14. ஸூரத்து இப்ராஹீம்

மக்கீ, வசனங்கள்: 52

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
الٓرٰ ۫ كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَیْكَ لِتُخْرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬ بِاِذْنِ رَبِّهِمْ اِلٰی صِرَاطِ الْعَزِیْزِ الْحَمِیْدِ ۟ۙ
الۤرٰ‌அலிஃப்; லாம்; றா.كِتٰبٌஒரு வேதம்اَنْزَلْنٰهُஇதை இறக்கினோம்اِلَيْكَஉம்மீதுلِـتُخْرِجَநீர் வெளியேற்றுவதற்காகالنَّاسَமக்களைمِنَ الظُّلُمٰتِஇருள்களிலிருந்துاِلَى النُّوْرِ  ۙபக்கம்/ஒளியின்بِاِذْنِஅனுமதி கொண்டுرَبِّهِمْஅவர்களுடைய இறைவனின்اِلٰىபக்கம்صِرَاطِபாதையின்الْعَزِيْزِமிகைத்தவன்الْحَمِيْدِۙ‏மகா புகழாளன்
அலிFப்-லாம்-ரா; கிதாBபுன் அன்Zஜல்னாஹு இலய்க லிதுக்ரிஜன்-னாஸ மினள் ளுலுமாதி இலன் னூரி Bபி-இத்னி ரBப்Bபிஹிம் இலா ஸிராதில் 'அZஜீZஜில் ஹமீத்
அலிஃப், லாம், றா. (நபியே! இது) வேதமாகும்; மனிதர்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கியிருக்கின்றோம்; புகழுக்குரியவனும், வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்) பாதையில் (அவர்களை நீர் கொண்டுவருவீராக!).
اللّٰهِ الَّذِیْ لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ وَوَیْلٌ لِّلْكٰفِرِیْنَ مِنْ عَذَابٍ شَدِیْدِ ۟ۙ
اللّٰهِஅல்லாஹ்الَّذِىْஎத்தகையவன்لَهٗஅவனுக்கேمَا فِى السَّمٰوٰتِவானங்களில் உள்ளவைوَمَا فِى الْاَرْضِ‌ؕபூமியில் உள்ளவைوَوَيْلٌகேடு உண்டாகுக!لِّـلْكٰفِرِيْنَநிராகரிப்பாளர்களுக்குمِنْ عَذَابٍவேதனையின்شَدِيْدِ ۙ‏கடினமானது
அல்லாஹில் லதீ லஹூ மா Fபிஸ் ஸமாவாதி வமா Fபில்ல் அர்ள்; வ வய்லுல் லில்காFபிரீன மின் 'அதாBபின் ஷதீத்
அல்லாஹ் எத்தகையவன் என்றால் வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமாகும்; இன்னும் (இதை) நிராகரிப்போருக்குக் கடினமான வேதனையினால் பெருங்கேடுதான்.
لَّذِیْنَ یَسْتَحِبُّوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا عَلَی الْاٰخِرَةِ وَیَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ؕ اُولٰٓىِٕكَ فِیْ ضَلٰلٍ بَعِیْدٍ ۟
اۨلَّذِيْنَஎவர்கள்يَسْتَحِبُّوْنَவிரும்புவார்கள்الْحَيٰوةَவாழ்வைالدُّنْيَاஉலகம்عَلَى الْاٰخِرَةِமறுமையை விடوَيَصُدُّوْنَஇன்னும் தடுப்பார்கள்عَنْ سَبِيْلِபாதையை விட்டுاللّٰهِஅல்லாஹ்வின்وَيَبْغُوْنَهَاஇன்னும் தேடுகின்றனர்/அதில்عِوَجًا‌ ؕ اُولٰۤٮِٕكَகோணலை/இவர்கள்فِىْ ضَلٰلٍۢவழிகேட்டில்بَعِيْدٍ‏தூரமானது
அல்லதீன யஸ்தஹிBப்Bபூ னல் ஹயாதத் துன்யா 'அலல் ஆகிரதி வ யஸுத்தூன 'அன்ஸBபீலில் லாஹி வ யBப்கூனஹா 'இவஜா; உலா 'இக Fபீ ளலாலின் Bப'ஈத்
இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே (அதிகமாக) நேசிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் வழியை விட்டும் (மற்றவர்களையும்) தடுக்கின்றார்கள்; அது கோணலாக (இருக்க வேண்டுமென) விரும்புகிறார்கள் - இவர்கள் மிகவும் தூரமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.
وَمَاۤ اَرْسَلْنَا مِنْ رَّسُوْلٍ اِلَّا بِلِسَانِ قَوْمِهٖ لِیُبَیِّنَ لَهُمْ ؕ فَیُضِلُّ اللّٰهُ مَنْ یَّشَآءُ وَیَهْدِیْ مَنْ یَّشَآءُ ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
وَمَاۤ اَرْسَلْنَاநாம் அனுப்பவில்லைمِنْ رَّسُوْلٍஎந்த ஒரு தூதரைاِلَّاதவிரبِلِسَانِமொழியைக் கொண்டேقَوْمِهٖஅவருடைய மக்களின்لِيُبَيِّنَஅவர் தெளிவுபடுத்துவதற்காகلَهُمْ‌ؕஅவர்களுக்குفَيُضِلُّஆகவேவழிகெடுக்கிறான்اللّٰهُஅல்லாஹ்مَنْஎவரைيَّشَآءُநாடுவான்وَيَهْدِىْஇன்னும் நேர்வழி செலுத்துகிறான்مَنْ يَّشَآءُ‌ ؕஎவரை/நாடுவான்وَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
வ மா அர்ஸல்னா மிர் ரஸூலின் இல்லா Bபிலிஸானி கவ்மிஹீ லியுBபய்யின லஹும் Fப யுளில்லுல் லாஹு மய் யஷா'உ வ யஹ்தீ மய் யஷா'; வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுடைய மொழியிலேயே (போதிக்கும் படி) நாம் அனுப்பிவைத்தோம்; அல்லாஹ் தான் நாடியோரை வழிதவறச் செய்கின்றான், தான் நாடியோருக்கு நேர்வழியையும் காண்பிக்கின்றான்; அவன் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰی بِاٰیٰتِنَاۤ اَنْ اَخْرِجْ قَوْمَكَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوْرِ ۙ۬ وَذَكِّرْهُمْ بِاَیّٰىمِ اللّٰهِ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟
وَلَـقَدْ اَرْسَلْنَاதிட்டமாக அனுப்பினோம்مُوْسٰىமூஸாவைبِاٰيٰتِنَاۤநம் அத்தாட்சிகளைக் கொண்டுاَنْ اَخْرِجْவெளியேற்றுقَوْمَكَஉம் சமுதாயத்தைمِنَ الظُّلُمٰتِஇருள்களிலிருந்துاِلَى النُّوْرِ ۙஒளியின் பக்கம்وَذَكِّرْஇன்னும் ஞாபகமூட்டுهُمْஅவர்களுக்குبِاَيّٰٮمِ(அந்)நாட்களைاللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்اِنَّ فِىْ ذٰ لِكَநிச்சயமாக/இதில்لَاٰيٰتٍஅத்தாட்சிகள்لّـِكُلِّஎல்லோருக்கும்صَبَّارٍமிக பொறுமையாளர்شَكُوْرٍ‏மிக நன்றியறிபவர்
வ லகத் அர்ஸல்னா மூஸா Bபி ஆயாதினா அன் அக்ரிஜ் கவ்மக மினள் ளுலுமாதி இலன் னூரி வ தக் கிர்ஹும் Bபி அய்யாமில் லாஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகுல்லி ஸBப்Bபாரின் ஷகூர்
நிச்சயமாக, நாம் மூஸாவை நம்முடைய அத்தாட்சிகளை கொண்டு அனுப்பிவைத்து, “நீர் உம்முடைய சமூகத்தினரை இருள்களிலிருந்து, வெளியேற்றிப் பிரகாசத்தின் பால் கொண்டு வாரும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு நினைவூட்டுவீராக” என்று கட்டளையிட்டோம்; நிச்சயமாக இதில் பொறுமையுடையோர், நன்றி செலுத்துவோர் எல்லோருக்கும் படிப்பினைகள் இருக்கின்றன.
وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهِ اذْكُرُوْا نِعْمَةَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ اَنْجٰىكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ وَیُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟۠
وَاِذْ قَالَகூறிய சமயம்مُوْسٰىமூஸாلِـقَوْمِهِதன் சமுதாயத்திற்குاذْكُرُوْاநினைவு கூறுங்கள்نِعْمَةَஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்عَلَيْكُمْஉங்கள் மீதுاِذْபோதுاَنْجٰٮكُمْஉங்களை காப்பாற்றினான்مِّنْஇருந்துاٰلِகூட்டம்فِرْعَوْنَஃபிர்அவ்னுடையيَسُوْمُوْنَـكُمْசிரமம் தந்தார்கள்/உங்களுக்குسُوْۤءَ الْعَذَابِகடினமான வேதனையால்وَ يُذَبِّحُوْنَஇன்னும் அறுத்தார்கள்اَبْنَآءَஆண் பிள்ளைகளைكُمْஉங்கள்وَيَسْتَحْيُوْنَஇன்னும் வாழவிட்டார்கள்نِسَآءَபெண்(பிள்ளை)களைكُمْ‌ ؕஉங்கள்وَفِىْ ذٰ لِكُمْஇன்னும் இதில்بَلَاۤ ءٌஒரு சோதனைمِّنْஇருந்துرَّبِّكُمْஉங்கள் இறைவன்عَظِيْمٌ‏மகத்தானது
வ இத் கால மூஸா லிகவ்மிஹித் குரூ னிஃமதல் லாஹி 'அலய்கும் இத் அன்ஜாகும் மின் ஆலி Fபிர்'அவ்ன யஸூமூ னகும் ஸூ'அல் 'அதாBபி வ யுதBப்Bபிஹூன அBப்னா'அகும் வ யஸ்தஹ்யூன னிஸா'அகும்; வ Fபீ தாலிகும் Bபலா'உன் மிர் ரBப்Bபிகும் 'அளீம்
மூஸா தம் சமூகத்தாரிடம்: ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து (அல்லாஹ்) உங்களைக் காப்பாற்றிய போது, அல்லாஹ் உங்களுக்குப் புரிந்த அருள் கொடையை நினைத்துப் பாருங்கள்; அவர்களோ, உங்களைக் கொடிய வேதனையால் துன்புறுத்தியதுடன், உங்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)தும் உங்கள் பெண்மக்களை (மட்டும்) உயிருடன் விட்டுக் கொண்டும் இருந்தார்கள் - இதில் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு மகத்தான சோதனை (ஏற்பட்டு) இருந்தது” என்று கூறினார்.
