30. ஸூரத்துர் ரூம் (ரோமானியப் பேரரசு)

மக்கீ, வசனங்கள்: 60

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
فِیْۤ اَدْنَی الْاَرْضِ وَهُمْ مِّنْ بَعْدِ غَلَبِهِمْ سَیَغْلِبُوْنَ ۟ۙ
فِىْۤ اَدْنَىகீழ்ப் பகுதியில்الْاَرْضِபூமியின்وَهُمْஇன்னும் அவர்கள்مِّنْۢ بَعْدِபின்னர்غَلَبِهِمْஅவர்கள் தோற்கடிக்கப்பட்டதன்سَيَغْلِبُوْنَۙ‏அவர்கள் தோற்கடிப்பார்கள்
Fபீ அத்னல் அர்ளி வ ஹும்மிம் Bபஃதி கலBபிஹிம் ஸ-யக்லிBபூன்
அருகிலுள்ள பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்) தங்கள் தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.
فِیْ بِضْعِ سِنِیْنَ ؕ۬ لِلّٰهِ الْاَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ ؕ وَیَوْمَىِٕذٍ یَّفْرَحُ الْمُؤْمِنُوْنَ ۟ۙ
فِىْ بِضْعِ سِنِيْنَ ؕசில ஆண்டுகளில்لِلّٰهِஅல்லாஹ்விற்கே உரியதுالْاَمْرُஅதிகாரம்مِنْ قَبْلُமுன்னரும்وَمِنْۢ بَعْدُ ؕபின்னரும்وَيَوْمَٮِٕذٍஅந்நாளில்يَّفْرَحُமகிழ்ச்சியடைவார்கள்الْمُؤْمِنُوْنَ ۙ‏நம்பிக்கையாளர்கள்
Fபீ Bபிள்'இ ஸினீன்; லில்லாஹில் அம்ரு மின் கBப்லு வ மிம் Bபஃத்; வ யவ்ம'இதி(ன்)ய் யFப்ரஹுல் மு'மினூன்
சில வருடங்களுக்குள்ளேயே! (இதற்கு) முன்னும், (இதற்கு) பின்னும், (வெற்றி தோல்வி குறித்த) அதிகாரம் அல்லாஹ்வுக்குத்தான்; (ரோமர்கள் வெற்றி பெறும்) அந்நாளில் முஃமின்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
بِنَصْرِ اللّٰهِ ؕ یَنْصُرُ مَنْ یَّشَآءُ ؕ وَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟ۙ
بِنَصْرِஉதவியால்اللّٰهِ‌ؕஅல்லாஹ்வின்يَنْصُرُஅவன் உதவுகின்றான்مَنْ يَّشَآءُ ؕதான் நாடியவர்களுக்குوَهُوَஅவன்தான்الْعَزِيْزُமிகைத்தவன்الرَّحِيْمُۙ‏பெரும் கருணையாளன்
Bபினஸ்ரில் லா; யன்ஸுரு மய் யஷா'உ வ ஹுவல் 'அZஜீZஜுர் ரஹீம்
அல்லாஹ்வின் உதவியினால் (வெற்றி கிடைக்கும்); அவன்தான் நாடியவர்களுக்கு உதவி புரிகிறான் - மேலும், (யாவரையும்) அவன் மிகைத்தவன்; மிக்க கிருபையுடையவன்.
وَعْدَ اللّٰهِ ؕ لَا یُخْلِفُ اللّٰهُ وَعْدَهٗ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟
وَعْدَவாக்களிக்கின்றான்اللّٰهِ‌ؕஅல்லாஹ்لَا يُخْلِفُமாற்ற மாட்டான்اللّٰهُஅல்லாஹ்وَعْدَهٗதனது வாக்கைوَلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَ النَّاسِமக்களில் அதிகமானவர்கள்لَا يَعْلَمُوْنَ‏அறியமாட்டார்கள்
வஃதல் லாஹி லா யுக்லிFபுல் லாஹு வஃதஹூ வ லாகின் ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
இது அல்லாஹ்வின் வாக்குறுதியாகும்; அல்லாஹ் தன் வாக்குறுதியில் தவறமாட்டான். ஆனால், மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
یَعْلَمُوْنَ ظَاهِرًا مِّنَ الْحَیٰوةِ الدُّنْیَا ۖۚ وَهُمْ عَنِ الْاٰخِرَةِ هُمْ غٰفِلُوْنَ ۟
يَعْلَمُوْنَஅவர்கள் அறிவார்கள்ظَاهِرًاவெளிரங்கத்தை(த்தான்)مِّنَ الْحَيٰوةِவாழ்க்கையின்الدُّنْيَا ‌ۖۚஇவ்வுலகوَهُمْஅவர்கள்عَنِ الْاٰخِرَةِமறுமையைப் பற்றிهُمْதான்غٰفِلُوْنَ‏கவனமற்றவர்கள்
யஃலமூன ளாஹிரம் மினல் ஹயாதித் துன்ய வ ஹும் 'அனில் ஆகிரதி ஹும் காFபிலூன்
அவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் - ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.
اَوَلَمْ یَتَفَكَّرُوْا فِیْۤ اَنْفُسِهِمْ ۫ مَا خَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَاۤ اِلَّا بِالْحَقِّ وَاَجَلٍ مُّسَمًّی ؕ وَاِنَّ كَثِیْرًا مِّنَ النَّاسِ بِلِقَآئِ رَبِّهِمْ لَكٰفِرُوْنَ ۟
اَوَلَمْ يَتَفَكَّرُوْاஅவர்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்களா?فِىْۤ اَنْفُسِهِمْதங்களைத் தாமேمَا خَلَقَபடைக்கவில்லைاللّٰهُஅல்லாஹ்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضَபூமியையும்وَمَا بَيْنَهُمَاۤஅந்த இரண்டிற்கும் மத்தியில் உள்ளவற்றையும்اِلَّاதவிரبِالْحَقِّஉண்மையான காரியத்திற்காகوَاَجَلٍதவணைக்காகمُّسَمًّى‌ؕஒரு குறிப்பிட்டوَ اِنَّநிச்சயமாகكَثِيْرًاஅதிகமானவர்கள்مِّنَ النَّاسِமக்களில்بِلِقَآئِசந்திப்பைرَبِّهِمْதங்கள் இறைவனின்لَـكٰفِرُوْنَ‏நிராகரிப்பவர்கள்தான்
அவலம் யதFபக்கரூ Fபீ அன்Fபுஸிஹிம்; மா கலகல் லாஹுஸ் ஸமாவாதி வல் அர்ள வமா Bபய்னஹுமா இல்லா Bபில் ஹக்கி வ அஜலிம் முஸம்மா; வ இன்ன கதீரம் மினன் னாஸி Bபிலிகா'இ ரBப்Bபிஹிம் லகாFபிரூன்
அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கு மிடையிலுள்ளவற்றையும், உண்மையையும், குறிப்பிட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை; எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.
اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَانُوْۤا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَّاَثَارُوا الْاَرْضَ وَعَمَرُوْهَاۤ اَكْثَرَ مِمَّا عَمَرُوْهَا وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ ؕ فَمَا كَانَ اللّٰهُ لِیَظْلِمَهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟ؕ
اَوَلَمْ يَسِيْرُوْاஇவர்கள் பயணிக்க வேண்டாமா?فِى الْاَرْضِபூமியில்فَيَنْظُرُوْاஇவர்கள் பார்ப்பார்களேكَيْفَஎப்படி (என்று)كَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ‌ؕதங்களுக்கு முன்னுள்ளவர்களின்كَانُوْۤاஅவர்கள் இருந்தார்கள்اَشَدَّகடுமையானவர்களாகمِنْهُمْஇவர்களை விடقُوَّةًபலத்தால்وَّاَثَارُواஉழுதார்கள்الْاَرْضَபூமியைوَعَمَرُوْهَاۤஇன்னும் அவர்கள் அதை செழிப்பாக்கினார்கள்اَكْثَرَஅதிகமாகمِمَّا عَمَرُوْهَاஅதை இவர்கள் செழிப்பாக்கியதைவிடوَجَآءَتْهُمْஇன்னும் , அவர்களிடம் வந்தனர்رُسُلُهُمْஅவர்களுடைய தூதர்கள்بِالْبَيِّنٰتِ‌ ؕதெளிவான அத்தாட்சிகளுடன்فَمَا كَانَ اللّٰهُஇல்லை/அல்லாஹ்لِيَظْلِمَهُمْஅவர்களுக்கு அநியாயம் செய்பவனாகوَلٰـكِنْஎனினும்كَانُوْۤاஅவர்கள் இருந்தனர்اَنْفُسَهُمْதங்களுக்குத்தாங்களேيَظْلِمُوْنَ ؕ‏அநியாயம் செய்பவர்களாக
அவலம் யஸீரூ Fபில் அர்ளி Fப-யன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்லிஹிம்; கானூ அஷத்த மின்ஹும் குவ்வத(ன்)வ் வ அதாருல் அர்ள வ 'அமரூஹா அக்தர மிம்மா 'அமரூஹா வ ஜா'அத்ஹும் ருஸுலுஹும் Bபில் Bபய்யினாதி Fபமா கானல் லாஹு லியள்லி மஹும் வ லாகின் கானூ அன்Fபுஸஹும் யள்லிமூன்
அவர்கள் பூமியில் சுற்றிப் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னால் இருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்க்கவில்லையா? அவர்கள் இவர்களைவிட வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள்; அவர்களும் பூமியில் விவசாயம் செய்தார்கள். இன்னும் இவர்கள் அதை (உழுது) பண்படுத்தியதை விட அவர்கள் அதை அதிகமாகவே (உழுது) பண்படுத்தியிருந்தார்கள். அவர்களிடமும் அவர்களுக்கான (இறை) தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; அல்லாஹ் அவர்களுக்கு ஒருபோதும் அநியாயம் செய்யவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்டார்கள்.
