனெனில் அவர்கள் தங்களையே மறக்கும்படி (அல்லாஹ்) செய்து விட்டான்; அத்தகையோர் தாம் ஃபாஸிக்குகள் - பெரும் பாவிகள் ஆவார்கள்.
(நபியே!) நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம்.
அவனே அல்லாஹ், வணக்கத்திற்குரிய நாயன் அவனைத் தவிர, வேறு யாரும் இல்லை; அவனே பேரரசன்; மிகப்பரிசுத்தமானவன்; சாந்தியளிப்பவன்; தஞ்சமளிப்பவன்; பாதுகாப்பவன்; (யாவரையும்) மிகைப்பவன்; அடக்கியாள்பவன்; பெருமைக்குரித்தானவன் - அவர்கள் இணைவைப்பவற்றையெல்லாம் விட்டு அல்லாஹ் மிகத் தூய்மையானவன்.