وَاِذْ تَاَذَّنَ رَبُّكُمْ لَىِٕنْ شَكَرْتُمْ لَاَزِیْدَنَّكُمْ وَلَىِٕنْ كَفَرْتُمْ اِنَّ عَذَابِیْ لَشَدِیْدٌ ۟
وَاِذْ تَاَذَّنَஇன்னும் அறிவித்த சமயம்رَبُّكُمْஉங்கள் இறைவன்لَٮِٕنْ شَكَرْتُمْநீங்கள்நன்றி செலுத்தினால்لَاَزِيْدَنَّـكُمْ‌அதிகப்படுத்துவேன்/ உங்களுக்குوَلَٮِٕنْ كَفَرْتُمْநீங்கள் நிராகரித்தால்اِنَّநிச்சயமாகعَذَابِىْஎன் வேதனைلَشَدِيْدٌ‏கடுமையானதுதான்
வ இத் த அத்தன ரBப்Bபுகும் ல'இன் ஷகர்தும் ல அZஜீதன்னகும் வ ல'இன் கFபர்தும் இன்ன 'அதாBபீ லஷதீத்
“(இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்).
وَقَالَ مُوْسٰۤی اِنْ تَكْفُرُوْۤا اَنْتُمْ وَمَنْ فِی الْاَرْضِ جَمِیْعًا ۙ فَاِنَّ اللّٰهَ لَغَنِیٌّ حَمِیْدٌ ۟
وَقَالَகூறினார்مُوْسٰٓىமூஸாاِنْ تَكْفُرُوْۤاநீங்கள் நிராகரித்தால்اَنْـتُمْநீங்கள்وَمَنْஇன்னும் எவர்فِى الْاَرْضِபூமியில்جَمِيْعًا ۙஅனைவரும்فَاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்لَـغَنِىٌّநிறைவானவன்حَمِيْدٌ‏மகா புகழாளன்
வ கால மூஸா இன் தக்Fபுரூ அன்தும் வ மன் Fபில் அர்ளி ஜமீ'அன் Fப இன்னல் லாஹ ல கனிய்யுன் ஹமீத்
மேலும் மூஸா (தம் சமூகத்தாரிடம்) “நீங்களும், பூமியிலுள்ள அனைவரும் சேர்ந்து மாறு செய்த போதிலும், (அவனுக்கு யாதொரு நஷ்டமும் ஏற்படாது;) நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றோனும், புகழுடையோனுமாக இருக்கின்றான்” என்றும் கூறினார்.
اَلَمْ یَاْتِكُمْ نَبَؤُا الَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ قَوْمِ نُوْحٍ وَّعَادٍ وَّثَمُوْدَ ۛؕ۬ وَالَّذِیْنَ مِنْ بَعْدِهِمْ ۛؕ لَا یَعْلَمُهُمْ اِلَّا اللّٰهُ ؕ جَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ فَرَدُّوْۤا اَیْدِیَهُمْ فِیْۤ اَفْوَاهِهِمْ وَقَالُوْۤا اِنَّا كَفَرْنَا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ وَاِنَّا لَفِیْ شَكٍّ مِّمَّا تَدْعُوْنَنَاۤ اِلَیْهِ مُرِیْبٍ ۟
اَلَمْ يَاْتِكُمْஉங்களுக்கு வரவில்லையா?نَبَـؤُاசரித்திரம்الَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلِكُمْஉங்களுக்கு முன்னர்قَوْمِமக்கள்نُوْحٍநூஹூடையوَّعَادٍஇன்னும் ஆதுوَّثَمُوْدَ‌  ۛؕஸமூதுوَالَّذِيْنَஇன்னும் எவர்கள்مِنْۢ بَعْدِهِمْ ۛؕஅவர்களுக்குப் பின்னர்لَاஅறியமாட்டார்يَعْلَمُهُمْஅவர்களைاِلَّاதவிரاللّٰهُ‌ؕஅல்லாஹ்جَآءَتْهُمْவந்தா(ர்க)ள்/அவர்களிடம்رُسُلُهُمْதூதர்கள்/ அவர்களுடையبِالْبَيِّنٰتِதெளிவான சான்றுகளைக் கொண்டுفَرَدُّوْۤاதிருப்பினர்اَيْدِيَهُمْகைகளை/தங்கள்فِىْۤ اَفْوَاهِهِمْதங்கள் வாய்களின் பக்கமேوَقَالُوْۤاஇன்னும் கூறினர்اِنَّاநிச்சயமாக நாங்கள்كَفَرْنَاநிராகரித்தோம்بِمَاۤஎதைக் கொண்டுاُرْسِلْـتُمْநீங்கள் அனுப்பப்பட்டீர்களோبِهٖஅதைக் கொண்டுوَاِنَّاஇன்னும் நிச்சயமாக நாங்கள்لَفِىْ شَكٍّசந்தேகத்தில்مِّمَّا تَدْعُوْنَـنَاۤஎதில்/அழைக்கிறீர்கள்/எங்களைاِلَيْهِஅதன் பக்கம்مُرِيْبٍ‏ஆழமான சந்தேகம்
அலம் ய'திகும் னBப'உல் லதீன மின் கBப்லிகும் கவ்மி னூஹி(ன்)வ் வ 'ஆதி(ன்)வ் வ தமூத், வல்லதீன மிம் Bபஃதிஹிம்; லா யஃலமுஹும் இல்லல்லாஹ்; ஜா'அத் ஹும் ருஸுலுஹும் Bபில்Bபய்யினாதி Fபரத்தூ அய்தியஹும் Fபீ அFப்வாஹிஹிம் வ காலூ இன்னா கFபர்னா Bபிமா உர்ஸில்தும் Bபிஹீ வ இன்னா லFபீ ஷக்கிம் மிம்மா தத்'ஊனனா இலய்ஹி முரீBப்
உங்களுக்கு முன் சென்று போன நூஹ், ஆது, ஸமூது போன்ற சமூகத்தாரின் செய்தியும், அவர்களுக்குப் பின் வந்தவர்களுடைய செய்தியும் உங்களுக்கு வரவில்லையா? அவர்களை அல்லாஹ்வைத் தவிர (வேறு) எவரும் அறியார்; அவர்களிடத்தில் (அல்லாஹ் அனுப்பிய) அவர்களுடைய (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கம் கொண்டு சென்று, “நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ அ(த் தூ)தை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்; அன்றியும், நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கிறீர்களோ, அதைப் பற்றியும் நாங்கள் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்.
قَالَتْ رُسُلُهُمْ اَفِی اللّٰهِ شَكٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ یَدْعُوْكُمْ لِیَغْفِرَ لَكُمْ مِّنْ ذُنُوْبِكُمْ وَیُؤَخِّرَكُمْ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ قَالُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا بَشَرٌ مِّثْلُنَا ؕ تُرِیْدُوْنَ اَنْ تَصُدُّوْنَا عَمَّا كَانَ یَعْبُدُ اٰبَآؤُنَا فَاْتُوْنَا بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟
قَالَتْகூறினா(ர்க)ள்رُسُلُهُمْதூதர்கள்/ அவர்களுடையاَفِى اللّٰهِஅல்லாஹ்வின் விஷயத்திலா?شَكٌّசந்தேகம்فَاطِرِபடைப்பாளனாகியالسَّمٰوٰتِவானங்கள்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமிيَدْعُوْكُمْஅழைக்கிறான்/ உங்களைلِيَـغْفِرَமன்னிப்பதற்காகلَـكُمْஉங்களுக்குمِّنْ ذُنُوْبِكُمْஉங்கள் குற்றங்களைوَيُؤَخِّرَஇன்னும் விட்டு வைப்பதற்குكُمْஉங்களைاِلٰٓىவரைاَجَلٍஒரு காலம்مُّسَمًّى‌ؕகுறிக்கப்பட்டதுقَالُوْۤاகூறினர்اِنْ اَنْتُمْநீங்கள் இல்லைاِلَّاதவிரبَشَرٌமனிதர்களேمِّثْلُنَاؕஎங்களைப் போன்றتُرِيْدُوْنَநாடுகிறீர்கள்اَنْ تَصُدُّوْنَاஎங்களை நீங்கள் தடுக்கعَمَّاஎவற்றை விட்டுكَانَ يَعْبُدُவணங்கிக் கொண்டிருந்தார்اٰبَآؤُنَاமூதாதைகள்/எங்கள்فَاْتُوْنَاஆகவே வாருங்கள்/நம்மிடம்بِسُلْطٰنٍஆதாரத்தைக் கொண்டுمُّبِيْنٍ‏தெளிவானது
காலத் ருஸுலுஹும் அFபில்லாஹி ஷக்குன் Fபாதிரிஸ் ஸமாவாதி வல் அர்ளி யத்'ஊகும் லியக்Fபிர லகும் மின் துனூBபிகும் வ யு'அகிரகும் இலா அஜலின் முஸம்மா; காலூ இன் அன்தும் இல்லா Bபஷரும் மித்லுனா துரீதூன அன் தஸுத்தூனா 'அம்மா கான யஃBபுது ஆBபா'உனா Fப'தூனா Bபி ஸுல்தானின் முBபீன்
அதற்கு, (இறைவன் அனுப்பிய) அவர்களுடைய தூதர்கள் “வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வைப் பற்றியா (உங்களுக்கு) சந்தேகம்? அவன்; உங்களுடைய பாவங்களை மன்னிப்பதற்காக உங்களை அழைக்கின்றான், (அத்துடன்) ஒரு குறிப்பிட்ட தவணைவரை உங்களுக்கு (உலகில்) அவகாசம் அளிக்கின்றான்” என்று கூறினார்கள்; (அப்போது) அவர்கள் “நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயன்றி (வேறு) இல்லை; எங்களுடைய மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் எங்களைத் தடுக்கவா நீங்கள் விரும்புகிறீர்கள்? அப்படியானால், எங்களுக்குத் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்” எனக் கூறினார்கள்.