ثُمَّ كَانَ عَاقِبَةَ الَّذِیْنَ اَسَآءُوا السُّوْٓاٰۤی اَنْ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ وَكَانُوْا بِهَا یَسْتَهْزِءُوْنَ ۟۠
ثُمَّபிறகுكَانَஇருந்ததுعَاقِبَةَமுடிவுالَّذِيْنَ اَسَآءُواதீமை செய்தவர்களின்السُّوْٓآٰىமிக தீயதாகவேاَنْ كَذَّبُوْاஏனெனில் அவர்கள் பொய்ப்பித்தனர்بِاٰيٰتِஅத்தாட்சிகளைاللّٰهِஅல்லாஹ்வின்وَكَانُوْاஇன்னும் , இருந்தனர்بِهَاஅவற்றைيَسْتَهْزِءُوْنَ‏பரிகாசம் செய்பவர்களாக
தும்ம கான'ஆகிBபதல் லதீன அஸா'உஸ் ஸூ ஆ அன் கத்தBபூ Bபி ஆயாதில் லாஹி வ கானூ Bபிஹா யஸ்தஹ்Zஜி'ஊன்
பிறகு, அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்க முற்பட்டு, அவற்றைப் பரிகசித்துக் கொண்டும் இருந்ததனால் தீமை செய்தவர்களின் முடிவும் தீமையாகவே ஆயிற்று.  
اَللّٰهُ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ ثُمَّ اِلَیْهِ تُرْجَعُوْنَ ۟
اَللّٰهُஅல்லாஹ்தான்يَـبْدَؤُاதொடக்கமாக படைக்கிறான்الْخَلْقَபடைப்புகளைثُمَّபிறகுيُعِيْدُهٗஅவற்றை மீண்டும் உருவாக்குகின்றான்ثُمَّபிறகுاِلَيْهِஅவனிடமேتُرْجَعُوْنَ‏நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்
அல்லாஹு யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ தும்ம இலய்ஹி துர்ஜ'ஊன்
அல்லாஹ்தான் படைப்பைத் துவங்குகிறான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ یُبْلِسُ الْمُجْرِمُوْنَ ۟
وَيَوْمَஇன்னும் நாளில்تَقُوْمُநிகழ்கின்றالسَّاعَةُமறுமைيُبْلِسُபெரும் சிரமப்படுவார்கள்الْمُجْرِمُوْنَ‏குற்றவாளிகள்
வ யவ்ம தகூமுஸ் ஸா'அது யுBப்லிஸுல் முஜ்ரிமூன்
மேலும் (இறுதி) நேரம் நிலைபெறும் நாளில் குற்றவாளிகள் நம்பிக்கை இழப்பார்கள்.
وَلَمْ یَكُنْ لَّهُمْ مِّنْ شُرَكَآىِٕهِمْ شُفَعٰٓؤُا وَكَانُوْا بِشُرَكَآىِٕهِمْ كٰفِرِیْنَ ۟
وَلَمْ يَكُنْஇருக்க மாட்டார்கள்لَّهُمْஅவர்களுக்குمِّنْ شُرَكَآٮِٕهِمْஅவர்களுடைய நண்பர்களில்شُفَعٰٓؤُاபரிந்துரையாளர்கள்وَكَانُوْاஅவர்கள் ஆகிவிடுவார்கள்بِشُرَكَآٮِٕهِمْதங்கள் நண்பர்களைكٰفِرِيْنَ‏நிராகரிப்பவர்களாக
வ லம் யகுல் லஹும் மின் ஷுரகா'இஹிம் ஷுFப'ஆ'உ வ கானூ Bபிஷுரகா'இஹிம் காFபிரீன்
அப்போது, அவர்கள் இணை வைத்தவர்களில் எவரும் அவர்களுக்காகப் பரிந்து பேசுவதாக இராது; (இணை வைத்த) அவர்களும், தாங்கள் இணை வைத்தவர்களை நிராகரிப்போராகி விடுவார்கள்.
وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ یَوْمَىِٕذٍ یَّتَفَرَّقُوْنَ ۟
وَيَوْمَநாளில்تَقُوْمُநிகழ்கின்றالسَّاعَةُமறுமைيَوْمَٮِٕذٍஅந்நாளில்يَّتَفَرَّقُوْنَ‏அவர்கள் பிரிந்து விடுவார்கள்
வ யவ்ம தகூமுஸ் ஸா'அது யவ்ம'இதி(ன்)ய் யதFபர்ரகூன்
மேலும் (இறுதித் தீர்ப்புக்குரிய) நாள் நிலைபெறும்போது - அந்நாளில், அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
فَاَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَهُمْ فِیْ رَوْضَةٍ یُّحْبَرُوْنَ ۟
فَاَمَّاஆகالَّذِيْنَஎவர்கள்اٰمَنُوْاநம்பிக்கைகொண்டனர்وَعَمِلُواஇன்னும் செய்தார்களோالصّٰلِحٰتِநன்மைகளைفَهُمْஅவர்கள்فِىْ رَوْضَةٍதோட்டத்தில்يُّحْبَرُوْنَ‏மகிழ்விக்கப்படுவார்கள்
Fப அம்மல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி Fபஹும் Fபீ ரவ்ளதி(ன்)ய் யுஹ்Bபரூன்
ஆகவே, எவர்கள் ஈமான்கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்தார்களோ அவர்கள், (சுவர்க்கப்) பூங்காவில் மகிழ்விக்கப்படுவார்கள்.
وَاَمَّا الَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَا وَلِقَآئِ الْاٰخِرَةِ فَاُولٰٓىِٕكَ فِی الْعَذَابِ مُحْضَرُوْنَ ۟
وَاَمَّاஆகالَّذِيْنَஎவர்கள்كَفَرُوْاநிராகரித்தார்கள்وَكَذَّبُوْاஇன்னும் பொய்ப்பித்தார்கள்بِاٰيٰتِنَاநமது வசனங்களைوَلِقَآئِஇன்னும் சந்திப்பைالْاٰخِرَةِமறுமையின்فَاُولٰٓٮِٕكَஅவர்கள்فِى الْعَذَابِதண்டனைக்குمُحْضَرُوْنَ‏கொண்டு வரப்படுவார்கள்
வ அம்மல் லதீன கFபரூ வ கத்தBபூ Bபிஆயாதினா வ லிகா'இல் ஆகிரதி Fபஉலா'இக Fபில்'அதாBபி முஹ்ளரூன்
இன்னும், எவர்கள் காஃபிராகி, நம்முடைய வசனங்களை, மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ அ(த்தகைய)வர்கள், வேதனைக்காகக் கொண்டு வரப்படுவார்கள்.
فَسُبْحٰنَ اللّٰهِ حِیْنَ تُمْسُوْنَ وَحِیْنَ تُصْبِحُوْنَ ۟
فَسُبْحٰنَஆகவே, நீங்கள் துதியுங்கள்اللّٰهِஅல்லாஹ்வைحِيْنَ تُمْسُوْنَநீங்கள் மாலைப் பொழுதை அடையும்போது(ம்)وَحِيْنَ تُصْبِحُوْنَ‏நீங்கள் காலைப் பொழுதை அடையும்போதும்
Fப ஸுBப்ஹானல் லாஹி ஹீன தும்ஸூன வ ஹீன துஸ்Bபிஹூன்
ஆகவே, (முஃமின்களே!) நீங்கள் மாலையி(லாகும் பொழுதி)லும், நீங்கள் காலையி(லாகும் பொழுதி)லும் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருங்கள்.
وَلَهُ الْحَمْدُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَعَشِیًّا وَّحِیْنَ تُظْهِرُوْنَ ۟
وَلَـهُஅவனுக்கே உரியனالْحَمْدُஎல்லாப் புகழும்فِىْ السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِபூமியிலும்وَعَشِيًّاமாலையிலும்وَّحِيْنَ تُظْهِرُوْنَ‏நீங்கள் மதியத்தை அடையும் நேரத்திலும்
வ லஹுல் ஹம்து Fபிஸ் ஸமாவாதி வல் அர்ளி வ 'அஷிய்ய(ன்)வ் வ ஹீன துள்ஹிரூன்
இன்னும் வானங்களிலும், பூமியிலும்; அவனுக்கே புகழனைத்தும்; இன்னும், இரவிலும் நீங்கள் ளுஹருடைய நேரத்திலாகும் பொழுதும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்).
یُخْرِجُ الْحَیَّ مِنَ الْمَیِّتِ وَیُخْرِجُ الْمَیِّتَ مِنَ الْحَیِّ وَیُحْیِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ وَكَذٰلِكَ تُخْرَجُوْنَ ۟۠
يُخْرِجُவெளியாக்குகின்றான்الْحَـىَّஉயிருள்ளவற்றைمِنَ الْمَيِّتِஇறந்ததிலிருந்துوَيُخْرِجُஇன்னும் வெளியாக்குகின்றான்الْمَيِّتَஇறந்தவற்றைمِنَ الْحَـىِّஉயிருள்ளதிலிருந்துوَيُحْىِஇன்னும் உயிர்ப்பிக்கின்றான்الْاَرْضَபூமியைبَعْدَபின்னர்مَوْتِهَا ؕஅது இறந்தوَكَذٰلِكَஇன்னும் இவ்வாறேتُخْرَجُوْنَ‏நீங்களும் வெளியேற்றப்படுவீர்கள்
யுக்ரிஜுல் ஹய்ய மினல் மய்யிதி வ யுக்ரிஜுல் மய்யித மினல் ஹய்யி வ யுஹ்யில் அர்ள Bபஃத மவ்திஹா; வ கதாலிக துக்ரஜூன்
அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.  
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ خَلَقَكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ اِذَاۤ اَنْتُمْ بَشَرٌ تَنْتَشِرُوْنَ ۟
وَمِنْ اٰيٰتِهٖۤஅவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்اَنْ خَلَقَكُمْஅவன் உங்களை படைத்ததுمِّنْ تُرَابٍமண்ணிலிருந்துثُمَّபிறகுاِذَاۤ اَنْتُمْநீங்களோبَشَرٌமனிதர்களாகتَنْتَشِرُوْنَ‏பிரிந்து செல்கிறீர்கள்
வ மின் ஆயாதிஹீ அன் கலககும் மின் துராBபின் தும்ம இதா அன்தும் Bபஷருன் தன்தஷிரூன்
மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَیْهَا وَجَعَلَ بَیْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّتَفَكَّرُوْنَ ۟
وَمِنْ اٰيٰتِهٖۤஇன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்اَنْ خَلَقَஅவன் படைத்ததுلَكُمْஉங்களுக்காகمِّنْ اَنْفُسِكُمْஉங்களிலிருந்தேاَزْوَاجًاமனைவிகளைلِّتَسْكُنُوْۤاநீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காகاِلَيْهَاஅவர்களிடம்وَجَعَلَஇன்னும் அவன் ஏற்படுத்தினான்بَيْنَكُمْஉங்களுக்கு மத்தியில்مَّوَدَّةًஅன்பையும்وَّرَحْمَةً  ؕகருணையையும்اِنَّநிச்சயமாகفِىْ ذٰ لِكَஇதில் உள்ளனلَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيَّتَفَكَّرُوْنَ‏சிந்திக்கின்றார்கள்
வ மின் ஆயாதிஹீ அன் கலக லகும் மின் அன்Fபுஸிகும் அZஜ்வாஜல் லிதஸ்குனூ இலய்ஹா வ ஜ'அல Bபய்னகும் மவத் தத(ன்)வ் வ ரஹ்மஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யதFபக்கரூன்
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَمِنْ اٰیٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَاَلْوَانِكُمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّلْعٰلِمِیْنَ ۟
وَمِنْ اٰيٰتِهٖஇன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்خَلْقُபடைத்ததும்السَّمٰوٰتِவானங்களையும்وَالْاَرْضِபூமியையும்وَاخْتِلَافُவேறுபட்டு இருப்பதும்اَلْسِنَتِكُمْஉங்கள் மொழிகளும்وَاَلْوَانِكُمْ‌ؕஉங்கள் நிறங்களும்اِنَّநிச்சயமாகفِىْ ذٰلِكَஇதில் உள்ளனلَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّلْعٰلِمِيْنَ‏கல்விமான்களுக்கு
வ மின் ஆயாதிஹீ கல்குஸ் ஸமாவாதி வல் ஆர்ளி வக்திலாFபு அல்ஸினதிகும் வ அல்வானிகும்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லில்'ஆலிமீன்
மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَمِنْ اٰیٰتِهٖ مَنَامُكُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ وَابْتِغَآؤُكُمْ مِّنْ فَضْلِهٖ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟
وَمِنْ اٰيٰتِهٖஇன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்مَنَامُكُمْநீங்கள் தூங்குவதும்بِالَّيْلِஇரவிலும்وَالنَّهَارِபகலிலும்وَابْتِغَآؤُكُمْநீங்கள் தேடுவதும்مِّنْ فَضْلِهٖ‌ؕஅவனுடைய அருளிலிருந்துاِنَّநிச்சயமாகفِىْ ذٰلِكَஇதில் உள்ளனلَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيَّسْمَعُوْنَ‏செவியேற்கின்றனர்
வ மின் ஆயாதிஹீ மனாமுகும் Bபில் லய்லி வன்னஹாரி வBப்திகா'உகும் மின் Fபள்லிஹ்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யஸ்ம'ஊன்
இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்; அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَمِنْ اٰیٰتِهٖ یُرِیْكُمُ الْبَرْقَ خَوْفًا وَّطَمَعًا وَّیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مَآءً فَیُحْیٖ بِهِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
وَمِنْ اٰيٰتِهٖஅவனுடைய அத்தாட்சிகளில் இருந்துيُرِيْكُمُஅவன் உங்களுக்கு காட்டுகின்றான்الْبَرْقَமின்னலைخَوْفًاபயமாகவும்وَّطَمَعًاஆசையாகவும்وَّيُنَزِّلُஇன்னும் இறக்குகின்றான்مِنَ السَّمَآءِவானத்திலிருந்துمَآءًமழையைفَيُحْىٖஉயிர்ப்பிக்கின்றான்بِهِஅதன் மூலம்الْاَرْضَபூமியைبَعْدَபின்னர்مَوْتِهَا ؕஅது மரணித்தاِنَّநிச்சயமாகفِىْ ذٰلِكَஇதில் உள்ளனلَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيَّعْقِلُوْنَ‏சிந்தித்து புரிகின்றனர்
வ மின் ஆயாதிஹீ யுரீகுமுல் Bபர்க கவ்Fப(ன்)வ் வ தம'அ(ன்)வ் வ யுனZஜ்Zஜிலு மினஸ் ஸமா'இ மா'அன் Fப யுஹ்யீ Bபிஹில் அர்ள Bபஃத மவ்திஹா இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ تَقُوْمَ السَّمَآءُ وَالْاَرْضُ بِاَمْرِهٖ ؕ ثُمَّ اِذَا دَعَاكُمْ دَعْوَةً ۖۗ مِّنَ الْاَرْضِ ۖۗ اِذَاۤ اَنْتُمْ تَخْرُجُوْنَ ۟
وَمِنْ اٰيٰتِهٖۤஅவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்اَنْ تَقُوْمَநிற்பதுالسَّمَآءُவானமும்وَالْاَرْضُபூமியும்بِاَمْرِهٖ‌ ؕஅவனுடைய கட்டளையின்படிثُمَّபிறகுاِذَا دَعَاஅவன் அழைத்தால்كُمْஉங்களைدَعْوَةً  ۖஒரு முறை அழைத்தல்مِّنَ الْاَرْضِۖ பூமியிலிருந்துاِذَاۤ اَنْـتُمْஅப்போது நீங்கள்تَخْرُجُوْنَ‏வெளியேறுவீர்கள்
வ மின் ஆயாதிஹீ அன் தகூமஸ் ஸமா'உ வல் அர்ளு Bபி-அம்ரிஹ்; தும்ம இதா த'ஆகும் தஃவதம் மினல் அர்ளி இதா அன்தும் தக்ருஜூன்
வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள்.
وَلَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ كُلٌّ لَّهٗ قٰنِتُوْنَ ۟
وَلَهٗஅவனுக்கே உரியவர்கள்مَنْஎவர்கள்فِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِ‌ؕஇன்னும் பூமியிலும்كُلٌّஎல்லோரும்لَّهٗஅவனுக்கேقٰنِتُوْنَ‏பணிந்துநடக்கின்றனர்
வ லஹூ மன் Fபிஸ்ஸமாவாதி வல் அர்ளி குல்லுல் லஹூ கானிதூன்
வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்படிந்து நடக்கின்றன.
وَهُوَ الَّذِیْ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ وَهُوَ اَهْوَنُ عَلَیْهِ ؕ وَلَهُ الْمَثَلُ الْاَعْلٰى فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠
وَهُوَ الَّذِىْஅவன்தான்يَـبْدَؤُاஆரம்பமாக படைக்கின்றான்الْخَـلْقَபடைப்புகளைثُمَّபிறகுيُعِيْدُهٗஅவன் அவற்றை மீண்டும் படைக்கின்றான்وَهُوَஅதுاَهْوَنُமிக இலகுவானதேعَلَيْهِ‌ؕஅவனுக்குوَلَهُஅவனுக்கே உரியனالْمَثَلُதன்மைகள்الْاَعْلٰىமிக உயர்ந்தفِى السَّمٰوٰتِவானங்களிலும்وَالْاَرْضِ‌ۚபூமியிலும்وَهُوَ الْعَزِيْزُஅவன்தான் மிகைத்தவன்الْحَكِيْمُ‏மகா ஞானவான்
வ ஹுவல் லதீ யBப்த'உல் கல்க தும்ம யு'ஈதுஹூ வ ஹுவ அஹ்வனு 'அலய்ஹ்; வ லஹுல் மதலுல் அஃலா Fபிஸ்ஸமாவாதி வல்-அர்ள்; வ ஹுவல் 'அZஜீZஜுல் ஹகீம்
அவனே படைப்பைத் துவங்குகின்றான்; பின்னர் அவனே அதை மீட்டுகிறான்; மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே; மேலும் அவன் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.  