قَالَتْ لَهُمْ رُسُلُهُمْ اِنْ نَّحْنُ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ وَلٰكِنَّ اللّٰهَ یَمُنُّ عَلٰی مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ ؕ وَمَا كَانَ لَنَاۤ اَنْ نَّاْتِیَكُمْ بِسُلْطٰنٍ اِلَّا بِاِذْنِ اللّٰهِ ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟
قَالَتْகூறினா(ர்க)ள்لَهُمْஅவர்களுக்குرُسُلُهُمْதூதர்கள்/ அவர்களுடையاِنْஇல்லைنَّحْنُநாங்கள்اِلَّاதவிரبَشَرٌமனிதர்களேمِّثْلُكُمْஉங்களைப் போன்றوَلٰـكِنَّஎனினும்اللّٰهَஅல்லாஹ்يَمُنُّஅருள் புரிகிறான்عَلٰىமீதுمَنْஎவர்يَّشَآءُநாடுவான்مِنْ عِبَادِهٖ‌ؕதன் அடியார்களில்وَمَا كَانَ لَنَاۤமுடியாது/எங்களுக்குاَنْ نَّاْتِيَكُمْஉங்களிடம் நாம் வருவதுبِسُلْطٰنٍஓர் ஆதாரத்தைக் கொண்டுاِلَّاதவிரبِاِذْنِஅனுமதி கொண்டேاللّٰهِ‌ؕஅல்லாஹ்வுடையوَعَلَى اللّٰهِஅல்லாஹ்வின் மீதேفَلْيَتَوَكَّلِநம்பிக்கை வைக்கட்டும்الْمُؤْمِنُوْنَ‏நம்பிக்கையாளர்கள்
காலத் லஹும் ருஸுலுஹும் இன் னஹ்னு இல்லா Bபஷரும் மித்லுகும் வ லாகின்னல் லாஹ யமுன்னு 'அலா மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ வமா கான லனா அன் ன'தியகும் Bபிஸுல் தானின் இல்லா Bபி இத்னில் லாஹ்; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் மு'மினூன்
(அதற்கு) அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, “நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை; எனினும் அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர் மீது அருள் புரிகிறான்; அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை; இன்னும் உறுதியாக நம்பிக்கை கொண்டோர் எல்லாம், அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்” என்று கூறினார்கள்.
وَمَا لَنَاۤ اَلَّا نَتَوَكَّلَ عَلَی اللّٰهِ وَقَدْ هَدٰىنَا سُبُلَنَا ؕ وَلَنَصْبِرَنَّ عَلٰی مَاۤ اٰذَیْتُمُوْنَا ؕ وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُتَوَكِّلُوْنَ ۟۠
وَمَا لَـنَاۤஎங்களுக்கென்ன?اَلَّا نَـتَوَكَّلَநாங்கள் நம்பிக்கை வைக்காதிருக்கعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்وَقَدْநேர்வழிபடுத்தினான்هَدٰٮنَاஎங்களைسُبُلَنَا‌ؕஎங்கள் பாதைகளில்وَلَــنَصْبِرَنَّநிச்சயமாக பொறுப்போம்عَلٰى مَاۤ اٰذَيْتُمُوْنَا‌ؕநீங்கள் துன்புறுத்துவதில் எங்களைوَعَلَى اللّٰهِஅல்லாஹ் மீதேفَلْيَتَوَكَّلِஆகவே நம்பிக்கை வைக்கட்டும்الْمُتَوَكِّلُوْنَ‏நம்பிக்கை வைப்பவர்கள்
வமா லனா அல்லா னதவக்கல 'அலல் லாஹி வ கத் ஹதானா ஸுBபுலனா; வ லனஸ்Bபிரன்ன 'அலா மா ஆதய்துமூனா; வ 'அலல் லாஹி Fபல்யதவக்கலில் முதவக்கிலூன்
“அல்லாஹ்வின் மீதே நாங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான், (நாங்கள் வெற்றி பெறும்) வழிகளையும் எங்களுக்கு காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாக பொறுத்துக் கொள்வோம்; உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்.)  
وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِّنْ اَرْضِنَاۤ اَوْ لَتَعُوْدُنَّ فِیْ مِلَّتِنَا ؕ فَاَوْحٰۤی اِلَیْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظّٰلِمِیْنَ ۟ۙ
وَقَالَகூறினார்(கள்)الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்لِرُسُلِهِمْதங்கள் தூதர்களிடம்لَـنُخْرِجَنَّكُمْநிச்சயமாக வெளியேற்றுவோம்/உங்களைمِّنْ اَرْضِنَاۤஎங்கள் பூமியிலிருந்துاَوْஅல்லதுلَـتَعُوْدُنَّநீங்கள் நிச்சயமாக திரும்பிடவேண்டும்فِىْ مِلَّتِنَا‌ ؕஎங்கள் மார்க்கத்தில்فَاَوْحٰۤىஆகவே வஹீ அறிவித்தான்اِلَيْهِمْஅவர்களுக்குرَبُّهُمْஇறைவன்/அவர்களுடையلَــنُهْلِكَنَّநிச்சயமாக அழிப்போம்الظّٰلِمِيْنَۙ‏அநியாயக்காரர்களை
வ காலல் லதீன கFபரூ லி ருஸுலிஹிம் லனுக்ரிஜன்ன கும் மின் ஆர்ளினா அவ் ல த'ஊதுன்ன Fபீ மில்லதினா Fப அவ்ஹா இலய்ஹிம் ரBப்Bபுஹும் லனுஹ்லிகன்னத் ளாலிமீன்
நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள், அப்போது: “நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்” என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்.
وَلَنُسْكِنَنَّكُمُ الْاَرْضَ مِنْ بَعْدِهِمْ ؕ ذٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِیْ وَخَافَ وَعِیْدِ ۟
وَلَـنُسْكِنَنَّكُمُநிச்சயமாக குடி அமர்த்துவோம்/உங்களைالْاَرْضَபூமியில்مِنْۢ بَعْدِபின்னர்هِمْ‌ؕஅவர்களுக்குذٰ لِكَஇதுلِمَنْஎவருக்குخَافَபயந்தார்مَقَامِىْஎன் முன்னால் நிற்பதைوَخَافَஇன்னும் பயந்தார்وَعِيْدِ‏என் எச்சரிக்கையை
வ லனுஸ்கினன் னகுமுல் அர்ள மின் Bபஃதிஹிம்; தாலிக லிமன் காFப மகாமீ வ காFப வ'ஈத்
“நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும்” (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்).
وَاسْتَفْتَحُوْا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِیْدٍ ۟ۙ
وَاسْتَفْتَحُوْاஆகவே வெற்றிபெற முயற்சித்தார்கள்وَخَابَஅழிந்தார்(கள்)كُلُّஎல்லோரும்جَبَّارٍபிடிவாதக்காரர்(கள்)عَنِيْدٍۙ‏வம்பர்(கள்)
வஸ்தFப்தஹூ வ காBப குல்லு ஜBப்Bபாரின் 'அனீத்
ஆகவே, அ(த் தூது)வர்கள் அல்லாஹ்வின் உதவியை நாடினார்கள்; பிடிவாதக்காரவம்பன் ஒவ்வொருவனும் அழிவை அடைந்தான்.
مِّنْ وَّرَآىِٕهٖ جَهَنَّمُ وَیُسْقٰی مِنْ مَّآءٍ صَدِیْدٍ ۟ۙ
مِّنْ وَّرَآٮِٕهٖஅவனுக்கு பின்புறத்தில்جَهَـنَّمُநரகம்وَيُسْقٰىஇன்னும் புகட்டப்படுவான்مِنْஇருந்துمَّآءٍநீர்صَدِيْدٍۙ‏சீழ்
மி(ன்)வ் வரா'இஹீ ஜஹன்னமு வ யுஸ்கா மின் மா'இன் ஸதீத்
அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.
یَّتَجَرَّعُهٗ وَلَا یَكَادُ یُسِیْغُهٗ وَیَاْتِیْهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَّمَا هُوَ بِمَیِّتٍ ؕ وَمِنْ وَّرَآىِٕهٖ عَذَابٌ غَلِیْظٌ ۟
يَّتَجَرَّعُهٗஅள்ளிக் குடிப்பான்/அதைوَلَا يَكَادُ يُسِيْـغُهٗஇலகுவாக குடித்து விடமாட்டான்/அதைوَيَاْتِيْهِவரும்/அவனுக்குالْمَوْتُமரணம்مِنْ كُلِّ مَكَانٍஒவ்வொரு இடத்திலிருந்தும்وَّمَاஇல்லைهُوَஅவன்بِمَيِّتٍؕ‌இறந்து விடுபவனாகوَمِنْ وَّرَآٮِٕهٖஅவனுக்குப்பின்னால்عَذَابٌவேதனைغَلِيْظٌ‏கடினமானது
யதஜர்ர'உஹூ வலா யகாது யுஸீகுஹூ வ ய'தீஹில் மவ்து மின் குல்லி மகானி(ன்)வ் வமா ஹுவ Bபிமய்யிதி(ன்)வ் வ மி(ன்)வ் வரா'இஹீ 'அதாBபுன் கலீள்
அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது; ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.
مَثَلُ الَّذِیْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ اَعْمَالُهُمْ كَرَمَادِ شْتَدَّتْ بِهِ الرِّیْحُ فِیْ یَوْمٍ عَاصِفٍ ؕ لَا یَقْدِرُوْنَ مِمَّا كَسَبُوْا عَلٰی شَیْءٍ ؕ ذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِیْدُ ۟
مَثَلُஉதாரணம்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தனர்بِرَبِّهِمْ‌தங்கள் இறைவனைاَعْمَالُهُمْஅவர்களுடைய செயல்கள்كَرَمَادِசாம்பல்ۨاشْتَدَّتْகடுமையாக அடித்துச் சென்றதுبِهِஅதைالرِّيْحُகாற்றுفِىْ يَوْمٍகாலத்தில்عَاصِفٍ‌ؕபுயல்لَا يَقْدِرُوْنَஅவர்கள் சக்தி பெறமாட்டார்கள்مِمَّا كَسَبُوْاஅவர்கள் செய்ததில்عَلٰى شَىْءٍ‌ؕஎதையும்ذٰ لِكَ هُوَஇதுதான்الضَّلٰلُவழிகேடுالْبَعِيْدُ‏தூரமானது
மதலுல் லதீன கFபரூ Bபி ரBப்Bபிஹிம்; அஃமாலுஹும் கரமாதினிஷ் தத்தத் Bபிஹிர் ரீஹு Fபீ யவ்மின் 'ஆஸிFபின்; லா யக்திரூன மிம்மா கஸBபூ 'அலா ஷய்'; தாலிக ஹுவத் ளலாலுல் Bப'ஈத்
எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது: அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை: புயல் காற்று கடினமாக வீசும் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது; இதுவே வெகு தூரமான வழிகேடாகும்.