ضَرَبَ لَكُمْ مَّثَلًا مِّنْ اَنْفُسِكُمْ ؕ هَلْ لَّكُمْ مِّنْ مَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ مِّنْ شُرَكَآءَ فِیْ مَا رَزَقْنٰكُمْ فَاَنْتُمْ فِیْهِ سَوَآءٌ تَخَافُوْنَهُمْ كَخِیْفَتِكُمْ اَنْفُسَكُمْ ؕ كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْقِلُوْنَ ۟
ضَرَبَஅவன் விவரிக்கின்றான்لَكُمْஉங்களுக்குمَّثَلًاஓர் உதாரணத்தைمِّنْ اَنْفُسِكُمْ‌ؕஉங்களிலிருந்துهَلْ?لَّكُمْஉங்களுக்குمِّنْ مَّا مَلَـكَتْசொந்தமாக்கியவர்களில்اَيْمَانُكُمْஉங்கள் வலக்கரங்கள்مِّنْ شُرَكَآءَபங்காளிகள் யாரும்فِىْ مَا رَزَقْنٰكُمْநாம் உங்களுக்கு கொடுத்தவற்றில்فَاَنْتُمْநீங்கள்فِيْهِஅதில்سَوَآءٌசமமானவர்களாகتَخَافُوْنَهُمْஅவர்களை நீங்கள் பயப்படுகிறீர்கள்كَخِيْفَتِكُمْநீங்கள் பயப்படுவது போன்றுاَنْفُسَكُمْ‌ؕஉங்களைكَذٰلِكَஇவ்வாறுنُفَصِّلُவிவரிக்கின்றோம்الْاٰيٰتِவசனங்களைلِقَوْمٍமக்களுக்குيَّعْقِلُوْنَ‏சிந்தித்து புரிகின்றனர்
ளரBப லகும் மதலம் மின் அன்Fபுஸிகும் ஹல் லகும் மிம்மா மலகத் அய்மானுகும் மின் ஷுரகா'அ Fபீ மா ரZஜக்னாகும் Fப அன்தும் Fபீஹி ஸவா'உன் தகாFபூனஹும் ககீFப திகும் அன்Fபுஸகும்; கதாலிக னுFபஸ்ஸிலுல் ஆயாதி லிகவ்மி(ன்)ய் யஃகிலூன்
உங்களிலிருந்தே அவன் உங்களுக்காக ஓர் உதாரணத்தை எடுத்துக் கூறுகிறான்: உங்கள் வலக்கரம் உரிமைப்படுத்திக் கொண்டவர்களில் (அடிமைகளில்) எவரையும், நாம் உங்களுக்கு அளித்திருப்ப(தான சம்பத்)தில் உங்களுடன் பங்காளிகளாக ஆக்கிக் கொண்டு அதில் அவர்களுடன் சமமாக இருக்கிறீர்களா? உங்களைப் போன்றோருக்கு பயப்படுவதைப்போல் அவர்களை பயப்படுகிறீர்களா? இவ்வாறாகவே நாம் நம் அத்தாட்சிகளை சிந்தித்துணரும் சமூகத்திற்கு விவரிக்கிறோம்.
بَلِ اتَّبَعَ الَّذِیْنَ ظَلَمُوْۤا اَهْوَآءَهُمْ بِغَیْرِ عِلْمٍ ۚ فَمَنْ یَّهْدِیْ مَنْ اَضَلَّ اللّٰهُ ؕ وَمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟
بَلِமாறாகاتَّبَعَபின்பற்றுகின்றனர்الَّذِيْنَ ظَلَمُوْۤاஅநியாயக்காரர்கள்اَهْوَآءَமன இச்சைகளைهُمْதங்கள்بِغَيْرِஇன்றிعِلْمٍ‌ۚகல்வி அறிவுفَمَنْயார்يَّهْدِىْநேர்வழி செலுத்துவார்مَنْஎவரைاَضَلَّவழிகெடுத்தான்اللّٰهُ ؕஅல்லாஹ்وَمَا لَهُمْஅவர்களுக்கு இல்லைمِّنْ نّٰصِرِيْنَ‏உதவியாளர்களில் எவரும்
Bபலித் தBப'அல் லதீன ளலமூ அஹ்வா'அஹும் Bபிகய்ரி 'இல்மின் Fபமய் யஹ்தீ மன் அளல்லல் லாஹு வமா லஹும் மின் னாஸிரீன்
எனினும் அநியாயக்காரர்கள் கல்வி ஞானமில்லாமல் தம் மனோ இச்சைகளையே பின்பற்றுகிறார்கள்; ஆகவே எவர்களை அல்லாஹ் வழிகெடச் செய்தானோ, அவர்களை நேர் வழியில் கொண்டு வருபவர் யார்? மேலும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லர்.
فَاَقِمْ وَجْهَكَ لِلدِّیْنِ حَنِیْفًا ؕ فِطْرَتَ اللّٰهِ الَّتِیْ فَطَرَ النَّاسَ عَلَیْهَا ؕ لَا تَبْدِیْلَ لِخَلْقِ اللّٰهِ ؕ ذٰلِكَ الدِّیْنُ الْقَیِّمُ ۙۗ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یَعْلَمُوْنَ ۟ۗۙ
فَاَقِمْஆகவே நிறுத்துவீராக!وَجْهَكَஉம் முகத்தைلِلدِّيْنِமார்க்கத்தின் பக்கம்حَنِيْفًا ؕஉறுதியுடையவராகفِطْرَتَஇயற்கை மார்க்கம்اللّٰهِஅல்லாஹ்வுடையالَّتِىْஎதுفَطَرَஇயற்கையாக அமைத்தான்النَّاسَமக்களைعَلَيْهَا ؕஅதன் மீதுதான்لَا تَبْدِيْلَமாற்றக்கூடாதுلِخَـلْقِபடைப்பைاللّٰهِ‌ ؕஅல்லாஹ்வின்ذٰ لِكَஇதுதான்الدِّيْنُமார்க்கம்الْقَيِّمُநிலையானۙ  وَلٰـكِنَّஎன்றாலும்اَكْثَرَஅதிகமானவர்கள்النَّاسِமக்களில்لَا يَعْلَمُوْنَ ۙ ‏அறியமாட்டார்கள்
Fப அகிம் வஜ்ஹக லித்தீனி ஹனீFபா; Fபித்ரதல் லாஹில் லதீ Fபதரன் னாஸ 'அலய்ஹா; லா தாBப்தீல லிகல்கில் லாஹ்; தாலிகத் தீனுல் கய்யிமு வ லாகின்ன அக்தரன் னாஸி லா யஃலமூன்
ஆகவே, நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை; அதுவே நிலையான மார்க்கமாகும். ஆனால் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
مُنِیْبِیْنَ اِلَیْهِ وَاتَّقُوْهُ وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُشْرِكِیْنَ ۟ۙ
مُنِيْبِيْنَமுற்றிலும் திரும்பியவர்களாகاِلَيْهِஅவன் பக்கம்وَاتَّقُوْهُஇன்னும் அவனை அஞ்சிக் கொள்ளுங்கள்وَاَقِيْمُواஇன்னும் நிறைவேற்றுங்கள்الصَّلٰوةَதொழுகையைوَلَا تَكُوْنُوْاநீங்கள் ஆகிவிடாதீர்கள்مِنَ الْمُشْرِكِيْنَۙ‏இணைவைப்பவர்களில்
முனீBபீன இலய்ஹி வத்தகூஹு வ அகீமுஸ் ஸலாத வலா தகூனூ மினல் முஷ்ரிகீன்
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்.
مِنَ الَّذِیْنَ فَرَّقُوْا دِیْنَهُمْ وَكَانُوْا شِیَعًا ؕ كُلُّ حِزْبٍ بِمَا لَدَیْهِمْ فَرِحُوْنَ ۟
مِنَ الَّذِيْنَஎவர்களில்فَرَّقُوْاபிரித்தார்கள்دِيْنَهُمْதங்களது மார்க்கத்தைوَكَانُوْاஇன்னும் ஆகிவிட்டனர்شِيَعًا ؕபல பிரிவுகளாகكُلُّஒவ்வொருحِزْبٍۢகட்சியும்بِمَاஉள்ளதைக் கொண்டுلَدَيْهِمْதங்களிடம்فَرِحُوْنَ‏மகிழ்ச்சியடைகின்றனர்
மினல் லதீன Fபர்ரகூ தீனஹும் வ கானூ ஷிய'அன் குல்லு ஹிZஜ்Bபிம் Bபிமா லதய்ஹிம் Fபரிஹூன்
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
وَاِذَا مَسَّ النَّاسَ ضُرٌّ دَعَوْا رَبَّهُمْ مُّنِیْبِیْنَ اِلَیْهِ ثُمَّ اِذَاۤ اَذَاقَهُمْ مِّنْهُ رَحْمَةً اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ بِرَبِّهِمْ یُشْرِكُوْنَ ۟ۙ
وَاِذَا مَسَّநேர்ந்தால்النَّاسَமக்களுக்குضُرٌّஒரு தீங்குدَعَوْاஅழைக்கின்றனர்رَبَّهُمْதங்கள் இறைவனைمُّنِيْبِيْنَமுற்றிலும் திரும்பியவர்களாகاِلَيْهِஅவன் பக்கம்ثُمَّபிறகுاِذَاۤ اَذَاقَهُمْஅவன் சுவைக்க வைத்தால் / அவர்களுக்குمِّنْهُதன்புறத்திலிருந்துرَحْمَةًஅருளைاِذَا فَرِيْقٌஅப்போது ஒரு சாரார்مِّنْهُمْஅவர்களில்بِرَبِّهِمْதங்கள் இறைவனுக்குيُشْرِكُوْنَۙ‏இணைவைக்கின்றனர்
வ இதா மஸ்ஸன் னாஸ ளுர்ருன் த'அவ் ரBப்Bபஹும் முனீBபீன இலய்ஹி தும்ம இதா அதகஹும் மின்ஹு ரஹ்மதன் இதா Fபரீகும் மின்ஹும் Bபீ ரBப்Bபிஹிம் யுஷ்ரிகூன்
மனிதர்களுக்கு (பசி, நோய், வறுமை, பஞ்சம் போன்ற ஏதேனும்) சங்கடம் ஏற்பட்டால் அவர்கள் தங்கள் இறைவனிடம் முகம் திருப்பி, (அதை நீக்கியருள) அவனிடம் பிரார்த்தனை செய்கிறார்கள்; பிறகு அவன் அவர்களுக்கு தன்னிடமிருந்து ரஹ்மத்தை சுவைக்கச் செய்தால், அவர்களில் ஒரு பிரிவினர் தம் இறைவனுக்கு இணை வைக்கின்றனர்.