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ وَیَاْتِ بِخَلْقٍ جَدِیْدٍ ۟ۙ
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?اَنَّநிச்சயமாகاللّٰهَஅல்லாஹ்خَلَقَபடைத்துள்ளான்السَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضَஇன்னும் பூமியைبِالْحَـقِّ‌ؕஉண்மையைக் கொண்டுاِنْ يَّشَاْஅவன் நாடினால்يُذْهِبْكُمْபோக்கி விடுவான்/உங்களைوَيَاْتِஇன்னும் வருவான்بِخَلْقٍபடைப்பைக் கொண்டுجَدِيْدٍۙ‏புதியது
அலம் தர அன்னல் லாஹ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள Bபில்ஹக்க்; இ(ன்)ய் யஷ யுத்ஹிBப்கும் வ ய'தி Bபிகல்கின் ஜதீத்
நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்திருக்கின்றான் என்பதை நீர் பார்க்கவிலலையா? அவன் நாடினால் உங்களைப் போக்கிவிட்டு புதியதொரு படைப்பைக் கொண்டு வருவான்.
وَّمَا ذٰلِكَ عَلَی اللّٰهِ بِعَزِیْزٍ ۟
وَّمَاஇல்லைذٰلِكَஅதுعَلَىமீதுاللّٰهِஅல்லாஹ்بِعَزِيْزٍ‏சிரமமானதாக
வமா தாலிக 'அலல் லாஹி Bபி 'அZஜீZஜ்
இன்னும், இது அல்லாஹ்வுக்குக் கடினமானதுமல்ல.
وَبَرَزُوْا لِلّٰهِ جَمِیْعًا فَقَالَ الضُّعَفٰٓؤُا لِلَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ اَنْتُمْ مُّغْنُوْنَ عَنَّا مِنْ عَذَابِ اللّٰهِ مِنْ شَیْءٍ ؕ قَالُوْا لَوْ هَدٰىنَا اللّٰهُ لَهَدَیْنٰكُمْ ؕ سَوَآءٌ عَلَیْنَاۤ اَجَزِعْنَاۤ اَمْ صَبَرْنَا مَا لَنَا مِنْ مَّحِیْصٍ ۟۠
وَبَرَزُوْاவெளிப்படுவார்கள்لِلّٰهِஅல்லாஹ்விற்கு முன்جَمِيْعًاஅனைவரும்فَقَالَகூறுவார்(கள்)الضُّعَفٰۤؤُاபலவீனர்கள்لِلَّذِيْنَஎவர்களுக்குاسْتَكْبَرُوْۤاபெருமையடித்தனர்اِنَّاநிச்சயமாக நாங்கள்كُنَّاஇருந்தோம்لَـكُمْஉங்களைتَبَعًاபின்பற்றுபவர்களாகفَهَلْஆகவே ?اَنْـتُمْநீங்கள்مُّغْـنُوْنَதடுப்பீர்கள்عَنَّاஎங்களை விட்டுمِنْ عَذَابِவேதனையிலிருந்துاللّٰهِஅல்லாஹ்வின்مِنْ شَىْءٍ‌ؕஎதையும்قَالُوْاகூறினர்لَوْ هَدٰٮنَاவழிகாட்டினால்اللّٰهُஅல்லாஹ்لَهَدَيْنٰவழிகாட்டுவோம்كُمْ‌ؕஉங்களுக்குسَوَآءٌசமமேعَلَيْنَاۤநம் மீதுاَجَزِعْنَاۤநாம் பதட்டப்பட்டால் என்ன?اَمْஅல்லதுصَبَرْنَاசகித்தோம்مَاஇல்லைلَــنَاநமக்குمِنْஅறவேمَّحِيْصٍ‏தப்புமிடம்
வ BபரZஜூ லில்லாஹி ஜமீ'அன் Fபகாலள் ளு'அFபா'உ லில் லதீனஸ் தக்Bபரூ இன்னா குன்னா லகும் தBப'அன் Fபஹல் அன்தும் முக்னூன 'அன்னா மின் 'அதாBபில் லாஹி மின் ஷய்'; காலூ லவ் ஹதானல் லாஹு ல ஹதய்னாகும் ஸவா'உன் 'அலய்னா அஜZஜிஃனா அம் ஸBபர்னா மா லனா மின் மஹீஸ்
அன்றியும், அனைவரும் (வெளிப்பட்டு மறுமை நாளில்) அல்லாஹ்வின் சமூகத்தில் நிற்பார்கள்; அப்போது, (இவ்வுலகில்) பலஹீனமாக இருந்தவர்கள் (இவ்வுலகில்) பெருமை அடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி: “நிச்சயமாக நாங்கள்(உலகில்) உங்களைப் பின் தொடர்பவர்களாக இருந்தோம்; இப்போது நீங்கள் அல்லாஹ் (வழங்க இருக்கும்) வேதனையிலிருந்து எதையேனும் எங்களை விட்டும் தடுக்க முடியுமா?” என்று கேட்பார்கள்; (அதற்கு) அவர்கள், “அல்லாஹ் எங்களுக்கு (ஏதாவது) வழியைக் காட்டினால் நாங்கள் அவ்வழியை உங்களுக்குக் காட்டுவோம்; (தப்பிக்க வழியே அன்றி, வேதனையை அஞ்சி) நாம் பதறிக் கலங்கினாலும், அல்லது பொறுமையாக இருந்தாலும் நமக்கு ஒன்று தான்; வேறு புகலிடமே நமக்கு இல்லையே!” என்று (கை சேதப்பட்டுக்) கூறுவார்கள்.  
وَقَالَ الشَّیْطٰنُ لَمَّا قُضِیَ الْاَمْرُ اِنَّ اللّٰهَ وَعَدَكُمْ وَعْدَ الْحَقِّ وَوَعَدْتُّكُمْ فَاَخْلَفْتُكُمْ ؕ وَمَا كَانَ لِیَ عَلَیْكُمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّاۤ اَنْ دَعَوْتُكُمْ فَاسْتَجَبْتُمْ لِیْ ۚ فَلَا تَلُوْمُوْنِیْ وَلُوْمُوْۤا اَنْفُسَكُمْ ؕ مَاۤ اَنَا بِمُصْرِخِكُمْ وَمَاۤ اَنْتُمْ بِمُصْرِخِیَّ ؕ اِنِّیْ كَفَرْتُ بِمَاۤ اَشْرَكْتُمُوْنِ مِنْ قَبْلُ ؕ اِنَّ الظّٰلِمِیْنَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
وَقَالَகூறுவான்الشَّيْطٰنُஷைத்தான்لَمَّا قُضِىَமுடிக்கப்பட்டபோதுالْاَمْرُகாரியம்اِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்وَعَدَவாக்களித்தான்كُمْஉங்களுக்குوَعْدَவாக்கைالْحَـقِّஉண்மையானதுوَوَعَدْتُّكُمْநான் வாக்களித்தேன்/உங்களுக்குفَاَخْلَفْتُكُمْ‌ؕநான் வஞ்சித்தேன்/உங்களைوَمَا كَانَஇல்லைلِىَஎனக்குعَلَيْكُمْஅறவேمِّنْஉங்கள் மீதுسُلْطٰنٍஅதிகாரம்اِلَّاۤ اَنْ دَعَوْتُكُمْஎனினும்/உங்களை அழைத்தேன்فَاسْتَجَبْتُمْபதில் தந்தீர்கள்لِىْ‌ ۚஎனக்குفَلَا تَلُوْمُوْنِىْஆகவே, என்னை நிந்திக்காதீர்கள்وَلُوْمُوْۤاநிந்தியுங்கள்اَنْفُسَكُمْ‌ ؕஉங்களையேمَاۤ اَنَاநான் இல்லைبِمُصْرِخِكُمْஉங்களுக்கு உதவுபவனாகوَمَاۤஇல்லைاَنْتُمْநீங்கள்بِمُصْرِخِىَّ‌உதவுபவர்களாகاِنِّىْநிச்சயமாக நான்كَفَرْتُநிராகரித்தேன்بِمَاۤ اَشْرَكْتُمُوْنِஎன்னை நீங்கள் இணையாக்கியதைمِنْ قَبْلُ‌ ؕமுன்னரேاِنَّநிச்சயமாகالظّٰلِمِيْنَஅணியாயக்காரர்கள்لَهُمْஅவர்களுக்குعَذَابٌவேதனைاَ لِيْمٌ‏துன்புறுத்தக் கூடியது
வ காலஷ் ஷய்தானு லம்மா குளியல் அம்ரு இன்னல் லாஹ வ'அதகும் வஃதல் ஹக்கி வ வ'அத்துகும் Fப அக்லFப்துகும் வமா கான லிய 'அலய்கும் மின் ஸுல்தானின் இல்லா அன் த'அவ்துகும் Fபஸ்தஜBப்தும் லீ Fபலா தலூமூனீ வ லூமூ அன்Fபுஸகும் மா அன Bபிமுஸ்ரிகிகும் வ மா அன்தும் Bபிமுஸ்ரிகிய்ய இன்னீ கFபர்து Bபிமா அஷ்ரக்துமூனி மின் கBப்ல்; இன்னள் ளாலிமீன லஹும் அதாBபுன் அலீம்
(மறுமையில் இவர்கள் பற்றித்)தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதியையே வாக்களித்திருந்தான்; நானும் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் - ஆனால் நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறு செய்து விட்டேன். நான் உங்களை அழைத்தேன்; அப்போது நீங்கள் என் அழைப்பினை ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை; ஆகவே நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நீங்கள் நிந்தித்து கொள்ளுங்கள்; உங்களை நான் காப்பாற்றுபவன் இல்லை; நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன் - நிச்சயமாக அக்கிரமக்காரர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு” என்று கூறுவான்.
وَاُدْخِلَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا بِاِذْنِ رَبِّهِمْ ؕ تَحِیَّتُهُمْ فِیْهَا سَلٰمٌ ۟
وَاُدْخِلَபுகுத்தப்படுவார்(கள்)الَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தனர்الصّٰلِحٰتِநன்மைகளைجَنّٰتٍசொர்க்கங்களில்تَجْرِىْஓடும்مِنْ تَحْتِهَاஅவற்றின் கீழ்الْاَنْهٰرُநதிகள்خٰلِدِيْنَநிரந்தரமானவர்களாகفِيْهَاஅதில்بِاِذْنِஅனுமதிப்படிرَبِّهِمْ‌ؕதங்கள் இறைவன்تَحِيَّتُهُمْஅவர்களின் முகமன்فِيْهَاஅதில்سَلٰمٌ‏ஸலாம்
வ உத்கிலல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி ஜன்னாதின் தஜ்ரீ மின் தஹ்திஹல் அன்ஹாரு காலிதீன Fபீஹா Bபி இத்னி ரBப்Bபிஹிம் தஹிய்யதுஹும் Fபீஹா ஸலாம்
இன்னும், எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவனபதிகளில் புகுத்தப்படுவார்கள். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; தங்கள் இறைவனுடைய அனுமதியைக் கொண்டு அவர்கள் என்றென்றும் அவற்றில் தங்கியிருப்பார்கள் - அங்கு அவர்களுடைய காணிக்கையாவது “ஸலாமுன் (சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!”) என்பதாகும்.
اَلَمْ تَرَ كَیْفَ ضَرَبَ اللّٰهُ مَثَلًا كَلِمَةً طَیِّبَةً كَشَجَرَةٍ طَیِّبَةٍ اَصْلُهَا ثَابِتٌ وَّفَرْعُهَا فِی السَّمَآءِ ۟ۙ
اَلَمْ تَرَநீர் கவனிக்கவில்லையா?كَيْفَஎவ்வாறு?ضَرَبَவிவரித்தான்اللّٰهُஅல்லாஹ்مَثَلًاஓர் உதாரணத்தைكَلِمَةًஒரு வாக்கியத்திற்குطَيِّبَةًநல்லதுكَشَجَرَةٍஒரு மரத்திற்கு ஒப்பாகطَيِّبَةٍநல்லதுاَصْلُهَاஅதன் வேர்ثَابِتٌஉறுதியானதுوَّفَرْعُهَاஇன்னும் அதன் கிளைفِى السَّمَآءِۙ‏வானத்தில்
அலம் தர கய்Fப ளரBபல் லாஹு மதலன் கலிமதன் தய்யிBபதன் கஷஜரதின் தய்யிBபதின் அஸ்லுஹா தாBபிது(ன்)வ் வ Fபர்'உஹா Fபிஸ் ஸமா'
(நபியே!) நல்வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது மணம் மிக்க ஒரு நன்மரத்தைப் போன்றது; அதனுடைய வேர்கள் (பூமியில் ஆழமாகப்) பதிந்ததாகவும், அதன் கிளைகள் வானளாவியும் இருக்கும்.
تُؤْتِیْۤ اُكُلَهَا كُلَّ حِیْنٍ بِاِذْنِ رَبِّهَا ؕ وَیَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ لَعَلَّهُمْ یَتَذَكَّرُوْنَ ۟
تُؤْتِىْۤகொடுக்கிறதுاُكُلَهَاதன் கனிகளைكُلَّ حِيْنٍۢஎல்லாக் காலத்திலும்بِاِذْنِஅனுமதி கொண்டுرَبِّهَا‌ؕதன் இறைவனின்وَيَضْرِبُஇன்னும் விவரிக்கிறான்اللّٰهُஅல்லாஹ்الْاَمْثَالَஉதாரணங்களைلِلنَّاسِமனிதர்களுக்குلَعَلَّهُمْ يَتَذَكَّرُوْنَ‏அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
து'தீ உகுலஹா குல்ல ஹீனிம் Bபி இத்னி ரBப்Bபிஹா; வ யள்ரிBபுல் லாஹுல் அம்தால லின்னாஸி ல'அல்லஹும் யததக் கரூன்
அது தன்னுடைய இறைவனின் அனுமதியைக் கொண்டு ஒவ்வொரு காலத்திலும் தன்னுடைய கனியைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது; மக்கள் நல்லுணர்வு பெரும் பொருட்டு அல்லாஹ் (இத்தகைய) உதாரணங்களைக் கூறுகிறான்.
وَمَثَلُ كَلِمَةٍ خَبِیْثَةٍ كَشَجَرَةٍ خَبِیْثَةِ جْتُثَّتْ مِنْ فَوْقِ الْاَرْضِ مَا لَهَا مِنْ قَرَارٍ ۟
وَمَثَلُஇன்னும் உதாரணம்كَلِمَةٍவாசகத்திற்குخَبِيْثَةٍகெட்டதுكَشَجَرَةٍமரத்திற்கு ஒப்பாகும்خَبِيْثَةٍகெட்டதுۨاجْتُثَّتْஅறுபட்டதுمِنْஇருந்துفَوْقِமேல்الْاَرْضِபூமியின்مَاஇல்லைلَهَاஅதற்குمِنْஅறவேقَرَارٍ‏எந்த உறுதி
வ மதலு கலிமதின் கBபீததின் கஷஜரதின் கBபீ ததினிஜ் துத்தத் மின் Fபவ்கில் அர்ளி மா லஹா மின் கரார்
(இணை வைப்போரின்) கெட்ட வாக்கியத்திற்கு உதாரணம் கெட்ட மரமாகும்; பூமியின் மேல் பாகத்திலிருந்தும் (அதன் வேர்) பிடுங்கப்பட்டிருக்கும்; அதற்கு நிலைத்து நிற்கும் தன்மையுமில்லை.
یُثَبِّتُ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا بِالْقَوْلِ الثَّابِتِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَفِی الْاٰخِرَةِ ۚ وَیُضِلُّ اللّٰهُ الظّٰلِمِیْنَ ۙ۫ وَیَفْعَلُ اللّٰهُ مَا یَشَآءُ ۟۠
يُثَبِّتُஉறுதிப்படுத்துகிறான்اللّٰهُஅல்லாஹ்الَّذِيْنَஎவர்களைاٰمَنُوْاநம்பிக்கை கொண்டார்கள்بِالْقَوْلِசொல்லைக் கொண்டுالثَّابِتِஉறுதியானதுفِى الْحَيٰوةِவாழ்வில்الدُّنْيَاஉலக(ம்)وَفِى الْاٰخِرَةِ‌ ۚஇன்னும் மறுமையில்وَيُضِلُّவழிகெடுக்கிறான்اللّٰهُஅல்லாஹ்الظّٰلِمِيْنَ‌ ۙஅநியாயக்காரர்கள்وَيَفْعَلُஇன்னும் செய்கிறான்اللّٰهُஅல்லாஹ்مَا يَشَآءُ‏தான் நாடுவதை
யுதBப்Bபிதுல் லாஹுல் லதீன ஆமனூ Bபில்கவ்லித் தாBபிதி Fபில் ஹயாதித் துன்யா வ Fபில் ஆகிரதி வ யுளில்லுல் லாஹுள் ளாலிமீன்; வ யFப்'அலுல் லாஹு மா யஷா'
எவர்கள் ஈமான் கொள்கிறார்களோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதி படுத்துகின்றான் - இன்னும், அநியாயக் காரர்களை அல்லாஹ் வழி தவறச் செய்து விடுகிறான்; மேலும் அல்லாஹ், தான் எதை நாடுகின்றானோ அதைச் செய்கின்றான்.  
اَلَمْ تَرَ اِلَی الَّذِیْنَ بَدَّلُوْا نِعْمَتَ اللّٰهِ كُفْرًا وَّاَحَلُّوْا قَوْمَهُمْ دَارَ الْبَوَارِ ۟ۙ
اَلَمْ تَرَநீர் பார்க்கவில்லையா?اِلَىபக்கம்الَّذِيْنَஎவர்கள்بَدَّلُوْاமாற்றினார்கள்نِعْمَتَஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்كُفْرًاநிராகரிப்பால்وَّاَحَلُّوْاஇன்னும் தங்க வைத்தார்கள்قَوْمَهُمْதங்கள் சமுதாயத்தைدَارَ الْبَوَارِۙ‏அழிவு இல்லத்தில்
அலம் தர இலல் லதீன Bபத்தலூ னிஃமதல் லாஹி குFப்ர(ன்)வ் வ அஹல்லூ கவ்மஹும் தாரல் Bபவார்
அல்லாஹ் (அருள் கொடைகளை) நிஃமத்களை(த் தம்) குஃப்ரைக் கொண்டு மாற்றித் தங்கள் கூட்டத்தாரையும் அழிவு வீட்டில் நுழையும்படி செய்தவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா?
جَهَنَّمَ ۚ یَصْلَوْنَهَا ؕ وَبِئْسَ الْقَرَارُ ۟
جَهَـنَّمَநரகம்يَصْلَوْنَهَا‌ؕஅதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்وَبِئْسَமிகக் கெட்டதுالْقَرَارُ‏தங்குமிடத்தால்
ஜஹன்னம யஸ்லவ்னஹா வ Bபி'ஸல் கரார்
(அந்த அழிவு வீடான) நரகத்தை அவர்கள் வந்தடைவார்கள் - இன்னும், அது தங்கும் இடங்களில் மிகவும் கெட்டதாகும்.
وَجَعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا لِّیُضِلُّوْا عَنْ سَبِیْلِهٖ ؕ قُلْ تَمَتَّعُوْا فَاِنَّ مَصِیْرَكُمْ اِلَی النَّارِ ۟
وَجَعَلُوْاஇன்னும் ஏற்படுத்தினர்لِلّٰهِஅல்லாஹ்விற்குاَنْدَادًاஇணைகளைلِّيُـضِلُّوْاஅவர்கள் வழிகெடுப்பதற்காகعَنْ سَبِيْلِهٖ‌ؕஅவனுடைய பாதையிலிருந்துقُلْகூறுவீராகتَمَتَّعُوْاசுகமனுபவியுங்கள்فَاِنَّநிச்சயமாகمَصِيْرَكُمْஉங்கள் மீட்சிاِلَىபக்கம்النَّارِ‏நரகத்தின்
வ ஜ'அலூ லில்லாஹி அன்தாதல் லியுளில்லூ 'அன் ஸBபீலிஹ்; குல் தமத்த'ஊ Fப இன்னா மஸீரகும் இலன் னார்
மேலும், அவர்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (பொய்த் தெய்வங்களை) அவனுக்கு இணையாக்குகின்றனர். (நபியே! அவர்களை நோக்கி, “இவ்வுலகில் சிறிது காலம்) சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்; நிச்சயமாக நீங்கள் (இறுதியாகச்) சேருமிடம் நரகம்தான்” என்று நீர் கூறிவிடும்.
قُلْ لِّعِبَادِیَ الَّذِیْنَ اٰمَنُوْا یُقِیْمُوا الصَّلٰوةَ وَیُنْفِقُوْا مِمَّا رَزَقْنٰهُمْ سِرًّا وَّعَلَانِیَةً مِّنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا بَیْعٌ فِیْهِ وَلَا خِلٰلٌ ۟
قُلْகூறுவீராகلِّـعِبَادِىَஎன் அடியார்களுக்குالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கை கொண்டனர்يُقِيْمُواநிலை நிறுத்தட்டும்الصَّلٰوةَதொழுகையைوَيُنْفِقُوْاஇன்னும் தானம் செய்யட்டும்مِمَّاநாம் வசதியளித்தவற்றில்رَزَقْنٰهُمْஅவர்களுக்குسِرًّاஇரகசியமாகوَّعَلَانِيَةًஇன்னும் வெளிப்படையாகمِّنْ قَبْلِமுன்னர்اَنْ يَّاْتِىَவருவதற்குيَوْمٌஒரு நாள்لَّاஇல்லைبَيْعٌகொடுக்கல் வாங்கல்فِيْهِஅதில்وَلَاஇல்லைخِلٰلٌ‏நட்பு
குல் லி'இBபாதியல் லதீன ஆமனூ யுகீமுஸ் ஸலாத வ யுன்Fபிகூ மிம்மா ரZஜக்னாஹும் ஸிர்ர(ன்)வ் வ 'அலானியதம் மின் கBப்லி அ(ன்)ய் யாதிய யவ்முல் லா Bபய்'உன் Fபீஹி வலா கிலால்
ஈமான் கொண்ட என் அடியார்களிடம் (நபியே!) “கொடுக்கல் வாங்கலும், நட்பும் இல்லாத (இறுதி) நாள் வருவதற்கு முன்னதாகவே, அவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து ஒழுகட்டும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து, இரகசியமாகவும் பகிரங்கமாகவும் (தான தருமங்களில்) செலவு செய்யட்டும்” என்று நீர் கூறுவீராக.
اَللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّكُمْ ۚ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِیَ فِی الْبَحْرِ بِاَمْرِهٖ ۚ وَسَخَّرَ لَكُمُ الْاَنْهٰرَ ۟ۚ
اَللّٰهُஅல்லாஹ்தான்الَّذِىْஎத்தகையவன்خَلَقَபடைத்தான்السَّمٰوٰتِவானங்களைوَالْاَرْضَஇன்னும் பூமியைوَاَنْزَلَஇன்னும் இறக்கினான்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمَآءًமழையைفَاَخْرَجَவெளிப்படுத்தினான்بِهٖஅதைக் கொண்டுمِنَ الثَّمَرٰتِகனிகளில்رِزْقًا لَّـكُمْ‌ ۚஉணவாக/உங்களுக்குوَسَخَّرَவசப்படுத்தினான்لَـكُمُஉங்களுக்குالْـفُلْكَகப்பலைلِتَجْرِىَஅது செல்வதற்காகفِى الْبَحْرِகடலில்بِاَمْرِهٖ‌ۚஅவனுடைய கட்டளையைக் கொண்டுوَسَخَّرَஇன்னும் வசப்படுத்தினான்لَـكُمُஉங்களுக்குالْاَنْهٰرَ‌ۚ‏ஆறுகளை
அல்லாஹுல் லதீ கலகஸ் ஸமாவாதி வல் அர்ள வ அன்Zஜல மினஸ் ஸமா'இ மா'அன் Fப'அக்ரஜ Bபிஹீ மினத் தமராதி ரிZஜ்கல் லகும் வ ஸக்கர லகுமுல் Fபுல்க லிதஜ்ரிய Fபில் Bபஹ்ரி Bபி அம்ரிஹீ வ ஸக்கர லகுமுல் அன்ஹார்
அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் தான் வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து மழையையும் பொழியச் செய்து அதைக் கொண்டு கனிவர்க்கங்களையும் உங்களுக்கு - ஆகாரமாக வெளிப்படுத்தித் தன் கட்டளையினால் கடலில் செல்லுமாறு கப்பலை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்தும், ஆறுகளையும் உங்களுக்கு வசப்படுத்தித்தந்தான்.
وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَآىِٕبَیْنِ ۚ وَسَخَّرَ لَكُمُ الَّیْلَ وَالنَّهَارَ ۟ۚ
وَسَخَّرَஇன்னும் வசப்படுத்தினான்لَـكُمُஉங்களுக்குالشَّمْسَசூரியனைوَالْقَمَرَஇன்னும் சந்திரனைدَآٮِٕبَيْنِ‌ۚதொடர்ந்து செயல்படக்கூடியதாகوَسَخَّرَஇன்னும் வசப்படுத்தினான்لَـكُمُஉங்களுக்குالَّيْلَஇரவைوَالنَّهَارَ‌ۚ‏இன்னும் பகலை
வ ஸக்கர லகுமுஷ் ஷம்ஸ வல்கமர தா'இBபய்னி வ ஸக்கர லகுமுல் லய்ல வன்னஹார்
(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான்.
وَاٰتٰىكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْتُمُوْهُ ؕ وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ اِنَّ الْاِنْسَانَ لَظَلُوْمٌ كَفَّارٌ ۟۠
وَاٰتٰٮكُمْதந்தான்/உங்களுக்குمِّنْ كُلِّ مَا سَاَلْـتُمُوْهُ‌ ؕநீங்கள் கேட்டதிலிருந்தெல்லாம்/அவனிடம்وَاِنْ تَعُدُّوْاநீங்கள் கணக்கிட்டால்نِعْمَتَஅருளைاللّٰهِஅல்லாஹ்வின்لَا تُحْصُوْهَا ؕநீங்கள் எண்ண முடியாது/அதைاِنَّநிச்சயமாகالْاِنْسَانَமனிதன்لَـظَلُوْمٌமகா அநியாயக்காரன்كَفَّارٌ‏மிக நன்றிகெட்டவன்
வ ஆதாகும் மின் குல்லி மா ஸ அல்துமூஹ்; வ இன் த'உத்தூ னிஃமதல் லாஹி லா துஹ்ஸூஹா; இன்னல் இன்ஸான லளலூ முன் கFப்Fபார்
(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.
وَاِذْ قَالَ اِبْرٰهِیْمُ رَبِّ اجْعَلْ هٰذَا الْبَلَدَ اٰمِنًا وَّاجْنُبْنِیْ وَبَنِیَّ اَنْ نَّعْبُدَ الْاَصْنَامَ ۟ؕ
وَاِذْ قَالَகூறியபோதுاِبْرٰهِيْمُஇப்றாஹீம்رَبِّஎன் இறைவாاجْعَلْஆக்குهٰذَا الْبَلَدَஇந்த ஊரைاٰمِنًاஅபயமளிப்பதாகوَّاجْنُبْنِىْஇன்னும் தூரமாக்கு/என்னைوَبَنِىَّஇன்னும் என் பிள்ளைகளைاَنْ نَّـعْبُدَநாங்கள் வணங்குவதைالْاَصْنَامَؕ‏சிலைகளை
வ இத் கால இBப்ராஹீமு ரBப்Bபிஜ் 'அல் ஹாதல் Bபலத ஆமின(ன்)வ் வஜ்னுBப்னீ வ Bபனிய்ய அன் னஃBபுதல் அஸ்னாம்
நினைவு கூறுங்கள்! “என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!” என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
رَبِّ اِنَّهُنَّ اَضْلَلْنَ كَثِیْرًا مِّنَ النَّاسِ ۚ فَمَنْ تَبِعَنِیْ فَاِنَّهٗ مِنِّیْ ۚ وَمَنْ عَصَانِیْ فَاِنَّكَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
رَبِّஎன் இறைவாاِنَّهُنَّநிச்சயமாக இவைاَضْلَلْنَவழி கெடுத்தனكَثِيْرًاபலரைمِّنَ النَّاسِ‌ۚமக்களில்فَمَنْஆகவே, எவர்تَبِعَنِىْபின்பற்றினார்/என்னைفَاِنَّهٗநிச்சயமாக அவர்مِنِّىْ‌ۚஎன்னை சேர்ந்தوَمَنْஇன்னும் எவர்عَصَانِىْமாறு செய்தார்/எனக்குفَاِنَّكَநிச்சயமாக நீغَفُوْرٌமகா மன்னிப்பாளன்رَّحِيْمٌ‏பெரும் கருணையாளன்
ரBப்Bபி இன்னஹுன்ன அள்லல்ன கதீரம் மினன் னாஸி Fபமன் தBபி'அனீ Fப இன்னஹூ மின்னீ வ மன் 'அஸானீ Fப இன்னக கFபூருர் ரஹீம்
(“என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன; எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை; என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்.”
رَبَّنَاۤ اِنِّیْۤ اَسْكَنْتُ مِنْ ذُرِّیَّتِیْ بِوَادٍ غَیْرِ ذِیْ زَرْعٍ عِنْدَ بَیْتِكَ الْمُحَرَّمِ ۙ رَبَّنَا لِیُقِیْمُوا الصَّلٰوةَ فَاجْعَلْ اَفْىِٕدَةً مِّنَ النَّاسِ تَهْوِیْۤ اِلَیْهِمْ وَارْزُقْهُمْ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمْ یَشْكُرُوْنَ ۟
رَبَّنَاۤஎங்கள் இறைவாاِنِّىْۤநிச்சயமாக நான்اَسْكَنْتُவசிக்க வைத்தேன்مِنْ ذُرِّيَّتِىْஎன் சந்ததிகளில் சிலبِوَادٍஒரு பள்ளத்தாக்கில்غَيْرِ ذِىْ زَرْعٍவிவசாயமற்றதுعِنْدَஅருகில்بَيْتِكَஉன் வீட்டின்الْمُحَرَّمِۙபுனிதமாக்கப்பட்டதுرَبَّنَاஎங்கள் இறைவாلِيُقِيْمُوْاஅவர்கள் நிலைநிறுத்துவதற்காகالصَّلٰوةَஅவர்கள் தொழுகையைفَاجْعَلْஆகவே ஆக்குاَ فْـٮِٕدَةًஉள்ளங்களைمِّنَ النَّاسِமக்களிலிருந்துتَهْوِىْۤஆசைப்படக்கூடியதாகاِلَيْهِمْஅவர்கள் பக்கம்وَارْزُقْهُمْஇன்னும் உணவளி/அவர்களுக்குمِّنَ الثَّمَرٰتِகனிகளிலிருந்துلَعَلَّهُمْ يَشْكُرُوْنَ‏அவர்கள் நன்றி செலுத்துவதற்காக
ரBப்Bபனா இன்னீ அஸ்கன்து மின் துர்ரிய்யதீ Bபிவாதின் கய்ரி தீ Zஜர்'இன் 'இன்த Bபய்திகல் முஹர்ரமி ரBப்Bபனா லியுகீமுஸ் ஸலாத Fபஜ்'அல் அFப்'இததம் மினன் னாஸி தஹ்வீ இலய்ஹிம் வர்Zஜுக்ஹும் மினத் தமராதி ல'அல்லஹும் யஷ்குரூன்
“எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலைநாட்டுவதற்காக குடியேற்றியிருகின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!”
رَبَّنَاۤ اِنَّكَ تَعْلَمُ مَا نُخْفِیْ وَمَا نُعْلِنُ ؕ وَمَا یَخْفٰی عَلَی اللّٰهِ مِنْ شَیْءٍ فِی الْاَرْضِ وَلَا فِی السَّمَآءِ ۟
رَبَّنَاۤஎங்கள் இறைவாاِنَّكَநிச்சயமாக நீتَعْلَمُஅறிவாய்مَاஎதைنُخْفِىْநாங்கள் மறைப்போம்وَمَاஎதைنُعْلِنُ‌ ؕவெளிப்படுத்துவோம்وَمَا يَخْفٰىமறையாதுعَلَى اللّٰهِஅல்லாஹ்விற்குمِنْ شَىْءٍஎதுவும்فِى الْاَرْضِபூமியில்وَلَا فِى السَّمَآءِ‏இன்னும் வானத்தில்
ரBப்Bபனா இன்னக தஃலமு மா னுக்Fபீ வமா னுஃலின்; வமா யக்Fபா 'அலல் லாஹி மின் ஷய்'இன் Fபில் அர்ளி வலா Fபிஸ் ஸமா'
“எங்கள் இறைவனே! நாங்கள் மறைத்து வைத்திருப்பதையும், நாங்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக நீ அறிகிறாய்! இன்னும் பூமியிலோ, வானத்திலோ உள்ள எந்த பொருளும் மறைந்ததாக இல்லை.
اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ وَهَبَ لِیْ عَلَی الْكِبَرِ اِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ ؕ اِنَّ رَبِّیْ لَسَمِیْعُ الدُّعَآءِ ۟
اَلْحَمْدُஎல்லாப் புகழும்لِلّٰهِஅல்லாஹ்விற்கேالَّذِىْஎத்தகையவன்وَهَبَவழங்கினான்لِىْஎனக்குعَلَى الْـكِبَرِவயோதிகத்தில்اِسْمٰعِيْلَஇஸ்மாயீலைوَاِسْحٰقَ‌ؕஇன்னும் இஸ்ஹாக்கைاِنَّநிச்சயமாகرَبِّىْஎன் இறைவன்لَسَمِيْعُநன்கு செவியுறுபவன்الدُّعَآءِ‏பிரார்த்தனையை
அல்ஹம்து லில்லாஹில் லதீ வஹBப லீ 'அலல் கிBபரி இஸ்மா'ஈல வ இஸ்ஹாக்; இன்ன ரBப்Bபீ லஸமீ'உத் து'ஆ
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது; அவனே (என்னுடைய) முதுமையில் இஸ்மாயீலையும், இஸ்ஹாக்கையும் (புதல்வர்களாக) எனக்கு அளித்தான்; நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையைக் கேட்பவன்.
رَبِّ اجْعَلْنِیْ مُقِیْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّیَّتِیْ ۖۗ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ ۟
رَبِّஎன் இறைவாاجْعَلْنِىْஆக்கு/என்னைمُقِيْمَநிலைநிறுத்துபவனாகالصَّلٰوةِதொழுகையைوَمِنْ ذُرِّيَّتِىْ‌இன்னும் என் சந்ததிகளிலிருந்துۖ  رَبَّنَاஎங்கள் இறைவாوَتَقَبَّلْஇன்னும் ஏற்றுக் கொள்دُعَآءِ‏என் பிரார்த்தனையை
ரBப்Bபிஜ் 'அல்னீ முகீமஸ் ஸலாதி வ மின் துர்ரிய்யதீ ரBப்Bபனா வ தகBப்Bபல் து'ஆ'
(“என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும், என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக!”
رَبَّنَا اغْفِرْ لِیْ وَلِوَالِدَیَّ وَلِلْمُؤْمِنِیْنَ یَوْمَ یَقُوْمُ الْحِسَابُ ۟۠
رَبَّنَاஎங்கள் இறைவாاغْفِرْமன்னிப்பளிلِىْஎனக்குوَلـِوَالِدَىَّஇன்னும் என் தாய் தந்தைக்குوَلِلْمُؤْمِنِيْنَஇன்னும் நம்பிக்கையாளர்களுக்குيَوْمَநாளில்يَقُوْمُநிறைவேறும்الْحِسَابُ‏விசாரணை
ரBப்Bபனக் Fபிர் லீ வ லிவாலிதய்ய வ லில்மு'மினீன யவ்ம யகூமுல் ஹிஸாBப்
“எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர்களையும், முஃமின்களையும் கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக” (என்று பிரார்த்தித்தார்).  
وَلَا تَحْسَبَنَّ اللّٰهَ غَافِلًا عَمَّا یَعْمَلُ الظّٰلِمُوْنَ ؕ۬ اِنَّمَا یُؤَخِّرُهُمْ لِیَوْمٍ تَشْخَصُ فِیْهِ الْاَبْصَارُ ۟ۙ
وَلَا تَحْسَبَنَّஎண்ணி விடாதீர்اللّٰهَஅல்லாஹ்வைغَافِلًاகவனிக்காதவனாகعَمَّا يَعْمَلُசெய்வதைப் பற்றிالظّٰلِمُوْنَ‌ ؕஅக்கிரமக்காரர்கள்اِنَّمَا يُؤَخِّرُபிற்படுத்துவதெல்லாம்هُمْஅவர்களைلِيَوْمٍஒரு நாளுக்காகتَشْخَصُகூர்ந்து விழித்திடும்فِيْهِஅதில்الْاَبْصَارُ ۙ‏பார்வைகள்
வ லா தஹ்ஸBபன்னல் லாஹ காFபிலன் 'அம்மா யஃமலுள் ளாலிமூன்; இன்னமா யு'அக் கிருஹும் லி யவ்மின் தஷ்கஸு Fபீஹில் அBப்ஸார்
மேலும் அக்கிரமக்காரர்கள் செய்து கொண்டிருப்பதைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இருக்கிறான் என்று (நபியே!) நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம்; அவர்களுக்கு (தண்டனையை) தாமதப் படுத்துவதெல்லாம், கண்கள் விரைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கும் (அந்த மறுமை) நாளுக்காகத்தான்.
مُهْطِعِیْنَ مُقْنِعِیْ رُءُوْسِهِمْ لَا یَرْتَدُّ اِلَیْهِمْ طَرْفُهُمْ ۚ وَاَفْـِٕدَتُهُمْ هَوَآءٌ ۟ؕ
مُهْطِعِيْنَவிரைந்தவர்களாகمُقْنِعِىْஉயர்த்தியவர்களாகرُءُوْسِهِمْதங்கள் தலைகளைلَا يَرْتَدُّதிரும்பாதுاِلَيْهِمْஅவர்களிடம்طَرْفُهُمْ‌ ۚஅவர்களின் பார்வைوَاَفْـِٕدَتُهُمْஅவர்களுடைய உள்ளங்கள்هَوَآءٌ ؕ‏வெற்றிடமாக
முஹ்தி'ஈன முக்னி'ஈ ரு'ஊஸிஹிம் லா யர்தத்து இலய்ஹிம் தர்Fபுஹும் வ அFப்'இததுஹும் ஹவா'
(அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங் கொண்டு) சூனியமாக இருக்கும்.