لِیَكْفُرُوْا بِمَاۤ اٰتَیْنٰهُمْ ؕ فَتَمَتَّعُوْا ۥ فَسَوْفَ تَعْلَمُوْنَ ۟
لِيَكْفُرُوْاநிராகரிப்பதற்காகبِمَاۤ اٰتَيْنٰهُمْ‌ؕநாம் அவர்களுக்கு கொடுத்தவற்றைفَتَمَتَّعُوْاஆகவே சுகமனுபவியுங்கள்فَسَوْفَ تَعْلَمُوْنَ‏நீங்கள் அறிவீர்கள்
லி யக்Fபுரூ Bபிமா ஆதய்னாஹும்; Fபதமத்த'ஊ Fபஸவ்Fப தஃலமூன்
நாம் அவர்களுக்கு அருளியதற்காக (நன்றி செலுத்தாமல்) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருக்கட்டும்; நீங்கள் சுகமனுபவித்துக் கொண்டிருங்கள்; விரைவில் (இதன் விளைவை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
اَمْ اَنْزَلْنَا عَلَیْهِمْ سُلْطٰنًا فَهُوَ یَتَكَلَّمُ بِمَا كَانُوْا بِهٖ یُشْرِكُوْنَ ۟
اَمْஅல்லதுاَنْزَلْنَاநாம் இறக்கினோம்عَلَيْهِمْஅவர்கள் மீதுسُلْطٰنًاஓர் ஆதாரத்தைفَهُوَஅதுيَتَكَلَّمُபேசுகிறதாبِمَاஎதைப் பற்றிكَانُوْاஇருந்தனர்بِهٖஅவனுக்குيُشْرِكُوْنَ‏இணை வைப்பவர்களாக
அம் அன்Zஜல்னா 'அலய்ஹிம் ஸுல்தானன் Fபஹுவ யதகல்லமு Bபிமா கானூ Bபிஹீ யுஷ்ரிகூன்
அல்லது, அவர்கள் இணைவைத்(து வணங்குவ)தற்கு ஆதாரமாக கூறக்கூடிய ஏதாவது ஓர் அத்தாட்சியை நாம் அவர்களுக்கு இறக்கி வைத்திருக்கிறோமா?
وَاِذَاۤ اَذَقْنَا النَّاسَ رَحْمَةً فَرِحُوْا بِهَا ؕ وَاِنْ تُصِبْهُمْ سَیِّئَةٌ بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ اِذَا هُمْ یَقْنَطُوْنَ ۟
وَاِذَاۤ اَذَقْنَاநாம் சுவைக்க வைத்தால்النَّاسَமக்களுக்குرَحْمَةًஅருளைفَرِحُوْاமகிழ்ச்சியடைகின்றனர்بِهَاؕ‌அதனால்وَاِنْ تُصِبْهُمْஅவர்களை அடைந்தால்سَيِّئَةٌ ۢஒரு தீமைبِمَا قَدَّمَتْமுற்படுத்தியவற்றினால்اَيْدِيْهِمْஅவர்களின் கரங்கள்اِذَا هُمْஅப்போது அவர்கள்يَقْنَطُوْنَ‏நிராசையடைந்து விடுகின்றனர்
வ இதா அதக்னன் னாஸ ரஹ்மதன் Fபரிஹூ Bபிஹா வ இன் துஸிBப்ஹும் ஸய்யி'அதும் Bபிமா கத்தமத் அய்தீஹிம் இதா ஹும் யக்னதூன்
இன்னும் நாம் மனிதர்களை (நம்) ரஹ்மத்தை ருசிக்க (அனுபவிக்க)ச் செய்தால். அவர்கள் அதைக் கொண்டு மகிழ்கிறார்கள்; ஆனால் அவர்களுடைய கைகள் முன்னரே செய்துள்ளதைக் கொண்டு ஒரு தீங்கு அவர்களுக்கு சம்பவித்து விட்டால் அவர்கள் நிராசைப்பட்டு விடுகிறார்கள்.
اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ یَبْسُطُ الرِّزْقَ لِمَنْ یَّشَآءُ وَیَقْدِرُ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟
اَوَلَمْ يَرَوْاஇவர்கள் பார்க்க வேண்டாமா?اَنَّ اللّٰهَநிச்சயமாக அல்லாஹ்يَبْسُطُவிசாலமாக்குகின்றான்الرِّزْقَஉணவைلِمَنْ يَّشَآءُதான் நாடியவர்களுக்குوَيَقْدِرُ‌ؕஇன்னும் சுருக்குகின்றான்اِنَّநிச்சயமாகفِىْ ذٰلِكَஇதில் இருக்கின்றனلَاٰيٰتٍபல அத்தாட்சிகள்لِّقَوْمٍமக்களுக்குيُّؤْمِنُوْنَ‏நம்பிக்கை கொள்கின்றனர்
அவலம் யரவ் அன்னல் லாஹ யBப்ஸுதுர் ரிZஜ்க லிமய் யஷா'உ வ யக்திர்; இன்ன Fபீ தாலிக ல ஆயாதில் லிகவ்மி(ன்)ய் யு'மினூன்
நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியோருக்கு ரிஸ்க்கை - ஆகார வசதிகளை - விசாலமாக்குகிறான்; (தான் நாடியோருக்குச்) சுருக்கியும் விடுகிறான் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? நிச்சயமாக ஈமான் கொண்டுள்ள சமூகத்திற்கு இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَالْمِسْكِیْنَ وَابْنَ السَّبِیْلِ ؕ ذٰلِكَ خَیْرٌ لِّلَّذِیْنَ یُرِیْدُوْنَ وَجْهَ اللّٰهِ ؗ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
فَاٰتِஆகவே கொடுப்பீராக!ذَا الْقُرْبٰىஉறவினருக்குحَقَّهٗஅவருடைய உரிமையைوَ الْمِسْكِيْنَஇன்னும் வறியவருக்குوَابْنَ السَّبِيْلِ‌ؕஇன்னும் வழிப்போக்கருக்குذٰلِكَஇதுதான்خَيْرٌசிறந்ததாகும்.لِّلَّذِيْنَ يُرِيْدُوْنَநாடுவோருக்குوَجْهَமுகத்தைاللّٰهِ‌அல்லாஹ்வின்وَاُولٰٓٮِٕكَ هُمُஇவர்கள்தான்الْمُفْلِحُوْنَ‏வெற்றியாளர்கள்
Fப ஆதி தல் குர்Bபா ஹக்கஹூ வல்மிஸ்கீன வBப்னஸ்ஸBபீல்; தாலிக கய்ருல் லில் லதீன யுரீதூன வஜ்ஹல் லாஹி வ உலா'இக ஹுமுல் முFப்லிஹூன்
ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள்.
وَمَاۤ اٰتَیْتُمْ مِّنْ رِّبًا لِّیَرْبُوَاۡ فِیْۤ اَمْوَالِ النَّاسِ فَلَا یَرْبُوْا عِنْدَ اللّٰهِ ۚ وَمَاۤ اٰتَیْتُمْ مِّنْ زَكٰوةٍ تُرِیْدُوْنَ وَجْهَ اللّٰهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الْمُضْعِفُوْنَ ۟
وَمَاۤஎதைاٰتَيْتُمْநீங்கள்கொடுத்தீர்கள்مِّنْ رِّبًاஅன்பளிப்புகளிலிருந்துلِّيَرْبُوَا۟வளர்ச்சி காணுவதற்காகفِىْۤ اَمْوَالِசெல்வங்களில்النَّاسِமக்களின்فَلَا يَرْبُوْاஅது வளர்ச்சி காணாதுعِنْدَ اللّٰهِ‌ۚஅல்லாஹ்விடம்وَمَاۤஎதைاٰتَيْتُمْநீங்கள்கொடுத்தீர்கள்مِّنْ زَكٰوةٍதர்மங்களிலிருந்துتُرِيْدُوْنَநீங்கள் நாடியவர்களாகوَجْهَமுகத்தைاللّٰهِஅல்லாஹ்வின்فَاُولٰٓٮِٕكَ هُمُஅவர்கள்தான்الْمُضْعِفُوْنَ‏பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்
வ மா ஆதய்தும் மிர் ரிBபல் லி யர்Bபுவ Fபீ அம்வாலின் னாஸி Fபலா யர்Bபூ 'இன்தல் லாஹி வ மா ஆதய்தும் மின் Zஜாகாதின் துரீதூன வஜ்ஹல் லாஹி Fப உலா'இக ஹுமுல் முள்'இFபூன்
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.
اَللّٰهُ الَّذِیْ خَلَقَكُمْ ثُمَّ رَزَقَكُمْ ثُمَّ یُمِیْتُكُمْ ثُمَّ یُحْیِیْكُمْ ؕ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّفْعَلُ مِنْ ذٰلِكُمْ مِّنْ شَیْءٍ ؕ سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا یُشْرِكُوْنَ ۟۠
اَللّٰهُ الَّذِىْஅல்லாஹ்தான்خَلَقَكُمْஉங்களைப் படைத்தான்ثُمَّபிறகுرَزَقَكُمْஅவன் உங்களுக்கு உணவளித்தான்ثُمَّ يُمِيْتُكُمْபிறகு/மரணிக்கச் செய்கிறான்/உங்களைثُمَّ يُحْيِيْكُمْ‌ ؕபிறகு/அவன் உங்களை உயிர்ப்பிப்பான்هَلْ?مِنْ شُرَكَآٮِٕكُمْஉங்கள் தெய்வங்களில் (இருக்கின்றாரா)مَّنْ يَّفْعَلُசெய்கின்றவர்مِنْ ذٰ لِكُمْஇவற்றில்مِّنْ شَىْءٍ‌ؕஎதையும்سُبْحٰنَهٗஅவன் மிகப் பரிசுத்தமானவன்وَتَعٰلٰىஇன்னும் அவன் மிக உயர்ந்தவன்عَمَّا يُشْرِكُوْنَ‏அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும்
அல்லாஹுல் லதீ கலக கும் தும்ம ரZஜககும் தும்ம யுமீதுகும் தும்ம யுஹ்யீகும் ஹல் மின் ஷுரகா'இகும் மய் யFப்'அலு மின் தாலிகும் மின் ஷய்'; ஸுBப் ஹானஹூ வ த'ஆலா 'அம்மா யுஷ்ரிகூன்
அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.  