وَاَنْذِرِ النَّاسَ یَوْمَ یَاْتِیْهِمُ الْعَذَابُ فَیَقُوْلُ الَّذِیْنَ ظَلَمُوْا رَبَّنَاۤ اَخِّرْنَاۤ اِلٰۤی اَجَلٍ قَرِیْبٍ ۙ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ الرُّسُلَ ؕ اَوَلَمْ تَكُوْنُوْۤا اَقْسَمْتُمْ مِّنْ قَبْلُ مَا لَكُمْ مِّنْ زَوَالٍ ۟ۙ
وَاَنْذِرِஎச்சரிப்பீராகالنَّاسَமக்களைيَوْمَநாள்يَاْتِيْهِمُஅவர்களுக்கு வரும்الْعَذَابُவேதனைفَيَـقُوْلُகூறுவர்الَّذِيْنَஎவர்கள்ظَلَمُوْاஅநியாயம் செய்தனர்رَبَّنَاۤஎங்கள் இறைவாاَخِّرْنَاۤஎங்களை பிற்படுத்துاِلٰٓىவரைاَجَلٍஒரு தவனைقَرِيْبٍۙசமீபமானதுنُّجِبْபதிலளிப்போம்دَعْوَتَكَஉன் அழைப்புக்குوَنَـتَّبِعِஇன்னும் பின்பற்றுவோம்الرُّسُلَ‌ؕதூதர்களைاَوَلَمْ تَكُوْنُوْۤاநீங்கள் இருக்கவில்லையா?اَقْسَمْتُمْசத்தியம் செய்தீர்கள்مِّنْ قَبْلُஇதற்கு முன்னர்مَالَـكُمْஉங்களுக்கு இல்லைمِّنْ زَوَالٍۙ‏அழிவே
வ அன்திரின் னாஸ யவ்ம யாதீஹிமுல் 'அதாBபு Fப யகூலுல் லதீன ளலமூ ரBப்Bபனா அக்கிர்னா இலா அஜலின் கரீBபின் னுஜிBப் தஃவதக வ னத்தBபி 'இர் ருஸுல்; அவலம் தகூனூ அக்ஸம்தும் மின் கBப்லு மா லகும் மின் Zஜவால்
எனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே!) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! அப்போது அநியாயம் செய்தவர்கள்; “எங்கள் இறைவனே! எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக! உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்” என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) “உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா?” (என்றும்)
وَّسَكَنْتُمْ فِیْ مَسٰكِنِ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ وَتَبَیَّنَ لَكُمْ كَیْفَ فَعَلْنَا بِهِمْ وَضَرَبْنَا لَكُمُ الْاَمْثَالَ ۟
وَّسَكَنْتُمْஇன்னும் வசித்தீர்கள்فِىْ مَسٰكِنِவசிப்பிடங்களில்الَّذِيْنَஎவர்கள்ظَلَمُوْۤاதீங்கிழைத்தனர்اَنْفُسَهُمْதமக்குத்தாமேوَتَبَيَّنَஇன்னும் தெளிவானதுلَـكُمْஉங்களுக்குكَيْفَஎப்படிفَعَلْنَاநாம் செய்தோம்بِهِمْஅவர்களுக்குوَضَرَبْنَاஇன்னும் விவரித்தோம்لَـكُمُஉங்களுக்குالْاَمْثَالَ‏உதாரணங்களை
வ ஸகன்தும் Fபீ மஸாகினில் லதீன ளலமூ அன்Fபுஸஹும் வ தBபய்யன லகும் கய்Fப Fப'அல்னா Bபிஹிம் வ ளரBப்னா லகுமுல் அம்தால்
அன்றியும் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களே அவர்கள் வாழ்விடங்களில் நீங்களும் வசித்தீர்கள்; அவர்களை நாம் என்ன செய்தோம் என்பதும் உங்களுக்கு தெளிவாக்கப்பட்டது; இன்னும் நாம் உங்களுக்கு(ப் பல முன்) உதாரணங்களையும் எடுத்துக் காட்டியிருக்கின்றோம் (என்றும் இறைவன் கூறுவான்).
وَقَدْ مَكَرُوْا مَكْرَهُمْ وَعِنْدَ اللّٰهِ مَكْرُهُمْ ؕ وَاِنْ كَانَ مَكْرُهُمْ لِتَزُوْلَ مِنْهُ الْجِبَالُ ۟
وَقَدْதிட்டமாகمَكَرُوْاசூழ்ச்சி செய்தனர்مَكْرَهُمْதங்கள் சூழ்ச்சியைوَعِنْدَ اللّٰهِஅல்லாஹ்விடம்مَكْرُهُمْؕஅவர்களுடைய சூழ்ச்சிوَاِنْ كَانَஇருந்தாலும்مَكْرُசூழ்ச்சிهُمْஅவர்களுடையلِتَزُوْلَபெயர்த்துவிடும்படிمِنْهُஅதனால்الْجِبَالُ‏மலைகள்
வ கத் மகரூ மக்ரஹும் வ 'இன்தல் லாஹி மக்ருஹும் வ இன் கான மக்ருஹும் லிதZஜூல மின்ஹுல் ஜிBபால்
எனினும், அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளைச் செய்து கொண்டேயிருந்தனர்; அவர்களுடைய சூழ்ச்சிகள் மலைகளைப் பெயர்த்து விடக்கூடியவையாக இருந்தபோதிலும், அவர்களின் சூழ்ச்சி(க்கு உரிய தண்டனை) அல்லாஹ்விடம் இருக்கிறது.
فَلَا تَحْسَبَنَّ اللّٰهَ مُخْلِفَ وَعْدِهٖ رُسُلَهٗ ؕ اِنَّ اللّٰهَ عَزِیْزٌ ذُو انْتِقَامٍ ۟ؕ
فَلَا تَحْسَبَنَّநிச்சயமாகஎண்ணாதீர்اللّٰهَஅல்லாஹ்வைمُخْلِفَமீறுபவனாகوَعْدِهٖதனது வாக்கைرُسُلَهٗؕதனது தூதர்களுக்குاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்عَزِيْزٌமிகைத்தவன்ذُوْ انْتِقَامٍؕ‏பழிவாங்குபவன்
Fபலா தஹ்ஸBபன்னல் லாஹ முக்லிFப வஃதிஹீ ருஸுலஹ்; இன்னல் லாஹ 'அZஜீZஜுன் துன்திகாம்
ஆகவே, அல்லாஹ் தன் தூதர்களுக்கு அளித்த தன் வாக்குறுதியில் மாறு செய்வான் என்று (நபியே!) நீர் எண்ண வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், பழிவாங்குபவனாகவும் இருக்கின்றான்.
یَوْمَ تُبَدَّلُ الْاَرْضُ غَیْرَ الْاَرْضِ وَالسَّمٰوٰتُ وَبَرَزُوْا لِلّٰهِ الْوَاحِدِ الْقَهَّارِ ۟
يَوْمَநாளில்تُبَدَّلُமாற்றப்படும்الْاَرْضُபூமிغَيْرَ الْاَرْضِவேறு பூமியாகوَالسَّمٰوٰتُ‌இன்னும் வானங்கள்وَبَرَزُوْاஇன்னும் வெளிப்படுவர்لِلّٰهِஅல்லாஹ்விற்குالْوَاحِدِஒருவன்الْقَهَّارِ‏அடக்கி ஆளுபவன்
யவ்ம துBபத்தலுல் அர்ளு கய்ரல் அர்ளி வஸ்ஸமாவாது வ BபரZஜூ லில்லாஹில் வாஹிதில் கஹ்ஹார்
இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள்.
وَتَرَی الْمُجْرِمِیْنَ یَوْمَىِٕذٍ مُّقَرَّنِیْنَ فِی الْاَصْفَادِ ۟ۚ
وَتَرَىஇன்னும் காண்பீர்الْمُجْرِمِيْنَகுற்றவாளிகளைيَوْمَٮِٕذٍஅந்நாளில்مُّقَرَّنِيْنَபிணைக்கப்பட்டவர்களாகفِى الْاَصْفَادِ‌ۚ‏விலங்குகளில்
வ தரல் முஜ்ரிமீன யவ்ம 'இதிம் முகர்ரனீன Fபில் அஸ்Fபாத்
இன்னும் அந்நாளில் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாகக் குற்றவாளிகளை நீர் காண்பீர்.
سَرَابِیْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰی وُجُوْهَهُمُ النَّارُ ۟ۙ
سَرَابِيْلُهُمْசட்டைகள்/அவர்களுடையمِّنْ قَطِرَانٍதாரினால்وَّتَغْشٰىஇன்னும் சூழும்وُجُوْهَهُمُஅவர்களுடைய முகங்கள்النَّارُۙ‏நெருப்பு
ஸராBபீலுஹும் மின் கதிரானி(ன்)வ் வ தக்ஷா வுஜூஹஹுமுன் னார்
அவர்களுடைய ஆடைகள் தாரால் (கீல் எண்ணையினால்) ஆகி இருக்கும்; இன்னும் அவர்களுடைய முகங்களை நெருப்பு மூடி இருக்கும்.
لِیَجْزِیَ اللّٰهُ كُلَّ نَفْسٍ مَّا كَسَبَتْ ؕ اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟
لِيَجْزِىَகூலி கொடுப்பதற்காகاللّٰهُஅல்லாஹ்كُلَّஒவ்வொருنَفْسٍஆன்மாمَّاஎவற்றைكَسَبَتْ‌ؕசெய்ததுاِنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்سَرِيْعُமிகத் தீவிரமானவன்الْحِسَابِ‏விசாரிப்பதில்
லியஜ்Zஜியல் லாஹு குல்ல னFப்ஸிம் மா கஸBபத்; இன்னல் லாஹ ஸரீ'உல் ஹிஸாBப்
அல்லாஹ் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்.) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்குக் கேட்பதில் மிகவும் தீவிரமானவன்.
هٰذَا بَلٰغٌ لِّلنَّاسِ وَلِیُنْذَرُوْا بِهٖ وَلِیَعْلَمُوْۤا اَنَّمَا هُوَ اِلٰهٌ وَّاحِدٌ وَّلِیَذَّكَّرَ اُولُوا الْاَلْبَابِ ۟۠
هٰذَاஇதுبَلٰغٌஎடுத்துச் சொல்லப்படும் செய்திلِّـلنَّاسِமக்களுக்குوَلِيُنْذَرُوْاஇன்னும் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகبِهٖஇதன் மூலம்وَلِيَـعْلَمُوْۤاஇன்னும் அவர்கள் அறிவதற்காகاَنَّمَا هُوَஅவன்தான்اِلٰـهٌவணக்கத்திற்குரியவன்وَّاحِدٌஒரே ஒருவன்وَّلِيَذَّكَّرَஇன்னும் நல்லுபதேசம் பெறுவதற்காகاُولُوا الْا َلْبَابِ‏அறிவுடையவர்கள்
ஹாத Bபலாகுல் லின்னாஸி வ லியுன்தரூ Bபிஹீ வ லியஃலமூ அன்னமா ஹுவ இல்லாஹு(ன்)வ் வாஹிது(ன்)வ் வ லியத் தக்கர உலுல் அல்BபாBப்
இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப் படுவதற்காகவும் (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான் என்று அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும் அறிவுடையோர் நல்லணர்வு பெறுவதற்காகவும் மனிதர்களுக்கு இது ஓர் அறிவிப்பாகும்.