ظَهَرَ الْفَسَادُ فِی الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَیْدِی النَّاسِ لِیُذِیْقَهُمْ بَعْضَ الَّذِیْ عَمِلُوْا لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
ظَهَرَபெருகி விட்டதுالْفَسَادُபாவம்فِى الْبَرِّதரையில்وَالْبَحْرِஇன்னும் கடலில்بِمَا كَسَبَتْசெய்தவற்றினால்اَيْدِىகரங்கள்النَّاسِமக்களின்لِيُذِيْقَهُمْஇறுதியாக, அவர்களுக்கு சுவைக்க வைப்போம்بَعْضَசிலவற்றைالَّذِىْஎவைعَمِلُوْاஅவர்கள் செய்தனர்لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏அவர்கள் திரும்புவதற்காக
ளஹரல் Fபஸாது Fபில் Bபர்ரி வல் Bபஹ்ரி Bபிமா கஸBபத் அய்தின்னாஸி லி யுதீகஹும் Bபஃளல் லதீ 'அமிலூ ல'அல்லஹும் யர்ஜி'ஊன்
மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்.
قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ فَانْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلُ ؕ كَانَ اَكْثَرُهُمْ مُّشْرِكِیْنَ ۟
قُلْகூறுவீராக!سِيْرُوْاபயணியுங்கள்فِى الْاَرْضِபூமியில்فَانْظُرُوْاபாருங்கள்كَيْفَஎப்படிكَانَஇருந்ததுعَاقِبَةُமுடிவுالَّذِيْنَஎவர்கள்مِنْ قَبْلُ‌ؕமுன்னர்كَانَஇருந்தனர்اَكْثَرُஅதிகமானவர்கள்هُمْஅவர்களில்مُّشْرِكِيْنَ‏இணை வைப்பவர்களாக
குல் ஸீரூ Fபில் அர்ளி Fபன்ளுரூ கய்Fப கான 'ஆகிBபதுல் லதீன மின் கBப்ல்; கான அக்தருஹும் முஷ்ரிகீன்
“பூமியில் நீங்கள் சுற்றித் திரிந்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீங்கள் கவனித்துப் பாருங்கள்? அவர்கள் பெரும்பாலோர் முஷ்ரிக்குகளாக (இணை வைப்பவர்களாக) இருந்தனர்” என்று (நபியே!) நீர் கூறும்.
فَاَقِمْ وَجْهَكَ لِلدِّیْنِ الْقَیِّمِ مِنْ قَبْلِ اَنْ یَّاْتِیَ یَوْمٌ لَّا مَرَدَّ لَهٗ مِنَ اللّٰهِ یَوْمَىِٕذٍ یَّصَّدَّعُوْنَ ۟
فَاَقِمْஆகவே நிறுத்துவீராக!وَجْهَكَஉம் முகத்தைلِلدِّيْنِமார்க்கத்தின் பக்கம்الْقَيِّمِநேரானمِنْ قَبْلِமுன்னர்اَنْ يَّاْتِىَவருவதற்குيَوْمٌஒரு நாள்لَّا مَرَدَّதடுக்க முடியாதلَهٗஅதைمِنَ اللّٰهِ‌அல்லாஹ்விடமிருந்துيَوْمَٮِٕذٍஅந்நாளில்يَّصَّدَّعُوْنَ‏பிரிந்து விடுவார்கள்
Fப அகிம் வஜ்ஹக லித் தீனில் கய்யிமி மின் கBப்லி அ(ன்)ய் யாதிய யவ்முல் லா மரத்த லஹூ மினல் லாஹி யவ்ம'இதி(ன்)ய் யஸ்ஸத்த'ஊன்
ஆகவே, அல்லாஹ்விடமிருந்து எவரும் தடுத்து நிறுத்த முடியாத (அந்தத் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன், நீர் உம் முகத்தை நிலையான மார்க்கத்தில் சரிபடுத்துவீராக; அந்நாளில் அவர்கள் (நல்லோர், தீயோர் எனப்) பிரிந்து விடுவார்கள்.
مَنْ كَفَرَ فَعَلَیْهِ كُفْرُهٗ ۚ وَمَنْ عَمِلَ صَالِحًا فَلِاَنْفُسِهِمْ یَمْهَدُوْنَ ۟ۙ
مَنْயார்كَفَرَநிராகரிப்பாரோفَعَلَيْهِஅவர் மீதுதான் கேடாக முடியும்كُفْرُهٗ ۚஅவருடைய நிராகரிப்புوَمَنْஎவர்கள்عَمِلَசெய்வார்களோصَالِحاًநன்மைفَلِاَنْفُسِهِمْதங்களுக்குத்தான்يَمْهَدُوْنَۙ ‏விரித்துக் கொள்கிறார்கள்
மன் கFபர Fப'அலய்ஹி குFப்ருஹூ வ மன் 'அமில ஸாலிஹன் Fபலி அன்Fபுஸிஹிம் யம்ஹதூன்
எவன் நிராகரிக்கின்றானோ அவனுக்கே அவனது நிராகரிப்பு கேடாகும். எவர் ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கின்றாரோ அவர்கள் தங்களுக்கே நன்மையைச் சித்தப்படுத்திக் கொள்கிறார்கள்.
لِیَجْزِیَ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصَّلِحٰتِ مِنْ فَضْلِهٖ ؕ اِنَّهٗ لَا یُحِبُّ الْكٰفِرِیْنَ ۟
لِيَجْزِىَஇறுதியாக, கூலி கொடுப்பான்الَّذِيْنَ اٰمَنُواநம்பிக்கைகொண்டனர்وَعَمِلُوْاஇன்னும் செய்தார்கள்الصّٰلِحٰتِநன்மைகளைمِنْ فَضْلِهٖ‌ؕதன் அருளிலிருந்துاِنَّهٗநிச்சயமாக அவன்لَا يُحِبُّநேசிக்க மாட்டான்الْكٰفِرِيْنَ‏நிராகரிப்பாளர்களை
லி யஜ்Zஜியல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி மின் Fபள்லிஹ்; இன்னஹூ லா யுஹிBப்Bபுல் காFபிரீன்
ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.
وَمِنْ اٰیٰتِهٖۤ اَنْ یُّرْسِلَ الرِّیَاحَ مُبَشِّرٰتٍ وَّلِیُذِیْقَكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَلِتَجْرِیَ الْفُلْكُ بِاَمْرِهٖ وَلِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟
وَمِنْ اٰيٰتِهٖۤஇன்னும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான்اَنْ يُّرْسِلَஅவன் அனுப்புவதுالرِّيَاحَகாற்றுகளைمُبَشِّرٰتٍநற்செய்தி தரக்கூடியவையாகوَّلِيُذِيْقَكُمْஅவன் உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும்مِّنْ رَّحْمَتِهٖதனது அருளைوَلِتَجْرِىَசெல்வதற்கும்الْفُلْكُகப்பல்கள்بِاَمْرِهٖஅவனுடைய கட்டளையின் படிوَلِتَبْتَغُوْاநீங்கள் தேடுவதற்கும்مِنْ فَضْلِهٖஅவனது அருளிலிருந்துوَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏நீங்கள் நன்றி செலுத்துவதற்கும்
வ மின் ஆயாதிஹீ அ(ன்)ய்யுர்ஸிலர் ரியாஹ முBபஷ்ஷி ராதி(ன்)வ் வ லி யுதீககும் மிர் ரஹ்மதிஹீ வ லிதஜ்ரியல் Fபுல்கு Bபி அம்ரிஹீ வ லிதBப்தகூ மின் Fபள்லிஹீ வ ல'அல்லகும் தஷ்குரூன்
இன்னும் நீங்கள் அவன் ரஹ்மத்திலிருந்து சுவைப்பதற்காகவும், கப்பல் தன் உத்தரவினால் (கடலில்) செல்வதற்காகவும், தன் அருளை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவற்றுக்கெல்லாமாக) நன்மாராயங் கூறிக்கொண்டு வருபவையாகக் காற்றுகளை அனுப்புகிறானே அதுவும் அவன் அத்தாட்சிகளிலுள்ளதாகும்.
وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ رُسُلًا اِلٰى قَوْمِهِمْ فَجَآءُوْهُمْ بِالْبَیِّنٰتِ فَانْتَقَمْنَا مِنَ الَّذِیْنَ اَجْرَمُوْا ؕ وَكَانَ حَقًّا عَلَیْنَا نَصْرُ الْمُؤْمِنِیْنَ ۟
وَ لَقَدْதிட்டவட்டமாகاَرْسَلْنَاநாம் அனுப்பினோம்مِنْ قَبْلِكَஉமக்கு முன்னர்رُسُلًاபல தூதர்களைاِلٰى قَوْمِهِمْஅவர்களுடைய மக்களுக்குفَجَآءُوْஅவர்கள் வந்தனர்هُمْஅவர்களிடம்بِالْبَيِّنٰتِதெளிவான அத்தாட்சிகளுடன்فَانْتَقَمْنَاஆகவே, நாம் பழிவாங்கினோம்مِنَ الَّذِيْنَ اَجْرَمُوْا ؕகுற்றமிழைத்தவர்களிடம்وَكَانَஇருக்கிறதுحَقًّاகடமையாகعَلَيْنَاநம்மீதுنَصْرُஉதவுவதுالْمُؤْمِنِيْنَ‏நம்பிக்கை கொண்டவர்களுக்கு
வ லகத் அர்ஸல்னா மின் கBப்லிக ருஸுலன் இலா கவ்மிஹிம் Fபஜா'ஊஹும் Bபில் Bபய்யினாதி Fபன்தகம்னா மினல் லதீன அஜ்ரமூ வ கான ஹக்கன் 'அலய்னா னஸ்ருல் மு'மினீன்
மேலும், நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் தூதர்களை அவர்களுடைய சமூகத்தினரிடம் அனுப்பியிருக்கிறோம், அவர்களும் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடத்தில் வந்தார்கள்; பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.
اَللّٰهُ الَّذِیْ یُرْسِلُ الرِّیٰحَ فَتُثِیْرُ سَحَابًا فَیَبْسُطُهٗ فِی السَّمَآءِ كَیْفَ یَشَآءُ وَیَجْعَلُهٗ كِسَفًا فَتَرَی الْوَدْقَ یَخْرُجُ مِنْ خِلٰلِهٖ ۚ فَاِذَاۤ اَصَابَ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖۤ اِذَا هُمْ یَسْتَبْشِرُوْنَ ۟ۚ
اَللّٰهُ الَّذِىْஅல்லாஹ்தான்يُرْسِلُஅனுப்புகின்றான்.الرِّيٰحَகாற்றுகளைفَتُثِيْرُஅவை கிளப்புகின்றனسَحَابًاமேகங்களைفَيَبْسُطُهٗஅவன் அவற்றை பரப்புகின்றான்فِى السَّمَآءِவானத்தில்كَيْفَ يَشَآءُதான் நாடியவாறுوَيَجْعَلُهٗஅவற்றை அவன் மாற்றுகின்றான்كِسَفًاபல துண்டுகளாகفَتَرَىஆகவே நீர் பார்க்கிறீர்الْوَدْقَமழையைيَخْرُجُஅது வெளியேறக்கூடியதாகمِنْ خِلٰلِهٖ‌ۚஅவற்றுக்கு இடையிலிருந்துفَاِذَاۤ اَصَابَஅவன் அடையச் செய்தால்بِهٖஅதைمَنْ يَّشَآءُதான் நாடியவர்களுக்குمِنْ عِبَادِهٖۤதனது அடியார்களில்اِذَا هُمْஅப்போது அவர்கள்يَسْتَبْشِرُوْنَۚ‏மகிழ்ச்சியடைகிறார்கள்
அல்லாஹுல் லதீ யுர்ஸிலுர் ரியாஹ Fபதுதீரு ஸஹாBபன் Fப யBப்ஸுதுஹூ Fபிஸ் ஸமா'இ கய்Fப யஷா'உ வ யஜ்'அலுஹூ கிஸFபன் Fபதரல் வத்க யக்ருஜு மின் கிலாலிஹீ Fப இதா அஸாBப Bபிஹீ மய் யஷா'உ மின் 'இBபாதிஹீ இதா ஹும் யஸ்தBப்ஷிரூன்
அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்வடைகிறார்கள்.
وَاِنْ كَانُوْا مِنْ قَبْلِ اَنْ یُّنَزَّلَ عَلَیْهِمْ مِّنْ قَبْلِهٖ لَمُبْلِسِیْنَ ۟
وَاِنْ كَانُوْاநிச்சயமாக அவர்கள் இருந்தனர்مِنْ قَبْلِமுன்னர்اَنْ يُّنَزَّلَஇறக்கப்படுவதற்குعَلَيْهِمْஅவர்கள் மீதுمِّنْ قَبْلِهٖஇதற்கு முன்னர்لَمُبْلِسِيْنَ‏நிராசையடைந்தவர்களாக
வ இன் கானூ மின் கBப்லி அ(ன்)ய் யுனZஜ்Zஜல 'அலய்ஹிம் மின் கBப்லிஹீ லமுBப்லிஸீன்
எனினும், அவர்கள் மீது அ(ம் மழையான)து இறங்குவதற்கு முன்னரும் - அதற்கு முன்னரும் - (மழையின்மையால்) அவர்கள் முற்றிலும் நிராசைப்பட்டிருந்தனர்.
فَانْظُرْ اِلٰۤی اٰثٰرِ رَحْمَتِ اللّٰهِ كَیْفَ یُحْیِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ اِنَّ ذٰلِكَ لَمُحْیِ الْمَوْتٰى ۚ وَهُوَ عَلٰى كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
فَانْظُرْஆக, பார்ப்பீராக!اِلٰٓى اٰثٰرِஅடையாளங்களைرَحْمَتِஅருளின்اللّٰهِஅல்லாஹ்வுடையكَيْفَஎப்படிيُحْىِஅவன் உயிர்ப்பிக்கின்றான்الْاَرْضَபூமியைبَعْدَபின்னர்مَوْتِهَا ؕஅது மரணித்தاِنَّநிச்சயமாகذٰ لِكَஅவன்தான்لَمُحْىِஉயிர்ப்பிப்பவன்الْمَوْتٰى ۚஇறந்தவர்களையும்وَهُوَஅவன்عَلٰىமீது(ம்)كُلِّஎல்லாشَىْءٍபொருள்கள்قَدِيْرٌ‏பேராற்றலுடையவன்
Fபன்ளுர் இலா ஆதாரி ரஹ்மதில் லாஹி கய்Fப யுஹ்யில் அர்ள Bபஃத மவ்திஹா; இன்ன தாலிக லமுஹ்யில் மவ்தா வ ஹுவ 'அலா குல்லி ஷய்'இன் கதீர்
(நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
وَلَىِٕنْ اَرْسَلْنَا رِیْحًا فَرَاَوْهُ مُصْفَرًّا لَّظَلُّوْا مِنْ بَعْدِهٖ یَكْفُرُوْنَ ۟
وَلَٮِٕنْ اَرْسَلْنَاநாம் அனுப்பினால்رِيْحًاஒரு காற்றைفَرَاَوْهُஅதை அவர்கள் பார்த்தால்مُصْفَرًّاமஞ்சளாகلَّظَلُّوْاஆகிவிடுகின்றனர்مِنْۢ بَعْدِهٖஅதற்குப் பின்னர்يَكْفُرُوْنَ‏நிராகரிக்கின்றவர்களாக
வ ல'இன் அர்ஸல்னா ரீஹன் Fபர அவ்ஹு முஸ்Fபர்ரல் லளல்லூ மிம் Bபஃதிஹீ யக்Fபுரூன்
ஆனால் (வரண்ட) ஒரு காற்றை நாம் அனுப்பி அத(ன் காரணத்தி)னால் (பயிர்கள் உலர்ந்து) மஞ்சள் நிறமாவதை அவர்கள் பார்த்தால், அதன் பின், (முன்னர் நன்மழை அனுப்பியதற்கு நன்றி மறந்து) நிராகரிப்போராகவே இருந்து விடுகின்றனர்.
فَاِنَّكَ لَا تُسْمِعُ الْمَوْتٰى وَلَا تُسْمِعُ الصُّمَّ الدُّعَآءَ اِذَا وَلَّوْا مُدْبِرِیْنَ ۟
فَاِنَّكَஆகவே நிச்சயமாக நீர்لَا تُسْمِعُசெவியுறச் செய்ய முடியாதுالْمَوْتٰىஇறந்தவர்களுக்குوَلَا تُسْمِعُஇன்னும் நீர் செவியுறச் செய்ய முடியாதுالصُّمَّசெவிடர்களுக்குالدُّعَآءَஅழைப்பைاِذَا وَلَّوْاஅவர்கள் திரும்பினால்مُدْبِرِيْنَ‏புறமுதுகிட்டவர்களாக
Fப இன்னக லா துஸ்மி'உல் மவ்தா வலா துஸ்மி'உஸ் ஸும்மத் து'ஆ'அ இதா வல்லவ் முத்Bபிரீன்
ஆகவே, (நபியே!) மரித்தவர்களையும் நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது; (உம்முடைய அழைப்பைப்) புறக்கணித்துத் திரும்பி விடும் செவிடர்களையும் (உம்முடைய) அழைப்பை நிச்சயமாக நீர் கேட்கச் செய்ய முடியாது.
وَمَاۤ اَنْتَ بِهٰدِ الْعُمْیِ عَنْ ضَلٰلَتِهِمْ ؕ اِنْ تُسْمِعُ اِلَّا مَنْ یُّؤْمِنُ بِاٰیٰتِنَا فَهُمْ مُّسْلِمُوْنَ ۟۠
وَمَاۤ اَنْتَநீர் அல்லர்بِهٰدِநேர்வழி செலுத்துபவர்الْعُمْىِகுருடர்களைعَنْ ضَلٰلَتِهِمْ‌ؕஅவர்களின் வழிகேட்டிலிருந்துاِنْ تُسْمِعُநீர் செவியுறச் செய்ய முடியாதுاِلَّا مَنْ يُّؤْمِنُதவிர/நம்பிக்கை கொள்கின்றவர்கள்بِاٰيٰتِنَاநமது வசனங்களைفَهُمْஅவர்கள்தான்مُّسْلِمُوْنَ‏முற்றிலும் கீழப்படிகிறவர்கள்
வமா அன்த Bபிஹாதில் 'உம்யி 'அன் ளலாலதிஹிம் இன் துஸ்மி'உ இல்லா மய் யுமினு Bபி ஆயாதினா Fபஹும் முஸ்லிமூன்
இன்னும், குருடர்களையும், அவர்களுடைய வழிகேட்டிலிருந்து நேர்வழியில் திருப்புபவராகவும் நீர் இல்லை; முற்றிலும் வழிபட்டவர்களாக, நம்முடைய வசனங்களின் மீது ஈமான் கொள்பவர்களைத் தவிர (மற்றெவரையும் உம் அழைப்பைக்) கேட்கச் செய்ய முடியாது.  
اَللّٰهُ الَّذِیْ خَلَقَكُمْ مِّنْ ضُؔعْفٍ ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ ضُؔعْفٍ قُوَّةً ثُمَّ جَعَلَ مِنْ بَعْدِ قُوَّةٍ ضُؔعْفًا وَّشَیْبَةً ؕ یَخْلُقُ مَا یَشَآءُ ۚ وَهُوَ الْعَلِیْمُ الْقَدِیْرُ ۟
اَللّٰهُ الَّذِىْஅல்லாஹ்தான்خَلَقَكُمْஉங்களை படைத்தான்مِّنْ ضُؔعْفٍபலவீனமான ஒன்றிலிருந்துثُمَّபிறகுجَعَلَஏற்படுத்தினான்مِنْۢ بَعْدِபின்னர்ضُؔعْفٍபலவீனத்திற்குقُوَّةًபலத்தைثُمَّபிறகுجَعَلَஏற்படுத்தினான்مِنْۢ بَعْدِபின்னர்قُوَّةٍபலத்திற்குضُؔعْفًاபலவீனத்தையும்وَّشَيْبَةً  ؕவயோதிகத்தையும்يَخْلُقُஅவன் படைக்கிறான்مَا يَشَآءُ ۚதான் நாடுவதைوَهُوَஅவன்தான்الْعَلِيْمُமிக்க அறிந்தவன்الْقَدِيْرُ‏பேராற்றலுடையவன்
அல்லாஹுல் லதீ கலக கும் மின் ளுஃFபின் தும்ம ஜ'அல மிம் Bபஃதி ளுஃFபின் குவ்வதன் தும்ம ஜ'அல மிம் Bபஃதி குவ்வதின் ளுஃFப(ன்)வ் வ ஷய்Bபஹ்; யக்லுகு மா யஷா'உ வ ஹுவல் 'அலீமுல் கதீர்
அல்லாஹ் தான் உங்களை (ஆரம்பத்தில்) பலஹீனமான நிலையில் படைக்கிறான்; பலஹீனத்திற்குப் பின்னர், அவனே பலத்தை(யும் உங்களுக்கு)உண்டாக்குகிறான்; (அந்தப்) பலத்திற்குப் பின், பலஹீனத்தையும் நரையையும் அவனே உண்டாக்குகிறான்; தான் நாடியதை அவன் படைக்கிறான் - அவனே எல்லாம் அறிந்தவன் பேராற்றலுடையவன்.
وَیَوْمَ تَقُوْمُ السَّاعَةُ یُقْسِمُ الْمُجْرِمُوْنَ ۙ۬ مَا لَبِثُوْا غَیْرَ سَاعَةٍ ؕ كَذٰلِكَ كَانُوْا یُؤْفَكُوْنَ ۟
وَيَوْمَநாளில்تَقُوْمُநிகழ்கின்ற(து)السَّاعَةُமறுமை நாள்يُقْسِمُசத்தியம் செய்வார்கள்الْمُجْرِمُوْنَ ۙகுற்றவாளிகள்مَا لَبِثُوْاதாங்கள் தங்கவில்லைغَيْرَ سَاعَةٍ ؕசில மணி நேரமே அன்றிكَذٰلِكَஇவ்வாறுதான்كَانُوْاஇருந்தார்கள்يُؤْفَكُوْنَ‏அவர்கள் பொய் சொல்பவர்களாக
வ யவ்ம தகூமுஸ் ஸா'அது யுக்ஸிமுல் முஜ்ரிமூன மா லBபிதூ கய்ர ஸா'அஹ்; கதாலிக கானூ யு'Fபகூன்
அன்றியும், (நியாயத் தீர்ப்புக்குரிய) நாழிகை வரும் அந்நாளில் குற்றவாளிகள் தாங்கள் (இவ்வுலகில்) ஒரு நாழிகையே அன்றி (அதிக நேரம்) தங்கி இருக்க வில்லை என்று பிரமாணம் செய்வார்கள்; இவ்வாறு (இவ்வுலகிலும் உண்மையிலிருந்து) அவர்கள் திருப்பப்படுபவர்களாக இருந்தனர்.
وَقَالَ الَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ وَالْاِیْمَانَ لَقَدْ لَبِثْتُمْ فِیْ كِتٰبِ اللّٰهِ اِلٰى یَوْمِ الْبَعْثِ ؗ فَهٰذَا یَوْمُ الْبَعْثِ وَلٰكِنَّكُمْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
وَقَالَகூறுவார்கள்الَّذِيْنَ اُوْتُواகொடுக்கப்பட்டவர்கள்الْعِلْمَகல்வி(யும்)وَ الْاِيْمَانَஈமானும்لَقَدْதிட்டவட்டமாகلَبِثْـتُمْநீங்கள் தங்கினீர்கள்فِىْ كِتٰبِவிதிப்படிاللّٰهِஅல்லாஹ்வின்اِلٰى يَوْمِநாள் வரைالْبَـعْثِஎழுப்பப்படுகின்றفَهٰذَاஇதோيَوْمُநாள்الْبَـعْثِஎழுப்பப்படுகின்றوَلٰـكِنَّكُمْஎன்றாலும் நீங்கள்كُنْـتُمْஇருந்தீர்கள்لَا تَعْلَمُوْنَ‏அறியாதவர்களாக
வ காலல் லதீன ஊதுல் 'இல்ம வல் ஈமான லகத் லBபித்தும் Fபீ கிதாBபில் லாஹி இலா யவ்மில் Bபஃதி Fபஹாதா யவ்முல் Bபஃதி வ லாகின்னகும் குன்தும் லா தஃலமூன்
ஆனால் எவர்களுக்கு இல்மும் (கல்வியும்) ஈமானும் (நம்பிக்கையும்) கொடுக்கப்பட்டதோ அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்வின் (குறிப்பு) ஏட்டில் உள்ளபடி நீங்கள் உயிர் பெற்றெழும் (இந்) நாள்வரையில் (பூமியில்) தங்கியிருந்தீர்கள்! (மரித்தோர்) உயிர் பெற்று எழும் நாள் இது; நீங்கள் நிச்சயமாக (இதனை) அறிந்து கொள்ளாதவர்களாகவே இருந்தீர்கள்.”
فَیَوْمَىِٕذٍ لَّا یَنْفَعُ الَّذِیْنَ ظَلَمُوْا مَعْذِرَتُهُمْ وَلَا هُمْ یُسْتَعْتَبُوْنَ ۟
فَيَوْمَٮِٕذٍஅந்நாளில்لَّا يَنْفَعُபலனளிக்காதுالَّذِيْنَ ظَلَمُوْاஅநியாயக்காரர்களுக்குمَعْذِرَتُهُمْஅவர்களின் மன்னிப்புக் கோருதல்وَلَا هُمْ يُسْتَعْتَبُوْنَ‏திருப்திபடுத்துகின்ற செயல்களை செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கூறப்படாது
Fப யவ்ம'இதில் லா யன்Fப'உல் லதீன ளலமூ மஃதிரது ஹும் வலா ஹும் யுஸ்தஃதBபூன்
ஆகவே, அந்நாளில், அநியாயம் செய்தவர்களுக்கு, அவர்கள் (கூறும்) புகல்கள் ஒரு பயனும் தரா; அன்றி, அவர்கள் (அல்லாஹ்வைத்) திருப்தி செய்யவும் முடியாது.
وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِیْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍ ؕ وَلَىِٕنْ جِئْتَهُمْ بِاٰیَةٍ لَّیَقُوْلَنَّ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ اَنْتُمْ اِلَّا مُبْطِلُوْنَ ۟
وَلَقَدْதிட்டவட்டமாகضَرَبْنَاவிவரித்துள்ளோம்لِلنَّاسِமக்களுக்குفِىْ هٰذَاஇந்தالْقُرْاٰنِகுர்ஆனில்مِنْ كُلِّஎல்லாمَثَلٍ‌ؕஉதாரணங்களையும்وَلَٮِٕنْ جِئْتَهُمْநீர் அவர்களிடம் வந்தால்بِاٰيَةٍஓர் அத்தாட்சியைக் கொண்டுلَّيَقُوْلَنَّதிட்டமாக கூறுவார்கள்الَّذِيْنَஎவர்கள்كَفَرُوْۤاநிராகரித்தார்கள்اِنْ اَنْتُمْநீங்கள் இல்லைاِلَّاதவிரمُبْطِلُوْنَ‏பொய்யர்களே
வ லகத் ளரBப்னா லின்னாஸி Fபீ ஹாதல் குர்'ஆனி மின் குல்லி மதல்; வ ல'இன் ஜி'தஹும் Bபி ஆயதில் ல யகூலன்னல் லதீன கFபரூ இன் அன்தும் இல்லா முBப்திலூன்
திடமாக இந்த குர்ஆனில் மனிதர்களுக்குப் பலவிதமான உவமானங்களையும் நாம் கூறியிருக்கிறோம்; ஆயினும் நீர் எந்த ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டு வந்த போதிலும்: “நீங்கள் எல்லோரும் வீண் பொய்யர்களே அன்றி வேறில்லை” என்று நிராகரிப்போர் நிச்சயமாக கூறுவார்கள்.
كَذٰلِكَ یَطْبَعُ اللّٰهُ عَلٰى قُلُوْبِ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟
كَذٰلِكَஇவ்வாறுதான்يَطْبَعُமுத்திரையிட்டு விடுகின்றான்اللّٰهُஅல்லாஹ்عَلٰى قُلُوْبِஉள்ளங்களில்الَّذِيْنَ لَا يَعْلَمُوْنَ‏அறியாதவர்களின்
கதாலிக யத்Bப'உல் லாஹு 'அலா குலூBபில் லதீன லா யஃலமூன்
அவ்வாறே, இந்த அறிவில்லாதவர்களின் இருதயங்களின் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்.
فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّلَا یَسْتَخِفَّنَّكَ الَّذِیْنَ لَا یُوْقِنُوْنَ ۟۠
فَاصْبِرْஆகவே, பொறுமையாக இருப்பீராக!اِنَّநிச்சயமாகوَعْدَவாக்குاللّٰهِஅல்லாஹ்வுடையحَقٌّ‌உண்மையானதே!وَّلَا يَسْتَخِفَّنَّكَஉம்மை இலேசாக கருதிவிட வேண்டாம்الَّذِيْنَ لَا يُوْقِنُوْنَ‏உறுதிகொள்ளாதவர்கள்
Fபஸ்Bபிர் இன்ன வஃதல் லாஹி ஹக்கு(ன்)வ் வலா யஸ்தகிFப் Fபன்னகல் லதீன லா யூகினூன்
ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம்.